காஷ்மிரும் மௌனத்தின் அலறலும்

Mounathin Alaral 1 copyஇந்தியப் பிரிவினை குறித்து தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியப் பதிவு, மௌனத்தின் அலறல்.  ஊர்வசி புட்டாலியா எழுதிய The Other Side of Silence என்னும் நூலை கே.ஜி. ஜவர்லால்  எளிய, அழகிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.

முன்னதாக கிழக்கில் வெளியான ஆண்ட்ரூ வைட்ஹெட் எழுதிய காஷ்மிர் முதல் யுத்தம் புத்தகத்துக்கும் மௌனத்தின் அலறலுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.

  • இரண்டுமே நேரடிப் பதிவுகள் (reportage).
  • முதல் காஷ்மிர் யுத்தம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் போதவில்லை, நேரடியாகக் களத்துக்குச் சென்று சாட்சியங்களைச் சந்தித்துப் பேசி அவர்களுடைய கதையைப் பதிவு செய்யவேண்டும் என்பது ஆண்ட்ரூ வைட்ஹெட்டின் நோக்கம். ஊர்வசி புட்டாலியாவின் நோக்கமும் இதுவேதான். பிரிவினை குறித்து பல்லாயிரம் பதிவுகள் இருந்தபோதும், பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவில்லை என்னும் உந்துதலின் விளைவாக இந்நூல் உருவானது.
  • Oral History எனப்படும் முறையில் சாட்சியங்களின் நேரடிப் பதிவுகள் முக்கிய ஆவணங்களாக இந்த இரு நூல்களிலும் உருவாவதைக் காணலாம்.
  • இரு நூல்களுமே இதுவரை நாம் அறிந்திராத மனிதர்களையும் இதுவரை சொல்லப்படாத கதைகளையும் நமக்கு அறிமுகம் செய்கிறது.
  • ஆவணங்களையும் பிரதிகளையும் மட்டுமே ஆராய்ந்து வரலாற்று நூல்களை உருவாக்கிவிடமுடியாது; களப்பணி அத்தியாவசியமானது என்பதை இந்த இரு நூல்களும் உணர்த்துகின்றன.
  • வரலாறு என்பது தலைவர்கள் பற்றியது மட்டுமல்ல, அது சாமானியர்களைப் பற்றியது என்னும் மிகப் பெரிய புரிதலை இந்த இரு நூலாசிரியர்களும் நமக்கு ஏற்படுத்துகிறார்கள்.

காஷ்மிர் முதல் யுத்தம் குறித்து நான் முன்னர் எழுதிய பதிவு.

மௌனத்தின் அலறல், இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலங்களை உள்ளடக்கிய ஒரு புத்தகம். இதை வாசித்து முடிப்பது மிகவும் கடினம். மொழியல்ல, காரணம். இதிலுள்ள நிகழ்வுகள் நெஞ்சை உலுக்கியெடுக்கக்கூடியவை.  அகிம்சையால்தான் சுதந்தரம் பெற்றோம் என்று சாதிப்பவர்கள் ஒருமுறை இதை வாசித்துவிடுங்கள்.

352 பக்கங்கள் / விலை ரூ.250

8 comments so far

  1. க்ருஷ்ணகுமார்
    #1

    தோழர் மருதன்,

    முதலில் மிகவும் சுமாரான புஸ்தக அறிமுகம்.

    \\\\மௌனத்தின் அலறல், இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலங்களை உள்ளடக்கிய ஒரு புத்தகம். இதை வாசித்து முடிப்பது மிகவும் கடினம். மொழியல்ல, காரணம். இதிலுள்ள நிகழ்வுகள் நெஞ்சை உலுக்கியெடுக்கக்கூடியவை. அகிம்சையால்தான் சுதந்தரம் பெற்றோம் என்று சாதிப்பவர்கள் ஒருமுறை இதை வாசித்துவிடுங்கள்.\\\\

    இந்த வாசகங்களைத் தவிர புஸ்தகம் என்னதான் சொல்கிறது என்பது நீங்கள் பதிவு செய்துள்ள சிலப்பல வாசகங்கள் சொல்லவில்லை.

    அகிம்சையால் சுதந்திரம் பெற்றோம் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்றெல்லாம் புளுகியவர்கள் ஹிந்துஸ்தானம் பிளந்த பின் நிகழ்ந்த கோர மதக்கலஹங்களையும் அதில் சிந்தப்பட்ட ரத்தத்தையும் அவஹேளனம் செய்பவர்கள் என்று சொல்வேன்.

    பரவாயில்லை. இடதுசாரியின் வாதம் என்றாலும் நான் நூற்றுக்கு நூறு ஒப்புக்கொள்ளும் விஷயம்.

    அப்படின்னு சொல்லலாம் என்றுபார்த்தால் இப்படி உரலால் அடித்துத் தள்ளுகிறீர்களே!!!!!!!!

    “காஷ்மிர் முதல் யுத்தம் குறித்து நான் முன்னர் எழுதிய பதிவு.”

    இடதுசாரிகளுக்கு எப்பவும் குசும்பான ஹாஸ்ய ரசம் உண்டு என்பதும் சீனா, ரஷ்யா என்றால் ஒரு ந்யாயம் ஹிந்துஸ்தானம் என்றால் வேறு ந்யாயம் என்பதும் தெள்ளத் தெளிவாக படம் காட்டியுள்ளீர்கள் மேற்படி வ்யாசத்தில். என்னென்ன முத்தெல்லாம் உதிர்ந்துள்ளது!!!!!!!!!!!!!!!!

    ————————

    \\\\\\\\\\\\// காஷ்மீர் இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சொந்தமானதல்ல. அது காஷ்மீரிகளுக்குச் சொந்தமானது. முடிவெடுக்கவேண்டியவர்கள் அவர்கள். அவர்கள் மட்டும்தான்.//

    இந்திய வெறுப்பு மட்டுமே இக்கட்டுரையின் அடிநாதம் என்பதற்கு இந்த ஒரு வரி போதும். காஷ்மீரிகள் இந்தியகளே, எனவே காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமே!\\\\\\\\\\\

    \\\\\\மருதன் said…
    Ramachandranwrites : காஷ்மீரிகளே முடிவு செய்துகொள்ளட்டும் என்று நான் சொன்னது, இந்துக்களையும் சேர்த்துதான்.\\\\\\\

    \\\\\\\\//பாகிஸ்தான் இந்தியாவுடன் சேர்ந்திருக்கவேண்டுமா பிரிந்திருக்கவேண்டுமா என இந்தியா முழுவதும் வாக்கெடுப்பு நடத்தி…///

    ஏன் இந்தியாவிடம் நடத்தவேண்டும்? பாகிஸ்தானிடம் அல்லவா நடத்தவேண்டும்?\\\\\\\

    \\\\\லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். அந்த வகையில் சமஸ்தானங்களும் சரி, விடுதலை பெற்ற அரசுகளும் சரி, பிரதேங்களில் மட்டுமே கவனம் செலுத்தின.\\\\\

    \\\\\மீண்டும் சொல்கிறேன். காஷ்மீரின் எதிர்காலத்தை காஷ்மீரிகள்தான் தீர்மானிக்கவேண்டும். \\\\\\

    ———————

    you made my day comrade Marudan. I laughed and laughed and laughed thinking of the commie double standards.

    ஏன் சார் சீனா திப்பத்துக்குள் ஜபர்தஸ்தியாக நுழைந்து கம்யூனிஸ வெறி கொண்டு கபளீகரம் செய்தபோது இந்த ஒட்டு நேர்மை ந்யாயம் இதெல்லாம் பேசமாட்டீங்களா? கம்யூனிஸ தோழர்களால் ஆளப்படும் தேசம் என்றால் அவர்கள் திறந்த வீட்டில் நுழையும் ஜந்து போல் எந்த தேசத்திலும் ஜபர்தஸ்தியாக நுழைந்து அதை கபளீகரம் செய்யலாம். அந்த ந்யாயம் உலகத்தில் வேறு எந்த சக்திகளுக்கும் கிடையாது. அப்படித்தானே.

    ஏன் கம்யூனிஸ வெறியர்கள் திப்பத்தில் ஜபர்தஸ்தியாக நுழையும் முன் திப்பத்தியர்களிடம் ஓட்டு எடுத்து ஜனநாயக முறைப்படி கருத்து கேழ்க்கவில்லை?

    தைவான் சீனாவுடன் சேரவே மாட்டேன் என்பார்களாம். ஆனால் சீனா முஷ்டியை உலுக்கி உறுமுமாம். கம்யூனிஸத்தோழர்கள் இங்கு ஒட்டு என்று பாட்டு பாட மாட்டார்களே?

    காஷ்மீர ராஜா ஹரி சிங்க் காஷ்மீரத்தை ஹிந்துஸ்தானத்துக்கு தாரை வார்த்து விட்டார் ஐயன்மீர். இப்படியெல்லாம் ஹிந்துஸ்தானத்திற்கு என்றால் நாட்டமை செய்வீர்கள். ஹாங்காங்க் – இதை சீனா எப்படி ஒட்டு போட்டா மீட்டார்கள். க்ரயத்துக்கு / குத்தகைக்குத் தானே வாங்கினார்கள் பரங்கியரிடமிருந்து.

    அவ்வளவு ஏன். ஓட்டு பாட்டு என்றெல்லாம் வந்தாலும் அதையெல்லாம் சமாளிப்பீர்களே. திப்பத்திலிருந்து எல்லாரையும் விரட்டி விட்டு திப்பத்திய கலாசாரத்தை பூண்டோடு அழித்து அவர்களது பாஷையை அமுக்கி சீன பாஷையை துப்பாக்கி முனையில் நுழைத்து ஓட்டு கூட எடுத்து உலகத்துக்கு இதோ திப்பத் சீனாவைத் தான் விரும்புகிறது என்று கூட செய்வீர்களே.

    இப்படியெல்லாம் வசனம் பேசி ஆனாலும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு செய்வது அக்ரமம் என்று குசும்பாகவும் பேசுவீர்கள்.

    நம்மூர் கொல்கத்தா குமாரி மம்தா தீதி அவர்களிடம் கேட்டா வங்காள கம்யூனிஸ வன்முறைகளை பாங்க்ளாவில் மேடை மேடையாகப் பொழிந்து தள்ளுவார்களே.

    இதெல்லாம் இடதுசாரிகளுக்கு சஹஜம் தானே. பொதுக்கூட்டத்திலேயே ஒரு இடதுசாரி அரசியல் வாதி தங்கள் கொள்கைகளுடன் ஒத்து வராதவர்களை போட்டுத்தள்ளியதை பேசிய பின்பும் நீங்கள் ஜனநாயகம் ஓட்டு என்றெல்லாம் பீலா விடுவது காமடி தானே சார்.

    காஷ்மீரத்திலிருந்து எல்லா ஹிந்துக்களையும் துரத்தியடித்து விட்டு பின்னர் ஓட்டு பற்றி பேசுவது திப்பத்தில் சீனா செய்த செய்து வரும் அக்ரமத்திட்டத்தின் பாற்பட்டுத் தான் அல்லவா தோழர் அவர்களே.

    பகவானே ஏஞ்சலா, காரல மார்க்ஸா, லெனினா, ஸ்டாலினா இந்தக் கம்யூனிஸ இம்சையிலிருந்து லோகத்தை ரக்ஷியப்பா

  2. Dilip
    #2

    அங்கே இந்துக்கள் அனைவரும் விரட்டப்பட்டு கொல்லப்பட்ட பின்பு யார் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது இந்திய இந்துக்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் …

  3. kashyapan
    #3

    அண்ணே கிருஷ்ணகுமார் அண்ணே ! மக்மோகன் நு ஒரு ஒவர்சியர் (லஸ்கராகூட இருக்கலாம்) சம்மந்தப்பட்ட இடத்தை போய் பார்க்காமலே வரை ப்படத்தை வைத்து எல்லை கோட போட்டான் ! அதை இந்த மடிசஞ்சி தலாய் லாமா ஒத்துக்கல ! ஷியங்கே ஷேக் ஒத்துக்கல ! சூயன் லாயும் ஒத்துக்கல ! சரி அத பேசி முடிச்சுருவம் நு சூயென் லாய் இந்தியா வந்தாரு ! அவருகூட பெசப்படாதுனு ராஜெந்திர பிரசாது ஒத்தக்கால்ல நின்னாரு! குடியரசு தலவர் பதவியை ராஜீனாமா பண்ணூவெண்னுமிரட்டினாரு ! அரசாங்கம் சினாவின் பிரதமர் முதன்முதலா இந்தியாவந்த அவருக்கு வரவேற்பு கொடுக்கக் கூடாதுனு சாதிச்ச்சாரு ! கொடுக்கல அண்ணே ! “இந்தியாவின் சீன யுத்தம்” புத்தகத்தை படிங்க ! அதே மாதிரி Un armed victory என்று பெட்றண்ட் ரசல் எழுதின புத்தகத்தைபடியும் ! இவங்கள் லாம் கம்ம்யூனிஸ்டுகள் இல்லை ! எல்லை தகறாருக்கு அப்புறம் சீனாவுக்கு போன முத ஆளு வாஜ்பாய்! ஏன் போனாரு ?கேளுங்க ! வரலாறு கம்யூனிஸ்டுகளுக்கு நு தனியா எழுதப்படலை ! —காஸ்யபன்..

  4. Observer
    #4

    இந்தி – சீனி – காச்யபன் – மருதன் – பாயி – பாயி ! இந்திய நட்புக்கு ஆப்பு அடிச்ச என்ன ஒரு மகத்தான கம்யூனிச எழுச்சித் தலைவரு சூ என் லாய் ! காச்யபன் அய்யா ரொம்ப நல்லவரு. இந்தியாவை எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாரே ! உங்க கருத்துக்கு எப்பிடிப் பொங்கி எழுந்தாரு பாருங்க. கிருஷ்ணகுமார், உங்க சவுக்கடி இந்தியாக் காரனுக்கே உறைக்காது ; கூலிப்படைக்கா உறைக்கும் ? அருணாச்சல பிரதேசம் , காஷ்மீரோட இவன்க அடாவடி முடிஞ்சதுனு நெனக்கறீங்களா ? பாகிஸ்தான் கணவாய் , இலங்கைக் கடல்வழி, பங்களாதேஷ் எல்லைனு எதிர்க்காலத் திட்டங்களுக்காகக் காத்திருக்கோம் ! கால தாமதமானாலும், இந்தியாவ ஒரு வழியா சீனாக்காரங்க கையில பிடிச்சுக் கொடுத்துட்டுக் கண்ண மூடணும் .

  5. ஷாலி
    #5

    //கால தாமதமானாலும், இந்தியாவ ஒரு வழியா சீனாக்காரங்க கையில பிடிச்சுக் கொடுத்துட்டுக் கண்ண மூடணும் .// அப்சர்வர் அண்ணே! நல்லா சொன்னீங்க.

    இந்தியாவை சீனாக்காரன் கையில் பிடிச்சுக்கொடுக்க தடையாயிருந்த தறுதலைப் புலிகளை வேட்டையாட எல்லா ஆயுதமும் கொடுத்து ஆலோசனை கொடுத்தது மண் மோகனுடைய பாராளுமன்ற பார்ப்பன அதிகாரிகள்.ரா, மற்றும் வெளி விவகாரத்துறை மலையாள பார்ப்பனர்கள் மாங்கு,மாங்கு என்று உழைத்து புலித்தோலை உரித்து தொங்கப்போட்டார்கள்.இப்ப சீனாக்காரன் தமிழ்நாட்டு கொல்லைப்பக்கம் ஈழத்தில் வந்து குத்தவச்சுட்டான்.
    ஜெர்மன்காரன் சென்னையில் குண்டு போட்டதும் அம்பிகள் எல்லாம் உடனே ஜெர்மன் பாஷை படித்தார்கள்.இப்ப அவாளேல்லாம் சைனீஸ் கத்துண்டு வாராள்.சீனாக்காரன் ஆட்சியிலும் அவாள்தான் சீப் செக்ரட்டரி.நன்னா ஜமாயுங்கோ!

  6. க்ருஷ்ணகுமார்
    #6

    \\\\\\\இந்தியாவின் சீன யுத்தம்” புத்தகத்தை படிங்க ! அதே மாதிரி Un armed victory என்று பெட்றண்ட் ரசல் எழுதின புத்தகத்தைபடியும் ! இவங்கள் லாம் கம்ம்யூனிஸ்டுகள் இல்லை ! ! வரலாறு கம்யூனிஸ்டுகளுக்கு நு தனியா எழுதப்படலை ! —காஸ்யபன்..\\\\\\\

    ஸ்வாமின், கஷ்யப ப்ரஜாபதி அவர்களே, வரலாறு கம்யூனிஸ்டுகளுக்கு நு தனியா எழுதப்படவில்லை என்று நீங்கள் துண்டு போட்டு தாண்டி சத்யப்ரமாணம் செய்வீர்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஆனாலும் தாங்களும் புறந்தள்ளவியலா இன்னொரு விஷயம் ஹிந்துஸ்தானத்திலே வரலாறு என்ற புளுகு மூட்டைகளாகப்பட்டது கம்யூனிஸ மூளைச்சலவை பெற்ற ஹிந்துஸ்தான தேசவிரோத சக்திகள் ரூம்பு போட்டு யோஜித்து எழுதி தங்கள் ஜோல்னாப்பையிலிருந்து உதிர்த்தார்கள் என்பது. ( பின்னே தலாய்லாமா மடிசிஞ்சி என்றால் வேறென்ன சொல்வதாம்) ஹிந்துஸ்தானத்தை ரஷ்யாவிற்கோ சீனாவிற்கோ பார்ட் பார்ட்டாக சில்லரை வ்யாபாரம் மூலம் தாரை வார்ப்பதா அல்லது ஹோல்சேல் வ்யாபார ரீதியாக செம்புரட்சி செய்து தாரை வார்ப்பதா என்பதில் இவர்களிடையே அபிப்ராய பேதங்கள் உண்டு தான். ஒப்புக்கொள்கிறேன்.

    \\\\\\எல்லை தகறாருக்கு அப்புறம் சீனாவுக்கு போன முத ஆளு வாஜ்பாய்! ஏன் போனாரு ?கேளுங்க\\\\\

    பாருங்கள் ஸ்வாமின், என்னுடைய முதல் உத்தரத்தில் நான் தெளிவு செய்த சமாசாரம், நான் ஒட்டு மொத்த இடதுசாரி விரோதியும் இல்லை ஒட்டு மொத்த வலது சாரி ஆதரவாளனும் இல்லை என்பது. எனக்கு சரி என்று பட்ட விஷயம் சரி தவறு என்று படும் விஷயம் தவறு.

    வாஜபேயர் சப்பாத்தி சாப்பிட்டாரா சோமயாஜி இட்டலி சாப்பிட்டாரா என்பது இங்கே விவாதஸ்பதமான விஷயம் இல்லை.

    காஷ்மீரம் இன்னைக்குப் பிளவு பட்டுள்ள Baqi Sthan க்கு தாரை வார்க்கப்பட வேண்டுமா இல்லையா என்ற கேழ்விக்கு ஜோல்னாப்பைக் காரர்களாகிய வாம பங்க்திகள் காஷ்மீரத்திலிருந்து ஹிந்துக்களையெல்லாம் விரட்டும் வரை காஷ்ட மௌனத்துடன் தபஸ் செய்து விட்டு இன்றைக்குக் குசும்பு மிக ஓட்டெடுத்துப் பார்க்கலாமே என்று அழுகுனி ஆட்டம் ஆடினால் என் சொல்வதாம் என்பது தான் விவாதாஸ்பதமான விஷயம். இந்த நேரடி கேழ்விக்கு பதில் சொல்லாமல் சரித்ரம், பூகோளம், த்ரிகோணமிதி, தமிழ் இலக்கணம் எல்லாம் வாசி என்று ஏன் மூக்கைச்சுத்தி பிலாக்கணம் பாடுகிறீர்கள்.

    உங்களுடைய சீன தேசத்து கம்யூனிஸ மத துஷ்ட தேவதைகள் திப்பத்தில் ஓட்டெடுத்து நுழைந்தனவா? அல்லது சோவியத் ரஷ்யா உருவாக்கும் போது ரஷ்ய தேசத்து கம்யூனிஸ மத துஷ்ட தேவதைகள் கிழக்கு ஐரோப்பாவை ஓட்டெடுப்பின் மூலம் சோவியத் ரஷ்யாவில் நுழைத்ததா?

    கம்யூனிஸ மதப்படி ஊருக்கு ஒரு ந்யாயம் என்றால் கம்யூனிஸ மதஸ்தர்களுக்கு வேறு ந்யாயம் என்ற விஷயத்தை நேரடியாக சிதறு தேங்காயை உடைப்பது போல சொல்லாமல் எதற்காக கம்யூனிஸ சரித்ரம், வ்யாக்யானம், வ்ருத்தி, டீகை என்றெல்லாம் விளக்கெண்ணெய் குடிக்கிறீர்கள்.

  7. Observer
    #7

    புலித்தோல உரிக்கறதுக்கு பதிலா கொட்டைய மட்டும் எடுத்து, ஒரு ‘ஸ்ட்ராடஜிக்’ ஒப்பந்தம் பண்ணிக்கிட்டு , காலா காலமும் சிலோன்காரனுக்கு ஒரு செக்கு வச்சிருக்கலாம்.

    ஆர்க்டிக்குலேருந்து அன்ட்டார்டிக்கு வரைக்கும் நடுங்கி கிடுகிடுக்க வச்சி, மத்திய சர்க்கார மண்டி போட வச்சி, சிலோன் காரன கதற வச்சி, போர நிப்பாட்ட வச்சி சமாதானத்த முத்தமிழ் அறிஞர் கொணாந்துட்டாரேனு நெனச்சுட்டேன். பாருங்க பாப்பானுங்க திருட்டுத்தனத்த.

    இவனுங்க இப்படித்தான் – இஸ்ரேல் காரனுக மாதிரி ‘ஸர்வைவல் இன்ஸ்டின்க்ட் ‘ சாஸ்தி. முகமது கோரிய உள்ள வுட்டு உருது கத்துக்கிட்டு காலத்த ஓட்டுனானுவ; முன்னூறு வருஷம் இங்கிலீசு காரனோட சகவாசம்; ஈரோட்டு மாமுனி கூட வெள்ளக் காரன் கிட்ட எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி பாத்தாரு ‘நீங்க இருந்துக்குங்க , பாப்பானுங்கள வெரட்டி வுடுங்க ‘ னு. அவனுக்கு ஏது நம்ம நாட்டு மேல அக்கற ?

    சரியாச் சொன்னீங்க, சீனா பாஷய கத்துக்கிடுவானுகனு; இப்புடி இங்கிலீச கத்துக் கிட்டுத்தான ஐரோப்பாவுலையும் அமேரிக்காவுலயும் சாப்ட்வேர் ஆட்டம் போடரானுவ; இப்ப பாருங்க, உதயநிதி படத்துக்கு போஸ்டர் ஒட்ட ஆளில்ல ; தமிளின தலீவரே எத்தினியத்தான் பாக்குறது. ஷாலிக் குட்டி, அப்பப்ப இப்புடிப் போட்டுத் தாக்குங்க; புத்தி வருதானு பாப்பம்.

  8. Photo
    #8

    Observerம் க்ருஷ்ணகுமாரும் போடும் பதில்களும் அதன் உள்ளீடுகளும் ஆச்சரியத்தைக் கொடுக்கின்றன.அதிலும் குறிப்பாக ‘கஷ்யப ப்ரஜாபதி’, ‘ஈரோட்டு மாமுனி’ போன்ற வார்த்தைகள்.

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: