புன்னகை

புத்தரின் முக்கியச் சீடர்களில் ஒருவர் பெயர், ஆனந்தர்.

ஒருநாள் ஆனந்தர் புத்தரை நெருங்கினார். ‘குருவே, எனக்கு ஒரு சந்தேகம்’ என்றார்.

‘சந்தேகமா? என்னது?’

‘நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறீர்கள். அது எப்படி உங்களால் முடிகிறது?’

‘என்ன கேட்கிறாய் ஆனந்தா? எனக்குப் புரியவில்லை!’

‘குருவே, காலை தூங்கி எழுந்த விநாடி தொடங்கி, இரவு உறங்கச் செல்லும் நேரம்வரை உங்கள் முகத்தில் ஓர் அமைதியை, மெலிதான புன்முறுவலைப் பார்க்கிறேன். எந்தச் செய்தியோ, விவாதமோ, வேலையோ அந்தப் புன்னகையைப் பாதிப்பது இல்லை’ என்றார் ஆனந்தர். ‘நானும் உங்களைப்போல் இருக்க விரும்புகிறேன். ஆனால் முடியவில்லை. ஏன்?’

புத்தர் மெல்லச் சிரித்தார். ‘ஆனந்தா, புன்னகை என்பது இயல்பான விஷயம். அது தானாக மலரவேண்டும். வலிய வரவழைப்பதற்கு முயற்சி செய்தால், களைத்துப்போய்விடுவாய்!’

One comment

  1. அ.தமிழ்ச்செல்வன்
    #1

    இன்றைய அவசர உலகத்தில் மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை மறந்து கொண்டிருக்கிறார்கள். புன்னகயை மறந்து பொன்நகைகளையும், பணத்தையும் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள் . புத்தர் சொன்னதை போல புன்னகை இயல்பானது, இன்றைய மனிதர்கள் இயல்பை தொலைத்துவிட்டார்கள்.

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: