லாபம் என்றால் சுரண்டலா?

லாபம் என்றால் சுரண்டல் என்றுதான் இன்று பலரும் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஒரு நிறுவனம் நேர்மையான முறையில் லாபம் சம்பாதிப்பது சாத்தியமல்ல என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய புத்தகம் டாஸ் கேபிடல்.

கம்யூனிசத்தின் பைபிளாகக் கருதப்படும் டாஸ் கேபிடல், லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பின் ‘உபரி மதிப்பினால்’ மட்டுமே உருவாகிறது என்று வாதிடுகிறது. அதாவது தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் அல்லது கூலி என்பது அவர்கள் உயிர்வாழத் தேவையான அடிப்படை அளவிலேயே (subsistence level) நிர்ணயிக்கப்பட்டு, அவர்களுடைய உழைப்பின் ‘உபரி மதிப்பை’த்தான் முதலாளிகள் ‘சுரண்டி’ லாபமாக எடுக்கின்றனர் என்பதே மார்க்சியம் முன்மொழியும் வாதம். லாபம் என்பதற்கு வேறு எந்த அடிப்படையும் இல்லை என்பதும் அனுமானம்.

இந்த ‘சுரண்டல்’ என்ற கருத்தாக்கம், அதன்பின் பொதுபுத்தியில் ஏற்றப்பட்டு, கடந்த 150 வருடங்களாக மாபெரும் தாக்கத்தை உலக வரலாற்றில் ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவுக்கு பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய கருத்து வேறு எதுவும் இருக்க முடியாது. சுரண்டலை ஒழிக்கவும், வர்க்க எதிரிகளை அழிக்கவும், செம்புரட்சியை உலகெங்கும் உருவாக்கி, ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டவும், அதன் மூலம் சோஷலிச அரசையும், பிறகு படிப்படியாக தூய கம்யூனிச அரசையும் உருவாக்குவதை லட்சியமாகக் கொண்ட பயணத்துக்குமான inspiration இந்த ‘சுரண்டல்’ என்ற கருத்தாக்கம்தான்.அது இன்றுவரை தொடர்கிறது.

இந்த சுரண்டல் என்ற கருத்தாக்கம் தவறாது, அறிவியல்பூர்வமற்றது. உபரிமதிப்புதான் லாபமாக மாறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த ‘உபரி மதிப்பு’ யாரால் உருவாக்கப்படுகிறது எனபதில்தான் பிரச்னை இருக்கிறது. தொழில்முனைவோர்களின் உழைப்பு, ஊக்கம், நிர்வாக மேலாண்மை, திறமை போன்ற விஷயங்கள்தான் உபரி மதிப்பை உருவாக்குகிறது என்பதே சரியாகும். பல நாடுகளில், ஒரே அளவு உழைப்பைச் செலுத்தும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கூலி வேறுபட்ட அளவுகளில் உள்ளது. அவர்கள் வாழ்க்கை தரமும் மாறுபடுகிறது.

டாஸ் கேபிடலில் மார்க்ஸ் மேலும் சில முக்கிய அனுமானங்களை முன் வைக்கிறார். ஒரு நாட்டில், படிப்படியாக நிகர உபரி மதிப்பு குறைந்துகொண்டே போகும். Labour saving machineகளை படிப்படியாக முதலாளிகள் அறிமுகப்படுத்தி, அதன் மூலம் தொழிலாளர்களின் நிகர பங்களிப்பைக் குறைக்க முயல்வர். ஆனால், உபரி மதிப்பு மற்றும் லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பினால் ’மட்டும்’ (repeat மட்டும்) உருவாகும் என்ற கருத்தாக்கத்தின்படி, நிகர உபரி மதிப்பும் லாபங்களும் படிப்படியாக குறைந்துகொண்டே போகும். இது பொருளாதார மந்தங்களை ஏற்படுத்தி, பெரும் சிக்கல்களை உருவாக்கும். Business cycles அடுத்தடுத்து உருவாகும். பொருளாதார மந்தங்களின்போது சிறு நிறுவனங்கள் அழிந்து, அவற்றைப் பெரும் நிறுவனங்கள் விழுங்கி ஏப்பம்விடும். ஒவ்வொரு மந்தமும், அதற்கு முன்பு உருவான மந்தத்தைவிட மோசமாகவே இருக்கும். தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் படிப்படியாக சீரழியும். ஒரு கட்டத்தில் இறுதிப் பேரழிவு உண்டாகி, மொத்த முதலாளித்துவ அமைப்பே தகர்ந்துவிடும். பிறகு, சோஷலிச அமைப்பு இயல்பாகவே உண்டாகும். சுருக்கமாக, இதுதான் டாஸ் கேபிடல் தரும் அனுமானம்.

ஆனால், கடந்த 150 ஆண்டுகால வரலாறு இதை பொய்பிக்கிறது. உலகின் மொத்த உபரி மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துகொண்டேதான் செல்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸ் ஐரோப்பாவில் கண்ட தொழிலாளர்களின் நிலை மிகக் கொடுமையானதாக இருந்தது. Sweat shops என்கிற நிலை. 12 மணி நேர ஷிஃப்டுகள், சொற்பக் கூலி, கொடுமையான பணிச்சூழல், குழந்தை தொழிலாளர்கள்; இவை யாவும் படிப்படியாக மாறி, தொழிலாளர்களின் நிலை அங்கு பெரும் உயர்வையே அடைந்தது. இதற்கு, ‘காலனி ஆதிக்க ஏகாதிபத்தியத்தின்’ மூலம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சுரண்டியதால்தான் சாத்தியமானது என்று ஒரு விளக்கத்தை காம்ரேடுகள் வைப்பர். ஆனால், அது மிகத் தவறனாது. காலனியாதிக்கத்தில் ஈடுபடாத பல நாடுகளிலும் இதே முன்னேற்றம் உருவானது. மேலும், காலனியாதிக்கம் இரண்டாம் உலகப்போருக்கு பின் படிப்படியாக அழிந்தது. அதன் பின்தான் உலகெங்கிலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தில் நிஜ முன்னேற்றம். முக்கியமாக வளர்ந்த நாடுகளில்.

மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. வாங்குபவருக்குப் பயன் இல்லாவிட்டால், பெரும் உழைப்பில் உருவான எந்தப் பொருளுக்கும் மதிப்போ, தேவையோ இருக்காது. உதாரணமாக, பாலைவனத்தில் சிக்கி, குடிநீருக்கு ஏங்குபவருக்கு ஒரு மர மேசை தேவைப்படாது, பயன்படாது. அந்த மேசையை ஒரு தொழிலாளி எத்தனை பாடுபட்டு, உழைத்து உருவாக்கியிருந்தாலும், அங்கு அதற்கு மதிப்பில்லை, தேவையில்லை. அதேபோல்தான் அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குமான மதிப்பு. ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே என்பது மார்க்சிய கருத்து.

உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த ‘உபரியை’ ‘சுரண்டி’ லாபமாக மாற்றுகிறார் ஒரு முதலாளி (இந்தச் சொல் எமக்கு ஏற்புடையதாக இல்லை. வில்லத்தனமான அர்த்தம் இதற்கு, பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டுள்ளதால், ‘தொழில் முனைவோன்’ என்ற சொல்லே சரியானது.) இந்த லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பு என்கிறது மார்க்சியம். சில கேள்விகள்:

1.தொழில்முனைவோரின் ‘உபரி மதிப்பு’ என்ன? ஒரு நிறுவனத்தைக் கட்டமைக்க, நிர்வாக மற்றும் மேலான்மைத் திறன்கள் மிக மிகத் தேவை. ரிஸ்க் எடுக்கும் திறன், புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் திறன், புதுமையான சிந்தனை, தலைமைப் பண்புகள், தகவல் பரிமாற்றத் திறன் ஆகியவை அவசியம்.இவை இல்லாமல் தொழில்முனைவோர் ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வெற்றிகரமாக நடத்தமுடியாது. இவற்றின் ’உபரி மதிப்பு’ என்ன ?

2. ஒரு தொழிற்பேட்டையில், ஒரே வகையான இரு தொழிற்சாலைகள் (சம அளவிலான முதலீட்டில்), ஒரே நாளில் தொடங்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம். இரண்டும் ஒரே வகையான எந்திரங்களைக் கொண்டு, ஒரே வகையான பொருள்களை உற்பத்தி செய்து, ஒரே சந்தையில் விற்க முயல்கின்றன. இரண்டிலும், ஏறக்குறைய சம அளவு திறமை, உற்பத்தித்திறன் கொண்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒராண்டுக்குப் பிறகு, ஒரு தொழிற்சாலை ஒரளவு லாபத்தையும், மற்றொன்று நஷ்டத்தையும் அடைகின்றன. முதல் தொழிற்சாலையின் நிகர லாபம், அதன் தொழிலாளர்களின் உழைப்பின் உபரிதான் என்றால், பிறகு நஷ்டத்தில் இயங்கும் இரண்டாவது தொழிற்சாலையின் தொழிலாளர்களின் ‘உபரி மதிப்பு’ எங்கு சென்றது? இரு நிறுவனங்களிலும் சம திறன் கொண்ட தொழிலாளர்கள், சம எண்ணிக்கையில், சம திறன் கொண்ட எந்திரங்களைக் கொண்டு, ஒரே ரகபொருள்களைத்தான் உற்பத்தி செய்தனர். பிறகு லாப அளவில் வித்தியாசம் எப்படி ஏற்பட்டது?

3. கூட்டுறவு அல்லது அரசுத் துறையில், மேற்கொண்ட உதாரணத்தில் உள்ளதைப் போன்ற அதே வகை /அளவிலான நிறுவனத்தை (தொழிலாளர்களுக்கு அதே சம்பளம் என்று வைத்துக்கொள்வோம்) உருவாக்கினால், அதன் லாபம் மற்றும் உற்பத்தித் திறன், தனியார் நிறுவனங்களைவிடக் குறைவாக இருப்பது இய்லபு. ஏன்? காரணம், உரிமையாளர் என்று யாரும் இல்லாவிட்டால் ஏற்படும் பொறுப்பற்ற
மனோபாவம். அரசுத் துறையின் மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் தனியார் துறையைவிட குறைவாகவே இருக்கிறது. இவர்களின் ‘உபரி மதிப்பு’ எப்படிக் குறைந்தது? அது எங்கு சென்றது?

மேலும், பொருளாதார மந்தங்கள் படிப்படியாக மோசமானவைகளாகவே உருவாகும் என்ற அனுமானமும் தவறு. அதாவது முந்தைய மந்தத்தைவிட அடுத்து உருவாகும் மந்தம் மோசமாகவே இருக்கும் என்ற அனுமானம் தவறு என்றே வரலாறு நிரூபிக்கிறது. 1930களில் உருவான பெரிய மந்தத்தைவிட அடுத்து உருவானவை அவ்வளவு கடுமையானதாக இல்லை. இன்று உருவாகியுள்ள மந்தத்துக்கான காரணிகள் வேறு.

-K.R. அதியமான்

26 comments so far

 1. K.R.அதியமான்
  #1

  கீழ்கண்ட பதிவில் இதை பற்றி ஒரு நல்ல விவாதம் சமீபத்தில் :

  http://www.bloomberg.com/news/2011-09-26/manchester-gave-human-form-to-marx-s-theories-commentary-by-mary-gabriel.html

  எமது பொருளாதார பேராசிரிய நண்பர், எனது கட்டுரை பற்றி எழுதிய மின்மடல் :

  Dear Athiyaman,

  Value determination is looked at by Adam Smith from the demand and supply angles. From the demand side, it is the estimation of the person who wants the good which determines value. From the supply side, in the primitive economy, where there was no property rights, it was the amount of labour which determined the value. After property rights entered the scene, he concluded that cost of production would determine the value. Since cost of production consisted of prices for the use of land, labour and capital, the conclusion that prices are determined by other prices was challenged by Ricardo. Marx was trying for the elusive measure of value, like a metre, which is having unvarying quality at all times and tried to locate it in abstract labour. He did not succeed. Piero Shraffa did attempt another route to arrive at the solution and partially succeeded.

  Your critique of Marx on the empirical plane is certainly valid.

  However, the quest for an unvarying measure of value would continue to haunt the minds of people in the future, as it did in the past. IMHO, Marx would continue to remain an enigma and would be relevant then also.

  S.Neelakantan.

 2. களிமிகு கணபதி
  #2

  மார்க்ஸியம் குறித்து மேலோட்டமான புரிதல் என்றுகூட சொல்ல முடியாது. கேள்விப்பட்ட விஷயங்களை வைத்துக் குத்துமதிப்பானப் புரிதலோடு எழுதப்பட்ட கட்டுரை இது.

  மார்க்ஸ் உழைப்பு = மதிப்பு என்று சொல்லவில்லை.

  உழைப்பை மதிப்பிடுவதில் உள்ள சுரண்டல்களைப் பற்றித்தான் பேசுகிறார். அதுதான் வர்க்கப் போராட்டம்.

  பிரச்சினைகளைப் பற்றிச் சரியாகச் சொன்னதால்தான் மார்க்ஸ் என்றும் மறுக்க முடியாதவராகத் திகழ்கிறார்.

  அவரை மறுக்கும் இடம், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அவர் கண்ட கற்பனை உலகம். அங்குதான் மார்க்ஸியம் முட்டாள்தனமான ஒரு கருத்தியலாகிறது.

  அந்த முட்டாள்தனத்தின் இறையியல் வடிவம்தான் கம்யூனிசம்.

  .

 3. கே. தியாகராஜன்
  #3

  “மார்க்ஸ் என்றும் மறுக்க முடியாதவராகத் திகழ்கிறார்.

  அவரை மறுக்கும் இடம், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அவர் கண்ட கற்பனை உலகம். அங்குதான் மார்க்ஸியம் முட்டாள்தனமான ஒரு கருத்தியலாகிறது.

  அந்த முட்டாள்தனத்தின் இறையியல் வடிவம்தான் கம்யூனிசம்.”

  கம்யூனிசம் எல்லாம் நமக்கு புரியாது.. என்றுதான் நினைத்து ஒதுங்கி இருந்தேன். நியாயவாதியயான K.R.அதியமான் சொல்கிறாரே.. படிப்போமே என்று படித்தேன். புரியவில்லை. அதற்கு திரு.களிமிகு கணபதி அவ்ர்கள் கொடுத்த மேற்கண்ட விளக்கத்தை படித்தவுடன் நாமெல்லாம் எப்பொழுதுமே புரிந்துகொள்ளவே முடியாது என்பதை புரிந்து கொண்டேன்

  .

 4. K.R.அதியமான்
  #4

  //கேள்விப்பட்ட விஷயங்களை வைத்துக் குத்துமதிப்பானப் புரிதலோடு எழுதப்பட்ட கட்டுரை இது.//

  அப்படியா. நன்றி. சரியான ‘புரிதலோடு’ உள்ள நீங்கதான் ‘தெளிவுபடுதுங்களேன் !!

  //மார்க்ஸ் உழைப்பு = மதிப்பு என்று சொல்லவில்லை.///

  Labour theoர்y of surplus value பற்றி தான் இந்த பதிவு. அதை நீங்க மேற்படி ‘புரிந்து’ கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. எமது பொருளாதார பேராசியரர் அனுப்பிய மின்மடல் எனது ‘புரிதலை’ பாராட்டியதாகத்தான் தோன்றுகிறது.

  இறுதியாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் ?

 5. poovannan
  #5

  உபரி மதிப்பு என்கிற லாபம் என்பதே மாறி விட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம்.நட்டத்தில் ஓடும் கம்பனிகள் கூட பல மடங்கு லாபத்துடன் விற்கபடுகின்றன ,வாங்கபடுகின்றன.தொடர்ந்து நட்டத்தில் இருக்கும் கம்பனியின் பங்குகள் அடிப்படை வேல்யுவை விட பல மடங்கு விலையில் விற்பனை ஆகின்றன.
  இப்போது உற்பத்தியை வைத்து லாபம் அல்ல,யூகத்தை வைத்து,அரசோடு இருக்கும் தொடர்பு,சலுகைகளை வைத்து ,போட்டியில்லா நிலையை வைத்து தான்.
  பல லட்சம் கார்களை விற்கும் கம்பனிகளை விட ஓராண்டில் சில நூறு பேரை வைத்து நடத்தப்படும் நிறுவனங்கள் பல மடங்கு லாபம் பார்க்கின்றன மென்பொருள் துறையில்,மீடியாவில்
  தொழில் முனைவோர் என்பவர் வேலை செய்பவர் நலன் பற்றி யோசிக்க ஆரம்பித்ததே மார்க்ஸ் மற்றும் அவரை மேற்கோள் கட்டும் மக்கள் அதிகமான பிறகு தான்.
  பல்லாயிரக்கணக்கான கோடியில் கட்டப்படும் கட்டிடங்கள் கட்டுபவர்கள் வாழுமிடங்களை பார்த்திருக்குறீர்களா.அதை பார்த்தாலேயே அவர்களின் மேன்மை புரியும்.பனி நடக்கும் மாநிலங்களில் கூலி அதிகம் தர வேண்டும் என்று மிகவும் பிற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆடு மாடுகளை போல் அழைத்து வர பட்டு,தங்க வைக்கப்பட்டு வேலை வாங்குவது தான் இன்றும் தொழில் முனைவோர் எனப்படும் மேன்மை தாங்கிய மக்களால் நடத்த படுகிறது.
  இன்று ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு வீட்டையோ ,ஷேர் ஐயோ வாங்கி விட்டு அடுத்த நாளே பல லட்சம் ரூபாய்க்கு விற்க முயற்சிப்பது எதை காட்டுகிறது.லாபம் என்பதே பேராசை என்பதை தானே.
  லாபம் எனபது பேராசை இல்லை எனபது சரியல்ல ஆனால் சம்பளம்/கூலி வாங்கும் மக்களை பாதிக்காத பேராசை பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது.மார்க்ஸ்யன் எதிர்பார்ப்புகள் தவறுவது அங்கே தான்
  அவரின் எதிர்பார்ப்புகள் தவறுவதற்கான காரணங்கள்
  மீடியா-அனைத்து தரப்பு மக்களுக்கும் கலை,விளையாட்டு,சினிமா,(மைகேல் ஜாக்சன்,வின்பிரே,இளையராஜா,கார்ல் lewis ,உசேன் போல்ட்,எதியோப்பியா வீரர்கள்,விஜய் அமிர்தராஜ்)போன்றவற்றில் நிறைய பணம் சம்பாதிக்கும் வழி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலே வர,எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ள பலர் உருவாவார்கள் எனபது அவர் கால கட்டத்தில் எதிர்ப்பார்க்கபடாத ஒன்று.
  மாபியா-இதில் நான் மக்களாட்சி,அரசியல்வாதிகளையும் சேர்த்து கொள்கிறேன்.ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு அனைவருக்கும் வோட்டு கிடைக்கும் அவர்களில் பல தலைவர்கள் உருவாவார்கள்(கருணாநிதியோ,திருமாவோ,மாயாவதியோ,நிதிஷோ,ஒபாமாவோ ) என்றும் அக்காலத்தில் யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள்.தலைவர்களாக போராட்டங்களை நடத்த வேண்டியவர்கள் அரசியல்வாதிகளாகவும்,கட்டை பஞ்சாயத்து செய்பவர்களாகவும் எளிதில் பணம் சம்பாதித்து மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக (சுலபமான எடுத்து காட்டுகளை தான் பெரும்பான்மை மக்கள் எடுத்து கொள்வர்)மாறியதால் புரட்சிகள் வெடிப்பதில்லை.பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ள வட கிழக்கு மாநிலங்களில் புரட்சி,தீவிரவாதம் அதிகம் இருப்பதை பார்த்தால் இதை புரிந்து கொள்ளலாம்.
  மூவ்மென்ட்-பல கோடி மக்கள் இங்கும் அங்கும்(வேலைக்காக,வேடிக்கை பார்க்க) செல்வார்கள்,செல்வதற்கு பல கோடி வாகனங்கள்,பல லட்சம் மைல் சாலைகள்,பல லட்சம் தங்கும் விடுதிகள் தேவைப்படும்,அதனால் பல கோடி வேலை வாய்ப்புகள்,வேறு தேசத்தில் சுகமாக வாழும் சூழ்நிலைகள் ஏற்படும் என்ற நிலையும் அவர் வாழ்ந்த காலத்தில் எதிர்பார்க்கபடவில்லை.
  மெரிட்-.affirmative action ,இட ஒதுக்கீடு,உருவான பல புதிய,சிறிய நாடுகள்,மாநிலங்கள் என்று அனைத்து குழுக்களிலிருந்தும்,இனங்களிலிருந்தும் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.அவர்களை எடுத்துகாட்டாக எடுத்து கொண்டு அந்த இனத்தில் இருக்கும் மக்கள் முயற்சிப்பார்களே ஒழிய புரட்சிகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற நிலையும் எதிர்பாராதது.
  இவை அனைத்தையும் விட ஸ்டேட்(அரசு)பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக பல நடவடிக்கைகளை எடுக்கும் என்பதும் எதிர்ப்பார்க்கபடாத ஒன்று.அனைவருக்கும் வோட்டுஉரிமை,அடிமை ஒழிப்பு,தீண்டாமை,நிறவெறி போன்றவை குற்றமாக எடுத்து கொள்ள படுகின்றன நிலை.அரசுகளை welfare ஸ்டேட் ஆக மாற்றியதில்,மாற வைப்பதில் மார்க்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறார்.

 6. களிமிகு கணபதி
  #6

  அதியமான்,

  நீங்கள் பல மணி நேரம் செலவு செய்து எழுதி உள்ள ஒரு விஷயத்தை, வெறுமே மூன்று நான்கு பாராக்களில் தவறு என்று சொல்லி இருக்கிறேன். அந்த வகையில் என் தரப்பின் நடத்தை நியாயமானதல்ல.

  மேலும், மார்க்ஸ் குறித்த அறிவை உருவாக்க நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. அந்த அளவுக்கு முயற்சி எடுத்துத்தான் நான் என் தரப்பைச் சொல்ல வேண்டும்.

  அதற்கு இப்போதைக்கு எனக்கு நேரம் இல்லை. மேலும், மார்க்ஸ் பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டியதும் நிறைய இருக்கிறது.

  இந்த இரண்டும் போதுமான அளவை அடைந்தவுடன் கண்டிப்பாக என் புரிதலைப் பதிலாகத் தருவேன்.

  இப்போதைய புரிதலின்படி, மார்க்ஸியம் மீது எனக்கு மதிப்பு இருக்கிறது.

  பிகு: உங்கள் ஆசிரியர் எழுதி உள்ள பதில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொண்ட ஒன்றாகத் தெரியவில்லை. உங்கள் கருத்தினைச் சீர்திருத்தி மேலும் விரிவாகப் பேசுகிறார்.

  .

 7. K.R.அதியமான்
  #7

  க.கண்பதி,

  அந்த மின்மடலில் இவ்வரியை படிக்கவில்லையா :

  //Your critique of Marx on the empirical plane is certainly valid.//

  முதலில் பொறுமையாக, ஒரு திறந்த மனதுடன் எதையும் படிக்க முயல்க.

 8. களிமிகு கணபதி
  #8

  அதியமான்,

  இன்னும் அதிகமாகப் பொறுமையும், திறந்த மனதுடனும் படிக்க வேண்டி இருப்பின், நான் கட்டாயம் அந்த வகையில் படிக்க முயல்வேன்.

  உங்கள் ஆசிரியர் சொன்னது:

  //Your critique of Marx on the empirical plane is certainly valid.//

  empirical plane = Derived from own observation and interpretation rather than the actual theory

  .

 9. Shan Riyaz
  #9

  //தொழில்முனைவோரின் ‘உபரி மதிப்பு’ என்ன? ஒரு நிறுவனத்தைக் கட்டமைக்க, நிர்வாக மற்றும் மேலான்மைத் திறன்கள் மிக மிகத் தேவை. ரிஸ்க் எடுக்கும் திறன், புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் திறன், புதுமையான சிந்தனை, தலைமைப் பண்புகள், தகவல் பரிமாற்றத் திறன் ஆகியவை அவசியம்.இவை இல்லாமல் தொழில்முனைவோர் ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வெற்றிகரமாக நடத்தமுடியாது. இவற்றின் ’உபரி மதிப்பு’ என்ன ?//

  உங்களின் இந்த கருத்தில் குழப்பம் உள்ளது. தொழில்முனைவோரின் நிர்வாக மற்றும் மேலான்மை திறன் களால் மட்டுமே ஒரு நிறுவனம் உயர்வதில்லை. அவர்களின் கீழ் பனியாற்றும் ஊழியர்களின் திறமையே முக்கிய காரனம். இங்கு CEO என்பவரும் கூட ஒரு தொழிலாளரே. இதன் மூலமே சாராய அதிபர்கள் கல்வித்தந்தைகளாவதும், அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் ஆவதும் சாத்தியமாகியுள்ளது.

 10. K.R.அதியமான்
  #10

  ////அவர்களின் கீழ் பனியாற்றும் ஊழியர்களின் திறமையே முக்கிய காரனம்///

  yes, but they get paid for their efforts. the issue is about the ‘efforts’ of the organiser of the firm who creates, takes the risk and LEADS.

 11. K.R.அதியமான்
  #11

  ganapathy,

  ////Marx was trying for the elusive measure of value, like a metre, which is having unvarying quality at all times and tried to locate it in abstract labour. He did not succeed.//////

  this is also from that mail.

 12. K.R.அதியமான்
  #12

  @Shan Riyaz,

  ஆப்பிள் நிறுவனத்தை தோற்றுவித்த ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி விரிவான தொடர் வருகிறது. அவர் ஒரு ‘முதலாளி’ தான். பெரும் சாதனையாளர். சுமார் 3 பில்லியன் மதிப்பு உடையவராக இருந்தார். அந்த சொத்தை அவர் தம் ‘தொழிலாளர்களின்’ உழைப்பை ‘சுரண்டி’ சம்பாதித்தாரா ? அல்லது does he deserve this wealth because he ‘earned’ it by himself in the first place ? ஒப்பிட்டு பாருங்களேன். ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸாக இல்லாமல், வெறும் ‘தொழிலாளியாக’ வே வாழ்நாள் முழுவதும் வேலை பார்த்திருந்தால், என்ன ஆகியிருக்கும் ? ரிஸ்க் எடுக்கும் தொழில்முனைவோர்களே இல்லாமல், அனைவரும் வேலை தேடுபவர்களாகவெ இருந்திருந்தால் மனித குலம் எப்படி இருந்திருக்கும் ? இன்னும் கற்காலத்திலேயே இருந்திருப்போம்.

  profits and savings form into capital, yes. but the source of all this is HUMAN ENTEPRISE. Entrepreneurs make this world. They are the greatest heros of manking. but they are usually branded as greatest villains by the marxists.

 13. N.BALAKRISHNA
  #13

  Very good effort has been taken to touch many areas in the subject of Econmoy. PROFIT in business is the Reward for the Risk taken by the Entreprener. This profit is arrived after apportioning Interest for Capital, Rent for assets and Wage for Labour. It is a fact that the struggle between entreprener and workers always exists. i.e. the entreprener try to reduce the wage to increse his PROFIT and workers fight to get their reasonable share of wage.
  That’s why many laws have been enacted to reduce these conflicts. Am I correct Mr.Athiyaman. Thus the allegations of reducing the wage and increasing the Profit does not arise, atleast, in the organised sector. it still exists in the unorganised sector as pointed out by one of our friend.

 14. poovannan
  #14

  steve ஜாப்ஸ் ஐ தான் உதாரணம் காட்ட தோன்றுகிறதே தவிர ஆயிரக்கணக்கான அம்பானிகள்,மாறன்கள்,மார்வாரிகளை காட்ட முடியவில்லையே
  முதலாளியாக இல்லாமல் தொழிலாளியாக இன்னொருவருக்கு அவர் வேலை செய்து கொண்டிருந்தாலும்,அரசாங்கத்திற்கு வேலை செய்தாலும் அவரின் ஐபோட் வராமல் போயிருக்காது.இணையம் என்பதே அமெரிக்க ராணுவதிற்க்காக உருவாக்க பட்டது தான்.அரசு விஞ்ஞானியாக அவர் வேலை செய்திருந்தால் கற்காலத்தில் இருப்போம் எனபது எப்படி.
  அம்ரிகாவிர்ற்கு இணையாக கம்முனிச நாடுகள் அனைத்து துறைகளிலும் போட்டி போடவில்லையா.யூரி காகரின் உக்கு போட்டி தானே நீல் ஆம்ஸ்ட்ராங்.
  பெண்களுக்கு வேலை வாய்ப்பு(ஆப்கானிஸ்தானில் நஜிபுல்லாஹ் இருக்கும் போது ராணுவத்தில் கூட பெண்கள் இருந்தார்கள்).அமெரிக்கா மிகவும் போராடி அவர்களை வீழ்த்தி தாலிபனுக்கு வழி வகுத்தது.அவர்களை தான் பொற்காலம் என்று கூறுகிறீர்களோ .
  கம்முநிசத்தின் நிழல் படாத அமெரிக்காவின் பாதுகாப்பில் இருக்கும் மத்திய ஆசிய நாடுகள் தான் மிகவும் முன்னேறிய நாடுகளா.பெண் கல்வி,பிரசவத்தின் போது மரணம்,ஒரு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் மரணம் போன்ற குறியீடுகளில் கம்முனிச நாடுகள் இந்த பொற்கால நாடுகளை விட சிறந்ததாக உள்ளதே எப்படி.

 15. poovannan
  #15

  கம்முநிசம் வந்த பிறகு தான் அடிமை முறை ஒழிகிறது,மூட நம்பிக்கைகள் குறைகிறது,மனித உரிமை என்ற பேச்சே எழ ஆரம்பிக்கிறது.கம்முநிசம் வருவதற்கு முன் இருந்த காலம் பொற்காலமா
  பொருளாதாரம் மட்டுமல்ல கம்முநிசம்.கடவுளுக்கு,மதங்களுக்கு மரண அடி கிடைத்தது கம்முநிசதிடம் தான்.கற்கால மூட தனங்களிலிருந்து நான் வெகு தூரம் வந்ததில் கம்முநிசத்தின் பங்கு அதிகம்.மூடத்தனங்களின் பிடியில் நூற்றாண்டுகளாக சிக்கியிருந்த நேபாளம் அதிலிருந்த மீள வழி வகுப்பது எது.அங்கு ராஜா தான் கடவுள்.அவர் தான் முதலாளி.டீ தூளிலிருந்து விமானம் வரை தொழில் முனைவோர் அவரும் அவரின் அல்ல கைகளும் தான்.அந்த பொற்காலத்தை எதிர்த்து மக்கள் போராடியது எதற்கு

 16. K.R.அதியமான்
  #16

  //கம்முநிசம் வந்த பிறகு தான் அடிமை முறை ஒழிகிறது,மூட நம்பிக்கைகள் குறைகிறது,மனித உரிமை என்ற பேச்சே எழ ஆரம்பிக்கிறது./// இல்லை பூவன்னன். தவறு. மனித உரிமை மீறல்களை புரியாமல் கம்யூனிசத்தை கொண்டு வரவே முடியாது. வரலாறு அதை தான் சொல்கிறது. மேலும் ‘அடிமைகள்’ போல் தான் ஒரு கம்யூனிச நாட்டில் வாழ நேரிடும். கருத்து சுதந்திரம் மற்றும் மாற்று கருத்துகள், எதிர்கட்சிகள் அனுமதி கிடையாது. மனித உரிமைகளை விட முதலாளிகளை ஒழிப்பது தான் முக்கியம் என்றே கம்யூனிசம் கருதுகிறது.

  ஸ்டீவ் ஜாப்ஸ் முக்கிய உதராணம். பல லச்சம் இதர தொழில் முனைவோர்களையும் சொல்லலாம். கிழக்கு பதிப்பகம் மற்றும் இந்த தமிழ்பேப்பரை துவங்கி நடத்தும் நண்பர் பத்ரி மற்றும் அவரின் இதர கூட்டளிகளையும் சொல்லாம். நானும் ஒரு தொழில்முனைவோன் தான். இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி முதல் பல ஆயிரம் பேர்களை சொல்லாம். ஆனால் நேர்மையில்லாத தொழில்முனைவோர்கள் உள்ளனர். அம்பானிகள் அந்த வகையினர் தான். (ஆனாலும் பெரும் சாதனையாளர்கள் தான்). இணையம் உருவானது நல்லதுதானே ?

  சரி. இதெல்லாம் இருக்கட்டும். இந்த பதிவில் அடிப்படை விசியம் :

  Marx predicted that each depression will be progressively worser than the previous one, while the standard of living of workers will also get worse with each cycle. and in the end capitalism will collapse on its own. the past 150 year history disproves this hypothesis. the workers standard of living had improved dramatically, esp in developed nations. and the depressions did not progress as he predicted. hence my arguments is sort of ‘reverse engineering’ ; Marx’s predictions did not occur. hence his basic premise of labour theory of surplus value itself is deeply flawed.

  இதை பற்றி விவாதிக்க முயலுங்களேன். மார்க்ஸின் கணிப்பு ஏன் பொய்யானது ? அது பொய்யாகும் போது, அவரின் அடிப்படை அனுமானமே தவறு என்று கொள்ள்லாம் தானே ? நோபல் பரிசு பெற்ற பல விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் thesisகள் பின்னாட்களில் தவறு என்று நிருபனம் ஆகியுள்ளன. மார்க்ஸின் கருத்துகள் தவறாகவே இருக்க முடியாது என்று நம்புவதும் ஒரு வகை மூட நம்பிக்கைதான்…

 17. poovannan
  #17

  ஐயா மார்க்ஸ்யன் கணிப்பு ஏன் நடக்கவில்லை என்று தானே அவ்வளோ பெரிய பின்னூட்டம் மேலே எழுதியுள்ளேன்.
  நீங்க கம்முனிசம் ஏதோ கற்காலம் மாதிரி பேசியதால் தானே ஆப்கான் உதாரணம் தந்தேன்.அதை அப்படியே விட்டு விட்டீர்கள்.அனைத்து இசங்களிலும் குறை உண்டு.மனிதர்களின் வாழ்க்கையில் பெரு மாற்றத்தை கொண்டு வந்ததில் கம்முனிசத்தின் பங்கு அதிகம்.அதன் ஆட்சிமுறையில் குறைகள் இருக்கிறது.அதை மறுக்கவில்லை.சனனாயகத்தோடு அதில் ஒரு கட்சியாக கம்முனிஸ்ட் கட்சிகள் இருக்கும் நாடுகள் அப்படி இல்லாத நாடுகளை விட கண்டிப்பாக சிறந்ததாக இருக்கும்.வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருக்கும் அனைவரும்,வீடு வாடகைக்கு விடும் அனைவரும் கூட தொழில் முனைவோர் தான்.அவர்கள் நடந்து கொள்ளும் முறையை பார்த்தாலே தொழில் முனைவோர் எப்படி எனபது தெரிந்து விடும்.ஒரு சில விதிவிலக்குகளை தவிர இன்று வரை தொழில் முனைவோர் தன கீழ் வேலை செய்பவர்களை கசக்கி பிழிவது தான் சரி என்ற மனநிலையில் தான் உள்ளனர்.
  வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு ஒரு சங்கம் ஆரம்பிக்கப்பட்டு அவர்களின் சம்பளம்,வேலை நேரம்,விடுமுறை போன்றவை தெளிவாக வரைமுறை செய்யப்பட்டால் நல்லதா அல்லது இப்போது இருப்பது பத்து வயது சிறுமிகளும்,மாதத்திற்கு முன்னூறு ,நானூறு ரூபாய்க்கு வேலை செய்வது நல்லதா.அந்த சங்கமும் கம்முனிசத்தின் பங்கு தான்.

 18. K.R.அதியமான்
  #18

  //வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு ஒரு சங்கம் ஆரம்பிக்கப்பட்டு அவர்களின் சம்பளம்,வேலை நேரம்,விடுமுறை போன்றவை தெளிவாக வரைமுறை செய்யப்பட்டால் நல்லதா அல்லது இப்போது இருப்பது பத்து வயது சிறுமிகளும்,மாதத்திற்கு முன்னூறு ,நானூறு ரூபாய்க்கு வேலை செய்வது நல்லதா.அந்த சங்கமும் கம்முனிசத்தின் பங்கு தான்.///

  தொழிலாளர்களின் உரிமைகளை, முக்கியமாக சங்கம் அமைத்து போராடுவதை கூடாது என்று யாரும் சொல்லவில்லை. மேலும் ஏழை நாடுகளில் உள்ள நிலையை மட்டும் வைத்து கொண்டே தொடர்ந்து பேசுகிறீர்கள். வளர்ந்த நாடுகளில் வீட்டு வேலை செய்பவர்களில் வாழ்க்கை தரம் அதிகமாகவே உள்ளது. எப்படி சாத்தியமானது ?
  இங்கு உள்ள ஜனத்தொகை மற்றும் பணவீக்கம் போன்ற இதர காரணிகளை பற்றி பிறகு எழுதுகிறேன்.

  நான் மேலே மீண்டும் சுட்டிய தொழில் மந்தங்கள் மற்றும் progressive decline of the living standards of workers as predicted by marx with his labour theory of surplus value பற்றி இன்னும் நீங்க பேசவே இல்லை. சரி, இத்துடன் முடித்து கொள்ளலாம். நன்றி.

 19. குழப்பவாதி
  #19

  கம்யூனிஸம் என்பது நிரந்தர தீர்வல்ல.காரணம் பொருளாதார மேம்பாடு மட்டுமே மகிழ்ச்சியை தராது.தனித மனித சுதந்திரம்,கருத்து சுதந்திரம் இவையெல்லாம் முக்கியம்.இது போன்ற விஷயங்களெல்லாம் நாம் மனிதன் என்பதை நிரூபிக்கின்றன.மனிதனின் உணர்வுகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் தராமல் பொருளாதார மேம்பாடு மட்டுமே மகிழ்ச்சியை தராது.ஆனால் கம்யூனிஸம் இல்லையென்றால் தொழிலாளர்களுக்கு இவ்வளவு உரிமைகள் கிடைத்திருக்காது என்பதே உண்மை.

 20. ரமேஷ் பாபு
  #20

  மார்க்ஸ் முதலாளித்துவம் பற்றி எழுதிய போது சமூக ஜனநாயகவாதம் எல்லாம் இல்லை. அவர்கள் ஓரளவிற்கு சுரண்டலைக் குறைத்து மறுபங்கீடு (இலாப மறுபங்கீடு) என்பதை முதலாளித்துவ அரசுகள்/அமைப்புகளை ஏற்கச் செய்தனர். அதியமான் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுரண்டலற்ற உலகு ஒன்றில் மேலை நாடுகள் வளர்ச்சி கண்டன என்று வாதிடுகிறார். நன்று. ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் பேரளவில் மறைமுகச் சுரண்டலில் ஈடுபட்டதை அவர் கணக்கில் கொள்ளவில்லை. திருநெல்வேலியின் தாமிரபரணி நீரை உறிஞ்சி எடுத்ததற்கு கோக்/பெப்சி நிறுவனங்கள் அரசிற்கு கொடுத்த உரிமத் தொகை எவ்வளவு? ஒரு எடுத்துக் காட்டு மட்டுமே இது. மேலை நாடுகளின் மக்கட் தொகை எவ்வளவு? பரப்பளவு, இயற்கை வளம் எல்லாம் எவ்வளவு? இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் பேசுவது பொருத்தமற்றது.

  மார்க்ஸ்சின் கூற்றிற்கு நீங்கள் சொல்லும் மறுப்பு தவறானது. ஏனெனில் ஒரு பொருளின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு இரு விடைகள்தான் கிடைத்தன. ஆடம் ஸ்மித் இரு வழிகளையும் கூறினார். ஒன்று காஸ்ட் ஆஃப் ப்ரொடக்‌ஷன் தியரி ஆஃப் வேல்யூ (தமிழில் உற்பத்திச் செலவு மதிப்பு கோட்பாடு) இரண்டு லேபர் தியரி ஆஃப் வேல்யூ (தமிழில் உழைப்பு மதிப்பு கோட்பாடு) பின்னாளில் டேவிட் ரிக்கார்டோவும் இவற்றில் உழைப்பு மதிப்பு கோட்பாட்டை வலியுறுத்தினார் ஆனால் உற்பத்தி செலவு மதிப்பு கோட்பாட்டை நடைமுறைக்கு உகந்ததென்றார். கார்ல் மார்க்ஸ்தான் உழைப்பு மதிப்பு கோட்பாட்டையும் முதலாளித்துவ அமைப்பு எவ்வாறு அதை பயன்படுத்திக் கொள்கிறது என்பதையும் விளக்கிக் காட்டினார். எத்தனை இயந்திரங்கள் இருந்தாலும் மனித உழைப்பின்றி உற்பத்தி நிறைவேறாது. முதலாளி முதல் போட்டாலும் திறமையாக நிர்வகித்தாலும் தொழிலாளி இல்லாமல் உற்பத்தி நடக்குமா? உற்பத்தி செலவு கோட்பாட்டின்படி மூலப் பொருள்களுக்கு ஆகும் செலவு நிலையானவை. கூலி மட்டுமே வேறுபடும். எனவே உபரி மதிப்பு கூலியில்தான் கிடைக்கும். குறைவான கூலி அதிக உபரி அதாவது அதிக இலாபம். எடுத்துக் காட்டாக ஒரு பால்பாயிண்ட் பேனாவின் உற்பத்தியை கணக்கில் கொள்வோம். அதற்கான மூலப்பொருள் கொஞ்சம் நெகிழி, கொஞ்சம் வேதிப் பொருட்கள், ஒரு இயந்திரம் இத்யாதி. அடிப்படைக் கட்டுமானங்களும் அடங்கும். இந்தியாவில் இதைத் தயாரிக்க எங்கு சென்றாலும் இதற்கான அலகை அமைக்க, மூலப்பொருள் வாங்க ஆகும் முதலீடு பேரளவில் வேறுபடாது. சில இலட்சங்கள் வேறுபடலாம். தொழிலாளி? திறமையான, முன் அனுபவம் மிக்கத் தொழிலாளி? அவருக்கான கூலி? இதுவே எவ்விடத்தில் அலகை நிறுவுவது என்பதைத் தீர்மானிக்கிறது. ஏன் அமெரிக்காவை விட்டு இந்தியாவில் கால்செண்டர்கள் வருகின்றன? குறைவான சம்பளத்தில் நிறைவான திறமையுடன் இந்திய இளைஞர்கள் கிடைக்கிறார்கள் என்பதால்தானே? இந்திய அரசு சலுகை தருகிறது. நிலம், கணினி விலை குறைவு என்பதாலா? இல்லையே!

  பண்டையக் காலங்களில் பொருளின் மதிப்பு மூலப் பொருள்+உழைப்புக் காலம், முயற்சி ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட்டது. இவை பெரும்பாலும் கிராமியப் பொருளாதாரங்கள். காலனிய காலத்திற்குப் பிறகான தொழில் புரட்சியே முதலாளித்துவ முறைக்கு அடிகோலியது. ஆடம் ஸ்மித் சுங்கத்துறை அதிகாரி. இங்கிலாந்து அயல் நாட்டு வாணிபத்தில் பேரளவு வருமானம் ஈட்டிய போது எதிர்காலப் பொருளாதார அமைப்பு எப்படியிருக்கும் என்று சிந்தித்து எழுதியதான் ‘அ என்கொயரி இண்டூ த காசஸ் ஆஃப் வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’. இதில்தான் முதலாளித்துவ அமைப்பிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. காலனியங்கள் இன்றி முதலாளித்துவம் இயங்கியிருக்க முடியாது. காந்தியின் முதல் போராட்டம் அந்நியத் துணி பகிஷ்கரிப்பு என்பதை நினைவு கூர்க. இங்கிருந்து விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டப் பருத்தி மான்செஸ்டரில் நெய்யப்பட்டு மலிவு விலைத் துணியாக இங்கு இறக்குமதி செய்யப்பட்டது. இது உள்ளுர் விவசாயிகளையும் நெசவாளர்களையும் மிகக் க்டுமையாக பாதித்தது.

  இதைத்தான் மார்க்ஸ் தனது நூலிலும், பின்னர் லெனின் தனது ஏகாதிபத்திய கருத்தியலையும் முன் வைக்க காரணமாகியது. மார்க்ஸை விட லெனின் காலத்தில் பிந்தியவர். தெளிவாக முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக உருவெடுக்கும். உலகப் போர்களுக்கும் அதுவே காரணமாகும் என்றார். அதுவும் நடந்தது. லெனின் இறந்தது 1924 ஆம் ஆண்டு. இரண்டாம் உலகப் போரும் அதன் பின்னரான மறைமுக காலனிய ஆதிக்கமும் நிகழ்தது 1939 ஆம் ஆண்டிற்குப் பிறகு. லெனின் எப்படி கணித்தார்?

  மார்க்ஸ்சின் உபரி மதிப்பு கோட்பாடு உண்மை என்பதால்தான் லெனின் முதலாளித்துவத்தையும் அதன் எதிர்காலப் போக்கையும் சரியாக கணித்தார். அதியமானின் கூற்றை மறுக்க இது போதும் என்று கருதுகிறேன்.

 21. K.R.Athiyaman
  #21

  Ramesh Babu,

  //Marx predicted that each depression will be progressively worser than the previous one, while the standard of living of workers will also get worse with each cycle. and in the end capitalism will collapse on its own. the past 150 year history disproves this hypothesis. the workers standard of living had improved dramatically, esp in developed nations. and the depressions did not progress as he predicted. hence my arguments is sort of ‘reverse engineering’ ; Marx’s predictions did not occur. hence his basic premise of labour theory of surplus value itself is deeply flawed.///

  pls try to address the above.
  esp the theory that surplus value is created only thru workers efforts and nothing else.

 22. Kumaran
  #22

  Dear Athiyaman

  If you want to understand DAS CAPITAL, please read it from the first page. Understand what is wealth, commodity, use value, exchange value etc.

  Then you discuss about surplus value. You have confusion in basics like use value and exchange value. If you read with the intention of improving your knowledge, you will be amazed by his exemplary work.

  Your explanation of surplus value is totally wrong. I have read the first volume many times and it is not possible for me to write every thing in the book here.

  So only choice is to read the book yourself.

 23. Kumaran
  #23

  Dear Mr.Athiyaman

  //Marx predicted that each depression will be progressively worser than the previous one, while the standard of living of workers will also get worse with each cycle. and in the end capitalism will collapse on its own. the past 150 year history disproves this hypothesis. the workers standard of living had improved dramatically, esp in developed nations. and the depressions did not progress as he predicted. hence my arguments is sort of ‘reverse engineering’ ; Marx’s predictions did not occur. hence his basic premise of labour theory of surplus value itself is deeply flawed.///

  Marx analysis of the capitalist economy is absolutely correct. He was not an astrologer to predict something. If you are looking for an astrologer economist, sorry, Marx is not the right person. You are not taking all the major factors in arriving conclusions. I can see only a hurry in finding fault with Marx.

  Please try to know the socialist measures taken by the developed countries, especially scandinavian countries in 20th century. Similarly take the other factors into consideration. Then you will know for yourself the reasons for the present condition.

 24. K.R.Athiyaman
  #24

  //Marx analysis of the capitalist economy is absolutely correct. He was not an astrologer to predict something./// Wrong. According to him, each depression in a business cycle should be worse than the previous one while the standard of living of the workers will become worse (and will never ever improve) and over the course of time capitalism will collapse on its own. The opposite of this have happened. How and Why ? Hence the basic premise of labour theory of surplus value itself if flawed. surplus value is created by the entrepreneurs’ efforts only.

  ///Please try to know the socialist measures taken by the developed countries, especially scandinavian countries in 20th century. Similarly take the other factors into consideration. ///

  Yeah and no one objects to the welfare state mechanism which is also labelled under the term ‘socialism’. the debate is about its width and depth, not about its need.

  // Then you will know for yourself the reasons for the present condition.//

  The present crisis of ‘global capitalism’ is precisely because of distortions caused by following anti-market polices world wide, esp US and China. artificially fixing the interest rates and exchange rates by govts, subsidies to mortgage lenders, creation govt entities like Freddie Mac and Fannie Mae in housing finance, non-viable spending for military and other wasteful items by many govts, forming of the Euro (which distorts the exchange rate mechanism between different nations in the EU zone) : these are some of the major reasons for the crisis. most complex issues..

 25. Kumaran
  #25

  Dear Mr. Athiyaman

  Your last sentence is correct. The issue is complex. But, you try to explain the complex issue from the points taken from some articles in new papers and magazines. The economic crisis is having cascading effect and is more and more wide. About it depth, you have ask the business men who commited suicide in South Korea and other countries in the begining of 21st century.

  The real problem is in production and exchange of commodities. Why all the governments should spend heavily in military. What are the use values for the commodities that we produce now.

  Please read at least the important works of Marx and try to understand his analysis in economics, philosophy etc. Do you think that Marx was against capitalism. If you think so, it is wrong. He has glorified capitalism in the first chapter of Manefesto of Communist party, which no one has done at that time. Only he has analysed its limitations and future.

  Again I want to tell you that first you try to understand the basics like wealth, commodity, use value, exchange value etc. Then we can discuss about the present crisis.

  If you are not comfortable with the word socialism, I have no problem in using the word welfare state for the social measures taken by the developed countries.

 26. கோதண்டபாணிபாலவேலுசாமி
  #26

  வேடிக்கை களம் சிறியதாக இருக்கட்டும்
  தொழில்முனைவோர் ஆகிய எனக்கு Organizational skills motive power and leader ship skills போன்றவைகளுக்காக கிடைத்த உபரி மதிப்பு (இனி சுரண்டல் என குறிப்பிட மாட்டேன் )
  இந்த உபரிமதிப்பு தற்போது தினமும் ஒரு தேநீர் கடைக்கு ரூபாய் 1800/- என்ற அளவில் 10 கடைகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 64,80,000/-கிடைத்து வருகிறது .இந்த உபரி மதிப்பை என்னுடைய ஆண்டு வருமானமாக கணக்கிடப்பட்டுவிட்டால் …….அய்யய்யோ அதனால் நானே Organizational skills and etc இதுவெல்லாம் எனக்கு மிகமிக குறைவு தான் என காட்டுவதற்கு நான் செய்யும் தகிடு தத்தங்கள் சொல்லிமாளாது .இப்போது என்னிடம் இருக்கும் உபரி மதிப்பு கருப்பாகிவிடுகிறது இதை நான் கட்டி காப்பாற்று வதற்கு ,மீண்டும் மினரல்ஸ் நியூட்ரியன்ஸ் ஏற்றி organizational skill ……and etc வை பலப்படுத்திவிடுவேன்.
  ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற என் மகன் வீடு திரும்ப வில்லை .பத்து பல லட்சம் மதிப்புடைய அழைப்பு ஒன்று வந்தது .கருப்பு உபரி மதிப்பு கொடுத்த ஊக்கத்தோடு சத்தமில்லாமல் சென்று பேசி மகனை வீட்டிற்க்கு அழைத்து வந்து விட்டேன் .
  ஒரு நாள் மூன்று பேர் என்னிடம் வந்தார்கள் .எதோ கடையில் வேலை கேட்டு வருபவர்களாக இருப்பார்கள் என்று நினைத்து விட்டேன் .வந்தவரில் ஒருவன் பேசினான் நீ என்ன வியர்வை சிந்தி உழைச்சு குருவி மாதிரி சேர்த்து வச்சதையா கேட்கிறோம் .
  குற்றால அருவினாகூட ஆடியிலதான் கொட்டும் .இது தினமும் கழுவி ஊத்தர சாக்கடை தண்ணி தான (இப்ப என்கிட்ட இருக்கிற கருப்பு உபரி மதிப்ப அவன் சொல்றது .)கொஞ்ச எங்க பக்கமும் மடை கட்டி திறந்து விடுன்றான் .சாக்கடையின்னு சொன்ன பிறகு நாமே வச்சுகிட்டா நாரிடுமில்ல .
  அப்ப தாங்க எனக்கு ஒரு எண்ணம் வந்தது.என்கிட்ட வேலைசெய்யிற தொழிலாளிக்கு அவனோட தேவைய நிறைவு செய்யிற அளவு கூலி இனி கொடுக்க கூடாது .அவன் பெண்டு பிளளைகளும் உயிர் வாழற அளவுக்கு கூலி கொடுக்கணும் .ஏன்ன அந்த தொழிலாளியோட பிள்ளை நாளைக்கு நல்ல திடகாத்திரமான திறமையான உழைப்பாளி ஆகணும் இல்லையா ?என் பேர பிள்ளை பள்ளிகூடம் போயிட்டு பத்திரமா வரணுமில்லையா !
  கொஞ்சம் இப்படி யோசிச்சு பார்க்கிலாமா? பெட்ரோலும் காஸ் விற்பனைக்கு கூடவா போட்டிதேவை .500 நூறு குடும்பம் இருக்கிற ஊருன்னா கண்டிப்பா பெட்ரோல் டீசல் காஸ் விற்பனை நிலையங்கள் கண்டிப்பா இருக்கனும்.இந்த விற்பனை நிலையங்கள ஒரு குடும்பமா மட்டுமே நடத்தனும் .வேலை ஆள் வச்சுக்க கூடாது. .
  இன்னைக்கும் பத்து பதினஞ்சு ஊருக்கு ஒரே காஸ் எஜென்ஸி ஒரே குடும்பத்துக்கு எவ்வளவு உபரிமதிப்பு(மறந்தும் சுரண்டல்னு நான் சொல்ல மாட்டேன் ) அந்த கதைதான் முன்னமே சொல்லிட்டேன். நூறு ரூபாயிக்கு பெட்ரோல் போட பத்து கிலோமீட்டர் போனா பக்கத்துல பக்கத்துல நாலஞ்சு பங்கு .டாங்க மூடருதுக்குள்ள நகரு நகரு
  விளையாட்டு களம் சிறிதானால் வேடிக்கை களம் பெரிதாகும்.விளை யாட்டுகளம் பெரிதானால் வேடிக்கை களம் சிறிதாகும் முதலில் வருபவ ர்கள் பலராவர் பரிசை பங்கிட்டு தரவேண்டியிருக்கும் .அப்போது தான் பரிசு பாதுகாப்பாக இருக்கும்.. . . . .

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: