ஈமெயில் அனுப்புங்கப்பா!
ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ. 25,000 மற்றும் தாலி செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்திருந்தார் ஜெயலலிதா. ஆட்சிக்கு வந்த உடன் முதல் உத்தரவாக அதில் கையெழுத்தும் இட்டார். அதை செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டார். பாராட்டுகள்! ஏழைக் குடும்பத்து ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கும் திருமண நிதியுதவி வழங்கலாமே! வரவர ‘ட்ரீட்’ கலாசாரம் கிராமங்களிலும் பரவிவிட்டது. அதுவும் கிராமங்களில் திருமண நாட்களில் ‘டாஸ்மாக்’ செலவே பெரும் செலவாக இருக்கிறதாம். எனவே, இந்த தடவை இல்லையென்றாலும் அடுத்த தடவையாவது தேர்தல் அறிக்கையில் ஆண்கள் திருமண ட்ரீட் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அம்மா அறிவித்தால் கோடானு கோடி இளைஞர்கள் காலகாலத்துக்கும் அம்மா புகழ் பாடுவார்கள்!
அதே போல முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் பென்ஷன் வழங்கும் திட்டத்தையும் துவங்கி வைத்துள்ளார் முதல்வர். இதற்கும் பாராட்டுகள்!
*
மின்வெட்டுப் பிரச்னையை இன்னும் சரி செய்ய முடியவில்லை அம்மையாரால்! ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை என்றாலும், திமுக ஆட்சி தூக்கி எறியப்பட்டதற்கு மின்வெட்டும் ஒரு முக்கியமான காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது! ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே மின்வெட்டை ரத்து செய்ய யாராலும் முடியாது தான்! அதே சமயத்தில் அடுத்த ஆண்டாவது இதே போல மின்வெட்டு தொடர்ந்து பாடாய் படுத்தாது என்பதற்கான திட்டங்களை இந்நேரம் அரசு யோசிக்கத் தொடங்கியிருக்கும் என்று எதிர்பார்ப்போம். இலவச டிவி., இலவச மிக்ஸி, இலவச கிரைண்டர், இலவச ஃபேன், இலவச லேப்டாப் என்று அனைத்து இலவசங்களுக்கும் கரண்ட் இன்றியமையாத ஒன்று! குஜராத் மாநிலத்தில் வெட்டில்லாத மின்சாரம் தர முடிகிறதென்றால், அங்கேயிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கும் தமிழகம் அதே போல நாமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும், திட்டங்களையும் உடனடியாகத் தீட்ட வேண்டும்!
தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறாராம். தமிழக முதல்வர் சீட்டில் உட்கார்ந்தாலே இந்த கடிதக் கலாசாரம் தொற்றிக் கொண்டு விடும் போல! இதற்கு முந்தைய ஆட்சிக்காலத்தில் பிரதமருக்கு அனுப்பிய கடிதங்கள் என்னவாயின என்றே இன்னமும் தெரியவில்லை. அதே நிலை தான் இந்தக் கடிதத்திற்கும் ஆகும்! டெக்னாலஜி வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் ஏன் தான் அரசியல்வாதிகள் இன்னமும் கடிதத்தையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்களோ.. ஈமெயில் அனுப்பப் பழக வேண்டியது தானே?!
*
சமச்சீர் கல்வித் திட்டம் என்னவாகும் என்று இன்னமும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. அடுத்த ஆண்டாவது இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமா அல்லது கிடப்பில் போடப்படுமா என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். பள்ளிக்கூடம் திறக்கப் போகும் 15ம் தேதி வரை பாடப்புத்தகங்கள் கண்டிப்பாக கிடைக்காது! மாணவர்கள் பாடு தான் திண்டாட்டம்! அரசியல்வாதிகள் கையிலிருந்து கல்வி எப்போது விடுதலையாகிறதோ அன்றுதான் உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்கும் மாணவர்களுக்கு! இரண்டொரு நாட்களுக்கு முன்னதாக ‘பாலிமர்’ டிவியில் சமச்சீர் கல்வி குறித்து சிறப்பானதொரு விவாதம் நடைபெற்றது! சமச்சீர் கல்வியைப் பொறுத்த வரையில் இந்தத் திட்டத்தைக் குறித்து பேசுபவர்கள் எல்லாருமே, “இது ஒரு சிறப்பானதொரு திட்டம். தரக்குறைவான பாடங்களை நீக்கி விட்டு அரசு இந்தத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும்” என்று ஒரே பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார்கள். கூடவே சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டு ரத்து செய்திருக்கக் கூடாது என்கிறார்கள்.
ஆக, பாடங்கள் தரமற்று இருந்தது என்று ஒட்டு மொத்த குரலில் எல்லாருமே ஒப்புக் கொள்கிறார்கள். நூற்றி சொச்சம் பேர்களைக் கொண்ட வல்லுநர் குழு தயாரித்த பாடத் திட்டங்களாம் இவை! ‘அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதே அரை மணி நேரம் தான். அதற்குள் சமச்சீர்
கல்வி குறித்து விவாதித்து எப்படி ரத்து செய்தார்கள்?’ என்றும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கிறது! ஏற்கனவே அது குறித்து ஆலோசித்து முடிவை மட்டும் கூட்டத்தில் எடுத்திருந்திருக்கலாம். கூட்டத்துக்கு வந்து தான் பார்த்து, யோசித்து, ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டுமென்றால் ஐந்தாண்டுகளுக்கு அமைச்சரவைக் கூட்டங்கள் மட்டும் தான் நடத்திக் கொண்டிருக்க முடியும்.
சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பொறுத்த வரையில் தமிழக அரசு பள்ளிக் கூட மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரடியாக கருத்து கேட்க வேண்டும். ‘கல்வியாளர்கள்’ என்ற போர்வையில் இருப்பவர்களுக்கு அரசாங்கத்துக்கு ஜால்ரா போடவே நேரம் போதாது. அவர்களுக்கு நிஜமான அக்கறை கல்வியின் மீதோ, மாணவர்கள் மீதோ இருக்க வாய்ப்பேயில்லை! எனவே, திட்டத்தின் பயனாளிகள் யாரோ அவர்களிடமே கருத்து கேட்பது தான் முறை!
*
ஜெ. ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டு வாரங்களில் ’உடன்பிறவாச் சகோதரி’ குறித்து எந்த ஒரு செய்தியும் வரவேயில்லை. உடன்பிறவாச் சகோதரியின் கணவர், உடன்பிறப்புகள், சொந்தக்காரர்கள், சொந்தக்காரர்களின் வலது, இடது கைத்தடிகள் என யாருமே இதுவரை வெளிப்படையாக காட்சிக்கு வரவில்லை. இது ஒரு நல்ல மாற்றமாகத்தான் தெரிகிறது. ஆனாலும், இன்னும் ஓரிரு மாதங்களுக்கு மேல் இது தாக்குப்பிடிக்காது என்றுதான் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!
தகவலறிந்தவர்களெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் என்று சொல்லிவிடுவதற்கில்லை.
O
மாயவரத்தான்








June 7th, 2011 at 8:23 am
இப்பவே கரண்ட் பிரச்சனைல மக்கள் காண்டாக ஆரம்பிச்சிட்டாங்க… அடுத்த ஆண்டு வரை வெயிடிங்கா?
June 7th, 2011 at 1:17 pm
நன்றி நன்றி என்று எத்தனை முறை சொன்னாலும் போதாது. என் உள்ளாக்கிடைகையில் உள்ளதெல்லாம் உங்கள் போக்கில் சொல்லிஉள்ளீர்கள். என்னால் இயலாததை உங்கள் மூலம் காங்கின்றேன். நன்றி மற்றும் பாராட்டுக்கள் என்ற வார்த்தைகள் இனி திரும்ப திரும்ப சொல்லுவாதினால் அன்னியபட்டவனாகிவிடுவேன். இடைவெளி இல்லை என்றால் முகஸ்துதி எதற்க்கு? உங்கள் போக்கில் போய்க்கிட்டே இருங்க பாஸ் நாங்க இருக்கோம் ரசிக்க மற்றும் உதவ எக்காலமும்
June 7th, 2011 at 2:19 pm
It is sure, if the old cellubus books have to be printed and delivered to the students FOR academic year 2011-2012,and the books have to be provided all the students of all the Tamilndau Districts, the books could not be delivered even before quarterly -or halfyearly vocatins; MinimuM it would take the time upto October- Nvember 2011; As a man involved in this trade I am sure about this; Till this date even the Print Orders are not given to the Presses and legally the Govt. can start the work only after 8th June 2011 AND only after the release of Courts decision in the pending case before them; I think this is the ‘SANI THESAI” for the Tamilndau Students end Education; Out of the Toal seven and half years only one and half years have been passed inclusive of Kalaignars period and it is the fate of the Tamilnadu Students and Education to face the balance of six years; The only ‘PARIGRAM” AVAILABLE TO THE STUDENTS AND PARENTS IS TO COVERT TO CBSE COURSE WITHOUT ANY FURTHER DELAY; IT is also availbe only for meagre percentage of lucky students only WITHIN TAMILNADU;We can only sympathise and pray for the godd for the Tamilnadu Students; God is great
SUPPAMANI
June 7th, 2011 at 7:30 pm
As per the latest newsreport all steps are being taken to shelved the ‘SAMASEER KALVI THITTAM – a sad affair
SUPPAMANI
June 7th, 2011 at 10:04 pm
உண்மை..