பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் – நூல் அறிமுகம்

பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும், இரா. சுந்தரவந்தியத்தேவன், சந்தியா பதிப்பகம், 500 ரூ, 720 பக்கங்கள்

Dial for books – 94459 01234 | 9445 97 97 97

 

சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் நூலின் முன்னுரை:

 

காடுகட்டி நாடாண்ட வரலாறும் குற்றப்பரம்பரையான கதையும்
ப. சரவணன்

1

பிரித்தானியக் காலனித்துவ ஆட்சி இந்தியாவில் வலுவாக வேரூன்றிய பிறகு, கி.பி. 1800களில் சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. மாகாணத்தை உருவாக்கியதுமே, காலனிய அரசு, கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் அரசின் நிதி நிலையை உயர்த்திட ரெவின்யூ போர்டு (Board of Revenue), டிரேட் போர்டு (Board of Trade & வணிகம்) ஆகியவற்றை நிறுவித் தங்களது நலன்களைப் பெருக்குவதில் தனிக்கவனம் செலுத்தியது. இதே நேரத்தில் உதயமான ‘இந்தியத் தேசியக் காங்கிரஸ்’ (1885) கட்சியின் செயல்பாட்டினால் கலக்கமுற்ற காலனிய அரசு, தன்னுடைய அதிகாரத்தை மேலும் பலப்படுத்த எத்தனித்தது.- குறிப்பாக, ‘சூரத் மாநாட்டில் (1907) காங்கிரசாரிடையே ஏற்பட்ட மிதவாத & தீவிரவாதப் பிளவின் காரணமாக உருவான திலகரின், தலைமையிலான தீவிரவாத அமைப்பினரின் செயல்பாட்டினை எதிர் கொள்ள முடியாது அது திணறியது. இத் தீவிரவாத அமைப்பை ஒடுக்கி அடக்குவதற்காகச் சட்டவிடிவிலான பல்வேறு சதிகளைப் பிரிட்டிஷ் அரசு தீட்டியது. இதன் மறு பகுதியாக, இங்குப் பரம்பரையாக உடல் வலிமை கொண்டு செல்வாக்குச் செலுத்திவந்த சில தீரமான உள்நாட்டுக் குழுக்களையும் எதிர் கொள்ளும் வகையில் & அவர்களையும் தம் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்து அடிமைப்படுத்தும் நோக்கில் & பல குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் காலனிய அரசு ‘குற்றவியல் பரம்பரைச் சட்டம் & 1871’ (Criminal Tribes Act 1871) போன்ற சட்டங்கள், மேலும், உள்ளூர் பிரஜைகள் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்வதைத் தடுத்து நிறுத்தவும், முஸ்லீம்களைக் காங்கிரசிலிருந்து தனிமைப்படுத்தவும் பல்வேறு தந்திரோபாயங்களை மேற் கொண்டது. (தமிழகத்தில், பிறமலைக் கள்ளர்கள் காங்கிரசில் சேருவதைப் பெரும்பாலும் தடுத்து நிறுத்தியதற்காகக் ‘கள்ளர் சமூக அபிவிருத்தி’ அதிகாரியாகப் பணி புரிந்த கி.ரி. இராஜா அய்யருக்கு வெள்ளைய அரசு ‘ராவ்பகதூர்’ பட்டம் வழங்கியது. முஸ்லீம்களுக்குச் ‘சலுகைகள்’ அளித்துக் காங்கிரசிலிருந்து பிரித்ததை, ‘மிண்டோ மார்லி’ சீர்திருத்தம் அம்பலப் படுத்தியது. இவற்றையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.)

வட இந்தியாவில், பிரித்தாளும் சூழ்ச்சியினால் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தி வெற்றி கண்ட பிரிட்டிஷ் அரசு, அவ்வகை முயற்சிகளால் தென்னிந்தியாவில் & குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் & வெற்றிபெற முடியவில்லை. எனவே, அதற்கு மாற்றாகப் ‘பிராமணர் – பிராமணர் அல்லாதோர்’ இயக்கங்களை ஊக்குவித்தது. அதிலும் பிராமணர் அல்லாதோரிடையே இருந்த மூர்க்க குணம் மிக்க சமூகத்தாரை மற்ற சமூகத்தாரிடமிருந்து தனிமைப்படுத்த விரும்பியது. இத்தகு சூழலில்தான் சென்னை மாகாணத்தில், தமிழக மாவட்டங்களில் ஆதிகுடிகளாக வாழ்ந்து வரக்கூடிய தோம்பர், குறவர், இருளர், பிச்சாரி, ஆதிதிராவிடர், கள்ளர், மறவர், படையாச்சி, காலாடி, சுங்காலி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சமூகத்தார்மீது பிரிட்டிஷ் அரசு ‘குற்றவியல் பரம்பரைச் சட்டம்&1911’ என்னும் கொடிய சட்டத்தைப் பாய்ச்சியது. (பாமர வழக்கில் இது கைநாட்டுச் சட்டம், கைரேகைச் சட்டம் என அழைக்கப்பட்டது).

குற்றவியல் பரம்பரைச் சட்டத்தைச் சில பழங்குடிகள்மீது மட்டும் திணித்ததற்குக் காரணம், பல்வேறு சாதி, மதம், இனம், மொழி, பண்பாடு முதலியவற்றைக் கொண்ட பரந்த பாரதத்தை ஆட்சியதிகாரத்துக்குள் கொண்டுவர ஈடுபட்ட பல போர்களில் சில இனக் குழுக்கள் தங்களது நலனுக்கு எதிரானவர்கள் என்பதைப் பிரிட்டிஷார் கண்டு கொண்டதும், பல இனக்குழுக்கள் ஆயுதம் தாங்கிப் போர் புரிந்து ஆங்கிலேயர்களை ஆட்டம் காண வைத்ததுமே என்கிறார் பாவெல் பாரதி அவர்கள். 1885இல் சந்தால் இன மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம் வங்காளத்திலும், பீகாரிலும் பல பகுதிகளை ஆங்கிலேயர்களின் நிர்வாகத்திலிருந்து இரண்டாண்டுகள் பின்வாங்கும் அளவுக்குப் போர்க்குணத்துடன் நடைபெற்றதை, திலீப்&டி&சௌசாவின் ‘குற்றமுத்திரை’ நூல்வழி அவர் எடுத்துக்காட்டியுள்ளார். மேலும், அக்காலத்தில் பெரும் பணக்காரர்களாகவும் வெள்ளையர்களுக்கு அணுசரனையாகவும் இருந்துவந்த இந்திய விவசாயக் குடிகளின் சொத்துக்களுக்கு ஆபத்தானவர்களாக உணரப்பட்ட நாடோடிகள், அலைந்து திரியும் உழவர்கள், வனவாசிகள், பழங்குடிகள் போன்றவர்களின் நட மாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் முன்னின்றது என்பர்.

எனவே, தொடர்ச்சியான வலுவான ஆட்சியை நிலைநிறுத்தச் சில தொல்குடிகளைச் ‘சட்டம்&ஒழுங்கு’ என்னும் அதிகாரத்துக்குள் பிரிட்டிஷார் ஒடுக்கி வைத்தனர் எனலாம்.

2

நவீனக் குற்றவியல் சமூகமாக இஸ்லாம் சமூகத்தையும், இன ஒடுக்கத்தை எதிர்த்துப் போராடும் ஈழத் தமிழர்களைக் குற்றவியல் இனமாகவும் அறிமுகப்படுத்தி உலகளவில் ஒருவிதக் கற்பிதத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருப்பதைப் போலவே, கள்ளர்களையும் அன்றைய வெள்ளைய அரசு ‘குற்றவாளிகள்’ என்ற கண்ணோட்டத்துடனேயே அறிமுகப்படுத்தியிருந்தது. எனவே, மற்ற இனக்குழுக்களைவிடக் கள்ளர் சமூகத்தின் மீது & குறிப்பாகப் பிறமலைக்கள்ளர்கள் மீது & இக் கொடுஞ் சட்டத்தைப் பிரயோகிக்க, அது எல்லாவகையிலும் முயற்சித்தது.

இங்கிலாந்தில், குற்றப்பரம்பரையாக முத்திரை குத்தப்பட்ட ‘ஜிப்ஸிகள்’ போன்றவர்களை ஒடுக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு, இந்தியாவில் முதன் முதலில் தனிநபர்களை ஒடுக்கும் விதமாகப் ‘போக்கிரிகள் தடைச் சட்டம்’ (1836) அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு ஒட்டுமொத்த இனத்தையே குற்றவாளிகளாக அறிவிக்கும் குற்றப் பரம்பரைச் சட்டம் (1871) கொண்டு வரப்பட்டது. 1911இல் இது மேலும் சில திருத்தங்களைக் கண்டது. திருத்தப்பட்ட இச்சட்டம், பிற மாகாணங்களுக்கு 1914இல் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, இதை மதுரைப்பகுதியில் உடனடியாக அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தன. அதாவது, ‘மதராஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜில்லா அதிகாரிகள் மூலம், ஜில்லாக்களில் குற்றத் தொழில் புரிவோர் சங்கியைத் (பட்டியல்) தயாரித்து அனுப்பக் கோரினார். அதன்படியே அதிகாரிகள், தங்கள் ஜில்லாக்களில் வழிப்பறி, மாடு கடத்தல், கொள்ளை, கன்னக்களவு, கொலை முதலான பெருங்குற்றங்களுக்கான விபரமும் அவற்றின் தன்மையும் குறித்து விளக்கத்துடன் சேகரித்து அனுப்பினர். தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய ஜில்லாக்களில் குற்றத்தொழில் செய்தல் அதிகமாக இருப்பதாகப் புள்ளி விபரங்கள் புலப்படுத்தின. குற்றத்தொழில் செய்து வந்தவர்களில் அதிகமானோர் கள்ளர், மறவர் ஆகிய வகுப்பார் என்பதும் தெரிய வந்தது. அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ள குற்றப்பிரிவு புள்ளி விவரங்கள், ‘ரேகைச் சட்டம்’ அமல்படுத்துவதற்கு ஆதாரமாகவே இருந்தது’ என்கிறார் பெ. முத்துத் தேவர், தமது மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு என்னும் நூலில்.

குற்றப் பரம்பரைச் சட்டம் 1914இல் மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டபோது, மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தவர் H.G. கிளின்ச் என்னும் வெள்ளையர். அவர், கீழக்குடி கள்ளர்களை இச்சட்டத்தைப் பயன்படுத்தி ஒடுக்க வேண்டும் என 4.5.1914 அன்று அரசுக்குப் பரிந்துரை ஒன்றை அனுப்பினார் என்றாலும், 1915இல்தான் மதுரைப்பகுதியில் இது அமல்படுத்தப்பட்டது. சொல்லப்போனால், மதுரையிலிருந்து ஆறு மைலுக்கு அப்பாலிருந்த மேல்நாட்டுக் கள்ளர்களின் தலைமை யிடமான கீழக்குயில்குடியில்தான் & தற்போதைய பெயர் கீழக்குடி & முதன்முதலில் அமல்படுத்தப்பட்டது-. இதன்படி வயது வந்த ஆண்கள் அனைவரும் ‘கேடிகள்’ (K.D. – Known Dacoits) என்னும் பட்டியலின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டனர். அப்போது மதுரை கலெக்டராக இருந்தவர் ‘நேப்’ என்னும் வெள்ளையர். அவர், இச்சட்டத்தின்கீழ் அனைவரையும் பதிவு செய்வதைவிடக் குற்றவாளிகளை மட்டும் பதிவு செய்து கவனிக்க வேண்டியதன் அவசியத்தை அரசுக்கு எடுத்துரைத்ததோடு, இச்சட்டத்தின்கீழ் வரவேண்டிய மேலும் மூன்று ஊர்களைப் பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையின் பேரில் இச்சட்டம் சொரிக்கான்பட்டி, மேலஉரப்பனூர், பூசலப்புரம் ஆகிய ஊர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. (G.O. No : 2233, Judical 16th Sep. 1915).

-oOo-

‘கலெக்டர் நேம்’ கேட்டுக்கொண்டதற்கிணங்க, மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ஊர்களில் வாழும் வயது வந்த பிறமலைக் கள்ளர்கள் எல்லோரையும் கு.ப. சட்டத்தின்கீழ்ப் பதிவுசெய்வதை நிறுத்திவைக்க, அரசு இடைக்காலத் தடை விதித்தது-. இப்படிச் செய்தது நன்நோக்கத்தில் அல்ல. மாறாகக் கள்ளர் சமூகத்தில் குற்றவாளிகளைத் தவிரக் குற்றம் செய்யாதவர்களையும் சேர்த்துப் பதிவு செய்வதற்காகச் சட்டத் திருத்தம் வேண்டியிருந்தது. அதற்காகவே இந்த இடைக்காலத் தடை என்பர். (C.T. Act G.O. No : 1023, Judical dt. 4-5-1914. G.O. 2233 Judical dt 16-9-1915 declaring Keelakkudi, Sorikkanpatti, Melaurappanur and Poosalapuram kallars as criminal tribes. Amendment to C.T. Act manual proposal Negatived criminal tribes Act of 1911)

கு.ப. சட்டத்தை எப்படியும் கள்ளர்கள்மீது திணித்துவிடப் பிரயாசை கொண்டிருந்த வெள்ளைய அரசு சட்டத் திருத்தத்திற்குப் பிறகு மதுரைக் கலெக்டரிடமிருந்து மீண்டும் அறிக்கையைக் கோரியது. அப்போது கலக்டெர், நாட்டு மக்களின் உண்மையான நிலையை உணர்ந்து தேவையான ஆதாரங்களை எடுத்துக்காட்டுவதற்கு மாறாக, கள்ளர்கள் திருட்டுப்பழக்கமுடையவர்கள், துப்புக்கூலி வாங்குபவர்கள், குடிக்காவல் வசூலிப்பவர்கள், ஜல்லிக்கட்டு என்னும் முரட்டுத்தனமான மாட்டு விளையாட்டைக் கொண்டு சண்டை சச்சரவுகளை உண்டு பண்ணுபவர்கள், நிலமில்லாதவர்கள், நிலமிருந்தாலும் உழைத்துப் பிழைக்கும் ஊக்கமில்லாதவர்கள் எனக் காரணங்களை காட்டி, மேலே குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை மதுரை மாவட்ட கெசட்டியர், எட்கர் தர்ஸ்டனின் Caste and Tribes of Southern India நூலில் உள்ள செய்திகள் முதலியவற்றிலிருந்து எடுத்து ஆதாரங்களை வைத்தார். அதன் பிறகு, பதிவு செய்யும் இந்த வேலை 1919களில் துரிதமானது.

பிறமலை நாட்டில் குற்றப்பரம்பரைச் சட்டம் பிரயோகிக்கப் படுவதற்கு, முதலில் புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டன. (குற்றவாளிகள் பற்றிய புள்ளி விவரம், ரெங்காச்சாரி என்னும் போலீஸ்காரர் மூலம் சேகரிக்கப்பட்டது.- இவரை ‘நிர்&101’ என்னும் சாட்டுப் பெயர் (Nick Name) வைத்துக் கிராம மக்கள் அழைத்திருக்கின்றனர். கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையே கலகத்தை உண்டு பண்ணிக் கேடிகள் பட்டியலை அதிகரித்தவர் இந்த நிர்&101 என வரலாறு கூறுகிறது.)

பிறமலை நாட்டிலிருந்த மிகப்பெரிய குறை யாதெனில், ஆரம்பத்திலேயே கு.ப.சட்டத்தின் பாதகத்தை அரசுக்கு விவரமாக எடுத்துக்கூறத் தகுதிவாய்ந்த நபர்கள் இல்லாததேயாகும். ஆனால், மேலஉரப்பனூர் மக்கள் இச்சட்டம் அமலுக்கு வந்தவுடனேயே, திரு. ஜார்ஜ் ஜோசப் (பின்னாளில் ரோசாப்பூ தேவர்) B.A., பாரட்&லா அவர்களை அணுகினர். அவர் கைரேகையைப் பதிப்பது மற்றும் பதிவு செய்வது என்னும் உத்தரவைச் சத்தியாகிரக முறையில் எதிர்க்குமாறு அறிவுறுத்தினார். அதோடு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் நடத்திய கைரேகைப் பதிப்புப் போராட்டத்தையும் எடுத்துரைத்து, இருக்கின்ற ஒரே தீர்வு ஜனநாயக முறையில் ஒத்துழைக்க மறுப்பதுதான் என்றார். அதன் பிறகு, மேலஉரப்பனூர் கள்ளர்களின் மனுவை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாடிஸனிடம் சமர்ப்பித்தார்.

இதோடு கள்ளர்கள் சார்பில் வெள்ளையத் தேவர் என்பவர், 6——&7&1915இல் மதுரையிலிருந்து சென்னை அரசாங்க பிரதான காரியதரிசிக்குத் தந்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதன் விபரம்:& ‘மதுரை ஜில்லா திருமங்கலம் தாலுக்கா உரப்பனூர் தேவமார்கள் ரூ.3500க்குக் கிஸ்தி செலுத்தக்கூடிய பட்டாதாரர்கள். எனவே குற்றப் பரம்பரைச் சட்டம் இவர்கள்மீது பிரயோகிக்கும் முன் விசாரனை செய்யவும்’.

இந்தத் தந்திக்கு நடவடிக்கை என்ன என்பது தெரியவில்லை. இதன் பிரதி ஒன்று மதுரை ஜில்லா போலீஸ் ஆபீஸ் பைலில் உள்ளதாக பெ. முத்துத்தேவர் குறிப்பிடுகிறார். ஆனால் இதற்கு எவ்வித விளைவும் ஏற்படவில்லை. விடயம் கிடப்பில் போடப் பட்டதை, இந்த நூல் கூறுகிறது.

இப்படி மேலஉரப்பனூர் கள்ளர்களுக்கு இருந்த துடிப்புணர்வு, மற்ற நாட்டுக் கள்ளர்களிடம் இருந்ததா என்பதற்கும் ஆதாரம் இல்லை. எனினும், சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய இந்தக் கொடிய சட்டத்தைப் பிறமலைக் கள்ளர்கள் எதிர்க்காமலில்லை. அவர்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் சுதந்திர உணர்வும், வீரமும் அற்றவர்களாக இருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. திருமலை நாயக்கர் காலத்திலிருந்தே & அதற்கு முன்பும் & தன்னரசு நாடுகளை அமைத்துக் கொண்டு, ‘காடுகட்டி நாடாண்ட’ பரம்பரையினரான அவர்கள், இச்சட்டத்தின்கீழ்த் தங்களைப் பதிவு செய்ய மறுத்தனர். மேலும், மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள கள்ளர்களில் ஒரு பகுதியினரை மட்டும் ‘குற்றம் புரியும் சமூகம்’ எனப் பிரித்து அடக்குமுறையைப் பிரயோகிப்பதில் அதிகாரிகளுக்கும் சிக்கல் இருந்தது. ஒரு ஊரில் உள்ளவர்கள் குற்றவாளிகள் எனக் கண்காணிக்கப்படுவதும், அடுத்த ஊரில் உள்ளவர்கள் அப்படிக் கண்காணிக்கப்படாமலிருப்பதும் குறித்த ‘மாற்றாந்தாய் மனப்பான்மை’யைப் பற்றிக் கள்ளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் வாயடங்கிப் போயினர். எனவே, இந்தச் சட்டத்தை முழுவதும் அமல்படுத்துவதில் ஒருவிதத் தொய்வு நிலை ஏற்பட்டது.

குற்றப் பரம்பரைச் சட்டத்தைக் கள்ளர்களிடையே நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருந்தபோதிலும், அதனை எப்படியும் பிரயோகித்து வெற்றி பெற வேண்டும் எனக் கங்கனம் கட்டிய வெள்ளைய அரசு, 1919இல் ‘லவ்லக்’ என்னும் போலீஸ் சூப்பிரண்டென்டை மதுரை மாவட்டத்தில் பணியமர்த்தியது. கடும் உழைப்பாளியும் சீர்திருத்தவாதியுமான லவ்லக் வட இந்தியாவிலும், தென் தமிழகத்திலும், பல்வேறு இடங்களில் குற்றப் பரம்பரைச் செட்டில்மெண்டுகளிலும், குற்றவாளிகளின் புனர்வாழ்வுத் தொழில் துறையிலும் பணிபுரிந்தவர். எனவே, அவரைக் கொண்டு இச்சட்டத்தை அமல்படுத்த அரசு எத்தனித்தது, முழுச் சுதந்திரம் அளித்தது. அதன் அடிப்படையில் கள்ளர்கள் பற்றிய ஓர் அறிக்கையை லவ்லக், அரசுக்குச் சமர்ப்பித்தார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு :

‘கள்ளர் நாட்டில் குற்றத்தொழில் செய்த கிரிமினல் வாரண்டியர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், இவர்களைத் திருடர்கள் என்று சொல்வதற்கில்லை. ஸ்காட்லாந்து தேசமாகிய என்னுடைய நாட்டிலும், சோசலிசச் சமுதாய அமைப்பை விரும்பும் மலைநாட்டினர் இருந்தார்கள்.’

‘கள்ளர்களின் மத நம்பிக்கையைக் கவனித்தால், இவர்கள் உலகில் அதிகமாகச் செல்வம் குவித்து வைத்திருப்பதைப் பிரித்து இல்லாதவர்களுக்கு விநியோகம் செய்யப் படைக்கப் பட்டவர்கள் என்று தங்களைக் கருதுகிறார்கள். கீழ்நாட்டுச் சோஷலிஸ்டுகள் போலவும், ஏகபோக உரிமையோடு சண்டை போடுவதில் தீவிர விருப்பமுள்ள சமதர்மவாதிகள் வழியிலும் செல்கிறார்கள் என்று கருதப்பட வேண்டியிருக்கிறது.’

‘இப்போது எடுத்துவரும் குற்றத்தொழில் தடுப்புமுறையும், இவ்வினத்தாரைப் பதிவு செய்து கண்காணித்து வருவதும் சரி என்று நான் கருதுவதற்கில்லை. இதனால் நல்ல பலன் கிடைக்காது….. ஒரே பிரதேசத்தில் பதிவான குற்றவாளிகளும் பதிவாகாத இதரரும் இருக்கும் போது, பாகுபாடு செய்து அடக்குவது சிரமம். இந்தச் சட்டம் சரியாக செயல்பட வேண்டுமானால், திருமங்கலம் தாலுகாவில் வாழ்ந்து வரும் பிரான்மலைக் கள்ளர்களை மாத்திரமல்லாமல், இவ்வினத்தைச் சேர்ந்த எவரானாலும், இந்த ஜில்லாவிலும், இராமநாதபுரம் ஜில்லாவிலும் வாழ்ந்து வரும் யாவரையும், குற்றத் தொழில் செய்தவரானாலும் செய்யாதவரானாலும் வயது வந்த அத்தனை பேரையும் பதிவு செய்திட வேண்டும்….. சட்டப் பிரயோகம் செய்து அடக்கு முறையை மட்டும் கையாண்டால், அது பெரும் ஆபத்தில் போய் முடியும். அடக்குமுறைச் சட்டம் கையாளப்படும்போதே, கள்ளர் சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளையும் அமல்படுத்தத் தவறக்கூடாது.’

இப்படி லவ்லக்கின் ரிப்போர்ட், கலக்டெர் நேப்பின் ரிப்போர்ட், மாகாண போலீஸ் இன்ஸ்பெக்டரின் ரிப்போர்ட் ஆகியவற்றைக் கொண்டு சென்னை சர்க்கார் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அது: ‘பிறமலை நாட்டில் வயது வந்த எல்லாப் பிறமலைநாட்டுக் கள்ளர்களையும் குற்றத்தொழில் செய்யும் நபர்களாகப் பதிவு செய்யும் 10&1&கி பதிவேட்டில் பதிவு செய்து கண்காணிக்கவும்.’

இந்த உத்தரவு, 1918களின் இறுதியில் மதுரை கலக்டெருக்குக் கிடைத்தபின் இதற்கான ஒரு தனி அலுவலகம் மதுரையில் உருவானது. இதில் 1. முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் (கைரேகைச் சட்டக் கலக்டெர்) 2. ஸ்பெஷல் போலீஸ் இன்ஸ்பெக்டர் 3. ஸ்பெஷல் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் 4. ஏட்டுகள் 5. கான்ஸ்டேபில்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இருந்தனர். மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி ‘க்னப்’ கள்ளர்கள் பதிவுசெய்தலைத் தொடங்கி வைத்தார்.

3

1915இல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாடிசன் கு.ப. சட்டம் 1911, பிரிவு& 5இன்படி, மேல உரப்பனூர் கள்ளர்களுக்கு ரேகைப் பதிவிலிருந்து விலக்கு அளித்தார் என்பர். எனினும், பிறமலைக் கள்ளர்களின் குற்றப் பரம்பரையினர் ஒவ்வொருவரும் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ, பரிசோதனை மையத்திலோ, தன் இருப்பிடத்திலிருந்து 5 மைல் தூரத்திலுள்ள புறக்காவல் நிலையத்திலோ பிற்பகல் 11.00 மணி முதல் மாலை 4.00 மணிக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஒருக்கால் 5 மைலுக்குள் இவை இல்லாது போனால், அருகிலுள்ள கிராம உரிமையியல் நீதிபதியிடம் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் இவ்விலக்கினை மக்கள் ஏற்றுக் கொண்டாலும், ஆஜராவதற்கான நேரம் கேள்விக்குள்ளானது. பல நேரங்களில் அவர்கள் காவல் நிலையத்தில் தூங்குமாறும், அருகே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர். எந்த ஒரு விஷயமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல நேர்ந்தால், ‘ராதாரி சீட்டு’ (Rathari Chit) என்னும் ‘பாஸ்போர்ட்’டினைப் பெற்றுச் செல்லவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். (இந்தச் சீட்டில் வ.எண், பெயர், குற்றப்பதிவு எண், குற்றப் புலனாய்வுத் துறை, குழு எண், வெளியே போவதற்கான காரணம், செல்லும் வழித்தடம், நேரம், திரும்பும் நேரம், பெருவிரல் ரேகைப் பதிவு ஆகியவை இருந்தன). மூன்று பிரதிகளைக் கொண்ட இந்த ராதாரிச் சீட்டின் முதல் படி உள்ளூர் காவல் நிலையத்திலும், இரண்டாவது படி அந்த நபர் செல்ல இருக்கும் காவல் நிலையத்துக்கும், மூன்றாவது படி அந்த நபரிடமும் தரப்பட்டது-. வழியில் எங்காவது இரவு தங்க நேர்ந்தால், அந்தக் கிராமத்தின் தலைவனது கையொப்பம் பெறப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கீழ் 10&1&A&B இல் எல்லோரையும் பதிவு செய்வதைக் கண்டு வெகுண்டெழுந்த பிறமலைக் கள்ளர்கள் அனைவரும், நும்மகுண்டு நாட்டில் கூடி, மற்றவர்களுக்கும் ‘ஓலை’ மூலம் செய்தி அனுப்பினர். இச்சட்டத்திற்குத் தாங்கள் அடிபணியக்கூடாது எனப் பேசி முடிவெடுத்த தருணத்தில், பிறமலைக் கள்ளர்கள் அதிகமாக வாழ்ந்து வரும் பெருங்காம நல்லூரில் இச்சட்டத்தை அமல்படுத்த அரசு தீவிரமாக முயற்சித்தது.

‘29.3.1920 அன்று மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி, பெருங்காம நல்லூரில் வசிக்கின்ற 7 வயதுக்கு மேற்பட்ட கள்ளர்கள், 03.04.1920 அன்று காலை 11.00 மணிக்குப் பதிவு பெறுவதற்காகப் போத்தம்பட்டியிலுள்ள தனித்துணை ஆட்சியர் முன் ஆஜராக வேண்டுமென அறிவித்தார்’. இந்த அறிவிப்பு கிராம முன்சீப்புகள் மூலம் சுற்றுக்கு விடப்பட்டது. ஆனால், அன்றைய நாள் பதிவு தோல்வியில் முடிந்தது. எனினும், போலீஸ் படையுடன் 3.4.1920 அன்று பெருங்காமநல்லூரில் ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு பதிவு விறுவிறுப்படைந்தது. மாயக்காள் என்னும் பெண் உட்பட, இந்தக் கலவரத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

பிறமலைக் கள்ளர்களின் விடாப்பிடியான தன்மை, பெருங்காம நல்லூர் கலவரத்தில் எதிரொலித்ததால் சற்று நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டிய அவசியத்தை அரசு உணர்ந்தது. சட்டத்தின் மூலம் உறுப்பினர்களைப் பதிவு செய்யும் அதேநேரத்தில், நிர்வாக அமைப்புகள் மூலமாக அவர்களது சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் அரசு முன்வந்தது. அதன்படி கள்ளர் பஞ்சாயத்து அமைப்பு, கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, கள்ளர் கூட்டுறவு சங்கங்கள் முதலிய நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் கள்ளர் பஞ்சாயத்துக்கு முக்கிய இடம் தரப்பட்டது. ‘தன் கையைக் கொண்டே தன் கண்ணைக் குத்துவது’ என்பதற்கேற்பக் கள்ளர் ஒருவரையே பஞ்சாயத்துத் தலைவராக நியமித்து, அவர் மூலமாகவே எல்லா நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதுவரை கள்ளர்களின்மீது அமல்படுத்தப்பட்ட கொடுஞ் சட்டத்தையும், அதனால் அவர்கள் அடைந்த கொடுமையையும் கண்டோம். இனி கள்ளர்கள் யார்? என்பதை, ஒரு பருந்துப் பார்வையில் காண்போம்.

4

கள்ளர் நாடு என்பது, கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்ற நிலப்பரப்பைக் குறிக்கும். இவர்கள் இராஜதானி&எட்டு நாடுகள் & இருபத்து நான்கு உபகிராமங்கள் என்னும் அமைப்பின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். கள்ளர் என்ற பொது அடையாளத்திற்குள் பிறமலைக் கள்ளர், கீழ்நாட்டுக் கள்ளர், மேல்நாட்டுக் கள்ளர், ஈசநாட்டு கள்ளர், கந்தவர்வக் கோட்டைக் கள்ளர், நாட்டாக் கள்ளர், தெக்கத்திக் கள்ளர், கூட்டப்பல் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர், தொண்டைமான் எனப் பல பிரிவுகள் உள்ளனர். ஆனால், இந்தக் கள்ளர்களின் பூர்வ வரலாறு குறித்து உறுதியான தகவல்கள் இல்லை; பல்வேறு கதைகள் மட்டும் உள்ளன.

கள்ளர்கள், தீபகற்பத்தின் தெற்கில் முதலாவதாக ஊடுருவிய திராவிட இனக்குழுக்கள் என்று H.A. ஸ்டூவர்ட்ஸ் போன்றோர் கருத்துத் தெரிவித்தாலும், அவர்களைப் பற்றிய பொதுவான கருத்து, கள்ளர்கள் தொண்டை மண்டலமான காஞ்சிபுரத்திலிருந்து தெற்கு நோக்கி வந்து புதுக்கோட்டை, நத்தம், மேலூர் பகுதிகளில் குடியேறியவர்கள் என்பதே. மேலும், இவர்கள் நாக வம்சத்தைச் சார்ந்தவர்கள், களப்பிரர்களின் படைப்பிரிவினர், பல்லவர்களின் வழித்தோன்றல்கள், சோழர்களின் வாரிசுகள், என்றெல்லாம் கருதப்படுகின்றனர். இனி, பிறமலைக் கள்ளர்கள் பற்றி மட்டும், சற்றுத் தனித்துப் பார்ப்போம்.

தனி அரசை நிறுவித் தன்னாட்சி புரிந்து வந்த பிறமலைக் கள்ளர்களின் நாட்டு எல்லைகளைப் பார்த்தோமேயானால், மேற்கில் மதுரை நகரமும் திருபரங்குன்ற மலைகளும், தெற்கில் நாகமலையும், கிழக்கில் மேற்குமலைத்தொடரும், வடக்கில் குண்டாறும் உள்ளன. இந்த எல்லைகளுக்குள்தான் பிறமலைக் கள்ளர்கள், ‘அம்பலம்’ என்ற பட்டத்தோடு (அம்பலம் & தலைவர்) நாட்டை ஆண்டனர்.

மேலும் கள்ளர்களின் நகர எல்லைகளாக இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்கள் ஆகியன இருந்தாலும் இவர்கள் ஒருபோதும் அந்த ஆட்சியாளர்களுக்கு அடங்கியதில்லை. மாறாக அவர்களது ஆட்சி அதிகாரத்தைச் சீர் குலைப்போராகவே இருந்தனர். தம்மை இரண்டாம் பிரஜைகள் ஆக்கும் அதிகார அமைப்புக்கு எதிரான தம்ஆளுமைச் செயல்பாடுகள் காரணமாக கள்ளர்கள் தமக்கென்று சட்டம் & ஒழுங்கு மற்றும் வருவாய் அமைப்புகளைக் கொண்டு தன்னாட்சியை அனுபவித்து வந்தனர் என்பது உறுதியாகிறது.

கள்ளர்கள் என்றாலே திருடர்கள் என்னும் அழுத்தமான பதிவு, சமூகத்தின் பொதுப்புத்தியில் உறைந்துபோய்க் கிடக்கிறது. இப்பொதுப்புத்தியின் கருத்துப்பிடிப்புக்கு ஆட்பட்டுதான், லூயிஸ் டூமண்ட் பிறமலைக் கள்ளர்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வுக்காகச் சென்னைப் பல்லைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர்

திரு. கி.லி. முதலியார் அவர்களைத் தொடர்பு கொண்டபோது, கள்ளர்கள் பற்றி அவர் விவாதிக்க மறுத்ததாக அறியமுடிகிறது. இவ்வாறு கள்ளர்கள் பொதுச் சமூகத்தால் ஒதுக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம், அவர்கள் ஆநிரைகளைக் கவர்ந்ததேயாம். சங்க காலத்திலும் ஆநிரைகளைக் கவர்ந்து செல்லும் கூட்டம் ஒன்று இருந்தது. அவர்கள் (ஆநிரைக்) கள்வர் எனப்பட்டனர். எனவே, கள்ளர்கள் கள்வர் ஆக்கப்பட்டனர். ஆனால் ‘கள்ளர்’ என்னும் சொல்லுக்குக் கரியவர், பகைவர் என்று பொருள் உண்டு என நிறுவியுள்ளார் கோபாலசாமி ரகுநாத ராசாளியார். வீரர் என்னும் பொருள் பற்றியே ‘கள்ளர்’ என்னும் குலப்பெயர் தோன்றியிருக்கிறது என்று பொருள் எழுதுகிறார் ந.மு. வேங்கடசாமி நாட்டார். மேலும், கள்வர் என்பதே உயர்ந்த பொருள்தான் என்பதைச் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் ‘கள்வர் கோமான் புல்லி’, ‘கள்வர் பெருமகன் தென்னன்’ என்று மன்னர்களை அழைத்திருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். ந.மு.வே. நாட்டார்.

எனவே ‘கள்ளர்’ என்ற சொல்லுக்குத் ‘திருடர்’ என்னும் பொருள், இங்குப் பொருந்தாது. கள்ளர்களைப் பொறுத்தவரை, ‘திருட்டு’ என்பது சமூகக் குற்றமாகக் கருதப்படவில்லை. மாறாக, முதன்மையான பொழுதுபோக்காகவே இருந்து வந்துள்ளது. எனவேதான், ‘கள்ளர் நாட்டில் குற்றத் தொழில் செய்த கிரிமினல்கள் இருந்தார்கள் என்றாலும், இவர்களைத் திருடர்கள் என்று சொல்வதற்கில்லை’ என்கிறது லவ்லக் ரிப்போர்ட். (ஆனால் 1899இல் நாடார் மக்களுக்கு எதிராக நடந்த சிவகாசிக் கொள்ளையில், மேலநாட்டுக் கள்ளர்கள், முக்கிய பங்காற்றினார்கள். அது அந்தக் காலகட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு தனித்து ஆராயப்பட வேண்டும்.) கள்ளர்கள் வேளாண்மை மூலமாகத் தமது வருவாயின் ஒரு பகுதியைப் பெற்றிருந்தாலும், துப்புக்கூலி (திருட்டுப்போன கால்நடைகளைத் துப்புத்துலக்கிக் கண்டறிவதற்குப் பெறும் கூலி), குடிக் கூலி (குடிமக்களைக் காப்பதற்காகப் பெறும் கூலி) என்னும் இரு வழிகள் மூலமாகவும் தங்களது வருவாயைப் பெருக்கிக் கொண்டனர். இந்த இரு கூலிகளில் குடிக்கூலியான காவல்கூலி, வெள்ளைய அரசின் வருவாயைப் பெரிதும் பாதித்தது.- ஒவ்வொரு கள்ளர் கிராமத்திலும், ‘காவல்காரர்கள்’ அரசுக்கு இணையானதொரு காவல் நிலையத்தை நடத்திக் கொண்டிருந்தனர். மக்களும் கள்ளர் காவலையே ஏற்று நடக்க வேண்டிய நிலையில் இருந்தனர்.

ஆட்சிமுறை மாறும்போது ஆளுவோரின் தன்மையும் மாறுகிறது. மன்னர்களின் ஆட்சி நிலவியபோது பிறகுடிகளிடமிருந்து தம்மைக் காக்கும் பொறுப்பை கள்ளர் சமூகத்தாரிடம் ஆட்சி யாளர்கள் ஒப்படைத்தனர். ஆனால் அதிகாரத்தை எல்லாவிதமாகப் பயன்படுத்திய பிரிட்டிஷ் அரசு ஆட்சிக்கு வந்தபோது, ஆட்சி அதிகாரத்திற்கு வெளியில் இருக்கும் ‘கள்ளர் காவல்’ போன்ற குறுக்கீடுகளை விரும்பவில்லை. மேலும், ஆட்சியாளர்களிடமிருந்தே காவல் கூலியைக் கள்ளர்கள் பெற்றதை மதுரை மாவட்ட எஸ்.பி. திரு. பவுண்டி (Baudry) தனது மேல்அதிகரிக்கு எழுதிய கடிதத்தால் தெரியவருகிறது. அது :

”காவல் என்ற பெயரில் மக்களிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கின்ற முறை இங்கு இன்றும் நடைமுறையில் உள்ளது. சாதாரண குடிகள் மட்டுமல்லாது ஐரோப்பிர்களும், மேஜிஸ்ட் ரேட்டுகளும் கூட காவல் கூலி கொடுத்து வருகின்றனர். நான் இங்கு எஸ்.பி.யாக முதன் முறை பதவியேற்ற பொழுது ஒரு கள்ளர் இனத்துக் காவல்காரன் என்னிடம் வந்து காவல் கூலி கேட்டான். நான் தர மறுத்தால் எனது உடமைகளைக் கொள்ளையடித்து விடுவேன் என்று மிரட்டினான். நானும் அவனுக்குக் காவல்கூலி கொடுத்தேன். அவன் கேட்ட அளவிற்கு இல்லாமல் சிறிது பணம் கொடுத்தேன். அன்று என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் மிகவும் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். அதனால் இவ்வகையில் காவல் என்ற பெயரில் மிரட்டிப் பணம் பறிக்கின்ற வழக்கத்திற்கு நாம் உடனடியாக முடிவு கட்டவேண்டும்”.

எனவே, இந்தக் காவல் முறையை ஒழிப்பதற்காக அரசு, முயற்சித்தவைகளுள் ஒன்றுதான் உசிலம்பட்டி நாட்டாண்மை அம்மையப்பக் கோனாரைத் தூண்டிவிட்டுக் கள்ளர்களைக் காவல் காக்கும் பணியிலிருந்து நீக்கியதாகும். இதற்காகக் கோனார்கள் ஒரு ‘பொது நல நிதியை’ (fund) வசூலித்து, தங்களுக்குள் ஒருவரைக் காவலாளியாய் நியமித்துக் கொண்டனர். இந்தக் கலகம் ‘பண்டு கலகம்’ என்றே அழைக்கப்பட்டது. பண்டு கலகத்தினால் கள்ளர்கள் எல்லோரும் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கள்ளர்கள் குடிக்கூலியும், துப்புக்கூலியும் பெற்றது கூட ஏதோ ரௌடித்தனம் செய்யவேண்டும் என்பதற்காக அல்ல; தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே என்பது வரலாறு நெடுகிலும் காணப்படுகிறது. குறிப்பாகத் திருமலை நாயக்கர் காலத்தில் (கி.பி.15 ஆம் நூற்றாண்டு), அவர் பாளையங்களை உருவாக்கி & பாளையம் என்பது ‘பாலிகாடு’ என்னும் தெலுங்குச் சொல்லின் மறுவடிவம், இதற்கு இராணுவக் குவியல் தங்கியிருக்கும் இடம் என்பது பொருள் & அரசாட்சி புரிந்து வந்தபோதும், இவர்கள் தன்னரசு ஆட்சி புரிந்து வந்துள்ளனர். திருமலை நாயக்கரால் கள்ளர்களை ஒடுக்குவதற்காக எடுக்கப்பட்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. எனவே, அவர்களோடு நாயக்கர் சமாதான மாகவே போக வேண்டியிருந்தது என்பது, சமூக&வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது.

ஆக, அதிகார மையத்தின்கீழ் அரசாட்சி புரிந்த கள்ளர்கள் தான், நாளடைவில் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குற்றப் பரம்பரைச் சட்டம் என்னும் கைரேகைச் சட்டம் மூலமாக அவர்களை ஓர் எல்லைக்குள் முடக்கிவைத்து, அவர்களது அசைவுகள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. தனூர் வேதத்தைக் கற்றுத் தன் கைவிரலை இழந்த ஏகலைவனைப் போலவே, இவர்களும் தன்னரசு வேதத்தால் தங்களது கைரேகையை இழந்தார்கள். ஏகலைவனின் பெருவிரல் அவன் கற்ற வில் வித்தையின் குறியீடு மட்டுமன்று; அவனது ஆண்மையின் குறியீடு. அதைப் போலவே, கள்ளர் சமூகத்து ஆண்களின் பெருவிரலும் அவர்களின் ஆண்மையின் குறியீடு எனப் பேரா.இ. முத்தையா குறிப்பிட்டிருப்பது முற்றிலும் பொருத்தமானது.

இப்படிச் சட்டத்தின் பெயரால் நடந்த இக்கொடுமைகளை எதிர்த்து, 1930களில் பல விவாதங்கள் நடந்தன. 1936களில் பண்டித ஜவஹர்லால் நேரு, ‘சட்டப் புத்தகத்திலிருந்து இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்றார். இதே போல, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு சுப்பராவ், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் கி.க்ஷி. தக்கா, ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, உ. முத்துராமலிங்கத் தேவர் போன்றோர் இக்கொடுஞ்சட்டம் நீக்கப்படுவதன் அவசியம் குறித்துப் பேசி வந்தனர்.

இந்த விடயத்தில் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பணி, தனித்து மதிப்பிட வேண்டிய ஒன்று. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேரப் புலமை பெற்ற அவரது சாதுர்யமான பேச்சு, கள்ளர்களை ஒன்று திரட்டியதோடு அன்றைய அரசையும் முடக்கிப் போட்டது. அதன் விளைவால், 1947இல் போலீஸ்துறை அமைச்சராக இருந்த பி. சுப்பாராவ், இந்தச் சட்டத்தை வாபஸ் வாங்குவதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். பேகம் சுல்தான் அம்ருதீன் போன்றவர்களால் இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டபோதும், தீர்மானம் நிறைவேறியது; சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே காலாவதியானது.

வெள்ளைய அரசின் கீழ்தான் கள்ளர்கள் கொடுந்துன்பத்திற்கு ஆளானார்கள் என்றால், சுதந்திர இந்தியாவிலும் அது நீண்டு கொண்டுதான் இருக்கிறது. காங்கிரசின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்து முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், ‘பார்வர்டு பிளாக்’ என்னும் கட்சியை நிறுவியது நாம் அறிந்ததே. தேவரின் இறப்பிற்கு முன்னும் பின்னும் பார்வர்டு பிளாக்கை எவராலும் வீழ்த்த முடியவில்லை என்பது வரலாறு. அவரது சுட்டுவிரலுக்கு ஒட்டுமொத்தக் கள்ளர் சமூகமும் கட்டுப்பட்டது. அதன் காரணமாகவே கள்ளர் சமூகம், பின்னாளில் கஷ்டப்பட்டது. உதாரணமாக 1952இல் ‘பெரியகுளம்’ சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என். ஆர். தியாகராஜனை, பி.கே. மூக்கையா தேவர் தோற்கடித்தற்காகவே காங்கிரஸ், வைகை அணையைக் கட்டுவதற்குப் பிறமலைக் கள்ளர்களது குடியிருப்பு களைக் காலி செய்து வஞ்சம் தீர்த்துக் கொண்டது. (அணை கட்டுவதற்கு மாற்றிடம் இருந்தபோதும், காங்கிரஸ் அதை நிராகரித்தது). சோழ வந்தான் வேளாளர்களுக்கும், மானாமதுரை பார்ப்பனர்களுக்கும் சாதகமாக வைகை அணை அமைந்தது.

அதே போல, மதுரைக்கு அருகே பிறமலைக் கள்ளர்களது பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைத் தாண்டிக் காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த திருப்பரங்குன்றம் சின்ன கருப்பன் அம்பலத்திற்கு, நீர்ப்பாசன வசதியைக் காங்கிரஸ் செய்து தந்தது. காங்கிரசின் அமைச்சராயிருந்த ராஜாராம் நாயுடு அவர்களுக்கு மட்டும், நீர்ப்பாசனக் கால்வாய்கள் அமைத்துத் தந்ததும் கவனிக்கத்தக்கது.

ஆக, வரலாறு நெடுகிலும் பிறரிடம் உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் தொடர்ந்து பெற்றுவந்த கள்ளர் சமூகத்தின் அடையாளங்களைப் பதிவு செய்யும் முகத்தான், காலனிய காலத்து எதிர்ப்புரட்சியையும் தொகுத்தளிக்கும் இனவரைவியலாக இந்நூல் விரிந்திருக்கிறது. இதற்காக உழைத்திருக்கும் நூலாசிரியர் திரு. சுந்தரவந்தியத்தேவன் பற்றியும் கொஞ்சம் பேசியே ஆகவேண்டும்.

புத்தக மூட்டையையும் வாழ்க்கை மூட்டையையும் சுமக்க வேண்டிய தருணத்தில், நாளெல்லாம் ‘கூன்’ பொதியைச் சுமந்து அலையும் மாற்றுத்திறனாளி, வந்தியத்தேவன். இந்தப் பொதியோடே ஊர் ஊராக அலைந்து திரிந்து, தனது இனத்தாரின் வரலாற்றைச் சேகரித்திருக்கிறார். ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்பதையும் மறந்து, தன் இனத்தாருக்காகவே வாழ்க்கையைத் தொலைத் திருக்கிறார். புத்தகங்களிலும், நூலகங்களிலும் மட்டும் குறிப்புகளை எடுக்காமல் களஆய்வின் மூலமாகவும் தரவுகளைச் சேகரித்திருக்கிறார் (மக்கள் வரலாறு என்பது, வளாகம் சாராத படிப்புக்கு வெளியே தானே இருக்கிறது!) அதன் விளைவாகக் கள்ளர்களது சமூக அமைப்பு, நாட்டு அமைப்பு, குடும்ப உறவுகள், குலதெய்வ வழிபாடு, கள்ளர்களது அரசியல் பங்களிப்பு முதலியவற்றை எல்லாம் இந்நூலில் விரிவாகக் காணமுடிகிறது. குறிப்பாகப் பின்னிணைப்பில் அவர் கொடுத்திருக்கக்கூடிய ஆவணங்கள் மதிப்புமிக்கவை. கள்ளர்கள் பற்றிய ஆய்வில் இனிவரும் தலைமுறை இதனூடே பயணிக்காமல் செல்லவே முடியாது என்னும் அளவிற்கு, ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இந்தக் கடுமையான உழைப்பிற்காகவும் விடாப்பிடியான முயற்சிக்காவும், அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தரமறிந்து வரிசையிடக்கூடிய வகையில் இந்நூலும் அமையும் என்பதை உரக்கக் கூறலாம். இறுதியாக….

‘சாதிப்பெருமை பேசும் தமிழ்ச் சமூகத்தில் சாதிப்பெயரைச் சொல்லிச் சொல்லியே பொதுவாழ்வின் மையத்திலிருந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பூர்வகுடிகளின் எழுச்சிமிக்க வரலாற்றைப் பேசும் இந்நூல் பொய்களை ஆராதிக்கவில்லை; உண்மைகளைத் தேடச் செய்கிறது; பொதுவாசகரிடம் புரிந்துணர்வைக் கோருகிறது.’

– ப. சரவணன்

உசாத்துணை

1. ந.மு. வேங்கடசாமி நாட்டார், கள்ளர் சரித்திரம், 1923

2. பெ. முத்துத்தேவர், மூவேந்தர் குலத்துத் தேவமார் சமூக வரலாறு, 1982

3. முகில்நிலவன் (தொ.ஆ.), குற்றப்பரம்பரை அரசியல், 2010

4. சு. வெங்கடேசன், காவல் கோட்டம், 2001

5. Bipinchandra, India’s Struggle for Independence, Penguin, 1989

(இம்முன்னுரையை மேற்பார்த்து உதவிய பேராசிரிய நண்பர் இரா. இராமனுக்கு நன்றி)

17 comments so far

 1. அ. சரவணன்
  #1

  சாகித்திய அகாதெமி விருது பெற்ற “காவல் கோட்டம்” வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

 2. சி.சரவணகார்த்திகேயன்
  #2

  ‘காவல் கோட்டம்’ நாவலின் முதல் பதிப்பே டிசம்பர் 2008ல் தான் வந்தது. ஆனால் இக்கட்டுரையின் உசாத்துணையில் 2001ம் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கிறது. சரி பார்க்கவும். நன்றி.

 3. மா.பன்னீர்ச்செல்வன்
  #3

  நவீனக் குற்றவியல் சமூகமாக இஸ்லாம் சமூகத்தையும், இன ஒடுக்கத்தை எதிர்த்துப் போராடும் ஈழத் தமிழர்களைக் குற்றவியல் இனமாகவும் அறிமுகப்படுத்தி உலகளவில் ஒருவிதக் கற்பிதத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருப்பதைப் போலவே …… ……….. ……… இதுக்குப் பேருதான் நைனா சந்துல சிந்து பாடுறது ….. மொத்த ஈழ இனத்தையும் யாரும் இழிவுபடுத்தவில்லை …. சொந்த ஈழச்சகோதரர்களையே கொன்று பதவி வெறிபிடித்துத் திரிந்து பின் கடைசி கட்டத்தில் தன் இன மக்களையே பகடை கேடயமாக வைத்து ஒளிந்திருந்து தாங்களே தங்களை மாவீரர்களாக அழைத்துக்கொண்ட ஒரு மிருகக்கூட்டத்தை மட்டுமே குற்றவியல் குழுவாக அழைக்கின்றனர்………………. ……………….. ……………… அதே போல் இஸ்லாம் போதிக்கும் அன்புவழியில் செல்லாமல் மதத்தை ஒரு வியாபாரப்பொருள் போல தங்கள் சுயநல வெறிக்கு உபயோகப்படுத்திக் கொன்று குவிக்கும் பயங்கரவாதிகளே குற்றவியல் குழுவாக கருதப்படுகின்றார்கள். ….. ….. கள்ளர்களைப்பற்றிய கட்டுரையில் நைஸா என்ன வில்லத்தனம் …. சேட்டை …. உங்க டகால்ட்டிய வேற எங்கயாவது வச்சுக்குங்க

 4. Pavalar Sokkalingam
  #4

  “வட இந்தியாவில், பிரித்தாளும் சூழ்ச்சியினால் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தி வெற்றி கண்ட பிரிட்டிஷ் அரசு, அவ்வகை முயற்சிகளால் தென்னிந்தியாவில் & குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் & வெற்றிபெற முடியவில்லை. எனவே, அதற்கு மாற்றாகப் ‘பிராமணர் – பிராமணர் அல்லாதோர்’ இயக்கங்களை ஊக்குவித்தது.” அப்படி ஏமாற்றுவித்தை செய்ய ஏற்படுத்தப்பட்டதுதான் ஆரிய- திராவிட பிரிவு என்னும் பொய் ….. அவ்வாறு ஒரு பொய்யைப் பரப்புரை செய்யத் தோன்றியவைதான் நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்கங்கள் ….. வெள்ளையன் ஒருபுறம் பிராமணர்களையும் ஏற்றிவிட்டு இன்னொருபுறம் எதிர்ப்பையும் நயவஞ்சக நரியாக கிளப்பிவிட்டுக் குளிர் காய்ந்தான் …. அதற்கு பிராமணர்கள் ஆட்டம் போட்டதும் உண்மை .பின்னர் இதோ பார் பார்ப்பானின் ஆதிக்கத்தை என்று அவனே நாயர், பிட்டி என்று ஒரு உப்புமாக்கூட்டத்தை ஏற்றிவிட்டு கொம்பு சீவினான் . இந்த பொய்ப் பரப்புரையின் தாக்கம் இன்றளவும் திராவிட, கம்யூனிச இயக்கங்களால் தூக்கி நிறுத்தப்படுகிறது . இந்தப் பொய் இன வாதக் கோட்பாட்டைத் தூக்கி எறிந்து இரு தரப்பும் இதை உணர்ந்து நாட்டைப்பண்படுத்த வேண்டிய நேரமிது . ஆனால் இதை வைத்து பாமரத் தமிழனை ஏமாற்றி காசுபார்த்த திராவிட இயக்கக்கூட்டம் இதைச்செய்ய விடாது. இன்னமும் ஒரு வெள்ளைக்காரக்கூட்டத்துக்கு பவர் குடுத்து கால் கழுவியே மகிழ்கிறோம். பெரியாருத்தண்ணி தராது பாண்டி பட்டி என்று ஏசும் மல்லுக்காரனும் அதே திராவிடந்தான் …. காவிரி நீர் தராத கன்னடியனும் அதே நாம் தூக்கிப்பிடிக்கும் திராவிடன் தான் …. பாலாற்றில் அணை கட்டும் தெலுங்கனும் அதே திராவிட இரத்தம்தான் என்பது பற்றி திராவிடம் திராவிடம் என்று கதையளக்கும் பெருச்சாளிக்கூட்டம் வாயே திறக்காத கெடுமதி கூட்டம். வீணே மக்களை ஏமாற்றியது போதும் … இனியும் நாங்கள் ஏமாறத் தயாரில்லை

 5. களிமிகு கணபதி
  #5

  உருப்படியாக எழுதப்பட்ட கட்டுரைக்கு நடுவே கீழே உள்ளது போல உளறல்கள் எதற்கு ?

  //நவீனக் குற்றவியல் சமூகமாக இஸ்லாம் சமூகத்தையும், இன ஒடுக்கத்தை எதிர்த்துப் போராடும் ஈழத் தமிழர்களைக் குற்றவியல் இனமாகவும் அறிமுகப்படுத்தி உலகளவில் ஒருவிதக் கற்பிதத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருப்பதைப் போலவே,..//

  இஸ்லாமைக் குற்றவியல் சமூகமாக எந்த அரசு அறிவித்துள்ளது ?

  ஈழத் தமிழ் இனத்தை எந்த அரசு குற்றவியல் இனமாக அறிவித்துள்ளது ?

  —-
  //இவர்கள் நாக வம்சத்தைச் சார்ந்தவர்கள், களப்பிரர்களின் படைப்பிரிவினர், பல்லவர்களின் வழித்தோன்றல்கள், சோழர்களின் வாரிசுகள், என்றெல்லாம் கருதப்படுகின்றனர்.//

  எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ?

  யார் இப்படிக் கருதுகிறார்கள்?

  கள்ளர்கள் அரசாண்ட பரம்பரையினர் என நிறுவ ஆதாரங்கள் என்ன ?
  —-

  சங்க காலத்தில் இருந்து ஆநிரைகள் கவர்ந்ததால் கள்ளர்கள் என்ற பெயர் இவர்களுக்கு வந்தது என்கிறீர்களே.

  ஆநிரை கவர்வது அரச குலத்தவர் அனைவரும் செய்ததுதானே ? ஏன் இந்த ஒரு இனத்திற்கு மட்டும் இப்படிப் பெயர் வந்தது ?

  சங்க காலத்திய பெயர் இப்படி இல்லை எனின், எந்தக் காலத்தில் இருந்து இப்படிப் பட்ட பெயர் வந்தது ?

  —-

  இன்னொன்று.

  தமிழ்ப் பேப்பரில் எழுத்துப் பிழைகள் குறைவாகவே பொதுவாக இருக்கும். ஆனால், ஆரம்பத்தில் இருந்து அடிக்கடி வரும் ”&” சொதப்புகிறது.

  பெரியவர்கள் கவனிக்கணும்.

  .

 6. களிமிகு கணபதி
  #6

  //சோழ வந்தான் வேளாளர்களுக்கும், மானாமதுரை பார்ப்பனர்களுக்கும் சாதகமாக வைகை அணை அமைந்தது.//

  விஷம்.

  சோழவந்தானில் வேளாளர்களைத் தவிர வேறு யாரும் விவசாயம் செய்யவில்லையா, வாழவில்லையா ?

  மானாமதுரையில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் விவசாயம் செய்யவில்லையா வாழவில்லையா ?

  இங்கே இருக்கும் சாதிகளுக்கிடையே சண்டைகள் இருந்ததாகக் காட்டி மோதவிட்டு ரத்தம் குடிக்க அலைகிறார் கட்டுரை ஆசிரியர்.

  ———

  காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் தங்கள் கிராமங்களுக்கு வசதி செய்து கொடுத்ததில் சாதிச் சழக்குகளைக் காணும் கட்டுரை ஆசிரியர், கீழே உள்ள

  “பேகம் சுல்தான் அம்ருதீன் போன்றவர்களால் இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டபோதும்”

  என்பதில் எந்தச் சழக்கையும் காணாமல் அச்சம் கலந்த மரியாதையோடு அடங்கிப் போவது தெரிகிறது.

  துஷ்டனைக் கண்டால் தூர விலகுகிறார் ஆசிரியர் ! 🙂

  .

 7. VIVEK KAYAMOZHI
  #7

  யாரும் இப்ப இவர் குறிப்பிடும் ஜாதியை இழிவாக நினைக்கவில்லை, ஆனாலும் எழுதியவர் தன் ஜாதி பெருமையை விளக்கி காட்டுவதற்காக சுயதம்பட்டம் பாடியுள்ளார், இதில் பிற சாதியினரையும் வம்புக்கு இழுத்துள்ளார்,இதெல்லாம் தமிழ் பேப்பர் தகுதிக்கு உகந்ததல்ல, அணைய கட்டி கிராமங்களா மூழ்கடிச்ச கதைய சொன்னவரு, ராம்நாடு வரையான பாசன வசதி பெரும் தங்கள் ஜாதிக்காரர்களை பற்றி சொல்லவில்லை.ரவுடி மாமூல் வாங்குவதற்கும்,காவல் கூலி என்று மிரட்டி பொருள் பிடுங்குவதர்க்கும் என்ன வித்தியாசம் என கட்டுரையாளர் விளக்கியிருக்கலாம். அவர்களே திருடி வைத்துக்கொண்டு (மோட்டார்,மாடு,வண்டி முதலியவற்றை) அவர்களே பணம் பெற்றுக்கொண்டு துப்பு கொடுக்கும் பழக்கம் இன்னும் அந்த பகுதியிலுள்ளது பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லையே? ஆண்டவர்கள் ,ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் அதுதான் என்று கர்வ படுபவர் பிறகு பிராமணர்களை இதே காரணங்கள் கூறி தங்களை இழிவானவர்களாக ஆக்கியதாக வசை பாடுவதேன்? நாடார்,கோனார்,பிள்ளையையும்,அய்யரையும் அனாவசியமாக இழுத்துவிட்டிருக்கிறார்,
  உ.பி யிலுள்ள ஜாட்கள், பீகாரிலுள்ள குர்மிக்கள்,மராட்டா படேல்கள் குஜராத் மேத்தாக்கள் இவர்களுடன் தான் இவர் சார்ந்த ஜாதியினர் நட்பாக இருந்துள்ளனர் போலும்!!.மற்ற தமிழ் ஜாதியினர் அனைவரும் இவருக்கு விரோதிகளோ?
  பிராமணீயம், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர் – இதெல்லாம் கதை, கட்டுரை, நாவல் எழுதுவோர் மானே,தேனே,பொன்மானே– போல அங்காங்கே போடவேண்டும் போல,!!! இது புத்தகமாக இருந்தால் அனாவசியமாக யாரும் வாங்கி விமர்சிக்க போவதில்லை, பொது தளத்தில் வரும் போது காழ்ப்புணர்ச்சியுடன் வார்த்தைகள் வரக்கூடாது. மற்றபடி அவரவர் சுய தம்பட்டம் யாருக்கும் பிரச்சினையில்லை. 124 ஜாதியும் ஆண்ட ஜாதி தான், குடிமகனாகத்தான் யாரும் இல்லை பாவம் !!! வரலாறு மிக முக்கியம் அமைச்சரே….

 8. virumandi kakkaveran
  #8

  மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு – e book
  open access free electronic book

  muvender kula thevar samuga varalaru by muthuthevar book is online in tamil heritage.com

  http://www.tamilheritage.org.in/thfebook/THFmuvendhar.pdf
  Muthu thevar e book is available in scribd.com

  http://www.scribd.com/muthu-theaver-Compatibility-Mode/d/48632707
  ..

 9. விக்னேஷ் சேதுராயார்
  #9

  கள்ளர் எனப்படுவோர் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டம்,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஒரு பெருங் குழுவினரைக் குறிக்கும். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் – கள்ளர் [சான்று தேவை], சந்திர குலத்தினர் – மறவர்[சான்று தேவை], அக்னி குலத்தினர் – அகமுடையார்[சான்று தேவை] என்பதை வரலாற்றின் மூலம் அறியப் பெறலாம்[சான்று தேவை]. இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். இப்பொழுது இக்குழுவினரில் புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.

 10. விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
  #10

  தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடான தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் (தொகுதி 3) நூலில் பக்கம் 71 – 119 வரை கள்ளர்கள் பற்றிய செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. சில தகவல்கள் நூலிலிருந்து..

  பக் – 81 –
  பல்லவர் நாடான தொண்டை மண்டலமே கள்ளர்கள் தொடக்கத்தில் வாழ்ந்து வந்த நாடாதல் வேண்டும். இவ் வகுப்பாரின் தலைவரான புதுக்கோட்டை மன்னர் இன்றும் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டு வருகின்றார். கள்ளர்கள் குறும்பர்களின் ஒரு பிரிவினர் எனக் கொள்ள ஏற்ற பல காரணங்கள் உள்ளன. முதலில் படை வீரராக இருந்த இவர்கள் அதனைக் கைவிட வேண்டி வந்தவுடன் கொள்ளையில் ஈடுபட்டுத் தங்களுடைய திருட்டு, வழிப்பரி ஆகியவற்றால் மற்றவர் வெறுப்பினுக்கு மிகுதியும் ஆட்பட்டு விட்டதால் கள்ளன் என்ற பெயருக்கு உரியவர்களான இந்தச் சாதியினருக்கு அப்பெயரே சாதிக்குரிய பட்டப் பெயராக நிலைத்து விட்டது.

  பக் 82
  11ம் நூற்றாண்டில் பாண்டிய அரசினைச் சோழர்கல் வெர்றி கொள்வதன் முன் சோழ நாடு அல்லது தஞ்சாவூரேகள்ளர்களுக்கு உரிய வாழ்விடமாய் இருந்து அந்த வெர்றியின் பின்னர் கள்ளர்கள் பாண்டிய நாட்டில் குடியேறியவர்களாதல் வேண்டும்..

  கருத்துக்கள் :

  தஞ்சை காலிங்கராயர்கள் திருவெண்காடு பக்கம் வாழ்கின்றனர்.
  காலிங்கராயன் என்ற பட்டம் அளிப்பதை பாண்டியர் சோழநாட்டை
  வென்றபோது சோழரிடம் இருந்து பிடுங்கினர்.

  வீரபாண்டியன் 13-ஆம் நூற்றாண்டின் கடைசியில்
  வானி (பவானி) நதிக்கு இணைகோடாக
  கால்வாய் வெட்டிய நஞ்சையனுக்கும் அவர் குடும்ப
  வம்சாவளியினருக்கும்
  அளித்தான். அதனால், காலிங்கராயன் கால்வாய்
  என்று பெயரிடப்பட்டது – 700 ஆண்டுகளுக்கு முன்.
  ஏராளமான கல்வெட்டுக்களும், பாடல்களும்
  உள்ளன. மக்கள் உதவியுடன் கட்டிய கால்வாய்
  (52 மைல் நீளம்) விளைந்த நெல்லை உண்பதில்லை
  என்று ஊற்றுக்குழி என்ற புதிய ஊரை உருவாக்கி
  கோவை அருகே வந்துவிட்டனர். கொங்குக்
  காலிங்கராயர்கள் எனக்கு பலதலைமுறை
  உறவினர்.

  உசித சூடாமணி என்ற நிகன்டு ஊத்துக்குளி
  அரண்மனிஅயில் எழுதியதுதான். பிங்கலைந்தை
  பொள்ளாச்சி சிவன் பிள்ளை அச்சிடக் காரணமும்
  ஊற்றுக்குழி அரண்மனைச் சுவடி. வளையாபதி
  அங்கே இருப்பதாக பொள்ளாச்சி சிவன்பிள்ளை
  பிங்கலந்தை பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
  இன்னும் நிறைய நூல்கள் ஊத்துக்குளி, புரவிபாளையம்
  (பதிற்றுப்

  LOUIS DUMONT என்பவர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் மூலம் கூறும் கருத்து-சோழ இளவரசி பாண்டியனை மணந்த போது திருமண சீதனமாக கள்ள படையில் இருந்த கள்ளர்களை கொண்டு சென்றார் என்றும்- கள்ளர்கள் தஞ்சை கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்து மதுரை வரை பரவி இருப்பது சோழன் பாண்டியன் மீது கொண்ட வெற்றியாலும் இருக்கலாம் என்றும் கூறுகிறார்.

  காளையார்கோவில் தாசி அபிராமியின் பிள்ளைகள் என்று அறியபட்ட பாண்டியனின் தாசி புத்திரர்கள் கள்ளர்களை சோழ நாட்டில் இருந்த அழைத்து வந்து பாண்டியன் அரசுக்கு எதிராக கலகம் செய்ய செய்தனர்.அதன் பின்னர் அதிக அளவில் கள்ளர்கள் மதுரை மாவட்டத்தில் குடியேறினர் என்றும் NELSON கூறுகிறார்.

 11. விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
  #11

  கள்ளர் சீமை

  தற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அன்று அறந்தாங்கிப் பகுதி நீங்கலாகக் கள்ளர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப் பெரும்பாலோர் கள்ளர் என்ற இனத்தவர். இவர்களது தலைவராகக் குளத்துர் ரெகுநாதராய தொண்டைமான் இருந்து வந்தார். பேராற்றல் மிக்க இந்த வீரரையும் இவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்குச் சேது மன்னர் வரவழைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இராணுவப் பதவிகளை வழங்கி இருந்தார் என, இராமநாதபுரம் மேனுவலில் வரையப் பெற்றுள்ளது. இந்த இரு சகோதரர்களது தங்கையான காதலி நாச்சியார் என்பவரும் சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் அவரை மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். மன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தாம்

  ரெகுநாத கிழவன் சேதுபதியின் ஆட்சியின்பேர்துசேது நாட்டின் வடபகுதியான புறமலை நாட்டையும், கொடுங்குன்றம் என்ற பிரான்மலைக்கும் அப்பால் உள்ள கள்ளர் சீமையை அந்தம்ன்ன்ரது மைத்துனர் ரெகுநாதராயத் தொண்டைமான் தன்னரசராக தம்மை அறிவித்துக் கொண்டார்.

  கி.பி.1645-ல் சேதுபதி மன்னரான திருமலை ரகுநாத சேதுபதி இந்த நாட்டின் வடபகுதிகளை கள்ளர் சீமை, அறந்தாங்கிச் சீமை, பட்டுக்கோட்டை சீமை, திருவாரூர் சீமை ஆகியவைகளைக் கொண்ட பரந்த பகுதியாக விரிவுபடுத்தினார். அடுத்துவந்த ரகுநாத கிழவன் சேதுபதி ஆட்சிக்காலத்தில் கள்ளர் சீமை பிரிந்து தன்னரசு நிலை பெற்றது

 12. விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
  #12

  கள்ளர் நாடு

  வளநாடுகளெல்லாம் சோழமன்னர்களின் பெயர்களையே பெயராகக்கொண்டுள்ளன.
  சோழருக்கு வளவர் என்பது ஒரு பெயராகலின் அவர் ஆண்ட நாடுகள் வளநாடு எனப்பட்டன. அவ்வச்சோழர் காலத்திலேயே அவை உண்டாயின ஆகலின் வள நாடு என்னும் பெயர் தொன்று தொட்டதாகாது.. ஒரு காலத்தில் நாடு என வழங்கியது பிறிதொரு காலத்தில் வளநாடு என்றாயது என்பதற்கு ‘மழநாடான ராஜாசிரய வளநாட்டுப் பாச்சிற் கூற்றம்’ என வருவது சான்றாகும்.
  நாட்டின் பிரிவுகள் தொன்று தொட்டு இங்ஙனம் வேறு பட வழங்கிவந்தாற் போலவே இப்பொழுது கள்ளர்கள் மிக்குள்ள சோழ பாண்டி மண்டலங்களில் வழங்கி வருகின்றன. வள நாடு, நாடு முதலிய பல பிரிவுகளும் இப்பொழுது விரவிக்கிடக்கின்றன. நாட்டின் எல்லைகள் சில ஊர்கள் அளவிற் குறுகியும் உள்ளன. இந்நாடுகட்கெல்லாம் தலைவராயினார் கள்ளர் குலத்தோர் ஆதலின் இவை பொதுவே கள்ளர் நாடு எனவும், கள்ளர் பற்று எனவும் வழங்குகின்றன. கள்ளர்களுக்கு நாட்டார் என்னும் பெயர் பொதுவாக வழங்குகிறது. கள்ளர் நாடுகளைப் பற்றி தெரிந்தவரை இங்கே எழுதுகின்றேன் .

  தொண்டைமண்டத்தில் பல்லவ நாடு பல இராட்டிரங்களாகப் (மண்டலங்களாக) பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாகப் (கோட்டங்களாக) பிரிக்கப்பட்டிருந்தது. முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் (வெங்கிராட்டிரம்), துண்டகராட்டிரம் (தொண்டை மண்டலம்) எனபன பல்லவர் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லவர் கோட்டம், நாடு, ஊர் போன்ற ஆட்சிப்பிரிவுகளை அமைத்தனர். நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாளர்கள் நாட்டார் என்றும் ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர்.

  சோழ மண்டலத்திற்குள்
  வளநாடு, நாடு என்னும் பிரிவுகள் இருந்திருக்கின்றன. பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும், பல நாடுகள் சேர்ந்து ஒரு கோட்டமும் பல கோட்டங்கள் சேர்ந்து ஒரு மண்டலமும் ஆகும்.அப்படியே பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும் பல நாடுகள் சேர்ந்து ஒரு வளநாடும் பல வளநாடுகள் சேரந்து ஒரு மண்டலமும் ஆகும் கோட்டத்தின் உட்பட்ட நாடு என்பதன் உட்பிரிவாக கூறு என்பதொன்றும் சிறு பான்மை காணப்படுகிறது சோழ மண்டலமானது வளநாட்டிற்கு மேலாக தென்கரை நாடு, வடகரைநாடு என்னும் பிரிவினையும் உடைத்தாயிருந்தது. இப்பிரிவு காவிரியால் ஏற்பட்டதாகும்.

  நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள கள்ளர் சரித்திரம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.

  தமிழரது நாடு தமிழ்நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும் கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகின்றது. தென்னம நாடு, உரத்தநாடு, பாப்பாநாடு, பைங்காநாடு போன்று என பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டதாய் கள்ளர் நாடு இருந்தது.

  கள்ளர் நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பர். அவர்களுக்கு அம்பலகாரர் அல்லது நாட்டாண்மைக் காரர் என்பது சிறப்புப் பெயராகும். சில இடங்களில் காரியக்காரர் என்றும் சொல்வதுண்டு. ஊரிலுல்லோர் எல்லாவிதமான வழக்குகளையும் அம்பலகாரரிடம் தெரிவித்துக் கொள்ள அவர் வழக்குகளின் உண்மையைக் கண்டறிந்து ஒருபுறமும் கோணாது நடுவு நிலையாகத் தீர்ப்புச் செய்து விடுவர். வழக்காளிகலும் தீர்ப்பிற்குக் கட்டுபட்டு நடப்பர். அம்பலகாரர் என்னும் உரிமையைப் பணம் முதலிய எக்காரணத்தாலும் ஒருவர் திடாரென அடைந்து விடுவதில்லை. அது பரம்பரையாக வந்து கொண்டிருப்பதொன்றாம். ஒருக்கால் அம்பலகாரர்க்குச் சந்ததியில்லாது போய்விடின், அவரைச்சார்ந்த தகுதியுடைய வேறு யாரையாவது ஊரார் தேர்ந்தெடுத்துக் கொள்வர். அம்பலகாரர் பொருள் குன்றி எவ்வளவு எளியராய்ப் போய்விடினும் அவரது உரிமைக்குப் பழுது வருவதில்லை. சில சமயங்களில் பெண்டிரும்கூட அவ்வுரிமையை வகித்து நடத்துவராவர்.

  திருவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்கள் ஓர் செப்புப் பட்டயத்திலிருந்து எழுதிய கள்ளர் நாடுகளின் பெயர்கள்:

  “தந்தி நாடு, மனைப்பள்ளி நாடு, அய்வூர் நாடு, அஞ்சு முகநாடு, ஏரிமங்கல நாடு, மேலத் துவாகுடி நாடு, கீழத் துவாகுடி நாடு, கொற்கை நாடு, செங்குள நாடு, மேல் செங்குள நாடு, கீழ செங்குள நாடு, பூளியூர் நாடு, செங்கணி நாடு, பிரம்பை நாடு, கானம்பூண்டி நாடு, சித்தர்குடி நாடு, மேல மகாநாடு, கீழ் வெங்கை நாடு, குளமங்கல நாடு, சித்துபத்து நாடு, குழந்தைவளநாடு,பனையக்கோட்டை நாடு,அருமலைக்கோட்டை,காசாங்கோட்டை நாடு, தென்னம நாடு, ஒக்கு நாடு, உரத்த நாடு, பட்டுக்கோட்டை வளநாடு, கறப்பிங்கா நாடு, அஞ்சுவண்ணப் பத்து நாடு, கல்லாக்கோட்டை நாடு, அய்யலூர் நாடு, தென்பத்து நாடு, மத்தச் செருக்குடி நாடு, அன்னவாசற்பத்து நாடு, கண்ணுவாரந்தய நாடு, கோட்டை பத்து நாடு, பிங்களக் கோட்டை நாடு, மேலப் பத்து நாடு, பெரிய கூத்தப்ப நாடு, அறந்தாங்கி கீழாநெல்லி நாடு, வடுவூர் நாடு, திருமங்கலக் கோட்டை நாடு, பாப்பாநாடு, முசிரி நாடு, பின்னையூர் நாடு, விற்குடி நாடு, அம்பு நாடு, ஆலங்குடி நாடு, நிசிலி நாடு, நாலு நாடு, காசா நாடு, கோனூர் நாடு, சுந்தர் நாடு, மின்னாத்தூர் , நொழயூர் நாடு, அண்டக்குள நாடு, செருவாசல் நாடு, திருப்பத்து நாடு, அஞ்சில நாடு, ஆமையூர் நாடு, கிளியூர் நாடு, மல்லாக்கோட்டை நாடு, மழைநாடு, காவல் நாடு, காவிக்கோவில் நாடு, வலல நாடு, மாலை நாடு, பட்டமங்கல நாடு, கண்டர் மாணிக்க நாடு, கம்பனூர் நாடு, பாகையூர் நாடு, செருக்குடி நாடு, தெருபோகி நாடு, இருப்ப நாடு, எய்ப்பாம்பா நாடு, வன்னாடு, முத்து நாடு, சிலம்ப நாடு, செம்பொன்மாரி நாடு, சீழ் செங்கை நாடு, எயிலுவான் கோட்டை நாடு, மேலூர் நாடு, வெள்ளூர் நாடு” என்பன.

  தஞ்சைக் கள்ளர் மகா சங்கம் அமைச்சராகிய திருவாளர் நடராஜ பிள்ளை அவர்கள் (பி.ஏ.,பி.எல்.,) வாயிலாகக் கிடைக்லுற்ற செய்திகள் பின் வருவன:

  நாட்டின் பெயர் (தஞ்சாவூர்)
  நாட்டின் முதற்கரை
  பொதுத்தலம்

  காசாநாடு
  கீழ் வேங்கைநாடு
  குழந்தை வளநாடு
  அருமலைக்கோட்டை
  தெக்கூர்
  கோயி
  கேனூர் நாடு
  தெக்கூர்
  கோட்தைத்தெரு
  பின்னையுர்நாடு
  பின்னையூர்
  தென்னம நாடு
  தொன்னம நாடு
  கன்னந்தங்குடி நாடு
  மேலையூர்
  உரத்த நாடு
  புதுவூர்
  கோயிலூர்
  ஒக்கூர் நாடு
  மேலையூர்
  கீழ ஒக்கூர் நாடு
  கீழையூர்
  திருமங்கலக் கோட்டை நாடு
  மேலையூர்
  தென்பத்து நாடு
  பேரையூர்
  அப்பராம்பேட்டை
  ராஜவளநாடு
  நடுவாக்கோட்டை
  பைங்கா நாடு
  வடுகூர் நாடு
  தென்பாதி
  கோயில்பத்து நாடு
  கம்பை நத்தம்
  கோயில்பத்து
  சுந்தர நாடு
  வளமரங்கோட்டை
  குளநீள் வளநாடு
  துரையண்டார் கோட்டை
  கடம்பர் கோயில்
  பாப்பா நாடு
  தெற்குக் கோட்டை
  சங்கரனார்கோயில்
  அம்பு நாடு தெற்க வடக்குதெரு
  செங்குமேடு 12டான் விடுதி
  அம்புகோயில்
  வாகரை நாடு
  குருங்குளம்
  வடமலை நாடு
  பகட்டுவான் பட்டி
  கொற்கை நாடு
  செங்கிபட்டி கூனம் பட்டி
  ஏரிமங்கல நாடு
  ராயமுண்டான்பட்டி
  வெண்டையன்பட்டி
  செங்கள நாடு
  விராலிப்பட்டி
  நொடியூர்
  மேலைத்துவாகுடிநாடு
  சூரியூர்
  மீசெங்கிளி நாடு
  தண்டுகமுண்டநாடு
  அடைக்கலங்காத்தநாடு
  அள்ளூர்
  பிரம்பை நாடு
  பிரம்பூர்
  கண்டி வள நாடு
  நடுக்காவேரி
  வல்ல நாடு
  இளங்காடு
  தந்தி நாடு
  நத்தமாங்குடி
  வாராப்பூர்
  பொன்னம் விடுதி
  ஆலங்குடி நாடு
  ஆலங்குடி
  வீரக்குடி நாடு
  வாண்டான் விடுதி
  திருமணஞ்சேரி
  கானாடு
  திருவரங்குளம்
  கோ நாடு
  பெருங்குளூர் நாடு
  பெருங்களூர்
  கார்யோக நாடு
  ஊமத்த நாடு
  சிங்கவனம்

  வரலாற்றைக் காண்போம்
  கடல் கொண்ட தமிழ் நிலத்தில் ஏழ்தெங்குநாடு ஏழ்மதுரைநாடு ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு, ஏழ்குன்றநாடு, ஏழ்குணக்காரைநாடு, ஏழ்பனைநாடு என்று நாற்பத்தி ஒன்பது நாடுகள் இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் ஒன்றேனும் தேசமென்றிருந்ததாகக் கூறவில்லை.
  தமிழ் வழங்குமித்தமிழ் நிலம் செந்தமிழ் பேசும் பகுதியாகவும் கொடுந்தமிழ் பேசும் பகுதியாகவும் இருந்ததென்று ஒரு பழம் பாடல் கூறுகிறது. பாடல் வருமாறு.
  தென்பாண்டி குட்டம்குடம் கற்கா வேண்பூமி
  பன்றி அருவா அதன்வடக்கு – நன்றாய
  சீதம் மலரடு புனநாடு செந்தமிழ்சேர்
  ஏதழில் பன்னிரு நாட்டெண்
  செந்தமிழிலிருந்து சற்றுத் திரிந்து வழங்கிய பகுதியைக் கொடுந்தமிழ் நாடுகளென்று குறித்ததேயன்றி தேசமென்று குறிக்கவில்லை.
  நாடு என்னும் சொல் இச்செந்தமிழ் நிலத்தில் வழக்கேறி வழங்கி வருவதை வரலாற்று வழியில் காண்போம். வடக்கில் வேங்கடமலையும் தெற்கில் குமரியாறும், கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லையாகக் கொண்ட இத்தமிழ் நிலம் முடியுடை மூவேந்தர் சேர, சோழ, பாண்டிய மன்னரர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது.
  இம்மூவேந்தர்களும், தங்கள் நாடுகளை பல ஆள்நிலப் பகுதிகளாக இன்றைய மாவட்டம், வட்டங்களைப் போல பிரித்து அவற்றிற்கும் நாடுகளென்றே பெயரிட்டு வழங்கி வந்தனர். சோழ நாட்டில் பல ஊர்களைக் கொண்டது நாடு, பல நாடுகளைக் கொண்டது வளநாடு, பல வளநாடுகளைக் கொண்டது மண்டலம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. அவை வருமாறு :
  சோழ நாட்டில் மங்கலநாடு, மருகல் நாடு, மழநாடு, புலியூர் நாடு, அழுந்தூர் நாடு போன்ற நாடுகளும் அருண்மொழித் தேவவளநாடு, பாண்டிய குலோசினி வளநாடு போன்ற வளநாடுகளும் இருந்ததாகக் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.
  பாண்டிய நாட்டில் மேல்நாடு, சிறுகுடி நாடு, வெள்ளுர் நாடு, மல்லாக்கோட்டை நாடு பாகநேரிநாடு, போன்ற நாடுகளும்.
  சேரநாட்டில் கொங்குமண்டலத்தில் பூந்துறை நாடு, காங்கேய நாடு, ஆரை நாடு, திருவானைக்குடி நாடு என மேலும் பல நாடுகளும் உள்ளன.
  கல்வெட்டில் நாடுகள் :
  சோழர் கல்வெட்டு முதற்பராந்தகச் சோழன் கி.பி. (907–957) ஆனைமலை நரசிங்கப்பெருமாள் சபையோர் சாசனம் — சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு மருதூர்.
  தென்னவன் மூவேந்தவேளான் சாசனம் 995- பொய்கைநாடு, இராசேந்திரசிங்க வளநாடு, தியாவல்லி வளநாடு, திரிபுவன முழுதுடைய வளநாடு, திருவாலி நாடு, நித்தவினோத வளநாடு, இராசராசக்கிணறு மன்னன் இராசராசன் (885-1014) வேங்கைநாடு, இராசிபுரத்து நகரத்தார் சாசனம் மன்னன் இராசராசன் வேங்கை நாடு, குடமலை நாடு, சாமுண்டப்பை நிபந்தம் மன்னன் முதலாம் இரசேந்திரன் (1012–1044) பங்கள நாடு, வகைமுகைநாடு, இந்த கல்வெட்டில் மன்னனின் வெற்றிச்சிறப்பைக் கூறுமிடத்தில் வங்காள தேசம் ஆரியதேசம் வென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் நிலத்திற்குப் புறத்தே உள்ள நாடுகள் தேசமென்று வழங்கப்பட்டதால் தன்னாட்டுப் பகுதியை நாடு என்று குறிப்பிடும் கல்வெட்டு பிறநாட்டை அவர்கள் வழங்கியபடியே தேசமென்று குறிப்பிடுகிறது. இதிலிருந்து தேசம் பிறமொழிச் சொல், பிறநாடுகளைக் குறித்து வழங்கிய சொல் என்பது தெளிவாகிறது.
  மணிமங்கலம் சபையோர் சாசனம் மன்னன் இரண்டாம் இராசேந்திரன் (1052–64) செயங்கொண்ட சோழபுரத்து மாகனூர் நாடு.
  வில்லவராயன் சாசனம் மன்னன் முதற் குலோத்துங்கன் (1070) கல்வெட்டு உள்ள இடம் திருவானைக்காவல் பாண்டிய குலாசினி வளநாடு, தென்கவிர்நாடு, மணிமங்கலம் கோவில் சாசனம் மன்னன் மூன்றாம் இராசராசன் (1216) குலோத்துங்க சோழ வளநாடு, குன்றத்தூர் நாடு.
  பாண்டியநாட்டுக் கல்வெட்டு
  புதுக்கோட்டைச் சீமைக்கல்வெட்டு குலசேகரப்பாண்யன் (119-9-1216) திருமயம் தாலுகா மலைக் கோவில் விருதராசபயங்கரவளநாடு கானநாடு இரயிலேசுசாசனம் தென்காசி மன்னன் மாறவன்மன் சுந்தரபாண்டியன் (1219) துரும நாடு, கானநாடு,
  பாண்டியர் கல்வெட்டு
  பெரம்பலூர் மாவட்டம் — நகரம் மதனகோபாலசாமி கோயில் மன்னன் சடாவர்மன் சுந்தரபாண்டியன் (1258) வெம்பார் நாடு, கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் கோயில் சுவர் மன்னன் வீரபாண்டியன் 13ஆம் நூற்றாண்டு – கிழங்கநாடு, திருநெல்வேலி மாவட்டம் – மேலநத்தம் -அக்கினீசுவரமுடையார் கோயில் பிற்காலப்பாண்டியர் – துரோதைய வளநாடு. அதே கோயில் மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1223) கீழ்வெம்பா நாடு, வல்லபன் கோட்டை – ஐயனார் கோயில் – – மன்னன் சடையன் மாறன் 10 ஆம் நூற்றாண்டு – களக்குடிநாடு.
  செப்பேட்டில் நாடுகள்
  சோழர் செப்பேடுகள் முதலாம் பராந்தகனின் உதயேந்திரம் செப்பேடு மேலடையாறுநாடு, வேளஞ்சேரிச் செப்பேடு, திருத்தணிநாடு, சுந்தரச்சோழனின் அன்பில் செப்பேடு திருவழுந்தூர் நாடு, இராசகேசரிவர்மனின் திருச்செங்கோட்டுச் செப்பேடு – கன்னநாடு இராசராசனின் ஆனைமங்கலச் செப்பேடு – சத்திரியசிகாமணிவளநாடு, நித்தவினோதவளநாடு, போன்ற நாடுகளும் கரந்தைச் செப்பேடு அம்பர்நாடு, பாம்பூர்நாடு, வெண்ணாடு திரைமூர்நாடு போன்ற நாடுகளுளையும், இந்தச் செப்பேடு இரசேந்திரசோழன் கங்கை நோக்கி படையெடுத்துச் சென்றபோது ஆரியதேசம், மத்திய தேசம், இலாடதேசம், வங்கதேசம் ஆகியவற்றை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்தான் என்று குறித்துள்ளது.
  இந்தச் செய்தி கல்வெட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு தரும் கருத்தே இங்கும் உறுதியாகிறது. தேசம் தமிழில்லை. தமிழ்நிலம் குறித்து வழங்கவுமில்லை.
  வீரபாண்டிச் செப்பேடு மாரியம்மன் கோயில் வழிபாட்டிற்கான கொடைபற்றியது. மன்னன் மதுரை விசுவநாத நாயக்கன் (1529) பிறதலை வளநாட்டில் சேர நாட்டு எல்லைக்குள் வருசை நாட்டு மத்தியில் புல்ல நல்லூரான வளநாட்டில் குடியிருக்கிற காமாட்சியம்மன் பக்தராகியயாகச் சத்திரிய தெலுங்க தேசாதிபதிகள் வமிசத்தார்கள் தலைமை புல்லன்செட்டி. புல்லன்செட்டி மாரியம்மன் கோவிலுக்குக் கொடையளிக்கிறார். புல்லன்செட்டி குடியிருக்கும் தமிழ் நிலப்பகுதியைக் குறிப்பிடும். செப்பேடு பிறதல வளநாடு, செர நாடு, வருசை நாடு, புல்ல நல்லூர் வளநாடு என்று குறிப்பிடுகிறது. புல்லன்செட்டியின் முன்னோர்கள் வாழ்ந்த இடம் தெலுங்கு மொழி பேசப்படும் தேசமாகும். இதுவும் இராசேந்திரசோழன் செப்பேட்டுக் குறிப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்நிலத்திற்குப் புறத்தேயுள்ள தெலுங்கு நாட்டைத் தேசமென்று குறிப்பிடுகிறது.
  முசிறிச் செப்பேடு கோயில் பூசகர் தேவரடியார்க்குக்காணி வழங்கிய பட்டையம் மன்னன் மதுரை முத்துவீர சொக்கநாத நாயக்கன் (கி.பி.1710) வெற்றிச்சிறப்பைக் குறிக்கிறது. இதில் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் என்று அவனின் வெற்றிச்சிறப்பு குறிப்பிடப்படுகிறது. இதில் வரும் நாடு, இராச வளநாடு, ஆமூர் நாடு குறிக்கப்படுகிறது.
  நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் “கள்ளர் சரித்திரம்’ என்னும் ஒரு நூல் எழுதியுள்ளார். அதில் கள்ளர் நாடுகள் பற்றிப் பதிவாகியுள்ள செப்பேடு ஒன்றை ஆவணமாகக் காட்டியுள்ளார். அந்தச் செப்பேட்டிலுள்ள நாடுகள் வருமாறு : தந்திநாடு, மனைப்பள்ளிநாடு, ஆய்வூநாடு, அஞ்சமுகநாடு, எரிமங்கலநாடு, மேலத்துவாகுடிநாடு, கீழத்துவாகுடிநாடு, கொற்கை நாடு, போன்ற நாடுகள்.

 13. விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
  #13

  கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.
  கள்வர், கள்ளர் என்ற பெயருள்ள கடவுள்கள்
  சிவபெருமான் – திருமால் (மால்) என்றும் உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்

  திருமாலை, கள்ள மாதவா கேசவா,
  காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா,
  வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார்,
  கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்

  திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்)

  சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் கள்வர் கோமான்
  கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் 9 செந்தலைக் கல்வெட்டு

  திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு
  “வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.

  “ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
  இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
  டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
  என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

  “ கள்வர் பெருமகன் – தென்னன்”
  “ கள்வர் கோமான் தென்னவன்”
  என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்

  சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

  இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது
  நெஞ்ச நிறையழித்த கள்வனென். . “
  என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்

  “.மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்”(சுந்தரர் திருத்தொண்டர்தொகை)

  “கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
  ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)

  “ கொங்கிற் கனகமணிந்த ஆதித்தன் குல முதலோன். .
  இருக்குவேள் மன்ன இடங்கழியே”(நம்பியாண்டார் நம்பி-திருவந்தாதி
  இருக்குவேளிர் குலத்தலைவர் . இடங்கழியார். . பொன்வேய்ந்த ஆதித்தன்
  மரபோர்” (சேக்கிழார் திருத்தொண்டர் புராண சாரம் பக்.52)
  என சுந்தரர்,சேக்கிழார், நம்பியாண்டார் நம்பிஅடிகள் சோழர்கள் கள்ளர்கள் எனவும்

  “ களப ராஜராஜன்”
  “ கள்வன் ராஜராஜன்”
  என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்

  “ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
  மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
  விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61)

  “ புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து” (அகம்.)

  “ பொய்யா நல்லிசை மாவண் புல்லி” (அகம்.359)

  “ நெடுமொழிப் புல்லி” (அகம்.)

  புல்லி நன்னாட்டும்பர்”(அகம்.)

  “ கடுமான் புல்லிய காடிறந்தோரே”(நற்றிணை)
  என மாமூலனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப்பற்றியும்

  “ புல்லி வியன்றலை நன்னாட்டு வேங்கடம்”
  “ மாஅல்யானை மறப்போர்ப் புல்லி
  காம்புடை நெடுவரை வேங்கடம்”
  என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

  கள்ளர்குலமும் அரசமரபுகளும்.
  தமிழக வரலாற்றில் மிகத்தொன்மையான காலம் முதற்கொண்டு சிறப்புற்று வாழும் குடிகளுள் கள்ளர்குடி தனிச் சிறப்புடையதாகும். இக்குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விழங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இவ்வினப் பெருமக்கள் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரச குடும்ப தோற்றல்களாகவும், தொடர் புள்ளவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு சோழர் கால கல்வெட்டுகள் காட்டுகின்றன. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன.

 14. விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
  #14

  கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.
  கள்வர், கள்ளர் என்ற பெயருள்ள கடவுள்கள்
  சிவபெருமான் – திருமால் (மால்) என்றும் உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்

  திருமாலை, கள்ள மாதவா கேசவா,
  காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா,
  வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார்,
  கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்

  திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்)

  சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் கள்வர் கோமான்
  கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் செந்தலைக் கல்வெட்டு

  திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு
  “வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.

  “ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
  இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
  டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
  என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

  “ கள்வர் பெருமகன் – தென்னன்”
  “ கள்வர் கோமான் தென்னவன்”
  என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்

  சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

  இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது
  நெஞ்ச நிறையழித்த கள்வனென். . “
  என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்

  “.மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்”(சுந்தரர் திருத்தொண்டர்தொகை)

  “கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
  ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)

  “ கொங்கிற் கனகமணிந்த ஆதித்தன் குல முதலோன். .
  இருக்குவேள் மன்ன இடங்கழியே”(நம்பியாண்டார் நம்பி-திருவந்தாதி
  இருக்குவேளிர் குலத்தலைவர் . இடங்கழியார். . பொன்வேய்ந்த ஆதித்தன்
  மரபோர்” (சேக்கிழார் திருத்தொண்டர் புராண சாரம் பக்.52)
  என சுந்தரர்,சேக்கிழார், நம்பியாண்டார் நம்பிஅடிகள் சோழர்கள் கள்ளர்கள் எனவும்

  “ களப ராஜராஜன்”
  “ கள்வன் ராஜராஜன்”
  என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்

  “ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
  மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
  விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61)

  “ புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து” (அகம்.)

  “ பொய்யா நல்லிசை மாவண் புல்லி” (அகம்.359)

  “ நெடுமொழிப் புல்லி” (அகம்.)

  புல்லி நன்னாட்டும்பர்”(அகம்.)

  “ கடுமான் புல்லிய காடிறந்தோரே”(நற்றிணை)
  என மாமூலனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப்பற்றியும்

  “ புல்லி வியன்றலை நன்னாட்டு வேங்கடம்”
  “ மாஅல்யானை மறப்போர்ப் புல்லி
  காம்புடை நெடுவரை வேங்கடம்”
  என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

  கள்ளர்குலமும் அரசமரபுகளும்.
  தமிழக வரலாற்றில் மிகத்தொன்மையான காலம் முதற்கொண்டு சிறப்புற்று வாழும் குடிகளுள் கள்ளர்குடி தனிச் சிறப்புடையதாகும். இக்குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விழங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இவ்வினப் பெருமக்கள் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரச குடும்ப தோற்றல்களாகவும், தொடர் புள்ளவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு சோழர் கால கல்வெட்டுகள் காட்டுகின்றன. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன.

  சீவக சிந்தாமணி 741ம் செய்யுளில் உள்ள

  “ கள்ளராற் புலியை வேறுகாணிய ” என்ற

  தொடருக்க அரசனைக் கொண்டு சீவகனை போர் காண வேண்டி என்று பொருள் கண்டார் உச்சிமேற்புலவர் நச்சினார்கினியர் இங்கே கள்ளர் என்பதற்கு அரசர் என பொருள் கண்டார். சீவகனைப் புலி என்று கூறியதற்கு ஏற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின் இங்கு வீரத்தின் மேம்பட்டார் என்று பொருள் படுகிறது. எனவே வீரம் எனும் பொருள் பற்றியே கள்வர், கள்ளர் என்ற பெயர்கள் தோன்றியதாகத் தெரிகிறது.

  எனவே கள்ளர், கள்வர் சொற்கள் உயரிய பொருளைத் தருவதை நோக்க தலைவர், அரசர், கரியவர், உளம்கவர் பண்பாளர் என்று பொருள் கொள்ளலாம். இவ்வளவு சிறப்புப் பொருள் இருக்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பு பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா? ஏன்று சிந்தித்தால் அவர்களுக்கும் கள்ளர் என்ற சொல் மேற்கண்ட உயர் பொருளிலேயே வழங்கி இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் எந்த தொல்குடியை சேர்ந்தவர்கள் என்பதைக் காண்போம்.
  கள்ளர்களுக்கு எம்முறையில் இப்பெயர் வழங்கப்படுகிறது என்று சிறிது காண்போம்.

  “கள்வனென் கிளவி கரியோனென்ப” – திவாகரம்

  “கடகரிப்பெயரும், கருநிறமகனும், கற்க்கடக விராசியும்
  ஞெண்டும் கள்வனென்” – பிங்களந்தை

  எனவே கள்வன் எனும் சொல் கருநிறம் உடையோன் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது. ஆரியரின் இருக்குவேத மந்திரங்கள் தமிழரைக் கரியோர், பகைவர் என்று கூறுகின்றன. இந்திரன் கரியோன் எனப் பெயர் பெற்றவனாவான் அது பற்றியே கள்ளர்கள் தங்களை இந்திர குலத்தார் என்று கூறி வருகின்றனர். சோழர்களை கருநிறம் பற்றியே மால் என்று அழைக்கின்றனர்.

 15. பாலு
  #15

  பிச்சாவரம் ஜமீன் கதை :

  // 1) களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

  2) தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

  3) இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 – இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 – இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

  4. இங்கு மற்ற இனத்தவர் பட்டம் கட்ட முடியாது. // இது தான் வன்னியர்கள் சோழர்கள் என்று சொல்ல காரணம். அதற்கு விளக்கம்

  1. களப்பிர அரசன் (காலம் கி.பி 300) – வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள், இவர் சைவத்தை ஆதரிக்க வில்லை, இவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்தும்உண்டு (களப்பறையர் என்று அழைக்கபடுபவர்களே அன்று களப்பிரர் எனப்பட்டனர் என கருத்தும்உண்டு : ஆதாரம் விக்கி ) அதனால் அந்தணர்கள் இவர்களுக்கு முடி சூட்டப்படாது தவிர்த்திருக்கலாம்.
  அதனால் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்திருக்கலாம்.

  2) அப்போது உள்ள அந்தணர்கள் காலம் (கி.பி 300 ) இப்போது உள்ள தில்லை வாழ் அந்தணரால் காலம் ( கி.பி 1800) கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள
  இவர்கள் அதே அந்தணர்களா? (இப்பொழுது உள்ள அந்தணர்கள் கோவில் தங்களது என்று பொய்யாக வழக்கு போட்டதை எல்லோரும் அரிந்ததே). நிர்வாகம் சோழனுக்கு பிறகு பல பேரிடம் போய் 18ஆம் நூற்றாண்டில் இவர்களிடம் வந்தது, ஆதாரம் கீழே

  3) கி.பி 1844 முன்பாக இவர்கள் யாருக்கும் முடி சூட்டவில்லை
  மேலாக சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்று கூறுகிறார். 1844 ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் கட்டப்பட்ட ஆதாரம் இல்லை.

  4) வெள்ளையர் காலத்தில் அந்த அந்த பகுதியில உள்ள ஜமீன்களே அங்குள்ள கோயிலுக்கு முடி சூட்டப்படும் உரிமையைப் பெற்றார்கள். அதர்க்கு உதாரணம் இப்பொழுது தஞ்சை கோவிலில் மராட்டிய சரோபோஜி வாரிசுக்கும், கள்ளழகர் கோவிலில் கள்ளர்களுக்கு, பட்ட மங்கலம் மற்றும் பாகநேரிநாடு போன்ற கள்ளர் நாடு அம்பலகாரர்களுக்கு
  தான் இன்றும் பட்டம் கட்டுவதை கான முடிகிறது. இது போல தான் பிச்சாவரம் ஜமீன்களுக்கும்

 16. பாலு
  #16

  கோயில் வரலாறு:

  கி.பி.14_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் மாலிக்காபூர் நடையெடுத்த-போது நிகழ்ந்த கலவரத்தில் கி.பி. 1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார். இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).
  கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.

  1610_ஆம் ஆண்டு லிங்கமநாயக்-கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பரா-மரிப்பையும் நிர்வாகத்தை-யும் மேற்கொண்டார்.

  கி.பி. 1648 வரை துறை-யூர்ப் பாளையக்காரர் ரெட்டி-யார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது.

  பீஜப்பூர் சுல்தான் படைத் தாக்குதலில் 24.12.1648 லிருந்து குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார். அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர்.

  மராட்டியர் ஆட்சி நடை-பெற்றது. தஞ்சையில் ஆட்சி செய்த வீர சிவாசியின் மூத்த மகன் தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையி-லிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். 21.11.1684 (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலி-லிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரி-வாகக் கூறப்படுகிறது.

  21.1.1711 – வேளூர் அம்பல-வாணத் தம்பிரான் என்பவரிடம் நிர்வாகம் இருந்தது

  19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்-பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது.

  மூவர் தமிழ்த் தேவாரப் பாடலைச் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். வடமொழிக்கு நிகராகத் தமிழ் இருக்கக் கூடாது என்றனர்.

  ஆதாரம் சொன்னவர்:
  புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி.,
  முன்னாள் தலைவர்
  கல்வெட்டியல் – தொல்லியல் துறை

 17. விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
  #17

  கள்ளர் வரலாறு

  இச்செந்தமிழ் நிலத்தில் வடக்கில் வேங்கடமலையும் தெற்கில் குமரியாறும், கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லையாகக் கொண்ட இத்தமிழ் நிலம் முடியுடை மூவேந்தர் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னரர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. கள்ளர்கள் தமிழர்களின் ஆதிகுடிகளான நாகர்களின் வழித்தோன்றல் தான் இந்த கள்ளர்கள். தமிழ்நாட்டில் சோழ, சேர, பாண்டிய, பல்லவ மன்னர்களுக்கு பிறகு கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இருந்த தமிழக வரலாற்றிலும் மக்களாலும் அறியபட்ட சிறந்த தமிழ் மன்னர்கள் கிழவன் சேதுபதி , பூலித்தேவர், வேலுநாச்சியார், மருது பாண்டியர், வாளுக்கு வேலி அம்பலம்.

  கள்ளர்கள் பற்றிய வரலாற்று ஆய்வு செய்திகள் :

  தனி சிறப்பு :
  1) எந்த இனத்திற்கும் எந்த சாதியினரும் இல்லாத இவர்களிடம் உள்ள பட்டங்கள்
  2) இவர்களது தனிப்பட்ட வளரி ஆயுதமும்.
  3) இவர்கள் வாழும் பகுதிகளின் நாடு என்ற அமைப்புகள்.
  4) கள்ளர் வீரவிளையாட்டு ‘சல்லிக்கட்டு’.
  5) தமிழ் மொழி மீதுள்ள ஆர்வம் (நான்காம் தமிழ் சங்கம், கரந்தைச் தமிழ் சங்கம்).
  6) நாட்டின் புற மண உட்பிரிவுகள் : வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன.
  7) தலைவன்பட்டம்-அம்பல(க்)காரன், நாட்டான்,
  8) குலப்பட்டம்- தொண்டைமான், இராசாளி, நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன், பழுவேட்டரையர் மேலும் பல பட்டங்கள்.

  இப்படி சிறப்புகளை பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா?

  கள்ளர், கள்வர் சொற்கள் உயரிய பொருளைத் தருவதை நோக்க தலைவர், அரசர், கரியவர், உளம்கவர் பண்பாளர் என்று பொருள் கொள்ளலாம். இவ்வளவு சிறப்புப் பொருள் இருக்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பு பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா? ஏன்று சிந்தித்தால் அவர்களுக்கும் கள்ளர் என்ற சொல் மேற்கண்ட உயர் பொருளிலேயே வழங்கி இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் எந்த தொல்குடியை சேர்ந்தவர்கள் என்பதைக் காண்போம்.
  கள்ளர்களுக்கு எம்முறையில் இப்பெயர் வழங்கப்படுகிறது என்று சிறிது காண்போம்.

  “கள்வனென் கிளவி கரியோனென்ப” – திவாகரம்

  “கடகரிப்பெயரும், கருநிறமகனும், கற்க்கடக விராசியும்
  ஞெண்டும் கள்வனென்” – பிங்களந்தை

  எனவே கள்வன் எனும் சொல் கருநிறம் உடையோன் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது. ஆரியரின் இருக்குவேத மந்திரங்கள் தமிழரைக் கரியோர், பகைவர் என்று கூறுகின்றன. இந்திரன் கரியோன் எனப் பெயர் பெற்றவனாவான் அது பற்றியே கள்ளர்கள் தங்களை இந்திர குலத்தார் என்று கூறி வருகின்றனர். சோழர்களை கருநிறம் பற்றியே மால் என்று அழைக்கின்றனர்.

  கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.

  “உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்”

  “திருமாலை, கள்ள மாதவா கேசவா,
  காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார், கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்”

  மேலும் திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்) ” தொண்டைமான் கள்ளர் என்பதற்கு ஆதாரம் கீழே காணலாம் “

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: