பெரியார் : ‘முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்!’
இந்து மதத்தையும் பார்ப்பனீயத்தையும் கடுமையாக விமரிசனம் செய்த இரு பெரும் தலைவர்களான அம்பேத்கரும் பெரியாரும் மத மாற்றம் குறித்து உரையாடியிருக்கிறார்கள். இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள் தங்கள் மதத்தில் இருந்த வெளியேறி பௌத்தத்தைத் தழுவவேண்டும் என்றார் அம்பேத்கர். ஏன் பௌத்தம் என்பதற்கான காரணங்களை விரிவாகவும் ஆழமாகவும் அம்பேத்கர் பதிவு செய்திருக்கிறார். மத மாற்றத்துக்கு அம்பேத்கர் முன்வைத்த காரணங்களை பெரியார் ஏற்றுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கரைப் போல் அவர் பௌத்தத்தை ஒரு தீர்வாக முன்வைக்கவில்லை. மாறாக, அவரது தேர்வு இஸ்லாமாக இருந்தது என்று படித்திருக்கிறோம். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. மதங்களை நிராகரித்து பகுத்தறிவை முன்வைத்த பெரியார், இஸ்லாத்தை ஏன் தேர்வு செய்யவேண்டும்? இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகளே கிடையாதா? இஸ்லாத்தை பகுத்தறிவு ஏற்றுக்கொள்கிறதா?
இந்தக் கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்னால், மதம் குறித்த பெரியாரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் எப்படி இருந்தன என்று பார்ப்போம். மதம் பற்றிய பெரியாரின் பார்வை ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது. முதலாவதாக, அவர் பார்ப்பனர்களையும் பார்ப்பனீயத்தையும் கடுமையான விமரிசனத்துக்கு உள்ளாக்கினார். இரண்டாவதாக, புனித நூல்களை ஊடுருவிச் சென்று உண்மை கண்டறிந்து, தோலுரித்தார். மூன்றாவதாக, மதம் முன்வைக்கும் உலகப் பார்வையை விமரிசித்தார். மதத்தின் புனிதத்தன்மை பற்றியும், மதச் சார்பின்மை பற்றியும் கேள்விகள் எழுப்பினார். நான்காவதாக, மத நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம், கடவுள் நம்பிக்கை உருவான பின்புலத்தையும் சித்தாந்தத்தையும் விமரிசித்தார். ஐந்தாவதாக, சடங்குகளையும் விழாக்களையும் சம்பிரதாயங்களையும் சாடினார்.
அம்பேத்கரைப் போலவே பெரியாரும் இந்து மதக் கட்டுமானத்தையும் சாதியப் படிநிலை அமைப்பையும் நிராகரித்தார். பார்ப்பனீயம் எப்படி அதிகாரத்தைக் குவித்துக்கொண்டது என்பதையும் எப்படிப் பிற பிரிவினரை ஆதிக்கம் செய்கிறது என்பதையும் குறித்து அவர் விரிவாக உரையாடினார். இந்து மதம் வலுக்கட்டாயமாக தமிழர்கள்மீது திணிக்கப்பட்டது என்னும் முடிவுக்கு பெரியார் வந்து சேர்ந்தார்.
ஆனால், இதற்கு தீர்வாக இந்து மதத்துக்கு மாற்றாக இன்னொரு மதத்தை நிறுவவேண்டிய அவசியத்தை பெரியார் ஏற்கவில்லை. அம்பேத்கர் பௌத்தத்தை ஏற்றது போல், வேறொரு மதத்தை ஏற்கவோ சிபாரிசு செய்யவோ பெரியார் துணியவில்லை. ஒரு கடவுளுக்கு மாற்றாக இன்னொரு கடவுள் முன்னிறுத்தப்படுவதை அவர் பகுத்தறிவு கொள்கை ஏற்கவில்லை. பெரியாரைப் பொருத்தவரை, மத நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரே ஓட்டை படகில்தான் பயணம் செய்கிறார்கள். ஒரு மனிதனுக்கு நிச்சயம் மதம் தேவைதானா? மதத்தை மனிதனிடம் இருந்து பிரித்து எடுத்துவிட்டால் அங்கே ஓர் வெற்றிடம் உருவாகிவிடுமா? அதை எதைக் கொண்டாவது நிரப்பியாகவேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு பெரியாரின் பதில்:‘மதம் மனிதனுக்குத் தேவையற்றது!’ இது பெரியாரின் இறுதியும் உறுதியுமான முடிவு என்று கொள்ளலாம்.
சுயமரியாதை இயக்கம் ஆரம்பமான புதிதில் பெரியார் இஸ்லாத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தது உண்மை. செப்டெம்பர் 1929ல், கோயம்புத்தூர், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, இஸ்லாத்துக்குச் சாதகமான கருத்துகளை வெளிப்படுத்தினார். ‘நான் ஒரு முஸ்லிமாக இறக்கவே விரும்புகிறேன்!’ என்று அவர் பேசியதாகவும் ஒரு குறிப்பு இருக்கிறது.
அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறினார்கள். இது நடந்த சில தினங்களில், பெரியார் ஈரோட்டில் ஓர் உரை நிகழ்த்தினார். அக்டோபர் 10 குடி அரசு இதழில் இந்த உரை முழுமையாக இடம்பெற்றிருந்தது. இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்களுக்குச் சார்பாகவும் இஸ்லாத்துக்குச் சார்பாகவும் பெரியார் தன் கருத்துகளை இதில் முன்வைத்தார். நாம் பஞ்சமர்களாகவோ முஸ்லிம்களாகவோ மாறினாலொழிய நமக்கு நீதியும் மரியாதையும் முன்னேற்றமும் கிடைக்காது என்று பிறிதோரிடத்தில் பெரியார் பேசியிருக்கிறார். அவர் குறைந்த அளவு விமரிசனம் செய்த மதம் இஸ்லாம் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
ஆனால், இஸ்லாமிய மதமாற்றத்தை அவர் தொடர்ந்து முன்வைக்கவில்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். அதை ஓர் இயக்கமாகவும் போராட்டமாகவும் பிரசாரமாகவும் அவர் உருமாற்றவில்லை. ஆதி திராவிடர்கள் மதம் மாறவேண்டும் என்று 1935ல் அம்பேத்கர் அழைப்பு விடுத்தபோது, பெரியார் அவருக்குத் தன் ஆதரவை வெளிப்படுத்தினார். ஆனால், அம்பேத்கரைப் போல் மதமாற்றத்தை முனைப்புடன் ஒருபோதும் அவர் மேற்கொண்டதில்லை.
1929ல் பெரியார் இஸ்லாத்துக்குச் சாதகமாக பேசியதற்கு வேறு வலுவான காரணங்கள் இருக்கின்றன. அவருடைய உரையிலேயே அதற்கான விடையைத் தேடுவோம். ‘சகோதரர்களே, 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு ‘மோட்ச லோகம்’ கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, ‘கடவுளோடு கலந்து விட்டார்கள்’ என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக்கொள்வதில்லை… உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.’
எனில் ஏன் அவர்களுடைய மதமாற்றம் பெரியாரை மகிழ்ச்சியடைய வைத்தது? ‘இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித் தனமுமான மிருகப் பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் தொடர்கிறார். ‘69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை ‘சாமி, சாமி, புத்தி’ என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.’
பெரியார் இந்து மதத்தை மட்டுமல்லாமல், கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் சேர்த்தே விமரிசித்து வந்தார். இருந்தும் இந்து மதத்துக்கு நிகராகப் பிற மதங்களை அவர் சாடாமல் இருந்ததற்குக் காரணம், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இந்து மதத்தின் தீமைகளை அதிகம் சந்திக்க நேர்ந்ததுதான். உயர்வு, தாழ்வு பிரிவினைகள் அனைத்து மதங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் இயங்கிவந்தாலும், அப்பட்டமான, மிருகத்தனமான தீண்டாமையை அதன் முழுவடிவில் இந்து மதத்தில் மட்டுமே அவர் கண்டார்.
இந்தக் காரணத்தால் இந்து மதத்தில் இருந்து ஒருவர் வெளியேறினால் அவர் விடுதலையடைந்துவிட்டார் என்றே பெரியார் பொருள் கொண்டார். ‘இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்துவிட்டார்கள் என்பது போன்றவற்றை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனென்றால், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.’
பெரியார் தொடர்கிறார். ‘தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணிமானதுமான அபிப்பிராயம்.’
மதம் மாறுவதற்கு இந்து மதத்தின் தீண்டாமை ஒரு வலுவான காரணம் என்பதை ஏற்க முடிகிறது. ஆனால் எதற்காக இஸ்லாம்? கிறிஸ்தவத்துக்கோ பௌத்தத்துக்கோ சமணத்துக்கோ மாறலாமே? ‘சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையான நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?’
மிக மிக நேரடியான ஒரு விளக்கம் இது. தீண்டப்படாதவர்கள் அவ்வாறு நீடித்திருப்பதற்குக் காரணம் அவர்களுடைய பலவீனம். இந்த சுபாவத்தை மாற்றவேண்டுமானால் போராட்ட குணம் தேவை. பௌத்தமும் சமணமும் கிறிஸ்தவமும் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிப்பவை. எனவே, பெரியார் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். அப்படியென்றால் பெரியார் இஸ்லாத்தை முரட்டுத்தனமான மதம் என்று சொல்கிறாரா? இல்லை.‘ஒடுக்க முடியாத, தாழ்மையும் இழிவையும் ஒப்புக் கொள்ள இஷ்டமில்லாத தைரிய சுபாவம்’ இஸ்லாத்தில் இருக்கிறது என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறார் பெரியார்.
அந்த வகையில், பெரியார் இஸ்லாமிய மதமாற்றத்தை முன்வைத்தார் என்பதைவிட தீண்டப்படாதவர்களின் ‘சுபாவ மனமாற்றத்தை’ முன்வைத்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அந்த 69 ஆதிதிராவிடர்களும் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது பெரியாரின் முதல் மகிழ்ச்சி. இரண்டாவது மகிழ்ச்சி, ‘துணிச்சல் சுபாவத்தோடு’ அடையாளப்படுத்தப்படும் இஸ்லாத்தை அவர்கள் தழுவிக்கொண்டார்கள் என்பது. கட்டுரையின் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கான விடை இதுவே.
தன் உரையை நிறைவுசெய்யும்போது பெரியார் தன் கருத்தை கூர்மையாகவும் தெளிவாகவும் முன்வைக்கிறார். ‘அந்த சுபாவம் (தைரியம்) இப்போதுள்ள தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு வந்து விட்டால் கூடப் போதுமானது என்றும் மதம் மாற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லலாம். ஆனால், அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரை சுலபத்தில் அவர்களுக்கு அந்தச் சுபாவம் வராது என்பதோடு, மேல் வகுப்புக்காரர்கள் என்பவர்கள் சுலபத்தில் வரவிட மாட்டார்கள் என்றே சொல்லுவேன்.’
0
நந்தன்
தொடர்புடைய கட்டுரைகள் :








December 14th, 2011 at 7:46 am
ஏன் ஈவெரா ஒரு பகுத்தறிவற்ற முட்டாள் என்பதும் ஏன் போதிசத்வ அம்பேத்கர் ஒரு மேதை என்பதும் இப்போது புரிகிறது. இதில் ’நந்தன்’ எனும் பெயரில் எழுதுபவருக்கு எங்கே ’இட’ம் என்பதும் தெரிகிறது.
December 14th, 2011 at 8:40 am
அரவிந்த நீலகண்டன் ஒரு மனநோயாளி, உலகதின் மதங்கள்,மரபுகள் எல்லாம் 4 வேதங்களில் இருந்து வந்தது என சொல்லிவரும் முட்டாள் பிராமண வெறியர். இவர் எழுத்துக்களை படித்தால் அருகில் இருக்கும் சுவர்,தூண் எல்லாம் உடைவது உறுதி. இந்த நூற்றாண்டின் பெரிய குப்பை யான “உடையும் இந்தியா” நூலை எழுதியவர். இவரை கணக்கில் எடுக்காதீர்கள். அவர் ஒரு தனி உலகில் தனியாக இருக்கிறார். (ஆழி பெரிது தொடர் படித்து (தமிழ் தான்) ஒடிப்போனவர்களிடம் கேளுங்கள்….)
December 14th, 2011 at 10:20 am
அய்யா அம்பேத்கர் என்ன எழுதி,பேசி,போராடி இருக்கிறார் என்பதை தயவு செய்து படித்து விட்டு எழுதுங்கள்.
http://ccnmtl.columbia.edu/projects/mmt/ambedkar/web/index.html
[1:] The reasons which have made Shudhi impossible for Hindus are also responsible for making Sanghatan impossible. The idea underlying Sanghatan is to remove from the mind of the Hindu that timidity and cowardice which so painfully mark him off from the Mohammedan and the Sikh, and which have led him to adopt the low ways of treachery and cunning for protecting himself. The question naturally arises: From where does the Sikh or the Mohammedan derive his strength, which makes him brave and fearless? I am sure it is not due to relative superiority of physical strength, diet, or drill. It is due to the strength arising out of the feeling that all Sikhs will come to the rescue of a Sikh when he is in danger, and that all Mohammedans will rush to save a Muslim if he is attacked.
[2:] The Hindu can derive no such strength. He cannot feel assured that his fellows will come to his help. Being one and fated to be alone, he remains powerless, develops timidity and cowardice, and in a fight surrenders or runs away. The Sikh as well as the Muslim stands fearless and gives battle, because he knows that though one he will not be alone. The presence of this belief in the one helps him to hold out, and the absence of it in the other makes him to give way.
இதற்கும் பெரியாரின் கருத்துக்கும் என்ன வித்தியாசம்
December 14th, 2011 at 10:29 am
ஹிந்டுத்வவாதிகள் உயர்சாதியினராய் இப்போது இருப்பதால் மாயாவதியின் வோட்டுகான மந்திரமான ஹாத்தி நஹி கணேஷ் ஹை(பிராமனர்களை கவர யானை இல்லை பிள்ளையார்)என்பதை போல அம்பேத்கர் இல்லை போதிசத்வர் என்று கூட்டம் சேர்க்க முயற்சிக்கிறார்கள்.
ஹிந்துத்வா தலைமை பிற்படுத்தப்பட்ட சாதிகளிடம்(உமா பாரதி,ச்ஹுஹான் ,மோடி) போகுமானால் அவர்கள் ஆயிரம் திட்டினாலும் பெரியார் அம்பேத்கர் போல் மதம் மாறவில்லை ,சாதி ஒழிப்பிற்கு தான் பாடுபட்டார் அவர் உண்மையில் பெரியாழ்வார் என்று கூறுவார்கள்.அதற்க்கு ஜால்ரா அடித்து பல எழுத்தாளர்கள் கிளம்புவார்கள்.
இந்தியாவில் பிறந்த தலை சிறந்த தலைவர்களின்,சிந்தனையாளர்களின் தலையெழுத்து இது.அவர்களின் கருத்துக்கள் சாதிக்கு,மதத்திற்கு ஏற்றார் போல் திரித்து பொருள் கொள்ளப்படும்
December 14th, 2011 at 10:40 am
மேல் வகுப்புகாரர்கள் மாற வேண்டியதில்லை, ஒடுக்கப்பட்டவர்கள்தான் போராடி தங்கள் உரிமைகளை பெறவேண்டும், என்று ஒரு நண்பர் என்னுடன் வாதிட்டார். ஆக, இன்னமும் மேலே குறிப்பிட்ட என் நண்பர் மற்றும் அரவிந்த நீலகண்டன் போன்றவர்கள் இருக்கதான் செய்கிறார்கள்! இந்த சூழலில் பெரியார் கூரியதைப்போல் தாழ்த்தப்பட்டோர் முரட்டு வழிமுறைகளை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்று ஆகிவிடுகிறது.
December 14th, 2011 at 10:54 am
ராமசாமி நாயக்கர் ஏன் நாயக்கர்களையோ அல்லது வெள்ளாள வெறியர்களையோ சாதியத்தை விட்டுவிட்டு இஸ்லாத்துக்கு மாறு என்று சொல்லவில்லை? போதிசத்வ அம்பேத்கர் ஏன் இஸ்லாத்தை மதமாற்ற வழியாக தேர்ந்தெடுக்கவில்லை? பாபா சாகேப் அனைத்து மக்களையும் சாதியத்தை கைவிட்டு சாக்கியத்தை தழுவச் சொன்னார். அதற்கு அவர் தெளிவான காரணங்களை முன்வைத்தார். இஸ்லாத்தை அவர் மறுத்தமைக்கும் காரணங்களை முன்வைத்தார். கீழ்வெண்மணி தலித் எரிப்பு படுகொலையை நியாயப்படுத்திய ஈவெராமசாமி நாயக்கர் என்னதான் போலி பகுத்தறிவு பேசினாலும் தன் சாதிய நன்மைகளை விட்டு கொடுக்காத சாதி வெறியராக மட்டுமே நிஜ வாழ்க்கையில் வாழ்ந்தார்.
December 14th, 2011 at 10:58 am
The social evils which characterize the Hindu Society, have been well known. The publication of Mother India by Miss Mayo gave these evils the widest publicity. But while Mother India served the purpose of exposing the evils and calling their authors at the bar of the world to answer for their sins, it created the unfortunate impression throughout the world that while the Hindus were grovelling in the mud of these social evils and were conservative, the Muslims in India were free from them, and as compared to the Hindus, were a progressive people. That such an impression should prevail, is surprising to those who know the Muslim Society in India at close quarters. One may well ask if there is any social evil which is found among the Hindus and is not found among the Muslims….The existence of these evils among the Muslims is distressing enough. But far more distressing is the fact that there is no organized movement of social reform among the Musalmans of India on a scale sufficient to bring about their eradication. The Hindus have their social evils. But there is this relieving feature about them—namely, that some of them are conscious of their existence, and a few of them are actively agitating for their removal. The Muslims, on the other hand, do not realize that they are evils, and consequently do not agitate for their removal.(http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/ambedkar_partition/410.html)
December 14th, 2011 at 11:14 am
ஆக இப்படி ஒரு பாழுங்குழியில் தலித்துகளை மட்டுமல்ல எந்த சமுதாயத்தையும் தள்ள போதிசத்வ அம்பேத்கர் விரும்பமாட்டார். ஏனென்றால் அவர் பகுத்தறிவாளர். ஆனால் ஈவெராவுக்கு இருந்ததெல்லாம் வெறும் வெறுப்பு மட்டுமே. தலித்துகளிடம் வெறுப்பு. அவர் ஆதிக்க நிலவுடமை சாதிய மனநிலையை எந்த கட்டத்திலும் மீறியவர் அல்ல.
December 14th, 2011 at 11:27 am
தந்தை பெரியார் ஒரு சந்தர்பவாதி. அவருடைய கொள்கை என்னவென்று சில சமையம் அவருக்கே சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். அவர் இறந்த பின்பு அவர் கட்சி உருப்பினர்களின் செய்கைகள் விசித்திரமானவை. தமிழகத்தில் இன்று கடவுள் சிலைகளைவிட பெரியார் சிலைகளெ அதிகம். மசுதிகளைவிட பெரியார் நினைவு மண்டபங்கள் அதிகம். பகுத்தறிவு என்ற பெயரில் புதிய கடவுள்களை உருவாக்கி உள்ளார்கள்.
December 14th, 2011 at 11:50 am
இதை வாசித்தால் –
http://www.maattru.com/2011/12/blog-post_6584.html
பெரியார், சிறியார் என்பது புரியும்.
December 14th, 2011 at 12:08 pm
தகுதி வாய்ந்தவர்களை புறக்கணிப்பதும் , தகுதி அற்றவர்களை தலை மேல் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவதும் தமிழனின் பிறவி குணம்…….ஈ.வெ ரா, காலம் முழுக்க தமிழனையும் தமிழ் பண்பாட்டையும் இழித்தும் பழித்தும் தூற்றி வந்த கன்னடர்……….பல்லாயிரம் ஆண்டுகளாக பிரமாண்டமான கோயில்களை கட்டி அறம் வளர்த்த தமிழனை நாத்திகன் என்று ஸ்தாபிக்க முயன்று படுதோல்வி அடைந்த மன நோயாளி………அவரின் உளறல்களை பற்றி விவாதிப்பதே நேர விரயம்……..
December 14th, 2011 at 12:17 pm
பெரியார் பாதி உண்மையை தான் சொல்லி இருக்கிறார். மீதி உண்மையையும் சொல்லி இருக்கலாம். ஆனா அதற்கு தைரியம் வேண்டுமே. பெரியார் சொன்ன உண்மையையும், சொல்லி இருக்க வேண்டிய உண்மையையும் பார்ப்போம். பெரியார் சொன்னப்படி – உரிமை மறுக்கப்பட்ட யாவரும் இந்து மதத்திலிருந்து முஸ்லீமாக மாறிட்டா சுதந்திரம் பெறலாம். சரி. அதே போல தம் வாழ் நாளெல்லாம் பெண் விடுதலைக்காக பாடுபட்ட பெரியார் – ஒடுக்கப்பட்டுள்ள முஸ்லீம் பெண்களை பார்த்து என்ன சொல்லி இருக்க வேண்டும். தலித்களுக்கு சொன்னது அந்த பெண்களுக்கும் பொருந்தும் என்கிற உண்மை ஏன் கடைசி வரை பெரியார் மண்டைக்கு உரைக்கவில்லை.
December 14th, 2011 at 1:26 pm
கற்சிலை எல்லாம் கடவுள் இல்லை என்றார் பெரியார். இன்று அவர் பேரை சொல்லும் கூட்டம் பெரியார் கற்சிலை வைத்து மாலை மரியாதையை செய்கிறார்கள். அது சேதமடைந்தால் வன்முறையில் இறங்குகிறார்கள். இது பகுத்தறிவா?
December 14th, 2011 at 1:51 pm
தமிழகத்தில் ஒருகாலத்தில் முப்பெரும் தலைவர்கள் இருந்தனர். பெரியார், ராஜாஜி மற்றும் காமராஜர். பெரியார் தன்னுடைய கடவுள் மறுப்புக் கொள்கையால் பெரும்பான்மையான மக்கள் ஆதரவை இழந்தார். அதற்கு நேர் எதிராக ராஜாஜி குலக் கல்வி முறையால் மக்கள் ஆதரவை இழந்தார். ஆனால் அப்படி எந்த மூடத்தனமும் கொள்ளாததால் காமராஜ் இன்றும் என்றும் பெருந்தலைவராக உள்ளார்.
December 14th, 2011 at 4:07 pm
@பாலாஜி, அரவிந்தன் நீலகண்டன்:
எங்களுக்கு ஒன்றை பற்றிக்கொண்டு இழிவு நிலையில் இருந்து ஓங்கி எழவேண்டும் என்ற எண்ணம். அதற்காக நாங்கள் பெரியாருக்கும் கோயில் கட்டுவோம், வழிபடுவோம். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. நாங்கள் அறிவு இல்லாத சூனியங்கலாக கூட இருந்து கொள்கிறோம். எங்களுக்கு மோட்சமோ, முக்தியோ, மெய்ஞானமோ, ஆன்மீக தரிசனமோ, ஹிந்து மதத்தின் அறிவு கூர்மையும் தேவையில்லை. இப்பொழுது முதலில் இழிவு நிலையில் இருந்து மீழ வேண்டும். நெருக்கடிகள் முட்டாமல் நிமமதியாக மூச்சு விட வேண்டும். பிறகு மற்றவைகளை பார்த்துக்கொள்கிறோம்.
December 14th, 2011 at 4:20 pm
@அரவிந்தன் நீலகண்டன்:
ஹிந்து மதம் உண்மையிலே சிறந்த மதம் என்று ஒப்புக்கு வைத்துக்கொண்டாலும், அது யாரையும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று எங்கும் கூறாத / கருதாத பட்சத்திலும், மதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்த உங்கள் சக மக்கள் – அதை சரியாக போதிக்காமல்/ அவர்களுக்கு சரிப்பட புரிய வைக்காமல் விட்டதற்காக நாங்கள் அதில் இருந்து விலகுகிறோம். மன்னிக்கவும், உங்கள் எண்ணிகைகாக நாங்கள் இனியும் ஹிந்து என்று உச்சரிக்க விரும்பவில்லை.
December 14th, 2011 at 4:36 pm
@அரவிந்தன் நீலகண்டன்:
பெரியார் ஒரு ஜாதி வெறியர் என்ற உங்கள் கூற்றை கூட நம்பிவிடுகிறேன். அப்படிப்பட்ட ஜாதி வெறியரான ராமசாமி நாயக்கர், உங்களை கணக்கில் எடுக்கும் போது எங்களுக்கு கடுகளவு வளரசியாவது ஏற்படுத்தி தந்தார். அவரை எதிர்க்க எங்களுக்கு தோணவில்லை. ஆயினும் உங்கள் கருத்துக்களுக்கும், எங்களை நல்வழிபடுத்த அயராது பாடுபடும் உங்களுக்கும் நான் மண்டியிட்டு நன்றி கூறுகிறேன்.
December 14th, 2011 at 8:46 pm
ஐயாமார்களே! மீனாட்சிபுரம் நினவிருக்கிறதா ? முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தேவெந்திரகுல வேள்ளாளர்கள் இஸ்லாத்தூகு மாறினார்கள். அப்படி மாறியவர்களில் ஒருவர் பாலாசிங்கம். அன்வர் என்று அவருக்கு பெயர் மாறியது.இஸ்லாமுக்கு மாறிய வர்களின் பெண்குழந்தைகளை மணமுடிக்க ஒரிஜினல் (!) முஸ்லீம்கள் மறுக்கிறார்கள்.அன்வர் பாலாசிங்கம் தாங்கள் படும்பாட்டை “கருப்பாயி என்ற நூர்ஜ்கான்” என்ற நாவலாக எழுதியுள்ளார். படியுங்க சாமிகளா!தீண்டாமை ஒழிப்பு என்பது வேறு. மதம் மாறூவது வேறு.—காஸ்யபன்
December 14th, 2011 at 9:58 pm
கருப்பாயி என்கிற நூர்ஜஹான்: நாவல், அன்வர் பாலசிங்கம், கலங்கைப் பதிப்பகம்-யாதுமாகிப் பதிப்பகம், 1981-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டைக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில், தேவர் சாதியினரின் அடக்குமுறையைத் தொடர்ந்து எதிர்கொண்டுவந்த பல பள்ளர் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறின. அதைத்தான் கதைக்களனாக எடுத்துக்கொண்டுள்ளார் ஆசிரியர்.
இஸ்லாத்துக்கு மதம் மாறியபிறகும் சாதிப் பிரிவினை அப்படியே உள்ளது என்றும், “நவ் முஸ்லிம்கள்” என்ற பெயரில் அவர்கள் விலக்கிவைக்கப்படுகிறார்கள் என்றும் 40 வயதைக் கடந்தபின்னும் அவர்களுடைய பெண்களுக்குத் திருமணம் ஆவதில்லை, ஏனெனில் அவர்களைப் பெண்ணெடுக்க அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பிற ஆண் முஸ்லிம்கள் வருவதில்லை என்றும், இதன் காரணமாக ஏற்படும் நெருக்கடியில் சில வயதான, திருமணமாகாத பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றும் ஒரு பிரச்னையைக் கதை முன்வைக்கிறது.
மதம் மாற பள்ளர்கள் முடிவெடுத்ததும் ஓடிவந்து அவர்களை வரவேற்று உதவிய மைய நீரோட்ட முஸ்லிம் சமூகம், மற்றபடி அவர்களுடன் கொண்டுகொடுத்து உறவு வைத்துக்கொள்வதில்லை என்றும் இரட்டைக் குவளைமுறை அவர்களுக்கு எதிராக பிற முஸ்லிம்களாலேயே கைகொள்ளப்படுகிறது என்றும், அத்துட்ன ‘பிரியாணிக்காக மதம் மாறினார்கள்’ என்ற இழிச்சொல்லும் வேறு இந்துக்களிடமிருந்து வருகிறது என்றும் ஆசிரியர் சொல்கிறார். அப்படி இருக்கும்போது மதம் மாறுவதன் அர்த்தம் என்ன? Between a rock and a hard place என்பார்களே, அதுபோன்ற நிலைமை இவர்களுக்கு. கிராமச் சமூகத்தில் ஆதிக்க இந்துச் சாதிகளால் துன்பம். இதெல்லாம் போய்விடும் என்று மதம் மாறினாலோ, உள்ளதும் போச்சுடா என்ற நிலைமை. ஒரு பக்கம், பெற்றுவந்த இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளும் கிடையாது. கட்டிக்கொள்ளப் பையன்கள் கிடைக்கமாட்டார்கள். பிற “பாரம்பரிய” முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படாத சூழல். இழிசாதி என்ற பட்டப்பெயருடன், இப்போது பிரியாணிக்கு மதம் மாறினவன் என்ற இழிசொல்லும் சேர்ந்துகொள்கிறது. இத்துடன் ரகசிய போலீஸ் வேறு வந்து, சவூதி அரேபியா போனாயா, யார் உன்னை அங்கே அழைத்தது, யார் இந்த ட்ரிப்புக்கு ஃபைனான்ஸ், அங்கே என்ன செய்தாய் என்று ‘தீவிரவாதியோ?’ என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது.
40 வயதாகியும் மணம் ஆகவில்லையே என்பதைவிட அதனால் தன் தந்தை தினம் தினம் மனமுடைந்து சாகிறாரே என்ற வருத்தத்தால் உயிர் மாய்த்துக்கொண்ட கருப்பாயியாக இருந்து நூர்ஜஹானாக மாறிய பெண் எழுதிவைக்கும் நீண்ட தற்கொலைக் கடிதத்திலிருந்து தொடங்கும் கதை, இறுதி வரியில், அந்த மக்கள் தாம் மாறிய முஸ்லிம் சமுதாயத்திலேயே தொடர்ந்து இருப்பார்களா அல்லது மீண்டும் மதத்தை மாற்றிக்கொள்ளப்போகிறார்களா என்ற சந்தேகத்துடன் முடிக்கிறது.
“எ …மம்முது பள்ளிக்கு வாரியாத்தா என்று சொன்னதும் மொத்த ஜமாத்தும் அவரைப் பின் தொடர்ந்ததா? இல்லை அங்கேயே நின்றுவிட்டதா?”
இந்தக் கதை கேட்கும் கேள்விகள் ஏராளம். தென் தமிழ்நாட்டின் கிராமங்களில் இன்றும் தொடரும் சாதிய அடக்குமுறை. முக்கியமாக தேவர் – பள்ளர் சிக்கல். அதிலிருந்து வெளியேற முடியாத இறுக்கமான சூழல். மதமாற்றம் ஒரு தீர்வாக முன்வைக்கப்படுதல். ஆனால் அது தீர்வே அல்ல என்பது முப்பதாண்டுகளுக்குப் பின்னர்தான் கண்டுபிடிக்கப்படுதல். இப்போது என்னதான் செய்வது?
December 14th, 2011 at 11:50 pm
என்னமோ மீனாட்சிபுரத்தில மதம் மாறினவங்களை தவிர எல்லாருக்கும் மாப்பிள்ளை,பொண்ணு கூட்டமா காத்திருக்கிற மாதிரி இந்த புத்தகத்தை வைத்து நடக்கும் பிரச்சாரம் சிரிப்பை தான் வர வைக்கிறது
கோவத்தால் மதம் மாற கூடாது.முதலாளித்துவ கொள்கையின்படி highest bidder /negotiated benefits பின் சென்றால் இந்த குழப்பம் இல்லை.மதத்தால் வரும் பிரயோசனங்கள் என்ன என்று பார்த்து மாறினால் நன்மை தான்.அதுவும் பெரிய அளவில் நடக்க வேண்டும்.
பிரிவினையின் போது பாகிஸ்தானில் விடப்பட்ட ஹிந்துக்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் தான்.அவர்களில் பெரும்பான்மையோனோர் இஸ்லாத்திற்கு மாறி அங்கு வாழ்ந்து வருகின்றனர்.அங்கு இந்த பிரட்சினைகள் கிடையாது.இங்கு கிறுத்துவராக மாறிய தலித்துகள் பெண்/மாப்பிள்ளை கிடைக்காமல் கஷ்டபடுவது கிடையாது.மகாராஷ்ட்ரத்தில் இருந்தால் புத்த மதத்திற்கு மாற வேண்டும்,வட கிழக்கு,தென் மாநிலங்களில் கிருத்துவத்திற்கு மாறினால் பலன்கள் அதிகம்.மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள சாதிகளில் கூட இந்த பிரச்சினை உண்டு.
கிறுத்துவராக மாறிய தலித்,தேவர்,வன்னியர்,நாடார்,பரதவர் போன்றோர் அதே சாதியை சார்ந்த ஹிந்து குடும்பங்களில் பெண் எடுப்பதும்,கொடுப்பதும் சாதரணமாக நடைபெறும் விஷயங்கள்.
திடீரென்று பார்சியாக(குறைவாக உள்ள குழுவுக்கு) மதம் மாறினால் எங்கே பெண்/மாப்பிள்ளை கிடைக்கும். ஒரு தலைமுறைக்கு முன் மாறியவர்/படித்தவர்/பணக்காரராய் ஆனவர், இப்போது மாறியவரை விட உயர்ந்தவர் என்ற நினைப்பு எல்லா குழுக்களிடமும் உண்டு.
ஆங்கிலோ இந்தியர்கள் ஆண்,பெண் கிடைக்காமல் கச்டபடுவதில்லை.அவர்களில் காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை.நன்கு படித்த,நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பெண் கிடைப்பதில் கஷ்டம் கிடையாது.படிப்பு,வேலை இல்லை என்றால் இன்று எல்லா சமூகங்களிலும் இந்த பிரச்சினை உள்ளது.
December 15th, 2011 at 2:13 am
எது எப்படி இருந்தாலும் நம்ம ஊருல சாதிப்பாகுபாடு பாராட்டத்தக்க அளவு குறையவில்லை என்பது தான் எதார்த்தம்.
இது மிகவும் வெட்கப்பட வேண்டிய செய்தி.
இதில் இரண்டு பகுதி மக்களையும் சாடவேண்டியுள்ளது. பெரும்பாலான அரசியல்வாதிகள் அண்டிப்பிழைப்பு பார்ப்பவர்கள்.
இட ஒதிக்கீட்டினால் வசதி பெற்றவர்களும் சரி படிப்பறிவு நன்கு வாய்த்த சமூகமும் சரி இந்த இடத்தில் எறக்குறைய ஒன்றுபோலத்தான் செயல்பட்டுள்ளனர்
December 15th, 2011 at 1:32 pm
கடவுளை படைத்தவன் முட்டாள் கடவுள் இல்லவே இல்லை என்று முழங்கிய பெரியார்
தமிழை காட்டுமிராண்டி பாஷை என ஏளனம் பேசிய பெரியார்
விலை மாதர் இல்லங்களில் பெரியார்
தனது 17வது வயதில் 13 வயது நாகம்மையை திருமணம் செய்த பெரியார்
தனது 75வது வயதில் 26 வயது மணியம்மையை மணந்த பெரியார்
நாகம்மையை தாசி என்று நன்பர்களிடம் பெருமைபட்ட பெரியார்
வெளிநாடு சென்று நிர்வாண சங்கத்தில் கூத்தடித்த பெரியார்
ஆண் ஆதிக்க மனோபாவம் படைத்த பெரியார்
ஆண் பெண் உறவு குடும்பமுறையை லீகல் விபசாரம் என்று வர்ணித்த பெரியார்
வைகம் போராட்டதின் சொற்ப பங்கை மிகைபடுத்திய பெரியார்
தனது 46 வயது வரை தெய்வ நம்பிக்கை கொண்டிருந்த பெரியார்
கடவுளை மறுத்தவர் இந்துகளை சீண்டினாரே அன்றி முஸ்லீம்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் பயந்த தொடை நடுங்கிய பெரியார்
ஜாதி இந்துகள் முன்னேற்றத்திற்கு மட்டும் பாடுபட்ட பெரியார்
தீண்டதகாதவர்களை கண்டுகொள்ளாத பெரியார்
சுதந்திரமே வேண்டாம் நாம் பிரிடிஷ்ஷாரால் அங்கிருந்தே ஆளபடுவதை வரவேற்று முழங்கிய அடிமை புத்தி பெரியார்
இப்படி 108 நாமாவளிகளை கூறதக்க முறையில் வாழ்கை நடத்திய சிறியாராகிய கண்னட நாயகரை பெரியார் ஆக்கியதே இந்த பிற்போக்கு திராவிட வியாதிகள் செய்தது பெரிய தவறு. இதைவிட கொடுமை எந்த தீண்டாதவர்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடி நமது நாட்டின் சட்டதிட்டங்கள் உருவாக காரணமான ஒரு பெரும் தலைவருடன் ஒப்பிடுவது ஒரு கேவலமான செயல் அன்றி வேறு இல்லை.
December 15th, 2011 at 7:13 pm
இரண்டு பெண்டாட்டிக்கார பெரியார், காலம் போன கடைசியில் (72க்கு26) பொருந்தா திருமணம் செய்த பெரியார் – காரணம் இல்லாமலா ஒன்றை ஆதரிப்பார் அல்லது காரணம் இல்லாமலா ஒன்றை எதிர்ப்பார்.
December 15th, 2011 at 7:15 pm
//அவர் தொடர்கிறார். ‘69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை ‘சாமி, சாமி, புத்தி’ என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.’//
உண்மைதான் – மதம் மாறிய பின் அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வயற்றில் வெடி குண்டைக் கட்டிக்கொண்டு தன்னையும் பிறரையும் சாக அடிப்பதுதான். என்ன கொடுமை அய்யா இது ! இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள கொலைகார பயங்கரத்துக்கு யார் எந்த மதம் காரணம் என்று தெரிந்தும் இப்படி எழுதுவது சகிக்க முடியவில்லை. சரி இங்குதான் தீண்டாமை நோய் ஹிந்து மதத்தால் வந்தது. ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஹிந்து மதமா உள்ளது. தினம் கொலை நடக்கின்றது அங்கெல்லாம். யார் வேண்டுமானாலும் தாராளமாக இஸ்லாத்துக்கு செல்லுங்கள் – உங்களை யாரும் தடுக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். முதலில் அங்கு உங்கள் சொந்த கருத்து என்று எதுவும் கிடையாது.
December 16th, 2011 at 3:35 am
///அவர் குறைந்த அளவு விமரிசனம் செய்த மதம் இஸ்லாம் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்///
ஏன்னா அதுக்கு அவருக்கு முதுகெலும்பு இல்லை என்பதே உண்மை. இஸ்லாத்தை அதிகம் விமர்சித்தால் செருப்பால் அடித்து கொண்டேபோடுவான் என்றா தொடைநடுங்கித்தனம் தான். ராமசாமி நாயக்கருக்கு தனக்குப் பிடிக்காத கீழ்ஜாதிக்காரனுங்களை ஹிந்து மதத்தை விட்டு துரத்திவிட வேண்டும் என்கிற காண்டு தான் இருந்தது என தெரிகிறது. அதில் வேறு பொறுப்புணர்ச்சி எதுவும் இல்லை என்பதே தெளிவு.
December 16th, 2011 at 12:01 pm
பெரியாரும் இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்டார்.போராடினார்.அவர் சூத்திரர்களுக்காக போராடினார்.
அம்பேத்காரும் இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்டார்.போராடினார்.இவர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடினார்.
அவரும் இந்து மதத்தை எதிர்த்தார்.இவரும் எதிர்த்தார்.அம்பேத்கரும் கிருஷ்ணனும் ராமனும் ஒரு புதிர் புத்தகத்தை எழுதினார்
ஒரு பேச்சுக்கு இந்து மதத்தை விட்டு விலகுகிறேன் என்று சொல்லாமல் பேசுங்கள்,என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள் என்பதை கூட ஒத்து கொள்ள மறுத்தவர் அவர்.
9:] I think these remarks apply equally to the Brahmins of India, and one can say with equal truth that if a man who becomes a Pope has no wish to become a revolutionary, a man who is born a Brahmin has much less desire to become a revolutionary. Indeed, to expect a Brahmin to be a revolutionary in matters of social reform is as idle as to expect the British Parliament, as was said by Leslie Stephen, to pass an Act requiring all blue-eyed babies to be murdered.
இதில் ஒருவரை பயங்கரமாக திட்ட,இன்னொருவரை புகழ உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அதே போல் தான் அவருக்கும் இஸ்லாம்,இந்து மதம் பற்றி வேறு வேறு எண்ணம் இருந்தது
நீ ஏன் இவரை திட்ட மாட்டேன் என்கிறாய் என்று கேட்பது எவ்வளவு பைத்தியகாரத்தனமோ அதே போல் தான் அவர் ஏன் இஸ்லாத்தை அதே அளவு கரித்து கொட்டவில்லை என்று கேட்பதும்.
பொது எதிரியை ,முக்கிய எதிரியை அழிக்க எப்படி மதத்தை இழிவுபடுத்தி ,அசூயையோடு பார்த்த அம்பேத்கரை சகித்து கொண்டு திராவிட வாதத்தை எதிர்க்கிரீர்களோ அதை தான் அவரும் அவர் சீடர்களும் செய்தார்கள்.செய்கிறார்கள்.
December 16th, 2011 at 12:09 pm
இதை விட அதிகமா இந்து மதத்தை திட்ட முடியுமா என்று தெரியவில்லை.திட்டியவர் ஈ வே ரா அல்ல போதிசத்வர்
[3:] I am sorry, I will not be with you. I have decided to change. This is not the place for giving reasons. But even when I am gone out of your fold, I will watch your movement with active sympathy, and you will have my assistance for what it may be worth. Yours is a national cause. Caste is no doubt primarily the breath of the Hindus. But the Hindus have fouled the air all over, and everybody is infected—Sikh, Muslim, and Christian. You, therefore, deserve the support of all those who are suffering from this infection—Sikh, Muslim, and Christian.
9:] Caste may be bad. Caste may lead to conduct so gross as to be called man’s inhumanity to man. All the same, it must be recognized that the Hindus observe Caste not because they are inhuman or wrong-headed. They observe Caste because they are deeply religious. People are not wrong in observing Caste. In my view, what is wrong is their religion, which has inculcated this notion of Caste. If this is correct, then obviously the enemy you must grapple with is not the people who observe Caste, but the Shastras which teach them this religion of Caste. Criticising and ridiculing people for not inter-dining or inter-marrying, or occasionally holding inter-caste dinners and celebrating inter-caste marriages, is a futile method of achieving the desired end. The real remedy is to destroy the belief in the sanctity of the Shastras.
December 16th, 2011 at 4:26 pm
@Kashyappan:
பரவாயில்லை.. ஹிந்து மதம் எங்களை உள் இழுத்துகொண்டுள்ளது.அதன் தொடர்ச்சி யாக விழும் கூனை விட சற்று 2 degree நிமிர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது தான், இஸ்லாத்திற்கோ, கிரித்துவத்திற்கோ மாறியது.! அவர்கள் எங்களை ஏற்கவில்லை என்றால் பராயில்லை.! நாங்கள் சற்று நிமிர்ந்ததே போதும்.!
December 16th, 2011 at 4:30 pm
@ சுவாமி :
Kashyappan க்கு கூறிய அதே பதிலை உங்களுக்கும் கூற விரும்புகிறேன்.! நாங்கள் பார்த்துகொள்கிறோம்.! உங்கள் உதவிக்கும் விளக்கத்திற்கும் நன்றி.!
December 16th, 2011 at 4:43 pm
@vedamgopal, சிறியார்:
108 நாமவைள்கையும் கூறினால் நன்றாக இருக்கும். ஏன் இப்படி அனைவரும் வரிந்து கட்டி திட்ட வேண்டும். உங்கள் ஆன்மிக தரிசனங்களை விளக்கினால் தமிழர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவிப்பதை விட்டுவிட்டு உங்களுடன் மெய்ஞான தேடலுக்கு வந்துவிடுவார்கள்.! அதை நீங்கள் தயவு செய்து போதித்து தமிழ் மக்களை “பெரியாரின் மூடநம்பிக்கைகளில்” இருந்து விடுவிக்க தயவு கூர்ந்து வேண்டுகிறேன்.! #அது விட்டுவிட்டு வசை பாடி திட்டுவது, உங்களால் எதுவும் செய்ய முடியாமல், நீங்கள் பெரியாரும், திராவிட இயக்கத்தின் ஆளுமையும், வீரியத்தையும் கண்டு அஞ்சுவது போல் என்னால் கற்பனை செய்து கொள்ள முடிகிறது.! மன்னிக்கவும்.!
December 16th, 2011 at 8:12 pm
பூவண்ணன் நீங்கள் கொடுத்த அதே நூலில்தான் பாபாசாகேப் இதையும் கூறியிருக்கிறார்: “The essence of the Vedic conception of Varna is the pursuit of a calling which is appropriate to one’s natural aptitude….While I reject the Vedic Varnavyavastha for reasons given in the speech I must admit that the Vedic theory of Varna as interpreted by Swami Dayanand and some others is a sensible and an inoffensive thing. It did not admit birth as a determining factor in fixing the place of an individual in society. It only recognized worth….Varna and Caste are two very different concepts. Varna is based on the principle of each according to his worth-while Caste is based on the principle of each according to his birth. The two are as distinct as chalk is from cheese. In fact there is an antithesis
between the two. ” இந்த தெளிவான பார்வைதான் ஈவெராவிடம் இல்லை. இந்து மதத்தை சீர்திருத்தும் சக்தி அதனுள் இருக்கிறது. ஆனால் அதை செய்யும் நேர்மையும் வலிமையும் இந்து சமுதாயத் தலைமையிடம் (இங்கு அவர் தலைமையாக பார்த்தது காங்கிரஸை) இல்லை என்பது அவர் கருத்து எனவேதான் நீங்கள் மேற்கோள் காட்டிய அதே நூலில் அவர் இப்படி கூறினார்: “Whether you do that or you do not, you must give a new doctrinal basis to your Religion—a basis that will be in consonance with Liberty, Equality and Fraternity, in short, with Democracy. I am no authority on the subject. But I am told that for such religious principles as will be in consonance with Liberty, Equality and Fraternity it may not be necessary for you to borrow from foreign sources and that you could draw for such principles on the Upanishads.” இந்த முழுமைப்பார்வை இந்த எல்லாபக்கங்களையும் சீர் தூக்கி பார்க்கும் பார்வை இது போதிசத்வ அம்பேத்கரிடம் இருந்தது. இது ஈவெராவிடம் இல்லை. இருக்கவும் முடியாது ஏனென்றால் அடிப்படையில் அண்ணல் ஒழுக்கவாதி, மானுடவாதி. ஈவெரா ஒழுக்கமற்ற இனவாதி.இறுதியாக அம்பேத்கர் தன்னிடம் மனிதத்தன்மையேயில்லாமல் நடந்த சாதிய இந்துக்களிடமும் காட்டிய கருணை அவர்கள் வாழவேண்டுமென்பதற்காக அவர் பட்ட பதைபதைப்பு இவை அளப்பரியது: “More important than the question of defending Swaraj is the question of defending the Hindus under the Swaraj. In my
opinion only when the Hindu Society becomes a casteless society that it can hope to have
strength enough to defend itself. Without such internal strength, Swaraj for Hindus may turn out to be only a step towards slavery. Good-bye and good wishes for your success.” இதுவும் நீங்கள் மேற்கோள் காட்டிய நூலில் உள்ள பகுதிதான். ஆம் ஹிந்து மதத்தின் கசடுகளை அண்ணல் கடிந்தார். ஆனால் எங்கும் அவர் வெறுப்பை உமிழவில்லை. ஈவெரா சமூகசீர்திருத்தம் என்கிற பெயரில் உமிழ்ந்ததெல்லாம் வெறுப்புதான். எனவே நாங்கள்-ஹிந்துத்துவர்கள்- அண்ணலை ‘சகிக்கவில்லை’ வணங்குகிறோம். சாதியம் அழிய உழைக்கிறோம். ஈவெராவை அவருக்கே உரிய இடத்துக்கு அனுப்ப விழைகிறோம். வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கு.
December 16th, 2011 at 8:13 pm
அழகிரிசாமி அவர்களே! எந்தமதத்தின் பின்னே போவது என்பது உங்கள் உரிமை. மதம் தீண்டாமையை நீக்கிவிடாது. தயவு செய்து இந்த யதார்த்ததை புரிந்து கொள்ளுங்கள்.அன்புடன் —கஸ்யபன்
December 16th, 2011 at 9:14 pm
அழகிரிசாமி அவர்களே, வேதம் கோபால் அவர்கள் சொன்னது அனைத்தும் உண்மை அல்லவா! அதற்கு நீங்கள் பதில் சொல்லாமல் அத்தனையையும் ஏற்றுக் கொண்டு ஈவெராவின் பின் செல்ல முடிவெடுத்திருக்கிறீர்கள்.
அம்பேத்கார் தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் என்பதில் உங்களுக்கு ஐயம் இருக்காது என்று நம்புகிறேன். அம்பேத்காரா அல்லது ஈவெராவா, யாரைப் பின்பற்றுவது என்று யோசித்து முடிவெடுங்கள்.
December 16th, 2011 at 10:43 pm
அரவிந்தன் அவர்களின் ஆற்றலும் ,கடும் உழைப்பும் ஒரு பக்க சார்பால் வீணாவது வருத்தம் அளிக்கிறது
உங்கள் சக எழுத்தாளர் மல்ஹோத்ராவின் உறவினர்கள்,மல்ஹோத்ராக்கள் எத்தனை பேர் சீக்கிய தீவிரவாதத்தால் உயிரை இழந்தார்கள் தெரியுமா.
இன்று வரை மற்ற மத தீவிரவாதிகளால்/மத கலவரங்களால் இறந்ததை விட சீக்கிய தீவிரவாதத்தால் இறந்தவர்கள் பல மடங்கு.
அது என்ன வெளிநாட்டு மதமா .அந்த தீவிரவாத ஒடுக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது நீங்கள் வெறுக்கும் தலித் அரசியல் தான்.பஞ்சாபில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமான தலித் சீக்கியர்கள் மதம் என்று போகாமல் தலித் என்று (கன்ஷிராம் ஒரு தலித் சீக்கியர்)தலித் பஹுஜன் அரசியல் செய்ததால்,அரசு வேலைகள்,ராணுவத்தில் நாட்டம் காட்டியதால் ,தனி நாடு என்பதை விட முன்னேற்றத்தில் விருப்பம் காட்டியதால் தீவிரவாதத்தில் ஈடுபட்ட குறிப்பிட்ட ஆதிக்க சாதியினரை அவர்கள் சாதியை சார்ந்த முதல்வர்,காவல் துறை தலைமை அதிகாரிகளால் அழிக்க முடிந்தது.
அந்த தலித் அரசியலை இந்தியாவின் பிரிக்கும் சக்தி என்று எழுதுவது எனபது மிகவும் ஆச்சரியத்துகுரியது
கத்தியின்றி ,ரத்தமின்றி பிற்பட்ட வகுப்பினர் முன்னேற வழி செய்தது திராவிட இயக்கம்.சாதி ஒழிப்பிற்கு ,விதவை திருமணத்திற்கு ,பெண் கல்விக்கு பாடுபட்ட இயக்கம்.அதையும் ஏதோ வெளிநாட்டினர் தூண்டி விட்டு நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் என்று எழுதுவது இட ஒதுக்கீட்டின் மேல் உள்ள வெறுப்பை தான் காட்டுகிறது.இட ஒதுக்கீட்டின் பலனால் படித்தவர்,நல்ல நிலைக்கு வந்தவர் அதிகம் இருக்கும் இடங்கள் திராவிட இயக்கம் வளர்ந்த இடங்கள் தான்.அப்படி இருக்கும் போது பெரியாரை குப்பைக்கு அனுப்புவேன்,கூட்ஸ் வண்டியில் அனுப்புவேன் எனபது பகல் கனவு தான்.
காஷ்மீரிலோ வட கிழக்கிலோ வசிக்கும் மக்களில் ஒரு பெரியாரோ /அம்பேத்கரோ உருவாகி இருந்திருந்தால் அவர்கள் முன்னேறியிருப்பார்கள்.இன்றிருக்கும் போராட்டங்கள் இருந்திருக்காது எனபது தான் உண்மை.சாதி.மதத்தின்,இனத்தின் மேன்மையை ,மாயையை உடைத்தவர்கள் அவர்கள் .
வெளியில் இருந்து வந்த மதங்கள் தான் பிரிக்கும் என்ற அடிப்படையே அடிபடுவதால் முழு பூசணிக்காய் ஆன சீக்கிய தீவிரவாதத்தை மறைத்து விட்டு (பஞ்சாபில் பல இடங்களில் இந்துக்களின் சதவீதம் பாதிக்கும் மேல் குறைந்தது.பேருந்துகளில் இருந்து சீக்கியர் இறக்கி விடப்பட்டு ஹிந்துக்கள் அனைவரும் சுட்டு கொல்லபட்ட சம்பவங்கள் பல)எழுதிய அதே செயலை அம்பேத்கரை இந்து மத காவலன் போல பாராட்டுவதிலும் காட்டுகிறீர்கள்.
முகம்மதியர்கள்,கிருத்துவர்கள் ,சீக்கியர்கள் செய்யும் தவறுகளுக்கு காரணம் அதை பின்பற்றும் மக்கள் ஆனால் ஹிந்துக்கள் செய்யும் தவறுக்கு காரணம் அவர்களின் மதம்,சாஸ்திரம்.அதை அழிக்காமல் மாற்ற முடியாது என்று கூறியவர் ,சாதி என்ற விஷம் தான் இந்துக்களின் மூச்சு.அது அவர்களை மட்டுமன்றி மற்ற அனைவரையும் பாதித்து உள்ளது.மதம் மாறினாலும் அவர்களில் சீர்திருத்தம் ஏற்பட உதவுவேன் என்றவர் பெரியாரை விட மதத்தை இழிவு செய்வதில் குறைவு என்று உங்களுக்கு தோன்றுவதால் ஹிந்து மத குரு போல ஒருவர் என்று சொல்வது எந்த அடிப்படையோ அதே அடிப்படையில் தான் பெரியார் இஸ்லாமுக்கு மாறினால் இழிவு போகும் என 1929 இல் கூறினார்.
December 17th, 2011 at 1:46 am
அய்யா சாமி முடியல இவ்வளோ திட்டற ,வெறுக்கிற வர ஹிந்டுத்வவாதிகள் இப்ப கொண்டாடுவது தான் ஆராயப்பட வேண்டிய ஒன்று.இது என்ன திட்டமோ ,மதம் மாறியவர்களுக்கும் இட ஒதுக்கீடு என்பதை எதிர்ப்பதற்காகவா.
If [the] Hindu Raj does become a fact, it will, no doubt, be the greatest calamity for this country. No matter what the Hindus say, Hinduism is a menace to liberty, equality and fraternity. On that account it is incompatible with democracy. Hindu Raj must be prevented at any cost. But is Pakistan the true remedy against it? What makes communal Raj possible is a marked disproportion in the relative strength of the various communities living in a country.
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/ambedkar_partition/513.html#part_6
But it is right to ask if the Musalmans are the only sufferers from the evils that admittedly result from the undemocratic character of Hindu society. Are not the millions of Shudras and non-Brahmins, or millions of the Untouchables, suffering the worst consequences of the undemocratic character of Hindu society? Who benefits from education, from public service and from political reforms, except the Hindu governing class—composed of the higher castes of the Hindus—which form[s] not even 10 per cent. of the total Hindu population? Has not the governing class of the Hindus, which controls Hindu politics, shown more regard for safeguarding the rights and interests of the Musalmans than they have for safeguarding the rights and interests of the Shudras and the Untouchables? Is not Mr. Gandhi, who is determined to oppose any political concession to the Untouchables, ready to sign a blank cheque in favour of the Muslims? Indeed, the Hindu governing class seems to be far more ready to share power with the Muslims than it is to share power with the Shudras and the Untouchables. Surely, the Muslims have the least ground to complain of the undemocratic character of Hindu society.
பெரியார் இதை விட பெரிதாக ஒன்றும் திட்டவில்லை.அதிகம் படித்தவர் என்பதால் அம்பேத்கார் ஆணித்தரமாக செய்ததை ,எழுதியதை பெரியார் பாமரர்களுக்கு கடவுள் மேல் இருந்த பயம்,அதை பயன்படுத்தி அவர்கள் அடிமைகளாக வாழ்வதை மாற்றுவதற்காக ஜனரஞ்சகமாக கடவுள் நிந்தனை,பிரசாரங்கள் செய்தார்.
கடவுளை நம்புகிறவன் முட்டாள் எனபது அனைத்து மதத்து கடவுள்களை நம்புகிறவர்களையும் தானே குறிக்கிறது.கற்பித்தவன் காட்டுமிராண்டி எனபது கொரான்,கீதை,பைபெல் எழுதியவர்கள் ,பிரச்சாரம் செய்பவர்கள் அனைவரையும் தானே குறிக்கிறது
1929 இல் பேசியதில் இருந்து பின்னாளில் மாறியதால் தானே மொத்தமாக அனைத்து மதங்கள்,கடவுளுக்கும் எதிராக திரும்பியதில் தானே அவர் மத மாற்றத்தை அம்பேத்கார் போல நினைக்கவில்லை.
December 17th, 2011 at 11:51 am
இந்த நந்தன் யார்? பௌத்தத்திற்கு ஒடிப்போய் மீண்டும் தீராவிடத்திற்கு வந்து பின்னர் அப்துல்லாவாக மாறிய நகைச்சுவை நடிகர் ஈவெரா தாசனா?
December 17th, 2011 at 11:58 am
//கடவுளை நம்புகிறவன் முட்டாள் எனபது அனைத்து மதத்து கடவுள்களை நம்புகிறவர்களையும் தானே குறிக்கிறது.கற்பித்தவன் காட்டுமிராண்டி எனபது கொரான்,கீதை,பைபெல் எழுதியவர்கள் ,பிரச்சாரம் செய்பவர்கள் அனைவரையும் தானே குறிக்கிறது//
இது என்று நீங்கள் வாங்கும் வக்காலத்து. பெரியார் அப்படி ஒன்றும் பேசியதாகத் தெரியவில்லை. சரி அப்படியே கூட வைத்துக்கொள்ளுவோம். காஞ்சி மடத்துக்குமுன் வைத்தது போல ஏதாவது ஒரு மாரியம்மன் கோயில் முன் பெரியார் சிலை வைத்து அவருடைய “வேத” வசனங்களை பொரித்து வையுங்களேன். ஆடி மாத விழாக் காலங்களில் பெரியரால் நிமிர்ந்த நீங்கள் போய் அவர்களை எல்லாம் கட்டு மிராண்டிகள் என்று திட்டலாமே. முயற்சி செய்துதான் பாருங்களேன்.
December 17th, 2011 at 12:48 pm
” கத்தியின்றி ,ரத்தமின்றி பிற்பட்ட வகுப்பினர் முன்னேற வழி செய்தது திராவிட இயக்கம்.சாதி ஒழிப்பிற்கு ,விதவை திருமணத்திற்கு ,பெண் கல்விக்கு பாடுபட்ட இயக்கம்.
“நல்ல நகைச்சுவை…….. நீண்ட நாட்களுக்குப்பிறகு மனம் விட்டு சிரித்தேன்………கருணாநிதி குடும்பத்தினரும் ,அவரது அல்லக்கைகளும் முன்னேறினால் அது தமிழர்களின் முன்னேற்றமா? ஊழலை சோஷலிசம் செய்ததும், தமிழ் பண்பாட்டை சீரழித்ததும், “உலகமகா ஊழல்வாதிகள்”என்ற [ ஸ்பெக்ட்ரம்] “புகழை “தமிழர்களுக்கு பெற்றுத்தந்ததும்தான் திராவிட இயக்கங்களின் சாதனை………..தமிழர்களின் முன்னேற்றத்திற்கு உண்மையான காரணம் கல்விக்கண் திறந்த “உண்மையான பெருந்தலைவர்” காமராஜர் அவர்கள்தான்………
December 17th, 2011 at 12:55 pm
தேவன், பாக்கியம் ராமசாமி ஆகியோருக்குப்பிறகு தமிழ் பத்திரிக்கை உலகம் நகைச்சுவை எழுத்தாளர்கள் இல்லாமல் வாடுகிறது………பூவண்ணன் முயற்சி செய்தால், அந்த இடத்தை பிடிக்கலாம்……..அண்டப்புளுகுகளை உண்மை போல எழுதுவதற்கும் தனி திறமை வேன்டுமல்லவா?
December 19th, 2011 at 10:02 am
@kashyapan:
சரி.! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கூற விரும்புகிறீர்கள்.?
December 19th, 2011 at 10:13 am
@நடராஜன்:
புரியவில்லை.! நான் ஏன் அதற்கு பதில் கூற வேண்டும்.! எனக்கு தேவைப்பட்டது சற்று நிமிர்ந்து பார்க்க – நெஞ்சை ஓரளவு நிமிர்ந்து நடக்க – எனக்கு எஞ்சி உள்ள வாழ்வில் மற்றும் வரும் சந்ததியினரும்.! அதற்கு யார் எனக்கு உதவி செய்கிறார்களோ அவர்களை ஓங்கி பிடித்து மேல் எழுவது.! அது பெரியார், விவேகனந்தர், ராமகிருஷ்ணர், அம்பேத்கர், நாராயண குரு யாராக வேண்டும் ஆனாலும் இருக்கலாம்.! எனக்கு அம்பேத்கர் தமிழ் சூழலில் பற்றி கொள்வது சற்று தூரம் விலகி உள்ளது.! பெரியார் சற்று நெருக்கமாக உள்ளார்.! அவர் பின் வந்த தி.மு.கழகம் எங்களுக்கு செய்ய வேண்டியதை செய்தது.! அதற்கு பின் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி அரசியல் கட்சிகள் முளைத்தன,! ஆனால் இந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகளுக்கு இடம் குடுக்க, முன்னேற்ற தமிழ் நாட்டில் விதை போட்டது பெரியார் தான்.
December 19th, 2011 at 10:22 am
@நடராஜன்:
அதே போல் நாங்கள் யாவருமே “ஒழுக்கம்” (வேதம்கோபால் கூற்று படி) அற்றவர்கள் தான்.! எங்கள் தலைவனும் “ஒழுக்கம்” அற்றவராக தான் இருப்பார்.! எங்களுக்கு கடவுள் என்றுமே “ராம்” அல்ல.! கிருஷ்ணனை சொன்னாலாவது சற்று தகும்.! கருப்பு நிறம், பெண்கள் வசிகரிப்பவன், திருடுபவன், கழகம் செய்பவன்.! இவை தான் நாங்களும்.! ஆக தனி நபர் சார்ந்த எந்த ஒழுக்கத்தை பற்றி இந்த கணத்தில் சிந்திக்க வாய்ப்பில்லை.! நாங்கள் சற்று நிமிர்ந்த நிலை பெற்ற பின், ஒழுக்கத்தை பற்றி சிந்தனை செய்வோம்.! நீங்கள் வேண்டும் ஆயின் உங்கள் தலைவரை ராமரை போல் தேடிகொல்லுங்கள்.! எங்களுக்கு அது இப்போது தேவையில்லை.!
December 19th, 2011 at 10:31 am
@நடராஜன்:
உங்கள் உபதேசத்திற்கு மிக்க நன்றி.! களத்தில் இருப்பவர்கள் நாங்கள்.! எங்களுக்கு பெரியார் வேண்டுமா, அம்பேத்கர் வேண்டுமா என்று யோசித்துக்கொல்கிறோம்.! இருவரையும் செர்ந்தேவும் பின் பற்றுவோம்.! நீங்கள் ஏன் எங்களை பெரியாரை மட்டும் விட்டுவிட்டு எங்களை அம்பேத்கர் பின் அணி திரள போதிக்கிறீர்கள்.! அதுவும் தமிழகத்தில்.!
அது மிக பெரும் ஐயம் உங்கள் மேல் எழ செய்கிறது.! மன்னிக்கவும்.!
December 19th, 2011 at 10:36 am
@ தமிழ்செல்வன்:
அவர் யாராக வேண்டும் ஆனாலும் இருக்கட்டும்.! உங்களுக்கு அவர் கருத்தக்கள் மேல் வாதம் இருந்தால் எடுத்து வையுங்கள்.! அதை விட்டுவிட்டு இப்படி பேசுவது மலிவான செயலாக தோனவைக்கிறது.!.!
December 19th, 2011 at 10:45 am
@RANGAN:
உங்களுக்கு தமிழகம் என்றும் பிடிபடாது.! நாங்கள் கடவுள் இல்ல என்று கூறுவோம்.! பெரியாரை படம் வீட்டினுள் வைப்போம்.! பர்கத்திலேயே அம்மன் படம் இருக்கும்.! ஆடி மாத , சித்திரை மாத பொங்கல் வைப்போம்.! ஆட்சியிலும் அமருவோம்.!
நீங்கள் எவ்வளவு வேண்டும் ஆனாலும் எங்களை ஏசி கொள்ளலாம்.! வசைபாடி கொள்ளலாம், செய்து கொண்டே இருக்கலாம்.! இன்னும் உங்கள் குரலின் உச்சியில் கூட கத்தலாம்.! எங்களுக்கு அது பற்றி எந்த கவலையும் இல்லை.!
December 19th, 2011 at 10:45 am
@RANGAN:
உங்கள் கருத்து சரி என்றால். உங்கள் கருத்துக்கு இங்கு பெரும்பான்மை உள்ளது என்றால் தமிழகத்தின் தேர்தலில் வென்று, ஆட்சியை பிடித்து நிருபித்து காட்டவும்.!
December 19th, 2011 at 10:52 am
@k.J.S. SARAVANA KUMAR:
எங்களுக்கு காமராஜர் பல நல்ல திட்டங்களை வகுத்தார்.! பின் தி.கழகங்கள் அதை விட மிக அதிகமாக எங்கள் வளர்ச்சிக்கு வித்திட்டன.! poovaanan கருத்து தவறா மற்றும் அவர் நகைச்சவை எழுத்தாளரா என்று தமிழகத்தின் தேர்தல் கடைசி 45 வருட முடிவுகள் கூறும்.! தேர்தலை – நான் முன் நிறுத்துவதின் காரணம் – அதில் பெரும்பான்மை மக்களின் கருத்துக்கள் வெளிப்பாடு.!
December 19th, 2011 at 9:10 pm
@அழகிரிசாமி
//உங்களுக்கு தமிழகம் என்றும் பிடிபடாது.! நாங்கள் கடவுள் இல்ல என்று கூறுவோம்.! பெரியாரை படம் வீட்டினுள் வைப்போம்.! பர்கத்திலேயே அம்மன் படம் இருக்கும்.! ஆடி மாத , சித்திரை மாத பொங்கல் வைப்போம்.! ஆட்சியிலும் அமருவோம்.!
நீங்கள் எவ்வளவு வேண்டும் ஆனாலும் எங்களை ஏசி கொள்ளலாம்.! வசைபாடி கொள்ளலாம், செய்து கொண்டே இருக்கலாம்.! இன்னும் உங்கள் குரலின் உச்சியில் கூட கத்தலாம்.! எங்களுக்கு அது பற்றி எந்த கவலையும் இல்லை.!//
அப்பாடா ! கொள்கையாவது வெங்காயமாவது !! அதெல்லாம் ஒன்றும் கிடையாது என்று ஒத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி ( ஹிந்தி கூடாது என்று அறுபதுகளில் பள்ளி நாட்களிலேயே இன்னொரு மொழி கற்கும் வாய்ப்பை இழந்த பல மூடர்களில் நானும் ஒருவன். தஞ்சையில் 1971 இல் பெரியார் என்ற முழு மூடனின் பேச்சைக் கேட்டு வேதத்தை இழந்த அறிவிளிகளில் நானும் ஒருவன். எனவே தமிழகம் பற்றி என்னிடம் அளக்கவேண்டாம். )
@அழகிரிசாமி
//உங்கள் கருத்து சரி என்றால். உங்கள் கருத்துக்கு இங்கு பெரும்பான்மை உள்ளது என்றால் தமிழகத்தின் தேர்தலில் வென்று, ஆட்சியை பிடித்து நிருபித்து காட்டவும்.!//
ஹிட்லர் கூடத்தான் ஒரு காலத்தில் பெரும்பான்மை பிடித்தான்.
December 20th, 2011 at 11:11 am
@RANGARAJAN :
உதாரணங்களை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம்.! திராவிட கழகங்கள் ஆட்சி – ஹிட்லர் ஆட்சி என்று மக்கள் எப்போது நினைத்து வேறு கட்சிக்கு வாக்கு அளிக்கிறார்களோ.! அன்று நான் உங்களை தேடி வந்து மண்டி இடுகிறேன்.!
December 20th, 2011 at 11:13 am
@RANGARAJAN :
ஆனால் அப்படி ஆகவில்லை எனில்.?
December 20th, 2011 at 11:29 am
@RANGARAJAN :
அதான் சொன்னனே, உங்களுக்கு தமிழகமோ, எங்களையோ பிடிபடாது.! நாங்கள் கொள்கை அற்றவர்கள், வெங்காயங்கள் என்று தாராளமாக நினைத்துக் கொள்ளலாம்.!
December 26th, 2011 at 7:39 pm
ஈ வே ரா செய்த சேட்டைகளுக்கு அளவே இல்லை!ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்தால் அந்த பெண் இரு ஆண்களை திருமணம் செய்ய வேண்டும்னு சொன்னாரு!சரி!இதையே ஒரு இஸ்லாமிய பெண்கள் நிறைந்த கூட்டத்தில் ஏன் சொல்லலை?ஏன் கருணாநிதியை கண்டிக்கவில்லை?எல்லாம் ஊருக்கு உபதேசம்!பார்ப்பநனை கனடா அடின்னு சொன்னாரு!ஆனா இவுரு சொத்துக்கு ஈ வி கே சம்பத்தால் ஆபத்துன்னு தெரிந்ததும் உடனே பார்ப்பனராகிய ராஜாஜியிடம்தான் ஓடினார்!ஊருக்கு உபதேசம்
April 3rd, 2012 at 9:43 pm
தின்பதும் பிள்ளை பெறுவதும் தவறி வேறு ஏதும் அறியாத முஸ்லீம் பெண்கள் ஒரு சாபக் கேடு என்றவர் பெரியார். ஆதாரம் குடியரசு
May 30th, 2012 at 11:18 pm
சமூகமாற்றத்துக்கு உதவாத நாத்திகவாதமும் எதிர்வாதமும் இப்படித்தான் நேரத்தை வீணடிக்கும்
May 2nd, 2013 at 11:17 am
பெரியார் ஒன்றும் பெரியவர் அல்ல என்பது இக்கட்டுரை குறித்த விமர்சனத்தை வாசிக்கும்போது அறியமுடிகிறது. பெரியார் தமிழகத்தை முன்னேற்றினார் என்கிறார்கள். என்ன முன்னேற்றினார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். தலித்துகளை இசுலாமுக்கு மாறு என்று பெரியார் சொன்னது தொலை நோக்குப் பார்வை அற்ற செயல். பலதார மணத்தை ஆதரிக்கும் இசுலாமை தழுவச் சொன்ன பெரியார், பெண்கள் எத்தனை கணவர்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்காதா?