அன்புள்ள மோடிக்கு, ஹிட்லர் எழுதுவது…
நான் என்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. நாம் இதுவரை சந்தித்துக்கொண்டதில்லை என்றாலும் உன்னை என்னுடைய சகோதரனாகவே கருதிவந்தேன். இப்போது உன்னை குருவாக ஏற்றுக்கொண்டுவிட்டேன்.
விளக்குகிறேன்.
இனவெறுப்பு அல்லது இனஅழித்தொழிப்பு என்னும் பெயரால் என் செயல்கள் இன்று அழைக்கப்படுகின்றன. மனித குலத்தின் விரோதியாகவும், படுபயங்கர சாத்தானாகவும் என்னைப் பலர் உருவகப்படுத்துகிறார்கள். பல லட்சக்கணக்கானவர்களை நான் கொன்றேனாம். குழந்தைகள் என்றும் பெண்கள் என்றும் வயதானவர்கள் என்றும் பாராமல் யூதர்களை நான் தேடித்தேடி சிறைப்பிடித்து அழித்தேனாம். என்ன ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு! ஜெர்மனியைச் சுத்தப்படுத்தியவன் நான். கசடுகளைக் கண்டறிந்து களைவது ஒரு குற்றமா? நோயைக் கண்டுபிடித்து அழிப்பது தவறாகுமா? நல்லவேளை, நரேந்திர மோடி, என்னை நீ நன்கு அறிந்து வைத்திருக்கிறாய். ஏன், உன் இயக்கத்தில் உள்ள பலரும் என்னைப் பற்றிய மிகச் சரியான மதிப்பீட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான்.
மீடியாவை எப்படி கையகப்படுத்திக்கொள்ளவேண்டும், வலுவான ஒரு பிரசாச வாகனமாக எப்படி அதனை மாற்றியமைக்கவேண்டும் என்பதை உலகுக்குக் கற்றுக்கொடுத்தவன் நான். குழந்தைகள் முயல்களைப் போல் தாவிவந்து பூங்கொத்து கொடுத்து என்னை வரவேற்பது போலவும், லட்சக்கணக்கான ஜெர்மானிய வீரர்கள் என் தலைமையின் கீழ் உற்சாகத்துடன் களத்துக்குச் செல்வதுபோலவும் பல புகைப்படங்களை வெளியிட்டு என் மக்களை நான் ஈர்த்திருக்கிறேன். ஆஹா ஹிட்லரைப் போன்ற தலைவர் இந்த அகிலத்தில் உண்டா என்று வாய்பிளக்கச் செய்திருக்கிறேன்.
ஆனால், நீ என்னை மிஞ்சிவிட்டாய், நரேந்திர மோடி. என்னைக் கடந்து நீ வெகு தூரம் சென்றுவிட்டாய். மூன்று நாள்களாக நீ நடத்திய உண்ணாவிரதத்தைக் கண்டு நான் வெலவெலத்துப் போய்விட்டேன். என்னவொரு சாதுர்யம்! என்னவொரு மேதாவிலாசம்! நீ எத்தனை கூர் மதி படைத்தவன் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஒரு சம்பவம் போதாதா?
பிப்ரவரி 2002ல் குஜராத் கலவரத்தால் வெடித்தபோது நான் இப்படிச் சொல்லிக்கொண்டேன். ‘பாவம் மோடி, இனி அவன் மீண்டும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கமுடியாது!’ உன் ஆசிர்வாதத்துடனும் அங்கீகாரத்துடனும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்டபோது, பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது, உயிர் பயத்துடன் முஸ்லிம்கள் குஜராத்தைக் காலி செய்துகொண்டு ஓடியபோது, உன் சகாப்தம் முடிந்துவிட்டது என்று கருதினேன். காலம் இறுதித் தீர்ப்பெழுதிவிட்டது என்று பயந்தேன்.
எனக்கு நானே தீர்ப்பெழுதிக்கொண்டுவிட்டது உனக்குத் தெரியும். எந்த மூளையைப் பயன்படுத்தி யூதர்களை அகற்றினேனோ அந்த மூளையை நானே சிதறிடித்துவிட்டேன். நான் தோல்வியடைந்துவிட்டேன். என்னால் யூதர்களை மட்டுமே வெற்றி கொள்ள முடிந்தது. உலகத்தை அல்ல. என் ஜெர்மனி இன்று என்னைக் கைவிட்டுவிட்டது! உனக்கும் இப்படிப்பட்ட நிலைமைதான் வந்துசேரும் என்று நினைத்தேன்.
எப்படி உதித்தது இந்த உண்ணாவிரத யோசனை? யார் சொன்னது? என் அருமை கெப்பல்ஸால்கூட இப்படியொரு திட்டத்தைத் தீட்டியிருக்கமுடியாது! மூன்று தினங்கள். வெள்ளாடை உடுத்தி தேவகுமாரன் போல் நீ நடந்து வந்தாய். அலங்கரிக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட மேடையில் பாந்தமாக அமர்ந்திருந்தாய். கேள்விக் கணைகளைத் திறமையாகவும் பொறுமையாகவும் எதிர்கொண்டாய். உலகமே உன்னைத் திரும்பிப் பார்த்தது.
‘என் மீதும் குஜராத் மீதும் வீசப்பட்ட கற்களை நான் அமைதியாகச் சேகரித்துவந்தேன். அந்தக் கற்களைக் கொண்டுதான் குஜராத்தை பலமாகக் கட்டமைத்தேன்!’ எவ்வளவு அழுத்தமான வாசகம்! உன் எதிரிகளின் அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் ஒரு நொடியில், ஒரு வாக்கியத்தில் தகர்த்து உதிர்ததுவிட்டாய், மோடி! அமைதியாக காரியத்தைச் சாதித்துவிட்டாய்!
உன் சித்தாந்தமும் என்னுடையதும் ஒன்றுதான். உன் அணுகுமுறையும் என்னுடையதும் ஒன்றுதான். ஆனால், உன் செயல்திட்டம் அபாரமானது. யூதர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்பதை முடிவெடுத்தவுடன் நான் என் ராணுவத்தைதான் அழைத்தேன். அவர்களிடம்தான் பொறுப்பை ஒப்படைத்தேன். ஜெர்மனியிலும் ஜெர்மனியைத் தாண்டியும் பல வதை முகாம்களை அவர்கள் உருவாக்கினார்கள். வீடுகளில் புகுந்து, இனம் கண்டு யூதர்களை இழுத்து வந்தார்கள். நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாகக் கொன்றார்கள்.
ஆனால் நீயோ இஸ்லாமியர்களை அழிக்க இந்துக்களைப் பயன்படுத்திக்கொண்டாய். யோசித்துப் பார்த்தால் இதைவிட அற்புதமான ஒரு திட்டத்தை யாராலும் வகுக்கமுடியாது என்றே தோன்றுகிறது. செய்யவேண்டியதைச் செய்துவிட்டு நீ அழகாக ஒதுங்கிக்கொண்டுவிட்டாய். ம், விளையாடு என்று பச்சைக்கொடி காட்டிவிட்டு நீ புன்னகையுடன் பின் நகர்ந்துவிட்டாய்.
யூதர்கள் ஜெர்மனியின் இதயத்தை அழிக்கவந்த கிருமிகள் என்பதை ஜெர்மானியர்கள் நம்பினார்கள். நம்ப வைத்தேன். ஆனால், அவர்களையே யூதர்களுக்கு எதிராகத் திருப்பிவிடும் கலையை நான் கைக்கொள்ளவில்லை. நீ என் சகோதரன் அல்ல, என் குரு என்று நான் அழைத்ததன் காரணம் இப்போது புரிகிறதா?
மோடி, நீ காந்தி பிறந்த மண்ணில் இருந்து தோன்றியிருக்கிறாய். விமானப் படைகளைக் கொண்டுதான் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை என்னால் வீழ்த்தமுடிந்தது. ஆனால், காந்தி உண்ணாவிரதம் மூலமாகவே பிரிட்டனை விரட்டியடித்துவிட்டாராமே! எப்பேர்ப்பட்ட சாதனை! எனக்கும்கூட மிஸ்டர் காந்தியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அகிம்சையின் முக்கியத்துவம் பற்றி. யூதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது பற்றி. சத்தியத்தின் முக்கியத்தும் பற்றி. யூதர்களுக்கும்கூட அவர் கடிதம் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வன்முறையை உதறிவிட்டு, அன்பாலும் நேசத்தாலும் என்னை வீழ்த்தவேண்டுமாம்! ஓவென்று சிரித்துவிட்டு காந்தியை நான் மறந்துபோனேன். ஆனால், நீ மறக்கவில்லை. மூன்று நாள் உணவை மறுத்ததன் மூலம், உன் ஒட்டுமொத்த எதிரிகளையும் நீ வாயடைக்கச் செய்துவிட்டாய்.
‘குஜராத்தில் சிறுபான்மையினருக்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?’ பந்தலில் இந்தக் கேள்வி உன்னிடம் கேட்கப்பட்டபோது நான் கூர்மையாக உன் முகத்தைதான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு அசைவும் இல்லை உன்னிடம். விரிந்த புன்னகை விரிந்தபடியே இருந்தது. உன் கண்கள், புருவம், கன்னம் எதிலும் அசைவில்லை. நீ துடிக்கவில்லை. பதறவில்லை. (ஒருமுறை தொலைக்காட்சி பேட்டியில் நீ தயங்கியும் சீறியும் பயந்தும் நடுங்கியதைப் பார்த்திருக்கிறேன்!)
நீ உன் உதடுகளை இயல்பாகப் பிரித்தாய். பிறகு சொன்னாய். ‘சிறுபான்மையினருக்காக நான் எதுவும் செய்யவில்லை. பெரும்பான்மையினருக்காகவும் எதுவும் செய்யவில்லை. நான் குஜராத்துக்காக உழைக்கிறேன். குஜராத்தின் முன்னேற்றத்துக்காகவே பணியாற்றுகிறேன். சிறுபான்மை, பெரும்பான்மை என்று மக்களை நான் பிரித்து பார்ப்பதில்லை.’
சொல்லி முடித்துவிட்டு, அடுத்த கேள்வி என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்தாயே! அந்த இடத்தில் நான் மீண்டும் இறந்துபோனேன். என் அகந்தை அழிந்த சமயம் அது. நீ என்னை உலுக்கியெடுத்துவிட்டாய், நரேந்திர மோடி. என் அத்தனை சாதனைகளையும் நீ துடைத்து அழித்துவிட்டாய். முதல் முதலாகப் பயத்தை நான் தரிசித்தது உன்னிடம்தான்.
நடைபெற்றதை ‘கலவரம்’ என்று அழைக்கும் துணிச்சல் உனக்கு மட்டும்தான் இருக்கிறது. சடலங்கள் புதைக்கப்பட்ட கையோடு தேர்தலில் நின்று, வாக்கு சேகரித்து, வெற்றி பெறும் தீர்க்கமும் தீரமும் உன்னிடம் மட்டும்தான் இருக்கிறது.
நான் கேள்விப்பட்டது நிஜமா என்று தெரியவில்லை. குஜராத்துக்கு மட்டுமின்றி முழு இந்தியாவுக்கும் நீ தலைமை தாங்கப்போகிறாயாமே! உண்மைதானா? அதற்கான முன்னோட்டம்தான் இந்த உண்ணாவிரதமா? நிச்சயம் நீ வெற்றி பெறுவாய் நரேந்திர மோடி. ஆரிய ரத்தம் தூய்மையானது. உலகை ஆளும் திறன் கொண்டது. நீ மெய்யான ஆரியன். நீ வெல்வாய்!
குஜராத்தைப் போலவே இந்தியாவையும் மோடி வளர்த்தெடுக்கவேண்டும் என்று பலர் என் காதுபடப் பேசிக்கொண்டார்கள். நான் சிரித்துக்கொண்டேன். நீயும் சிரித்துக்கொண்டுதான் இருப்பாய் அல்லவா?
அன்புடன்
அடால்ஃப் ஹிட்லர்
0
நந்தன்









September 21st, 2011 at 9:09 am
கேணத்தனமான கட்டுரை!
September 21st, 2011 at 9:51 am
மோடி பிரதமர் ஆக வேண்டும்.காங்கிரஸ் கூட்டம் ஒழிய வேண்டும்…
September 21st, 2011 at 9:56 am
idiotic
September 21st, 2011 at 10:38 am
நல்ல கட்டுரை நந்தன். முகத்தில் அடித்தாற்போல் உண்மையை உரத்து சொல்லியிருக்கிறீர்கள்.
September 21st, 2011 at 11:29 am
I didn’t expect such an idiotic article from Tamil paper. There may be some different opinion. Each one can discuss that here. But this is one sided stupid article. what are you trying to say here? Does media supported Modi?. Every one know about Indian media. Don’t be too stupid.
September 21st, 2011 at 11:43 am
இது ஒரு நோய் மன நிலை,மோடி ஒன்றும் ராஜபக்சே போன்றோ,இத்தாலிய சோனியா போன்றோ, இன ஒழிப்பில் ஈடுபடவில்லை.கோத்ரா கலவரங்கள் ஒரு தீவிரமான எதிர் வினை மட்டுமே,அது மக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர் வினை மட்டுமே.மக்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் கிளர்ந்து எழுந்தார்கள் அதற்கும் ஹிட்லரின் இன அழிப்புக்கும் தொடர்பு படுத்துவது,அவரை இழிவு படுத்துவது போல் ஆகும்,சதாம் உசேனால் சக முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோதும்(http://en.wikipedia.org/wiki/Saddam_Hussein#Genocidal_campaign_against_Kurds),தாலீபான்களால் சகோதர இன மக்கள் கொன்று அழிக்கப்பட்ட போதும்,கம்போடியாவில் போல்பாட் கொலைகள் செத போது(http://en.wikipedia.org/wiki/Pol_Pot ) ஏன் இப்படி சொல்லவில்லை,உங்களின் கள்ள மெளனம் இப்போது மட்டும் ஏன் சந்தி சிரிக்கிறது.ஏன் என்றால் பெரும்பான்மை மதத்தை சார்ந்தவரை கேவலப்படுத்துவது எளிது.அதில் குளிர்காயலாம் என நினைக்கிறிர்கள்.வாழ்க உங்கள் போலி சமூக உணர்வு,”போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்”சிறுபான்மையினருக்கு உங்களை போன்ற போலி சமூக வியாதிகள் இருக்கிறார்கள்.எங்களுக்கு மோடி இருக்கிறார்.
September 21st, 2011 at 11:53 am
மோடியை இட்டலோரு ஒப்பிடவே முடியாது. அதுவும் இந்த சமயத்தில். இட்டலர் கடைசி வரை இனவெறியை, யூத வெறுப்பை வெளிப்படையா பிரச்சாரம் செய்த ‘தலைவர்’ ; ஆனால் மோடி அதே போல் முஸ்லீம்களை வெறுக்க, அழிக்க வெளிப்படையா பிரச்சாரம் செய்யவில்லை. 2002 குஜாராத் படுகொலைகளை சரியான முறையில் தடுக்க, தன் கடமையை ஒழுங்க செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுதான் அவர் மீது.
அத்வானி, உமா பாராதி, பால் தாக்கரே போன்றவர்கள் தான் தொடர்ந்து பல பத்தாண்டுகளாக வெறுப்பை உமிழ்ந்து வன்முறையை தூண்டியவர்கள். முக்கியமாக 1990இல் அத்வானி நிகழ்த்திய ரத யாத்திரை தான் பெரும் தூண்டு கோல். ’கொலைகாரப் பய’ என்று அத்வானியை தான் சொல்ல வேண்டும். அதுவரை இல்லாத அளவு நாடு முழுவதும் இந்து-முஸ்லீம் மோதல்கள் உருவாகி, 1992இல் பாபரி மஸ்தி அழிப்பு, அதன் தொடர்சியான பெரும் படுகொலைகள், மும்பாய் குண்டு வெடிப்புகள் என்று முடிந்தன. அதை எல்லாம் இப்ப நாம் ‘மறந்து’ விட்டோம். அத்வானி தப்பித்து கொண்டுவிட்டார். பிரதமராக முயல அனுமதித்தோம். (1995இல் ஜெயின் டைரி ஹவால வழக்கு மட்டும் அவர் மீது தொடுக்க்பட்டாமல் இருந்திருந்தால், அவர் பிரதமாரக வந்திருப்பார். நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை).
திரு.நந்தன் : கம்யூனிசத்தை ஆதரிக்கும் உங்களை போன்ற இடதுசாரிகள், ஸ்டாலின், மாவோ போன்ற ‘தலைவர்கள்’ நிகழ்த்திய பெரும் மனித அழிப்புகளை, படுகொலைகளை ‘பெருசு படுத்தாமல்’, இன்றும் அவர்களை ’தானை தலைவர்கள்’ என்று ஏற்று கொள்கிறீர்கள் அல்லவா ? மோசி விசியத்தில் அத்தனை தூரம் செல்ல சொல்லவில்லை.
பி.ஜெ.பி முதல்வர்களிள் அவர் மட்டும் தான் நேர்மையானவர். லஞ்சம் வாங்குவதே இல்லை. பிரமச்சாரி. குடும்பம் இல்லை. எளிமையான வாழ்க்கை. யாரையும் அருகே அண்ட விடுவதில்லை. குஜராத்தில், அவர் கட்சிக்குள்ளேயே அவருக்கு ‘எதிரிகள்’ ; யாரையும் ’சம்பாதிக்க’ விடுவதில்லை என்று ஆத்திரம் பலருக்கும். குஜராத் வளர்சிக்கு அருமையாக செயல்படுகிறார். அதை தொடர்வதுதான் சரி என்று கருதுகிறேன். தேசிய அரசியலில் குதித்து, பிரதமர் கனவை நிறைவேற்றவே இப்ப அவர் நிகழ்த்தியிருக்கும் ‘உண்ணாவிரத’ ஸ்டண்ட்.
1963வரை சுமார் பத்தாண்டுகள் காமராஜர் தமிழக முதல்வராக அருமையாக செயலாற்றினார். 1963இல் தேசிய அரசியலில் ஈடுபட முதல்வர் பதவியில் இருந்து விழகினார். (பெரியார் அதை கூடாது என்று எதிர்த்தார்). இழப்பு தமிழகத்திற்க்கு தான். அதே போல் மோடி இன்னும் பல ஆண்டுகள் குஜராத்தில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் நிறைய உள்ளன. ஒரு முதல்வர் அளவுக்கு, பிரதமர் hands on action செய்ய முடியாது. பிரதமராக இருந்தால் பெருசா ‘சாதிக்க’ சாத்தியமில்லை. Policy making அளவில் தான் முடியும். அதுக்கு வேறு நிறையே பேர் பி.ஜெ.பியில் இருக்காக.
எனவே மோடி, குஜராத் அரசியலை தொடர்வதுதான் நல்லது என்று படுகிறது. அவர் செய்த குற்றங்களை மறுக்கவில்லை. ஆனால் உமா பாரதி போன்ற ஒருவர் முதல்வராக வருவதை காட்டிலும், மோடியே தொடர்வது மேல்.
September 21st, 2011 at 12:09 pm
இஸ்லாமியர்கள் அனைவரும் மோடியை ஹிட்ராகவே கருதுகிறார்கள். உங்கள் ஒப்பீடு சரியானது தான்.
September 21st, 2011 at 12:14 pm
1999 முதல் 2004 வரை, தி.மு.க, பி.ஜெ,பியுடன் கூட்டணி வைத்திருந்தது. 2002 குஜராத் படுகொலைகள் நிகழ்ந்து போது, மத்திய அரசில் பி.ஜெ.பி யின் NDAவில் தி.மு.காவும் அங்கம் வகித்தது. முரசொலி மாறன் முக்கிய கேபினட் அமைச்சர். குஜராத் படுகொலைகளுக்கு பி.ஜெ.பியை குற்றம் சொல்பவர்கள், அதன் அன்றைய முக்கிய கூட்டாளியான, மத்திய அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்த தி.மு.க பற்றி பேசுவதில்லை. Collective responsiblity of union cabinet ? இன்னும் சொல்லபோனால், 1999 தேர்தலில் தி.மு.க பி.ஜெ.பி கூட்டணிக்கு தான் வாக்களித்தனர். (திரு.நந்தன் அந்த தேர்தலில் நீங்க யாருக்கு வாக்களித்தீர்கள் என்று சொல்ல முடியுமா ?). அதாவது திராவிட இயக்கத்தை காக்க தி.மு.கவிற்க்கு வாக்களிக்கிறோம் என்று நியாயப்படுத்தி கொண்டனர். ஜெயலிலதா பி.ஜெ.பியுடன் கூட்டணி வைத்தால், அது ‘பார்பனிய கூட்டணி’ என்று பேசுபவர்கள், தி.மு.க – பி.ஜெ.பி கூட்டணி பற்றி இன்று பேசுவதே இல்லை. Strange !!
September 21st, 2011 at 12:21 pm
இல்லை, அப்படி பொதுப்படுத்த முடியாது. குஜாராத் தேர்தல்களில் முஸ்லீமகள் பலரும் மோடியை ஆதரித்துள்ளனர் :
http://articles.timesofindia.indiatimes.com/2010-10-12/india/28251798_1_civic-polls-muslim-candidates-congress-bastion
2002 படுகொலைகளை தவர்த்து பார்த்தால், மோடியின் நிர்வாகதில், மொத்த குஜார்த்தும் பெரும் நன்மை அடைந்திருப்பதை உணர்ந்து, புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பெருகி, அதில் நன்மை அடைந்த பல முஸ்லீம் பகுதிகள் மோடிக்கே வாக்களித்தனர். பல coastal areasகளிலும் இது நிகழ்ந்தது.
குஜராத்திற்க்கு வெளியே இருப்பவர்களின் பார்வை தான் இன்னும் அப்படியே இருக்கிறது.
September 21st, 2011 at 12:28 pm
This ariticle is a rubbish!! we can see this kind of aricles in a personel blog posts! i was wondering how this is publisihed in tamil paper.later i realized that the new editior is marudhan!! i am sure we get this kind of idotic articles in tamil paper frequently!!
September 21st, 2011 at 12:39 pm
பிதற்றல்
September 21st, 2011 at 12:42 pm
Total Barf!
September 21st, 2011 at 12:58 pm
Expected somewhat a better article from Tamil Paper considering the standard of articles (At least) in the recent times. Disappointing.. Requesting Nandhan to write an article on “Great Purge” of Stalin
September 21st, 2011 at 2:25 pm
பிதற்றல்,இது ஒரு நோய் மன நிலை,மோடி ஒன்றும் ராஜபக்சே போன்றோ,இத்தாலிய சோனியா போன்றோ, இன ஒழிப்பில் ஈடுபடவில்லை.கோத்ரா கலவரங்கள் ஒரு தீவிரமான எதிர் வினை மட்டுமே,அது மக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர் வினை மட்டுமே.மக்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் கிளர்ந்து எழுந்தார்கள் அதற்கும் ஹிட்லரின் இன அழிப்புக்கும் தொடர்பு படுத்துவது,அவரை இழிவு படுத்துவது போல் ஆகும்
September 21st, 2011 at 3:06 pm
I didn’t expect such an idiotic article from Tamil paper. Don’t be oneside.
September 21st, 2011 at 3:36 pm
இடதுசாரிகளிடமிருந்து எவ்வளவு பெரிய பெரிய கட்டுரைகள் மோடியை குறிவைத்து தாக்கி வருகிறதோ அவ்வளவு நாட்டு நலனுக்காக, மக்கள் நல்வாழ்வுக்காக சரியான பாதையில் மோடி செல்கிறார் என்பது இன்றைய அரசியல் பாலபாடம் ஆகிவிட்டது.
மோடியை குற்றவாளி எனக் கூறி இந்தியாவில் எந்த போலீஸ் நிலையத்தில் எத்தனை கேஸ்கள் உள்ளன ? மான ரோசமுள்ள சோறு திங்குற மாவோ போல்போட் அடிவருடிகள் பதில் சொல்லவும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் முட்டாளாக இருக்கவும் முழு உரிமை உண்டு என்பதை நிரூபிக்கும் கட்டுரை இது.
September 21st, 2011 at 6:18 pm
worst article even by the standards of pseudo-secular activists!! Don’t just go by what paid activists (Teesta, sarabhai, ndtv, cnn) speak.Listen to some balanced views too
http://www.financialexpress.com/news/why-india-needs-narendra-modi/375103/0
http://www.youtube.com/watch?v=JFm4R8wQlh4
http://www.youtube.com/watch?v=ZzR–kouon0
September 21st, 2011 at 7:28 pm
I like the way in which the matter is written an the choice of words n this new concept of hitler writing. But I disagree STRONGLY with the content. Zeta UNLIKES. One Question :what is the main objective of this ARTICLE!!!
September 21st, 2011 at 9:20 pm
nandhan,
what is ur view for the HINDUS killed in GODRA train accident. Why no one is speaking about it .Do you think, we have to take the beat from them and kep silent like how this fool/**** congress doing? This is stupid article, i have ever read in tamilpaper.
Marudhan keep it up. Pls stop the ANEE article about VEDAM too. You are showing real face of RED flag holders.
I don’t think u will publish this. anyhow , my view is this.
September 21st, 2011 at 9:33 pm
அருமை நந்தன். இந்துத்துவ தமிழ் பேப்பரில் நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? நீங்கள் சொல்வது போல் மோடி ஹிட்லரை எப்போதோ மிஞ்சிவிட்டார். ராஜபக்ஷேவும் இந்த வகையரா தான். அவரை விட்டுவீட்டீர்களே?
September 21st, 2011 at 10:02 pm
நந்தன,
நீங்கள் கம்யூனிஸ்ட் என அறிகிறேன்..
அடடா!!
தவறு செய்து விட்டீர்களே நந்தன்!!
உங்கள் பொய் சொல்லும் திறமைக்கும்,
உங்கள் துவேஷத்தை பரப்பும் கருத்துக்களுக்கும்,
உங்கள் சுயநல/தேசத்துரோக எண்ணங்களுக்கும்,
உங்கள் கயமைத்தனமான எழுத்துக்களுக்கும்,
உங்கள் சகுனியை வெல்லும் சூழ்ச்சித்திறனுக்கும்,
நீங்கள் தி.மு.க வில் அல்லவோ இருக்க வேண்டும் ?
தவறு செய்து விட்டீர்களே நந்தன்!!
September 21st, 2011 at 11:20 pm
முஸ்லீம்களுக்கு மோடி மீதும் பாஜக மீதும் வெறுப்பு வரவேண்டும் என்று கடுமையாக உழைப்பவர்கள் கம்யூனிஸ்டுகளும், திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும்தான். பாஜகவில் ஏராளமான முஸ்லீம்கள் இருக்கிறார்கள். முஸ்லீம் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் கேனையர்கள் போலவும், இந்த கம்யூனிஸ்டுகள் மட்டுமே முஸ்லீம்களின் நலனை சிந்திப்பவர்கள் போலவும் இவர்கள் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை.
இந்தியாவில் இருக்கும் முஸ்லீம் சமுதாயத்தில் ஷிஆ பிரிவினர் முழுக்க முழுக்க பாஜக ஆதரவாளர்கள் என்பது இங்கே உள்ள எத்தனை பேருக்கு தெரியும்? அது மட்டுமல்ல, எல்லா தேர்தலிலும் சுமார் 10இலிருந்து 15 சதவீதம் வரைக்கும் முஸ்லீம்கள் பாஜகவுக்கு வாக்களிக்கிறார்களே. இந்தியா டுடே சர்வேக்களில் கூட 10 -15 சதவீத முஸ்லீம்கள் பாஜகவுக்கு வாக்களிப்பதாக கருத்துகணிப்பு தெரிவிகிறதே. பிகாரில் ஒரு சில தொகுதிகளில் பாஜகவின் இந்து வேட்பாளர் முஸ்லீம் தொகுதிகளிலும், பாஜவின் முஸ்லீம் வேட்பாளர் இந்து தொகுதிகளிலும் ஜெயித்திருக்கிறார்களே? அது ஏன்? அவர்களை மிரட்டியா ஓட்டு வாங்குகிறது பாஜக?
குஜராத்தில் நடந்தது இன ஒழிப்பு அல்ல. கலவரம். கலவரத்துக்கும் இன ஒழிப்புக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் கட்டுரை எழுத வந்துவிடுகிறார்கள்.
டெல்லியில் நடந்தது இன ஒழிப்பு. அதில் சீக்கியர்கள் மட்டுமே கொல்லப்பட்டார்கள். இன ஒழிப்பில் ஈடுபட்டவர்க்ள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஸ்லீம்களும் இந்துக்களும். சீக்கியர்கள் மீது நடந்த கலவரத்தில் பெரும்பங்கு வகித்தவர்கள் முஸ்லீம்கள் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்? டெல்லி இன ஒழிப்பில், ஒரு முஸ்லீமும் இந்துவும் கொல்லப்படவில்லை. இறந்தவர்கள் அனைவரும் சீக்கியர்கள் மட்டுமே. இதுதான் இன ஒழிப்பு.
குஜராத்தில் நடந்தது கலவரம். இருபுறமும் கொல்லப்பட்டார்கள். கலவரத்தை நிறுத்த குஜராத் போலீஸ் கொன்றவர்களில் இந்துக்களே அதிகம். கலவரத்தில் மூன்றில் ஒருபங்கு இந்துக்களும் கொல்லப்பட்டார்கள். அவர்களை கொன்றது யார்? முஸ்லீம்கள்தானே? அங்கு நடந்தது பாகிஸ்தானின் திட்டமிட்ட கலவரம். அதற்கான ஆதாரங்கள் நிச்சயம் உண்டு. அந்த கலவரத்தை முன்னின்று நடத்திய பல முஸ்லீம்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருப்பதை செய்திகளில் பார்க்கலாம்.
நேர்மையாகவும் நியாயமாகவும் அணுகாமல் இப்படி பாரபட்சமாக கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ்காரர்களும் பிரச்சாரம் செய்து, முஸ்லீம்களில் உள்ள சில தறுதலைகளுக்கு இப்படி உசுப்பேத்தி சமூகத்தை வன்முறை பாதைக்கு திருப்புவதில் உங்களைபோன்ற வக்கிரம் பிடித்தவர்களே முக்கியமான பங்கு வகிக்கிறார்கள்.
மோடி ஒரு இந்து. அவர் ஒரு குல்லாவை அணியப்போவதில்லை என்று தெரிந்திருந்தும் அவரிடம் குல்லாவை கொடுத்துவிட்டு, அவர் மறுத்ததும் இஸ்லாமை அவமதித்துவிட்டார் என்று பேட்டி கொடுப்பதுதான் இஸ்லாமை அவமதிக்கும் விஷயம்.
சுன்னி முஸ்லீம்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுவதும் ஓட்டு போடாததும் அவர்கள் விருப்பம். ஆனால் பொய்களை சொல்லி அவர்களை உசுப்பேற்றி இந்தியாவை இனக்கலவரத்தின் விளைநிலமாக ஆக்க முனையும் மருதன் போன்ற தறுதலைகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது தமிழ் பேப்பர் போன்ற பொறுப்பான பத்திரிக்கைகள் செய்யவேண்டிய விஷயம்.
பாஜக ஒரு பொறுப்பான கட்சியாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. தீவிரவாதத்துக்கு சென்ற சிவசேனா போன்ற கட்சிகளை கூட மட்டுப்படுத்தியிருக்கிறது. அகாலிதளத்துடன் கூட்டு வைத்து இந்தியாவுக்கு எதிரான மதரீதியான பிரிவினை கருத்துக்களுக்கு தடை போட்டுள்ளது. ஏன் நாகாலாந்து போன்ற முழுக்க முழுக்க கிறிஸ்துவ பகுதிகளில் கூட வென்றுள்ளது.
இவ்வாறு ஒரு மைய அரசியல்கட்சி மீது கடுமையான வெறுப்பை வளர்த்துவிடுவது இந்தியாவுக்கு ஆபத்தானது. இதனை பெரும்பாலான முஸ்லீம்கள் உணர்ந்துள்ளார்கள். ஆனால், முஸ்லீம் அரசியல்வாதிகளே முஸ்லீம்களின் பிரதிநிதிகள் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் மருதன் போன்ற வாந்திகள், திமுகவிலும் அதிமுகவிலும் பாஜக போன்ற கட்சிகளிலும் கூட இருக்கும் முஸ்லீம்களை முஸ்லீம் பிரதிநிதிகள் இல்லை என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மதரீதியான பிரிவினை வாதமே இந்தியா உடைய காரணமாக இருந்தது. அதன் விளைவை இன்றும் இந்திய முஸ்லீம்கள் துயரத்தோடு எதிர்கொண்டு வருகிறார்கள். அதே போன்ற ஒரு பிரிவினையை தமிழ்பேப்பரும் செய்வது வருந்தத்தக்கது.
September 22nd, 2011 at 1:09 am
நந்தன் – சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதுங்கள் பார்ப்போம். அப்புறம் நான் உங்கள் மோடி பற்றிய கட்டுரையை சீரியஸ்-ஆக எடுத்து கொள்கிறேன். (நாட்ல ஒரு நல்ல விஷயம் நடக்குற மாதிரி தெரிஞ்சா உங்களுக்கு பொறுக்காதே!!)
September 22nd, 2011 at 7:52 am
திரு.முகமது அலி அவர்களுக்கு,
பொன்னெழுத்துக்களில் பதிக்கவேண்டிய கருத்துக்கள்.தெளிவான நேர்மையான சிந்தனை.உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்..ஆனால் நன்றி சொல்ல மாட்டேன்!!
என் நன்றியெல்லாம் நந்தனுக்குத்தான்.அவருடைய சிப்பியால்தான் எங்களுக்கு முகமது அலி என்ற முத்து கிட்டியுள்ளது.
ஒரு முகமது அலி இருக்கும்வரை ஆயிரம் நந்தன்கள் வந்தாலும் கவலையில்லை!
September 22nd, 2011 at 9:48 am
என்ன இது தமிழ் பேப்பர் திமுக, காங்கரஸின் கைக்கூலி போல் செயல் படுகிறதே. வளர்ச்சியைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களின் கட்டுரையை பிரசுரித்தது தேவை இல்லாதது.
வாழ்க பாரதம். வெல்க அதன் மக்கள். வெல்க மக்களின் ஒற்றுமை.
September 22nd, 2011 at 12:28 pm
மோடி ரசிகர்கள் அனைவரையும் பொங்கி எழ வைத்த கட்டுரைக்கு ஏன் வந்தனங்கள்.
மோடி எப்படி முதல்வர் ஆனார் என்பதே தனி கதை.எந்த தேர்தலிலும் நிற்காத,அரசு,பொது துறை.தனியார் போன்ற எந்த துறையிலும் பணி புரியாத ,அதிகம் படிக்காத சாதி சங்கம் போன்ற மத வெறி சங்கமான ஆர் எஸ் எஸ் ல் சிறு வயதில் இருந்து இருந்த ஒரே ஒரு தகுதியில் ராப்ரி தேவி போல நேரடியாக முதல்வர் ஆக்கப்பட்டவர்.
அவர் தலைவராக உருவாக குஜராத் கலவரங்கள் எப்படி பயன்பட்டுள்ளன எனபதில் இருந்து அவர் பெருமையை அறிந்து கொள்ளலாம்.
அவரை எதிர்த்த (அவருக்கு சீட்டை விட்டு கொடுக்க மறுத்த)பான்த்யாவிர்க்கு நேர்ந்த கதி,அவரை ஆதரித்த,அவர் புகழ் வளர்க்க பல கொலைகள்(போலி என்குண்டேர்கள்)புரிந்த போலீஸ் காரர்களை அவர் கைகழுவி விட்டதில் அவர் சாமார்த்தியத்தை புரிந்து கொள்ளலாம்.அவரை கொல்ல மாதம் ஒருமுறை வந்து என்சௌண்டேர் ஆகி கொண்டிருந்த தீவிரவாதிகள் அவருக்கு பிடித்தமான போலீஸ் அதிகாரிகள் கைதானதும் வராமல் நின்று போனதில் இருந்து அவருக்கு இருக்கும் தெய்வ அருளையும் புரிந்து கொள்ளலாம்(தெய்வமே தீவிரவாதிகளின் மனதை மாற்றி அவருக்கு பிடித்தமான போலீஸ் வெளியில் வரும் வரை தீவிரவாதிகளை அனுப்பாமல் செய்தது)
September 22nd, 2011 at 12:41 pm
இந்துத்வ தமிழ் பேப்பரா? கம்யூனிச அடிவருடி மருதன் ஆசிரியராக இருக்கும்போது அது எப்படி சாத்தியம்?
September 22nd, 2011 at 12:47 pm
திரு.முகமது அலி அவர்களே……வாழ்க பல்லாண்டு……உங்கள் நேர்மையை, நெஞ்சுறுதியை,தேசபக்தியை வணங்குகிறேன்………
September 22nd, 2011 at 2:29 pm
அன்புள்ள முஹம்மது அலி அய்யா நாம் ஐந்து நமக்கு இருபத்தியிந்து என்ற முஸ்லிம்களை உயர்த்தும் தத்துவங்களை தேர்தல் நேரத்தில் உருவாக்கி மத நல்லிணக்கத்தை வளர்த்தவரை நீங்கள் புகழ்வதில் தவறுண்டோ
சியாவோ சுன்னியோ போராவோ அஹ்மேடியாவோ ஒருவருக்கு கூட அவர் ஆட்சியில் MLA சீட்,மந்திரி பதவி தராமல்(முஸ்லிம்கள் குஜராத்தில் ஒன்பது சதவீதம்)அனைவரையும் ஒன்றாக நடத்துவதில்,நடத்தியதில் இருந்தே அவர் மேன்மையை அறிந்து நீங்கள் வாழ்த்துவது மிக சரி. எடியுரப்ப ஒரு முஸ்லிம் கூட பா ஜ கா நிறுத்தி வைக்கவில்லை என்றாலும் ஒருவரை மந்திரியாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆக்கவும் செய்தாரே அவரை போன்ற போலி இந்திதுவவியாதியாக இல்லாமல் உண்மையான இந்திதுவவியாதியாக இருக்கும் மோடியின் புகழை நீங்கள் பாடுவது பெருமையாக உள்ளது.
மத்திய அரசாங்கம் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணாக்கர்களுக்கு வழங்கும் உதவி தொகையை வழங்க மாட்டேன் என்று கொள்கையாக ஆள்வதே அவரின் சிறுபான்மை முன்னேற்றத்திற்கான சான்று அல்லவா
யாரால் திடீரென்று குதித்து முதல்வர் ஆனாரோ அவர்கள் சொல் கேட்க கூடாது என்று மருத்துவமனை சென்று படுத்து கொண்டாரே (பண்ட்யாவிர்க்கு சீட் கொடுக்க கூடாது என்று)அதில் இருந்தே அவரின் அற்புதமான தலைமை பண்பு,குணம் அனைவருக்கும் தெரிந்ததே .அதை மற்ற மாநிலங்கள் உணர இவ்வளவு நாட்கள் ஆனதே இந்தியாவின் துரதிஷ்டம் தான்.
செய்த்தவுடன் பாண்ட்யா உடனே இறந்தாரே அதில் இருந்து ஆண்டவனின் அருளும் அவருக்கு இருக்கிறது எனபது அனைவருக்கும் புலப்படவில்லையா .மாத மாதம் அவரை கொல்ல வந்த தீவிரவாதிகளை கொன்று கொண்டிருந்த அவர் செல்ல போலீஸ் அனைவரும் கைது செய்யப்பட்டவுடன் தீவிரவாதிகள் வருவது நின்று போனதே அதில் இருந்தே அல்லாவின் பூரண அருளும் அவருக்கு இருக்கிறது எனபது தெளிவாக தெரிகிறதே
September 22nd, 2011 at 3:16 pm
பூவண்ணன்,
அடுத்த பிரதமராவதற்கு களத்தில் உள்ளவர்கள்:
ராகுல்
மோடி
மாயாவதி/ஜெயா
உங்கள் ஒட்டு யாருக்கு?
September 23rd, 2011 at 12:45 pm
முகம்மது அலி அய்யருக்கு வனக்கம்
September 23rd, 2011 at 12:48 pm
முஸ்லீம் வகுப்புவாத அரசியல்வாதிகளுக்கு விருந்து வைத்து பிரிவினை அரசியல் நடத்தும் தமிழ்நாட்டை விட கம்யூனிஸ்ட்கள் அரசாண்ட மேற்கு வங்கத்தை விட முஸ்லீம்களின் வாழ்க்கைத்தரத்தை மோடியின் குஜராத் நன்றாக வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. 9.1 சதவிகித முஸ்லீம்கள் உள்ள குஜராத்தில் மாநில அரசு உள்துறை உயர்பதவிகளில் 7.9 சதவிகிதம் உள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 5.6 சதவிகிதம் முஸ்லீம்கள். மாறி மாறி நோன்பு கஞ்சி குடித்து சட்டசபைகளில் முஸ்லீம் வகுப்புவாதிகளை உட்கார வைத்து அலங்காரம் பார்த்து இருந்தாலும் இறுதியில் உயர் பதவிகளில் முஸ்லீம்களின் சதவிகிதம் 0. சட்டசபைத் தேர்தல்களில் இஸ்லாமியரை நிறுத்தவில்லை என குற்றம் சாட்டப்படுகிற அதே மோடிதான் உள்ளாட்சி தேர்தல்களில் 100க்கும் மேற்பட்ட முஸ்லீம்களை பாஜக சார்பில் நிற்கவைத்து அவர்களுக்காக பிரச்சாரம் செய்து வெற்றியடையவும் செய்திருக்கிறார். போலி மதச்சார்பின்மை அரசியலால் மனப்பிளவுண்டு தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயத்தை மேம்பாட்டு பணிகள் மூலம் மோடி மீண்டும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துள்ளார். மதக்கலவரங்களுக்கு பொறுப்பு போலி மதச்சார்பின்மை பேசிய இன படுகொலைகளை இந்தியாவில் நடத்திய போலி மதச்சார்பற்ற சோசலிஸ்ட் கட்சியான காங்கிரஸும் மானுட விரோத கம்யூனிஸ்ட்களுமே.
September 23rd, 2011 at 4:38 pm
வணக்கமெல்லாம் சொன்னா உங்களை ஒதுக்கி வெச்சுடுவாங்களே.. விசாரிச்சுக்கிட்டீங்களா? அப்துல் கலாமையே ஒதுக்கினவங்க!
September 23rd, 2011 at 4:42 pm
அடடே.. அது என்ன மந்திரமோ மாயமோ தெரியவில்லை.
மோடி என்றவுடனே ஒரு சிலருக்கு அடி வயிற்றில் அமிலம் சுரந்து விடும் போல!
அப்படியே ஜிவ் என்று எரிந்து தள்ளிவிடுகிறது.
இவரைப் போன்றவர்களுக்காகவே பல மோடிகள் உருவாக வேண்டும் இந்தியா செழிக்க!
//அதிகம் படிக்காத சாதி சங்கம் போன்ற மத வெறி சங்கமான ஆர் எஸ் எஸ் //
ஹிஹி
September 23rd, 2011 at 5:29 pm
குந்தி தேவி குழந்தை பெற்ற செய்தியை கேட்ட காந்தாரி, வயிற்றெரிச்சலால் குழவிக்கல்லை எடுத்து தன் வயிற்றில் அடிததுக்கொண்டாளாம்……. நந்தன் போன்ற கம்யூனிஸ்ட்டுகளின் புலம்பலை பார்த்தால் அதுதான் நினைவுக்கு வருகிறது. நாற்பது ஆண்டுகால ஆட்சிக்கு பிறகு வங்காளத்தை ஒரு பெரிய சேரியாக மாற்றியவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?சுதந்திரத்தின் போது முன்னனி தொழில் நகரமாக இருந்த கல்கத்தாவை இந்தியாவின் பிரமான்ட குப்பைமேடாக மாற்றியது தான் கம்யூனிஸ்டுகளின் சாதனை……கேரளாவில் இவர்களின் சாதனை மலையாளிகளை உலகெங்கும் சென்று எச்சில் கிளாஸ் கழுவ வைத்ததுதான்…….இந்த லட்சணத்தில் மோடியை குறை கூற வந்து விட்டார்கள்………மக்கள் முன்னேறாமலேயே இருந்தால்தானே இவர்கள் பிழைப்பு நடக்கும்.? முன்னேறிய நாடுகளில் கம்யூனிசம் வளரவில்லை…..கம்யூனிசம் வளர்ந்த நாடுகள் முன்னேறவில்லை………
September 23rd, 2011 at 5:41 pm
// எந்த தேர்தலிலும் நிற்காத,அரசு,பொது துறை.தனியார் போன்ற எந்த துறையிலும் பணி புரியாத ,அதிகம் படிக்காத ……//
நீங்கள் மேலே குறிப்பிட்ட அத்தனை விஷயங்களும் பெருந்தலைவர் காமராஜருக்கும் பொருந்தும்………ஆனால் தமிழகத்தின் மிக சிறப்பான ஆட்சியை அவர்தான் வழங்கினார்…..என்னமோ மற்ற தலைவர்கள் எல்லாம் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதுபோலவும், மோடி ஒருவர் மட்டும் தகுதி அற்றவர் போலவும் பிரச்சாரம் செய்வதை விடுங்கள்…….உங்களை போன்றவர்கள் என்னதான் அவதூறு பிரச்சாரம் செய்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்……அந்த நல்ல மனிதரை நிச்சயம் பாரத பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள்
September 24th, 2011 at 12:55 pm
If Mohd.Ali is telling the truth, then he has become iyer. When like u people will realise the fact and change?
September 24th, 2011 at 9:51 pm
உஷ்…சரவணா குமார்!
ரொம்ப உரக்க சொல்லாதீர்கள்..
நம் மாநிலத்திலேயே மிக தீவிர கம்யூனிஸ்ட்கள்
ஹிந்து N.ராம்,கமல்ஹாசன்,மதன் ஆகியோர் கோபித்துக்கொள்வார்கள்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் என்பவர்கள் சிகப்பு Ferrari வைத்துள்ளவர்கள்.
September 24th, 2011 at 10:56 pm
Shan Riyaz…
முஸ்லீம்கள் உண்மையே பேசமாட்டார்கள் அய்யர்கள் தான் உண்மை பேசுவார்கள் என்று உறுதியாக நம்புகிறீர்கள் போல இருக்கிறதே! அய்யர்களை புகழ்ந்ததற்கு வாழ்த்துக்கள்.
September 24th, 2011 at 10:59 pm
மஹா மட்டமான சைக்கோ கட்டுரை!
September 24th, 2011 at 11:23 pm
காமராஜர் கட்சியில் பல வருடம் இருந்தவர்,பல தேர்தல்களில் போட்டியிட்டவர்,தொண்டர்களை அரவணைத்து கொண்டு செல்வதில் வல்லவர்.அவரை கட்சி தலைவராக போட்டியிட அவர் குரு சத்யமூர்த்யே சொல்லியதால் போட்டியிட்டு ஜெயித்தவர்.
மோடி எப்படி நேரடியாக முதல்வர் ஆனார்.அவரை பிடிக்காத அவர் கட்சிக்காரர்களை எப்படி நடத்தினார்,நடத்துகிறார் என்பதில் அவர் தலைமை பண்பை தெரிந்து கொள்ளலாம்.
குஜராத்தில் முஸ்லிம்களுக்கு ஏதோ மோடி தனி ஒதுக்கீடு கொடுத்தது போலவும் அதன் மூலம் அவர்கள் ஏழு சதவீதம் இருக்கின்றார்கள் என்று பேசுவது நகைச்சுவை.அவர் பதவி ஏற்பதற்கு முன் அவர்கள் எவ்வளவு சதவீதம் இருந்தார்கள் ,இப்போது எவ்வளவு என்று பார்த்தால் உண்மை புரியும்.அவர் பல நாட்டாமைகளை உருவாக்கி உள்ளார் எனபது அதை விட சிறந்த நகைச்சுவை.பத்து வருடங்களாக ஒருவருக்கு கூட வாய்ப்பு தராத (அதை போல ஒன்பது சதவீதம் உள்ள மற்ற எந்த சாதியை யாவது நடத்த முடியுமா)ஒருவருக்கு அனைத்து ஷியா வோட்டு போடுகிறார்கள் எனபது ஏற்று கொள்ள கூடியதா
அவர் பதவி ஏற்கும் போது பெண்கள் ஆண்கள் சதவீதம் 883 :1000 .இப்போது 886 எவ்வளோ பெரிய சாதனை.எல்லாரும் வியக்கும் சாதனை.
September 24th, 2011 at 11:34 pm
நம்ம ஊரில் படித்த டாக்டர்,engineer அரசு வேலைக்காக பல எக்ஸாம் எழுத வேண்டும்.எம்ப்லோய்மென்ட் exchange பதிவு செய்து பல வருடம் காத்திருக்க வேண்டும்.இங்கயே படித்த ஆனால் வெளிமாநிலத்தில் பள்ளி முடித்த வர்களுக்கு கூட இங்கு வேலை வாய்ப்பு கிடையாது.ஆனால் குஜராத்தில் யார் வேண்டுமானாலும் சென்று சேரலாம்.ஏனென்றால் அங்கு படித்தவர்கள் மிக குறைவு.எப்பேர்பட்ட பெருமை.
கருணாநிதியும் ஜெயாவும் கடந்த பத்து வருடங்களில் ஏழு அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கினார்கள் .மோடி எத்தனை தொடங்கியுள்ளார் தெரியுமா பூஜ்யம்.அவருக்கு கடவுள் அருள் இருப்பதால் நோய்களே இல்லாமல் பார்த்து கொள்வார் அல்லவா
பிறந்து ஒரு வருடத்திற்குள் இறக்கும் குழந்தைகள்,பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார் போன்ற குறியீடுகளில் குஜராத் பல மாநிலங்களுக்கு கீழ் தான்
தனி நாடு கேட்கும் கஷ்மீரிகள்,நாகலாந்தை சேர்ந்தவர்கள் குஜராத்திகளை விட பல மடங்கு ராணுவத்தில்,துணை ராணுவத்தில் (ராணுவத்தில் சேர அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடு உண்டு.இதில் இடங்கள் காலியாக இருக்கும் மாவட்டங்கள் குஜராத்தில் அதிகம்) சேருகிறார்கள் ஒவ்வொரு வருடமும்.மோடி மிகவும் பெருமை பட வேண்டிய விஷயம் இது.
அவர் ஒருவரை தவிர மற்ற மந்திரிகள் யாரையாவது வளர விடுகிறாரா .தனிப்பட்ட ஒரு மனிதனாக சாதிப்பது போல் காட்டுவது ஹிட்லரை போன்ற வழி தான்.
September 24th, 2011 at 11:41 pm
நந்தன் மோடியை குற்றம் சொல்லும் நீங்கள் ஏன் இதை விட பல மடங்கு மக்களை கொன்று குவித்த பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா அவர்களை பற்றி எதுவும் பேசவில்லை. ஏன் எதிரிக்கு எதிரி நணபன் என்ற பாணியில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிவிடீர்களா? அதுவும் தவிர 300 மேற்பட்ட ஹிந்துக்கள் கலவரத்தில் கொல்லப்பட்டார்களே? அவர்கள் உயிருக்கு எல்லாம் மரியாதை இல்லையா? உங்கள் கருத்து நந்திகிராம் சம்பவத்திற்கு காரணமான் கம்யூனீச்டு அரசாங்கத்திற்கும் பொருந்துமா? 1000 கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரஸ் அரசாங்கத்தை பற்றி வாயே திறக்கவில்லையே. இன்றளவும் சொல்லலா துயரை அனுபவிக்கும் பாக்கிஸ்தான் பங்களா தேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் வாழ் ஹிந்துக்களை பற்றி ஏன் வாயே திறக்கவில்லை. குஜராத கலவரம் முன்பென்ன இந்தியா சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகளாக இது தானே நடந்தது. இதை எல்லாம் ஏன் எழுதவில்லை. ஒரு வேலை நீங்கள் இந்திய கம்யூனிஸ்டு என்பதால் இந்திய பிரச்சனைகளை மட்டுமே எழுதுவீர்களா? அப்படி என்றால் ஏன் பாலஸ்தீனம் பற்றி ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளும் விழுந்து அடித்து எழுதுகிறீர்கள். சரி இந்த கேள்விகளுக்கு காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்.
ஹிட்லர் என்ற கிறித்துவ தீவிரவாதியை வைத்து மோடி அவமானபடுத்தி எழுதியதால் மோடிக்கு ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. அது சரி லெனினும் மாவோவும் செய்யாத கொலைகளா என்ன? ஹ்ம்ம். இது ஒன்றும் 20 ஆன் நூற்றாண்டு அல்ல்… சிகப்பு சட்டைகள் சொல்வதை எல்லாம் நம்பி ஏமாற….
September 24th, 2011 at 11:46 pm
ஒரு உண்மை சொல்லட்டுமா? உங்கள் பசப்பு வார்த்தையை நம்பி எந்த ஒரு இந்திய முகமதியர்களும் நம்ப போவதில்லை. உங்களை நம்பினால் என்ன நடக்கும் என்பதற்கு இலங்கை தமிழர்கள் நிலை ஒரு நல்ல உதாரணம்….. இந்திய முகமதியர்கள் பாஜாகவுக்கு ஆதரளிபார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். மோதி ஆட்சி செய்யும் பட்சத்தில் அவர் ஹிந்துவா, முஸ்லீமா என்று பார்த்து எந்த திட்டத்தையும் நிறை வேற்றப் போவதில்லை… ஆம் அன்று உங்கள் ஓட்டு வங்கி அரசியல் நிர் மூலமாகி உங்கள் கட்சி கொடிகள் அரசு அருங்காட்சியகத்திற்கு அனுப்பக் கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை…..
September 25th, 2011 at 3:32 pm
கம்யூனிஸ வாடை அடித்த மாக்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதற்கும், தமிழ்பேப்பரை கம்யூனிச குண்டர்கள் ஹைஜாக் செய்துவிட்டனர் என்பதற்கும் இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டு.
மருதனின் ஆசியில் நடக்கும் விஷம் கக்கும் கட்டுரை இது. இதுவரை வந்த எந்தக் கருத்துக்கும் கட்டுரை ஆசிரியரான நொந்தன் பதில் சொல்லவில்லை என்பதே இந்தக் கட்டுரை மோடியின் மீது சேற்றைவாரி இறைப்பதற்கு மட்டுமே என்பது தெளிவாகிறது.
இந்தியாவை சீனாவுக்குக் காட்டிக்கொடுக்கும் ”தோழர்கள்” இருக்கும் கட்சி கம்யூனிஸ்ட். இவர்கள் எதைப் பற்றியாவது நல்லவிதமாய் கட்டுரை எழுதினால்தான் ஆச்சரியப் படவேண்டும்.
வாழ்க தமிழ் பேப்பர்.
தமிழ் பேப்பரை வாசிப்பதை நிறுத்தி பலமாதங்கள் ஆகிவிட்டது.
ராம்கியின் புத்தக விமர்சனத்துக்காக வந்து இந்தக் குப்பையை வாசிக்க நேர்ந்துவிட்டது.
எனக்கு நேரம் சரியில்லை என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்..
September 25th, 2011 at 7:34 pm
மோடி பிரதமர், ஜெ உள்துறை அமைச்சர். இந்த காம்பினேஷனில் நாடு உருப்பட வாய்ப்பு அதிகம்….
பாடாவதி சீ…. மாயாவதி….. முதலில் உ.பியில் உருப்படியாக ஏதாவது செய்யட்டும்….
ராகுல் யாரு……. ஓ ராவுல் வின்சியா?
September 26th, 2011 at 3:19 pm
ராம், முசுலிம்கலும் சரி, அய்யர்கலும் சரி பொய் மட்டுமே பேசுவர். ‘முகம்மது அலி அய்யர்கள்’ மட்டுமே “உன்மையை” தவிர வேறு எதுவும் பேசுவதில்லை.
September 27th, 2011 at 5:03 pm
நந்தன் எப்படியாவது எழுதட்டும். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.
இது தமிழ்ப்பேப்பரின் கருத்தா? பத்ரிக்கு இக்கருத்து சம்மதமா? தெரிந்துகொள்ள விருப்பம். பத்ரி பதிலளித்தால தெளிவடைவேன்.
September 27th, 2011 at 7:47 pm
சந்துரு: நந்தனின் கருத்து நந்தனுடையது. என் கருத்து என்னுடையது. உங்கள் கருத்து உங்களுடையது. தமிழ்பேப்பரில் அனைத்துவிதமான கருத்துகளுக்கும் இடம் இருக்கும். அவர் கருத்து என்னுடையதுகூட என்றால் நான் அதனை வெளிப்படையாகத் தெரிவிப்பேன். இந்த விஷயத்தில் நந்தனின் கருத்தை நான் ஏற்கவில்லை. அதனால் என்ன? அவர் தொடர்ந்து அவர் கருத்தை தமிழ்பேப்பரில் எழுதுவார்.
September 28th, 2011 at 3:02 pm
good article i agree even some here were against that… i dont care…
September 29th, 2011 at 2:09 pm
இது தான் இந்துத்வா என்று குற்றம் சாட்டப்படும் “தமிழ்பேப்பருக்கும்” வினவு, எழவு, கழுவு, சவுக்கு, டமாரம் போன்ற ஒரு டஜன் கம்யூனிஸ்டு ஆதரவு இணைய பத்திரிக்கைகளுக்கும் உள்ள வித்தியாசம்.
மாவோ போல்போட் அடிவருடிகளா …. நல்லா பார்த்துக்குங்க…ஜனநாயகம்ன்னா என்னன்னு !
November 3rd, 2011 at 10:35 pm
கட்டுரையாளர் இந்த ஒப்பீடு மூலம் தன்னை புத்திசாலியாக காட்டிக்கொள்ள முயல்கிறார். ஒரு கலவரத்தில் ஏற்படும் விளைவுகளுக்கு தார்மீகரீதியாக அந்த மாநில முதல்வர் பொறுப்பேற்கலாமே தவிர, அவரே தூண்டிவிட்டார், அவரே ஸ்பான்ஸர் செய்தார் போன்ற குற்றச்சாட்டுகள் அரைவேக்காட்டுத்தனமானவை. அந்த கலவரத்தில் நிறைய முஸ்ஸீம்கள் உயிர்/உடைமைகளை இழந்தார்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் முஸ்லீம்கள் மட்டும்தானா.. பதிலடியாக சில இந்துக்களும் பாதிக்கப்பட்டார்களே.. அவர்களை யார் தூண்டிவிட்டதாம்..? பாகிஸ்தானில் இருந்த முஷாரப்பாக இருக்குமோ…?
கோயமுத்தூரில் கலவரம் நடந்ததே… அதை தூண்டி விட்டது யார்..? அத்வானி என்று சொல்வீர்களோ..?
January 2nd, 2012 at 6:08 pm
மேற்கண்ட ஒவ்வொரு மறுமொழிகளையும் தனித் தனி இடுகைகளாக பிரசுரிக்கலாம் போலவே,ஒவ்வோன்றும் அவ்வளவு நீளம்.
June 25th, 2012 at 10:55 am
dirty cm is now working overtime and sleepless night for improving his state and try to wash his dirt.some times allah use the bad elements to do good things.
July 12th, 2012 at 4:53 pm
தெஹல்கா காணொளியில் எப்படியெல்லாம் கொலை செய்தோம் என்று குற்றவாளிகள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்களே, அதில் போலிசு எங்களை தடுக்கவில்லை என்பதும், ஆட்சியாளர் மோடியின் அனுமதி இருந்தது என்பதையும் தானே சொன்னார்கள். கவனிக்கவில்லையா? வாஜ்பேயி கூட அரசின் தார்மீக கடமையில் தவறக் கூடாதென மோடியை கடிந்து கொண்டாரே மறந்து போனதா? நேரடியாக செய்தால் தான் கொலையா. இனப்படுகொலை நடக்கும் போது தடுக்காமல் வேடிக்கை பார்த்தது குற்றம் ஆகாதா? இதன்படி பார்த்தால் பக்சேவும் குற்றாவாளி இல்லை எனலாமோ? தமிழன் என்ற நம் சொந்தம் செத்தது இனப்படுகொலையாம், இது எதிர்வினையாம். தமிழன் ஹிந்து என்றால் இனப்படுகொலை. குஜராத்தி முஸ்லிம் என்றால் இனச்சுத்திகரிப்பு எதிர்வினை. செத்தது மனிதர்கள் என்றோ, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றோ தோன்றவில்லை. “யூதர்களை கொல்கிறோம், மனிதர்களை அல்ல” என்று சொல்லும் நாஜிக்கும், இந்த இனப்படுகொலையை, அதற்கு முழு காரனமான/துணைபோன ஒருவரை ஆதரிப்பவருக்கும் என்ன வேறுபாடு. இந்த கட்டுரையின் ஒப்பீடு சரியே. படுகொலை நடத்தியது சதாமோ, பக்சேவோ, மோடியோ, ஹிட்லரோ அனைவரும் குற்றவாளிகளே! ஆதரிப்போரும் குற்றத்திற்கு சாட்சிகளே! பக்சேவை ஜனாதிபதியாக தொடரச் செய்யும் சிங்கள இனவாதிகளுக்கும், மோடியை பிரதமராக்கிப் பார்க்க நினைக்கும் மதவாதிகளுக்கும் எண்ணம் அடிப்படையில் எத்தனை ஒற்றுமைகள். ஒரு மதச்சார்பற்ற நாட்டின் தலைவர், பல்வேறு மக்களையும் ஒருங்கிணைத்து செல்லக் கூடியவராக இருக்க வேண்டும். ஒரு சார்புடையவராக இருத்தலாகாது. கறைபடியாத கரங்கள் உள்ளவராக இருக்க வேண்டும். இரத்தக் கறையுடன் இருக்க கூடாது. அப்படி ஒரு ஆளுமை இந்தியாவுக்கு இது வரை அமையவில்லை. மோடி பிரதமரானாலும் பெரிய வித்தியாசமில்லை. ஆங்கிலேயரின் மதக்கலவரங்கள், பிரித்தாலும் சூழ்ச்சியை பின்பற்றி நிலையான ஆட்சியை தருவார். வாழ்க இந்தியா!
July 31st, 2012 at 2:42 pm
aayiram thaan kaaranam sonnalum modi muslimgalin ethiri thaan.
July 31st, 2012 at 2:43 pm
gujarathil ini innoru kalavaram nadakka india muslims vida maattom
August 12th, 2012 at 12:21 pm
katturai
August 12th, 2012 at 12:26 pm
katturai tharamaanathu. vimarsanankal ul nokkamudaiyathu. inthuththuva aathravaalarkalidam irunthu veru yenna yethir paarkka mudiyum ?
August 13th, 2012 at 12:55 pm
vajra…
“tamil paper “alam”"kinaru”"odai “yenkira peyarkalil nadaththapadum parpaniya arathanai inaiyathalankalai yenakum theriyum.
i.d padithuvitu amerikkavil velai seithu kondu panam sampathithukondu inku inththuva veriyai otti valarppathu yaar?yenbathum theriyum.
innum sollapponaal intha “nanthan “katturaiye kooda “poli “yaakavum irukkalaam.
modiyai aaraathiththu naanku katturai veliyaanaal modiyai yethirththu samanilai kaakka oru katturai veliyaakum.
ithellaam inaiyathala “kampasooththiram “thaan. ithu theriyaamal inku yevanum “muttaal “illai.
aravinthan neelakandan oru 10 varudaththukku munpe yennidam “kaalachuvattil “vaanki kattiyavarthaan.
yenna seivathu ithil tamilil yeppadi yeluthuvathentru yenakku theriyavillai. ..athu therinthaal inku palarukkum muthuku murinthu pokum.
August 14th, 2012 at 11:53 am
மோடி ஒன்றும் இந்த நாட்டை காப்பாற்ற வந்த பித்த மகன் அல்ல. இந்த இருபத்தொராம் நூற்றாண்டின் இரத்தம் குடித்த மோசமான ராட்சசன் மோடி. ஹிட்லருக்காவது “யூத வெறுப்பு எனபது அவனோடு பிறந்தது மட்டும்தான். ஆனால் மோடியின் முஸ்லிம் வெறுப்புக்கு நீண்ட பாரம்பரியமே உண்டு. நூறு கொலை செய்து விட்டு ஆயிரம் பேருக்கு “அன்ன தானம் “வழங்கினால் அவன் அனாதாதாவா..?அலது “…யோக்கிய சிகாமணியா “?இங்கு கருத்து எழுதியவர்கள் கூறட்டும்.
அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் நவீன நீரோ மோடியின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்ததாக “புருடா “விடுகின்றனர். குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் வேறுவழியின்றி அங்கு வாழ சபிக்கப்பட்டவர்கள். அவர்களின் தாய் மண் அது. அவர்களின் தொழில்,ககாச்சாரம்,பண்பாடு ,வாழ்முறைகளை நீண்ட காலம் குஜராத்தில் கழித்தவர்கள். ஒரு மோடிக்கு பயந்து அவைகளைடேல்லாம் “துறந்து “விட்டு வருவது யாருக்கும் சாத்தியமில்லை.
இங்கு மயிலாபுரிலும் ,கும்பகோணத்திலும் வாழும் பிராமணர்கள் தி.மு.க வுக்குத்தான் ஒட்டு போடுகிறார்கள். அதற்காக பிராமணர்களுக்கு தி.மு.க மீது பாசம் என்றா அதை எடுத்துக்கொள்ள முடியும் ?
1967 ஆம் ஆண்டு தேர்தலில் :வேறு வழியில்லை .பிராமணர்கள் பூணூலை இருக்க பிடித்து கொண்டு தி.மு.க வுக்கு வாக்களிக்க வேண்டும் “என்றார்raajaaji
August 30th, 2012 at 6:25 am
|| சந்துரு: நந்தனின் கருத்து நந்தனுடையது. என் கருத்து என்னுடையது. உங்கள் கருத்து உங்களுடையது. தமிழ்பேப்பரில் அனைத்துவிதமான கருத்துகளுக்கும் இடம் இருக்கும். அவர் கருத்து என்னுடையதுகூட என்றால் நான் அதனை வெளிப்படையாகத் தெரிவிப்பேன். இந்த விஷயத்தில் நந்தனின் கருத்தை நான் ஏற்கவில்லை. அதனால் என்ன? அவர் தொடர்ந்து அவர் கருத்தை தமிழ்பேப்பரில் எழுதுவார்.||
Kodos badri.
September 10th, 2012 at 11:43 pm
stupid article
September 25th, 2012 at 3:09 pm
‘என் மீதும் குஜராத் மீதும் வீசப்பட்ட கற்களை நான் அமைதியாகச் சேகரித்துவந்தேன். அந்தக் கற்களைக் கொண்டுதான் குஜராத்தை பலமாகக் கட்டமைத்தேன்!’ எவ்வளவு அழுத்தமான வாசகம்!
நீ உன் உதடுகளை இயல்பாகப் பிரித்தாய். பிறகு சொன்னாய். ‘சிறுபான்மையினருக்காக நான் எதுவும் செய்யவில்லை. பெரும்பான்மையினருக்காகவும் எதுவும் செய்யவில்லை. நான் குஜராத்துக்காக உழைக்கிறேன். குஜராத்தின் முன்னேற்றத்துக்காகவே பணியாற்றுகிறேன். சிறுபான்மை, பெரும்பான்மை என்று மக்களை நான் பிரித்து பார்ப்பதில்லை.’
December 24th, 2012 at 4:28 pm
Excellent, well written article.