பட்டாம்பூச்சி குறிப்புகள் 6 : ‘ஆயிரம் பக்கங்களில் பிரபாகரன்!’
பழ. நெடுமாறன் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீளும் பிரபாகரன் : தமிழர் எழுச்சியின் வடிவம் என்னும் நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடப்படவுள்ளது. புத்தகக் கண்காட்சி கடை எண் 156, 157 தமிழ் மண் பதிப்பகத்தில் முன்பணம் செலுத்தலாம். நூல் விலை, 800. சலுகை விலை 600. பிரபாகரனுடனான 30 ஆண்டு கால நட்புறவை விரிவாக விவரித்து இந்நூலை நெடுமாறன் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ‘தமிழீழத்துக்கு 4 முறை நேரில் சென்று விரிவாகப் பயணம் செய்து சேகரித்து அபூர்வத் தகவல்கள்; பிரபாகரனே மனம் திறந்து பகிர்ந்துகொண்ட செய்திகள்; பிரபாகரனின் பெற்றோர், சகோதர-சகோதரிகள், நெருங்கிய உறவினர்கள், இளம் பருவத்துத் தோழர்கள், புலிகளின் மூத்தத் தளபதிகள் ஆகியோர் தெரிவித்த விவரங்கள்; பிரபாகரன் கைப்பட எழுதிய கடிதங்கள்’ ஆகியவை இந்நூலில் இடம்பெறுகின்றன. இப்புத்தகம் குறித்து மேலும் அறிய தொடர்பு கெள்ளவேண்டிய தொலைபேசி எண் : 23775536.
பாரதி பதிப்பகம்வெளியிட்டிருக்கும் முக்கிய புத்தகம். தமிழ்ப் பதிப்புலகம் பற்றியும் அதை இயக்கிய முக்கிய ஆளுமைகள் பற்றியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.
சுருக்கமான இந்திய வரலாறு, வஉசி வாழ்க்கை வரலாறு, தேசியக் கொடியின் கதை போன்ற புத்தகங்கள் பப்ளிகேஷன் டிவிஷனில் சகாய விலையில் கிடைக்கின்றன.
சீதை பதிப்பகத்திலும் பல புத்தகங்கள் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. புத்தகக் கண்காட்சி நிறைவடையும் நேரம் என்பதால் திடீரென்று இவ்வாறு விலை குறைத்திருககக்கூடும். அபிதான சிந்தாமணி, பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளிட்ட இலக்கிய, இலக்கண நூல்களை இங்கே வாங்கலாம்.
தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் Marxim Gorky என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். மார்க்ஸின் கார்க்கி என்று போட்டிருந்தால்கூட பரவாயில்லை.
ஆக்ஸ்ஃபோர்ட்டில் கண்கவரும் கிளாஸிக்ஸ் அணிவகுத்து நிற்கின்றன. நிரந்தர ஆயுள் கொண்ட இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
பண்டைய இந்தியா, ஆரியர்களின் இந்தியா, கோசாம்பியின் இந்தியா, ஆர்.எஸ். சர்மாவின் இந்தியா, நம்பூதரிபாட்டின் இந்தியா, கேதரின் மாயோவின் இந்தியா, காந்தியின் நேருவின் இந்தியா, சுனிதிகுமார் கோஷின் இந்தியா, பகத் சிங்கின் இந்தியா… இந்திய வரலாறு பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாக பல நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன. மேலே உள்ளது Orient Blackswan வெளியிட்ட நூல்.
இன்றோடு சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவடைகிறது என்பதால் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.
இன்றைய சிபாரிசு. கிட்டத்தட்ட 1500 பக்கங்களில் ரவீந்திரநாத் தாகூரின் கட்டுரைகள் இரு பகுதிகளில் சாகித்திய அகாடெமியில் கிடைக்கிறது. விலை ரூ.250.
0
பட்டாம்பூச்சி















