பாண்டிங் உடைத்த டிவி

ரிக்கி பாண்டிங்

நேற்று ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயுடன் ஆடி வெற்றி பெற்றாலும் அந்த அணியின் காப்டன் ரிக்கி பாண்டிங் ஒரு பிரச்னையில் சிக்கியிருக்கிறார் என்று ஒரு ஆங்கில டீவி சானலில் ஒரு கொசுறு நியூஸ். பாண்டிங் ரன் அவுட் ஆனாராம். கோபத்தில் போகிற வழியில் இருந்த ஒரு டீ.வியைப் போட்டு உடைத்துவிட்டாராம். அவர் இல்லை என்று மறுக்கிறார். ஆனால் மாட்ச் நடைபெற்ற குஜராத் நகர கிரிக்கெட் வாரியக் குழுவினர் ஐசிசியிடம் முறையிட்டு இருக்கின்றனர். அங்கே நம்மூர் போல் எல்லாம் இலவச டீ.வி வினியோகம் கிடையாதே. புது டீவி கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்களோ என்னவோ. யார் கண்டது.

பத்தாததுக்கு இந்த பாண்டிங் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் எதையோ வேறு ‘அருளி’ இருக்கிறார். உலகக் கோப்பையில் ரொம்ப தண்ட டீம்களளோடு ஆட வேண்டியிருக்கிறதாம். நம்மூர் ரஞ்சி டிராபி போல் சுமார் டீம்கள் எல்லாம் ஒரு பக்கம், நல்ல டீம்களளெல்லாம் இன்னொரு பக்கம் ஆடினால் தேவலை என்றிருக்கிறார்.

நம் டீமைச் சொல்லவில்லை அய்யா, ஏன் கோபப்படுகிறீர்கள்! இந்த அயர்லேண்ட், கனடா என்று அடி படுவதற்கென்றே ஒரு கோஷ்டி வருகிறது பாருங்கள். அவர்களைச் சொல்லியிருக்கிறார். இது வேவையில்லாத பிதற்றல். அதற்காக தேவையான பிதற்றல் உண்டா என்று கேட்காதீர்கள்.

நியாயமாக இந்த மாதிரி சின்ன சின்ன டீம்களையும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். உலக அரங்கில் ஆடுவது அவர்களுக்கு எப்பேற்பட்ட ஒரு பயிற்சி. எப்பேற்பட்ட எக்ஸ்பீரியென்ஸ். அதை அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. மேலும், எத்தனை நாள் தான் பார்த்த முகங்களையே பார்த்துக் கொண்டிருப்பது. ஒரு சேஞ்சுக்காக புது அயிட்டங்களையும் கொஞ்சம் பார்த்துத்தான் வைப்போமே.

யார் கண்டது. 1979 ‘சிலோன்’ என்ற பெயருடன் ‘அலோனாக’ ஆடிய இலங்கை அணி 1996 உலகக் கோப்பையை வெல்லவில்லையா. அது போல் ‘வேணாடா’ என்று எல்லா அணிகளிடமும் கெஞ்சி அடி வாங்கும் ‘கானடா’ 2024 உலகக் கோப்பையை வெல்லாது என்று எப்படிச் சொல்ல முடியும்.

பாண்டிங் கிடக்கிறார் விடுங்கள். இப்படி நல்வாக்கு சொல்வதற்கு பதில் அவர் பேசாமல் ஆடும் க்ரவுண்டுகளில் எல்லாம் டீ.வியை உடைத்துக் கொண்டிருப்பது எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது.

இன்னொன்றை கவனித்தீர்களா? இது வரை ஆடிய அணிகள் பலவும் அநியாயத்துக்கு பீல்டிங்கில் கோட்டை விட்ட வண்ணம் இருக்கின்றன. நேற்று இங்கிலாந்து பீல்டிங்? அட அட அட. இந்திய அணி தோற்றது. ஒருத்தர் கையிலும் பால் நிற்கவே இல்லை. பீல்டிங் தான் இந்த லட்சணம் என்றால் கிரிக்கெட் ரூல்ஸ் பற்றிய அடிப்படை கூடவா இருக்காது கிரிக்கெட் என்கிற அற்புத ஆட்டத்தை நமக்கு அளித்த இங்கிலாந்திற்கு? ஸ்லாக் ஓவர்களில் 30 அடி வளையத்துக்குள் 4 பீல்டர்கள் இருக்க வேண்டும் என்ற ஆதார அறிவு கூட இல்லை. 3 பேர் தான் இருக்க, க்ரிஸ் ப்ரோட் போட பாட்ஸ்மென் அவுட் ஆக, அம்பயர் ‘நோ பால்’ என்று சிக்னல் கொடுத்து விட்டார்.

இதனால் அறிவது யாதென்றால் –

வேண்டாம். நாமெல்லோருமே அறிவோம்!

7 comments so far

 1. Chandrasekaran Krishnan
  #1

  Dear Author: Its not Ponting who said that comment first. Its the ICC’s idea to stop associates from participating in World cup 2015. ICC wants to restrict the participating nations to 10 from 2015 WC.
  Ponting seconds that proposal அஷ்டே !

  Only time when Aussies displayed their complete dominance over the game format was when, Aussies proposed that test matches should be restricted to 4 days (because Steve’s army was continuously bashing up opponents with in 4 days at that time).

 2. haranprasanna
  #2

  01. இதில் கிரிக்கெட் பற்றி எப்போது வரும்?

  02. 1979ல் சிலோனாக ஆடிய அணி 1996ல் வெற்றி பெறுவதற்குள் ஆடிய அட்டங்கள் எத்தனை? அதனுடன் ஒப்பிடும்படியாகவது கனடா ஆடியிருக்கிறதா?

  03. பாண்டிங் சொல்வதில் உண்மை உள்ளது. சின்ன சின்ன அணிகள் எல்லாம் வந்து உலகக் கோப்பையின் தரத்தையும் கிரிக்கெட்டின் தரத்தையும் கெடுக்கின்றன. முதலில் ஒரு சுற்று வைத்து அதில் தேறும் இரண்டே அணிகள் மட்டும் மெயின் ஆட்டத்துக்குப் போதும் என்று முடிவெடுக்கலாம். முதல் சுற்றில் இடம் பெறப் போகும் அணிகளுக்கு சில வரைமுறைகள் வைக்கலாம். சில சமயம் அதில் இந்தியாவும் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸும் ஆடவேண்டியிருக்கலாம்.

  04. //ஸ்லாக் ஓவர்களில் 30 அடி வளையத்துக்குள் 4 பீல்டர்கள் இருக்க வேண்டும் என்ற ஆதார அறிவு கூட இல்லை.// சிலோன் 1996ல் வெற்றி பெற்றதைச் சொல்லும்போது இதைச் சொல்வது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. இப்படி 4 ஃபீல்டர்கள் வைக்காமல் நோ பால் கொடுக்கப்பட்ட வரலாறு வளர்ந்துவிட்ட அணிகளுக்கே நடந்துள்ளது. இது குளறுபடியே ஒழிய ஆதார அறிவு சம்பந்தப்பட்டது இல்லை.

 3. ராம்சுரேஷ்
  #3

  ஹரன்பிரசன்னா, உங்களை நினைத்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது.ராக்கெட் சைன்ஸ் பற்றிய கேள்விகளை வேளுக்குடி கதாகாலட்சேபத்தில் சந்தேகம் கேட்பது போலக் கேட்கிறீர்களே!

 4. Ganesh
  #4

  RSSல் குறிப்பிட்ட கட்டுரை Feed எப்படி ப்ளாக் செய்வது என்று பார்க்க வேண்டும்.

  இந்த ஹாஃ பாயில் தொல்லை தாங்கலை.

 5. மாயவரத்தான்....
  #5

  தம்பீஈஈஈஈஈஈஈ… டீ இன்னும் வரல!

 6. அருண்பிரபு
  #6

  ஒடஞ்ச டிவி படத்தப் போடுவீங்க, பாத்து இன்புறலாம்னு பாத்தா ஒடச்ச (பொ)ரிக்கி பாண்டிங் படத்தப் போட்டு வெச்சுருக்கீங்களே!!!

 7. surender
  #7

  aasiriyar avargala australia ricky ponting thalamaila 24 thodar vetrigal evalavu panna piragu than udaikurar… england kitta series win pannathuku ganguly shirta kalati dance adinaru adhai parkum poludhu edhu thavara illa.. ponting edha nalum udaikalam..

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: