கொல்கத்தா புத்தகக் கண்காட்சி

Kolkata Course 1ஆசியாவின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. சில முக்கிய விவரங்கள்.

 • 37வது கொல்கத்தா உலகப் புத்தகக் கண்காட்சி ஜனவரி 26 அன்று ஆரம்பமாகியுள்ளது. வழக்கமாக 12 நாள்கள் நடைபெறும் கண்காட்சி இந்த முறை மம்தா பாணர்ஜியின் ஆலோசனையின்படி 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10 வரை கண்காட்சி நடைபெறும்.
 • இடம் மிலன் மேலா மைதானம். முழுமையான வரைபடம் இங்கே.
 • சென்ற ஆண்டு விற்பனை 15 கோடி.  இந்த ஆண்டு விற்பனை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.
 • சென்ற ஆண்டு 14 லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த முறை மேலும் 3 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
 • போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 • நுழைவுக் கட்டணம் இல்லை.
 • கொல்கத்தாவின் சில முக்கிய இடங்களில் இருந்து அரங்கத்துக்குச் செல்ல இலவசப் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  புத்தக ஆர்வலர்களைக் கவர்ந்து ஈர்க்கவே இந்தத் திட்டம்.
 • கிட்டத்தட்ட 800 பதிப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.
 • இந்த ஆண்டின் சிறப்பம்சம், பங்களாதேஷ். (சென்ற ஆண்டு இத்தாலி).
 • அமர்த்தியா சென், அமிதாவ் கோஷ், சஷி தாரூர்,  பிகோ ஐயர் உள்ளிட்ட 85 பிரபலங்கள் உரையாடுகிறார்கள். முழு விவரம் இங்கே.

0

 

2 comments so far

 1. சரவணன்
  #1

  பொறாமையாக இருக்கிறது! சென்னையில் பபாசியின் அபத்த விதிகளால் முக்கியமான ஆங்கிலப் பதிப்பகங்கள் வருவதில்லை- உதாரணம் பெங்குவின், ரேண்டம் ஹவுஸ். ஆங்கில ஊடகங்கள் சென்னை புக்ஃபேரைக் கண்டுகொள்வதில்லை. ஆங்கிலத்தில் எழுதும் பிரபல எழுத்தாளர்கள் யாரும் வருவதில்லை. தமிழில் வலைப்பதிவு எழுதுபவர்களும் ஆங்கிலப் புத்தக அரங்குகள் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை (எட்டிப் பார்த்திருந்தால் அது பற்றிய ஒரு வரிக் குறிப்புகூடப் பதிவுகளில் இல்லை)

 2. அ. சரவணன்
  #2

  தாகூர், விவேகானந்தர் போன்ற மாபெரும் சிந்தனையாளர்கள் வங்காள மண்ணின் மைந்தர்களாக போய்விட்டார்களே என்று பொறாமை கொண்டதுண்டு. இப்போது மக்களும் அரசும் கொண்டுள்ள மதிப்பைப் பார்க்கும்போது அவர்கள் பொருத்தமான இடத்தில்தான் பிறந்திருக்கிறார்கள் என்று உணரமுடிகிறது.

  அரசாங்கத்திற்கு:

  நந்தனம் போன்ற இடத்திற்கு மிகப்பெரிய தொகையை வாடகையாக கொடுத்து நடத்தினால் நுழைவுக்கட்டணம் வாங்குவது அவசியமாகி விடுகிறது. அவ்வாறில்லாமல், அரசாங்கமே தனக்குச் சொந்தமான இடத்தில் இலவசமாக நடத்த அனுமதிக்கலாம். (அட… ஓமந்தூரார் தோட்டத்துல கூட ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் சும்மாதாங்க இருக்கு!)

  கண்காட்சிக்கு இலவசப்பேருந்து என்பது நம் மக்களால் தவறாகப் பயன்படுத்தப்படலாம். எனவே, கட்டணம் வாங்கியே ‘சிறப்புப் பேருந்துகள்’ இயக்கலாம்.

  பபாசிக்கு:

  புத்தகக் கண்காட்சியின் நோக்கம் வெறும் புத்தகங்களை விற்கும் சந்தையாக மட்டுமில்லாமல், வாசகர்களையே எழுத்தாளர்களாக நிலையுயர்த்தும் முன்முயற்சிகளை பபாசி செய்யலாம்.

  புத்தகக் கண்காட்சி கொஞ்சம் கொஞ்சமாக கோடைகால பொருட்காட்சி போல ஆகி வருவது கவலையளிக்கிறது. அதையும் கொஞ்சம் கவனிக்கலாம்.

  முயற்சித்தால் புன்னகை அரங்கத்தில் இன்னும் சிறந்த சிந்தனையாளர்களின் உரையாடல்களை ஏற்பாடு செய்யலாம். இந்த ஆண்டு ‘சர்ச்சைக்குரிய அரசியல்வாதி’ என்ற தயக்கத்தைத் தாண்டி வைகோவை உரையாட வைத்தது பாராட்டுக்குரியது. மிகச் சிறப்பாக பேசினார். நன்றி!

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: