ஓரினச்சேர்க்கை குற்றமா?

முரண்பாடுகளை ஏற்பதுதான் கலாசாரம். நாகரிகமும்கூட. குடும்ப முறை வளர்ந்த பிறகுதான், முதல் பாலியல் தொழிலாளி உருவாகியிருக்கவேண்டும். அன்றிலிருந்து இன்று வரை பாலியல் தொழிலாளர்கள் கெட்டவர்களாகவே  பார்க்கப்படுகிறார்கள். குடும்ப முறை வளர்ந்த பிறகு, திருநங்கைகள் மனிதர்களாகப் பார்க்கப்படுவதில்லை. இவர்களை அருவருக்கத்தக்க மனிதர்களாக மாற்றிய பெருமை கலாசாரத்தையே சாரும்.

என்னைப் பொறுத்தவரை, ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு முரணானதோ, வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியதோ அல்ல. ஒத்த எண்ணம் கொண்ட இரு ஆணோ அல்லது பெண்ணோ தங்களுக்குள் ஏற்பட்ட விருப்ப உணர்வுகளை, சிற்றின்பத்தை மற்றவர்களுக்கு தெரியாத வகையில் அந்தரங்கமாக செய்கிற ஒரு விஷயம். அப்படி இருக்கும்வரையில் இதில் எந்த தவறும் இல்லை. ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்று உபநிஷதம் சொல்வதன்படி, எல்லாமே  இறைத் தன்மையின் வெளிப்பாடுகதான்!

பலரும் நினைப்பது போல் ஓரினச்சேர்க்கை என்பது வெளிநாட்டு இறக்குமதி அல்ல. நம் புராணங்களில், கோயில் சிற்பங்களில் பார்த்த நிகழ்வுகளை, கேட்டறியாத பல கதைகளை நாம் அறிந்திருந்தால், நம் எண்ணங்களை சற்று பரந்த மனதுடன் வரவேற்றிருப்போம். குறுகிய எண்ணத்தை விட்டொழித்தாலே பல தவறான சிந்தனைப் போக்குகள் நம்மைவிட்டு விலகியோடும்.

ஒரு கணவனும் மனைவியையும் போலவே ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் உறவைத் தங்களுக்குள் வைத்துக்கொள்ளும் பட்சத்தில் பிரச்னை எதுவுமில்லை. பொதுவிடங்களில் தவறாக நடக்கும்போது, அது கண்டிக்கப்படவேண்டிய தவறாக மாறுகிறது. இது ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பொருந்தக்கூடிய உண்மை. நாகரிகச் சமூகம் என்று சொல்லிக்கொண்டு, பேருந்துகளில் பெண்களை உரசுபவர்களை உத்தமர்கள் என்றா அழைக்கமுடியும்?

பால்ய விவாகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அந்தக் காலகட்டத்துக்கு உகந்த ஓர் அமைப்பாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில், ஒரு மனிதனின் சராசரி வயது அப்போது 40. ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் மறுமணம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் இருந்திருக்கலாம். மருத்துவ உலகின் பல அறிய சாதனைகள் மனித வாழ்வை சராசரியாக 60-க்கு கொணர்ந்தபோது, ஒரு பெண் காலம் முழுக்க விதவையாக இருக்கலாமா என்ற கேள்வி மறுமணத்தை ஏற்றுக் கொண்டது. நேற்று வரை சரியாக இருந்த ஒரு விஷயம் இன்று தவறாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஓரினச் சேர்க்கையாளர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காத மனோபாவமும் நிச்சயம் ஒருநாள் வரும்.

ஓரினச்சேர்க்கை தவறு என்று சொல்பவர்கள் முன்வைக்கும் ஒரு வாதம், அது சந்ததி பெருக்கத்துக்கு உதவாது என்பது. சந்ததியைப் பெருக்கும் உறவு முறையே இயற்கையானது என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள். எனில், பிரம்மச்சாரிகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? குற்றவாளிகளாகவா? ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுப்பது போலவேதான் அவர்களையும் நீங்கள் வெறுக்கிறீர்களா? ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைக்கிறோம். ஒருவேளை அவர்களால் குழந்தை பெற இயலவில்லை என்னும் பட்சத்தில் அவர்களை என்ன செய்யப்போவதாக உத்தேசம்?

ஓரினச்சேர்க்கை இன்று அதிகரித்து வருவதற்கு காரணம் 32  வயது வரை திருமணமாகாமல் இருக்கும் ஒரு நிலை. மேலும், சமூக வாழ்வில் இன்று ஆண்களும் பெண்களும் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் குழுக்களாக தங்கிப் படிக்கும் சூழலில், தங்களுக்குள் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முனைகிறார்கள். பதின் பருவத்தில் இயல்பாக எழும் காம உணர்ச்சியைத் தடை செய்துவிடமுடியுமா?

உண்மையில், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பான உறவு குறித்தும் பின் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அதே போல், அவர்களை வெறுப்பவர்களுக்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

0

லஷ்மணன்

6 comments so far

 1. LP.Guruprasath
  #1

  ஓரினச்சேர்க்கை என்பது ஒரு நோய், அந்த பழக்கம் இல்லாத மற்றவர்களை அது பாதிக்கும் பொழுது ஒரு குற்றம்.
  ஓரினச்சேர்க்கையாளர்கள் திருத்தப்பட வேண்டியவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.
  உங்கள் கருத்தின்படி பார்த்தால், எதிகாலச் சமுதாயம் ஓரினச்சேர்க்கை என்னும் நோயால் புரையோடிப்போயிருக்கும்.
  அவரவர் சொந்த கருத்துக்களின் படியும், சூழ்நிலையின் படியும் எந்த விசயத்தையும் நியாயப்படுத்தலாம், ஆனால் அனைவருக்கும் பொதுவான நியாயம் ஒன்றே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
  நமது குடும்பத்தில் ஒருவர் ஓரினச்சேர்க்கைப் பழக்கமுடையவராக இருந்தால் நம்மாலும், நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுவார்களா? அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அது எதிர்காலச் சந்ததியினருக்கு நல்லதா?
  இன்னொரு நடைமுறைச் சிக்கல், இந்த ஓரினச்சேர்க்கைப் பழக்கம் உடையவர்கள் தங்கள் துணையை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள்?
  ஒரு பத்துபேரை அவர் ஓரினச்சேர்க்கைக்கு முயற்சிசெய்து அதில் ஒருவர் அவருக்கு கிடைக்கிறார் என்றால், மற்றவர்கள் அனைவரும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தானே, இதை எவ்வாறு ஆதரிக்க முடியும்? இன்றைய காலகட்டத்தில் பேருந்திலும், சினிமா தியேட்டரிலும், பொது இடங்களிலும் அவர்களால்
  தொந்தரவுக்குட்பட்டவர்கள் எத்தனைப் பேர்? மேலும் சாதாரண ஆட்கள் கூட இந்தப் பழக்கமுடையவர்களால் ஓரினச்சேர்க்கையாளராக மாற்றப்படும் அபாயமும் உள்ளது. எனவே தயவுசெய்து இதை நியாயப்படுத்தாமல், திருத்துவதற்கு முயற்சி செய்யுங்கள்.
  – லெ.பெ.குருபிரசாத்

 2. விஜய்
  #2

  > ஓரினச்சேர்க்கை இன்று அதிகரித்து வருவதற்கு
  > காரணம் 32 வயது வரை திருமணமாகாமல்
  > இருக்கும் ஒரு நிலை. மேலும், சமூக
  > வாழ்வில் இன்று ஆண்களும் பெண்களும்
  > கல்லூரிகளிலும் விடுதிகளிலும் குழுக்களாக
  > தங்கிப் படிக்கும் சூழலில், தங்களுக்குள்
  > இச்சையைத் தீர்த்துக்கொள்ள முனைகிறார்கள்.

  இது மிகத் தவறான எண்ணம். ஓரின இச்சை என்பது இயற்கையிலே (DNA) பொதிந்துள்ள/வளர்கின்ற ஒன்று. தாமதமாக திருமணம் நடப்பதோ, கல்லூரி விடுதிகளில் வசிப்பதோ காரணம் அல்ல. நேர்ச்சேர்க்கையாளர் ஆக உள்ள ஒருவர், கல்லூரி விடுதியில் இருப்பதால், ஓரினச்சேர்க்கையாளர் ஆக ‘மாறி’ விடமாட்டார். ஓரினச்சேர்க்கை அதிகரிக்கிறது என்பதற்கு சான்று ஏதுமில்லை. இன்று வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிவதால், அதிகரித்து இருப்பதாக ஒரு மாயை உண்டாகியிருக்கிறது. சென்ற தலைமுறையில் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பவர், மற்றவரிடம் தெரிவித்திருக்க வாய்ப்பில்லை.

 3. தமிழினியன்
  #3

  முரண்பாடுகளை ஏற்பதுதான் கலாசாரம். நாகரிகமும்கூட.

  ஹாஹா
  முதல் கோணல் முற்றிலும் கோணல்.
  முதல் வரியே தப்பு.

  தான் செய்து வந்த தவறுகளை திருத்தி புதிய வாழ்க்கையை ஏற்பதே நாகரீகம்.

 4. pandiarajan
  #4

  dear guruprasad
  sexual preference is individual liberty.homosexuality is one kind.even in heterosexual relationship people tend to select one from several partner they dot.the problem is that our perception that one natural and another is unnatural.

 5. Dr.A.Anburaj
  #5

  இதுபோன்ற குப்பைகளை எழுதாமல் இருப்பதே நல்லது.இயற்கையான பாலியல் பழக்க வழக்கங்களை மிகவும் நல்லது. சமூகம் என்ற பிரமாண்டமான கட்டடத்தின் அடிப்படை அலகு செங்கல் குடும்பம் தான். அதைக் கெடுக்கும் பல விசயங்களில் முறையற்ற பாலியல் உறவுகளும் -homosexual sex behaviours முக்கியமானவையாக நான் கருதுகின்றேன்.பிரம்மச்சரியம் பிரதிபன்னம் வீரிய லாப என்கிறது யோக சுத்திரம். பிரம்மச்சரியம் உடலுக்கும் மனதிற்கும் ஆனமாவிற்கும் உனனதத்தை அளிக்கின்றது என்கிறது. பாரதீய வித்யாபவன் வெளியிட்ட Sane Sex Order -by Pitrim Sorokin – Russian sociologist – என்ற புத்தகத்தை சுருக்கி கட்டுரை வெளியிடலாமே . மாகாத்தா காந்தி Self indulgence and Self control என்ற பத்தகத்தில் சுயகட்டுப்பாடு குறித்து நிறைய சொல்லியுள்ளார்கள். ஒரு பிரான்ஸ் நாட்டு புத்தகம்குறித்து நிறைய குறிப்பு ள்ளது. இந்தியா வீழிந்ததற்கு ” பிரம்மசரியம அனுஷ்டிப்பது குறைந்துபோனதால்தான் என்கிறார்ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தர்.தலீத் சமூதாயம் பிரம்ப்ச்சரியம் பேணினால் உயரிய முன்னனேற்றம் அடையும்.

 6. Dr.A.Anburaj
  #6

  மாதங்கள் பல கடந்து விட்டது.ஏனோ எனது கடிதத்திற்கு மறுப்பு ஏதும் பதிவாகவில்லை. சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ” இளைஞர் சக்தி ” என்ற புத்தகத்தைப்படியுங்கள். பாலியல் ஒழுங்கு எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு அப்பாவி சிறுவர்களை சுலபமாகக் கெடுதது தவறான பாலியல் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகின்றான். தவறான பாலியல் பழக்க வழக்கங்கள் சிறு வயதில் நிறைய பேருக்கு ஏற்பட்டு விடுகிறது. எனது வாழிவிலும் சுவாமி வீவேகானந்தரது புத்தகங்களை சிறு வயதில்படித்து பிரம்மச்சரியம் என்பது குறித்து 8-ம் வகுப்பு படிக்கும்போது அறிந்து கொண்டேன். ஒருமுறை ஒரு பெரியவர் என்னை சிறு உதவிக்கு தனது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றவர் மின் மோட்டார் அறையில் வைத்து எனது ஆண்குறியை பிடித்துக் கொண்டார். மிகவும் அசிங்கமாக உணர்ந்த நான் அவரை ஓங்கி மிதித்து விட்டேன்.விறு விறு என்று வீட்டை நோக்கி நடந்து வந்து விட்டேன். இன்றும் அவர் கிழவனாகி தள்ளாடி நடந்து செல்கிறார. என்னை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் அவருக்கு இன்றம் வரவில்லை.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: