முரட்டுச் சிங்கம் ஹைதர் அலி

hyderali_10461மன்னரின் மகன் மன்னராவதுதான் இந்திய மரபு. விதிவிலக்காக அரச மரபில் பிறக்காதவர்களும் தங்களின் அறிவுத்திறத்தால், உடல்வலிமையால் ஆட்சியைப் பிடித்து மன்னராவதும் உண்டு.

எளியவர்கள் தங்களின் அறிவால், துணிவால் அரியணையேறினாலும் அவர்கள் முழுவதுமாகத் தங்களை மன்னர்களாகவே கருதுவதில்லை. தாம் என்றும் ஒரு சாதாரண குடிமகன்தான் என்று நினைத்து குடிமக்களின் மன்னராகவே வாழ்வர். அத்தகையோருள் ஒருவர் ஹைதர் அலி, மற்றொருவர் திப்பு சுல்தான். இவர்களுள் ஒருவர் சிங்கம் என்றால் மற்றொருவர் புலி. ஹைதர் என்பதற்குச் “சிங்கம்“ என்று அர்த்தம். ஹைதர்அலி உண்மையிலேயே சிங்கம்தான். ஆனால் கொஞ்சம் முரட்டுச் சிங்கம். திப்பு சுல்தானுக்கு ஜாகோபியன்கள் “குடிமகன்“ என்ற பட்டத்தினை வழங்கினர். மன்னர் மரபினர் அல்லாத மன்னர்கள் மக்களின் மனத்தில் வாழும் நல்ல குடிமகன்கள்தான் என்பதற்கு இந்தச் சிங்கமும் புலியுமே சான்று.

சூஃபி மரபு

ஹைதர் அலியின் முன்னோர்கள் “அகவிழிப்புடைய மனிதர்கள்” என்று அழைக்கப்படும் சூஃபி குடும்பத்தினர். அவர்களுள் ஒருவர் ஃபட்டா முகம்மது. சூஃபி மரபினர் போர் வீரராவது ஒரு வகையில் முரண்தான்.  சூஃபி இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை சுல்ஹ்-இ-குல் என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ‘அனைத்துடனும் சமாதானம்’ என்பதாகும்.

சமாதானத்தை விரும்பும் மரபில் போர் வீரர் உருவாவது முரண்தானே?. பத்தே முகம்மது ஆற்காடு நவாபின் முதன்மைத் தளபதியாக இருந்தவர். அவருக்கு இரண்டாவது மகனாக கி.பி.1720ஆம் ஆண்டு ஹைதர் அலி பிறந்தார்.

படைவீரர்

மைசூரை ஆண்ட இளம்வயது அரசர் கிக்க கிருஷ்ணராசாவிடம் படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் சேர்ந்தனர். கி.பி. 1749ஆம் ஆண்டு நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரம் கிருஷ்ணராசாவை வியப்பில் ஆழ்த்தியது. அப்போரில் பெற்ற வெற்றிக்குக் கைமாறாக கிருஷ்ணராசா ஹைதர் அலியைக் குதிரைப்படைத் தளபதியாக்கினார்.

பிரிட்டிஷ் எதிர்ப்பு

கி.பி.1750ஆம் ஆண்டு பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்திய மண்ணில் கடும்போர் ஏற்பட்டது. இந்நிலையில் அரசர் கிக்க கிருஷ்ணராசா பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தார். இப்போரில்தான் ஹைதர்அலி பிரிட்டிஷாரை எதிர்த்து முதல் முதலில் மோதினார். தன் அணியினரான பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து நவீன போர் நுணுக்கங்களையும் ஆயுதங்களையும் அறிந்துகொண்டார்.

ஆயுதப்படை

பிரிட்டிஷாரை ஹைதர் அலி எதிர்கொண்ட விதத்தையும் வீரத்தைக் கண்டு வியந்த மைசூர் அமைச்சர் நஞ்ஞராஜர் மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பினை ஹைதர் அலிக்கு வழங்கினார்.

திண்டுக்கல்லில் ஹைதர் அலி தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார். அங்கு இராணுவ ஆய்வுக் கூடத்தை உருவாக்கி, பிரிட்டிஷ் படையை எதிர்கொள்ளும் வகையில் பீரங்கிப் படையை அமைத்தார்.

வீரர்களின் நண்பர்

மைசூர் படையில் வீரர்களுக்கு ஊதிய நிலுவை, ஊதிய உயர்வு சார்ந்த சிக்கல்கள் எழுந்தன. அது பெருஞ்சிக்கலாகி கி.பி.1758ஆம் ஆண்டில் வீரர்களுக்கும் மன்னருக்கும் இடையில் ஒரு கலகமாக உருவெடுத்தது. அக்கலகத்தை அடக்கும் பொறுப்பை அரசர் கிக்க கிருஷ்ணராசா ஹைதர் அலியிடம் ஒப்படைத்தார்.

ஹைதர் அலி தன் சாட்டையைச் சொடுக்கிக் கலவரத்தை அடக்கி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். தன் முயற்சியால் கிருஷ்ணராசாவிடம் பணம்பெற்றும் தன் சொந்தப் பணத்தைக்கொண்டும் வீரர்களின் பண(மன)த்துயரைத் துடைத்தார். இதனால் படைவீரர்கள் மத்தியில் ஹைதர் அலிக்குச் செல்வாக்கு ஏற்பட்டது.

வெற்றிச்சிங்கம்

கி.பி. 1759ஆம் ஆண்டு மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது. மைசூர் படைக்கு ஹைதர்அலியைத் தலைமையேற்குமாறு அரசர் கிக்க கிருஷ்ணராசா கட்டளையிட்டார். மைசூர் படை ஹைதர் அலியின் தலைமையில் மராட்டியப் படையினை எதிர்த்தது. மகத்தான வெற்றியினைப் பெற்றது.

அரசர் கிக்க கிருஷ்ணராசா அவ்வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் ஹைதர்அலியைப் பாராட்டும் வகையிலும் ஹைதர் அலிக்கு “பதே ஹைதர் பஹதூர்“ என்ற பட்டத்தினை வழங்கினார். அதாவது “தைரியம் உடைய வெற்றிச் சிங்கம்“ என்று பொருள்.

ஆட்சியைப் பிடி

அரசர் கிக்க கிருஷ்ணராசா இளம் வயதினர் என்பதால் அவரை ஏய்த்தபடியே தேவராஜர் மற்றும் நஞ்ஞராஜர் ஆகிய இரண்டு அமைச்சர்களும் சுகவாழ்வு வாழ்ந்தனர். ஆனால், மறைமுகமாக ஹைதர்அலி மக்கள் மனத்தில் பெருவாழ்வு வாழ்ந்து வந்தார்.

பிரிட்டிஷாரைப் பொறுத்தவரை மைசூரில் அவர்களுக்கு இணையான வீரராக ஹைதர் அலியை மட்டுமே கருதினர். ஆதலால், பிரிட்டிஷ் அரசு ஹைதர் அலிக்கு எதிராக ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கியது. அக்கூட்டணியில் மராத்தியர்களும் நிஜாம்களும் இருந்தனர். இதனை அறிந்த ஹைதர் அலி பிரெஞ்சுக்காரரர்களைத் தன்வசப்படுத்திக்கொண்டார்.  அவர்களின் வீரர்களின் உதவியுடன் தன் படைவீரர்களுக்குப் போர் நுட்பப்  பயிற்சியினை அளித்தார்.

இந்நிலையில் பிரிட்டிஷார் அமைச்சர்கள் தேவராஜர் மற்றும் நஞ்ஞராஜர் ஆகியோரைத் தன்வசப்படுத்திக்கொண்டு ஹைதர் அலிக்கு எதிராக அவர்களைச் செயல்படத் தூண்டினர். ஆனால், ஹைதர் அலி முந்திக்கொண்டார். அவர் தேவராஜர் மற்றும் நஞ்ஞராஜர் ஆகியோரைக் கைதுசெய்தார். அரசர் கிக்க கிருஷ்ணராசாவை ஆட்சிப்பொறுப்பிலிருந்து நீக்கினார். மைசூரின் அரசராகத் தன்னை அறிவித்துக்கொண்டார். வீரர்களும் மக்களும் அவரைத் தம் அரசராக ஏற்றனர்.

தேவை படையும் பணமும்

மைசூர் சிம்மாசனத்தில் அமர்ந்த ஹைதர் அலி முதல்வேலையாகத் தன் படையினைச் சீர்படுத்தினார். தன்படையினருள் புதிதாக 200-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு வீரர்களை இணைத்துக்கொண்டார். அவர்களின் வழியாகத் தன் படையினரை நவீன வீரர்களாக மாற்றினார். 1.8 லட்சம் வீரர்களைக் கொண்ட பெரும் படையினைத் தயார்செய்தார்.

உலக அளவில் ஏவுகணை தயாரிப்பு வரலாற்றில் ஹைதர் அலிக்கு முக்கியப் பங்குண்டு. அட்டைக்குப் பதிலாக உலோகக் குழாய்களைக் கொண்டு, 10 அடி உயரமுள்ள மூங்கில்களைப் பயன்படுத்தி ஆறு கிலோகிராம் எடையுள்ள, நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தயாரித்தார்.

அடுத்ததாக அவர் வேளாண்மையில் கவனம் செலுத்தினார். வயல் விளைந்தால்தான் அரசுக்கு வரி கிடைக்கும் என்ற தத்துவத்தைப் புரிந்துகொண்டார். ஒரு நாட்டிற்குப் படையும் பணமும் அதிமுக்கியம் என்பது அவரது கோட்பாடு. அவ்விரண்டையும் அதிகப்படுத்திக்கொண்டார்.

வந்தது முதல் மைசூர் யுத்தம்

எப்போதும் எதற்கும் தயார்நிலையில் இருந்த ஹைதர் அலிக்குப் போர் புரியும் வாய்ப்பு கிடைத்தது. போர் என்றால் சில நாட்கள் அல்ல. சில ஆண்டுகள். அந்த நெடிய யுத்தத்தை முத்தமிட ஹைதர் அலி விரும்பினார்.

பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் ஜோசப் ஸ்மித் தலைமையில் ஹைதர் அலிக்கு எதிராகக் கி.பி. 1767ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் போர் தொடங்கியது. அப்போரைக் கண்டு அஞ்சிய ஹைதராபாத் நிஜாம் 23.02.1768ஆம் பிரிட்டிஷாருடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டார்.

ஹைதர் அலி தொடர்ந்து மோதினார். மராட்டியரை வென்று மங்களூரைக் கைப்பற்றினார். ஈரோட்டில் பிரிட்டிஷ் படைகளை தோற்கடித்தார். பிரிட்டிஷ் தளபதி நிக்ஸன் தோல்வியை ஒப்புக் கொண்டார். கி.பி.1767ஆம் ஆண்டு முதல் கி.பி.1769ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இப்போர் முதல் மைசூர் யுத்தம் என வரலாற்றில் குறிக்கப்பெற்றது.

ஒப்பந்தமும் ஓவியமும்

இப்போரின் முடிவில் பிரிட்டிஷார் ஹைதர் அலியுடன் ஓர் உடன்படிக்கை செய்துக் கொண்டனர். அவரவர் ஆக்கிரமித்த நிலங்களை திருப்பியளிப்பது என்றும், மைசூர் ஆட்சிக்கு ஆபத்து எனில் பிரிட்டிஷ் படை உதவிக்கு வரும் என்றும் ஒப்பந்தமானது.

ஹைதர் அலியின் ஆணைப்படி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணி அடித்து, ஹைதர் அலிநொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்திருப்பதைப்போலவும், தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் பிரிட்டிஷ் அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து ஹைதர் அலி உலுக்குவதுபோலவும் டூப்ரேயின் தங் நாணயங்களைக் கக்குவதைப்போலவும் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியின் பதக்கத்தை அணிந்த ஒரு நாய்  ஹைதர் அலியின் பின்புறத்தை நக்கிக்கொண்டு இருப்பதைப்போலவும் உடைய ஓர் ஓவியத்தைப் பதித்தனர்.

பிளாஷிப்போர் சொல்லிக்கொடுத்த பாடம்

ஆற்காடு நவாப் பிரான்சின் ஆதரவில் இருந்தார். இவர் கல்கத்தாவின் மீது போர் தொடங்கி, பல பிரிட்டிஷாரைக் கொன்றார். அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக பிரிட்டிஷார் வங்காளத்தைத் தாக்கினர்.

ஹைதர் அலியைப் போல், கிழக்கிந்தியாவில் பிரிட்டிஷாரை எதிர்த்த வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தௌலாவுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே கடுமையான போர் 23.06.1757ஆம் நாள் பிளாஷி என்ற இடத்தில் நடைபெற்றது.

பிரிட்டிஷ் படைகளுக்கு இராபர்ட் கிளைவ் தலைமை தாங்கினார். நவாப்பின் படைகள் எண்ணற்றதாக இருந்ததால் இராபர்ட் கிளைவ் சூழ்ச்சி செய்தார். நவாபின் தளபதி மீர் ஜாஃபருடன் ஓர் இரகசிய உடன்படிக்கை செய்துகொண்டார். அதன்படி போரில் மீர் ஜாஃபருக்கு உட்பட்ட படைப்பிரிவு பிரிட்டிஷாருடன் போரிடாமல் ஒதுங்கிக்கொண்டது. ஆதனால், இராபர் கிளைவ் வெற்றிபெற்றார். நவாப் சிராஜ் உத்-தௌலாக் கைதுசெய்த பிரிட்டிஷார் அவரைக் கல்கத்தா துறைமுகத்தில் தூக்கிலிட்டனர்.

இச்செய்தி ஹைதரைத் துன்பத்தில் ஆழ்த்தியது. தன் தேசத்தின் சக போராளி வீழ்ந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பிரிட்டிஷாரிடம் இந்திய மன்னர்கள் தோற்கக்கூடாது எனக் கருதி, மராத்தியர்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம் மீதான எதிர்ப்புகளை கைவிட்டார். மராட்டியர்களை இந்துக்கள் என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை. பிரிட்டிஷாருடன் அவர்கள் இணைந்திருந்த காலகட்டங்களில், தேச நலனுக்காகவே அவர்களை எதிர்த்தார்.

வந்தது இரண்டாம் மைசூர் யுத்தம்

மராட்டியர்கள், மைசூர் மீது மீண்டும் போர் தொடுத்தனர். ஒப்பந்தப்படி, பிரிட்டிஷ் படைகள் ஹைதருக்கு உதவிபுரிய வரவில்லை. கடுப்பாகிப்போன ஹைதர் அலி பிரிட்டிஷ் படைகள் மீது கி.பி. 1780ஆம் ஆண்டு முதல் ஒரு நெடும்போரினைத் தொடங்கினார்.

100 பீரங்கிகள், 90,000 வீரர்களுடன் ஹைதர் அலி தாக்குதலை நடத்தினார். ஆற்காடு, பரங்கிப்பேட்டை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் யுத்தம் தீவிரமாக நடந்தது. பேரம்பாக்கம் என்ற இடத்தில் பிரிட்டிஷ் படைகளை வழிமறித்து ஹைதர் அலியின் படை சிதறடித்தது. அப்போரில் 2,000 பிரிட்டிஷார்  உட்பட 7,000 எதிரிப்படைகள் கொல்லப்பட்டனர். 2,000 பிரிட்டிஷார்  சிறைப்படுத்தப்பட்டனர்.

கல்கத்தாவில் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் சென்னை கவர்னரைப் பதவியிலிருந்து விலக்கினார். சர் அயர் கூட் என்னும் படைத்தலைவர் தலைமையில் ஒரு பெரும்படையை ஹைதர் அலியின் மீது ஏவினார். அப்படை சிதம்பரத்தை அடுத்த பறங்கிப் பேட்டையில் கி.பி.1781 ஆம் ஆண்டு ஹைதர் அலியை எதிர்கொண்டது. இப்போரில் ஹைதர் அலி தோல்வியுற்றார்.

வீர உரையும் ஈர மடலும்

தன் படைவீரர்கள் நெடிய போரைக் கண்டு மனம் தளரக் கூடாது என்பதற்காக ஹைதர் அலி தன்னுடைய நீண்ட நெடிய போர் திட்டம் குறித்து தன் தளபதிகளிடம்,“பிரிட்டிஷாரை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஓர் இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் (இன்றைய ஆப்கான்) மற்றும் பாரசீக(ஈரான் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராட்டியர்களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். பிரெஞ்சுகாரர்களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக ராணுவ நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் பிரிட்டிஷாரைத் தாக்க வேண்டும்“
என்று கி.பி. 1782ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உரையாற்றினார். இந்த யுத்தத்தின்போது மராட்டியர்களையும் ஹைதராபாத் நிஜாமையும் இணைத்து “ஐக்கிய கூட்டணி“யை அமைத்தார்.

1782 டிசம்பர் மாதம் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஹைதர் அலி போர் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, கேரளாவின் மலபார் பகுதியில் அவரது மகன் திப்பு சுல்தான் பிரிட்டிஷாரை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்தார். அப்போது போர் குறித்தும், இந்திய தேசத்தின் விடுதலை குறித்தும் இந்தியாவின் பெருமை குறித்தும் அவர் தன் மகன் திப்புசுல்தானுக்கு எழுதிய கடிதம் சிறந்த ஆவணம்.

அதில் அவர்,

“அன்பு மகனே… அதிகாரம் மற்றும் நமது மைசூர் ஆட்சியின் பாதுகாப்பு குறித்தும் நான் கவலைப்படவில்லை. நமது முன்னோர் முகலாயர் ஆட்சியில், ஆசியா கண்டத்தில் நமது இந்திய தேசம் கௌரவமான இடத்தை வகித்தது. ஆனால் இன்று நமது தாய்நாடு சிதறிப்போய் கிடக்கிறதே… நமது இந்திய மக்களுக்கு தேசத்தின் மீதான நேசம் குறைந்துப் போய்விட்டதே”

என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1780ஆம் ஆண்டு முதல் ஹைதர் அலி தொடங்கிய இந்த யுத்தம் கி.பி. 1784ஆம் ஆண்டு வரை அவரது மகன் திப்புசுல்தான் தலைமையிலும் தொடர்ந்தது. இதனை இரண்டாம் மைசூர் யுத்தம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டனர்.

சிங்கத்தின் மீளாத்துயில்

இரண்டாம் மைசூர் யுத்தத்தின்போது ஹைதர் அலிக்கு வயது 60. திப்புசுல்தான் தமிழ்நாட்டில் கும்பகோணம், கடலூர் ஆகிய பகுதிகளை வென்ற செய்தியைச் ஆந்திராவில் உள்ள சித்தூரில் இருந்த ஹைதர் அறிந்தார். இந்நிலையில் ஹைதர் அலி முதுகுத்தண்டு புற்றுநோய் காரணமாக 03.12.1782ஆம் நாள் காலமானார்.

அவரது உடலை அங்கிருந்து 60 மைல் தொலைவில் உள்ள கோலாருக்கு இரகசியமாக அனுப்ப ஹைதர் அலியின் மதிமந்திரி பூர்ணையா திட்டமிட்டார். அங்குதான் ஹைதர் அலியின் தந்தை ஃபட்டா முகம்மதுவின் சமாதி உள்ளது. அங்கு கொண்டு செல்லப்பட்ட ஹைதர் அலியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

(இன்று ஹைதர் அலி நினைவு தினம்)

17 comments so far

  1. Abu Mujahid
    #1

    என்ன சரவணன் அய்யா ‘அவங்களுக்கு’ அவகாசமே கொடுக்க மாட்டேங்கிரேங்க. இன்னும் ‘அவங்க’ திப்புவில் இருந்தே வெளி வரல அதுக்குள்ள இப்படி போட்டு தாக்குறீங்களே. டவுசர் அண்ணங்களா வாங்க வாங்க, வந்து இங்கேயும் நஞ்சை கொட்டுங்க

  2. Dr. P. Saravanan
    #2

    பேரன்புள்ள திரு. Abu Mujahid அவர்களுக்கு வணக்கம்.
    நான் யாரையும் எழுத்தால் தாக்கவில்லை. நான் என் வழியில் சென்றுகொண்டிருக்கிறேன். குறுக்கிடுவோரைத் தாண்டிச்செல்கிறேன். அவ்வளவுதான்.
    நன்றி!
    தங்கள் சரவணன்

  3. க்ருஷ்ணகுமார்
    #3

    \\\ டவுசர் அண்ணங்களா வாங்க வாங்க, வந்து இங்கேயும் நஞ்சை கொட்டுங்க \\\

    ஜெனாப் அபு, எனது மிகப்பல முஸல்மாணிய பரிச்சயங்களிடமிருந்து நான் அவதானிக்கும் நல்ல விஷயம் பண்புடன் கருத்துப் பகிர்தல். க்ஷமிக்கவும். அதன் அடிச்சுவடு கூட தங்களது உத்தரங்களில் காணக்கிட்டுவதில்லை.

    அன்பின் சரவணன் அவர்களது வ்யாசங்களுக்கு இது போன்ற உத்தரங்கள் வலு கொடுக்கிறது என்றால் அது வ்யாசத்துக்கோ அல்லது தமிழ்பேப்பருக்கோ வலு சேர்ப்பது அல்ல. மாறாக கருத்துப் பகிர்வதில் கண்யமின்மையையே சுட்டுகிறது.

    முன் வ்யாசத்தில் பகிரப்பட்ட விஷயங்களுக்கு ஆதாரமாக ஆவணங்கள் கேழ்க்கப்பட்டிருந்தன. ஆதாரங்கள் பகிரப்படாத வரை பகிரப்பட்ட விஷயங்கள் வெறும் புனைவுகளாகவே கருதப்படும்.

    ஆவணங்களின் பாற்பட்டு பகிரப்படும் விஷயங்கள் மட்டிலும் சரித்ரமாகக் கருதப்படும்.

    மாறாக சொந்த விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டு பகிரப்படும் கருத்துக்கள் வெற்றுப் புனைவுகளாக புறந்தள்ளப்படும்.

  4. ரங்கன்
    #4

    அடுத்து அவுரங்க சேபு இந்துக்களின் விடி வெள்ளியாகத் திகழ்ந்தார் என்ற அற்புதமான கட்டுரை வர மிக ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

    ஆதாரம் எதுவும் தேவை இல்லை – நாங்கல்லாம் டவுசர் தானே.

  5. Abu Mujahid
    #5

    அப்படி ஒருக் கட்டுரை வந்தால் அது குஜராத்தில் மோடி முஸ்லிம்களின் விடிவெள்ளியாக திகழ்கிறார் என்ற டவுசர் பிரதர்சின் புளுகை விட மோசமானதல்ல

  6. Bala
    #6

    ana una gujarat pathi pesaranga, kovai la nadanthathu ena chinna kulanthaigal velayatta?????

  7. Dr. P. Saravanan
    #7

    நண்பர்களே!
    எப்போது முடிவுக்கு வரும் இந்த இந்து-முஸ்லிம் சர்ச்சை? நாம் இந்த வெடிகுண்டு கலாச்சாரத்திலிருந்து எப்போது மீள்வோம்? நமது அறிவுச்செயல்பாட்டிற்கு இவ்விரண்டும் முதன்மைத் தடைகள். நடந்தவற்றை மன்னிக்கவோ, மறக்கவோ வேண்டாம். ஆனால், அவற்றைத் தாண்டி யோசிப்பதுதானே ஆரோக்கியமானது.
    நட்புடன்
    சரவணன்

  8. Dr.P.Lavanya
    #8

    Thambi kalakkita Keep it up

  9. க்ருஷ்ணகுமார்
    #9

    அன்பின் ஸ்ரீ சரவணன்,

    ஹிந்து முஸ்லீம் நல்லிணக்கம் என்பது அவச்யமான ஒன்று.

    அதற்கு முஸல்மான் களில் ஹிந்துக்களுடன் இணக்கமாக பணிசெய்த நல்லோர்கள் எத்தனையோ பேர்கள் உண்டு. அவர்களை நினைவு கூற வேண்டும்.

    எந்த கொடுங்கோலன் ஹிந்துக்களை அவர்கள் இஸ்லாம் மதத்தை ஏற்காததற்காக படுகொலை செய்தானோ அது போன்ற கொடுங்கோலர்களை நினைவு கூறுதல் கூடாது.

    தேசப் பாதுகாப்பு பற்றி எழுதும் போது அஜ்மல் கசாபை தேசத்துக்கு நல்லன செய்த நல்லவன் போன்று நினைவு கூர்தல் எப்படியோ அப்படியே ஹிந்து முஸல்மான் நல்லிணக்கம் பற்றிப் பேசுகையில் திப்பு, ஹைதர் பற்றி நினைவு கூர்வது.

    எனக்கு எண்ணிறந்த முஸல்மாணிய சான்றோர்கள் ஆதர்சங்கள் எனக் குறிப்பிட்டுருந்தேன். ஸ்ரீமான் அயாஸ் ரஸுல் நஸ்கி என்ற பெருமை வாய்ந்த காஷ்மீர முஸல்மான் சஹோதரர் அவர்களை நான் நினைவு கூர்ந்திருந்தேன். பொதுவிலான ஹிந்துஸ்தானப் பண்பாடு போற்றும் அன்பர் இவர். இந்த அன்பர் இன்றைய நாட்களில் எல்லைக்கு அப்பால் ஆக்ரமிப்பு காஷ்மீரத்தில் உள்ள தனது மற்றும் நமதுமுன்னோர்கள் நிறுவிய சாரதா பீடம் என்ற கல்விக்கூடத்திற்கு சென்றதைப் பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

    அதை நான் தமிழ் ஹிந்துவில் ஒரு வ்யாசமாகப் பகிர்ந்துள்ளேன்.

    இதே போல் நான் மிகவும் மதிப்பது என் குருஸ்தானத்தில் இருக்கும் சங்கீத அத்யாபகர்களை.

    இன்று ஹிந்துஸ்தானத்தில் உள்ள முஸல்மாணிய சஹோதரர்கள் அனைவரும் எனக்கு ப்ரியமானவர்களே.

    என் முன்னோர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என வற்புறுத்தி அவ்வாறு ஏற்காதவர்களை கொன்றொழித்த கொடுங்கோல் ராஜனை கசப்பான வெறுப்பான நினைவில் மட்டும் நினைவிலிறுத்த முடியும்.

    மற்றபடி நீங்கள் எதை எழுத வேண்டும் என்பது உங்களது இஷ்டம்.

    கொடுங்கோலர்களை நினைவு கூர்ந்து அவர்களை பெருங்கருணை வாய்ந்தவர்கள் என்று விதந்தோதுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக மட்டிலும் அவதானிக்கப்படும்.

    ஹிந்து முஸ்லீம் நல்லிணக்கம் என்பது நல்லவர்களை விதந்தோதுவதன் மூலமே சாத்யம். அந்த நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவித்த கொடுங்கோலர்களை கொடுங்கோலர்களாக அடையாளம் காட்டுவதும் நல்லிணக்கம் எப்படி இது போன்ற துஷ்டர்களால் பாதிக்கப்பட்டது என்பதனையும் காட்ட அவசியமே. A place for everything and everything in its place.

  10. Dr. P. Saravanan
    #10

    பேரன்புள்ள உயர்திரு. க்ருஷ்ணகுமார் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    தங்களின் தொடர் விமர்சங்கள் எனக்கு ”இந்தியாவின் வளர்ச்சிக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு”குறித்து ஒரு புத்தகம் எழுதலாம் என்ற சிந்தனையைத் தோற்றுவித்துள்ளன.
    நன்றி.
    தங்கள்
    மாணவன் சரவணன்

  11. Abu Mujahid
    #11

    Dr.Saravanan sir, Hats off to you for your noble thought.We want to live in India as brothers and sisters with other community.You are helping for that sir.

  12. க்ருஷ்ணகுமார்
    #12

    அன்பின் சரவணன் அவர்களுக்கு

    \\ ”இந்தியாவின் வளர்ச்சிக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு” \\

    அவசியம் எழுதப்பட வேண்டிய விஷயம்.

    ஒரே ஒரு விக்ஞாபனம். ஹிந்துஸ்தானத்தின் வளர்ச்சியில் பங்களித்ததாகத் தாங்கள் கருதும் இஸ்லாமிய சஹோதரர்கள் ஹிந்து முஸ்லீம் நல்லிணக்கத்துக்கும் பங்களித்தவர்களாக இருந்தார்களானால் (நான் மிகவும் மதிக்கும் எண்ணிறந்த பேர்கள் இருக்கிறார்கள்) அது ஹிந்து – முஸல்மான் என மதம் கடந்து அனைவராலும் விதந்தோதப்படும் படைப்பாக இருக்கும்.

    நல்ல ஒரு முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

  13. க்ருஷ்ணகுமார்
    #13

    ஜெனாப் அபு முஜாஹித்

    ஹிந்துக்கள் என்றால் முஸல்மான் களை வெறுப்பவர்கள் என்ற கருத்தாக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

    திப்பு, ஹைதர் போன்றோரை நீங்கள் ஹிந்துக்களிடம் வ்யாபாரம் செய்யமுடியாது. ஹிந்துக்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்த இவர்களை மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முன்வைப்பது அந்தக் கருத்தாக்கத்தையே இழிவு செய்வது போலானது.

    மதிப்பிற்குறிய ஸ்ரீ மான் கள் மு.மு.இஸ்மாயில், உஸ்தாத் பிஸ்மில்லாகான், அயாஸ் ரஸூல் நஸ்கி, மீர் குலாம் ரஸூல் நஸ்கி போன்று எண்ணிறந்தோர் மதம் என்ற எல்லைகளைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படுபவர்கள். இவர்களைப் போன்றோரை மதநல்லிணக்கத்துக்கு முன்வைத்தல் ஆதர்சமான போக்கு.

    தங்களது முந்தைய உத்தரத்தில் வினம்ரதை காணக்கிட்டியதற்கு வாழ்த்துக்கள். இது போன்று நல்ல சொற்களால் கருத்துக்கள் பகிர பழகுங்கள்.

    அபிப்ராய பேதங்கள் கண்யமான மொழியில் பகிரக்கூடாது என்று எந்த மதமும் நமக்குக் கற்றுக்கொடுக்காத போது நாம் கண்யத்தை ஏன் விட வேண்டும்.

    நீங்கள் மாற்றுக்கருத்துள்ளோரை சரியான வார்த்தைகளால் சுட்டாவிடினும் மாற்றுக்கருத்துள்ள நான் உங்களை தொடர்ந்து மதிப்பு மிக்க வார்த்தைகளால் மட்டிலும் சுட்டுவதை விடக்கூடாது –என்பதை தாங்கள் இகழும் *டவுசர்* கலாசாரம் தான் எனக்குப் போதித்துள்ளது என்பதனையும் நான் பகிர்ந்துகொள்கிறேன்.

  14. பொன்.முத்துக்குமார்
    #14

    // We want to live in India as brothers and sisters with other community. //

    அதற்கு, ‘டவுசர் அண்ணாங்களா’ என்று எடுத்த எடுப்பில் செய்யப்படும் எகத்தாள விளிப்புக்கள் உதவாது.

  15. ஷாலி
    #15

    //முன் வ்யாசத்தில் பகிரப்பட்ட விஷயங்களுக்கு ஆதாரமாக ஆவணங்கள் கேழ்க்கப்பட்டிருந்தன. ஆதாரங்கள் பகிரப்படாத வரை பகிரப்பட்ட விஷயங்கள் வெறும் புனைவுகளாகவே கருதப்படும்.
    ஆவணங்களின் பாற்பட்டு பகிரப்படும் விஷயங்கள் மட்டிலும் சரித்ரமாகக் கருதப்படும்.
    மாறாக சொந்த விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டு பகிரப்படும் கருத்துக்கள் வெற்றுப் புனைவுகளாக புறந்தள்ளப்படும்.//
    க்ருஷ்ணாஜி! உங்கள் மாமூல் பாட்டை இங்கேயும் பாட ஆரம்பிச்சுட்டீர்கள்.ஊருக்கு உபதேசித்தது போதும்.மொதல்லே உங்க ஆதாரத்தை எடுத்துவையுங்க!
    //என் முன்னோர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என வற்புறுத்தி அவ்வாறு ஏற்காதவர்களை கொன்றொழித்த கொடுங்கோல் ராஜனை கசப்பான வெறுப்பான நினைவில் மட்டும் நினைவிலிறுத்த முடியும்.//
    “இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை.விரும்பியவர்கள் விசுவாசிக்கலாம்.விரும்பாதவர்கள் நிராகரிக்கலாம்.” என்றுதான் வேதம் சொல்கிறது.குரான் வேதத்திற்கு விரோதமாக இருந்த கொடுங்கோல் ராஜன் யார்?வேதத்திற்கு விரோதமானவன் எப்படி முஸ்லிம் பட்டியலில் சேர முடியும்?
    //திப்பு, ஹைதர் போன்றோரை நீங்கள் ஹிந்துக்களிடம் வ்யாபாரம் செய்யமுடியாது. ஹிந்துக்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்த இவர்களை மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முன்வைப்பது அந்தக் கருத்தாக்கத்தையே இழிவு செய்வது போலானது.//
    மேற்கண்ட புனைவுக்கு ஸ்ரீமான் க்ருஷ்ணாஜி என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்.மூஞ்சே அறிமுகப்படுத்திய ஹிந்து மிலிடரி ஸ்கூலில் (RSS) படித்த க்ருஷ்ண குமார் ஆபிரகாமிய மதங்களின் மீது ஆசிட்டை தொடர்ந்து ஊற்றிவருவது அருவருப்படைய வைக்கிறது.மக்கள் அனைவரும் சகோதரர்களாக ஒருதாய் மக்கள் பிள்ளைகளாக வாழ விரும்பினாலும் இதுபோன்ற ஸ்வயம்சேவக்குகள் விடமாட்டார்கள்.வெறுப்பை விதைப்பவர்கள்.வெறுப்பையே அறுப்பார்கள்.க்ருஷ்ணகுமார் கனவு காணும் அகண்ட ஹிந்துஸ்தானுக்கு ஏற்கனவே சீனாக்காரன் அடிப்போட்டுவிட்டான்.இதை அன்றே ஸ்வாமி.விவேகானந்தர் கூறிவிட்டார்.க்ருஷ்ணகுமார்ஜி அறிக! தெளிக்க! தொடர்ந்து விஷத்தை பொழிக!

  16. Dr. P. Saravanan
    #16

    பேரன்புள்ள ஷாலி அவர்களுக்கு
    வணக்கம்.
    என் கணி்ப்பின்படி திருகுர்-ஆனின் படி நடக்காத எந்த இஸ்லாமியரும் நன்றாக வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. ஹைதர் அலியும் தி்ப்புசுல்தானும் நன்றாக வாழ்ந்தவர்கள்.
    நன்றி.

  17. deepak
    #17

    திரு.கிருஷ்ணகுமார் அவர்களே
    //என் முன்னோர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என வற்புறுத்தி அவ்வாறு ஏற்காதவர்களை கொன்றொழித்த கொடுங்கோல் ராஜனை கசப்பான வெறுப்பான நினைவில் மட்டும் நினைவிலிறுத்த முடியும்.//
    நீங்கள் சொல்லுவது 100க்கு 101 சதவிகிதம் உண்மைதான், இதே போல என் முன்னோரான சம்பூகனை சாதி உணர்வால் கொலை செய்த ராமனை எப்படி கடவுளாக ஏற்பது, அப்படி ஏற்காத என் பெளத்த முன்னோர்களை மதம் மாற வற்ப்புருத்தியவர்களை என்ன செய்ய வேண்டும் என்றும் சொன்னால் நலமாக இருக்கும்….

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: