அத்வைதம் குற்றவாளியா? – 2

ஒரு கார் விபத்து. ஓட்டுநருக்குக் கை துண்டாகிவிட்டது. சிகிச்சையெல்லாம் முடிந்து அவர் வருகிறார். இப்போது அவருக்கு வலது கை இல்லை. ஆனால் அவருக்கு வலது கை மோதிரவிரலில் ஒரு நமைச்சல். சில நேரங்களில் வலி. என்ன செய்வதென்றே தெரியாத வலி. அவர் இழந்த கை அவருடன் இருப்பதை உணர்கிறார். அதைக் காண முடியாது. அதனால் எதையும் தூக்க முடியாது. அதற்கு பௌதீக இருப்பு இல்லை. ஆனால் அவரால் அதை உணர முடிகிறது.

உலகமெங்கும் இவ்வாறு கைகளை கால்களை இழந்தவர்கள் தங்கள் உறுப்புக்களை இன்னும் இருப்பதாக உணர்ந்திருக்கிறார்கள். இதற்கு ‘மாய உறுப்புகள்’ (phantom limbs) என்று பெயர். இது எதைக் காட்டுகிறது? இதைத் தெரிந்துகொள்ளவேண்டுமானால்,  உடலுக்கும் மனத்துக்குமான உறவு ஐரோப்பிய தத்துவச் சிந்தனையில் எப்படி இருக்கிறது என்பதைச் சிறிது தெரிந்துகொள்ளவேண்டும்.

மனத்துக்கும் உடலுக்கும் தொடர்பு உண்டா? இந்தக் கேள்விக்கு, ‘மனம் முழுக்க முழுக்க உடலிலிருந்து வேறுபட்டது’ எனபதே மேற்கின் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரிய பதில். மனமும் உடலும் ஒரே பொருளால் ஆனவை; மனம் என்பது பொருட்சேர்க்கையின் விளைவாக இருக்கலாம் என்பது போன்ற கோட்பாடுகள் மேற்கத்திய பொது நம்பிக்கைக்கு உவப்பானவை அல்ல. இறையியலாளர்கள், தத்துவத்தின் ஒட்டுமொத்தக் குத்தகைக்காரர்கள் ஆனபிறகு, ஒருமைத்தன்மை கொண்ட தத்துவ நிலைப்பாடுகள் ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. அல்லது புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு வந்திருக்கின்றன. தாமஸ் அக்கினோஸ் மிகத் தெளிவாக அரிஸ்டாட்டிலின் வார்த்தைகளுக்கு இருமை வியாக்கியானங்களை அளித்தார். மனம் என்பது ஆன்மாவின் இயற்கையைக் கொண்டது என்றும், எனவே அது அழிந்து போகும் உடலைப்போல இல்லை என்றும் அவர் கூறினார். மனத்துக்கு அழிவு கிடையாது என்றார். மேற்கத்திய இறையியலில் மனம் என்பது அழிவற்ற பொருளாக மாறியது. அது உடலிலிருந்து முழுக்க முழுக்க வேறுபட்ட ஒன்று.

இந்த மனமே மனிதனின் தனித்தன்மை. ஏனெனில் மனமே சிந்திக்கிறது. நான் ஏன் இருக்கிறேன்? ஏனெனில் நான் சிந்திக்கிறேன். ரெனே தெகார்த் மிக முக்கியமான ஐரோப்பியச் சிந்தனையாளர். இவர் எதையும் இருமைப்படுத்திப் பார்க்கும் ஒரு பார்வையை அறிவியல் யுகத்தின் தொடக்கத்தில் மீண்டும் அழுத்தம் திருத்தமாக முன்வைத்தார். உடல்-மனம் இரண்டும் முழுக்க முழுக்க வேறுபட்டவை என அவர் கூறினார். இது மேற்கத்திய இறையியலுக்கும் உகந்ததாக இருந்தது. மேலும் மேற்கின் மதக் கோட்பாடுகளை அறிவியலில் இருந்து நீக்கிவைக்க ஒரு வேலியாகவும் பயன்பட்டது. தெளிவான வரையறைகள் கொண்ட அறிவியல் உடலை ஆராய்கிறது; மனம் அறிவியலின் களமல்ல. அது இறையியல் தத்துவங்களின் களம். ஒரு விதத்தில் இந்தப் பிரிப்பு அறிவியலை மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்க உதவியது. ‘உன் களம் உனக்கு, என் களம் எனக்கு.’

அறிவியலைச் சுற்றி இத்தகைய தடுப்புச்சுவர்கள் எப்போதுமே மத இறையியல்களால் போடப்படுகின்றன. ஆனால் குழந்தை கண்ணனைச் சுற்றி உடைந்துகிடக்கும் சகடாசுரனின் துண்டுகள்போல வரலாறெங்கும் அறிவியலைச் சுற்றி இந்த மதத் தடுப்புச் சுவர்கள் உடைந்துகிடக்கின்றன. இன்றைக்கு மனத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அறிவியலால் அறிந்துகொள்ள முடிகிறது. உடல் வேறு, மனம் வேறு என்கிற கோட்பாட்டுச் சுவர்களும் உடைபட்டுக்கிடக்கின்றன. இதை எப்படி எதிர்கொள்வது? இதனை ‘உயிர்த்துவம்’ (vitalism) என்கிற கோட்பாட்டின்மூலம் எதிர்கொள்ள முயன்றனர் சில மேற்கத்திய தத்துவவியலாளர்கள். இதற்கு அறிவியல் ஆதாரமும் பெற விழைந்தனர்.

இத்தகைய சூழலில்தான் இந்த ‘மாய உறுப்பு’ என்னும் நிகழ்வு முக்கியமானதாகிறது. இதோ உடலிலிருந்து வேறுபட்ட பொருள் மனம் என்பதற்கான மிகச் சிறந்த சான்று. ரூபர்ட் ஷெல்டிரேக் என்கிற பிரிட்டிஷ் உயிரியலாளர் இன்றைக்கு மேற்கத்திய உலகின் மதம் சார்ந்த அறிவியல் வட்டாரங்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நியூ-ஏஜ் கல்ட்கள் முதல் கிறிஸ்தவ இறையியல் மையங்கள்வரை இவரது கோட்பாடுகள் பேசப்படுகின்றன. இவர் இந்த மாய உறுப்பு, உண்மையில் மனத்தின் தனி இருப்புக்கான ஆதாரம் என்று கருதுகிறார்.

இந்த ஷெல்டிரேக் இந்தியாவில் உள்ள ICRISAT என்கிற விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில்தான் பணி புரிந்தார். அப்போது இந்து மதத்தின்மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் விரைவில் ‘ஹிந்துக்கள், விதி மீதான நம்பிக்கையால் சக மனிதர்களுக்கு உதவுவதில்லை. ஆனால் கிறிஸ்தவ மரபே அப்படி உதவத் தூண்டுகிறது’ என்று உணர்ந்த்தாகச் சொல்லி தீவிர கிறிஸ்தவர் ஆனார். ஹிந்து மதத் தாக்கமும் கிறிஸ்தவ இறையியலில் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்ட ஷெல்டிரேக் உருவாக்கிய கோட்பாடுதான் ‘Morphic Resonance’ . 1981-ல் இவரது நூல் வெளிவந்தது: A New Science of Life: The Hypothesis of Morphic Resonance.

Morphic Resonance அல்லது Morpho-genetic field என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்திப் புலம். எல்லா உயிர்களிலும் இது செயல்படுகிறது. இதனால்தான் கரு உருவாகிறது. இதனால்தான் பரிணாமம் ஒரு குறிப்பிட்ட திசையில் நடக்கிறது. ஆனால் கண்ணுக்குத் தெரியாது. இதற்கு ஆதாரம் உண்டா? ஆதாரங்கள் தருவதற்கு பல பரிசோதனைகளை ஷெல்டிரேக் உருவாக்கியுள்ளார். ஆனால் இவற்றின் விளைவுகள் எவற்றாலுமே அவருடைய முடிவுகளுக்கு சர்ச்சையற்ற தெளிவான ஆதாரங்களைத் தர முடியவில்லை. இங்கிலாந்தின் நியூ சயிண்டிஸ்ட் பத்திரிகை இவரது Morphic Resonance கோட்பாட்டை ஐயந்திரிபற நிரூபித்தால் பெருந்தொகையைப் பரிசளிப்பதாக அறிவித்தது. அந்த தொகையை ஷெல்டிரேக்கோ அவரது சிஷ்யகோடிகளோ இன்றுவரை பெறவில்லை.

விலையனூர் ராமச்சந்திரன்

இந்தச் சூழலில்தான் ஷெல்டிரேக் இந்த மாய உறுப்பு சமாசாரத்தை தன்னுடைய கோட்பாட்டின் ஆதாரமாக வைத்து ஒரு பரிசோதனையை உருவாக்கினார். பரிசோதனை மிகவும் எளிதானது. விபத்தில் அல்லது அறுவை சிகிச்சையில் கையை இழந்த ஒரு நபர் இந்த மாயக் கை தமக்கு இருப்பதாக உணர்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரை ஒரு இடத்தில் இருக்கச் செய்வார். இத்தகைய மாய உடல்களை உணரும் சக்தி உண்டு எனச் சொல்லிக்கொள்பவர்கள் நிறையவே உண்டு வெளிநாட்டில். அத்தகைய ஒருவர் இந்த ஆசாமி முன்னால் நிற்பார். திரை மறைவில் இருக்கும் மாயக் கை ஆசாமி தனது மாயக்கையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்கவேண்டும். ஒவ்வொரு முறை அவர் மாயக் கையை அப்படி வைப்பதாகச் சொல்லும் நேரம் பதிவு செய்யப்படும். மாயக் கையை உணரும் சக்திகொண்ட ஆசாமி, எப்போதெல்லாம் மாயக் கை நீட்டப்பட்டது என்பதைத் தன் சக்தியால் கண்டறிந்து சொல்லவேண்டும். அதுவும் பதிவு செய்யப்படும். பிறகு இந்த இரண்டு நேரப்பதிவுகளும் ஒப்பு நோக்கப்படும். இந்தப் பரிசோதனையைச் செய்த ஷெல்டிரேக் இந்த இரண்டு நேரப்பதிவுகளும் ஒத்திருப்பதாகக் கூறினார். ஆனால் இந்த ‘ஒத்திருக்கும்’ விஷயம் தவறானது என அதனை ஆராய்ந்த சக-அறிவியலாளர்கள் கூறினர். அந்த டெக்னிக்கல் சமாச்சாரங்களுக்குள் நாம் போகவேண்டியதில்லை. ஆனால் இதில் இருக்கும் ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்கவேண்டும்.

இந்த மாயக் கைகள் (அல்லது மாயக் கால்கள்) என்பவை உண்மையில் அதனை உணர்பவர்களுக்கு ஒரு பெரிய பிரச்னை. சில நேரங்களில் அவற்றில் வலி ஏற்படும். அல்லது அரிப்பு. ஆனால் யாராலும் அவற்றைப் பார்க்க முடியாது. வலி உண்மை. ஆனால் வலி எங்கே ஏற்படுகிறதோ அந்த இடத்தைப் பார்க்க முடியாதது. ஷெல்டிரேக்கின் அணுகுமுறை இதற்கு எத்தகைய தீர்வினைத் தருகிறது? உண்மையில் அது எந்தத் தீர்வையும் தர இயலாது. ஷெல்ட்ரேக்கைப் பொருத்தவரையில் அவருக்கு இந்த மாய உறுப்பு எனும் விஷயம் அறிவியலால் நிராகரிக்கப்பட்ட ஒரு கருத்தை – அதாவது மனம் உடலிலிருந்து வேறுபட்ட இருப்பை உடையது என்பதை –  மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு அவ்வளவுதான். இந்த மாய உறுப்புகள் கொண்டவர்கள் விதியே என்று அதன் அத்தனை அசௌகரியங்களுடனும் வாழவேண்டியதுதான்.

இந்தியத் தத்துவச் சூழலில் சாங்கியம், பிரபஞ்சம் அனைத்தையும் இரண்டாகப் பிரிக்கின்றது. புருஷன் – பிரகிருதி என. ஆனால் இது மனம்-உடல் என்கிற மேற்கத்தியப் பிரிவிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் சாங்கியம் மனத்தை பிரகிருதி (இயற்கை) எனும் பிரிவில் இணைக்கிறது. ஆகவே மனம் என்பது இயற்கையின் ஒரு விளைவே அன்றி இயற்கையிலிருந்து மாறுபட்ட ஒன்றல்ல. அத்வைதம் இதனை மேலும் விரிவாக்குகிறது என்பதுடன் புருஷ-பிரகிருதி இருமையை ஒருங்கிணைக்கிறது. வேறுபாட்டை அங்கீகரித்து வேற்றுமையை நிராகரிக்கிறது. அனுபவம் என்பது மனம்-உடல் ஆகியவை சார்ந்தது என்பது ஒருபுறம். மறுபுறம் அது பிரக்ஞை சார்ந்தது. பிரக்ஞை அனைத்து அனுபவங்களின் அடித்தளக் களம். ஆக மனமும் உடலும் பொருண்மை (matter) சார்ந்த கட்டுமானங்களே. உடல் குறித்த மனப்பதிவுகள் இணைந்தே நம் நனவுப்பிரக்ஞையில் ‘இது என் உடல்’ என்கிற கருத்தாக்கம் உருவாகிறது. இதில் நம் உடலின் அமைப்புக்கு உள்ள பங்கு போலவே, மனத்துக்கும் பங்கு உண்டு. மனத்திலிருந்து வேறுபட்டது ஆத்மா. இன்னும் ஆழமாகப் போனால் மனமும் உடலும் ஆத்மா எனும் பெரும் புலத்தில் ஏற்படும் வெளிப்பாடுகளே. அத்வைதத்தின் இந்தப் பார்வை மனம்/உடல் பிளவினை சார்புடைய ஒரு விஷயமாக மாற்றுகிறதே அன்றி அதனை ஒரு அடிப்படை உண்மையாக நிறுவவில்லை.

மீண்டும் மாயக் கரங்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு வரலாம். நாம் தீயைத் தொட்டால் அந்த தீண்டிய துன்பம் மின்னதிர்வுகளாக நரம்புகளின் மூலம் சென்று மூளையில் இருக்கும் கைக்குரிய இடத்துக்குச் சென்று சேரும். நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் அது போல மூளையில் ஒவ்வொரு இடத்தை மின்னதிர்வுக் கிளர்ச்சியுறச் செய்யும். இப்படி மூளையில் எந்தெந்தப் பகுதி எந்தெந்த உறுப்போடு தொடர்புடையது என்பதை வைத்து 1937-ல் பென்ஃபீல்ட் என்பவர் ஒரு விசித்திர மனித சித்திரத்தை உருவாக்கியிருந்தார். இதை நரம்பியலில் பென்ஃபீல்ட் ஹோமன்குலஸ் (Penfield Homunculus) என்பார்கள். இந்த மனிதனுக்கு கரங்களும் வாயும் பெரிதாக இருக்கும். அதாவது மூளையின் பெரும் பகுதிகள் கைகளின் இயக்கத்துக்கும் பேச்சுக்கும் பயன்படுத்தப்படுவதை இது காட்டுகிறது. இந்த மூளைக்கும் உறுப்புகளுக்குமான தொடர்புகள் தீர்மானிக்கப்ப்ட்டுவிட்டவையா அல்லது நம் மனது உருவாக்குபவையா?

1990-களில் டிம் பான்ஸ் (Tim Pons) எனும் நரம்பியலாளர் ஒரு சுவாரசியமான பரிசோதனையைச் செய்திருந்தார். ஒரு குரங்கின் கையிலிருந்து மூளைக்கு செல்லும் அனைத்து நரம்புகளையும் துண்டித்தார். பின்னர் கொஞ்ச நாட்கள் கழிந்து அந்த குரங்கின் செயலிழந்த கைகளைத் தொடும்போது அதன் மூளையில் பொதுவாக கரத்துக்குரிய மூளைப்பகுதியில் ஏதாவது மின் இயக்கம் உருவாகிறதா என அவர் கண்காணித்தார். எதிர்பார்த்தபடியே எந்த இயக்கமும் இல்லை. இது எதிர்பார்த்ததுதான். ஆனால் அடுத்து அவர் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்தது. அவர் அந்தக் குரங்கின் நாடியைத் தொட்டபோது அதன் கரத்துக்குரிய மூளைப் பகுதியில் மின்னியக்கம் ஏற்பட்டது!

வி.எஸ்.ராமச்சந்திரன் என்னும் நரம்பியலாளர் மாயக் கரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அவர் டிம் பான்ஸின் ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டார்.  இந்த ஆராய்ச்சியை மனிதர்களை வைத்துத் தொடர்ந்தார்.

டாம் ஒரு விபத்தில் தன் கையை இழந்து மாயக் கை உணர்வுடன் இருந்தவர். டாமின் கண்கள் கட்டப்பட்டன. பின்னர் ராமச்சந்திரன் அவரது அங்கங்களை ஒவ்வொன்றாகத் தொட்டார். ஒவ்வொருமுறை தொடும்போதும் தான் எங்கே தொடுவதாக டாம் உணர்கிறார் எனக் கேட்டுக்கொண்டார். அந்த உரையாடல் இப்படிப் போகிறது:

நீங்கள் என் கன்னத்தை தொடுகிறீர்கள்.’

வேறு எங்காவது தொடும் உணர்ச்சி இருக்கிறதா?’

டாக்டர், வேடிக்கையாக இருக்கிறது. என் மாயக்கையின் பெருவிரலைத் தொடுகிறீர்கள்.’

இப்போது அவனது மேலுதடு தொடப்படுகிறது.

ஹேய்! என் ஆள்காட்டி விரலையும் மேலுதட்டையும் தொடுகிறீர்கள்.

நிச்சயமாகவா சொல்கிறாய்?’

ஆமாம் இரண்டு இடங்களையும் தொடுகிறீர்கள்.

விரைவில் டாமின் மாயக் கைக்கும் அவனது முகத்துக்கும் தொடர்பு இருப்பதை ராமச்சந்திரன் கண்டறிந்தார்.

பொதுவாக இந்த மாயக் கைகள் பிரச்னைதான் என்பது நமக்கு தெரியும். இந்தக் கண்ணுக்குத் தெரியாத கைகள் எங்காவது மாட்டிக்கொண்டதுபோல இவர்கள் உணர்வார்கள். ஆனால் கை இருந்தால்தானே அசைக்க முடியும்? எனவே அசௌகரியம். வலி. ஏன் இப்படி? இதற்கான காரணமாக ராமச்சந்திரன் கண்டுபிடித்தது இதைத்தான்.

மூளை, மாயக் கரம் இருப்பதாக உணர்கிறது. மாயக் கரத்தை அசைக்க மூளை முயற்சி செய்கிறது. ஆனால் கண்ணால் அந்த இயக்கத்தைப் பார்க்க முடியவில்லை. கண்ணுக்கான மூளையின் கேந்திரங்கள் கையுடைய உணர்வுக் கேந்திரங்களோடு ஒப்பிட, உயர் கேந்திரங்கள். எனவே கண் சொல்கிறது, ‘கை இல்லை. அதை அசைக்க முடியாது’  என்று. ஆனால் கைக்குரிய மூளையின் பகுதி, ‘இல்லை, நான் கையை உணர்கிறேன்’ என்கிறது. இந்த முரண்தான் பிரச்னையின் அடிப்படை.

இந்த முரணை எப்படிக் களைவது? மூளை ஒரு கதையாடலை உருவாக்குகிறது. அந்த மாயக் கரம் இசகுபிசகாகச் சிக்கிக்கொண்டு அசையமுடியாது இருக்கிறது. வெறும் கதையாடல் என்றால் பரவாயில்லை. அதனுடன் ஸ்பெஷல் எஃபெக்டாக வேதனையையும் கட்டமைக்கிறது. வர்ச்சுவல் கட்டமைப்பு. அசல் வேதனை.

இதனை நிவர்த்தி செய்ய ஒரே வழிதான். ஒரு கண்ணாடி கொண்ட பெட்டிக்குள், இத்தகைய நோயாளி ஒருவர் அவரது உண்மையான கையையும் மாயக் கையையும் விடவேண்டும். பின்னர் ஒத்த அசைவுகளை அவர் மேற்கொள்ளவேண்டும். அதாவது இருக்கிற வலது கையை அப்படி அசைத்தால் இல்லாத இடது கையை இப்படி அசைக்கவேண்டும். உள்ளே அந்தக் கண்ணாடியில் இல்லாத கையும் (இருக்கும் கையின் பிரதிபலிப்புதான்) அசைவதைக் கண் பார்க்கும். ஆஹா! நோயாளிக்கு அதுவரை முடங்கி வலி கொடுத்த மாயக் கையின் வலி மறைந்துவிட்டது! .

மாயக்கை வேதனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் இந்த முறையை ராமச்சந்திரன்-ரோஜர்ஸ் visual-kinesthetic synesthesia (ராமசந்திரன், 1996) என்கின்றனர். இந்த சிகிச்சை முறை இந்நோயாளிகளுக்கு வேதனையை போக்குகின்றது. இதை ‘ஒரு மாயத்தோற்றத்தின் மூலம் மற்றொரு மாய உணர்வை அகற்றுவது’ எனக் குறிப்பிடுகிறார் ராமச்சந்திரன். இந்தச் சிகிச்சையின் அடிப்படை அறிதலை அவர் எப்படிப் பெற்றார்? ராமச்சந்திரன் விளக்குகிறார். (இந்த பகுதியின் தொடக்கத்தில் அவர் சங்கரரின் விவேக சூடாமணியிலிருந்து மேற்கோளுடன் ஆரம்பிக்கிறார்.)

‘இதற்கெல்லாம் என்ன பொருள் என்பதை இப்போது கொஞ்சம் பாருங்கள். உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் உங்கள் சுயத்தை ஒரு குறிப்பிட்டவிதத்தில் உணர்கிறீர்கள். நிலையானதாக, சாசுவதமானதாக, சாகும்வரை மாறாததாக உங்கள் உடல் உணர்வுடன் இணைத்தபடி வாழ்கிறீர்கள். ஆக. உங்கள் சுயத்துக்கும் உங்கள் உடலுக்குமான இந்த இணைப்பு மிகவும் அடிப்படையான உண்மையாகிவிடுகிறது. அதனைக் குறித்து நீங்கள் கேள்வி கேட்பதெல்லாம் இருக்கட்டும் அதை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. ஆனால் நாம் இதுவரை பார்த்தவை எல்லாம், இந்த உடல் குறித்த சித்திரமானது அப்படி ஒன்றும் நிலையானதல்ல என்றும் அந்த நிலையான தோற்றம் கேள்விக்கு உரியது என்றுமே காட்டுகின்றன. மனத்தால் கட்டமைக்கப்பட்டது என்றும், அந்தக் கட்டமைப்பை ஒரு சில சோதனைகள்மூலம் வெகுவாக மாற்றி அமைத்துவிட முடியும் என்றும் காட்டுகின்றன. இந்த உடல் தாற்காலிகமாக நீங்கள் கட்டமைத்த ஒரு கூடுதான் – உங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்காக.’

சுருக்கமாகச் சொன்னால், உங்கள் உடலுணர்வு ஒரு மாயை என அத்வைதம் கூறுவதன் பொருள் இதுதான். அது ஒரு தப்பி ஓடும் தத்துவமல்ல. தெளிவான அறிவின் முன்னகர்வுக்கு உதவும் ஒரு தரிசனம்.

ஆக, மேற்கத்திய மையத் தத்துவப் பார்வை தீர்த்துவைக்க முடியாத ஒரு பிரச்னையை அத்வைத அறிதல் அல்லது வேதாந்தச் சட்டகத்தால் தீர்த்துவைக்க முடிந்திருக்கிறது.

இப்போது சொல்லுங்கள். அத்வைதம் குற்றவாளியா?

மேலதிக விவரங்களுக்கு:

 • P.Bruger and K.L.Taylor, ESP, in ‘PSI Wars: Getting to Grips with the Paranormal’ , (Ed. James E. Alcock , Jean Burns, Anthony Freeman), Imprint Academic :2003
 • ரூபர்ட் ஷெல்ட்ரேக், Prayer: A Challenge for Science, Noetic Sciences Review, Vol. 30, Summer 1994
 • வி.எஸ்.ராமச்சந்திரன் & ஸாண்ட்ரா ப்ளாக்ஸ்லீ, The Phantoms of the Brain, Harper Perennial, 2005
 • ஜெயமோகன், இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், கிழக்கு பதிப்பகம், 2009
 • இந்தக் கட்டுரையின் விரிவான வடிவம்: ‘மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம்’ http://solvanam.com/?p=2279

71 comments so far

 1. பிச்சைக்காரன்
  #1

  ஆகவே மனம்தான் உண்மை.. உடல் எனப்து கற்பனையே …

 2. அருண்பிரபு
  #2

  Awesome. Fantabulous write up, Mr.Aravind Neelakantan. Hats off.

 3. SANJAY MENON
  #3

  Sema comedy…. Manam unmai udal karpanai na… உடலுக்கு வலி, பசி எதவும் கற்பனை தான். பசி வந்தால் அரவிந்தன் சாப்டாம இருக்கட்டும், காய்ச்சல் வந்தால் எல்லாம் மாயைநு வீட்லயே இருக்கட்டும் அலோபதிக் ஆஸ்பித்திரிக்கு ஏன் போக வேண்டும் …

 4. அரவிந்தன் நீலகண்டன்
  #4

  //ஆகவே மனம்தான் உண்மை.. உடல் எனப்து கற்பனையே //
  மனம் வேறு உடல் வேறு என்கிற நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால் அப்படித்தான் தோன்றும். ஆனால் மாயை என்பது பொய் அல்ல. அது hallucination அல்லது delusion அல்ல. அது ஒரு creative illusion. உடல் குறித்த உணர்வு அல்லது அனுபவத்தில் உடல்-மன பிளவு கோட்பாட்டாளர்கள் நினைத்ததைக் காட்டிலும் மனதின் பங்கு அதிகமாகவும் dynamic ஆகவும் உள்ளது. அதனை அறிந்து கொள்ள அத்வைத தரிசனம் உதவுகிறது. மனம்-உடல் என்கிற இரட்டை பார்வையால் அறிவியல் அடைந்த தேக்க நிலை அகல அத்வைதம் உதவமுடியும். மேலும் இதன் காரணத்தால் உடல் இழிவு மனம் மேன்மையானது என்கிற மனப்பாங்கும் அகலும்.

 5. சத்யராஜ்
  #5

  அய்யா, அது விலையனூர் இல்லை. வில்லியனூர். பாண்டிச்சேரிக்கருகில் இருக்கும் ஊர். பெயர் உச்சரிப்பையெல்லாம் குற்றம் சொல்கிறானே என்று நினைக்காதீர். ஜெர்மன், ஃப்ரெஞ்ச், இத்தாலியன் பெயர்களெல்லாம் தவறாக உச்சரிக்கப்பட்டால் நான் தவறாகச் சொல்லமாட்டேன். நம்ம தமிழ்நாட்டில இருக்கற ஊர். அதை இங்க்லீஷ் ஸ்பெல்லிங் படித்துவிட்டு இப்படி தமிழில் மாற்றினால் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. ‘Nagarcoil Jeyamohan’ என்றே படித்துவிட்டு ‘நகார்காயில் ஜெயமோகன்’ என்று யாராவது எழுதினால் திருத்துவீர்களா மாட்டீர்களா? 🙂

 6. SANJAY MENON
  #6

  சரியாக சொன்னீர்கள், புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரின் நகருக்கு அருகே இருக்கும் வில்லியனூர் தான் அய்யா அது.

 7. dr.sidharth
  #7

  வேலயனுர் என்பது வில்லியனூர் இல்லை … கேரளாவின் பாலக்காடு வேலயனுர் … அரவிந்தன் research செய்யாமல் பீலா விடுபவர் இல்லை.

 8. ganapathy
  #8

  அந்தமானில் வாழும் மனிதனுக்கும் சத்திஸ்கர்ஹ வாழ் ஆதிவாசிக்கும் நாகா பிரிவினருக்கும் அத்வைதம்/ஆதிசங்கரர் தெரிந்ததனால்/தெரியாததனால் என்ன வித்தியாசம் .போலியோ சொட்டு மருந்து தெரிந்தால் பிரயோசனம்
  ஆதிசங்கரர்/அத்வைதம் அரவிந்தன் முதாதையர்களுக்கு வளமான வாழ்கையை அளித்தது உண்மை.அதற்கு அவர் நன்றி கடன் காட்டுவதில் தவறில்லை.அம்பேத்கர் ஐ விரும்புகுறவன் மேல் அதை திணிப்பது ஏன்.கிருத்துவ missionary போல வெளிபடையாக செய் அதற்கு ஏன் பயம்

 9. SANJAY MENON
  #9

  உண்மை தான், அத்வைதம் தான் கண்ணனி கண்டுபிடிக்க வழி வகுத்தது, அது தான் மின்சாரம் கண்டுபிடிக்க வழி வகுத்தது, ஏன் என்றால் அது எல்லாம் கண்ணனுக்கு முன் தெரியாத மாயை, ஆகவே சங்கரர் தான் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்று கூட அரவிந்தன் கூறினாலும் கூறுவார், கேட்போம் அவர் சொல்லும் வரை கேட்போம். அதற்கு பின் முடிவு செய்ய வேண்டியது நாம் தானே. அப்போது முடிவு செய்வோம். அத்வைதம் , ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதாவது என்று.

  வெளிப்படையாக செய்தால் யாரும் மதிக்க மாட்டார்கள் தானே..

 10. Sitrodai
  #10

  fantastic!!!

 11. Thivannan
  #11

  Sivagnanabotham – III Aphorism

  உளது, இலது என்றலின், எனதுடல் என்றலின்,
  ஐம்புலன் – ஒடுக்கம் அறிதலின், கண்படில்
  உண்டிவினை யின்மையின், உணர்த்த வுணர்தலின்,
  மாயா இயந்திர தனுவினுள், ஆன்மா.

  Since one says, ‘It is not this, not this’, since he says, ‘My body’,
  since there is something which knows things which happen
  (as for example in a dream) when the five sense-organs are dormant,
  since during deep sleep, there exists something without ingesting food
  and without action of any kind, since there is something which
  understands when instructed – these go to prove that there exists a
  soul in this body, that is made of matter.

 12. SANJAY MENON
  #12

  ஆங்கிலத்தில் எழுத வேண்டாம் என்று இங்கு அசரீரி கேட்டது, அசரீரி எல்லாம் மாற்றானுக்கு மட்டும் தானா, பார்ப்பானுக்கு இல்லையா..

 13. Thivannan
  #13

  சாதிப்பெயரைப் பட்டம் போல் போட்டுக் கொண்டிருக்கும் நீ அடுத்தவனை அதுவும் அவன் சொல்லாத சாதியைக் கண்டுபிடித்து எழுதும் மர்மம் என்னவோ!

 14. SANJAY MENON
  #14

  பிராமணர்கள் ஆதி கால நாசிக்கள் தான் என்பதால். புதிய நாசிசத்தை இந்தியாவில் வளர விடாமல் தடுக்கவே.

  இந்து மிசினரி சேவையில் ஈடுபட எதுக்கு ஐயா தமிழ் பேப்பர் . இந்துப் பேப்பர்நு வைத்துக் கொள்ள வேண்டியது தானே.

 15. அருண்பிரபு
  #15

  இந்து என்று பெயர் வைத்துக்கொண்டு இடதுசாரிக்கு அடிவருடும் பத்திரிக்கையில் கேட்க வேண்டிய கேள்வியை இங்கே கேட்டிருக்கிறீர்கள். தமிழ் என்பது தமிழர்கள் மொழி. தமிழர்கள் இந்துவாகவும் இருக்கலாம் இன்னபிற மதத்தவராகவுமிருக்கலாம். இந்துக்களுக்குத் தமிழில் உரிமையில்லை என்பது போல் உளறுவதை நிறுத்துங்கள்.

  அதுபின்னே, தமிழ் பேப்பரில் இந்து தர்மம் குறிச்செழுதாம் பட்டில்லான்னு தமிழாள் பரையட்டே. மலையாளிக்கு எந்தா பிரஷ்னம் மேனோனே! மனசிலாயோ?

 16. அருண்பிரபு
  #16

  அன்புள்ள சஞ்சய் மேனர்! (மரியாதைங்ணோவ்)

  பார்ப்பானுக்கு எழுதுவது பற்றிய அசரீரி தேவையில்லையே! எழுதுவானுக்குத் தானே அதெல்லாம் அவசியம்?

  ஒரு சந்தேகம். மாற்றமே இல்லாமல் எல்லாவற்றிலும் சாதி பற்றியே பேசுபவனுக்குப் பெயர் தான் மாற்றானோ?

 17. SANJAY MENON
  #17

  செய்வதை வெளிப்படையாக செய்யவும். எனக்கு இருக்கும் தைர்யம் கூட உமக்கு இல்லை. அரவிந்தன் பிராமணன், அரவிந்தன் சாஸ்த்ரி என கூறுங்கள். தன்கள் சாதி பெயரை சொல்ல தைர்யம் இல்லை என்றால், சாதி ஒழித்து ஒரு ஆதி திராவிட பெண்ணை மணக்கவும். அந்தளவுக்கு தைர்யம் இல்லாத முதுகெலும்பு இல்லாத ஆளுகள் தானே நீங்கள் எல்லாம். பேசுவது சமத்துவம், போதிப்பது சாத்தியமா

 18. சத்யராஜ்
  #18

  அன்புள்ள அரவிந்தன்,

  நீங்கள் ஒரு பார்ப்பனர் இல்லை என்பதை – அப்படிச் சொல்லி எதையும் நிரூபிப்பது தேவையற்றது என்றாலும் கூட – நீங்கள் ஒருமுறை இங்கே சொல்லிவிட்டாலே, பல பிரகிருதிகள் இங்கிருந்து ஓடிவிடுவார்கள் என்பது என் கருத்து. பாருங்கள், நீங்கள் அரவிந்தன் பிராமணன் என்றோ, அரவிந்தன் சாஸ்திரி என்றோ உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டுமாம் 🙂

  பெரியாரை விமர்சித்து எழுதிய சு.வெங்கடேசன் முதலிலேயே தான் ஒரு பார்ப்பனர் இல்லை, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்று தன் முன்னுரையிலேயே எழுதினார். அப்போது அப்படி எழுதியது கொஞ்சம் அதீதமாகப் பட்டது. இப்போதுதான் ஏனென்று புரிகிறது.

  இந்த மேனன், வர்மா பிரகிருதிகள் சாதியென்னும் கொடுமை என்று விடுவதெல்லாம் சும்மா உதார் மட்டுமே. அடுத்தவன் சாதி என்னவென்று அறிந்து, அது தன்னுடையதாகவோ, தனக்கு விருப்பமானதாகவோ இருந்தால் உற்சாகமாகப் பழக ஆரம்பிக்கும் பிரகிருதிகள் இவை.

  – சத்யா

  பி.கு: சஞ்சய் மேனன், நான் சத்யராஜ் பிராமணனோ, சத்யராஜ் சாஸ்திரியோ, ஐயரோ, ஐயங்காரோ, மாத்வரோ, வர்மாவோ, மேனனோ அல்லன்.

 19. அரவிந்தன் நீலகண்டன்
  #19

  இன்று இணைய சூழலில் ஒருவன் பிராம்மணனாக இருந்து எழுதினால் அந்த நபரை அதன் அடிப்படையிலேயே வசைபாடும் வக்கிர பாசிச வசதி இருக்கிறது. நான் பிராம்மணன் அல்ல என்று சொன்னால் அந்த வக்கிர பாசிசத்திலிருந்து தப்பிவிடலாம்தான். ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே நான் அபப்டி சொல்லப் போவதில்லை. ஒருவன் முஸ்லீம் என்பதாலேயே அவர் வசைபாடும் சூழல் நிலவும் இடத்தில் நிச்சயம் நான் என்னை ஒரு முஸ்லீம் இல்லை என்று சொல்லி அந்த வசதியை பயன்படுத்த மாட்டேன் என்பது போலவே இதுவும்.

 20. Sarang
  #20

  ganapathy and the rest who link India not venturing in to science with advaitham-this is laughable

  in part 1 – Reading ganapathy’s questions and responses, i for a moment thought there has arrived one to beat the kazhagams

  for those think Advaitam put us backward – let me give one statistic

  In the beginning of 18th century – India’s GDP was 24% of World GDP – today it is around 4

  today’s U.S GDP is 27% of the world’s

  so who delivered results for India till then and why India did not progress later – don’t we even know the basics-British,french looted us and u.s looted them through arms sales during world war 2.

  If you blame advaitam’s maya for lack of progress – then Japan should be the darkest country today – Buddhism preaches Nihilism and says everything you see does not exist(not even Maya), but exists only in the Budhdhi. Has not Japan grown?

  If west grew because they had other relions? why has not South America grown -Christianity hit SA much before NA.

 21. thiagarajan
  #21

  Dear Aravinthan,

  Would you write article to allow us(suthra) to sing devaram
  near nataraja or any near sivalinga in tamilnadu temples.
  Anbe sivam,

 22. Sarang
  #22

  thiagarajan

  aravindan has written many such articles and has made several speeches against casteism

 23. களிமிகு கணபதி
  #23

  //…Sema comedy…. Manam unmai udal karpanai na… உடலுக்கு வலி, பசி எதவும் கற்பனை தான். பசி வந்தால் அரவிந்தன் சாப்டாம இருக்கட்டும், காய்ச்சல் வந்தால் எல்லாம் மாயைநு வீட்லயே இருக்கட்டும் அலோபதிக் ஆஸ்பித்திரிக்கு ஏன் போக வேண்டும் …//

  கட்டுரை அப்படிச் சொல்லவில்லை. மனமும் உடலும் புலன்களால் அறியக்கூடிய உண்மை என்கிறது கட்டுரை. ஆனால், மனத்தில் உருவாகும் மாயப் பிம்பங்களே பொய்.

  அதாவது, உடலில் ஏற்படும் பசி, நோய் போன்றவை உண்மை. அந்த பசி, நோய் பற்றி மனம் உருவாக்கிக்கொள்ளும் புரிதல் பொய்யாக இருக்கக்கூடும்.

  உதாரணமாக, பசி வருவது உண்மை. ஆனால், பசி வரும்போது ஹலால் கறி சாப்பிடுவதுதான் நல்லது என்று மனத்தில் ஏற்பட்டிருக்கும் மாயப் பிம்பம் பொய்.

  இந்துக்களுக்கும் நோய் ஏற்படும் என்பது உண்மை. ஆனால், இந்துத்துவவாதிகள் அலோபதியை வெளியில் எதிர்த்துக்கொண்டே, ரகசியமாக அலோபதி சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் மனமயக்கத்தால் உண்டான பொய்.

  இந்த சமூகப் புரிதல் சார்ந்த மனமயக்கங்கள் அறிவீனத்தால் உண்டாகின்றன. இந்த வியாதிக்கு ஆங்கிலத்தில் pseudo-secularism அல்லது சுருக்கமாக p-secularism என்று பெயர். இந்த வியாதி வந்தவர்களை தமிழில் பீசெக்குகள் என்று எனது நண்பர் ஒருவர் அழைப்பார்.

  அதாவது, நரம்பியலின்படி இந்த பொய்யான புரிதலுக்கு மாயப்பிம்பம் என்று பெயர். சமூக உளவியலின்படி, இந்தியாவில் இதையொத்த வியாதி வந்த அரசியல் ஆர்வலர்களுக்கு பீசெக்குகள் என்று பெயராம்.

  //….மனம் வேறு உடல் வேறு என்கிற நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால் அப்படித்தான் தோன்றும். ஆனால் மாயை என்பது பொய் அல்ல. அது hallucination அல்லது delusion அல்ல. அது ஒரு creative illusion…//

  இதை ஆதிசங்கரர் வியவகாரிக சத்தியம் என்கிறார். அதாவது, இவையும் உண்மையே என்கிறார். அதாவது சத்தியமானது பலவகைகளிலும் வெளிப்படுகிறது என்கிறார் அவர்.

  //….அந்தமானில் வாழும் மனிதனுக்கும் சத்திஸ்கர்ஹ வாழ் ஆதிவாசிக்கும் நாகா பிரிவினருக்கும் அத்வைதம்/ஆதிசங்கரர் தெரிந்ததனால்/தெரியாததனால் என்ன வித்தியாசம் .போலியோ சொட்டு மருந்து தெரிந்தால் பிரயோசனம்…//

  போலியோ சொட்டு மருந்து அருந்தும் குழந்தைக்கு அந்த மருந்து எப்படித் தயாரிக்கப்பட வேண்டும் என்ற அறிவு தேவையில்லை. ஆனால், அந்த மருந்தைத் தயாரிப்பவனுக்கு அந்த மருந்தின் வரலாறு, தன்மை, உருவாக்கும் விதம், பயன்படும் விதம் இதெல்லாம் தெரிந்திருப்பது அவசியம்.

  அதைப் போல, உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏற்படும் கொடூர வலிக்கான தீர்வினை அத்வைத அணுகுமுறையுடன் கூடிய அறிவியல் அறிவு கொடுத்திருக்கிறது. இப்போது உலகம் முழுதும் உள்ள உடல் ஊனமுற்றவர்கள் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். அவர்கள் அந்தமானில் வாழ்பவர்களானாலும் சரி. சத்தீஸ்கரில் வாழும் ஆதிவாசியாக இருந்தாலும் சரி. அந்தத் தீர்வை அத்வைத அணுகுமுறையுடன் கூடிய நவீன அறிவியல் கொடுத்திருக்கிறது.

  இதைத்தான் கட்டுரை சொல்லுகிறது. அத்துடன், அத்வைத அணுகுமுறை இல்லாத ஆபிரகாமிய அணுகுமுறையால் மானுடத்திற்கு எந்தப் பலனும் ஏற்படுவது இல்லை என்பதையும் சொல்லுகிறது. அதற்கான உதாரணமாகத்தான், கிறுத்துவ அணுகுமுறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ரூபர்ட் ஷெல்டிரேக் என்கிற பிரிட்டிஷ் உயிரியலாளர் தோல்வி சுட்டப்படுகிறது.

  அத்வைத அணுகுமுறையை அறிவியலாளர்கள் பின்பற்றுவது மானுடர்களுக்கு நல்லது செய்யும். அதைவிடுத்து அத்வைதத்தைப் பற்றி அறிவை மறுப்பவர்கள் சொல்வதை நம்பினால் அத்வைதத்தின்மீது வெறுப்பும், அந்த வெறுப்பால் மானுடத்திற்கு அழிவுதான் ஏற்படும்.

  //….உண்மை தான், அத்வைதம் தான் கண்ணனி கண்டுபிடிக்க வழி வகுத்தது, அது தான் மின்சாரம் கண்டுபிடிக்க வழி வகுத்தது, ஏன் என்றால் அது எல்லாம் கண்ணனுக்கு முன் தெரியாத மாயை, ஆகவே சங்கரர் தான் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்று கூட அரவிந்தன் கூறினாலும் கூறுவார், கேட்போம் அவர் சொல்லும் வரை கேட்போம். அதற்கு பின் முடிவு செய்ய வேண்டியது நாம் தானே. அப்போது முடிவு செய்வோம். அத்வைதம் , ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதாவது என்று. …//

  அப்படி எல்லாம் இந்தக் கட்டுரை சொல்லவில்லை.

  எந்த ஒரு கட்டுரையையும் முன்முடிவுகளோடு அணுகினால் சொல்லப்படாதது எல்லாம் சொல்லப்பட்டது போலவும், இல்லாததெல்லாம் இருப்பது போலவும் தெரியும். இல்லாத கையில் வலி இருப்பது போல் தெரியும் நிலை, மனமானது தவறாகப் புரிந்துகொள்வதால் உண்டாகும் வியாதி. அந்த நோய் மனம் உருவாக்கும் மாயப் பிம்பத்தால் ஏற்படுகிறது. கட்டுரையில் சொல்லப்படாததை சம்பந்தமே இல்லாமல் காணுவது பீசெக்குத்தனத்தால் வருகிறது.

 24. Haranprasanna
  #24

  அரவிந்தன்,

  அத்வைதம் அறிவியல் பார்வை உடையது என்றால் த்வைதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? த்வைதம் பற்றி எதுவுமே பேசவில்லை என்றாலும், இந்த சந்தர்ப்பத்தில் நீஙக்ள் பேசவேண்டும்.

  அத்வைதத்தை மறுத்து மத்வர் போன்றவர்கள் ஒரு கருத்தை முன்வைத்தார்கள். அடிப்படையில் மத்வர் செய்த பிழையாக நீஙக்ள் கருதுவது என்ன?

  அத்வைதமும் த்வைதமும் ஹிந்துமதத்தின் தத்துவ கூறுகள் என்றுநினைக்கிறீர்களா அல்லது அத்வைதம் தேவையான அறிவியல் பார்வையுடைய தத்துவம் என்றும், த்வைதம் மேம்பாடற்ற தத்துவம் என்றும் நீங்கள் நினைக்கிறீர்களா?

  களிமிகு கணபதி ஐயாசார்,

  //அத்வைத அணுகுமுறையை அறிவியலாளர்கள் பின்பற்றுவது மானுடர்களுக்கு நல்லது செய்யும். அதைவிடுத்து அத்வைதத்தைப் பற்றி அறிவை மறுப்பவர்கள் சொல்வதை நம்பினால் அத்வைதத்தின்மீது வெறுப்பும், அந்த வெறுப்பால் மானுடத்திற்கு அழிவுதான் ஏற்படும்.//

  த்வைதிகளுக்கு ஃபத்வா எதுவும் விதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் விளக்கவேண்டும்.

  இந்திய ஞானத் தேடல்களுள்ளேயே தத்துவ விஷயங்களின் வேறுபாட்டை நீங்களெல்லாம் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் பிம்பம் அடங்கியிருக்கிறது. பார்க்கலாம்.

 25. களிமிகு கணபதி
  #25

  //….த்வைதிகளுக்கு ஃபத்வா எதுவும் விதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் விளக்கவேண்டும்.

  இந்திய ஞானத் தேடல்களுள்ளேயே தத்துவ விஷயங்களின் வேறுபாட்டை நீங்களெல்லாம் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் பிம்பம் அடங்கியிருக்கிறது. பார்க்கலாம்…..//

  @ தன்மானத் தலைவர், தருமமிகு கவிஞர், கிழக்கின் ஒளிக்கீற்று, நீதித் தராசில் நடுநிலை மாறாத முற்போக்கு முள், வல்லிய மார்க்கெட்டிங்கின் வலிய வாள், மேதகு ஹரன்ப்ரசன்னா அவர்களே,

  ஃபத்வா விதிப்பவர்களைக் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். நான் ஒரு இந்து சார். நான் ஃபத்வா விதித்தால் நானே அதைப் பின்பற்ற மாட்டேன்.

  உங்கள் கேள்வி.

  இந்து த்வைதத்திற்கும், ஆபிரகாமிய த்வைதத்திற்கும் உள்ள வித்தியாசம்:

  கருத்துச் சுதந்திரமும், வாழ்வுரிமையும்.

  இந்த இரண்டையும் ஆபிரகாமிய மதங்கள் மறுக்கின்றன; இந்துத்துவம் அளிக்கின்றது.

  த்வைதத்தை இந்துத்துவவாதிகள் எதிர்க்கவில்லை. ஆனால், த்வைதத்தின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறையை, வன்முறையைத்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள்.

  இப்படிக்கு,

  களிமிகு கணபதி ஐயா சார்

 26. Sarang
  #26

  who said semetic religions are dvaitic? they are not. they are creationistic

  there is no concept of systematic philosophy in semetic religions – it is a highly theistic approach.

  philosophy fundementally deals with nature of Paramathma,Athma and prakrithi – only eastern philosopies address these

 27. களிமிகு கணபதி
  #27

  ஆமாம் சாரங் அவர்களே.

  எதனால் ஆபிரகாமிய மதங்களின் இறையியலை, இந்திய த்வைதத்தோடு ஒப்பிட்டேன் என்பதற்கான விளக்கத்தையும் நான் அளித்துள்ளேன்.

  நீங்கள் சொல்லுவதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன்.

 28. அருண்பிரபு
  #28

  //நான் ஃபத்வா விதித்தால் நானே அதைப் பின்பற்ற மாட்டேன்.//

  On a lighter note: விஜய் ரசிகரா நீங்கள்? இல்லை அவர் படங்களுக்கு எப்போதாவது வசனம் எழுதியிறுக்கிறீர்களா?

 29. Haranprasanna
  #29

  //த்வைதத்தை இந்துத்துவவாதிகள் எதிர்க்கவில்லை. ஆனால், த்வைதத்தின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறையை, வன்முறையைத்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். //

  த்வைத, ஆப்ரஹாமிய த்வைத பதிலில் உங்கள் அரசியல் மிரள வைக்கிறது. இருக்கட்டும்.

  மேலே நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கு ஆதாரம் வேண்டும். எதன் பெயரில் வன்முறை நடந்தாலும், அதனை ஏற்கக்கூடாது. அது த்வைதமாக இருந்தாலும், அத்வைதமாக இருந்தாலும். த்வைதத்தின் பெயரால் நடக்கும் (நிகழ்கால வினையில் வேறு சொல்லியிருக்கிறீர்கள்!)சமூக அடக்குமுறை, வன்முறைகள் என்ன? அதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவை வேண்டும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அத்வைதத்தின் மீது சமூக ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் விலகி, எல்லாமே சுபம் என்னும் கருத்து வருகிறது. நல்லதுதான், நடந்தால்! த்வைதத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கு மேலதிக விவரங்கள் தரவும்.

 30. Sarang
  #30

  dear haran prasanna

  every indian philosophy advances the concept of Maya. Advaitha says everything is Maya other than one athma

  Dwaitham considers Maya as Vishnu Maya(and say that what we see /do is not eternal/truth) – rest all (from Maya ) perspective are same. What is body, what is mind is common to all 3 branches of vedantam. Only the status of athma varies (Advaitham-Athma merges with parmathma losing its identity completly,Vishitadvaitham-Athma scales to the same state of paramathma,Dwaitham – Athma reaches the abode of paramathma but is limited in Gunas when compared to paramathma)

  All 3 vedantams agree that Manas is a reflection of athma and is made of things not different from body.

  atleast on the points Aravindan has used in this article series there can’t be any difference between how dwaitham and advaitham are looked at from the perspective of science.

  this is not my own view – rather a view of a renowned advaitha teacher.

 31. களிமிகு கணபதி
  #31

  //….த்வைத, ஆப்ரஹாமிய த்வைத பதிலில் உங்கள் அரசியல் மிரள வைக்கிறது. இருக்கட்டும்.

  மேலே நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கு ஆதாரம் வேண்டும். எதன் பெயரில் வன்முறை நடந்தாலும், அதனை ஏற்கக்கூடாது. அது த்வைதமாக இருந்தாலும், அத்வைதமாக இருந்தாலும். த்வைதத்தின் பெயரால் நடக்கும் (நிகழ்கால வினையில் வேறு சொல்லியிருக்கிறீர்கள்!)சமூக அடக்குமுறை, வன்முறைகள் என்ன? அதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவை வேண்டும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அத்வைதத்தின் மீது சமூக ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் விலகி, எல்லாமே சுபம் என்னும் கருத்து வருகிறது. நல்லதுதான், நடந்தால்! த்வைதத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கு மேலதிக விவரங்கள் தரவும்….//

  உங்களுக்கு ஆதாரம்தானே வேண்டும். மிகச் சுலபமாக அதைப் பெறலாம்.

  முதலில் ஆதிசங்கரர் என்ற ஒருவர் சொன்னதெல்லாம் தப்பு என்றோ அல்லது ஆதிசங்கரருக்கு மனோவியாதி இருந்தது என்றோ அல்லது ஆதிசங்கரர் ஒரு காமுகன் என்றோ ஒரு கட்டுரை எழுதுங்கள். அதை வெளியிடுங்கள்.

  அப்புறம், அந்தக் கட்டுரையில் ஆதிசங்கரர் என்ற பெயரை எடுத்துவிட்டு முகம்மது நபி என்ற பெயரைப் போட்டுவிடுங்கள். அதை வெளியிடுங்கள்.

  ஆதாரம் உங்களைத் தேடி வரும்.

 32. Sarang
  #32

  Atharam mattumA thEdi varum 🙂

 33. அரவிந்தன் நீலகண்டன்
  #33

  //அப்புறம், அந்தக் கட்டுரையில் ஆதிசங்கரர் என்ற பெயரை எடுத்துவிட்டு முகம்மது நபி என்ற பெயரைப் போட்டுவிடுங்கள். அதை வெளியிடுங்கள்//

  தேவையற்ற சீண்டல். 🙁

 34. களிமிகு கணபதி
  #34

  //….தேவையற்ற சீண்டல். ..//

  ஆம். நான் இந்தவகையில் பதிலளிப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

 35. களிமிகு கணபதி
  #35

  @ ஹரன்ப்ரசன்னா

  சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் இந்தக் கட்டுரை “அரசியல் தளத்தில்” அத்வைதம் இகழப்படுவதைப் பற்றியது.

  நீங்கள் கேட்பது “தத்துவ தளத்தில்” த்வைதத்தை அத்வைதம் எதிர்கொள்வது மறுப்பது பற்றியது.

  இரண்டும் வேறுபட்டது.

 36. களிமிகு கணபதி
  #36

  ஆபிரகாமிய மதங்களின் இறையியல், த்வைத மனப்பான்மை உடையது என்று ஒரு ஒப்பீட்டிற்குச் சொன்னேன். அதனால் புரிதல் ஏற்படக்கூடும் என்பதற்காக.

  ஆனால், கடவுளும் அதன் படைப்புகளும் வேறு வேறு என்ற கருத்தைத் தாண்டி ஆபிரகாமியத்திற்கும், இந்துத்வ த்வைதத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இந்துக்களின் த்வைதம் தன்னளவில் ஒரு முழுமையான தத்துவம். ஒரு இந்திய தத்துவம். ஆபிரகாமிய மதங்கள் ஐரோப்பிய தத்துவங்களில் இருந்து அவ்வப்போது சில சாதகமான வாதங்களை மட்டும் பெற்றுக்கொள்கின்றன. ஆபிரகாமிய மதங்கள் வெறும் இறையியல் மட்டுமே. தத்துவங்கள் இல்லை.

  ஆனால், த்வைதம் முழுமையான தத்துவம்.

 37. Thivannan
  #37

  ஹபி,

  உலகின் துக்கங்கள் யாவுமே கறுப்பு வெள்ளை, நல்லன கெட்டன, சுகம் சோகம், இருட்டு வெளிச்சம், நான் மற்றவை என்று விரியும் இருமைப் பார்வையால் வருபவைதானே.. வன்முறை அதன் தொடர்ச்சி…

 38. களிமிகு கணபதி
  #38

  திவண்ணன்,

  இதெல்லாம் ஹபிக்குத் தெரியும். தெரியாதது போல போட்டு வாங்குகிறார்.

  நான் ஏதேனும் தேவையில்லாமல் பேசி மாட்டிக்கொள்வேன் என்று அவருக்குத் தெரியும்.

 39. அருண்பிரபு
  #39

  உடல் உண்மையல்ல. மனமே உண்மை என்ற நிலைப்பாட்டுக்கு இட்டுசெல்லுகிறது இந்தக் கட்டுரை. ஆனால், அதைத் தாண்டி ஒரு கட்டத்தில் மனமும் மாயை என்பது புலனாகும். மனம் என்பது எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பு(Reflection of thought flow). எண்ண ஓட்டம் நின்றால்? மனம் இல்லை, வலி இல்லை, சுகம் இல்லை, துக்கம் இல்லை. அந்த நிலைதான் சமாதி நிலை, இல்லாதிருப்பது, அதுவே நான் என்று இன்னபிற பெயர்களால் அறியப்படுவது. நிற்க!

  இந்தக் கட்டுரையின் அடிநாதம் மூளையைத் தெளிவுறுத்தி வைப்பது. இல்லாததை இருப்பதாக எண்ணும் மூளையை கண்ணின் காட்சி கொண்டு தெளிவுறுத்தும் செயல். அந்தத் தெளிவின் மூலம் எண்ண ஓட்டத்தைச் சீராக்கும் முயற்சி. அது வெற்றிகரமான உளவியல் தீர்வாக உலக வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. இந்த உளவியல் தீர்வுக்கு அடிநாதம் அமைத்துத் தந்தது அத்வைதம். இதில் வேறு விஷயங்களை விவாதிக்க வாய்ப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  கட்டுரையையும் பின்னூட்டங்களையும் மொத்தமாகப் பார்த்தால் புலப்படுவது: அத்வைதத்தைப் புரிந்து கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வும் காணலாம்; அரைகுறை(களின்) மொழியாக்கங்களைக் கைக்கொண்டு பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்க்கியும் விடலாம்.

  அருள் பெருகி இருள் விலக அடித்தளமிட்ட ஆதிசங்கராச்சாரியார் போற்றுதலுக்குரியவர்.

  அத்வைதத்தை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளத் தரமுயலும் அரவிந்தன் நீலகண்டன் பாராட்டுக்குரியவர்.

 40. அரவிந்தன் நீலகண்டன்
  #40

  ஹரன் பிரசன்னா,

  த்வைதத்துக்கு அறிவியல் பார்வை இருக்கலாம். அது பகுத்தறிவுக்கு உட்பட்டதாகவே கூட இருக்கலாம். ஆனால் என்னை அது தனிப்பட்ட முறையில் கவரவில்லை. அவ்வளவே. ஒரு உயிரியல் மாணவனாக நான் இறை நம்பிக்கையை உதறியவன். அத்வைதம், உயிரியல் காட்டும் உண்மைகளை உள்வாங்க எனக்கு உதவுகிறது. மற்றெந்த தத்துவ-தரிசனங்களை காட்டிலும் அத்வைதம் திறந்த தன்மையுடன் இருக்கிறது. அதனுடன் இணைந்து இந்திய பண்பாட்டு எதிரிகள் அத்வைதத்தையே குறி வைத்து தாக்குவதை காண்கிறேன். அந்த தாக்குதலில் ஏதாவது உண்மை இருக்குமா என்பதை ஆராய்கிறேன். அதில் நான் கண்டடைந்த விஷயஙக்ளை முன்வைக்கிறேன். அவ்வளவே. த்வைத ஞானிகளான சைதன்ய மகாப்பிரபு, ராகவேந்திரர் ஆகியோர் சமூக தளத்தில் செய்துள்ள சாதனைகள் மகத்தானவை. சங்கரதேவர் எனும் வைணவப்பெரியார் இல்லையென்றால் இன்றைக்கு அருணாச்சல பிரதேசம் இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்திருக்காது. ராமானுஜரின் விதிஷ்டாத்வைதம் இல்லையென்றால் அது ராமானந்த இயக்கமாக பாரதமெங்கும் பரவியிருக்கவில்லை என்றால் அம்பேத்கர் என்கிற பேரறிவும் பெருங்கருணையும் கொண்ட ஒரு சமூக விடுதலை குரல் எழுந்திருக்காது. எனவே த்வைதமும் விசிஷ்டாத்வைதமும் இந்த மண்ணின் முக்கிய ஆதாரமான மரபுகள். அத்வைதத்துக்கு எள்ளளவும் குறையாத சமூக நீதி தளத்தில் அத்வைத இயக்கம் பாடம் கற்றுக் கொண்ட மரபுகள். இதுவே எனது புரிதல்.

  அன்புடன்
  அநீ

 41. Sarang
  #41

  Aravindan,

  Advaitha too is theistic – Sankarar goes to great length to prove God through Tarkam.

  The principles you have taken up in this article are Vedantic not advaithic and they undergo same treatment in all the 3 disciplines.

  You can demonstrate what you have said in this article better with buddhism than with advaitham – in advaitam Manas is eternal – it is only through the manas Karma gets decided. If manas is not true then athma itself can’t be true for advaitham -for it is through the manas Athma is known and a real thing cannot be known from an unreal thing.

  Buddhistic principles find their roots in Sankhyam.

  Vishitathdvaitham too is advaitham only 🙂 – one coniders prakriti as real , other calls it unreal.

 42. Haranprasanna
  #42

  //அப்புறம், அந்தக் கட்டுரையில் ஆதிசங்கரர் என்ற பெயரை எடுத்துவிட்டு முகம்மது நபி என்ற பெயரைப் போட்டுவிடுங்கள். அதை வெளியிடுங்கள்.//

  வெளங்கிடும். த்வைதம் பற்றிப் பேசச் சொன்னால், மெல்ல அதனை இஸ்லாமியத்தின் பக்கம் திருப்புவதுதான் அரசியல். நேரடியான கேள்விக்கு நேரடியான பதில் சொல்லுங்கள். த்வைதம் (ஹிந்து த்வைதம்!) செய்யும் சமூக அடக்குமுறைகள் என்ன? எனக்கு புரிவதற்காக எடுத்துக்காட்டுகளெல்லாம் வேண்டாம். த்வைதம் முழுமையான தத்துவம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியானால் முதலில் நீங்கள் சொன்ன அறிவியல் பார்வை அத்வைதிகளுத்தானா, த்வைதிகளுக்கும் உண்டா? முகமது நபி, ஏசு என்றெல்லாம் காக்டெயில் செய்யாமல், ஹிந்து மரபை மட்டும் முன்வைத்து – முடிந்தால் – பேசுங்கள்.

 43. களிமிகு கணபதி
  #43

  //…நேரடியான கேள்விக்கு நேரடியான பதில் சொல்லுங்கள். த்வைதம் (ஹிந்து த்வைதம்!) செய்யும் சமூக அடக்குமுறைகள் என்ன? ..//

  எனக்குத் தெரிந்து எதுவும் இல்லை.

  //…எனக்கு புரிவதற்காக எடுத்துக்காட்டுகளெல்லாம் வேண்டாம். த்வைதம் முழுமையான தத்துவம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியானால் முதலில் நீங்கள் சொன்ன அறிவியல் பார்வை அத்வைதிகளுத்தானா, த்வைதிகளுக்கும் உண்டா? ….//

  த்வைதிகளுக்கும் உண்டு. அனைத்து கிழக்கத்திய தத்துவங்களுக்கும் உண்டு.

 44. அரவிந்தன் நீலகண்டன்
  #44

  களிமிகு கணபதி

  ஆபிரகாமிய மதங்களில் த்வைதம் இல்லை. ஆபிரகாமிய மத நம்பிக்கை த்வைதம் இல்லை. யூத-மறைஞான மரபுகள் தவிர்த்த ஆபிரகாமியத்தில் மனதுக்கும் ஆன்மாவுக்குமான வேறுபாடு தெளிவாக்கப்படவில்லை. இந்த ஆபிரகாமிய ஆன்மாவும் கூட immortal தானே தவிர eternal அல்ல. த்வைத மரபில் அபப்டியல்ல. த்வைதம் என்பதே ஹிந்து ஞான மரபில் வரும் விஷயம். எனவே ஆபிரகாமியத்தில் இருப்பது இறை நம்பிக்கை. த்வைதம் அவ்வாறல்ல. எனவே ஆபிரகாமிய த்வைதம் என்பது oxymoron.

  அநீ

 45. களிமிகு கணபதி
  #45

  நன்றி அநீ.

  ஆபிரகாமிய த்வைதம் என்று நான் சொல்ல விழைந்தது இருமைப் பார்வையை. அதைச் சொல்லிவிட்டு அப்புறமாக இன்னொரு கமெண்டில் கருத்து விளக்கம் செய்திருக்கிறேன்.

  //…

  களிமிகு கணபதி says:
  Wednesday, October 27, 2010 at 8:18 pm
  ஆபிரகாமிய மதங்களின் இறையியல், த்வைத மனப்பான்மை உடையது என்று ஒரு ஒப்பீட்டிற்குச் சொன்னேன். அதனால் புரிதல் ஏற்படக்கூடும் என்பதற்காக.

  ஆனால், கடவுளும் அதன் படைப்புகளும் வேறு வேறு என்ற கருத்தைத் தாண்டி ஆபிரகாமியத்திற்கும், இந்துத்வ த்வைதத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இந்துக்களின் த்வைதம் தன்னளவில் ஒரு முழுமையான தத்துவம். ஒரு இந்திய தத்துவம். ஆபிரகாமிய மதங்கள் ஐரோப்பிய தத்துவங்களில் இருந்து அவ்வப்போது சில சாதகமான வாதங்களை மட்டும் பெற்றுக்கொள்கின்றன. ஆபிரகாமிய மதங்கள் வெறும் இறையியல் மட்டுமே. தத்துவங்கள் இல்லை.

  ஆனால், த்வைதம் முழுமையான தத்துவம்.

  …//

  எனது முந்தைய கமெண்டில் இருந்த வார்த்தைப் பிரயோகத்தினால் ஏற்பட்ட குழப்பத்தைச் சரி செய்தமைக்கு நன்றிகள்.

 46. navan
  #46

  அரவிந்தன்,
  அத்வைதம், த்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் பற்றி அறிமுக கட்டுரைகள் எழுத முடியுமா?

 47. களிமிகு கணபதி
  #47

  இந்தக் கட்டுரை தூண்டிய என் அவதானிப்புகள் கீழே:

  இந்தியத் தத்துவச் சூழலில் சாங்கியம் என்றொரு தத்துவம் இருக்கிறது. இது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் புருஷன் – பிரகிருதி என இரண்டாகப் பிரிக்கிறது.

  பிரகிருதி என்பதை நாம் புலன்களால் அறியலாம். ஆனால், புருஷன் என்பதை நாம் புலன்களால் அறிய முடியாது. அத்துடன், பிரகிருதி என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது. புருஷன் என்பது மாற்றங்கள் இல்லாதது.

  அதாவது, நாம் இயற்கை என்று கண்களால் பார்க்கிற, காதுகளால் கேட்கிற, தொட்டு அனுபவிக்கிற, சிந்தித்து அறிகிற அனைத்தும் பிரக்ருதி (அல்லது இயற்கை). இந்த இயற்கையானது எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது.

  உதாரணமாக, ஒரு விதை செடியாகிறது. அதாவது, விதையின் அழிவில் செடி உருவாகிறது. செடி மரமாகிறது. செடியின் அழிவில் மரம் உருவாகிறது. மரத்தை சந்தன வீரப்பன் வெட்டிவிடுகிறான். ஆக, மாறிக்கொண்டே இருக்கிறது பிரகிருதி.

  இப்படி மாறாமல் இருக்கிற, புலன்களால் அறிய முடியாத விஷயத்தை புருஷன் என்கிறது சாங்கியம்.

  மனம்-உடல் என்ற இரண்டு பிரிவுகளை ஒத்துக் கொள்ளும் சாங்கியம், அந்த இரண்டு பிரிவுகளையும் பிரக்ருதியைச் சேர்ந்தவை என்கிறது. அதாவது, மனமும் உடலும் இயற்கையால் உருவான பொருண்மை (matter) சார்ந்த கட்டுமானங்களே என்று அது சொல்லுகிறது.

  அத்வைதம் இதை ஒத்துக்கொள்ளுகிறது. அந்த வகையில், ஐரோப்பிய தத்துவங்களில் இருந்து சாங்கியமும்,அத்வைதமும் முற்றிலும் வேறுபடுகின்றன. ஐரோப்பிய தத்துவமானது மனத்தை பொருண்மை என்று ஒத்துக்கொள்வதில்லை. உடல் மட்டும்தான் பொருண்மை என்கிறது. ஆனால், இந்திய தத்துவங்களோ இரண்டுமே பொருண்மைதான் என்கின்றன.

  அத்துடன், மனம்-உடல் இரண்டையும் முற்றிலும் வேறுபட்டதாகப் பார்க்கும் ஐரோப்பியப் பார்வையில் இருந்தும் அத்வைதம் வேறுபடுகிறது. பொருண்மைத் தன்மை உள்ள மனமும் உடலும் மேலோட்டமாக வேறுபட்டிருந்தாலும், அவ்விரண்டும் ஆத்மா என்பதன் வேறு வடிவங்களே என்கிறது அத்வைதம். இதன் மூலம், மேலோட்டமாக வேறுபட்டிருக்கும் மனமும் உடலும் அடிப்படையில் ஒன்றே என்கிறது அது.

  மனமும் உடலும் சம்பந்தமே இல்லாதவை என்று சொல்லும் ஐரோப்பிய தத்துவத்தில் இருந்து, அத்வைதம் முற்றிலும் வேறுபடுகிறது என்பது தெளிவு.

  நரம்பியலை அத்வைதத்தின்படி பார்த்தால், மூளை என்பது பொருண்மை. அதில் ஏற்படும் பதிவுகளும் பொருண்மை. அதாவது, இரண்டுமே மாறக்கூடிய தன்மை உடையவை.

  பொதுவாக, நாம் நம்மை நமது உடலை வைத்துத்தான் புரிந்துகொள்கிறோம். உதாரணமாக, நான் அழகிய கருநிறம் உடையவள், உயரமானவன், என் தோல் மென்மையானது, என் முகம் இப்படித்தான் இருக்கும் என்று நம்மை நமது உடலை வைத்தே நமது சுயத்தை அடையாளம் கண்டுகொள்கிறோம்.

  இந்த அடையாளங்களைக் கொண்டு நமது மனமானது உருவாக்கும் ஒரு மாயப் பிம்பம் மட்டுமே நமது சுயம் என்கிறது நரம்பியல். இந்த மாயப் பிம்பங்களை அத்வைதம் “மாயை” என்கிறது.

 48. ஹரி
  #48

  அருண்பிரபு சொல்வது உண்மைதான்.

  ஆதிசங்கரர் ’மனோபுத்திஅஹங்காரசித்தாநி நா ஹம்’ என்கிறார் நிர்வாணஷடகத்தில். மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் ஆகிய அந்தகரணங்களும் நானில்லை என்றால் நான் யார்!

  மேலும் உள்ளே தேடவேண்டியதுதான்.

 49. TAMIL PAPER PAIYAN
  #49

  இன்னாத்த மேன் சொல்ல வரே.. இதுனால ஒரு யூஸ் இருக்குதா மேன். … என்னவோ அல்லாருக்கும் டைம் பாஸ் ஆனா சரி

 50. அருண்பிரபு
  #50

  அக்காங், அத்தாம்பா! எந்திரன் படத்த எம்பத்தோரவது தபா தேட்டருல குந்திகினு விசிலட்சிகினே பாக்குறது என்னா குஜாலு! எம்மா யூஸு. அத்தவுட்டு இங்க குந்திகினு அத்தவையி ஆப்பிரகாமுனு சொம்மா கூவினுகிறாங்கோ.

  இவனுங்கள வுடு மாமே! பேப்பர் பையன்னு சொல்லிகிறியே! போட்ர பேப்பர எப்பனாச்சும் சொம்மனாங்காட்டிகும் வாஸ்சிகிறியா நைனா? சொம்மா குந்தினுருக்க சொல்லோ கெடைக்கிற பேப்பரெல்லாம் பட்சு பாருபா. டைம் மட்டுமா பாஸாவும், நீயும் பாஸாவலாம்!

 51. மைத்ரேயன்
  #51

  இந்த பொருள் நிறைந்த கட்டுரைக்கு வரும் மறுவினைகள், கட்டுரையை போலவே சிந்தனையைத் தூண்டச் சொல்லிக் கேட்டன என்பது நிறைவு தருகிறது. எந்தக் கூட்டத்திலும் சில கோமாளிகள் அல்லது மூடர்கள் இருப்பர், இங்கு ஜாதி வெறி,இடது சாரி ஃபார்முலா உச்சாடனர்கள் ஆகியோர் அந்தக் குறையை நீக்கி வைத்தனர். மொத்தத்தில் களை கட்டிய விவாதம். தமிழ்த் தாள் இதைத் தொடர்ந்து நடத்துமா என்பதுதான் பெரிய சஸ்பென்ஸ். எப்போது இந்திய இடதுசாரி மாஃபியோஸியின் கைமுறுக்கல், கால் உடைத்தல், இதர வன்முறைகளுக்குப் பலியாகுமோ என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் பொதுவாக இந்திய மண்ணில் உண்மையான இந்திய சிந்தனை கடைசியில் துளிர் துளிராக நாடெங்கும் வளரத் துவங்கி இருக்கிறது. தமிழகத்திலும் இதைக் காண மகிழ்ச்சி.

 52. Tamil Skeptic
  #52

  திரு அரவிந்தன் அவர்களே,
  திரு அரன்பிரசன்னா சரியான கேள்விஎழுப்பியிருக்கிறார். நீங்கள் யாரை நோக்கி “அத்வைதம் குற்றவாளியா?” என்று கேட்கிறீர்கள் என்பது சரியாக விளங்கவில்லை. தத்துவ ரீதியாக அத்வைதத்தை ஒப்புக்கொள்ளாத துவைத நம்பிக்கையாளர்களிடம் தான் இந்த கேள்வியைக் கேட்கவேண்டும். அல்லது அத்வைதத்தை ஒப்புக்கொள்ளாத பிற மத நம்பிக்கையாளரிடம் கேட்கவேண்டும். அதைவிட்டு அறிவியல் ஆய்வுகளோடு இதை முடிச்சு போடுகிறீர்கள்.

  தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு தெளிவுக்காக கேட்கிறேன். நீங்கள் உயிரியல் மாணவன் என்கிறீர்கள். உங்கள் கல்வி, ஆராய்ச்சி, தொழில் பின்புலம் என்னென்ன? சக அறிஞர்கள் மீள்பார்வை செய்த உங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஏதேனும் அறிவியல் இதழ்களில் வெளியிட்டிருக்கிறீர்களா? அவற்றின் விவரங்களைத் தர இயலுமா?

  நன்றி

 53. அரவிந்தன் நீலகண்டன்
  #53

  //நீங்கள் யாரை நோக்கி “அத்வைதம் குற்றவாளியா?” என்று கேட்கிறீர்கள் என்பது சரியாக விளங்கவில்லை//

  நீங்கள் கட்டுரையையே விளங்கிக் கொள்ளவில்லை என நினைக்கிறேன். இந்திய அறிவியல் வீழ்ச்சிக்கு அத்வைதமே காரணம் என குற்றம் சாட்டும் ஆனந்தின் கட்டுரைக்கு மறுப்பாக இது எழுதப்பட்டது.

 54. Tamil Skeptic
  #54

  இரு கட்டுரைகளையும் சில நாட்கள் இடைவெளி விட்டு படித்ததாலும், இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பற்று இருப்பதாலும் ஏற்பட்ட சிக்கல். மற்றபடி ஆனந்தின் கட்டுரையை மீண்டும் படிக்கத் தூண்டியதற்கு நன்றி. அருமையான கட்டுரை. ஆதி சங்கரர் மீளுருவாக்கம் செய்த வர்ணபேத வேதிய மதமும், அவருடைய மாயவாதத் தத்துவமும் அறிவியல் சிந்தனைக்கு எதிராக இருப்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். ஆனந்தின் கட்டுரைக்கு இணைப்பு இங்கே. அதனைப் படிக்காதவர்கள் படித்தப் பார்க்கவும். http://www.outlookindia.com/article.aspx?220736

  உங்களுக்கு உண்மையிலேயே இந்திய மக்களிடையே அறிவியல் சிந்தனை எழுச்சி பெறவேண்டும் என்ற எண்ணமிருந்தால் அவர் மேற்கோள் காட்டியிருப்பதைப் போல மக்கள் மொழியில் நவீன அறிவியலைக் கற்பித்தல் குறித்து எழுதவேண்டுமேயன்றி செத்த மொழியில் எழுதப்பட்ட காலாவதியான தத்துவக் குப்பைகளுக்கு அறிவியல் முலாம் பூசிக் கடைவிரிக்கமாட்டீர்கள். அதனால் தான் கேட்டேன் உங்கள் அறிவியல் பின்னணி என்னவென்று. பதிலளிக்காமல் மௌனம் காக்கிறீர்கள்.

  நீங்கள் குறிப்பிடும் கற்பனைவாதமும், பிற்போக்குத் தனமும் நிரம்பிய ஆதி சங்கரரின் விவேகசூடாமணியை வாசித்து அதை நம்ப ஆரம்பித்தால் இருக்கிற அறிவும் மழுங்குமேயன்றி அறிவியல் தரிசனமெல்லாம் கிடைக்காது.
  http://www.sankaracharya.org/vivekachudamani1.php

 55. அரவிந்தன் நீலகண்டன்
  #55

  காமெடி செய்யாதீர்கள் ”தமிழ் ஸ்கெப்டிக்”. இந்த கட்டுரையின் நோக்கம் ஆனந்த் சொன்ன குற்றஙக்ளை எதிர்ப்பது. அத்வைதம் அறிவியலுக்கு எதிரானதல்ல என்பது. ராமச்சந்திரனின் நீயூரலாஜிக்கல் ஆராய்ச்சிகளில் அத்வைதத்தின் மாயைக் கோட்பாடு உதவியிருக்கிறது. அத்வைதத்தால் அறிவியல் தன்மையை இந்தியா இழந்துவிட்டது என ஆனந்த் சொல்லியிருப்பது தவறு. அறிவியலை பொதுமக்களிடம் கொண்டு செல்வதில் ஹிந்து அமைப்புகள் நிச்சயமாக நல்ல பங்காற்றியுள்ளன. தொடர்ந்து இரு முறை ஜவஹர்லால் நேரு பரிசினை அறிவியலை பொதுமக்களிடம் கொண்டு சென்றமைக்காக வென்ற அமைப்பு விக்ஞான் பாரதி அமைப்பு.

 56. Tamil Skeptic
  #56

  திரு அரவிந்தன்,
  நான் காமெடி செய்யவில்லை. ஆனந்தின் விமர்சனங்களை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு அத்வைதம் அறிவியலுக்கு எதிரானதல்ல நிரூபிக்க முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுகிறீர்கள். ஆனந்தின் மையக் கருத்து, கிறித்தவ மதம் பின்பற்றப்படும் மேற்குலகில் மதத்திலிருந்து விடுவித்துக்கொண்ட தத்துவப் பார்வை மதசார்பில்லாத அறிவியல் வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாக இருந்தது. இந்தியாவிலோ ஆதி சங்கரர் மீளுருவாக்கம் செய்த “உலகே மாயம், வாழ்வே மாயம்” வகையான அத்வைதத் தத்துவம் அறிவுத்தேடல் என்பது ஆன்மீகத் தேடுதல் (ஆன்மாவை விடுவித்தல்) என்பதாக சுருக்கப்பட்டு பொருண்மையான உலகை மறுத்து, பொருண்மையானவற்றைப் பற்றிய அறிவை மறுத்து, புறவுலகை விசாரணைக்குட்படுத்தாமல் பலதுறைகளை வெறும் கைவினைத்தொழில்களாகவே தேக்கமடைய வைத்து அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தது என்பதே ஆனந்தின் வாதம் என்று புரிந்துகொள்கிறேன்.

  பேராசிரியர் விளையனூர் இராமச்சந்திரனின் ”Phantoms in the Brain”, ”A Brief Tour of Human Consciousness” ஆகிய இரு நூல்களை நானும் படித்திருக்கிறேன். அவற்றை இன்னொரு முறைப் புரட்டிப் பார்க்கத் தூண்டியதற்கு மீண்டும் நன்றி.

  நீங்கள் பிரகடனம் செய்வது போல தன்னுடைய “நீயூரலாஜிக்கல் ஆராய்ச்சிகளில் அத்வைதத்தின் மாயைக் கோட்பாடு உதவியிருக்கிறது” என்று எங்கும் குறிப்பிடவில்லை. அந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஏதாவது ஓரிரு மேற்கொள்களை அளித்திருக்கிறார். உமர் கையாம், ஷெர்லாக் ஹொல்ம்ஸ், ஓவித், ஆதிசங்கரர் (விவேக சூடாமணி), காந்தி, ஐன்ஸ்டின், ஜிம் வாட்சன், உபனிஷதம், பகவத் கீதை, ஷேக்ஸ்பியர் என்று ஓரிரு வரிகள் தரப்பட்டிருக்கின்றன. உங்கள் வாதப்படி இவர்கள் எல்லாம் இராமச்சந்திரனுடைய நரம்பியல் ஆராய்ச்சிக்கு உதவியிருக்கிறார்கள். ஆனால் அப்படியாக அவர் எங்கும் குறிப்பிடவில்லை. நீங்களாகவே “ஆக, மேற்கத்திய மையத் தத்துவப் பார்வை தீர்த்துவைக்க முடியாத ஒரு பிரச்னையை அத்வைத அறிதல் அல்லது வேதாந்தச் சட்டகத்தால் தீர்த்துவைக்க முடிந்திருக்கிறது” என்று பிரகடனம் செய்கிறீர்கள்.

  இப்படி பொது வாசகர்கள் படிப்பதற்காக எழுதப்படும் நூல்களில், அந்தந்த அத்தியாயத்திற்கு பொருத்தமெனப்படக்கூடிய மேற்கோள்களை வெவ்வேறு மூலங்களிலிருந்து ஓரிரு வரிகளை உருவிப் போடுவது நடைமுறை. அதிலிருந்து பெறப்படும் பாடம் என்னவென்றால் நூலாசிரியர் அந்தந்த மூலங்களை வாசித்திருக்கிறார் அல்லது அவைகளை வாசிப்பது ஒரு பொழுதுபோக்கு என்று பொருள்.

  நூலின் முடிவில் எழுதியிருக்கும் நன்றியுரையில் அறிவியலில் தனக்கு ஆர்வம் தோற்றுவித்ததற்கும், வளர்த்ததற்கும் தன்னுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பலரைக் குறிப்பிட்டுள்ளார். நூலில் விவரித்துள்ள பல கோட்பாடுகள் தன்னுடைய மாணவர்கள் சகாக்களிடம் விவாதத்ததின் விளைவாக பெறப்பட்டதாகக் கூறி அவர்கள் பெயர்களையும் கொடுத்திருக்கிறார். அத்வைதத்திலிருந்து பெற்றதாகக் குறிப்பிடவில்லை. அவருடையக் கல்வி, ஆராய்ச்சிப் பயிற்சிப் பின்னணியை வைத்துப் பார்த்தால் அவருடைய ஆய்வுகளின் மூலக் கருதுகோள்கள் எங்கிருந்து பெறப்பட்டிருக்கும் என்பது தெளிவாகும். அதேபோல அவருடைய குடும்பப் பின்னணியை வைத்துப் பார்த்தால் கீதையிலிருந்தோ, விவேக சூடாமணியிலிருந்தும் மேற்கோள் காட்டியிருப்பது ஒன்றும் விசேஷமானதல்ல என்று புரிந்துகொள்ள முடியும். இதையே பிரான்சிஸ் காலின்ஸ் எழுதியிருந்தால் விவிலியத்திலிருந்து ஓரிரு மேற்கோள்களை உருவிப்போட்டிருக்கலாம். அவ்வளவு தான் இராமச்சந்திரனின் ஆராய்ச்சியில் அத்வைதத்தின் பங்கு. நீங்கள் நினைப்பது போல் அவருடைய ஆராய்ச்சிக்கான கருதுகோள்களோ, ஆய்வு முடிகளுக்கான விளக்கங்களோ பெறப்பட்டிருந்தால் தன்னுடைய ஆய்வுக்கட்டுரைகளில் குறிப்பிட்டிருப்பார். இந்த தளத்தில், சக ஆய்வாளர்களால் படித்து பரிந்துரை செய்யப்பட்டு அறிவியல் இதழ்களில் வெளியிட்ட கட்டுரைகள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து ஒன்றையாவது சுட்டிக்காட்டுங்கள். பிறகு உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
  http://cbc.ucsd.edu/ramapubs.html

 57. அரவிந்தன் நீலகண்டன்
  #57

  அன்புள்ள ஸ்கெப்டிக்

  நீண்ட விளக்கத்துக்கு நன்றி. ராமச்சந்திரனின் அந்த நூலை நீங்கள் முழுவதுமாக படித்திருந்தால் நீங்கள் இப்படி கேட்டிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

  ராமச்சந்திரன் தன்னுடைய நன்றியுரையில் டார்வினையோ பரிணாம அறிவியலையோ எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நிச்சயமாக டார்வினிய அறிவியல் அவரது பார்வையை செழுமைப்படுத்தியிருக்கிறது அவரது ஆராய்ச்சிக்கு உதவியிருக்கிறது. எனவே நன்றியுரையில் அவர் குறிப்பிட்ட பெயர்களின் அடிப்படையில் இதனை தீர்மானிக்க முடியாது.

  மாயைக் கோட்பாடு என்பது உண்மையில் ஒரு வலிமையான அறிதல் கருவியாகவே இந்திய தத்துவவியலில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அது ராமச்சந்திரனுக்கு உதவியுள்ளது. அத்வைத மாயை எனும் கோட்பாடு எப்படி அறிவியல் தேடலில் உதவியது என கூறுகிறார்:

  ”இந்தியாவில் பிறந்து ஹிந்து பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டவன் என்ற முறையில் என்னுள் இருக்கும் ’நான்’ – இந்த பிரபஞ்சத்திலிருந்து பிரிந்து அதனை உணர்ந்தறியும் நான் என்பது மாயை என்னும் ஒரு திரை என எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஞானத்தை தேடுவதென்பது இந்த திரையை நீக்கி நான் “பிரபஞ்சத்துடன் ஒன்று” என்று உணர்வதையே என்றும் சொல்லித் தரப்பட்டது.மேற்கத்திய மருத்துவத்தில் ஆழமான பயிற்சியும் பதினைந்து ஆண்டுகள் மூளையியல் தொடர்பான நோயாளிகளுடன் ஆராய்ச்சி, மற்றும் காட்சிமாய தோற்றங்கள் – இவற்றின் மூலம் இந்த பார்வையில் மிகவும் உண்மை உண்டு என கண்டு கொண்டேன். (பக்.227)

  மூளை உடல் சார்ந்து உருவாக்கும் ’நான்’ உணர்வு மாயை என்பது தான் அந்த உடலுணர்வை மற்றொரு மாயை மூலம் மாற்றி அமைக்க முடியும் என்கிற புள்ளிக்கு இட்டுச் செல்கிறது. இது அத்வைத கோட்பாட்டில் வேரூன்றிய ஒரு விஷயம். அதன்மூலம் நம் அன்றாட வாழ்விலும் இது வழங்கு மொழியாகவே உள்ளது “முள்ளை முள்ளால் எடுப்பது போல” இதற்கு பொருள் அத்வைதத்துக்கு phantom limbs குறித்து அல்லது நவீன நரம்பியல் தெரிந்திருந்தது என்பது பொருளல்ல, நவீன நரம்பியலின் முக்கிய புலங்களுடைய (உதாரணமாக தன்னுணர்வு ஆராய்ச்சி) அறிவு தேடலியல் அல்லது அறிவு-உருவாக்கவியலில் (epistemology) அத்வைத வேதாந்தம் முக்கியமான முன்னகர்வுகளுக்கு உந்துதலாக அமையலாம் என்பதுதான். அப்படி அத்வைதம் செய்லபடவே முடியாது அதுதான் அறிவியலை முடக்கி போட்டது என்கிற ஆனந்தின் வாதத்துக்கு இது தெளிவான மறுப்பாக அமைகிறது.

  உண்மையில் Phantoms of the Brain இல் நவீன நரம்பியல் ஆராய்ச்சி நம் சுயம் குறித்து முன்வைக்கும் தரவுகள் உருவாக்கும் முக்கிய தரிசனமாக அத்வைதத்தையும் மாயை குறித்த ஆழமான புரிதலையுமே ராமச்சந்திரன் முன்வைக்கிறார்.

  அவர் கூறுகிறார்: அறிவியல், பிரப்ஞ்சவியல், பரிணாமம் அனைத்துமே நமக்கு பிரபஞ்சத்தில் ஏதோ தனி மைய இடமில்லை என்பதை சொல்கின்றன. நமக்கென்று தனியே ஒரு பொருண்மைத் தொடர்பற்ற தனி ஆன்மா உண்டு, அது உலகை அவதானிக்கிறது என்பது வெறும் தோற்றமயக்கமே. இதுதான் வெகுகாலமாக கிழக்கின் மறைஞான பாரம்பரியங்களான ஸென் புத்தத்திலும் ஹிந்து மதத்திலும் சொல்லப்பட்டு வருகிறது. இதனை உணரும் போது நீங்கள் தனி-அவதானிப்பாளரல்ல இப்பிரபஞ்ச இயக்கத்தில் அதன் ஓட்டத்தில் ஒரு பகுதி என்பதை உணர்வீர்கள். இது உங்களில் ஒரு விடுதலை உணர்வை கொடுக்கிறதே இது உண்மையான சமய அனுப்வத்தின் மையமாகும்.” (பக். 256)

  இன்னும் தெளிவாக ராமச்சந்திரன் விளக்குகிறார்:
  நீங்கள் தனி அவதானிப்பாளரல்ல. நீங்கள் சிவனின் பிரபஞ்ச தாண்டவத்தில் ஒரு பகுதி. இதை உணர்ந்து கொண்டால் உங்கள் மரணமும் மகிழ்ச்சியாக இயற்கையுடனான ஒரு மீள்-இணைவு துயரமல்ல என்பதை உணர்வீர்கள் (பக்.157)

  வரலாற்று ரீதியாக அத்வைதத்தின் மாயைக் கோட்பாடு எவ்விதத்திலும் அறிவியலை தேக்க உதவவில்லை, இந்திய தொழில்நுட்பங்கள் தொழிற்சாலைகளை அழித்ததில் பிரிட்டிஷ் காலனியத்தின் பங்கு முக்கியமானது.தொழில்நுட்பம் என்றாலே அது அதிக ஆற்றலையும் அதிக முதலையும் உட்குவித்த (capital intensive and energy intensive) தொழில்நுட்பமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற தோற்ற மயக்கத்தை ஐரோப்பா உருவாக்கியது. இச்சூழலில் காலனி ஆதிக்கத்துக்குட்பட்ட சமுதாயங்களில் அறிவியல் புத்தெழுச்சியை நிறுவன ரீதியிலாக மேலெழுப்பியதிலும் அத்வைத கோட்பாட்டாளர்களே முக்கிய பங்கு வகித்தனர். இது வரலாறு.

 58. களிமிகு கணபதி
  #58

  //….நீங்கள் குறிப்பிடும் கற்பனைவாதமும், பிற்போக்குத் தனமும் நிரம்பிய ஆதி சங்கரரின் விவேகசூடாமணியை வாசித்து அதை நம்ப ஆரம்பித்தால் இருக்கிற அறிவும் மழுங்குமேயன்றி அறிவியல் தரிசனமெல்லாம் கிடைக்காது.
  http://www.sankaracharya.org/vivekachudamani1.php…//

  தமிழ் ஸ்கெப்டிக்,

  நீங்கள் கொடுத்திருந்த விவேகசூடாமணி வெப்சைட்டுக்குப் போனால், ”நான் ஏசுவை எனது காப்பாளாராக ஏற்றுக் கொள்கிறேன்”, “ஏற்றுக்கொள்ள க்ளிக் செய்து தொடரவும்” என்ற அறிவிப்புகள் அங்கே உள்ள எழுத்துக்களைப் படிக்க விடாமல் மறைக்கின்றன. ஒருவேளை அதனால்தான் அந்த வெப்சைட்டின் லிங்கை நீங்கள் கொடுத்தீர்களோ என்னவோ !! 🙂

  ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, அது எந்தத் துறை சார்ந்த புத்தகம் என்பதைக் கவனிக்க வேண்டும். அந்தத் துறையைப் பயிலுபவர்கள் கற்றுத் தேர்ந்தவர்கள், அந்தப் புத்தகம் பற்றி எப்படி விளக்கம் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

  உங்களது பார்வை கிறுத்துவ உரையாளர்கள் வரையறுக்கும் பார்வை. கிறுத்துவ உரையாளர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

  ஆணாகப் பிறந்திருப்பதும், பிராமணனாகப் பிறந்திருப்பதும் சிறந்தவை என்று ஆதிசங்கரர் சொல்வது தவறு. சாதிவெறி, ஆணாதிக்க வெறி உடையது என்று கிறுத்துவ அறிஞர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

  ஆனால், உண்மை என்ன? கொஞ்சம் பார்ப்போம்.

  இந்த இரண்டு விஷயங்களுக்கும் சங்கரர் பயன்படுத்தும் வார்த்தைகள் என்ன?

  பும்ஸ்த்வம், விப்ரதா.

  பும்ஸ்த்வம் என்பதன் பொருள் ஆண் “தன்மை”. அதாவது, பௌருஷம் – manliness. அதை man என்று அர்த்தம் சொல்லுவது தவறு. புருஷன் என்ற வார்த்தையை ஆதிசங்கரர் பயன்படுத்தவில்லை. புருஷன் என்று சொல்லி இருந்தால் man.

  விப்ரதா என்பதன் பொருள் பிராமணத் “தன்மை”. அதாவது, brahmanhood. அதை brahmin என்று சொல்லுவது தவறு. பிராம்மண என்ற வார்த்தையை ஆதிசங்கரர் பயன்படுத்தவில்லை.

  அவர் உபயோகித்திருக்கும் இரண்டு வார்த்தைகளுமே, உடலைச் சேர்ந்தவை அல்ல. அதனால், உடலைச் சேர்ந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று பெரும்பாலான வேதாந்திகள் சொல்கிறார்கள். வேறு சில வேதாந்திகள் மாறுபடுகிறார்கள்.

  உடல் அடிப்படையில் அந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்வது தவறில்லை என்று சொல்லுகிற வரலாற்றுப் புரிதல் உடைய வைதீகர்கள் இருக்கிறார்கள். இந்த ஸ்லோகம் எழுதப்பட்ட காலம் நிலவுடமைச் சமுதாய காலம் என்பதை அவர்கள் சுட்டுகிறார்கள்.இந்த வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி அவர்கள் சொல்வது மிக முக்கியம்.

  எப்படிப் பயன்படுத்துவது என்று அவர்கள் சொல்கிறார்கள்?

  பயன்படுத்தாதே என்று அவர்கள் சொல்கிறார்கள். அவற்றை ஒதுக்கிவிட்டுப் போங்கள். இந்த ஒரு இடத்தைத் தவிர வேறு எங்கும் ஆதிசங்கரர் இதைப் பற்றிப் பேசவில்லை. எனவே, முக்கியமானவையோ பின்பற்றவேண்டியவையோ இல்லை என்கிறார்கள்.

  இந்த புத்தகமே விவேகம் பற்றியது. எது வேண்டும், எது வேண்டாம் என்பதை முடிவு செய்வதுதான் விவேகம்.

  மேலும், ஒரு புத்தகத்தில் உள்ள அனைத்தையும் பின்பற்றியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இந்துக்களுக்கு என்றும் இருந்ததில்லை.

  ஆனால், புத்தகத்தில் உள்ளவற்றை பின்பற்றியே ஆகவேண்டும் என்ற பின்புலத்தில் வந்த ஆபிரகாமிய ஒட்டுண்ணிவாதிகளுக்கு அந்த சுதந்திரம் புரியவில்லை. புரிந்தவர்களும் அதைத் தவறான நோக்கத்தால் வெளியே சொல்லவில்லை.

  ஆதிசங்கரர்தான் பிராமணர்களைப் பாராட்டி இருக்கிறார், ஆண்மையப் போக்கை முன்வைத்திருக்கிறார் என்று சொல்லும் மார்க்கஸிஸ்ட்டுகள், ஆதிசங்கரர் இரண்டே இரண்டு வார்த்தைகளில் சொன்னவற்றை, சித்தார்த்த புத்தர் ஒரு பெரிய அத்தியாயமாகவும், கட்டாயமாகப் பின்பற்றப்படவேண்டிய சட்டமாகவும் செய்திருக்கிறார் என்பதை மறைத்துவிடுவார்கள்.

  ”பிராமண வர்க்கம்” என்ற தலைப்பில் சித்தார்த்த புத்தர் பிராமணர்களின் பெருமையைப் பேசுகிறார். அது, தம்மபதம் என்ற அவருடைய போதனைகளைச் சொல்லும் புத்தகத்தில் ஒரு தனி அத்தியாயம். சித்தார்த்த புத்தர் தரும் ஒரு பெரிய அத்தியாயத்தை, ஆதிசங்கரர் தரும் ஒரே ஒரு வார்த்தையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

  பெண்களுக்குத் துறவு கூடாது, அவர்கள் அதற்குத் தகுந்தவர்கள் இல்லை என்று சித்தார்த்த புத்தர் போதித்து வந்தார். அவருடைய சகோதரரும், முக்கிய சீடருமான “ஆனந்தர்” சித்தார்த்த புத்தரிடம் வாதாடி, பெண்களுக்கும் துறவு கொடுப்பதை ஏற்படுத்தினார். தனது அருமை சகோதரனும், சீடனுமான ஆனந்தருக்காக விட்டுக்கொடுத்த சித்தார்த்த புத்தர், ஒரு சட்டத்தை ஏற்படுத்தினார்.

  அந்த சட்டத்தின்படி, பெண் துறவிகள் ஆண் துறவிகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படவேண்டும். அவர்கள் சுயமாக சிந்திக்கவோ, செயல்படவோ உரிமை இல்லை. இப்படிப்பட்ட சட்டத்தைக் கொடுத்தவர்தான் சித்தார்த்த புத்தர். இதுதான் சித்தார்த்த புத்தர்.

  (இதை விடக் கொடுமையான ஒரு அடக்குமுறையை லிபரேஷன் தியாலஜி பேசுகிற கத்தோலிக்கர்களும் பின்பற்றுகிறார்கள். அவர்களையும் விடக் கொடுமையான அடக்குமுறையை மொகம்மதியர்களும் செயல்படுத்துகிறார்கள். ஆனால், அவர்களைக் குறை சொல்ல விடாமல் கோழைத்தனம் தடுக்கிறது.)

  இந்த சித்தார்த்த புத்தரின் வழிவந்தவர்கள் இன்றும் பெண் துறவிகள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், வேதாந்தம் பரப்பிய ஆதிசங்கரரின் வழிவந்தவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

  பெண்களுக்கான ஒரு துறவியர் மடத்தை உண்டாக்க வேண்டும் என்று விவேகானந்தர் சொன்னார். அந்தப் பெண் துறவியர்கள் சுயேச்சையானவர்களாக, தங்களது சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் தாங்களே முடிவெடுத்துச் செயல்படும் சுதந்திரம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விவேகானந்தர் சொன்னார்.

  அவர் சொன்னபடிதான் உலகில் ஆகப்பெரிய பெண் துறவியருக்கான மடாலயம் உருவானது.

  இதுவும் விவேகானந்தர் உருவாக்கிய ஒன்றல்ல. அவருக்கு முன்பும் தொடர்ந்து வரும் வேதாந்த மரபில் இருந்த ஒரு விசயம்தான். அவருடைய குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருகூட ஒரு பெண்தான்.

  சங்கரரைப் பின்பற்றுபவர்களும், புத்தரைப் பின்பற்றுபவர்களும் என்ன யோசிக்கிறார்கள், எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.

  ஆனால், சித்தார்த்த புத்தரை ஒரு புரட்சிக்காரராகக் காட்ட முயலும் சாதிவெறி மார்க்கசீயப் புலவர்கள் இந்த விசயங்களைச் சொல்லுவதில்லை. ஊடகம் முழுவதும் இந்த சாதிவெறியர்கள் இருப்பதால் நமது பொதுப்புத்திக்கும் இது தெரியாது. ஆனால், நம்மிடம் இருப்பது வெறும் காலனிய பொதுப்புத்தி. 🙁

  அந்தக் காலனிய பொதுப்புத்தியின் படி சித்தார்த்த புத்தர் சத்திரியர். நம்மாளு. அதனால், அவரைப் புரட்சிக்காரர் என்று பாராட்டவேண்டும். ஆதிசங்கரர் ஒரு பார்ப்பான். எதிரி. பாம்பைக்கூட விட்டுவிடலாம், ஆனால் பார்ப்பானை கொன்றே தீரவேண்டும்.

  இந்தப் பொதுப்புத்தி தாண்டி சித்தார்த்த புத்தரையோ, ஆதிசங்கரரையோ நாம் படித்துப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் வாழ்ந்த நிலவுடமைச் சமுதாய காலம், சமூக உளவியல், பொருளாதாரக் காரணிகள் தெரிவதில்லை.

  ஒட்டுண்ணிவாதிகள் போதிக்கும் ஒரு வரி புரிதலே போதுமானதாக இருக்கிறது. அதனால்தான் விவேகசூடாமணியில் உள்ள இந்த இரண்டு வார்த்தைகளைத் தவிர முழுதும் படிக்க மாட்டேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்லுவதும் தவறில்லை.

  விவேகசூடாமணி விவேகம் உள்ளவர்களுக்காகச் சொல்லப்பட்டது.

 59. Tamil Skeptic
  #59

  திரு களிமிகு கணபதி:
  நீண்ட விளக்கத்திற்கு நன்றி. இருந்தாலும் அது விவேக சூடாமணியின் அபத்தங்களை மாற்ற எந்த வகையிலும் உதவவில்லை.

  நான் கொடுத்திருக்கும் இணையதளம் இந்துமத நம்பிக்கையும், இந்திய நாட்டுப் பற்றும் உள்ளவர்களால் நடத்தப்படுவதாகத் தான் தெரிகிறது. அத்தளத்தை நடத்தும் செலவை சரிகட்ட கூகுள் விளம்பரங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். அதில் வரும் விளம்பரங்கள் உங்களுக்கு சங்கடமாக இருந்தால் தளத்திற்கு வேண்டுமானால் எழுதிப்பாருங்கள். நான் ஒன்றும் செய்வதற்கில்லை 😉

  அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பு இந்துமத நம்பிக்கையுள்ள ஒரு சாமியாரால் செய்யப்பட்டதாக தான் அந்தத் தளம் சொல்கிறது. அந்த தளத்தில் வேற்று மத விளம்பரங்கள் வருவது பிடிக்கவில்லை என்றால் அதே மொழிபெயர்ப்பு வேறு இடங்களிலும் கிடைக்கிறது. http://www.vivekananda.net/PDFBooks/Vivekashudamani.pdf.

  மொத்தம் 580 செய்யுள்கள் உள்ளன. கிட்டத் தட்ட பாதி படித்திருப்பேன். முடியவில்லை. போரடிக்கிறது. கொஞ்சம் common sense மீதி non-sense. Profound என்று சொல்லக்கூடியது அரிதாகவே காணப்படுகிறது.

  இந்த மொழிபெயர்ப்பு சரியில்லை என்று நினைத்தால், உங்களுக்குப் பிடித்த தமிழ் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்புக்கு (வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு) இணைப்பு இருந்தால் கொடுக்கவும். படிக்க முயற்சிக்கிறேன். அதில் ஏதாவது sensible ஆக இருக்கிறதா என்று பார்க்கலாம்.

  நீங்கள் விளக்கியிருக்கும் இரண்டாவது செய்யுளையே எடுத்துக்கொள்வோம்:

  2. For all beings a human birth is difficult to obtain, more so is a male body; rarer than that is Brahmanahood; rarer still is the attachment to the path of Vedic religion; higher than this is erudition in the scriptures; discrimination between the Self and not-Self, Realisation, and continuing in a state of identity with Brahman – these come next in order. (This kind of) Mukti (Liberation) is not to be attained except through the well earned
  merits of a hundred crore of births.

  எல்லா உயிரினங்களிலும் மனிதராகப் பிறப்பது கடினம் என்கிறார். ஒரு குறிப்பிட்ட உயிராக பிறப்பது எளிது அல்லது கடினம் என்பதை எப்படி வரையறை செய்வது? அதெப்படி மனிதராகப் பிறப்பது கடினம்? அப்படி கடினமாக இருந்தால் இன்று உலகில் கிட்டத்தட்ட 700 கோடி மனிதர்கள் இருப்பது எப்படி? இதே வேகத்தில் போய்க்கொண்டிருந்தால் பூமி தாங்காது என்று மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை இந்தியா உள்பட பல நாடுகளில் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

  அடுத்து ஆணாகப் பிறப்பது கடினமாம். மனித இனத்தில் ஆணாகப் பிறப்பதற்கும், பெண்ணாகப் பிறப்பதற்கும் நிகழ்தகவு சமம் தான். ஆதி சங்கரர் சொல்வதைப் பார்த்தால் பெண்கள் மிகுதியாகப் பிறப்பது போலவும், ஆகவே ஆணாகப் பிறப்பது கடினம் என்று நினைக்கவேண்டியதாக இருக்கிறது. இது அபத்தம். நீங்கள் குறிப்பிடுவது போல அது “ஆண்” அல்ல “ஆண் தன்மை” என்றாலும் கூட அபத்தம் தான். “ஆண்தன்மை” கொண்டவர்கள் அபூர்வமாகத் தான் பிறக்கிறார்களா?

  அடுத்து பிராமணத் தன்மையோடு பிறப்பது கடினமாம். அதென்ன பிராமணத் தன்மை? பிராமண சாதியில் பிறப்பதா? அது கடினம் தான் என்று ஒப்புக்கொள்கிறேன். இந்துக்களின் மக்கள் தொகையில் சிறிய பகுதியினர் தான் பிராமணர்கள் என்பதால் எல்லோரும் பிராமணத் தன்மையோடு பிறக்க முடியாது.

  அடுத்து வேதிய மதத்தோடு தொடர்புடன் பிறப்பது. சங்கரர் இதை எழுதிய காலத்தில் வேதம் படிப்பது பிராமணர்களுக்கு மட்டுமேயான உரிமையாகவே இருந்தது. அடுத்து வருவதும் இப்படியே தான் போகின்றன.

  இப்படி பிராமண சாதியில் பிறந்த ஆண் (தன்மை கொண்டவர்), வேதம் படித்து தெளிந்தால் தான் ஆத்மா விடுதலை கிடைக்குமாம். ஆத்மா விடுதலை என்றால் என்ன? அது எதிலிருந்து விடுதலை பெற வேண்டும்? ஏன் விடுதலை பெற வேண்டும்? விடுதலை பெற்று எங்கு செல்வது? அங்கு போய் ஆத்மா என்ன செய்யும்?

  இது சக மனிதர்களை மதிக்காத, உலக வாழ்க்கையை, பொருண்மையான உலகை வெறுக்கத் தூண்டும் வரட்டுத் தத்துவமாகத் தான் இருக்கிறது. இந்த நூல் முழுவதும் இப்படிப்பட்ட அபத்தமான கருத்துக்கள்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. இதனைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் பிராமணர்களில் மிகமிகச் சொற்பமானவர்களே ஆதி சங்கரர் சிபாரிசு செய்யும் வழியில் செல்லக்கூடும். பிராமணர்கள் அல்லாதவர்கள் பலருக்கு நல்ல வேலையாக இந்த அபத்தங்கள் பரிச்சயமிருக்காது. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். அவர்களின் ஆத்மாக்கள் எல்லாம் விரைவில் விடுதலை அடைந்து பிரம்மத்தோடு சேர்ந்துவிட வாழ்த்துக்கள். உங்கள் ஆத்மாவும் தான். 🙂

 60. களிமிகு கணபதி
  #60

  பிராமணத் தன்மை என்பதும், ஆண்மை என்பதும் பிறப்பால் உடலால் ஏற்படுபவை அல்ல. அதை எனது முந்தைய பதில் தெளிவாகவே சொல்லுகிறது.

 61. அருண்பிரபு
  #61

  //எல்லா உயிரினங்களிலும் மனிதராகப் பிறப்பது கடினம் என்கிறார். ஒரு குறிப்பிட்ட உயிராக பிறப்பது எளிது அல்லது கடினம் என்பதை எப்படி வரையறை செய்வது? அதெப்படி மனிதராகப் பிறப்பது கடினம்? அப்படி கடினமாக இருந்தால் இன்று உலகில் கிட்டத்தட்ட 700 கோடி மனிதர்கள் இருப்பது எப்படி?//

  அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது – ஔவையார்.

  ஜந்தூனாம் நரஜன்மம் துர்லபம் – ஆதிசங்கரர்.

  அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனும் ஆற்றவே கொள்க – நாலடியார் (அதிகாரம் 4; அறன் வலியுறுத்தல்)

  Then God said, “Let us make man in our image, in our likeness, and let them rule over the fish of the sea and the birds of the air, over the livestock, over all the earth, and over all the creatures that move along the ground.” – Bible (Genesis 1:26)

  To sum it up, by inventing man to the acts of worship, especially visitation of His Sacred House, God has had grace on him by giving him dignity and preventing him from falling into the state of an animal. – Koran – (on Hajj Pilgrimage)

  மனிதகுல உயர்வு இப்படி எல்லா மதத்தினராலும் பேசப்படுகிறது.
  “கற்பனைவாதமும், பிற்போக்குத் தனமும் நிரம்பிய” விஷயங்கள் எல்லா மதங்களிலும் சொல்லப்படுகிறதோ?

  ஆதிசங்கரர் சொல்கிறார், ஔவையார் சொல்கிறார். இவர்கள் இந்துக்கள். விட்டு விடுங்கள். சமணர், கிறிஸ்தவர், முஸ்லிம் என எல்லோரும் இதையே சொல்கிறார்களே? எல்லோரும் பிற்போக்குதனம் நிரம்பிய கற்பனைவாதிகளா? வரட்டு வேதாந்திகளா?

  மனிதப்பிறவி அரிது என்பதற்குக் காரணம் சிந்தனைத்திறன். முட்டாள் கூடச் சிந்திப்பான். குழந்தை கூடச் சிந்திக்கும். அந்தந்த வயதுக்கேற்ற அறிவுத்திறன் இருக்கும். விலங்குகள் எதுவும் எத்தனை வயதானாலும் சிந்திப்பதில்லை. Artificial Intelligence கூட மனித அறிவுடன் போட்டி போட முடியாது. இவ்வாறெல்லாம் மேம்பட்டு நிற்பதால் தான் மனிதப்பிறவி எடுப்பது அரிது எனப்பட்டது.
  அதையே தான் சொன்னார் ஆதிசங்கரர் “ஜந்தூனாம் நரஜன்மம் துர்லபம்”.

  துர்லபம் என்ற சொல்லுக்கு difficult to be obtained or seen; rare, precious, dear என்று பொருள் அறியப்படுகிறது.

  Difficult என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு கடினமான, செயற்கரிய என்பது பொருள்.

  700 கோடி மனிதர்கள் இருக்கிறார்கள், இது இயற்கை, யாரும் கடும் முயற்சி எடுத்து மனிதர்களாகவில்லை என்றால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருக்கவேண்டுமே? சிந்தனைத்திறன் முதல் செயல்திறன் வரை அனைத்தும் வேறுபடுகிறதே? சிறப்பு முயற்சிகள் ஏதும் தேவையில்லை எனில் ஏன் அடிப்படையான அறிவே வேறுபடுகிறது?
  இயற்கை ஆங்காங்கே மாறுபட்டு வேறுபாடு காட்டுகிறதா?

  இந்தக் கேள்விகளுக்கு விடை: மனிதப் பிறவி அரிதுதான். அதனினும் அரிது உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் புத்திபூர்வமாய் எதையும் அணுகுவது. அதுவே பும்ஸ்த்வம் எனப்படும் ஆண்மை என்றறியப்பட்டது. அதற்குத் தேவை தர்க்கஞானம் (பகுத்தாயும் அறிவு). [பகுத்தறிவு என்று சொல்லியிருக்கலாம். ஆனால், பகுத்தறிவு என்றால் சொன்னதற்கு ஆமாம் போடுவது என்பது தற்காலச் சான்று.] தர்க்கஞானம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம், தானாக வருவது அரிது.

  //அடுத்து பிராமணத் தன்மையோடு பிறப்பது கடினமாம். அதென்ன பிராமணத் தன்மை? பிராமண சாதியில் பிறப்பதா? அது கடினம் தான் என்று ஒப்புக்கொள்கிறேன். இந்துக்களின் மக்கள் தொகையில் சிறிய பகுதியினர் தான் பிராமணர்கள் என்பதால் எல்லோரும் பிராமணத் தன்மையோடு பிறக்க முடியாது.//

  அதென்ன பிராமணத் தன்மை? என்று கேட்டீர்கள். விடையைத் தாங்களே ஊகித்தீர்கள். ஊகித்த விடையைச் சரிபார்க்கத் தோன்றாது தவறான ஊகத்தின் மீதே மேலும் மேலும் சொற்களை அடுக்கிவிட்டீர்கள்.

  விப்ரதா – state or rank of a Brahman. ப்ரம்மன் என்பது இறைத்தன்மை. அந்த இறைத்தன்மையை உணர்ந்தவன் ப்ராமணன். ஞானமும் கல்வியும் நயத்தல் ப்ரம்மனை உணர முதற்படி. ப்ரம்மனை உணர உற்ற கல்வி முறை வைதிக மார்க்கம். இது அந்தணரல்லாதார்க்கு மறுக்கப்பட்டது என்பது திராவிட இயக்கம் திரித்துப் பரப்பிய மாயை. ப்ரம்மனை உணர்ந்த ஒரு புலையனை “விலகிச் செல்” என்று சங்கரர் சொல்ல அதற்கு புலையன் கேட்ட கேள்வி ஆதிசங்கரரை மனீஷா பஞ்சகம் பாடவைத்தது.

  புலையன் இறைத்தன்மையை உணர்ந்திருந்தான் என்றால் ஞானமும் கல்வியும் நயத்தல் புலையனுக்கும் சாத்தியப்பட்டது என்பது திண்ணம். தொண்டனின் பரம்பரை தமிழ் மட்டிமே படிக்க வேண்டும், தலைவனின் வழித்தோன்றல்கள் பல மொழிகளைப் பல நாடுகளுக்குச் சென்று படிப்பர் என்ற ‘பகுத்தறிவுக் கல்வி முறை’ அப்போது இல்லை.

  உலகம், உடல், நான், நீ என்பன போன்ற வேறுபாடுகள் வீண். என்னில் இருக்கும் இறையே எங்குமிருக்கும் எல்லா உயிரிலும் இருக்கும் பரம் பொருள்(Ayamatma Brahma) என்று உணர்ந்து பாடவைத்தது. இறைத்தன்மையை உணர்ந்தவன் புலையனே ஆனாலும் புல்லனல்லன். உலகுக்கே உய்யவழி காட்டும் உத்தம குருவாகப் போற்றப் படவேண்டியவன் என்று மனீஷா பஞ்சகத்தில் சொல்கிறார் சங்கரர். வரலாற்று உண்மைகளை மறைக்கும் தீய எண்ணம் சநாதனத்தின் பெரியோர்க்கு இருந்திருந்தால் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருக்காது.

  //இந்தக் கட்டுரையின் அடிநாதம் மூளையைத் தெளிவுறுத்தி வைப்பது. இல்லாததை இருப்பதாக எண்ணும் மூளையை கண்ணின் காட்சி கொண்டு தெளிவுறுத்தும் செயல். அந்தத் தெளிவின் மூலம் எண்ண ஓட்டத்தைச் சீராக்கும் முயற்சி. அது வெற்றிகரமான உளவியல் தீர்வாக உலக வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. இந்த உளவியல் தீர்வுக்கு அடிநாதம் அமைத்துத் தந்தது அத்வைதம்.//

  I reiterate my stand above quoted, from my previous response.

  மாற்றுக்கருத்து மறுக்கப்பட வேண்டியதன்றி வேறில்லை எனும் தொனியில் வரும் தங்கள் கருத்துக்களை பார்ர்கிற போது, சமய இலக்கியங்கள் பக்கமே தலைவைத்துப் படுக்காது, திராவிட இயக்கத்தின் மாயை வழியில் ஊறித்திளைத்து, காதுகள் இரண்டிலும் ‘பகுத்தறிவுப் பாசறையின்’ மறுப்புச் சித்தாந்தம் விரவிய பாமாலைகள் தோரணமாகத் தொங்கட்டான் ஆடுவது தெரிகிறது. ஐயோ பாவம் யாரு பெத்த புள்ளயோ!!

 62. Sarang
  #62

  தமிழ் ஸ்கெப்டிக்

  உங்களுக்கு விவேக சூடாமனி போர் அடிப்பது ந்யாயம் தான் – அது விவேக் & சூடாமனி என்று நீங்கள் நினைத்து படித்தீர்களோ

  மனித பிறவி அரிது இல்லை தான் – ப்ரியங்கா சொப்ரா வீட்டு நாய் குட்டிக்கு கிடைத்த பாக்யம் எந்த ஒரு மனிதனுக்கும் சுலபமாக கிட்டுமோ

  மேர்படி ஒரு சதுர மைல் அளவு நிலத்தில் இருக்கும் பூச்சிகளின் என்னிக்கை தான் மொத்த ஜனத்தொகை என்று யாரோ கண்டுபிடித்து வைத்திருக்கிரார்கள் – அதெல்லம் உங்களுக்கு இல்லை

 63. மண்ணாங்கட்டி
  #63

  கிராப் வெட்டிக் கொள்ளும் காலத்தில் நான் குடுமி தான் வைப்பேன் என்பீர்களா, டிவி இருக்கும் காலத்தில் நான் கதாகாலட்சேபம் தான் கேட்பீர்கள் என்கிறீர்களா? அப்படி தான் The Hidden Secret in Think and Grow Rich போன்ற புத்தகங்கள் வரும் காலத்தில் விவேக சூடாமனித் தான் படிப்பேன் என்கிறீர்கள், சரி அது உங்கள் விருப்பம். மற்றவர் மேல் இதைத் திணிப்பது பாசிசம் இல்லையா….

 64. அருண்பிரபு
  #64

  மண்ணாங்கட்டியாரே!

  க்ராப் வெட்டிக் கொள்வதும் குடுமி வைத்துக் கொள்வதும் (முன்னோர் சொல் ஏற்பதா அல்லவா என்பது குறித்த)அவரவர் விருப்பம். ஊரே க்ராப் வெட்டிக் கொள்கிறது நீ மட்டும் குடுமி வைத்துக் கொள்கிறாய், ஆகவே நீ பழமைவாதி என்பது எப்படித் தனிமனித உரிமை மீறலோ, அது போல The Hidden Secret in Think and Grow Rich வெளிவந்த பிறகும் விவேகசூடாமணி படிப்பது பாமரத்தனம் என்ற பொருள்படப் பதிவதும். Grow rich in what என்ற கேள்வியில் துவக்கி மனித வாழ்வின் அடிப்படை முதல் மன அமைதி வரை போதிப்பது விவேக சூடாமணி.

  தொலைக்காட்சிப் பெட்டி வந்த பின்னும் கதாகாலட்சேபம் கேட்பது யாதொரு குற்றமுமில்லை. கதாகாலட்சேபம் கேட்டு எவரும் கெட்டதாகச் சரித்திரமில்லை, மனம் இறைவனிடம் ஓன்ற அது ஒரு ஊடகமாகச் செயல்பட்டது. முட்டாள் பெட்டியில் ஒளிபரப்பாகும் மெகாத்தொடர்கள் பார்ப்பதால் (பெண்களுக்கு முக்கியம் குடும்பமா? சீரியலா? என்ற பட்டிமன்றத் தலைப்பைத் தவிர) கிடைக்கும் பயன் என்ன? Discovery, Fox History, NGC போன்றன பார்க்கலாமே என்று ஆலோசனை சொல்லலாம். ஆனால், பெரும்பான்மைப் மக்கள் பயனற்ற மெகாத்தொடர்களை மட்டுமே அதிகம் பார்க்கிறார்கள்.

  இந்தக் கட்டுரையிலோ பின்னூட்டங்களிலோ எங்குமே “ஏ பாவிகளே! அத்வைத்தத்தையும் விவேக சூடாமணியையும் ஏற்றுக் கொண்டாலன்றி உங்களுக்கு உய்வில்லை” என்ற பொருள்பட யாருமே பகரவில்லையே. திணித்தல் எனும் பாசிசம் இதில் எங்கிருக்கிறது? தக்க ஆதாரங்கள் காட்டித் தம் கருத்தை வலியுறுத்தல் வாதம் புரிதல் என்றறியப்படும். திணித்தல் என்றல்ல. இல்லாததை இருப்பதாகக் கூறுவது நாசிசம் இல்லையா? (ஹிட்லரும் கோயபல்ஸும் அதைத் தானே செய்தார்கள்!)

  பழையன அனைத்தும் கழிதலும், புதியன சுவையாய்ப் புகுதலும் உடம்புக்கு மிக நல்லது. ஆனால் வாழ்க்கை பழமையும் புதுமையும் சரியாக இயைந்த கலவையாக இருப்பதே நலம். வாழிய நலம்.

 65. Sarang
  #65

  மன்னாங்கட்டி

  இது புது பொன்டாட்டி வந்தவுடன் எதிலோ மயங்கி அவுக பேச்ச கேட்டு அம்மாவை நட்டாத்தில் விடும் போக்கு தான் – நான் இதை செய்ய மாட்டேன்

 66. ரங்கசாமி
  #66

  திருமணம் என்னும் பந்தத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை நீங்கள். பெண்டாட்டி எப்போதும் புதிதாகத் தான் வரமுடியும். பெண்டாட்டியை வெறும் செக்ஸ் தரும் எந்திரமாக பார்ப்பதையும், அதில் மயங்கி இந்திய ஆண்கள் தாய்மாரை கொடுமைப்படுத்துவதும் போல சொல்லுகிறீர்கள். திருமணம் செய்து பாரும் இல்லறம் புரியும். பெண்டாட்டி வரவில்லை இன்றால் உமது குலமே விருட்சம் ஆகாது. தாயை மட்டும் போற்றிக் கொண்டிருந்தாள் சந்ததிகள் உருவாகிவிடாது மவனே

 67. Sarang
  #67

  ரங்கசாமி அய்யா

  என்ன சொல்றொமுன்னு தெரியாமலே எழுதுறீங்கலே – நான் சொன்னது மன்னாங்கட்டிக்கு பதில் – அவரு தான புதுச பாத்தா பழச பரக்க விடனுமுனு உபதேசம் செஞ்ஜாரு – தெரியாம தான் கேக்கரேன் நான் எங்கேயாவது இந்தியர்க்ள் எல்லாம் இப்படி தான் என்று சொல்லி இருக்கேனா, இல்லை மனைவி தேவையே இல்லை எனறு சொல்லி இருக்கேனா. நல்ல பழசை மறப்பது தவறு என்று தான் சொன்னேன் உங்களுக்கு ஏன் உருத்துகிறது

  நீங்களாகவே ஏதோ ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டு நீங்களாகவே ஏதோ பதிலும் தருகிறீர் இதற்கெல்லாம் சொந்தமாக ஒரு ப்லாகிடலாமே

 68. vishy
  #68

  few questions:

  1. If there is phantom limb, can there be a phantom body, after death?
  Especially in circumstances, where there is sudden death – accidents, murder etc.

  The mind is there, but there is no body… Having feelings, memory, awareness, but there is no body to use. The body is destroyed.

  I don’t believe in the ‘conventional’ ghost, but I believe the possibility that there are circumstances, where the ghosts are created.

  Probably it takes lot of years for the mind energy to slow down to dissipate in the universal energy.

  Welcome any thoughts on this.

 69. Pavala
  #69

  Scary to read this reply!!! 🙂

 70. sahas
  #70

  நவீன அறிவியலின் கண்டுபிடுப்புகளையும்,ஆய்வுகளையும் வைத்து விஞ்ஜான முலாம் பூசும் முயற்சியை தொடர்ந்து செய்பவரின் ஒரு கட்டுரை.ஆன்மா என்பதை உடலிலிருந்து பிரித்து மரணத்திற்குப் பிறகும் அது இருப்பதாகக் கூறுவதே இந்து மதம்.அப்படி ஒன்றை நிறுவினால்தான் கர்மவினைக்கோட்பாட்டைக் கூறி சாதிய ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்த முடியும்.இதற்க்காக நவீன அறிவியலின் கண்டுபிடுப்புகளை அரைகுறையாகக் கூறி நம்மைகுழப்புவதுதான் இவர்களின் மேலிடம் இவைகளுக்கு கொடுத்திருக்கும் பணி.

 71. Rathinavelu
  #71

  உபநிடதங்களும் வேதங்களும் வெறும் வார்த்தைக் குப்பை;உண்மை அறியவொண்ணாதது என்பதே உண்மை.எந்த அமைப்பும் அதற்குள்ளே இருந்து கொண்டு தன்னை முழுமையாக விளக்க என்ன,விவரிக்கக்கூட இயலாது.கோடலின் கணிதமெய்ய்ப்பித்தல் காண்க.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: