விருமாண்டி : கமல் கையில் சிக்கிய பூமாலை


மரண தண்டனைக்கு எதிராக உரத்த குரலில் பேசும் படம்… தமிழகத்தின் தென் மாவட்ட வாழ்வைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் படம். வழக்கம்போல் கமல்ஹாசன் தன் நடிப்பின் உச்சத்தை எட்டிய படம் என்று பலவிதங்களில் புகழப்படும் படம் விருமாண்டி.

பொதுவாகவே, தமிழ் படங்களில் கதாபாத்திரங்களின் சாதி அடையாளம் மிகவும் மேலோட்டமாகவேதான் சித்திரிக்கப்படும். ஏதாவது ஒரு சாதியை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் அதன் சாதகமான அம்சங்கள் மட்டுமே காட்டப்படும். மக்களை எளிதில் உணர்ச்சிவசப்படவைக்கும் ஓர் அடையாளமாக இன்றும் சாதியே இருந்துவருவதனால் அந்த உணர்வுகள் சார்ந்து உண்மை நிலையைச் சித்திரிக்க யாருக்கும் தைரியம் இருப்பதில்லை. திரையுலகப் படைப்பாளிகள் தாங்களாகவே மேற்கொள்ளும் இந்தச் சுய தணிக்கையானது, என்னதான் வணிக மற்றும் சமூகக் காரணங்கள் சொல்லி நியாயப்படுத்தப்பட்டாலும், கண்டிக்கத்தக்க ஒன்றுதான்.

உண்மையைச் சொல்வதனால் நெருக்கடிகள் வரும் என்றால் அதை உரத்த குரலில் சொல்பவனே கலைஞன். நாங்கள் வெறும் கோமாளிகள்தான்… கலைஞர்கள் அல்ல என்று தமிழ் திரையுலகப் படைப்பாளிகள் சொல்லிக்கொண்டாலும் அவர்கள் கையில் இருப்பது கலை ஊடகமே. அதுவும்போக, சார்லி சாப்ளினும் கோமாளி நடிகர்தான். ஆனால், அதிகாரமையத்தை அவரும் கேள்விக்குட்படுத்தவே செய்திருக்கிறார். நாஜி கொடூரம் பற்றி வெளியான படங்களிலேயே மிகவும் முக்கியமான படமான லைஃப் ஈஸ் பியுட்டிஃபுல் சிரிக்க வைத்தபடியே சோகத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்திய ஒன்றுதான். நமது பாரம்பரிய நாடகங்களில் கூட கட்டியங்காரன், விதூஷகன் என்ற வேடங்களில் வரும் நடிகர்கள் அதிகார மதிப்பீடுகளை எவ்வளவோ எள்ளி நகையாடவே செய்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், நகைச்சுவை என்பது மிகவும் பாதுகாப்பான, அதே நேரம் வலிமையான ஓர் ஆயுதமே. விஷயம் என்னவென்றால், அதிகாரமையத்தைக் கேள்விக்குட்படுத்த நீங்கள் தயாரா இல்லையா என்பதுதான் அடிப்படைக் கேள்வி. அந்த அற உணர்ச்சி உங்களுக்கு இல்லையென்றால், உங்கள் கலைப் படைப்புகள் உங்கள் காலத்துக்கு முன்பாகவே செத்து மடிந்துவிடும்.

அந்தவகையில் கமலின் அடுத்த பலவீனமான படைப்பு விருமாண்டி. ஹே ராமை ஒப்பிடும்போது பலவகைகளில் நேர்த்தியான படம்தான் இது. என்றாலும் தன்னளவுக்குப் போதிய ஓட்டை உடைசல்களுடனே இதுவும் மிளிர்கிறது.

தென் மாவட்டங்கள் சாதி மோதல்களால் உருவான ஒரு போர்க்களம்.  நாயக்கர்கள் அங்கு செல்வந்தர்களாக இருப்பது உண்மைதான் என்றாலும் அவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும் தேவர்களுடன் மோதுவதை அவர்கள் நினைத்தே பார்க்க முடியாத நிலையே இன்று நிலவுகிறது. தேவர்-தலித் மோதலைப் படமாக்கினால் பெரும் பிரச்னைகள் வரும் என்பதால், உண்மை நிலையை அப்படியே விட்டுவிட்டு குறைவாக நடக்கும் நாயக்க-தேவர் மோதலை படத்தின் கருவாக ஆக்கியிருக்கிறார். தேவர் மகன் படத்தில் அதையே இரண்டு தேவர்களுக்கு இடையிலான சண்டையாக்க் குறுக்கியிருப்பார். புலிகளுக்குள்ளும் சண்டை உண்டென்றாலும் மானின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள்தானே புலியின் அசல் உலகம். பேசாப் பொருளைப் பேசுதல் என்பது உலகம் பொய்யைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும்போது உண்மையைத் துணிந்து சொல்வதில் இருக்கிறது. அதாவது, எதைச் சொல்ல வேண்டுமே அதைச் சொல்வதில் இருக்கிறது. எதைச் சொல்ல முடியுமோ அதைச் சொல்வதில் அல்ல. எனவே, தென் மாவட்டத்தில் மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும்தான் எப்போதும் சண்டை ஏற்படும் என்று கமல் சொல்லும்போது அவர் மணலுக்குள் தலையை நுழைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழியாகவே ஆகிறார்.

மரண தண்டனைக்கு எதிரான படம் என்கிற பம்மாத்து வேறு படத்தில் படு செயற்கையாக, எந்தவிதப் புரிதலும் இல்லாமல் திணிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மரண தண்டனை என்பது ஓர் அரசால் தரப்படும் தீர்ப்பு. நீதித்துறை, காவல்துறை, அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள், ஊடகங்கள், பொது மக்கள் என இன்றைய அரசின்/சமூகத்தின் அனைத்து முக்கிய துறைகளும் ஊழலில் திளைத்திருக்கின்றன. அப்படியான ஓர் அமைப்புக்கு ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் இருக்கவேகூடாது. இது முதலாவது பார்வை.

இரண்டாவதாக, ஒருவேளை ஓர் அரசு எல்லா தளங்களிலும் நியாயமாகவே இருப்பதாக வைத்துக்கொண்டாலும், மிகப் பெரிய தவறுக்குக்கூட உயிர் பறிப்பு என்பதை தண்டனையாக வைக்கவேகூடாது. குற்றவாளியின் வயதுக்கு ஏற்ப ஒற்றை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை என்று வேண்டுமானால் வழங்கிக் கொள்ளலாம். அதுவே ஒருவகையில் ஒருவரை இல்லாமல் ஆக்குவதுதான். ஒரு நவீன அரசுக்கு அந்த அளவுக்காவது தார்மிக அக்கறையும் பொறுப்பும் இருந்தாக வேண்டும். இந்தக் கோணத்தில் பார்த்தாலும் மரண தண்டனை கூடவே கூடாது. அதுவும்போக மரண தண்டனை கூடாது என்று சொல்வதற்கு இணையாக அது தேவை என்ற குரலும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தரப்புகளின் மோதல் என்ற கோணத்தில்தான் மரண தண்டனை பற்றிய விவாதங்கள் எழவேண்டும்.

இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் மரண தண்டனை என்ற விஷயத்தின் கொடூரத்தையும் அபத்தத்தையும் புரியவைக்க வேண்டுமென்றால் அந்தப் படம் அரசின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டதாக இருந்தாகவேண்டும்.

ஓர் உதாரணம் சொல்வதானால், இன்று கூடங்குளத்தில் உதயகுமார் தலைமையில் ஒரு போராட்டம் நடைபெற்றுவருகிறது. அவரை அரசு நக்சலைட் என்றும் தேச விரோதி என்றும் சித்திரிக்கிறது. இதுபோன்ற ஒரு போராளியை அரசாங்கம் தூக்கு தண்டனை வரை கொண்டு செல்வதாகக் காட்டினால் அப்போது அந்த அரசின் கொடூரமும் அந்த தண்டனையை ஒழித்தே ஆக வேண்டியதன் அவசியமும் ஒருவருக்குப் புரியவரும். கறுமையின் அடர்த்தியை அதி வெண்மை ஒன்றைப் பக்கத்தில் வைப்பதன் மூலம் நன்கு புலப்படவைக்கும் யுக்தி இது.

இந்தப் படத்தில் கூட பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவனை யதேச்சையாக அடிக்க அவன் இறந்துவிடுவதால் மரண தண்டனை நிச்சயிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவருடைய வாழ்க்கை என்பது மரண தண்டனையைக் கேள்விக்குட்படுத்தும் அபாரமான கதையாக ஆகியிருக்க வாய்ப்பு உண்டு. பரிதாபத்தின் மூலம் கதாநாயக பிம்பத்தை விஸ்வரூபம் பெற வைப்பதும் வணிக வெற்றிகளைக் குவிக்கவே செய்யும்.

ஆட்டோ சங்கர் போன்ற ஒருவரின் கதையை மையமாக வைத்து, அவனுக்கு உடந்தையாக இருந்த எத்தனையோ காவல் துறையினரும் அரசியல்வாதிகளும் சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் வெளியில் உலவிக் கொண்டிருக்க பிடிபட்ட அவன் மட்டுமே தூக்கில் தொங்கவிடப்பட்டதன் அபத்தத்தை அநியாயத்தை படமாகக் காட்டியிருக்க முடியும். இவையெல்லாம் ஒரு எளிய ஃபார்முலா கதையாக ஆகிவிடும் என்று நினைத்தால் குறைந்தபட்சம் குற்றவாளியின் பின்னணிக்கு இணையாக அரசின் அநியாயமான செயல்பாடுகளையும் விவரித்திருக்க வேண்டும்.

ஆனால், இந்தப் படத்தில் காவல்துறையைச் சேர்ந்த பேய்க்காமன் என்ற ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே அரசின் அங்கமாக இடம்பெறுகிறது. அந்தக் கதாபாத்திரமும்கூடத் தெளிவான வில்லன் பிம்பத்துடன் படைக்கப்பட்டிருப்பதால் அரசமைப்பின் மீதான விமர்சனமாக அது கூர்மை பெறவில்லை. அதுபோல் பொய் சாட்சி சொல்லும் நபர்கள் அனைவருமே மக்களின் துல்லியமான பிரதிநிதிகளாக முழுவடிவம் பெறவில்லை. சமீபத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மன நிலை குன்றிய ஒருவரை வங்கிக் கொள்ளையன் என்று நினைத்து மக்கள் கூட்டம் அடித்து உதைத்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு தூக்கு தண்டனைகளின் போது மக்கள் கூட்டம் உற்சாகத்துடன் அதை வரவேற்று ஆர்ப்பரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவையே மக்கள் திரளின் தெளிவான சித்திரிப்பாக ஆக முடியும். அப்படி இல்லையென்றால் தனிப்பட்ட நபரின் குணாம்சமாக அது சுருங்கிவிட வாய்ப்பு உண்டு.

அந்தவகையில் மரண தண்டனை எதிர்ப்பு என்பது இந்தத் திரைக்கதையில் பலவீனமான ஒட்டு போலவே இருக்கிறது. எஸ்.வி.சேகர் தன்னுடைய துணுக்கு டிராமாக்களில் சமூகத்துக்கு செய்தி எதுவும் சொல்லப்படுவதில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளும்வகையில் காபியில சர்க்கரை குறைவா போட்டுக்கணும், குழந்தைகள் ஸ்கூல ஒழுங்கா படிக்கணும், அப்பா அம்மாவை மதிக்கணும் என்பதுபோன்ற நற்செய்திகளை ஒரு கதாபாத்திரத்தை விட்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேச வைத்திருப்பார். கமல்ஹாசனும் தனது படத்தின் கனத்தைக் கூட்ட மரண தண்டனையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எஸ்.வி.சேகரை விட கொஞ்சம் மேலான கலைநயத்துடன் அது இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவுதான்.

அதற்காக ரொம்பவே மெனக்கெட்டு டாக்குமெண்டரி, அதை எடுக்க வரும் பெண்மணிக்கு கீழ்வெண்மணி பின்னணி என்றெல்லாம் ஜல்லி அடித்திருக்கிறார். இந்தக் கீழ்வெண்மணி பின்னணி என்பது அதைவிட அபத்தம். காத்தமுத்துவின் மகளான அந்த டாக்குமெண்டரி இயக்குநர் ஜேம்ஸ் என்பவரைக் கல்யாணம் செய்துகொள்கிறாராம். ஜேம்ஸ் அவளைத் துன்புறுத்தவே அப்பாவே மருமகனைக் கொன்றுவிடுகிறாராம். அவருக்கு தூக்கு தண்டனை தரப்பட்டுவிடுகிறதாம். மகள் அந்த வேதனையால் தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிறாராம்.

மருமகனைக் கொன்றதற்காக ஒருவருக்கு தூக்கு தண்டனை என்பது இன்றைய நடைமுறையில் இல்லாத ஒன்று. அதுதான் படத்தின் முக்கியமான துணைக் கதாபாத்திரத்தை மரண தண்டனைக்கு எதிராகப் போராடத் தூண்டிய விஷயமாம். அந்த அடிப்படையே மடத்தனமாக இருக்கிறதே. அது சரி… அந்தப் பெண்ணுக்கு எதற்காக கீழ்வெண்மணி என்ற பின்னணி. அது வேறு விஷயங்களை நினைவுபடுத்தும் ஒன்றல்லவா? தலித் ஒருவர் தன் மகளை நன்கு படிக்க வைத்து கடன் பட்டு கிறிஸ்தவருக்குத் திருமணம் செய்து கொடுத்த பிறகும் (அதிக வரதட்சணை?) அந்தப் பெண்ணுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. அவர் தானாக தன் வழியைத் தேடிக் கொள்கிறார் என்பதைச் சொல்ல வருகிறாரா? உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

மாபெரும் கலைப்படைப்பில் செய்யப்படும் ஒவ்வொரு நுட்பமான விஷயமும் வலுவான காரணத்தைக் கொண்டதாக இருக்கும். போலிகளில் இது நேரெதிராக புலியைப் பார்த்து போட்டுக்கொள்ளும் சூடுபோல் கேலிக்கூத்தாகவே முடியும்.

அதுபோல் படத்தின் க்ளைமாக்ஸ் என்பதும் சற்றும் பொருந்தாக ஒன்றாகவே இடம்பெற்றிருக்கிறது. அதிலும் ஜெயிலில் கலவரம் செய்யும் கைதிகள் ஏதோ நேர்த்திக்கடன் போல ஜெயிலைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்துகொண்டே இருக்கிறார்கள். விஷயம் என்னவென்றால், அங்கு நடக்கும் கஞ்சா கடத்தல் விவகாரம் தலைமை காவலருக்குத் தெரிந்துவிடுகிறது. ஒரு கலவரம் போல் செட்டப் செய்து அவரைப் போட்டுத் தள்ள துணைக் காவலர் பேய்க்காமனுடன் கைதிகள் சேர்ந்து திட்டமிடுகிறார்கள். அதன்படியே செய்து கடத்தல் பொருட்களைக் கைப்பற்றுகிறார்கள். அதை வெளியேயிருக்கும் அவர்களுடைய ஆள் வசம் தூக்கி எறிந்தால் பிரச்னை தீர்ந்துவிடும். அல்லது ஜெயிலை விட்டுத் தப்பிக்க முயற்சி செய்யலாம். அதைவிட்டுவிட்டு ஏதோ பழங்குடி, மத்திய கால மேற்கத்திய படங்களில் வரும் போரைப்போல் மரத்தைக் கவண் போல் ஆக்கி அதில் டாய்லெட் பீங்கானில் ஆரம்பித்து சோபா செட்கள் வரை மாட்டி பீரங்கிபோல் எறிந்து என்னவெல்லாமோ செய்கிறார்கள். கிரில் கம்பிகளைப் பெயர்த்து எடுத்து சர் சர் என்று எறிகிறார்கள். கமல் சார் உலகப் படங்கள் நிறைய பார்த்திருக்கக்கூடும். ஜெயில் கைதிகளும் கூடவா? அதுவும்போக அவர்களுடைய நோக்கம் என்ன க்ளைமாக்ஸை விறுவிறுப்பாக ஆக்குவதா!?

மரண தண்டனை எதிர்ப்பில் ஆரம்பித்து, ஜல்லிக் கட்டுக்குப் போய், தமிழ் விவசாயம் என்று திரும்பி, நிலச் சண்டையாக மாறி, நாயக்கர்-தேவர் சண்டை என்று ஆகி, எஜமானன் பணியாள் சண்டையாகத் திரும்பி, ஜெயில் சண்டையாகி கடைசியில் மரண தண்டனை எதிர்ப்பில் வந்து முடிகிறது. நடு நடுவுல மானே தேனே என்று காதல் டிராக்கும் ஓடுகிறது. இரவு நேர யாசகரின் தூக்குப் பாத்திரத்தில் ஊசிப் போன சாம்பாரில் ஆரம்பித்து உளுத்துப் போன வடைவரை இருப்பதுபோல் ஒரு அசட்டுக் கலவை இது. கோடுகள் தேவையான வளைவு நெளிவுகளுடன் இருந்தால் அதற்குப் பெயர் ஓவியம். கண்டதையெல்லாம் தீட்டி வைத்தால் அதற்குப் பெயர் கிறுக்கல்.

படமானது கதாநாயகன், வில்லன் ஆகிய இருவரின் பார்வையில் சொல்லப்படும் கதையாக விரிகிறது. இந்த ரொஷோமான் யுக்தி படத்தில் மிகவும் மோசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரொஷோமானில் உண்மை என்ன என்பது கடைசிவரை நமக்குப் புரியாமலேயே இருக்கும். அதுதான் உண்மையின் பன்முக சாத்தியக்கூறுகளையும் புதிர்த்தன்மையையும் வசீகரத்தையும் முழுவதுமாக எடுத்துக்காட்டும். இந்தப் படத்தில் வில்லனின் கதையானது முழுப் பொய் என்பது நாயகனின் கதையைக் கேட்டதும் தெரிந்துவிடுகிறது. எனவே, உண்மையின் பன்முகத்தன்மை இதில் இடம்பெறாமல் போய்விட்டது. ரொஷோமானைப் போல் எடுத்ததாக நான் சொல்லவில்லையே என்று கமல் சொல்லக்கூடும். ஆனால், அந்தப் பாணியைப் பலவீனமாகப் பயன்படுத்தியிருப்பதால் அந்த விமர்சனத்தையும் அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

கமல் ஹாசனின் அறிமுகக் காட்சியே அபத்தத்தின் உச்சமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கும்போது கரண்ட் கம்பியின் மேல் நின்று கொண்டிருக்கிறார். ஏன் என்று கேட்டால், அவருடைய பாட்டி காளையை எல்லாம் அடக்கப் போகக்கூடாது. வெறுமனே வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னாராம். பேரன் காளையை அடக்கக் களம் இறங்கினால் அடிபட்டுவிடுமே என்ற பயம் இருந்தால் கிழவி அதே கூட்டத்தில் நின்று அவனை இறங்கவிடாமல் தடுக்க வேண்டியதுதானே. அந்த ஊரில் அதிகபட்சம் ஆறேழு தெருக்கள் இருக்கக்கூடும். ஜல்லிக்கட்டு நடக்கும்போது ஊரே அந்த மைதானத்தில்தான் கூடியிருக்கும். கிழவி மட்டும் தன்னந்தனியாக வீட்டில் என்னதான் செய்துகொண்டிருந்தாள். நாயகன் காளையை அடக்கி முடித்ததும் கரெக்டாக வந்து அவனைத் திட்ட வேறு செய்கிறாள். பேரனின் மீது அக்கறை இருந்தால் முன்னாலேயே வந்திருக்க வேண்டியதுதானே.

அதுவும்போக அந்தக் காளையோ கமல் சார் மீது அவருடைய ஜால்ரா கூட்டத்தைவிட விசுவாசமானதாக இருக்கிறது. ஈட்டி போல் கூர் தீட்டப்பட்ட கொம்பு இருந்த பிறகும் அது கமல் சாரை செல்லமாகவே முட்டுகிறது. காளையை அடக்கிவிட்டு வெற்றிப் பெருமிதத்தில் நின்று கொண்டிருப்பவரை பின்னால் இருந்து தூக்கி எறிகிறது. கமல் சாரோ லேசான கொம்பு சிராய்ப்புடன் பேக் சம்மர் சால்ட் அடித்து எழுந்துவருகிறார். கொம்பு படாமல் குத்த அந்தக் காளை எங்குதான் படித்ததோ?

அதுவும்போக, சின்ன கோளாறுபட்டிக்காரன் காளையை அடக்கக்கூடாது என்று ஒரு நிபந்தனை சொல்லப்படுகிறது. ஏனென்றால், காளை அந்த ஊரைச் சேர்ந்தது. அந்த ஊர்க்காரர்களுக்கு முன்பே அதனுடன் பழக்கம் இருக்கும் என்பதாலோ என்னவோ அப்படி ஒரு நிபந்தனை சொல்லப்படுகிறது. அப்படியானால், அசலூரான் அடக்கலாமா என்று கூட்டம் கேட்கிறது. சரி என்று சொல்கிறார்கள். கேமரா நேராக தரையில் இருந்து மேலே எழுந்து கரண்ட் கம்பியை ஃபோகஸ் செய்கிறது. சிங்கப்பூர் மச்சான் அறிமுகப்படுத்தப்படும் கமல் காளையை அடக்க அங்கிருந்து குதிக்கிறார்.

ஆனால், உண்மை என்னவென்றால், அவர் அந்த சின்னக் கோளாறுபட்டியைச் சேர்ந்தவர்தான். அப்பாவுடன் சிங்கப்பூரில் சில காலம் வசித்தவர் அவ்வளவுதான். ஒருவர் எவ்வளவு காலம்தான் வெளியூரில் வசித்தாலும் சொந்த ஊர்க்காரராகத்தான் அடையாளப்படுத்தப்படுவார். இதுதான் கிராமப்புற யதார்த்தம். இங்கோ சில காலம் சிங்கப்பூரில் வசித்தவர் அசலூரான் ஆகிவிடுகிறார். அதோடு, அப்பா செத்த பிறகு பாட்டிதான் கிராமத்தில் வைத்துத் தன்னை வளர்த்ததாகச் சொல்கிறார். குபீர் ஜாலி பிரதர்ஸ் என்ற சங்கத்தை அமைத்து ஊரில் சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருப்பதாகவும் சொல்லவும்படுகிறது. காளையை அடக்க மட்டும் அசலூரானாக அரிதாரம் பூசிக் கொள்வதேன்? கரண்ட் கம்பி மேல இருந்து குதிக்கற மாதிரி சீன் யோசிச்சாச்சு. அப்ப எடுத்துத்தான ஆகணும்.

அப்பறம் காட்சிகள் எல்லாம் எந்தவொரு தர்க்கத்துக்கும் சிக்காமலே போய்க்கொண்டிருக்கின்றன.

சிறுநீர் கழிக்கப்போன விருமாண்டியை பின்னால் இருந்து ஒருவர் அருவாளால் வெட்டுகிறார். வெட்டுப்பட்டவர் மக்கள் கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிவராமல், ஆளரவமற்ற தெருக்களினூடாக ஓடிப் போய் நேராகத் தன் காதலி அன்னலட்சுமியின் வீட்டுத் தொழுவத்தில் போய்விழுகிறார். அந்த அருவாளோ ஃபெவிகால் போட்டு ஒட்டியதுபோல் விருமாண்டியின் உடம்புடன் ஒட்டியே இருக்கிறது. ரஜினிகாந்த் என்றால்கூட இதை நம்பலாம். ஏனென்றால், அவர் பெயரிலேயே காந்தம் இருக்கிறது. கமல் சாரின் பெயரில் மென்மையான கமலப் பூ மட்டும்தானே இருக்கிறது. அந்த அருவாளில் கொ என்ற கொத்தாளத் தேவனின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை அன்னலட்சுமி பார்க்கிறாள் என்றொரு காட்சி பின்னால் வருகிறது. அதனால் அருவாள் கீழே விழவே இல்லை என்று காட்டப்பட்டிருக்கிறது. அதோடு விருமாண்டிக்கு அடுத்த இரண்டு மாதம் சிகிச்சை தர வேண்டிய அளவுக்கு அந்தக் காயம் பலமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், விருமாண்டியைத் தூக்கிச் செல்லும்போது, மல்லாந்து படுத்தபடியே இருக்கிறார். முதுகில் காயம்பட்டால் குப்புறப் படுக்க வைக்கவேண்டும் என்ற எளிய விஷயம்கூடப் பின்பற்றப்பட்டிருக்கவில்லை.

தேன் கூடு கலைக்கப்பட்டு மாடு மிரண்டு ஓடுவதுபோல் ஒரு காட்சி வருகிறது. அன்னலட்சுமி தன் நவீன குதிரையான மொபெட்டை எடுத்துக்கொண்டு தலையில் சாக்கு ஒன்றைப் பின்பக்கமாகப் போத்திக்கொண்டு மாட்டைப் பிடித்துக் கொண்டுவர சர்ரென்று வெளியே கிளம்புகிறார். போகும் வழியில் ஒரு மரத்துண்டு ஒன்றில் அருவாள் சொருகி வைக்கப்பட்டிருக்கிறது. மொபெட்டில் விரைந்து செல்பவர் அந்த அருவாளை டக்கென்று எடுத்துச் செல்கிறார். இந்தக் காட்சி பார்க்க அருமையாகத்தான் இருக்கிறது. ஆனால், காளையை வீட்டுக்குக் கொண்டுவர விரும்புபவர் எதற்காக அருவாளை எடுத்துச் செல்கிறார். அந்தக் காளையோ செல்லப் பூனைக்குட்டி மாதிரி அவரைப் பார்த்தால் பம்மக்கூடியது. சாட்டையை எடுத்துச் சென்றாலாவது ஏதோ பயமுறுத்தப் போகிறார் என்று நினைக்கலாம். அதெல்லாம் தெரியாது… மொபெட்டில் வேகமாகப் போகும்போது இறங்காமலேயே சட்டென்று அருவாளை எடுத்துச் செல்லும் காட்சி பார்க்க அருமையாக இருக்கிறது. அதனால் அது படத்தில் இடம்பெற்றுவிட்டது. இதன் ஒரிஜினல் எது என்று எனக்குத் தெரியாது. ஆனால், கமல் சாருக்குத் தெரிந்திருக்கும். நைஸாகச் சொருகிவிட்டார். பின்னே நம்ம படம் எப்பத்தான் சர்வ தேசத் தரத்தை எட்டறது?

ஒரு காட்சியில் நல்லம்ம நாயக்கர் பஞ்சாயத்து கூட்டியதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த காட்சியில் அதே பஞ்சாயத்தை விருமாண்டி பிராது கொடுத்து கூட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதே பஞ்சாயத்தில் சம்பந்தமே இல்லாமல், விருமாண்டி தன் சொத்தில் ஒரு பங்கை ஊருக்கு எழுதுவதாக சவால் விடுகிறான். கொண்ட ராசு நாயக்கன் என்ற ஒருவர் தானும் எழுதி வைப்பதாக பந்தயம் கட்டுகிறார். கொத்தாளத் தேவனை வம்புக்கு இழுக்கிறார். கை கலப்பில் அந்தப் பஞ்சாயத்து முடிகிறது.

அன்று இரவு நல்லம்ம நாயக்கர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறச் சொல்கிறாள் அன்னலட்சுமி. மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்று பஞ்ச் டயலாக் சொல்கிறாள். உண்மையில் அதை ஏற்றுக் கொள்வதானால், ஒருவர் என்ன செய்ய வேண்டும்? நல்லம்ம நாயக்கர் மீதான புகாரை வாபஸ் பெறவேண்டும். அல்லது அவரிடம் போய் சமாதானம் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு விருமாண்டி நேராக கொண்ட ராசு நாயக்கரைப் போய்ப் பார்த்து மன்னிப்பு கேட்கிறான். பிரச்னை நல்லம்ம நாயக்கருக்கும் விருமாண்டிக்கும்தான். கொண்ட ராசு நாயக்கருடன் அல்ல.

பஞ்சாயத்தில் அன்ன லட்சுமியின் சித்தியைப் பற்றி அவதுறாகப் பேசியதற்கு கொண்ட ராசு நாயக்கனை விருமாண்டி அடிக்கப்போனார் என்பது உண்மைதான். ஆனால், இரவில் அவனிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவனை மன்னிக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார். தவறு செய்தது கொண்ட ராசு நாயக்கன்தானே. ஆனால், 24 உயிர்களின் பலி என்ற ஒரு கதை முடிச்சு அடுத்ததாக விழ வேண்டும் என்பதற்காக விருமாண்டி தனியாக கொண்ட ராசு நாயக்கரைப் பார்க்கப் போகிறான். திரைக்கதையின் குழப்பமான இடம் இது.

அதோடு மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்ற படத்தின் பஞ்ச் டயலாக் மிகவும் அசட்டுத்தனமானது. தப்பு செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதில் எந்தப் பெருமையும் இல்லை. அது மிகவும் சாதாரண ஒரு செயல்தான். அந்தத் தவறினால் பாதிக்கப்பட்டு வேதனையில் இருக்கும் ஒருவர் தப்புச் செய்தவரை மன்னிக்கிறார் என்றால் அதுதான் பெரிய விஷயம். விருமாண்டி பலரைக் கொன்றுவிட்டு மன்னிப்புக் கேட்பதில் எந்தச் சிறப்பும் கிடையாது. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் வேதனையை மறந்துவிட்டு அல்லது விருமாண்டியைத் தூக்கில் போடுவதால் மட்டும் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் வரவா போகிறார்கள், அவனாவது திருந்தி வாழட்டும் என்று சொல்லி மன்னித்தால் அதுதான் பெரிய விஷயம். கொல்லப்பட்டவர்கள் துணை நடிகர்கள்தான் என்பதாலும் கொலைகளைச் செய்தது கமல் சார் என்பதாலும், மன்னிப்பதைவிட மன்னிப்பு கேட்பது பெரிய விஷயமாக ஆகிவிடுகிறது.

அடுத்ததாக, விருமாண்டிக்கும் நல்லம்ம நாயக்கருக்கும் இடையிலான சிறிய பகையைக் காரணமாக வைத்து கொத்தாளத் தேவன் கொண்ட ராசு நாயக்கரையும் அவருடைய ஆட்கள் 24 பேரையும் தன் ஆட்களுடன் போய்க் கொன்று குவிக்கிறான். தேவர்களில் ஒருவர் மீது ஒரு சிறு கீறல் கூட விழாதபடித்தான் அந்தச் சண்டை காட்சிப்படுத்தப்படுகிறது. பின்னே தென் மாவட்டத்தில் இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் தேவர் சாதியினர்தானே. அவர்கள்தானே கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யப் போகிறவர்கள். எனவே, கலவரத்தில் நாயக்கர் பிரிவினர் மட்டுமே சாகிறார்கள். வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது.

அதில் ஒரு மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், சம்பவம் நடந்த நேரத்தில் கொத்தாளத் தேவருடன் இருந்ததாக விருமாண்டி சாட்சி சொல்கிறான். கோர்ட் அதைக் கேட்டு இருவரையும் விடுவித்துவிடுகிறது. உண்மையில் அந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளே அவர்கள் இருவர்தான். ஒருவருக்கு ஒருவர் நல்லவர் என்ற சான்றிதழ் வழங்கியதும் நீதிமன்றம் அதைக் கேட்டு அவர்களை விடுவித்துவிடுகிறதாம். ஜெயா அக்கா நல்லவர் என்று சசி அக்காவும், சசி அக்கா அப்பாவி என்று ஜெயா அக்காவும் சொல்வதுபோல் கொத்தாளத் தேவரும் விருமாண்டியும் உடன் பிறவா சகோதர பாசத்தைக் காட்டியதும் நீதிமன்றம் நம்பி விடுதலை செய்துவிடுகிறது.

இது போதாதென்று அன்னலட்சுமி தூக்கில் தொங்கி இறந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் வழக்கறிஞர் இந்த 24 கொலைகளைச் செய்தது விருமாண்டிதான் என்று நிரூபிக்கப் போவதாகச் சொல்வார். ஆனால், அப்படி எதுவும் செய்யாமலேயே நீதிமன்றம் 24 பேரைக் கொன்றதற்காகவும் காதலியை கற்பழித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டதற்காகவும் விருமாண்டிக்கு தூக்கு தண்டனை தந்துவிடுகிறது. இத்தனைக்கும் 24 பேர் கொலை கேஸானது ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அன்ன லட்சுமி தூக்கு மாட்டித்தான் இறக்கிறாள். போஸ்மார்டம் ரிப்போர்ட்டில் அப்படித்தான் தெரிய வந்திருக்கும். கொன்றுவிட்டுத் தூக்கில் மாட்டியதாக வந்திருக்காது. ஆனால், கொலைப்பழியை விருமாண்டி மேல் சுமத்துவதற்காக அப்படி காட்டப்படுகிறது. விருமாண்டியின் விந்து அன்ன லட்சுமியின் உடலில் இருந்ததும் அன்னலட்சுமியின் நகக்கண்ணில் விருமாண்டியின் சதைத் துணுக்குகள் இருந்ததும் மட்டுமே போஸ்ட்மார்டம் ரிப்போர்டில் இருந்து தெரியவந்ததாக நீதிமன்றத்தில் சொல்கிறார்கள். கொலை செய்யப்பட்டு தூக்கில் மாட்டப்பட்டதாக அல்ல. அதுவும் போக, விருமாண்டியும் அன்ன லட்சுமியும் காதலர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். கற்பழித்ததாகச் சொல்வதில் எந்த ஆதாரமும் இல்லை. அந்த ஊர்க்கார்களும் விருமாண்டியின் நண்பர்களும் ஏன், நல்லம்ம நாயக்கரின் ஊரார்கூட அந்தக் காதலுக்கு சாட்சி சொல்ல முடியும்.

இருவரும் ஊரை விட்டு ஓடியபோது சென்னையில் தங்க இடம் கொடுத்த உறவுக்காரப் பெண்மணி விருமாண்டிக்கும் அன்ன லட்சுமிக்கும் திருமணம் நடந்துவிட்டதைச் சொல்லியிருந்தால் வழக்கு அப்போதே வலுவிழந்திருக்கும். இத்தனைக்கும் சிங்கப்பூரில் தன் மகன் செய்த ஒரு தப்புக்காக விருமாண்டிதான் பழியை ஏற்றுக்கொண்டதாகவும் அந்த வீடே அவனுடையதுதான் என்றும் அந்தப் பெண்மணி சொல்கிறாள். விருமாண்டியைத் தன் மகன் போலவே மதிக்கிறார். ஆனால், அவரை அந்த உண்மையைச் சொல்லாமல் ஊமையாக்குகிறார் வசனகர்த்தா. அது நியாயமே இல்லை.

இடையில் இடம்பெறும் ஒரு கமல் டச் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். தேனி மாவட்டத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிப்போகும் காதல் ஜோடிகள் டி.வி.எஸ். மொபெட்டிலேயே சென்னைக்கு போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, போகும் வழியில் ஜலக்கிரீடை செய்கிறார்கள். ஊரை விட்டு ஓடும் பரபரப்பான நேரத்திலும் வேறு யாராவது பார்த்தால் பிரச்னை ஆகிவிடுமே என்ற பயமெல்லாம் இல்லாமல் ஜாலியாகப் புனலாடுகிறார்கள். விஷயம் என்னவென்றால், அடுத்த நாளே சென்னை வந்துவிடுகிறார்கள். சென்னையில் இதுபோல் புனலாட ஆறு, ஏரி எதுவும் கிடையாது. கிராமத்தில்தான் அது சாத்தியம். எனவே அந்த சம்பவம் அங்கு நடந்தேறுகிறது.

அப்படியானால், முன்பே கிராமத்தில் புனலாடியிருக்க வேண்டியதுதானே என்று கேள்வி உங்களுக்கு வரக்கூடும். ஆனால், தமிழ் பண்பாடு என்ற ஒன்று இருக்கிறதல்லவா? தாலி கட்டிய பிறகுதானே முதலிரவு நடக்க முடியும். தாலி கட்டிய மறுநாளே சென்னைக்குப் போய்விடுகிறார்கள். புனலாட ஊரை விட்டு ஓடிப்போகும் அந்த இரவு மட்டுமேதான் அவகாசம் இருக்கிறது. எனவே, அந்தப் பரபரப்புக்கு இடையிலும் பேண்ட் சட்டை போட்ட விருமாண்டி வேட்டியைக் காய வைத்துவிட்டுப் புனலாடுகிறார்.

இறந்த அன்ன லட்சுமியின் உடலில் விருமாண்டியின் விந்து இருந்ததாக போஸ்ட்மார்டத்தில் தெரிய வந்து அதை வைத்துத்தான் கற்பழித்தாகப் பழி சுமத்தப்படுகிறது. அப்படியானால் முதலிரவு நடந்தே ஆக வேண்டிய கட்டாயம் வருகிறது அல்லவா என்று கேட்பீர்கள். அது உண்மைதான் ஆனால், சென்னைக்குப் போன பிறகு ஏறு தழுவுவதாகக் காட்டப்படுகிறதே. அதுவே போதாதா என்ன? ஊரை விட்டு ஓடும்போதும் புனலாடத்தான் வேண்டுமா? அந்தக் காட்சியை நான் மிகவும் பயத்துடனேயேதான் பார்க்க வேண்டியிருந்தது. இரவு லைட்டிங்கில் வேறு எடுத்திருக்கிறார்கள். கேமரா எந்தப் பக்கம் திரும்பினாலும் கொத்தாளத் தேவனின் அருவாள் போலவே காட்சி அளித்தது. எந்த நிமிடமும் அது பாய்ந்து வந்து காதல் சிட்டுகளை வெட்டிவிடும் என்ற பயத்துடனேயே அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கிளு கிளு காதல் காட்சியை இப்படிப் பார்க்க நேர்ந்தது எவ்வளவு பெரிய வேதனை என்பது அனுபவித்தால்தான் தெரியும். எதை மன்னித்தாலும் இதை மன்னிக்க முடியாது.

விருமாண்டிக்காக நீதிமன்றத்தில் வழக்காடும் வைத்தியநாதய்யர் படு அம்மாஞ்சியாக இருக்கிறார். விருமாண்டி அன்னலட்சுமியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அன்னலட்சுமியின் உடல் கொத்தாளத் தேவனின் வீட்டு உத்தரத்தில்தான் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறது. விருமாண்டி கொன்றிருந்தால் கொத்தாளத் தேவனின் வீட்டில் மாட்டிவிட்டிருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஒன்றைச் சொன்னாலே விருமாண்டி கொலைப்பழியில் இருந்து தப்பித்துவிட முடியும். ஆனால், அந்த அம்பி ஐய்யரோ, திருமணம் நடந்ததா இல்லையா என்ற கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு சாதுவாக போய் உட்கார்ந்துவிடுகிறார்.

இதைவிட இன்னொரு அசட்டுத்தனம் என்னவென்றால், அன்னலட்சுமி இறந்தது தெரிந்ததும் விருமாண்டி அதற்குக் காரணமான பலரை வெட்டிக் கொல்கிறான். காவல் துறை அவனைத் துரத்துகிறது. அடைக்கலம் தரும் நல்லம்ம நாயக்கர் விருமாண்டியை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். அது தெரிய வந்ததும் விருமாண்டியை என்னிடம் ஒப்படைத்துவிடு என்று கொத்தாளத் தேவன் நல்லம்ம நாயக்கரிடம் கேட்கிறான். நல்லம்ம நாயக்கரும் அவனை மறைத்து வைத்திருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வதாக கொத்தாளத் தேவனையும் அவனுடைய ஆட்களையும் கூட்டிச் செல்கிறார். தன்னுடைய பரம விரோதியான கொத்தாளத் தேவனிடம் அப்படி தனியாக போய் அவர் மாட்டிக் கொள்ளவேமாட்டார். ஆனால், இங்கோ கமல் சாரின் திரைக்கதை சாதுரியத்தினால் அப்படி அசட்டுச் செயலை நல்லம்ம நாயகர் செய்கிறார்.

அவர் அழைத்துச் சென்ற பாழடைந்த வீட்டில் ஒரு பீரோ இருக்கிறது. அதில் ஒரு பெரிய துப்பாக்கி இருக்கிறது. அதை எடுத்து பட்டென்று நல்லம்ம நாயக்கர் சுடுகிறார். உண்மையில் உங்கள் கையில் ஒரு துப்பாக்கி இருக்கிறது. எதிரி கையில் வெறும் அருவாள்தான் இருக்கிறது. உங்கள் துப்பாக்கியோ ஒவ்வொரு தோட்டாவாக போட்டுச் சுட வேண்டிய ஒன்று. அப்படியானால் என்ன செய்வீர்கள். பிரதான எதிரியைக் குறிவைத்து சுடப்போவதாக மிரட்டி மற்றவர்களை அவர்களுடைய ஆயுதங்களைக் கீழே போட வைப்பீர்கள். இதுதானே புத்திசாலித்தனம். ஆனால், இங்கோ நல்லம்ம நாயக்கர் பட்டென்று யாரோ ஒருவரைப் பார்த்து சுடுகிறார். அடுத்த தோட்டாவை நிரப்புவதற்குள் கொத்தாளத் தேவன் அவரை அருவாளால் வெட்டிச் சாய்த்துவிடுகிறான். பாவம் கமலின் பலவீனமான திரைக்கதையால் நல்லம்ம நாயக்கர் கையில் துப்பாக்கி இருந்தும் இறந்துவிட்டார்.

இதாவது பரவாயில்லை. பதற்றத்தில் அப்படிச் செய்துவிட்டார் என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், நல்லம்ம நாயக்கரைக் கொன்ற விஷயத்தை காவலர் பேய்க்காமனிடம் போய் கொத்தாளத் தேவன் சொன்னதும் அவர் என்ன சொல்கிறார் தெரியுமா… கொத்தாளா… மதுரை கோர்ட்ல சரண்டைஞ்சுடு. இப்படி யாராவது சொல்வார்களா? அந்தக் கொலையைப் பார்த்த சாட்சி என்று யாருமே கிடையாது. நல்லம்ம நாயகருக்கு வேறு பல எதிரிகள் இருக்கவும் கூடும். கொண்ட ராசு நாயக்கரையும் அவருடைய ஆட்கள் 24 பேரையும் கொன்றது கூட நல்லம்ம நாயக்கராக இருக்கக்கூடும் என்றுதான் இதற்கு முன் நீதிமன்றத்தில் வழக்காடவே செய்திருக்கிறார்கள். இப்போது கொண்ட ராசு நாயக்கரின் ஆட்கள்தான் நல்லம்ம நாயக்கரைக் கொன்றதாக பிளேட்டை எளிதில் மாற்றிவிட வழி உண்டு. இருந்தும் காவலர் பேய்க்காமன் கமல் சாரின் அசட்டு வசனத்தை அப்படியே பேசுகிறார்.

அதுவும் எப்படி? விருமாண்டி முதல்ல சாட்சி சொல்லிட்டா அவன் சொல்றதுதான் சரின்னு ஆயிடும். எனவே, நீ போய் நான் தான் கொன்னேன்னு சரண்டர் ஆகிடு என்கிறார். என்ன ஒரு முட்டாள்தனம். விருமாண்டி முதலில் சொல்வதற்குள் அவன்தான் கொலைகாரன் என்று வேண்டுமானால் கொத்தாளத் தேவன் சொல்லலாம். ஆனால், உண்மையில் இந்தக் கொலையில் இருந்து அவன் விலகி இருப்பதுதான் அவனுக்கு நல்லது. அதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது. ஆனால், அவனைப் போய் சரண்டையச் சொல்கிறார் காவலர் பேய்க்காமன். கொத்தாளத் தேவனுக்கு ஆயுள் தண்டனை தரப்படுகிறது. விருமாண்டியுடன் கடைசி ஜெயில் சண்டைல கொத்தாளத்தேவனும் இருந்தாகணுமே. அதுக்கு இப்படி சரண்டர் ஆனாத்தான முடியும். எனவே, சாட்சியே இல்லாத கொலைக்கு சரண்டர் ஆகிறார் கொத்தாளத் தேவர்.

அதுமட்டுமல்லாமல் அவர் அப்ரூவராகவும் ஆகிறாராம். விருமாண்டியைவிடப் பெரிய சண்டியர் அந்தக் கொத்தாளத் தேவன். செல்வச் செழிப்பிலும் அரசியல் செல்வாக்கிலும் விருமாண்டியைவிடப் பல மடங்கு உயர்ந்தவர். அதோடு விருமாண்டியே கொத்தாளத் தேவனின் அடியாள்தான். என்னதான் உயிர் பயம் இருந்தாலும் விருமாண்டிதான் என் எஜமானர். அவர் சொன்னதைக் கேட்டுத்தான் கொலைகளை எல்லாம் செய்தேன் என்று கொத்தாளத் தேவன் ஒருபோதும் சொல்லமாட்டான். அப்படிச் சொன்னால், அதன் பிறகு ஊருக்குள் அவனால் நடமாடவே முடியாது. தேவனுக்கு உயிரைவிட மானம்தான் பெரிசு. கமல் சார்தான் பசுபதிக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்பது சரிதான். அதற்கான விசுவாசத்தை பசுபதியிடம் கமல் எதிர்பார்க்கலாம். ஆனால், கொத்தாளத் தேவனைப்போய் விருமாண்டிக்கு அடியாளாக ஆக்குவது தவறு..

அதோடு, குற்றம் சாட்டப்பட்ட விருமாண்டியையும் கொத்தாளத் தேவனையும் சென்னை மத்திய சிறையில் அடைக்கிறார்கள். தேனி எஸ்.ஐ.யாக இருந்த பேய்க்காமனும் ”கூடவே நானும் வரேனப்பு’ என்று சொல்லி அதே சிறையில் துணை ஜெயிலராகிவிடுகிறார். க்ளைமாக்ஸ் சண்டை களைகட்ட வேண்டுமல்லவா?

க்ளைமாக்ஸில் காவலர் பேய்க்காமன் கைதிகளிடம் ரகசியமாக தணிந்த குரலில் ஒரு சதித்திட்டம் பற்றிப் பேசுகிறான். விருமாண்டி மீது பொய் வழக்குகள் போட்டு தூக்கு தண்டனை வரை கொண்டுவந்தது பற்றியும் பேசுகிறான். அதை டாக்குமெண்டரி எடுக்க வந்த கேமராமேன் தூரத்தில் இருந்து படமெடுத்துவிடுகிறான். ஆனால், பேய்க்காமனுக்கு மிக அருகில் கீழே உட்கார்ந்திருக்கும் விருமாண்டிக்கு மட்டும் இது கேட்கவே இல்லையாம். அந்த கேமராவையும் பொண்ணையும் கொண்டுவந்து என்னிடம் ஒப்படைத்துவிடு என்று விருமாண்டியிடம் பேய்க்காமன் டீல் பேசும்போது என் அன்னலட்சுமியை எனக்குத் தருவியா… தூக்கு தண்டனையில இருந்து விடுதலை வாங்கித் தருவியா என்று டயலாக் அடிக்கிறார். பேய்க்காமன் சதித்திட்டம் பற்றிப் பேசியது விருமாண்டியின் காதில் விழுந்ததோ இல்லையோ, பேய்க்காமன் கெட்டவன் என்பது விருமாண்டிக்கு நன்கு தெரியும். எனவே, அந்த கேஸட்டையும் டாக்குமெண்டரி இயக்குநரையும் பேய்க்காமன் பிடித்துத் தரச் சொன்னால் அதற்கு எதிரானதைச் செய்வதுதான் விருமாண்டிக்கு நல்லது. ஆனால், அவனோ முதலில் அவர்களைப் பிடித்துக் கொடுக்கவே முயற்சி செய்கிறான். டாக்குமெண்டரி டைரக்டரை தலையில் அடித்து தூக்கிக் கொண்டு செல்கிறான். கொத்தாளத் தேவன் வந்து விருமாண்டியைக் கத்தியால் குத்தி அந்த கேமராவைப் பறிக்க முயற்சி செய்யும்பொதுதான் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்கிறான்.

இப்படியாக கதையின் எந்தவொரு நகர்வை எடுத்தாலும் அதில் லாஜிக்கே கிடையாது. இதுபோன்ற தவறுகள் ஏன் நடக்கின்றன என்றால், கதை, திரைக்கதை வசனத்தை செப்பனிடுதல் என்ற சங்கதியே தமிழில் நடப்பதில்லை. ஒரு சாதாரண கட்டுரை, கதை எழுதுவதாக இருந்தாலும் அதை ஐந்தாறு தடவை அடித்துத் திருத்தி எழுதுவது உலக வழக்கம். இங்கோ கோடிகளைக் கொட்டி எடுக்கும் படத்தை எந்தவித முன் திட்டமிடலும் சரிபார்ப்பும் இல்லாமல் எடுத்துவருகிறார்கள். தப்பித்தவறி யாராவது இலக்கிய அல்லது எழுத்து ஊடகத்தில் பரிச்சயம் உள்ள ஒருவரை கதை திரைக்கதை வசனம் போன்றவற்றுக்கு உதவிக்காக வைத்துக்கொண்டால், அந்த பிரகஸ்பதிகளோ வாங்கற காசுக்கு மேல கூவ ஆரம்பித்துவிடுகிறார்கள். நீ நின்றால் சிலை… நடந்தால் கலை… பேசினால் காவியம்… தும்மினால் ஓவியம் என்று ஆஸ்தான வித்வானாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆஸ்தான விதூஷகராகவும் ஆகிவிடுகிறார்கள். இந்த நிலை மாறாதவரை, குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகத்தான் தமிழ் சினிமா இருந்து கொண்டிருக்கும்.

இந்தப் படத்துக்கு கொரிய நாட்டில் விருது கிடைத்தது என்று வேறு சொன்னார்கள். வெள்ளைக்காரன் மேல் நமக்கு இருக்கும் அடிமை பக்தியினால் வெளிநாட்டுக்காரன் என்றாலே புத்திசாலி என்று ஒரு எண்ணம் நமக்கு. கேவலம் மனுஷ ஜென்மம் தானே நாம் எல்லோரும்.

இந்தப் படத்துக்கு மாற்று திரைக்கதை எழுதுவதென்றால், முதலில் மரண தண்டனை எபிசோடை எடுத்து தனியே வைத்துவிடுவேன். அது தனியாக எடுக்கப்படவேண்டிய வலுவான கதை. அதுபோல் க்ளைமாக்ஸ் சண்டையும் படத்துடன் பொருந்தாத ஒன்று. அப்படிப் பார்த்தால், உயிருக்கு உயிராகக் காதலித்த ஒரு பெண்ணை காதலனே கற்பழித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுதல் என்ற விஷயம்தான் கதையாக மிஞ்சும். அதை வைத்து மிக அற்புதமான படம் தமிழில் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டிருக்கிறது. அதைவிட மேலான ஒன்றை யோசிப்பது கடினமே. கமல் சார் 100 ஜென்மம் எடுத்தாலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் படம் அது.

0

B.R. மகாதேவன்

 

Share/Bookmark

36 comments so far

  1. Ram
    #1

    கமலின் எல்லா படங்களுமே – வருவதற்கு முன் நிறைய பேசப்படும். வந்தப்பிறகு பேசாபடாமலே போகும். அதற்கு மிக சிறந்த உதாரணம் – சண்டியர் விருமாண்டி.

  2. Vijay SA
    #2

    தமிழ்பேப்பர் டி.ஆர்.பி குறைந்தால் உடனே கமலைத்திட்டி ஒரு கட்டுரை வந்துவிடும்!

    “கமலின் எல்லா படங்களுமே – வருவதற்கு முன் நிறைய பேசப்படும். வந்தப்பிறகு பேசாபடாமலே போகும்.” என்னே ஒரு டுபுக்குத்தனமான கருத்து! வையுரதுக்காச்சும் இங்கே ஒருத்தர் பேசுராரே, அப்பொ இது என்ன?!?

  3. Shanker
    #3

    Yevvlo periya katoorai on Verumandi..!!! padathoda thiraikathaiyai vida perusa irukum poola.. :) But very gud and detail analysis.

  4. மன்னார்குடியான்
    #4

    //தமிழ்பேப்பர் டி.ஆர்.பி குறைந்தால் உடனே கமலைத்திட்டி ஒரு கட்டுரை வந்துவிடும்!//

    உடனே டி.ஆர்.பி. எகிறிடுமா? என்னாங்கய்யா? அப்போ இப்படி கமலோட விசிறிகள் சினிமாவுக்கு போய் பாத்தாலே அவரு படம் எல்லாம் ஹிட் ஆகிடுமே. அது ஏன்யா எல்லாமே டப்பா டான்ஸ் ஆடுது?

  5. Vijay SA
    #5

    “அந்தக் கதாபாத்திரமும்கூடத் தெளிவான வில்லன் பிம்பத்துடன் படைக்கப்பட்டிருப்பதால் அரசமைப்பின் மீதான விமர்சனமாக அது கூர்மை பெறவில்லை.”
    அத்தகைய ஆட்கள் சட்டத்தின் ஓட்டைகள் மூலம் ஜெயில் அதிகாரிகளாக முடிகிறது என்பதே அரசின்மீதான மறைமுக விமரிசனம் தான். புத்திசாலி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட இதுபோன்ற படங்களில் எல்லாத்தையும் ஸ்பூன்ஃபீட் செய்துகொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. சொல்லப்போனால், சண்டையின் மையமான அந்த கிணறு, அதை ஒரு ஃப்ரேமிலும் காட்டமாட்டார்கள். வெறும் படிக்கட்டுக்கள் மட்டுமே காட்டுவார்கள். இதேபோல் புத்திசாலி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட இன்னொரு படமான தசாவதாரத்தில் கூட, பயோ வார், டெக்டானிக் ப்ளேட்டின் அசைதல் உள்பட பலதையும் ரசிகர்களாகவே புரிந்துகொள்ள விட்டிருப்பார்கள்.

    “தேனி மாவட்டத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிப்போகும் காதல் ஜோடிகள் டி.வி.எஸ். மொபெட்டிலேயே சென்னைக்கு போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள்.”

    என்னாது! அன்னலட்சுமிய கூட்டிக்கிட்டு சென்னைக்கு போறாரா?!? ஓஹோ, இதான் படம் பார்த்த லட்சணமா?!? வக்கீலைப்பார்க்கத்தான் சென்னைக்குப்போவார், அதுவும், அன்னலட்சுமி கொலையான பிறகு, நல்லம்மநாயக்கனூரில் இருந்து நாயக்கரின் அறிவுறைப்படி. நிஜத்தில், விருமாண்டி அன்னலட்சுமியுடன் வருவது, காந்திமதி வசிக்கும் ஏதோ ஒரு கிராமத்துக்குத்தான். எனவே அது சற்றே அருகாமையில் இருக்கும் ஊராகத்தான் இருக்கவேண்டும். அதற்குப்போகும் வழியில் குளம் அருவி எல்லாம் இருக்கத்தான் செய்யும்!

    “விருமாண்டி கொன்றிருந்தால் கொத்தாளத் தேவனின் வீட்டில் மாட்டிவிட்டிருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஒன்றைச் சொன்னாலே விருமாண்டி கொலைப்பழியில் இருந்து தப்பித்துவிட முடியும்.”
    கொத்தாளனின் வீட்டில் தூக்குமாட்டி இறந்ததாக விருமாண்டிக்கே தெரியாதே! அப்புறம் எப்படி சொல்வார்? தவிர, FIR போட்டது பேய்க்காமன் தானே?!?

    “ஜெயில் கைதிகளும் கூடவா? அதுவும்போக அவர்களுடைய நோக்கம் என்ன க்ளைமாக்ஸை விறுவிறுப்பாக ஆக்குவதா!?”
    ஒரு விருமாண்டிக்கு பகை கொத்தாளன். இருவரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயலுகிறார்கள். அதுபோலவே அந்த சிறைக்குள் இருக்கும் மற்ற கைதிகளிடையே அதுபோல பல பகைகள் இருக்கலாமல்லவா! சிறை என்ன காந்திகளின் கூடாரமா?!? சென்ட்ரல் ஜெயிலில், அதிதீவிரமான அக்கியூஸ்டுகள் தானே இருப்பார்கள்?! அவர்களுக்கிடையே பகைக்கா குறைச்சல்! ஒருத்தன் தொடங்கியதுமே பலரும் கலவரத்தில் குதிக்கிறார்கள். அதுபோக, நல்ல கைதிகளுக்கும், ஜெயிலுக்குள் இருந்துகொண்டே அழிச்சாட்டியம் செய்யும் மற்ற கைதிகள் மீது கோபம் இருக்காதா. இதுபோன்ற சமயத்தில் பழிதீர்க்க முயலமாட்டார்களா?!?

    “மரண தண்டனை எதிர்ப்பில் ஆரம்பித்து, ஜல்லிக் கட்டுக்குப் போய், தமிழ் விவசாயம் என்று திரும்பி, நிலச் சண்டையாக மாறி, நாயக்கர்-தேவர் சண்டை என்று ஆகி, எஜமானன் பணியாள் சண்டையாகத் திரும்பி, ஜெயில் சண்டையாகி கடைசியில் மரண தண்டனை எதிர்ப்பில் வந்து முடிகிறது. நடு நடுவுல மானே தேனே என்று காதல் டிராக்கும் ஓடுகிறது. இரவு நேர யாசகரின் தூக்குப் பாத்திரத்தில் ஊசிப் போன சாம்பாரில் ஆரம்பித்து உளுத்துப் போன வடைவரை இருப்பதுபோல் ஒரு அசட்டுக் கலவை இது.”
    கல்யாண விருந்தில் கூட தான் பல பதார்த்தங்களும் பரிமாறப்படும். ஒன்றுக்கொன்று சம்மந்தமா இருக்கும்? கல்யாண விருந்தா பிச்சைக்காரனின் திருவோடா என்பது அவரவர் ரசனை/நிலையைப்பொருத்தது!

    “படமானது கதாநாயகன், வில்லன் ஆகிய இருவரின் பார்வையில் சொல்லப்படும் கதையாக விரிகிறது. இந்த ரொஷோமான் யுக்தி படத்தில் மிகவும் மோசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரொஷோமானில் உண்மை என்ன என்பது கடைசிவரை நமக்குப் புரியாமலேயே இருக்கும். அதுதான் உண்மையின் பன்முக சாத்தியக்கூறுகளையும் புதிர்த்தன்மையையும் வசீகரத்தையும் முழுவதுமாக எடுத்துக்காட்டும். இந்தப் படத்தில் வில்லனின் கதையானது முழுப் பொய் என்பது நாயகனின் கதையைக் கேட்டதும் தெரிந்துவிடுகிறது. எனவே, உண்மையின் பன்முகத்தன்மை இதில் இடம்பெறாமல் போய்விட்டது. ரொஷோமானைப் போல் எடுத்ததாக நான் சொல்லவில்லையே என்று கமல் சொல்லக்கூடும். ஆனால், அந்தப் பாணியைப் பலவீனமாகப் பயன்படுத்தியிருப்பதால் அந்த விமர்சனத்தையும் அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும்.”
    ஓஹோ, நானே கேள்வி நானே பதிலா! சுய-புலம்பல் தாங்கலடா ராமா!! ரொஷோமானைப் போல் எடுக்கவில்லை என கமல் எப்போதும் சொல்லவில்லையே! ஆம் ரொஷோமானின் அந்த உத்தியைத்தான் கையாண்டார். ஆனால், அதைப்போலவே, அல்லது “அந்த நாள்” போலவே, உன்மை என்ன என்பது தான் கதையின் நோக்கமாக இருக்கவெண்டுமென கதாசிரியர் விரும்பவில்லையே! அது அவர் இஷ்டம் தானே! கமல் ஃப்ளாஷ்பேக் முடிந்தவுடன், நடந்த உண்மை ரசிகர்களுக்கு தெரியவருகிரது. அத்துடன் அந்தக்கதை முடிகிறது! பிறகு, ஏற்கனவே துவங்கிவைத்த இரு முனைகள் 1.தூக்குதண்டனை கூடாது 2.சிறையில் நிகழும் அராஜகங்கள் இந்த இரன்டு கதையையும் முடிக்கவேண்டாமா! அப்படி எடுத்தால் ரொஷோமோன், அந்தநாள் படங்களின் காப்பி என சொல்லவேண்டியது! இப்படி எடுத்தால் பலவீனமான பாணி எனவேண்டியது!

    ” அந்த அருவாளோ ஃபெவிகால் போட்டு ஒட்டியதுபோல் விருமாண்டியின் உடம்புடன் ஒட்டியே இருக்கிறது. ரஜினிகாந்த் என்றால்கூட இதை நம்பலாம். ஏனென்றால், அவர் பெயரிலேயே காந்தம் இருக்கிறது.”
    ஓ, அவனா நீயி! அதான் படிக்கும்போதே குமட்டிக்கொண்டு வருகிறது!

    “ஒரு காட்சியில் நல்லம்ம நாயக்கர் பஞ்சாயத்து கூட்டியதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த காட்சியில் அதே பஞ்சாயத்தை விருமாண்டி பிராது கொடுத்து கூட்டியதாகச் சொல்லப்படுகிறது.”
    படம் பார்த்த லட்சணம் மீண்டும்மீண்டும் சந்தி சிரிக்கிறது! விருமாண்டி ப்ராது மட்டும் தான் கொடுத்தான். அதை எதிர்த்து பஞ்சாயத்து கூட்டியது நல்லம்ம நாயக்கர் மட்டுமே!

    “பஞ்சாயத்தில் அன்ன லட்சுமியின் சித்தியைப் பற்றி அவதுறாகப் பேசியதற்கு கொண்ட ராசு நாயக்கனை விருமாண்டி அடிக்கப்போனார் என்பது உண்மைதான். ஆனால், இரவில் அவனிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவனை மன்னிக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார். தவறு செய்தது கொண்ட ராசு நாயக்கன்தானே.”
    எது அவதூறு? “எஞ்சித்தப்பன பத்தி கொஞ்சம் நெசம் பேசிப்புட்டான்” என அன்னலட்சுமியே சொல்லும்போது உமக்கேன் கவலை? விருமாண்டி ஓவராக பேசியதால் கொண்டராசுவும் இப்படி சொல்கிறான். இதில் என்ன அவதூறு?!? கொண்டராசுவை பாய்ந்து அடித்தது விருமாண்டிதானே?! அதற்குத்தான் மன்னிப்பு கேட்கப்போகிறான்.

    “அவர்கள்தானே கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யப் போகிறவர்கள். எனவே, கலவரத்தில் நாயக்கர் பிரிவினர் மட்டுமே சாகிறார்கள். வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது.”
    தூக்குதண்டனை பெறுவது தேவர்கள் மட்டுமே! விருமாண்டி உள்பட. தேவர்கள் சைடிலும் கொலை விழுகிறது. தூக்கு போட்டுக்கொள்கிரார்கள்(பேய்க்கமன், கொத்தாளன், அன்னலட்சுமி) ஒரு கட்டத்தில் விருமாண்டித்தேவரே நாயக்கர்களின் ஆதரவைத்தான் ஏற்கிரார். அவருக்கு ஆதராக வதிடும் வக்கீல் (பிரமிட்) ஒரு ஐயர். அவருடன் இருந்து செத்துப்போகும் அந்த வீடியோ கேமராமேன் என்ன சாதி என தெரியவில்லை. ஓஹோ, இதிலும் சம உரிமை, இட ஒதுக்கீடு எல்லாம் எதிர்பார்க்கிரார்களா?!? வெளங்கிரும்!

    “இத்தனைக்கும் 24 பேர் கொலை கேஸானது ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு.”
    கீழ் கோர்ட், மேல் கோர்ட், மேல் முறையீடு இதெல்லாம் என்னன்னே தெரியாதா??

    “இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அன்ன லட்சுமி தூக்கு மாட்டித்தான் இறக்கிறாள். போஸ்மார்டம் ரிப்போர்ட்டில் அப்படித்தான் தெரிய வந்திருக்கும். கொன்றுவிட்டுத் தூக்கில் மாட்டியதாக வந்திருக்காது. அந்த ஊர்க்கார்களும் விருமாண்டியின் நண்பர்களும் ஏன், நல்லம்ம நாயக்கரின் ஊரார்கூட அந்தக் காதலுக்கு சாட்சி சொல்ல முடியும்.இருவரும் ஊரை விட்டு ஓடியபோது சென்னையில் தங்க இடம் கொடுத்த உறவுக்காரப் பெண்மணி விருமாண்டிக்கும் அன்ன லட்சுமிக்கும் திருமணம் நடந்துவிட்டதைச் சொல்லியிருந்தால் வழக்கு அப்போதே வலுவிழந்திருக்கும். ஆனால், அவரை அந்த உண்மையைச் சொல்லாமல் ஊமையாக்குகிறார் வசனகர்த்தா. அது நியாயமே இல்லை.”
    “கற்பழிச்சிட்டு சாட்சிய மறைக்க அந்தப்புள்ளைய கொன்னுபுட்டு, நான்டுகிட்டு செத்துருச்சின்னு நாடகமாடுர” என்று கொத்தாளனின் வக்கீல் தெளிவாகவே சொல்வார். அதுபோக, கல்யாணத்திர்கு வேறு சாட்சிகள் உண்டா என கேட்கும்போது, காந்திமதி சாட்சி சொல்ல எத்தனிப்பார், ஆனால் சட்டரீதியாக எந்த ஆதாரமும் இல்லாததால் அந்த வாதம் வலுவிழந்துவிடுகிறது. கோர்ட் காட்சிகளில், விருமாண்டி, நடப்பது புரியாமல், நீதிபதியின் ஆங்கிலம் புரியாமல், மனைவியை இழந்த சோகமும் சூழ, சரியான தூக்கமும் இன்றி, மனதாலும் உடலாலும் சோர்ந்து காண்ப்படுவார். சர்கவகாலமும் சதிவேலைகளே என இருந்த கொத்தாளனுக்கு உதவ பேய்க்காமன் இருக்கிறான். சூதரியா விருமாண்டி தனியே இருக்கிறான். செய்வதரியாமல் திகைக்கிறான்.

    “தேவர்-தலித் மோதலைப் படமாக்கினால் பெரும் பிரச்னைகள் வரும் என்பதால், உண்மை நிலையை அப்படியே விட்டுவிட்டு குறைவாக நடக்கும் நாயக்க-தேவர் மோதலை படத்தின் கருவாக ஆக்கியிருக்கிறார். தேவர் மகன் படத்தில் அதையே இரண்டு தேவர்களுக்கு இடையிலான சண்டையாக்க் குறுக்கியிருப்பார்… எனவே, தென் மாவட்டத்தில் மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும்தான் எப்போதும் சண்டை ஏற்படும் என்று கமல் சொல்லும்போது அவர் மணலுக்குள் தலையை நுழைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழியாகவே ஆகிறார்.”
    கமல் நேரடியாக தேவர்-தலித் சாதி மோதல்களை படமாக்கியதில்லை தான். ஆனால் தைரியமாக அதற்கு மிகப்பக்கத்தில் சென்ற ஒரே கலைஞன் அவர்மட்டுமே. அதற்கே ஒரு கலைஞனாக பெரும் எதிர்ப்பையும் சங்கடங்களையும் சந்தித்து எதிர்கொண்ட தைரியசாலி கமல். இந்த விஷயத்தில் கமலின் தைரியத்தின் முன்பு, சக நடிகர்கள் மட்டுமல்ல, அவரை விமரிசிக்கும் விமரிசகர்கள் கூட எனக்கு சோப்ளாங்கியாகவே தெரிகிறார்கள். வன்முறை கூடாது என்ற மெசேஜை தேவர் மகன், விருமாண்டி இரண்டிலும் பதிவு செய்ததே போதுமானது. அதையும் தாண்டி, “நேரடியாக தலித்-தேவர் மோதலைச்சொல்ல தைரியம் இல்லாத கலைஞன், மணலுக்குள் தலையை நுழைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழி” என சொல்லும் தகுதி, அந்த தலித்-தேவர் சாதிமோதலை படமாக்கிய இன்னொரு கலைஞனுக்கு மட்டுமே இருக்கிறது. மூலையில் உட்கார்ந்துகொண்டு முனகும் மகாதேவன்களுக்கு அந்தத்தகுதி எப்போதுமே இருந்ததில்லை.

    “ஹே ராமை ஒப்பிடும்போது பலவகைகளில் நேர்த்தியான படம்தான் இது.”
    ஹேராமை ஒப்பிட்டால் பரவாய்ல்லைதான் என போகிரபோக்கில் குறை சொல்வது சோப்ளாங்கித்தனமாக உள்ளது! ஒன்று தைரியமாக ஹேராம் எப்படி ஒரு தரமற்ற படைப்பு என சொல்லவேண்டும். இல்லை வாய்மூடி சும்மா இருக்கவேண்டும்! இப்படிப்பட்ட மட்டமான பதிவுகளைக்கூட அனுமதிக்கிரதா தமிழ்பேப்பர்? நான் கூட நல்ல மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் கமலின் சாதனைகளைப்பற்றி கிஞ்சித்தும் பேசாமல் அவரை குறைசொல்லும் பதிவுகளை மட்டுமே அனுமதிக்கும் போக்கு, இன்னொருபக்கம் ரஜினிக்கு ஜிங்ஜக் அடிக்கும் பதிவுகள், ஆக, தமிழ்பேப்பரும் ஒரு மட்டமான மசாலா ப்ளாக் தான் போல! குறைசொல்லியே பிரபலமாக முயலும் மட்டமான பதிவர் கூட்டம்?!? அதிலும், சொல்லும் குறைகளிலும் அயிரம் நொள்ளை நொட்டை! மாதவன் ஸ்னேக்பாபுவைப்பார்த்து சொல்வாரே “என்னய்யா பாம்பு நீ! உனக்கு ஒழுங்கா சாபம் விடக்கூட தெரியல!”

    விருமாண்டியை, உலகப்படம்பார்க்கும் தமிழ்ரசிகர்கள் பார்த்தார்கள் என்பதை விட, விருமாண்டி உள்ளிட்ட படங்களை எடுத்ததன்மூலம் கமல்தான், தமிழில் உலகத்தரமான படம் என்ற நிலையையே பலமாக நிறுவினார் எனலாம். இப்படிப்பட்ட படங்கள் தமிழில் வந்த காரணத்தால் மட்டுமே இப்படிப்பட்ட ரசிகர்களும் உருவாகினர் என்பதும் நிஜம். கமல் என்ற கலைஞன், படைப்புக்களை மட்டுமல்ல, விமர்சகர்களையும் உலகத்தரத்தில் உருவாக்க பெருங்காரணியாக இருக்கிறார், இருப்பார்.

  6. LPG
    #6

    கடந்த பத்து தினங்களுக்கு முன்பாக கமலஹாசனின் பகுத்தறிவும் நாத்திகமும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எனது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதன் பிணையை இணைக்கிறேன். வியாபாரத்திற்குப் பிறகுதான் எல்லாமும் என்கிற கொள்கைதான் கமலஹாசனின் பகுத்தறிவு என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன்.
    கடந்த பத்து தினங்களுக்கு முன்பாக கமலஹாசனின் பகுத்தறிவும் நாத்திகமும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எனது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதன் பிணையை இணைக்கிறேன். வியாபாரத்திற்குப் பிறகுதான் எல்லாமும் என்கிற கொள்கைதான் கமலஹாசனின் பகுத்தறிவு என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன்.
    http://lakshmanaperumal.com/2012/04/10/578/

  7. Ganpat
    #7

    களத்தூர் கண்ணம்மா விமரிசனம் எப்போ வரும் BRM?

  8. அறிவன்ஆ
    #8

    ஆ,காந்தி செத்துட்டாரா?

  9. Vijay SA
    #9

    கடந்த பின்னூட்டத்தில் சொல்லாமல் விட்டுப்போனது:-

    விருமாண்டியை, உலகப்படம்பார்க்கும் தமிழ்ரசிகர்கள் பார்த்தார்கள் என்பதை விட, விருமாண்டி உள்ளிட்ட படங்களை எடுத்ததன்மூலம் கமல்தான், தமிழில் உலகத்தரமான படம் என்ற நிலையையே பலமாக நிறுவினார் எனலாம். இப்படிப்பட்ட படங்கள் தமிழில் வந்த காரணத்தால் மட்டுமே இப்படிப்பட்ட ரசிகர்களும் உருவாகினர் என்பதும் நிஜம். கமல் என்ற கலைஞன், படைப்புக்களை மட்டுமல்ல, விமர்சகர்களையும் உலகத்தரத்தில் உருவாக்க பெருங்காரணியாக இருக்கிறார், இருப்பார். அப்படி நடக்கும்போது, இந்த மகாதேவன் போன்ற விபத்துக்கள் நடக்கத்தான் செய்யும்!

    //அதுதான் உண்மையின் பன்முக சாத்தியக்கூறுகளையும் புதிர்த்தன்மையையும் வசீகரத்தையும் முழுவதுமாக எடுத்துக்காட்டும். இந்தப் படத்தில் வில்லனின் கதையானது முழுப் பொய் என்பது நாயகனின் கதையைக் கேட்டதும் தெரிந்துவிடுகிறது. எனவே, உண்மையின் பன்முகத்தன்மை இதில் இடம்பெறாமல் போய்விட்டது//
    அட அப்புரண்டிசுகளா!! உச்சகட்ட உளறல் என்றால் அது இதுதான்! உன்மைக்கு ஏது பன்முக சாத்தியக்கூறு, பன்முகத்தன்மை எல்லாம்?!? உன்மை என்றாலே அது ஒரே முகம் தானே!?! உன்மை என்றால் அது ஒன்றே ஒன்று மட்டும்தானே?!?

  10. Ganesh Iyer
    #10

    சராசரி இரசிகனுக்கு இனிய திரைப்படமாகவே எனக்கு விருமாண்டி படம் தோன்றுகிறது. இந்தமாதிரி பிரேமுக்கு பிரேம் தவறு கண்டுபிடிப்பதற்கு பதிலாக, ஒரு நாலு நல்ல படத்தப்பத்தி எழுதினா தமிழ்பேப்பர் தரமாவது உயரும்…

  11. vajra
    #11

    விஜய் எஸ்.ஏ,

    இந்த உலகத் தரம், உலகத் தரம் என்று சொல்கிறீர்களே…அப்படியென்றால் என்ன ?

    எந்த ஒரு படம் வந்தாலும் அதைப் பார்த்துவிட்டு அதற்கு கொட்டாம்பட்டி ரெண்டாவது தெரு தரம், டி.கல்லுப்பட்டி தரம், மதுரை மாவட்ட தரம், சென்னை மாநகரத் தரம், இந்தியத் தரம், அப்புறம் உலகத் தரம் என்று ரேஞ்சு வைத்து சான்றிதழ் வழங்கும் நிறுவனம் எதுனா இருக்கா ?

  12. Ram
    #12

    சரியான பதிலடி Vijay SA, மகாதேவன் அவர்களுக்கு ரஜினி நடித்த சிவாஜியோ குசேலனோ இதுவரை தமிழில் லாஜிக்கலாக எடுக்கப்பட்ட மிகச் சிறந்த உலகத்தரம் வாய்ந்த படைப்பா தோணும் போல..

  13. ரோஸாவசந்த்
    #13

    /உன்மை என்றாலே அது ஒரே முகம் தானே!?! உன்மை என்றால் அது ஒன்றே ஒன்று மட்டும்தானே?!?/ உண்மைக்கு முகம் என்று ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகக் கேஸ். இருந்தால் கணக்கிலடங்காமல் இருந்துதான் ஆகவேண்டும்.

  14. Maha
    #14

    Vijay SA அவர்களே… நீங்க யார் பெத்த பிள்ளையோ தெரியலை. உங்க மேல இருக்கற அக்கறையினாலதன் சொல்லறேன். உலகத்துல நிறைய நல்ல விஷயங்கள் நடந்துட்டு இருக்குது. கண்ணைத் தொறந்து பாருங்க.
    நீங்க சொல்லியிருக்கற விஷயங்கள்ல பொருட்படுத்தறமாதிரி இருக்கறதுக்கு மட்டும் பதில் சொல்றேன்.
    ரொஷொமான் வேற தளத்துல இயங்கற படம். அதுல ஒரு சாமுராய் கொல்லப்பட்டுவிடுவார். மூணு பேர் சாட்சியா இருப்பாங்க. ஒரு கொள்ளைக்காரன் தான் தான் கொன்னதா சொல்லுவான். சாமுராயோட மனைவி நான் மயங்கி விழுந்துட்டேன் எனக்கு யார் கொன்னதுன்னு தெரியலைன்னு சொல்லிடுவா. இறந்து போனவன் ஆவியா வந்து நானே தற்கொலை பண்ணிக்கிட்டேன்னு சொல்லுவான். படம் முடிஞ்சு வெளிய வர்ற யாருக்கும் யார் கொன்னதுங்கற உண்மை தெரியவே செய்யாது. படத்துல நடிச்சவங்க கூட யாருப்பா கொன்னதுன்னு கேட்டபோது இயக்குநர் குரோசோவா சிரிச்சிக்கிட்டே மழுப்பிட்டாரு. இந்த இடத்துல உண்மை என்பது ஒற்றைப்படையானது அல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொண்ணு சொல்லுவாங்க. அதுவும் அடுத்தவன் மேல பழி போடறமாதிரி கிடையாது. தானே பழியை ஏத்துக்கறமாதிரி. என்னோட உண்மை உன்னோடது இல்லை. உன்னோட உண்மை என்னோடது இல்லை… ’உண்மை’ கொஞ்சம் சிக்கலானதுதான். இதுதான் குரோசோவா என்ற கலைஞன் காட்டிய சித்துவேலை. இங்கு இது பற்றி இவ்வளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.
    அடுத்ததாக, ஹே ராம் பற்றி இதே தளத்தில் இரண்டு பாகம் விரிவாக எழுதியிருக்கிறேன்.
    மற்றவர்கள் சாதி பற்றி எதுவும் பேசாமல் இருக்கும்போது கமல் தைரியமாக இவ்வளவாவது பேசுகிறாரே… சம்திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு இன்னொன்று தெரியுமா நத்திங் ஈஸ் பெட்டர் தேன் நான்சென்ஸ்.

  15. Rajan
    #15

    அட பாழாய் போன தமிழர்களே வீட்டில,நாட்டுல, எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது, கேவலம் ஒரு கூத்தாடி படம் எடுத்தானாம் அதுக்கு 10 பக்க ஆராய்ச்சி கட்டுரையாம், 9 பதிலாம் (நாசமாய் போக..)

    போய் தொழில பாருங்க, பிள்ளைகளையாவது கூத்தாடி உலகத்துல இருந்து காப்பாத்துங்க..

  16. Rajan
    #16

    அட பாழாய் போன தமிழர்களே வீட்டில,நாட்டுல, எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது, கேவலம் 2 பொண்டாடிய கழட்டிவிட்டு மகளை கூட ஆடவிட்டு , யார் கூடவும் எப்படியும் வாழலாம் என்று என்னமோ செய்துகொண்டிருக்கும் ஒரு கூத்தாடி படம் எடுத்தானாம் அதுக்கு 10 பக்க ஆராய்ச்சி கட்டுரையாம், 9 பதிலாம் (நாசமாய் போக..)

    போய் தொழில பாருங்க, பிள்ளைகளையாவது கூத்தாடி உலகத்துல இருந்து காப்பாத்துங்க..

  17. சான்றோன்
    #17

    //கமல் நேரடியாக தேவர்-தலித் சாதி மோதல்களை படமாக்கியதில்லை தான். ஆனால் தைரியமாக அதற்கு மிகப்பக்கத்தில் சென்ற ஒரே கலைஞன் அவர்மட்டுமே. அதற்கே ஒரு கலைஞனாக பெரும் எதிர்ப்பையும்சந்தித்தார்…//

    அப்படீங்களா விஜய்? அப்ப எதுக்கு ” போற்றிப்பாடடி பெண்ணே …..தேவர்காலடி மண்ணே ” அப்படீன்னு பாட்டு வச்சாராம்? தேவர்களுக்கு ஜால்ரா அடிக்கத்தானே? அந்த பாடலால் இன்றுவரை தென் மாவட்டங்களில் விளையும் கலவரங்களை பற்றி ஏதாவது தெரியுமா? அரசு விழாக்களில் கூட அந்த பாடலை தேவர்கள் ஒலிபரப்புவதும் அதற்கு தலித்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக பதட்டம் ஏற்படுவதை பற்றி ஏதாவது தெரியுமா?

    அதே படத்தில் , கமல் தேவர்களுக்கு ஐஸ் வைப்பதற்காக இன்னொரு வசனமும் வைத்திருப்பார்….சிவாஜி சொல்வார்….” நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளக்காரனுக்கு எதிராபோராட வாங்க‌ன்னு கூப்பிட்ட உடனே வெட்டறுவாளையும் வேல்கம்பையும் தூக்கிட்டு வந்து மொதல்ல நின்ன பய நம்ம பயதான் ” …..என்பார்…அப்பட்டமான அபத்தம்…… நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தை துவக்கியது சி்ங்கப்பூரில்……அதில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த‌வர்கள்……வட இந்தியர்கள்…..மலேசியாவில் வசித்து வந்த சில தமிழர்கள்….அதிலும் தேவர்கள் யாரும் இல்லை….உண்மை இப்படியிருக்க மனமறிந்து இவ்வளவு பெரிய பொய்யை பரப்பியது எதற்காகவாம்?
    சினிமாவில்வருவதை அப்படியே நம்பும் மக்கள் அதிகம் உள்ள மாநிலத்தில் இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

    தன்னுடைய படம் ஓடுவதற்காக சாதியை பயன்படுத்த கமல் தயங்கியதே இல்லை….அந்த வகையில் ரஜினி பாராட்டதக்கவர்……அவர் தன்னுடைய படங்களில் சாதியை முன்னிலைப்படுத்தியதே இல்லை…..

  18. Vijay SA
    #18

    //நீங்க சொல்லியிருக்கற விஷயங்கள்ல பொருட்படுத்தறமாதிரி இருக்கறதுக்கு மட்டும் பதில் சொல்றேன்.//
    ரொம்ப டீஸன்டா பேசி நைசா எஸ்கேப் ஆகுறதுன்னு இதைத்தான் சொல்வாங்க.

    Author எழுதிய மற்ற கட்டுரைகளை, அவர் பெயரை க்ளிக் செய்தே பார்க்கும் வசதி இந்த தளத்தில் ஏன் இல்லை? நேற்றே ட்ரை பண்ணேன். இதே வசதி தமிழ்பேப்பர் குரூப் நடத்தும் சொல்வனம் தளத்தில் கூட இருக்கே!

    சரி, முதலில் விருமாண்டி பஞ்சாயத்தே முடியலை, அதுக்குள்ள ஹேராம் பஞ்சாயத்துக்குள்ள போக முடியாது!

    இரு படங்களிலும் தர்க்க தவறு மற்றும் சில தகவல் பிழைகள் இல்லாமல் இல்லை. அதனால் இவை உலகத்தரம் வாய்ந்த படங்கள் என்பதில் எந்தக்குறையும் வந்துவிடவில்லை. இவை இரண்டுமே உயரிய கலைப்படைப்புக்கள் என்பதற்கு இணையத்திலேயே பல சான்றுகள் உள்ளன. இரு படங்களையும், மொத்தமாகவும், சிறு காட்சிகளாகவும், விவரித்து பாராட்டும் சிலாகிக்கும் கடுரைகள் இணையத்தில் அனேகம். ஏற்கனவே சொன்னதுபோல் இந்த இரு படங்களும், பல ரசிகர்களை விமர்சகர்க
    ளை, தமிழ் திரைப்பட அளவில், உலகத்தரத்திற்கு கூட்டிச்சென்றது என்றால் அது மிகை ஆகாது. 25 வருடங்களாக, கமல் படத்தில் ஓட்டை எங்கே என ஒரு கூட்டம் தேடுகிறது என்றால் அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததே கமல்தான் எனலாம்.

    //இந்த உலகத் தரம், உலகத் தரம் என்று சொல்கிறீர்களே…அப்படியென்றால் என்ன ?//
    உலகத்தரம் என்பது ரொம்பவும் விரிவான பொருள் கொண்ட சொல். நம் கலாச்சாரத்தை காட்டுவது தான் உலகத்தரம் என்கிறார்காள் சிலர். படம் ஆரம்பித்த முதல் ஷாட் தொடங்கி வணக்கம் போடும் வரை, ஒரே நீட்சியாக, கதையுடன் சம்மந்தம் உள்ள விஷயங்களை மட்டுமே காட்டுவது கூட ஒரு வகை உலகத்தரம் எனப்படுகிறது. காமெடி, பாடல்கள் அனைத்தும் படத்தின் கதையை ஒட்டியே இருக்குமாறு பார்த்துக்கொள்வது இதனால் தான். இதுமட்டுமின்றி இப்படி பல டெஃபனிஷன்கள் உள்ளது. அவற்றையெல்லாம் நீங்களே தேடிப்பிடித்து படித்து புரிந்துகொண்டு வாருங்கள். உங்கள் புரிதல் இன்னொருவருக்கு மேட்ச் ஆகாது. இங்கே ட்யூஷன் எடுக்க இயலாது, சாரி.

  19. vajra
    #19

    ராம்,
    //
    சரியான பதிலடி Vijay SA, மகாதேவன் அவர்களுக்கு ரஜினி நடித்த சிவாஜியோ குசேலனோ இதுவரை தமிழில் லாஜிக்கலாக எடுக்கப்பட்ட மிகச் சிறந்த உலகத்தரம் வாய்ந்த படைப்பா தோணும் போல..
    //

    இங்கே எவன் ரஜினி ரசிகன் என்று சொல்லிக்கொள்கிறான் ? தேவையில்லாத திசை திருப்பல்.

    கமல் விரும்பியான உங்களுக்கும் விஜய் எஸ்.ஏ வுக்கு முக்கிய கேள்வி இது. இந்த “உலகத் தரம்” என்றால் என்ன என்று தயவு செய்து ஒரு விளக்கம் தரவும்.

    ஹாலிவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படம் எடுத்தால் உலகத் தரமா ?

  20. Vijay SA
    #20

    //அப்ப எதுக்கு ” போற்றிப்பாடடி பெண்ணே …..தேவர்காலடி மண்ணே ” அப்படீன்னு பாட்டு வச்சாராம்? தேவர்களுக்கு ஜால்ரா அடிக்கத்தானே? //
    சான்றோன், இந்த சாதி மோதல் படு சிக்கலான விஷயம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இன்று இணையத்தில் கூட நேரடியாக பெரிய உன்மைகளை பேசிவிட முடியாதபடி சூழ்நிலை இருக்கிறது. பொதுவாக, இரண்டு ஜாதிகளே பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது புலப்படுகிறது. அவாள், அருவாள் இவை இரண்டும். இதில் அவாள் கூட்டத்தால், நிச்சயம் சிலபல நல்ல விஷயங்களும் சமூகத்திற்கு கிடைத்துள்ளது என்பதை மறுக்கவே முடியாது. ஆனால் அருவாள் கூட்டத்தால் என்ன பலன் கிடைத்தது என்று ஒன்றும் புரியவில்லை. ஆதிக்கம் மட்டும் செலுத்தமுடிகிறது. இது ஒரு வகையில் சமூகத்தின் தவறு என்றுதான் கொள்ளவேண்டும். சமீபத்தில் பரமக்குடி கொலைகள் நடந்தபோது, அருவாள் இனத்தை சேர்ந்த ஒரு நபர் ஃபேஸ்புக்கில் மற்றொரு இனம்பற்றி தவறாக கூறப்போய், சிலர், இதை சைபர்க்ரைம் இடம் கம்ப்ளெய்ன்ட் பண்ணப்போவதாக சொன்னவுடன் அழித்துவிட்டார். ஆதிக்கத்துக்கே இந்த நிலை!!

    என்ன நடக்கிறது என்பது கமலுக்கு தெரியாமலா இருக்கும். இந்தளவு பூடகமாக கமல் எடுத்ததே ஒரு வெற்றி தான். போற்றிப்பாடடி என்று பாட்டு வைத்த அதே படத்தில் இன்னொரு இடத்தில் கட்டுமிராண்டி கூட்டம் என விளித்திருப்பார். உடனே, சேஃப்டிக்காக, அந்தக்கூட்டத்தில் உங்கப்பனும் ஒருத்தந்தான், அப்படின்னா நானும் ஒருத்தன் தான் என சொல்லியிருப்பார். இல்லாவிட்டால் என்ன ஆகி இருக்கும்?!? இந்த இடத்தில், காட்டுமிராண்டி என சொன்னதே ஒரு வெற்றி தான். ஒரு கலைஞன் இந்தளவு பூடகமாக சொல்வதே பெரிய விஷயம் தான். இதைக்கூட மற்ற நடிகர்கள், குறிப்பாக, இங்கு ஒருவர் ரஜினி பேரை சொன்னதால் சொல்கிறேன், ரஜினியால் இதுபோன்ற ஒரு காட்சியோ இதுபோன்ற ஒரு படமோ எடுக்கமுடியுமா?!?

    இதுபோன்ற பல சொல்லாடல்களும் மறைமுக சேதிகளும் படம்முழுக்க விரவிக்கிரக்கும். படத்தின் பேரை அப்படி வைத்துவிட்டு, ஒரு பாட்டும் வைத்துவிட்டு, அந்த இனத்திர்கே ப்ரதியேகமான வட்டாரவழக்கு, வாழ்க்கைமுறை மீசை உள்ளிட்ட பலதையும் நேரடியாகக் காட்டிவிட்டு, இவ்வளவு இடத்தில் மறைமுகமாக காட்டுமிராண்டிக்கூட்டம் என சொல்வது பெரிய விஷயம் இல்லையா?!?

    ஏதோ அன்று சூழ்நிலை சற்றே அசமந்தமாக இருந்தது, இந்தப்படம் இந்தபெயரில் சேஃபாக வரமுடிந்தது. ஆனால், அதன் பின்னர், விருமாண்டி எடுக்கும்போது எத்தனை எத்தனை பிரச்சனைகள். அப்படி இருக்கும்போது, எப்படி ஐயா நேரடியாக சொல்ல முடியும்?!? விருமாண்டியில் ரொம்பவே சேஃபாக கையாண்டிருந்தார். முதல்வர் உள்பட பலரின் பார்வையும் படத்தின் மீது இருந்தது. அப்படி இருக்கும்போது சிறுபிள்ளைத்தனமாக , ஏன் நேரடியாக காட்டவில்லை எனக்கேட்பது சிரிப்பைத்தான் வரவைக்கிறது!

    //அந்த பாடலால் இன்றுவரை தென் மாவட்டங்களில் விளையும் கலவரங்களை பற்றி ஏதாவது தெரியுமா? அரசு விழாக்களில் கூட அந்த பாடலை தேவர்கள் ஒலிபரப்புவதும் அதற்கு தலித்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக பதட்டம் ஏற்படுவதை பற்றி ஏதாவது தெரியுமா?//
    தேவர்மகன் பாடலை அரசு விழாக்களில் போடுகின்றனர் என்றால் சட்டப்படி அதை நிச்சயம் எதிர்கொள்ளலாமே?!? அரசு சார்பில்லா விழாக்களில் போட்டால் எதுவும் செய்யமுடியாதுதான். ஆனால், இந்த பாட்டால் என்ன பெருமை வந்துவிடப்போகிறது?!? எதிர் இனம், இதையெல்லாம் கண்டுகொள்ளக்கூட தேவையில்லையே. அவர்கள் செய்வதுபோலவெ இவர்கள் செய்ய நினைத்தால் யாரென்ன செய்ய முடியும். ஒரு இனத்தை பெருமைப்படுத்த, பல நல்லவழிகள் இருக்கும்போது, எதிர்ினம் செய்வதையே இவர்களும் செய்யவேண்டும் என போட்டி போட்டால் எப்படி?!? அப்படிப்பார்த்தால், முகுந்தா முகுந்தா பாடல் ஒவ்வொரு கிருஷ்ண ஜெயதிக்கும் ஒலிக்கிறது, உடனே கமல் கண்ணன் பக்தர் என்பீர்களா?!? ஒரு குறிப்பிட்ட படத்தில் குறிப்பிட்ட சிச்சுவேஷனுக்காக மட்டுமே வைத்த பாடலை, ஒரு இனம் தன்னை என்டோர்ஸ் செய்ய பயன்படுத்திக்கொண்டால் அது யார் தவறு?!? பாடலைப்போட்டு பெருமைப்பட்டுக்கொள்ளும் கூட்டம், இன்னும் கட்டுமிராண்டியாகத்தானே இருக்கிறது. அந்த காட்டுமிராண்டித்தனமான ஆதிக்கத்தை கூட பெருமை என நினைத்தால், தவறு அந்த இனத்தின்மேல்/சமூகத்தின்மேல் தானே தவிற அதைவைத்து படமெடுத்துச்சொன்ன கலைஞன் மேல் இல்லை.

    இத்தனையையும் மீறி, எனக்கு தேவர்மகன் ஒரு நல்ல படம் என்ற அனுபவத்தையே தருகிறதே தவிற எந்த இனத்துக்குமான என்டோர்ஸ்மென்ட்டாக அதை பார்க்கவில்லை. படமும், தமிழக மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது பெருவெற்றி அடைந்ததே தவிற ஒரு குறிப்பிட்ட இனத்தால் மட்டும் வெற்றி வரவில்லை. இந்தப்படம் வெற்றிபெற்றதும் படத்தின் (நடுநிலையான) உள்ளடக்கத்திற்காகத்தானே தவிற, எந்த சாதியையும் என்டோர்ஸ் செய்வதற்காக இதை பொதுமக்கள் வெற்ரிபெறவைக்கவில்லை. எனக்கு நினைவுக்கு வருவது, இந்தப்படம் பெருவெற்றி பெற்றதும், கூட வந்த பாண்டியன் படம் பப்படம் ஆனதும் தான்!

  21. punai_nai
    #21

    காதலித்த ஒரு பெண்ணை காதலனே கற்பழித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுதல் என்ற விஷயம்தான் கதையாக மிஞ்சும். அதை வைத்து மிக அற்புதமான படம் தமிழில் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டிருக்கிறது. அதைவிட மேலான ஒன்றை யோசிப்பது கடினமே. கமல் சார் 100 ஜென்மம் எடுத்தாலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் படம் அது.

    What is that movie ya

  22. Sethu
    #22

    “மருமகனைக் கொன்றதற்காக ஒருவருக்கு தூக்கு தண்டனை என்பது இன்றைய நடைமுறையில் இல்லாத ஒன்று.” மருமகனை கொன்றால் தூக்கு தண்டனை இல்லை என்ற நடைமுறை எனக்கு தெரிந்த வரையில் எங்குமே இருப்பதாக தெரியவில்லை. :(

  23. Sethu
    #23

    திரு சான்றோன் அவர்களே,
    INA-வில் பெருமளவு தமிழர்கள் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மிகுதியாக இணைந்து போரிட்டுள்ளனர். பெண்கள் பிரிவின் தலைவியாக தமிழ் பெண்ணே (கேப்டன் லட்சுமி – குடியரசு தலைவர் தேர்தலில் அப்துல் கலாம் அவர்களை எதிர்த்து போட்டியிட்டவர்) நியமிக்க பட்டிருந்தார். அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க விரும்புகிறேன் என நேதாஜியே கூறியதாக படித்திருக்கிறேன். மேலும் சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வசித்தார்கள், வசிக்கிறார்கள். உங்கள் கருத்தை கூற உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் வரலாற்றை தவறாக சொல்வதை தவிருங்கள்.

  24. சான்றோன்
    #24

    திரு.சேது அவர்களே….

    என்னுடைய கருத்தை முழுமையாக ஒரு முறை படியுங்கள்……ஐ.என்.ஏ வில் தமிழர்களே இல்லை என்று நான் கூறவில்லை…..ஆனால் அந்தப்படத்தில் வரும் வசனப்படி பார்த்தால் ஐ.என்.ஏ தேவர்களை கொண்டு உருவாக்கப்பட்டது போல் தொனிக்கும்…. நான் அதைத்தான் சுட்டிக்காட்டினேன்…..வெட்டருவாளையும் வேல் கம்பையும் தூக்கிக்கொண்டு வரிசையில் ஓடிப்போய் நிற்க ஐ.என்.ஏ என்ன உசிலம்பட்டியிலா துவக்கப்பட்டது?

  25. ஜென்னி
    #25

    அடப்பாவிகளா… இதுக்கு முன்னால கல்வி, கொலை, கொள்ளைன்னு எவ்வளவு அடர்த்தியான, விவாதிக்க வேண்டிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதை விட்டுட்டு இருபது வருஷத்துக்கு முன்னால வந்த ஒரு படத்தை வைத்து, பொழுது போகாமல் ஒருத்தர் எழுதறார்ன்னா, அதுக்குப் பின்னூட்டம் போட 25 பேரா? மகாதேவன் அவர்களே, உங்கள் கவனத்தை சமூக அக்கறையிலும் கொஞ்சம் செலுத்துங்கள்…

  26. Ganpat
    #26

    உலகத்தரம்:
    நாடு,மதம்,இனம்,மொழி,இந்த எல்லைகளைத்தாண்டி மனித எண்ணங்களை இணைத்து சிந்திக்க வைத்து ரசிக்க வைப்பது..
    இது எளிய பொழுதுபோக்கு சித்திரமாகவும் இருக்கலாம்…”காதலிக்க நேரமில்லை”
    அல்லது heavy subject ஆகவும் இருக்கலாம்..”காதல்”
    இருக்ககூடாதது..
    மிகைப்படுத்துதல்,ரசிகர்களின் எண்ணப்போக்கில் அத்து மீறி நுழைந்து விஷயங்களை திணிப்பது..
    உதாரணம்:ஓரிரு சிவாஜி கணேசன்,கமல்ஹாசன் படங்களை தவிர்த்த அனைத்து தமிழ் படங்கள்.

  27. Vijay SA
    #27

    //விருமாண்டி : கமல் கையில் சிக்கிய பூமாலை//
    இந்த தலைப்பில் தெரியும் ஆணவத்தைவிட மோசமானது என்ன இருக்க முடியும்? விருமாண்டி படத்தை எவ்வளவு தாக்க முடியுமோ தாக்கிவிட்டு, தலைப்பில் மட்டும் ஒரு பக்கம் என்னவோ விருமாண்டி ஒரு அழகான பூமாலை போலவும், கமலை ஒரு குரங்காகவும் விளிக்கும் இந்த போக்கு அராஜகம் & மட்டரகமானது. இந்த தலைப்பை அனுமதித்ததே, வம்பு சேர்க்கத்தான்! தமிழ்பேப்பர் அட்மினுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன். ஒரு பக்கம் ரஜினிக்கு காதை கிழிக்கும் ஜிங் ஜக் ஜால்ரா ஓசை. வெக்கங்கெட்ட ஜால்ரா போதாதென படுமொக்கையான “பஞ்ச்தந்த்ரா” நிகழ்சிகள் வேறு. மறுபக்கம் அப்படியே கமல்-வசைபாடுதல்.

    //அதைவிட மேலான ஒன்றை யோசிப்பது கடினமே. கமல் சார் 100 ஜென்மம் எடுத்தாலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் படம் அது.//
    சாருக்கு இது எத்தனையாவது ஜென்மம்?!? 2000? 3000? உங்க பேர் பாபாஜியா?!?

    //மற்றவர்கள் சாதி பற்றி எதுவும் பேசாமல் இருக்கும்போது கமல் தைரியமாக இவ்வளவாவது பேசுகிறாரே… சம்திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு இன்னொன்று தெரியுமா நத்திங் ஈஸ் பெட்டர் தேன் நான்சென்ஸ்.//
    எது நான்சென்ஸ்?!? குறிப்பிட்ட இனத்தின் பல அடையாளங்களையும் தெளிவாக சொல்லிவிட்டு, அதே இனத்தை காட்டுமிராண்டி என தைரியமாக சொல்வது நான்சென்ஸா?!? நத்திங் தான் பெட்டரா?!? அதாவது, சொன்னால் ஒழுங்காக சொல்லணும் இல்லை நத்திங்கே பெட்டரா?!? அப்படியென்றால் எல்லோரும் எதுவுமே சொல்லாமல் இருப்போம். எந்த வன்முறை வெறியாட்டம் நடந்தாலும் கருத்து சொல்லாமல் இருப்போம் சரியா?!? உளரவேண்டும் என முடிவெடுத்துவிட்டீர்கள், நடத்துங்கள்!

    //உண்மையைச் சொல்வதனால் நெருக்கடிகள் வரும் என்றால் அதை உரத்த குரலில் சொல்பவனே கலைஞன்.//
    ஒருபக்கம், கலைஞனானவன் சமூக அவலங்களை, தனக்கு நெருக்கடி வந்தாலும் நிஜத்தை சொல்லவேண்டும் என்பீர். இன்னொரு பக்கம் நத்திங்கே பெட்டர் என்பீர். அடா அடா! என்ன ஒரு முரண்! அதுமட்டுமா! கமல் பூடகமாக சொல்வதையும் ஏற்றுக்கொள்ளமாட்டீர். ஆனால், அவர் இன்னும் ஓபனாக சொல்லி, நெருக்கடியில் மாட்டிக்கொள்ள வேண்டும், அதான் உம்ம ஆசை இல்லையா!! ஹை! யோசிக்காமல் பேசி பிரச்சனையில் மாட்டிக்கொள்ள எங்காளு என்ன “அவரா”?!? சரி, அவ்வளவு தைரியம் இருந்தால், நீங்களே தமிழ்பேப்பரில் தேவர்-தலித் மோதல் பற்றி ஒளிவு மறைவின்றி விரிவாக எழுதுங்களேன் பார்க்கலாம்!

  28. Anon
    #28

    இது போல ஒரு கட்டுரை எழுதுவதுக்கும் ஒரு படத்தை உண்மையில் எடுத்து முடிப்பதுக்கும் உள்ள வேறுபாடு மலையளவு.

    http://www.youtube.com/watch?v=0oTf_i1eRds

  29. ஜெகன்
    #29

    பாவம் கமல். விருமாண்டி படம் வெளிவரும்போதே -பெயர் உட்பட-பல பிரச்னைகளை சந்தித்தார். இத்தனை வருடம் கழித்து இப்படி ஒரு பொஸ்ட் மார்டம் கட்டுரை. அய்யா கட்டுரையாளரே.. அது ஒரு தமிழ் படம், தமிழ் திரைப்பட சூழல், முதலீடு, அரசியல் தாக்கம், வசூலில் ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயம், தமிழ் ரசிகர்களின் மனோனிலை இவைகளை சற்றே மனதில் வைத்து குடலாப்பரேஷன் செய்திருக்கலாம்.
    ///விருமாண்டி : கமல் கையில் சிக்கிய பூமாலை//
    இந்த தலைப்பில் தெரியும் ஆணவத்தைவிட மோசமானது என்ன இருக்க முடியும்? விருமாண்டி படத்தை எவ்வளவு தாக்க முடியுமோ தாக்கிவிட்டு, தலைப்பில் மட்டும் ஒரு பக்கம் என்னவோ விருமாண்டி ஒரு அழகான பூமாலை போலவும், கமலை ஒரு குரங்காகவும் விளிக்கும் இந்த போக்கு அராஜகம் & மட்டரகமானது. //
    நானும் ஆதரிக்கிறேன்.

  30. Muhammad Ashik
    #30

    தமிழ் பேப்பர் – மகாதேவன் கையில் சிக்கிய பூமாலை

  31. maha
    #31

    விஜய் எஸ் ஏ எழுதியிருப்பது
    “ஹே ராமை ஒப்பிடும்போது பலவகைகளில் நேர்த்தியான படம்தான் இது.”
    ஹேராமை ஒப்பிட்டால் பரவாயில்லைதான் என போகிறபோக்கில் குறை சொல்வது சோப்ளாங்கித்தனமாக உள்ளது! ஒன்று தைரியமாக ஹேராம் எப்படி ஒரு தரமற்ற படைப்பு என சொல்லவேண்டும். இல்லை வாய்மூடி சும்மா இருக்கவேண்டும்! ம்! இப்படிப்பட்ட மட்டமான பதிவுகளைக்கூட அனுமதிக்கிறதா தமிழ்பேப்பர்?

    என் பதில்
    விருமாண்டிக்கு முன்பாக அதே தமிழ் பேப்பரில் வெளியாகியிருக்கும் ஹே ராம் விமர்சனத்தைப் பார்க்காமல் பேசியிருக்கிறீர்கள்.

    விஜய் எஸ் ஏ எழுதியிருப்பது
    “நேரடியாக தலித்-தேவர் மோதலைச்சொல்ல தைரியம் இல்லாத கலைஞன், மணலுக்குள் தலையை நுழைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழி” என (கமலைச்) சொல்லும் தகுதி, அந்த தலித்-தேவர் சாதிமோதலை படமாக்கிய இன்னொரு கலைஞனுக்கு மட்டுமே இருக்கிறது. மூலையில் உட்கார்ந்துகொண்டு முனகும் மகாதேவன்களுக்கு அந்தத் தகுதி எப்போதுமே இருந்ததில்லை.

    என் பதில்
    ஒரு தப்பைச் சுட்டிக்காட்ட அது தப்பு என்பதைப் புரிந்துகொள்ளும் மூளையும் வெளிப்படையாகச் சொல்லும் தைரியமும் இருந்தாலே போதும். நாமும் ஒன்றை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. விமர்சனத்தின் பால பாடம் இது.

    விஜய் எஸ் ஏ எழுதியிருப்பது

    கல்யாணத்திற்கு வேறு சாட்சிகள் உண்டா என (வக்கீல்) கேட்கும்போது, காந்திமதி சாட்சி சொல்ல எத்தனிப்பார், ஆனால் சட்டரீதியாக எந்த ஆதாரமும் இல்லாததால் அந்த வாதம் வலுவிழந்துவிடுகிறது.

    என் பதில்

    காந்திமதி சாட்சி சொல்லி, அதன் பிறகு சட்டரீதியான ஆதாரம் கேட்கப்பட்டு அதனால் கல்யாணம் நடக்கவில்லை என்பது உறுதியாகியிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், அதெல்லாம் நடக்கவே இல்லை. காந்திமதி சாட்சி சொல்லியிருந்தால் கமலின் தரப்பு வலுப்பெற்றிருக்கும். விசாரணை மேலும் விரிவாக நடத்தப்பட்டிருக்கும். ஆனால், அந்த இயல்பான வாய்ப்பை கமல் முட்டாள்தனமாக முடமாக்கிக் கொள்கிறார். இதைத்தான் திரைக்கதையின் பலவீனம் என்கிறேன்.

    விஜய் எஸ் ஏ எழுதியிருப்பது

    விருமாண்டிக்கு பகை கொத்தாளன். இருவரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயலுகிறார்கள். அதுபோலவே அந்த சிறைக்குள் இருக்கும் மற்ற கைதிகளிடையே அதுபோல பல பகைகள் இருக்கலாமல்லவா! சிறை என்ன காந்திகளின் கூடாரமா?!? சென்ட்ரல் ஜெயிலில், அதிதீவிரமான அக்கியூஸ்டுகள் தானே இருப்பார்கள்?! அவர்களுக்கிடையே பகைக்கா குறைச்சல்! ஒருத்தன் தொடங்கியதுமே பலரும் கலவரத்தில் குதிக்கிறார்கள். அதுபோக, நல்ல கைதிகளுக்கும், ஜெயிலுக்குள் இருந்துகொண்டே அழிச்சாட்டியம் செய்யும் மற்ற கைதிகள் மீது கோபம் இருக்காதா. இதுபோன்ற சமயத்தில் பழிதீர்க்க முயலமாட்டார்களா?!?.

    என் பதில்

    படத்தில் சிறைக்கைதிகளுக்குள் சண்டை நடப்பதாகக் காட்டப்படவில்லை. அவர்கள் ஏதோ சின்னபுள்ளைகள் ரயில் விளையாட்டு விளையாடுவதுபோல் ஜெயில் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதோடு அவர்கள் போடும் சண்டையானது ஆங்கிலப் படங்களைப் பார்த்து கமல் தெரிந்துகொண்டவை. தமிழ் நாட்டு ஜெயிலில் கைதிகள் போடும் சண்டையாக அது இல்லை.

    விஜய் எஸ் ஏ எழுதியிருப்பது

    “விருமாண்டி கொன்றிருந்தால் கொத்தாளத் தேவனின் வீட்டில் மாட்டிவிட்டிருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஒன்றைச் சொன்னாலே விருமாண்டி கொலைப்பழியில் இருந்து தப்பித்துவிட முடியும்.”
    கொத்தாளனின் வீட்டில் தூக்குமாட்டி இறந்ததாக விருமாண்டிக்கே தெரியாதே! அப்புறம் எப்படி சொல்வார்? தவிர, FIR போட்டது பேய்க்காமன் தானே?!?

    என் பதில்

    அன்னலட்சுமியின் உடல் எங்கிருந்து கிடைத்தது என்பது ஊரில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். விருமாண்டி கொன்று தூக்கில் தொங்கவிட்டிருந்தானென்றால் ஆற்றோரமாகவோ தோப்பிலோ எங்காவதுதான் அப்படிச் செய்திருக்க முடியும். அன்னலட்சுமியின் உடல் எங்கு கண்டெடுக்கப்பட்டது என்று விருமாண்டியின் வக்கீல் ஊரில் உள்ளவர்களை லேசாகக் கேட்டிருந்தாலே உண்மை தெரிந்திருக்கும். அதை அவர் செய்யாதது திரைக்கதையின் பலவீனம்தான்.

    விஜய் எஸ் ஏ எழுதியிருப்பது

    “ஒரு காட்சியில் நல்லம்ம நாயக்கர் பஞ்சாயத்து கூட்டியதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த காட்சியில் அதே பஞ்சாயத்தை விருமாண்டி பிராது கொடுத்து கூட்டியதாகச் சொல்லப்படுகிறது.”
    படம் பார்த்த லட்சணம் மீண்டும் மீண்டும் சந்தி சிரிக்கிறது! விருமாண்டி ப்ராது மட்டும் தான் கொடுத்தான். அதை எதிர்த்து பஞ்சாயத்து கூட்டியது நல்லம்ம நாயக்கர் மட்டுமே!

    என் பதில்
    பிராது யார் கொடுக்கிறார்களோ அவர்களால்தான் வழக்கு நடத்தப்படுவதாகச் சொல்லவேண்டும். நீதிபதி சொல்லும் தேதியில்தான் வழக்கு விசாரணை நடக்கும் என்றாலும் வழக்கை அவர் போட்டதாகச் சொல்லமாட்டார்கள். உண்மையில் விருமாண்டி கொடுத்த பிராதை விசாரிக்கத்தான் பஞ்சாயத்து கூடியது. அது விருமாண்டிக்காக நடத்தப்பட்ட வழ்க்குதான் அது. எனவே விருமாண்டி கூட்டிய பஞ்சாயத்தாகத்தான் அதைச் சொல்லவேண்டும்.

    விஜய் எஸ் ஏ எழுதியிருப்பது

    “பஞ்சாயத்தில் அன்ன லட்சுமியின் சித்தியைப் பற்றி அவதுறாகப் பேசியதற்கு கொண்ட ராசு நாயக்கனை விருமாண்டி அடிக்கப்போனார் என்பது உண்மைதான். ஆனால், இரவில் அவனிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவனை மன்னிக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார். தவறு செய்தது கொண்ட ராசு நாயக்கன்தானே.”
    எது அவதூறு? “எஞ்சித்தப்பன பத்தி கொஞ்சம் நெசம் பேசிப்புட்டான்” என அன்னலட்சுமியே சொல்லும்போது உமக்கேன் கவலை? விருமாண்டி ஓவராக பேசியதால் கொண்டராசுவும் இப்படி சொல்கிறான். இதில் என்ன அவதூறு?!? கொண்டராசுவை பாய்ந்து அடித்தது விருமாண்டிதானே?! அதற்குத்தான் மன்னிப்பு கேட்கப்போகிறான்.

    என் பதில்

    காசு கிடைத்தால் கொத்தாளன் பொண்டாட்டியைக் கூடக் கூட்டிக் கொடுப்பானென்று கொண்டராசு சொல்கிறான். அது கொத்தாளனை மட்டுமல்ல அவருடைய மனைவியையும் இழிவுபடுத்துகிறது. அதுதான் அவதூறு. அதோடு அன்னலட்சுமிக்குத் தன் சித்தப்பனைப் பற்றிக் கோபம் இருக்கக்கூடும். விருமாண்டிக்குக் கிடையாது. கொத்தாளனைப் பெரிய மனிதராகத்தான் மதிக்கிறான். எனவேதான் கொண்டராசுவை அடிக்கவே செய்திருந்தான். ஆனால், மன்னிப்புக் கேட்கும் அளவுக்கான செயல் அது அல்ல. நல்லம்ம நாயக்கன் மேல் புகார் கொடுத்ததுதான் விருமாண்டி செய்த தவறாக அன்னலட்சுமி சொல்கிறாள். மன்னிப்பு கேட்பதானால் நல்லம்ம நாயக்கனைத்தான் பார்க்கப் போயிருக்க வேண்டும். இதைத்தான் கட்டுரையில் முந்தின பத்தியில் மிகத் தெளிவாகச் சொல்லிக் காட்டியிருந்தேன்.

    அந்த பத்தி
    அன்று இரவு நல்லம்ம நாயக்கர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறச் சொல்கிறாள் அன்னலட்சுமி. மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்று பஞ்ச் டயலாக் சொல்கிறாள். உண்மையில் அதை ஏற்றுக் கொள்வதானால், ஒருவர் என்ன செய்ய வேண்டும்? நல்லம்ம நாயக்கர் மீதான புகாரை வாபஸ் பெறவேண்டும். அல்லது அவரிடம் போய் சமாதானம் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு விருமாண்டி நேராக கொண்ட ராசு நாயக்கரைப் போய்ப் பார்த்து மன்னிப்பு கேட்கிறான். பிரச்னை நல்லம்ம நாயக்கருக்கும் விருமாண்டிக்கும்தான். கொண்ட ராசு நாயக்கருடன் அல்ல.

    விஜய் எஸ் ஏ எழுதியிருப்பது

    “தேவர்கள்தானே கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யப் போகிறவர்கள். எனவே, கலவரத்தில் நாயக்கர் பிரிவினர் மட்டுமே சாகிறார்கள். வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது.”
    தூக்குதண்டனை பெறுவது தேவர்கள் மட்டுமே! விருமாண்டி உள்பட. தேவர்கள் சைடிலும் கொலை விழுகிறது. தூக்கு போட்டுக்கொள்கிறார்கள் (பேய்க்கமன், கொத்தாளன், அன்னலட்சுமி) ஒரு கட்டத்தில் விருமாண்டித்தேவரே நாயக்கர்களின் ஆதரவைத்தான் ஏற்கிறார். அவருக்கு ஆதரவாக வாதிடும் வக்கீல் (பிரமிட்) ஒரு ஐயர். அவருடன் இருந்து செத்துப்போகும் அந்த வீடியோ கேமராமேன் என்ன சாதி என தெரியவில்லை. ஓஹோ, இதிலும் சம உரிமை, இட ஒதுக்கீடு எல்லாம் எதிர்பார்க்கிறார்களா?!? வெளங்கிரும்!
    என் பதில்
    கொத்தாளன் சாவது ஜெயில் கலவரத்தில் அன்னலட்சுமி கொல்லப்படுவது தேவர்களால்தான். இதையெல்லாம் நான் சொல்லவே இல்லை. நாயக்கருக்கும் தேவருக்கும் நடந்த சண்டையில் தேவர்கள் யாரும் வெட்டப்படுவதாகக் காட்டவில்லை. இதைத்தான் தவறு என்று சொல்லியிருந்தேன்.

    விஜய் எஸ் ஏ எழுதியிருப்பது
    “இத்தனைக்கும் 24 பேர் கொலை கேஸானது ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு.”
    கீழ் கோர்ட், மேல் கோர்ட், மேல் முறையீடு இதெல்லாம் என்னன்னே தெரியாதா??

    என் பதில்
    லூசுத்தனம் என்பது இதுதான். முதலில் விருமாண்டி மீது வழக்கு தொடுத்தது நல்லம்ம நாயக்கர். அவரோ கொல்லப்பட்டுவிட்டார். அந்த வழக்கை மேல் கோர்டுக்கு யார் கொண்டு சென்றார்கள். கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு, மேல் முறையீடு எல்லாம் உண்டு. ஆனால், இங்கு யார் அந்த வழக்கை மேலே கொண்டு சென்றார்கள். நல்லம்ம நாயக்கரின் ஆட்கள் எல்லாருமே விருமாண்டியின் நண்பர்களாகவும் ஆகிவிட்டார்கள்.

    விஜய் எஸ்.ஏ… நீங்கள் சொன்னதில் ஒரே ஒரு விஷயம்தான் ஓரளவுக்கு சரி. அதாவது விருமாண்டியும் அன்னலட்சுமியும் மொபெட்டில் (டி.வி.எஸ்.-50) சென்னைக்கு போகவில்லை. ஆரல்வாய்மொழியாக இருக்கலாமென்பது அந்தக் காட்சியில் காட்டப்படும் ஒரு போஸ்டரில் இருந்து தெரிகிறது. அந்த ஊர்கூட தேனியில் இருந்து தொலைவில் இருக்கும் ஊர்தான். மொபெட்டிலேயே போக முடிந்த ஊர் அல்ல. அதோடு ஊரைவிட்டு ஓடும் பதற்றம் நிறைந்த இரவில் நீச்சல் குளத்தில் ஆடிப்பாடுவது பொருத்தமாக இல்லை என்பதையும் சொல்லியிருந்தேன். அதை வசதியாக மறந்துவிட்டீர்கள். சென்னை என்று சொன்னதைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
    பொதுவாக எனது கட்டுரைப் படித்துப் புரிந்துகொள்ள முடியாத ஒருவருக்கு பின்னூட்டத்தில் எதையும் சொல்லிப் புரிய வைத்துவிட முடியாது என்பதால்தான் பேசாமல் இருந்தேன். விருமாண்டிக்கு நீங்கள் எழுதியவற்றுக்கு நான் பதில் சொல்லவில்லை என்று பல இடங்களில் சொல்லித் திரிகிறீர்கள் என்பதால் இந்தப் பதில்.

  32. Vijay SA
    #32

    உங்கள் கட்டுரையை படித்தும் எனக்கு புரியவில்லை என்கிரீர். என் பின்னூட்டம் கூட உங்களுக்கு புரியவில்லை என்பேன். ஏன், கமல் படமே உங்களுக்கு புரியவில்லை என்றும் சொல்வேன். ஏன், எப்படி என்று கேட்டால் என் பதிலும் அதேதான், படத்தை பார்த்து, பின்னூட்டம் படித்து புரிந்துகொள்ள முடியாதவருக்கு, வேறு எப்படியும் புரியவைத்துவிட முடியாது!

    சரி, இந்த பின்னூட்டத்திற்கு பதில் போட இத்தனை நாள் தேவைப்பட்டிருக்கிறது, அதுவும் நான் போகிர இடமெல்லாம் சொல்லித்திரிகிறேனாமாம்! கடைசி இரன்டு கமல்-பட விமர்சனங்களிலும் நான் இந்த “விருமான்டிக்கு பதில் சொல்லலை” வாதத்தை வைக்கவேயில்லை! மீண்டும் படித்துப்பாரும். ஆனால் சொன்னது என்னவென்றால் பொதுவாக பின்னூட்டங்களுக்கு நீங்கள் பதில் போடுவதே இல்லை என்ரு தான்! உன்மை தானே! இத்தனைமுறை சொல்லி இப்போதுதான் பதில் வருகிறது, அதிலுள்ள சரி/தவறு இனிதான் பார்க்கவேண்டும்

    அதுவும் கருத்துக்கு தான் பதில் போட்டிருக்கிரீரே தவிர கமல் மீதான அசிங்கமான தனிமனித தாக்குதலை ஏன் செய்தீர்கள் என்கிற கேள்விக்கு பதில் இல்லை. தெரிந்தே தவறு செய்யும் ஒருவரிடம், அதை சுட்டிக்காட்டியும் அந்த தவரை ஒப்புக்கொள்ளவில்லை/திருத்திக்கொள்லவில்லை என்றால் அது என்ன பண்பாடு புரியவில்லை

  33. Vijay SA
    #33

    //ஒரு தப்பைச் சுட்டிக்காட்ட அது தப்பு என்பதைப் புரிந்துகொள்ளும் மூளையும் வெளிப்படையாகச் சொல்லும் தைரியமும் இருந்தாலே போதும். நாமும் ஒன்றை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. விமர்சனத்தின் பால பாடம் இது.//

    மகாசின் வாதம் – “நேரடியாக தலித்-தேவர் மோதலைச்சொல்ல தைரியம் இல்லாத கலைஞன், மணலுக்குள் தலையை நுழைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழி”

    விருமாண்டி படம் வன்முறையை சொல்ல எடுக்கப்பட்ட படம். தேவர் மீசை வைத்துவிட்டாலே இவர் ஆசைப்படும் சம்ஜெக்டை தான் எடுக்கவேன்டும் என்று என்ன கட்டாயம்? படத்டிற்கு சன்டியர் என பெயர் வைத்தார், வெளிப்படையாக தேவர் மீசை வைத்தார். ஜாதிப்பேர் சொல்லாமல் டபாய்த்திருக்கலாம் ஆனால் தெளிவாக விருமான்டித்தேவர் என கோர்ட்டில் சொல்வார்கள். தேவர்களில் பெரும்பாலானவர்கள் கெட்டவர்கள், விருமான்டி நல்லவனாயிருந்தாலும் முரட்டு மூடன், அன்னலட்சுமி மட்டுமே தெளிவான ஆள், ஆனால் இவர்களுடன் சன்டையிடும் நாயக்கர்களோ அத்தனைபேரும் நல்லவர்களாக இருப்பார்கள். எடுத்துக்கொன்ட சப்ஜெக்ட் கிராமிய வன்முரை ஆனால் இந்தளவு தேவர்களை மட்டமாக காட்டியதே ஒரு தைரியம் தான்! தேவர் மகனில் தேவர்களை காட்டுமிரான்டிகள் என்று சொல்லியவர் இதில் சண்டியர்கள் என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் தெரிந்தும், மகாசு, தேவையில்லாமல், குறை சொல்கிறார்,

    Going by Mahadevan’s words itself “//தேவர்களின் வன்முறையை சுட்டிக்காட்ட அது தப்பு என்பதைப் புரிந்துகொள்ளும் மூளையும் முடிந்தளவு வெளிப்படையாகச் சொல்லும் தைரியமும் இருந்தாலே போதும். தேவர்-தலித் மோதல் வைத்துதான் அதை காட்டவேண்டும் என்ற அவசியமுமில்லை. அப்படி வைக்காததால் கமல் கோழையுமில்லை”

    //என் பதில்

    காந்திமதி சாட்சி சொல்லி, அதன் பிறகு சட்டரீதியான ஆதாரம் கேட்கப்பட்டு அதனால் கல்யாணம் நடக்கவில்லை என்பது உறுதியாகியிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், அதெல்லாம் நடக்கவே இல்லை. காந்திமதி சாட்சி சொல்லியிருந்தால் கமலின் தரப்பு வலுப்பெற்றிருக்கும். விசாரணை மேலும் விரிவாக நடத்தப்பட்டிருக்கும். ஆனால், அந்த இயல்பான வாய்ப்பை கமல் முட்டாள்தனமாக முடமாக்கிக் கொள்கிறார். இதைத்தான் திரைக்கதையின் பலவீனம் என்கிறேன்.//
    இந்த இடம் கொஞம் வீக் தான். ஆனால் கமல் இங்கு, முகவும் அயர்ந்துபோய் இருப்பதாகவும், செய்வதரியாமல் திகைப்பவனாகவும், கோர்ட்டிலேயே தூங்குவதுபோலவும் காட்டி இருப்பார்கள். ஒன்று அன்னலட்சுமி போன துக்கம். கோபம் இருக்கிறது ஆனால் இனி திரும்பிவரமாட்டாள் என்ற துக்கம் அவனை செயலிழக்க வைத்திருக்கலாம். காந்திமதி எல்லாம் தேவையேயில்லை, அந்த பூசாரியின் மோதிரத்தை வைத்தே பேசி இருக்கலாம். இங்கு விருமாண்டி அமைதியாக அழுவதே கதாசிரியர் சொல்ல வந்தது. இதெல்லாம் படம் பார்க்கும்போதே புரிந்துவிடும். இதையெல்லாம் ஒரு குறை போல் இவ்வளவுதூரம் இழுத்துவரவேன்டிய அவ்சியமே இல்லை

    //என் பதில்

    படத்தில் சிறைக்கைதிகளுக்குள் சண்டை நடப்பதாகக் காட்டப்படவில்லை. அவர்கள் ஏதோ சின்னபுள்ளைகள் ரயில் விளையாட்டு விளையாடுவதுபோல் ஜெயில் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதோடு அவர்கள் போடும் சண்டையானது ஆங்கிலப் படங்களைப் பார்த்து கமல் தெரிந்துகொண்டவை. தமிழ் நாட்டு ஜெயிலில் கைதிகள் போடும் சண்டையாக அது இல்லை. //
    ஏற்கனவே சொன்ன பதிலே போதுமானது. இருந்தாலும், இன்னும் சில பாய்ன்ட்கள் சொல்கிறேன். படத்தின் ஆரம்பத்தில் அந்த, ரோகிணிக்கு துப்பு கொடுத்த கைதி மர்மமான முறையில் இறந்தபோதே கைதிகள் கொதிப்புடன் இருப்பதாக நாசர் சொல்வார். அதுபோக போதை மருந்து கடத்தல் இத்யாதி போன்றவை நடக்கின்றன.தை செய்யும் கேடிக்கைதிகள் மற்ற சில கைதிகளையும் ஒத்துழைக்க வற்புருத்துவதாக காட்டுகிறார்கள். எனவே பல கைதிகளிடையே பல்வேறு விஷயங்களுக்காக வன்மமும் பகையும் காத்துக்கிடகிரது. விருமான்டி தொடங்கினவுடன் மற்றவர்களும் வன்முறையில் இறங்குகிறார்கள். சண்டை முறை எப்படி இருந்தால் என்ன? எல்லா படங்களிலுமே ஆங்கில பானி சண்டை தான் காட்டுகிறார்கள்.

    //என் பதில்

    அன்னலட்சுமியின் உடல் எங்கிருந்து கிடைத்தது என்பது ஊரில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். விருமாண்டி கொன்று தூக்கில் தொங்கவிட்டிருந்தானென்றால் ஆற்றோரமாகவோ தோப்பிலோ எங்காவதுதான் அப்படிச் செய்திருக்க முடியும். அன்னலட்சுமியின் உடல் எங்கு கண்டெடுக்கப்பட்டது என்று விருமாண்டியின் வக்கீல் ஊரில் உள்ளவர்களை லேசாகக் கேட்டிருந்தாலே உண்மை தெரிந்திருக்கும். அதை அவர் செய்யாதது திரைக்கதையின் பலவீனம்தான்.//
    “இன்னும்கொஞ்சம் சொத்து கிடைக்குதுன்னா சொந்த பொண்டாட்டியவே விட்டுகொடுப்பான்” என கொத்தாளனை கொண்டராசு சொல்லும்போது அது அனைவருக்குமே தப்பாகத்தான் தெரிகிறது ஆனால் அன்னலட்சுமிக்கோ அதில் உள்ள நிதர்சனம் தெரிகிறது. அதே போலத்தான், அனைவருக்கும், அன்னலட்சுமியை யார் கொன்றது என்கிர உன்மை தெரிந்தே இருக்கிறது, வக்கீல் பிரமிட், இதையெல்லாம் எடுத்துப்போட்டு நோண்டலாம் ஆனால் சம்மந்தப்பட்ட,பாதிக்கப்பட்ட,குற்றவாளி கூன்டிலும் நிர்கும் விருமாண்டியே இதில் ஆர்வம் காட்டவில்லை, காட்ட முடியவில்லை. புத்திக்கு தெரிகிரது என்றாலும் மனம் சொன்னதை தான் கேட்கிறது. ஒரு பக்கம் அன்னலட்சும் போன சோகம், அதனால் கொத்தாளனின் ஆட்கள் பொய்சாட்சி ஜோடிக்கும்போது அதைபார்த்து விருமாண்டி இன்னும் நொந்துதான் போகிறான். கிணற்றுக்குள் இருந்துகொண்டு அன்னலட்சுமியுடன் பேசும்போது கூட, “இன்னும் கொஞ்சநாளில் கொத்தாளன் கிட்ட சொல்லிட்டு” என்கிறான் அந்தளவு அப்பாவியாக இருக்கிறான். அவன் கொஞ்சம்கூட எதிர்பாராத வகையில் கொத்தாளன் அன்னலட்சுமியை கொன்று பழிபோட்டதும் அவன் சித்தம் கலங்கிப்போகிறான். கோர்ட்டில் எதுவும் பேசமுடியவில்லை. ஆனால் தூக்குதண்டனை விதிக்கும்போது மட்டும் கட்டுக்கடங்காத கோபம் வந்து, அதை வெளிப்படுத்தவும் செய்கிறான். அது அவனுக்கெதிராகவே முடிகிறது.

    //என் பதில்

    பிராது யார் கொடுக்கிறார்களோ அவர்களால்தான் வழக்கு நடத்தப்படுவதாகச் சொல்லவேண்டும். நீதிபதி சொல்லும் தேதியில்தான் வழக்கு விசாரணை நடக்கும் என்றாலும் வழக்கை அவர் போட்டதாகச் சொல்லமாட்டார்கள். உண்மையில் விருமாண்டி கொடுத்த பிராதை விசாரிக்கத்தான் பஞ்சாயத்து கூடியது. அது விருமாண்டிக்காக நடத்தப்பட்ட வழ்க்குதான் அது. எனவே விருமாண்டி கூட்டிய பஞ்சாயத்தாகத்தான் அதைச் சொல்லவேண்டும்.//
    பிராதுகொடுத்தவநும் பஞ்சாயத்து கூட்ட்லாம் தான் ஆனால் இங்கு பஞ்சாயத்து கூட்டுவது நல்லமன் தான். அந்த தகவலையே, கொத்தாளன் தான் விருமாண்டிக்கு சொல்கிறான். அப்போதுதான் அவனுக்கே அது தெரியவருகிரது. “அந்த எழவெடுத்த பஞ்சாயத்துக்கு போய்த்தான் ஆகனுமா” என்று அன்னலட்சுமி கூட கேட்பாள்.
    விருமான்டி பிராது மட்டுமே கொடுப்பான்., பிரச்சனை நல்லமன் மீதோ அல்லது வேறு யார் மீதோ இருந்தாலும், பஞ்சாயத்து தலைவர் நல்லமன் தான். அவர் சொன்ன தேதியில் இடத்தில் தான் பஞ்சாயத்து நடக்கும்.

    //என் பதில்

    காசு கிடைத்தால் கொத்தாளன் பொண்டாட்டியைக் கூடக் கூட்டிக் கொடுப்பானென்று கொண்டராசு சொல்கிறான். அது கொத்தாளனை மட்டுமல்ல அவருடைய மனைவியையும் இழிவுபடுத்துகிறது. அதுதான் அவதூறு. அதோடு அன்னலட்சுமிக்குத் தன் சித்தப்பனைப் பற்றிக் கோபம் இருக்கக்கூடும். விருமாண்டிக்குக் கிடையாது. கொத்தாளனைப் பெரிய மனிதராகத்தான் மதிக்கிறான். எனவேதான் கொண்டராசுவை அடிக்கவே செய்திருந்தான். ஆனால், மன்னிப்புக் கேட்கும் அளவுக்கான செயல் அது அல்ல. நல்லம்ம நாயக்கன் மேல் புகார் கொடுத்ததுதான் விருமாண்டி செய்த தவறாக அன்னலட்சுமி சொல்கிறாள். மன்னிப்பு கேட்பதானால் நல்லம்ம நாயக்கனைத்தான் பார்க்கப் போயிருக்க வேண்டும். இதைத்தான் கட்டுரையில் முந்தின பத்தியில் மிகத் தெளிவாகச் சொல்லிக் காட்டியிருந்தேன்.

    அந்த பத்தி
    அன்று இரவு நல்லம்ம நாயக்கர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறச் சொல்கிறாள் அன்னலட்சுமி. மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்று பஞ்ச் டயலாக் சொல்கிறாள். உண்மையில் அதை ஏற்றுக் கொள்வதானால், ஒருவர் என்ன செய்ய வேண்டும்? நல்லம்ம நாயக்கர் மீதான புகாரை வாபஸ் பெறவேண்டும். அல்லது அவரிடம் போய் சமாதானம் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு விருமாண்டி நேராக கொண்ட ராசு நாயக்கரைப் போய்ப் பார்த்து மன்னிப்பு கேட்கிறான். பிரச்னை நல்லம்ம நாயக்கருக்கும் விருமாண்டிக்கும்தான். கொண்ட ராசு நாயக்கருடன் அல்ல.//
    இரண்டு தவறுகள். விருமாண்டி பிராது கொடுத்தது(வெட்டுனதை நீயும் பாக்கல நானும் பாக்கல) இரன்டாவது, கொண்ட்ராசுவை அடித்தது. அன்னலட்சுமி இப்படித்தான் நினைக்கிறாள். “ஆமாம் கொண்டராசுவ ஏன் அடிச்ச” என தெளிவாக கேட்பாள், கவனித்தீரா? இதை விருமான்டியின் மண்டையில் கராரக ஏற்ற செய்கிறாள். யார் வெட்டியது என அப்போதும் விருமான்டிக்கு முடிவெடுக்க முடியவில்லை. ஏன், கொத்தாளன் நல்லவன் தானே என்றுதான் அப்போதும் நினைக்கிறான். ஆனால் அன்னலட்சுமி இனி தனக்கு தாரம் மட்டுமல்ல தாயாகவும் இருப்பதாக சொல்வதை கேட்டு இறங்கி வருகிறான். சாராயத்தை குடிக்காமல் கொட்டிவிடுகிறான். (அனேகமாக அன்னலட்சுமியை இம்ப்ரெஸ் செய்வதாக ஸ்மார்ட்டாக செய்வதாக எண்ணி) கொண்டராசுவிடம் மன்னிப்பு கேட்க போகிரான். அடித்தது தப்பு, அதற்கு மன்னிப்பு, அவ்வள்வுதான், அவன் அப்போதே கொத்தாளன் மீது நம்பிக்கை இழந்துவிட்டான் என்றெல்லாம் இல்லை. அதுவேறு இது வேறு.

    //என் பதில்
    கொத்தாளன் சாவது ஜெயில் கலவரத்தில் அன்னலட்சுமி கொல்லப்படுவது தேவர்களால்தான். இதையெல்லாம் நான் சொல்லவே இல்லை. நாயக்கருக்கும் தேவருக்கும் நடந்த சண்டையில் தேவர்கள் யாரும் வெட்டப்படுவதாகக் காட்டவில்லை. இதைத்தான் தவறு என்று சொல்லியிருந்தேன்.//
    கொலை இரண்டு பக்கமும் விழுவது என்பது மொத்தப்படத்தில்! அந்த கலவரத்தை மட்டும் ஏன் தனியாக கணக்கில் எடுக்கவேண்டும்? அந்த கலவரத்தில் இருபக்கமுமே கொலை விழவேண்டும் என்பது என்ன கட்டாயமா?!? நாயக்கர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள், சண்டை போட வந்தது தேவர்கள், அவர்களிடம் தான் அதிக ஆள்பலம், பிறகெப்படி சாவார்கள்? படமுழுக்கவே நாயக்கர்கள் நீதியை மதிப்பதாகவும் அமைதிவழி செல்பவர்களாகவும் வருகிறார்கள். தேவர்கள் பேய்க்காமன் மற்றும் அந்த வக்கீலுடன் சேர்ந்துகொன்டு அனைத்து ஃப்ராடு வேலைகளும் புரிகிரார்கள். ஆக தேவர்களை வன்முறை வெறியாளர்களாக காட்டியாகி விட்டது, இன்னும் என்னதான் எதிர்பார்க்கிரீர்?!

    //என் பதில்

    லூசுத்தனம் என்பது இதுதான். முதலில் விருமாண்டி மீது வழக்கு தொடுத்தது நல்லம்ம நாயக்கர். அவரோ கொல்லப்பட்டுவிட்டார். அந்த வழக்கை மேல் கோர்டுக்கு யார் கொண்டு சென்றார்கள். கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு, மேல் முறையீடு எல்லாம் உண்டு. ஆனால், இங்கு யார் அந்த வழக்கை மேலே கொண்டு சென்றார்கள். நல்லம்ம நாயக்கரின் ஆட்கள் எல்லாருமே விருமாண்டியின் நண்பர்களாகவும் ஆகிவிட்டார்கள்.//
    “கொண்டராசு தோட்டத்தில் நடந்த கொலைகளில் கொத்தாளனின் பங்கு இருந்தாலும் அவனை தூன்டிவிட்டது விருமான்டி தான்” இது கொத்தாளனின் வக்கீல் சொல்லும் ஸ்டேட்மென்ட். படத்தை ஒழுங்காக பார்க்கணும் சார்! கேஸ் போட்டது நல்லமன் குரூப், போலி சாட்சி வைத்து இருவருமே எஸ்பேக் ஆகிவிட்டனர். ஆனால் கொத்தாளனோ நல்லம நாயக்கரையும் கொன்றுவிட்டு அன்னலட்சுமியும் சாக காரணமாகிவிட்டான். அன்னலட்சுமி சாவை கொலைக்கேசாக மாற்றி விருமாமன்டி மேல் போட்டாயிற்று. ஆனால் நல்லமன் கொலை பழியில் தப்பிக்க முடியாமல் ஆயுள் தண்டனை வாங்கும் நிலை! எனவே, ஒருபக்கம் அப்ரூவராக நல்லவன்போல் மாரி, இன்னொருபக்கம், 24பேர் கொலையை விருமாண்டி மேல் போட்டாயிற்று. அப்பத்தானே அவனுக்கு தூக்கு கிடைக்கும்!

    அந்த ஒட்டுமொத்த கோர்ட் சீனுமே எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது கவனித்தீரா?!? வழக்கு கூட பேக்கிரவுன்டில் நடந்துகொண்டிருக்க, கேமராவோ விருமான்டியை, அவனின் நிலை-புரியாமை அறியாமை ஆற்றாமையையே அழகாக தெளிவாக காட்டுகிறது. வழக்கு விபரங்கள், ஒலி வசனமாக ஒலித்துக்கொன்டிருக்க, விருமான்டியின் இயலாமையையே இங்கு கதாசிரியர் முன்வைக்கிறார்.

    //ஆரல்வாய்மொழியாக இருக்கலாமென்பது அந்தக் காட்சியில் காட்டப்படும் ஒரு போஸ்டரில் இருந்து தெரிகிறது. அந்த ஊர்கூட தேனியில் இருந்து தொலைவில் இருக்கும் ஊர்தான். மொபெட்டிலேயே போக முடிந்த ஊர் அல்ல.//
    போஸ்டரை வைத்து ஊரை முடிவு செய்வது அவ்வளவு சரியாகப்படவில்லை. அது அருகிலுள்ள ஒரு ஊர் அவ்வளவே.

    //அதோடு ஊரைவிட்டு ஓடும் பதற்றம் நிறைந்த இரவில் நீச்சல் குளத்தில் ஆடிப்பாடுவது பொருத்தமாக இல்லை என்பதையும் சொல்லியிருந்தேன். அதை வசதியாக மறந்துவிட்டீர்கள். சென்னை என்று சொன்னதைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.//
    அவ்வளவுதானா?!? ஊருக்குப்போகும் வாழியில் வேறென்னவெல்லாம் செய்தால் ஒத்துக்கொள்வீர்கள்?! அவர்கள் புதிதாக மணமானதாக காட்டுகிறார்கள். இதிலென்ன பெரிய தவறு?

  34. Vijay SA
    #34

    இதேபோல் இன்னும் அன்பே சிவம், ஹேராம் இருக்கிறது. ஆனால் என்னால் பத்தி பத்தியாக டைப் அடிக்க முடியல டா சாமீ! அதே சமயம் இதை விட்டுவிடவும் எனக்கு இஷ்டமில்லை. இந்த விவாதத்தை தமிழ்பேப்பருக்கு வெளியே எடுத்து செல்லவே விரும்புகிறேன்.

    நீங்கள் ஏற்கனவே ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்கள், எனவே, முடிந்தால், நேரில் ஒரு சந்திப்பு போடலாம் என நினைக்கிறேன். சென்னையில் ஒரு நாள், ஃபேஸ்புக்/ட்விட்டர்ஸ் மீட் வைத்து அதில் விவாதிக்கலாம். வேலையும் சீக்கிரம் முடியும், டைப் அடிக்கும் கொடுமையும் இல்லை. வேன்டுமென்றால் நீங்கள் அதை பதிவு செய்து ஒரு போஸ்ட் போடுங்கள். ஓரிரு மாதங்கள் வரை என்னால் இதற்கு நாள் ஒதுக்க இயலாது. எனவே அதற்குள், இருக்கும் 200 சொச்ச கமல் படங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு, வழக்கம்போல் கிழித்து தொங்க விடுங்கள். இரண்டு மாதம் பின்னர், ஒட்டுக்கா வைத்துக்கொள்ளலாம் கச்சேரியை!

  35. maha
    #35

    விஜய்…..
    கமல் மீது அசிங்கமான தனி மனிதத் தாக்குதல் செய்தேன் என்கிறீர்களே. எங்கே செய்தேன்? கொஞ்சம் விளக்கவும்.
    கமலின் படைப்புகளின் தரம் பற்றி மற்றும் பேசுங்கள். ஏனென்றால் அதில் பல தரப்புகள் இருக்க வழி உண்டு. எனக்குப் பிடித்தது உங்களுக்குப் பிடிக்காது. உங்களுக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காது. அப்படி ஒரு நிலைப்பாடு தரத்தின் அடிப்படையில் பேசும்போது சாத்தியம். அதுதான் உங்களுக்கு நல்லது. தனி மனித நேர்மை பற்றிப் பேச வராதீர்கள். அங்கு சரி என்று ஒன்றே ஒன்றுதான் உண்டு.

    கமல் இதுவரை தன்னுடைய படங்களில் இந்த இந்தக் காட்சிகளை இன்ன இன்ன படங்களில் இருந்து எடுத்திருக்கிறேன் (திருடியிருக்கிறேன்) என்பதை ஒப்புக்கொள்வாரா? தனி மனிதத் தாக்குதலில் ஈடுபடுபவனாக இருந்திருந்தால் முதலில் கமலின் அந்த அயோகியத்தனத்தைத்தான் விமர்சித்திருப்பேன். ஆனால், நான் இந்த ஐந்து படங்களில் அது பற்றிக் குறைவாகவே சொல்லியிருக்கிறேன். என் விமர்சனம் முழுவதும் அவருடைய படைப்புகளின் பலவீனத்தைப் பற்றி மட்டுமே. எனக்கும் கமலுக்கும் எந்த வாய்க்காத் தகராறும் கிடையாது. இதற்கு முன் மணி ரத்னத்தின் ஐந்து படங்கள், பாரதிராஜாவின் ஐந்து படங்கள், வசந்தபாலன், பாலா, வெற்றிமாறன், மிஷ்கின், விஜய், ஷங்கர், பாலாஜி சக்திவேல் எனப் பலரைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். கமலைப் பற்றி நான் எழுதுவதற்கு முன் 20 படங்களை விமர்சித்துவிட்டிருக்கிறேன். கமல் எனக்கு ஒரு பொருட்டே அல்ல.

    முதலில் என்னுடைய பிற படங்கள் பற்றிய விமர்சனங்களைப் படியுங்கள். அதன் பிறகு கமல் பற்றி எழுதியிருப்பவற்றை மறுபடியும் படித்துப் பாருங்கள். நான் கமலை மட்டும் கட்டம் கட்டித் தாக்குவதாக உங்கள் மனதில் பதிந்துவிட்டிருக்கிறது. அதில் இருந்து நீங்கள் வெளியே வராமல் உங்களிடம் உருப்படியாக எதுவும் பேச முடியாது.

    முன்பே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். என் 3 புத்தகங்கள் நிழல் திரைப்பட இயக்கம் சார்பில் வெளியாகியுள்ளன. அங்கு வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்காக இலவசமாகவே வேண்டுமென்றாலும் அனுப்பிவைக்கிறேன்.
    உங்கள் பதிவுகளில் நிறைய தவறுகள் இருக்கின்றன என்றாலும் கட்டுரைகளைப் படிக்காமலேயே பின்னூட்டம் இடுபவர்கள் நிறைந்த உலகில் நீங்கள் வரிக்கு வரி படித்துவிட்டு எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது.

  36. Vijay SA
    #36

    நாளை பதில் சொல்கிறேன்

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: