சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு

சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் மூன்றாம் ஆயிரமாண்டில் ஆரம்பித்தது. 2600-1900 வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது. அதன் பிறகு வீழ்ந்தது. பொ.யு.மு. முதல் ஆயிரமாண்டில் கங்கைச் சமவெளியில் ஒரு புதிய நாகரிகம் உருவெடுக்கிறது. மூன்றாம் ஆயிரமாண்டுக்கும் முதலாம் ஆயிரமாண்டுக்கும் இடையிலான காலகட்டம் வேத இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது நடந்தது என்ன? அரசியலின் பெருவெளியில் உண்மையின் வேடம் பூண்டபடி முடிவற்று அலைகின்றன அபாயகரமான யூகங்கள். அந்த இரண்டாம் ஆயிரமாண்டு என்பது ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த காலகட்டமாகச் சொல்லப்படுகிறது. குதிரைகளில் ஏறி வந்த ஆரியர்கள் பூர்வகுடிகளான திராவிடர்களைக் கொன்று அவர்களுடைய நகரங்களை நிர்மூலமாக்கினர். வேத கலாசாரத்தை இந்தியாவில் புகுத்தினர். வேதகால நாகரிகம் எனப்படும் அந்த கங்கைச் சமவெளி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதுதான் பொதுவாக நம் பள்ளிப் புத்தகங்களில் இன்றும் சொல்லித் தரப்படும் வரலாறு.

இதுதான் மத நம்பிக்கையைவிட படு மூர்க்கமாகப் பரப்பப்பட்டு வந்திருக்கும் கோட்பாடு. சமீபகாலமாகக் கிடைத்துவரும் ஆதாரங்களின் அடிப்படையில் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் ஆரியர் என்பவர் அந்நியர் என்பதே இன்றும், குறிப்பாகத் தமிழகத்தில், பதிந்துகிடக்கிறது.  The Lost River  என்ற நூலில் ஆசிரியர் மிஷல் தனினோ இந்தக் கோட்பாட்டின் அஸ்திவாரத்தை நிதானமாகத் தகர்த்திருக்கிறார்.

ஆரியர் படையெடுப்பு என்ற கற்பிதக் கோட்பாட்டை முன்வைப்பவர்கள் சரஸ்வதி நதி இந்தியாவில் பாய்ந்த நதியே அல்ல என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் அப்படி ஒரு நதி இருந்திருக்கவே இல்லை. அது வேத கால ரிஷிகளின் கற்பனையில் உதித்த நதி மட்டுமே என்று சொல்கிறார்கள். ஏனென்றால், சிந்து சமவெளி நாகரிக குடியிருப்புகளில் பெரும்பாலானவை சரஸ்வதி நதிக்கரையில்தான் அமைந்திருக்கின்றன. ஒருவகையில் அந்த கலாசாரம் சிந்து -சரஸ்வதி கலாசாரம் என்றுதான் அழைக்கப்பட்டவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு சரஸ்வதி நதியால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நதி வறண்டதைத் தொடர்ந்து அந்த மக்கள் கிழக்கு நோக்கி அதாவது கங்கைச் சமவெளி நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இதை ஒப்புக்கொண்டால், ஆரியர்களால் அழிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் என்ற கோட்பாடு வலுவிழந்துவிடும் என்பதால், சரஸ்வதி நதி என்று ஒன்று இருந்திருக்கவே இல்லை என்கிறார்கள்.

இந்தக் காரணங்களால் மிஷல் தனினோ முதலில் சரஸ்வதி நதியின் முழு வரலாற்றை தனது நூலில் விரிவாகத் தொகுத்திருக்கிறார். சரஸ்வதி நதி தோன்றிய இடம், பாய்ந்து சென்ற வழித்தடங்கள், அது வறண்டவிதம், அதற்கான காரணங்கள், அது ஏற்படுத்திய தாக்கங்கள் என அனைத்தையும் பழங்கால சமஸ்கிருத இலங்கியங்களில் ஆரம்பித்து சமகால விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் வரை கிடைத்திருக்கும் அனைத்து ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்திருக்கிறார். அடுத்ததாக, அகழ்வாராய்ச்சி, கார்பன் டேட்டிங் உட்பட பல்வேறு துறை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிகத்தின் பிரமாண்டமான, முழுமையான சித்திரத்தை நம் முன் வைக்கிறார்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் நகரமயமாக்க காலகட்டம் பொ.யு.மு. 1900 வாக்கில் மறைந்தது என்பது இன்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. சரஸ்வதியின் பிரதான நீரோட்டம் வறண்டு போனதும் அதே காலகட்டத்தில் என்பதை தட்ப வெப்பவியலில் ஆரம்பித்து ஆரம்பித்து கிணற்று நீரில் ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் ஐசோடோப்பு சோதனை வரையான ஆய்வுகள் மூலம் நிரூபித்திருக்கிறார். மிக நேர்மையாக, கடந்த காலம் பற்றிய ஓர் அவதூறுக்கான விடையை நாமாகவே புரிந்துகொள்ளவைக்கிறார்.

*

ரிக்வேதத்தில் மிகவும் உயர்வாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதியானது இன்றைய கக்கர்-ஹக்ரா நதிதான் என்பதை லூயி தெ செயிண்ட் மார்த்தான், சி.எஃப்.ஒல்தாம் என்ற சர்ஜன் மேஜர், அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் (இந்திய அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவர்), லூயி ரெனேயு என பலரும் தங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்த நதி இமய மலையில் ஷிவாலிக் தொடரில் கட்ச் ராண் பகுதியில் சென்று கலக்கிறது (ரிக் வேதத்தில் சரஸ்வதி நதி மலையில் ஆரம்பித்துக் கடலில் கலப்பதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது). லூயி ரெனே சரஸ்வதி மறைந்ததாகச் சொல்லப்படும் விநாசனம் என்ற இடத்தையும் அடையாளப்படுத்தியிருக்கிறார். அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அங்கு ஒரு நதி ஓடியதாகவும் அது வறண்டதால் அந்தப் பகுதியில் மக்கள் தொகை குறைந்தது என்றும் சொல்லும் செவி வழிக் கதைகளையும் இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

20-ம் நூற்றாண்டில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் சரஸ்வதி நதியின் படுகை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது. இன்று முழுவதும் வறண்டு கிடக்கும் அந்தப் பாலை நிலத்தில் நதி ஓடிய தடத்தில் மட்டும் ஈரப்பதம் மிகுதியாக இருப்பது புகைப்படங்களில் தெரியவந்தது. அந்த வழித்தடத்தில் கிணறுகள் தோண்டப்பட்டபோது மிகவும் நல்ல தண்ணீர் கிடைத்திருக்கிறது. அதுவும் இந்தியாவின் பிற பகுதிகளில் 100-200 அடி தோண்டியும் நீர் கிடைப்பது அரிதாக இருக்கும் நிலையில் கக்கர் ஹக்ரா நதி ஓடிய படுகையில் 20-30 மீட்டர் ஆழத்திலேயே நீர் கிடைக்கிறது. இவையெல்லாம் முன்னொரு காலத்தில் மிக பிரமாண்டமான நதி இங்கு பாய்ந்திருக்கிறது என்பதையே உணர்த்துகின்றன. சட்லெஜ் நதியை கக்கர் நதியுடன் இணைத்த ஏராளமான குறு நதிகளின் வலைப்பின்னலும் அந்த புகைப்படத்தில் தெரியவந்தது.

இதற்கு அடுத்ததாக மிஷல் தனினோ சரஸ்வதி நதியின் மறைவுக்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார். ஹரப்பா-மொஹஞ்ஜோதாரோ பகுதியில் ஏற்பட்ட வறட்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார். பொ.யு.மு. இரண்டாம் ஆயிரமாண்டு வாக்கில் உலகில் எகிப்து, துருக்கி, மெசபடோமியா (அக்காடிய சாம்ராஜ்ஜியத்தின் முடிவைக் கொண்டுவந்தது), ஆஃப்ரிக்காவில் பல இடங்கள், சீனா, வட அமெரிக்கா போன்ற பல இடங்களும் இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்த வறட்சிதான் சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவுக்குக்காரணம் என்று சொல்வது ‘எளியதொரு’ பதிலாக இருக்கலாம். ஆனால், அதை முழுவதாகப் புறக்கணிப்பது தவறாகவே இருக்கும் என்கிறார்.

அடுத்ததாக, வட மேற்கு இந்தியாவில் நடக்கும் பூகம்பங்களின் வரலாற்றைக் குறிப்பிட்டுவிட்டு சரஸ்வதி நதி வறண்டதற்கு பூகம்பத்தின் பின் விளைவுகள் காரணமாக இருக்கலாம் என்றொரு காரணத்தை முன்வைக்கிறார். சிந்து சமவெளி முழுவதும் கிட்டத்தட்ட சமதளமானது. சிறிய அளவுக்கு மேடு அல்லது பள்ளம் ஏற்பட்டாலும் நதியின் திசையானது முற்றிலும் மாறிவிடும். ஆரம்பத்தில் கக்கர் ஹக்ரா நதிக்கு அதாவது சரஸ்வதி நதிக்கு சட்லெஜ் மற்றும் யமுனை நதியில் இருந்து நீர் கிடைத்துவந்திருக்கிறது. பூகம்பத்தினால் யமுனையில் இருந்து வந்த நீர் திசை மாற்றப்பட்டுவிட்டது. இதனால் கக்கர்-ஹக்ரா நதியின் நீர் வரத்து குறைந்துவிட்டது.

அடுத்ததாக, சிந்து சமவெளி மக்களில் நகரங்கள், கோட்டைகள், தெருக்கள், இன்னபிற கட்டுமானங்களைப் பார்க்கும்போது அவர்கள் சுட்ட செங்கல்களை மிக அதிகமாகப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதற்கான சூளைகளுக்குத் தேவைப்பட்டிருக்கும் மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுபார்க்கும்போது அந்தப் பகுதியின் மழை குறைவுக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும்.
இப்படியான காரணங்களினால் கக்கர் ஹக்ரா நதி மெள்ள வறண்டு போய்விட்டிருக்கலாம் என்று ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக, சிந்து சமவெளி நாகரிகம் அடியோடு மறைந்துபோய்விட்டது என்பதுதான் ஆரிய ஆக்கிரமிப்பு கோட்பாட்டாளர்களின் முக்கியமான வாதம். கங்கைச் சமவெளியில் முதல் ஆயிரமாண்டில் ஆரம்பித்த நாகரிகத்தில் அதன் தடயங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியதன் மூலம் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியே கங்கைச் சமவெளி நாகரிகம் என்பதை நிரூபித்திருக்கிறார். அதாவது சரஸ்வதியின் மறு அவதாரம் கங்கை. சிந்து சமவெளி நாகரிகத்தின் மறு அவதாரம் கங்கைச் சமவெளி வேத நாகரிகம்.

சிந்து சமவெளியில் கிடைத்திருக்கும் மண் பாண்டங்களில் காளை உருவம் பிரதானமாக பொறிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களில் அக்னி தேவனில் ஆரம்பித்து சூரியன் வரை அனைத்து கடவுள்களும் காளையுடனே ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். அந்தவகையில் ஆரியர்கள் மத்தியில் மிகுந்த மதிப்புக்குரிய விலங்காக காளையே இருந்திருப்பது தெரியவருகிறது, குதிரை அல்ல.

அதுபோல் கட்டடங்களின் கட்டுமானத்திலும் இரண்டுக்கும் இடையில் மிகப் பெரிய ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டு கலாசாரங்களிலும் 5:4 என்ற விகிதம் பிரதானமாக இருக்கிறது. 1.9 மீட்டர் என்ற அலகின் மடங்கிலான கட்டுமானங்கள் காணப்படுகின்றன. ‘குந்துமணி’ என்ற ஒரு மிகச் சிறிய விதையை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் அர்த்த சாஸ்திரக் காலத்தில் மற்ற எடைகளின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதே மதிப்புகள் ஹரப்பா காலத்தில் பின்பற்றப்பட்ட எடைகளோடு வெகுவாகப் பொருந்துகின்றன என்று அளவியல் நிபுணர் (Metrologist) வி.பி.மெய்ன்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மக்கள் தினமும் உபயோகிக்கும் பொருட்களும் பெரிதும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வந்திருப்பதாக பி.பி.லால் சுட்டிக்காட்டியுள்ளார். குளியல் பொருட்கள், எண்ணெய் விளக்கு, கமண்டலம், மர விளிம்புகொண்ட சிலேட்டுகள் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். விளையாட்டுப் பொருட்களிலும் ஹரப்பா குழந்தைகள் உபயோகித்த கிலுகிலுப்பை, ஊதல், பம்பரம், தட்டையான மண் தட்டுகள் ஆகியவற்றை வைத்துத்தான் இன்றைய (அல்லது மிக சமீப காலம் வரையிலும்) வட இந்திய குழந்தைகளும் விளையாடுகின்றனர். ஹரப்பாவாசிகளால் தங்கள் குழந்தைகளை மகிழ்விக்க செய்து தரப்பட்ட பொம்மை வண்டிகள் கங்கை சமவெளிப்பிரதேசத்தில் பல இடங்களில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதிலும் பெண்கள் அணியும் வளையல்கள், நடு வகிட்டில் இட்டுக் கொள்ளும் குங்குமம் என பல விஷயங்களுக்கான வேர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுகின்றன. ஸ்வஸ்திக் சின்னம், முடிவில்லா முடிச்சு (ஸ்ரீகிருஷ்ணரின் பாதம் போன்ற வடிவம்), ஆதி சிவனை (பசுபதி) நினைவுபடுத்துவது போன்ற உருவம், யோக நிலையில் இருக்கும் உருவம் என சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படும் பல விஷயங்கள் வேத கலாசாரத்திலும் தொடர்ந்து காணப்படுகின்றன.

சுருக்கமாகச் சொல்வதானால், சிந்து நதி நாகரிகத்துக்கும் பிந்தைய சரித்திரக் கால நாகரிகங்களுக்கும் இடையே நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. பழைய விவசாய முறைகள், மேய்ச்சல் வழிமுறைகள் தொடர்கின்றன; மண்பாண்டத் தயாரிப்பு முறைகள் பெரிய அளவுக்கு மாறவில்லை. நகைகள், வேறு விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதில் ஒரே மாதிரியான செயல்முறைகளும் வடிவமைப்புகளும்தான் பின்பற்றப்படுகின்றன… (ஆகவே) சரித்திரத்துக்கு முந்தைய காலத்தையும் சரித்திரக் காலத்தையும் பிரிக்கும் ‘இருண்ட காலம்’ என்று ஒன்று உண்மையில் இல்லை என்று அகழ்வாராய்ச்சியாளரும் மானுடவியலாளருமான ஜே.எம். கெனோயர் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் மிஷல் தனினோ முன்வைத்திருக்கும் ஆய்வுமுடிவுகளை இப்படித் தொகுக்கலாம்: இன்று வறண்டு கிடக்கும் கக்கர்-ஹக்ராதான் வேத கால சரஸ்வதி நதி; அந்த சரஸ்வதி நதிக்கரையில்தான் சிந்து சமவெளி நாகரிகத்தின் 60%க்கு மேற்பட்ட இடங்கள் இருந்திருக்கின்றன; பொ.யு.மு. 1900 வாக்கில் சரஸ்வதி நதி வறண்டுவிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சிந்து சமவெளி நகரமயமாக்க காலகட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. பிற்கால ஹரப்பாவினர் கிராமப் பகுதிகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். மெள்ள தங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு கங்கைச் சமவெளியில் புதியதொரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். கலாசாரத்தில் ஆரம்பித்து லவுகீக அம்சங்கள் வரை அனைத்திலும் இரு சமவெளி நாகரிகங்களுக்கும் இடையில் தெளிவான ஒற்றுமைகள் இருக்கின்றன. தங்களை வாழ வைத்த சரஸ்வதியின் நினைவைப் போற்றும் வகையில் அதை கங்கை, யமுனை, நதிகளோடு சூட்சும வடிவில் கலந்ததாகச் சொல்லி திரிவேணி சங்கமம் என்ற ஒன்றை உருவாக்கி வழிபட்டு வந்திருக்கிறார்கள். சரஸ்வதி நதியின் அனைத்து பெருமைகளையும் கங்கைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார்கள்.

மிஷல் தனினோ மேலே சொல்லப்பட்டிருக்கும் தீர்மானங்களை மிக விரிவாகத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார். சிந்து சமவெளி மக்கள் தொடர்பாக அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைத்திருக்கின்றன. வேத கால கங்கைச் சமவெளி நாகரிகம் பற்றிய எழுத்து வடிவ சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்றின் உடல் கிடைத்திருக்கிறது. இன்னொன்றின் தலை கிடைத்திருக்கிறது. அது ஒரே நபரின் உருவமே என்பதை ஒருவர் ஏற்றுக் கொள்ள மிகவும் அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு விஷயம் எளிய பகுத்தறிவு மட்டும்தான். நீங்கள் பகுத்தறிவு உள்ளவரா… அல்லாதவரா..? மிஷல் தனினோ மிக எளிதாக ஒரு கேள்வியை அமைதியாக முன்வைத்திருக்கிறார்.

 

மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா நோக்கி வந்ததாகச் சொல்லப்படும் அந்த ஆரியர்கள் அகழ்வாராய்ச்சியின் எந்தவொரு வரையறைக்கும் சிக்காதவர்களாகவே இருக்கிறார்கள். ஆரியர்கள் இந்த வழியாக வந்தனர்; இது ஆரியர்கள் உபயோகித்த வாள் அல்லது கோப்பை என்று சொல்லுமளவுக்கு எந்தவொரு மண்பாண்டமோ வேறு பொருளோ இதுவரை கிடைக்கவில்லை. – Jean Casal

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படுவது பொ.யு.மு. 1500-1000 காலகட்டத்தில்தான். சிந்து சமவெளி நாகரிகம் சிதைவுற்றதோ பொ.யு.மு. 1900 வாக்கில். அதாவது ஆரியர்கள் வருவதற்கு சுமார் 400 வருடங்களுக்கு முன்பாகவே நடந்த ஒரு நிகழ்வுக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது!

ஆரியப் படையெடுப்பு எனும் கொலை வெறி கொண்ட காளை வரலாற்றின் குறுக்குச் சட்டத்துக்கு அப்பால் உறுமியபடி அலை பாய்ந்துகொண்டிருக்கிறது. பிரிவினையின் போதை ஏற்றப்பட்ட அதன் கோரமான விழிகள் பேரழிவின் கிலியை நமக்குள் விதைக்கின்றன. குறுகிய அரசியலின் வாடி வாசல் மெள்ளத் திறக்கப்படும்போது,அந்த வெறுப்பின் காளை மூர்க்கத்தனமாகப் பாய்ந்து வருகிறது. உண்மையின் நிலத்தில் காலூன்றியபடி நேருக்கு நேராக நின்று ஒருவர், அதன் ஒற்றைச் சார்பு தகவல்களின் கொம்புகளைப் பிடித்து மடக்கி, ஆதாரபூர்வமான தரவுகளின் காலால் போலி வாதங்களின் கழுத்தில் ஓங்கி மிதித்து அடக்குகிறார். கழுத்து மடங்கிய காளை தோல்வியின் நுரை தள்ளியபடி கண்கள் மலங்கக் கீழே விழுகிறது.

போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. வெற்றி ஊர்ஜிதமாகிவிட்டது. தோல்வியை நேர்மையாக ஒப்புக் கொள்வதும் அடங்கா காளையை வளர்த்தவனுக்கு அழகுதான்.

0

B.R. மகாதேவன்

(மிஷல் தனினோ ஆங்கிலத்தில் எழுதி பெங்குவின் வெளியீடாக வந்திருந்த Saraswati: The Lost River என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. மொழிபெயர்த்திருப்பவர், வை. கிருஷ்ணமூர்த்தி).

40 comments so far

 1. Saravana bharathy
  #1

  Ithu parpana sathi nu solama iruntha sari. ilai na ithukum oru neenda vilaka urai vara arambichudum……

 2. prasanna
  #2

  A good review.

 3. poovannan
  #3

  நீங்க சிந்துசமவெளி/சரஸ்வதி எல்லாம் ஆரியரது தான் .மத்தவங்க எல்லாம் நாகரீகம் இல்லாதவங்கன்னு சொல்றீங்களா
  .இல்லை ஆரியர் திராவிடர் என்று பிரிவே இல்லை என்று கூறுகிறீர்களா
  சரிங்க உடல் தலை எல்லாம் கிடைத்திருக்கு.அதை பொருத்தி பார்த்தா யார் தெரியறா
  அந்தமான்ல இப்ப இருக்கறவங்க /நாகலண்டுல இருக்கறவங்க/காஷ்மீர்ல இருக்கற குஜ்ஜர்/தமிழ்நாட்டுல இருக்கற தோடர்/கள்ளர்/மள்ளர் /பிராமணர் எல்லாம் ஒண்ணா தெரிகின்றார்களா .இல்லை வேற வேற குழுக்கள் இருந்தது
  ஆனா சிந்துசமவெளி/சரஸ்வதி எல்லாம் ஆரியரது தான் என்று கூறுகிறீர்களா
  இப்பவும் காஷ்மீர்ல இருந்து கன்யாகுமரி வரை இருக்கின்ற பிராமணர்கள் ஒரே மாதிரி கோத்ரம் வெச்சு முனிவர்களை தங்கள் மூதாதையர் ஆகா வழிபடுகிறார்களே ஆனால் மற்றவர்கள் எல்லாரும் ஏன் சிவ கோத்ரா /விஷ்ணு கோத்ரா என்று காந்தி ஹரிஜன் பேர் வெச்ச மாதிரி ஒரே கோத்ரத்தின் கீழ் வருகின்றனர்.
  அந்தமானில் இருப்பவர்களுக்கும் பாரத்வாஜ காஷ்யப கோத்ரம் இருக்குமோ
  ஜ்ஹர்க்ஹாந்து மாநிலத்தில் கோத்ரம் என்று வருவது என்ன என்று பாருங்கள்
  http://www.tribalstuff.in/2011/04/oraons-the-gotra-system-part-i/

  இப்போது யார் யாரெல்லாம் சிந்து/சரஸ்வதிக்கு உரிமை கொண்டாடலாம்.இந்தியரா/பாகிஸ்தானியாரா/பர்மா நாட்டுகாரரா
  வேறு வேறு முறையில் திருமணம்/இறந்தவர்களை அடக்கம் செய்தல்/இறைவனை வணங்குதல்/அவனுக்கு படைக்கும் உணவுகள்/பேசும் மொழி கொண்ட பல குழுக்களில் யார் இதற்க்கு சொந்தம் கொண்டாடலாம்

 4. poovannan
  #4

  100அடி 30மீட்டர் ஆஹா
  30 மீட்டர் எனபது நூறு அடி தானே
  தாம்பரத்துல 10 அடில தண்ணீர் கிடைத்தது.ஆலந்தூரில் நூறு அடி தோண்டினாலும் நாமம் தான்.தாம்பரதிலேயும் கீழே ஏதாவது நதி இல்லை சரஸ்வதியோட கிளை நதி ஓடுதோ

  அந்தமானுக்கு வெள்ளைக்காரன் இங்கிருந்து/வங்காளத்திலிருந்து பல்லாயிரம் பேரை அழைத்து சென்று மரம் வெட்டினான்/தேயிலை தோட்டம் வைத்தான்.
  அங்கே இன்றும் மீதி இருக்கும் பழங்குடிகளும் /தேயிலை தோட்டம் அமைக்க போனவர்களும் ஒன்று தான் என்று அங்கயும் அதே தேயிலை கிடைப்பதால் அதுவும் நம் இடம் தான் என்று உறுதியாக கூற முடியும் என்று கூட எழுதலாம்.

 5. ஹரப்பn
  #5

  1)
  இந்த நூல் சரஸ்வதி நதியைப் பற்றிய ஒரு தரப்பு வாதத்தினை முன் வைக்கும் நூல்.அதை படித்துவிட்டு அதுவே உண்மை என்று எல்லோரும் ஏற்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யலாம்,அது பிரச்சாரம்தான்.
  அது அறிவார்ந்த கருத்தாக நிறுவப்பட வேண்டுமானால்
  பல தரப்பு வாதங்களையும்
  படித்து ஆய்ந்து எழுத வேண்டும்.
  2)ஆர்யர் படையெடுப்பு என்பதை ரோமிலா தாப்பர் உட்பட பலர் ஏற்பதில்லை.மாறாக ஆரியர் இடப்பெயர்வு என்பதை முன் வைக்கிறார்கள்.மகாதேவனுக்கு
  இது தெரியுமா

 6. vajra
  #6

  பூவண்ணன்,

  புத்தகத்தைப் படித்துவிட்டு விமர்சிப்பது நலம்.

  சிந்து சமவெளி நாகரீகம் என்பது தர்பொழுது திராவிடர் என்று சொல்லிக்கொள்பவருக்கும், அவ்வாறு சொல்லிக்கொள்பவர்கள் ஆரியர் என்று சிலரை ஒதுக்குகிறார்களே அவர்களுக்கும் பொதுவான நகரீகம். நமது பண்டைய நாகரீகம்.

  ஆரியர் திராவிடர் என்ற பிரிவினையே இல்லை. எல்லோரும் இன அடிப்படையில் ஒன்றே!

  எகிப்திய நாகரீகம் இப்பொழுது இல்லை. ஆனால் எகிப்தில் இஸ்லாம் உள்ளது. எகிப்தியர்கள் எல்லாம் அரபு வந்தேறிகளா ? அவ்வாறு யாருமே சொல்வதில்லை.

  மெசபொடேபிய நாகரீகம் இப்பொழுது இல்லை. அங்கே ஈராக் தான் உள்ளது. சத்தாம் உசேனின் கொள்ளுத் தாத்தா எள்ளுத் தாத்தா எல்லாம் மெசப்பொட்டேமிய நாகரீகத்தில் தங்கள் வேர்கள் உள்ளன என்று இன்றும் நம்புகிறார்களே! அங்கே யாரும் மெசபொட்டேமியா வேறு இன்றுள்ள ஈராக்கியர்கள் காஸ்பியன் கடல் தாண்டி வந்த வந்தேறிகள் என்று சொல்வதில்லை.

  ஆனால் இந்தியாவில் இத்தகய பிரிவினைக் கோட்பாட்டை ஆழமாக வேறூன்ற வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறது ஒரு வெள்ளைப் பன்றிக் கூட்டமும் அதற்கு ஒத்து ஊதும் இந்தியப் பன்றிக் கூட்டமும். சிந்திப்பவர்கள் சிந்திப்பார்கள். திராவிடப் பிரிவினையால் வயிறு வளர்க்கும் சோம்பேறிப் பன்றிகள் சிந்திக்க மறுப்பார்கள்.

 7. vajra
  #7

  ஹரப்பா என்ற பெயரில் பின்னூட்டம் இட்டவருக்கு.

  ஒரு தரப்பு வாதம் என்று நீங்கள் எதை வைத்துச் சொல்கிறீர்கள் ? இதுவரை நமக்கு கற்பிக்கப் பட்டது கூட ஒரு தரப்பு வரலாறு தான். அதை மறுக்க மருதலிக்க மாற்றுத் தரப்பு இப்பொழுது தான் வலுப்பொற்றுள்ளது. அதன் தரப்பு இது.

  ரொமிலா தாப்பர் ஆரியர் படையெடுப்பு பற்றி பேசவில்லை எனும் போதே அதில் தவறு உள்ளது என்று உங்களுக்கு விளங்கவில்லையா ?

  படையெடுப்பு இல்லாட்டி இடப்பெயர்வு. அதுவும் இல்லாட்டி சுற்றுலா வந்த வந்தேறிகள் என்பார்களா ? அவர்கள் கோட்பாடு தகர்க்கப்பட்டுவிட்டது ஐயா. இனி ஆரியர் வந்தேறிகள் என்று சொல்லி பைசா வாங்க முடியாது. படிப்பவர்கள் நாம் தான். நாம் சிந்திக்கவேண்டும் என்றால் நமக்கு அனைத்துத் தரப்பு வாதங்களும் வேண்டும்.

 8. பூவண்ணன்
  #8

  அன்பு வஜ்ரா
  தமிழும் வடமொழியும் ஒன்றா.ஒன்றிலிருந்தே பிரிந்திருந்தாலும் எப்படி அப்படி நடந்தது என்று பல தியரிகள் உருவாகும்.
  இதில் ஒன்று சூழ்ச்சியால் உருவானது.அதை எதிர்க்கும் தியரி தியாகத்தின் மறுஉருவம் கொண்டவர்களால் உருவானது/அசைக்க முடியா ஆதாரம் கொண்டது எனபது கடவுள் நம்பிக்கை போல மூட நம்பிக்கை
  இரு பிரிவினரின் இடையே இருக்கும் பிரிவுகள் எப்படி உருவாகி இருக்கும் என்பதை ஊகிக்கும் retrospective ஆராய்சிகள் தான் ஆரியர் படையெடுப்பு /திராவிட மொழிகள் ,வடமொழி கலப்பு/அசுவமேத யாகம்/குதிரை அறியாத குழுக்கள் போன்ற முயற்சிகள்
  வெள்ளைக்காரன் ஒரு நோக்கத்திற்காக ஒன்றை பிடித்து கொண்டான் என்றால் இப்போது அவர்கள் இடத்தை பிடித்து கொண்ட குழு அவர்களின் நோக்கத்திற்காக மற்றொன்றை திணிக்கிறது.நாளை மாயாவதி அனைத்திலும் தம்மத்தை ஆதராபூர்வமாக நிரூபிப்பார்.
  வரலாற்றில் எழுதப்பட்ட விஷயங்கள் கிடைக்கும் காலத்தில் வாழ்ந்த ராஜராஜ சோழன் எந்த சாதி என்று சொல்லுங்களேன்.தமிழ்நாட்டில் மட்டும் நூறு சாதிகள் நாங்கள் தான் ராஜராஜனின் வழிதோன்றல்கள் என்று கத்தி கொண்டு திரிகின்றன .அது முடியுமா
  மலையாளமும் தமிழும் எப்படி பிரிந்தது என்று சொல்ல முடியுமா.அதை சொல்லும் ஒரு தியரி சூழ்ச்சி /அதை முறியடித்து ஆதாரபூர்வ தியரி உள்ளது என்று கூப்பாடு போடுவதால் அது உண்மையாகி விடுமா
  ஆப்கானிஸ்தான் ,ரஷ்ய எல்லைகளில் வாழும் மக்கள் வேறு ,இங்கு காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை(வட கிழக்கில் எது வரை எடுத்து கொள்ளலாம் என்று ஆதாரத்துடன் பேசுபவர்கள்/ புத்தகம் எழுதுபவர்கள் கூறுகிறார்கள்)இப்போது வசிக்கும் மக்கள் ஒன்று தான் என்று நிரூபணம் ஆகிவிட்டதை பன்றிகள் ஒத்து கொள்ளவில்லை என்கிறீர்களா
  மேல ஜ்ஹர்க்ஹாந்து மாநில கோத்ரங்களை படித்தீர்கள் என்றால் அதில் பன்றி கோத்திரமும் உண்டு.நீங்கள் கேப்மாரி/சோமாறி/பன்றி என்று திட்டுவது இந்தியாவில் வசிக்கும் மனிதர்களின் கோத்திரத்தை என்பதை ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.ஒருவரின் கோத்திரம்/சாதி/உணவு இன்னொரு குழுவுக்கு கெட்ட வார்த்தைகளாக இருப்பதன் ஆராய்ச்சிகள் தான் எல்லாம்.இதில் வெள்ளைக்காரன் என்பவன் neutral umpire மாதிரி.நமக்கு வேண்டியவற்றை பிடித்து கொண்டு எதிராக வருவதை சூழ்ச்சி எனபது உங்கள் விருப்பம்.அதை எல்லாரும் செய்ய வேண்டும் அப்படி செய்யாதவர்களை திட்டுவது/சபிப்பது சரியா என்று சற்றே யோசியுங்கள்

 9. பூவண்ணன்
  #9

  இப்போதும் அந்தமானில் பழங்குடியினர் வசிக்கின்றனர். சில மைல்கள் தொலைவில் உள்ள தீவுகளில் பல்வேறு பிரிவினர்,வேறு வேறு மொழிகள்,பழக்க வழக்கங்கள்.இப்போது அவர்களை விட அங்கு சென்ற வங்காளிகளும் தமிழர்களும் தான் அதிகம்.இவர்கள் அனைவரும் ஒன்று தான் அதாம் ஏவாள் இல் இருந்து வந்தவர்கள் என்கிறீர்களா .அனைவருக்கும் ஒரே கலாசாரம் தான் இருந்தது வெள்ளையரும்/இஸ்லாமியரும் வருவதற்கு முன் என்கிறீர்களா
  அசைக்கமுடியாத ஆதாரம் /சூழ்ச்சிகளை முறியடித்த உடலையும் தலையையும் சேர்த்த தரவுகள் எதை காட்டுகின்றன.இருக்கும் வித்தியாசங்களுக்கு காரணம் என்ன /எப்படி உருவானது என்ற ஆராய்ச்சியில் எல்லாம் ஒன்று தான் எனபது தான் ஆராய்ச்சியின் முடிவா.

  இப்போதும் ரஷ்யாவில் அகழ்வாராச்சியில் கிடைத்த 4000 ஆண்டு முற்பட்ட ஆர்யர்களின் கிராமம் என்று வருகிறதே.அது எல்லாம் சூழ்ச்சியின் தொடர்ச்சியா .ரஷ்யர்களுக்கு இந்த சூழ்ச்சியால் என்ன பயன் http://articles.timesofindia.indiatimes.com/2010-10-04/europe/28241450_1_aryan-settlements-aerial-photography

 10. Pavalar Sokkalingam
  #10

  “வட இந்தியாவில், பிரித்தாளும் சூழ்ச்சியினால் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தி வெற்றி கண்ட பிரிட்டிஷ் அரசு, அவ்வகை முயற்சிகளால் தென்னிந்தியாவில் & குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் & வெற்றிபெற முடியவில்லை. எனவே, அதற்கு மாற்றாகப் ‘பிராமணர் – பிராமணர் அல்லாதோர்’ இயக்கங்களை ஊக்குவித்தது.” அப்படி ஏமாற்றுவித்தை செய்ய ஏற்படுத்தப்பட்டதுதான் ஆரிய- திராவிட பிரிவு என்னும் பொய் ….. அவ்வாறு ஒரு பொய்யைப் பரப்புரை செய்யத் தோன்றியவைதான் நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்கங்கள் ….. வெள்ளையன் ஒருபுறம் பிராமணர்களையும் ஏற்றிவிட்டு இன்னொருபுறம் எதிர்ப்பையும் நயவஞ்சக நரியாக கிளப்பிவிட்டுக் குளிர் காய்ந்தான் …. அதற்கு பிராமணர்கள் ஆட்டம் போட்டதும் உண்மை .பின்னர் இதோ பார் பார்ப்பானின் ஆதிக்கத்தை என்று அவனே நாயர், பிட்டி என்று ஒரு உப்புமாக்கூட்டத்தை ஏற்றிவிட்டு கொம்பு சீவினான் . இந்த பொய்ப் பரப்புரையின் தாக்கம் இன்றளவும் திராவிட, கம்யூனிச இயக்கங்களால் தூக்கி நிறுத்தப்படுகிறது . இந்தப் பொய் இன வாதக் கோட்பாட்டைத் தூக்கி எறிந்து இரு தரப்பும் இதை உணர்ந்து நாட்டைப்பண்படுத்த வேண்டிய நேரமிது . ஆனால் இதை வைத்து பாமரத் தமிழனை ஏமாற்றி காசுபார்த்த திராவிட இயக்கக்கூட்டம் இதைச்செய்ய விடாது. இன்னமும் ஒரு வெள்ளைக்காரக்கூட்டத்துக்கு பவர் குடுத்து கால் கழுவியே மகிழ்கிறோம். பெரியாருத்தண்ணி தராது பாண்டி பட்டி என்று ஏசும் மல்லுக்காரனும் அதே திராவிடந்தான் …. காவிரி நீர் தராத கன்னடியனும் அதே நாம் தூக்கிப்பிடிக்கும் திராவிடன் தான் …. பாலாற்றில் அணை கட்டும் தெலுங்கனும் அதே திராவிட இரத்தம்தான் என்பது பற்றி திராவிடம் திராவிடம் என்று கதையளக்கும் பெருச்சாளிக்கூட்டம் வாயே திறக்காத கெடுமதி கூட்டம். வீணே மக்களை ஏமாற்றியது போதும் … இனியும் நாங்கள் ஏமாறத் தயாரில்லை

 11. அல்காராசன்
  #11

  நேற்று அதிகாலை என் கனவில் ஈரோடு பெரியசாமி என்னும் அறீஞர் கூறியது இது …”….லெமூரியா குமரிக்கண்டம்தான் உலகின் ஆதி தமிழன் தோன்றி வாழ்ந்த நம் தாயகம். அறிவியலிலும், மொழிவளத்திலும் செம்மாந்து இருந்த ஒரு சமூக நாகரீகம் அது. அருகில் இருந்த கண்டம் இந்தியத் துணைக்கண்டம். குமரிக்கண்டம் கடல் கொண்டதால், அங்கிருந்த தமிழன் மெதுவாக இன்றைய தமிழகம் இருந்த பகுதிக்கு இடம்பெயர்ந்து அங்கு வாழ்ந்த பூர்வகுடிகளான ஆரியர்களை அடித்து, துவைத்து, சிந்துச் சமவெளிக்கும், கங்கைச் சமவெளிக்கும், அதையும் தாண்டி மத்திய ஆசியா, அய்ரோப்பாவிற்கும் விரட்டியடித்து ஆக்கிரமித்துக்கொண்டு திரைகடல் தாண்டி வந்ததால் தன்னை திராவிடன் என்று பெருமையாக அறிவித்துக்கொண்டான். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று அதனால்தான் தமிழனின் மாண்புள்ள பழமொழி ஏற்பட்டது. திரைகடல்– திரவியம் –திராவிடம் என்று நம் பெருமை சாற்றுகிறது. இன்றும் தமிழ் மொழி தனித்தன்மையாக இருப்பதைப்பாருங்கள். மற்ற மலையாள, தெலுங்கு, கன்னடத்தில் எல்லாம் வடமொழி இருப்பதையும் பாருங்கள். இது மாக்ஸ்முல்லர் என்ற செருமானிய அறிஞரின் சித்தப்பு பிசிக்ஸ்முல்லர் ஆராய்ந்து கண்டறிந்து சொன்னது. நாம் வந்தேறிய நிலம் இது. உடைந்தால் என்ன உடையாவிடில் என்ன… நாம் நம் லெமூரியக்கண்டத்துக்கே போய் கடல் கொண்ட கபாடபுரத்தில் அரசாங்கம் அமைப்போம் … …”……… நான்கூட யார் இந்த ஈரோடு பெரியசாமி … இவர் என்னை முனைவரா … அறிஞரா என்று பகுத்தறிவோடு யோசித்தேன்…. மனதில் சிந்தித்து நன்கு யோசித்தேன் …சும்மா வெற்று ஆள் உளருகிறான் என்று முதலில் நினைத்தேன் … அப்புறம் தான் புரிந்தது … ஓ … ஈரோடல்லவா ??? எவனா இருந்தா என்ன ஈரோட்டுக்காரன் சொன்னா நிச்சயம் 100% உண்மையாத்தான் இருக்கும். நாம் நம் லெமூரியக்கண்டத்துக்கே போய் கடல் கொண்ட கபாடபுரத்தில் அரசாங்கம் அமைப்போம் … நம் தானைத் தலைவர் பூவண்ணனை அமைச்சராக்கி மகிழ்வோம்..

 12. vajra
  #12

  பூவண்ணன்,
  தேவையில்லாத பேச்சு… புத்திசாலித்தனமாக பேசுவதாக எண்ணவேண்டாம். வாதப் பொருள் யாகமோ, கோத்திரமோ, குதிரையோ, பன்றியோ அல்ல. ஆரிய/திராவிட இனப்பிரிவு தான்.

  ஆரியர் வந்தேறிகள் திராவிடர் பூர்வக்குடிகள் என்பது ஆதாரப்பூர்வமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. (மரபணு மூலமும், கிடைக்கப் பெற்ற அகழ்வாராய்ச்சிகளாலும் தான்) மரபணு சோதனையிலோ, தொல்பொருள் ஆய்வில் கிட்டிய முடிவுகளை நிராகரிக்க முடியாது, தியரியைத் தான் நிராகரிக்கவேண்டும். இது அடிப்படை அறிவியல். இது தெரியாத சோசியாலஜி, ஆர்ட்ஸ் படிப்பவர்கள் கொஞ்சம் பொத்திக்கொள்வது நலம் தரும்.

  தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு உள்ளது என்பது கண் முன் தெரியும் விசயம். அதை ஆரியர் திராவிடர் என்ற இனக்குழு பிரித்து வைத்து இனி விளக்க முடியாது. அதை விளக்க வேறு தியரி வேண்டும். அது இன்று வரை கிட்டிய அனைத்து அறிவியல் ஆதாரத்துடனும் ஒத்துப் போகவேண்டும். அது நிச்சயம் வந்தேறி பார்ப்பான ஆரியக் கூட்டத்தையும், திராவிடத்தையும் வைத்து இருக்கப் போவதில்லை. இதனால் உங்கள் வாழ்வாதாரம் தடைபட்டால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய இயலாது. வேறு பிழைப்பைப் பார்க்கவும்.

 13. poovannan
  #13

  ஐயா இந்த மரபணு ஆராச்சியில முகலாய படையெடுப்பு கூட இல்லேன்னு நிரூபணம் ஆயிடுச்சாம்.எல்லாம் பொய்யாம்.
  சில நூற்றாண்டு முன் நடந்த/நடந்ததாக சொல்லபடுகிற முகலாய படையெடுப்பை மரபணு வைத்து கண்டுபிடிக்க முடியுமா
  131 பேரை வைத்து ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை வைத்து செய்த ஆராய்ச்சியை வைத்து கொண்டு நீங்கள் எல்லாம் குதிப்பது தான் காமெடி.
  பல்லாயிரம் பேரை வைத்து ஒரு குறிப்பிட்ட வியாதி வெள்ளைகாரர்களை விட இங்கு இருப்பவர்களுக்கு அதிகமாக இருப்பதன் காரணத்தை கண்டுபிடிக்க மரபணுவையும் ஒரு காரணமாக எடுத்து கொண்டு நடக்கும் ஆராய்ச்சியில் எனக்கும் ஒரு மிக சிறு பங்கு உண்டு.முழி பிதுங்கி கிடக்கிறோம்.இப்போது வட இந்தியர்களில் குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த ,surname உடையவர்களை வைத்து ஆராய்ந்தால் ஏதாவது முடிவு வருமா என்று ஆராய்ச்சி முன்னேறி உள்ளது.இதில் மரபணுவை வைத்து படையெடுப்பு/இடம் பெயர்தல் போன்றவற்றை தெள்ளதெளிவாக கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் எங்கே போய் முட்டிகொள்வது என்று தெரியவில்லை.
  பாகிஸ்தான்,ஆப்கான்ஸ்தான் ,கழகிச்தான் போன்ற நாடுகளில் வசிப்பவர் வேறா.
  ராஜாராம் என்பவர் எருதை குதிரையாக்கியதை வைத்து கொஞ்ச வருடம் பிழைப்பை ஒட்டியது இந்துத்துவ கூட்டம் தான்.
  அடுத்து சிலர் ஆர்யர் இந்தியாவிலிருந்து மத்திய ஆசிய சென்று மறுபடியும் தாய்மண் திரும்பினர் என்றும் புத்தகம்/ஆணித்தரமான ஆதரங்களுடன் சில வருடம் ஒட்டினர்.
  இப்போது மரபணு/சரஸ்வதி என்று பிழைப்பு தூள் பறக்கிறது யாருக்கு.

 14. பூவண்ணன்
  #14

  அலெக்சாண்டர் போருஸ் மீது போர் தொடுத்தார்.அவருடைய படை வீரர்கள் பலர் இந்தியாவிலேயே தங்கி விட்டனர்
  சந்திரகுப்தா மௌரியர் செளுகிஸ் என்று அலேசேண்டேருக்கு பின் வந்த அரசனை வென்று அவர் மகளை மனம் முடித்தார் என்று எல்லாம் படித்தோமே
  இப்போது மரபணுக்களில் வித்தியாசம் இல்லை என்பதால் அது எல்லாம் பொய்யா.இப்போது இருப்பவர்கள் எல்லாரும் கலப்பு என்று கூறுவதால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை எனபது அர்த்தமா

  பிரியங்கா காந்தியின் குழந்தைக்கும் தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைக்கும் மரபணுவில் வித்தியாசம் ஒன்றும் இருக்காது.அதை வைத்து சோனியா வெளிநாட்டவர் என்ற வாதம் பொய் என்று வாதிடலாமா
  மரபணு ஆராய்சிகள் இன்று யாரும் நாங்கள் தான் ஆரியர் நாங்கள் தான் திராவிடர் என்று சொல்ல முடியாது. எல்லாம் கலந்து விட்டன என்று தான் கூறுகின்றன
  ஆர்யர் ,திராவிடர்,மொகலாயர் என்ற பிரிவே இல்லை,யாரும் படை எடுத்தோ ,இல்லை மாடு மேய்த்து கொண்டோ வரவில்லை என்று கூறவில்லை,கூறவும் முடியாது.
  மாட்டு மாமிசம் சாபிடுபவனும் மாட்டு மூத்திரம் குடிப்பவனும் ஒன்று தான் எனபது மிகவும் சந்தோசம்.ஆனால் அதில் ஒன்று தான் நம் கலாசாரம்,இன்னொன்று வெள்ளைக்காரன் செய்த சதி,கேவலம் என்று
  சொன்னதால் தானே பிரச்சினை வந்தது/வருகிறது.

  இப்போதும் மாட்டு மூத்திரத்தை பூஜிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை.ஆனால் மாட்டுக்கறி சாப்பிட கூடாது என்று சட்டம் போட துடிப்பவர்கள் யார்.
  என் பழக்கம் உயர்ந்தது அது தான் இந்தியனின் கலாசாரம் என்று சொல்பவர்கள் யார்.
  சாதி மறுப்பு திருமணங்களை வெறியோடு திலகர் எதிர்த்து இன்னும் ஒரு நூற்றாண்டு கூட ஆகவில்லை.அதற்குள் சாதிகளை ஒழிக்க நினைத்த இயக்கங்கள் வில்லனாகவும் அதை பெருமையாக நினைத்த,அப்படி நடந்த திருமணங்கள் செல்லாது,அவர்களுக்கு உரிமை எதுவும் கிடையாது என்று தீர்ப்புகள் கூறிய/அவர்களை அங்கீகரிக்கும் சட்டத்தை எதிர்த்தவர்கள் தியாகத்தின் திருஉருவாகவும் ஆக்கபடுவது தான் சூழ்ச்சி

 15. சான்றோன்
  #15

  வஜ்ரா அவர்களே……

  // அதை ஆரியர் திராவிடர் என்ற இனக்குழு பிரித்து வைத்து இனி விளக்க முடியாது. அதை விளக்க வேறு தியரி வேண்டும். அது இன்று வரை கிட்டிய அனைத்து அறிவியல் ஆதாரத்துடனும் ஒத்துப் போகவேண்டும். //

  இப்படியெல்லாம் கண்டிஷன் போட்டு பூவண்ணன் கும்பலோட அடிமடியிலேயே கை வச்சா எப்படி சார்? இத வச்சுத்தான் கிட்டத்தட்ட எழுபது வருஷமா அவங்க பொழப்பே நடக்குது…… நீங்க பாட்டுக்கு அறிவியல் ,ஆராய்ச்சி அப்படின்னு ஆதாரங்களை அடுக்கினா எப்படி?

  அவங்களுக்கு அதெல்லாம் தேவையே இல்லை……அவங்க ”பகுத்தறிவு பகலவன் ” வாய்க்கு வந்தபடி உளறி வச்சதே போதும்…….ஏன்னா அவரு தெளிவா சொல்லியிருக்காரு…….எனக்கு புத்திசாலிகள் தேவையில்லை……முட்டாள்கள் தான் வேணும்னு……

 16. சான்றோன்
  #16

  பூவண்ணன்….

  உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்…….அப்பத்தான் வெற்றிகொண்டான், தீப்பொறி
  ஆறுமுகம் ரேஞ்சுக்கு உயர முடியும்…….ஸ்டாலின் ,அழகிரி,” ஸ்பெக்ட்ரம் புகழ்” கனிமொழி போன்ற தியாக திருவிளக்குகள் அளவுக்கு வாஞ்சினாதன் , திலகர் போன்றோரால் உயரமுடியுமா?

 17. vajra
  #17

  பூவண்ணன்,

  ஒருவர் ரெண்டு பேர் அரச குடும்பத்தில் மணம் புரிந்து வாழ்ந்தது சரித்திரம். மரபணு ஆராய்ச்சியில் அதை துல்லியமாக கண்டு பிடிக்க முடியும் தான். பிரச்சனை அதுவல்ல.

  கொத்துக் கொத்தாக மக்கள் முதலில் படையெடுத்து வந்தார்கள் என்றவர்கள் இன்று புலம் பெயர்ந்துவந்தார்கள் என்கிறார்கள் நாளை சுற்றுலா வந்தார்கள் என்று கூட சொல்லலாம். பிரச்சனை “அவர்கள் வந்தார்கள்” என்கிரார்களே அவர்களது அரசியல் பார்வையில் உள்ளதே தவிர அப்படி யாரும் மொத்தமாக வரவில்லை என்பது உண்மை.

  (Edited)

 18. பூவண்ணன்
  #18

  அன்பு சான்றோன் திலகர் நாட்டுக்கு/பெரும்பான்மை மக்களுக்கு தீமை புரியும் கருத்துக்கள்/போராட்டங்கள் செய்ததற்கு அருகில் கூட இன்னொருவர் வருவது மிக மிக கடினம்

  99 சதவீத உயர்சாதி ஹிந்து தலைவர்கள் சூத்திரர்கள் /பஞ்சமர்கள் யார் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாடு உடையவர்கள்.அவர்களும் வெள்ளைக்காரர்களின் ஆர்யன் திராவிடன் கோட்பாட்டை முழுமனதோடு ஒத்து கொண்டவர்கள் தான்.சாதி /வர்ணம்/கோத்திர தூய்மை மிக முக்கியம் என்ற வெறி இல்லாத தலைவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்
  http://www.ambedkar.org/jamanadas/TilakGandhi.htm
  1918 – He opposed, a Bill by Vithalbhai Patel, to legalize the inter-caste marriages. He described such marriages as “hindu-hindu che sankar karak vivah”. He declared the Bill to be against Hindu religion and said that the progeny of such marriages may inherit the property of father only and not of others. A Brahmin looses his brahmin-hood, if he marries a shudra woman, he opined.
  1918 – Trip to England to file suit of defamation against Sir Valentine Chirol, who had held Tilak’s writings and work responsible for violence in India and called him “Father of Indian Unrest”. Tilak lost the case in Feb. 1919 and Returned back to Bombay in Nov. 1919
  1919 December – Amrutsar Congress
  1920 Feb. – March – His meetings were disrupted in Sangali, Pune and Bombay by non-Brahmins because of his speech at Athani saying non-Brahmins had no business to take education or to take part in politics.

 19. பூவண்ணன்
  #19

  அன்பு தமிழ் சான்றோன் நீங்க பச்சை தமிழன் என்று சொன்னதாக ஞாபகம்.உங்க கோத்திரம் என்ன என்று கூற முடியுமா.
  அது எப்படிங்க காஷ்மீர பிராமணரோ ,ஒரிய பிராமணரோ ,இல்லை சரஸ்வத் பிராமணரோ .இல்லை ஐயன்காரோ இல்லை மைதிலி,பட் என்று இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் காஷ்யப பாரத்வாஜ அகஸ்தி என்று ஒரே மாதிரி ரிஷி பேர் கோத்திரம் வருகிறது.
  நானும் பொழுது போவாம bharat matrimony இல இருக்கிற தமிழ் BC /SC /ST சாதிகள்,வட மாநில சாதிகள் /அண்டை மாநில சாதிகள் கோத்திரம் என்னன்னு பார்த்தா சிவா கோத்திரம்/விஷ்ணு கோத்திரம் தான் இல்ல கோத்திரம் காலியாக உள்ளது . ஒன்னு ரெண்டு பேர் ஊர் பேரு ,மிருகம் பேரு ன்னு ஏதாவது வருது.
  கோத்திரம் எல்லாம் வேதத்திலேயே கூட இருக்குதாமே.அது எப்படிங்க சூத்திரன்/பஞ்சமன் எல்லாருக்கும் ஒரே கோத்திரம் இல்லே பழங்குடி நாய்,பூனை,பன்றி,மீன் ஆனா எந்த மூலையில,எந்த மொழி பேசினாலும் பிராமணர்களுக்கு மட்டும் ரிஷிமூலம் ஒண்ணா இருக்குது.
  ஒரு வேலை இதுவும் maxmuller சூழ்ச்சியோ

 20. பூவண்ணன்
  #20

  இப்போது தமிழர்கள் பல நாடுகளில் இருக்கிறார்கள்.எப்படி.ஓரிடத்திலிருந்து விரட்டப்பட்டால் பல இடங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்.
  கடல்சார்ந்த போக்குவரத்து தெரிந்ததால் அந்த மார்க்கத்தில் சில நாடுகளுக்கு சென்றார்கள்.சில தீவுகளை கைப்பற்றி ஆட்சியையும் புரிந்தார்கள் . வெள்ளைக்காரன் தேயிலை தோட்டம் வைக்க மேலும் சில நாடுகளுக்கு இழுத்து சென்றான் .பெரும்பாலும் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில் நடந்த இடபெயர்வு இது
  ஆங்கிலம் எப்படி உலகம் முழுக்க பரவியது.அரேபியா வழிபாடு எப்படி பரவியது. வடமொழி மட்டும் எப்படி பிறந்த இடத்தைவிட்டு அசையாத பல்லாயிரக்கணக்கான மைல் பரப்பளவில் வாழ்ந்தசிலருக்கு நாவில் கடவுள் அருளால் வந்ததா
  காளிதாசன் படத்தில் காளிதாசனாக நடிக்கும் சிவாஜிக்கு திடீரென்று கடவுள் அருள் தந்ததால் பாட ஆரம்பிப்பாரே அது போல சம்பந்தப்பட்ட்ட கடவுள்கள் கடல் தாண்ட வேண்டிய அவசியம் இல்லாத நில பரப்பளவில் வாழ்ந்த சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் அருள் புரிந்தாரா
  ஆப்கான்இச்தானில்/பாகிஸ்தான் (உருவாகி 60 வருடம் தான் ஆகிறது.முக்கால்வாசி அகழ்வாராய்ச்சி இடங்களும் அங்கு தான் உள்ளன) இருந்து கன்யாகுமரி அருகிலா இல்லை மத்திய ஆசியா அருகிலா
  ஆங்கில /பாரசீக மிச்சிஒனரிகள் பரவிய இடங்களில் அந்த மொழி அது கொண்டு வந்த மதம்/கடவுள்கள் அங்கிருந்த கடவுள்களை ஓட ஓட விரட்டி விட்டு இடத்தை பிடித்தன ஆனால் வடமொழி மிச்சிஒனரிகள் சுயம்புகள் .

 21. சான்றோன்
  #21

  @பூவண்ணன்…….

  //99 சதவீத உயர்சாதி ஹிந்து தலைவர்கள் சூத்திரர்கள் /பஞ்சமர்கள் யார் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாடு உடையவர்கள்.அவர்களும் வெள்ளைக்காரர்களின் ஆர்யன் //திராவிடன் கோட்பாட்டை முழுமனதோடு ஒத்து கொண்டவர்கள் தான்.சாதி /வர்ணம்/கோத்திர தூய்மை மிக முக்கியம் என்ற வெறி இல்லாத தலைவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்//

  அதையேதான் சார் நானும் சொல்றேன்…அப்படிப்பட்ட ,பிராமனர் அல்லாத உயர் சாதி ஹிந்துக்க‌ளால் உருவாக்கப்பட்டதுதான் தென்னிந்திய நல உரிமைச்சங்கம்………இதுவே பின்னால் நீதிக்கட்சியாக மாறி, பின்னர் திராவிடர் கழகமாக உருவெடுத்தது……இந்த இயக்கங்களின் தலைவர்கள் பெரும்பாலும் தமிழர் அல்லாதவர்கள்……….[ ஈ.வெ.ரா உட்பட]……மலையாளிகள் ,தெலுங்கர்கள்……அடிப்படையில் சாதி மற்றும் மொழி வெறியர்கள்…..தமிழனின் இளித்தவாய்த்தனத்தை பயன்படுத்தி அவன் தலையில் மிளகாய் அரைத்தவர்கள்……சுயமரியாதை இயக்கம் என்று கூறிக்கொ்ண்டு வெள்ளையனின் காலை கழுவிக்குடித்த கயவர்கள்……இப்படிப்பட்டவர்களை ஆத்ர்சமாக கொண்ட உங்களுக்கு திலகர் போன்ற மாமனிதரைப் பற்றி சான்றிதழ் வழங்கும் அருகதை கிடையாது…….சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை இழிவுபடுத்தவும் , அவர்களை சக தமிழர்களிடமிருந்து துண்டிக்கவும் வெள்ளையர்களால் போஷித்து வளர்க்கப்பட்டவர்கள் தான் நீதிக்கட்சியினர்……அப்படிப்பட்டவர்களின் வழித்தோன்றல்களான உங்களிடம் தேசத்தலைவர்களை பற்றி யாரும் கருத்துக்கேட்கவில்லை…..

 22. ஹரப்பn
  #22

  இன்று யார் ஆரியர் யார் திராவிடர் என்று பிரித்து பேசுவது தேவையற்றது,அதற்காக ஆர்யர் இடப்பெயர்வு என்பது பொய் என்று ஏன் கருதவேண்டும்.கஜனி படையெடுத்தார் என்பதை படிக்கும் போது ஆர்யர் இடப்பெயர்வு பற்றி படிப்பதில் என்ன தவறு.பின்னது பொய் முன்னது மட்டுமே உண்மை என்று எதற்காக நம்ப வேண்டும்.
  சரஸ்வதி நதி நாகரிகம் குறித்து இந்தப் புத்தகம் ஒரு தரப்பு வாதத்தினை முன்வைக்கிறது,ஆதரிக்கிறது என்பதால் இதனை முழு உண்மையாக ஏற்க இயலாது என்பது
  எப்படி தவறாக முடியும்.

  மரபணு சோதனைகள் மூலம் முன் வைக்கப்படும் கருதுகோள்களை மட்டும் ஆதாரமாக வைத்து வரலாற்றை எழுத முடியாது.
  இன்று ஆரியர் இன்னார் திராவிடர் இன்னார் என்று பிரிக்க முடியாது.
  பல்வேறு குழுக்களிடையே உள்ள
  வேறுபாடுகளை அடிப்படையாகக்
  கொண்டு ஆரியர்கள்,திராவிடர்கள்,
  என்று வாதிடுவது மடமை.கோத்திரம் என்பதை வைத்து ஆரியர்,திராவிட பேதம்
  காண்பது மடமை.ஏனெனில் கோத்திரம் என்பது ஒரு நம்பிக்கை,
  அதற்கு மரபணு ரீதியாகவோ, உடற்கூறு ரீதியாகவோ ஆதாரம்
  கிடையாது.
  சுருக்கமாக சொன்னால் இதில்
  ஹிந்த்துவ ஆதரவு தரப்பினையும் நான் ஆதரிக்கவில்லை,பெரியாரிய தரப்பினையும் நான் ஆதரிக்கவில்லை.

 23. கோமதி செட்டி
  #23

  பூவண்ணன்,

  தங்கள் எழுத்து தங்கள் அறியாமையையும், கட்டுரை தலைப்பை பற்றிய விவாதமாக இல்லாமல் விதண்டா வாதமாக உள்ளது.

  தற்காலத்தில் உள்ள நடைமுறைகளை அந்த காலத்தில் வைத்து பேசுவது அறிவீனம்.

  எந்த மடையன் சொன்னான். வர்ணாசிரமத்திற்குள் இருப்பவன் மட்டும் தான் உயர்ந்தவன் என்று…

  மற்றும் கோத்திரங்கள் எனக்கு தெரிந்து எந்த திருமண வலை தளங்களிலும் இல்லை…. இது எனக்கு புதிதான விசயம்.

  செட்டியார்கள், வெள்ளாளர்கள், பறையர்கள், என பல்வேறு சாதியினருக்கும் கோத்திரம் (அ) கூட்டம் என்ற உண்டு.

  எல்லா பிராமணர்களுக்கும் ரிஷிகளை வைத்து தான் கோத்திரம் உண்டு என்று எந்த மடையன் சொன்னான்….

  இப்படி அறைகுறையாக தெரிந்து கொண்டு உளறி கொட்ட வேண்டாம்.

  வர்ணாசிரமம் என்பது ஒரு சமுதாய வாழ்க்கை முறை. அதன் சட்ட திட்டங்களும் இடம் மற்றும் காலத்திற்கு ஏற்றபடி மாறுபடுகிறது.

  ஒட்டு மொத்த பாரத மக்களும் நீங்கள் நினைக்கும் வர்ணாசிரம் அல்லது பஞ்சமர் இனத்திற்குள் அடைக்கப்பட்டு உள்ளது என்று ஆப்பிரகாமிய பார்வையில் சொன்னால் அது உங்கள் அறிவின் தரத்தை காட்டுகிறது.

  கட்டுரையை சரஸ்வதி நதியை பற்றியது. அதை பற்றி விவாதம் செய்யாமல் இப்படி உளறி கொட்டுவது அறிவுள்ளோர் செய்யும் செயல் அல்ல….

 24. கோமதி செட்டி
  #24

  \\99 சதவீத உயர்சாதி ஹிந்து தலைவர்கள் சூத்திரர்கள் /பஞ்சமர்கள் யார் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாடு உடையவர்கள்.அவர்களும் வெள்ளைக்காரர்களின் ஆர்யன் திராவிடன் கோட்பாட்டை முழுமனதோடு ஒத்து கொண்டவர்கள் தான்.\\

  நீங்கள் பிரிட்டிஷ் பிராமணர்களை சொல்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. ஆனால் ஒரு சிறிய தவறு.

  ஒரு ஊரில் ஒருவன் கொலை செய்தான் என்பதற்காக ஒட்டு மொத்த ஊர் மக்களையும் கொலை கார கூட்டம் என்று சொல்வது எவ்வளவு முட்டாள் தனமோ அது போல வெள்ளைகாரனுக்கும் கிறித்துவ மிஷினரிகளுக்கும் சொம்பு தூக்கிய முட்டாள்கள் தான் ஒட்டு மொத்த உங்கள் பார்வையில் உயர் சாதி ஹிந்துகளின் பிரதிநிதி என்று சொன்னால் அதை நினைத்து நகைப்பதை விட வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை….

 25. கோமதி செட்டி
  #25

  \\பிரியங்கா காந்தியின் குழந்தைக்கும் தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைக்கும் மரபணுவில் வித்தியாசம் ஒன்றும் இருக்காது.\\

  உங்கள் கருத்தை ஒரு மரபணு ஆய்வாளர் படித்தால் விழுந்து விழுந்து சிரிப்பார் 🙂

  அது சரி எதுவும் தெரியாவிட்டாலும் எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவது பகுத்தறிவை குத்தகைக்கு வாங்கியவர்களின் பழக்கம் என்பது நன்றாக தெரியும். ஆனால் இது போன்று எழுதுவது சற்று உங்களுக்கே கொஞ்சம் ஓவராக இல்லை…

 26. கோமதி செட்டி
  #26

  \\கேப்மாரி/சோமாறி/பன்றி என்று திட்டுவது இந்தியாவில் வசிக்கும் மனிதர்களின் கோத்திரத்தை என்பதை ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.\\

  ஹாஹா… என்ன ஒரு சிந்தனை… சில பேர் போடா நீர்யானை என்று திட்டுகிறார்கள்.. போடா கழுதை, நாய் கூட என்று திட்டுகிறார்கள்.. அது எல்லாம் கூட கோத்திரமா?

  வெளி நாடுகளில் கூட விலங்குகளின் பெயரை வைத்து திட்டுகிறார்கள். ஒரு வேலை அவர்களுக்கு கூட கோத்திரம் இருக்குமோ?

  ஹ்ம்ம்.. யார் கண்டது!!!!

 27. கோமதி செட்டி
  #27

  \\100அடி 30மீட்டர் ஆஹா
  30 மீட்டர் எனபது நூறு அடி தானே
  தாம்பரத்துல 10 அடில தண்ணீர் கிடைத்தது.ஆலந்தூரில் நூறு அடி தோண்டினாலும் நாமம் தான்.தாம்பரதிலேயும் கீழே ஏதாவது நதி இல்லை சரஸ்வதியோட கிளை நதி ஓடுதோ\\

  நீங்கள் பகுத்தறிவை குத்தகைக்கு வாங்கியவர் என்று மீண்டும் நிருபித்து விட்டீர்கள் 🙂

  அவர் சொல்வது வரண்ட பாலைவன பிரதேசமாக விளங்கும் சிந்துவுக்கும் கங்கைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள தேசத்தில் உள்ள பகுதியில் 20-30 அடிக்கு தண்ணீர் கிடைப்பதை பற்றி சொல்லப்பட்டு உள்ளது.

  http://en.wikipedia.org/wiki/Sarasvati_River

  விக்கியில் அதன் வரைபடம் உண்டு. இந்த இடத்தில் தண்ணீர் கிடைப்பது அரிது….

  ஹ்ம்ம்.. ஒரு பத்தாம் வகுப்பு மாணவனுக்கு புரிய கூடிய புவியியல் விசயம் கூட உங்களுக்கு புரியாமல் போனது தாங்கள் பத்தாம் வகுப்பு கூட தாண்ட வில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது…

 28. கோமதி செட்டி
  #28

  \\ஆர்யர் இடப்பெயர்வு என்பது பொய் என்று ஏன் கருதவேண்டும்.கஜனி படையெடுத்தார் என்பதை படிக்கும் போது ஆர்யர் இடப்பெயர்வு பற்றி படிப்பதில் என்ன தவறு\\

  ஹரப்பா,

  கஜினி படை எடுத்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரம் உண்டு. ஆரிய இனவாதத்திற்கு இது வரை எந்த ஆதாரமும் தரவில்லை….அது ஒரு வடிகட்டிய பொய்….

 29. கோமதி செட்டி
  #29

  \\ஆலந்தூரில் நூறு அடி தோண்டினாலும் நாமம் தான்\\

  எப்படி வரும் தண்ணீர்.. இத்தனை வருட கழக ஆட்சியில் எல்லா ஏரியிலும் மண்ணை கொட்டி பிளாட் போட்டு விற்று ஆகி விட்டது….

 30. பூவண்ணன்
  #30

  ஐயா செட்டி
  ஆயிரக்கணக்கான கோத்திரம் இல்லாத/சிவா கோத்ரா matrimonials நடுவிலே செட்டியாரிலே ஆனைக்கால் என்று கூட ஒரு கோத்திரம் பார்த்தேன்.மேலே ஜ்ஹர்க்ஹாந்து வாழ் பழங்குடியினர் கோத்திரங்கள் என்று கருதும் பிரிவுகளில் பன்றியும் ஒன்று.
  கேப்மாரி,சோமாறி போன்றவை தமிழக அரசு MBC ஜாதி லிஸ்ட் பார்த்தால் இருப்பது தெரியும்.
  ஒவ்வொரு குழுவுக்கும் பல்வேறு கோத்திரங்கள்,இல்லை பொதுவான சிவா விஷ்ணு கோத்ரா ஆனால் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இருக்கும் பிராமணர்களுக்கு ஒரே மாதிரி கோத்திரம் இருப்பது எதை காட்டுகிறது.கோத்திரம் எனபது ஒரு குடும்பத்தின் மூலம்/ஆரம்பம் என்று தானே எடுத்து கொள்கிறார்கள் .ஒரே கோத்திரத்தில் வருபவர் அனைவரும் சஹோதர/சகோதரிகள் என்று தானே வாதிடுகிறார்கள்

  மரபணு பற்றி கொஞ்சமாவது படியுங்கள்.நீங்கள் ஆசைபடும் அளவுக்கு மரபணு துறை வளர்ந்திருந்தால் அநாதை ஆச்ரமங்களுக்கு அவசியமிருக்காது ,லட்சக்கணக்கான அநாதை ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக வாழ்க்கை கிடைக்கும் ஐயா.அவர்களின் மரபணுவை வைத்து அவர்கள் யார் ,எந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்து அவர்களிடம் சேர்த்து விடலாமே.
  அப்படி துல்லியமாக கண்டுபிடிக்கும் நிலை வந்தால் இருக்கிறது பெரிய காமெடி.அத்வானி,தொகாடியாவின் மரபணுக்களில் பெரும்பான்மை ghazni வகையறாவாக கூட வரும் வாய்ப்பு அதிகம்
  இதுவும் மரபணு பற்றிய ஆராய்ச்சி தான். இதில் நீங்கள் இப்போது ஆதாரம் கிடைத்து விட்டது என்று குதிக்கும் 131 பேரை வைத்து செய்த ஆராய்ச்சியும் வருகிறது
  http://www.nature.com/news/2009/090922/full/news.2009.935.html

 31. பூவண்ணன்
  #31

  ஐயா செட்டி
  மரபணு ஆராய்ச்சியை வைத்து முஹலாயர் படையெடுப்பு,டச்சு,கிழக்கிந்திய,பிரெஞ்சு படையெடுப்புகளை நடந்ததா /இல்லையா என்று கண்டுபிடிக்க முடியுமா.சில நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இவற்றையே கண்டுபிடிக்க முடியாத போது ஆர்யர் பற்றி அசைக்க முடியாத ஆதாரம் கிடைத்தது போல் பேசுவதை கண்டு தான் மரபணு பற்றி தெரிந்தவர் சிரிப்பார்.ஆங்கிலோ இந்தியர் என்ற இனமே உருவாகி இன்றும் இருக்கிறது.அவர்கள் மரபணுவும் மற்றவர் மரபணுவுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை தானே குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மக்களிடையே வித்தியாசம் காட்டும் மரபணுக்கள் கிடைக்கவில்லை என்ற ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன
  இப்போது யாரையும் இவர் ஆர்யர் ,திராவிடர்,மொங்கோலியர் என்று வகைபடுத்த முடியாத அளவில் அவை கலந்து விட்டன என்று சில ஆராய்சிகள் தெரிவிக்கின்றன
  இப்போதும் ஒரு ஆராச்சி மத்திய ஆசியாவில் வசிப்பவர்,ரஷ்யாவில் வசிப்பவர் காஷ்மீர் பண்டிட்,வட இந்திய சதுர்வேதி ,கன்யாகுமரி சானார்,பள்ளர்,தோடர் போன்றோரை வைத்து ஆராய்ச்சி செய்தால் மத்திய ஆசியாவில் இருப்பவரோடு தொடர்பு இருக்கும் சாத்தியங்கள் காஷ்மீர் பண்டிதருக்கு/சதுர்வேதிக்கு அதிகமா இல்லை தென்னிந்திய சாதிகளுக்கு அதிகமா எனபது தெரிந்து விட போகிறது.

 32. பூவண்ணன்
  #32

  அன்பு ஹரப்பா
  வடமொழி, தமிழ் எப்படி உருவானது ,யார் பேசிய மொழிகள் அவை
  பசுவை வழிபடும் நம்பிக்கை எப்படி வந்தது என்று நடக்கும் retrospective ஆராய்சிகள் பல காலகட்டங்களில் பல்வேறு முடிவுகளை முன்வைக்கிறது.இதில் ஒன்று சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டது மற்றது இப்போது அசைக்கமுடியாதா ஆதாரங்களுடன் அதை தரைமட்டம் ஆக்கி விட்டோம் என்று ஐந்து சதவீதம் கூட தெரியாத (இன்னும் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் சொற்களை யாரும் ஒழுங்காக படிக்க முடியவில்லை)என்று குறிப்பிட்ட அரசியல்சார்புள்ள சிலர் கூவுவது.இது தான் உள்நோக்கத்துடன் செய்யபடும் செயல் என்று கூறலாம்.
  கோத்திரங்கள் எப்படி உருவானது எனபது முக்கியமான விஷயம் இல்லையா.கலப்பு ஏற்படுவது மனிதருள் தவிர்க்க முடியாதது
  வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த வரிகளை பாருங்கள்

  http://www.brahmintoday.org/magazine/2011_issues/bt83-0110_sun.php
  யன்மே மாதா ப்ரலுலோப சரதி அனனுவ்ரத| தன்மேரேத: பிதாவ் ருந்தாம்| ஆபுரன்யோ வபத்யதாம்”|

  என்னுடையதாய், அதாவது, தன் பிதுர்க்களுக்கு அவிர் பாகம் கொடுக்கும் கர்த்தாவினுடைய தாய், தன் சுவதர்ம்ம விரதத்திற்கு விரோதமாக நடந்ததினால், உண்டான ரேதஸ், அதாவது இந்த்ரியமாக இருந்தபோதிலும் (அந்த ரேதஸ் மனோ வாக்கு செயல் தோஷங்களால் சம்பந்தப்பட்டே, தான் பிறந்திருந்தபோதிலும்), அந்த ரேதசானது, அந்த ரேதசால் உண்டான என் உடல் ஜன்மமானது, என் சாக்ஷாத் பிதா, அதாவது, என் தாயின் மணக் கணவன், அதாவது, எந்த கோத்திர குலத்தில் நானுதித்து அதன் பிதுருக்கள் திருப்திக்காக இக்கர்மாவை பூர்த்திக்கிறேனோ, அவனுடைய ரேதசாகவே மாறட்டும். அதாவது அவனுக்கே இந்தப் பலன் போய்ச் சேரட்டும். தாயின் விருத பங்கத்திற்குக் காரணமான, இதர மனிதனுக்குப் போய்ச் சேர வேண்டாம், இந்த அன்யத்தால் வந்த கேடானது நாசமாகட்டும்-என்கிறது வேதம்.

  கலப்பு இருந்தாலும் கோத்திர முக்கியத்துவம் பற்றி இந்த வரிகள் சொல்லும் செய்தி என்ன

 33. சங்கர்
  #33

  பழங்குடியினருக்குப் பின் வந்து பழங்குடியினரை ஒரங்கட்டியவர்களை எப்படி அழைப்பது? வந்தேறிகள் என்றா?

  கல், மண், வாளொடு எங்கோ முந்தோன்றி, பழங்குடியினரின் இருப்பிடத்துக்கு வந்து அவர்களைக் காட்டுக்கும், கடலுக்கும் விரட்டியடித்த வீரர்கள் என்றா?

  அல்லது, வந்தேறித் தமிழர்கள் அப்பாவிகள் தாம், பழங்குடியினர் மூலைகளில் மட்டுமே முன்தோன்றியவர்களா?

  அல்லது, கல்வி, வீரம், செல்வம், பிரிவினை என்ற எதுவும் தெரியாத அப்பாவித் தமிழன் பார்த்துக் கொண்டிருக்க வேறு யாரோ செய்த சதியா?

  என்ன கொடுமை சார் இது? எந்தப் பொய்யைச் சொன்னாலும், வருடக் கணக்கில் தொடர்ந்து சொன்னால், அப்பாவித் தமிழன் நம்பி விடுவானா?

 34. poovannan
  #34

  2001 வருடம் இந்த நூலை எழுதியவர் இந்துதுவர்களின் அழைப்பின் பேரில் பேசிய பேச்சு.நல்ல நடுநிலையாளர் அவர்.
  http://micheldanino.voiceofdharma.com/tamilculture.html

  ஒரு க்ரூப்பாய் தான்யா வேலை செய்றீங்க.உங்க சூழ்ச்சி/முயற்சிக்கு மரபு சார்ந்த/பழமைவாத/முற்போக்கு பிற்போக்கு/பின்நவீனத்துவ என்று எல்லா இடத்திலும் ஆள் வெச்சி ரவுண்டு கட்டி அடிகிறீங்க.

  இன்று கூட காஞ்சிபுரம் அருகே 3500 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருள்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்ததாக செய்தி.
  அதுலயும் குந்துமணி,காளை,ஸ்வஸ்திக் ,பொம்மை ,வடமொழி இருக்குன்னு வியாபாரத்தை விரிவு பண்ணுங்க.நடு நடுவுல கொணராத் எல்ஸ்ட் டி நனினோ ன்னு ரெண்டு மூணு வெள்ளைகாரனையும் போட்டு நடுநிலையை காட்ட மறந்துடாதீங்க

 35. poovannan
  #35

  அன்பு சங்கர்
  எல்லாரும் வந்தேறிகள் தான்.யார் நான் வந்தேறி இல்லை என்று சொன்னாலும் பொய் தான்.
  வந்தேறி இல்லை என்று பல ஆதாரங்களை உருவாக்கும் முயற்சிகள் தானே தொலைந்த நதி, கிடைத்த குதிரை இல்லை காளை ,சொப்பு எல்லாம்
  அது எப்படிங்க கன்யாகுமரி வரை பரவிய ஹிந்டுடுவமும் வேதமும் அந்த பக்கம் போகவே இல்லை.அங்க ஒண்ணும் கடல் இல்லையே குறுக்கே வர
  இன்று கூட காஞ்சிபுரம் அருகே 3500 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருள்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்ததாக செய்தி.

  இப்ப இதுக்கு யார் உரிமை கொண்டாட முடியும்.அகழ்வாராய்ச்சி பொருள்களுக்கு உரிமை கொண்டாடும் அசிங்கம் இங்கு தான் நடக்கிறது.தமிழனோ திராவிடனோ ஆர்யனோ யார் உரிமை கொண்டாடினாலும் அது நகைச்சுவை தான்.இப்போது உலகத்திலேயே பழமையான கடவுள் கிடைத்து விட்டால் எல்லாரும் அங்கு தாவி விடுவார்களா என்ன.பல்வேறு சிறு குழுக்கள் உருவாக்கிய பல்வேறு சமூகங்கள் இங்கு இருந்திருக்கும்.அதில் பல முற்றிலும் அழிந்து போயிருக்கலாம்.யார் எது என்று அறியமுடியாத அளவு இப்போது மீதி இருப்பது கலந்த கலவை தான்.
  கடலையே பார்க்காத கோடிக்கணக்கான மக்கள் இன்றும் உண்டு.கடலையே நம்பி வாழும் கோடிக்கணக்கான மக்களும் இங்கு உண்டு.கடலை தாண்டினால் பாவம் என்று தாண்டாமல் வாழ்பவர்களும் உண்டு .
  மாட்டு கறி,மான்கறி சாப்பிடுபவர்களும் உண்டு
  அவற்றை தெய்வம் என்று கும்பிடுபவர்களும் உண்டு
  இவர்கள் அனைவரும் ஒன்று தான்.இவர்களின் நாகரிகமும்,மொழியும் ,பழக்கவழக்கங்களும் என்னுடைய கிளைகள் தான் எனபது தானே இந்துத்துவம்.அதில் புகுந்த நச்சு தான் மாட்டு கறி உண்பது,பிற மதங்களை வழிபடுவது எனபது தானே அதின் சித்தாந்தம்
  இங்கு இருந்த எல்லா நாகரீகங்களுக்கும் காரணம் என் முன்னோர்கள் தான்,என் கோத்திரம் தான்,என் வேதம் தான்,என் தேவமொழி தான் எனபது சரியா
  வேதம் நம்முடையது,பைப்ளே,குரான் வேறு ஒருவருடையது என்று நிறுவும் முயற்சிகள் தானே இவை எல்லாம்.

  அந்தமானிலோ,நாகலாந்திலோ இன்றும் பழங்குடிகளாக வசிப்பவர்களுக்கு மூன்றுமே வெளியிலிருந்து வருவது தானே.அது தானே இங்கும் எங்கும் நடந்திருக்கும்.
  வேதத்தை அது சார்ந்த நாகரீகத்தை தவிர இந்த கடலால் சூழப்பட்ட mcmohan லைன் durand லைன் என்று வெள்ளையனால் எல்லை வகுக்கப்பட்ட நிலப்பரப்பில் வேறு எந்த நாகரீகமும் இருந்ததில்லை,இருந்த அனைத்தும் வேதம் சம்பந்தப்பட்டது தான் என்று கூறுவது தானே இந்த புத்தகத்தின் நோக்கம்

 36. கோமதி செட்டி
  #36

  \\அவர்களின் மரபணுவை வைத்து அவர்கள் யார் ,எந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்து அவர்களிடம் சேர்த்து விடலாமே.\\

  ஹாஹா 🙂

  நல்ல கேள்வி. ஆனால் கண்டிப்பாக படிக்காத உலக அறிவு தெரியாத ஒருவன் கேட்டால் கண்டிப்பாக நம்பி விடுவான்,

  ஆனால் எதிர்பாராதவிதமாக எனக்கு கொஞ்சம் கல்வி அறிவு உண்டு. ஆதலால் மரபியலை பற்றி எனக்கும் சிறிது அறிவு உண்டு.

  உங்கள் பேச்சை கேட்டு சிரிப்பதா இல்லை ஒரு அடிப்படை மருத்துவ (அ) மரபியல் பற்றி சிந்தனை கூட இல்லாமல் இப்படி எழுதுவதை பார்த்து சிரிப்பதா என்று எனக்கு தெரியவில்லை.

  ஒரு மரபியல் ஆய்வுக்கு எத்தனை மணி நேரம் எவ்வளவு மனித உழைப்பு தேவை என்று தெரியுமா? முதலில் ஜீன் பற்றிய அடிப்படை அறிவை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

 37. கோமதி செட்டி
  #37

  \\.நடு நடுவுல கொணராத் எல்ஸ்ட் டி நனினோ ன்னு ரெண்டு மூணு வெள்ளைகாரனையும் போட்டு நடுநிலையை காட்ட மறந்துடாதீங்க\\

  கால்டுவெல் என்ற ஐரீஸ் கிறித்துவ பாதரியார் சொல்வதை நம்புவீற்கள். ஆனால் வேறு யாராவது சொன்னால் நம்பமாட்டீர்கள். அப்படிதானே?

  அடுத்து அவர்கள் சொல்வது பொய் என்றால் நேரடியாக விவாதம் செய்யுங்கள்… அறிவியலை அடிப்படையாக வைத்து… அதை விடுத்து பிடிக்காத பெண்டாட்டி கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்று சொல்ல வேண்டாம்

 38. கோமதி செட்டி
  #38

  \\இங்கு இருந்த எல்லா நாகரீகங்களுக்கும் காரணம் என் முன்னோர்கள் தான்,என் கோத்திரம் தான்,என் வேதம் தான்,என் தேவமொழி தான் எனபது சரியா
  வேதம் நம்முடையது,பைப்ளே,குரான் வேறு ஒருவருடையது என்று நிறுவும் முயற்சிகள் தானே இவை எல்லாம்.\\

  இதில் சந்தேகம் என்ன? வேதம் சம்மந்தப்பட்ட விசயங்கள் இந்தியாவில் மட்டும் தானே உள்ளது. வேறு எந்த நிலப்பரப்பில் உள்ளது.

  பைபிலும் குரானும் எந்த நிலப்பரப்புகளை பற்றி சொல்லி இருக்கின்றன.

  நீங்கள் மீண்டும் விவாததை திசை திருப்புகிறீர்கள்..

  சரஸ்வதி நதி என்ற ஒன்று இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக எதிர் கொள்ளுங்கள். அது தான் சரியான தீர்வாக இருக்க முடியுமே தவிர… இப்படி சம்மந்தமே இல்லாமல் புலம்புதல் கூடாது

 39. கோமதி செட்டி
  #39

  \\வேதத்தை அது சார்ந்த நாகரீகத்தை தவிர இந்த கடலால் சூழப்பட்ட mcmohan லைன் durand லைன் என்று வெள்ளையனால் எல்லை வகுக்கப்பட்ட நிலப்பரப்பில் வேறு எந்த நாகரீகமும் இருந்ததில்லை\\

  நன்று.. 🙂

  இதை தான் நான் எதிர்ப்பார்த்தேன்….. இதை தானே ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் கிறித்துவர்கள் செய்தது 🙂

  அடுத்து.. ஹிந்து துவம் என்பதன் அடிப்படையை உணராதவர் என்று தான் உங்களை சொல்ல முடியுமே தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை…

  ஹிந்து மதம் நிறுவனப்பட்ட மதம் அல்ல…. அதனால் உங்கள் கூற்று ஹிந்து மதத்திற்கு பொருந்தாது.

 40. கோமதி செட்டி
  #40

  \\வேதத்தை அது சார்ந்த நாகரீகத்தை தவிர இந்த கடலால் சூழப்பட்ட mcmohan லைன் durand லைன் என்று வெள்ளையனால் எல்லை வகுக்கப்பட்ட நிலப்பரப்பில் வேறு எந்த நாகரீகமும் இருந்ததில்லை,இருந்த அனைத்தும் வேதம் சம்பந்தப்பட்டது தான் என்று கூறுவது தானே இந்த புத்தகத்தின் நோக்கம்\\

  மன்னிக்கவும்.. இதை மக்மோகன் உருவாக்கிய எல்லை என்று சொல்வது சரியான விசயம் அல்ல..

  பாரத (அ) பாரத வர்சம் என்ற சொல் பருவ காற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது…..அதனால் இது இயற்கையாக உருவாகிய எல்லை. அது சரி ஹிந்து துவம் இந்தியாவை தவிர உலகின் வேறு எந்த பகுதியில் இருந்தது என்று சொல்ல முடியுமா?

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: