காதல் புராணம் 14

14. புத்ர‌

தெரிவை [வயது : 26-31]

 

131

பயமாய் இருக்கிறது –

உன்னைக் குறித்து

இன்னும் பேசினால்

அழுகை வருமோ என.

 

132

பனிக்குடமுடைந்தோர் உயிரை

யான் ஈன்று புறந்தருகையில்

அருகிருந்து காண‌வேண்டும் நீ.

 

133

இன்னமும் இனித்துக்கிடக்கிறது –

உன்னை நினைத்துக்கொண்டே

அடுக்களையில் சமைக்கையில்

விரலறுத்துக் கசிந்த செங்குருதி.

 

134

உந்தன் கோபத்தின்

மௌனம் போலன்றி

எனைக்கிழித்தெறிவது

வேறொன்றுமில்லை.

 

135

அதிரப்புணர்ந்த பின்

திரும்பிப்படுக்காமல்

அணைத்துறங்குவாயே,

அதன் பெயர் சொர்க்கம்.

 

136

நீ தலைகோதி விடும்

சுகத்திற்காகவே

உனை ஆயுள் முழுக்க‌

காதலிக்ககலாம்.

 

137

எனது உச்சங்கள்

நீ புணர்கையிலல்ல‌

உனை உணர்கையில்.

 

138

புணர்ந்த களைப்பின் அணைப்பழுத்தத்தில்

உன் வேர்வை வாசனை ஞாபகப்படுத்தும்

நானிருந்த இருட்டுக்கருவறை வாசனை.‌

 

139

உன் ஒற்றை ஸ்பரிசத்திற்காய்த்

தவமிருந்த கணங்களனைத்தும்

பசும்புல்நுனிப்பனித்துளி போல்

பொய்யாய்ப்பழங்கதையானதுவே

நித்தம் நீயென்னைப் புணருமிந்த‌

நீண்ட இரவுகளின் நிசப்தத்தில்.

 

140

என் இருதயத்தினை

லேசாக்குபவையுன்

காதலின் கனமும்

 

One comment

 1. uma
  #1

  //பனிக்குடமுடைந்தோர் உயிரை
  யான் ஈன்று புறந்தருகையில்
  அருகிருந்து காண‌வேண்டும் நீ//

  எந்த ஒரு பெண்ணும் விரும்புகின்ற தருணம் அது

  //அதிரப்புணர்ந்த பின்
  திரும்பிப்படுக்காமல்
  அணைத்துறங்குவாயே,
  அதன் பெயர் சொர்க்கம்//

  excellent

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: