கிழக்கு : புதிய புத்தகங்கள் / அறிமுகம் 1

Thamizhaga Arasiyel Varalaru 1 copy1) தமிழக அரசியல் வரலாறு / ஆர். முத்துக்குமார்

இரு பாகங்களில் வெளிவந்திருக்கும் புத்தகம். முதல் பாகம் 1947 தொடங்கி எமர்ஜென்ஸி வரையிலான காலகட்டத்தைப் பற்றியது. இரண்டாவது பாகம், எம்ஜிஆர் ஆட்சிக்காலம் தொடங்கி 2000 வரையிலானது. ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்தியா படிப்படியாக பிராந்திய கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்த கதையின் ஒரு பகுதி இதில் விவரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் தோன்றியது எப்படி, திமுகவும் அதிமுகவும் போட்டிக்கட்சிகளாக வளர்ந்த பின்னணி என்ன, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற சாதிக் கட்சிகள் எப்படித் தோன்றின, தேர்தல் களத்தில் வெற்றி, தோல்விகள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன ஆகியவை இந்தப் புத்தகங்களில் எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளன.

எம்ஜிஆர் தொடங்கிவைத்த கவர்ச்சிவாதம் (populism) எப்படி Thamizhaga Arasiyel Varalaru 2 copyஅரசியல் களத்தை உருமாற்றியது என்பதை அறிந்துகொள்வது முக்கியமானது. ஆந்திராவில் என்டிஆர் ஆட்சியைப் பிடித்தது இப்படித்தான்.  இன்றும்கூட கவர்ச்சிவாதம்தான் ஓட்டு வங்கிகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. அதை மட்டுமே கொண்டு ஆட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

காவிரி பிரச்னை, தென் தமிழகத்தின் சாதிப் பிரச்னைகள், ஈழம்,  கச்சத்தீவு என்று தமிழகத்தின் அரசியல் களத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த பல விஷயங்களின் பின்னணியை முத்துக்குமார் தனது நூல்களில் பதிவு செய்துள்ளார்.

 

India arasiyal Varalaru copy2)  இந்திய அரசியல் வரலாறு / வி. கிருஷ்ணா அனந்த் / தமிழில் : ஜனனி ரமேஷ்

சுதந்தரத்துக்குப் பிறகான இந்திய அரசியலை விவாதிக்கும் கிருஷ்ணா அனந்த் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. தமிழக அரசியல் வரலாற்றோடு இணைத்து வாசிக்கவேண்டிய புத்தகம் இது.  தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் டெல்லியில் நடைபெற்ற மாற்றங்களுக்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுகத் தொடர்புகளை இந்நூலில் இருந்து தெரிந்துகொள்ளமுடியும். இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பதால் புத்தகம் குறித்த விமரிசனத்தைப் பிறகு பார்க்கலாம்.

இந்திய அரசியல் தொடர்ந்து ஆர்வமூட்டக்ககூடியதாகவே இருக்கிறது. இந்திய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு எழுத்தாளர்களும்கூட தொடர்ந்து இந்தியா குறித்து ஆய்வு செய்துகொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். பாட்ரிக் ஃபிரெஞ்ச், வில்லியம் டார்லிம்பிள், மார்க் டுல்லி போன்றோரை உதாரணமாகச் சொல்லலாம். இந்திய எழுத்தாளர்களிடையே சர்வதேச கவனம் பெற்றவர், சமீபத்தில் ராமச்சந்திர குஹா. கிருஷ்ணா அனந்தின் நூலை குஹாவின் நூலோடு ஒப்பிடலாம்.  ஒரே ஒரு வித்தியாசம். ராமச்சந்திர குஹாவைப் போன்ற  ஈர்க்கும் எழுத்து நடை கிருஷ்ணா அனந்திடம் இல்லை.

தமிழக அரசியல், இந்திய அரசியல் இரண்டையும் விவரிக்கும் மேற்காணும் நூல்கள் நிச்சயம் நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும்.

0

8 comments so far

 1. சரவணன்
  #1

  சென்ற ஆண்டு எழுதிய பட்டாம்பூச்சி எங்கே?

  அதற்கு முந்தைய ஆண்டுவரை ஒரு ஏற்பாடு இருந்தது. அதாவது, பத்ரி தன் பதிவில் தினமும் ஒரு ரிப்போர்ட் தருவார். அதன் முடிவில் 3 லிங்க்குகள் இருக்கும்-
  1) இட்லிவடையில் ஹரண்பிரசன்னா எழுதியது.
  2)தமிழ் பேப்பரில் பா.ராகவன் எழுதியது.
  3)மருதன் தன் வலைப்பதிவில் எழுதியது.

  ஆக 4 அப்டேட்கள் தினமும் வந்துகொண்டிருக்கும். இந்த முறை பத்ரி கண்காட்சி பற்றி எதுவும் எழுதாமல் கிழக்கு புத்தகங்களுக்கு அறிமுகம் மட்டும் தருகிறார். மருதன் எப்போதாவது எழுதுகிறார். பா.ரா. ஒரே ஒரு பதிவு. தமிழ் பேப்ரில் என்றைக்காவது யாராவது எழுதுகிறார்கள்…

  சரவணன்

 2. Krishnan
  #2

  Yes I agree with Saravanan..this time I sense a diluted approach to the book fair..enthusiasm missing ?

 3. Tamilpaper Editorial
  #3

  சரவணன் :

  1) நான் என் வலைப்பதிவில எழுதி மாதக்கணக்கில் ஆகிறது. அங்கே எழுதவேண்டிய பல கட்டுரைகளை இங்கே தமிழ்பேப்ரில் எழுதிவிடுவதும்கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

  2) பத்ரி தற்சமயம் கிழக்கு பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் குறித்து சிறு அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். கண்காட்சி குறித்து விரைவில் எழுதுவார். பா.ராகவன் தன் தளத்தில் ஒரே ஒரு கட்டுரை மட்டும் எழுதியுள்ளார். ஹரன் பிரசன்னா கண்காட்சியில் படு பிஸி. பட்டாம்பூச்சி கண்ணில் தென்படவேயில்லை.

  3) தமிழ்பேப்பரில் புதிய தொடர்கள் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. சில புதிய பகுதிகளையும் தொடங்கவிருக்கிறோம். விரைவில் அறிவிப்பு வரும்.

 4. Tamilpaper Editorial
  #4

  Krishnan : உங்கள் கேள்விக்கும் விடை கொடுத்துவிட்டேன்.

 5. SABARI VASAN
  #5

  WHAT SHOULD DO IF I WANT TO PUBLISH ABOOK? PLZ REPLAY SIR.

 6. kashyapan
  #6

  Wednesday, January 16, 2013
  புத்தகக் கண்காட்சி —2013 !

  சிகாகோவில் வசிக்கும் நண்பர் அப்பாதுரை அவர்கள் ஒரு மாதம் சென்னை வருவதாகக்கூறினார்.! அவரிடம்சென்னை புத்தகக்கண்காட்சிபற்றி கூறி பயணத்தை திட்டமிடுங்களென்று சொல்லியிருந்தேன் ! அவரும் பயங்கரமான புத்தகப் பிரியர் ! வாங்க வேண்டிய புத்தகங்கள் பற்றி ஒரு பாட்டியலும் கேட்டிருந்தார் !

  இன்று அவர் புத்தக கண்காட்சியில் கிடைத்த அனுபவத்தை பகர்ந்து கொண்டார் 1
  காடுக்கடங்காத கூட்டம் ! எந்த ஒரு கடைக்குள்ளும் போய்வர முடியவில்லை ! சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் புத்தகங்கள்தான் disply ஆகியுள்ளன! மற்றவை அடுக்கி வைக்கப் பட்டிருப்பதால் தேடி வாங்க முடியவில்லை ! வாசகனுக்கோ வருகையாளருக்கோ மரியாதை இல்லை! என்றார் !

  பதிப்பகத்தார் மற்ற நாடுகளில் நடக்கும் புத்தக கண்காட்சியை பார்வையிட வேண்டும்! கடைகள் புத்தகங்களை அடுக்கிவைக்கவே போதாது ! சிறுகதைகள்,நாவல்கள்,அறிவியல் ,புராணம் என்று தலைப்பு வாரியாக இருந்தாலும் பரவாயில்லை !

  வருபவர்கள் ஆற அமர உட்கார ,யோசிக்க,வழியில்லை ! கிட்டத்தட்ட
  10 லட்சம் பேர் வருவார்களாம்.! ஒரு ஆளுக்கு 5ரூ வாங்குகிறார்கள் ! கடைகளுக்கு 10000 ரூ வாங்குகிறார்களாம் ! 500 கடைகள் உள்ளன ! இதுவே 1கோடி வசூலாகிறது ! என்றும் குறிப்பிட்டார்

  புதிய பதிப்பு என்றால்,பாரதிபதிப்பகம், கிழக்கு பதிப்பகம் தவிர வேறெதிலுமில்லை நண்பர்கள் சொன்னார்கள் !

  பதிப்பகங்கள் வெளிநாடுகளில் புத்தககண்காட்சிகள் எப்படி நடை பெருகின்றன என்பதை தெரிந்து கொள்வது மிகவும்முக்கியமான ஒன்று !

  கண்காட்சியை நடத்துபவர்களைவிட பதிப்பகத்தாரின் கைகள் ஒங்கி
  இ ருப்பதாகவே படுகிறது

  பாவம் வாசகன் ! !

 7. Tamilpaper Editorial
  #7

  Sabari Vasan : நீங்கள் எழுதவிரும்பும் புத்தகம் பற்றிய சினாப்சிஸ் ஒன்றை தயாரிக்கவேண்டும். உங்கள் புத்தகம் எதைப் பற்றியது? அதில் என்னென்ன தலைப்புகள் இடம்பெறப்போகின்றன? போன்ற அடிப்படை விவரங்கள் தரவேண்டும். நீங்கள் எழுத விரும்பும் புத்தகம் எங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால், அழைத்து பேசுவோம். என் மெயில் ஐடி : marudhan@gmail.com. குறிப்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கேளுங்கள். மருதன்

 8. அ. சரவணன்
  #8

  ‘க’ தொடர்தான் இந்த புத்தகமா… இல்லை ‘க’ தனியாக வருமா?

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: