தேவர் மகன்: அம்மிகள் சிலைகளாவதில்லை – 2
இதே படத்தை சாதிப் பிரச்னையை மையமாக வைத்து எடுப்பதானால், வேறுவிதமாக திரைக்கதை எழுதுவேன். சாதி மோதலை அல்லாமல், சாதி நல்லிணக்கத்தை முன்வைத்து அந்தக் கதையை எழுதுவேன். இது லட்சியவாத அணுகுமுறைதான். ஒருவித சமரசம் இதிலும் இருக்கிறது. ஆனால், இதில் கூடுமானவரை பிரச்னையின் பன்முகப் பரிமாணங்களைத் தொட்டுக்காட்ட முயற்சி செய்வேன்.
முதல் வேலையாக, இந்தியாவில் எங்கெல்லாம் யாரெல்லாம் சாதிக்கு எதிராக ஆக்கபூர்வமாக செயல்பட்டிருக்கிறார்கள், இப்போதும் செயல்பட்டுவருகிறார்கள் என்பது தொடர்பான தகவல்களைச் சேகரிப்பேன். அண்ணா ஹசாரேயில் ஆரம்பித்து எத்தனையோ பேர் கிராம மக்களை ஒற்றுமையாக வாழ வழிசெய்து வந்திருக்கிறார்கள். பெரியாரிய இயக்கங்களில் ஆரம்பித்து மதம் சார்ந்த அமைப்புகள் வரை எத்தனையோ அமைப்புகள் பல்வேறு சமூக நல்லிணக்கத் திட்டங்களை முன்வைத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் என் திரைக்கதையில் இணைத்துக்கொள்வேன்.
சாதிச் சண்டையில் பிரிந்து கிடக்கும் ஊரை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன்தான் சக்திவேல் தன் நண்பர்களுடன் ஊருக்கு வருவான். இரட்டை குவளை முறை, தலித்களுக்குக் குறைவான கூலி, கோயில் தேரை இழுக்கத் தடை, சாராயக்கடைகள் என அந்த ஊரில் இருக்கும் பிரச்னைகள் ஒவ்வொன்றுக்கும் நடைமுறை சார்ந்த ஒரு தீர்வை அவன் முன்வைப்பான்.
பெரும்பாலான தலித் மக்கள் தேவர்களின் நிலத்தில் கூலி வேலை செய்பவர்களாக இருப்பதால், முதலில் பொருளாதாரரீதியாக தலித்துகள் சொந்தக் காலில் நிற்க வழி செய்வது அவசியம் என்று சக்திவேல் நினைப்பான். அவனுடைய அப்பாவுக்கு 200-300 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கும். அந்த நிலத்தை உச்ச வரம்புச் சட்டத்தை ஏய்க்கும்வகையில் கோயில் அறக்கட்டளை ஒன்றுக்கு எழுதிவைத்திருப்பார். முதலில் அதை ரத்து செய்துவிட்டு, அந்த நிலத்தை தலித் மக்களுக்கு ஆளுக்கு இரண்டு ஏக்கர் என்ற வகையில் சக்திவேல் பிரித்துக் கொடுப்பான். கூலித் தொழிலாளியாக இருந்தவர்களுக்கு அந்த நிலத்தைக் குத்தகைக்கும், குத்தகைதாரராக இருந்தவர்களுக்கு அந்த நிலத்தை விற்றும் தலித் மக்களை தற்சார்பு பெறச் செய்வான்.
ஒரு அலுவலகத்தில் பியூனை கிளார்க் ஆக்கினால் கிளார்க்கை சீனியர் கிளார்க் ஆகவாவது ஆக்குவது அவசியம் என்ற அம்சத்தின் அடிப்படையில் தேவர் சாதியினரின் வளர்ச்சிக்கும் சில ஏற்பாடுகள் செய்வான். பொருளாதார முன்னேற்றம் வந்தால் சாதி சார்ந்த வெறுப்பு அடியோடு ஒழிந்துவிடும் என்று சொல்ல முடியாது. என்றாலும் அது ஓரளவுக்கு நிலைமையை மேம்படுத்த உதவும். குறைந்தபட்சம் அதிருப்தியானது வன்முறையாக வெளிப்படாமலாவது இருக்கும் என்று நம்பி தொழிற்சாலைகள் ஆரம்பிக்க முயற்சிகள் எடுப்பான். கிராமங்கள் பெரிதும் விவசாயத்தை நம்பி இருப்பதால், தரிசு நிலங்களை விளை நிலங்களாக ஆக்குதல், ஆறு, குளங்கள், ஏரிகளை சீர்படுத்துதல், விவசாய உற்பத்திப் பொருட்களைப் பதப்படுத்துதல் என மக்களுக்கு நேரடியாகப் பயன் தரக்கூடிய தொழில்களை ஆரம்பிக்க முயற்சி எடுப்பான். முற்றிலும் தரிசான நிலங்களில் சூரிய பேனல்களை வைத்து மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடுவான்.
இரு சாதிகளில் இருக்கும் பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குவான். இரு சாதியினரும் ஒன்றாக பாடுபட்டால் வளமான வாழ்க்கை சாத்தியம் என்பதை அவர்களுக்குப் புரியவைப்பான்.
இரட்டைக் குவளை முறையைப் போக்க டிஸ்போஸபிள் கிளாஸ்களை அந்த ஊருக்கு அறிமுகப்படுத்துவான். அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் தொடர்பாக அடிக்கடி சண்டை நடக்கும். சாதிய அமைப்பில் தேவர்கள் மேல் அடுக்கில் இருப்பவர்கள். தலித்துகள் அவர்களைச் சார்ந்து இருப்பவர்கள். இதுதான் நூற்றுக்கணக்கான வருடங்களாக நிலவி வரும் விஷயம். நவீன அரசு உருவான பிறகு இந்த சமன்பாடு மாறத் தொடங்குகிறது. ஒவ்வொரு நவீன அம்சத்தின் வருகையும் பெரும் போராட்டத்தை சந்திக்க நேர்கிறது. அந்த ஊருக்கு ஒரு பஸ் முதன் முதலாக விடப்படுகிறது. பேருந்தைப் பொறுத்தவரையில் யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு இருக்கை என்பது அதன் நியதி. பேருந்தானது சேரி வரை போகிறது. அதாவது அங்கிருந்துதான் புறப்படுகிறது. எனவே, தலித் மக்கள் முதலில் வண்டியில் ஏறிவிடுகிறார்கள். ஓரிரு நிறுத்தங்கள் கழித்த பிறகே தேவர்களின் பகுதி வருகிறது. அங்கு ஏறும் தேவர்களுக்கு உட்கார இடம் கிடைப்பதில்லை. நேற்றுவரை நம்மிடம் கை கட்டி வேலை பார்த்து வந்தவர்கள் நமக்கு முன்னால் உட்காருவதா என்று தேவர்களுக்குக் கோபம் வருகிறது. இதனால் பேருந்தை சேரி வரை போகவிடாமல் தடுக்கிறார்கள். அல்லது தேவர்கள் வரும்போது தலித்துகள் எழுந்து இடம் கொடுக்க வேண்டும் என்று சண்டையிடுகிறார்கள். இது தொடர்பான சண்டை அந்த ஊரில் அடிக்கடி நடக்கிறது.
சக்திவேல் இதைத் தீர்க்க ஒரு வழி யோசிக்கிறான். வேன்கள் சிலவற்றை தனது ஊருக்குக் கொண்டுவருகிறான். அந்த வேனில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. எனவே, அதில் ஏறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அதிகப் பணம் கொடுக்க முடிந்தவர்களுக்கு இருக்கை என அது கொஞ்சம் மாறுபட்ட நியதியை அங்கு கொண்டுவருகிறது. தேவர்கள் வசதியானவர்களாக இருப்பதால் அதில் அவர்கள் ஏறிச் செல்ல முடிகிறது. தலித்துகளிலும் பணக்கார்ர்கள் மட்டுமே அதில் ஏற முடிகிறது. ஒருவகையில் பணக்கார ஜாதியினருக்கான வாகனம் என்ற வகையில் அது அந்தப் பிரச்னையை மட்டுப்படுத்துகிறது. விசேஷ சலுகை அல்லது பெருமிதம் என்பது வெறும் சாதியின்/பிறப்பின் அடிப்படையில் இருக்கும்போது அது மிகப் பெரிய அநீதியாகத் தோன்றுகிறது. அதுவே பொருளாதார அடிப்படையில் முன்வைக்கப்படும்போது இன்றைய சமூகம் அதை ஏற்றுக் கொள்ளவே செய்கிறது. அந்தவகையில், கூடுதல் கட்டணத்தில் தனியார் வாகனங்களை இயக்குவது அந்த பிரச்னையை எளிதில் தீர்த்துவிடுகிறது.
அடுத்ததாக அந்த ஊரில் இருக்கும் கோயில் விஷயத்தில் இரண்டு பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி பிரச்னை வருகிறது. இரு தரப்பினருமே அந்தக் கோயிலில் தங்களுக்குத்தான் உரிமை உண்டு என்று சொல்கிறார்கள். இந்தப் பிரச்னையைத் தீர்க்க இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படியான இன்னொரு தெய்வத்தை வைத்து புதியதாக ஒரு கோயில் கட்டத் தீர்மானிக்கிறான். சாதியால் பிரிந்து கிடக்கும் மக்களை மொழி அடிப்படையில் ஒன்று சேர்த்து தமிழ் அன்னைக்கு ஒரு கோயில் கட்டுகிறான். அங்கு வழிபாடுகள் முழுக்க முழுக்க தமிழிலேயே நடக்க ஏற்பாடு செய்கிறான்.
இப்படியான செயல்களால் மெள்ள சக்திவேலின் புகழ் ஊரில் பரவ ஆரம்பிக்கிறது. பத்திரிகைகளில் இருந்து அவரைப் பேட்டி எடுக்க வருகிறார்கள். நீங்கள் செய்யும் விஷயங்கள் எல்லாம் ஆதிக்க சாதிக்கு பணிந்து போவதாகவே இருக்கின்றனவே என்று நிருபர்கள் கேட்கிறார்கள்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றும். ஆனால், உண்மை அது அல்ல. உண்மையில் மனித இனமானது சாதி என்ற பழங்குடி வாழ்க்கையில் இருந்து விலகி மொழி, மதம், தேசம் என மிகப் பெரிய அடையாளங்களின் கீழே ஒன்றிணைந்து வாழ ஆரம்பித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அந்தப் பெரிய அடையாளங்களின் கீழே ஒன்றிணைவதில் எந்த அளவுக்கு நன்மை அதிகமோ அதே அளவுக்குத் தீமையும் அதிகம். மதத்தின் பெயரால் தேசத்தின் பெயரால் மொழியின் பெயரால் நடக்கும் வன்முறைகளைப் பார்க்கும்போது சாதி சார்ந்த வன்முறை என்பது ஒன்றுமே இல்லை. அவை ஆக்டோபஸ் என்றால் இது வெறும் சிலந்திதான். இதற்காக சாதிய வன்முறையை நான் ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை. ஆதிக்க சாதியினரைக் கொடுங்கோலர்களாக சித்திரிக்கத் தேவையில்லை என்றுதான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் அதுதான் பிரச்னையை மிகவும் சிக்கலாக்குகிறது.
தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் பிற சாதிகளுடன் எந்தப் பெரிய மோதலும் கிடையாது. விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் என பிற தரப்பினருடன் இந்த இரண்டு பிரிவினருமே சுமுகமான வாழ்க்கையே வாழ்ந்துவருகிறார்கள். அதிருப்தி இருக்கும்பட்சத்தில் அதை வன்முறை அற்ற வழிகளிலேயே வெளிப்படுத்தி வருகிறார்கள். தேவர்-தலித் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் மட்டும் எலியும் பூனையும் போல் ஒருவித நிரந்தரமான, ஆழமான பகைமை இருக்கிறது. இதில் ஒரு தரப்பை அழித்து இன்னொன்றை வெற்றி பெறச் செய்தல் என்பது சாத்தியமும் அல்ல. தேவையும் அல்ல. இரண்டு தரப்பும் ஒன்றாக அடுத்த கட்டத்துக்கு நகர எது வழி என்பதைத்தான் நான் பார்க்கிறேன். நாளை தலித்களுக்கும் அவர்களுக்குக் கீழே இருக்கும் பிரிவினர்களுக்கும் இடையில் பிரச்னை பெரிதானால், தலித்துகளுக்கு சில விஷயங்களை விட்டுக்கொடுத்துத்தான் கீழே இருப்பவர்களால் இயங்கவே முடியும். இது மனித இயல்பு. இதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும்.
இது நான் புதிதாக கண்டுபிடித்த வழக்கம் அல்ல. காலகாலமாகவே, பெரிய சக்கரவர்த்திகளையும் மாமன்னர்களையும் சமாளிக்கக் குறுநில மன்னர்களும் ஜமீன்தார்களும் பாளையக்காரர்களும் பின்பற்றிய வழிதான். மேலிருப்பவன் பெரும் படையுடன் வரும்போது ஒரு தொகையைக் கப்பமாகக் கட்டி அனுப்பி வைத்துவிடுவார்கள். இது ஒருவகையில் இரண்டு தரப்புக்குமே வெற்றி என்ற கோட்பாட்டை மையமாகக்கொண்டது. இவ்வளவு ஏன்… துடியான சாமிகளை அது கேட்கும் பலி கொடுத்து சாந்தப்படுத்துவது இலலையா என்ன?
இந்த பஸ் பிரச்னையையே எடுத்துக்கொள்ளுங்கள். உண்மையில் நான் என்ன செய்திருக்கிறேன். கூடுதல் வாகன வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறேன். அதில் சாதிக்கு முன்னுரிமை என்பதை மாற்றி பணத்துக்கு முன்னுரிமை என்பதைக் கொண்டுவந்திருக்கிறேன். இன்றைய சூழலில் இது எல்லாரும் ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான். கூடுதல் வசதி வாய்ப்பு இருப்பதால் இந்த பிரச்னை இரண்டு தரப்புக்கும் லாபகரமான ஒன்றாக முடிந்துவிட்டிருக்கிறது. இதை நான் ஆதிக்க சாதிக்குப் பணிந்து போகும் செயலாக நினைக்கவில்லை. பாய்ந்தோடும் நீரானது வழியில் குறுக்கிடும் பாறையைச் சுற்றி வளைந்து போவதுபோல் விடுதலைப் போராட்டத்தையும் தேவைப்படும்போது நெகிழ்ச்சியுடன் நடத்துவதில் தவறே இல்லை என்று சொல்கிறான்.
அடுத்ததாக, எந்தக் கெட்ட பழக்கத்தையும் ஒரேயடியாக நிறுத்த முடியாது. எனவே, பெரிய கெட்ட பழக்கம் ஒன்றை சிறிய கெட்ட பழக்கத்தால் பதிலீடு செய் என்ற கோட்பாட்டின்படி ஊரில் இருக்கும் சாராயக் கடையை மூடிவிட்டு கள்ளு இறக்கவும் வேறு இடங்களில் இருந்து வாங்கவும் ஏற்பாடு செய்வான். அதுவும் வாரத்துக்கு இரண்டு நாள் மட்டுமே கடை திறந்திருக்கும். குடும்பத்தினரின் தேவைகளுக்குப் போக எஞ்சிய பணம் மட்டுமே போதைப் பொருளுக்குப் பயன்படுத்தப்படவேண்டும் என்று தீர்மானிப்பான். எனவே, ஆண்களுக்கான சம்பளத்தை நேராக வீட்டுப் பெண்கள் வசமே கொடுப்பான்.
உன்னால் முடியும் தம்பி படத்தில், குடித்தால் கணவனுடன் உடலுறவு கொள்ளமாட்டேன் என்று மனைவிகள் முடிவெடுப்பதுபோல் பாலச்சந்தர் காட்டியிருப்பார். அதுகூட நல்ல வழிதான். (தனிப்பட்ட முறையில் குடியையோ குடிப்பவர்களையோ நான் இழிவாகக் கருதவில்லை. குடும்பத்துக்கும் பிறருக்கும் எந்த இழப்பும் ஏற்படாதவரையில் அதை அனுமதிப்பதில் தவறில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அளவோடு இருந்தால் நஞ்சும் அமிர்தமே. அந்த வகையில் மக்களுக்கு ஒழுங்காகக் குடிக்கக் கற்றுக் கொடுப்பதை ஒரு தீர்வாக படத்தில் இடம்பெற வைப்பேன். குடியை அடியோடு ஒழித்தால்தான் கிராம மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்பதுதான் உண்மை என்று இது தொடர்பாக நான் மேற்கொள்ளும் ஆய்வில் தெரியவந்தால் நிச்சயம் அதையே ஒரு தீர்வாக படத்தில் முன்வைப்பேன்.)
அடுத்ததாக, ஊரில் நடக்கும் தேர் திருவிழாவில் தலித்களை வடம் தொட்டு இழுக்க விடாமல் தேவர் சாதியினர் தடுப்பார்கள். முதல்வர், ஜனாதிபதி போன்ற பிரபலங்களைத் தேரோட்டத்தில் பங்கெடுக்க வைத்தால் தன் சாதியினரால் பெரிதாக எந்த எதிர்ப்பையும் காட்ட முடியாது என்று தீர்மானித்து அவர்களை அழைக்கலாம் என்று சக்திவேல் யோசனை சொல்வான். தலித்களை தேர் இழுக்க அனுமதிக்கலாம் என்ற எண்ணம் கொண்ட ஊர் பெரிய மனிதர்களில் சிலர் ஜனாதிபதியெல்லாம் நம்ம ஊருக்கு வருவாரா என்று சந்தேகத்தை எழுப்புவார்கள். இப்போது ராணுவ விமானத்தில் பறப்பது, கடலில் டைவ் அடிப்பது போன்ற சாகசங்களில் ஜனாதிபதிகள் ஈடுபடுவதற்குக் காரணம் அவர்களை அந்த அதிகாரிகள் கூப்பிடுவதால்தான். நாமும் கூப்பிட்டுப் பார்ப்போம் என்று சக்திவேல் சொல்லுவான். அதன்படியே டில்லிக்குப் போய் விஷயத்தைச் சொல்வார்கள்.
சாதி, மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுபோல் விழாக்களில் பங்கெடுப்பது என்று தீர்மானித்தால் ஜனாதிபதிக்கு 24 மணி நேரமும் இந்தியா முழுவதும் சுற்றிக்கொண்டு இருக்கத்தான் நேரம் இருக்கும். அவரால் வேறு வேலை எதையும் பார்க்க முடியாது என்று சொல்லி தட்டிக்கழிக்கப் பார்ப்பார்கள். அயல் நாட்டு நல்லுறவை உருவாக்க கோடிக்கணக்கில் செலவிட்டு உலகம் சுற்றுவதைவிட இது ஆயிரம் மடங்கு மேல் என நாயகன் சொல்லுவான். ஆனால், பாதுகாப்பு காரணங்கள், வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்டுவிட்டது என பல காரணங்களைச் சொல்லி வராமல் தட்டிக்கழித்துவிடுவார்கள்.
மாநில முதல்வரைப் போய் அழைக்கலாம் என்று பார்த்தால் அவர் சந்திக்கவே நேரம் ஒதுக்காமல் அலைக்கழிப்பார். எதிர்க்கட்சித் தலைவரைப் போய்ச் சந்தித்தால் அவரோ பொதுக்குழு கூட்டிப் பிறகு பதில் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுவார். இதனிடையில் தேரோட்ட நாள் வந்துவிடும். அரசு தரப்பில் நாலைந்து தலித்களை மட்டும் வடம் பிடிப்பதுபோல் புகைப்படம் எடுத்துக் கொண்டுவிட்டு அவர்களை அப்புறப்படுத்திவிட்டு தேவர்கள் மட்டும் தேரை இழுத்து விழாவை நடத்தி முடிப்பார்கள்.
இதைப் பார்க்கும் சக்திவேல் புதிதாக ஒரு திட்டத்தை தீட்டுவான். ஈழவனைச் சிவனின் கோயிலுக்குள் வரக்கூடாதென்றுதானே தடுக்கிறீர்கள். சிவனை ஈழவனின் சேரிக்குள் போகாதே என்று தடுக்க உங்களால் முடியுமா என்ன என்று சேரிகளில் பெரிய சிவாலயங்களைக் கட்டி ஈழவர்களை ஆக்கபூர்வமான முறையில் சாதி அடுக்கில் மேலேறச் செய்த நாராயண குருவைப்போல் தலித் மக்களுக்கு என்று ஒரு பிரமாண்டமான தேரைச் செய்ய முடிவெடுக்கிறான். ஸ்தபதி ஒருவரை அழைத்து வந்து ஏழெட்டு மாதங்களுக்குள் ஒரு தேரைச் செய்து முடிகிறான். அதில் என்ன கடவுளை பிரதிஷ்டை செய்யப் போகிறான் என்பதை ரகசியமாகவே வைத்திருப்பான். தேரோட்டத்தின் அன்று திரைச்சீலை மெள்ள உயருகிறது. பிரமாண்ட சுடலை மாடனின் சிலை பீடத்தில் கம்பீரமாக இருப்பதைப் பார்த்து மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கும். தேவர்களின் தேர் ஓடிய அதே தெருக்களில் மட்டுமல்லாமல் இந்த புதிய தேர் சேரிக்குள்ளும் கம்பீரமாக வலம் வரும்.
சமபந்தி போஜனம் தொடர்பாகப் பிரச்னை எழும். இரு தரப்பினரையும் கூப்பிட்டு வைத்துப் பேசுவான். மாட்டுக்கறி சாப்பிடறவன்கூட உக்கார்ந்து நாங்க சாப்பிட முடியாது என்று தேவர்கள் சொல்வார்கள். அப்படியானால், மாட்டுக்கறி சாப்பிடுவதை விட்டுவிட்டால் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்த் தயாரா என்று சக்திவேல் கேட்பான். தலித்களில் சிலர் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மாட்டுக்கறியைச் சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. ஆடு, கோழி சாப்பிடறது மாதிரித்தான் இதுவும். இதை எதற்காக விடவேண்டும் என்று சொல்வார்கள். மாடு விவசாயத்துக்கு உதவக்கூடிய விலங்கு. விவசாயத்தை தொழிலாகக் கொண்ட எங்களுக்கு அது தெய்வம் மாதிரி. தை திருநாள் போன்ற விசேஷ நாட்களில் மாட்டுக்கு மரியாதை செய்து கும்பிடுவது எங்கள் பழக்கம். அப்படியான மாட்டை அடித்துக் கொன்று தின்பது எங்கள் தெய்வத்தைக் கொல்வதற்கு சம்ம். அப்படியானவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட எங்களால் முடியாது என்று தேவர்கள் மறுத்துவிடுவார்கள். இவ்வளவு பேசுகிறீர்களே… அணிலையும் பூனையையும் தின்னக்கூடிய நரிக்குறவர்களுடன் தலித்களை முதலில் சம பந்தி போஜனம் நடத்தச் சொல்லுங்கள். அதன் பிறகு எங்கள் கூட உட்கார்ந்து சாப்பிட வரட்டும் என்று தேவர்கள் சொல்வார்கள்.
சக்திவேல் இது தொடர்பாக, தலித்களிடம் பேசுவான். இப்போது தேவர்களின் வார்த்தைகளை தலித்துகள் பேச ஆரம்பிப்பார்கள். சக்திவேல் நிதானமாக விஷயத்தை எடுத்துச் சொல்வான். உணவுப் பழக்கம் என்பது இயற்கை ஏற்படுத்திய விஷயம். எல்லா விலங்குகளும் தாவர பட்சிணியாக இருந்தால் தாவரங்களின் இனம் அழிந்துவிடும். எல்லாமே விலங்குகளைச் சாப்பிடுபவையாக இருந்தால் விலங்கு இனம் அழிந்துவிடும். எனவே, சில விலங்குகள் தாவரங்களையும் சில விலங்குகள் தாவரபட்சிணிகளையும் உண்பதாக இயற்கை படைத்திருக்கிறது. மனிதனுக்கு எல்லாவற்றையும் சாப்பிட முடியும் என்பதால், அவனுக்கும் சில தடைகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. அதன் அடிப்படையில் மனமானது சிலவற்றை ஏற்றுக்கொள்கிறது. சிலவற்றை விலக்குகிறது. இப்படி வளங்களைப் பங்கிட்டுக் கொண்டு வாழ்ந்தால்தான் ஒருவித சமநிலை நிலவமுடியும். இதில் ஏற்றத் தாழ்வுக்கு இடம் இல்லை என்று சொல்கிறான். அதன்படி தலித்துகள் முதலில் நரிக்குறவர்களுடன் சம பந்தி போஜனம் நடத்துகிறார்கள். அதன் அடுத்த கட்டமாக தேவர்களும் தலித்களுடன் சம்மாக உட்கார்ந்து உண்கிறார்கள்.
கிராமப்புறங்களில் தேவர்களின் தெருக்களுக்குள் தலித்துகள் செருப்பு அணிந்து போகக்கூடாது… சைக்கிளில் ஏறிச் செல்லக்கூடாது என பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சக்திவேல் சொல்கிறான். தலித்துகள் உங்களைவிட எந்தவித்தத்தில் தாழ்ந்தவர்கள்… பிராமணரல்லாதவர்கள் அக்ரஹாரத்துக்குள் நுழையக்கூடாது என்று இருந்ததை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுவிட்டிருக்கும் நிலையில் தேவர்கள் இப்படிச் செய்வது தவறு என்று சொல்கிறான். இது தொடர்பான வாக்குவாதம் முற்றுகிறது. தலித்துகள் உங்களுக்கு எந்தவகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தால் இதுபோன்ற விஷயங்களை விலக்கிக் கொள்வீர்களா என்று சக்திவேல் சவால்விடுகிறான். சரி… மோதிப் பார்த்துவிடுவோம் என்று தேவர்கள் அருவாள், வேல் கம்புகள் அணி வகுக்கிறார்கள். தலித்களும் தங்கள் ஆயுதங்களுடன் மோதத் தயாராகிறார்கள்.
இப்படிச் சண்டை போடவேண்டாம். ஜல்லிக் கட்டில் தேவர் சாதியினர் வளர்க்கும் காளையை ஒரு தலித் அடக்கிக் காட்டுவார். அப்படி முடியாமல் போனால், இதைவிடக் கூடுதல் அடக்குமுறைகளை நீங்கள் விதித்துக் கொள்ளலாம் என்று சக்திவேல் சொல்லுவான். இரு தரப்பினரும் அதை ஏற்றுக் கொள்வார்கள். அதன்படியே ஜல்லிக்கட்டு அனல் பறக்க ஏற்பாடு செய்யப்படும். அந்தப் போட்டியில் சீறிவரும் காளையை ஒரு தலித் நேருக்கு நேராக நின்று கொம்பைப் பிடித்து அடக்கி, அதன் கழுத்தில் காலை வைத்து அழுத்தி, கீழே விழவைத்து வெற்றிபெறுவார். ஏனென்றால், தான் அடக்கப்போவது வெறும் ஒரு காளையை அல்ல என்பது அவருக்கு நன்கு தெரியும்.
இப்படியாக ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு தீர்வுகளை நாயகன் முன்வைப்பான்.
ஒரிஜினல் படத்தில் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு ஊர் நலனுக்காக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வதாக காட்சி இடம்பெற்றிருக்கும். அதை மிகவும் என் திரைக்கதையில் மாற்றி அமைப்பேன். இரு சாதியினருக்கு இடையே நல்லுறவை வளர்க்க கலப்புத் திருமணத்தை நாயகன் முன்னெடுப்பான். விமரிசையாக நடக்கும் திருமண விழாவில் தலித் போராளி ஒருவர், நாயகனைப் பார்த்து நீ ஒரு தலித் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அதன் பிறகு ஊருக்கு உபதேசம் செய் என்று சொல்லுவார்.
எனக்கு தலித் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதில் எந்த தயக்கமும் கிடையாது. ஆனால், ஏற்கெனவே வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதால் அது சாத்தியமில்லை என்று நாயகன் சொல்லுவான். அதெல்லாம் இல்லை… தலித் மீது உனக்கு இருக்கும் வெறுப்பினால்தான் உயர் சாதிப் பெண்ணாகப் பார்த்து காதலிக்க ஆரம்பித்திருக்கிறாய் என்று மடக்குவார். மேடையில் மாலை அணிந்தபடி கலப்புத் திருமணத்துக்கு தயாராக உட்கார்ந்திருப்பவர்கள் அனைவரும் நாயகனின் இந்த மோசடிக்கு நாங்கள் துணை நிற்கப் போவதில்லை என்று மாலையைக் கழட்டிப் போடுவார்கள். இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் நாயகன் தன் லட்சியத்துக்காகக் காதலைத் தியாகம் செய்வான். அவனுடைய காதலியே கண்ணீர் மல்க தாலியை எடுத்துக் கொடுப்பாள். தலித் பெண் ஒருத்தியை சக்திவேல் மணந்துகொள்வான்.
அதன்பிறகு வேறு சிக்கல்கள் வர ஆரம்பிக்கும். நிலத்தை ஊருக்குப் பிரித்துக் கொடுத்ததையும் பிற நல்ல செயல்களையும் ஆதரித்த நாயகனின் குடும்பத்தினர் தலித் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள். மெள்ள அந்த தலித் பெண் அவர்கள் மனத்தில் இடம்பிடிப்பாள். எதற்கும் அசைந்து கொடுக்காத சின்ன ஐயாவின் வெட்டி சாதிப் பெருமிதம் பேரக் குழந்தை பிறந்ததும் மெள்ள உருக ஆரம்பிக்கும்.
இப்போதைய படத்தில் நாயகன் சக்திவேலும் அவருடைய அப்பாவுக்கும் இடையிலான அன்னியோன்னியத்தை வெளிப்படுத்த இயக்குநர் ஒரு காட்சி வைத்திருப்பார். தன்னிடம் பேசி முடித்துவிட்டுப் போகும் மகனை அப்பா வைத்த கண் வாங்காமல் பாசத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார். வாசல் வழி வெளியே போன மகன், காதலி தன் ஆசைக் காதலனைத் பார்ப்பதுபோல், திரும்பிப் பார்ப்பார். அப்பா சட்டென்று வெட்கப்பட்டு தன் பார்வையை விலக்கிக் கொள்வார். அதை எனது திரைக்கதையில் சற்று மெருகூட்டுவேன். தலித் மருமகளுக்குப் பிறந்த குழந்தையை சின்ன ஐயா மற்றவர்கள் முன்னால் கொஞ்சக் கூச்சப்படுவார். ஒரு நாள் குழந்தை கூடத்தில் தனியே விளையாடிக்கொண்டிருக்கும். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு குழந்தையை எடுத்துக் கொஞ்சப் போவார். அப்போது பார்த்து சக்திவேல் அந்தப் பக்கம் வந்துவிடவே அசடு வழிந்தபடியே தான் வேறு எதையோ தேடிக்கொண்டு வந்ததாக நடிப்பார். அப்படியா என்று சொல்லிவிட்டு சக்திவேல் போய்விடுவான். அவன் போய்விட்டானா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சப் போவார். இப்போது, சக்திவேல் மெள்ள திரும்பி எட்டிப்பார்ப்பான். எந்த சாக்கும் சொல்ல முடியாத வகையில் சின்ன ஐயாவின் கையில் குழந்தை இருக்கும். சக்திவேல் மென்மையாகப் புன்னகை செய்தபடியே விலகிச் செல்வான். சின்ன ஐயா குழந்தையை ஆசை தீர முத்தமிட்டுக் கொஞ்சுவார்.
உண்மையில் சக்திவேல் லண்டனில் படித்து அமெரிக்காவில் செட்டில் ஆகத்தான் தீர்மானித்திருப்பான். அங்கு அவன் சந்திக்கும் கறுப்பர் இனப் போராளி ஒருவரின் வார்த்தைகளைக் கேட்டுத்தான் சொந்த கிராமத்தை மேல் நிலைக்குக் கொண்டுவர முடிவெடுத்து ஊர் திரும்பியிருப்பான். உங்கள் நாட்டின் க்ரீமி லேயர் ஆட்கள் எல்லாம் அந்நிய நாட்டுக்காரருக்கு எடுபிடி வேலை செய்வதில் காட்டும் அக்கறையை சொந்த நாட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதில் காட்டுங்கள். அமெரிக்காவிடமிருந்தும் ஐரோப்பாவிடமிருந்தும் நீங்கள் எதையெல்லாமோ இறக்குமதி செய்துவருகிறீர்கள். முதலில் தேச பக்தியையும் சொந்த நாட்டினர் மீதான அக்கறையையும் இறக்குமதி செய்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பார். அவருடைய வார்த்தைகளால் உந்தப்பட்டுத்தான் சக்திவேலும் அவனுடைய நண்பர்களும் கிராமங்களில் நிலவும் சாதிய மோதல்களுக்குத் தீர்வுகாணுதல் என்பதை தங்களுடைய லட்சியமாக எடுத்துக்கொண்டு களம் இறங்கியிருப்பார்கள் என்று கதையை ஆரம்பிப்பேன்.
இதுவரை ஓரளவுக்கு சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கும் கதையில் ஒரு முக்கியமான திருப்பம் வரும். சக்திவேலில் கிராமமானது ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படும். முருகேசன் என்ற ஒரு தலித்தை அந்த பஞ்சாயத்தின் தலைவராக நியமிக்க சக்திவேல் குழுவினர் தீர்மானிப்பார்கள். ஊரில் இருக்கும் பெரிய மனிதர்களுக்கு அது பிடிக்காமல் போய்விடும். சக்திவேலை எதிர்ப்பதில் முதல் ஆளாக அவனுடைய அப்பா சின்ன ஐயாவே இருப்பார். எல்லா பிரச்னைகளையும் சமாளித்த சக்திவேலுக்கு தன் அப்பாவை எப்படிச் சமாளிக்க என்பது தெரியாமல் போய்விடும். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடிக்கும்.
இந்தியாவுக்கே ஒரு தலித் ஜனாதிபதி ஆகியிருக்காரு. நீங்க என்னடான்னா பஞ்சாயத்து தலைவரா ஆக விடமாட்டேன்னு சொல்றீங்களே என்று தந்தையிடம் சக்திவேல் வாதாடுவான். அவரை எங்களுக்கு யாருன்னே தெரியாதப்பு. ஆனா நீ இன்னிக்கு பஞ்சாயத்து தலைவரா நிறுத்தறியே இந்த முருகேசனை எங்களுக்கு நல்லாத் தெரியும். அவன் வீட்டுல ஒரு வேளை அடுப்பு எரியணும்னா அதுக்கு எங்க கிட்ட வாங்கற கூலி இருந்தாத்தான் முடியும். இன்னிக்கு அவன் உடம்புல ஒண்டுத்துணி ஒட்டியிருக்குன்னா அதுக்கு நாங்கதானப்பு காரணம். இன்னிக்கு நேத்திக்கு இல்லை.. தலைமுறை தலைமுறையா அவங்க குடும்பமும் சாதிசனமும் நம்ம குடும்பத்துக்கு நம்ம சாதி சனத்துக்கும் கைகட்டித்தான் இருந்து வந்திருக்காங்க. இன்னிக்கு அவனைப் போயி எனக்கு மேல உட்கார வைக்கறியே… நியாயமா? என்று சீறுவார். வாக்குவாதம் உச்சத்தை எட்டவே நீ உண்மையிலயே எனக்குத்தான் பிறந்தியா… இல்லன்னா உங்க அம்மா யாராவது பள்ளன் பறையனுக்குத்தான் உன்னைப் பெத்தாளா என்று ஆக்ரோஷத்தில் கத்துவார். அதைக் கேட்டதும் சக்திவேல் சப்த நாடியும் ஒடுங்கிப் போய்விடுவான்.
முருகேசன் பஞ்சாயத்து தலைவரானா அவனை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போவேன் என்று சூளுரைப்பார். அப்பா, நீங்க நல்லருன்னு எனக்குத் தெரியும். இந்த ஜாதி வெறி உங்க கண்ணை மறைக்குது. உங்க தப்பை நீங்க உணர்ந்து நிச்சயம் திருந்துவீங்க. உங்களை நான் திருத்துவேன் என்று சவால் விட்டுவிட்டு, முருகேசனை தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைப்பான் சக்திவேல்.
பஞ்சாயத்து கமிட்டி கூட்டத்தை, கோயிலில் வைத்து வட்ட மேஜை மாநாடுபோல் அனைவரையும் சம உயரமான இருக்கையில் அமரவைத்து நடத்துவான். முருகேசனுக்கு பாதுகாப்புக்காக எப்போதும் இரண்டு காவலர்களை அரசு நியமித்திருக்கும். ஊரில் எப்போதும் ஒருவிதப் பதற்றம் நிலவியபடியே இருக்கும்.
ஒரு நாள் இரவில் முருகேசனையும் சேரி மக்களையும் வெட்டிக் கொல்வது என்று சின்ன ஐயா தலைமையில் ஒரு சதித் திட்டம் தீட்டப்படும். அது தெரிய வந்ததும் முருகேசனும் சேரி மக்களும் சற்று தூரத்தில் இருக்கும் காட்டுக்குள் தஞ்சம் புகுந்துவிடுவார்கள். மழைக்காலம் என்பதால் மாலை நான்கு மணி வாக்கிலேயே லேசாக இருட்ட ஆரம்பித்திருக்கும். இரவு நேரக் காவலர்கள் மாலை ஆறு ஏழு மணிக்கு மேல்தான் வருவார்கள் என்பதால் வேல் கம்பும் அருவாளுமாக சின்ன ஐயாவின் ஆட்கள் கொலை வெறியுடன் சேரிக்குள் நுழைவார்கள். யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்த்து எங்கு போயிருப்பார்கள் என்று கூடிப் பேசுவார்கள்.
அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிய முருகேசன் கடைசியாக சில பொருட்களை எடுத்துச் செல்வதற்காக நாலைந்து பேருடன் சேரிக்கு வந்திருப்பார். சின்ன ஐயாவும் அவருடைய ஆட்களும் அவர்களைச் சுற்றி வளைத்துவிடுவார்கள். அந்த ஊருக்கு அருகில் இருக்கும் அணையில் நீர் அளவுக்கு அதிகமாக சேகரமாகியிருக்கும். அணை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டதால் சில இடங்களில் விரிசல் விட்டிருக்கும். முருகேசனை வெட்டப் போகும் நேரத்தில் அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய ஆரம்பிக்கும். சேரியும் தேவர்கள் வசிக்கும் பகுதியும் அணைக்குப் பக்கத்திலேயே இருந்ததால் வெள்ளத்தில் அனைவரும் சிக்கிக் கொண்டுவிடுவார்கள். சின்ன ஐயாவை வெள்ளம் அடித்துச் சென்றுவிடும். நீச்சல் தெரிந்த நிலையிலும் வயதானதால் அவர் நீரில் தத்தளிப்பார்.
கிடைத்த மரம் ஒன்றில் அடைக்கலம் புகுந்திருந்த முருகேசன் சின்ன ஐயா உயிருக்குப் போராடுவதைப் பார்ப்பான். .நீரில் பாய்ந்து சென்று சின்ன ஐயாவைக் காப்பாற்றுவான். ஒரு மரக்கிளையில் அவரை பத்திரமாக உட்கார வைத்துக்கொண்டு இரவெல்லாம் தூங்காமல் கண் விழித்து அவரைக் காப்பாற்றுவான். அந்த வெள்ளத்தில் தேவர்களும் தலித்களும் தங்கள் பகையை எல்லாம் மறந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வார்கள். மறுநாள் பொழுது விடியும்போது எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடாக இருக்கும். பக்கத்து ஊருக்கு வேலை விஷயமாகப் போயிருந்த சக்திவேலும் அவனுடைய நண்பர்களும் விஷயத்தைக் கேள்விப்பட்டு ஊருக்கு விரைந்து வருவார்கள். தலித்களும் தேவர்களும் பரஸ்பரம் உதவி செய்துகொள்வதைப் பார்த்து மெய்சிலிர்த்து நிற்பார்கள். உங்களை ஒண்ணு சேர்க்க ஒரு புயலும் வெள்ளமும் வரவேண்டியிருக்கே… என்று கண்கலங்குவான். கிழக்கே அடர்த்தி குறையத் தொடங்கிய கறுப்பு மேகங்களைக் கிழித்தபடி புதிய சூரியன் உதிக்க ஆரம்பிக்கும்.
இந்தத் திரைக்கதையில் கதாநாயகன் முன்வைக்கும் தீர்வுகளை சாதி பிரச்னை தொடர்பான ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைக்கும் ஒன்றாகத்தான் இடம்பெறச் செய்திருக்கிறேன். வாசகர்கள், இவற்றில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். இதில் சொல்லப்படாத பிரச்னைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் எழுதி அனுப்புங்கள். இந்த விஷயங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியுமா என்று ஒன்றாக நாம் முயன்று பார்ப்போம்.
0
B.R. மகாதேவன்








June 27th, 2012 at 3:49 pm
அம்மிகள் சாமிகள் ஆவதில்லை
ரொம்ப சரி.. கட்டுரை எழுதினவருக்கு தன்னைப் பத்தி மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது..
அம்மிகள் வழக்கொழிந்து போய்.. மிக்சி வந்துவிட்ட பின்பும், தமிழ் பேப்பர் இன்னமும் அம்மியில் அரைத்துக் கொண்டிருப்பது,, அவர்களுக்கு என்னமோ பஞ்சம் என்பது போலவே இருக்கிறது
June 27th, 2012 at 3:53 pm
அம்மியும் மிக்ஸியும் ஒன்றே என்பதை ஒரு புனைவுமனம் குறியீட்டுமொழியில் மிக எளிதாகக் கண்டுகொள்ளும்.
June 27th, 2012 at 6:29 pm
Why is Mr. Mahadevan not producing any film in Tamil? Who is stopping him?
Let us get some good films with a neat screen play.
June 28th, 2012 at 12:27 am
Easiest way to earn fame is to criticise others especially proven people.mahadevan is doin such thing.mahadevan mind is full of anti kamal so no room for true view in his writings .. Jeyakanthan once in his novel said A person who can judge or write about a work should be a better that person but mahadevan is not. Mahadevan just built castles in air. he said he wil collect data on caste riots it is clear he never knew on village life or caste etc. May be his source on life could be some third rate news paper , channels or gossips. My sincere advise to mahadevan is dont be an armchair philosopher, better spend some time wit yourself . Atlest others wil be benefitted
June 28th, 2012 at 12:45 am
Try to read about ‘ The david brent syndrome ‘. You are a perfect example. An another eg is charu nivedita.
(Edited)
June 28th, 2012 at 1:45 am
‘என்ன இந்திராகாந்தி செத்துட்டாரா’ன்னு கேட்குறது போல இருக்கு.
June 28th, 2012 at 9:55 am
மகாதேவன் தேவர் மகனை சீர் படுத்தி எழுதியிருக்கும் பாங்கிலிருந்தே அவரது நுண்ணறிவு புலப்படுகிறது. நீங்கள் எழுதுங்கள் மகாதேவன். உங்கள எவன் தடுக்கறான்னு பாத்திடுவோம்.
(Edited)
June 28th, 2012 at 9:58 am
“உங்களை ஒண்ணு சேர்க்க ஒரு புயலும் வெள்ளமும் வரவேண்டியிருக்கே… என்று கண்கலங்குவான்”
இந்த வரி என்னைக் கதறிக் கதறி அழவைத்து விட்டது. ஏன் மகாதேவன்? ஏன் இத்தனை உருக்கமான வரியை திடும்மென எழுதி என்னை உடைய வைக்கிறீர்கள்?
June 28th, 2012 at 9:58 am
brm..
நீங்கள்..
“ஹே ராம்”இன் மீது சேற்றை வாரி இறைத்தபோது..
கோபப்பட்டேன்!
“விருமாண்டி”யின் மீது சேற்றை வாரி இறைத்தபோது..
எரிச்சலுற்றேன்!!
இப்போ “தேவர் மகன்”இன் மீது
சேற்றை வாரி இறைக்கும் போது…
பரிதாபப்படுகிறேன்
அன்புடன்,
G
Edited
June 28th, 2012 at 1:34 pm
இனிமேலும் இப்படி பழைய கமல் படங்களை விமர்சிக்காமல், வரவிருக்கும் விஷ்வரூபம் படத்தை வந்த அடுத்த நாளே கிழித்துத் துவைத்துக் காயப்போடுங்கள் பார்க்கலாம்.
June 28th, 2012 at 2:02 pm
Virumandi was film in set due to problems caused by caste based groups. Many knew it.So when u film in set u cant take liberty in screen play nd in story. There is always problem in filmin than writing as liberty is limited due to locations.it is a common thing. More over art cant be constructed like mahadevan does. Better understand art nd try to write it. People who gave chance to u should be condemned. Kamal is one among few who went for alternate cinema inside commercial cinema in early 80′s . So ter is always problem, compromise on trying to bring good work. Now after 30 years many r enlightened to knew on world cinema so ter is more chance of making film with liberty . Kamal should be credited for it not criticised. Sustaining a habit or character is important in a journey of life.many fail in it but Kamal,Rajini,Ilayaraja still keeping nd challenging young generation. Such people should be praised not condemn for small cheap mistakes. Ur writing is so cheap.
June 28th, 2012 at 3:48 pm
எட்டு சுரக்காய் கறிக்கு உதவாது. உங்க கதை ஏதோ Government office வேல பார்க்கிற Officer வேல வெட்டி இல்லாம சொல்லிட்டு இருக்ர மாறி இருக்கு. இத மாறி சும்மா வாயிலே வட சுடரவங்களுக்கு பாரதியார் அப்பவே சொன்னார்.
“தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே” ன்னு. Write a good modified screenplay and send it to directors. If its good they will call you. Its no use for TamilPaper readers. As usual we will read and Forget it.
June 28th, 2012 at 3:50 pm
//முதல் வேலையாக, இந்தியாவில் எங்கெல்லாம் யாரெல்லாம் சாதிக்கு எதிராக ஆக்கபூர்வமாக செயல்பட்டிருக்கிறார்கள், இப்போதும் செயல்பட்டுவருகிறார்கள் என்பது தொடர்பான தகவல்களைச் சேகரிப்பேன். அண்ணா ஹசாரேயில் ஆரம்பித்து எத்தனையோ பேர் கிராம மக்களை ஒற்றுமையாக வாழ வழிசெய்து வந்திருக்கிறார்கள். பெரியாரிய இயக்கங்களில் ஆரம்பித்து மதம் சார்ந்த அமைப்புகள் வரை எத்தனையோ அமைப்புகள் பல்வேறு சமூக நல்லிணக்கத் திட்டங்களை முன்வைத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் என் திரைக்கதையில் இணைத்துக்கொள்வேன்.// ஓ… அமீர் கான் சத்யமேவ ஜயதே பாதிப்பா! பேஷ்… பேஷ்… ரொம்ப நல்லா இருக்கு! (நீங்க காப்பி அடிக்க மாட்டீங்களே… உங்கள் எண்ணத்தை சத்யமேவ ஜயதே காப்பி அடித்திருப்பார்கள்!) மத நல்லிணக்கத்துக்கு உதாரணம் சொல்லக்கூட துப்பில்லை… அன்னாஹசாரேவாமே…
June 28th, 2012 at 7:01 pm
next in line is rajapaarvai?
)
June 28th, 2012 at 11:41 pm
Now I understand why you didn’t get a chance to make a movie. Those who are using “lf”s for past actions will never succeed.
(Edited)
June 29th, 2012 at 8:52 am
என்னுடைய பின்னூட்டம் (#9) எடிட் செய்யப்பட்டிருப்பது
ஏன் என தெரியவில்லை.
நீக்கப்பட்டிருக்கும் அந்த இரண்டுவரிகள்,எந்த வகையிலும் அநாகரீகமானது இல்லை.
“குரங்கு கையில் பூமாலை” என படைப்பாளனை,ஒரு விமரிசகன் சொல்வது தவறில்லை என்றால்,
“உங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை” என அந்த விமரிசகனை ஒரு வாசகன் சொல்வது எந்த விதத்தில் தவறு?
என்னுடைய அந்த வரிகளை மீண்டும் பிரசுரித்து அதை மற்ற வாசகர் தீர்ப்பிற்கே விடுங்கள்.
பெரும்பாலோர் அதை தவறு என சொன்னால் நான் இனி BRM ற்கு பின்னூட்டம் இடுவதையே நிறுத்தி விடுகிறேன்.
நன்றி.(இதையாவது போடுவீர்கள் எனும் நம்பிக்கையில்)
June 29th, 2012 at 3:18 pm
இங்கே வாய் கிழிய சவடால் பேசி மகாதேவனை விமர்சனம் செய்பவர்கள் இது போல் ஒரு விமர்சனம் எழுத முயற்சி செய்யலாமே.. விமர்சனத்தை மட்டும் விமர்சியுங்கள். விமர்சகர் படைப்பாளனை விமர்சித்தால் அதை மட்டும் சுட்டுங்கள்.. BRM கமலை விமர்சிக்கக் கூடாது என்பவர்கள் அவரை ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிக்கிறீர்கள்?
June 29th, 2012 at 6:42 pm
விமர்சனம் என்பது எடுக்கப்பட்ட படத்தையும் அதில் உள்ள குறைகளையும் மட்டுமே விமர்சிக்க வேண்டும். அதை விடுத்து நானாக இருந்தால் இப்படி தான் எடுப்பேன் என்று மாற்று கதையை சொல்வது ஏற்க கூடியதல்ல. விமர்சகர் தன்னுடைய மேதாவி தனத்தை வெளிபடுத்துவதிலேயே குறியாக இருக்கிறார். அப்படி பார்க்க போனால் எந்த அற்புதமான படத்தையும் அற்பமான படமாக உருவகபடுத்தி தரம் தாழ்த்த முடியும். விமர்சகரும் சரி பட இயக்குனரும் சரி மக்களை புத்திசாலியாக நினைக்க வேண்டும், அதை விடுத்து தாங்கள் தான் புத்திசாலி என பறை சாற்றுவதில் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
June 29th, 2012 at 8:05 pm
//Karthikeyan G BRM கமலை விமர்சிக்கக் கூடாது என்பவர்கள் அவரை ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிக்கிறீர்கள்?//
கமலை விமரிசிக்கக்கூடாது என்று யார் சொன்னார்கள்?!? ஏற்கனவே கமலின் புகழ் உச்சாணிக்கொம்பில் இருந்தாலும், இப்போது, விஸ்வரூபம், ஹாலிவுட் படம்/பாராட்டு என்று புகழ்மழையில் நனைகிறார். இது தமிழ்பேப்பர் குழுமத்திற்கு என்றுமே பிடிக்காத ஒன்று. எனவேதான் தொடர்ந்து கமலை மட்டம்தட்டி எழுதுகிறார்கள்(மூக்குடைபட்டாலும்). ஆக, இவர்காள் கீழ்த்தரமாக எழுதும்போது, கமென்ட் போடுபவர்கள் அப்படி எழுதுவது எப்படி தவறாகும். இத்தனைக்கும் கடுமையாக எடிட் செய்கிறார்கள்/
June 29th, 2012 at 8:20 pm
இந்த தளத்தில் நீண்ட நாள் கமென்ட் போட்டு வருகிறேன். போடப்படும் போஸ்டை பொறுத்து சாட்டையடியோ செருப்படியோ கொடுக்க நான் பயந்ததில்லை. அதே சமயம், என் கமென்ட்களுக்கு வரும் ரியாக்ஷன்களுக்கும் பதில் போடுகிறேன். ஆனால், இங்கே Moderation சரியில்லை. நினைத்ததை சொல்லவிடுவதில்லை. எடிட்/டெலிட் செய்துவிடுகிறார்கள்.
மகாதேவன், வசதியாக இங்கு கமலை திட்டி பதிவுபோட்டு, அதற்கு தக்க பதிலடி கமென்ட்களை எடிட் செய்வதில் என்ன தைரியம் இருக்கிறது? உன்மையாகவே தைரியம் இருந்தால், தன் கருத்துக்கள் சரி என்ற நம்பிக்கை இருந்தால், பொதுவெளியில் பேச வரவேண்டும்.
தேவர் மகனில் கூட ஒரு ஒரு வசனம் வரும் “தேரை இழுத்து தெருவில் விடப்பார்க்கிறார்கள்” என. பொதுவெளிக்கு அழைப்பதால், அப்படி தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வீட்டுக்குள் இருந்துகொண்டு விமர்சனம் செய்வது கோழையால் கூட முடியும். தெருவுக்கு வந்தால் தான் அது தேரா தேரையா(தவக்களை) என்று தெரியும்.
ட்விட்டரில் இடப்பிரச்சனை. 140 பத்தாது. ஃபேஸ்புக்கில் இன்று போட்டால் நாளை அந்த போஸ்ட் எங்கே என தேடமுடியாது.
எனவே, மகாதேவனை நான் இங்கே வரும் படி அழைக்கிறேன். போஸ்ட் போட விரும்புபவர்கள் ஒரு முறை பதிவு செய்தல் வேன்டும். சும்மா படிக்க நினைப்பவர்களுக்கு அதுகூட தேவை இல்லை.
இந்த தளத்திலும் Moderation உண்டு, அனாகரீகமாக போஸ்ட் செய்ய விடமாட்டார்கள். அதே சமயம் Moderation நேர்மையாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் தருகிறேன். இதற்காக தனியாக திரி தொடங்கி விவாதிக்கலாம்.
June 29th, 2012 at 8:26 pm
கார்த்திகேயன்,
உங்களது இதே பண்பாட்டு அறிவுரையை BRM மீதுதானே முதலில் சொல்லியிருக்கவேண்டும் ? காரணம் விமர்சனம் வந்தபின்தானே அதற்கான எதிர்வினைகள் வந்தன ?
விமர்சகர் படைப்பாளியை கீழ்த்தரமாக விமர்சிப்பார் எனில் விமர்சகர் மட்டும் என்ன புனிதப்பசுவா ?
விதைப்பதுதானே விளையும் ?
June 29th, 2012 at 8:27 pm
மேலே போட்ட கமென்ட்டில் சுட்டி நீக்கப்பட்டுள்ளது. இதோ அந்த சுட்டி ->
www dot mayyam dot com/talk/forumdisplay.php?29-Tamil-Films
June 30th, 2012 at 2:00 am
தேவர் மகன் Godfather-III தழுவி எடுக்கப்பட்டது என்று ஏன் சொல்லவில்லை?
June 30th, 2012 at 9:46 am
//”இங்கே வாய் கிழிய சவடால் பேசி மகாதேவனை விமர்சனம் செய்பவர்கள் இது போல் ஒரு விமர்சனம் எழுத முயற்சி செய்யலாமே”//
அதெப்படி முடியும் கார்த்திகேயன்? மகாதேவன் போல விமரிசனம் எழுத முடியுமா? தெண்டுல்கர் போல பாட்டிங் செய்ய முடியுமா? லதா மங்கேஷ்கர் மாதிரி பாட முடியுமா?
கமலஹாசனை விட நன்றாக திரைக்கதை எழுத வரும் ஒரே காரணத்தால் மகாதேவன் பிரமாதமாக விமரிசனம் எழுதுகிறார். அதற்காக புயலோடு போட்டி போடு, எரிமலையை அணைத்துக் காட்டு என்று நீங்கள் சவால் விடுவது முறையல்ல.
நீங்கள் எழுதுங்கள் மகாதேவன். உங்கள எவன் தடுக்கறான்னு பாத்திடுவோம்.
June 30th, 2012 at 12:09 pm
ஒரு விளக்கம். கமெண்டுகளை மகாதேவன் மாடரேட் செய்வதில்லை. ஒரு கட்டுரையாளராக படைப்புகளை அளிப்பதோடு அவர் பணி முடிந்துவிடுகிறது.கட்டுரைகளும் கமெண்டுகளும் எடிட் செய்யப்படுவதற்கு அவர் பொறுப்பல்ல.
ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதற்கும் மாற்று கருத்துகளைத் தக்க முறையில் எதிர்கொள்வதற்கும் இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் கருத்துகள் எத்தனை காட்டமாக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு வேண்டுமானாலும் விமரிசிக்கலாம். கிண்டல், நையாண்டி எல்லாமே ஓகே. நெருடலான வார்த்தைகள் மட்டுமே திருத்தப்படுகின்றன. அப்போதும் உங்கள் மையக்கருத்து / விமரிசனம் சிதையாத வண்ணமே அவை திருத்தப்படுகின்றன.
June 30th, 2012 at 3:04 pm
//ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதற்கும் மாற்று கருத்துகளைத் தக்க முறையில் எதிர்கொள்வதற்கும் இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.//
ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவேண்டுமெனில் விமர்சனத்துக்கு உள்ளாகும் நபரை அடிப்படை நாகரீகத்துடன் அணுகுவது அவசியம்! அது முதலிலிருந்தே மிஸ்ஸிங்! அதுபோக, நியாயமான விம்ர்சனங்களுக்கு மகாதேவன் பதிலே சொல்வதில்லை.
கிட்டத்தட்ட அனைத்து கமென்டுகளுமே ஏற்றுக்குள்ளப்படுகின்றன என்பது மட்டுமே ஒரே ஆறுதல்
June 30th, 2012 at 3:06 pm
மகாதேவன் முன்வைத்த மாற்றுக்கதைகளை குறும்படமாக எடுத்தால் அதன் நிஜமான மதிப்பு தெரியவரும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். முறையற்ற கமல்-தாக்குதல் தான் அவரிடம்/தமிழ் பேப்பரிடம் நான் வெறுப்பது. படத்தை தப்பும் தவறுமாக புரிந்துகொள்வது கூட அடுத்தது தான்.
July 2nd, 2012 at 8:53 pm
அய்யா வித்தகன் மற்றும் இன்ன பிற நண்பர்களுக்கு, சரியோ தவறோ வெட்டி விமர்சனம் மட்டும் செய்யாமல் BRM அவர் எப்படி அந்த திரைக்கதையை கையாண்டிருப்பார் என்பதையும் எழுதுகிறார்.. அவருடைய திரைக்கதையை விமர்சனம் செய்யுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன்.. அதில் உங்களால் குற்றம் கண்டுபிடிக்க முடிந்தால் அதை வைத்து நையாண்டி செய்யுங்கள் //இந்த வரி என்னைக் கதறிக் கதறி அழவைத்து விட்டது. ஏன் மகாதேவன்? ஏன் இத்தனை உருக்கமான வரியை திடும்மென எழுதி என்னை உடைய வைக்கிறீர்கள்?//இதுபோல..
July 3rd, 2012 at 12:29 pm
Nowadays i only read the comments for Mahadevans articles……coz i understood long back its waste reading it.
July 3rd, 2012 at 1:10 pm
கார்த்திகேயன். மனசத் தொட்டு சொல்லுங்க. அந்த வரி உங்களயும் அழ வைக்கலயா? உங்களுக்கு என்ன கல் நெஞ்சா? சரி விடுங்க. உருக்கமான விஷயங்களத்தான் நீங்க ஒதுக்கறீங்க! பின் வரும் master stroke அயாவது கவனியுங்க.
//பக்கத்து ஊருக்கு வேலை விஷயமாகப் போயிருந்த சக்திவேலும் அவனுடைய நண்பர்களும் விஷயத்தைக் கேள்விப்பட்டு ஊருக்கு விரைந்து வருவார்கள்.//
படத்தோட கிளைமாக்ஸ்ல கதாநாயகன ஏதோ “வேலை” விஷயமா கதை நடக்கிற எடத்துல இருந்து ஒதுக்கி வைக்கிற இந்தத் திரைக்கதை உத்திய கவனியுங்க. அது என்ன வேலை? என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏன் வேலைக்காக பக்கத்து ஊருக்குப் போகவேண்டும்? அவருக்கு பேதி வந்து உள்ளுக்குள்ளயே படுத்திருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். யாரோ ஜூனியர் ஆர்டிஸ்டுகள் எல்லாம் வசனம் பேசிக் கொண்டிருக்கும் போது கதாநாயனுக்கு வயிற்றுப் போக்கென்று இருந்தால் நன்றாக இருக்காதே என்பதால்தான் BRM (MGR மாதிரி நச்சுனு இருக்குல்ல!) இப்படி ஒரு தெளிவான காட்சியை வைத்திருக்கிறார்.
இதற்கப்புறம் அந்த நெஞ்சை உருக்கும் வரியை படியுங்கள். இனிமேலும் உங்கள் உள்ளத்தில் சுனாமி அடிக்கவில்லையென்றால் நீங்கள் சாதாரண மனிதரே இல்லையென்றுதான் அர்த்தம்.
நீங்கள் எழுதுங்கள் மகாதேவன். உங்கள எவன் தடுக்கறான்னு பாத்திடுவோம்.
July 4th, 2012 at 5:14 pm
“Viththakan” super..!!
July 4th, 2012 at 10:10 pm
டியர் பி.ஆர்.எம். நீங்கள் பன்றிகளின் முன்னால் ரத்தினங்களைப் பரப்புகிறீர்கள். நீங்கள் மட்டும் புத்திசாலியாக இருந்தால் போதாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களும் அப்படி இருந்தால்தான் அவர்களுடன் உங்களுக்கு உரையாடல் சாத்தியம்.ஒன்று நீங்கள் தமிழ் பேப்பரில் எழுதுவதைத் தவிருங்கள். அல்லது பின்னூட்ட மாடரேஷனை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். ஒரு கம்ப்யூட்டர் கைவசம் இருப்பது மட்டுமே பின்னூட்டம் இடுவதற்கான தகுதி என நினைப்பவர்களுக்கும், என்ன பின்னூட்டமாக இருந்தாலும் வெளியிட்டே ஆவது என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் மத்தியில் இருக்க வேண்டியவர் அல்ல நீங்கள். உங்களுக்கு எதிரியாக ஆவதற்கும் ஒரு தகுதி வேண்டும்.
July 5th, 2012 at 1:06 am
“next in line is rajapaarvai? )”
Next in line is kalathur kanamma…
Very poor performance by kamal…..
July 5th, 2012 at 1:07 am
Castro #29
July 3rd, 2012 at 12:29 pm
Nowadays i only read the comments for Mahadevans articles……coz i understood long back its waste reading it.
Repeat……..
July 6th, 2012 at 10:53 am
டியர் Vijay SA,Viththakan,and மன்னர் மன்னன்,
நீங்கள் பன்றிகளின் முன்னால் ரத்தினங்களைப் பரப்புகிறீர்கள். நீங்கள் மட்டும் புத்திசாலியாக இருந்தால் போதாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களும் அப்படி இருந்தால்தான் அவர்களுடன் உங்களுக்கு உரையாடல் சாத்தியம்.ஒன்று நீங்கள் தமிழ் பேப்பரில் பின்னூட்டமிடுவதை தவிருங்கள். அல்லது பதிவுகளின் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். ஒரு கம்ப்யூட்டர் கைவசம் இருப்பது மட்டுமே பதிவு இடுவதற்கான தகுதி என நினைப்பவர்களுக்கும், என்ன பதிவாக இருந்தாலும் வெளியிட்டே ஆவது என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் மத்தியில் இருக்க வேண்டியவர் அல்ல நீங்கள். உங்களுக்கு எதிரியாக ஆவதற்கும் ஒரு தகுதி வேண்டும்.
July 6th, 2012 at 10:08 pm
ஐயா கண்பத்… ரத்தினங்களின் மதிப்பைப் புரிந்து கொள்ளாத ஜந்துக்களில் நீங்களும்தான் அடக்கம். நைஸாக மற்றவர்களைக் கைகாட்டிவிடுவதால் நீங்கள் அந்தக் கூட்டத்தில் இல்லை என்றாகிவிடாது. அப்பறம் உங்களுக்குக் கூடுதலாக அசட்டுக் கிளி என்ற இன்னொரு தகுதியும் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியதற்கு நன்றி.
மகாதேவனின் அடுத்த விமர்சனக் கட்டுரைக்கும் இதுபோலவே உங்களுடைய அபத்தக் கருத்துகளை அனுப்பத்தான் போகிறீர்கள். என்னது ராஜீவ் காந்தி செத்துட்டாரா…. அடுத்த படம் கொளத்தூர் கோவிந்தம்மாவா என்பது போன்ற பின்னூட்டங்கள் வரிசைகட்டி நிற்கத்தான் போகின்றன. தமிழ் பேப்பர் எடிட்டோரியல் அதை சமத்தாக வெளியிடத்தான் போகிறது.
நான் பொதுவாக கட்டுரைகளின் பின்னூட்டங்களைப் படிப்பதே இல்லை. ஏதோ முப்பது நாற்பது எண்ணிக்கை காட்டுகிறதே என்று லேசாகப் பார்த்துத்தொலைத்துவிட்டேன். நான் பார்க்காமல் இருந்தது 100க்கு 100 சரி என்பதையே இந்தப் பின்னூட்டங்கள் நிரூபிக்கின்றன. மகாதேவனும் எந்தப் பின்னூட்டத்தையும் படிப்பது இல்லை போலிருக்கிறது. அதனால்தான் அவருடைய எந்த பதிலையும் காண முடியவில்லை. ஆனால், இதில் ஒரு வேடிக்கையான சோகம் எனவென்றால், அவர் பதில் அளிக்காமல் இருப்பதால் ஏதோ பயந்துவிட்டதாகவும் பதில் சொல்ல முடியாமல் இருப்பதுபோலவும் தாங்களாகவே மகுடம் சூட்டிக் கொள்வதும் நடக்கிறது. டியர் மகாதேவன், இந்தக் கருமத்தைத் தடுத்து நிறுத்தவாவது ஏதாவது பதில் எழுதுங்களேன்.
July 7th, 2012 at 11:39 am
சுரேஷ்,
நான் யாரையும் கைகாட்டவில்லை.
டியர் Ganpat என்று எனக்கு நானே எழுதிக்கொள்ளும் அளவிற்கு என் புத்தி பிறழவுமில்லை!
உங்களுக்கும் BRM ற்கும் பின்னூட்டங்களை படிப்பதில் நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் Blog எழுதுவதை நிறுத்தி விட்டு டயரி எழுதலாமே!
நாங்களும் தப்பிப்போம்.
பாடும் வரை பாடு,
தாளம் போடு;
அதை நீயே கேளு!
என்ற கவிஞர் முத்துலிங்கம் பாடலை நினைவுபடுத்துகிறேன்!
மற்றபடி இங்கு,நானும் என்னை சேர்ந்த அனைவரும், உடலளவிலும்,மனதளவிலும் நலமாக இருக்கிறோம்.
அங்கும் அவ்வாறே கூடிய விரைவில் ஆக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து
இம்மடலை முடிக்கிறேன்,
நன்றி..
July 7th, 2012 at 9:56 pm
கண்பத்,
டியர் கண்பத் என்று உங்களுக்கு நீங்களே எழுதிக் கொள்ளுங்கள் என்று நானும் சொல்லவில்லை. முட்டாள்களின் குழுமத்தில் இருக்கும் ஒருவர், சக முட்டாள்களுக்கு எழுதும் மடலில், தான் அந்தக் குழுமத்தில் இல்லை என்பதுபோன்ற பாவனையில் எழுதியத்தைத்தான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
தேவர் மகன் படத்தை முன்னிட்டு மகாதேவன், சாதிப் பிரச்னை தொடர்பான சில விவாதக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். அது பற்றி பின்னூட்டம் இட்டவர்களில் ஒருவர் கூட வாயே திறக்கவில்லை. ரஜினி ரசிகர் என்றும் வெற்றுப் பரபரப்புக்காக எழுதுகிறார் என்றும் பிழையாக முத்திரை குத்துவது மட்டுமே நடந்திருக்கிறது. இதில் இருந்தே மகாதேவனின் கொடி பறக்கும் சிகரம் இருக்கும் மலையின் அடிவாரத்தைக்கூட நீங்கள் யாரும் எட்டியிருக்கவில்லை என்பது நன்கு புரிகிறது.
மேலும் உங்களை புத்தி பிறழ்ந்தவராக நான் சொல்லவே இல்லை. சில ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும்.
July 7th, 2012 at 11:04 pm
I have a suggestion.Tamilpaper should contact dir,perarasu and give him a chance to rewrite some tamil classics.
July 9th, 2012 at 2:28 pm
//இதில் இருந்தே மகாதேவனின் கொடி பறக்கும் சிகரம் இருக்கும் மலையின் அடிவாரத்தைக்கூட நீங்கள் யாரும் எட்டியிருக்கவில்லை என்பது நன்கு புரிகிறது.//
அதத்தான் சாமி நானும் படிச்சுப் படிச்சு சொல்றேன். யாரும் கேக்க மாட்டேங்கறாங்க.
நம்ம BRM என்ன சொல்றார்னு பாருங்க.
//குடியை அடியோடு ஒழித்தால்தான் கிராம மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்பதுதான் உண்மை என்று இது தொடர்பாக நான் மேற்கொள்ளும் ஆய்வில் தெரியவந்தால் நிச்சயம் அதையே ஒரு தீர்வாக படத்தில் முன்வைப்பேன்//
இந்த வாக்கியத்தோட ஆழத்த கவனிங்க. “தெரியவந்தால்” என்கிற வார்த்தையின் எடை புரிகிறதா? ஒரு வேளை அவர் மேற்கொள்ளும் ஆய்வில் இது தெரியவரவில்லை என்றால் சரக்கு அடிப்பதுதான் ஜாதிப் பிரச்சினையைத் தீர்க்கும் என்ற தீர்வை அவர் முன்வைக்கலாம் என்பதையே சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
என்னதான் இருந்தாலும் அந்த ஆய்வுக்கு நோபல் பரிசு உறுதி என்பதில் நமக்கு சந்தேகமே இல்லை. ஆனால் அதன் முடிவு என்னவாக இருக்குமோ, அதைக் கருத்தில் கொண்டு BRM என்ன தீர்வு சொல்வாரோ என்று முதல் முறையாக முத்தமிட்ட கன்னிப் பெண் போல என் இதயம் படபடக்கிறது.
நீங்கள் எழுதுங்கள் மகாதேவன். உங்கள எவன் தடுக்கறான்னு பாத்திடுவோம்.
July 9th, 2012 at 6:57 pm
//sureshkumar #38
July 7th, 2012 at 9:56 pm
தேவர் மகன் படத்தை முன்னிட்டு மகாதேவன், சாதிப் பிரச்னை தொடர்பான சில விவாதக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். அது பற்றி பின்னூட்டம் இட்டவர்களில் ஒருவர் கூட வாயே திறக்கவில்லை. ரஜினி ரசிகர் என்றும் வெற்றுப் பரபரப்புக்காக எழுதுகிறார் என்றும் பிழையாக முத்திரை குத்துவது மட்டுமே நடந்திருக்கிறது. இதில் இருந்தே மகாதேவனின் கொடி பறக்கும் சிகரம் இருக்கும் மலையின் அடிவாரத்தைக்கூட நீங்கள் யாரும் எட்டியிருக்கவில்லை என்பது நன்கு புரிகிறது.//
நான் இந்த தளத்தில் நிறைய எழுதி இருக்கிறேன். முழுமையாக படித்துவிட்டு பேசவும்! தேவர் மகன் பற்றி விருமாண்டி பற்றின மகாதேவன் கட்டுரையிலேயே கமென்ட் போட்டிருக்கிறேன்.
சாதிப்பிரச்சனைக் தீர்வாக தேவர் மகனை எடுக்கவில்லை கமல். படத்தின் அரசியல் முக நுட்பமானது. அதை சரியாக புரிந்துகொள்ளாமல் கமென்ட் போட்டால், மகாதேவனைபோலவே நீங்களும், உளறுகிறீர்கள் என்றே சொல்லவேன்டி வரும்.
என்னமோ மகாதேவன் ஒரு புரட்சிகரமான மாற்று காட்சியை வைத்ததுபோலவும் அது மட்டும் படத்தில் இடம் பெற்றிருந்தால் ஜாதிப்பிரச்சனையே தமிழ்நாட்டில் தீர்ந்துவிடும் போல, அவரைபோலவே நீங்களும் சிறுபிள்ளைத்தனமாக எண்ணுகிறீர்கள்! அதன் விளைவு தான் மகாதேவன், சிகரம், கொடி என்கிர பிதற்றல் எல்லாம். சாரி, குமட்டிக்கொண்டு வருகிறது.
மகாதேவன் சொல்லியிருக்கும் சோ கால்ட் தீர்வுகள் எல்லாம் டாகுமென்டரி படத்தை விட போரடிக்கும் விதமாக உள்ளது. உதாரனம் – இரட்டைக்குவளை முறைக்கு தீர்வாக ப்ளாஸ்டில் கப் தருவாராம். பிரச்சனை குவளையில் இல்லை, சில இன மக்களின் மனத்தில் இருக்கிரது.
அது போக நீங்கள் சொல்லாவிட்டாலும் மகாசு ஒரு ரஜினி ஜால்ரா தான். ஏன் இந்தத்தளமே ஒரு ரஜினிக்கு ஜிஞ்க் சக்கான் அடிக்கும் கூட்டம் தான். ரஜினி, இந்துத்துவா, இப்படி பல மேட்டர்கள் இருக்கிறது! ரஜினி, இந்துத்துவா இதையெல்லாம் எப்படி இந்தக்கூட்டம் தப்புத்தப்பாக புரிந்துகொண்டுள்ளதோ அதைப்போலவே கமலைப்பற்றியும் அவரின் பகுத்தறிவு பற்றியும் கிஞ்சித்தும் புரிதல் இல்லாமல் இருக்கிறது. அந்தப்புரிதல் பெரும்பான்மைக்கு பகுத்தறிவு வரும் வரைக்கும் தீரவே தீராது!
அதுவரை, தேவ் மகன் பற்றி இதுபோன்ற கப்பித்தனமான கட்டுரைகளை விட, கீழ்கண்டது போன்ற நல்ல தரமான கட்டுரைகளை படிக்கவும்.
http://cl dot gs/y0pb
July 11th, 2012 at 10:36 pm
Vijay SA
உங்களுடைய அதி மேதாவித்தனத்தை விருமாண்டி பின்னூட்டத்திலேயே பார்த்து மிரண்டுபோயிருந்தேன். நீங்கள் அதில் சொல்லியிருந்த எதுவுமே பொருட்படுத்தத் தகுந்ததல்ல. அதாவது நீங்கள் கேட்ட சில கேள்விகளுக்கான பதில் கட்டுரையிலேயே இருக்கிறது. சில கேள்விகள் கட்டுரையை ஒழுங்காகப் புரிந்துகொள்ளாததால் எழுந்தவை. மகாதேவன்கூட பொருட்படுத்தத் தகுந்த ஒரு விஷயத்துக்கு பதில் தந்திருந்தார். எஞ்சியதை அவர் இடது கையால் தள்ளி ஒதுக்கியதைப் புரிந்துகொள்ளத் தெரியாமல் தோற்றுவிட்டார் என்று இன்றும் பிதற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஹேராம் படத்தைப் பற்றி அவர் விரிவாக எழுதியிருந்ததைப் படித்துப் பார்க்காமலேயே மேலோட்டமாக அவர் சொல்லியிருப்பதாக உளறினீர்கள். இந்தக் கட்டுரையில் கூட மகாதேவன்தான் மாடரேஷன் செய்கிறார் என்றும் எடிட் செய்கிறார் என்றும் கோழை என்றும் பெனாத்தியிருக்கிறீர்கள். தமிழ் பேப்பர் எடிட்டோரியலில் உண்மையைச் சொன்ன பிறகு, நீங்கள் எழுதியது தவறுதான் என்று ஒரு சிறு வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை. இதுதான் உங்கள் லட்சணம். அப்பறம், தமிழின் அறிவுஜீவி படைப்பாளியாக சொந்த பந்தங்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனுக்கு வக்காலத்து வாங்க உங்களைப் போன்ற டம்மிபீஸ்கள்தான் முன்வந்திருக்கிறது என்பதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. பிறகென்ன… எதிர்த்துப் பேச முடியாதபடி விமர்சனம் வைக்கப்படும்போது கமுக்கமாக பதுங்கிக் கொள்வதுதானே நம்மூரில் வழக்கம்.
July 12th, 2012 at 2:02 pm
sureshkumar.
ஏதோ நம்மூர் வழக்கம் என்கிறீர்கள்?!? உங்கள் வழக்கத்தை ஏன் ஊர் வழக்கமாக சொல்கிரீர்கள்?!? நான் எப்போதுமே விவாதிக்க தயார் தான்.
//உங்களுடைய அதி மேதாவித்தனத்தை விருமாண்டி பின்னூட்டத்திலேயே பார்த்து மிரண்டுபோயிருந்தேன். நீங்கள் அதில் சொல்லியிருந்த எதுவுமே பொருட்படுத்தத் தகுந்ததல்ல. அதாவது நீங்கள் கேட்ட சில கேள்விகளுக்கான பதில் கட்டுரையிலேயே இருக்கிறது. சில கேள்விகள் கட்டுரையை ஒழுங்காகப் புரிந்துகொள்ளாததால் எழுந்தவை. மகாதேவன்கூட பொருட்படுத்தத் தகுந்த ஒரு விஷயத்துக்கு பதில் தந்திருந்தார். எஞ்சியதை அவர் இடது கையால் தள்ளி ஒதுக்கியதைப் புரிந்துகொள்ளத் தெரியாமல் தோற்றுவிட்டார் என்று இன்றும் பிதற்றிக் கொண்டிருக்கிறீர்கள். //
இப்படி எல்லாம் எழுத எனக்கும் தெரியும். ஒன்று எது தவறு என்று சொல்லவேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவேண்டும்.
ஹேராம் பொருத்தவரை, அதில் மகாதேவன் சொன்ன சில குறைகள் சரி தான். ஆனால் முதலில் விருமாண்டிக்கு பாயின்ட் பை பாயின்ட் பதில் சொல்ல மகாதேவன் தயாரென்றால் நானும் ஹேராம், அன்பே சிவம் பதிவில் உள்ள மகாசின் குறைகளை சொல்ல தயார் தான். அதற்காகத்தான் வேறு தளத்தில் எந்த மாடரேஷனும் இன்றி விவாதிக்க அவரை அழைத்தேன். அவர் தான் பதிலளிக்கவில்லை.
மாடரேஷன் பற்றி தொடர்ந்து விமர்சனங்கள் வந்ததால்தான் சற்றே நிலைமை சரியானது. நான் இதை சுட்டிக்காட்டியும் இருக்கிறேன்.
மகாதேவனை கோழை என்பதற்கு பல காரணங்கள் உண்டு, இந்த மாடரேஷன் மேட்டர் மட்டும் அல்ல. “அண்ணன் பேசினா ஒன்வே, ரிட்டர்ன் வரப்படாது” என்கிற பாணியில் அவர் இயங்குவதே முதல் கோழைத்தனம். பெரும்பாலான கமென்டுகளுக்கு அவர் இன்றுவரை பதில் சொல்லவில்லை. அவருக்கும் எனக்கும் பார்த்தால் 50:1 விகிதம் இருக்கும். அதாவது அவர் 50 கமென்ட்/பாயின்ட்களுக்கு பதில் சொல்லவில்லை எனில் நான் ஒரு கமென்டுக்கு பதில் சொல்லவில்லை என்ற ரேஷியோ. பெரும்பான்மை கோழையான அவரை விட்டுவிட்டு என்னை குறை சொல்வதில் என்ன நியாயம்?!? இத்தனைக்கும் அவ்வப்போது மகாசின் தரப்பு நியாயத்தை நானாகவே ஒத்துக்கொண்டுள்ளேன்.
கமலைப்போலவே அவரை விமரிசிக்கும் விமர்சகனுக்கும் அதே மக்களின் ஆதரவு தேவை. ஏன், இங்கே கமென்ட் போடும் எனக்கு கூட ஆதரவு தேவை. முதல் போஸ்டிலிருந்து எண்ணிப்பாருங்கள் எத்தனை பேர் மகாதேவனுக்கு ஆதரவளிக்கிரார்கள் எத்தனை பேர் எனக்கு ஆதரவளிக்கிரார்கள் என. அதுபோக ட்விட்டர் பேஸ்புக் தளங்களில், ஒவ்வொரு முறையும் மகாசின் கமல்-கட்டுரை வரும்போது மகாசை கிண்டல் செய்து வரும் ட்வீட்களை எண்ணிப்பாருங்கள். நியாயமாகப்பேசவேண்டும். இப்படி இருக்கும்போது நீங்கள் ஒருத்தர் மட்டும் என்னை டம்மி பீஸ் என்பது ஆதரவற்ற கமென்ட் என்பதால் புஸ்ஸாகி போகிறது! அதுவும் உங்களுக்கு என்னை திட்ட வேண்டும் அவ்வாளவுதான், ஏன் டம்மி பீஸ் என்ற காரணமெல்லாம் உங்களிடம் இல்லை!
இதே மக்கள் கமலின் படங்களுக்கு ஆதரவு தராதபோதும் அதே மக்களை குறையும் சொல்கிறோம். “அது மட்டும் எப்படி சரி?!? மகாசுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கலைன்னா அவர் மேல தப்பு, ஆனா கமல் படம் ஓடலைன்னா மட்டும் கமல் மேல் தப்பில்லை மக்கள் மேல் தான் தப்பா” என நீங்கள் கேட்கலாம். அதிலும் எங்களுக்கு ஒரு நியாய முறை உண்டு. ஒரு மும்பை எக்ஸ்ப்ரெச், மன்மதன் அம்பு, நம்மவர், ஹேராம், ஓடவில்லை என மக்களை நாங்கள் குறை சொல்லவில்லை. ஒரு மகாநதி, குணா, அன்பே சிவம் ஓடவில்லை என்றால்தான் மக்களை குறை சொல்கிறோம்.
July 12th, 2012 at 5:43 pm
sureshkumar,
எதைவைத்து மகாதேவனை கோழை எங்கிறீர் என கேட்டீர்களே, மேல் சொன்னதுபோக இன்னொரு விஷயமும். கமலின் கருத்துக்கள் கொள்கைகள், அவர் படத்தில் பிழைகளென இவர்கள் கருதுவது, இப்படி எதையும் விமரிசிக்கலாம். ஆனால் கமலை அவமானப்படுத்தும் நோக்கோடு அவரை மட்டம்தட்டும் விதமாக தலைப்புகள் வைக்கப்படுகின்றன. இது விருமான்டியில் இருந்தே தொடர்கிறது. இது இவர்கள் நடத்தும் தளம். இவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என்ற சுதந்திரத்தை தப்பாக பயன்படுத்திக்கொண்டு, அதே சமயம், இந்த கேவல செயலுக்கு தக்க சாட்டையடி கொடுக்கும் கமென்டுகளை அழித்துவிடுவது, இது கோழைத்தனமான செயல் இல்லையா?!? நீங்களும்கூட அப்படித்தான் செய்கிரீர்கள். என்னை டம்மி பீஸ் என சொல்கிறீர்கள், இதுவும் ஒரு கோழைத்தனமான செயல் என்றே சொல்வேன். என் கமென்டுகளுக்கு பதில் சொல்ல வழியின்றி கீழான தனிநபர் தாக்குதலில் இறங்குகிறீர்கள்
July 13th, 2012 at 6:00 pm
//Viththakan
நீங்கள் எழுதுங்கள் மகாதேவன். உங்கள எவன் தடுக்கறான்னு பாத்திடுவோம்.//
உருண்டு உருன்டு சிரித்தேன்! நன்றி வித்தகன்
July 28th, 2012 at 7:45 am
mahadevan putting here command in the name of vithakan so viewers please aware