மோடியின் குஜராத் – ஹிட்லரின் ஜெர்மனி

images

அடால்ஃப் ஹிட்லர் யூத இனப் படுகொலைகளை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது, கற்றறிந்த, நடுத்தர ஜெர்மானியர்கள் செயலற்று அமைதியாக நின்றனர் என்று வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் கனத்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். விஷயத்தின் விபரீதத்தை மக்கள் உணராமல் இருந்திருக்கலாம். அல்லது, ஹிட்லரின் பிரசாரத்தை நம்பி, நம் நன்மைக்காகத்தானே இவ்வாறு செய்கிறார் என்று நினைத்திருக்கலாம். அல்லது, ஓர் அரசை எதிர்த்து சாமானியர்கள் நம்மால் என்ன செய்துவிடமுடியும் என்று கையறு நிலையில் அனைத்தையும் சகித்துக்கொண்டு இருந்திருக்கலாம். காரணங்கள் அல்ல, விளைவுகளே இங்கு முக்கியம்.  யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பது முக்கியம்.  ரகசியமாக அல்ல, எல்லோருக்கும் முன்னால் திட்டமிட்டு வதை முகாம்களை உருவாக்கி, யூதர்களைப் பட்டவர்த்தனமாக அழித்தொழித்தான் ஹிட்லர்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 2004) இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு குஜராத் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் உண்மையில் தீவிரவாதிகள் அல்ல; நடைபெற்றது போலி என்கவுன்ட்டர்தான் என்று சிபிஐ தற்போது அறிவித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக குஜராத்தைச் சேர்ந்த ஏழு காவல் துறை  அதிகாரிகள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடிமீண்டும் விமரிசன வட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறார்.

ஹிட்லர் என்னும் ஆளுமை உருவான கதையும் அவர் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறும் The Rise and Fall of Third Reich-ல் விவரிக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் ஏன், எவ்வாறு யூதர்களைத் தேர்ந்தெடுத்தான், எப்படி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுத்தான், யூத எதிர்ப்பை எப்படி ஒரு சித்தாந்ததமாக வடிவமைத்தான், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி எப்படித் தன் கனவைச் செயல்படுத்தத் தொடங்கினான் என்பது இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிட்லரையும் நரேந்திர மோடியையும் ஒப்பிடுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.  மாறாக, ஹிட்லரின் ஜெர்மனியையும் மோடியின் இந்தியாவையும் அருகருகே நிறுத்தி வைத்து ஒப்பிட விரும்புகிறேன்.

யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் வெறுப்பு பிரசாரத்தை ஜெர்மானியர்கள் ஆட்சேபிக்கவில்லை. அதில் பெரிதளவும் உண்மை இருப்பதாக அவர்கள் நினைத்தனர். யூதர்களை ஜெர்மானியர்களாக அவர்களால் ஏற்கமுடியவில்லை. யூதர்களுக்குத் தேச பக்தி இல்லை என்றும் அவர்கள் தனியொரு குழுவாக இருக்கிறார்கள் என்றும் நமக்கு வரவேண்டிய வாய்ப்புகளை தட்டிப் பறித்துக்கொள்கிறார்கள் என்றும் ஜெர்மானியர்கள் நம்பினார்கள். இந்த பெரும்பான்மை நம்பிக்கையின்மீதே ஹிட்லர் தன் வெறுப்பு அரசியலைக் கட்டமைத்துக்கொண்டான். இந்த வெறுப்பு அரசியலைக் கொண்டுதான் அவன் யூதர்களைக் கொல்லத் தொடங்கினான்.

நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் இந்துக்களையே இந்தியர்களாகக் காண்கின்றனர். இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகவே அவர்கள் தொடர்ந்து முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். மோடி வெளிப்படையாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களில் உரையாடியிருக்கிறார். 2002 குஜராத் படுகொலைகளில் மோடிக்குப் பங்கு இருக்கிறது என்பது மட்டுமல்ல, 2002 சம்பவத்தை தனது உந்து பலகையாகப் பயன்படுத்தி மேலேழும்பி வந்தவர் அவர். சந்தேகத்துக்கு இடமின்றி அதிலிருந்து பெரும் ஆதாயமும் அடைந்திருக்கிறார்.

அந்த வகையில், ஹிட்லர், மோடி ஆகிய இருவருடைய எழுச்சியின் அடித்தளத்திலும் வெறுப்பு அரசியல் (அல்லது வெறுப்பு அரசியலும்) காணக்கிடைக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மோடி யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை என்பதை ஒரு வாதமாக முன்வைக்கமுடியாது. ஹிட்லரும்தான் யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக ஹிட்லரின் கரங்களில் படிந்த அதே ரத்தக் கறை மோடியின் கரங்களிலும் படிந்திருக்கிறது. அந்தக் கரங்களில் கறை அதிகம், இதில் குறைச்சல் என்று வேண்டுமானால் ஒருவர் வாதிடலாம்.

அல்ல, மோடியின் கரங்களில் கறையே இல்லை என்று சிலர் வாதிடும்போது தவிர்க்கயிலாதபடி ஜெர்மானியர்கள் நினைவுக்கு வந்துவிடுகிறார்கள். இப்போது இஷ்ரத் ஜஹான் வழக்கு பற்றிய விவாதங்களிலும்கூட இவர்கள் நரேந்திர மோடியைத் தப்புவிக்கவே ஆர்வமாக இருக்கிறார்கள். ‘இஷ்ரத் ஜஹான் மோதல் கொலை மோடிக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லையா? 2002 சம்பவத்தில் மோடி நேரடியாக ஈடுபட்டார் என்று எங்காவது நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறதா? (கரண் தாப்பருடனான முடிவுறாத டிவி பேட்டியின்போதும் மோடியே இதையே கேட்டார்). மோடியின் குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அந்த ஒரு சம்பவம் (2002) நீங்கலாக மோடிமீது ஏதாவது குற்றம் சுமத்த முடியுமா உங்களால்?’

நம் கண் முன்னால் ஒரு பெரும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதை ஒருவர் தூண்டிவிட்டிருக்கிறார் அல்லது பின்நின்று இயக்கியிருக்கிறார் அல்லது கண்டும் காணாமல் விட்டிருக்கிறார். குறைந்தபட்சம், அதிலிருந்து நேரடி பலன் ஈட்டியிருக்கிறார். இருந்தும் எப்படி அவரை நம்மில் சிலரால் உயர்த்திப் பிடிக்க முடிகிறது? அவரைத் தாங்கி பிடிக்கவேண்டும் என்று எப்படி, ஏன் சிந்திக்கிறோம்? ‘குஜராத் மாதிரி வளர்ச்சி’ நம் கண்களைச் கூசச் செய்கிறதா? அழிவைவிட்டுவிட்டு வளர்ச்சியைமட்டுமே அன்னப்பறவைப் போல் நாம் உறிஞ்சி எடுத்து மகிழ்கிறோமா? என்றால், இப்படிப்பட்ட cherry picking மதிப்பீடுகளை ஹிட்லருக்கும்கூட நம்மால் அருளமுடியும் அல்லவா?

இந்துத்துவா கொள்கையோடு உடன்படுவதால் மோடியை உயர்த்திப் பிடிப்பவர்களைக்கூட புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், கற்றறிந்த, நடுத்தர வர்க்க இந்தியர்களில் ஒரு சாரார் மோடியை அவருடைய ‘குஜராத் மாதிரி வளர்ச்சிக்காக’ 2002-ஐ வசதியாக மறந்துவிட்டு ஆதரிப்பதைப் பார்க்கும்போது அச்சமே ஏற்படுகிறது. மோடியை உயர்த்திப் பிடிப்பதன்மூலம் இவர்கள் வெறுப்பு அரசியலையும்கூட சேர்த்தே உயர்த்திப்பிடிக்கிறார்களா? இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமிய வெறுப்பைத்தான் இவர்கள் மோடி ஆதரவாக முன்வைக்கிறார்களா? மீண்டும் மீண்டும் மோடியை idolize செய்வதன்மூலம் இவர்கள் தெரியப்படுத்தும் செய்தி என்ன? யூதர்களை அடியோடு வெறுத்த பலர் ஹிட்லரை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அறம் சார்ந்த விழுமியங்களை நாம் மீட்டெடுக்கவேண்டிய தருணமிது. ஹிட்லரின் ஜெர்மனி செய்த தவறை மோடியின் இந்தியா இழைக்கக்கூடாது.  குஜராத் அரசு ஆவணங்கள் சொல்வதைப் போலவே அந்த மாநிலம் வளர்ச்சியடைந்திருந்தாலும்கூட நாம் நரேந்திர மோடியை நோக்கி அறம் சார்ந்த கேள்விகளை எழுப்பியே தீரவேண்டும். 2002-ஐ நாமும் மறக்கக்கூடாது; மோடி அதனை மறந்துபோகவும் அனுமதிக்கக்கூடாது. மோடியின் செயல்களை நாம் நியாயப்படுத்தி பேசும் ஒவ்வொரு முறையும் நாம் வரலாற்றில் பல அடிகள் பின்னோக்கிச் செல்கிறோம். இப்படி பின்னோக்கி நகர்ந்து நகர்ந்து செல்லும்போது ஒரு கட்டத்தில் நாம் ஹிட்லரின் ஜெர்மனியைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

அறம் அத்தனை முக்கியமல்ல, வளர்ச்சியைக் காட்டினால் போதும் என்னும் அபாயகரமான செய்தியை அரசியல்வாதிகளுக்கு நாம் வெளிப்படுத்துவது இன்றைய சமூகத்தை மட்டுமல்ல இனிவரும் சமூகங்களையும் சேர்த்து பாதிக்கும். அதற்குத் துணை போன பெருமை மட்டும் நமக்கு எஞ்சி நிற்கும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

0

மருதன்

96 comments so far

 1. கூத்தாடி
  #1

  குஜராத்தின் மாதிரி வளர்ச்சியின் உண்மை நிலை என்ன?

  ஹிட்லர் சர்வாதிகாரி என்பதால் தன்னை அவர் Project செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அவர் ஆட்சியில் ஜெர்மனி உண்மையாகவே வளர்ந்தது பொருளாதார அடிப்படையில்.

  ஆனால், மோடிக்கு அந்தத்திறமையாவது உண்மையிலேயே உண்டா?

  கட்டுரைக்கு +10000

 2. yarooruvan
  #2

  பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்.

 3. Jeyakumar
  #3

  வெறுப்பைக் கக்குவது என முடிவெடுத்த பின்னர் கட்டுரை எழுத கை நடுங்குமா என்ன? இதை எழுதியது கம்யூனிச தோழர் என்பதும், மற்றவர்களுக்கு ஒரு பேச்சுக்கு கையில் ரத்தமென்றால், கம்யூனிஸ்டுகள் ரத்தத்திலேயே குளித்தவர்கள் ஆயிற்றே.. தன் முதுகில் கட்டி கட்டியாய் வைத்துக்கொண்டு எங்கிருந்து தைரியம் வருகிறது இப்படி எல்லாம் எழுத?

 4. பிரகாஷ்
  #4

  காங்கிரஸ் அரசு, மோடியை ”உருளைக் கிழங்கு சாப்பிட்டு விட்டு, அபான வாயு விட்டார்” போன்ற தப்பவே முடியாத காரணங்களுக்காகத் தேர்தலுக்கு முன்னரே கைது செய்து, ஜெயிலுக்குள் போடப் போகிறது. ஆனால் மோடியின் மீதான எழுச்சி இவர்கள் வயிற்றில் இப்பவே இப்படிப் புளியைக் கரைக்கிறதே, இனி அவர் ஜெயித்துப் பிரதமராகி விட்டால்… பேண்ட்டிலேயே ஒன்றுக்குப் போய் விடுவார்கள் பயத்தில். 🙂 //இந்தியர்களில் ஒரு சாரார் மோடியை அவருடைய ‘குஜராத் மாதிரி வளர்ச்சிக்காக’ 2002-ஐ வசதியாக மறந்துவிட்டு// சீக்கியக் கலவரங்களைப் பற்றியெல்லாம் மூச்சு விட்டு விடாதீர்கள். ஏனென்றால் அவைகள் எல்லாம் திரேதா யுகத்தில் தான் நிகழ்ந்தனவே! (Edited)

 5. Jeyakumar
  #5

  அப்படியே வினவு, வினவு என வினவிக்கொண்டிருந்தவர்களும், மருதனும் இந்த ”பஞ்சம், படுகொலை” புஸ்தகத்திற்கு ஏதேனும் மறுப்பு எழுதியிருக்கிறார்களா என தெரிந்துகொள்ள ஆசை. ஆமெனில் சுட்டி தரவும்.

 6. ஜென்னி
  #6

  மருதன் எழுதாவிட்டாலும் மோடி என்றாலே ஹிட்லரின் முகம் தவிர்க்கமுடிவதில்லை. கட்டுரையை ஏதோ போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகவில்லை மருதன். உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால் தாராளமாக மறுத்துவிட்டுப் போங்கள். பிறரின் கருத்துகளை மதிப்பவர்கள்தான் கம்யூனிஸ்ட்கள். அதைவிட்டுவிட்டு, உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல், கட்டுரையில் சொல்லப்பட விஷயங்களுக்கு மறுப்புச் சொல்ல துப்பில்லாமல் கமெண்ட் போடுபவர்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. நீங்கள் அவ்வளவுதான்! மோடியின் ஆதரவாளர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றைச் சொல்லிச் சொல்லியே இந்தக் கூட்டம் வளர்ந்துவந்திருக்கு! இப்ப மோடி… இந்த மோடியைக் காட்டி இருந்த ஆட்சியையும் கர்நாடகத்தில் இழந்தவர்கள், இந்தியாவை ஆளப் போகிறார்களா…

 7. yarooruvan
  #7

  கம்யூனிஸ்ட்டுகள் இத்தனை பன்னெடுங்காலமாக இந்தியாவை ஆளவில்லை, கட்சியை கலைக்கவேண்டியதுதானே!

  மறுப்பு சொல்லத் துப்பில்லாமல் –> பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸத்துக்கு பதில் சொல்லத் துப்பில்லாதவர்களுக்கு கமெண்ட் என்ன கேடா?

 8. ஜென்னி
  #8

  yarooruvan,
  உங்களைப் போன்று ராமர், மோடி என்று சொல்லி ஆட்சியைப் பிடிப்பது கம்யூனிஸ்ட்களின் பணி அல்ல. ஆட்சியைப் பிடிப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்கவில்லை. அதனால் கலைக்க வேண்டிய தேவையும் இல்லை. உங்கள் துவேஷத்தைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, கம்யூனிஸம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். பிறகு சண்டைக்கு வாருங்கள்.

 9. சுபாஷ் சந்திரன்
  #9

  கட்டுரையில் இருக்கும் உண்மைதான் இங்கு கதற வைத்திருக்கிறது! கட்டுரையின் தன்மையைப் பார்க்காமல் மேலோட்டமாக விவாதத்தை நடத்திக்கொண்டு போகிறார்கள்… இதன் மூலம் மோடியைத் திட்டாமல் பாதுகாக்கிறார்களாம்! இழவு நடந்த இடத்திலும் விளம்பரம் தேடும் கூட்டம் இது போன்ற வேலைகளைத் திறமையாகச் செய்யும்.

 10. க்ருஷ்ணகுமார்
  #10

  \\\ஹிட்லரையும் நரேந்திர மோடியையும் ஒப்பிடுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.\\
  மாறாக, ஹிட்லரின் ஜெர்மனியையும் மோடியின் இந்தியாவையும் அருகருகே நிறுத்தி வைத்து ஒப்பிட விரும்புகிறேன்.\\\

  தோழர் மருதன், நான் உங்களிடம் ச்லாகிக்கும் விஷயம் வினயம். நன்று.

  ஆயினும் மேற்கண்ட வாசகம் ஔபசாரிகமே என்பதை தங்கள் வ்யாசத்திலிருந்தே மறுக்க முடியும்.

  \\\அந்த வகையில், ஹிட்லர், மோடி ஆகிய இருவருடைய எழுச்சியின் அடித்தளத்திலும் வெறுப்பு அரசியல் (அல்லது வெறுப்பு அரசியலும்) காணக்கிடைக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.\\\ஆனால் நிச்சயமாக ஹிட்லரின் கரங்களில் படிந்த அதே ரத்தக் கறை மோடியின் கரங்களிலும் படிந்திருக்கிறது. அந்தக் கரங்களில் கறை அதிகம், இதில் குறைச்சல் என்று வேண்டுமானால் ஒருவர் வாதிடலாம்.\\\\

  மேற்கண்ட வாசகத்தில் இட்டலியையும் உப்புமாவையும் ஒப்பிடவில்லையே. நீங்கள் மோடியையும் ஹிட்லரையும் தராசில் நிறுத்த விழைந்தால் செய்து விட்டுப்போங்கள். ஆனால் எதற்காக நான் இருவரையும் ஒப்பிட விழையவில்லை என்ற பீடிகையெல்லாம்.

 11. க்ருஷ்ணகுமார்
  #11

  \\நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் இந்துக்களையே இந்தியர்களாகக் காண்கின்றனர்.\\

  Thats the catch. Whenever, you are bracketed with naxalists, even after communists support many of the atrocities of Naxals in TV debates, you take a stand all those who are not communists do not know anything about communism. The same way, the above comment is a misnomer.

  \\மோடி வெளிப்படையாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களில் உரையாடியிருக்கிறார்.\\

  அப்படியா?

  கம்யூனிஸ்ட் பார்ட்டி கொள்கைகளுக்கு ஒத்து வராதவர்களை போட்டுத்தள்ளிவிடுவேன் என்று அப்பட்டமாக பொதுக்கூட்டத்தில் கொலைவெறியுடன் பேசிய தோழர் கம்யூனிஸத்தின் Rule or exception?

  \\2002 குஜராத் படுகொலைகளில் மோடிக்குப் பங்கு இருக்கிறது என்பது மட்டுமல்ல, \\

  அப்படியென்று எந்த கோர்ட் தீர்ப்பளித்துள்ளது?

  அப்படியென்றால் 1984 படுகொலையில் பங்குள்ளவர்களைப் பற்றியெல்லாம் மூச்சு ஏதும் விடமாட்டீர்கள்? 1984 படுகொலையில் கொல்லப்பட்டவர் எத்தனை பேர்? எத்தனை குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்பட்டுள்ளனர்? 2002 படுகொலையில் எத்தனை முஸல்மான் கள் கொல்லப்பட்டனர்? எத்தனை ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்? இதுவரை எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் ஹிந்துக்கள்? எத்தனை பேர் முஸல்மான் கள்?
  மோடி வெறுப்பை மட்டும் டிண்டோரா போட்டால் எதிர்க்கேள்விகளும் வரும் ஐயன்மீர்

  \\ஆனால் நிச்சயமாக ஹிட்லரின் கரங்களில் படிந்த அதே ரத்தக் கறை மோடியின் கரங்களிலும் படிந்திருக்கிறது. அந்தக் கரங்களில் கறை அதிகம், இதில் குறைச்சல் என்று வேண்டுமானால் ஒருவர் வாதிடலாம்.\\மோடியின் கரங்களில் கறையே இல்லை என்று சிலர் வாதிடும்போது தவிர்க்கயிலாதபடி ஜெர்மானியர்கள் நினைவுக்கு வந்துவிடுகிறார்கள்.\\\

  சீனா, ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா எல்லாமும் தான் நினைவுக்கு வருகிறது. Hope you would have read Armageddon by Leon Uris. By the time, Berlin was sliced by communists, people who listened to coffee table communist chit chats realised that the real face of communism is not what preached in coffee table chit chats but gory. Com.Marudhan, while reading your goody goody articles on what is what of communism, I could not but remember this anecdote from Armageddon.

  ஐயன்மீர், த்ரிபுரா, மேற்கு வங்காளம், கேரளா இங்கு கம்யூனிஸ்டுப்படுகொலைகள் வன்முறைகள் எல்லாவற்றிலும் கம்யூனிஸ்டுகளின் கையில் கறையெல்லாம் படியவில்லையா. எனக்கு இதெல்லாம் நினைவில் வந்து தொலைக்கிறதே. இப்போது சமீபத்தில் சிங்கூர், நந்திக்ராம் போன்ற கம்யூனிஸ்டுகளின் வன்முறையில் சிந்தப்பட்டதெல்லாம் தக்காளி சாஸ் என்று சொல்வீர்களா? கம்யூனிஸ்டு கொலை செய்தால் செத்தவன் உடலில் இருந்து வருவது தக்காளி சாஸ் என்று சொல்லி விடுவீர்கள் அப்படித்தானே

 12. க்ருஷ்ணகுமார்
  #12

  \\அழிவைவிட்டுவிட்டு வளர்ச்சியைமட்டுமே அன்னப்பறவைப் போல் நாம் உறிஞ்சி எடுத்து மகிழ்கிறோமா?\\

  கம்யுனிஸ்ட் ராஜ்யங்களில் வளர்ச்சியும் இல்லை மேலும் ரௌடித்தனம் மட்டுமீறி உள்ளதே. தோழர்கள் போட்டுத்தள்ளும் பாங்கையும் அதைப் பொதுக்கூட்டத்தில் உளரித்தள்ளுவதையும் என்ன சொல்வீர்கள்?

  \\மோடியை உயர்த்திப் பிடிப்பதன்மூலம் இவர்கள் வெறுப்பு அரசியலையும்கூட சேர்த்தே உயர்த்திப்பிடிக்கிறார்களா?\\

  2002 க்குப் பிறகு எங்கே எப்போது மோடி வெறுப்பு அரசியல் படி பேசியுள்ளார். ஆக மோடியயை ஆதரிப்பது வெறுப்பு அரசியலை ஆதரிப்பது இல்லை. இல்லவே இல்லை.ஆனால் ரௌடித்தனமாகப்பேசும் கம்யூனிஸ்டுகளுக்கு குறைவில்லை.

  \\அறம் சார்ந்த விழுமியங்களை நாம் மீட்டெடுக்கவேண்டிய தருணமிது.\\

  நாணயமாகப் பேசும் மோடி போன்றவர்களால் அற விழுமியங்களை மீட்டெடுக்க முடியும். போட்டுத்தள்ளுவதை பெருமையாகப்பேசும் தோழர்களாலோ அல்லது அவர்களது செயலை மறைக்க முனையும் தோழர்களாலோ அறம் என்பதைப் பற்றி கதைக்க மட்டும் முடியும்.

  \\நாம் நரேந்திர மோடியை நோக்கி அறம் சார்ந்த கேள்விகளை எழுப்பியே தீரவேண்டும்\\

  நல்லதே. நானும் இந்த விஷயத்தில் உங்களுடன். ஆனால் அறம் சார்ந்த கேள்விகள் மோடிக்கு மட்டுமில்லை. கம்யூனிஸ குண்டர் படைகளிடமும் கேட்கப்படவேண்டியதே.

  \\2002-ஐ நாமும் மறக்கக்கூடாது; மோடி அதனை மறந்துபோகவும் அனுமதிக்கக்கூடாது\\

  அப்பப்பா? SIT, உச்ச நீதிமன்றமெல்லாம் இதை மறந்து விடுவார்கள். இவர் நினைவில் கொடுப்பார். அப்படித்தானே. ஆனால் 1984ஐ மறந்து விட வேண்டும். அப்படித்தானே. அதுதானே அறம். 2002ல் இறந்த ஹிந்துக்களை மறப்பது அறம். 1984ல் இறந்த சீக்கியர்களை மறப்பது அறம். ஆனால் 2002ல் இறந்த முஸல்மான் களை மறக்கவே கூடாது என்பது கம்யூனிஸ அறம். சபாஷ்.

 13. சரவணன்
  #13

  நூற்றுக்கு நூறு உண்மை. இதே வாதங்கள் ராஜ பக்ஷேவுக்குக்கூடப் பொருந்தும்.

 14. surya
  #14

  Communism has cost more lives on this planet than communalism and terrorism combined.

 15. சான்றோன்
  #15

  //ஆட்சியைப் பிடிப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்கவில்லை. //

  அப்ப என்ன இதுக்காக ஒரு எம்.பி சீட்டுக்கு ஜெ தரிசனத்துக்காக சென்னைக்கும் , டெல்லிக்கும் நடையாக நடந்தீர்களாம்?

 16. சான்றோன்
  #16

  // கம்யூனிஸம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். //

  அது என்ன என்றுதான் உலகம் தெரிந்துகொண்டுவிட்டதே? மாவோ, ஸ்டாலின் , போல்பாட் , மெங்கிஸ்டு வகையறாக்கள் கோடிக்கணக்கில் மக்களை[ அதுவும் சொந்த நாட்டு மக்களை] கொன்று குவித்தது போதாதா? மறுபடியும் முதல்லேர்ந்தா?

  காம்ரேட் மருதனுக்கு திராணியிருந்தால் , அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் ஆதாரப்பூர்வமான கருத்துக்களை உரிய ஆதார‌ங்களுடன் மறுத்து கட்டுரை எழுதலாமே?

  இல்லைன்னா ஜென்னி… நீங்க ட்ரை பண்ணலாமே?….. நம்ம காம்ரேட் கண்டிப்பா வாய்ப்பு கொடுப்பார்…….

 17. சான்றோன்
  #17

  //இழவு நடந்த இடத்திலும் விளம்பரம் தேடும் கூட்டம் //

  அங்கேயும் பிணத்தை தூக்கிப்போட ஆர்.எஸ்.எஸ் காரன் தான் வரனும்……. நாம எல்லாம் ……. விட்டுக்கிட்டு கமெண்ட் போடறதோட சரி………

 18. சுத்தானந்தம்
  #18

  குஜராத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளின் பின்புலமாக,நேரடியாகவோ, மறைமுகமாகவோ மோடி இருந்து தன்னையும்,தன் இயக்கத்தையும் வெறுப்பு அரசியல் மூலம் வளர்த்திருக்கிறார் என்பது உண்மைதானே.இது ஏதோ
  மகாபாரதம் போலவோ,ராமாயணம் போலவோ கற்பனைக்கதையல்லவே.உண்மையைச்சொன்னால்,அவர்களுக்கு கம்யூனிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்தி விவாதத்தை முடிப்பது அநாகரீகமான முயற்சி.மோடி வளர்த்த மதவேற்றுமைகளால்,சாமானிய மக்கள் குஜராத்தில் மட்டும் கொல்லப்படவில்லை.இந்தியாவின் பல பகுதிகளிலும் குறிப்பாக மும்பையிலும் கலவரம் நடந்தது.இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம்,படுகொலை.இதை ஒரு வரலாற்று அறிஞர் ஆராய்ந்து சொல்ல வேண்டும் என்பதல்ல.ஆனால் ஹிட்லர் போல திட்டமிட்டு,மோடி வெறுப்பு அரசியல் வளர்த்திருக்கிறார்.இது இந்த தேசத்தை சீரழிக்கும் என்று எச்சரிக்க ஆசிரியர் மருதனுக்கு முழு உரிமையும்,சுதந்திரமும் உண்டு அதை மறுக்க எந்த ஊரானுக்கும் தகுதி இல்லை.

 19. velukkanna
  #19

  இனவெறியால் கொன்று புதைக்கப்பட்ட சடலங்களுக்கு மேல் எத்தகைய அழகான கலை நயம்மிக்க கட்டிடம் கட்டப்பட்டாலும் அதை ரசிக்கவே முடியாது

 20. Dr.P. Saravanan
  #20

  அன்பு நண்பரே வணக்கம்.
  தமிழ்பேப்பரில் ரொம்பநாளைக்குப் பிறகு அதிக கமென்ட்ஸ் பெற்ற பதிவு இது. அதற்காக வாழ்த்துகள்.
  முனைவர் ப. சரவணன்

 21. Jeyakumar
  #21

  ஸ்டாலின், மாவோ, லெனின் பின்னால் போகும் மருதனுக்கு அவர்கள் கொன்றது எத்தனை லட்சம் உயிர்கள் என்று தெரியுமா?

  கேரளாவில் உங்களின் தோழர்கள் எத்தனை பேர்களை தினமும் கொல்கிறார்கள் என்று தெரியுமா?

  அதில் ஒரு ஆள் மந்திரி அச்சுதானந்தன் முன்னாலேயே ஆம் நாங்கள் கொன்றோம் இனியும் கொல்வோம் என்கிறான் ( ஒரு ஆள வெட்டிக்கொன்னு, இன்னொரு ஆளை வெடிவச்சுக்கொன்னு,) இது குறித்தெல்லாம் நீங்கள் எங்காவது வாய் திறந்திருக்கிறீர்களா என்று தெரிந்துகொள்ள ஆசை..

 22. Rajan
  #22

  மே வங்கத்தில் மார்க்கிஸ்ட் மருதனின் தோழர்கள்தானே இத்தனை காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். அங்கு நடந்த அரசியல் கொலைகள எத்தனை என்பது மார்க்கிஸ்ட் தோழர் மருதனுக்குத் தெரியுமா? அட மே வங்காளம் என்றொரு மாநிலத்தையாவது மேப்பிலாவது அடையாளம் காணும் அறிவு உண்டா? 94 பேர்களைக் கொன்ற கம்னியுச அரசை முதலில் ஹிட்லர் ஆடசி என்று எழுதி விட்டு அதன் பிறகு மோடிகிட்டே வாருங்கள் மிஸ்டர் மருதன். ஆனால் அதெல்லாம் நேர்மை இருப்பவர்கள் செய்வது. மார்க்கிஸ்ஸ்டுகளுக்கும் நேர்மைக்கும் சம்பந்தம் கிடையாதே. அடிப்படை அறம் குறித்து எவர் வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் உலகத்திலேயே அதிக மக்களைக் கொன்றொழித்த கம்னியுஸ்டுகாரன் எவனும் பேச அருகதை கிடையாது.மொதல்ல இதைப் பற்றி பேசுவோம் மருதன் அதற்கு பிறகு மோடியைப் பற்றி பேசலாம். எப்படி வசதி? http://sanhati.com/articles/3905/
  Actually, the Left Front Government of West Bengal never ordered any enquiry for any of the “encounter” deaths. PCPA has published a list of martyrs of the Lalgarh movement and there were 94 names on that list, counted till August 2010. Out of these 94 persons, 45 persons were shown as murdered in fake encounters by joint forces or Bengal police. Not a single encounter has been investigated by the Government of West Bengal, nor any enquiry has been ordered. – See more at: http://sanhati.com/articles/3905/#sthash.vDBFY94i.dpuf

 23. சீனு
  #23

  //மோடியை உயர்த்திப் பிடிப்பதன்மூலம் இவர்கள் வெறுப்பு அரசியலையும்கூட சேர்த்தே உயர்த்திப்பிடிக்கிறார்களா?//

  இங்கே வெறுப்பு அரசியலாக இருக்கலாம். ஆனால், அங்கே வெறுப்பு மார்க்கமாக இருக்கும் போது என்ன செய்ய?

 24. சான்றோன்
  #24

  //.உண்மையைச்சொன்னால்,அவர்களுக்கு கம்யூனிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்தி விவாதத்தை முடிப்பது அநாகரீகமான முயற்சி. //

  இதில் என்ன அநாகரீகத்தைக்கண்டீர்கள்? அடுத்த‌வனை குறை சொல்லும் முன் தன்னுடைய யோக்கியதை என்ன ? என்பதை ஒருவன் எடை போடவேண்டாமா?

  கம்யூனிச பரிசோதனையில் சொந்த நாட்டு மக்களை மாவோ, ஸ்டாலின் , போல்பாட் , மெங்கிஸ்டு ஆகியோர் கொன்று குவித்ததெல்லாம் உண்மையில்லையா? பிறகு அத்தனை லட்சம் மக்களும் தற்கொலை செய்துகொண்டா செத்தார்கள்?

  வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமை அளித்தும் , கம்யூனிச குண்டர்களை வைத்துக்கொண்டும்தானே மார்க்சிஸ்டுகள் அத்த‌னை காலம் மேற்குவங்கத்தை ஆண்டார்கள்? நந்தி கிராமில் மார்க்ஸிய குண்டர்கள் போட்ட வெறியாட்டத்தை உலகமே பார்த்தது…. உங்களுக்கு வந்தால் ரத்தம்…..எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

  பெரும்பான்மை ஹிந்துக்களிடமிருந்து உங்களை காப்பாற்றுகிறோம் என்று பூச்சாண்டி காட்டியே அறுபது ஆண்டு காலம் நம் தேசத்தை சுரண்டிப்பிழைக்கும் காங்கிரசை விட்டுவிடுவீர்கள்……..த‌னது ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு மதக்கலவரத்துக்காக இன்னும் எத்தனை காலம் மோடியை குற்றம் கூறுவீர்கள்? சுதந்திர இந்தியாவின் முதல் மதக்கலவர‌ம் அதுதானா?

  இதே தளத்தில் திரு. பி.ஆர். மகாதேவன் அவர்கள் தனது கட்டுரையில் [ நான் மோடியை ஆதரிக்கிறேன் – கண்டிஷன்ஸ் அப்ளை http://www.tamilpaper.net/?p=7916 ] சுதந்திர இந்தியாவில் நடந்த மதக்கலவரங்களை பட்டியலிட்டுள்ளாரே? அதையெல்லாம் மோடியா முன் நின்று நடத்தினார்?

  சபர்மதி எக்ஸ்பிரஸில் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட [ அதில் பெரும்பாலானோர் பெண்களும் , குழந்தைகளும் ] அப்பாவி ஹிந்துக்களெல்லாம் உங்களுக்கு மனிதர்களாகவே தெரியவில்லையா?அந்த பயங்கரத்தின் எதிரொலியாகத்தானே கலவரம் வெடித்தது?

  மோடி நிர்வாகம் பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மூலம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியது. ராணுவம் வரவழைக்கப்பட்டது …துப்பாக்கிசூட்டில் 200க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்…..

  ஆனால் அதுவே அங்கு கடைசி வன்முறையாக ஆனது. அடுத்த 12 ஆண்டுகளில் ஒரு மதக்கலவரம் கூட நடக்காத முன்னோடி மாநிலமாக குஜராத்தை மாற்றி விட்டார் மோடி.

  ஆனால் நீங்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு 2012 கலவரத்தை வைத்து காலத்தை ஓட்டுவதாக உத்தேசம்?

 25. yarooruvan
  #25

  எனக்கு ஆதரவா பேசின எல்லா நல்ல உள்ளங்களும் எதிர்கால மோடி ஆட்சில நல்லா இருப்பீங்கப்பா.

  கம்யூனிஸ்ட்டின் கொலைவெறி ஆட்சி போலல்லாமல், இதுல நான் சொல்ல வர்றது முக்கியமா என்னன்னா, என்க்கு எதிரான கருத்து உள்ளவங்ககூட அதே மாதிரி நல்ல விதமா மோடி ஆட்சில வாழ்வீங்கன்றதுதான்.

  அப்புறம் இந்த க்ருஷ்ணகுமார் சார் தொடர்ந்து எழுதினா இந்த ஜென்னி, மருதன் என்ன யாரையுமே உண்டு இல்லைன்னு பண்ணிப்புடலாம்.

 26. க்ருஷ்ணகுமார்
  #26

  @ சுத்தானந்தம்,

  தேசத்தின் இறையாண்மை மற்றும் வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் இடது சாரி மற்றும் வலதுசாரி ளிடையே சம்வாதம் இருக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. தோழர் மருதன் பெருகி வரும் பத்திரிக்கைகள் பற்றி எழுதிய ஒரு வ்யாசத்தில் இந்த நிலைப்பாட்டை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். தோழர் மருதன் அவர்கள் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதாக நினைவு கூர்கிறேன்.

  \\\ஆசிரியர் மருதனுக்கு முழு உரிமையும்,சுதந்திரமும் உண்டு\\\\

  அதை யாரும் மறுக்கவில்லையே

  \\அதை மறுக்க எந்த ஊரானுக்கும் தகுதி இல்லை.\\

  ப்ரூஸ்லீ படத்தில் (Return of the Dragon) “நாய்களுக்கும் சீனர்களுக்கும் இங்கு அனுமதி இல்லை” என்று ஒரு சீனில் காட்டப்படும். அது போல தமிழ்ப்பேப்பரிலும் இடது சாரிகள் தவிர்த்து ஏனையவர் யாரும் இங்கு பகிரப்படும் இடதுசாரிக்க்ருத்துகளை விமர்சிக்கத் தகுதியற்றவர் என்று சொல்லிவிட்டால் மேற்கொண்டு சம்வாதத்திற்கு பேச்சே இல்லை.

  காங்க்ரஸ் மற்றும் இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருந்தது ஒரு காலம். இன்று தொலைக்காட்சிகளில் மதசார்பின்மை என்ற பெயரால் (உண்மையில் அல்ல) வலதுசாரிகள் பேச முனையும் போதெல்லாம் குறுக்கிடுவது அல்லது விளம்பர இடைவேளை என ஆகாத்யம் செய்வது போன்றதெல்லாம் சிறிது சிறிதாக மாறி வருவதாக ஒரு தோற்றம் உள்ளது.

 27. Jeyakumar
  #27

  Marudhan Gangadharan //நான் கேட்ட கேள்விகள் எதற்கும் இதுவரை யாரும் விளக்கங்கள் தரவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.// முதலில் நீங்கள் என்னவோ நல்ல கட்டுரை எழுதிவிட்டு அதற்கு பதில் சொல்லமுடியாமல் தினறுவதாக எண்ணாதீர்கள். இக்கட்டுரை ஒரு புரட்டு. பொய். உங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் வழக்கப்படியே ஒரு கற்பனை. இதில் ஆதாரங்களே இல்லை. பின்னர் என்ன பதில் சொல்ல? அதில் உங்களை நீங்களே ஒரு பெரிய கட்டுரையாளராக நினைத்துள்ளீர்கள். அப்படியெல்லாம் இல்லை. ஏன் எதிர்க்கேள்வி கேட்கிறோம் என்றால், உங்கள் செலக்டிவ் அம்னீஷியா மூலம் உங்களைத் தோலுரித்து, அதன் மூலம் இக்கட்டுரையின் மோசடியை நிரூபிக்கத்தான். இப்போது இத்தனை எழுதும் நீங்கள், மாவோயிஸ்ட்டுகளின் கொலைகளை பற்றி எழுதியிருக்கிறீர்களா? அப்புறம் என்ன மோடி பற்றி மட்டும் பேச்சு? மாவோயிஸ்ட் கொன்றால் இனிக்குதா? முதலில் சிறப்பாக ஆழமாக ஆதாரத்துடன் எழுதப் பழகுங்கள். பஞ்சம் படுகொலை கம்யூனிஸம் புத்தகத்தை மனப்பாடம் செய்து அதை போல் ஆதாரத்துடன் ஆழத்துடன் எழுதப் பாருங்கள். அப்புறம் கேக்கலாம் என் கேள்விக்கென்ன பதில் என்று..

 28. க்ருஷ்ணகுமார்
  #28

  @ சுத்தானந்தம்,

  \\\குஜராத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளின் பின்புலமாக,நேரடியாகவோ, மறைமுகமாகவோ மோடி இருந்து தன்னையும்,தன் இயக்கத்தையும் வெறுப்பு அரசியல் மூலம் வளர்த்திருக்கிறார் என்பது உண்மைதானே.\\\

  வலதுசாரிகளின் வளர்ச்சியைப் பொறுக்க மாட்டாது முன்வைக்கப்படும் வயிற்றெறிச்சலின் பாற்பட்ட பொருமலை உண்மை என்று சொல்லிவிட்டால் மட்டும் உண்மையாகிவிடாது.

  நரேந்த்ரபாய் மோடி அவர்களை முதலில் ஹிட்லரோடு ஒப்பிட்டது நேர்மையற்ற செயல். அதுவும் தோழர் மருதன் தன் மனதில் தான் அவ்வாறு செய்யப்போவதில்லை என சத்யப்ரமாணம் செய்து கொண்டு அதை எழுதியும் விட்டு அது நினைவில்லாது ஆனால் உள்மனதில் உள்ளதை உள்ள படி கக்கி விட்டாரே.

  அடால்ஃப் ஹிட்லரோடு ஒப்பிடப்பட வேண்டியவர்கள் அதே அளவுக்கு குரூரமாகப் படுகொலைகளை நிகழ்த்திய அடாவடி ஸ்டாலினும், லெனினும், மாசேதுங்கும்,போல்பாட்டும். இதையெல்லாம் இடதுசாரிகள் கபள சோற்றில் மறைக்க முயலும் முழுப்பூசணிக்காய் போல மறைக்க நினைத்தாலும் நினைவுறுத்தப்படுவார்கள்.

  வலதுசாரிகள் கைகள் ரத்தக்கறை படிந்தனவாம். அப்போ கம்யூனிஸ்டுகள் கைகள் என்ன தக்காளி சாஸ் கறை படிந்தனவா?

  ஹிட்லர் அடிப்படையில் யஹூதிகளைக் அழித்தொழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தான். அதற்கான செயல்பாட்டைத் துவங்கியதல்லாமல் தான் சாகும் வரை அதைத் தொடர்ந்தே வந்துள்ளான்.

  மோடி அவர்கள் முஸல்மான் களின் ப்ரதி அவ்வாறான மதவெறி சார்ந்த நிலைப்பாட்டைக் கொண்டவரில்லை. ஹிந்துத்வ இயக்கங்கள் அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டன என்பது அந்த இயக்கங்களை எதிர்ப்போர் சாற்றும் குற்றச் சாட்டே ஒழிய உண்மையான நிலைப்பாடு அதுவன்று. மேலும் மோடி அவர்களது மாகாணமான குஜராத்தில் 2002க்குப் பிறகு மதக் கலஹங்கள் ஏதும் நிகழவும் இல்லை. இது யாராலும் மறுக்க முடியாத உலகமறிந்த உண்மை.

 29. poovannan
  #29

  https://www.wrsc.org/attach_image/population-growth-over-last-500-years

  http://www.vaughns-1-pagers.com/history/world-population-growth.htm

  உலக மக்கள் தொகை வளர்ச்சியை கொஞ்சம் பார்த்தால் கம்யூனிஸ்டுகள் தான் அதிகம் பேரை கொன்றார்கள் என்ற மதவாதிகளின் பச்சை பொய் விளங்கும்

  ஏழை மக்கள் வாழும் உரிமை, அவர்கள் மக்கள் தொகை பலமடங்கு
  பெருகிய காலகட்டம் அவர்களை ஒரு சக்தியாக,எல்லாம் அவன் செயல் என்று ஏமாற்றி கொண்டிருந்த கூட்டத்தினை எதிர்க்கும் ஆற்றலை தந்த கம்முநிசம் வந்த காலகட்டம் தான்

  ஹிந்து மத கடவுள்களின் அவதாரங்கள்,தூதர்கள்,கிருத்துவ இஸ்லாமிய கடவுள் தூதர்கள் வாழ்ந்த /ஆண்ட காலத்தில் மக்களின் இறப்பு விகிதங்களை பார்த்தால் அவர்களின் விலங்கை போன்ற நிலை விளங்கும்

 30. சுத்தானந்தம்
  #30

  இந்த உலகத்தையே தன் காலடியில்,தனக்கு அடிமையாக வைத்திருக்க முனைந்த ஹிட்லரையும் அவனது நாசப்படையினரையும்,எந்த நாடும் எதிர்த்து நிற்க பயந்து சரணடைந்த நேரத்தில்,இளம் சோசியலிச நாடான சோவியத் ரஷ்யாவின் வீரத்தலைவன் ஸ்டாலின் தலைமையில்,லட்சக்கணக்கான மக்கள் ராணுவத்தினர் மட்டுமல்ல,சாதாரண உழைக்கும் மக்களும் களத்தில் இறங்கி,ஹிட்லரின்படைகளை முறியடித்து,இந்த உலகத்தையே காப்பாற்றியது என்பது வரலாறு.மகாத்மாவை கொன்றுவிட்டு,தன் கையில் முஸ்லீம் பெயரை பச்சைகுத்தி,காந்தியின் மரணத்திலும் மதவெறி ரத்தம் குடிக்க சதிதீட்டிய கும்பல்களுக்கு,நாட்டில் நடக்கும் தியாகங்களையும்,வீர மரணங்களையும் அடையாளம் காணத்தெறியாது அது அவர்களது சுபாவம்.தொடரட்டும் மருதனின் உண்மை கட்டுரைகள்.

 31. poovannan
  #31

  மனித வரலாற்றில் பென்சில்லின் கண்டுபிடிப்பு மகத்தான மாற்றங்களை உருவாக்கி பல கோடி மக்களுக்கு வாழ்வளித்தது.ஆனால் அந்த மருந்தின் ஒவ்வாமையால் இறந்தவரும் பல ஆயிரம்

  அதே தான் கம்முநிசமும்.அதில் தலைமைக்கு வந்த சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் கொடுமைகளை அனைவரின் மீதும் சுமத்துவது சரியான ஒன்றா.

  மனித வரலாற்றில் இரண்டின் பங்கும் பெருமளவு முடிந்து விட்டது.அதில் இருந்த குறைகளை நீக்கி அதில் இருந்து உருவான welfare state/socialism/multiparty democracy கம்முநிசதின் தேவையை மிகவும் குறைத்து விட்டது.

  மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் அதன் பங்கு ஒன்றுக்கும் உதவாத/பெரும்பான்மை மக்களை விலங்குகள் போல வைத்திருந்த
  மதங்களை விட பல மடங்கு அதிகம்

 32. poovannan
  #32

  கடவுள் மறுப்பை உலகளவில்
  வலுவுள்ள இயக்கமாக ஆக்கியதில் முக்கிய பங்கு கம்யூனிசத்துக்கு உண்டு.எல்லாம் அவன் செயல் என்று எல்லாவிதமான அநியாயங்களையும் எதிர்க்காமல் ஏற்று கொண்டிருந்தவனை மனிதனாக்கியது கம்யூனிசமே.

  பிறப்பால் பதவி என்று இருந்த நிலையை மாற்றி யாராக இருந்தாலும் உயர்பதவி அடையலாம் என்று உலகெங்கும் ஆக்கியது கம்யூனிசம் தான்.கடவுளை வைத்து ஏமாற்றுபவர்கள் கம்யூனிசம் என்றால் ஆத்திரம் அடைவது எதிர்பார்த்த ஒன்று தான்

 33. க்ருஷ்ணகுமார்
  #33

  \\\அங்கேயும் பிணத்தை தூக்கிப்போட ஆர்.எஸ்.எஸ் காரன் தான் வரனும்……. நாம எல்லாம் ……. விட்டுக்கிட்டு கமெண்ட் போடறதோட சரி………\\\\

  ம்………ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஹிந்து, முஸல்மான், க்றைஸ்தவர் என்று மத வித்யாசம் பாராது பேரிடர் நிகழும் போதெல்லாம் அனைத்து சமூஹத்து மக்களுக்கும் பணி செய்தாலும் கூட இணையங்களிலும் டிவி அரட்டைக்கச்சேரிகளிலும் ஆர்.எஸ்.எஸ் மதவாத இயக்கம் என்று கூசாது கல்லா கட்டுபவர்கள் கம்யூனிஸ்டுகள். செத்தது ஹிந்துவாக இருந்தாலும் முஸல்மானாக இருந்தாலும் க்றைஸ்தவனாக இருந்தாலும் பிணமெடுக்கவோ ரத்தம் கொடுக்கவோ ஆர்.எஸ்.எஸ் தான் வரும். கம்யூனிஸ்டுகள் வழக்கம் போல பொதுக்கூட்டம் போட்டு உண்டி வசூல் செய்து பேரிடர்களில் துன்புறுவோர்க்கு சஹாயம் ஏதும் செய்யாது சஹாயம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் சேவைகளில் நொட்டையும் சொல்லுவதற்கே லாயக்கு.

  சொந்தக் கட்சிக்காரர்க்ளையும் எதிர்ப்பவர்களையும் போட்டுத்தள்ளி அதை நெஞ்சு நிமிர்த்தி பொதுக்கூட்டத்தில் கூவும் ரௌடித்தனம் இன்றைய தினத்தில் ஹிந்துஸ்தானத்தில் கம்யூனிஸ்ட்களில் மட்டும் காணக்கிடைக்கும். இப்படி இருக்கையில் அறம் பற்றிப் பேசுவதை பசப்பலாகவே அவதானிக்க இயலும்.

 34. ஜோதிஜி
  #34

  அறம் சார்ந்த விழுமியங்களை நாம் மீட்டெடுக்கவேண்டிய தருணமிது

  இந்திய அரசியலிலா? இல்லை தமிழ்நாட்டு அரசியலிலா?

  என்ன விளையாடுகின்றீர்களா? வடிவேல் சொன்ன கிணற்றையே காணோம்ன்னு தேடிக்கிட்டு இருக்கோம். நீங்க உள்ளே விழுந்த வாளியை காணோம்ன்னு வந்து நிக்குறிங்க.

 35. க்ருஷ்ணகுமார்
  #35

  \\ஹிந்து மத கடவுள்களின் அவதாரங்கள்,ஆண்ட காலத்தில் மக்களின் இறப்பு விகிதங்களை பார்த்தால் அவர்களின் விலங்கை போன்ற நிலை விளங்கும்\\

  அப்படியா? இந்தப் பிறப்பு இறப்புக் கணக்குகளை ராமபிரான் அல்லது கண்ணபிரான் பூவண்ணன் சாரின் கனவில் வந்து சொன்னார்களா? அல்லது ஸ்டாலின் அல்லது மாவோ அவர் முன்வந்து சாமியாடினார்களா? அதெப்படி சார் இந்த மாதிரி உல்டா புல்டா கணக்குகளை வழக்கம் போல் உரல் போட்டு அடிப்பதன் மூலம் உண்மை என்று சாதிக்கிறீர்கள்.

  ஹிந்து அவதாரங்களுக்கு கோவில் கட்ட வேண்டுமென்றால் அதற்கு யுகக் கணக்கிற்குப் போய் எத்தனை லக்ஷக்கணக்கான வருஷம் முன்பு பிறந்தவர் ராமன்; எத்தனை ஆயிரம் வருஷம் முன்பு பிறந்தவர் கண்ணன் என்பீர்கள். ஆனால் இவர்களது காலத்திய பிறப்பு இறப்பு கணக்கு என்று யாராவது கதை விட்டால் அதை அப்படியே ஏற்பீர்கள். உரலால் அடிப்பீர்கள். சபாஷ் சார்.

 36. க்ருஷ்ணகுமார்
  #36

  \\இந்த உலகத்தையே தன் காலடியில்,தனக்கு அடிமையாக வைத்திருக்க முனைந்த ஹிட்லரையும்…..,இளம் சோசியலிச நாடான சோவியத் ரஷ்யாவின் வீரத்தலைவன் ஸ்டாலின்…………..இந்த உலகத்தையே காப்பாற்றியது என்பது வரலாறு.\\\

  அப்படியா?

  அப்படியென்றால்

  போல்பாட் எதற்காகக் கம்போடியர்களைப் போட்டுத்தள்ளினாராம்? உலகத்தைக் காப்பாற்றவா?

  \\\அதில் ஒரு ஆள் மந்திரி அச்சுதானந்தன் முன்னாலேயே ஆம் நாங்கள் கொன்றோம் இனியும் கொல்வோம் என்கிறான் ( ஒரு ஆள வெட்டிக்கொன்னு, இன்னொரு ஆளை வெடிவச்சுக்கொன்னு,) \\\

  இந்த கண்றாவியைத்தான் அன்பர் சுத்தானந்தம்

  \\நாட்டில் நடக்கும் தியாகங்களையும்,வீர மரணங்களையும் அடையாளம் காணத்தெறியாது\\

  என்று சொல்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா.

 37. poovannan
  #37

  கிருஷ்ணகுமார் சார்
  இந்து மதத்தை பின்பற்றிய மன்னர்கள் ஆண்ட காலம் என்று எந்த காலத்தை வேண்டுமானாலும் எடுத்து ஒப்பிட்டு பாருங்களேன் சார்.
  ரஷ்யாவில் பஞ்சம் வந்தது,சீனாவில் பஞ்சம் வந்தது .பல லட்சம் மக்கள் மாண்டனர் பஞ்சத்தால்.அதற்க்கு காரணம் கம்யூனிசம் என்றால் அதற்க்கு பல நூற்றாண்டுகளாக மக்கள் தொகை ஒரே மாதிரி இருந்ததன் காரணம் என்ன.அப்போது ஆட்சி செய்தவர்கள் இதை விட மோசம் என்று எடுத்து கொள்வது தவறா
  சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சியை ,கிழக்கு ஐரோப்பா நாடுகளின் மக்களின் சராசரி ஆயுள்,கல்வி,பெண் வேலைவாய்ப்பு எல்லாவற்றையும் கொஞ்சம் பாருங்களேன்.
  குறைகள் இல்லாத ஆட்சிமுறை எதுவும் இன்றுவரை இல்லை.இருந்ததில் பெரும்பான்மை மக்களுக்கு அதிக அளவில் பலனை தந்தது கம்யூனிச சிந்தனை தான்.
  கடவுள் இல்லை என்ற எண்ணம் கொண்டோர் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பின்னர் தான் பல லட்சம் மக்களை பலி கொண்ட நோய்களுக்கு மருத்துவம் வந்தது.

 38. சான்றோன்
  #38

  //கடவுளை வைத்து ஏமாற்றுபவர்கள் கம்யூனிசம் என்றால் ஆத்திரம் அடைவது எதிர்பார்த்த ஒன்று தான்//

  அந்தக்கதையெல்லாம் இங்கு வேண்டாம் அப்பனே……….

  இப்படி கூவி அதிகாரத்தை கைப்பற்றிய லெனின் , ஸ்டாலின் , மாவோ , போல்பாட் வகையறாக்கள் தங்களை தெய்வமாகவே நினைத்து அதிகாரம் செலுத்திய கதையெல்லாம் எற்கனவே உலகம் பார்த்தாகிவிட்டது…..

  கடவுளுக்கு மாலை போடுவதை காட்டுமிராண்டித்தனம் என்று கூறிவிட்டு , சமாதிக்கும் , உருவச்சிலைக்கும் மாலை போட்டு வணங்கும் கும்பலிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்……..

 39. சான்றோன்
  #39

  //பிறப்பால் பதவி என்று இருந்த நிலையை மாற்றி //

  எத்தனை நாளைக்குத்தான் சார் இது மாதிரி பச்சைப்பொய்களை வைத்து ஊரை ஏமாற்றுவதாக உத்தேசம் ?

  ஆடு மேய்க்கும் இனத்தை சேர்ந்த ஹரிஹர புக்கர்கள் தான் விஜய நகர சாம்ராஜ்யத்தையே நிர்ணயித்தார்கள்…… நாயக்க மன்னர்களின் ஆதிக்கத்தை அடுத்து அப்போது அரசாண்ட பரம்பரையினர் தாழ்த்தப்படவர்களாக ஆக்கப்பட்டனர்..,.

 40. சான்றோன்
  #40

  என்ன கொடுமை இது சரவணா?

  சீனா இந்தியாவை ஆக்கிரமித்த போது சீனாவை ஆதரித்த ” தேசபக்தர்கள் ” ,இன்று நாட்டின் நிலை பற்றி வருத்தப்படும் self appointed authorityகளாக மாறிவிட்டார்கள்…… இதுதான் கலிகாலம் என்பதா?

 41. சான்றோன்
  #41

  //கம்யூனிஸ்டுகள் தான் அதிகம் பேரை கொன்றார்கள் என்ற மதவாதிகளின் பச்சை பொய் விளங்கும் //

  பூவண்ணன் சார்……

  இதெல்லாம் வழக்கமாக ” இடதுசாரி அறிஞர்கள் ” அள்ளி விடும் போலி புள்ளி விபரங்கள் அல்ல……….

  அந்தந்த நாட்டைச்சேர்ந்த அரசுகளே வெளியிட்ட புள்ளி விபரங்கள்……..அசைக்க முடியாத ஆதார‌ங்கள்…..

 42. பொன்.முத்துக்குமார்
  #42

  “ஆட்சியைப் பிடிப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்கவில்லை”

  Is this what is called “More loyal to the king/queen/party than the king/queen/party him/her/it-self” ?? :))

  ஜென்னி,

  தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஜெயலலிதா என்றொரு முதல்வர் இருக்கிறார். அவரை சந்திக்க வேண்டி டெல்லியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியிலி இருந்து பெருந்தலைவர் ஒருவர் வந்தார். அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. ரொம்ப சமீபத்தில்தான்.

  ஆனால் பாருங்கள், தே.மு.தி.க என்ற “முந்தா நாள் பெய்த மழையில் நேற்று முளைத்த” கட்சியில் முதன் முறையாக எம்.எல்.ஏ ஆகி, “அதிருப்தி எம்.எல்.ஏ” என்ற சிறப்புக்கு ஆளாகி இருந்த – பொதுமக்களுக்கு யாரென்றே தெரியாத ஒருவர் கேட்டவுடன் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்து உடனடியாக அம்மாவை சந்தித்து “தொகுதி பிரச்சினைகள்” பற்றி கலந்துரையாடியும் விட முடிந்திருக்கிறது.

  ஆனாலும் “தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்” கதையாய் கம்யூனிஸ்ட் கட்சி பெருந்தலைவரும் காத்திருந்தார், காத்திருந்தார் மூன்று நாட்களாய் தேவுடு காத்திருந்தார். ஆனாலும் அப்பாயிண்ட்மெண்ட் மட்டும் கிடைத்தபாடில்லை.

  எல்லாம் எதற்காக ?

  ஓஓஓஓஓ பொதுமக்கள் சேவைக்கல்லவா ?

  மன்னிக்கவேண்டும்.

 43. சுத்தானந்தம்
  #43

  இந்த விமர்சகர்கள் திட்டமிட்டு களம் இறங்கி இருக்கிறார்கள்.மருதன் எழுதியது ஹிட்லரைப்பற்றியும்,அந்த இனவெறியனின் வழியில் வெறுப்பு அரசியல் நடத்தி,குஜராத்தில் ஹிட்லரின் வாரிசாகியுள்ள மோடி,இந்திய நாட்டையும் சீரழிக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர மதவெறி ஸ்தாபனங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளதை எழுதினால்,தேவை இல்லாமல் எதற்கு கம்யூனிஸ்ட்களை இழுக்கிறார்கள்?இந்திய நாடு சந்தித்ததுபோல்,சுதந்திரத்திற்கு முன்பும்,பின்பும் மதவெறி படுகொலைகளை எந்த நாடும் சந்தித்ததில்லை.இனி மதவெறி அரசியலில் ஈடுபடமாட்டோம் என மன்னிப்பு கோரியதால் தடையிலிருந்து விடுபட்டு,பி.ஜெ.பி.என்ற பெயரில் பினாமி அரசியல் நடத்தும் கோழைகள்,ஜென்னியையும்,மருதனையும் உண்டு இல்லை என்று பார்க்கிறார்களாம்.கருத்துமோதல்களையும்,விமர்சனங்களையும் வரவேற்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.நாக்ரீகமானமுரண்பாட்டியல் விவாதத்தால்தான் உண்மை வெளிவரும்.ஆனால் ஒரே திசையை பார்த்துஓடும் கடிவாளம் கட்டப்பட்டவைகளுக்கு அடுத்த பார்வையும் தெரியாது,பாதையும் தெரியாது.இவை அனைத்தையும் எடிட் செய்யாமல் வெளியிடும் மருதன் மற்றும் பத்ரி ஆகியோர்கள்தான் உண்மையான ஜனநாயகவாதிகள்.கருத்து சுதந்திரத்திற்கு உயர்ந்தபட்ச மதிப்பளிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

 44. poovannan
  #44

  சான்றோன் ஐயா

  கம்முநிசதால் தான் பஞ்சம் வந்தது,அதனால் தான் பல லட்சம் பேர் இறந்தார்கள் என்றார்கள் அதை போல அதற்க்கு முன்பு இருந்த நூற்றாண்டுகளில் மக்கள் தொகை எந்த விகிதத்தில் பெருகியது என்று பாருங்கள் என்றால் கோவம் வருவது ஞாயமா
  மக்கள் தொகை அபரிதமாக கடந்த நூற்றாண்டில் உலகெங்கும் வளர முக்கிய காரணம் கம்முநிசமும் அதன் குட்டிகளான welfare state தான். அரசு மருத்துவமனைகள்,இலவச தடுப்பூசிகள்,மகப்பேறு திட்டங்கள்,பெண் கல்வி எல்லாவற்றிலும் கம்முநிசதிர்க்கு முக்கிய பங்கு உண்டு.
  ஆப்கானில் நஜிபுல்லாஹ் ஆட்சியில் இருந்த போது பெண்கள் ராணுவத்தில் கூட பணி ஆற்றினார்கள்.அதனால் தான் மதவாதிகள் ஆட்சியை பிடித்த போது அவர் உடலை நடு சாலையில் தொங்க விட்டு நான்கு புறமும் கட்டி இழுத்தார்கள்.மத வெறி அது தான்.நம்ம காப் பஞ்சாயத்துகளும் அதன் இயக்க வடிவமான சங்க பரிவாரங்களும் தனி பெரும் பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தால் இங்கும் அது தான் நடக்கும்.பெண்களின் இடம் எது எனபது எல்லா மதத்திலும் ஒன்று தான். அதை உடைத்தது கம்முநிசம் தான்

 45. Dr.P. Saravanan
  #45

  அன்பு நண்பரே வணக்கம்.
  இந்தக் கட்டுரை 50 கமெண்ட்ஸ் பெறாமல் நிறைவடையாது. கமெண்ட்ஸ் எழுதும் ஒவ்வொருவரும் ஒரு கட்டுரையல்லவா எழுதுகிறார்கள்! அதற்காக வாழ்த்துகள்.
  முனைவர் ப. சரவணன்

 46. Velmurugan
  #46

  என்னவோ குஜராத்ல மட்டும்தான் encounter நடந்த மாதிரியும் மத்த எங்கேயும் encounterரே நடக்காத மாதிரியும் செந்தோழர் எழுதுவது ரொம்ப காமெடியா இருக்கு. சுதந்திர இந்தியாவுல அதிகமான encounter கொலைகளை செய்தது நம்ம மேற்கு வங்க கம்யூனிஸ்ட் governmentதான். கூச்சமே இல்லாம பொய் பொய்யா எப்படித்தான் எழுத வருதோ, ஒருவேளை கம்யூனிஸ்ட்டுகோளோட ஆரம்ப பாடமே எப்படி பொய் சொல்லுவது/உண்மையை திரிப்பது என்பதுதான் போல. முதலில் சிபிஐ chargesheetதில் israt jahan ஒரு தீவிரவாதி இல்லை என்று சொல்லவே இல்லை, encounter போலியா இல்லையா என்பதுதான் இந்த caseன் மையம். அதையே இந்த மருதன் எப்படி திரிச்சி எழுதிருக்கிறார் பாருங்கள்.

 47. Velmurugan
  #47

  ‘encounter killingல மாநில முதல்வர்களை arrest செய்ய வேண்டும் என்றால், இந்தியாவின் 90 சதவிகித முதல்வர்கள் ஜெயிலில் தான் இருக்க வேண்டும். முதலில் நீங்க RSS போன்ற அமைப்பின் மீது கக்கும் வெறுப்பை நிறுத்துங்கள். இஸ்லாமிய மத அமைப்புகளுடன் தேர்தல் கூட்டணி வைக்கும் கம்யூனிஸ்ட்டுகள் எந்த முகத்தை வைத்துகொண்டு பிஜேபியை மதவாத கட்சி என்று சொல்லுகிறார்களோ தெரியவில்லை. ஒருவேளை கம்முனிச சிந்தாந்தத்தில் அப்படிதான் எழுதி இருக்கிறதோ என்னவோ.

 48. Velmurugan
  #48

  @velukkanna அப்படியா? அப்போ TAJ MAHALல ரசிக்க மாட்டிங்கள….

 49. சான்றோன்
  #49

  //இனி மதவெறி அரசியலில் ஈடுபடமாட்டோம் என மன்னிப்பு கோரியதால் தடையிலிருந்து விடுபட்டு,//

  பதினைந்து நிமிடம் காவல்துறை ஒதுங்கட்டும்…….ஒட்டுமொத்த ஹிந்துக்களையும் கொன்றொழித்து விடுகிறோம் என்று பொதுமேடையில் கொக்கரித்தான் அக்பருதீன் ஒவைசி…….அவனைப்பற்றியெல்லாம் மூச்சுக்கூட விடமாட்டிங்க……
  ஆர் .எஸ்.எஸ் ஸப் பத்தி பேசருதுன்னா மூச்சுவிடாம மூனு மணி நேரம் பேசுவீங்க…….

 50. சான்றோன்
  #50

  //இந்திய நாடு சந்தித்ததுபோல்,சுதந்திரத்திற்கு முன்பும்,பின்பும் மதவெறி படுகொலைகளை எந்த நாடும் சந்தித்ததில்லை.//

  கம்யூனிஸ்ட்களுக்கு பொது[ வாகவே] அறிவு கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும்……வரலாற்று அறிவும் சுத்தம் போலும்…..

  தோழரே…..இந்த சிலுவைப்போர் , சிலுவைப்போர்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? அது எத்தனை நூற்றாண்டுகள் நடந்ததுன்னு தெரியுமா?

  அப்புறம் …ஹிட்லரை ஸ்டாலின் தலைமையிலான ரஷ்யா தனியாக வீழ்த்தியதா? சொல்லவேயில்ல…….

  ஜப்பான் தேவையே இல்லாமல் பியர்ல் ஹார்பரை தக்கியதால் அமெரிக்கா நேச நாடுகளுக்கு ஆதரவாக போரில் குதித்தது……அதையடுத்தே அச்சு நாடுகளின் வீழ்ச்சி தொடங்கியது…….

  ஹிட்லராவது வந்தேறிகளான யூதர்களைத்தான் கொன்றான்…..ஆனால் ஸ்டாலின் சொந்த நாட்டுமக்களையே கொன்று குவித்தான்………

 51. க்ருஷ்ணகுமார்
  #51

  \\மருதன் எழுதியது ஹிட்லரைப்பற்றியும்,அந்த இனவெறியனின் வழியில் வெறுப்பு அரசியல் நடத்தி,குஜராத்தில் ஹிட்லரின் வாரிசாகியுள்ள மோடி,இந்திய நாட்டையும் சீரழிக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர மதவெறி ஸ்தாபனங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளதை எழுதினால்,தேவை இல்லாமல் எதற்கு கம்யூனிஸ்ட்களை இழுக்கிறார்கள்?\\\

  ஹிட்லரின் வழியில் மோடி அவர்கள் வெறுப்பு அரசியல் நடத்தினார் என்பது வலதுசாரிகளின் வளர்ச்சி பொறுக்காதவர் வைக்கும் குற்றச்சாட்டு. வஸ்தான்வி, சித்திக்கி போன்ற இஸ்லாமியப் பெருந்தகைகளும் போற்றும் வண்ணம் ஆட்சி மாட்சிமை பொருந்திய மோடியின் செயல்பாடுகள் இந்தக் குற்றச்சாட்டுகள் பொறாமை மிகுந்த மிகைப்படுத்தல்கள் என்பதைச் சுட்டுகின்றன.

  இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுவது மறுக்கப்பட வேண்டியது தானே. ஆகவே தோழர் அவர்கள் எழுதியது கடிவாளமிட்ட இடதுசாரிப்பார்வையினால் எழுதப்பட்ட பக்ஷபாத வ்யாசமே என்று காட்டினால் மட்டிலும் போதாது.

  அது போலவே இருக்கும் ஒன்றை இல்லாதது போல காட்ட முயற்சிப்பதையும் தோலுரிப்பதும் அவசியமே. ஹிட்லருடன் ஒப்பிடப்பட வேண்டியவர் மோடி அல்ல அவனுடைய கொலைவெற்க்கு கொஞ்சமும் குறைவில்லாத செயல்பாடுடையவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதால் கம்யூனிஸ்டுகளை கண்டிப்பாக இழுக்க வேண்டியுள்ளது.

  சீனத்தில் க்ஸின் க்ஜியாங்க் ப்ரதேசத்தில் பயங்கரவாத முஸல்மான் களை கம்யூனிஸ ராக்ஷஸ சர்க்கார் பதம் பார்ப்பது தேச நலன் கருதி என்று தானே கம்யூனிஸ கடிவாள சித்தாந்தம் ந்யாயப்படுத்த முனையும். அவர்கள் என்ன மனித உரிமை மீறல் நடத்தினாலும் அதெல்லாம் சரி என்று தானே டிண்டோரா போட முனையும். திப்பத்தில் திறந்த வீட்டில் நாய் மாதிரி நுழைந்து திப்பத்தை கபளீகரம் செய்து திப்பத்திய மொழி கலாசாரம் இனம் போன்றவற்றை இனவெறி நிலவெறி கொண்டு கம்யூனிஸ அரக்கப்பதர்கள் ஐந்தாறு தசாப்தங்களாக நிகழ்த்தி வரும் ரத்த வெறியாட்டம் என்ன ஹிட்லரின் கொலைவெறிக்கு குறைவானதா?

  தேசம் ஸ்வதந்த்ரமடைந்தது துவங்கி கொலைவெறி அரசியல், வெறுப்பு அரசியல் போன்றவற்றை நிகழ்த்தியதில் கம்யூனிஸ்டுகளுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை மறைக்க இயலாதே. கொலைவெறி அரசியலை பொதுக்கூட்டங்களில் லஜ்ஜை என்பது லவலேசமும் இல்லாது ந்யாயப்படுத்தும் மாண்புக்கு உரித்தானவர்கள் கம்யூனிஸ்டுகள் ஆயிற்றே. தேசத்தினை ஆக்ரமிப்பு செய்ய முனைந்த சீனா போன்ற அசுர சக்திகளுக்கு ஜால்ரா போடும் அருவருக்கத்தக்க தேச த்ரோஹ கம்யூனிஸ செயல்பாடுகளை கம்யூனிஸ்டுகள் மறைக்கக்கூட மாட்டார்கள். எப்படித் தங்கள் கொலைவெறியை பொதுக்கூட்டத்தில் முரசறைந்து தெரிவிப்பார்களோ அது போலவே தேச த்ரோஹ செயல்பாடுகளையும் முரசறிந்து தெரிவிப்பவர்கள் ஆயிற்றே.

 52. க்ருஷ்ணகுமார்
  #52

  \\நாக்ரீகமானமுரண்பாட்டியல் விவாதத்தால்தான் உண்மை வெளிவரும்.ஆனால் ஒரே திசையை பார்த்துஓடும் கடிவாளம் கட்டப்பட்டவைகளுக்கு அடுத்த பார்வையும் தெரியாது,பாதையும் தெரியாது.இவை அனைத்தையும் எடிட் செய்யாமல் வெளியிடும் மருதன் மற்றும் பத்ரி ஆகியோர்கள்தான் உண்மையான ஜனநாயகவாதிகள்.கருத்து சுதந்திரத்திற்கு உயர்ந்தபட்ச மதிப்பளிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.\\\

  தமிழ்ப்பேப்பர் மட்டிலும் இல்லை. தமிழ் ஹிந்து, திண்ணை போன்ற தளங்களும் நாகரீகமான காட்டமான விமர்சனங்களை ஜனநாயக ரீதியாக ப்ரசுரம் செய்கின்றனர் என்பதையும் இங்கு முன்வைக்கிறேன். தோழர் மருதன் அவர்களது வினயம் நான் ஆரம்பத்திலேயே ச்லாகித்த ஒன்று. மருதன் மற்றும் பத்ரி மட்டிலும் ஜனநாயகவாதிகள் என்ற படிக்கு தொனித்ததால் இதைப் பதிவிட நேர்கிறது.

  ஹிந்துத்வம் டுடே என்ற தளம் எப்போது நான் க்ளிக் செய்ய முனைந்தாலும் crash ஆகிறது. ஆதலால் நான் அறியாத படியால் அது பற்றிக் கருத்துக் கூறவில்லை. ஆனால் அத்தளமும் ஜனநாயக ரீதியிலேயே இயங்கும் என ஊகிக்கிறேன்.

  \\\\கருத்துமோதல்களையும்,விமர்சனங்களையும் வரவேற்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.நாக்ரீகமானமுரண்பாட்டியல் விவாதத்தால்தான் உண்மை வெளிவரும்.\\\

  எது நாகரீகமான முரண்பாட்டியல் விவாதம்

  \\அதை மறுக்க எந்த ஊரானுக்கும் தகுதி இல்லை.\\

  என்று பேசுவதா

  \\இனி மதவெறி அரசியலில் ஈடுபடமாட்டோம் என மன்னிப்பு கோரியதால் தடையிலிருந்து விடுபட்டு,\\

  citation needed

  \\கருத்துமோதல்களையும்,விமர்சனங்களையும் வரவேற்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.\\

  ஹிந்துத்வர்களும்.

 53. க்ருஷ்ணகுமார்
  #53

  \\\இவை அனைத்தையும் எடிட் செய்யாமல் வெளியிடும் மருதன் மற்றும் பத்ரி \\\

  \\\சீக்கியக் கலவரங்களைப் பற்றியெல்லாம் மூச்சு விட்டு விடாதீர்கள். ஏனென்றால் அவைகள் எல்லாம் திரேதா யுகத்தில் தான் நிகழ்ந்தனவே! (Edited)\\

  ஸ்ரீமான் சுத்தானந்தம் தங்களது கூற்றான எடிட் செய்யாமல் என்பதில் பிழையுள்ளது. # 4 உத்தரம் தள நிர்வாகிகளால் எடிட் செய்யப்பட்டுள்ளது என்று தளம் கூறுகிறது.

  ஹிந்துத்வர்கள் சுயவிமர்சனம் செய்து பிறரின் விமர்சனத்தில் உள்ள ந்யாயங்களை உள்வாங்கி முன் நகர்பவர்கள். ஆகவே முரண்பாடுகளுக்கிடையிலும் வெகுவாக வளர்கிறார்கள். தேசத்திற்கு வளமும் சேர்க்கிறார்கள்.

  எப்படி ஆப்ரஹாமிய மதஸ்தர்கள் ஔரங்கசீப் காலத்திலும் ஏசுபிரான் காலத்திலும் உறைந்துள்ளார்களோ……. அதுபோல் மார்க்ஸ், லெனின், மாவோ காலத்தில் உறைந்துள்ளவர்கள் துராசாரவாத கம்யூனிஸ மதவாதிகள் என்பது என் புரிதல்……….

  சுயபரிசோதனை அற்று கடிவாளமிட்டுக்கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்தல் என்பதை மேற்கண்ட முரண்பாட்டு கருத்துக்கள் தெரிவிக்கின்றன என்றால் மிகையாகுமா?

 54. க்ருஷ்ணகுமார்
  #54

  \இந்தக் கட்டுரை 50 கமெண்ட்ஸ் பெறாமல் நிறைவடையாது. கமெண்ட்ஸ் எழுதும் ஒவ்வொருவரும் ஒரு கட்டுரையல்லவா எழுதுகிறார்கள்! அதற்காக வாழ்த்துகள்.\\

  அன்பர் சரவணன்,

  ஸ்ரீமான் கள் பத்ரி அல்லது மருதன் அவர்கள் போன்று ஆழ்ந்த வாசிப்போ அல்லது மருதன் அவர்கள் போன்று வினயமோ எனக்கு இல்லை. தோழர் அவர்களது எழுத்து நடை எளிமையாக உள்ளது என நான் குறிப்பிட்டிருந்தேன். நன் கு தமிழறிந்த ஒரு பெருந்தகை தோழர் அவர்களது தமிழ் நடையையும் ச்லாகித்திருந்தார்.

  விக்ஞானி ஸ்ரீமன் ஜெயபாரதன் அவர்கள் எழுதிய மஹாத்மாகாந்தியின் மரணம் என்ற வ்யாசத்திற்கு எதிர்வினையாக திண்ணை தளத்தில் நான் சமர்ப்பித்திருந்த இரண்டு பாகத்திலான வ்யாசத்திற்கு 500 கமெண்ட்ஸ் வந்திருந்தன.

  எனக்கு மேதா விலாஸம் என்பது இல்லை என்பதாலும் தோழர் அவர்களது வினயத்துடன் என் வினயம் ஒப்பிட முடியாதது என்பதாலும் என் மொழிநடை வெகுவாக கலப்பு மொழிநடை என்பதாலும் 500 கமெண்ட்ஸ் என்பது என் வ்யாசத்திற்கு என்றில்லாது எதிர்கொண்ட வ்யாசத்தில் உள்ள அந்யாயக் கருத்துக்களாலும் அதை நான் நேர்மையுடன் எதிர்கொள்ள முயற்சி செய்ததாலும் என நினைக்கிறேன்.

  நான் சொல்ல வரும் விஷயம் கமெண்ட்ஸ் சங்க்யை இந்த வ்யாசத்தைப் பொறுத்தவரை தோழரின் மேதாவிலாஸத்தைச் சார்ந்து அல்ல மாறாக அவர் பக்ஷபாதமாக முன்வைக்கும் கருத்துக்களொடு முரண்படும் வாசகர்களின் நேர்மையான உத்தரங்கள் சார்ந்தது. ஹிந்துத்வர்களைக் கரிபூச முனைந்ததற்கு எதிர்வினையாக அது மறுக்கப்பட்டதோடு அல்லாமல் கம்யூனிஸத்தின் அவலக்ஷண முகமும் தோலுரிக்கப்படுகிறது.

  கமெண்ட்ஸ் சங்க்யையின் சரியான அவதானிப்பு இது தான் என்பது என் புரிதல்.

 55. சான்றோன்
  #55

  ஹிட்லரின் ஆதிக்கத்தை ஒழித்த ஸ்டாலினின் செம்படையின் சாதனையை குறிப்பிட்ட தோழர் சுத்தானந்தன், தன்னடக்கம் காரணமாக மேற்படி செம்படையினரின் மிக முக்கியமான சாதனையை குறிப்பிட மறந்துவிட்டார்…அதை குறிப்பிடுவது நம் கடமை……

  உலகின் மிகப்பெரிய கற்பழிப்பு என அழைக்கப்படுவது 1944 ம் ஆண்டு, அக்டோபர் 21 அன்று பெர்லினை ஆக்கிரமித்த ரஷ்யப்படையினர் நிகழ்த்திய கொடூரமாகும்……குறைந்தது பத்துலட்சம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்……..பல பெண்கள் 60 லிருந்து 70 முறை கற்பழிக்கப்பட்டனர்….. அதில் பத்தாயிரம் பெண்கள் இற‌ந்தனர்…மூன்று லட்ச‌த்துக் மேற்பட்ட பெண்கள் கர்ப்பமாகினர்…….அன்று ஆரம்பித்த பாலியல் வல்லுறவுகள் 1947 – 48 குளிர்காலம் வரை நீடித்தது…….. முழு விபரம் இந்த இணைப்பில் உள்ளது…….http://en.wikipedia.org/wiki/Rape_during_the_occupation_of_Germany

  செம்படையினரின் இந்த சாதனைக்கு முன் வேறு யாரும் கிட்டே நிற்க முடியுமா?

 56. சுத்தானந்தம்
  #56

  திருவாளர்கள்,சான்றோன்,க்ருஷ்ணகுமார் ஆகியோரின் விரிவான தற்காப்பு விவாதங்களை எழுத வைத்து,கருத்து முதல்வாதிகளின் முரண்பாடு எந்த அளவு போகும் என்பதை ஆசிரியர் எதிர் பார்த்ததற்குமேல் பெற்றுவிட்டார்.தற்காப்புக்காக தலைப்பிலிருந்து மாறி விட்டனர்.எனினும் தனித்தனி தலைப்புகளில்,இந்த சுரண்டலிலிருந்து விடுபட்ட சோவியத்தின் தனித்தன்மை,அந்த சோவியத்தை கட்டியமைத்த உழைக்கும் வர்க்கம்,உலகத்திற்கே முன்மாதிரியாக அமைந்த அந்த சோவியத்தின் தனித்தன்மை மிகுந்த சமூக பாதுகாப்புத்திட்டங்கள்.உலக வரலாற்றில் ராணுவப்படைகள் அடுத்த நாட்டை அடிமைப்படுத்தியபின் நடத்திய வெறித்தனமான நடவடிக்கைகள்,சொந்த நாட்டிலேயே மதவெறியர்கள் நடத்திய பாலின வேட்டைகள்,கற்பினிப்பெண்களையும்,கதறக்கதற நரவேட்டையாடி,வயிற்றைக்கிழித்து குழந்தையை தூக்கி எரிந்து கொன்ற நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்தும் குறித்து விவாதிக்களாம்.

 57. க்ருஷ்ணகுமார்
  #57

  தோழர் சுத்தானந்தம்,

  எதிர்க்கருத்தாளரின் மீது சகதியை வீசியும் தன் மீது சந்தனக்குழம்பு வீசப்படுதல் தான் ஜனநாயகம் என்று சாதிக்க முனைதல் மதிஹீனமானது. *சீசே கி மெஹல் மே ரெஹ்னே வாலே பத்தர் நஹீன் பேங்க்தே* – என்று ஒரு உர்தூ பழமொழி உண்டு. கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் கல்லெறியக் கூடாது.

  குஸ்தாகி மாஃப் – double standard – என்று ஒரு கையில் வெண்ணெய் ஒரு கையில் சுண்ணாம்பு என்று இரட்டை நிலைப்பாடுகளை எடுப்பவர்களை உர்தூவில் சுட்டுவார்கள். தோழர் மருதன் அவர்கள் எழுதி வரும் வ்யாசங்களில் பல கருத்துக்கள் தொடர்ந்து பக்ஷபாதமாகவே எழுதப்பட்டு வருகிறது என்பதனைக் குறிப்பிடுகிறேன்.

  அறம் சார்ந்த விழுமியங்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் விழுமியங்களை இடறித்தள்ளுபவர்களில் கம்யூனிஸ்டுகளாக இருந்தால் அவர்கள் பற்றி மௌனம் சாதிப்பது அவர்களது அக்ரமங்களை கடிவாளம் போட்டுக்கொண்டு ஞாயப்படுத்த முனைவது போன்றவை நிந்தனீயமானது.

  \\\சொந்த நாட்டிலேயே மதவெறியர்கள் நடத்திய பாலின வேட்டைகள்,கற்பினிப்பெண்களையும்,கதறக்கதற நரவேட்டையாடி,வயிற்றைக்கிழித்து குழந்தையை தூக்கி எரிந்து கொன்ற நிகழ்ச்சிகள்\\\

  ஹிந்துஸ்தானத்தில் முதன்முறையாக குஜராத்தில் மட்டிலும் தான் இது போன்றக் கொடுமைகளை நிகழ்த்தியவர்கள் வெகுவாகத் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். தண்டனை பெற்றுத்தந்தது உச்ச ந்யாயாலயம் மட்டிலும் அன்று. குஜராத் கோர்ட்டுகளும் தான் என்பதனை மறவாதீர். இவையனைத்தும் நிகழ்ந்தது மோடி அவர்கள் ஆட்சி செய்து வருகையில் தான்.

  1984 கலவரத்தில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக கம்யூனிஸ்டுகள் யாரும் குரல் கொடுத்துள்ளீர்கள். சீக்கியரின் ரத்தத்தின் நிறம் முஸல்மானின் ரத்தத்தின் நிறத்தை விட வேறானதோ? எச்.கே.எல் பகத், சஜ்ஜன் குமார், ஜக்தீஷ் டைட்லர் இத்யாதி அரசியல்வாதிகளுடன் தான் கம்யூனிஸ்டுகள் உறவு பூண்டவர்கள் ஆயிற்றே.

  ஐயன்மீர், ரஷ்யா மற்றும் சீனா வரை போவானேன். ஹிந்துஸ்தானத்தைப் பற்றியே கேழ்க்கிறேன். சிங்கூர், நந்திக்ராம் போன்ற வங்காள சிற்றூர்களில் கம்யூனிஸு வெறியர்கள் நிகழ்த்திய வன்முறை, கற்பழிப்பு, வெறியாட்டத்தில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்று வாசகர்களுடன் பகிர்வீர்களா? “வெட்டிக்கொன்னு வெடிவெச்சுக்கொன்னு” புகழ் தோழருக்கு கம்யூனிஸ்டு பார்ட்டி செய்த பஹுமானம் என்ன என்பதனையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே. அவர் எங்கிருக்கிறார்; கொலை செய்ததை பொதுக்கூட்டத்தில் கூவிய அவரை புலீஸ் விசாரணைக்காவது உட்படுத்தினீர்களா என்றாவது வாசகர்களுடன் பகிரலாமே?

  அறம் சார்ந்த விழுமியங்கள் ஹிந்துத்வர்களுக்கு மட்டிலும் அடாவடித்தனம் கம்யூனிஸ்டுகளின் அடிப்படை உரிமை என்று பறை சாற்றுகிறீர்களோ?

  கம்யூனிஸ்ட் குஸ்தாகி மாஃப்களை வெகுவாக விசாரிக்க வேணும். ஒன்றொன்றாக நூறா ஒருமிக்க நூறா. ஊருக்கு ஒரு ஞாயம் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு ஞாயம் என்ற நிலைப்பாடுகளைத் தொகுத்து ஒரு வ்யாசம் சமர்ப்பிக்கிறேன். தவறுகள் கம்யூனிஸ்டுகள் பக்ஷத்திலா அல்லது என் புரிதலிலா என்பதனை வாசிக்கும் வாசகர்கள் அவதானிக்கட்டும். மேற்கொண்டு என் கருத்துக்களின் தொகுப்பு என் வ்யாசத்தில்.

  ஜம்மு, காஷ்மீரம், லத்தாக் – வெகு விஸ்தாரமாக எழுதப்பட வேண்டிய விஷயம். தோழர் அவர்களுடைய கருத்துக்களும் அதில் விசாரிக்கப்பட வேணும். அவருடன் offline-ல் விவாதித்து பின் அதுபற்றியும் எழுதுகிறேன். ஆனால் அது வெகுவாக கால அவகாசம் எடுக்கும்.

 58. எஸ்.சம்பத்
  #58

  அன்றாடம் தமிழ்பேப்பர் தளம் பார்க்கிறபோது, யாரும் கட்டுரைகளே வாசிப்பதில்லையோ, விமர்சனங்களே வருவதில்லையே என நான் எண்ணுவதுண்டு. ஆனால் முக்கியமான அரசியல் விவாதம் என வருகிறபோது, அதில் புகுந்து வாசகர்கள் அதம் பறத்துகிறார்கள் என்பது இந்த கட்டுரைக்கான பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது.

  இந்த கட்டுரையை நான் படித்தவரை, திரு மோடி அவர்களை பிரதமர் வேட்பாளர் என எண்ணிப்பார்க்கிற போது, 2002 குஜராத் கலவரங்கள், அதனால் பாதிக்கப் பட்டவர்கள் போன்றவற்றை வாக்காளர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும், ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற நிலையிலிருந்து நாட்டின் பிரதமர் என்கிற நிலைக்கு உயரும் போது, மதம் சார்ந்த, ஆர் எஸ் எஸ் சார்ந்த தனது நிலைப்பாட்டினை மோடி அவர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வளர்ச்சிக்காக என்ற பெயரில் அப்பாவிகளை உயிர்ப்பலியாக்குவதை ஏற்க இயலாது என்ற மைய கருத்தில் எழுதப்பட்டுள்ளதாகவே உணர்கிறேன்.

  ஆனால் விமர்சகர்கள் மருதன் இடது சாரி தோழர் என்பதால், இடதுசாரிகளின் தவறுகளை விமர்சிப்பதிலேயே தனது பார்வையை கொண்டு சென்றுள்ளனர். நமது தமிழகத்து கட்சிகளாகட்டும், தேசிய அரசியல் கட்சிகளாகட்டும் ஒரு ஊழலை- தவறை விமா்சனம் செய்தால், உன் கட்சி இதைவிட பெரிய ஊழல் செய்யவில்லையா, மற்றொரு கட்சி மட்டும் என்ன ஒழுக்கமா? என கேட்பது போல பதில் வருவதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு ஊழலை விமர்சனம் செய்யும் போது அதைவிட பண மதிப்பில் உயர்வான மற்றொரு ஊழலைச் சொல்லிவிட்டால், முதல் ஊழல் நியாயம் என்றாகிவிடுமா? அது போலதான் குஜராத் என்கவுன்டர், இனப்படுகொலைகளை சொன்னால், மேற்கு வங்கம் மட்டும் ஒழுக்கமா என கேட்பதால் குஜராத் செயல்களை நியாயப்படுத்திவிட முடியாது

 59. Dr.P. Saravanan
  #59

  அன்பு நண்பரே வணக்கம்.
  என் கணிப்பைத் தாண்டி கமெண்ட்ஸ் எகிறிக்கொண்டிருக்கின்றன. வாழ்த்துகள். 75 யைத் தாண்டும்எனக் கருதுகின்றேன். அதற்காக வாழ்த்துகள்.
  முனைவர் ப. சரவணன்

 60. ராஜசங்கர்
  #60

  மருதன் அறம் சாந்த கேள்விகளை மோடியை நோக்கி எழுப்பவேண்டும் என சொல்லியிருக்கிறார்?

  2000 ஆம் ஆண்டில் இருந்து 2010 வரை உத்திரபிரதேசத்தில் நடந்த என்கவுண்டர் கொலைகளின் எண்ணிக்கை 576. அப்போது முதலமைச்சராக இருந்தவர்கள் மாயாவதியும் முகலாயமும். அவர்களை நோக்கி எழுப்பலாம்?

  சிங்கூர், நந்திகிராமம் என்று இரண்டு இடங்கள் இடதுசாரிகள் பன்னெடுங்காலம் ஆண்ட மேற்குவங்க மாநிலத்தில் இருந்தன. அங்கு கம்யூனிஸ்டுகள் கலவரம் நடத்தி பலரை கொன்று நூற்றுக்கணக்கில் காயமேற்படுத்தினார்கள். அப்போது முதல்வராக இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, கலவரக்காரர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதில் சொல்லப்பட்டது என பெருமை பேசினார். புத்ததேவ் மற்றும் அவரின் தொண்டரடிப்பொடிகளாக சீத்தாராம் யெச்சூரி, டி ராஜா ஆகியோரிடம் அறம் சார்ந்த கேள்விகளை எழுப்பலாம்.

  அசாமிலே போடாலாந்து கலவரத்தில் செத்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல். இடம்பெயர்ந்தவர்கள் நாலு லட்சம். நடந்து ஒரு வருடமாகியும் இன்னும் திரும்பி போகமுடியவில்லை. அரசாண்டு கொண்டிருப்பது தருண்கோகாய் மூன்றாவது முறையாக. அவரிடம் இந்த அறம் சார்ந்த கேள்விகளை எழுப்பலாம்.

  ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் அரசு வாரத்துக்கு குறைந்தபட்சம் நாலு நக்சலைட்டுகளையாவது என்கவுண்டர் என்ற பெயரில் கொல்கிறது. அந்த மாநில ஆளும் காங்கிரஸ் தலைவர்களிடம் இந்த அறம் சார்ந்த கேள்வியை எழுப்பலாம்.

  சீக்கிய படுகொலையில் ஈடுபட்டவர்கள் இன்னமும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த தார்மீக ரீதியான அறம் சார்ந்த கேள்வியை எழுப்பலாம்.

  கூடவே கடந்த பத்து வருடங்களில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடந்ததற்காகவே கண்டுகொள்ளாமல் விடப்பட்ட மதக்கலவரங்களை கண்டு கொண்டு அதற்கும் தார்மீக ரீதியான கேள்விகளை எழுப்பலாம்.

  இதெற்கெல்லாம் எழுப்பமாட்டேன் மோடி மட்டும் தான் குறி என்று பேசினால் அதற்கு பெயர் நீதி கேட்பதல்ல. அரசியல் பேசுததல். அதை யாரும் கேட்டு மோடி மீது பொங்கி எழப்போவதில்லை.

 61. Jeyakumar
  #61

  ஒரு விஷக்கட்டுரையை எழுதிவிட்டு, சத்தமில்லாமல் அமர்ந்திருக்கும் மருதனைப் பார்க்கும்போது கம்யூனிஸ்ட்டுகளின் பிரச்சார யுத்தி குறித்த தெளிவு பிறக்கிறது.

 62. poovannan
  #62

  சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பற்றி ஆயிரம் கட்டுரைகள் புத்தகங்கள் ,வழக்குகள் இருக்கின்றன.

  அதை பற்றிய வாதங்களில் யாரும் ஏன் அவனை பற்றி கவலைபடவில்லை,பிரிவினையின் போது
  இறந்தவர்கள் சீக்கிய கலவரத்தை போல பல மடங்கு என்று எல்லாம் வாதிடுவது கிடையாது.ஆனால்
  மோடி ஆதரவாளர்கள் எல்லாம் கிளிபிள்ளை போல கோவம்,ஆத்திரம் கொண்டு ஒரே பல்லவி பாடுவது ஆச்சரியபட வைக்கும் ஒன்று

 63. Observer
  #63

  கட்டுரையின் முதல் பகுதி முழுக்க முழுக்க கம்யூனிஸ்டுகள் ஆட்சி புரிந்த பகுதிகளுக்குப் பொருந்தும்.

  ‘இவர்கள் தீவிர வாதிகள் அல்லர்’ என்று சிபிஐ அறிவிக்கவே இல்லை. மாறாக, ‘தீவிரவாதிகளாக இருந்தால்தான் என்ன? சுட்டு விடுவதா?’ என்றுதான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் மருதன் தான் தீர்ப்பு சொல்லி விட்டாரே, மறு பேச்சு ஏதுங்ணா?

  ஹிட்லரோடு ஒப்பிட்டு மோடியை இழிவு படுத்துவதுதான் உங்கள் கட்டுரையின் நோக்கம். ‘ஆனா, நான் அப்படிச் சொன்னதாகக் காமிச்சுக்காதீங்க!’ என்பது உங்கள் வேண்டுகோள். 2002 கலவரங்களில் மோடிக்குப் பங்கு உண்டு என்று எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? ‘பொய் சாட்சி சொல்லுவதை முதலில் நிறுத்து!’ என்று நீதி மன்றங்களால் கண்டிக்கப் பட்ட செதல் வாடுகளின் மூலம் சித்தாந்த வளர்ச்சியா? எந்த இந்தியக் கோர்ட் மோடிக்குப் பங்கு உண்டு என்று தீர்ப்பளித்திருக்கிறது மருத நாயகம் அவர்களே?

  .’2002 ஐ வசதியாக மறந்து விட்டு..’ – அதில் என்ன வசதி? ஏன் அந்தக் கலவரத்தில் இந்துக்கள் மரணமடைய வில்லையா? அப்படியானால், நீங்கள் குறிப்பிடுபவர்கள் இந்துக்களையும் கூடத்தான் ‘வசதியாக’ மறந்து விட்டார்கள்! இதிலே இஸ்லாமிய வெறுப்பை மட்டும் முன் வைப்பது எங்கிருந்து வந்தது? மோடி வெறுப்புத்தான் கட்டுரையின் நோக்கம் என்பதை நீங்கள் ‘unwittingly’ ஒப்புக் கொண்டு விட்டீர்களே, ஐயா!

  கம்யூனிசக் கொலைகளையும், சீக்கியக் கொலைகளையும் பலர் நினைவுறுத்துவதற்குக் காரணம், அது போல குஜராத் கொலைகளை சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்பதன்று; அந்தக் கொலைகளை எங்கும் குறிப்பிட்டு வருந்தாத மருதன் முதலா மேதகையாளர்கள் மோடியை மட்டும் வெறுக்கக் காரணம், நிச்சயமாக சமுதாய அக்கறையாக இருக்க முடியாது;
  அது உண்மையானால், அவர்களின் முதல் கண்டனம், அரை நூற்றாண்டு அவர்களால் ஆளப்பட்ட மேற்கு வங்கத்தின் பரிதாப நிலையைப் பற்றியதாக இருந்திருக்கும்.

  கலவரங்களையும், MSM அத்துமீறல்களையும், மத்திய அரசின் ஒத்துழையாமையையும் மீறி வென்று காட்டும் ஒருவர் இந்துவாக இருப்பதும், கலவரங்களுக்குப் பின்னால் ஒரு மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றி, மக்களும் அப்படி ஒரு பக்குவப் பட்ட நிலைக்குப் பழகி விட்டதும்தான், மருதன் et al களின் பயம். இது நாடு முழுவதின் கவனத்தை ஈர்த்து விட்டால்? முக்கியமாக முஸ்லிம்களே எது முன்னேற்றத்துக்கு வழி என்று சிந்திக்கத் துவங்கி விட்டால்? ‘இந்தியா என்ற நாடே இருந்ததில்லை; அப்படி ஒரு கலாச்சாரப் பின்னணியும் கிடையாது’ என இன்று வரை போதித்து வரும் நேர்மையாளர்களின் வெறுப்புக் கடை வியாபாரம் என்னாவது?

  அறம் சார்ந்த விழுமியங்களை மீட்டெடுப்பதில் தமிழ் பேப்பர் தீவிரமாக இருந்திருந்தால், மருதன் அவர்களின் வெறுப்புக் கட்டுரையே முதலில் தடை செய்யப் பட்டிருக்க வேண்டும்.

  அந்தக் கறை இந்தக் கறை எதுவா இருந்தாலும் மோடி கறை னு சொல்லிடுவோம். அடிச்சு விடுங்க மருதன்; நமக்கு இதெல்லாம் புதுசா என்ன?

 64. poovannan
  #64

  ஹிந்துக்களின் உரிமைக்காக போராடும் இயக்கங்கள் என்று சொல்லி கொள்ளுபவை சீக்கிய கலவரங்களுக்காக வெட்கப்பட வேண்டும்.நடந்தது பஞ்சாபி ஹிந்துக்களின் வெறியாட்டம்.
  ஹிந்து இயக்கங்களின் சாமர்த்தியம் வியக்க வேண்டிய ஒன்று.ஹிந்துக்கள் செய்யும் கொடுமைகள்,கலவரங்கள் எல்லாம் தனிப்பட்ட சாதிகளின் மீது,கட்சிகள்,இயக்கங்களின் மீது தள்ளப்படும்

 65. Observer
  #65

  பூவண்ணன் ஐயா, நீங்க ஒரு காமெடி பீசு! யாரும் பாக்காத போது ஒரு தட்டு தட்டிட்டு ‘எப்பூடி?’ னு கேட்டுட்டு ஓடிப் போயிடறீங்க!

  சீக்கியக் கலவரங்களுக்கு ஒவ்வொரு ‘இந்தியனும்’ (இந்தியன் மட்டும்தான்) வெட்கப் படணும். இந்து இயக்கங்கள் மட்டும் ஏன்?
  ஏன்னா, மத்தவங்கள் எல்லாம் தங்களை இந்தியர்களாகவே காட்டிக்கிறதில்லை! பஞ்சாபி இந்துக்கள் சேர்ந்து பஞ்சாபி சீக்கியர்களைத் தீர்த்துக் கட்டிட்டாங்களா? பதில் வராது. ஆனா, ஒண்ணு மட்டும் சரி. அவங்களால மட்டும் தான் ‘நம்ப இந்தியாவாச்சே!’ னு வெக்கமும் கவலையும் பட முடியும். ஒத்துக்குங்க,

  இந்துக்கள் செய்யும் கொடுமைகள் எல்லாம் தனிப்பட்ட சாதிகள், கட்சிகள் மீது தள்ளப்படுமா! அவங்கள்ள இந்துக்கள் யாரும் இல்லீங்களா? பொளந்து கட்டறீங்க!

  ‘எனக்கு இந்துக்களைப் புடிக்காது; என் வெறுப்பைப் பச்சையா காண்பிப்பேன்!’னு சொல்லிடுங்க. நியாயமா இல்லாவிட்டாலும் நேர்மையாவாவது இருக்கும்

 66. poovannan
  #66

  observer சார்
  இந்தியாவில நடந்த தேர்தல்களில் வரலாறு காணாத வெற்றி எனபது சீக்கியர்களை கொன்று குவித்த பிறகு நடந்த தேர்தல் தான்.ஹிந்துக்களின் கட்சியை கூட தூக்கி கடாசி விட்டு (வெறும் ரெண்டு இடம் )ஹிந்துக்கள் வெறியோடு சீக்கியர்களின் மீதான படுகொலைகளுக்கு பரிசு தந்தார்கள்.ஜன சங்கம் வலுவோடு இருந்த டெல்லியில் கொலைகாரர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட பகத்,சஜ்ஜன் குமார்,டைட்லெர் போன்றோர் எவ்வளவு லட்சம் வோட்டு வித்தியாசத்தில் செய்த்தார்கள் தெரியுமா
  ஆர் எஸ் எஸ் முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது தான் இந்த அளவு வெற்றிக்கு காரணம் என்று அன்றைய செய்திகளை,கட்டுரைகளை படித்தால் புரியும்
  சீக்கியர்களுக்கு என்று பல இணைய தளங்கள் இருக்கின்றன .கொஞ்சம் சென்று பாருங்களேன் ,சங்க பரிவார இயக்கங்களை எப்படி தாக்குகிறார்கள்,எப்படி அவர்களை ஹிந்துக்கள் என்று கூறி ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை பற்றி விலாவாரியாக படிக்கலாம்
  இன்றும் பஞ்சாபில் சீக்கியர்களுக்கு அகாலி தளம்,ஹிந்துக்களுக்கு பா ஜ க எனபது தான் நிதர்சனமான உண்மை.பல முயற்சி எடுத்தும் ,கிரிக்கெட் வீரர்களை தத்து எடுத்தும் 99 சதவீதம் வெறும் ஹிந்துக்கள் நிரம்பிய கட்சி தான் பஞ்சாபில் .ஆனால் காங்கிரஸ் கட்சியில் சீக்கியர்,ஹிந்துக்கள் எல்லாரும் உண்டு.தவறு செய்த ,தங்களை கொன்று குவித்த போது அமைதியாக ஆட்சியில் இருந்து வேடிக்கை பார்த்த காங்கிரஸ் கட்சியில் கூட பெருமளவில் சேருகிறார்கள்,ஆனால் ஏன் பா ஜ கா என்றால் காத தூரம் ஓடுகிறார்கள் என்று யோசியுங்களேன்

 67. poovannan
  #67

  மோடி பக்தர்கள் மோடி பல சாதனைகள் புரிந்தார் என்று பல ஆண்டுகளாக கூவி வருகிறார்கள்.
  கரகாட்டக்காரனில் செந்திலும் கோவை சரளாவும் ஆடுவதை ஒருவர் கௌண்ட மணி காதுபட ஒருவர் புகழ்வாரே அதே போல தான் இந்த மோடி பக்தர்கள் அவரை பற்றி புகழ்வதும்

  அவர் சூப்பர் man மாதிரி உத்தர்கண்ட் நிலசரிவு,மழைப்பெருக்கு நிகழ்வில் பல ஆயிரம் குஜராத்திகளை ஒரே நாளில் காப்பாற்றிய சாதனையை சிலர் எப்படி என்று கேட்டதும் துண்டை காணோம்,துணிய காணோம் என்று ஓடிய கூட்டம் மற்ற விஷயங்களில் கேட்டாலும் அப்படி தான் ஓடும்

  குஜராத் 2002 கலவரங்களை விட்டு விடுவோம்

  ஆண் பெண் சதவீதத்தில் குறைவாக இருந்த பெண்களின் எண்ணிக்கையை அவரின் பத்து ஆண்டு ஆட்சியில் மாற்றி விட்டாரா

  மத்திய அரசு பணிகளில் நூத்துக்கு ஒன்று ,இரண்டு குஜராத்திகள் கூட இல்லாத நிலையில் இருந்து பத்து பேராவது சேரும் அளவிற்கு மாற்றி விட்டாரா

  மற்ற மாநிலங்களை விட அதிக இடங்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்களுக்கு வேலை,கல்லூரிகளில் கிடைக்குமாறு செய்துள்ளாரா

  பழங்குடியினர்,தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் மத்திய மாநில அரசு கல்வி,வேலைவாய்ப்பில் இடம் பிடிக்க காரணமாக இருந்துள்ளாரா

  குடும்ப கட்டுப்பாடு திட்டங்களின் மூலம் பிறப்பு விகிதத்தை விரும்பிய அளவிற்கு குறைத்து விட்டாரா

  குடி தண்ணீருக்காக மக்கள் கொஞ்சம் கூட சிரமப்பட வேண்டிய தேவை இல்லாமல் செய்து விட்டாரா

  இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் மருத்துவம் பார்த்து கொள்ள/படிக்க/வேலை செய்ய லட்சக்கணக்கில் ஓடி வரும் நிலைக்கு மாநிலத்தை மாற்றி விட்டாரா(நம்ம ஊழல் தமிழகத்திற்கு படிக்க,மருத்துவம் பார்க்க,வேலை பார்க்க வருபவர்களில் பத்தில் ஒரு பங்காவது எட்டி இருக்கிறாரா )

  விளையாட்டு துறையில் குஜராத்திகள் அவரின் ஆட்சியில் கீழ் ஓரளவிற்காவது முந்தைய நிலையை விட முன்னேறி இருக்கிறார்களா (தமாதூண்டு மாநிலம் மணிபூர்
  தேசிய விளையாட்டு போட்டிகளில் 48 தங்கம்.நம்ம பெருமித பணக்கார சுயம்பு சுயமரியாதை கொண்ட குஜராத் மாநிலம் மொத்தமா ரெண்டு வெள்ளி )

  மருத்துவ படிப்பு,செவிலியர் படிப்பு,பொறியியல் போன்றவற்றில் மாநிலத்தின் தேவை அளவிற்காவது அங்கு மாணவர்கள் படிக்கிறார்களா /இருக்கிறார்களா இல்லை பக்கத்து மாநிலங்களை நம்பி தான் அங்கு பள்ளிகள்/கல்லூரிகள்/மருத்துவமனைகள் இருக்கின்றதா

  கலை,அறிவியல்,விளையாட்டு,ராணுவம்,துணை ராணுவம்,மத்திய அரசு பணிகள்,விஞ்ஞானிகள்.ஆட்சி பணியாளர்கள் என்று எல்லாவற்றிலும் பூஜியதிர்க்கு அருகில் தான் குஜராத்திகள்

  ஒவ்வொரு மாவட்டத்திற்கு என்றும் ராணுவத்தில் சேர இட ஒதுக்கீடு உண்டு.அந்த இடங்கள் கூட பூர்த்தி ஆகாத மாநிலம் நம்ம குஜராத் தான்.

  12 ஆண்டுகளை நெருங்கும் ஆட்சியில் இதில் எவற்றை சாதித்து காட்டி இருக்கிறார் .
  மருத்துவர்,செவிலியர் ,பொறியாளர்,ஆசிரியர்கள் என யார் வேண்டுமானாலும் அதற்க்கு அடுத்த மாநிலங்களை நம்பி இருக்கும் நிலையில் இருந்து மாறி விட்டதா குஜராத்
  பிரசவத்தின் போது தாய் இறப்பு ,ஒரு வயதுக்கு முன் குழந்தைகள் இறப்பு போன்றவற்றில் கேரளம்,தமிழகத்தின் அருகிலாவது வந்து விட்டதா குஜராத்

 68. poovannan
  #68

  சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த செய்தி SMS /ஈமெயில் /ப்ளாக் /அனைத்து விதமான மக்கள் தொடர்பு ஊடகங்கள் மூலம் மோடி ஆதரவாளர்களால் பல முறை பல லட்சம் பேருக்கு பரப்பட்டது

  http://sudhanganin.blogspot.in/2011/03/blog-post_28.html

  குஜராத்தில் இலவசங்கள் கிடையாது.

  ஓட்டுக்கு பணம் கிடையாது.

  டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).

  கரண்ட் கட் கிடையாது.

  இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது. இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்..

  பத்து வருடத்திற்கு முன்பு குஜராத அரசு உலகவங்கியில் வாங்கிய கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.(ஆ.ராசா மதிப்பை விட கொஞ்சம் குறைவுதான் !)

  இன்று..

  கடனை திருப்பி செலுத்திவிட்டது. இப்போது அந்த அரசின் கையிருப்பது தொகை 1 லட்சம் கோடிகள்.

  ஹி ஹி ஹி உண்மை நிலவரம் என்ன என்று பார்ப்போமா

  http://www.indiatvnews.com/business/india/modi-s-gujarat-bears-the-third-highest-debt-burden-after-bengal–5216.html
  Chief Minister Narendra Modi’s Gujarat government bears the third highest burden after West Bengal and Uttar Pradesh, says a media report.
  While Gujarat’s actual debt was Rs 1,38,978 cr as on March 2012 and is projected to touch Rs 1.76 lakh crore in 2013-14, it is preceded by only two other states: West Bengal (Rs 1.92 lakh crore) and Uttar Pradesh (Rs 1.58 lakh crore), says the report

  ஆனா கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம
  அடடா இவர் ஆட்சியும் இதுல கொட்டற பணத்தையும் பார்த்தா இவர் தான் கலியுகத்தை காப்பாத்த வந்த கல்கி அவதாரம் மாதிரி தெரியுதுன்னு பேசறவங்க அதிகம் ஆயிட்டாங்க

 69. Observer
  #69

  பூவண்ணன் ஐயா, பொருளாதாரத்துல ஈஸ்வர சிங்கம்னு தெரியாமப் போச்சே! பாவம், உம்மத் கட்டுரைக்கு உம்மா கொடுத்து ஏமாந்துட்டாரு! லாபம் மற்றும் கடன் என்பவை கெட்ட வார்த்தைங்க இல்லீங்ணா. கடனைத் திரும்பச் செலுத்தும் பொருளாதாரத் தகுதி உள்ளவர்களுக்கே கடன் மேலும் வழங்கப்படும். தமிழில் சொன்னால், பொருளீட்டும் திறனைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்டுள்ளது குஜராத் மாநிலம்.

  அரசாங்க அல்லது மாநிலத்தின் கடன்களைத் தனிப்பட்ட அளவில் (in isolation) பார்க்கப் படாது. அப்படிப் பார்த்தால் உலகின் மாபெரும் கடன்கார நாடுகள் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா தாம்! நாடு அல்லது மாநிலத்தின் உற்பத்திக் குறியீட்டைக் கணக்கில் கொண்டு அதில் கடன் சதவீதத்தைப் பார்க்க வேண்டும். அதன் படி குஜராத்தில் 2004 ல் 37% இருந்த GSDP, 2012 ல் 26% ஆகக் குறைந்தது. (அகில இந்திய அளவில் இது 68% ங்கோ!) உலகெங்கும் உள்ள Recession, மது விற்பனை மூலம் வருமானம் ஈட்டாத கொள்கை இரண்டையும் கணக்கில் வெச்சுப் பார்க்கணும்.

  தனி மனித வருமானத்திலிருந்து தனி மனிதக் கடனைக் கழித்து, நிகர வருமானத்தைப் பார்க்கணும். அப்பத் தெரியும், உண்மையிலேயே, வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கா இல்லியான்னு. மேலும் குஜராத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் வருமானங்களை அடுத்தடுத்து பெருக்கும் திறனுள்ளவை மது அருந்துபவர்கள் பெருமளவில் இருக்கலாம்; ஆனால் அரசே அதனை ஊக்குவித்து மது விற்பனை நடத்தாமல் அந்த வருமானத்தை நம்பாமல் ஒரு மாநிலத்தை நடத்துவதை விட சமூக சேவை இருக்க முடியுங்களா?

  நில ஒதுக்கீடு குறித்துக் கடுமையாக விமர்சித்த (பின்னால் ஒதுக்கீட்டின் காரணங்களும் விளக்கப்பட்டன) CAG, குஜராத் அரசின் நிதி நிர்வாகத்தைப் பெருமளவு பாராட்டியுள்ளது (யாரு, ஆ. ராசாவை மாட்டி விட்டாரே, அவருதானே? அவுரு கட்டுரையை எவன் படிப்பான்?). குஜராத் செயல்பாடுகளில் திருப்தி தெரிவித்து திட்டக் கமிஷன் ஒதுக்கீட்டை அதிகரித்தது.

  குமுறி என்னங்ணா பண்ணறது? மோடி சாதிக்கறாரே!

  கூச்சம் இல்லாதது யாருன்னு சொல்லுங்க. இஷ்ரத் தீவிரவாதி இல்லேன்னு சிபிஐ சொல்லிட்டதா பொய் சொல்லி இன்னும் கம்முனு இருக்காரே மருத நாயகம். அவர்தானே?

  இப்ப திரும்ப வாங்க 2002 க்கு! வேற வழி?

 70. Observer
  #70

  மன்னிக்கணும். கடன்,GSDP ratio னு சொல்றதுக்கு பதிலா, GSDP னு நிறுத்திட்டேன்.

 71. poovannan
  #71

  சாமி இப்பவே கண்ணை கட்டுதே குஜராத் அற்புதமா ஆளப்பட்டதால் கடனை அள்ளி கொடுக்கிறார்கள் என்றால் முதல் ரெண்டு இடத்தில இருக்கும் UP,வங்காளம் மாநிலங்களில் அதியற்புதமான ஆட்சியா

  மூணாவது இடத்துல இருக்குற குஜராத்லேயே இவ்வளோ அற்புதமான ஆட்சி ஆள்கிறவர் ramboனா ,முதல் ரெண்டு மாநிலங்களை ஆள்பவர்கள் நெனச்சு பாக்கவே பயமாக இருக்கிறதே

 72. poovannan
  #72

  இலவசம் இல்லை எனபது அடுத்த கதை

  நம்ம ஊரில் இலவச சைக்கிள் குடுப்பதை பார்த்து அந்த திட்டத்தை அமுல்படுத்திய மாநிலம்,கருவுற்றிருக்கும் பெண்களுக்கு தரப்படும் இலவசங்களை காப்பியடித்த மாநிலம் இலவசங்கள் இல்லை என்ற பிராசாரத்தில் ஈடுபடுவது,இந்த பொய்களை சிலர் பார்த்து பரவசப்பட்டு ஊரெங்கும் தம்பட்டம் அடிப்பது குஜராத் என்றாலே பொய் கணக்கு என்ற நிலைக்கு அனைவரையும் தள்ளி விடும் போல

  50000 கோடி கடனில் இருந்து மீண்டு ஒரு லட்சம் கோடி கையிருப்பு என்ற பொய் தேவையா என்றால் மறுபடியும் மோடி மஸ்தான் விதிகளை ஆரம்பிப்பது ஞாயமா

 73. poovannan
  #73

  http://www.indianexpress.com/news/gujarat-eases-liquor-norms-tourists-to-get-permit-on-arrival-at-airport/1122093/0

  மது விலக்கு எனபது அடுத்த மோசடி
  பணம் இருப்பவன் மருத்துவ சான்றிதழ் வாங்கி பெர்மிட் வாங்கி குடிக்கலாம்
  அண்டை மாநிலங்களின் அருகில் இருக்கும் ஊர்களில் வசிப்பவர்கள் அங்கு சென்று குடித்து விட்டு வரலாம்,ஊர் சுற்ற வருபவர்கள் குடிக்கலாம், அதற்காக விடுதிகளில் சாராயம் வைத்து இருக்கலாம்.

  ஏழைகளுக்கு மட்டும் தான் குடிப்பது சிரமம் அவர்களுக்கு ஒரே வழி கள்ளசாராயம்.இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் கள்ள சாராயதினால் இறப்புகள்,கண்பார்வை போகுதல் அதிக அளவில் நடைபெற்ற மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இது தான் மது விலக்கு சாதித்தது
  பெர்மிட் கொடுக்க அரசு எடுத்து கொள்ளும் காசு எந்த கணக்கில்.இங்கும் பெர்மிட் முறை வந்தால் Tasmac விட பெர்மிட் கொடுக்க அரசு எடுத்து கொள்ளும் காசு எந்த கணக்கில்.இங்கும் பெர்மிட் முறை வந்தால் தசமக் விட

 74. சான்றோன்
  #74

  பூவண்ணன் சார்………

  //இந்தியாவில நடந்த தேர்தல்களில் வரலாறு காணாத வெற்றி எனபது சீக்கியர்களை கொன்று குவித்த பிறகு நடந்த தேர்தல் தான்.//

  தலைவர்கள் பிணத்தை வைத்து ஓட்டு வாங்குவதில் காங்கிரசை அடிச்சுக்க ஆளே கிடையாது…….ராஜீவ் தேர்தல்கள் நடந்துகொண்டிருந்தபோது கொல்லப்பட்டார்……அவர் மரண‌த்துக்கு முன்பாக வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் காங்கிரஸ் பலத்த அடிவாங்கியது ….அவர் கொல்லப்பட்ட பின் தேர்தல் நடந்ததமிழகம் ,ஆந்திரம் போன்ற மாநிலங்களில் கிடைத்த மாபெரும் வெற்றியை வைத்துத்தான் நரசிம்மராவால் மைனாரிட்டி அரசாவது அமைக்கமுடிந்தது…..தமிழகத்தில் திமுக துடைத்தெறியப்பட்டது………

  சீக்கிய தீவிரவாதம் பஞ்சாப், டெல்லி , ஹரியானா போன்ற மாநிலங்களில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது…… இந்திராவின் மரணத்தை அடுத்து ஏற்பட்ட அனுதாப அலையின் காரனாமாகத்தான் காங்கிரசுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது……

  அப்புறம் உங்க ஒலகமகா புள்ளி விபரங்களோட இதையும் சேர்த்துக்கங்க…….

  1. குஜராத்தில் 10 சதவீதம் பேர் மட்டுமே பல்லு விளக்குறாங்க……தமிழகம் , கேரளத்தில் அது 50 சதவீதம்…….

  2 . குஜராத்தில் 9 சதவீதம் பேர் மட்டும் தான் அரிசி சாப்பிடறாங்க………தமிழகம் கேரளத்தில் 99 சதவீதம்……

  3 .குஜராத்தில் 1 சதவீதம் பேர் மட்டும்தான் முருங்கைக்காய் குழம்பு ஊத்திக்கிறாங்க…….தமிழகத்தில் அது 89 சதவீதம்…….

  4. குஜராத்தில் பத்து பேருக்கு ஒரு முட்டாள் தான் இருக்கான்….தமிழகத்தில் பத்து பேருக்கு ஒம்போது முட்டாள் இருக்கான்…….

 75. சான்றோன்
  #75

  //பெர்மிட் கொடுக்க அரசு எடுத்து கொள்ளும் காசு எந்த கணக்கில்.//

  பூவண்ணன் சார்……

  கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க….[ உங்களுக்கு அது கொஞ்சம் கஷ்டம்தான் ]

  டாஸ்மாக் மூலம் தமிழக அரசு கடந்த வருடம் பெற்ற வருமானம் 23000 கோடி…….தனி நபர் பெர்மிட் மூலம் அவ்வளவு கிடைக்குமா? இதில் தமிழக அரசு டார்கெட் வேறு நிர்ணயிக்கிறது……விற்பனை இலக்கை எட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூளையை கசக்கிகொள்கிறார்கள்……ஒரு ஏரியாவில் விற்பனை குறைந்தால் , டாஸ்மாக் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது…..இதெல்லாம் அசிங்கம் என்பது கூட உங்களுக்கு உறைக்கவில்லையா? ஹிந்து மதத்தின் மீதான துவேஷம் அந்த அளவுக்கா கண்ணை மறைக்கிறது?

  இவ்வளவு கோடி வருமானம் வந்தால் இலவச சைக்கிள் என்ன …..இலவச மோட்டர் பைக்கே கொடுக்கலாம்……இந்த ஆடு வாலை அறுத்து ஆட்டுக்கே சூப் வைத்து கொடுக்கும் வேலையெல்லாம் குஜராத்தில் நடப்பதில்லை……. காங்கிரஸ் இலவச மின்சாரம் தருவோம் என்று பிரச்சாரம் செய்தபோது , மோடி தான் ஆட்சிக்கு வந்தால் கரன்ட் பில் கட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்றார்………மக்கள் நல்லவரை அடையாளம்கண்டு கொண்டனர்…. நீங்க புலம்பி என்ன ஆகப்போகுது?

 76. சான்றோன்
  #76

  அப்புறம் பூவண்ணன் சார்……

  நாட்டின் வருங்கால பிரதமர் [?] ராவுல் வின்சி நாட்டின் பொருளாதாரம் , மற்றும் தனது கொள்கைத்திட்டதை விவரிக்கும் அழகைப்பாருங்கள்…..

  http://www.youtube.com/watch?v=Ggo65H8dKuA

  அப்படியே நரேந்திர மோடி அவர்களின் பொருளாதாரக் கொள்கையையும் பார்த்துவிடுங்கள்……

  http://puthu.thinnai.com/?p=19248

  அப்புறமா ஒரு முடிவுக்கு மக்கள் வரட்டும்…….

 77. க்ருஷ்ணகுமார்
  #77

  தோழர் மருதனுடைய பக்ஷபாத சமாசாரமெல்லாம் தனியாகவே விசாரிக்கப்பட வேண்டும். பூவண்ணன் சாரின் புஸ்வாணங்களை படித்து விட்டுவிடுவேன். ஆனால் கீழே சொன்னதை விட முடியவில்லை.

  \\\நடந்தது பஞ்சாபி ஹிந்துக்களின் வெறியாட்டம்.
  ஹிந்து இயக்கங்களின் சாமர்த்தியம் வியக்க வேண்டிய ஒன்று.ஹிந்துக்கள் செய்யும் கொடுமைகள்,கலவரங்கள் எல்லாம் தனிப்பட்ட சாதிகளின் மீது,கட்சிகள்,இயக்கங்களின் மீது தள்ளப்படும்\\\

  பூவண்ணன் சார், என்ன பெரிய கண்டிபிடிப்பு சார். உங்களை அடிச்சிக்க முடியாது

  1984 சீக்கியர் கலஹத்தில் சீக்கியர்களைக் கொன்றது ஹிந்துக்கள். இதையெல்லாம் தனிப்பட்ட சாதி, கட்சிகள் மீது தள்ளுவது தப்பு. அதாவது இந்தப்பழி பாவமெல்லாம் காங்கரஸுக்குக் கிடையாது. அவங்க ரொம்ப நல்லவங்க.

  சிங்கூர், நந்திக்ராம் போன்ற இடங்களில் நடந்த கொலை, கற்பழிப்பு, வன்முறைகள் இவையெல்லாம் பெரும்பாலும் ஹிந்துக்களாலேயே நிகழ்த்தப்பட்டது. ஆதலால் இந்தப்பழி பாவமெல்லாம் கம்யூனிஸ்டுக்குக் கிடையாது. அவங்க ரொம்ப நல்லவங்க.

  2002 குஜராத் கலஹத்தில் ஹிந்துக்கள் மற்றும் முஸல்மான் களை கொன்றதெல்லாம் பூவண்ணன் சாரின் pet theory படி ஹிந்துக்கள் தான். ஆதலால் இந்தப்பழி பாவமெல்லாம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது தள்ளக்கூடாது. அவங்க ரொம்ப நல்லவங்க:-(

  சரிதானே சார்.

 78. poovannan
  #78

  சான்றோன் ஐயா

  மோடி ஆதரவாளர்கள் எல்லாரும் ஒரே மாதிரி
  எப்படி.சங்க பரிவாரங்களின் கூடாரங்களில் வசியம் ஏதாவது வைக்கபடுகிறதா

  பிரசவத்தின் போது இறப்பு (MMR )எவ்வளவு குறைக்கப்பட்டது ,கருவிலேயே பெண் குழந்தை அழிப்பால் குறைந்த ஆன்-பெண் சதவீதம் மோடியின் அற்புத ஆட்சியால் எவ்வளவு மாற்றம் பெற்றது என்றால் பதில் எப்போதுமே ,யாரிடம் இருந்தும் வராது.

  மோடி ஆட்சி காலத்தில் எத்தனை அரசு மருத்துவகல்லூரிகள்,மருத்துவமனைகள்,பொறியியல் கல்லூரிகள்,கலை கல்லூரிகள் துவக்கப்பட்டன.ஒன்றுக்கும் உதவாதவர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில் அதே காலகட்டத்தில் எத்தனை என்பதை பாருங்கள் என்றால் பதில்கள் பல்விலக்குவதர்க்கும் ,சாம்பாருக்கும் சென்று விடும்

  சரி சாம்பாருக்கும் வருவோம்.குஜராத் மாநிலத்திற்கு செல்லும் ரயில் வண்டிகளில் முட்டை கூட கிடையாதாம்.அதில் பயணம் செய்யும் சைவ குஜராத்திகள் விரும்ப மாட்டார்கள் என்பதால்.ஏறத்தாழ எழுவது சதவீதம் அசைவம் சாபிடுபவர்களை கொண்ட மாநிலத்தில் சைவர்களின் வெறியாட்டம் .காரணம் சங்க பரிவாரங்களின் கொட்டம்.மற்றவர்களின் அடிப்படை உணவை கூட மதிக்காத,அதை ஒதுக்கும் ஆட்சி நடத்துபவர் தான் இந்தியாவிற்கு ஏற்ற தலைவர் என்று நம் காதுகளுக்கு பூ சுற்றுகிறார்கள்

 79. poovannan
  #79

  84 பொது தேர்தலில் சங்க பரிவாரங்கள் சக்தியுடன் இருந்த மாநிலங்களை மட்டும் பாருங்களேன் சார்
  1984 தேர்தல் வெற்றி சீக்கியர்களை அடித்த அடிக்கு வட இந்தியாவில் ஹிந்து இயக்கங்களின் பெரும் ஆதரவு ,துணையால் கிடைத்த அதிகபட்ச பரிசு

  தென்னகத்தில் எமேர்கேன்சிக்கு பிறகு கூட காங்கிரெஸ் தான் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.

  காங்கிரஸ் தென்னகத்தில் தோல்வியை சந்திக்க ஆரம்பித்தது 1984 தேர்தலில் இருந்து தான்.தெலுகு தேசம் 84 தேர்தலில் ஆந்திரத்தில் 30 இடங்களை பெற்றது.இங்கு வெற்றி பெற்றது அ திமுக வுடனான கூட்டணி.கேரளாவில் காங்கிரஸ் 80 தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது.ஆனால் வோட்டு சதவீதத்தில் கம்யூனிஸ்ட் 80 தேர்தலில் பெற்ற சதவீதத்தை தக்க வைத்து கொண்டது.ஹிந்துத்வா அரசியலின் தாக்கம் உள்ள கர்நாடகத்தில் தான் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தாலும் 28 இடங்களில் நாலில் தான் வெற்றி பெற்றது.

 80. Dr.P. Saravanan
  #80

  அன்பு மருதநண்பரே வணக்கம்.
  “75 யைத் தாண்டும்எனக் கருதுகின்றேன்“ என்று எழுதியிருந்தேன். அது நடந்துவிட்டது. நல்ல விவாதச்சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் தோற்பது யாரென்பது எனக்கு முக்கியமில்லை. எல்லோருமே ஓர் ஆரோக்கியமான விவாதக்களத்தில் உள்ளோம் என்ற மகிழ்ச்சி மட்டுமே எனக்கு முதன்மையாகப்படுகின்றது.
  அன்பர் க்ருஷ்ணகுமார் அவர்களின் வ்யாசத்திற்கும் உங்கள் கட்டுரை ஏற்படுத்திய நற்களத்திற்கும் நன்றி.
  முனைவர் ப. சரவணன்

 81. poovannan
  #81

  சான்றோன் சார்

  அங்கு குடிப்பவர்கள் குறைவு.இங்கு மதுவிலக்கு வந்து பெர்மிட் சிஸ்டம் வந்தால் பெர்மிட் வருமானம் டாஸ்மாக் வருமானத்தையும் தாண்டும் என்று சொன்னேன்.பக்கத்து மாநிலங்களுக்கு சென்று குடிக்க குறைந்தபட்சம் பத்து நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் மூன்று மணி நேரம் ஆகும் மாநிலங்கள் தான் பெரும்பாலான மாநிலங்கள்.இதில் ஒரு மாநிலத்தில் மட்டும் மது விலக்கு எனபது அந்த மாநிலத்தின் முட்டாள்தனம் .வெளி மாநிலத்தில் இருந்து வரும் அத்தனை வண்டிகளையும்,மக்களையும் சோதிக்க எத்தனை லட்சம் காவல்துறையினர் தேவைப்படும் என்று பார்த்தால் மது விலக்கு என்ற போலித்தனம் புரியும்.அங்கு சாராயம் வாங்க கொஞ்சம் அதிகம் செலவு ஆகும் அவ்வளவு தான்
  கள்ளசாராய சாவு எத்தனை என்று பாருங்கள் என்றேனே .
  கள்ள சாராய சாவுகள் மிக அதிகம் என்பதால் சங்க பரிவாரங்களின் வழக்கமான நாட்டாமை தீர்ப்பான மரண தண்டனை சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் கொண்டு வரப்பட்டது.
  முடியாது.கொள்கை ரீதியாக நாங்கள் மதுவை எங்கள் மண்ணில் ,எப்படி முட்டையை கூட ரயிலில் விடவில்லையோ அது போல அனுமதிக்க மாட்டோம் என்கிறார்களா
  இல்லையே.ஊர் சுற்ற வருபவனுக்கு சாராயம் குடிக்க/வாங்க பெர்மிட் வாங்க அரசாங்கம் குஜராத்திற்குள் வரும் போதே இரத்தின கம்பளம் விரித்து பெர்மிட் வழங்குகிறது.அதிக பணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகளில் சாராயம் தண்ணீராக ஓடலாம்.இந்த அழகில் மது விலக்கு என்ற தம்பட்டம் வேறு

 82. poovannan
  #82

  கிருஷ்ணகுமார் ஐயா
  குஜராத்தில் நடந்த கலவரம் ஹிந்துக்களின் வெறியாட்டம்.தான். ஒரு கட்சியினால் எந்த மாநிலத்திலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இன்றி பெருமளவு வெறியாட்டம் நடத்த முடியாது
  கலவரத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் எந்த தயக்கமும் இன்றி பெருமளவில் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்களே,அவர்களுக்கு வோட்டும் அளிக்கிறார்களே ,ஆனால் பா ஜ கா என்றால் ஏன் ஒதுங்குகிறார்கள் என்பதற்கு பதில் இல்லையே
  கேரளாவில் இஸ்லாமிய பகுதிகளில் பெருமளவு இடங்களை IUML கட்சிக்கு காங்கிரஸ் ஒதுக்குவது போல பஞ்சாபில் அகாலி தளம் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை பா ஜ கா விற்கு ஒதுக்கி விடும்.

  சில ஆண்டுகளுக்கு ஒரு முறை யாராவது ஒரு சங்க் தலைவர் சீகிசம் ஹிந்து மதத்தின் ஒரு பிரிவு என்று சொல்லி சீக்கிய இயக்கங்களிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டு சில காலம் அமைதியாக இருப்பார்கள்.சீக்கியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது சங்க பரிவாரங்களிடம் தான்.காங்கிரஸ் கட்சியை கூட மறுபடியும் அரவணைத்து கொண்டார்கள்.

 83. க்ருஷ்ணகுமார்
  #83

  பூவண்ணன் ஐயா,

  வெறுப்பின் ஆதாரத்தில் நிலைப்பாடுகள் கட்டமைக்கப்பட்டால் சமூஹங்களுக்கிடையே வெளிப்படையாகக் காணப்படும் இணக்கங்கள் கண்ணுக்குத் தெரியாது.

  மதக்கலஹத்தில் சிந்தப்படும் ரத்தம் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் அது மானுடத்திற்கு இழுக்கு. மதத்தை வெறுக்காத மானுடத்தை நேசிப்பவர் யாராயினும் கொள்ள வேண்டிய நிலைப்பாடு இது.

  குஜராத்தில் நிகழ்ந்த கலஹத்தில் வெறியாட்டம் நிகழ்த்தியவர் ஹிந்து மற்றும் முஸல்மான் இரண்டு சமூஹங்களையும் சேர்ந்தவர்கள். ஹிந்துப்பெரும்பான்மைப் பகுதிகளில் ஹிந்துக்கள் எல்லை மீறினர். முஸல்மான் பெரும்பான்மைப்பகுதிகளில் முஸல்மான் கள் எல்லை மீறினர். நிஷ்பக்ஷமாகப் பேச விழைபவர் இரண்டு விஷயங்களையும் முன்வைப்பர். மட்டு மீறிய ஹிந்து வெறுப்பினை ஆதாரமாக வைத்துப் பேசினால் மட்டிலும் ஹிந்துக்களை மட்டிலும் குற்றவளிக்கூண்டிலேற்ற முடியும்.

  1984ல் நிகழ்ந்த கலஹம் காங்க்ரஸ் கட்சியின் அத்யக்ஷகர் ஸ்ரீமதி இந்திராகாந்தியின் படுகொலையைத் தொடர்ந்து அதன் கட்சியைச் சார்ந்தவர்களால் கட்சி வெறியால் நிகழ்த்தப்பட்டது வக்காலத்துக்கள் உள்ளன.

  இதனை ஹிந்து சீக்கிய கலஹமாகக் காணவிழைதல் ஹிந்து வெறுப்பின்பாற்பட்டது. அவ்வளவே. இதுவரை பொதுதளத்தில் பெருமளவில் சீக்கியர் தரப்பிலிருந்து இந்த கலஹத்திற்காக அவர்கள் தண்டனை எதிர்பார்ப்பது காங்க்ரஸ் வ்யக்திகளுக்கு. அதுவும் அவர்கள் ஹிந்துக்கள் என்ற படிக்கல்ல. அப்பாவி சீக்கியர்களைக் கொன்ற காங்க்ரஸ் கயவர்கள் என்ற குற்றத்தை சீக்கியர்கள் அவர்கள் மீது சுமத்த முற்படுவதால்.

  சங்கத்தின் சித்தாந்தத்திலிருந்து கடுமையாக வேறுபடும் சர்தார் குஷ்வந்த் சிங்க், க்யனி ஜெய்ல் ஸ்ங்க் போன்றோர் கூட கலஹ காலத்தில் சங்க பரிவாரத்தினர் சீக்கியர்களைக் காக்க எடுத்த முயற்சிகளை ச்லாகித்துள்ளனர்.

  \\கலவரத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் எந்த தயக்கமும் இன்றி பெருமளவில் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்களே,அவர்களுக்கு வோட்டும் அளிக்கிறார்களே

  பெருமளவில். மனமோஹன சிங்கனார் மற்றும் மோன்டேக் சிங்க் ஆலுவாலியா. இரண்டின் கீழ் பலகோடி என்பது மிகப்பெரும்பான்மையா என்பதனைச் சரிபார்க்க ராமானுஜத்திடமெல்லாம் போகவேண்டாம். highly subjective comment.

  Even today the word “jew” is a slur among western evangelical christians. But it is only because of christian countries jews reclaimed their so called promised land named by them as “Israel”. Orthodox Jews are still unreconciled to human reclamation of promised land. Its not without reason that politics has strange bedfellows. Tomorrow even lAlu Yadav or MulAyam Yadav can have alliance with BJP on a drop of a hat. Shri KaruNAnidhi already had alliance with BJP.

  பாஜகா என்றால் ஒதுங்குகிறார்கள் என்பது வெறும் வெறுப்பின் பாற்பட்ட கூற்று. உண்மைக்குப் புறம்பானது. another subjective and baseless exaceration.

  அகாலிதளம் ஏன் பாஜகவுடன் கூட்டு வைக்கிறது. காங்க்ரஸுடன் ஏன் கூட்டு குழம்பு வைப்பதில்லை? Thats pure politics. And akAlis openly support Narendhra bhai.

  \\சீக்கியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது சங்க பரிவாரங்களிடம் தான்.\\

  காலிஸ்தானை ஆதரிக்க விழையும் சீக்கியர்கள் என்று எழுதியிருந்தல் மட்டிலும் மேற்கண்ட வாசகத்தில் லவலேசமாவது உண்மை இருக்கும். என்னுடன் பகவதி ஜாக்ரண் நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் சர்தார்கள் அல்லது நிஜாமுத்தீன் தர்க்காஹ் ஷெரீஃபில் தங்கள் மன்னத் செலுத்த வரும் சர்தார்கள் சங்க பரிவாரத்திடம் அன்புடனேயே இருக்கிறார்கள். எனக்கு ஹிந்துஸ்தானிய இசை போதிக்கும் முஸல்மாணிய உஸ்தாதுகளும் சங்க பரிவாரத்தின் மீது வெறுப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

  ஹிந்துக்கள், முஸல்மான் கள், சர்தார்கள் இவர்கள் அனைவரிலும் இணக்கத்துடன் வாழ விழைபவர்கள் என் கண்களுக்குத் தெரிகிறார்கள். உங்கள் கண்களுக்கு வெறுப்பைக் கக்குவதில் முனைப்பாக உள்ளவர்கள் மட்டிலும் எல்லா சமூஹத்திலிருந்தும் தெரிகிறார்கள்.

  காலிஸ்தான சீக்கியர் என்ன, தேசத்தினைப் பிரித்துக் கூறுபோட விழையும் அனைத்துத் தேச த்ரோஹ சக்திகளும் அவை ஹிந்துவாக இருந்தாலும் முஸல்மானாக இருந்தாலும் க்றைஸ்தவராக இருந்தாலும் தேசத்திற்காக இன்னுயிர் அளிக்கத் தயாராக இருக்கும் சங்க பரிவாரங்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இயல்பே.

  ஆதாரமற்ற வெறுப்புக்களை ஒரு விவாதத்திற்கு அடிப்படையாகக் கொண்டு உரையாடுதல் என்பதைப் போல வ்யர்த்தமான விஷயம் வேறு இருக்கவியலாது.

  வெறுப்பு வெறுப்பையே நாடும். இணக்கம் இணக்கத்தையே எங்கும் காணும்.

  இந்த தேசம் வீழாமல் இருப்பது இணக்கத்தை நாடுவோரால்.

  இணக்கமே என்றும் வெல்லும். வெறுப்பு தோல்வியையே அறுதியில் காணும்.

  நன்றி.

 84. poovannan
  #84

  கிருஷ்ணகுமார் ஐயா

  பஞ்சாப் என்று ஒரு மாநிலம் இருக்கிறது.அங்கு கட்சிகள் இருக்கின்றன.முதல்வர்,எதிர்கட்சி தலைவர்,எம் எல் ஏ க்கள்,பஞ்சாயத்து உறுப்பினர்கள் எல்லாரும் உண்டு.அங்கு காங்கிரஸ் கட்சியில் 84ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை வெற்றி பெற்ற சீக்கியர்களை பற்றி கொஞ்சம் பாருங்களேன்.பா ஜ கா வில் வெற்றி பெற்றவர்,பொறுப்பில் இருப்பவர்களையும் பாருங்கள்.என் கூற்றின் உண்மை விளங்கும்
  அது ஒட்டுமொத்த பஞ்சாபி ஹிந்துக்களின் வெறியாட்டம் என்பதால் தான் எதையும் எளிதில் மறக்காத சீக்கியர்கள் குறிப்பிட்ட சில தலைவர்களை தவிர மற்றவர்களை ஏற்று கொண்டார்கள்.காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாபில் விழுந்த ,விழும் வோட்டுக்களில் சீக்கியரின் வோட்டுக்கள் பெருமளவு.
  அதே போலசீக்கியரின் வோட்டு/இஸ்லாமியரின் வோட்டு பா ஜ க விற்கு விழுமா.மற்ற மாநிலங்களில் கூட்டு உடைந்தது போல அகாலிகளின் கூட்டு உடைந்தால் எந்த ரம்போ முன் நிறுத்தப்பட்டாலும் பா ஜ க பஞ்சாபில் தமிழகத்தின் நிலைக்கு வந்து விடும்

  நாம் ஐந்து நமக்கு இருவத்தி ஐந்து என்று பேசியவர் இணக்கமானவர் ,ஏற்று கொள்ளபடுவார்.
  லவ் ஜெஹாத் என்று 18 வயதை கடந்த பெண்களை ஏமாற்றி திருமணம் செய்கிறார்கள் என்று முதலில் காதலின் மீது புழுதியை வாரி வீசிய பல மாநிலங்களில் சாதி/.மத மறுப்பு திருமணங்களுக்கு எதிராக வெறியை கிளப்பிய ஹிந்து இயக்கங்கள் இணக்கமானவை
  50 லட்சம் இஸ்லாமிய சோடிகளுக்கு வருடத்திற்கு 22 லட்சம் குழந்தைகள் பிறக்கிறது ஆனால் ரெண்டரை கோடி இந்து ஜோடிக்களுக்கு 55 லட்சம் குழந்தைகள் தான் பிறக்கிறது.இப்படி போனால் இன்னும் சில ஆண்டுகளில் அனைவரும் கொல்லபடுவோம்,அடிமையாக்கபடுவோம் என்று பல மாநிலங்களில் கூட்டம் போட்டு கத்தும்,புத்தகம் புத்தகமாக எழுதும் கூட்டம் இணக்கத்தை நாடுகிறது என்று பொய்களை எழுத மிகுந்த தைரியம் வேண்டும்

 85. poovannan
  #85

  இந்த தேசம் வீழாமல் இருப்பது இணக்கத்தை நாடுவோரால்.

  இணக்கமே என்றும் வெல்லும். வெறுப்பு தோல்வியையே அறுதியில் காணும்.

  கிருஷ்ணகுமார்

  நூற்றில் ஒரு வார்த்தை

  இருக்கும் மசூதிகள் மசூதிகளாக இருக்கட்டும் என்று சொல்பவர்கள் இணக்கத்தை வேண்டுபவர்களா,இல்லை இத்தனை மசூதிகள் இடிக்கப்பட வேண்டும் /அவற்றை இடிக்க போராட்டம் நடத்துபவர்கள் ,இன்கு கோவில்கள் எழுப்பியே ஆக வேண்டும் என்று சொல்பவர்கள் இணக்கமானவர்களா

  விருப்பப்படும் ஆணோ,பெண்ணோ தனக்கு பிடித்த துணை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்,பிடித்த மதத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்பவர்கள் இணக்கத்தை விரும்புபவர்களா அல்லது லவ் ஜெஹாத் என்று பொய்களை பரப்பி வெறியை தூண்டும்/மத மாற்றத்தை தடை செய்வோம் என்று கூக்குரல் இடும் கூடம் இணக்கத்தை வேண்டுபவர்களா

  கல்வியில்,அரசு பணியில் குறைவாக இருக்கும் பாலினம்,சாதி ,மதத்தை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அவர்களும் ஓரளவிற்காவது அனைத்து துறைகளிலும் இடம் பெற இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் இணக்கத்தை வேண்டுபவர்களா,இல்லை அதை எதிர்ப்பவர்கள் இணக்கத்தை வேண்டுபவர்களா

  இணக்கம் என்றால் மசூதியை இடிப்பது,இஸ்லாமியர்களை திட்டுவது ,மாநிலத்தில்,ஒன்பது சதவீதம் இருந்தாலும் ஐந்து தேர்தல்களில் ஒரு இடம் கூட போட்டியிட தராமல் இருப்பது,குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியை கூட கடத்தி பாலியல் வன்முறை புரிந்து கொன்று அதை நியாயபடுத்துவது என்று அர்த்தம் என்று எண்ணி விட்டீர்களா ஐயா

 86. பொன்.முத்துக்குமார்
  #86

  // விருப்பப்படும் ஆணோ,பெண்ணோ தனக்கு பிடித்த துணை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்,பிடித்த மதத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்பவர்கள் இணக்கத்தை விரும்புபவர்களா அல்லது லவ் ஜெஹாத் என்று பொய்களை பரப்பி வெறியை தூண்டும்/மத மாற்றத்தை தடை செய்வோம் என்று கூக்குரல் இடும் கூடம் இணக்கத்தை வேண்டுபவர்களா //

  ஒரு பானை சோற்றுக்கு …

 87. க்ருஷ்ணகுமார்
  #87

  \\அது ஒட்டுமொத்த பஞ்சாபி ஹிந்துக்களின் வெறியாட்டம் என்பதால் தான் எதையும் எளிதில் மறக்காத சீக்கியர்கள் குறிப்பிட்ட சில தலைவர்களை தவிர மற்றவர்களை ஏற்று கொண்டார்கள்.\\

  பூவண்ணன் ஐயா,

  இப்படிப்பட்ட பொய்யைக் கூறுவதற்கு தைரியமெல்லாம் வேண்டாம். ஹிந்து வெறுப்பு மட்டிலும் இருந்தால் போதும். காங்க்ரஸ் வெறியாட்டத்தை ஹிந்து வெறியாட்டம் என்று கூசாமல் கூற ஹிந்து வெறுப்பு மட்டிலும் போதும். அதே ஹிந்து வெறுப்பு தானே 2002 கலஹத்தில் குஜராத்தில் ஹிந்துக்கள் முஸல்மான் களால் கொல்லப்பட்ட போதிலும் குற்றவாளிக்கூண்டில் ஹிந்துக்களை மட்டிலும் ஏற்ற விழைகிறது.

  \\மற்ற மாநிலங்களில் கூட்டு உடைந்தது போல அகாலிகளின் கூட்டு உடைந்தால் \\

  ம்……ஆசா துக்கஸ்ய காரணம். உங்களது நிறைவேறாத ஆசைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  \\நாம் ஐந்து நமக்கு இருவத்தி ஐந்து என்று பேசியவர் இணக்கமானவர் ,ஏற்று கொள்ளபடுவார்.\\

  ஆம்! முன்னம் அப்படித்தான் பேசினார்.

  ஆனால் இன்று குஜராத் ஏன் ஹிந்துஸ்தானமெங்கும் மதப்ரச்சினைகளை மோடி மட்டிலும் பேசுவதில்லை. மற்ற எல்லா அரசியல் வாதிகளும் பேசுகிறார்கள். பாஜகா அரசிலிருக்கும் எந்த மாகாணத்திலும் ஹிந்துமுஸ்லீம் கலவரமில்லை. குஜராத்தில் இன்று ஹிந்துக்களும் முஸல்மான் களும் கலவர பீதி இல்லாது இருக்கிறார்கள். மோடி இணக்கத்தை நாடுகிறார் என்று பூவண்ணன் ஐயா ஒப்புக்கொள்கிறாரா இல்லையா என்பது விஷயமில்லை.

  வஸ்தான்வி, சித்திக்கி போன்ற முஸல்மாணிய பெருந்தகைகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். குஜராத்தில் பல முஸல்மான் மக்களும் உணரத்துவங்கி உள்ளது தான் பலப்பல முஸல்மான் களும் மோடியிடம் உள்ள தலைமைக் குணங்களையும் வளர்ச்சி சார்ந்த அவரது vision ஐயும் ச்லாகிக்க வைக்கிறது.

  பூவண்ணன் ஐயா அவர்கள் என்றாவது நடுநிலை தவறாது நிகழ்வுகளை அவதானிக்க விழைகிறார் என்ற போது மட்டிலும் அது சாத்தியம். ஹிந்து வெறுப்பு என்ற அலகீடில் மட்டும் நிகழ்வுகளை நிறுத்தால் ஹிந்துக்களை மட்டிலும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் போக்கிலிருந்து மேற்கொண்டு உங்களால் சிந்திக்க இயலாது.

  \\கூட்டம் போட்டு கத்தும்,புத்தகம் புத்தகமாக எழுதும் கூட்டம் இணக்கத்தை நாடுகிறது என்று பொய்களை எழுத மிகுந்த தைரியம் வேண்டும்\\

  விபரீத சிந்தனையாளர்கள் ஹிந்துக்களில் இருப்பது மட்டிலும் தானே பக்ஷபாதிகளுக்குத் தெரியும். க்றைஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் வெறிகொண்டு சமூஹப்பூசல்களை வளர்க்கும் மதவெறியாளர்கள் இல்லை என்று கூசாது பொய் சொல்ல ஹிந்து வெறுப்பாளர்களுக்கு தைரியம் இருக்கிறது அல்லவா. அந்த தைரியம் தான் ஹிந்து விபரீத சிந்தனையாளர்களையும் ஊக்குவிக்கிறது என்பது தாங்கள் அறியாததா?

  ஆனால் ஹிந்து, க்றைஸ்தவ, இஸ்லாமிய போன்று அனைத்து மதங்களில் இருக்கும் வெறுப்பாளர்களையும் மீறி இணக்கத்தை நாடுவோர் அதை நிச்சயம் நாட்ட இயலும்.

  மோடியின் குஜராத்தில் மோடி அவர்கள் இலவசப்பிச்சைகள் போட்டு ஓட்டுப் பொறுக்கவில்லை. அனைத்து சமூஹ மக்களுக்கும் ஒட்டு மொத்த நன்மைகள் பயந்து அதன் மூலம் மூன்று முறை ஜனநாயக ரீதியில் வென்று சர்க்கார் அமைத்துள்ளார்.

 88. க்ருஷ்ணகுமார்
  #88

  ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கோவில்கள் மாற்று மதத்தவரால் இடிக்கப்பட்டதை ஹிந்து வெறுப்பாளர்களோ மாற்று மதத்தவர்களோ கேட்டதில்லையே? முஸல்மாணியப் பெண்ணை மணந்த ஹிந்து இளைஞனை வெட்டிக்கொன்ற முஸல்மாணிய வெறியர்களை கேள்வி கேட்பதற்கோ அந்த ஹிந்து இளைஞனின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்கோ நாதியில்லையா?

  என்றெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தால் இணக்கம் பற்றி பேச முடியாது.

  ஏனென்றால் இணக்கம் என்பது இது போன்ற துர்சம்பவங்களையும் மீறி பேணப்பட வேண்டிய விஷயம். முஸல்மானால் கொல்லப்பட்ட ஹிந்துவிற்காக வருந்தும் முஸல்மானாலும் ஹிந்துவால் கொல்லப்பட்ட முஸல்மானுக்காக வருந்தும் ஹிந்துவாலும் மட்டிலும் அது சாத்தியம். அது குஜராத்தில் நிகழ்ந்து வருகிறது. மோடியை பூவண்ணன் ஐயா ஒப்புக்கொள்வது என்ன ஒரு காலத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ், மீடியா என அனைத்து தரப்பிலிருந்தும் யாரும் ஒத்துக்கொள்ளத் தயாரில்லை. ஆனால் காலம் கடக்கக் கடக்க ஒவ்வொருவராக அவரைப் புரிந்து கொள்ள முயற்சித்தனர். இன்று பலரும் அவரைப் புரிந்து கொள்கிறார்கள்.

  constructive criticism என்பது அவசியமே. புழுதிவாறித் தூற்றுவதற்கு ஒன்றும் ப்ரயத்னமெல்லாம் தேவையில்லையே.

  ஹிந்துக்களை அடியோடு அழித்தொழிக்க வேண்டும் அல்லது முஸல்மான் களை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களால் ஒருதலைப்பக்ஷமாக மட்டிலும் தான் பேச முடியும். அடுத்த தரப்பு ஞாயம் கூட அந்யாயமாகத் தான் தெரியும்.பக்ஷபாதிகளுக்கு இணக்கம் என்ற சொல் எப்படி ஜீரணமாகும்?

  மக்களை சோம்பேறியாக்கி இலவசப்பிச்சைகள் அளித்து அதன் மூலம் ஓட்டுப் பொறுக்குவதை அலகீடாக வைக்க முயன்றால் அனைத்து மக்களுக்கும் முன்னேற்றத்தைக் கொடுத்து இலவசங்களைக் கண்ணில் காட்டாது ஆனாலும் ஜனநாயக ரீதியில் ஒரு ராஜ்யத்தை மூன்று முறை ஜெயிப்பதை புரிந்து கொள்ளவும் முடியாது. ஜீரணிக்கவும் முடியாது.

 89. poovannan
  #89

  இந்த வார ஆழம் இதழில் மோடியை பற்றிய பொய்கள் அள்ள அள்ள குறையாமல் கிடைக்கிறது

  http://www.aazham.in/?p=3402

  http://en.wikipedia.org/wiki/Haj_subsidy

  இந்தியாவிற்கு மொத்தமாக 125000 அருகில் ஹஜ் இடங்கள்.இதில் 41000 குஜராத்திற்கா
  எங்கிருந்து இந்த எண்ணிக்கை வந்தது என்று தெரிந்து கொள்ளலாமா
  13000 பேரில் 68 சதவீதம் இஸ்லாமியர்கள்.13000 பேருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டதா

  http://en.wikipedia.org/wiki/Sabarmati_Riverfront_Development_Project

  A 1997 EPC study of the estimated 10,000 families living along the riverbank concluded that 4,400 were to be resettled and rehabilitated. In 2003, the Gujarat government transferred land to AMC, stipulating that resettlement and rehabilitation was to follow epc recommendations. This has been challenged as a severe undercounting. A survey in 2003 by Swapan Garain of the International Institute for Social Entrepreneurship Management, Mumbai, established that the number of slum households along the riverbank was 14,555, of which 6,293 needed to be rehabilitated.
  View of Sabarmati Riverfront May 2012, Ahmedabad

  The EPC plan assures slum dwellers secure tenure, access to roads, infrastructure services and a 2–3 km proximity to their present location, to maintain livelihood sources. In 2005 however, Girish Patel, a social activist in Ahmedabad, filed a petition in the Gujarat High Court, arguing that the scheme would in fact disrupt livelihoods. Acting on the petition, on 8 March 2005, the court issued a stay order on eviction and called for policy documents,

  The revenues would be generated from the sale of proclaimed land. INR12 billion (US$210 million) project includes walkway development, road development along the river, promenades, garden, construction of 4000 houses under slum rehabilitation, amusement parks, golf courses, water sports park and construction of Kotarpur Weir.[4p://en.wikipedia.org/wiki/Sabarmati_Riverfront_Development_Project

  பல ஆண்டுகளாக வசித்து வருகிற இடத்தை விட்டு துரத்தி விட்டு அதை விற்று/ஏலம் விட்டு வருகிற பணத்தில் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு மட்டும் வீடு கட்டி தருவதில் என்ன பெருமை

  எவ்வளவு பேர் பாதிக்கபட்டிருக்கிரார்கள் என்பதில் ஆயிரம் குழப்பங்கள்,வழக்குகள்,மாறுபட்ட எண்ணிக்கையை தரும் குழுக்கள்
  ஆனால் பெரிய சாதனை போல 13000 பேரில் 68%இஸ்லாமியர்கள் .அவர்கள் அனைவருக்கும் வீடுகள் என்ற தம்பட்டம்

 90. poovannan
  #90

  http://www.outlookindia.com/feedbacks.aspx?typ=100&val=283393&source=web&commentid=401506#401506

  Recently, the Times of India reported that Gujarat with a 9 % Muslim population has 10% Muslim personnel in its police stations. No other state matches this figure.

  Here is what I found from Frontline of 2006 that Muslim population in Gujarat as about 9% while in Police the figure was under 6% as per National Crime Records Bureau Record for 2004; http://www.frontlineonnet.com/fl2324/stories/20061215002503300.htm So Muslim representation in Police force in Gujarat had jumped to 10 or 11% under the benign rule of Modi! I was impressed. But knowing of Times of India’s record for planted stories, paid news etc, decided to do some independent investigation.

  As per National Crime Records Bureau, ncrb.nic.in/ during the year 2011 the total police personnel in Gujarat was 71670 out of which muslims constituted 3087 making 4.3% of the total. Andhra Pradesh during 2011 had 8933 muslim police personnel out of a total of 89404 making a total of 10% of the total while in the general population as per 2001 census muslims constituted 9.17% of the population. Of course there are other states with worse figure; Gujarat is not at the bottom, it is not at the top. It is one of the average states.

  Times of India and Economic Times had earlier come up with stories of Teesta Spicing up Gujarat atrocity stories. The rebuttal lawandotherthings.blogspot.in/2009/04/expose-of-activism-and-truth.html has not been given enough publicity and even after verdict in Naroda Patiya case, there are sites which repeat the TOI story.
  R. Saroja
  Bombay, India

  பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி மஸ்தானே
  என்று தான் பாட வேண்டும் போல

  மோடியை பற்றிய கட்டுரை என்றால் நடு நடுவே பல ஆயிரம்,பல லட்சம் ,உலகத்திலேயே சிறந்த ,பல விருதுகள் பெற்ற போன்ற வார்த்தைகளை நடு நடுவே போட்டு கொள்ள வேண்டும் என்று விதியா
  வாய் கூசாமல் ஆங்கிலம் ,ஹிந்தி,தமிழ் என்று எந்த மொழியில் மோடியை பற்றி எழுதினாலும் பொய்களாக அடித்து விடுவதன் மர்மம் என்ன

  மோடியின் நல்லாட்சியில் பல காவல்துறை உயர் அதிகாரிகள் ,இன்ஸ்பெக்டர்கள் சிறையில் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்கள் போலி என்குண்டேர்களுக்காக .அதில் ஒரு பேர் கூட இஸ்லாமிய பெயராக தெரியவில்லையே.எப்படி இஸ்லாமிய காவல்துறை பணியாளர்களை தவறு செய்ய விடாமல் மோடி தடுத்து இருக்கிறார் என்று அவர் புகழ் பாட மறந்து விட்டீர்களே

 91. poovannan
  #91

  மோடியின் புகழ் பாடி கட்டுரை எழுதுபவர்கள்,பின்னூட்டம் இடுபவர்கள் தயை கூர்ந்து பல ஆயிரம் பேரை பறந்து சென்று காப்பாற்றினார்,இந்தியாவிலேயே குஜராத்தில் தான் இஸ்லாமியர் அதிக சதவீத்தில் காவல்துறையில் உள்ளனர் ,பாதிக்கப்பட்ட மக்களில் 68% இஸ்லாமியராக இருந்தாலும் அனைவருக்கு வீடுகள் கட்டி கொடுத்தார்,குஜராத் இஸ்லாமியருக்கு இருந்த ஹஜ் பயண எண்ணிக்கையான 3500 ஐ 41000 ஆக உயற்றினார்,பல ஆயிரம் பெண்கள் வெளி மாநிலங்களில் இருந்து குஜராத் வந்து படிக்கின்றார்கள்,வேலை செய்கின்றார்கள்,பெண் கல்வி மிகவும் உயர்ந்து விட்டது,தாய் சேய் இறப்பை குறைத்து மகத்தான சாதனை என்று வெறுமே அடித்து விடாமல் அதற்கான ஆதாரங்களை,சரியான தகவல்களை தர முயற்சி செய்யுங்கள்
  மது கிஸ்வர்ஜி முதல் நம் ஊரில் மோடிநாமா பாடும் அனைவரும் கொஞ்சமாவது உண்மையின் அருகில் வர வேண்டும் என்று முயற்சித்தால் நல்லது

 92. ரங்கன்
  #92

  திரு பூவண்ணன்

  ஹிந்துக்களுக்கு மிகவும் பெரிய கொடுமைகள் செய்ததாக முக்கியமாக இரண்டுபேரை சொல்வது உண்டு. தைமூர் / அவுரங்கசேப் – ஒன்று செய்யுங்களேன் – இவர்கள் இருவரும் இஸ்லாமியர்கள் அல்லர் – இஸ்லாத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த ஹிந்துத்வா வெறியர் இருவர் அவர்களைப் போல நடித்தனர் !! என்று கூறி மகிழ்ந்து கொள்ளுங்களேன்

 93. meeran
  #93

  edhi eluthiyavana padikindravan ellam mutal andru ninaikatha

  edhai eludiya congress enkindra kodum thiviravathigal

 94. ariyan
  #94

  Next Prime-minister of India !MODI!Hindustan Zindabad !

 95. R Bhaskaran
  #95

  மோடியின் சாதனைகள் பற்றி எவ்வளவுதான் பிஜேபி முன்வைத்தாலும் குஜராத் கலவரங்களே பிற கட்சிகளின் பிரதான ஆயுதமாக இருக்கப்போகிறது. இந்தநிலையில் சுதந்தர இந்தியாவில் இதுவரை நடந்திருக்கும் கலவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்பது மிகவும் அவசியம்.

  ஐந்து நபர்களுக்குக் குறைவாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. வகுப்புவாதம் சார்ந்த குண்டுவெடிப்புகளும் இதில் சேர்க்கப்படவில்லை.

  1967க்குப் பிறகு நூற்றுக்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களும் அப்போது ஆட்சியில் இருந்த கட்சியும்.
  எண் வருடம் இடம் உயிரிழப்பு ஆண்ட கட்சி முதலமைச்சர்

  1 1967 ஹாதியா ராஞ்சி 183 ஜன கிராந்தி தளம் எம்.பி.சின்ஹா
  2 1969 அகமதாபாத் 512 காங்கிரஸ் ஹிதேந்திர கே தேசாய்
  3 1970 ஜல் காவ் 100 காங்கிரஸ் வசந்தராவ் நாயக்
  4 1979 ஜம்ஷேட்பூர் 120 ஜனதா கட்சி கர்பூரி தாகூர்
  5 1980 மொராதாபாத் 1500 காங்கிரஸ் வி.பி.சிங்.
  6 1983 நெலே, அஸ்ஸாம் 1819 ஜனாதிபதி ஆட்சி
  7 1984 பிவந்தி 146 காங்கிரஸ் வசந்ததா பட்டில்
  8 1984 டில்லி 2733 காங்கிரஸ் (யூனியன் பிரதேசம்) –
  9 1985 அகமதாபாத் 300 காங்கிரஸ் எம்.எஸ்.சோலன்கி
  10 1989 பகல்பூர் 1161 காங்கிரஸ் எஸ்.என்.சிங்
  11 1990 டில்லி 100 யூனியன் பிரதேசம்
  12 1990 ஹைதராபாத் 365 காங்கிரஸ் சென்னா ரெட்டி
  13 1990 அலிகர் 150 ஜனதாதளம் முலாயம் சிங்
  14 1992 சூரத் 152 காங் + ஜனதா தளம் சிமன்பாய் படேல்
  15 1992 கான்பூர் 254 ஜனாதிபதி ஆட்சி
  16 1992 போபால் 143 ஜனாதிபதி ஆட்சி
  17 1993 மும்பை 872 காங்கிரஸ் சுதாகர் ராவ் நாயக்
  18 2002 குஜராத் 1267 பி.ஜே.பி. நரேந்திர மோடி

  மேலே இடம்பெற்றிருக்கும் 18 கலவரங்களில் 10 காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது நடந்திருக்கின்றன. மூன்று ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தபோதும் நான்கு பிற கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் நடந்திருக்கின்றன. பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது ஒன்று.

  இதுமட்டுமல்லாமல் 1990 முதல் 1995 வரை குஜராத்தில் மட்டும் 245 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குஜராத்தின் மத மோதல் வரலாறு இது. மோடியின் ஆட்சி காலத்தில் 2002க்குப் பிறகான பத்து வருடங்களில் எந்த பெரிய மத மோதலும் நடந்திருக்கவும் இல்லை. இத்தனைக்கும் மோடி பெரும் வில்லனாகச் சித்திரிக்கப்படும் அந்த வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களில் 30%த்தினர் இந்துக்கள்.

 96. Mohamed Rafik
  #96

  அருமயான கட்டுரை மருதன் அய்யா. உங்களைப் போன்றவர்கள் இந்தியாவில் இருப்பதினால் தான் எங்களைப் போன்றவர்களுக்கு இந்தியாவின் மதச்சார்பின்மையிலும், மனிததத்தன்மையிலும் கொஞ்ச நஞ்சம் நம்பிக்கை இன்னும் இருக்கிறது.

  // குஜராத் அரசு ஆவணங்கள் சொல்வதைப் போலவே அந்த மாநிலம் வளர்ச்சியடைந்திருந்தாலும்கூட//

  குஜராத் முன்னேறி உள்ளது என்று அரசு ஆவனங்கள் எல்லாம் சொல்லல. பொய் மீடியாக்களும், கூலிப் படைகளும் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறது. RBI report என்கிற அரசு ஆவணம் குஜராத் பின்தங்கிய மாநிலத்தில் இருப்பதாகத் தான் காட்டுகிறது. ரிசர்வ் வங்கியின் தோலுரிப்பைப் பற்றிய கட்டுரை இங்கே.

  http://manithaabimaani.blogspot.com/2013/09/blog-post_2016.html

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: