பட்டாம்பூச்சி குறிப்புகள் 6 : ‘ஆயிரம் பக்கங்களில் பிரபாகரன்!’

பழ. நெடுமாறன் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீளும் பிரபாகரன் : தமிழர் எழுச்சியின் வடிவம் என்னும் நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.  புத்தகக் கண்காட்சி கடை எண் 156, 157 தமிழ் மண் பதிப்பகத்தில் முன்பணம் செலுத்தலாம். நூல் விலை, 800. சலுகை விலை 600. பிரபாகரனுடனான 30 ஆண்டு கால நட்புறவை விரிவாக விவரித்து இந்நூலை நெடுமாறன் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ‘தமிழீழத்துக்கு 4 முறை நேரில் சென்று விரிவாகப் பயணம் செய்து சேகரித்து அபூர்வத் தகவல்கள்; பிரபாகரனே மனம் திறந்து பகிர்ந்துகொண்ட செய்திகள்; பிரபாகரனின் பெற்றோர், சகோதர-சகோதரிகள், நெருங்கிய உறவினர்கள், இளம் பருவத்துத் தோழர்கள், புலிகளின் மூத்தத் தளபதிகள் ஆகியோர் தெரிவித்த விவரங்கள்; பிரபாகரன் கைப்பட எழுதிய கடிதங்கள்’ ஆகியவை இந்நூலில் இடம்பெறுகின்றன. இப்புத்தகம் குறித்து மேலும் அறிய தொடர்பு கெள்ளவேண்டிய தொலைபேசி எண் : 23775536.

பாரதி பதிப்பகம்வெளியிட்டிருக்கும் முக்கிய புத்தகம். தமிழ்ப் பதிப்புலகம் பற்றியும் அதை இயக்கிய முக்கிய ஆளுமைகள் பற்றியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.

சுருக்கமான இந்திய வரலாறு, வஉசி வாழ்க்கை வரலாறு, தேசியக் கொடியின் கதை போன்ற புத்தகங்கள் பப்ளிகேஷன் டிவிஷனில் சகாய விலையில் கிடைக்கின்றன.

சீதை பதிப்பகத்திலும் பல புத்தகங்கள் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. புத்தகக் கண்காட்சி நிறைவடையும் நேரம் என்பதால் திடீரென்று இவ்வாறு விலை குறைத்திருககக்கூடும். அபிதான சிந்தாமணி, பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளிட்ட இலக்கிய, இலக்கண நூல்களை இங்கே வாங்கலாம்.

தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் Marxim Gorky என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். மார்க்ஸின் கார்க்கி என்று போட்டிருந்தால்கூட பரவாயில்லை.

ஆக்ஸ்ஃபோர்ட்டில் கண்கவரும் கிளாஸிக்ஸ் அணிவகுத்து நிற்கின்றன. நிரந்தர ஆயுள் கொண்ட இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

பண்டைய இந்தியா, ஆரியர்களின் இந்தியா, கோசாம்பியின் இந்தியா, ஆர்.எஸ். சர்மாவின் இந்தியா, நம்பூதரிபாட்டின் இந்தியா, கேதரின் மாயோவின் இந்தியா, காந்தியின் நேருவின் இந்தியா, சுனிதிகுமார் கோஷின் இந்தியா, பகத் சிங்கின் இந்தியா… இந்திய வரலாறு பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாக பல நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன. மேலே உள்ளது Orient Blackswan வெளியிட்ட நூல்.

இன்றோடு சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவடைகிறது என்பதால் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

இன்றைய சிபாரிசு. கிட்டத்தட்ட 1500 பக்கங்களில் ரவீந்திரநாத் தாகூரின் கட்டுரைகள் இரு பகுதிகளில் சாகித்திய அகாடெமியில் கிடைக்கிறது. விலை ரூ.250.

0

பட்டாம்பூச்சி

15 comments so far

 1. அ. சரவணன்
  #1

  பிரபாகரனைப் பற்றிய செய்திகளை பழ.நெடுமாறனை விட வேறு யாரும் சிறப்பாக சொல்லி விட முடியாது. அந்த அடிப்படையில் இது ஆயிரம் பக்க பேழையாக பாதுகாக்கலாம். அதே வேளையில் இது “ஒரு சார்பு” மட்டுமே. பிரபாகரன்/விடுதலைப்புலிகள் பற்றிய “மறுபக்கம்” குறித்த தகவல்களை யாரேனும் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா?

 2. Its me!
  #2

  //பிரபாகரனைப் பற்றிய செய்திகளை பழ.நெடுமாறனை விட வேறு யாரும் சிறப்பாக சொல்லி விட முடியாது. அந்த அடிப்படையில் இது ஆயிரம் பக்க பேழையாக பாதுகாக்கலாம். அதே வேளையில் இது “ஒரு சார்பு” மட்டுமே. பிரபாகரன்/விடுதலைப்புலிகள் பற்றிய “மறுபக்கம்” குறித்த தகவல்களை யாரேனும் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா?//
  அது தான் இந்திய மற்றும் சில தேசிய (தமிழ்) ஊடகங்களில் தினம் தினம் வெளி வருகிறதே. போதாதா ? தனியே வேறு வர வேண்டுமா என்ன ?

 3. RANGARAJAN A L
  #3

  //அது தான் இந்திய மற்றும் சில தேசிய (தமிழ்) ஊடகங்களில் தினம் தினம் வெளி வருகிறதே. போதாதா ? தனியே வேறு வர வேண்டுமா என்ன ?//

  அது சரி. பழ. நெடுமாறன் சொல்லுவது மட்டும் தான் உண்மை. மற்றவை யாவும் உண்மை அல்ல. நான் தமிழன் அதனால் கண்ணை மூடிதான் வைத்திருப்பேன் என்றி அடம் பிடித்தால் யார் என்ன செய்ய முடியும்.

  Its me ! நாம் நெருங்கிய நண்பர்கள் ஆகி விடுவோம் போலிருக்கிறதே !

 4. Its me!
  #4

  //அது சரி. பழ. நெடுமாறன் சொல்லுவது மட்டும் தான் உண்மை. மற்றவை யாவும் உண்மை அல்ல. நான் தமிழன் அதனால் கண்ணை மூடிதான் வைத்திருப்பேன் என்றி அடம் பிடித்தால் யார் என்ன செய்ய முடியும்.//
  தமிழன் கண் திறக்க வேண்டும் என்பது தான் எமது விருப்பமும். திறந்தால் தான், ஒரு தரப்பு செய்திகள் மட்டும் ஊடக வாயிலாக இலவச பிரசாரங்களாக செய்யப்படுவது கேள்விக்கு உட்படுத்தப்படும்.

  //Its me ! நாம் நெருங்கிய நண்பர்கள் ஆகி விடுவோம் போலிருக்கிறதே !//
  ஹ ஹா!

  அதில் எமக்கேதும் சங்கடம் இல்லை – தங்களுக்கு ?! 🙂

 5. சான்றோன்
  #5

  @its me..,

  //அது தான் இந்திய மற்றும் சில தேசிய (தமிழ்) ஊடகங்களில் தினம் தினம் வெளி வருகிறதே. போதாதா ? தனியே வேறு வர வேண்டுமா என்ன ?//
  துக்ளக் மற்றும் தினமலர் மட்டுமே தமிழ் ஊடகங்கள் என்று வைத்துக்கொண்டால் மட்டுமே நீங்கள் சொல்வதை ஏற்க முடியும்……..தமிழில் வேறு எந்த பத்திரிக்கையும் விடுதலைப்புலிகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை……….

 6. Its me!
  #6

  //துக்ளக் மற்றும் தினமலர் மட்டுமே தமிழ் ஊடகங்கள் என்று வைத்துக்கொண்டால் மட்டுமே நீங்கள் சொல்வதை ஏற்க முடியும்……..தமிழில் வேறு எந்த பத்திரிக்கையும் விடுதலைப்புலிகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை………./
  ஒரு வேளை மற்ற பத்திரிக்கைகள் அப்பட்டமான சார்பு நிலையை விரும்பாமல் இருக்கலாம்.

  விடுதலைப்புலிகளின் கோர முகத்தை சிறப்பிதழ் போட்டு வெளியிட்டதால் மட்டும் அவை இரண்டும் நடுநிலை பத்திரிக்கைகள் ஆகி விடுமா என்ன ?

  நடுநிலை என்பது ஈழ விடுதலை போராட்டம் (அல்லது இலங்கை பிரச்சினை) விடுதலைப் புலிகளுக்கும் அப்பால் நீண்டது என்பதும், ஒரு ஆயுத போராட்டக் குழுவிற்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கும் உள்ள வேறுபாடுகள் என்பது போன்ற உண்மைகளை நடு நிலையில் சொல்வதாகும். அப்படி ஒரு பத்திரிக்கை தளத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

  மற்றபடி இதுகாறும் ஈழ பிரச்சினை உயிரோட்டமாக இருப்பதற்கான முக்கிய காரணியான புலிகள் அமைப்பின் மீதான வயிற்றெரிச்சலே துக்ளக் மற்றும் தினமலர் போன்ற பத்திரிக்கைகளின் நிலைப்பாடுகளுக்கு அடிப்படை. இதனை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் உங்களது விருப்பம்.

 7. சான்றோன்
  #7

  @It’s me……..

  ” ஒரு ஆயுத போராட்டக் குழுவிற்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கும் ”

  நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள்…….ஆனால் விடுதலைப்புலிகள் தங்களை அப்படி நினைக்கவில்லை…..தங்களை ஓர் இணை அரசாங்கமாக , முழு ராணுவமாக கற்பனை செய்து கொன்டார்கள்…….அதனால்தான் அழிந்தார்கள்…….
  மேலும் இலங்கை தமிழர்களின் இன்றைய துன்பத்திற்கு முழுமுதல் காரணம் விடுதலைப்புலிகள்………..இரண்டாவது காரணம் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள்……..பிழைக்க சென்ற நாட்டில் பாடுபட்டு சம்பாதித்த பண‌த்தை மூளையில்லாமல் ஆயுதக்குழுக்களுக்கு வாரியிறைத்து , தீவிரவாதத்தை தழைக்கச்செய்தார்கள்……மூன்றாவது மிக முக்கியமான காரணம்., வைகோ, நெடுமாறன்,சீமான் [ திடீர் தமிழர்] போன்ற புலம்பெயர் தமிழர்களின் பணத்துக்கு அடித்துக்கொள்ளும் தேசவிரோதிகள்………புலிகளை எதார்த்தை உண‌ராமல்வைத்திருந்து முடிவில் அவர்களை முற்றாக அழித்தவர்களஇவர்களே………

  உண்மை இவ்வாறிருக்க , தினமலர், துக்ளக் போன்ற பத்திரிக்கைகள் மீது பாய்வது தமிழ்,தமிழன் என்று உசுப்பேற்றி ஊரை ஏய்ப்போரின் வ‌ழக்கமான பித்தலாட்டம்……..

 8. Its me!
  #8

  //நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள்…….ஆனால் விடுதலைப்புலிகள் தங்களை அப்படி நினைக்கவில்லை…..தங்களை ஓர் இணை அரசாங்கமாக , முழு ராணுவமாக கற்பனை செய்து கொன்டார்கள்…….அதனால்தான் அழிந்தார்கள்…….//
  அங்கீகாரம் என்ற சொல்லுக்கு பொருள் தெரியாது போலும் ? மற்றபடி புலிகள் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. சக போராளிகளை ஈவு இரக்கமின்றி கொன்ற தீவிரவாதிகள் என்று பெயரெடுத்த புலிகள் முரளீதரனை விட்டு வைத்தது, சர்வ தேச விமர்சனங்களுக்கு யோசித்து, கெரில்லா போர் முறையை தவிர்த்து மரபு வழி சண்டையில் ஈடுபட்டது போன்ற பல உண்டு.
  //.பிழைக்க சென்ற நாட்டில் பாடுபட்டு சம்பாதித்த பண‌த்தை மூளையில்லாமல் ஆயுதக்குழுக்களுக்கு வாரியிறைத்து , தீவிரவாதத்தை தழைக்கச்செய்தார்கள்……/துக்ளக் மற்றும் தினமலர் ஆகியவற்றில் வெளிவருவதை அன்றி வேறு ஏதும் வாசிக்கும் வழக்கம் இல்லை என்று இதைவிட எளிமையாக சொல்லிவிட முடியாது.

  தனி நாடு என்ற கோரிக்கையை முதன் முதலில் எழுப்பியது ஒரு அகிம்சை போராட்டக்காரர் என்கிற குறைந்தபட்ச உண்மையாவது தெரியுமா ?

 9. சான்றோன்
  #9

  @its me…..

  நான் எந்த புத்தகங்களை வாசிப்பது என்பதை நான் முடிவு செய்வேன்…..உங்கள் பரிந்துரை தேவையில்லை……

  ஈழத்தந்தை செல்வா அவர்களின் அகிம்சை வழி போராட்டத்தை யாழ்ப்பான மேயர் துரையப்பாபடுகொலை மூலம் வன்முறை போராட்டமாக மாற்றியவர் பிரபாகரன்……மீன்டும் சொல்கிறேன்…….இலங்கைத்தமிழர்களின் இன்றைய இன்னல்களுக்கு முழுமுதல் காரணம் புலிகள் தான்……

  தமிழ் , தமிழன் என்று உசுப்பேற்றிவிட்டால் போதும்….. சீமான் போன்ற திடீர் தலைவர்கள் பின்னால் எல்லாம் ஓடும் மூளையை அடகு வைத்த கும்பலை சேர்ந்தவன் அல்ல நான்……என்னைப்போன்ற‌வர்கள் அதிகமாக உள்ளதால்தான் தமிழகத்தில் புலி பிரச்சாரம் எடுபடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்………

 10. Its me!
  #10

  @ சான்றோன்,

  நான் எதையும் பரிந்துரை செய்ததாக எனக்கு தோன்ற வில்லை. அதை விட பல உருப்படியான வேலைகள் எனக்கு இருக்கிறது.

  //யாழ்ப்பான மேயர் துரையப்பாபடுகொலை மூலம் வன்முறை போராட்டமாக மாற்றியவர் பிரபாகரன்//
  இப்படி சொல்லி துரையப்பா படுகொலை மூலம் பிரபாகரனுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட செல்வாக்கை விட அதிகமான அந்தஸ்தை தந்து விட்டீர்கள் – பிரபாகரனை முழு முதல் போராளி என்று சொன்னதன் மூலம்.

  ஈழ மக்கள் இன்று அனுபவிக்கும் துன்பியல்கள், புலிகளின் செயல்பாட்டிற்கு எதிர்வினை என்றால், புலிகள் உருவானது எதன் எதிர்வினை என்று விளக்க முடியுமா ?

  ஈழ பிரச்சினை புலிகளுக்கு அப்பாலும் நீண்டது என்கிற
  உண்மையை திட்டமிட்டு மறைக்கின்ற பணியை துக்ளக், தினமலர் போன்ற பத்திரிக்கைகள் பல காலமாக செய்து வருகின்றனர். அப்பத்திரிக்கைகளை தனியாகவோ, ஏனையவற்றுடன் சேர்த்தோ, படிப்பதோ அல்லது படிக்காமல் போவதோ இல்லை அதன் மூலம் ஒரு கருத்தியலை புணைவு செய்து கொண்டு அதை பக்கம் பக்கமாக எழுதுவதோ தனி மனித உரிமை. அதில் எமக்கேதும் கவலையில்லை.

  ஆனால், புலிகளை மீறி ஈழ பிரச்சினையை அணுகமறுக்கும் அப்பட்டமான சார்பு தன்மை கொண்ட துக்ளக், தினமலர் போன்ற பத்திரிக்கைகள் உண்மையை பேசும் நடுநிலை ஏடுகள் என்கிற பம்மாத்து வேலை வேண்டாம்.

  மேலும், புலி பிரசாரத்தை நீர்த்துப் போகச் செய்ய பெரும்பாண்மை மக்கள் தமிழகத்தில் இருக்கும் போது, திடீர் தலைவர்கள் பற்றி கவலை எதற்கு ?! பிரபாகரனை விடவா அவர்கள் ஒசத்தி ?

 11. சான்றோன்
  #11

  @its me……

  ” ஈழ பிரச்சினை புலிகளுக்கு அப்பாலும் நீண்டது என்கிற
  உண்மையை திட்டமிட்டு மறைக்கின்ற பணியை துக்ளக், தினமலர் போன்ற பத்திரிக்கைகள் பல காலமாக செய்து வருகின்றனர்.”

  எனக்கு அப்படி தோன்றவில்லை…….மாறாக , ஈழவிடுதலைப்போர் என்றாலே , புலிகள் தான் என்ற பிர‌ச்சாரம் தான் நீண்ட நாட்களாக நெடுமாறன் , வைகோ வகையறாக்களால் நடத்தப்பட்டு வருகிறது…….

  ” ஈழ மக்கள் இன்று அனுபவிக்கும் துன்பியல்கள், புலிகளின் செயல்பாட்டிற்கு எதிர்வினை என்றால், புலிகள் உருவானது எதன் எதிர்வினை என்று விளக்க முடியுமா ? ”

  வடிவேல் காமெடிதான் நினைவுக்கு வருகிறது……..
  “ஒப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு …..ஆனா பினிஷிங் சரியில்ல”

  புலிகளின் ஆரம்பம் எல்லாம் புரட்சிகரமாத்தான் இருந்தது……ஆனால் பிரபாகரன் என்ற சர்வாதிகாரியின் ஆதிக்க வெறியால் தடம் புரண்டது………….ஒரு கட்டத்தில் சிங்களர்களை எதிர்ப்பதை விட சக‌ போரளிக்குழுக்களை அழிப்பதே அவர்களின் நோக்கமாக மாறிவிட்டது……அழிந்தும் போனார்கள்……..

  இத‌ற்கும் தினமலரும் துக்ளக்கும்தான் காரணமா?

 12. kannan
  #12

  Prabhakaran is a curse to Sri Lankan Tamils.

 13. Its me!
  #13

  //எனக்கு அப்படி தோன்றவில்லை…….மாறாக , ஈழவிடுதலைப்போர் என்றாலே , புலிகள் தான் என்ற பிரச்சாரம் தான் நீண்ட நாட்களாக நெடுமாறன் , வைகோ வகையறாக்களால் நடத்தப்பட்டு வருகிறது……./உண்மை என்பது உங்களுக்கு தேன்றுகிறதா என்பது சார்ந்தது அல்ல. இன்னும் சொல்லப் போனால், தினமலர், துக்ளக் இவற்றின் சார்பு தன்மைக்கு சற்றும் குறாஇந்தது அல்ல, நெடுமாறன் மற்றும் வைகோ போன்றோரது சார்பு தன்மை.

  //புலிகளின் ஆரம்பம் எல்லாம் புரட்சிகரமாத்தான் இருந்தது……ஆனால் பிரபாகரன் என்ற சர்வாதிகாரியின் ஆதிக்க வெறியால் தடம் புரண்டது………….ஒரு கட்டத்தில் சிங்களர்களை எதிர்ப்பதை விட சக போரளிக்குழுக்களை அழிப்பதே அவர்களின் நோக்கமாக மாறிவிட்டது……அழிந்தும் போனார்கள்……..

  இதற்கும் தினமலரும் துக்ளக்கும்தான் காரணமா?//
  இதுபோல பின்னூட்டங்களின் வழியே உரையாடுவதில் ஒரு சிக்கல் உள்ளது,. சுருங்க சொன்னால் அது நீங்கள் மேற்கோள் காட்டிய வடிவேல் வசனம் போல ஆகி விடும்.

  சர்வ நிச்சயமாக புலிகளின் செயல்களுக்கு, துக்ளக், தினமலர் போன்றவை காரணம் அல்ல. ஒரு வேளை காரணமாகியிருந்திருந்தால், ஈழ போராட்டம் என்றைக்கோ நசுக்கப் பட்டிக்கும். மாறாக, முப்பதாண்டுகளுக்கும் மேலாக அந்த நெருப்பை அணையாமல் பார்த்துக் கொண்டார்கள் புலிகள்.

  சக போராளிகுழுக்களுடனான புலிகளின் முரண்பாடு, ஆதிக்க வெறியை தாண்டி பல காரணங்கள் கொண்டது.

  ராஜீவ் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள இந்திய அரசாங்கத்தினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பிராபகரனின் நிர்பந்திக்கப் பட்ட காலத்தில், இயக்கத்தை கட்டுப் பாட்டோடு வழிநடத்தி, பிரபாரனை உயிருடன் கையளிக்காமல் எங்களிடம் ஒத்துழைப்பை எதிர்பார்க்காதீர்கள் என்று அமைதி (?!) படையிடம் அழுத்தம் கொடுத்து வெற்றி கண்ட மாத்தையா விற்கு புலிகளின் தலைமை என்ன காரணத்திற்காக மரண தண்டனை கொடுத்ததோ, அதுவே, சபாரத்தினம் உட்பட பல போராளிகளின் முடிவிற்கும் காரணம். இவையெல்லாம், ஊடகங்களில் (முக்கியமாக இந்திய/தமிழக ஊடகங்கள்) நேர்மையாக அலசப்பட்டதே இல்லை.

 14. Soorya
  #14

  Prabaharan is a very gentleman.
  With in our family we have so many problem in our day today life. He was a leader to one movement just imagine his life in that positon. We can easily blame but in the real terms my feeling very hard to tackel things proper way.

  So don’t call him as a arrogant leader. He is our realy leader and live and dye for us. All our past and current leaders making all the decision for their family benefit or their own title benefit. eg GG, Neelan and Amirthalingam, Sivasithamparm now even Sambanthar with sumaithran. So one day all the tamils will realise about Prabaharan’s life.

  Thanks

 15. JesslyaJessly
  #15

  பாரியதொரு மக்கள் போராட்டமாக முன்னெடுத்திருக்க வேண்டிய ஒன்றை குழுநிலைப்போராட்டமாகக் குறுக்கிச் சீரழித்தவர்கள் புலிகள். கடைசியில் தங்கள் தலையிலே மண்ணை அள்ளிப்போட்டு தமிழர்களின் போராட்டத்தையும் வீணடித்துவிட்டு அழிந்தொழிந்தார்கள். விடுதலைப்புலிகளை எதிர்க்கின்றவர்களின் கற்றுக்குட்டித்தனத்தினால் புலிகள் ஒன்றும் புனிதர்களாகிவிட மாட்டார்கள். எதிர்காலத்திலாவது மூளையை அடகுவைக்காமல் சுயமாய்ச் சிந்தித்துச் செயல்படட்டும் தமிழினம்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: