போதிதர்மர் யார்?
போதி தர்மர் / அத்தியாயம் 1
தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர் வசமிருந்துதான் ஆரம்பிக்கிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி அது. மூவேந்தர்களும் வெளிநாட்டு வணிகத்தால் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த நேரம். யவனர்கள், அரேபியர்கள், சீனர்கள், வட இந்தியர்கள் என பெரும் வணிகக் கூட்டம் இங்கிருந்து இஞ்சி, மிளகு, இலவங்கம், பருத்தி போன்ற வாசனை பொருட்களை தங்கள் நாட்டுக்கு அள்ளிச் சென்றனர். பதிலுக்கு சர்க்கரை, தங்கம், வெள்ளி, பட்டு, உயர்ரக மது, அழகிகள், குதிரைகள் என்று கொட்டிக் கொடுத்தனர். தேனை வண்டு பார்த்துக்கொண்டா இருக்கும்! தமிழகத்தின் செழிப்பு பிற தேசங்களின் கண்களை உறுத்தின. இப்படியே செழிப்பாக போய்க்கொண்டிருக்கையில்தான் இந்தத் தென்பகுதியில் தொடர்ச்சியான அயல்நாட்டுப் படையெடுப்புகள் எழுந்தன.
எதிர்பாராத பல்லவர் படையெடுப்பு மூவேந்தர்களின் எல்லையைச் சற்று சுருக்கியது. பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சிறிது சிறிதாக கைப்பற்றத் தொடங்கியிருந்தனர். அந்த சமயத்தில்தான் திடீரென்று களப்பிரர்களின் கை ஓங்கியது. தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்களே களப்பிரர் என்பது ஒரு கூற்று. இல்லை இவர்கள் தமிழர்களே என்பது மற்றொரு சாராரின் கருத்து.
இங்கு நமக்கு என்ன தேவையென்றால், இவர்கள் பௌத்த, சமண சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர் என்பது மட்டுமே. அவர்களுக்கு முன்பே அதாவது சக்கரவர்த்தி அசோகர் காலத்திலேயே பௌத்தமும் சமணமும் தமிழகத்துக்கு அறிமுகமாகி இருந்தாலும், இவர்கள் மூலமாகவே தமிழகத்துக்குள் பௌத்த சமண மதங்கள் ஆழமாக ஊடுருவின. தமிழர் பண்பாட்டை பாதித்தன. அப்படியானால் இதற்கு முன் எந்த மதமும் தமிழகம் வந்ததில்லையா?
வந்திருக்கின்றன. ஆனால் இந்த அளவுக்கு வெற்றி கண்டதில்லை. எடுத்துக்காட்டாக, பௌத்தம் இங்கு வேரூன்றுவதற்கு முன்பே வேதாந்தத்தின் பிரதியான வைதீகம் தமிழகம் வந்துவிட்டது. மக்கள் மனதில் அகிம்சையையும் சமதர்மத்தையும், பகுத்தறிவையும் புகட்டிய பௌத்த சமண மதங்களுக்கு முன் உயிர்ப் பலிகளையும், பிறப்பால் சாதியத்தையும், பிளவையும், அறிவு நம்ப மறுக்கும் கட்டுக் கதைகளையும் முன்வைத்த வைதீகம் நிற்கக்கூட முடியவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையை தமிழகத்தின் இருண்ட காலம் என்று கூறப்படும் களப்பிரர்கள் ஆட்சி நடந்த வேளையில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.
பௌத்தமும் சமணமும் அப்படிப் பரவக் காரணம் என்ன? மக்கள் தொண்டு. புத்த, சமண துறவிகள் தமிழகமெங்கும் பரவினர். தீண்டாமை களைந்தனர். பிறரை/பிறவற்றை இம்சிக்காத அவர்களது எளிமை மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்டது. அசோகர் தோற்றுவித்த வட்டெழுத்து முறையை அறிமுகப்படுத்தி எழுத்துப் புரட்சி கண்டனர். எழுத்துப் பணி கடை நிலை மனிதனையும் சென்றடைய உதவினர். மக்களுக்கு அவர்கள் இடத்துக்கே சென்று கல்வியையும் கற்றுத்தந்தனர். சுருக்கமாகச் சொன்னால், பௌத்தமும் சமணமும் சாமானியர்களையும் அறிவில் சிறந்தோரையும் ஈர்த்தன. இவ்விரு மதங்களிலும் மக்கள் திரள் திரளாக இணைந்தனர். காஞ்சி தமிழகத்தின் புத்த மக்காவானது. மதுரை, பூம்புகார் போன்ற நகரங்கள் பிற புத்த திருத்தலங்களாயின. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிருந்தும் பயணிகள் இங்கு வரலாயினர். தமிழகத்தில் பௌத்தம் தழைத்தது.
இது பலருக்கு வியப்பாக இருக்கலாம், களப்பிரரின் காலம் இருண்ட நூற்றாண்டல்லவா? எனும் கேள்வி எழலாம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர் ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்றுதான் சொல்லி ஒதுக்கி வந்தனர். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகளும் வரலாற்று ஆய்வுகளும் இந்தக் கருத்தை உடைத்தெறிகின்றன. உண்மையில் களப்பிரர் வரவுக்குப் பின்னர்தான் மக்களை நெறிப்படுத்தும் திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கின்றன. களப்பிரர்களின் சிறப்பை இருட்டடிப்பு செய்யவே திட்டமிட்டு அவர்களின் ஆட்சியை இருண்டகாலம் என்று பொய்யுரைத்ததாகக் கூறுகின்றன.
இவ்வாறு பௌத்தமும் சமணமும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்த தருணத்தில்தான் ஆறாம் நூற்றாண்டு வாக்கில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மீண்டும் பெரும் எழுச்சி பெற்ற பல்லவர்கள் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த களப்பிரர் ஆட்சியை வீழ்த்தி அகற்றுகின்றனர்.
இப்படியாக ஆட்சியை மறுபடியும் கைப்பற்றிய பல்லவர்களும் பௌத்த சமண சமயங்களைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். இந்த இரண்டாம் தலைமுறையில் வந்த பல்லவ மன்னன் (சிலர் கோசிவர்மன் என கூறுவதுண்டு) ஒருவனின் மூன்றாம் மகன்தான் போதிதாரா எனும் இயற்பெயர் கொண்ட போதிதர்மர் என்பது பொதுவான கருத்து.
ஆனால் போதிதர்மர் களப்பிரர் வம்சத்தை சார்ந்தவர் என்று மற்றொரு கருத்து நிலவுகிறது. வரலாற்றில் களப்பிரர் வரலாறு எப்படி இருண்டு கிடக்கிறதோ அதுபோலவே போதிதர்மரின் வரலாறும் இருண்டுதான் கிடக்கிறது. போதிதர்மர் களப்பிரராக இருந்ததாலேயே அவருடைய வரலாறும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது என்பதும் சிலரின் குற்றச்சாட்டு.
இதனாலேயே போதிதர்மர் பற்றிய செய்திகள் மிகச் சொற்பமாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளன. அதிலும் அவரது இந்திய வாழ்க்கை குறித்த குறிப்புகளைத் தொகுத்தால் ஒரு பக்கத்தைக்கூட தாண்டமுடியாது. இப்பொழுது நமக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்சத் தகவல்கள், செய்திகள்கூட சீன மற்றும் ஜப்பானிய ஆசிரியர்கள் வரலாற்றில் பதிவு செய்து வைத்துள்ளவைதான்.
ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த யுவாங் சுவான்ஸியின் லியோயங் என்பவரின் ‘பௌத்த மட பதிவுகள்’ என்னும் நூலும், ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த தான்லின் என்பவரின் ‘இரண்டு நுழைவாயில்கள் மற்றும் நான்கு சட்டங்கள்’ எனும் நூலும், ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த தாவோக்ஷுவான் என்பவரின் ‘பிரபல பௌத்த துறவிகளின் சரிதம்’ எனும் நூலும் தான் போதிதர்மரின் வரலாற்றை பதிந்த மூன்று முக்கிய சீன நூல்கள் எனலாம்.
இவ்வாறு பதியப்பட்டுள்ள சீன, ஜப்பானிய வரலாற்றாசிரியர்களின் பதிவிலும் பெருத்த முரண்பாடு காணப்படுகிறது. உதாரணத்துக்கு போதிதர்மர் தேநீர் பருகினார் என்கிற ஒரு சாதாரண நிகழ்வை பதிவு செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
‘போதிதர்மர் தேநீர் பருகுகிறார்’
‘அது இனிப்பானது’
‘இல்லை கசப்பானது’
‘அதன் நிறம் பச்சை’
‘அதன் நிறம் வெள்ளை’
‘அதன் நிறம் கருப்பு’
‘அதன் நிறம் சிவப்பு’
‘அது எங்கள் வீட்டு தேநீர். நான்தான் பரிசளித்தேன்’
‘போதிதர்மர் பருகும் தேநீர் அவருக்கு தேவலோகத்தில் இருந்து வருகிறது’
‘போதிதர்மர் போன பிறவியில் தேநீர் பயிரிடுபவராக இருந்தார். அதனால் தான் அவர் இந்த பிறவியில் தேநீராய் அருந்துகிறார்’
‘போதிதர்மர் கசப்பான தேநீரை அருந்துவதன் பின்னணியில் இருக்கும் தத்துவம், வாழ்க்கையின் கசப்பை ஏற்றுக்கொண்டால் தான் நம் வாழ்வு ஆரோக்கியமாகச் செல்லும்.’
இப்படித்தான் போதிதர்மர் பற்றிய நிகழ்வுகளை முரண்பாட்டு மூட்டையாகப் பதிந்துவைத்துள்ளனர் சீனர்கள். ஜப்பானியர்களோ இதற்கு ஒரு படி மேலே சென்றுவிடுகின்றனர்.
‘போதிதர்மர் குடித்த தேயிலையை இந்த நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து குடித்தால் சகல வல்லமையும் பெறுவாய். ஏனென்றால் அவர் அதனை ஒன்பதாண்டுகள் தவமிருந்து பெற்றார்’ என்று ஒரு சாதாரண நிகழ்வை புராணம் ஆக்கிவிடுகின்றனர்.
எது உண்மை; எது மிகை என்பது புரியாத புதிர்தான்.
‘தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத புனிதராகக் கருதப்பட்டு அதற்குத் தகுந்தபடி வரலாறு புனையப்பட்ட மனிதரின் துல்லியமான உண்மைச் சரிதத்தை எழுதுவது என்பது முற்றிலும் இயலாத காரியம். அதனால், போதிதர்மரின் வாழ்க்கையை மீட்டு எழுத முயற்சிக்கும் எவரும் முழுமையாக வெற்றி அடைவதே இல்லை.’ என்று புலம்புகிறார் பிரபல வரலாற்று ஆய்வாளர் John McRae.
அவரது கருத்துப்படி போதிதர்மரின் வரலாற்றை எழுதுவதென்பது இன்றைய, நேற்றைய ஆசிரியர்களின் தலைவலி அல்ல. பல நூற்றாண்டு காலமாக தொன்றுதொட்டு நிலவிவரும் சங்கடம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த போதிதர்மரின் சீடரான தான்லின் காலத்திலேயே நிலவிய தலைவலி இது.
இப்படி இருக்கையில், போதிதர்மர் இன்ன இடத்தில்தான் பிறந்தார், இன்னாருக்கு மகனாக, இன்ன குலத்தில், இன்ன தேதியில் என்று அவர் பற்றிய செய்திகளை திட்டவட்டமாக வரையரை செய்வது இயலாத காரியம்.
(தொடரும்)








July 28th, 2012 at 9:03 am
பகுருதீன் அவர்களே! மிகவுமார்வத்தோடு காத்திருக்கிறேன் கட்டுரயைப் படிக்க! உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை! மு.ராகவ ஐயங்கார் களப்பிரர்கள் பர்ரி எழுதியுள்ளார்..மயிலை நாட்டரும் குறிப்பிட்டுள்ளார்! தகவலுக்காக!வாழ்த்துக்களுடன்—காஸ்யபன்.
July 28th, 2012 at 9:18 am
http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=4324%3A2011-05-25-15-17-14&catid=214%3A2010-08-18-19-01-15&Itemid=122
July 28th, 2012 at 12:51 pm
hy ma dear friend……u rock…..may god bless ur path……
July 28th, 2012 at 3:09 pm
அருமை யான தொடர். நடை அருமையாக உள்ளது. பல அறிய தகவல்கள் உள்ளன. ஈழம் கூட சமண நாடே. தொடர் விறு விறுப்பு..
போதி தர்மர் தமிழர் இல்லையா?? எங்கே அந்த முருகதாஸ்.??
July 28th, 2012 at 5:20 pm
is 20 years old boy writing this series?
July 28th, 2012 at 5:47 pm
@raaj
Is he a Boy who is at his 20
July 28th, 2012 at 6:58 pm
An excellent article written in a lucid style. Makes an interesting read. Keep up the good work.
July 28th, 2012 at 9:48 pm
avar oru muslim agathan irukka vendum endru varum ungal aaivu mudivukku aarvamudan kaathirukkiren !!!
July 28th, 2012 at 9:57 pm
k
July 29th, 2012 at 10:35 am
//கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர் ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்றுதான் சொல்லி ஒதுக்கி வந்தனர். //
ஐயா, இலக்கிய அடிப்படையில் அக்காலம் இருண்ட காலமல்ல. வரலாற்றின் அடிப்படையில் அது இருண்ட காலம் தான். காரணம், களப்பிரர்கள் யார், எங்கிருந்து வந்தனர், அவர்கள் தாய்மொழி, எது, சமயம் எது, ஆண்ட மன்னர்கள் வரலாறு போன்றன குறித்து சரியாக அறிய இயலாததுதான். களப்பிரர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், ஹொய்சாளர்களோடு தொடர்புடைய வழி வந்தவர்கள் என்று ஒரு கருத்துண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் போதி தர்மன் தமிழனில்லை. இது 100% உண்மை.
இதை நீங்கள் நிரூபிக்க இருப்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
July 29th, 2012 at 10:57 am
@Kanagu
தாராளமாக காத்திருங்கள். ஆனால் உங்கள் காத்திருப்பு நிச்சயம் பலன் அளிக்காது என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
July 29th, 2012 at 3:24 pm
நல்ல ஆரம்பம்… அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
July 29th, 2012 at 8:05 pm
@அம்பி
தங்கள் வாதம் ஏற்புக்குரியதே.
இலக்கிய அடிப்படையில் களப்பிரர் காலம் இருண்ட காலமாக இருப்பதால்தான், வரலாற்று அடிப்படையிலும் இருண்ட காலம் ஆகிவிட்டது.
களப்பிரரின் வரலாறு தவிர்த்து, அவர்கள் ஆட்சியை, அவர்கள் காலத்தில் இருந்த சமூகத்தை கடந்த காலத்தைச் சார்ந்த பல ஆசிரியர்கள் இருண்ட காலமாகத் தான் பதிந்துள்ளனர். இதைத் தான் இங்கு தெரிவிக்க முனைந்தேன்.
July 29th, 2012 at 8:06 pm
@கனகு.. அவர் புத்த மதத்தை சேர்ந்தவர் என்று தான் குறிப்பிட்டு உள்ளார். சிலரை போல விக்கி பீடியா வில் புகுந்து அவர் ப்ராமின் என்று சொல்ல வேண்டிய அவசியம் முஸ்லிம் களுக்கு இல்லை. தாங்கள் மத ,இன, அடையாளம் காணாமல் கருத்தை மட்டும் பாருங்களேன்.
July 29th, 2012 at 8:14 pm
‘போதிதர்மர் குடித்த தேயிலையை இந்த நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து குடித்தால் சகல வல்லமையும் பெறுவாய். ஏனென்றால் அவர் அதனை ஒன்பதாண்டுகள் தவமிருந்து பெற்றார்’ என்று ஒரு சாதாரண நிகழ்வை புராணம் ஆக்கிவிடுகின்றனர்.
#எல்லா புராணங்களும் இப்படி தானோ. முருகன் என்ற மாபெரும் சித்த துறவியை இப்படி தான் கடவுள் ஆக்கி விட்டனர். அதை போல ரமணர் ,சாய்பாபா போன்ற நல்ல துறவிகளை
கடவுள் ஆக்கி வசூல் செய்து கோடியில் புரள்கின்றனர்.
July 29th, 2012 at 8:20 pm
@அம்பி .தமிழ் பேசினால் தான் தமிழனா ?? தமிழ் நாட்டில் வாழும் வைகோ .தெலுங்கை தாய் மொழியாய் கொண்டவர். நம்மை ஆளும் அம்மையார் கர்நாடகா.
நாக்கை துருத்தும் விஜயகாந்த் தெலுங்கர். ஏன் வீரபாண்டி கட்ட பொம்மன் தமிழனா. ?
July 29th, 2012 at 8:33 pm
‘தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத புனிதராகக் கருதப்பட்டு அதற்குத் தகுந்தபடி வரலாறு புனையப்பட்ட மனிதரின் துல்லியமான உண்மைச் சரிதத்தை எழுதுவது என்பது முற்றிலும் இயலாத காரியம். அதனால், போதிதர்மரின் வாழ்க்கையை மீட்டு எழுத முயற்சிக்கும் எவரும் முழுமையாக வெற்றி அடைவதே இல்லை.’ என்று புலம்புகிறார் பிரபல வரலாற்று ஆய்வாளர் John McRae.
ரிஸ்க் நா ரஸ்க் சாப்பிடற மாதிரி .ஐயோ ஐயோ.
July 29th, 2012 at 9:00 pm
என்னிடம் பேசும் போது வா.மு சேது ராமன் சொன்னார். தமிழர்கள் வரக்கூடிய எல்லா கொள்கைகளையும் ஏற்று அடி பணிந்தனர் .அப்படி என்றால் தமிழனின் மதம் எது. ?? பகுர்தீன் சொல்லுங்களேன்.
July 30th, 2012 at 10:16 am
//@அம்பி .தமிழ் பேசினால் தான் தமிழனா ?? தமிழ் நாட்டில் வாழும் வைகோ .தெலுங்கை தாய் மொழியாய் கொண்டவர். நம்மை ஆளும் அம்மையார் கர்நாடகா.
நாக்கை துருத்தும் விஜயகாந்த் தெலுங்கர். ஏன் வீரபாண்டி கட்ட பொம்மன் தமிழனா. ?//
தமிழ் மூதாதையர்களுக்குப் பிறந்து தமிழ்ச் சந்ததி வழியில் வந்தவர்களே தமிழர்கள். மற்றவர்கள் எல்லாம் உயிரச்சத்தால் மதம் மாறி அல்லது மாற்றப்பட்டு பிற மதத்துக்குத் தாவிய தமிழர்களைப் போன்றவர்களே! தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.
இங்கே கேள்வி போதி தர்மன் தமிழனா என்பதே. அவன் தமிழன் இல்லை. வட நாட்டிலிருந்து காஞ்சிபுரத்துக்கு ”பௌத்தம்” பயில வந்த ஓர் ஆரியன். அவ்ளோதான்.
July 30th, 2012 at 10:50 am
போதி தருமர் பிராமணர் என்பதை மறைக்கப்பார்த்தால் சைவ வைணவ ஆதின மடங்களெல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ்பேப்பர் மேல் வழக்கும் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்.
July 30th, 2012 at 12:02 pm
ஃபெரோஸ்கான் அவர்களே……
நபிகளின் படத்தை வரைந்தால் உலகமே பற்றி எரிகிறது……ஹிந்துக்களின் கடவுளான முருகனை போகிற போக்கில் சித்தர் என்கிறீர்கள்….உங்கள் நம்பிக்கை உங்களுக்கு ….எங்கள் நம்பிக்கை எங்களுக்கு……அடிப்படை நாகரீகத்தை கடைப்பிடிக்க கற்றுக்கொள்ளுங்கள்……
July 30th, 2012 at 4:45 pm
@அம்பி அவர்களே. // தமிழ் மூதாதையர்களுக்குப் பிறந்து தமிழ்ச் சந்ததி வழியில் வந்தவர்களே தமிழர்கள். மற்றவர்கள் எல்லாம் உயிரச்சத்தால் மதம் மாறி அல்லது மாற்றப்பட்டு பிற மதத்துக்குத் தாவிய தமிழர்களைப் போன்றவர்களே! தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.//
அய்யா இந்த கருத்தை நான் மறுக்கிறேன். நீங்கள் பொதுவாகத்தான் கூறியிருந்தாலும் முஸ்லிம் கள் மீது இந்த குற்ற சாட்டை வைப்பதாகவும் நான் எடுத்து கொள்ளலாம். மதமாறுவது என்பது.உயிர் அச்சத்தால் என்பது மிகையாகவும் உள்நோக்கம் கொண்டதாக கருதுகிறேன். மதம் மாறுவது என்பது நம் பிறப்புரிமை. யார் வேண்டுமானாலும் எந்த மதத்திற்கும் மாறலாம்.
இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை (அல் குரான் )நாங்கள் மொழியால் தமிழர்கள் என்பதை பெருமிதம் கொள்கிறோம்.
கொள்கையால் ஒரு இறைவனை வணங்குகிறோம். அய்யா அப்போது வைதீக மதத்தை (ஹிந்து) சார்ந்தவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என கூறுகிறீர்களா?
நடு நிலையோடு விவாதிப்போம். எந்த காழ்ப்பும் நமக்குள் வர கூடாது. அப்படியெனில் நான் விவாதத்தை தொடர்வேன். எதற்கும் நீங்கள் பத்ரி செஷச்த்ரி அவர்களை முன்னோடியாக கொள்ள வேண்டும்.
July 30th, 2012 at 4:49 pm
//இப்படியாக ஆட்சியை மறுபடியும் கைப்பற்றிய பல்லவர்களும் பௌத்த சமண சமயங்களைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். இந்த இரண்டாம் தலைமுறையில் வந்த பல்லவ மன்னன் (சிலர் கோசிவர்மன் என கூறுவதுண்டு) ஒருவனின் மூன்றாம் மகன்தான் போதிதாரா எனும் இயற்பெயர் கொண்ட போதிதர்மர் என்பது பொதுவான கருத்து.//
@அம்பி பௌத்தம் என்பது ஆரியமா>>? #சந்தேகம்.
July 30th, 2012 at 5:04 pm
அடிப்படை நாகரீகம் எனக்கும் தெரியும். இது உங்களை வருத்தினால் நான் வருந்துகிறேன்.அனால் அவரை நான் குறைத்து மதிப்பிட வில்லையே .அவர் மாபெரும்சித்தர் என்று தான் சொன்னேன்.சித்தர் என்றால் இழுக்கா.// அது சரி.எனக்கு சந்தேகம்.
அவர் கடவுள் என்றே வைத்து கொள்வோம். அதற்கான ஆதாரம் உங்களுடைய நான்கு வேதங்களில் இருக்கிறதா. ??
அவர் ஒரு சித்த துறவி என கேள்விபட்டேன். அதனால் தான் கேட்கிறேன்.
July 30th, 2012 at 5:05 pm
//அதை போல ரமணர் ,சாய்பாபா போன்ற நல்ல துறவிகளை
கடவுள் ஆக்கி வசூல் செய்து கோடியில் புரள்கின்றனர்.// இதற்கும் பதில் தாருங்கள். உண்மை இருப்பின் ஏற்று கொள்கிறேன். @சான்றோன்.
July 30th, 2012 at 5:07 pm
@அம்பி மிக சிறந்த அறிவு ஜீவியாக தான் இருக்க வேண்டும்.
July 30th, 2012 at 5:14 pm
மத மாற்றம் நிகழ காரணம். உயிர் அச்சம் அல்ல. வைதீகத்தின் தீண்டாமை தான். @சான்றோன்.
July 30th, 2012 at 5:39 pm
superppp.
July 30th, 2012 at 6:19 pm
ஃபெரோஸ்கான் அவர்களே…….
இறை வழிபாடு என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது…..தனி மனிதரால் உணரப்படுவது……அதைத்தான் நான் உங்கள் நம்பிக்கை உங்களுக்கு…..எங்கள் நம்பிக்கை எங்களுக்கு…….என்று குறிப்பிட்டிருந்தேன்….. ஹிந்து மதமாக இருந்தாலும் சரி……..இஸ்லாமாக இருந்தாலும் சரி…..கிறித்தவமாக இருந்தாலும் சரி…..அந்த மதங்கள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி மட்டுமே நாம் விவாதிக்க வேண்டும்……ஏசு பிறந்த மாட்டுத்தொழுவம் பெத்லகேமில் இன்றும் இருப்பதாக கிறித்தவர்கள் நம்புகிறார்கள்……… நபிகள் நாயகத்தின் தலை முடி ஹஸ்ரத்பால் மசூதியில் இருப்பதாக இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்………இதெல்லாம் அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம்…..இதற்கெல்லாம் ஆதாரம் கேட்பதோ, கொடுப்பதோ முடிகிற காரியமா?
சித்தர்கள் வேறு……கடவுள்கள் வேறு…..பதினென் சித்தர்களில் ஒருவரான போகர் உருவாக்கிய சிலைதான் பழனியில் உள்ளது…….. சித்தர்கள் ஜீவ சமாதியாகும் சில ஆலயங்களில் சான்னித்யம் பெருகுவதாக ஒரு நம்பிக்கை……மருதமலை பாம்பாட்டி சித்தர் ஒரு உதாரணம்……சிவ வாக்கியரின் தியான நிலை திருப்பூர் மாவட்டம் சிவன் மலையில் அமைந்துள்ளது…… நான் குறிப்பிட்ட மூன்று கோயில்களும் முருகன் ஸ்தலங்கள் தான்…..சித்தர்கள் சிலர் கடவுள்களை வழிபட்டுள்ளார்கள்……அவ்வளவுதான்……..
ஹிந்து மதம் எந்த ஒரு புனித நூலையும் அடிப்படையாக கொண்டதல்ல……அது பகவத் கீதையாக இருந்தாலும் சரி…… நான்கு வேதங்களாக இருந்தாலும் சரி……மேலும் , நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்படாத கடவுள்கள் ஆயிரக்கணக்கில் உண்டு…….அதற்காக அவற்றை வழிபடுபவர்கள் ஹிந்துக்கள் இல்லை என்று கூறிவிட முடியுமா? முருகன் வட இந்தியாவில் கார்த்திகேயன் என்று குறிப்பிடப்படுகிறார்…… ஷன்மதங்கள் என்று குறிப்பிடப்படும் ஆறு மதங்களில் கௌமாரம் எனப்படும் முருகன் வழிபாடும் ஒன்று……
ஐயாயிரம் வருங்களுக்கு முற்பட்ட , முருகன் மயில் வாகனத்துடன் காட்சியளிக்கும் சிலை ஒன்று சமீபத்திய அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது……அதன் காலம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது…..அதே போன்ற பல முருகன் சிலைகளை தமிழக கோயில்களில் காணலாம்…..[அதன் புகைப்படம் ஆனந்த விகடனில் வெளியானது]
July 30th, 2012 at 6:24 pm
//அதை போல ரமணர் ,சாய்பாபா போன்ற நல்ல துறவிகளை
கடவுள் ஆக்கி வசூல் செய்து கோடியில் புரள்கின்றனர்.//
ஃபெரோஸ்கான் அவர்களே….
மக்களின் நம்பிக்கையை வியாபாரமாக்கும் போக்கு ஹிந்து மதத்தில் மட்டும்தான் உள்ளது என்கிறீர்களா?
July 30th, 2012 at 6:37 pm
@fairozekhan…..
//ஈழம் கூட சமண நாடே. //
எந்த ஒரு நாடும் தற்போதுள்ள நிலையை பற்றி மட்டும் பேசுதல் நலம்…. நபிகள் பிறப்பதற்கு முன் அராபியர்கள் கூட உருவவழிபாடு செய்தவர்கள்தான் [குரேஷிகள்?] …..இன்று அரபு நாடுகளை அவர்களை கொண்டு அடையாளப்படுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா?இல்லை அது அவர்கள் நாடு…என்று குறிப்பிடலாமா?
July 30th, 2012 at 6:48 pm
@fairozekhan….
மேலே நான் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எல்லாம் இவற்றை நீங்கள் உண்மையிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்ற நோக்கத்தில் சொல்லப்பட்டவை…..
மற்றபடி, சந்தடிசாக்கில் ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதுதான் உங்கள் நோக்கம் என்றால் ,உங்களை உங்கள் இறைவன் காப்பாற்றட்டும்……
July 30th, 2012 at 8:46 pm
@m.fairozekhan , நான் வந்துட்டன்..
நண்பரே,
”அற்புதக் கதைகள்-4, அமுதசுரபியாக மாறிய எச்சில்”
நீங்கள் இந்த பதிவைப்படித்துப்பார்த்தபின் நீங்கள் மேலே கூறிய படி பின்னூட்டமிட்டால் நலம்.
http://iraiyillaislam.blogspot.com/2012/06/4.html
July 31st, 2012 at 1:31 pm
@சான்றோன் நான் நாத்திகன் அல்ல. எந்த மதங்களையும் இழிவு படுத்த இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அறிவு பூர்வமாக விவாதிக்க மட்டுமே அனுமதி உள்ளது. மேலும் இது கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாமல் செல்வதால் இனி இதை தவிர்ப்போம். மற்ற படி ஹழ்ரத் பாலில் இருப்பது ஆதாரம் அற்றது. நபி ஸல் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆதாரம் உள்ளது. அப்படி இருந்தால் தான் ஏற்று கொள்வோம்.
மற்ற படி இறைவன் நமக்கு நேர்வழி காட்டுவானாக.
July 31st, 2012 at 1:33 pm
@தமிழன் தங்களை போன்ற காழ்புணர்ச்சி உடையவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. இது போன்று ஆயிரம் ப்ளாக் கள் உள்ளன. இது போன்ற காழ்புணர்ச்சி உடையவர களின் வாதத்தை தமிழ் பேப்பர் தவிர்க்க வேண்டும்.
July 31st, 2012 at 1:57 pm
சிலர் தன் சுய அடையாளங்களை மறைத்து போலி பெயர் இல் மொட்டை கடுதாசி போடுகின்றனர். ஹைய்யோ ஹையோ .பாவம். !!!!!
July 31st, 2012 at 1:59 pm
கமெட்டுகளின் நீளம் பதிவின் நீளத்தைத் தாண்டிவிட்டது. உடனே பதிவை கமெண்ட்டாகவும் கமெண்ட்டை பதிவாகவும் மாற்றி, பதிவின் மானத்தைக் காப்பாற்றுங்கள் தபேதோழர்களே.
July 31st, 2012 at 7:36 pm
\\ எடுத்துக்காட்டாக, பௌத்தம் இங்கு வேரூன்றுவதற்கு முன்பே வேதாந்தத்தின் பிரதியான வைதீகம் தமிழகம் வந்துவிட்டது.\\
ஆஹா…. கால்டுவெல்லே நேரில் வந்து எழுதியது போல் உள்ளது.
July 31st, 2012 at 9:38 pm
@YARORUVANபதிவின் மானத்தை காப்பாற்ற தேவை இல்லை. எல்லா பதிவுகளை விட இந்த பதிவு சிறப்பானதாக அமைந்து விட்டது. முகில்,மற்றும் மருதன் போன்றோரின் ஆக்கம் போல் இது ஹிட் ஆகி விட்டது. வாழ்துக்கள் .பகுர்தீன். இன்னும் நன்றாக எழுத வேண்டும்.
August 1st, 2012 at 8:44 am
நன்றாக காமெடி செய்கிறீர்கள். மதமாற்றம் ஏன் ஏற்படுகிறது என்பது அறிவு இருப்பவர்கள் பலரும் புரிந்து கொள்ளக்கூடிய விசயமே?
அடுத்து முருகன் சித்தர் என்று யார் சொன்னது? நீங்கள் எந்நாளும் கோயிலுக்கு செல்ல இயலாது. கோயிலை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத நீங்கள் இவ்வாறு எழுதியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
இந்த பதிவில் இருக்கும் மிக முக்கிய காமெடிகளில் சில…
நாலாயிரம் மற்றும் திருக்குறள்….கலப்பிறார் காலத்தில் உள்ளது என்பது.
சமணம் சாதி தடைகளை உடைத்து என்பது. சமணம் முழுமையாக மன்னர்கள் மற்றும் செட்டியார்கள் சமுகத்தில் மட்டும் இருந்தது. இது சமந்தமான வரலாறு எங்கள் சமூகத்திலேயே உள்ளது.
\\காஞ்சி தமிழகத்தின் புத்த மக்காவானது.\\
இதற்கு மேல் இந்த பதிவிருக்கு பதில் எழுதுவதும் , கபில் சிபிளிடம் ௨ ஜி ஷ்பெக்ட்ரும் பற்றி உரையாடுவதும் ஒன்று
@ தமிழ்பேப்பர்,
ஒரு ஹிந்துவை வைத்து முகமது பற்றி இப்படி ஒரு வரலாற்று கட்டுரையை எழுதவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்
August 1st, 2012 at 9:05 am
\\தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர் வசமிருந்துதான் ஆரம்பிக்கிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி//
பாண்டிய வம்சதின் வரலாறு பொது வருடத்திற்கும் முற்பட்டதும் என்பதருக்கு பல ஆயிரம் வருட பழமையான கல்வெட்டுகளே சான்று. இருப்பினும் சும்மா ரோவுண்டு கட்டி பொய் பேசுவதில் திகவையே தோற்கடித்து விட்டீர்கள்.
\\அசோகர் தோற்றுவித்த வட்டெழுத்து முறையை அறிமுகப்படுத்தி எழுத்துப் புரட்சி கண்டனர். எழுத்துப் பணி கடை நிலை மனிதனையும் சென்றடைய உதவினர். மக்களுக்கு அவர்கள் இடத்துக்கே சென்று கல்வியையும் கற்றுத்தந்தனர்.\\
இதற்க்கான ஆதாரம் எங்கு இருந்து அதாவது எந்த வரலாற்று ஆதார நூலில் இருந்து எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா? நீங்கள் சொல்வதை பார்த்தல் தமிழுக்கு செம்மொழி வழங்கியது தவறு போல் தோன்றுகிறது. எந்த காலத்திலும் சமண மற்றும் போவுதா மதங்களில் மக்கள் இருக்கும் இடத்திருக்கு என்று கல்வி பயில முடியாது. இரண்டுமே குருகுல கல்வி முறையை அடிப்படையாக மட்டுமே கொண்டது. இப்படி வரிக்கு வரி ஆதாரம் அட்ர மற்றும் திக மேடை பேச்சு போல் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை தமிழ் பேப்பர் பதிப்பது இந்திய செக்யுரளிசத்தை காட்டுகிறது
August 1st, 2012 at 11:25 am
//பதிவுகளை விட இந்த பதிவு சிறப்பானதாக அமைந்து விட்டது. முகில்,மற்றும் மருதன் போன்றோரின் ஆக்கம் போல் //
பிரதர், நீங்க பாராட்டுறீங்கதானே?
August 1st, 2012 at 1:23 pm
@கோமதி அவர்களே. 1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் என்ற நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள ஓர் சிற்றூர் இந்தியா முழுவதிலும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு ஊராக மாறிவிட்டது. திடீரென்று அது இப்படி ஏன் பிரபலமாக்கப்பட்டது? அவ்வூரிலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரிகளும், சகோதரர்களும் தங்களது தன்மானத்தைக் காத்துக் கொள்ள, இந்து மதம் என்கின்ற இந்த பார்ப்பன மதத்தினை விட்டு வெளியேறி மனம் மாறினர்; மதம் மாறினர்.
அவர்களை நான் அந்தப்பகுதிக்கு கழகப் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த போது, இந்தச் சமூகப்பிரச்சினையில் உள்ள உண்மைகளைக் கண்டறிய, அந்த கிராமத்திற்கே நேரில் சென்று, அங்கே மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும், மதம் மாறாத அதே சமூகத்தினைச் சேர்ந்தவர்களையும் – பல வயதுக்காரர்களையும் சந்தித்து, கேள்வி கேட்டு ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டு வந்து அதையே ஒரு சிறு நூலாக அப்படியே அவர்கள் கூறியதை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாக்காது வெளியிட்டேன்.
இந்த சந்திப்பு நிகழ்ந்த நாள் 25-07-1981 ஆகும்!
அங்கே மொத்தம் உள்ள 300 குடும்பங்களில் 210 குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக மதம் மாறியுள்ளனர். இவர்கள் 19-02-1981 அன்று மதம் மாறினார்கள்.
இந்த ஆண்டில்(2002) ஒரியண்டல் லாங்குமென்ஸ் லிமிடெட் புத்தக கம்பெனியினரால் வெளியிடப்பட்டுள்ள “Vishwa Hindu Parishad and Indian Politics” என்ற ஓர் ஆங்கில நூல் – இதன் ஆசிரியர் “மஞ்சேரி காட்ஜு” என்ற அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் விரிவுரையாளரான ஓர் அம்மையார். இங்கிலாந்து நாட்டில் உள்ள School of Oriental and African Studies என்ற லண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பி.எச்.டி பட்ட ஆய்வினை இந்த தலைப்பில் மேற்கொண்டு செய்தார். அது தான் மேலே காட்டிய நூலாக வெளிவந்துள்ளது.
அந்நூலில் மூன்றாவது அத்தியாயத்தில், “Translation to Mass Activism” தீவிரதன்மை கொண்ட மக்கள் இயக்கமாக(வி.இ.ப) மாற்றம் என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.
In February 1981 Meenakshipuram, a village in Tirunelveli District of Tamil Nadu with a population of 1,300 almost all of whom were “Untouchables”, became a centre of controversy when large-scale conversions to Islam were reported. For the VHP and its associate organizations, the Meenakshipuram conversions were not an outburst of local grievances, but “a small experience of an old conspiracy to destroy Hindus, Hinduism and Hindusthan,” financed by petrodollars. It was reported that around 1,000 of 1,250 untouchables had converted to ISLAM, a step to protest against the denial of social equality. The rules of social conduct were laid down by the high-caste Thevars, and their infringement prompted harsh retaliation. Conversions to ISLAM had taken place in 1980-81 in some adjoining areas, but they did not provoke much of an outcry from the VHP or any other HINDU outfit, this was probably because the number was not as great as in Meenakshipuram, and also because bitter intercaste relations prevented reaction on the part of higher castes. The conversions in these areas seem to have been a reaction to the social and political humiliation suffered by the untouchables at the hands of the higher castes like the Thevars.
The incident was communally interpreted by the RSS and VHP as ‘an act performed by several thousand Muslims, both men and women, from the surrounding areas, who invaded the village and forced the Harijans to convert.’ It seems clear, however, that the VHP could not reconcile itself to the issues which were brought to the fore by the Meenakshipuram mass conversions, despite,, the linkages it had drawn in its early years between casteism (rules of purity and pollution) and conversions. The agenda of social reform contained in the original charter had become overshadowed. The VHP’s socially privileged and conservative character had much to do with this. That continued oppression by the high-caste HINDUS could lead to a point when untouchables would make a total break from the HINDU fold was something that had little place in the VHP social understanding. This understanding also denied agency to the socially depressed classes, who of their own volition, could detach from a community and join another.
It is this break that a conservative upper-caste HINDU seemed unable to bear and accept-primarily because, it can well be argued, this reveals a store of embarrassments and uncovers many unpleasant facts within HINDU society structured by Brahminical Hinduism(Raj 1993:233).The Meenakshipuram episode was widely publicized by the VHP and other organizations like the HINDU Munnani and the Arya Samaj, after which, it is reported, seven of the converts reconverted to Hinduism(Khan 1991:49). The VHP floated the Sanskriti Raksha Yojana(Programme to Protect Culture) immediately after the incident. In November and December 1982, it launched the Jana Jagrana Abhiyana(Campaign for People’s Awakening) to “warn” the HINDUS about “the international conspiracy to devour Hinduism”. During this campaign the VHP managed to collect some funds from the public as donations. However, apart from making monetary contributions people generally remained indifferent to the issue.
The 1980s thereafter saw the VHP preoccupied with planning and holding campaigns, conferences and processions at a regional level for “national integration”. The issue of religious conversion was much hyped, and was projected as a grave threat to national security and integrity. State intervention was demanded by the VHP to supplement its efforts to check the activities of Christian missionaries.
இதன் தமிழாக்கம்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 1300 மக்கள்தொகை கொண்ட ஒரு சிற்றூர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே. அவர்களில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் 1981 பிப்ரவரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதனால் ஒரு முரண்பாட்டின் மையமாக அது ஆயிற்று. விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்தத் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்து மதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் அன அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் அ,000-த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என அறிவிக்கப்பட்டது.
சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்னும் விதிகளை உயர்சாதியினரான தேவர்கள் வகுத்தனர்; அந்த விதிகளை மீறுதல் கடுமையான எதிர்விளைவையே உருவாக்கிற்று. 1980-81 இல் இப்பகுதியைச் சுற்றியிருந்த சில இடங்களிலும் இஸ்லாத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த மதமாற்றங்கள் வி.இ.ப. அல்லது மற்ற இந்து அமைப்புகளிடமிருந்து எந்தவிதப் பெருங்கூச்சலையும் எழுப்பவில்லை. ஏனெனில் மீனாட்சிபுர மதமாற்றங்கள் போல பெரும் எண்ணிக்கையிலான மதமாற்றங்கள் அல்ல அவை. மேலும் உயர் ஜாதியினரிடையே கசப்பு மிகுந்த (சாதிகலப்பு) உறவுகளும் உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தடுத்தன. தேவர் போன்ற உயர்சாதியினரிடம் தீண்டத்தகாத மக்கள் சமூக அளவிலும் அரசியல் நிலையிலும் பட்ட அவமானங்களின் எதிர்விளைவே இந்த மதமாற்றங்கள் எனத் தோன்றுகிறது.
மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இந்த ஊர்களுக்குள் நுழைந்து, மதமாற்றத்திற்கு ஆதிதிராவிடரைக் கட்டாயப்படுத்தினர் என்பதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றோர் மதக்கண்ணோட்டத்துடன் விளக்கம் அளித்தனர். கடந்த காலங்களில் இங்கு நிலவிய தூய்மை, தீட்டு போன்ற கடுமையான ஜாதி வெறித்தனத்திற்கும், இந்த மத மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள இயலாத வி.இ.பரிசத்தினால், மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் வெளிக்கொணர்ந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலவில்லை என்றே தோன்றுகிறது. இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.
இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)
வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)
இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை. தொடரும் ….
August 1st, 2012 at 1:26 pm
@komathi.தாங்கள் மட்டும் தான் அறிவு உடையவர்கள் போல. அம்மணி கொஞ்சம் அறிவை எமக்கும் கொடுங்களேன்.
August 1st, 2012 at 1:33 pm
முருகு என்றால் அழகு என்று அர்த்தம். முருகன் மிக அழகானவர். அவரை புகழ்ந்து தானே அவ்வை பாட்டி பாடல் படித்தார். அது பொய்யா?#டவுட்.
August 1st, 2012 at 1:35 pm
நீங்கள் எழுதினாலும் பாராட்டுவேன். பாராட்டுவது தவறா???@yaoro oruvan
August 1st, 2012 at 1:40 pm
@komathi// மதுரை, பூம்புகார் போன்ற நகரங்கள் பிற புத்த திருத்தலங்களாயின//இதை ஏன் விட்டீர்கள்??
August 1st, 2012 at 1:59 pm
@கோமதி செட்டி ,
//ஒரு ஹிந்துவை வைத்து முகமது பற்றி இப்படி ஒரு வரலாற்று கட்டுரையை எழுதவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் //
நான் ரெடி , இதை எழுதி தருவதற்கு. என்ன இன்னும் கொஞ்சம் படித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். நம்ம தமிழ் மக்களுக்குக்காக இதைக்கூட செய்யவில்லை என்றால் எப்படி..
August 1st, 2012 at 2:06 pm
ஆதாரம் இருந்தால் அப்படியே ஏற்று கொள்வார்கள். ??
August 1st, 2012 at 2:09 pm
குருகுலம் சமணத்தில் இருந்ததற்கு ஆதாரம் தேவை @கோமதி
August 1st, 2012 at 2:19 pm
@கோமதி கோயபல்ஸ் உங்களுக்கு வேண்டியவரா??
August 1st, 2012 at 5:27 pm
அதற்கு வரலாற்று புத்தகத்தை எல்லாம் புரட்ட வேண்டியது இல்லை. சமண துறவிகளிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் எந்த ஊர் என்று எனக்கு தெரியாது. நீங்கள் சென்னைவாசியாக இருக்கும் பட்சத்தில் சென்னை இரயில் நிலையத்திற்கு பின் புறம் உள்ள பகுதியில் அதிகம் அந்த பகுதி மக்கள் வாழ்கிறார்கள்.
அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றும் சமண பிராமணர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ளனர்.
August 1st, 2012 at 7:30 pm
முஹம்மத் நபி பற்றி எழுதங்களேன். உங்களுக்கு வெகு சீக்கிரம் அவார்ட் கிடைக்கும் .LAZZA போல் எழுதுவீர்கள் என நினைக்கிறன்.
August 1st, 2012 at 7:42 pm
@KOMATHI //கோயிலை பற்றி அடிப்படை அறிவில்லாத//உங்கள் கோயில் மற்றும் கடவுள் களைபற்றி நீங்கள் சொல்லுங்களேன். சிவ லிங்கம், பார்வதியின் யோனி மற்றும் உங்கள் கோயில்களில் நிர்வானமாய் பல தெய்வங்கள் விளக்குங்களேன். நான் நாத்திகன்.
August 1st, 2012 at 7:46 pm
முஹம்மத் நபியை பற்றி எழதுவதற்கு முன் உங்கள் புராணங்களில் என்ன சொல்லபட்டுள்ளது என்று எழுதுங்கள்.
August 1st, 2012 at 8:17 pm
//சமணம் சாதி தடைகளை உடைத்து என்பது. சமணம் முழுமையாக மன்னர்கள் மற்றும் செட்டியார்கள் சமுகத்தில் மட்டும் இருந்தது. இது சமந்தமான வரலாறு எங்கள் சமூகத்திலேயே உள்ளது.//@komathi
ஆதாரம் தேவை
August 1st, 2012 at 8:31 pm
குரு குலம் பற்றி கேட்டால் அதற்கு வரலாற்று ஆதாரம் சொல்ல வேண்டும் .ரயில்வே ஸ்டேஷன் உக்கு பின்னல் கூவம் தான் இருக்கும். ஹைய்யோ .ஹைய்யோ.
August 2nd, 2012 at 9:37 am
//இங்கு வேரூன்றுவதற்கு முன்பே வேதாந்தத்தின் பிரதியான வைதீகம் தமிழகம் வந்துவிட்டது. மக்கள் மனதில் அகிம்சையையும் சமதர்மத்தையும், பகுத்தறிவையும் புகட்டிய பௌத்த சமண மதங்களுக்கு முன் உயிர்ப் பலிகளையும், பிறப்பால் சாதியத்தையும், பிளவையும், அறிவு நம்ப மறுக்கும் கட்டுக் கதைகளையும் முன்வைத்த வைதீகம் நிற்கக்கூட முடியவில்லை என்பதே உண்மை.//
The author has no knowledge of what he is writing, and Tamilpaper is publishing his articles that is filled with falsehoods. Reliability of Tamilpaper will go down.
The author does not know the difference between vEdAntA, vaiDikA, ritualisms of India. He says vEdAnta brought ritualism. What a bummer !
There are clear evidences to proove that it was Buddhism that created caste based restrictions in India. Islam and Christianity made the caste system far more rigid and far more cruel.
//இந்த உண்மையை தமிழகத்தின் இருண்ட காலம் என்று கூறப்படும் களப்பிரர்கள் ஆட்சி நடந்த வேளையில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.//
What are those books, may we know?
For a person who believes that on a flying horse a human flew to heaven to receive God’s instruction as History, it is no shocker to write such calumny. However, Badri allowing such canards is a mystery.
.
August 2nd, 2012 at 4:45 pm
@களிமிகு கணபதி .The author does not know the difference between vEdAntA, vaiDikA, ritualisms of India. He says vEdAnta brought ritualism. What a bummer !
There are clear evidences to proove that it was Buddhism that created caste based restrictions in India. Islam and Christianity made the caste system far more rigid and far more cruel.
PLS GIVE EVIDENCE FOR YOUR WORDS.
August 3rd, 2012 at 1:57 pm
The author has no knowledge of what he is writing, and Tamilpaper is publishing his articles that is filled with falsehoods. Reliability of Tamilpaper will go down.
The author does not know the difference between vEdAntA, vaiDikA, ritualisms of India. He says vEdAnta brought ritualism. What a bummer !
There are clear evidences to proove that it was Buddhism that created caste based restrictions in India. Islam and Christianity made the caste system far more rigid and far more cruel.
அய்யா அருமை. இஸ்லாம் தான் சாதியை வளர்த்தா? சூப்பர். இப்படியே பொய் சொல்லி பொய் சொல்லி வரலாற்றை மாற்றுங்கள். எல்லோரும் முட்டாள்கள் தானே. கலி மிகு கணபதி அவர்களே. சூத்திரனை தொட்டால் தீட்டு. நாடரை பார்த்தல் தீட்டு .என்று இஸ்லாமா சொன்னது. அறிவு ரொம்ப இருக்கையா உமக்கு. சூத்திரன் என்று மூத்த குடி மக்களை ஒதுக்கி ,அவர்களின் வாயில் மலத்தை கூட திணிக்கும் பாவிகள் தானே உங்கள் பார்ப்பன கூட்டம். அப்போ பெரியார் சொன்னது சரி தான். பாம்பை விட்டு விடு. …………………….
August 3rd, 2012 at 4:07 pm
பழம் வேண்டுமென்றால் உலகத்தை சுற்றி வர வேண்டுமாம். உடனே நம்ம முருகன் சேவலை எடுத்துட்டு உலகத்தையே சுத்துனாறாம் .இது பகுத்தறிவா?
August 3rd, 2012 at 4:09 pm
கருட வாகனத்திலே ரவுண்ட்ஸ் வந்தார்களே எப்படி ?.WHITE பெட்ரோல் போடாமலே எப்படி ?.#முடியல.
August 3rd, 2012 at 4:10 pm
@kailmiku ganapathy has no knowledge of what he is writing, and Tamilpaper is publishing his comments.
#repeat.
August 3rd, 2012 at 4:20 pm
அறிவியல் என்பது முடிவு பெறாதது. நபிகளாரை குறை கூறும் தகுதி உங்களுக்கு கிடையாது.
August 3rd, 2012 at 4:22 pm
@கலிமிகு//கிளாஸ் ல நல்ல சொல்லி தறாங்க.இன்னும் வளரனும் தம்பி.
August 3rd, 2012 at 4:35 pm
கடவுளை பற்றி வாய் திறக்காத புத்தரையே கடவுள் ஆக்கி அவருக்கு நிறைய புராணங்களை ஏற்படுத்தி நீர்களே அய்யா உங்களை மாதிரி யாராலேயும் முடியாதுப்பா..!
August 3rd, 2012 at 4:36 pm
அரவிந்தனுக்கு வரும் கும்பல் எங்கே.. வாங்க வரிசையா நில்லுங்க.
August 3rd, 2012 at 11:56 pm
“அவர்களின் வாயில் மலத்தை கூட திணிக்கும் பாவிகள் தானே உங்கள் பார்ப்பன கூட்டம்.”
வெற்றி, அப்போ மலம் திணிச்சவிய்ங்க அவிய்ங்க இல்லியா ? நல்லவேள சொன்னபா, தாங்ஸ்பா.
August 10th, 2012 at 1:58 pm
சமணம் ,பௌத்தம்,வித்தியாசம் கூற பட வில்லையே. ?
August 11th, 2012 at 4:47 pm
யவனர்கள் என்றால் முஸ்லிம்களா? .அது பற்றி குறிப்பிடவும்.
January 13th, 2013 at 7:47 am
ஒரு சின்ன திருத்தம்;
போதி தர்மர் தோற்றுவித்தது “சான்” இல்லை “செம்”,
செம்மைஎன்ப்பதின் முதல் தொகுதி.