பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு

800px-Olaichuvadiபறையர்கள் /அத்தியாயம் 15

பறையர்கள் கிராமப் பொதுச் சபையில் இடம் பெற்றிருந்தனர். வரியை நிர்ணயிப்பதிலும் தமது கிராமப்பகுதி எந்த மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதை நிர்ணயிப்பதிலும் இவர்கள் முடிவுகளை மன்னர்கள் கேட்டுத் தெரிந்துகொண்டனர். பொதுச் சபையில் இடம் பெற்ற இம்மக்கள் ‘பறை முதலி’ என்ற பெயரைப் பெற்றுள்ளனர். ‘முதலி’ என்ற சொல்லுக்கு ‘முதல்வன்’ என்ற பொருள் இருந்தது சிலர் மன்னரின் கடற்படையிலிருந்தும், காவலராக இருந்தும் பணியாற்றியுள்ளனர். ‘ஐநூற்றுப் பறையர்’ என்ற பெயர் ஐநூறு வீரர்கள் அடங்கிய படை என்று தெரிகிறது. பறையர்களுக்கும் ஒரு காலத்தில் வள்ளுவநாடு, புலையர் நாடு போன்ற நாடுகள் இருந்து வந்தன. ‘நாஞ்சில் வள்ளுவன்’ போன்ற குறுநில மன்னர்களும் இருந்துள்ளனர்.

பழங்குடியினரான ஆதி திராவிடர்களுக்கு கிராமத்தின் எல்லைகள் நன்கு தெரிந்திருந்தன. இந்த அடிப்படையில் இவர்களில் சிலர் கிராம அடிப்படை ஊழியர் பதவிகளில் இருந்து வந்துள்ளனர். இன்றும் பலர் அந்தப் பதவிகளைப் பெற்று வருகின்றனர். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் பழங்கால கிராம ஏடுகளில் சேரி, நத்தம், புறம்போக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை அவர்களிடமிருந்து எடுக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தமிழகம் முழுவதும் குடியிருப்புக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் இரண்டு பெயர்களில் அழைக்கப்பட்டன. ஒன்று கிராமம் என்ற வடமொழிப் பெயர். மற்றொன்று நத்தம் என்ற சேரிப்பகுதி. இவர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் நெடுங்காலத் தொடர்பு உண்டு என்பது இதனால் தெரிய வருகிறது.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வெள்ளாளர் என்பவர் தொண்டை மண்டலத்தை ஆதிக்கம் செலுத்திய போது, பறையர்களுக்கு நிலத்தின்மீது இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நிலைத்த குடிகளாக வாழ்ந்த மக்கள் இவர்களில் பல குடியினர் இலங்கைக்கும், மொரிஷியஸ் தீவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும், மேற்கு இந்தியத் தீவுக்கும், பிஜி தீவுக்கும் குடிபெயர்ந்து சென்று வாழ்ந்து வருகின்றனர்.
பறையர்கள் தங்களுக்கென தனி புரோகிதர்களையும், ராணுவத் தலைவர்களையும் கொண்டு மிக உயர்ந்த சமூக அமைப்போடு வாழ்ந்து வந்தனர். பறையர்கள் சில சாதியினருக்கும் சமயக் குருவாக இருந்து பல சடங்குகளையும் நடத்தியுள்ளனர். எனவே சில பழங்கோயில்களில் அவர்களுக்குத் தனித்த மரியாதையும் அளிக்கப்பட்டிருக்கிறது.

அடல் அருந் துப்பின்………………..
……………….குருந்தே முல்லை என்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே,

சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு,
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந் நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி,

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென,
கல்லே பரவின் அல்லது,
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே

திணை: வாகை. துறை: மூதின் முல்லை. பாடியவர் மாங்குடி கிழார். குரவு, தளவு, குருந்து, முல்லை என்ற நான்கு வகைகள். வேறு சிறந்த பூக்கள் கிடையாது. வரகு, திணை, கொள், அவரை என்பனவன்றி வேறு சிறந்த உணவுப் பொருள்கள் கிடையாது. துடியன், பாணன், பறையன், கடம்பன் இவரையன்றிச் சிறந்த குடிகள் கிடையாது. பகைவர் படைகளின் முன்னின்று மேலெதிர் வராதவாறு தடுத்து வென்று தாமும் வீழ்ந்து நடுகல்லானவரின் நடுகல்லைத் தொழுவதின்றி நெல்லும் பூவும் சொரிந்து வழிபடச் சிறந்த கடவுளும் வேறு கிடையாது. (இவை எல்லாம் புலவர் குறித்துப் பாடும் காட்டுத் தலைவன் நாடு பற்றியவையாகும்) எனக் குறிப்பிடப்படுகிறது.

பிறகுடிகள் பல இருந்தாலும் ‘இந்நான்கல்லது குடியும் இல்லை’ என்பது துடி கொட்டுபவன், யாழ் மீட்டுவோன், பறையறைபவன், வெறியாடுபவன் ஆகிய இவர்கள், மறவர்கள் போருக்குக் கிளர்ச்சிக்கு கொண்டு செல்லுதல் முதலாக, வாகைசூடிப் பரிசுப்பெறுதல் ஈறாக உடனிருந்து மகிழ்வித்தும், மறம்பாடியும் பணிசெய்வோர் என்பதுடன் இவர்களே தொன்மைக் குடிகளாக கூடி வாழ்ந்த கலைக் குடிகளாக வாழ்ந்தவர் என்று சிறப்புடன் குறிப்பிடப்படுகிறது.

‘பறையர்’ என்பது தமிழ்நாட்டில் இயற்கையாக ஏற்பட்ட பெயர். பறை என்பது பேரிகை. பூர்வ காலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப்போகும்போது ஜயபேரிகை கொட்டிச் செல்லும் தொழிலை பறையர் செய்து வந்தபடியால் பறையர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று என்று மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.

திருவள்ளுவர் காலத்திலும், சங்ககாலத்திலும் பறையர் சமுதாயம் செல்வாக்கும் பெருமையும் வாய்ந்ததாகவும் மேம்பட்ட சமுதாயமாகவும் இருந்தது என்பது உண்மை வரலாறு. பறையர் குடி தமிழ்நாட்டின் நிகரற்ற குடியாக 3000 ஆண்டுகளுக்கு முன்னரே விளங்கியதென 335வது சங்கப்பாடல் புறநானூறு கூறுகின்றது. இதை அறிந்துதான் புங்கனூர் இராமண்ணா, ‘பறையர் என்றால் அவர்தான் தமிழர்; தமிழர் என்றால் அவர்தான் பறையர்’ என்று கூறி, பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு, தமிழ் நாட்டின் வரலாறு, பாரத தேசத்தின் வரலாறு, பறையர் வரலாறு முழுமையாகத் தெரிந்து விட்டால் தமிழர் வரலாறும், தமிழ் நாட்டின் வரலாறும் முழுமையாகத் தெரிந்து விடும். தமிழ்நாட்டின் வரலாறு தெரிந்துவிட்டால் இன்றைய இந்தியாவின் வரலாறு தலைகீழாய் மாறிப்போகும் என்று குறிப்பிடுகிறார். (நூல் – பறையர் ஓர் வரலாற்றுச் சுருக்கம்).

இன்று ஷெட்யூல் சாதிகள் என்று சொல்லப்படும் மக்கள் தொகுதி பழங்காலத்தில் குலங்களாகவே இருந்தன. இன்று சில சலுகைகளை முன்னிட்டு அவற்றைச் சாதிகள் என்று அரசியல் சட்டத்திலும் வழக்கத்திலும் சொல்கிறோம் என்று நமது உச்ச நீதிமன்றம் மண்டல் கமிஷன் தீர்ப்பில் சுட்டிக் காண்பித்திருக்கின்றது. காரணம் இங்கு அந்நியர்களால் வருணாசிரம சாதி முறை புகுத்தப்பட்டபொழுது, அதை எதிர்த்தவர்கள் அன்று வலிமை வாய்ந்த பறையர் போன்ற மூத்த தமிழ்க்குடியினர் ஆவர். ஆகவே மிகவும் தீமை வாய்ந்த சாதி முறையை எதிர்த்தவர்களையும் சாதிகள் என்று சொல்வது முற்றிலும் பொருந்தாது என்பதே உச்சநீதிமன்றம் கூறும் காரணமாகும்.

31.12.1918 அன்று ஆங்கிலப் பேரரசின் தூணாக விளங்கிய மேன்மை தங்கிய சர். அலெக்சாண்டர் அவர்கள் இந்திய அரசுக்கு பார்ப்பனர், பறையர் ஆகிய இரு சமுதாயங்களையும் பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து குறிப்புரை ஒன்று சமர்ப்பித்தார். அந்தக் குறிப்புரையில் பார்ப்பனரை வெறும் பார்ப்பனர் என்றுதான் குறிப்பிடுகின்றார். ஆனால் பறையர்களைக் குறிப்பிடும்போது, ‘பெருமை வாய்ந்த பெரிய பறையர் சமுதாயம்’ என்று குறிப்பிடுகின்றார். அவர் பறையர் சமுதாயத்தினரைச் சாதி என்று குறிப்பிடவில்லை என்பது உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு உரம் சேர்ப்பதாக இருக்கின்றது. (அம்பேத்கர் எழுத்தும், பேச்சும் அடங்கிய 22வது பாகம் 444ம் பக்கம்).

ஆகவே, ஆரியர்கள் இங்கு காலடி எடுத்து வைத்து தமது கேடு விளைவிக்கும் வருணாசிரம தர்ம சாதிமுறையைப் புகுத்த முயன்றனர். தமிழ்ப் பண்பாடுகளையும் உயரிய மரபுகளையும் உயரப் பிடித்துக் கொண்டு கேடுகெட்ட சாதிமுறையைக் கடுமையாக எதிர்த்தவர்கள் பெருமை மிக்க பறையர்கள்.

0

 

9 comments so far

 1. deepa
  #1

  real news about parayan

 2. N. Murali Naicker
  #2

  The Great Paraiyar Community respected in “Kongu Region” during 13th and 14th century by “Kongu Cholas” and “Kongu Pandyas” rulers.

  In Thirupur (Kangeyam, Pattali) “Kongu Cholas Inscriptions” (1293 A.D), “Jayamkonda Velan Magan Paraiyan” is mentioned. The individual donated two lamps for the Pattali Palvenisvaramudaiyar temple.

  In Coimbatore “Kongu Cholas Inscriptions” (1292 A.D), “Vellalan Pulligalil Paraiyan Paraiyanana Nattu Kamindan” is mentioned. The individual donated a lamp to Kovanputhur Sangisvaramudaiyar temple.

  In Coimbatore “Kongu Pandiyar Inscriptions” (14th century), “Vellalan Paiyaril Paraiyan Paraiyanen” is mentioned. The individual donated a lamp to Idikarai Villisvaraudaiyar temple.

  In the same temple and same period the another individual named “Vellalan Paiyaril Sadaiyan Neriyan Parayanen” donated a lamp to the temple.

  In Coimbatore (Udumalaipettai, Kadathur) “Kongu Cholas Inscriptions” (1217 A.D), “Vellalan Kallan Paraiyan” is mentioned. The individual donated a gift.

  According to inscriptions evidence, the “Great Paraiyar community” in “Kongu Region” called as “Vellalan Paraiyan”, “Velan Paraiyan”, “Vellalan Kallan Paraiyan”, “Paraiyan Kamindan” (In inscriptions “Kamindan” means present “Kounder”).

 3. Mathesh
  #3

  what you are trying to say Mr.Murali?? there is lot of things to be discussed in the topic of caste.

 4. YOGANATHAN
  #4

  Parai is nothing but a composition or formula of Raghas / Music i.e.Pangal-Tamil, Swarams-Sanskrit not an instruments i.e.Murasu, Thappu, Melam. At present Parai is wrongly named as Tharai and Thappu.In ancient period, All Paraiyars are called Musician, Guru or Teacher, Revenue Officer and Pujari.In that time they never composition of music by Tharai and Thappu, they did by Mounth sound.So far as Paraiyars are named periya paraiyar samuthayam by Alexchander.

 5. அரவிந்
  #5

  நனறி.மீண்டெழுவான் தமிழன்.

 6. zhizha ezhan
  #6

  பறையர் என்றால் சொல்லுபவர்
  எதை
  கடவுள் இடமே அல்லது மன்னரிடமே கேட்டு சொல்பவரே பறையர்.
  ஆரிய வருகையினால் பறையர்கள் துரத்தப்பட்டனர்.
  ஆரியருக்கூ மூன் அவர்கள் வேளையை செய்தது யார்.????

 7. Harish
  #7

  பண்டைய தமிழ் நிகண்டுகளில் பள்ளிகள் என்ற மக்கள் பிரிவு பற்றிக் கூறப்படவில்லை. ஆனால், பள்ளி என்றால் முல்லை நிலக்குடியிருப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.

  பாட்டும் தொகையும் என்ற நூலில்(பக்கம் 116,நியூ செஞ்சுரி வெளியீடு) பள்ளி என்பதற்கு இடம்,சாலை,இடைச்சேரி எனவும், ‘பள்ளி அயர்ந்து’ என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து’ துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(186)
  ‘நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான்’
  என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது.

  சரி முல்லை நிலக்குடியிருப்பு என நிகண்டுகள் கூறும்போது, அதே நிகண்டு முல்லை நில மக்களை அண்டர்,இடையர்,ஆயர்,ஆய்ச்சியர்,கோவலர்,பொதுவர்,பொதுவியர் மற்றும் குடத்தியர் என்று கூறுகிறது. இதன்மூலம், பள்ளி என்போர் முல்லை நில மக்கள் இல்லை என்பதாகிறது.

  மலைபடுகடாம் செய்யுள்(451)
  ‘மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும்’
  என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.

  எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
  “பண்டைய காலத்தில் நகரம் அல்லது ஊரின் பல்வேறு பிரிவினரும் எவ்வாறு தனித்தனியாய் வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி பெரும்பாணாற்றுப்படையில் சித்தரிக்கப் பட்டுள்ள காஞ்சி மாநகரத்தை உற்று நோக்குவோம். இந்நகரத்தின் உட்பகுதில் பார்ப்பனர் குடியிருப்பு இருந்தது. இவற்றை சூழ்ந்து மள்ளர் அல்லது பள்ளர் மற்றும் கள் வினைஞர் தெருக்கள் இருந்தன. இவற்றிற்கு அப்பால் வெகு தூரத்தில் ஒரு கோடியில் இடையரின் பள்ளியும் அதற்கு அப்பால் ஒதுக்குப் புறமாய் எயினர் மற்றும் அவர்களது குடியிருப்புகளும் ஆகிய (எயினர் சேரி) பறைசேரிகளும் இருந்தன. மள்ளர் தெருக்களை ஒட்டி திருவெட்கா கோயிலும், மன்னன் இளந்திரையன் அரண்மனையும் காட்சியளிக்கின்றன. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

  M. Srinivasa Ayyangar Says “But by way of introduction, it is highly desirable to present before the readers a description of an ancient town or village in which the regional classifications of the tribes explained above is clearly discernible. We shall first take the city of Kanchipuram as described in the Perumpanattuppadai a Tamil work of the 3rd or 4th century A.D. In the heart of the town were the Brahmin quarters where neither the dog nor the fowl could be seen. They were flanked on the one side by the fisherman (வலைஞர்) street and on the other by those of traders (வணிகர்) and these were surrounded by the cheris of Mallar or Pallar (உழவர்) and the toddy drawers(கள்ளடு மகளிர்). Then far removed from there were situated at one extremity of the city of Pallis of Idayars and beyond them lay the isolated Paracheri of the Eyinars and their chiefs. Next to the Mallar (உழவர்) street were the temples of Tiruvekka and the palace of the king Ilandhirayan. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

  இதில் கூட பள்ளி என்றால் இடையர் குடியிருப்பு என்றே காட்டப்பட்டுள்ளது.பின்னர் பள்ளி என்போர் யார்? பள்ளி என்றால் பள்ளனின் மனைவி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், தற்கால வன்னியர் என்போர் தங்களை பள்ளி இனமாக தெரிவித்து கொள்கின்றனர். அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற ஒரு இனம் இருந்திருக்க வேண்டும்.

  சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடிய பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள்:

  “…..முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
  வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி
  னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
  பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
  வரிப்புற வணிலொடு கருப்பை யாடா 85

  தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
  வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
  ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
  மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
  ஈன்பிண வொழியப் போகி நோன்கா 90

  ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
  லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
  யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
  நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்
  பார்வை யாத்த பறைதாள் விளவி 95….”

 8. விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
  #8

  .

  சிறப்புக் குறிப்பு: புலவர் மாங்குடி கிழார் என்ன காரணத்தினால் குரவு, தளவு, குருந்து, முல்லை ஆகிய மலர்களைத் தவிர வேறுமலர்கள் இல்லையென்றும், உணவுப் பொருட்களில் வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கு மட்டுமே என்றும், குடிகளில் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளே என்றும், வழிபடுவதற்கேற்ற கடவுள் இறந்த வீரர்களின் நடுகல்லைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறுகிறார் என்பது தெரியவில்லை. ஒருசிற்றூரில் தான் கண்ட காட்சியைத் தன் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுகிறார் என்று தோன்றுகிறது. மேலும் அவர் கூறியதால் வேறு மலர்களே இல்லையா? இது மக்களைத்தான் கூறியுள்ளார் அப்போது வீரர்களும் அரசர்களை குடிமக்களும் வேறு வேறு பிரிவினர், அவர் சொல்படி இது ஓர் ஊரில் உள்ள குடிமக்களை குறிக்கும்

 9. விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
  #9

  சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. “முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று ‘தீண்டாச்சேரி-பறைச்சேரி’ என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது – கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் ‘தீண்டாதார்’ எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் ‘சேரிகள்’, அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு” அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: