சாரு நிவேதிதாவின் எக்ஸைல் – ஒரு பின்நவீனத்துவ விமர்சனம்

ட்ரெய்லர்: விமர்சனம் குறித்த பதிப்பாளரின் கருத்து இது. நமது வீடியோக்காரர் ஹாலிவுட் படமொன்றில் பணியாற்றச் சென்று விட்டதால் வீடியோ இல்லை.

‘இந்த விமர்சனம் வெளியாவதற்கு முன்பே இதை வெளியிடும் எங்களுடைய நிறுவனத்தின் சார்பில் இதை முழுக்க படிக்கிற ஓர் அரிய‌ வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக இன்றைக்கு வரக்கூடிய விமர்சனங்களிலிருந்து ரொம்பவும் மாறுபட்ட மாதிரியான ஒரு விமர்சனம் இது. பின்நவீனத்துவம் என்றெல்லாம் சொல்கிறார், எனக்கு அதெல்லாம் தெரியாது. ஒருபதிப்பாளராகவோ, எடிட்டராகவோ அல்லாமல் ஒரு வாசகராகப் பார்க்கும் போது விமர்சனம் தரும் வாசிப்பனுபவம் முக்கியமானது. முதலில் இந்த விமர்சனம் தங்குதடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து இந்த ஃபார்மெட்டே ஒரு interesting ஆன experiment. இது அவருடைய die-hard fansக்கு மட்டுமில்லாமல் தமிழ் தெரிந்த எல்லோருக்கும், தமிழே தெரியாதவர்களுக்குக் கூட மிகப்பிடிக்கும். அதனால் இதை எல்லோரும் ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.’

– (~) –

“Autofiction? Non, c’est une autobiographie si elle est sûre et que quelqu’un est là pour y croire. Sinon simplement lever les mains en l’air et de l’appeler comme fictive.” “Autofiction? No, it’s an autobiography if it is safe and that somebody is there to believe it. Else just raise hands up in the air and call it as fictional.”

(இதை எந்த ஃப்ரெஞ்ச் எழுத்தாளரும் சொல்லவில்லை. எதற்கும் இருக்கட்டுமே என்று நானே எழுதியதைத் தான் Google Translateல் பெயர்த்துப் போட்டிருக்கிறேன்.)

– (~) –

நான்கு நாள்களாக சகா எழுதிக் கொண்டிருந்த ‘எக்ஸைல்’ என்ற நாவலைப் பற்றிய ‌பின்நவீனத்துவ‌ விமர்சனத்தை முடித்துக்கொண்டிருந்த சந்தர்பத்தில் அவனுக்கும் மதுமிதாவுக்கும் நடந்த ஓர் அந்தரங்க‌ கடிதப்பரிமாற்றம் இது.

வெல்லக்கட்டி,

ஏன் என்னை இப்படிப் படுத்துகிறாய்? நான் சாருவின் முந்தைய நாவல்கள் அனைத்தையும் படித்தவன். அவற்றில் ராஸலீலா ஒன்றுதான் எனக்குப் பிடிக்கும். எல்லோரும் கொண்டாடும் ஸீரோ டிகிரி கூட எனக்கு உவப்பில்லை. அதிலும் அவரது கடைசி நாவலான தேகம் படித்த பின் அவர் மீதான நம்பிக்கை கிழவன் குறி போல் சுத்தமாகப் படுத்து விட்டது. ஆனாலும் விதி அப்படி சும்மா விடுமா?

எக்ஸைல் நாவலை நீ மிகவும் எதிர்பார்க்கிறாய் என்ப‌தற்காகவும், அந்த ட்ரெய்லர் காணொளியில் நாவலின் பதிப்பாளர் கொடுத்த பில்டப்பிலும் விழுந்து விட்டேன்.

மாலை ஆறு மணிக்கு கையில் கிடைத்த நாவலை அப்போதே ஆரம்பித்து, தொடர்ந்து 10 மணி நேரம் விடாமல் வாசித்து முடித்து விட்டு மறுநாள் காலை நான்கு மணிக்குத் தான் தூங்கப் போனேன் (ஆனாலும் சர்வதேசிய வாசகரான கார்ட்டூனிஸ்ட் மதன் அளவுக்கு அடக்கமுடைமையும் இலக்கிய வெறியும் சாத்தியப்படவில்லை – இடையில் நான்கு முறை சுச்சாவும் ஒரு முறை கக்காவும் போய் வந்தேன். என்ன‌ இருந்தாலும் நான் லோக்கல் வாசகன் தானே).

ஆனால் நாவல் மிகப்பெரிய ஏமாற்றம். எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் தொடங்கி கடந்த இருபது வருடங்களுக்கு மேலாய் சாரு அரைத்து வரும் அதே பழைய புளித்த மாவு (ஒரே ஆறுதல் முந்தைய‌ தேகம் நாவலை விட சற்று பரவாயில்லை என்பது தான்). அந்தக் கடுப்பில் தான் ஒரு கீழ்த்தர வசவு கொண்ட‌ அந்த ஆபாச எஸ்எம்எஸை உனக்கு தட்டி விட்டு உறங்கப் போனேன்.

அதற்காக என்னை மன்னித்து விடு. அல்லது அதற்கும் கீழான ஒரு வசவுச் சொல்லில் என்னைத் திட்டி விடு. வேண்டுமானால் தனிமையில் ஓர் அடி கூட உன்னிடம் வாங்கிக் கொள்கிறேன் (கவனிக்கவும், மதுமிதா – கடி அல்ல; அடி).

அல்லது இன்னமும் ஒருபடி மேலே போய் 2012 டிசம்பரில் வெளியாகவிருக்கும் சாருவின் அடுத்த நாவலைக் கூட உனக்காக எப்படியாவது படித்து விடுகிறேன்.

ஆனால் என்னுடன் கோபித்துக் கொண்டு பேசாமல் மட்டும் இருக்காதே, என் பேரழகியே. அந்த தண்டனையை மட்டும் இந்த எளியனால் பொறுக்கவியலாது.

சகா

இதற்கு மதுமிதாவின் பதில்:

Sweety…

I dedicate this to you…

Humpty Dumpty était assis sur un mur,
Humpty Dumpty a une grande chute.
– Mother Goose’s Melody (1803)

Humpty Dumpty sat on a wall,
Humpty Dumpty had a great fall.

மதுமிதாவுக்கும் நாவல் பிடிக்கவில்லை. ஆனாலும் விடாமல் “Pleasure of the text” என்றெல்லாம் உதயா வாசகர் சதுக்கத்தின் விசிலடிச்சான் குஞ்சாமணிகள் சொல்கிறார்களே எனக் கேட்டான் சகா (“வாசிப்பின்பம்” என்று சொன்னால் யூத் ஃபீல் மிஸ்ஸிங், மாமு. அதெல்லாம் கிருஷ்ணபுரம் வாசகர் சதுக்கத்தைச் சேர்ந்த‌ பழங்கிழ போல்டுகளுக்குத் தாம் சரிப்பட்டு வரும். நமக்காகாது – கும்மாங்கோ).

கழுவி முடித்து விட்டு பாத்ரூமிலிருந்து வெளியேறிய‌ மதுமிதா, நாய் கொண்டு வந்து போட்ட வஸ்துவைப் போல் அவனை ஒருமுறை பார்த்து விட்டு, முந்தைய இரவில் அறை மூலையில் கழற்றியெறிந்த‌ உள்ளாடைக‌ள் தேடி அணியலானாள்.

இது தான் இந்த விமர்சனத்தின் வெர்டிக்ட்.

– (~) –

எக்ஸைல் என்ற இந்த நாவலின் விமர்சனத்தை துளுவிலோ கொங்கணியிலோ படிக்கும் வாசகர்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் டமில் வாசகர்களுக்கு ‘இது என்ன மயிரு மாதிரி?’ என்று தோன்றும். இது நாவல் குறித்த‌ விமர்சனமா அல்லது விமர்சனம் பற்றிய நாவலா அல்லது ரெண்டு பெக் ஸ்வீட் லைம் ஸோடா உள்ளே போன கெத்தில் வாந்திக்கு முந்தைய கணங்களில் கிறுக்கிய‌தா?

சமீபத்தில் ஒரு ஜாவா நிரலைப் படித்துக் கொண்டிருந்த போது தான் எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. நான் எழுதிய கதைகளில் பல கட்டுரைகளாக வந்திருக்க வேண்டியவை. ஆனால் அவை புனைகதைகளாக இருந்த ஒரே காரணத்தினால் வாசிக்கப்படாமல் போய்விட்டன. டமிலர்களுக்கு கட்டுரைகளில் இருக்கும் ஈடுபாடு புனைகதைகளில் இல்லை. அதனாலேயே தற்போது என்னுடைய நாவலை எக்ஸைல் குறித்த‌ ஒரு விமர்சனக்கட்டுரையாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அது தவிர, பின்நவீனத்துவம்னா ச்சும்மாவா?

– (~) –

பின்நவீனத்துவம் என்றால் Flying Machine ஜீன்ஸ் விளம்பரத்தில் வருவது போன்ற நவீன‌ உடையணிந்த நவயுக நங்கைகளின் பிருஷ்ட பாகம் (WHAT AN ASS!) என்ற புரிதல் இருந்தால் இங்கேயே இப்போதே இந்த‌ விமர்சனத்தை மூடி விடுங்கள்.

– (~) –

உதயா வாசகர் சதுக்கத்தில் கும்மாங்கோ ரகசிய‌ அங்கத்தினனோ என சகாவுக்கு சமயங்களில் சந்தேகம் வருகிறது. மாறாக‌ அவனோ ஒருபோதும் அமைப்புகளோடு த‌ன்னை அடையாளப்படுத்திக் கொண்டவனில்லை. “உன்னுடைய குப்பையான கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்விற்கு வந்து பெரிய மனதுடன் அதை வெளியிட்டவர் சாரு. அந்த நன்றியை மறந்து விடாதே”, என்கிறான் கும்மாங்கோ.

ஒருவகையில் நிஜம்தான். ஆனால் நட்பு வேறு, இலக்கியம் வேறு அல்லவா?

சாருவே இதைப் பல சந்தர்ப்பங்களில் சொல்லி இருக்கிறார். நாவலின் நாயகன் உதயா கூட‌ கிட்டதட்ட இதே கருத்தைத் தான் 354ம் பக்கத்தில் சொல்கிறான்.

– (~) –

“நான் நகுலன் பள்ளி. நீ?” எனக் கேட்டான் சகா.

“செயிண்ட் தாமஸ் கான்வென்ட்” என்றாள் மதுமிதா.

– (~) –

“என்னை வசை பாடுவதற்கு பதிலாக நீயே சாருவிடம் இது பற்றி கேட்டு விடலாமே” என்று சகாவிடம் ஒருமுறை மெதுவாகக் கேட்டாள் மதுமிதா.

“நாவலில் சாருவே (அல்லது உதயாவா?) quote செய்திருப்பதைப் போல் பிரதியை எழுதும் போதே எழுதுபவன் மரித்து விடுகிறான் (L’ecriture est la destruction de toute voix, de toute origine.) என்பதால் இனி மேல் இது குறித்து அவரிடம் கேள்வி ஏதும் எழுப்ப முடியாது” என்று முடித்துக் கொண்டான் சகா (ம்க்கும் – கும்மாங்கோ).

– (~) –

லண்டனிலிருக்கும் நவீன் என்பவன் சகாவின் பால்யகால நண்பன். வளர்ந்து வரும் சமகால இலக்கிய வாசகனும் கூட‌. அவன் சமீபத்தில் இந்தியா வந்த போது ஈரோட்டிலிருந்த ஜூனியர் குப்பண்ணா (இதை பைக்ஸ் அண்ட் பேரல்ஸ் மாதிரி பாவித்துக் கொள்ளவும்) என்ற புகழ்பெற்ற அசைவ உணவகத்திற்கு சகா அவனை அழைத்துச் சென்றான். அங்கு கிடைக்கும் சிக்கன் பிரியாணியும் ஆயில் ரொட்டியும் மிகப் பிரசித்தம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது “சாரு அறிமுகப் படுத்திய உலக எழுத்தாளர்களில் முக்கியமானவராக யாரை நினைக்கிறாய்?” என்று கேட்டான் சகா. அதற்கு நவீன் சொன்ன பதிலைக் கேட்டு உடனடியாய் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டான் சகா. நவீன் சொன்ன பதில்.

“ரெமி மார்ட்டின்.”

– (~) –

எக்ஸைல் நாவலைப் படித்ததிலிருந்து மதுமிதா இரவில் தூங்கும் போதெல்லாம் ”Oh Shit” என்று இடைவெளியே இல்லாமல் சொல்லி அரற்றிக் கொண்டிருந்தாள்.

oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet oshet

இது தவிர அத்துமீறி மதுமிதா பேசிய மற்ற‌ கெட்ட வார்த்தைகளை எல்லாம் சென்ஸார் செய்யப்படுகிறது. ஆயிரம் இருந்தாலும் மதுமிதா ஓரழகிய‌ தேவதை.

– (~) –

ஒருமுறை சகாவிடம் பின்நவீனத்துவத்தில் ‘ஒரு’ என்ற வார்த்தையே கிடையாதா எனக் கேட்டாள் மதுமிதா. கேள்வி புரிந்த போது ஸீரோ டிகிரியை சபித்தான் சகா.

– (~) –

சகாவுக்கு எக்ஸைல் புத்தகத்தை டெலிவரி செய்த பெங்களூரு நியூ திப்பசந்திரா ப்ரொஃபெஷனல் கொரியர் கிளை அமைந்துள்ள பிரதான‌ சாலையின் வரைபடம்:

 

– (~) –

இந்த கும்மாங்கோ என்பவனிடம் இந்த நாவல் விமர்சனத்தைப் படிக்கக் கொடுத் போது அவன் இடையில் அவனது கருத்துகளை செருகிச் சேர்த்து விட்டான் என வாசகர்கள் நினைக்கலாம். அப்படி இல்லை. கும்மாங்கோ இந்த நாவலைப் பற்றி எழுதிய குட்டி குட்டி கருத்துகளை சகாவிடம் படிக்கத் தந்த போது, அவன்தான் அதைச் சுற்றி தன் விமர்சனத்தை எழுதிவிட்டான். இது தான் உண்மை. (ரா-ஒன் என்பது ரஜினி படம், அதில் ஷாரூக்கான் இரண்டரை மணி நேரம் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார் என்று சொல்கிறார்களே அதைப் போன்றதா இது? – கும்மாங்கோ).

– (~) –

சகா இந்த விமர்சனம் எழுதப் பயன்படுத்திய கணிப்பொறியின் Processor வரைபடம்.

ஷேவாக் 219 ரன்கள் எடுத்து உலக சாதனை செய்தது பற்றியோ, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மலையாளிகளின் நிலைப்பாடு பற்றியோ, ஸ்கூட்டியில் முன்னால் செல்லும் பெண்ணின் துப்பட்டா பறப்பது பற்றியோ இவ்விடத்தில் எழுதலாம் என்று நினைத்திருந்தான் சகா. அவற்றுக்கும் இந்த நாவல் விமர்சனத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை விடுங்கள், ஆனால் பதிப்பாளர் சொன்ன ‘விமர்சனக் கட்டுரை 2000 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்’ என்ற வரையறை காரணமாக அவற்றை ரத்து செய்து விட்டான்.

– (~) –

எக்ஸைல் நாவலை 250 பக்கங்கள் வரை படித்திருந்த மூத்த தமிழ் பதிவர் ஒருவர் ‘ரொம்ப பிடித்திருப்பதாக’ சொல்லி இருந்தார். அடடா, நாமும் நாவலை முழுக்கப் படிக்காமல் 250 பக்கங்களுடன் நிறுத்தி இருக்கலாமே எனத்தோன்றியது சகாவுக்கு.

வடை போச்சே!

– (~) –

அவர் உதயா வாசகர் சதுக்கத்தில் மிகத்தீவிர செயல் வீரர். பெயர் வேண்டாம். சகாவுக்கு மின்னரட்டையில் பழக்கம். நேற்று சகா அவருடன் சாட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது பேச்சு எக்ஸைல் பற்றி திரும்பியது. Junk என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு, தொடர்ந்து அவசரமாக Off the record என்று சாட் அனுப்பினார். குழப்பமாக “ஃபேஸ்புக்கில் வேறு மாதிரி சொல்லி இருந்தீர்களே” எனக் கேட்டான் சகா. “சங்கத்துல இருந்துட்டு சங்கத்துக்கே எதிரா எப்படிப் பேசறது என்ற எதிக்ஸ் தான்” என்று சொல்லி விட்டுச்சிரித்தார் (ஸ்மைலி). அடப்பாவிகளா!

– (~) –

தேகம் நாவல் வெளியான ஓரிரு நாள்களிலேயே விமர்சன‌ங்கள் புற்றீசல் மாதிரி குவிந்தன. இம்முறை இதுவரைக்குமே ஓரிரு விமர்சன‌ங்கள் தாம் வெளியாகி இருக்கின்றன. சாரு இனிமேல் எழுதவிருக்கும் நாவல்களை நூறு பக்கங்களுக்குள் எழுதினால் அல்லது பாகம் பாகமாக எழுதினால் வாசகர் சதுக்கம் க‌ளை கட்டும்.

அது ஒன்றும் தவறுமில்லை. மார்க்குவேஸ் எழுதிய Chronicle of a Death Foretold போன்ற புகழ்பெற்ற நாவல் எல்லாம் நூறு பக்கங்களுக்குள் அடங்குபவை தாம் (அது novel அல்ல; novelette. இதுவே தெரியவில்லை. நீயெல்லாம் ஒரு விமர்சகன் – கும்மாங்கோ. அதனை நாவல் என்றும் சொல்லலாம், நெடுங்கதை என்றும் சொல்லலாம் அல்லது கும்மாங்கோ சொல்வது போலவும் சொல்லலாம் – சகா).

வாசகர்களின் threshold நூறு பக்கம் தான் என்றால் சாரு என்ன செய்வார், பாவம்?

– (~) –

குழுமத்தின் வாசக அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வது மற்றும் உலகத் தரத்தில் இலக்கியம் படைப்பது ஆகிய இரண்டும் இரு வேறு திசைகளில் ஓடும் குதிரைகள். அது புரியாமல் இரண்டையும் கயிறு பிணைத்து உடம்போடு கட்டிக் கொண்டு நகர முயற்சித்தால், எக்ஸைல் போன்ற குறை நிறைந்த படைப்புகளையே தர‌ முடியும்.

கமல்ஹாசனைச் சுற்றியுள்ளவர்கள் அவர் பற்றிய உண்மையான கருத்துகளைச் சொல்லாமல், முகஸ்துதி செய்தே அவரை மேலே செல்லவிடாமல் செய்து வருகிறார்கள் என சாரு அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார். இப்போது சாருவின் நிலைமையே கிட்டத்தட்ட‌ அதுதான் என்பது எத்தனை துரதிர்ஷ்டவசமானது.

– (~) –

கிழக்கு பதிப்பகத்தில் புத்தகத்தின் மேக்கிங் அபாரமாக வந்திருக்கிறது. இனிமேல் ‘புத்தகம் இருப்பு இல்லை’ என்று சொல்லப்படும் பதிப்பகத் துறையின் கற்கால‌ புகார்களையெல்லாம் சாருவின் அதிதீவிர வாசகர்கள் கேட்க வேண்டி இராது என நம்புவோமாக‌. ஹார்ட் பௌண்ட் அல்லாமல் பேப்பர்பேக் போட்டிருப்பது ஆறுதல். ஆயிரம் பக்கங்களுக்குக் குறைவான எந்தப் புத்தகமும் இப்படி சாஃப்ட் கவரில் இருப்பதுதான் வாசகனுக்கு சுகம் – வாங்கும் போதும் சரி, சுமக்கும் போதும் சரி.

என்ன ஒரு விஷயம், நாவல் பற்றிய பின்னட்டைக் குறிப்பில் பின்சரடு, முன்சரடு என்றெல்லாம் சரடு விட்டிருக்க வேண்டியதில்லை. “இலக்கியவாதிகளில் ஒரு கலகக்காரர்” என்பது வரை சரி, “கலகக்காரர்களில் ஓர் இலக்கியவாதி” என்றால் என்ன? இது தவிர “Autofiction User’s Manual” என்று கொட்டை எழுத்துக்களில் வேறு.

அது சரி, ஆளே சரியில்லையாம், ஆடையைக் குறைபட்டு என்ன ஆகப்போகிறது.

– (~) –

எகனாமிக் டைம்ஸின் டிசம்பர் 31, 2010 இதழில் கடந்த தசம ஆண்டுகளின் PERSONALITY என்று சாரு நிவேதிதாவும் பட்டியலிடப்பெற்றது நிச்சயம் தமிழ் எழுத்தாளர்களுக்கு பெருமைக்குரிய விஷயம்தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போல் “சாதனையாளர்களின் பட்டியல்” அது என்பதை ஒப்புக்கொள்வ‌தில் எனக்குக் கொஞ்சம் குழப்பமும் தயக்கமும் இருக்கிறது. காரணம், அதில் இடம் பெற்றிருந்த‌ 8 பேரில் இந்திப் படங்களின் ஐட்டம் நம்பர்களில் ஆடும் நடிகை ராக்கி சாவந்த் கூட இருந்தார்.

கடந்த தசாப்தத்தின் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகள் என வைத்துக் கொள்ளலாம்.

– (~) –

எந்த விமர்சனம் என்றாலும் அதற்கு ஒரு வெர்டிக்ட் தான் இருக்கும். ஆனால் இது ஒரு பின்நவீனத்துவ விமர்சனம் என்பதால் இதற்கு ஐந்து வெர்டிக்ட் வைக்க சகா முடிவு செய்திருக்கிறான் (இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை – கும்மாங்கோ).

வாழ்க்கை எப்போதும் ஒற்றைப் பரிமாணத்தில் பயணிப்பதில்லை அல்லவா?

– (~) –

தமிழ்நாட்டில் எழுத்தாளனாக இருக்க நேர்வதன் அவலம் பற்றிய புலம்பல்கள், அறுபதுக்கும் இருபதுக்கும் இடையேயான கிளுகிளு உரையாடல்கள், கடிதம், மின்னஞ்சல், மின்னரட்டை, எஸ்எம்எஸ், ஜக்கி வாசுதேவ், நித்யானந்தா போன்ற கார்ப்பரேட் சாமியார்களுடனான அனுபவங்கள், யோகம், வேதம், சித்தர் பாடல், நாட்டுப்புறக் கதைகள் போன்ற கிழக்கத்திய சிந்தனைகள், கொஞ்சம் பிரெஞ்சு இலக்கியம், கொஞ்சம் லத்தீன் இலக்கியம், கொஞ்சம் அரபி இலக்கியம், கூடவே அரசியல், சினிமா, கிசுகிசு, ஒரு சமையல் குறிப்பு, ஒரு மருத்துவக் குறிப்பு, ஓர் ஊரின் வரைபடம், ஒரு மாந்திரீக எந்திரம், ஒரு ஐபிஸி, ஒரு மளிகைக்கடை லிஸ்ட், ஒரு மேட்ரிமோனியல் விளம்பரம், ஒரு ஐயப்ப சரணம், அராத்துவின் ட்விட்டர் / ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ஜோதிடக் குறிப்புகள், பெண்களின் நவீன ஆடைகள் பற்றிய குறிப்புகள் (குறிப்பாய் அந்த ஜி-ஸ்ட்ரிங்), ஆங்காங்கே கொஞ்சம் தூக்கலாய் செக்ஸ் – இப்படி ஒன்றுக்கும் மற்றதற்கும் எவ்வகையிலும் சம்பந்தமற்ற‌ விஷயங்களின் சுவாரஸ்யமற்ற குழப்பக் கலவைதான் இந்த‌ எக்ஸைல் நாவல்.

மீறிக் கேட்டால் நான்-லீனியர் என்பார்கள், அல்லது போஸ்ட் மாடர்ன் லிட்ரேச்சர்.

குமுதம் வார இதழ், குமுதம் ரிப்போர்ட்டர், குமுதம் ஜோதிடம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் சினேகிதி, குமுதம் ஹெல்த் ஸ்பெஷல், குமுதம் தீராநதி ஆகிய ஒவ்வொன்றிலும் சில பக்கங்களைக் கிழித்தெடுத்து சீட்டுக்கட்டு போல் கலக்கியெடுத்து அச்சுக்கனுப்பி நாவலாக்கி விட்டார்களோ எனத்தோன்றுகிற‌து.

இது இந்த விமர்சனத்தின் முதல் வெர்டிக்ட்.

– (~) –

இடையிடையே அஞ்சலி என்கிற பெண் தன் சிறுவயதிலிருந்து எப்படி துன்பங்கள் மட்டுமே அனுபவித்து வருகிறாள் என்பது காட்டப்படுகிறது (நீங்கள் எதிர்பார்ப்பது போல் அதில் கணிசமானவை பாலியல் ரீதியானவை). அஞ்சலி தன் பெருந்திணை கள்ளக் காதலனுக்காக porn-site பார்த்து ஓரல் செக்ஸ் நுட்பங்களைக் கற்குமளவு அவன்மீது காதல் கொண்டவள் (வீடீயோவின் லிங்க் தரப்படவில்லை என்பது சிறு குறை). இதுவும் சாருவின் க்ளீஷே பாத்திரப்படைப்புதான். சாருவின் முந்தைய ஐந்து நாவல்களிலும் வந்தவை தாம் வேறு பெயர்களில், வேறு சூழல்களில் வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. நாவல் முழுக்க எனக்கு ஏற்கனவே படித்தது மாதிரியான உணர்வு இருந்து கொண்டே இருந்தது. அந்த freshness தான் missing.

ஒரே விதிவிலக்கு – கொக்கரக்கோ என்ற பாத்திரம் பற்றி வரும் 30 பக்கங்கள் (இரண்டாவது க்ளைமேக்ஸ்). இது மட்டுமே சாருவின் இந்த 440 பக்க நாவலில் கொஞ்சம் சுவாரஸ்யமானதும் புதுமையானதுமான‌ பகுதியாகக் கொள்ளலாம்.

இது இந்த விமர்சனத்தின் இரண்டாவது வெர்டிக்ட்.

– (~) –

(இரண்டாவது வெர்டிக்டுக்கு அடுத்து முன்றாவது வெர்டிக்ட் வந்தே ஆகவேண்டும் என எந்தமுட்டாள் சொன்னது? பின்நவீனத்துவம் அதையெல்லாம் நம்புவதில்லை).

சமீபத்தில் நான் படித்தவற்றில் சிறந்த‌ நாவல்கள் என்றால் பெருமாள்முருகனின் மாதொருபாகன் (காலச்சுவடு) மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் (உயிர்மை). அவற்றுக்கெல்லாம் அருகில் கூட வர முடியாது எக்ஸைல், தேகம் – இரண்டுமே.

இது இந்த விமர்சனத்தின் நான்காவது வெர்டிக்ட்.

– (~) –

உயிர்மை நிறுவனத்துடனான கருத்து மோதல் காரணமாக புத்தகம் வேறு பதிப்பகம் மூலம் வெளிவருவதால், தன் முந்தைய நாவல்களைக் காட்டிலும் இதைப் பெரிய ஹிட் ஆக்கிக் காட்ட வேண்டும் என்கிற ஈகோ சாருவுக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகச் செய்யப்பட்ட பலவித‌ புரோமோக்கள் சாருவின் வாசகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும்.

இந்தப் பின்புலத்தில் பார்க்கும் போது அவர்களுக்கெல்லாம் நாவல் பெரிய ஏமாற்றத்தையே தரும் எனத் தோன்றுகிறது. ஜிகினாக்களை எல்லாம் தாண்டி படைப்பில் சரக்கு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். (ஏழாம் அறிவுக்கு நேர்ந்ததே எக்ஸைலுக்கும் நடக்கும் என்கிறாய். அப்படித்தானே? – கும்மாங்கோ).

ஆனால் சாருவைப் புதிதாக எதிர்கொள்ளும் ஒரு வாசகனுக்கு எக்ஸைல் தொடக்கமாக அமைகிறதென்றால் அவனுக்கு ஒருவேளை அது பிடித்துப் போகக்கூடும். நான் சொல்ல வருவதன் சாரம் என்னவென்றால் நாவலின் உள்ளடக்கம், சாரு பலமுறை எழுதிய‌ விஷயம் என்பதாலேயே சாருவை ஏற்கெனவே படித்த வாசகர்களுக்கு ஏமாற்றமளிப்பதாய் இருக்கும் எக்ஸைல்.

இது இந்த விமர்சனத்தின் மூன்றாவது வெர்டிக்ட்.

– (~) –

இதுதான் தர‌வரிசை :

ராஸலீலா > ஸீரோ டிகிரி > காமரூபக்கதைகள் > எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் > எக்ஸைல் > தேகம்

என்னைப் பொறுத்தவரை ராஸலீலாதான் சாருவின் மாஸ்டர்பீஸ். கோணல் பக்கங்களில் சாருவின் மீது அரும்பிய காதல் ராஸலீலாவில் தான் கனிந்தது. ஆனால் இப்போது எக்ஸைல் வாசித்த பிறகு, அக்காலத்தில் ஏதாவது வசிய மருந்து போன்ற‌ வயசு மயக்கத்தில் இருந்தேனோ என சந்தேகம் துளிர்க்கிறது.

அதனால் தனிப்பட்ட முறையில் ராஸலீலா நாவலை விரிவாக‌ மறுவாசிப்பு செய்ய விரும்புகிறேன். அப்போது தான் (குறைந்தபட்சம் என் வரையிலான) சாருவின் இலக்கிய ஸ்தானத்தை மறும‌திப்பீடு செய்து நிறுவ இயலும்.

இது இந்த விமர்சனத்தின் ஐந்தாவது வெர்டிக்ட்.

– (~) –

லேஅவுட்காரர் கவனத்துக்கு: இந்த விமர்சனத்தில் ஸ்டார் வரும் இடங்களில் எல்லாம் அதை நீக்கி விட்டு விந்தணுக்குறியை போட்டு விடவும் (துரதிர்ஷ்டவசமாக இந்த microsoft ஆசாமிகள் அதையெல்லாம் தமது வேர்ட் ப்ராசச‌ரின் ஸிம்பல் லிஸ்ட்டில் சேர்க்கவில்லை – என்ன கொடுமை, ஐயப்பா, இது!).

– (~) –

வாசகர்கள் கவனத்துக்கு: இந்த விமர்சனத்தைப் படிக்கும் கடைசி வாசகராக இருக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு. இந்த விமர்சனத்தின் கடைசிப் பிரதி கிராம்பு ஏலம் விடப்படுகிறது. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்படும் என‌ எதிர்பார்க்கிறேன். அதிகபட்ச தொகைக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர் கேட்டாலும் பல கடைசிப் பிரதிகள் அடிக்கவும் யோசித்து வருகிறோம். எப்படியும் ஏலம் எடுப்பவர் தம் பெயரை வெளியிட விரும்ப மாட்டார். So, பிரச்சனையில்லை.

0

சி. சரவணகார்த்திகேயன்

38 comments so far

 1. நல்லூரான்
  #1

  அருமை அருமை..
  நான் விமர்சனத்தைச் சொன்னேன்..
  சாரு கண்டிப்பாகப் படித்து தெளிவடைய வேண்டும்…

 2. அனானி
  #2

  படிக்கவும் ‘வேக்’, எழுதியவர் பால் ஏபிள் மேன(Vac by Paul Ableman) புக் அடா தளத்தில் ஆன் லைனில் வாங்கலாம். சூப்பர்ப் பின் நவீன நாவல்.

 3. RAJA RAJENDRAN
  #3

  புகைச்சலோ என்று நினைக்கவும் வைக்கிறது, உண்மைதானோ என யோசிக்கவும் வைக்கிறது. மற்றபடி ஒரு திறமைசாலியின் விமர்சனமிது என்பதை ஒத்துக்கொள்ளவும் வைக்கிறது !

 4. ரா.கிரிதரன்
  #4

  ரகளை, அட்டகாசம் – சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க சிஎஸ்கே 🙂

 5. Sirodai
  #5

  Good one…

 6. அனானி
  #6

  சாரு இப்ப எழுதுகிற பானியில் பால் ஏபிள்மேன் அப்பவே 60-களில் எழுதிட்டாரு. அப்பல்லாம் அங்க இந்த பானிதான் ட்ரென்ட். இப்ப அங்கே ஃபேன்டஸி – ட்விலைட் ஸாகா, செப்டிமஸ் ஹீப், கார்த் நிக்ஸ் – பானி கதைகளைத் தான் குழந்தைகளைத் தாண்டிப் பெரியவர்களும் படிக்கிறார்கள்!

 7. அ. சரவணன்
  #7

  இந்தக் கட்டுரையையே என்னால் முழுசாகப் படிக்க முடியவில்லை.. என்னாலெல்லாம் சத்தியமாக சாருவின் எந்தப் புத்தகத்தையும் படிக்க முடியாது என்று நினைக்கிறேன்…

  ஹும்… என்ன செய்ய… சில பேர் இப்படி இருக்கிறார்கள்.. படிப்பவர்கள் சட்டென்று புரிந்து கொள்ளாவண்ணம் தத்துபித்தென்று எழுதினால்தான் அதிபுத்திசாலி.. அதற்கு பெயர் வேறு வைத்துக் கொள்கிறார்கள்… “பி(ன்நவீ)னாத்துவம்” என்று!

  என்னமோங்க.. இந்த மரமண்டைக்கு எதுவும் விளங்கலன்னு வச்சுக்கங்க!

 8. வால்பையன்
  #8

  இது சாருவின் தளத்தில் வெளியிடப்படுமா?

  வந்தால் சாருவின் மதிப்பு உயர வாய்ப்பிருக்கு!

 9. பிச்சைக்காரன்
  #9

  உங்கள் அளவில் நாவல் தோல்வி அடைந்து விட்டது.. ஒரு நாவல் எல்லோருக்கும் பிடித்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை

 10. பிச்சைக்காரன்
  #10

  பிடிக்காத நாவலே இந்த அளவுக்கு உங்களை பாதித்து, அந்த நாவல் பாணியில் விமர்சனம் எழுத வைத்துள்ளதே !!

  உங்கள் வார்த்தைகளை விட உங்கள் செயல் அந்த நாவலைப்பற்றிய துல்லியமான விமர்சனத்தை அளித்து விட்டது. நன்றி

 11. chairu nived
  #11

  பின் நவீனத்துவ பின்னூட்டம் எதுவும் இன்னும் வரலியே?

  Pourquoi est-il pas de rétroaction post-moderne encore?

  கூகிள் மொழிபெயர்ப்பு பின்நவீனத்துவ மொழிபெயர்ப்பு. நாங்கில நாவல்களை பின்நவீ்த்துவ தமிழ் நாவல்களாக மார்ற ஒரு எளிய வழி கூகிள் மொழிபெயர்ப்பு சேவை.

  உதாரணம்.
  ஆங்கிலத்தில்: Why is there no post modern feedback yet ?

  தமிழில்: ஏன் இல்லை பின் நவீனத்துவ கருத்துக்களை இன்னும் உள்ளது?

  அடுத்த நாவல் ஃபேன்சி பனியனையும் எக்ஸைலையும் சேர்த்து ‘டெக்ஸ்டைல்’ என்று வரும்.

 12. சி.சரவணகார்த்திகேயன்
  #12

  ஒரு பின்நவீனத்துவ பின்னூட்டம்:

  விமர்சனம் பற்றிய விவாதத்தில் அதை எழுதியவ‌ரும், அதைப் படித்தவர்களும் பங்கு கொள்வது அவசியம் இல்லை என்பதே என்னுடைய நிலைப்பாடு. அப்படிப் பங்கு பெற்றால் அது அடுத்தவரின் சுதந்திரத்தில் தலையிடுவது போல் ஆகிறது. இந்த விமர்சனத்தை நொபேல் இலக்கியம் என்று சொல்வதற்கு ஒவ்வொருவருக்கும் கட‌மை இருக்கிறது; அந்த கட‌மையில் குறுக்கிடுவது நியாயம் அல்ல. எனவே, பின்னூட்டக்காரர்களே, நீங்கள் இந்த விமர்சன‌த்தை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். எப்படி இருந்தாலும் வரவேற்கிறேன்.

  நாவலைப் படித்த மதுமிதாவின் கொடுமையான சகிப்புத்தன்மை தான் யாருக்கும் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். மதுமிதா மீது உங்களுக்குக் கோபம் வருகிறதா? அப்படியானால் அது விமர்சன‌த்தின் வெற்றி.

  அதுசரி, மதுமிதாவின் சகிப்புத்தன்மை பற்றி இவ்வளவு கோபிக்கிறார்களே… அந்த லண்டன் நவீன் மட்டும் என்ன செய்தான்? மதுமிதாவுக்கும் நவீனுக்கும் உள்ள தொடர்பு புரிகிறதா?

 13. Sundarvel
  #13

  நான் நாவலை பாதிதான் படித்திருக்கிறேன். இருந்தும் படித்த வரையில் ஒரு ஊரின் topographyயும் எல்லா தெரு பெயரும் எதற்கு என்றே தெரியவில்லை. வீட்டில் கல்கி சுஜாதா ஆர்.கே.நாராயண் சோ தேவன் இந்திரா பார்த்த சாரதி நாவல்களை வெளிப்படையாக வைத்த எனக்கு இந்த நாவலை அப்படி வைக்க பயமாக உள்ளது.

 14. Baskar
  #14

  யாருக்கும் புரியாமல் நாவல், சினிமா இதெல்லாம் படைப்பவர்தான் புத்திசாலி என்பதற்க்காக, விமர்சனமும் யாருக்கும் புரியாமல் இருக்க வேண்டுமா?

 15. neechalkaran
  #15

  விமர்சனம் புரியவில்லை 🙁

 16. Anony
  #16

  fantastic – CSK Rocks!!

 17. Anony
  #17

  I have finished reading the first 100 pages – i didnt find anything new so far- everything is from his blog or previous novels..

 18. சி.சரவணகார்த்திகேயன்
  #18

  அவதூறுக்கு ஒரு பதில் http://charuonline.com/blog/?p=2722

 19. சி.சரவணகார்த்திகேயன்
  #19

  அவதூறுக்கு இன்னொரு பதில்: அராத்து http://charuonline.com/blog/?p=2724

 20. சி.சரவணகார்த்திகேயன்
  #20

  விமர்சனமா? அவதூறா? http://www.writercsk.com/2011/12/blog-post_14.html

 21. English MA
  #21

  SUPER! I really appreciate this review. AWESOME. One and only best article ever about a pseudo-writer. Keep writing, we all are with you to support your points.

 22. சி.சரவணகார்த்திகேயன்
  #22

  அவதூறுக்கு மூன்றாவது பதில் (சற்று காட்டமாக)… http://charuonline.com/blog/?p=2734

 23. benjamin david
  #23

  வெகு நிச்சயமாய் சாரு மீது உள்ள வெறுப்பு தான் வெளிப்பட்டு இருக்கிறது .இது விமரிசனமா ?
  நல்ல வாய்ப்புக்கு காத்திருந்து ஏதோ எழுதி உள்ளீர்கள்.

 24. Jyovram Sundar
  #24

  தமிழில் வரும் பின்னூட்டங்களை மட்டுமே வெளியிடுவோம் என்று அறிவித்தீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் வந்திருக்கும் மூன்று பின்னூட்டங்களை (அதுவும் மிகச் சாதாரணமான இந்த விமர்சனத்தை விதந்தோதும் பின்னூட்டங்களை) வெளியிட்டது ஏனோ?

 25. நித்தி சிஷ்யன்
  #25

  நெத்தியடி விமர்சனம்!முல்லை முள்ளால் எடுக்க வேண்டும்!அதைதான் நீ செய்துள்ளாய்!சூப்பர்!

 26. அனானி
  #26

  ஒருநாள் பத்ரிக்கு சாருவிடம் அர்ச்சனை உறுதி. அப்ப முதல் பாயிண்டா இந்த விமர்சனத்தை தமிழ் பேப்பரில் வெளியிட்டதைத்தான் சொல்வார்!

 27. ilavarasan
  #27

  இந்த விமர்சனமே ஒரு விறுவிறுப்பான நாவல் படித்த உணர்வை மனதினுள் ஏற்படுத்துகிறது.

 28. சி.சரவணகார்த்திகேயன்
  #28

  எக்ஸைல்: ஒரு விரிவான மதிப்புரை http://charuonline.com/blog/?p=2754

 29. V. NARENDRA KUMAR
  #29

  “என்னோட நாவல் கிழக்கு பதிப்பகம்ல கிடைக்கல. என்னை ஒழிக்க பார்க்கிறாங்க” னு கிழக்கு பதிப்பகமை திட்டி ஒரு பதிவை சாருவிடமிருந்து விரைவில் எதிர்பார்ப்போம்.

 30. சி.சரவணகார்த்திகேயன்
  #30

  ஒரு பின்நவீனத்துவ நேர்காணலிலிருந்து…

  கேள்வி: சாரு நிவேதிதாவின் எக்ஸைல் நாவலைப் படிக்காமலேயே அதைத் திட்டி விமர்சனம் எழுதி விட்டீர்கள் என்று சொல்லப்படுகிறதே?

  சகா: ஒரு சிலர் அந்த நாவலைப் படிக்காமலேயே பாராட்டி விமர்சனம் எழுதும் போது, நான் அதைப் படிக்காமலே திட்டி விமர்சனம் எழுதக் கூடாதா?

 31. அல‌ன்
  #31

  //ஆனால் இந்த நபர் நாவலை படிக்காமலேயே, நாவலை படித்தது போல பாசாங்கு செய்து , விமர்சனம் செய்கிறார் என்றால் அதற்கு ஒரே காரணம் ஹிட்ஸ் கிடைக்க வேண்டும் . //

  அட‌ பாவ‌மே ! சிஎஸ்கே நாவ‌லை ப‌டிகாம‌லேயே விம‌ர்ச‌ன‌ம் எழுதினாரா? மன சிதைவிற்கு உள்ளாயிருக்கிறீர்க‌ள் என‌ தெரிகிற‌து. ஒரு நாவ‌லை ப‌டிக்காம‌ல் எப்ப‌டி ஒருவ‌ரால் விமர்சனத்தால் ஒரு நாவ‌லை இப்ப‌டி க‌ந்த‌ல் க‌ந்த‌லாய் ஆக்க‌ முடியும்.

  // ..( நாவலைப்பற்றியொ, அதன் கேரகடர்கள் பற்றியோ, ஏன் பிடிக்கவில்லை என்பது குறித்தோ அவர் தெளிவாக ஏதும் சொல்லவில்லை என்பதை கவனியுங்கள் ) //

  விமர்சனம் எப்படி செய்யவேண்டும் என்பது எழுதுபவரை பொறுத்தது. ம‌ற்ற‌வ‌ர் எப்ப‌டி விம‌ர்ச‌ன‌ம் எழுத‌வேண்டும் என்று நீங்க‌ள் சொல்லித்த‌ராதீர்க‌ள் பிச்சைக்கார‌ன்

  //நெட் என்பது ஆபாச குப்பை என்ற எண்ணம் தோன்றிவிடும். அதனால் சுட்டி காட்ட வேண்டியதாகிவிட்டது //

  அட‌ அட‌ அட‌ ம‌னித‌ருள் மாணிக்க‌ம‌ல்லோ நீர். இணைய‌த்தில் இருக்கும் ஆபாச‌த்திற்கு எதிராக‌ நீங்க‌ள் போராடுவ‌து இந்திய‌ பேர‌ண்ட‌த்திற்கு மிக‌ தேவையான‌து. இணைய‌ ஆபாச‌த்திற்கான‌ உங்க‌ளில் அடுத்த‌ போராட்ட‌ங்க‌ளை ஆவ‌லுட‌ல் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

  (Edited.)

 32. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
  #32

  முழுக்க முழுக்க சாருவின் பாணியில் அமைந்த ஒரு குறுநாவல் இந்தப் பதிவு. அவரை நன்கு வாசித்தவர்கள் மட்டுமே இப்படியெல்லாம் எழுத முடியும். எப்படியெல்லாம் யோசிக்கறாங்கய்யா.!!! அடக்கவே முடியாத சிரிப்பில் நான். நல்ல ரசிகர் இந்த சரவணகார்திகேயன்.

 33. sakthi
  #33

  அட்டகாசம்

 34. Magesh
  #34

  sooper appu!!!!

 35. malai da ....annamalai
  #35

  kanna,

  soopera ezhuthiruka…..charu voda adutha novelum ippadi thaan irukkum..he cant change. ellam mela irukuravan paathupaan.

 36. Nat
  #36

  எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்னா…கட்டிலுக்கு கீழ ஒருத்தன் இருக்காண்டா. அவனுக்கு பாதி பிரிச்சு கொடுங்கடா!…….

 37. Ravanan
  #37

  அந்த புத்தகத்த படிக்கிறதுக்கு முன்னால, நான் இந்த விமர்சனத்த படிச்சிருக்கலாம். என்னோட பணமும் நேரமும் மிச்சமயிருக்கும்

 38. அறிவன்
  #38

  அந்தக் கருமத்திற்கு விமர்சனம் ஒன்றை ஏன் எழுதி நேரத்தை விரயமாக்கினீர்கள் என்று தெரியவில்லை..

  ஆயினும் நேரம் செலவழித்து அந்தப் புத்தகத்தைப் படித்தேன்.

  எனக்கு ஆச்சரியமெல்லாம் பத்ரி எப்படிப் பணம் செலவழித்து அந்தப் புத்தகத்தை வெளியிடும் ப்ராஜக்டில் இறங்கினார் என்பதுதான்..ஆசிரியரால் ஏதாவது காரியம் ஆக வேண்டியிருந்திருக்குமோ என்ற அளவுக்கு யோசிக்க வைத்த கிழக்கு பதிப்பக வெளியீடு….

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: