குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
ஜூலை 19 அன்று இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இரு தினங்களுக்கு முன்னால், மமதாவும் முலாயம் சிங்கும் இணைந்து அப்துல் கலாமைத் தங்களின் முதல் விருப்ப வேட்பாளாராக அறிவித்தனர். காங்கிரசுக்கு மமதா பாணர்ஜி வைத்த செக் என்று ஊடகங்கள் அதனைக் குறிப்பிட்டன. இந்த ஆண்டே தேர்தல் நடைபெறலாம் என்றும் ஆருடம் கூறின.அலங்காரப் பதவி என்று வருணிக்கப்பட்டாலும், தற்போது சிக்கலான சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது குடியரசுத் தலைவர் பதவி. இந்தப் பின்னணியில், ஒரு குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று பார்க்கலாம்.
குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டுரிமை யாருக்கு இருக்கிறது?
- மாநில சட்டசபை உறுப்பினர்கள்
- மக்களவை லோக்சபா உறுப்பினர்கள்
- மாநிலங்களவை ராஜ்யசபா உறுப்பினர்கள்.
ஒரு எம்எல்ஏவின் ஓட்டு என்பது அவரது மாநில மக்கள் தொகைக்கு ஏற்றவாறு எண்ணிக்கை அளவில் வேறுபடும். அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஒரு எம்எல்ஏ வின் ஓட்டின் மதிப்பும் மணிப்பூரில் உள்ள ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும் வேறு.
(குறிப்பு: இந்திய அரசின் சட்டப் பிரிவு 52 -2 ன் கீழ் , 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதால் , அதையே இங்கு கணக்கீட்டுக்காக எடுத்துள்ளேன்.)
எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை (1971 ஆம் ஆண்டின் கணக்கின்படி) / மாநிலத்தின் மொத்த சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை * 1000
உதாரணம் :
தமிழ்நாட்டில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 4,11,99,168/234*1000=176.06 (1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)
தமிழ்நாட்டில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 7,21,38,958/234*1000=308 (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)
சிக்கிமில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 2,09,843/32*1000 = 7 (1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)
சிக்கிமில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 6,07,688/32*1000=18 (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)
2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி, இந்தியாவைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 30 மாநிலங்களில், ஒரு எம் எல் ஏ வுக்கான அதிக ஓட்டுகளைப் பெற்றுள்ள மாநிலம், உத்தரப் பிரதேசம். மதிப்பு, 495. குறைந்த ஓட்டுகளை சிக்கிம் மாநிலம் பெற்றுள்ளது. மதிப்பு, 18. தமிழ்நாடு 308 எம் எல் ஏக்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் மொத்த மாநில சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4120 ஆகும். எம் எல் ஏ க்களின் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை மதிப்பு 5,49,474 .(2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி).
எல்லா மாநிலங்களின் , எம் எல் ஏ வின் எண்ணிக்கை மதிப்பை அறிய இங்கே செல்லவும்.
எம்.பிக்களின் ஓட்டு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?
மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் = லோக்சபா உறுப்பினர்கள் (543 ) + ராஜ்ய சபா உறுப்பினர்கள் (233 ) = 776.
ஒரு எம்.பியின் ஓட்டு மதிப்பு = மாநில சட்டசபை உறுப்பினர்களின் மொத்த ஓட்டு மதிப்பு / மொத்த எம் பிக்களின் எண்ணிக்கை (லோக்சபா + ராஜ்யசபா)
ஒரு எம் பியின் ஓட்டு மதிப்பு = 5,49,474/776=708
மொத்த எம் பிக்களின் ஓட்டு எண்ணிக்கையின் மதிப்பு = 776 * 708 = 5,49,408
ஆதலால், குடியரசுத் தலைவருக்கு விழும் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை = 50% (எம் எல் ஏ ) + 50 % (எம் பி )
அந்த அடிப்படையில் மொத்த ஓட்டுகளின் மதிப்பு = 5,49,474+5,49,408=10,98,882 .
குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் வெற்றி பெற தேவைப்படும் ஓட்டுகள் = (மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை/2 )+1
அதாவது, 10,98,882/2+1= 5,49,441+1=5,49,442
குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்நதெடுக்கப்படுகிறார்?
இரண்டே இரண்டு பேர் தேர்தல் களத்தில் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், முதல் விருப்ப வேட்பாளர் 50 % க்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றிருப்பார். அவர் வெற்றி பெற்றவர் என எளிதாக அறிவித்து விடலாம். ஆனால், நான்கு பேர் நிற்கும் பட்சத்தில் எவ்வாறு தேர்ந்தடுக்கப்படுவார்? கீழே கொடுக்கப்பட்ட பெயர்கள் தங்களின் கற்பனைக்கு மட்டுமே.
உதாரணமாக ,
அப்துல் கலாம், பி ஏ சங்மா, பிரணாப் முகர்ஜி, ராம்ஜெத்மலானி என நான்கு பேர் நிற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். விழுந்த மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 15௦௦௦ எனக் கணக்கில் கொள்வோம். ஒவ்வொரு வாக்காளரும் தனது விருப்ப அடிப்படையில் முதல், இரண்டு, மூன்று, நான்கு என வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும்.
தேர்தல் முடிவுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் பட்சத்தில் வெற்றி எவ்வாறு தீர்மானிக்கப் படுகிறது?
அப்துல்கலாம் = 5,250
பிரணாப் முகர்ஜி=4,800
ராம்ஜெத்மலானி = 2,700
பி ஏ சங்மா =2,250
7501 ஓட்டுகள் வாங்கியவர் தான் வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்பட வேண்டும். முடிவுகள் மேற்கூறிய நால்வருக்கும் வராத பட்சத்தில், நான்காம் இடத்தில் இருப்பவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு விழுந்த இரண்டாம் விருப்ப ஓட்டுகள் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதாவது, அவருடைய ஓட்டு சீட்டில், இரண்டாம் விருப்ப ஓட்டுகள் யாருக்கு என்பதைப் பொறுத்து அந்த ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும்.
இந்த நிலையில் பி ஏ சங்மா போட்டியிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு விழுந்த இரண்டாம் விருப்ப ஓட்டுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் பட்சத்தில் அந்த ஓட்டுகள் அந்தந்த வேட்பாளருக்குப் போய்ச்சேரும்.
பி ஏ சங்மாவின் ஓட்டு சீட்டில் இரண்டாம் விருப்ப ஓட்டுகளாக பதிவானவை :
அப்துல் கலாம் = 600
பிரணாப் முகர்ஜி=750
ராம் ஜெத்மலானி = 900
இப்போது வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
அப்துல்கலாம்= 5,250+600= 5,850
பிரணாப் முகர்ஜி= 4800+ 750 = 5,550
ராம் ஜெத்மலானி = 2,700+900=3,600
இந்நிலையிலும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறுவதற்கான 7501 ஓட்டுகளைப் பெறாத காரணத்தினால் , மூன்றாம் நிலையில் உள்ளவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார் . மூன்றாவது முறையும் வாக்குகள் எண்ணப்பட்டு, மூன்றாம் நிலையில் உள்ளவரின் மூன்றாம் விருப்ப ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப் படும்.
ராம் ஜெத்மலானி ஓட்டு சீட்டில் மூன்றாம் விருப்ப ஓட்டுகளாக பதிவானவை :








June 17th, 2012 at 11:26 am
மாநில சட்டசபைகளைப் பொறுத்தவரை மேலவை இருந்தால் எம்.எல்.சி. களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப்போடுவார்கள் இல்லையா?
June 17th, 2012 at 2:29 pm
good work…
June 17th, 2012 at 9:31 pm
நண்பரே!உங்கள் எண்ணம் புரிகின்றது. “தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்” அதற்குத்தானே இக்கட்டுரை?
June 17th, 2012 at 11:19 pm
very Good Writeup and Useful
June 18th, 2012 at 12:08 pm
கருணாநிதி,முலாயம் , மாயாவதி ஆகியோரின் சிண்டு சி.பி.ஐ [ காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ] வசம் உள்ளது……சி.பி.ஐ காங்கிரஸ் வசம் உள்ளது…..ஆக இவர்களிடம் காங்கிரஸ் ஆதரவு கேட்பதெல்லாம் வெறும் ஃபார்மாலிட்டிதான்….. முலாயம் போன்ற கிரிமினலை நம்பி மம்தா மோசம் போனதுதான் மிச்சம்,…….
June 19th, 2012 at 10:41 am
காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி இரு கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள். இந்த தேர்தலில் அவர்களுக்குள் ஒரு MOU ஏற்படப்போவது நிச்சயம்….
June 24th, 2012 at 12:23 am
good keep it up