நீயா நானா : விஜய் டிவி இப்படிச் செய்யலாமா?
தமிழர்கள் சில விஷயத்தை பிடிக்காவிட்டால் கூட, திட்டிக்கொண்டே தொடர்ந்து செய்வார்கள். “கிரிக்கெட் மக்களை கெடுக்கிறது” என்று சொல்லிகொண்டே மேட்ச் பார்ப்பார்கள். சினிமாவை திட்டி கொண்டே, சினிமா செய்தி ஒன்று விடாமல் படிப்பார்கள். அந்த வரிசையில் இணையத்தில் மிக அதிகம் விமர்சிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா! என்ன தான் இந்நிகழ்ச்சியையும் கோபியையும் இணையத்தில் திட்டினாலும் நிறைய பேர் நிகழ்ச்சி பார்க்கின்றனர் என்பது நிதர்சனம்.
சரி விஷயத்துக்கு வருவோம்.
நீயா நானாவில் பங்கு பெற வேண்டுமெனில் உங்களுடைய அரை நாளை நீங்கள் இதற்குச் செலவழிக்கணும். நாம் செல்லும் போது நமக்கு முன் இன்னொரு நீயா நானா ஷூட்டிங் நடக்கும். அது முடிந்து, அதன் பின் கோபிநாத் சற்று ஓய்வு எடுத்து விட்டு மறுபடி ஷோ ஆரம்பிப்பதற்குள்ளேயே பல மணிகள் ஆகிடும். அதன் பின் நான்கைந்து மணி நேரம் ஷூட்டிங் நடக்கும்.
இப்படி அரை நாளை செலவழித்து ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எதற்காக? நம் முகம் டிவியில் தெரியவேண்டும் என்னும் எண்ணம். மேலும் நமக்கு தெரிந்த எல்லோருக்கும் நாம் பேசியது தெரிந்தால் அதில் ஒரு மகிழ்ச்சி. ஆனால், நாம் பேசி விட்டு வரும் நிகழ்ச்சி என்றைக்கு ஒளி பரப்பாகிறது என்ற தகவலை நீயா நானா அணி சொல்வது இல்லை. நீங்கள் பங்கேற்க உங்களை தொலை பேசியில் அழைத்த நபரை தொடர்ந்து விடாமல் அழைத்து கேட்டால், ஒருவேளை நீங்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சி என்று வரும் என சொன்னாலும் சொல்லலாம்.
இதை விட கொடுமை, இப்படி அரை நாள் செலவழித்து நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், பேசுகிற உங்கள் பேரை அவர்கள் போடுவதே இல்லை!
ஒவ்வொரு டிவியிலும் ஒவ்வொரு டாக் ஷோ ஒளிபரப்பாகிறது. சன் டிவியில் அரட்டை அரங்கம், ஜெயாவில் விசுவின் மக்கள் அரங்கம், ராஜில் அகட விகடம் என்று பல்வேறு டாக் ஷோக்கள் வருகின்றன. அவை அனைத்திலும் பேசுபவர் பெயரை போடவே செய்கிறார்கள். ஆனால் நீயா நானா மட்டும் பேச்சாளர் பெயரை போடுவதே இல்லை.
இதற்கு என்ன காரணம் சொல்ல நினைக்கிறது நீயா நானா அணி?
“இது ஒரு ரியாலிட்டி ஷோ; பேசுபவர் பெயர் போட்டால் பிரச்சனை” என்றா? எனில் அந்த வாதத்தை ஏற்க முடியாது. எப்போது ஒருவர் டிவியில் தன் முழு உருவம் காட்டுகிறாரோ அப்போதே அவர் பற்றிய முழு ஐடன்டிட்டி தெரிய வந்து விடுகிறது. எனவே பெயர் போடாவிட்டால், பேசியது நான் அல்ல என அவர் தப்பிக்க முடியாது
எனக்கு தெரிந்தவரை இதற்கு நிஜமான காரணம், நீயா நானா அணி இதனை தனி வேலையாக எடுத்து செய்ய விரும்ப வில்லை என்பதே. ஏற்கெனவே இருக்கும் பல வேலைகளில், பெயர்களை குறித்து வைத்து கொண்டு பேசுவோருக்கு நேரே பெயர் போட, சோம்பேறித்தனம். அதுதான் நிஜக் காரணம்!
ஆனால் அரட்டை அரங்கம், அகட விகடம் முதலிய ஆவேரேஜ் நிகழ்ச்சிகளில் இது முடிகிறது என்றால் தமிழின் நம்பர் ஒன் டாக் ஷோ என்று சொல்லி கொள்ளும் நீயா நானா இதனை செய்ய தவறுவது ஏன்?
இதுவரை இருமுறை பேசியபோதும் நிகழ்ச்சி நடத்துவோரிடம் இந்த விஷயத்தை நான் எழுப்பியே வந்தேன். அப்போதெல்லாம் அவர்கள் “செய்றோம் சார். இது பத்தி பேசிக்கிட்டு இருக்கோம் ” என்றார்களே ஒழிய, மறுக்கவே இல்லை.
இந்த நிகழ்ச்சியில் பேசுவோருக்கு எந்த வெகுமதியும் கிடையாது! வெற்றி பெற்றோர் என இருவருக்கு மட்டும் பரிசு கொடுக்கபடுவதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சி அன்று அந்த பரிசு தரப்படுவது இல்லை. அதன் பின் பரிசு சென்று சேர்கிறது எனில் மகிழ்ச்சியே. ஆனால் நிகழ்ச்சியில் பேசும் மற்ற பேச்சாளர்களுக்கு பணம் அல்லது வேறு எந்த பரிசும் இல்லை. உணவு கூட வெகு அரிதாக சாப்பாட்டு நேரம் என்றால் மட்டுமே ஏற்பாடு செய்வார்கள். பெரும்பாலும் இல்லை.
கடைசியில் பரிசு வழங்கும் போது கூட கோபி “ரெண்டாவது ரோவில் சிகப்பு சட்டை போட்டவருக்கு பரிசு” “முதல் ரோவில் ஜீன்ஸ் போட்ட பெண்ணுக்கு பரிசு” என்கிறாரே ஒழிய அவர்கள் பெயர் சொல்வதே இல்லை.
ஒவ்வொரு மனிதனும் மிக அதிகம் விரும்பும் வார்த்தை அவரவர் பெயர்தான் என்பது சுய முன்னேற்ற நூல்களை எழுதிய கோபிக்கு தெரியவா இல்லை? என்ன கொடுமை சார் இது!
நீயா நானா நிகழ்ச்சியை பலரும் பார்க்க காரணம் அதில் பேசும் பல வித மக்களின் பேச்சு மற்றும் அனுபவம் தான். ஆனால் அதற்கு உரிய மரியாதையை , அவர்கள் பெயர் போட்டு செலுத்த நீயா நானா தவறுவது என்ன விதத்தில் நியாயம்?
சமூக அவலங்களை தட்டி கேட்கும் நீயா நானா, தனது தவறை முதலில் திருத்தி கொள்ளட்டும் !
0
மோகன் குமார்








July 14th, 2012 at 12:00 pm
ஏதோ ஃபிலிம் காட்டீக்கிட்டு இருக்காரு. வசமா எங்கமாதிரி ஆளுக நாலு பேர்ட்ட சிக்கினாத் தெரியும்.
July 14th, 2012 at 7:10 pm
hello, மோகன் குமார் unga name podalanathum y tis kolaveri?
July 14th, 2012 at 8:11 pm
மோகன் அவர்களே! பெயர்,அப்புறம் அதில் எழுத்துப்பிழை னு போய்க்கிட்டே இருக்காதீங்கய்யா! வடையை எண்ணுங்கன்னா துளைய எண்ணூறீங்களே!ஐயா!—காஸ்யபன்
July 15th, 2012 at 8:54 am
நண்பர்களே மூணாம் ரோ சிகப்பு சட்டை என்று அழைப்பதை நீங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளலாம். எனக்கு அது உவப்புடயைதாய் இல்லை. மற்ற அனைத்து சானல்களும் பெயர் போடும்போது இவர்களுக்கு என்ன? வி. ஐ. பி கெஸ்டுக்கு மட்டும் பெயர் போடுவார்கள். அவர்கள் பெயர் போட்டு தான் மற்றவர்களுக்கு தெரியணும் என்பது இல்லை. ஒரு முறை சென்று அரை நாள் இவர்களிடம் காய்ந்து வந்தால் அப்புறம் நான் சொல்வதில் உள்ள வலி உங்களுக்கு புரிய கூடும்
July 15th, 2012 at 1:09 pm
நண்பரே! திருச்சியைச் சேர்ந்த ஹன்ஸா காஷ்யப் M.A;MPhil:M.L: அவர் ஒரு நிகழ்ச்சியில்பங்குகொண்டார்.அவருடைய அனுபவத்தை சொன்னார்.ஒரேநாளில் நான்கு நாள் நிகழ்ச்சியை எடுப்பதால் பங்கு கொள்பவர்கள் படும்பாட்டை சொல்லியிருக்கிறார்.அதைவிட கோபிநாத், விருந்தாளிகள் படும்பாடும் சொல்லமுடியாது என்றார்.தொழில் நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் உங்கள் கோரிக்கை சரிதான்.அதனை இயக்குனர் ஆண்டனி தான் கவனிக்க வேண்டும். “மானாட மயிலாட” மாதிரி இல்லாமல் கொஞ்சம் சமூகம் பற்றி பெசுகிறார்களெ என்பது ஆறுதல். வாழ்த்த்க்களுடன்—காஸ்யபன்.
(பி.கு: ஹன்ஸா காஸ்யப் என் மகள்)
July 16th, 2012 at 12:36 am
Agreed, even i observed this but Mohan has written. Nothing wrong, Vijay TV should correct this. I heard that prizes also were not distributed properly few years back. Sivakarthikeyan used to quote that “They will not give the payment” as funny in many stages, may be true
who knows ???
July 16th, 2012 at 10:19 am
இந்த நீயா நானா கோபிநாத்தைப் பற்றி என் அண்ணனின் நண்பர் என் அண்ணனிடம் சொல்லி இருக்கின்றார். அந்த நண்பர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அவர் பேச எழுந்த போது கோபி பேசவே விடவில்லையாம். ஏற்கனவே பேசிய சிலரையே மீண்டும் மீண்டும் பேச வைத்தாராம். ஆக, அந்த நண்பருக்கு கோபி மீது சந்தேகம் வந்து விட்டது. இந்த ப்ரோக்ராமே ஒரு செட் அப் என்று சந்தேகம் மட்டும் கொள்ளாமல் அந்த நண்பர் முடிவே கட்டி விட்டார். சிலருக்கு முன்கூட்டியே சொல்லிக் கொடுத்து அவர்களை மட்டும் பேச வைக்கின்றார்கள் என முடிவு கட்டி விட்டார். எது உண்மையோ?
July 16th, 2012 at 10:38 am
‘நீயா, நானா?’ நிகழ்ச்சியை ஒரு பிடி பிடிப்பீர்கள் என்று பார்த்தால், இப்படி ஏமாற்றிவிட்டீர்கள். (கருக்கலைப்பு நிகழ்ச்சியில்… விவாதமே வேறுவிதமாக மாறிப் போனது கொடுமை.)
July 16th, 2012 at 9:15 pm
ஜென்னி… கருக்கலைப்பு நிகழ்ச்சி – என்ன சொன்னார்கள்? எப்படி விவாதம் மாறிப் போனது? விவரங்கள் கிடைக்குமா
July 17th, 2012 at 1:08 am
விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் “participant generated content” அடிப்படியாக கொண்டுள்ளன (சூப்பர் சிங்கர், ஜூனியர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்றவை) அப்படி இருக்க பெயர் போடுவது மிகவும் முக்கியம்.
கொஞ்ச நாள் முன்னாடி விசு #1 ஆக இருந்தார். இப்போ கோபி…. இன்னும் கொஞ்ச நாள் ஓடும்.
July 17th, 2012 at 4:52 am
Dont know about neeya naana… but i have seen closely visu vin arratai arangam. visu´s programme used to be a terrific filter. They filter continously for a week before choosing the 18 to speak…and they keep couple of people as standby also (which they would tell in advance). You have to spend 7 days (3 hours everyday) for getting selected to visu´s programe. Visu would come only on the penultimate day (one day before program). But selection used to be very good (i dont know now). Visu would give some last minute tips depending on the speakers as his touch.
But as he being a diretor also gets irrirated as said ´pack up´…..
In fact the best speakers from the program became member of selection team also.
No such kind of transparency in neeya naana….I dont think they address socialy relevent issues so agressively.. It is another commercial program… No complaints… As long people want to show their faces… programs will exist…
July 17th, 2012 at 8:56 am
கடவுளே.. இதை எல்லாம் உண்மை என்று நம்பி மக்கள் இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே! இதற்கு “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியே தேவலாம் போல இருக்கிறது.
நீயா, நானா நிகழ்ச்சி தங்களை அறிவுஜீவிகளாகக் கருதிக் கொள்வோரின் வெற்றுக் கூச்சல். இதனால் சமூகத்திற்கு ஒரு பயனும் இல்லை.
July 18th, 2012 at 8:25 am
கணேஷ் சொன்னபடி, முன்பு விசுவின் அரட்டை அரங்கம் தேர்வு முறை மிகவும் கவனமாகவும், ஒரு கல்லூரி பேச்சுப் போட்டி போலவும் நடக்கும். மூன்று முறையும் அதே தலைப்பிற்கு பேச வேண்டும், தேர்வு ஒரு வாரம் நடக்கும். இது என் சொந்த அனுபவம்.
அம்பி தயவு செய்து “சொல்வதெல்லாம் உண்மை”, “மனம் விட்டு பேசலாம்”, (சன் டிவியில் என்ன வருகிறதென்று தெரியவில்லை) போன்ற நிகழ்சிகளை சப்பை கட்டிற்கு கூட சொல்லாதீர்கள். ஏற்கனவே நொந்து போயிருக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் கீழிருக்கும் மக்களை கொண்டு, பார்க்க சகிக்காத நிகழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள். ஒரு சில நிகழ்ச்சி எப்படி ஒளிபரப்பாகிறது என்ற சந்தேகம் இன்றும் எனக்குண்டு. இதை நான், நித்தியானந்தா வீடியோ ஒளிபரப்பைவிட கேவலமாக மதிப்பிடுகிறேன். ஒரு வீடியோ நிகழ்சியை tamilpaper.net பின்னூட்டத்திலும் கொடுத்துள்ளேன்.
அனுஹாசன் கூட ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். கருத்து பிரமாதம், ஆனால் வழங்கிய விதம் அவ்வளவு சிறப்பாக இல்லை.
நீயா? நானா? அவர்கள் சொல்வது போல் ஒரு ரியாலிட்டி நிகழ்சி. பங்கேற்போரும் அழ வேண்டும், பார்ப்போரும் அழ வேண்டும், இதுதான் அவர்கள் வேண்டுவது. கோபிநாத்தின் தொனி சிலசமயம் மிரட்டுகிறது, சில சமயம் பங்கேற்போரை மட்டம் தட்டுகிறது. இது போன்ற சில குறைகள் இருந்தாலும், இன்றைய தமிழ் சூழலில் இது ஒரு நல்ல நிகழ்ச்சியே. விவாதத்தை எடுத்து செல்லுதல் என்பது மிக முக்கியம். அந்த விஷயத்தில் இதுவரை நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது. உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்கு அதிக இடம் கொடுக்காமல், குறிப்பிட்ட மிக முக்கியமான விஷயத்தை பெருவாரியான மக்களுக்கு கொண்டு சேர்ப்பது, ரியாலிட்டி நிகழ்ச்சியில் மிகவும் கடினம், அந்தப் பணியில் உள்ள சில குறைகளை கலைந்தால், இது இன்னும் ஒரு சிறப்பான இடத்திற்கு வரும்.
தனிமனித ஒழுக்கம் வளரும் வரையில், சமுதாய முன்னேற்றம் ஏற்படாது என்பது என் எண்ணம். இது போன்ற நிகழ்ச்சிகளால் மாற்றம் வரப்போவதில்லை என்பது பார்ப்பவரின் எண்ண ஓட்டத்தை பொருத்தது. வெறும் பாடமாக படிப்பதால் தான், வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்க முடிவதில்லை,வெறும் பட்டம் மட்டும் வாங்குகிறோம்.
உதாரணத்திற்கு இயக்குனர் சங்கர் விகடன் பேட்டியில் குறிப்பிடுகிறார் “என் படத்தை பார்த்து ஒருவர் லஞ்சம் வாங்காமல் திருந்தினால் கூட நான் சந்தோஷப் பட்டிருப்பேன். ஆனால் சினிமா வேறு, சமூகம் வேறு என்று எல்லோரும் விட்டுவிடுகிறார்கள்”. இதுதான் நான் சொல்ல வருவதும், சொல்லப்படும் விஷயத்தை நாம் கடைபிடிக்க வேண்டுமே தவிர, சொன்னவனை குறை சொல்லிவிட்டு தப்பை தொடர்ந்து செய்கிறோம்.
சத்யமேவ ஜெயதே பார்ப்பீர்கள் என நினைக்கிறேன். பார்க்காவிட்டால் தயவுசெய்து பாருங்கள், மிக அருமையாக இந்தியாவை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.
July 18th, 2012 at 11:48 am
எனக்கென்னவோ இந்த கட்டுரை அந்த பாடாவதி நிகழ்ச்சிக்கு மறைமுக விளம்பரம் செய்ய எழுதப்பட்டதோ என்று தோன்றுகிறது…….
July 18th, 2012 at 4:09 pm
இக்கட்டுரை குறித்து கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளில் ஏதோ ஒன்றை வைக்க ஆசை. சரியான ஒன்றை நீங்களே தேர்வு செய்துகொள்ளவும்.
* சன் டிவிக்கு சலாம் போட நினைக்கும் தமிழ்பேப்பர் விஜய் டிவியைத் திட்டுகிறது.
* எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற தமிழ்மரபை வாழவைப்பதற்காகவே தனக்கு ஒப்புமை இல்லாவிட்டாலும் பெயரின்றி நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உலகத்தமிழனாம் கோபிநாத்தை காயப்படுத்தவே தமிழ்பேப்பர் இக்கட்டுஉரையை வெளியிட்டுள்ளது.
* எத்தனையோ முறை கெஞ்சி அழுது கூத்தாடிக்கொண்டும் தன்னைப் பேச அழைக்காத காரணத்தால் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
* இரவு நேரம் கழித்து வந்ததால் வீட்டில் சாப்பாடு போடாமல் தூங்கிவிட்ட மனைவி மீது கோபத்தைக் காட்ட இயல்பாகவே வீரமற்ற தமிழர்தம் இயல்முகத்தை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறதாம்.
எந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை ஒழுங்காக வெளியே சொல்லிப்போடவும்.
July 18th, 2012 at 6:04 pm
உயர்தட்டு மக்கள், மேல்நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே பங்கு பெறும் நிகழ்ச்சி நீயா, நானா. ஹைட்எக் ஆங்கிலம் பேசித் திரியும் அவர்கள் தான் தமிழகத்தின் ஒட்டு மொத்த சமூகமா? நடுத்தர, கீழ் நடுத்தர மக்களின் பிரச்சனை என்றாவது விரிவாக அந்நிகழ்ச்சியில் அலசப்பட்டிருக்கிறதா? ’சொல்வதெல்லாம் உண்மை’க்கும் நீயா நானாவிற்கும் நான் ஒன்றும் பெரிய வேறுபாட்டைக் காணவில்லை. எல்லாம் மக்களை ஏமாற்றும் நிகழ்ச்சிதான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. வாழ்க நீயா, நானா (கோபிநாத்) ரசிகர்கள்!!
July 20th, 2012 at 12:17 am
கீழ்தட்டு மக்களின் பிரச்சினைகளை அலசுவதை வரவேற்கலாம், ஆனால் காட்சியமைப்பு மிக முக்கியம். அந்த நிகழ்ச்சிகள், புண்ணிற்கு மருந்து போட முயற்சிக்காமல் கொத்திப் பார்ப்பதை போலிருந்தது எனக்கு. மிக முக்கியமான விஷயம், முதலில் நாம் சிலவற்றை ரசிப்போம், பிறகு அதை விமர்சிப்போம் மற்றும் நல்லதை வரவேற்போம். நல்லதை பேச கண்டிப்பாக ரசிகனாக மட்டும் இருக்க வேண்டியதில்லை.
எதைப் பற்றியும் கவலைப் படாமல், இன்னுமொரு விமர்சனம் எழுதிவிட்டார் மஹா. நம்மால முடியாதப்பா….(தேவையில்லைதான், ஆனாலும் தாங்க முடியல
)
July 22nd, 2012 at 4:52 pm
Yarooruvan avargale!Kizhakku matrum Tamilpepar kuzhumaththil, eppodhu puththga kankaatchiyil adhiga idangal kadandha aatchiyil ivargalukku odhukkappattadho adhumudhal Muthukumar enum ezhuththaalarai vaiththu Karunaanidhiyin vasadhippadiyana dhravidam,avaradhu suya puraanam, avaradhu magal nermaiyaanavar, ilakkiya kadal,Veeramani oru univercity,Subavee matrum Gaspaar ilangaith thamizhargalakkaaga kooli vaangaamal uzhaikkum tamizh kooligal,enumpadiyaaga ezhudhappadugiradhu.adhaivida orupadi mele senru,spectum oozhalil engalai mattume kuri vaikkiraargal;mundhaya arasil onrume nadakkavillaiyaa ena koorivitta piragumkooda thiru.Badri avargal oozhale nadakkavillai enbadhu pol ezhudhinaar.
August 9th, 2012 at 4:44 pm
enna solla
August 9th, 2012 at 4:46 pm
atha than raaj solliachea