செல்ஃபோனில் ஆபாசப் படம்

ஆபாசம் என்றால் சமஸ்கிருதத்தில் ‘அதைப் போன்ற’, ‘பிம்பம்’, ‘பொய்யான’, ‘தவறான’, ‘கற்பனையான’ … போன்ற பல பொருள்கள் உள்ளன. சிற்பம் என்பதற்கும் ஓவியம் என்பதற்கும் சமஸ்கிருதத்தில் சித்ர என்ற ஒரே வார்த்தைதான் பயன்படுகிறது. சித்ர = முழுவதுமான முப்பரிமாணச் சிற்பம். சித்ரார்த = புடைப்புச் சிற்பம் – அதாவது ஒரு பாதிதான் இருக்கும்; மீதிப் பாதி கல்லோடு உள்ளே போயிருக்கும். சித்ராபாச = ஓவியம். அதாவது சிற்பம் போன்றது, ஆனால் சிற்பம் அல்ல, அதன் பிம்பம் மட்டுமே. இங்கே ஆபாச என்றால் சிற்பத்தின் இரு பரிமாண பிம்பம் என்ற பொருள்பட வந்திருப்பதைக் காணலாம்.

தமிழில் ஆபாசம் என்றால் பாலியல் மேட்டர், அஜால் குஜால் விஷயம் என்று எந்த நூற்றாண்டில் ஆனதோ, அறியேன்.

பாஜக அமைச்சர்கள் இரண்டு, மூன்று பேர் செல்பேசியில் பிட்டுப் படம் பார்த்து அதுவும் நியூஸ் சானல் வீடியோவில் தெரிந்ததால் மாட்டிக்கொண்டார்கள். இவர்களை ஜெயிலில் போடவேண்டும் என்றெல்லாம் திருவாய் மலர்ந்திருக்கிறார் பெரியவர் அண்ணா ஹசாரே. பொதுமக்கள் பலர் கொதித்தெழுந்து கொந்தளிக்கிறார்களோ இல்லையோ, ஊடகங்கள் அதனைச் செய்கின்றன.

பாலுணர்வைத் தூண்டும் அசையும் அல்லது அசையாப் படங்களை, அதற்குரிய வயது வந்தவர்கள் பார்ப்பதில், என்னைப் பொருத்தமட்டில் தவறு ஏதும் இல்லை. இந்த ஆபாசப் படங்களைப் பார்த்தால் அவர்கள் கெட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும், இவர்களை அமைச்சர்களாக ஆக்கியதே தவறு என்று புனிதர்கள் பலரும் கொந்தளிப்பது கோமாளித்தனமாக இருக்கிறது.

இவர்கள் செய்த குற்றம் என்ன? சட்டமன்றத்தில் இருக்கும்போது பார்த்தது. இதில் சட்டமன்ற விதிகளுக்குப் புறம்பாக ஏதேனும் இருந்தால் அதன்படி இவர்களுக்குத் தண்டனை வழங்கலாம். ஆனால் அமைச்சர் பதவியிலிருந்து விலகச் சொல்வது அபத்தம். அதுவும், பெரும்பாலான மக்கள் தமிழ், இந்தி, இன்னபிற லோக்கல் சினிமாப் படங்களில் வரும் அப்பட்டமான பாலியல் குத்து நடனங்களை விரும்பி ரசித்தபடியே, இந்த அமைச்சர்களைக் கேள்விக்குள்ளாவது பெரும் ஜோக்.

நான் பாலியல் கதைகளைப் படித்திருக்கிறேன். இனியும் படிப்பேன். பாலியல் படங்களைப் பார்த்திருக்கிறேன். இனியும் பார்ப்பேன்.

வயது வந்தவர்கள் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுதலில் எந்தவிதத் தவறையும் நான் காணவில்லை. மறைத்துத்தான் செய்யவேண்டும் என்பதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை. என்ன, பொது இடங்களில் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ளலாம். சட்டமன்றம், வழிபாட்டு இடங்கள் என்றால் கொஞ்சம் நாசூக்காக நடந்துகொள்ளலாம்.

வேலை செய்யும் இடங்களில், வேலைக்கான விதிகள் இதுபோன்ற செயல்களைத் தடை செய்திருந்தால் இதனைச் செய்யாமல் இருப்பதுதான் சரி. அதுவும் ஆண்கள், பெண்கள் சேர்ந்து வேலை செய்யும் இடங்களில் ஆண்கள் பாலியல் படங்களைப் பார்ப்பது என்பது அருகில் அமர்ந்திருக்கும் பெண்களுக்குச் சங்கடத்தை வரவ்ழைக்கும். அதனால்கூட அக்கம் பக்கம் பார்த்து சரியாக நடந்துகொள்வது நல்லது.

ஆனால் ஒரேயடியாக இதென்னவோ, கொலைக் குற்றம் என்பதுபோல நடக்கும் கூத்துகள் தாங்க முடியவில்லை.

இந்தக் கூத்திலும் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன:

1. பாஜகவினர், தம்மை இந்து மதத்தைக் காக்க வந்த சக்தியாகச் சொல்லிக்கொண்டு அலைபவர்கள். இந்துப் பாரம்பரியம், இந்து தர்மம், யார் எப்படி உடை உடுத்தலாம், நம் சம்ஸ்க்ருதி என்ன என்றெல்லாம் லெக்ச்சர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இனியாகிலும் இப்படியெல்லாம் செய்யாமல், நாமும் பிறரும் ஒன்றுதான், எல்லோருக்கும் ஆபாசப் படங்களைப் பார்க்கப் பிடிக்கும் என்று சொல்லிவிட்டு வேலண்டைன்ஸ் டே போன்ற நேரங்களில் யாருக்கும் பிரச்னை செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு புத்தி கொடுக்கட்டும்.

2. ஆபாசப் படம் பார்க்க, பாலியல் புத்தகங்களை விற்க தடை ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. இணையத்தில் சவிதா பாபி தளம் ஒரு காலத்தில் முடக்கப்பட்டது. இதுபோன்ற சட்டபூர்வமான தடைகள் எல்லாம் விலக்கிக்கொள்ளப்படவேண்டும். இந்தச் சட்டச் சீர்திருத்தங்களை பாஜக முன்னின்று நடத்திவைத்தால் நன்றாக இருக்கும். கர்நாடக மாநிலத்திலிருந்தே ஆரம்பிக்கலாம்.

0

பத்ரி சேஷாத்ரி 

29 comments so far

 1. V.balamurugan
  #1

  Very good comment and society awarenes. Nice

 2. நாகு
  #2

  இதிலென்ன தப்பு. ஒரு பெரிய ஸ்க்ரீனைக் கட்டி விதான சௌதாவில் சட்டசபையே கூடி பலான படம் பார்க்கவேண்டியதுதானே? 🙂

 3. சோமசுந்தரம்
  #3

  திரு.பத்ரி, உங்களளவு அறிவும் தெளிவும் உள்ளவர் அதை செய்வது அடுத்தவரை பாதிக்காமல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எல்லோருக்கும் அந்த அறிவு இருக்கிறதா? நம் நாட்டில் பாலியல் கல்வி இன்னும் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. பல பேர் காஞ்ச மாடு காம்பில் பாய்ந்த கதையையே இன்னும் செய்து கொண்டிருக்கின்றனர், திருமணம் ஆகியும் கூட. இது பற்றி அடிப்படை அறிவு இல்லாத (80% அடித்து சொல்லலாம்) மக்களிடம் படாரென்று பலூன் உடைப்பது போல் உடனடியாக எல்லாம் நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்ள முடியாது. இதன் பற்றிய அறிவை சிறு வயதில் இருந்தே சொல்லித்தருவது இந்த காலத்தில் அவசியம் அதன் முக்கியத்துவத்தை பற்றி எழுதுங்கள். அதே போல் எங்கே எது செய்வது என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அந்த நாகரிகம் கூட தெரியாத இவர்கள் ஒரு பொறுப்பான பதவியை எப்படி வகிக்க முடியும்?

 4. விஜயன்
  #4

  //பாலுணர்வைத் தூண்டும் படங்களை பார்ப்பதில், என்னைப் பொருத்தமட்டில் தவறு ஏதும் இல்லை.//
  //மறைத்துத்தான் செய்யவேண்டும் என்பதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை.//
  //கொஞ்சம் கவனமாக கொஞ்சம் நாசூக்காக நடந்துகொள்ளலாம்.//
  //அக்கம் பக்கம் பார்த்து சரியாக நடந்துகொள்வது நல்லது.//

  அதாவது நான் என்ன சொல்ல வர்றேன்னா.. ஆங்.. அதான்.. அதேதான்..

 5. விஜயன்
  #5

  ஒரு ஊருல ஒரு ராஜாவுக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்து ஊர்ல இருக்கிற எல்லா கல்யாணம் ஆனா ஆண்களையெல்லாம் கூப்பிட்டாராம். கூப்பிட்டு பொண்டாட்டிப் பேச்சை கேட்டு நடக்கிறவங்கல்லாம் இந்தப்பக்கம் நில்லுங்க. கேக்காதவங்கெல்லாம் அந்தப்பக்கம் நில்லுங்க ன்னாராம். ஒரே ஒருத்தனைத் தவிர எல்லாரும் கேட்டு நடக்கிற பக்கம் போயிட்டாங்களாம். ராஜ பயங்கர குஷாலாயிட்டு அவனைப்பார்த்து நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா.. ன்னாராம். அதுக்கு அவன், வீட்டை விட்டு கெளம்பும்போது எம்பொண்டாட்டி “எல்லாரும் நிக்கிற பக்கத்துக்கு எதிர்த்தாப்புல நில்லு. அப்பதான் உன்னை எல்லாருக்கும் தெரியும்” ன்னு சொன்னா.. அதனாலத்தான் இந்தப்பக்கம் நிக்கிறேன் எசமான் அப்படின்னானாம்.

  you too badri…..?

 6. மாயன்:அகமும் புறமும்
  #6

  சட்டசபை என்பது மற்ற வேலை செய்யும் இடம் மாதிரி ஒரு இடம் மட்டும் தானா? அப்போது அங்கே என்ன மாதிரியான விவாதம் நடந்து கொண்டிருந்தது என்பதெல்லாம் சீரியஸான விஷயம் இல்லையா? பத்ரி ரொம்ப ‘புத்திசாலித்தனமாக’ நழுவுகிறார் அவர்கள் இந்த இடத்தில் இந்த காரியத்தைப் செய்தார்கள் என்று கண்டனம் செய்வதை விட்டுவிட்டு.அவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது மிகச் சரி. வீட்டில் உட்கார்ந்து நிம்மதியாக பார்க்கட்டும்.படம் பார்த்ததே தப்பு என்று கிளம்பியிருப்பது காங்கிரஸின் அரசியல்.சட்டசபையில் பிரச்னையைப் பற்றிப் பேசாமல்,கவனிக்காமல் இருந்து மூன்று கழூதைகளை வெளியே அனுப்பியது சரியே! ஜெயிலில் போடமுடியும் எனில் அதையும் செய்யணும்.

 7. Dwarak R
  #7

  Badri, are you joking?. These guys are suppose to address / discuss policies and issues not to watch porn @ assembly. Would you allow your staff to watch porn @ nhm, where they are suppose to work?.

 8. சரவணன்
  #8

  சட்டசபையில் அமைச்சருக்குரிய கடமையைப் புறக்கணித்தார்கள். அது தவறு. ஆகவே வேலை போயிற்று.

  *** ஆபாசப் படம் பார்க்க, பாலியல் புத்தகங்களை விற்க தடை ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ***

  ஆஷ்லி டெல்லிஸ் என்ற ஐஐடி – ஐதராபாத் புரொபஸர் அமெரிக்காவிலிருந்து தன் சொந்தப் புத்தகங்களைப் பார்சலில் வரவழைத்தார். அவை பெண்ணிய அரசியல் தொடர்பானவை. அவற்றில் சில போர்னோகிராபியை அக்காடமிக் ரீதியில் ஆய்வு செய்பவை. அந்தப் புத்தகங்களை அடி மூடர்களான கஸ்டம்ஸ் அதிகாரிகள் பரிமுதல் செய்துவிட்டனர். (அவர்கள் தனியாகப் படங்களை மட்டும் பார்த்திருப்பார்கள் என்பது உறுதி.) டெல்லிஸ் தனது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிறு பத்தியில் இதனை எழுதிக் கண்டித்திருந்தார். (அவர் பிறகு கே- ஆக்டிவிஸ்ட் என்பதால் பொய்க் காரணங்கள் காட்டி ஐஐடியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.)

 9. சரவணன்
  #9

  மறுமொழி # 7 முழுவதும் ஆங்கிலத்தில் இருக்கிறது. ஆங்கில மறுமொழிக்குத் தடை என்ற விதி என்ன ஆனது?

 10. Venkat
  #10

  http://www.vakilno1.com/bareacts/indianpenalcode/s292a.htm

  http://www.vakilno1.com/bareacts/informationtechnologyact/s67.htm

 11. களிமிகு கணபதி
  #11

  பத்ரி,

  பாலியல் படங்கள் பார்ப்பது தவறு இல்லை என்று எண்ணுபவர்கள் பார்க்கட்டும். ஆனால், இடம் பொருள் உள்ளதே.

  இந்த அமைச்சர்களில் ஒருவர் சில நாட்கள் முன்புதான் பெண்கள் ஒழுங்காக ஆடை அணிய வேண்டும் என்று அட்வைஸ் செய்தார்.

  இது என்ன போலித்தனம் ?

  உலகம் இப்படிப்பட்ட போலிகளால் நிரம்பியது.

  கொசுறு: பிடிபட்டவர்கள் இந்த மூன்று பேர் மட்டுமே. அந்தப் படத்தை எல்லா உறுப்பினர்களும் அன்று பார்த்ததாக எதிர்க்கட்சி உறுப்பினரான ஒரு பெண் சொல்லி இறுக்கிறார்.

  அப்படியானால் ஏன் பாஜகவை மட்டும் கேமரா கவனித்தது ?

  .

 12. அ. சரவணன்
  #12

  எந்த ஒரு விஷயத்தையுமே சட்டென்று ‘உணர்வு பூர்வமாக’ அணுகாது , அதிலிருந்து தள்ளி நின்று யோசிப்பவர் திரு.பத்ரி அவர்கள் என்பது நாம் அறிந்ததே. எனவே இவ்விஷயத்தில் அவரின் கருத்து குறித்து எனக்கு அதிர்ச்சியில்லை.

  இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம், கர்நாடக சட்டசபையில் ‘மாநிலத்தின் வறட்சி நிலை’ குறித்து விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. வெறும் எம்.எல்.ஏவாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை.. அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு, அந்த விவாதத்தில் என்ன பேசுகிறார்கள்… அதில் நம் பங்கு என்ன இருக்கிறது என்ற அக்கறை இருக்க வேண்டாமா? ஆக, இங்கே பிரச்சினைக்குள்ளாகியிருப்பது அதை நிகழ்த்திய இடமும், நேரமும்தான்.

  இப்போதே கட்சிகளிடையே பல சுவாரசியமான விவாதங்கள் தொடங்கிவிட்டன. உங்க எம்.எல்.ஏ அந்தப் பெண்ணை கற்பழித்தார், அந்த கட்சித்தலைவர் சினிமா நடிகையுடன் தொடர்பில் உள்ளார், இவர்கள் சும்மா படம்தானே பார்த்தார்கள் என்று கிளப்புகிறார்கள்

 13. சொந்தல் தியாகு
  #13

  சங்க இலக்கியங்களில் கூட காதலியின் முலையை ரசிக்கும் பாக்கள்தான் உள்ளன, வேற்றுப்பெண்களை அல்ல. விரைவின் மகளிர் போற்றப்படுவதும் இல. பிறவை ஆரியம் கற்றுத்தந்த கலாச்சாரமே, நமதல்ல நாயைப்போல் அலைவது

 14. Lakshmana Perumal
  #14

  கர்நாடக அமைச்சர்கள் மூன்று பேர் சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்த விஷயத்தில் எனது பார்வையை எனது வலைத்தளமான www,lakshmanaperumal.wordpress.com ல் தெரிவித்துள்ளேன். கீழ்க்காணும் link வழியாக போய் பாருங்கள்.

  http://lakshmanaperumal.wordpress.com/2012/02/10/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa/

 15. Shan Riyaz
  #15

  //இணையத்தில் சவிதா பாபி தளம் ஒரு காலத்தில் முடக்கப்பட்டது. இதுபோன்ற சட்டபூர்வமான தடைகள் எல்லாம் விலக்கிக்கொள்ளப்படவேண்டும். இந்தச் சட்டச் சீர்திருத்தங்களை பாஜக முன்னின்று நடத்திவைத்தால் நன்றாக இருக்கும். கர்நாடக மாநிலத்திலிருந்தே ஆரம்பிக்கலாம்//

  இதைப் பற்றிய விழிப்புனர்வை மக்களிடம் ஏற்படுத்தும் முகமாக நீங்களே ஒரு ‘அஜால் குஜால்’ தொடரை தமிழ்பேப்பரிலோ அல்லது உங்கள் வலைப்பக்கத்திலோ எழுதலாமே பத்ரி..

 16. சக்திவேல்
  #16

  // வேலண்டைன்ஸ் டே போன்ற நேரங்களில் யாருக்கும் பிரச்னை செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு புத்தி கொடுக்கட்டும். //

  பா.ஜ.க காரர்கள் இதுவரை பிரசினை செய்ததாக செய்தி வந்ததாக நினைவில்லை.

  சிவ சேனா, ராம சேனா போன்ற அடாவடி குழுக்கள் தான் செய்தார்கள் – இவர்கள் முற்றிலும் வேறான குழுக்கள்.

  கேரளாவில் சி பி எம்மின் இளைஞர் அணிக் காரர்கள் இதை விட மோசமாக பெண்கள் கூடுமிடங்களில் அடாவடி செய்திருக்கிறார்கள்.

 17. CleanKo
  #17

  எனக்கு மூன்று கேள்விகளுக்கு பதில் தேவை:

  இவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது , அவர்கள் குறை தீர்ப்பதற்கா இல்லை இதற்கா?

  அடுத்த தேர்தலில் தைரியமாக , ஆமாம் நாங்கள் இப்படிப்பட்ட படங்களை த்தான் சட்டசபையில் பார்ப்போம் என்று பகிரங்கமாக அறிவிப்பார்களா ?

  மெஜஸ்டிக்கில் சிலர் இந்தமாதிரி படங்களை பார்த்தால் ஒன்றும் நடவடிக்கை எடுக்கமாட்டார்களா?

 18. poovannan
  #18

  முற்போக்கு என்றால் ஹுசைன்.தஸ்லிமாவை,நீல படத்தை பார்ப்பதை ஆதரிப்பது பிற்போக்கு என்றால் அதை எதிர்ப்பது என்பதிலிருந்து எப்போது தான் விடுபட போகிறோமோ
  இவை அனைத்தும் trivia .ஆனால் சங்க பரிவாரத்தை பார்த்து சிரிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
  இதே கர்நாடகத்தில் தமிழகம் போல மதிய உணவோடு முட்டை போட எடுக்கப்பட்ட முடிவிற்கு எதிர்ப்பு கிளம்பிய போது (பல கோடி மக்களுக்கு உதவும் விஷயம்)சங்க பரிவாரம் ஆடிய ஆட்டத்தில் பணிந்து திட்டம் கைவிடபட்டதே அது நீல படம் பார்ப்பதை விட ஆயிரம் மடங்கு கேவலாமான செயல்.முட்டை வேண்டாம் என்றால் வாழை பழம் கேள்.ஆனால் யாருக்குமே முட்டை போட வேண்டாம் என்று போராடுவதும் அதை ?முற்போக்காளர்கள் லாவகமாக ஒதுக்குவதும் ஒழிந்தால் தான் (கைக்கூலி இயக்கங்கள் அங்கு தழைக்கவில்லையே ,முட்டை வேண்டாம் என்று கூறும் வாயை அடைக்க)முற்போக்கு.
  இன்றும் இதே கர்நாடகத்தில் கோவில்களில் அன்னதானம் சில சாதிகளுக்கு தனியாகவும் மற்றவருக்கு தனியாகவும் உண்டு.அது நம் முற்போக்காளர்கள் கண்ணில் படாது.ஒரு கோவிலில் எச்சில் இலையில் உரண்டு பிறந்தால் நோய் சரியாகும் என்ற பழக்கம் உண்டு.அதற்க்கு சங்க பரிவாரம் முழு ஆதரவு.எத்ரிக்க முயற்சித்தவர்களுக்கு அடி உதை.அதை எதிர்த்து போராடினால் முற்போக்கு.ஒரு குறிப்பிட்ட சாதியினர் உண்ணும் எச்சில் இலைகளில் உருண்டால் தான்.அனைவரையும் உணவு உண்ண வைத்தால் தன்னால் அந்த பழக்கம் ஒழிந்து விடும்.ஏன் என்றால் சாமி சாப்பிட்ட எச்சில் இலைகளுக்கு மட்டும் தானே சக்தி.
  இதற்க்கு ஆதரவாக சங்க பரிவாரம் அதன் சட்ட மந்திரி சங்கு கொண்டு சீறுவது கேவலமாக படுவதில்லை.ஆனால் தஸ்லிமா.ஹுசைன் மிகவும் முக்கியம்

 19. poovannan
  #19

  துக்ளக் இதழில் டி வீ வரதராஜன் சில வாரங்களுக்கு முன் குஜாராத் புகழ் பாடி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.அதில் அவர் பெருமையாக எப்படி அங்கு செல்லும் ரயில் வண்டிகளில் முட்டை கூட கிடைக்காது என்று பெருமைகளில் ஒன்றாக அடுக்குகிறார்.அதையும் ஒரு பத்திரக்கை பிரசுரம் செய்கிறது.பல கோடி மக்களின் உணவு கேவலம் என்று எண்ணுவது,அது இருந்தால் நல்லவர்கள் ஒன்றும் வாங்க மாட்டார்கள் என்று சங்க பரிவாரத்தின் வெற்றி முரசு ஒலிக்கும் இடம் அதை ஒழித்து கட்டியதை பெருமையாக எழுதுவது என்ன நக்கீரனின் மாட்டு கறி கட்டுரையை விட உயர்ந்ததா.இரண்டும் ஒன்று தான்.ஆனால் நக்கீரன் தான் முர்போக்களார்களால் திட்டபடுகிறது.திட்டுவதில் தவறில்லை.ஆனால் அதே போன்ற கேவலத்தை செய்யும் மற்றவை புகழபடுவது தான் ஆச்சரியம் அளிக்கிறது
  மதிய உணவில் முட்டையும் குஅஜராட் செல்லும் வண்டிகளில் முட்டையும் தஸ்லீமா,ஹுசைன்,நீல படம் பார்ப்பது ஆதரிக்கும் முற்போக்கை விட பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள்.அதை மூடிமறைப்பது தான் முற்போக்கா .அதை போராடி பெற்று கொடுத்து விட்டு புத்தகங்களுக்கு கொடி பிடிக்கலாம்.

 20. Ganpat
  #20

  பலான பத்ரி சார்!

  எனக்கொரு உம்மம்ம தெரிஞ்சாகணும்!!

  அடுத்து பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், விவாதத்தின் போது, பின்வரிசையில் அமர்ந்துள்ள ஒரு MP, சுயஇன்பம் அனுபவிப்பதை (masturbate)காமிரா படம் எடுத்துவிட்டால் இதை குற்றமென கருத வேண்டுமா கூடாதா?

  ஏனெனில் இதற்கான சட்டம் எதுவும் கிடையாது.

  உங்களைப்போன்றவர்கள் “யார்தான் இதை செய்யவில்லை?” என இதை நீர்க்க ( I mean இந்த செயலை ;-)) )வைப்பார்கள்.

  சம்பந்தப்பட்டவர்களோ இது மோசடி வேலை; காமிராவை ஆட்டி இவ்வாறு படம் எடுத்துவிட்டார்கள் என்றோ அது முடியாத பட்சத்தில்
  “எனக்கு வலிப்பு நோய் உண்டு” என மருத்துவ சான்றிதழ் கொடுத்தோ தப்பித்து விடுவார்கள்.

  அமுல நிறுவனத்தினர் “MP shakes (in) Parliament” என அருமையான விளம்பரம் ஒன்றை
  கொடுத்துவிடுவார்கள்!

 21. Suppamani
  #21

  Dear Mr.Vijayan,

  You are correct.

  Always Padri writes against mass opinion,whether it is right or wromg,just to be talked, like Thuglak Edior CHO

  Suppamani

 22. Chandramowleeswaran
  #22

  ஆபாசம் என்றால் சமஸ்கிருதத்தில் என்ன அர்த்தம் என்று விளக்கம் சொல்லிக் கொள்லலாம்

  ஆனால் இந்தியன் பீனல் கோட் எனப்படுவதான இ.பிகோ வில் obscene என்று எப்படி சொல்லப்பட்டிருக்கின்றதோ, அதன் படியே அர்த்தமாகும் என்பது சட்ட சபைக்குள் செல்போனில் அப்படியான சினிமா பார்த்தவர்களுக்கும் பொருந்தும்

  இ.பி.கோ வில் செக்‌ஷன் 292 ஐ த் தெரிந்து கொள்ளாமல் படம் பார்த்தாலும், இனிமேல் பார்ப்பேன் என்றாலும் 292 பொருந்தி வரும்

  பழைய சிற்பங்களில் “இப்படி அப்படி” இருக்கிறது என்று தமிழ் பேப்பரில் ஆதரவுக் கட்டுரை வரலாம் என்று யூகித்து

  This section does not extend to— (a) any book, pamphlet, paper, writing, drawing, painting, repre­sentation or figure— (i) the publication of which is proved to be justified as being for the public good on the ground that such book, pamphlet, paper, writing, drawing, painting, representation or figure is in the interest of science, literature, art or learning or other objects of general concern, or (ii) which is kept or used bona fide for religious purposes; (b) any representation sculptured, engraved, painted or otherwise represented on or in— (i) any ancient monument within the meaning of the Ancient Monu­ments and Archaeological Sites and Remains Act, 1958 (24 of 1958), or (ii) any temple, or on any car used for the conveyance of idols, or kept or used for any religious purpose

  என்பதாக விலக்களித்து செப்டம்பர் 7 1969 ம் வருஷமே ஒரு திருத்தம் போட்டார்கள்

  இவர்களை அமைச்சர் பதவியிலிருந்து விலகச் செய்வது அபத்தம் என்ற சொல்பவர்களுக்கு ரத்தன் லால் புத்தகம் வாங்கிப் படியுங்கள் என சிபாரிசு செய்யலாம்..

 23. குழப்பவாதி
  #23

  நீங்கள் வைக்கும் ஓரளவு ஒத்துபோக கூடியது தான்.ஆனால் சட்டசபையில் படமல்ல.குறுஞ்செய்தி பார்த்திருந்தாலும் தவறு தான்.பாலியல் சம்பந்தப்பட்ட படங்களை பார்ப்பதோ,படிப்பதோ தவறானதல்ல என்பதை நானும் ஒப்புகொள்கிறேன்.

 24. paul
  #24

  For person like Badri who say selling book is a business will write in such manner ..People must see a documentary called ‘The day my god died’ …Every one personnal wish including tat politicians can’t be questioned here but question is how their personnal desire corrupts society or home is matter.How brothels,human trafficking interwind with politicians,police official business…How Agneepath movie made a student to increase his desire to kill his school teacher…People like Badri try to advocate for politicians indirectly. Badri should go to Nepal or atleast see that short film..Tamil Parambariyam Pathi arangam nadathuna mattum pothathu..All are armchair philosophers…

 25. Ganesh
  #25

  கடைசி வரை என்ன படம் பார்த்தாங்கனு தெரியாம போச்சே..

 26. கர்நாடக எம்.எல்.ஏ
  #26

  யாரப்பா அங்கே இவரை சபாநாயகர் ஆக்குங்கபா.. நல்ல பதிவு நன்றி பத்ரி 🙂

 27. களிமிகு கணபதி
  #27

  @ Ganesh

  //கடைசி வரை என்ன படம் பார்த்தாங்கனு தெரியாம போச்சே..//

  அவர்கள் பார்த்தது இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை பற்றிய டாக்குமன்டரி.

  அதை ஆபாச கிளிப் என்று மீடியாக்கள் கூப்பாடு போடுகின்றன.

  அந்த அமைச்சர்கள் நாங்கள் பார்த்தது ஆபாசப் படமா அல்லது டாக்குமண்டரியா என்பதை மீடியாக்கள் சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள்.

  போங்கடா இளிச்சவாயனுங்க்களா என்று சொல்லி விட்டது மீடியா.

  .

 28. S. Rajesh Kumar
  #28

  Sex is the human nature but the culture (learned rule of human society)instructed us to hidden the nature from public. My view is there is no wrong in watching such films but there should be a place to watch. The media that published this issue is beyond the media ethics. Because this will reach all the section of public especially children. The issue can be solved with in the closed doors by warning them.

  If I am a decision maker I will take actions against media that published this silly issue in order to make advantages.

  Sorry if I hurt anybody but my intention is realization of relevant people. Please think of yourself before showing your finger to others.

  Thank you for reading my views

 29. Suresh
  #29

  “எழுதுவதில் சொதப்புவது எப்படி” னு பத்ரி வச்சு படம் எடுக்கலாம். The ministers are liable to resign based on ethics @ workplace.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: