போதி தருமரின் குறைப்பிரசவம் – உபயம்: முருகதாஸ் அன்கோ

போதி தர்மர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். குங்ஃபூ கலையையும் ஜென் பாரம்பரியத்தையும் ஆரம்பித்தவராக சீனர்களால் போற்றி வணங்கப்படுபவர். மருத்துவக் கலையிலும் சிறந்து விளங்கியிருக்கிறார். இவ்வளவு பெருமைக்கு உரியவர் ஒரு தமிழர். ஆனால், தமிழ் நாட்டில் அவரைப் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை என்ற விஷயம் இயக்குநரைச் சிந்திக்க வைத்திருக்கிறது. வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கப்படும் வெகு ஜன ஊடகம் ஒன்றில் இப்படியான அக்கறைகள் இடம்பெறுவது நல்ல பலனைத் தர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை வீணடித்திருக்கிறார்.

தமிழ் நாட்டை ஆண்ட மற்றவர்களால் தமிழனின் பெருமை நமக்குத் தெரியாமல் போய்விட்டது என்கிறார் இயக்குநர். விஷயம் என்னவென்றால், மற்றவர்கள் ஆண்டதால் ஏற்பட்ட இழப்பை விட நம்மை நாமே ஆண்டுகொண்டிருக்கும்போது ஏற்படும் அழிவுகள்தான் அதிகமாக இருக்கின்றன. மற்றவர்கள் ஆண்டபோது நம் சிற்பக் கலையில் ஆரம்பித்து எந்தப் பாரம்பரியக் கலையும் அழிந்துவிட்டிருக்கவிலை. நாம்தான் கோயில் சிற்பங்களை மணல் வீச்சு மூலமும் அரிய ஓவியங்களை வெள்ளை அடித்தும் அழித்து வருகிறோம். தாய் மொழிக் கல்வியை ஓரங்கட்டிவிட்டு ஆங்கிலத்தின் வால் பிடித்துக் கொண்டு நாம்தான் செல்கிறோம். சித்த மருத்துவத்தைப் புறக்கணித்துவிட்டு அலோபதிக்கு நாம்தான் அடிமையாக இருக்கிறோம். வேட்டி, சேலையைத் தூக்கி எறிந்துவிட்டு நம் தட்ப வெப்பத்துக்குப் பொருந்தாத ஆடையை அணிந்து கொண்டு நாம்தான் வலம் வருகிறோம். மற்றவர்களைப் பழிப்பதற்கு முன்னால் நாம் நம்மை விமர்சித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுதான் உண்மை.

இந்தியன்னா வெளிநாட்டுல மதிக்க மாட்டேங்கறான்… தமிழன்னா இந்தியால மதிக்க மாட்டேங்கறான் என்று ஒரு இடத்தில் வசனம் வருகிறது. ஆனால், தலித்துன்னா தமிழ் நாட்டுல கூட மதிக்க மாட்டேங்கறான் என்ற இன்னொரு உண்மையும் சொல்லப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

ஒரு நாட்டோட ஒன்பது நாடு மோதறது வீரம் இல்லை… அது துரோகம்… தமிழன் திருப்பி அடிக்கணும் என்று தூண்டிவிடுபவர் அந்த 9 நாடுகளில் தாய்த் தமிழகமும் ஒண்ணு என்று சுய விமர்சனத்தையும் சேர்த்து அல்லவா வைத்திருக்க வேண்டும். அல்லது இலங்கையில் அந்தப் படத்தை வெளியிடும்போது அந்த வீர வசனத்தை வெட்டி விட்டு வெளியிடுவதில் பச்சை துரோகமும் வர்த்தக தந்திரமும் மட்டும்தானே இருக்கிறது.

போதி தருமரின் வாழ்க்கை நிகழ்வுகளாகப் படத்தில் இடம்பெறும் வரலாற்றுக் காட்சிகளை முதலில் பார்ப்போம்.

தன் குருமாதாவின் உத்தரவுப்படி சீனாவுக்குச் சென்றிருக்கிறார். அவர் போன நேரத்தில் சீனாவில் மிகப் பெரிய நோய் ஒன்று தாக்கி ஒரு கிராமத்தில் இருக்கும் பலரும் செத்துவிழுகிறார்கள். போதி தர்மர் அந்த நோய்க்கு மருந்து தயாரித்து அவர்களைக் காப்பாற்றுகிறார். சீனா முழுவதும் அந்த நோய் பரவியிருந்ததால் பலர் வந்து அந்த மருத்துவத்தைக் கற்றுக்கொண்டு செல்கிறார்கள். அடுத்ததாக அந்த கிராமத்தினருக்கு ஒரு கொள்ளைக் கூட்டத்திடமிருந்து ஆபத்து வருகிறது. தனி ஆளாக போதிதருமர் நிஜமாகவே புழுதி பறக்க சண்டை போட்டு அவர்களைத் தோற்கடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், நோக்கு வர்மத்தின் மூலம் அந்தக் கொள்ளைக்காரர்களை வசியம் செய்து அவர்களைத் தமக்குள்ளாகவே அடித்துக் கொண்டு மடியும்படியும் செய்கிறார். பலவருடங்கள் கழிகின்றன. போதி தர்மர் தாய்நாடு திரும்ப விரும்புகிறார். அவருடைய உடல் தங்கள் நாட்டிலேயே புதைக்கப்பட்டால் நோய் நொடிகளில் இருந்து தங்கள் நாடு காப்பாற்றப்படும் என்று நினைத்து சீனர்கள் அவருக்கு விஷம் கலந்த உணவைத் தருகிறார்கள். உணவில் விஷம் கலந்திருப்பது தெரிந்த பிறகும் அதை புன்முறுவலுடன் எடுத்துச் சாப்பிட்டு உயிர் துறக்கிறார் போதிதருமர். இதுதான் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை.

போதி தருமரைப் பற்றி நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களில் எது உண்மை எது புனைவு என்று உறுதியாக எதுவும் சொல்லிவிடமுடியாது. அந்தவகையில் ஒருவர் தனக்கு உகந்த ஒரு கதையை உருவாக்கி முன் வைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அந்தக் கதையானது நம்பும்படி இருக்க வேண்டும்.

உதாரணமாக, போதி தர்மர் தமிழகத்தில் இருந்து சுமார் 17 வயதில் புறப்பட்டுப் போயிருக்கிறார். அப்போது அவர் எந்தப் புத்தகத்தையும் எழுதியிருக்கவில்லை. ஆனால், படத்தில் 17 வயதில் சீனாவுக்கு அவர் புறப்படும்போதே ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வதாகக் காட்டப்படுகிறது. அதிலும் அருங்காட்சியகத்தில் இருக்கும் அந்த அரிய புத்தகத்தை ஏதோ லெண்டிங் லைப்ரரியில் இருந்து எடுத்துச் செல்வதுபோல் கதாநாயகி ஜோல்னா பையில் போட்டு எடுத்துச் சென்று படித்துவிட்டுத் திருப்பிக் கொடுக்கிறார். அதில் ஜெனட்டிக் மெமரி பற்றியெல்லாம் எழுதப்பட்டிருப்பதாக அடித்துவிடுகிறார். சீனாவில் கொடிய நோய் ஏற்பட்டது போதிதருமருடைய குருவுக்குத் தெரிந்திருந்ததாகவும் அதைக் குணபடுத்தத்தான் அங்கு போனதாகவும் இஷ்டத்துக்கு ஒரு கதை புனைகிறார்.

அடுத்ததாக, போதி தருமர் போடும் சண்டை இருக்கிறதே… சந்திரமுகி படத்தின் அறிமுகக் காட்சியில் சூப்பர் ஸ்டார் காலாலேயே புயலை வரவைத்ததுபோல் போதிதருமர் இரண்டு கைகளிலும் தலா இரண்டு விரல்களால் ஒரு சுழற்று சுழற்றி மினி புயலை உருவாக்கி அதைக் குறிபார்த்து எதிரிகள் மீது ஏவியும்விடுகிறார். போதிதருமரை தமிழ்ப்பட ஹீரோ ரேஞ்சுக்கு கீழிறக்கியதைத்தான் உலகத் தமிழர்கள் நெஞ்சு நிமிர்த்திப் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டுமா? கைக்குக் கிடைக்கற கதாபாத்திரம் யாரா இருந்தா என்ன… கயிற்றைக் கட்டி சண்டை போட வைக்கத்தான் தெரியும் என்பதை ஊரறிய உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதை எப்படி ஒரு தமிழன் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும்?

போதி தருமர் குங்ஃபூவின் ஒரு வகையான ஷாவோலின் குங்ஃபூ என்ற தற்காப்புக் கலையை உருவாக்கியவராகச் சொல்லப்படுகிறார். அதாவது, ஷாவோலின் மடாலயத்தில் இருந்த துறவிகள் மிகக் கடுமையான விரதம், புலனடக்கம் போன்றவற்றால் உடலளவில் மிகவும் பலவீனமாக இருந்ததைப் பார்த்த போதிதருமர் அவர்களுக்கு உடலைப் பலப்படுத்த சில உடற்பயிற்சி வழிமுறைகளைக் கற்றுத் தந்திருக்கிறார். அதுவே பின்னாளில் குங்ஃபூ கலையாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அது யாரையும் கொல்வதற்காகப் பயன்படுத்தப்படுவது அல்ல. வர்மக் கலையில் கூட எதிரியின் உடலின் சில பாகங்களைச் செயல் இழக்க வைப்பதுதான் முக்கிய நோக்கமாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் போதிதருமர் நோக்கு வர்மத்தை பயன்படுத்தி எதிரிகள் பலரைக் கொல்லுகிறார். இது அகிம்சையை போதித்த புத்தரின் வழி வந்த போதி தருமருக்கும் எதிரானது… வர்மக் கலைக்கும் முரணானது.

இதைவிட அசட்டுத்தனம் என்னவென்றால் அந்த வர்மக் கலைக்கு ஒரு சில வரையறைகள் உண்டு. குறிப்பிட்ட தொலைவுக்குள் இருக்கும் ஒருவரின் கண்களைப் பார்த்துத்தான் வசியம் செய்ய முடியும். இந்தப் படத்தில் காட்டியிருப்பதுபோல் 50-60 அடி தொலைவில் இருப்பவர்களையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. அதுவும்போக, வசியம் செய்யப்பட்டவரை நாம் சொல்வது போல் நடக்க வைக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், நம் மனதுக்குள் என்ன இருக்கிறதோ அதையெல்லாம் செய்யும்படி வைக்க முடியாது. இதைச் செய் அதை செய் என்று உத்தரவு கொடுத்த பிறகுதான் அதைச் செய்வார். இந்தப் படத்திலோ கண்ணால் பார்த்தே எல்லாவற்றையும் செய்ய வைத்துவிடுகிறார்கள்.

அதிலும் வில்லன் இந்த வர்மக் கலையைப் படுத்தும் பாடு இருக்கிறதே சகிக்க முடியவில்லை. போலீஸ்காரரை துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொள்ளவைக்கிறார். சக போலீஸ்காரர்களைக் கொல்ல வைக்கிறார். ஆட்டோக்காரரைப் படு வேகமாக வாகனத்தை ஓட்ட வைக்கிறார். தெருவில் இருக்கும் அனைவரையும் தங்கள் கைவசம் இருக்கும் வாகனத்தை அதி வேகமாக ஓட்டிச் சென்று நாயக, நாயகியைக் கொல்ல முயற்சி செய்ய வைக்கிறார். இதாவது பரவாயில்லை… பல வருடக் கடின பயிற்சிக்குப் பின் கைவரக்கூடிய குங்ஃபூ கலையை ஒரு பெண்ணை அரை விநாடி உற்றுப் பார்ப்பதன் மூலமே கற்றுக் கொடுத்துவிடுகிறார். ரோட்டோரமாக பாவமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி அடுத்த விநாடியே பறந்து பறந்து சண்டை போட ஆரம்பித்துவிடுகிறார்.

இது சாத்தியமென்றால் பயோ வார் என்று கார்ப்பரேஷன் ஊழியர்போல் நாய்க்கு ஊசிபோடற வேலையில் எல்லாம் இறங்க வேண்டிய அவசியமே இல்லையே… இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரையும் உற்று உற்றுப் பார்த்தே இந்திய விரோதச் செயல்களில் ஈடுபட வைத்துவிடலாமே…

இது இப்படியென்றால், போதி தருமரின் மரணம் தொடர்பான காட்சிகள் அதைவிட மோசம். கிடைத்திருக்கும் ஆவணங்கள், புனைவுகளின் அடிப்படையில் அவர் மிகவும் முதியவரான பிறகுதான் மரணமடைந்திருக்கிறார். ஒரு சில ஆவணங்களில் 75 வயதில் இறந்ததாகவும் சிலவற்றில் 150 வயதில் இறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தில் ஒரு துளி சுருக்கம் கூட இல்லாமல், சுமார் 40-50 வயதில் இருக்கும்போதே இறந்ததுபோல் காட்டியிருக்கிறார்கள். சரி அதாவது பரவாயில்லை பிரம்மச்சரியம், சைவ உணவு, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றால் இளமையாகவே இருந்திருந்திருப்பார் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அவருடைய மரணத்துக்கு முருகதாஸ் அன்கோ யோசித்திருக்கும் காரணம் இருக்கிறதே… சகிக்கவில்லை.

போதி தருமர் தாய் நாட்டுக்குத் திரும்ப விரும்புகிறாராம். அவருடைய மரணம் சீனாவில் நடந்து, உடல் அங்கேயே புதைக்கப்பட்டால், சீனா நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெற முடியும் என்று சீனர்கள் நம்புகிறார்களாம். அதனால் அவருடைய சாப்பாட்டில் விஷத்தைக் கலந்து கொடுத்துவிடுகிறார்களாம். அவர்கள் கொடுத்த சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பது தெரிந்தும் அன்பே உருவான போதி தருமர் புன்முறுவலுடன் அதைச் சாப்பிட்டு அவர்கள் விருப்பப்படியே உயிர் துறக்கிறாராம். என்ன இழவு காரணம் இது… ஒரு துறவி தங்களுடைய ஊரிலேயே சமாதி அடைய வேண்டும் என்று ஒரு சமூகத்தினர் விரும்புகிறார்கள் என்றால் அவர்கள் இப்படியா செய்வார்கள்? விஷம் கொடுத்தாலும் அதை புன்முறுவலுடன் சாப்பிடும் ஒருவரை ஊருக்குப் போகவேண்டாம்; இங்கேயே உயிர் பிரியும் வரை வாழுங்கள் என்று சொன்னால் கேட்கமாட்டாரா?

விஷயம் என்னவென்றால், உண்மைக் கதை கொஞ்சம் விபரீதமானது. போதி தருமர் தனது வாரிசாக ஒருவரை நியமிக்கிறார். அது பிற சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. அதிகாரப் போட்டியில் போதிதருமருக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி செய்கிறார்கள். இதை அறிந்து வேதனைப்படும் போதி தருமர், சீடர்கள் தரும் விஷத்தை மிகுந்த வேதனையுடன் உண்டு உயிர் துறக்கிறார். இது அவருடைய மரணம் பற்றிச் சொல்லப்படும் ஒரு கதை. இன்னொரு கதையில் அவர் ஒரு கூட்டுக் கொலை ஒன்றில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தெளிவான வரலாறு இல்லாத நிலையில் ஒரு நிகழ்வை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். நடந்த ஒரு நிகழ்வுக்கு மறு வாசிப்பு கொடுப்பதும் நியாயமான ஒரு செயல்தான். ஆனால், அந்தப் புதிய கோணம் வலுவானதாக இருக்க வேண்டும். நம் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். முட்டாள்தனத்தை முன்வைப்பதாக இருக்கக்கூடாது.

அடுத்ததாக விஞ்ஞானக் காட்சிகள்…மரபணுவில் பெரிய கண்கள், சிவந்த தேகம், சுருள் சுருளான முடி என ஒரு மனிதரின் உடல் கூறு அம்சங்கள்தான் பதிவாகி இருக்கும். எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் திறன் ஒருவருக்கு இருந்தால் அதுவும் மரபணு வழியாக கைமாற்றித் தரப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஒருவர் கற்றுக்கொண்டதால் கிடைத்த அறிவை அந்த வம்சாவளியில் வந்த இன்னொருவருக்கு அப்படியே பரிமாற்றித் தருவது மிகவும் சிரமம். நான்கு வயதுக் குழந்தை சற்றும் சம்பந்தமில்லாத ஒரு மொழியைத் தெளிவாகப் பேசுகிறது… முன் பின் பார்த்திராத ஒரு இடத்தைப் பற்றிய தகவல்களை ஒருவர் துல்லியமாகச் சொல்கிறார் என என்னதான் பூர்வ ஜென்ம வாசனை தொடர்பாக பல கற்பனைக் கதைகள் உலவுகின்றன என்றாலும் நவீன விஞ்ஞானம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. படத்தில் வரும் இளம் பெண் விஞ்ஞானி, பூர்வ ஜென்ம வாசனையை ஜெனட்டிக் மெமரி என்று நவீன வார்த்தைகளில் முன்வைக்கிறார்.

அதிலும் மரபணுவில் மறைந்து கிடக்கும் திறமைகளை பன்னிரண்டே நாட்களில் வெய்யில் படாமல் சிகிச்சை செய்து தூண்டிவிடுவது என்பது விஞ்ஞானத்தின் அடிப்படையான பகுத்தறிவுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு ஊசியைப் போட்டு உடம்பெல்லாம் ஒயரைச் சொருகி வைத்து தண்ணிக்குள் தொங்கவிட்டால் மரபணு சிலிர்த்துக் கொண்டு எழுந்துவிடும் என்று விஞ்ஞான புருடாவிட நிஜமாகவே நிறைய தில் வேண்டும்.

அதிலும் 12 நாட்கள் வரை வெய்யிலே படக்கூடாது என்பதையும் மீறி தமிழ் கதாநாயகன் என்பதால் 11வது நாளிலேயே மரபணு தூண்டப்பட்டுவிடுகிறதாம். இவ்வளவு அசாதாரண ஆராய்ச்சியை சென்னைக்குள் யாருக்கும் தெரியாத காட்டுக்கு நடுவில் இருக்கும் ஓர் சோதனைச்சாலையில் சர்வ சாதாரணமாகச் செய்கிறார்களாம்.

அப்பறம் போதி தருமரின் வம்சாவளிகள் தொடர்பான ஆராய்ச்சியை இளம் பெண் விஞ்ஞானி ஒன்றரை வருடத்துக்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்டாராம். ஆனால், போதி தருமரின் டி.என்.ஏ. பெருமளவுக்கு ஒத்துப்போகும் நாயகனிடம் மட்டும் அதுபற்றி எதுவுமே சொல்லாமல் சுற்றிச் சுற்றி வருகிறாராம். என்ன எழவுக்கு? கதாநாயகனின் குடும்பத்தினரிடம் சொன்னதுபோல் அவனிடமும் விஷயத்தைச் சொல்லிப்புரிய வைத்திருந்தால் உடனே ஆராய்ச்சிக்கு சம்மதித்திருப்பானே… போதி தருமரை உயிர்ப்பிக்க ஆப்பரேஷன் ரெட் என்ற ஒன்று நடக்கும்வரை ஒன்றரை வருடம் காத்திருக்கத் தேவையே இல்லையே… மளமளவென வேலைகளைச் செய்து முடித்திருக்க வேண்டாமா? அதுவும் சென்னையில் ஐ.ஐ.டி. கேம்பஸில் யாருடைய உதவியும் இல்லாமல் 12 நாட்களில் அந்த ஆராய்ச்சியைச் செய்ய முடியுமென்றால் எதற்காக ஒவ்வொரு அரசாங்கத்துக்காக பேப்பர் அனுப்பி அனுமதிக்குக் காத்திருக்க வேண்டும்? நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்லையே மேடம்.

அப்பறம் வில்லனுக்கு உதவும் தமிழக விஞ்ஞானி மிகவும் ரகசியமான மின்னஞ்சல்களையெல்லாம் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் தன் கம்ப்யூட்டரில் வைத்திருப்பாராம். பாஸ்வேர்டை ஒவ்வொரு தடவையும் அடிக்கச் சோம்பல்பட்டு பலர் அப்படிச் செய்வது உண்டு. ஆனால், அதி ரகசியங்கள் உள்ள இ.மெயில் அக்கவுண்ட்டை அப்படித் திறந்து போடமாட்டார்கள். சீன அரசு 300 கோடி ரூபாய் தந்த விவரத்தை மெயிலில் தெரிவிக்கிறார்களாம். அதை அவர் அப்படியே மின்னஞ்சலில் பத்திரமாக வைத்திருக்கிறாராம். இப்படிப்பட்ட ஆளை வெச்சுக்கிட்டா இந்தியாவையே அழிக்கப்போறாங்க? அந்த பேராசிரியர் வில்லனோட ஆளுன்னு தெரிஞ்சதும் கதாநாயகன் நாலு தட்டு தட்டினாரு. உண்மையையெல்லாம் தெரிஞ்சிடுச்சுன்னு கதையைக் கொண்டு போயிருந்தாலே போதுமே… எதுக்கு இந்த மெனக்கெடல்கள் எல்லாம்.

நான் எழுதினால் திரைக்கதையை நிச்சயம் வேறுவிதமாகத்தான் எழுதுவேன். அதை வேண்டுபவர்கள் சுயவிலாசமிட்ட தபால் தலையுடன் ஒரு கனமான கவரை அனுப்பி வைக்கவும்.

0

– மகாதேவன்

29 comments so far

 1. புலவர் தருமி
  #1

  அருமையான விமர்ச்சனம். எழுத்து நடையும் நன்றாக இருந்தது.

 2. Ramesh
  #2

  Mr. Mahadevan, you never know about Bodhi dharma before this movie… First you should be proud that Murugadas n Co brought him into light now. He tried to bring a talented unknown tamil prince to us.. U should appreciate him.. one cant take a film without flaws.. So some flaws are there.. Instead of request to correct, u r telling u can write a good screen play.. If you can, can u make a film like this… Summma scene pottutu.. Go n watch velayudham… u ll die for sure….

  (Edited.)

 3. suresh
  #3

  We never know about Bodhidharama before this movie.So we all should appriociare Murugadas and surya for having done a great job. Its nothing wrong to add some extra comericial element to spice up the movie(like bodhidhramas fight or his book or hipnotisam).
  Otheriwse it would become Documenentry movie.
  Ok tell honenstly how many of us did really watched “Ambethkar” movie. it was really good movie without any exaggreations right..? why did it fail

  Etha eduthalum kora solrathu ippa oru fashion ageruchu..
  ithuku munnadi yaravathu bodhidharamara pathi kavalapatengala..
  ipde kora sonna vara yarume puthusa try panna matanga..
  valkalm pola formula padathey pathutu iruka vendiyathuthan..

  Namma budhaa pathe avaru ethukum asaipadakodathu nu avaru asaipattrunu kora solra alunga ache..

 4. Goldfish
  #4

  I like Mr Ramesh’s comment

 5. Vanavasi
  #5

  I completely agree with Ramesh and Suresh.

 6. kalees
  #6

  Yes. There are many flaws in the movie & also they could have done better with this cast,crew & producer. but this article completely blames the attempt. It’s just a fiction with Bhodidarma as base.

 7. கமலா சந்திரமணீ
  #7

  மிகச் சிறப்பான,நகைச்சுவை உணர்வுடன் கூடிய விமர்சனம்.நன்றாயிருக்கிறது.

 8. Mangudi Minor
  #8

  பாட்டுக்கு பேர் வாங்கும் புலவர்கள் இருக்கின்றார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கின்றார்கள். இதில் நீர் எந்த ரகத்தை சேர்ந்தவர் என்று புரிகிறது. (புலவர் தருமிக்கும் தெரியும்). ஒரு வெள்ளை தாளில் கரும்புள்ளி வைத்து “என்ன தெரிகிறது” என்று கேட்டால், கரும்புள்ளி தெரிகிறது என்று சொல்லுவது போல் உள்ளது. எந்த ஒரு பொருளை உருவாக்குவது கடினம். அதில் உள்ள குறைகளை கூறி அதை மட்டம் தட்டுவது மனிதனின் சுபாவம் மட்டுமல்ல சுலபமும் கூட. உலகம் உருண்டை என்று கூறியவர்களையே, முட்டாள் என்று கூறிய உலகம் இது. இவ்வளவு பெரிய விமர்சனதை எழுதுவதற்கு ஒரு நான்கைந்து முறை பார்த்திருப்பார் போல.. (நெட்டில்தான் வந்து விட்டதே). நல்ல விஷயங்கள் (தெரியாத விஷயங்கள் கூட) மருந்துக்கும் இல்லாதது போல, குறைகளாக பார்த்து பொறுக்கி எடுத்து எழுதி உள்ளார். காய்ந்த மரம் தானே கல்லடி படும் என்பது இவரது விமர்சனதை பார்க்கும் போது தெரிகிறது. உங்களின் சுய விலாசமிட்ட அஞ்சல் அட்டையை ஹாலிவூட் உள்ள எதாவது ஒரு நல்ல டைரக்டரிடம் அனுப்பி வையுங்கள்

 9. பாதி தர்மன்
  #9

  ஐயா..

  ’போதி தர்மர்’ என்பவர் தமிழர் என்பதற்கோ, பல்லவ மன்னர் என்பதற்கோ ஏதாவது இலக்கிய, வரலாற்று ரீதியான ஆதாரம் உள்ளதா?

  ’களரி’ போன்றவை கேரளாவின் பாரம்பரியமான கலைகள் ஆயிற்றே. அதை சீனாவுக்குப் போய் இந்தத் தமிழர் கற்றுக் கொடுத்தாராமா?

  ‘நோக்கு வர்மம்’ என்றால் என்ன என்ற அடிப்படை கூடப் புரியமால ’கன்னா பின்னா’வென்று படமாக்கியுள்ளனர். இந்தப் படம் ஒரு அபத்தம்.

  ’தமிழனை முட்டாள்’ என்று மீண்டும் நிரூபிக்க வந்திருக்கும் படம்.

 10. ramasamy
  #10

  கோவில்களில் காணபடும் யாளிகளை மையமாக வைத்து, யாளி என்னும் தலைப்பில் சுவைபட ஒரு நாவல் எழுதியுள்ளார். எந்த முகவரிக்குப் புத்தகத்தை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தால் அனுப்புவிக்கச் செய்கின்றேன். நீங்கள் திரைக்கதை வசனம் எழுதித் தாருங்கள். சினிமா ஆசையும் இருக்கின்றது. யாருடைய கடைக்கண் பார்வையாவது கிடைத்தால் அனகொண்டா, ஜூராசிபார்க் போன்ற பிரம்மாண்டமான படங்களாக எடுக்கலாம். அவரது முகவரி:-மணி தணிகை குமார், கற்பகா இண்டஸ்டிரீஸ், 41-45, சிவானந்த நிலையம், பல்கினாதன் விளை, ஈதாமொழி, கன்யாகுமரி மாவட்டம்-629 501 தொடர்பு எண் 9443177764 330 பக்கங்கள் அட்டகாசமான வடிவமைப்பு.

 11. காடவர்கோன்
  #11

  அட கூகைங்களா ….. பல்லவங்க வடமொழியான சமஸ்கிருதத்தை பேராதரவு கொடுத்து ஆராதனை செய்தவர்கள் …. தலைநகர் காஞ்சிபுரம் ஊரு பேரே வடமொழி ,, மன்னர்கள் பெயர் சிம்மவிஷ்ணு, மஹேந்திரவர்மன், நரசிம்மவர்மன் …. எல்லாம் வடமொழி …. போதிதர்மன் என்பதே வடமொழிப்பெயர் ….. பெளத்தம் பேசியதே பாலி, மைதிலி என்ற வடமொழிகள் ….. மட்டவிலாசப்ரஹசனம் போன்ற வடமொழி நூல்கள் எழுதியவர்கள் பல்லவர்கள் …. இதுல எங்கய்யா போதிதர்மன், ஏழாம் அறிவுன்னு தமிழ், தமிழன்னு பெருமை ????

 12. Sriram
  #12

  இது என்ன அரசியல் கட்டுரையா, வரலாற்று கட்டுரையா, இல்லை சினிமா விமர்சனமா? சினிமா விமர்சனம் செய்யும் போது சினிமா விமர்சனம் மட்டும் செய்யுங்கள். இதில் எதற்கு இந்தியன், தமிழன், தலித்து, இலங்கை என்று குழப்புகிறீர்கள்.

 13. Prathipalipaan
  #13

  என்ன அருமையான விமர்சனம். என்னுமோ பாவம் அவர்களுக்கு பயம் எங்க போட்ட பணம் வீணாகிடுமோ என்று.

  நீங்கள் அந்த படத்தை தயாரிப்பதாக இருந்தால் வேண்டுமானால் இயக்குனரிடம் பேசி இரண்டாம் பாகம் நீங்கள் எழுதி கொடுக்கும் திரைகதையை படமாக்கச் சொல்லலாம்.

  என்ன நீங்க தயாரிப்பதற்கு தயாராக இருக்குறீர்களா?

 14. Arun Radhakrishnan
  #14

  “தலித்துன்னா தமிழ் நாட்டுல கூட மதிக்க மாட்டேங்கறான் என்ற இன்னொரு உண்மையும் சொல்லப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.”

  வாதத்திற்கு வேண்டுமானால் இவ்வாறு கூறலாம் அனால் உண்மை நிலவரம் வேறு.

  யார் மனதையும் காயபடுத்துவது என்னுடைய நோக்கமல்ல.

  வாய்ப்பு கிடைத்தால் மத்திய அல்லது மாநில அரசாங்க அலுவலகம் சென்று பாருங்கள் நண்பரே உண்மை நிலவரம் என்னவென்று புரியும்.

  சில பல விழா காலங்களில் வெளியில் செல்லவே பயமாய் இருக்கிறது….

 15. KAMARAJ
  #15

  இது ஒரு தமிழ் படம்.

 16. Arun Nishore
  #16

  படத்தை போலவே உள்ளது அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்களும்

 17. bganesh55
  #17

  நான் பார்த்த அளவில் இப்படத்திற்கு ஆகச்சிறந்த விமர்சனம் தங்களுடையதுதான். அருமை. காடவர்கோன் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.

 18. elayaraja
  #18

  உங்களோட குறிக்கோள் தான் என்னனு புரியல.

  இங்க என்னோட கருத்துக்களை சொல்றேன், நீங்க இத அனுமதிப்பிங்கலானு தெரியல.

  முருகதாஸ் எப்ப இந்த படம் ,போதி தர்மரோட வரலாற்று குறிப்புன்னு சொன்னாரு.

  அவரோட எதிர்பார்ப்பு.
  போதி தர்மரோட வரலாறு பல பேரு தெரியாம இருக்காங்க, அவங்களுக்கு தெரிய படுத்தனும்.
  தமிழன் எப்படி இருந்தவன்னு மத்தவங்களுக்கு புரிய வைக்கணும்.
  தமிழனுக்கு இருக்கற தாழ்வு மனப்பான்மைய தூக்கி எறியணும்.

  அதே நேரத்துல தயாரிப்பளருக்கு நட்டம் வராம தன்னோட கருத்தையும் சொல்லணும்.
  இத போல ஒருவரோட வரலாற்று குறிப்பா எடுக்க நீங்க பணம் குடுப்பிங்களா.

  நீங்க இன்னும் ஒரு முறை படம் பார்த்து, இதுல எது போதி தர்மரோட வரலாறு, எது முருக தாஸ் கதை அப்படின்னு கண்டு பிடிங்க , உங்களோட விமர்சனத்துல தெரிந்தது எல்லாம் உங்களோட அறியாமை, திறமையின்மை. அது தான் முருக தாஸ் வெற்றி.

  http://www.usashaolintemple.org/chanbuddhism-history/
  இந்த வெப்சைட் உங்களுக்கு கொஞ்சம் விபரங்களை தரலாம்.

  இன்னும் மேல தெரியணும்னா , google search உபயோக படுத்துங்க.

 19. jeyakumar
  #19

  dear madhaven,
  Your news also wrong.Only,protein struture only view by xray crystallography..for reading DNA ,DNA sequenser is there…

 20. Saravanan
  #20

  மகாதேவன்,
  ஒரு மேதாவி மாதிரி விமர்சனம் எழுதிருக்கீங்க முதலில் நீங்க யாருன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா ? அப்படியே உங்க முகவரி கொஞ்சம் கொடுதீங்க்னா, நான் என் சுய விலாசமிட்ட தபால் தலையுடன் ஒரு கனமான (பயப்படதீங்க கல் வச்சு அனுப்ப மாட்டேன்) தபால் உறையை அனுப்பி வைப்பேன்.

 21. hindu
  #21

  வர்மக் கலையைப் பற்றி முருக தாசிற்கு தெரியவில்லை என்று வருத்தப் படும் அறிவு ஜீவியே.. தங்களுக்கு என்ன தெரியும்… நீங்கள் சொன்னபடி வர்மம் ஏதோ தாக்கி உடல் உறுப்புகளை செயலிழக்க வைக்கும் கலை மட்டுமல்ல… அது ஒரு பிரதான மருத்துவ முறையாகும்… கோவையில் கலைகளின் ஆய்வு நிறுவனத்தில் சென்று களரி என்றால் என்ன, வர்மம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுதல் நலம்…

  படத்தில் எங்காவது சாதியைப் பற்றி பேசுகிறார்களா? நீங்கள் எதற்கு தேவை இல்லாமல் அந்த வசனத்தில் இந்த வரி இல்லை என்று கோபப் படுகிறீர்கள்… உங்கள் நோக்கம் என்ன?

  படம் குறைப் பிரசவம் என்றால் விமர்சனம் மட்டும் என்ன…

  சமீப கால படங்களில் குத்துப் பாட்டு இல்லாமல், ரியாலிட்டி என்று அறுவையை போடாமல், நெளிய வைக்கும் காட்சிகள் ஒன்று கூட இல்லாமல், கதை இருக்கும் படம் இது ஒன்று தான். படம் முழுக்க புகை மூட்டமாக சிகரெட் ஊதும் ஹீரோ… அனைத்து ரௌடிகளையும் ஒரே நாயகன் கொல்லும் படம் இதையெல்லாம் ஏற்கலாம், நம்பலாம்… அப்படித் தானே?

  இதை விட சிறந்த திரைக் கதை எழுதும் வல்லமை கொண்டதாக சொல்லிக் கொல்லும் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது…
  எந்த குறையும் இன்றி…?

 22. mahadevan
  #22

  விமர்சனம் தன்னளவில் முழுமையான ஒரு கலை வடிவம். விமர்சனம் செய்யும் ஒருவரிடம் போய் நீ உருப்படியாக எழுதிக்காட்டு என்று சொல்வது சரியல்ல. அவர் சொன்ன விமர்சனம் எந்த அளவுக்குச் சரி… தவறு என்று பார்ப்பதுதான் நல்லது. சாப்பாடு சரியாக இல்லை என்று ஒருவர் சொல்லவேண்டுமானால் ருசியுணர்வு மிகுந்த நாக்கு இருந்தால் போதும்; சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரிடம் போய் காயையும், அரிசியையும், உப்பையும் புளியையும் கொடுத்து, கொய்யாலா… சமைச்சுக் காட்டுடா என்று சொல்வது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.
  ஆனால், அப்படிச் சொல்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒரு பதிலும் உண்டு. என்னைப் படமெடுக்கச் சொல்றயா… அப்ப அதுக்கான காசைக் கொடு. எடுத்துக் காட்டறேன்.
  பொதுவாக, எனது விமர்சனத்தில் நான் வெறுமனே இது குறை… அது தப்பு என்று மட்டுமே சொல்வதில்லை. மாற்று காட்சிகளையும் எழுதுவது வழக்கம். என் பிளாக் முகவரி இது. mahadevanbr.blogspot.com அதில் எழுதப்பட்டிருப்பவற்றையும் படித்துப் பார்த்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள்.
  திரைக்கதைக் குறிப்புகளை மட்டுமே அதில் எழுதியிருக்கிறேன். ஏனென்றால், எந்தப் பெரிய திரைப்பட மேதையின் திரைக்கதையை எடுத்துப் படித்தாலும் சுவாரசியமற்றுத்தான் இருக்கும். ஒரு படத்தைப் படமாகப் பார்த்தால்தான் நன்றாக இருக்கும். மை நேம் ஈஸ் மேக்சிமஸ் டெசிமஸ் மெரிடியஸ் என்று கிளாடியேட்டரில் ரஸ்ஸல் க்ரோ இரும்புத்தலைக் கவசத்தைக் கழட்டிவிட்டுப் பேசும் காட்சியை முழு அளவில் ரசிக்க வேண்டுமானால், அந்தப் படத்தைப் பார்த்தால்தான் சாத்தியம். வெறுமனே வெள்ளைத் தாளில் மேக்ஸிமஸ் கவசத்தைக் கழட்டுகிறார். திரும்பிப் பார்க்கிறார். என் பெயர் மேக்சிமஸ் டெசிமஸ் மெரிடியஸ் என்கிறார் என்று எழுதினால் அந்த இம்பேக்ட் கிடைக்காது. அதிலும் ஃபேட் இன், ஃபெட் அவுட், லாங் ஷாட், க்ளோசப் ஷாட், எக்ஸ்டீரியர், இண்டீரியர் என்றெல்லாம் டெக்னிக்கல் வார்த்தைகள் போட்டு எழுதப்படும் ஸ்கிரிப்டை இரண்டு பக்கத்துக்கு மேல் ஒருவரால் படிக்க முடியாது. ஏனென்றால், திரைக்கதை என்பது அடிப்படையான ஒரு மூலப் பொருள்தான். பல்வேறு கலைகள் ஒன்று கூடி உருவாகும் திரைப்படத்தின் முழு தாக்கமும் கிடைக்க வேண்டுமானால், படமாகப் பார்த்தால்தான் முடியும். எனவே, என் திரைக்கதைத் தொடரில் திரைப்படத்துக்கான குறிப்புகளை மட்டுமே கொடுத்திருக்கிறேன்.

 23. வெங்கட்ராமன்
  #23

  அண்ணாச்சி! படத்த படமா மட்டும் பாருங்க. ஜாதிய எல்லாம் ஏன் இழுக்குறீங்க? இவ்வளவு நாளா நமக்கே தெரியாம இருந்த தமிழர் ஒருவரை அடையாளம் காமிச்சதுக்கு முருகதாசுக்கு நன்றி சொல்வீங்களா… அதை விட்டுட்டு எனென்னவோ எழுதிட்டீங்களே..

 24. Dr.P. SAravanan
  #24

  நண்பரே! தமிழ்ப்படங்களை சீரியஸாகப் பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்த்தால் நமக்குத்தான் மனக்கவலை ஏற்படும். நான் தமிழ்ப்படங்களைப் பார்த்துப் பலஆண்டுகளாகின்றன. அவற்றைப்பார்க்கும் மனத்திடம் எனக்கில்லை. உலக அளவில் பலருக்கும் அப்படித்தான் என் நம்புகின்றேன்.வரலாற்றுப் புரிதல்கள் தமிழர்களுக்கு மிக்குறைவு. தமிழன் எவற்றையும் நம்புவான். அதுதான் அவனது பலவீனம். தங்களின் கறாரான விமர்சனம் எனக்குப் பிடித்திருக்கின்றது.

 25. rasigan
  #25

  நான் எழுதினால் திரைக்கதையை நிச்சயம் வேறுவிதமாகத்தான் எழுதுவேன். அதை வேண்டுபவர்கள் சுயவிலாசமிட்ட தபால் தலையுடன் ஒரு கனமான கவரை அனுப்பி வைக்கவும்.

  0

  – மகாதேவன்

  // athu sari yevan padikkurathu…

  (Edited.)

 26. சேகர் திருப்பூர்
  #26

  ஆகா… நான் இந்த படத்தை இப்போதுதான் பார்த்தேன் (பேருந்தில்). இந்த 7 – 8 மாச கேப்புல இங்க இம்புட்டு சண்டை நடந்திருக்குதே. அது சரி நீங்க எல்லோருமா சேர்ந்து (தமிழர்களுக்கு) என்ன சொல்ல வர்ரீங்க. சீக்கிரம் முடிவை சொல்லுங்க

 27. vendhan
  #27

  Mr.mahadeven sir, i agree with ur comments. But before this movie we know nothing about BODHIDHARMA… u can pin point thier mistakes at the same time u must also apprciate them for thier valuable work… really they had done a great job… sir u must know one thing nobody will accept everything that is shown in the movie. That will just provoke them to know more about bodhidharma and if they want to know much about that great person they can read about him in net or any books sir… also sorry sir i am telling anything wrong. i am telling just the truth…

 28. muthu
  #28

  ehtha seyalayum parati palakunnga

 29. Durga
  #29

  Ungalukku theriyalanna oru vishayam illanu aagathu, tamil maruththuvaththai puriya vaikkavavathu muyarchi pannirkanga. No comments…

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: