ஒரு நிஜ ஹீரோ

மாரிச்செல்வம்

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.

மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.

PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.

மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.

மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.

ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.

தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.

தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார். “ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.

அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.

அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.

இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.

அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.

இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.

இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…

O

மன்னார் வளைகுடா வாழ்க்கை என்னும் வலைப்பதிவில் வெளியாகியுள்ள இக்கட்டுரையை சாத்தியமுள்ள அனைத்துத் தளங்களுக்கும் எடுத்துச் செல்வதன்பொருட்டு இங்கே நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையை உங்களுக்குத் தெரிந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் படிக்கக் கொடுங்கள். அல்லது விஷயத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

115 comments so far

 1. skumar
  #1

  Mari,

  You are really Great. There are lot of people like me are with you to help.

  -> || :: Never loose Hope :: || <-

 2. S.AYYANAR
  #2

  Really great Success .Dear brother Mr. Mari selvam . same kind one of our relative got School first, Her name is M.Sivaranjani, M.Rammachandrapuram , Near Mangalam, Sivakasi tk, Virudhu nagar -Dt. you got many success future. Best wishes

 3. samparayar
  #3

  உண்மையில் ………மாரி……. ஒரு நிசமான கீரோ தான்.அவனுடைய வாழ்க்கையின் சோகங்கள்,குடும்ப பாரம், அப்பா,அம்மாவின் ,அக்காளின் துயரம், இவை எல்லா….தடைகளையும் கடந்து…..அவனுக்கான அறிவை…..அவன் பெற்றுளான் ………என்பதே அவனை வளர்த்த தாய்..தந்தை..அக்காளின்…விருப்பமான …………மாறியும் படித்து முன்னேறுவது என்றாகி இருக்கும் போது…அவனுக்கு என்ன நோய் ,நோக்காட்டு , நொடி, வரும்………??????!!!!!எல்லாமாகியுள்ள ….மரியுனுடைய தாய் , தந்தை, அக்காளின்……நினைவில் அவனுக்கு ஒரு கேடும் வராது…அவனுடைய கல்வி உதவிக்கு என்ன செய்ய வேண்டும் ??????அடஹை இந்த தலத்தில் உள்ள அனைவருமே..அவனுக்கும், அவனது ஆக்கள் மகளுக்கும் செய்வோம்..?!!சரியா???????இதைபோலவே …எசு.அய்யனார்..சொன்ன ….எம்.சிவரஞ்சனியும்..எம்.ராமச்சந்திராபுரம்…மங்களம் அருகில்…சிவகாசி தாலுகா..விருதுநகர் .மாவட்டம்..என்னும்..அந்தக் குழந்தைக்கும்….இந்த வலைத்தளத்தில் உள்ள .அனைவரும் …உதவுவோம்………அனைவரது முகவரிகளையும்….அனைவருக்கும் அனுப்பி..அவர்களின்..கல்வி வளர்ச்சிக்கு வேறு என்ன வெள்ளம் செய்ய முடியும் என்று யோசிப்போம்..

 4. amarnath
  #4

  you are a great man in the world hai mari dont wory god bless you

 5. Prabu
  #5

  நல்ல செய்தி. உண்மையான சாதனை.

 6. samparayar
  #6

  உண்மையில் ………மாரி……. ஒரு நிசமான கீரோ தான்.அவனுடைய வாழ்க்கையின் சோகங்கள்,குடும்ப பாரம், அப்பா,அம்மாவின் ,அக்காளின் துயரம், இவை எல்லா….தடைகளையும் கடந்து…..அவனுக்கான அறிவை…..அவன் பெற்றுளான் ………என்பதே அவனை வளர்த்த தாய்..தந்தை..அக்காளின்…விருப்பமான …………மாறியும் படித்து முன்னேறுவது என்றாகி இருக்கும் போது…அவனுக்கு என்ன நோய் ,நோக்காட்டு , நொடி, வரும்………??????!!!!!எல்லாமாகியுள்ள …மரியுனுடைய தாய் , தந்தை, அக்காளின்……நினைவில் அவனுக்கு ஒரு கேடும் வராது…அவனுடைய கல்வி உதவிக்கு என்ன செய்ய வேண்டும் ??????அடஹை இந்த தலத்தில் உள்ள அனைவருமே..அவனுக்கும், அவனது அக்கள் மகளுக்கும் செய்வோம்..?!!சரியா???????

  இதைபோலவே ……………
  எசு.அய்யனார்…………..
  சொன்ன ….எம்.சிவரஞ்சனியும்….எம்.ராமச்சந்திராபுரம்…மங்களம் அருகில்…சிவகாசி தாலுகா……………..
  விருதுநகர் ………….மாவட்டம்..
  என்னும்…………அந்தக் குழந்தைக்கும்….இந்த வலைத்தளத்தில் உள்ள……… .அனைவரும் …உதவுவோம்………அனைவரது முகவரிகளையும்….அனைவருக்கும் அனுப்பி..அவர்களின்..கல்வி வளர்ச்சிக்கு வேறு என்ன வெள்ளம் செய்ய முடியும் என்று யோசிப்போம்…

 7. மஞ்சூர் ராசா
  #7

  நெகிழவைக்கும் கட்டுரை. தற்போதைய நிலவரம் என்ன என தெரிந்துக்கொண்டு முடிந்த உதவியை செய்ய ஆவல்.

 8. tanuthias
  #8

  “அம்மா மாதிரி இருந்த அக்காவின் சாவுக்கு கூட அழ முடியாத பாவி சார் நான்..” என்ற வரிகள் நெஞ்சை பிளந்தன.

  கட்டுரையின் ஆரம்பத்திலேயே யதார்த்தம் தெரிய ஆரம்பித்தது.
  போக போக சோகம் கவ்வி கொண்டது. கனத்த இதயத்துடன் , தொண்டடை அடைக்க , க்ண்ணில் நீர் முட்ட மற்ற பகுதிகளை படித்தேன். கண்ணில் நீர் வழிவதை பார்த்தால் வீட்டில் கேலி செய்வார்களோ என மறைத்துகொண்டேன்.

  மாரியை கட்டிகொண்டு ‘ஓ’வென அழ வேண்டும்போல் இருக்கிறது.

  மாரி… கு…….யில் மின்னும் வைரம், வைடூரியம், தங்கம், கோமேதகம், அனைத்தும் நீதானப்பா…
  நீண்ட ஆயுளையும், நல்ல தேக ஆரோக்கியத்தையும் மாரிக்கு கொடு என எனது ஆத்தா அங்காளபரமேஸ்வரியை வேண்டிகொள்கிறேன்.

 9. tanuthias
  #9

  “ஓரு நிஜ ஹீரோ” படித்துவிட்டு அழாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மாரி அடக்கி வைத்த அந்த அழுகையை அனைவரும் அழுது , அழுது தீர்த்தாலும் தீராது..

 10. sadaiyandi
  #10

  “அம்மா மாதிரி இருந்த அக்காவின் சாவுக்கு கூட அழ முடியாத பாவி சார் நான்..” என்ற வரிகள் நெஞ்சை பிளந்தன.

 11. Rashidha
  #11

  MAari Migavum Manadhal valimaiudayavan. Maari nandraga padittu avanudaya Appa mattrum Akka ninaithathupol Vazhave kadavulai pradthikkiren.

 12. Rashidha
  #12

  MAari migavum manadhal valimai udayavan . Aval Appa martum amma nithaipol varuvadharku Kadavulai prartikkiren.

 13. Kartheeswaran
  #13

  Really he is an hero, no one object this.. I really bend my head on his feet.. hats of Mari…

 14. mohan
  #14

  Hats off to you da mari..

  rompa nal kalichu en kannu la kanneer vanthuchu.. great .. all d very best

 15. Don Bosco
  #15

  Keep your aim and confidence always high, You can win…

  Mari, you are an extra-ordinary boy.

  God Bless you Dear child…..

 16. subramanian
  #16

  Where there is a will, there is a way, we pray to the almighty to give Mari good health.

 17. Saravanan R
  #17

  No words to say….. If i have the capability i will take you as my step brother…..

  I am ashamed for not having that …..

 18. Yasin
  #18

  Great Achievement. Would like to help as well, Mail me his current situation and contact info. Thanks.

 19. PREMAJENY
  #19

  A SILENT VOLCANO,UNDER THE HUT.

 20. Amuthan
  #20

  Good Article…. Will pray for Mari…. Such Hero’s to be honoured, encouraged and given all possible support… Thanks for publishing such articles…….

 21. Sami
  #21

  No words to express. I pray and wish Mari a healthy and happy life ahead.
  I am interested in helping Mari. PAD please share the details based on that I will try offering my helping hands.

 22. Raja
  #22

  Mari thamby, un manathin vadukkalai sumanthu kanneer sinthinaalum, valigal anaithaium pokka appaavum-akkavum kadavularaay irunthu unnai kappargal..

 23. Hari
  #23

  Please let us know, how to help people like Mari.

 24. BAskar
  #24

  kalanga vaitha unmai

 25. raja kumar L
  #25

  சோதனையில் சிக்கிய உன்னையும் உன் குடும்பத்தாரும் துன்பம் தொலைத்து இன்பம் காண மனமார கடவுளை வேண்டுகிறேன் சகோதரா..கடவுள் உன் பக்கம் இருக்கிறார் ..தொடர்க உன் வெற்றி ..

 26. Pradeep
  #26

  Really great stuff, Hats off….

 27. balasubramanian
  #27

  “அம்மா மாதிரி இருந்த அக்காவின் சாவுக்கு கூட அழ முடியாத பாவி சார் நான்..” என்ற வரிகள் நெஞ்சை பிளந்தன.

  கட்டுரையின் ஆரம்பத்திலேயே யதார்த்தம் தெரிய ஆரம்பித்தது.
  போக போக சோகம் கவ்வி கொண்டது. கனத்த இதயத்துடன் , தொண்டடை அடைக்க , க்ண்ணில் நீர் முட்ட மற்ற பகுதிகளை படித்தேன். கண்ணில் நீர் வழிவதை பார்த்தால் வீட்டில் கேலி செய்வார்களோ என மறைத்துகொண்டேன்.

  மாரியை கட்டிகொண்டு ‘ஓ’வென அழ வேண்டும்போல் இருக்கிறது.

  மாரி… கு…….யில் மின்னும் வைரம், வைடூரியம், தங்கம், கோமேதகம், அனைத்தும் நீதானப்பா…
  நீண்ட ஆயுளையும், நல்ல தேக ஆரோக்கியத்தையும் மாரிக்கு கொடு

  இன்று நீங்கள் சிரிப்பது நாளை அழுவதற்கு தான் என்றால், அதற்காக இன்று சிரிப்பதை நிறுத்தாதீர்கள். ‘நாளை அழுவதை தடுப்பது எப்படி?’ இன்று யோசித்துக் கொண்டே சிரியுங்க

 28. balasubramanian
  #28

  எல்லாக் கனவுகளும் நிஜமாவதில்லை
  எல்லா எண்ணங்களும் நிறைவேறுவதில்லை
  கண்களில் கண்ணீர் வரும் நினைவுகள் தேங்கி நின்றால்..
  வானத்தில் இருந்து விழும் நட்சத்திரத்தைப் பார்த்துக் கூட
  மனிதர்கள் விருப்பம் நிறைவேற நினைக்கிறார்கள்..
  திருவடியின் பாதம் தான் கடைசி என்று தெரிந்தும்
  ஆசைகளை நிறைவேற்றப் பாடுபடுகிறார்கள் ….

 29. Amirtharaj
  #29

  Really no words to say about Mariselvam.You are really great child.
  Dear brother Mr.MariSelvam. Pl. contact me if need any help in future…

 30. Rajeswaran
  #30

  I pray to god for your bright future.

 31. chandru
  #31

  Great Hero, I pray to god for mari future and health.. wish him continue sucess in his life..

 32. Suganya S
  #32

  வெற்றி நிச்சயம் …

 33. geetha
  #33

  vaartha varala maari…saathichuta..kadaul unkita iruparu..

 34. Ishwarya
  #34

  No words to say about Mari….You will have a very bright future….such kids to be surely blessed and motivated.Helping him is really priveleged one.

 35. Kannan
  #35

  Hi friends i hav seen the opinions from all of u… just words cant do any thing… we need to help him and his family for his bight future..

  Like Mariselvam many mari are there so kindly help those persons to c d bright future…

 36. Kalarevathi
  #36

  Really heart touching achievement. Hats off to u Mari.

 37. suresh
  #37

  how can help mari,god will provide,we will pray for mari,and how can i help any no

 38. venkateshwaran
  #38

  you are really great my dear brother.i pray god for your bright future.

  ……………….. all the best…………………

 39. kavitha
  #39

  Mari un valkaiyel melum vetri pera en vazthukkal.. sathanaiku sothanai oru thadai illai enbathai nee nirupithu vittai…

 40. Soundar
  #40

  You are really great Mari. I pray god for your success. You are real Hero. May God show his blessings on you.

 41. Soundar
  #41

  TamilPaper.net Can we get the address/contact number of Mari? i want to help this guy.

 42. Dhivya
  #42

  Dear Mari,

  Im soooo surprised and overwhelmed with joy when I read the passage…
  I see that there is a God to protect you and your family’s future.

  Do not worry that you are under your relatives shadow. When you complete your studies and start earning, help[ your relatives and many other childern like u to ur most…

  my sincere wishes & prayers……

 43. Saravanan
  #43

  well done mari,best wishes for your future studies.

 44. Lendle Pascal
  #44

  Well done da thambi

 45. ammu
  #45

  hi mari really i cried after reading ur story …u r so great…i think u r a role model to the children who is having all the facilities yet couldnt shine in their studies..god bless you…

 46. Suresh
  #46

  Great marri . You are the one..

 47. sakthi
  #47

  great maari.no chance nee menmelum valara kadavulai vendukiren.god bless u

 48. prabhu
  #48

  hats off to master mari.. but abt his father.. தமிழனுக்கு இன்னும் குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு வரவில்லை…

 49. Mohamed sathik
  #49

  Hats off….

 50. chandran.s
  #50

  Hi,Marri………ur great. proved hard work never fails. u have good and strong heart, nothing will happen to u. gods with u thats y u succeeded and i hope u come up in life. wish him all success for u. my great wishes to ur parents since they give great son like u to this earth.

 51. karthis
  #51

  thambi, hats off to u pa…

 52. swam
  #52

  its really a tough situation in the boys life….we shall pray GOD to get rid from his tough times…

  40% news, in this 60% story type words

 53. Praveena
  #53

  All the best of ur brightful future. May God Bless you !!

 54. Thiyagu
  #54

  You set an example by hard work makes us wise and never give up in any kind of situations

 55. Elayaraja
  #55

  I will surely help Mari the great. Please share his contact details to my email id.

 56. MUTHU
  #56

  Dont worry mari ,God will help u …….

 57. Thiru
  #57

  I cried after reading this line “அம்மா மாதிரி இருந்த அக்காவின் சாவுக்கு கூட அழ முடியாத பாவி சார் நான்..”

  You are so great. Real star.

  நெகிழவைக்கும் கட்டுரை. தற்போதைய நிலவரம் என்ன என தெரிந்துக்கொண்டு முடிந்த உதவியை செய்ய ஆவல்.

 58. Karthik
  #58

  Mari, You are a great person in this world! There are no words to express your sorrow. I sincerely pray God. Nee nalla varve. Unoda kstangal anaithum theeranum. You and family will be always happy hereafter..

  All, Can anyone assist me how to help him? I dont see any number to contact.

  Thanks.,
  Karthik

 59. Praveen
  #59

  Mari you are really great…You brought tears from my eyes after long time..God bless you and you will get support from all of us

 60. KANNAN
  #60

  GREAT

 61. sivashanmugam
  #61

  Maari is not one of the hero he is the one and only hero and also sivaranjani we have to pray to god for maari health

 62. Shan
  #62

  One of the greatest inspiring stories!! Hats of to him..!!

 63. venky
  #63

  Its not a story friend its a Fact, by the way I shall help him financially as much as I can, give me his address or contact number

 64. charles
  #64

  I really impressed after read about great MARI….Thank mari i got lot off lesson from ur past life and also no word to say how to congrads u….hats of

 65. varamani
  #65

  Naalai ulagam unnai pottrum naal varum dont worry
  God must be grazy but belive that one and only take care

 66. yuvaraj
  #66

  Mari…!!! your the great man…

 67. Hemalatha
  #67

  You are born to win….Only to win…..Never get back….With the help of lord Jesus Christ you can overcome all the barriers.

 68. Susan
  #68

  Hats off..!!!

  heart melting ….

 69. Bala
  #69

  Really he is a great person…. Wish him to be a successful man in life….

 70. cheeni
  #70

  Mari,

  Nee ellam Deivam Paa…. U r really great….sathiama solren nee romba Periya alla vara Pora…

 71. Arunkumar
  #71

  Great da Mari…. Every one will pray for u….Hats off to you

 72. sridhar
  #72

  en nenjam urugiyadu.mari yin ennam yellam eedara en nal vazhthkkal

 73. Ravi
  #73

  Instead of keeping politician story in Syllabus, we should keep his story.It will be real lesson for everyone.

 74. chandru
  #74

  Great guy.. Hats off dear Mari.. Wish u all success for your life…

 75. Mohamed Aamir
  #75

  இந்த கட்டுரையை உண்மையில் கண்களில் கண்ணீர் மல்கதான் படித்தேன். உண்மையில் அவன் ஒரு நிஜ ஹரோ அவனுக்கு என்னாலான உதவிகலை செய்ய நான் தயார்.

 76. VS.Sankar
  #76

  I just dont’ have any words to say. Hats off to this kid.

  GOD BLESS YOU & WISH YOU ALL THE BEST.

 77. Selvapriya
  #77

  Really Mari is great!!! Congrats Mari.. I would like contribute for Mari. Can any one tell me how to help him or how my help can reach him? Plz do reply..

 78. jeho
  #78

  more miles to go before we sleep…………..we r not dead to be in silence………

  from,, jeho
  thangachimadam
  rameswaram…..

 79. Nishaanth
  #79

  Dear Mari,

  It’s a great Accomplishment that you have done so far.Dont worry about the past things and go ahead.Bright future is waiting for you.

  I would like to help you.Need your contact number

  I pray to the God to give you good health and wealth.

  ALL THE BEST

 80. jeyacha
  #80

  No words,
  God with him ,
  jesus will be with him for his future
  god bless you mari,

 81. saranya
  #81

  Hats off to You Mari….All Our Prayers will fill Your path with Successful, Joyous and Healthier life…Don’t lose your Hope…Just tears fled in Eyes when I read your story…no words to explain Your Success.Hope You will become one of the famous personalities in India…

  All The Best…Be the Best In Everything You Are & Hope You Will!!!

 82. M, Uma Maheswari
  #82

  Enna solrathunu therila….
  intha paiyan’oda contact number/address yaaraathu thara mudiyuma?
  pls….

 83. Rajasekaran
  #83

  Hi Mari,
  Unmaiyyave Maari is great… I wish he gets his education and become a great success.I wish you earn and make your mother and family happy.

  To tamilpaper.net: How can we help maari. I can see a lot of people ready to help but there is no channel to reach maari.

 84. Vinodhini
  #84

  Hat’s Off to you Mari.May god be with you and lead your life.Am sure Your going reach the horizon…You literally made me feel proud as well as made my tears out for you…Thambi neenga menmelum valara vendum ena vazhthum anbu idhayam…..

  God bless you MARI

 85. Vinodhini
  #85

  Hat’s Off to you Mari.May god be with you and lead your life.Am sure Your going reach the horizon…You literally made me feel proud as well as made my tears out for you…Thambi neenga menmelum valara vendum ena vazhthum anbu idhayam…..

 86. UmaMageshwariSriram
  #86

  Mari really you are great and you will have bright future

 87. Sathiya
  #87

  Thambi…, kavalapadathe kadaul unna spthiththu parkiran…, nee ethukkum kavala padathe…, ipa sothikkira kadaul unna nalla nelamikku kondu varuvan…, kavala padathe…, +12 la yum nee 1st mark vanga ennudaya valthukkalum prayer enrum unakaga irukkum…

  “God Bless You”

  Kannirudan…
  M.Sathiya

 88. G.PANDIAN
  #88

  My dear Mariselvam,

  God Bless you, God Bless you, God Bless you.

  I don’t know any other words to say.

  You can Win.

 89. Pandiarajan
  #89

  Hi Mari,
  I hv no words to say abt my expression , if u need any kind of help pls contact me . My emai ID : pandi_rajan22@rediffmail.com

 90. Kousika
  #90

  Hats off….

  Would like to know mari’s contact details as i would like to help him out.

 91. spv
  #91

  Great da Mari.. All the best to your future. Dont loss your hope.

 92. kamal
  #92

  hats off u man……………… really i feel so……..no words…..

 93. Nanjundeswaran
  #93

  Hats off Mari

  u r the real

  i ready to help you for ur bright future

  u send mail to my mail id

  nanjundeswaranbtechit@gmail.com

 94. Prabhu
  #94

  Really great achievment dont worry about anything god blessing u
  u vl b a great hero.

 95. Mahi
  #95

  Hi Can you Pls Get Contact details. So We can help him for his Education & Mother’s treatment. Thanks

 96. Denni mathiyas
  #96

  I pray to God for his future and for his family situations.

 97. Shanmuga vadivu.S
  #97

  First of all hands of you dear brother Mariselvam…Really hands of you…even though you are younger than me i will follow you in my life …God bless you ma…

 98. Mohan
  #98

  All the best for your Great success keep it up if you want any help i am ready to do that. pls contact me ,,,

 99. ELAVARASU THIRUNAVUKKARASU
  #99

  MARI, YOU ARE A REAL HERO, I AM IMPRESSED ON READING YOUR STORY. SO, I PLANNED TO MAKE FURTHER STEPS TO MAKE MORE PEOPLE KNOW ABOUT YOU. SO, I FORWARDED YOUR STORY TO “KUMUDHAM MAGAZINE’S EDITOR” AND HE WAS ALSO HAPPY TO PUBLISH YOUR STORY IN HIS MAGAZINE. AS PER MY REQUEST, HE MADE ARRANGEMENTS TO TAKE INTERVIEW OF YOU AND YOUR STORY WILL BE PUBLISHED ON “6TH JULY 2011” IN KUMUDHAM MAGAZINE IN THE PAGE NO: 46 – 48. I AM HAPPY THAT YOU WILL BE A ROLE MODEL TO OTHER STUDENTS AND BEST WISHES FOR YOUR SUCCESS!!! GOD BLESS YOU…

 100. Pandi
  #100

  Great Mari, keep it up ,We are there to help you

 101. tanuthias
  #101

  இவ்வளவு பேரும் மாரிக்கு உதவ காத்திருக்கும் போது.. அதற்கு சரியான வழி காட்டுதலை ஏற்படுத்தி கொடுங்கள் ஐயா.. சிறிய உதவியாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு.. சிறு துளி பெரு வெள்ளம் எனபதிற்கினங்க கிடைக்கும் உதவியை ஒருங்கிணைத்து மாரிக்கு சென்றைடையுமப்டி ஏற்பாடு செய்ய கூடாதா? குறைந்தது ரூபாய் ஆயிரம் உதவ எவரும் தயாராக இருப்பார்கள் என நிணைக்கிறேன். இது ஒரு உதாரண்ம்தான். அதிக பட்சம் அவரவ்ர் விருப்பம்.. யாரையும் கட்டாயபடுத்துவதில்லை.. என்ற நிபந்தனையில் ஏற்பாடு செய்யலாம். இதில் ஏதேனும் நடை முறை சிக்கல் ஏற்படும் என நீங்கள் நினைத்தால் .. I leave it to your discreation..

 102. Balasubramanian
  #102

  I’m wondering about his Studies Skill , Emotional, Family bonding & Concentration Level etc… Mari, Hats off YOU .
  I am ashamed for not having that Best… ……. ….. ….

 103. chinnapiyan
  #103

  May Almighty GOD bless him. Enough, he had suffered a lot in this young age.

 104. Neel
  #104

  Hats off to you Man. Great Achievement. Wishing you to be more healthy and prosperous in ur life soon.

 105. vasuki
  #105

  well done mari.. dont ever lose hope. u can achieve whatever u aspire. best wishes & prayeers.

 106. Lakshminarayanan
  #106

  கலைஞர் kavithaikoo pathil ethai samacheer kalvi 2012-2013 bookil vathal nalaya thalaimuraiku uthaviyai erukkum

 107. KL STONE
  #107

  Hereafter, If such news are published, please publish name, full address, (if possible, contact numbers) of the concerned persons. So that the kind hearted people will contact him to offer their help.

  Otherwise, we are reading such news and having no way to reach him.

  wwith regards
  Stone

 108. buruhani
  #108

  படித்து முடித்தபோது மனது கனத்து விட்டது .நிச்சயமாக அவன் வாழ்க்கையில் நல்லவிதமாக வாழ்ந்து காட்டுவான் ,இறைவனின் கருணை அவனுக்கு உண்டாகட்டும் ஆமீன் .

 109. MANIVANNAN
  #109

  SINCERE EFFORTS NEVER FAILS.
  WHERE THERE IA A WILL THARE IS A WAY.
  BUT MARI JUST DID THAT.
  HOTS OF REGARDS TO THEIR FAMILY COACHERS.
  GOD WILL BE THERE ALWAYS WHERE THE MAN PUT HIS EFFORT.
  GOD BLESS HIM FOR HIS FUTURE EDUCATION AND CARRIER OF BEST.
  THE REAL HERO !!!!!!!!!!!
  WE EVERY ONE ALSO WISH HIS SUCCESS.

  MANIVANNAN QATAR,WELLWISHER.

 110. Parasuraman
  #110

  Marri, You are really great…
  Wish you all best for your bright future…
  I wish and Pray to God, to bless you..:)
  With Love,
  Parasuraman

 111. Ramesh
  #111

  Hi… I really want to help Mr. Mari. He is the real ‘HERO’. Pl give his contact details.

 112. Ganesh
  #112

  I got an opportunity to read this article today and many thanks for the writer. I wish to help him. Would you please share his contacts?

 113. Uma
  #113

  Really he’s very telented guy.I wish him to achieve whatever he likes to be in future.If any help needed to Mari or these kind of students, we are here.I’m member of an social service organisation “Vaazha Valara Vazhi”. Please mail me @coolswissenthu@gmail.com if anyone finds a student like Mari.We will definitely help them by motivating them and take care of finance too.

  Thanks,
  Uma.

 114. மீரான்
  #114

  மாரிச்செல்வம் குறித்து மேலதிக தகவல் டிவிட்டரில் @renga52 வசம் பெறலாம். முன்னர் PAD உடன் இணைந்து பணியாற்றியவர்.

 115. palanisamy
  #115

  you are great

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: