ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2

முதல் பாகம்

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் விவசாயத்துக்குள் நுழைந்து நாகரிகங்களாக உருமாற ஆரம்பித்தது. அதன் பின் எத்தனையோ நாகரிகங்களும் பேரரசுகளும் உருவாகி மடிந்துபோயிருக்கின்றன. கோடி தலைமுறைகள் வந்துபோயிருக்கின்றன. ஒருவேளை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருகதிரியக்க விபத்து நடந்திருந்தால் அதன் தாக்கத்தை இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருப்போம். காரணம், கதிரியக்கப் பொருட்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வீரியத்துடன் இருக்கும் தன்மையுடையவை.  இந்நிலையில், இன்று நாம் செய்யும் ஒரு தவறு நம்முடைய எத்தனை சந்ததிகளை அழிக்க வல்லது என்பதை நாம் பரிந்துகொள்ளவேண்டும்.

அணு உலைகளின் நீடித்த ஆபத்துகளும் சரி, விபத்துகளினால் ஏற்படும் பெரும் அழிவுகளும் சரி, மிகக் குறைவானதாகவே அணுசக்தி ஆதரவாளர்களால் மதிப்பிடப்படுகின்றன. இதற்குப் பின்னணியில் அணுசக்தி மேலண்மை செய்யும் தனியார் நிறுவனங்களின் பெரும்பணம் செயல்படுவதை யாரும் மறுக்க முடியாது. இவர்களின் ‘லாபி’ அமைப்புகள் உலக நாடுகளெங்கிலும் செயல்பட்டு தங்களுக்கு சாதகமான கொள்கைகளை உருவாக்கிக்கொள்கின்றன. மிகக் குறிப்பாக வளரும் நாடுகளை இவை குறிவைக்கின்றன. தனியாருடன் அணுஒப்பந்தங்களில் ஈடுபடுவதில்லை என்று சொல்லிவந்த இந்தியாவும் சமீப காலமாக மாறிவிட்டது.

மாறியபிறகு, அணு விபத்துகளின்போது மக்களுக்கு யார் உதவித்தொகை வழங்குவது என்பது குறித்த சட்டம் இயற்றப்பட்டது. இதுவும் முதலில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கைகழுவிவிட்டு ஓடும் வசதியை கொண்டிருந்தது. பின்னர் மக்களின் எதிர்ப்புக்குப் பிறகு இது கொஞ்சம் சரி செய்யப்பட்டுள்ளது. (தற்போதுகூடங்குளம் திட்டம் இந்தச் சட்டத்துக்குள் அடங்காது என்று அரசு கைவிரித்துள்ளது).

தனியார்மயமாதல் தன்னளவில் ஒரு கெட்ட பொருளாதாரக் கொள்கையல்ல. இன்று உலகளவில் வெற்றிகரமான ஒரே பொருளாதார வகைமையாக அதுவே உள்ளது. ஆனால் தனியார்மயமாதலில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் மக்களுக்கு நன்மைபயக்கும்படி செய்வதே அரசின் முக்கியக் கடமை. அதைச் செய்யத் தவறும்போது இலாபம் மட்டுமே குறிக்கோளான தனியார் நிறுவனங்கள் கடற்கொள்ளைக்காரர்களைப்போல சூறையாடத் துவங்கிவிடுகின்றனர். இந்தியாவில் அப்படி ஒரு கட்டுப்பாடான அரசு இயந்திரம் இருக்கிறதா என்பது பெரும் கேள்வி. இதில் இன்னொரு உண்மையையும் நாம் பார்க்க வேண்டும். இதுவரை அணுசக்தித் துறையில் இலாபம் பார்த்து வந்த சீமன்ஸ் எனும் தனியார் நிறுவனம் இனிமேல் அந்தத் துறையில் தான் செயல்படப் போவதில்லை என அறிவித்துள்ளது. இலாபத்தை விட மனித இனத்தின் மீது அது காட்டியிருக்கும் அக்கறை பாராட்டத் தகுந்தது. ஆனால் நம் அரசோ பழைய அணுசக்தி தயாரிப்பு முறைகளை நம் தலையில் கட்டிக்கொண்டிருக்கிறது.

நம் தேவையில் வெறும் 2.7% மின்சாரத்தைத் தயாரிக்கும் அணு உலைகளினால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். இவற்றுக்குப் பதிலாக மாற்று மின்சக்தி உற்பத்தியை இந்தியா ஊக்குவிக்கவேண்டும். நமது மின்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய பலஆலோசனைகளை பன்னாட்டு சக்தி நிறுவனம் (International Energy Agency) வழங்கியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50%க்கும்மேல் வீணாக்கிவிடுகிறது என்கின்றன ஆய்வுகள். இதில் தேவயற்ற மானியங்களும், ஊழல்வழி இலவச மின்சாரம் பெறுவதும் உள்ளது. ஆக நாம் நமது மின்சார விநியோகத் திறனை மேம்படுத்துவது முதலில் அவசியம். ஆனால் அது குறித்து இங்கே யாரும் திட்டமிடுவதாகத் தெரியவில்லை.ஒரே ப்ராஜெக்டில் அதிக இலாபம் பார்க்கலாம் என்கிற அரசியல்தானே இது? IEA முன்வைக்கும் ஆலோசனைகளில் மிக முக்கியமானது ஒவ்வொருபகுதிக்குமான மின்சாரத் தேவைகளை அந்தந்த பகுதிகளிலேயே உற்பத்தி செய்ய முயலவேண்டுமென்பதே. தற்போதைய மாற்று மின் உற்பத்திமுறைகளைக் கொண்டு இதை நிச்சயம் சாத்தியமாக்கலாம்.

இந்தியா தன் மின்சக்தித் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள ஐ.இ.ஏ முன்வைக்கும் சில முக்கியப் பரிந்துரைகளைப் பார்ப்போம்.

 • மின்சக்தி தயாரிப்பை பயன்பாட்டிடத்துக்கு அருகில் கொண்டு செல்வது. இதன்மூலம் சிறியதாக பல திட்டங்களைச்செய்து அந்தந்த பகுதிகளின் வேலைவாய்ப்பையும் பெருக்க முடியும்.
 • மின்சக்தி மானியங்கள் அதற்குத் தகுதியான மக்களுக்கு மட்டும் வழங்கப்படவேண்டும்.
 • மின் வினியோகம் முறைப்படுத்தப்பட்டு அதனால் ஏற்படும் பெரும் இழப்பைத் தவிர்க்க வேண்டும்.
 • மின்சக்தி திருடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்.
 • சூரிய சக்திமூலம் வீட்டுத் தேவைகளுக்கு மின்சக்தி தயாரிப்பு பரவலாக்கப்படவேண்டும்.

காற்றாலை மூலம் மின்சக்தி தயாரிப்பில் இந்தியா முதலிடத்திலுள்ளது. ஆண்டு முழுவதும் சூரிய ஒளி விழும் பகுதிகள் இந்தியாவில் ஏராளமாயக உள்ளன. எந்தத் தீங்கும் விளைவிக்காத இவற்றைக் கொண்டு மின்சக்தியை உருவாக்குவதை தவிர்த்துவிட்டு தலைமுறைகள் தாண்டி பேராபத்துக்களை உருவாக்கும் அணு ஆலைகளை அமைக்க நம் அரசுகள் முடிவெடுப்பதன் பின்னணியில் ஒரே ஒரு மனநிலைதான்தென்படுகிறது. அது மக்களின் உயிரையோ, வாழ்க்கை தரத்தையோ கிஞ்சித்தும் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை.

கூடங்குளம் அணு உலை அமைப்பதற்கு எதிராக டாக்டர் உதயகுமார் முன்வைத்திருக்கும் 13 முக்கிய கருத்துக்கள் இவை

 1. கூடங்குளம் அணு உலைகள் அமைக்க ஜனநாயக முறைகள் கையாளப்படவில்லை. அணு உலையினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்களோ, பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த திட்டங்களோ தீட்டப்படவில்லை அல்லது அவை மக்கள் பார்வைக்குத் தரப்படவில்லை.
 2. தமிழக அரசு உலைக்கும் 2முதல் 5 கி,மீ வரை உள்ள இடங்கள் மக்கள் வாழத் தகுதியற்றவையாக வரையறுத்துள்ளது.( G.O. 828, 29.4.1991 – Public Works Department).  ஆனால் கூடங்குளம் அதிகாரிகள் மக்களிடம் வாய்மொழியாக அப்படி எதுவும் இல்லை என்று தன்னிச்சையாக பதிலளிக்கிறார்கள். இது அணு உலை ஆரம்பித்த பின்னர் தங்கள் வாழ்விடங்களிடமிருந்து மக்களை அப்புறப்படுத்தும் என்னும் பயத்தை அதிகப்படுத்துகிறது.
 3. உலைக்கு 30 கி.மீ சுற்றளவில் பத்து இலட்சம் மக்கள் வசித்துவருகின்றனர். விபத்து நேர்கையில் இந்தப் பெரிய மக்கள்திரளைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்தியமற்றது.
 4. அணு உலைகளை குளிரூட்ட பயன்படுத்தப்படும் தண்ணீர் கடலுக்குள் செலுத்தப்படவுள்ளது. அது கடல் நீரிலும், மீன்களிலும் கதிரியக்கத்தைசெலுத்தும். மீனவர்கள் மேலும் ஏழ்மைக்குத் தள்ளப்படுவார்கள். கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கும் (கன்னியாகுமரி, முட்டம் போன்ற அழகிய கடற்கரை சுற்றுலாத் தலங்கள் நேரடியாக பாதிக்கப்படும். குளச்சல் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களும் அதே கடல்வழியேயே அடையக்கூடியவை).
 5. ஏற்கெனவே தோரியம் பிரித்தெடுக்கும் (மணவாளக்குறிச்சி மணல் கம்பெனி) பணியில் இருந்தவர்களில் பலரும் புற்று நோயால்அவதிப்படுகின்றனர். இன்னொரு சோகம் இங்கே வேண்டாம்.
 6.  கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டுமானங்களின் தரங்கள் அங்கே வேலைபார்த்தவர்களாலேயே தரமற்றவை என்று கணக்கிடப்பட்டுள்ளன. (இவை வட இந்திய ஒப்பந்ததாரர்களால் செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்).
 7. அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் காட்டிலாகா அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூடங்குளத்தில் 3-6 அணு உலைகளுக்கு அனுமதி மறுத்துள்ளார்.ஆக 1-2ம் சூழலுக்கு பாதுகாப்பானதா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.
 8. பலரும் இந்தப் பகுதியில் எந்த இயற்கை சீற்றமும் வராது என தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு அது எப்படி நிச்சயமாகத் தெரியும்? 2004ல் இதேஅணு உலையின் கட்டுமானங்கள் சுனாமியால் இடிக்கப்பட்டன. மார்ச்19, 2006ல் இங்கே நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12, 2011ல் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (ஃபுக்குஷிமாவில் இயற்கை சீர்றம் குறித்த இத்தகைய மேம்போக்கான நம்பிக்கைகள் திட்டத் தோல்விகளை உருவாக்கியுள்ளதை சைன்ஸ் பத்திரிகை பதிவு செய்கிறது. உண்மையில் உலகின் எந்த பகுதியில் என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாகக் குறிக்கும் எந்த அறிவியலும் உருவாக்கப்படவில்லை).
 9. இந்தியப் பிரதமரே நம் நாட்டின் அனுசக்தி ஆலைகள் தீவிரவாதிகளின் டார்கெட்டாக உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
 10. ரஷ்ய நிறுவனத்துடன் விபத்து உதவித்தொகை வழங்குவது குறித்த ஒப்பந்தங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. ரஷ்யா தனக்கும் இந்தியஅரசுக்கும் 2008ல் ஏற்பட்ட இரகசிய உடன்படிக்கை தற்போதைய NPCIL சட்டத்தை மிஞ்சியதாக வாதாடிக்கொண்டிருக்கிறது.
 11. கூடங்குளம் அணு ஆலையின் கட்டுமானச் செலவு குறித்து பல்வேறு முரணான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. அவை இந்த திட்டம் யாருடைய இலாபத்துக்கு செய்யப்படுகின்றன எனும் கேள்வியை எழுப்புகின்றன.
 12. ஃபுக்குஷிமாவுக்குப் பிறகு உலக அளவில் அணுசக்தி குறித்த மாற்று அணுகுமுறைகள் உருவாகியுள்ளன. அமெரிக்காவோ ரஷ்யாவோ கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் எந்த புதிய அணு ஆலையையும் உருவாக்கவில்லை. இந்தியாவிலேயே மேற்கு வங்கமும், கேரள மாநிலமும் அணுசக்திக்கு எதிரான முடிவுகளை எடுத்துள்ளன.
 13. இந்திய அரசு அணு சக்தி மீது மதிகெட்ட ஈடுபாடுகொண்டுள்ளது. அதன் அணுத் திட்டங்களும் செயல்பாடுகளும் அதீத இரகசியத்தன்மையுள்ளவை. மக்களின் குற்றச்சாட்டுகளை கேட்கவே மறுக்கிறது அரசு. இதெல்லாம் உண்மையில் இந்திய மக்களின் இலாபத்துக்காகவாஅல்லது அமெரிக்க, ரஷ்ய, பிரெஞ்சு நாட்டு கம்பெனிகளின் இலாபங்களுக்கா? நம் நாட்டின் (இன்றைய) நாளைய மக்களின் உயிரைவிடவும் இலாபம் மேலானதா?

இன்னும் சில முக்கியமான காரணங்களும் உள்ளன. கூடங்குளத்தில் பயன்படுத்தப்படவிருப்பது உலகில் முதன்முதலாக உருவாக்கப்பட்டஅணுமின் உற்பத்தி தொழில்நுட்பங்களில் ஒன்றில் உருவான கலன்கள். 1969 வாக்கில் இந்தத் தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாற்பது வருடங்கள் தாண்டிய தொழில்நுட்பத்தை ஏன் நம் அரசு இத்தனை செலவில் இந்தியாவில் நிர்மாணிக்கிறது? அதுவும் ரஷ்யாவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பழசாகிப்போன உபகரணங்களை? அதீத வெப்பம் கொண்டியங்கும் கொதிகலன்களைக் குளிரூட்டவும் மின்சார உற்பத்திக்கு தேவைப்படும் நீருக்காகவும் தாமிரபரணி பேச்சிப்பாறை அணை ஆகிய விவசாய நீராதாரங்களிலிருந்து தண்ணீர் ஆலைக்குத் திருப்பிவிடப்படுகிறது. நீர்வளம் குறைந்துபோகும் நிலை வந்தால் விவசாயத்துக்கல்ல, அணு ஆலைக்கே முதன்மை அளிக்கப்படும். வீட்டில் விளக்கெரியும் ஆனால் அடுப்பெரியாது!

அணுசக்தி நம் நாட்டின் முதன்மையான தேர்வாக இருக்கக் கூடாது. மாற்று மின்சக்தி தொழில்நுட்பங்கள் மிக விரைவாக உருவாகிவரும் இந்தக் காலகட்டத்தில் இது ஒரு முட்டாள்தனமான தேர்வு. அணுசக்தி உற்பத்தி மக்கள் நெருக்கமே இல்லாத இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். அதுவும் இயன்றவரை தவிர்க்கப்படவேண்டும். ஃபுக்குஷிமாவுக்குப் பின் நாம் நமது அணுசக்தி திட்டங்களை சீர்தூக்கி சரி செய்ய வேண்டும். நம்அணுசக்தி ஆலைகளின் பாதுகாப்பு தர நிலைகளை உலகளாவிய தன்னார்வ நிறுவனங்களைக் கொன்டு மதிப்பிட்டு மக்களுக்கு அறிவிக்கவேண்டும். ஒரு வெளிப்படையான அணு சக்தி அணுகுமுறை நமக்கு உடனடியாகத் தேவை.

கூடங்குளத்தை பொறுத்தவரை அங்கே அணு உலை அமைப்பது மாற்றியமைக்கப்பட்டு அதை மாற்று மின் உற்பத்தி நிலையமாகவோ கடலலையிலிருந்து மின்சாரம் உருவாக்கும் திட்டமாகவோ மாற்றப்படவேண்டும். அல்லது வேறு மாற்றுத் திட்டங்களுக்காக அதை பயன்படுத்தவேண்டும். சென்னை தலைமைச் செயலகக் கட்டடம் மருத்துவமனையாக மாறப்போவதில்லையா? அதுபோல்.

கூடங்குளத்தில் நடப்பது வெறும் கடற்கரையோரத்து மீனவர்களுக்கு ஆதரவான போராட்டமல்ல. அது இந்திய அளவில் அணுசக்தி அமைப்புகளின் மெத்தனத்தையும் இரகசியத் தன்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் எதிர்த்து நடத்தப்படும் போராட்டமே. இதற்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பது மிக மிக அவசியமாகும்.

சிறில் அலெக்ஸ்

0

Reference and Sources:

 • http://www.peacejam.org/news/Stand-With-Nobel-Laureates-Against-Nuclear-Power-603.aspx
 • http://www.slideshare.net/icpgamesa/elecindia2002
 • http://www.iea.org/
 • http://www.kalpakkam.net/2011/09/thirteen-reasons-why-we-do-not-want.html
 • http://www.kalpakkam.net/2011/07/nuclear-or-broke-indias-obsession-with.html
 • http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne110910Accident_Sites.asp
 • http://www.guardian.co.uk/world/2011/sep/09/fukushima-japan-nuclear-disaster-aftermath
 • http://www.eai.in/ref/ae/wte/wte.html
 • http://english.aljazeera.net/indepth/features/2011/06/201161664828302638.html
 • http://indiainperil.blogspot.com/2009/05/how-electricity-wastage-is-officially.html

29 comments so far

 1. Karthik
  #1

  //வீட்டில் விளக்கெரியும் ஆனால் அடுப்பெரியாது!//
  //கூடங்குளத்தில் நடப்பது வெறும் கடற்கரையோரத்து மீனவர்களுக்கு ஆதரவான போராட்டமல்ல. அது இந்திய அளவில் அணுசக்தி அமைப்புகளின் மெத்தனத்தையும் இரகசியத் தன்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் எதிர்த்து நடத்தப்படும் போராட்டமே//

  உண்மை. மிக நல்ல பதிவு. கட்டுரையாளருக்கு நன்றியும் பாராட்டும்.

 2. ilaiyaraja
  #2

  Good and truthful statement.

 3. அதிஷா
  #3

  இதுவே நல்ல கட்டுரையாக இருந்தாலும் இன்னும் கூட விரிவாக எதிர்தரப்பின் வாதங்களை எடுத்துக்கொண்டு எழுதலாமே..

 4. Sudharasn
  #4

  Siemens to Exit Nuclear Energy Business

  http://www.spiegel.de/international/business/0,1518,787020,00.html

 5. rk
  #5

  well said. keep up the good work.

 6. கே. தியாகராஜன்
  #6

  “அமெரிக்காவோ ரஷ்யாவோ கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் எந்த புதிய அணு ஆலையையும் உருவாக்கவில்லை. இந்தியாவிலேயே மேற்கு வங்கமும், கேரள மாநிலமும் அணுசக்திக்கு எதிரான முடிவுகளை எடுத்துள்ளன”

  தமிழன் மாத்திரம் ஏன் லேட்டா தூங்கி எழுந்து.. லேட்டா ரியாக்ஷன் கொடுக்கிறான்?

  “1969 வாக்கில் இந்தத் தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாற்பது வருடங்கள் தாண்டிய தொழில்நுட்பத்தை ஏன் நம் அரசு இத்தனை செலவில் இந்தியாவில் நிர்மாணிக்கிறது? அதுவும் ரஷ்யாவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பழசாகிப்போன உபகரணங்களை? ”

  இந்தியன்தான் இளிச்சவாயனா.. சொத்தைக்கத்த்ரிக்கயை தலயில் கட்டுவது போல் அரதை பழசையெல்லாம் தலயில் கட்டுறாங்க..

 7. களிமிகு கணபதி
  #7

  அணுமின் நிலையங்கள் ஒரு நாட்டுக்கு அவசியம் இல்லை என்பதுதான் என் புரிதலும். அவை வெறும் வியர்த்தம் என்பது பலவகைகளில் நிறுவப்பட்டு விட்டது.

  ஆனால், தமிழகத்தில் திடீரென்று இது ஒரு பிரச்சினையாக வெடித்து, இந்திய ஊடகங்கள் முழுக்க முதன்முதலில் பெரிது படுத்தப்படக் காரணம் என்ன ?

  இத்தனை நாட்களாக இந்தப் பிரச்சினையில் தலையே காட்டாதவர்கள் திடீரென்று ஒளிரும்விளக்குகளின் நடுவில் போராட வந்திருப்பது ஏன் ?

  நம்பகமான இடங்களில் இருந்து கிடைத்த தகவல் அதிர்ச்சி தருகிறது.

  தமிழக முதலமைச்சரான செல்வி. ஜெயலலிதா அவர்களிடம் கிறுத்துவ அமைப்பினர் சிலர் கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அவை அநியாயமானவை என்று அவரது கட்சியிலும், நட்பு கட்சிகளிலும் எதிர்ப்பு எழுந்ததாகவும் செய்தி. எனவே, ஜெயலலிதா அவர்களுக்குப் பிரச்சினை எழுப்பி, அரசியல் அழுத்தங்கள் தருவதற்காக எல்லாராலும் மறுக்க முடியாத ஒரு காரணமான அணுமின் நிலையப் பிரச்சினையைக் கிறுத்துவ அமைப்புக்கள் கையில் எடுத்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகங்களை வைத்து கையை முறுக்கிக் காரியம் சாதித்துவிடுவார்கள் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

  ஜெயலலிதா அவர்கள் இவர்களது அழுத்தத்துக்குப் பணிந்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால், அணுகுண்டு போட்டாலும் பிரச்சினை எழாது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம்.

  ஜான் பாண்டியனை வைத்து பரமக்குடியில் எழுந்த கலவரம்கூட இந்தக் காரணத்தால்தான் எழுந்ததாம். அரசியல் அழுத்தத்தை உண்டாக்குவதுதான் நோக்கம்.

  மிக விரைவில் ஜெயலலிதா அவர்களிடம் இருந்து சிறுபான்மை நலன் என்ற பெயரில் ஒரு அறிவிப்பை எதிர்பாருங்கள். அந்த அறிவிப்புக்குப் பின்னால் இந்தப் போராட்டம் ஊற்றி மூடப்படும்.

  .

 8. பொன்.முத்துக்குமார்
  #8

  அன்புள்ள களிமிகு கணபதி,

  அதிர்ச்சியாக மட்டுமல்ல, கொடூரமாகவும் உள்ளது.

  ஆனால் ஜெ கூட இந்த திட்டத்திற்கு எதிராகத்தானே அறிக்கை வெளியிட்டுள்ளார் போல இருக்கிறது ? (மக்களுக்கு பாதிப்பு விளைவிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டேன்)

  அன்புடன்
  முத்து

  பி.கு : அப்படி என்னதான் கோரிக்கை வைத்துள்ளார்களாம் அந்த கிறித்துவ அமைப்பாளர்கள் ?

 9. களிமிகு கணபதி
  #9

  /ஜெ கூட இந்த திட்டத்திற்கு எதிராகத்தானே அறிக்கை வெளியிட்டுள்ளார் போல இருக்கிறது ?/

  பொன். முத்துக்குமார்,

  உண்ணாவிரதத்தைப் போராட்டக்காரர்கள் வாபஸ் வாங்கிக் கொண்டு விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கும் ஜெவின் அறிக்கைக்கும் சம்பந்தம் இருக்கக்கூடும்.

  அல்லது, பிரச்சினையை மத்திய அரசின் பக்கம் தடம்மாற்றி விடுவதற்கு ஜெயலலிதாவின் புத்திசாலித்தனமான செயலாகவும் அது இருக்கக் கூடும்.

  நான் விசாரிக்கவில்லை.

  /அப்படி என்னதான் கோரிக்கை வைத்துள்ளார்களாம் அந்த கிறித்துவ அமைப்பாளர்கள் ?/

  ஒரு பெரிய லிஸ்ட் சொல்கிறார்கள். ஆனால், அவற்றில் முக்கியமானவை மூன்று:

  1. புறம்போக்கு நிலங்களையும், கோயில் நிலங்களையும் சர்ச்சுகள் கையகப்படுத்தச் சட்ட ரீதியான உரிமை.

  2. இதுவரை சர்ச்சுகள் மற்றும் கிறுத்துவ அமைப்புக்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை அவர்களுக்குச் சொந்தமாகக் கருதுவதற்குத் தேவையான அரசியல் மற்றும் அதிகார உதவிகள்.

  3. பாதிரியார்கள், கன்னியாஸ்த்ரீகள் தொடர்புடைய ஊழல்கள், பாலியல் குற்றங்கள், மற்றும் மரணங்கள் தொடர்பான பிரச்சினைகளைச் சர்ச்சுகளைத் தாண்டி எடுத்துச் செல்லாமல் இருக்கத் தேவையான வசதிகள். உதாரணமாக, காவல்துறையினர் குற்றங்களைப் பதிய மறுத்து சர்ச்சுக்குப் போய் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும். பத்திரிக்கைகள் மற்றும் பதிப்பகங்கள் இவை தொடர்பான செய்திகள் மற்றும் புத்தகங்கள் வெளியிட விடாமல் தடுக்கத் தேவையான அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும். (கேரளாவைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்த்ரீயும், ஒரு பாதிரியாரும் எழுதியுள்ள புத்தகங்கள் போன்றவை தமிழகத்தில் வெளிவராமல் தடுப்பது.)

  இந்த லிஸ்ட்டில் உள்ளவற்றை ஏற்றுக் கொண்டுவிட்டால், இந்த அணு உலை என்ன, அணுகுண்டே போட்டாலும் பிரச்சினை இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.

  ஆக மொத்தத்தில், சர்ச்சுகள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளதால், அணு உலையானது எந்தப் பிரச்சினையும் இன்றி தொடரும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

  ஏனெனில், அது இருக்கும்வரைதான் சர்ச்சுகள் போராட முடியும். அணு உலையை மூடினால் அவர்களது ப்ளாக்மெயில் பிழைப்பில் மண் விழுந்துவிடும்.

  .

 10. பொன்.முத்துக்குமார்
  #10

  “1. புறம்போக்கு நிலங்களையும், கோயில் நிலங்களையும் சர்ச்சுகள் கையகப்படுத்தச் சட்ட ரீதியான உரிமை.”

  என்ன கொடூரம் இது ? எவன் அப்பன் வீட்டு சொத்தை எவன் கொள்ளை அடிப்பது ? இதற்கு சட்ட ரீதியான உரிமையா ? சர்ச் நிலங்களை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த விட்டுவிடுவார்களா இவர்கள் ?

  “2. இதுவரை சர்ச்சுகள் மற்றும் கிறுத்துவ அமைப்புக்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை அவர்களுக்குச் சொந்தமாகக் கருதுவதற்குத் தேவையான அரசியல் மற்றும் அதிகார உதவிகள்.”

  நெஞ்சில் ரத்தமே வரும் போலிருக்கிறதே ? ஏசுவே, இவர்கள் அறிந்தே குற்றம் இழைப்பதால் அவர்களை எந்த பிறவியிலும் மன்னிகாதேயும்.

 11. haranprasanna
  #11

  களிமிகு கணபதி, இந்த 3 குற்றச்சாட்டுகளை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? இது குறித்து கிறித்துவ அமைப்புகளுக்குத் தெரியுமா?

 12. களிமிகு கணபதி
  #12

  /களிமிகு கணபதி, இந்த 3 குற்றச்சாட்டுகளை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?/

  ஹரன்ப்ரசன்னா,

  ஏற்கனவே சொல்லி இருந்தேனே? என் முதல் கருத்துவினையில் தெரிவித்ததை மீண்டும் இங்கு ஒட்டுகிறேன்.

  //நம்பகமான இடங்களில் இருந்து கிடைத்த தகவல் அதிர்ச்சி தருகிறது.//

  எனக்குத் தகவல் தெரிவித்தவரும், அது உண்மை என உறுதி செய்தவரும் மார்க்ஸியக் கொள்கையாளர்கள். இந்த அணு உலையை ருஷ்யா அளித்ததால் இப்பிரச்சினை குறித்துக் கவலை உள்ளவர்கள்.

  /இது குறித்து கிறித்துவ அமைப்புகளுக்குத் தெரியுமா?/

  போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அமைப்புகளுக்குத் தெரியாது. அவற்றின் பின்னணியில் இருக்கும் சர்ச்சுகளுக்கு மிக நன்றாகவே தெரியும்.

  [ஹெட்லைன்ஸ் டுடே சேனலில், இந்தப் போராட்டத்தின் தலைவரான ஒரு கிறுத்துவரிடம் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பற்றது என்பதற்கான தகவல்கள் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. அவருக்குத் தெரியவில்லை. பாவம். அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். இது மூடப்பட வேண்டும். இது மூடப்பட வேண்டும். இது மூடப்பட வேண்டும் என்றே சொல்லிக் கொண்டிருந்தார். உங்கள் ஊர் சர்ச்சைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தால்கூட அதே பதிலைச் சொல்லிவிடும் அபாயம் இருந்தது. நல்ல வேளையாக, அவர்கள் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.]

  போராட்டக் கூடத்தில் பங்குபெறுவோர்களில் பெரும்பான்மையோர் கிறுத்துவர்களாக மதம் மாற்றப்பட்ட மீனவர் சமுதாயத்தினர். கடலில் அணுக்கழிவுகள் கலந்து அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பயமுறுத்தப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரம் அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

  கடற்கரையோர கிராமங்களில் அரசு அதிகாரிகளோ, காவல்துறை அதிகாரிகளோ அனுமதி பெற்றுத்தான் நுழைய முடியும். அங்கு அணு உலை அமைக்கப்படுமானால், உளவுத்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் பார்வைகளில் இருந்து அந்தக் கிராமத்து செயல்பாடுகள் தப்ப முடியாது. அதையும் சர்ச்சுகள் விரும்பவில்லை.

  கூடங்குளத்தில் அணு உலை அமைவதை எதிர்க்கும் கிறுத்துவ அமைப்புக்கள் மகாராஷ்டிரத்தில் உள்ள ஜைதாபூரில் அணு உலைக்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பதைக் கவனிக்கவும்.

  ஏனெனில், ஜைதாபூர் அணு உலைக்கான ஒப்பந்தம் ஃபிரெஞ்ச் அரசோடு போடப் பட்டிருக்கிறது. ஃப்ரெஞ்ச் அரசு ஒரு கத்தோலிக்க அரசு.

  .

 13. Shan Riyaz
  #13

  களிமிகு கணபதி, ஒரு கிறித்தவனோ முசுலிமோ, என்ன சொன்னாலும் தப்பு, என்ன செய்தாலும் தப்பு. கண்டிப்பாக அவர்களின் அனைத்து நிலைப்பாடுகளின் பின் மேற்கத்திய நாடுகளோ, நடு கிழக்கு நாடுகளோ இருக்கும். அதுதானே நீங்க சொல்ல வருவது?? நல்ல அவதானிப்பு..

  மற்றபடி இது அன்னாவழி திடீர் போராட்டம் எல்லாம் அல்ல. பல வருடங்களாக நடந்ததே, இப்பொழுது தீவிரம் அடைந்திருக்கின்றது.

 14. பொன்.முத்துக்குமார்
  #14

  ஷான் ரியாஸ்,

  கிறித்தவனோ முஸ்லிமோ எது செய்தாலும் தப்பு என்று சொல்லவில்லை. சரியாக படியுங்கள். தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசு அங்கீகாரம் பெறுவதற்காக – அரசின் கைகளை முறுக்குவதற்காக ஒரு பொதுமக்கள் போராட்டத்தை பயன்படுத்த முனையும் – நம்பகமான தகவல்கள் அடிப்படையில் – கொடுமையைத்தான் களிமிகு கணபதி சுட்டிக்காட்டுகிறார். தவறெனில் நீங்கள் அதை மறுக்கலாம். ஆனால் சுட்டிக்காட்டுவதையே “கிறித்தவனோ முசுலிமோ என்ன சொன்னாலும் தப்பு” என்று சொல்வதாக திரிக்கவேண்டாம்.

 15. Shan Riyaz
  #15

  பொன் முத்துக்குமார், நீங்கள் கூரும் அந்த “நம்பகமான தகவல்களின்” அதாரத்தை மற்றவர்களுக்கும் அறியத்தந்தால் மகிழ்ச்சி..

 16. பொன்.முத்துக்குமார்
  #16

  அன்புள்ள ஷான் ரியாஸ்,

  நம்பகமான தகவல்கள் தெரிவித்தவர் களிமிகு கணபதி. அவருடைய பின்னூட்டத்திலிருந்தே தருகிறேன்.

  1. “எனக்குத் தகவல் தெரிவித்தவரும், அது உண்மை என உறுதி செய்தவரும் மார்க்ஸியக் கொள்கையாளர்கள். இந்த அணு உலையை ருஷ்யா அளித்ததால் இப்பிரச்சினை குறித்துக் கவலை உள்ளவர்கள்.”

  இதை தெரிவித்த மார்க்ஸிய கொள்கையாளர்கள் யார் என்றெல்லாம் களிமிகு கணபதி அவர்கள்தான் சொல்ல முடியும்.

  அடுத்தது இது. எந்த அளவு ஆதாரமாக கொள்ள முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் சந்தேகத்தின் புகை இருப்பதை மறுக்க இயலாது. (குறைந்த பட்சம் என்னால்)

  2. “ஹெட்லைன்ஸ் டுடே சேனலில், இந்தப் போராட்டத்தின் தலைவரான ஒரு கிறுத்துவரிடம் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பற்றது என்பதற்கான தகவல்கள் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. அவருக்குத் தெரியவில்லை. பாவம். அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். இது மூடப்பட வேண்டும். இது மூடப்பட வேண்டும். இது மூடப்பட வேண்டும் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.”

 17. களிமிகு கணபதி
  #17

  @ Shan Riyaz

  அணு உலைகள் என்பவை அனாவசியம் என்று பேசப்படுவதை நான் அறிவேன். என் முதல் கருத்துவினையின் முதல் பாராவில் அதை தெரிவித்திருக்கிறேன்.

  இது போன்ற ஒரு நியாயமான போராட்டத்தைத் தங்கள் சுயநலனுக்காக மதம் சார்ந்த அமைப்புக்கள் பயன்படுத்துவதை வெளிப்படுத்தி உள்ளேன். என் கருத்திற்கான அவதானிப்புகளைச் சொல்லி உள்ளேன்.

  அவற்றை எல்லாம் புறங்கையால் ஒதுக்கி, கிறுத்துவ, இசுலாமிய மதம் சார்ந்த அமைப்புக்கள் தவறுகள் செய்யும்போது, அதை இந்துக்கள் வெளிப்படையாகச் சொல்லக் கூடாது என்பது சுத்தமான ரௌடித்தனம். மௌடீகம்.

  நான் சொன்னது தவறு என்று சொல்லுங்கள். அதற்கான காரணங்களை ஆதாரங்களைத் தாருங்கள்.

  அதைவிடுத்து, நேருவிய-செக்யூலரிச ஜல்லி அடிக்காதீர்கள்.

  .

 18. Shan Riyaz
  #18

  களிமிகு கணபதி, முதலில் நீங்கள் சொல்லிய “உன்மைகளின்” அதாரத்தை தாருங்கள்…

 19. Dman
  #19

  Mr. Ganapathy,
  Please stop spreading nonsense. Don’t your imaginary Marxist friends know that it is not possible to do any of the things you mentioned under the constitution of India?

  Please stop spreading bull. We all know who you are.

 20. ஓகை நடராஜன்
  #20

  Dear Dman,

  Please answer Ganapathi’s doubts or let others to answer. Questioning his credibility is not addressing his doubts. His doubts are my doubts also and I am quite sure many will have these doubts.

  The biggest doubt is this problem is to be debated by scientists and policy makers and not for priests. The Huge presence of Christian preists create Huge questions.

  The questions raised by Dr. Udhayakumar are extremely meaningful and these are to be addressed and answered by N-scientists.

  Definitelay not by preists.

 21. Dman
  #21

  Dear Okai,
  No priest is trying to answer any questions on Nuclear issue. They are just voicing people’s concerns over to the government as religious heads who have also been one of the representatives of the fishermen folk in the region. If you trust Dr. udhayakumar then you should know that he was also part of the team that met Ms. Jeyalalitha. So would he simply budge to the alleged demands of the bishops? especially since he has been fighting against this for a very long period… possibly longer than the priests?

  If our politicians can be trusted to make nuclear decisions the priests too can be trusted.

 22. பொன்.முத்துக்குமார்
  #22

  Dear Dman,

  Had the Bishops voiced their concerns in the similar tune against the reactors in Kalpakkam, in the past ? Or will they ?

  There’s an NGO activist by name Dr.Pugazhendhi who has been fighting against the same for a long time, quoting the medical issues such as birth defects in kids, cancer etc. around Kalpakkam. Can the Bishops join him in this fight ?

  Also, look at this comment of Mr.Ganapathi :

  “கூடங்குளத்தில் அணு உலை அமைவதை எதிர்க்கும் கிறுத்துவ அமைப்புக்கள் மகாராஷ்டிரத்தில் உள்ள ஜைதாபூரில் அணு உலைக்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பதைக் கவனிக்கவும்.”

  What do you think about this ? Why this selectivity ?

  Thanks
  Muthu

 23. Dman
  #23

  Hi
  Please do not make this a sectarian issue. Are all people against Jaitapur fighting against Kudankulam as well? No. Any TDH can ask these questions sir.

  The fight in Kudankulam involves Hindus and Hindu organizations as well. There is a Sastha temple very close to the plant(please check google maps). It will become inaccessible. May be it is already abandoned. Anyway the issue is about people’s lives and livelyhoods.

  The Bishops just happen to be one of the representatives of the majority of people around the region.

 24. தமிழ்செல்வன்
  #24

  களிமிகு கணபதி சொல்வது கவனிக்கத் தக்கது. கிறுத்துவ பாதிரிமார்களும் கிறுத்துவ என்.ஜி.ஓக்களும் தங்களுடைய மதமாற்றத் தொழிலுக்கும், நிலங்களைக் கையகப்படுத்தும் அராஜகத்திற்கும் பங்கம் வரும் எந்த வகையான திட்டத்தையும் எதிர்க்கவே செய்வார்கள். அவர்களுக்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலிருந்து கோடிக் கணக்கில் டாலர்கள் கொட்டுவதே அதற்காகத்தான். மதமாற்றத்திற்கும், நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும் எந்த அரசாங்கம் அவர்களுடன் ஒத்துப்போனாலும் போதும், அதன் பிறகு மேலே சொல்லியுள்ளபடி அணுகுண்டே போட்டாலும் கவலைப் பட மாட்டார்கள். மேலும் மேதா பட்கர் போன்றவர்கள் ஒரு காரியத்திற்கு ஆதரவு அளித்தாலே அது தேச விரோதக் காரியம் என்று உறுதியாகச் சொல்லலாம்.

  ஏதாவது ஆபத்துக்கள் நேர்ந்தால் அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி என்று இயற்கை சீற்றங்கள் நேரும்போது, உதவி நிவாரணம் என்கிற பெயரில் கடுமையாக மதமாற்றத்தில் இறங்கி நன்றாக அறுவடை செய்வார்கள். 2004 சுனாமிக்குப் பிறகு தமிழகக் கடலோரம் கிட்டத்தட்ட முழுவதுமாக கிறுத்துவர் பக்கம் போய் விட்டது.

  சுனாமிக்குச் சில மாதங்கள் முன்னால்தான் ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் வாங்கினார். பின்னர் அவருக்கு அமெரிக்காவுடன் சம்பந்தப்பட்ட, ஐ நா சபையின் மற்றொரு அமைப்புடனும் சம்பந்தப்பட்ட உக்ரைன் நாட்டின் இயக்கம் ஒன்று “தங்கத் தாரகை” பட்டம் அளித்தது. ஏ.கே.பால் என்னும் எவாங்கலிக்கர் ஹெலிகாப்டரில் வந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் தமிழக சுனாமி நிவாரணமாகக் கொட்டிவிட்டுப் போனார்.

  தற்போது ராஜிவ் கொலையாளிகள் விஷயத்தில் தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியவர் ஒரே இரவில் சோமர்ஸால்ட் அடித்து அடுத்த நாளே சட்டசபையில் ராஜிவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக மன்னிப்பு வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதே போலத் தான் கூடங்குளம் விஷயத்திலும், ஒரே வாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். தேர்தல் பிரசாரத்தின் போது கிறுத்துவர்களுக்கு பல சலுகைகள் அள்ளி வீசியதும் நாம் பார்க்கத்தானே செய்தோம்.

  அவர்களுக்காக எல்லாம் செய்துகொண்டிருந்த கருணாநிதியின் முதுகில் அவர்கள் குத்தியதற்கு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளே காரணம். அவர்கள் கேட்ட அளவு நிலங்கள் கொடுக்காமல் திமுக குடும்பங்களே அனைத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டிருந்ததும் அவர்கள் ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போட ஒரு காரணம்.

  விஜயகாந்திற்கு டாக்டர் பட்டம் கொடுத்தது அமெரிக்காவில் உள்ள ஒரு கிறுத்துவ அமைப்பு. வைகோ, சீமான் போன்றவர்கள் கிறுத்துவர்களே.
  பா.ம.கவும் அவர்கள் பக்கமே. அன்புமனி கிறுத்துவராக மதம் மாறிவிட்டார் என்று விக்கிபீடியா சொல்கிறது. திருமா போன்ற ”தலித் தலைவர்கள்” கிறுத்துவ ஏஜெண்டுக்கள் என்பதும் தெரிந்ததே. அவரும் ஜான் பாண்டியனும் சேர்ந்திருப்பதே உதாரணம். பா.ஜ.க தவிர அனைத்துக் கட்சிகளையும் பலவிதங்களில் கட்டிப்போட்டு தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.

  பெரிதும் மதம் மாற்ற அவர்கள் குறிவைக்கும் சமுதாயம் தலித் சமுதாயமே. தலித்துகளை பெரும்பான்மையான இந்துக்களிடமிருந்து பிரிப்பது அவர்களின் முக்கியமான குறிக்கோள். அதற்காகவே தலித் மக்களைப் பகடைக் காய்களாக்கி வன்முறையில் ஈடுபட வைக்கிறார்கள். அதற்கு தலித் தலைவர்கள் துணை போகிறார்கள்.

  இங்கே கவனிக்கப்பட வேண்டிய மற்றுமொரு விஷயம் சோனியா தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யத் தயாராக இருக்கும் “மத வன்முறை மசோதா”. இம்மசோதாவில் “குழு” என்கிற பதத்தில் சிறுபான்மையினரை மட்டுமல்லாமல் அவர்களுடன் தலித்துகளையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள். அதாவது “குழு”விற்கு எதிராக – சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் எதிராக – எந்த வன்முறை நடந்தாலும், வன்முறையைத் தூண்டி நிகழ்த்தியது அவர்களாகவே இருந்தாலும், அவர்கள் பாதிக்கப் பட்டவர்களாகவும் மற்றவர் (அதாவது இந்துக்கள் – சிறுபான்மையினரும் தலித்துகளும் குழுவில் வந்துவிட்டால் மிச்சம் இருக்கும் மற்றவர்கள் பெரும்பான்மையினர்தானே)வன்முறையில் ஈடுபட்டவர்களாகவுமே கருதப்படுவார்கள் என்று சொல்கிறது அந்த மசோதா.

  ஆகவே பரமக்குடியில் நடந்ததைப்போல் பல இடங்களில் தலித்துகளைப் பகடைக் காய்களாக்கி வன்முறைகளை இவர்கள் தூண்டிவிட்டு, பின்னர் மத வன்முறை தடுப்பு மசோதாவை சட்டமாக்க முனைவார்கள். வரும் நாட்களில் இது கண்டிப்பாக நடக்கும். இந்திய தேசத்தை சின்னாபின்னமாக்குவதற்கு மேற்கத்திய நிதியுதவியுடன் கிறுத்துவ சர்ச்சு என்றும் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

  களிமிகௌ கணபதி சொல்வது சரிதான்.

 25. அருண்பிரபு
  #25

  //Don’t your imaginary Marxist friends know that it is not possible to do any of the things you mentioned under the constitution of India?//
  Constitution of India was amended and Supreme court of India’s verdict nullified only to appease Muslims in the Shah Bano case. Supremacy of Constitution was brushed with left hand in many decisions based on political compulsions and vote bank politics. Can you assure Mr Dman, that the Constitution’s supremacy will be respected and upheld, irrespective of vote banks attempting to fog off the vision of rulers?

 26. Joseph Kishore
  #26

  Dear Mr. Ganapathy,

  Do you think Nuke power plant is highly safe and risk free and good for human race? We have seen Chernobil and Fukhishima disasters and after seeing these who want to hold the danger in their lap? Which scientist can secure 100% risk free? I belong to the place called Idinthakarai where the protest was organised against KNPP. This proetst is a purely peoples movement beyond cast, creed, politics and any religion. Please dont beleive any useless fellows unreliable reasonings and informations. Due to this KNPP, the fisher folks from Kanayakumai to Tuticorin will get affected heavily along with other interior people. Since this coastal belt is 100% Roman catholics dominated, the priests and Bishops are forced to head the people’s agitation. And these Roman catholics are not just converted and they have a hundreds of years long history in this region. But unfortunately this issue was puposely twisted/focused in the medias as it is a problem of a particular religion whereas it is not the truth. There are highly respected Hindu and Muslim leaders have also participated and involved. If it is political or religious motivated it will be unsuccessful. Since it is a demand of people, definitely it will succeed. Please you judge yourself what is good for people and human race apart from religious politics.

 27. Raju
  #27

  Guys just ignore Ganapathi, he is just blabbering and trying to get attention by show casing his dirty mind.

 28. மாயவரத்தான்....
  #28

  தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் நிகழ்த்தும் கமெண்ட்டுகள் அனுமதிக்கப்படுகின்றன ‘இப்போதெல்லாம்’.

  கடும் கண்டனங்கள்!

 29. jesuvictor
  #29

  kanabathi simply twisting the issue. his religious fanatic mind can be seen behind his words

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

2 Trackbacks/Pings

Facebook comments: