ஆட்டை இழந்த பிராமணன்

பஞ்ச தந்திரக் கதைகள் / 3.3

பெரிய நகரம் ஒன்றில் மித்திரசர்மா என்ற 8271426001_ae5e9de040_zபிராமணன் வாழ்ந்துவந்தான். அவன் மாசி மாதத்தில் யாகம் ஒன்று செய்யத் திட்டமிட்டான். அந்த யாகத்துக்கு ஓர் ஆடு தேவைப்பட்டது. ஆடு வாங்க அருகில் இருந்த ஓர் ஊருக்குச் சென்றான். அங்கிருந்த பணக்காரர்களிடம் தனது நோக்கத்தினைக் கூறினான். அவர்களும் யாக காரியம் என்பதால் மறுக்காமல், ஒரு பெரிய ஆட்டினை அவனுக்குக் கொடுத்தனர்.

அவன் அந்த ஆட்டை நடத்தி அழைத்துவரும்போது, அது அங்கும் இங்குமாக ஓடியது. அதனால், அவன் அந்த ஆட்டைத் தன் தோளில்போட்டுக்கொண்டு நடந்துவந்தான்.

இந்தப் பிராமணன் ஆட்டுடன் வருவதைத் தூரத்திலிருந்து பார்த்த சில வஞ்சகர்கள் எப்படியாவது இந்த ஆட்டினை இவனிடமிருந்து கவர்ந்துவிடவேண்டும் என்று திட்டமிட்டனர்.

அவர்களுள் ஒருவன் பிராமணனிடம் வந்து, ‘அட வேள்வி வளர்த்து வேதம் ஓதும் பிராமணனே! நீ ஏன் இந்த பழியினைச் செய்கிறாய்? மிகவும் இழிந்த இந்த நாயை உன் தோள்களில் சுமந்துவரலாமா? நாய், கோழி, கழுதை இவற்றை நீ தொடுவதுகூட குற்றமாயிற்றே!’ என்றான்.

உடனே, அந்தப் பிராமணன், ‘இது யாகப் பசு. இதனையா நீ நாய் என்று கூறுகிறாய்? உன் கண்கள் கெட்டுவிட்டனவா?’ என்று கோபித்துக்கொண்டான்.

‘சரி, சரி! நீ கோபித்துக்கொள்ளாதே. போ’ என்று அவனை அனுப்பிவிட்டுச்சென்றான்.

சிறிது தூரம் சென்றதும் அந்த வஞ்சகர்கூட்டத்தைச் சேர்ந்தவர்களுள் மற்றொருவன் அந்தப் பிராமணனிடம் வந்தான்.

‘அட பிராமணா! உனக்குத்தான் இந்தக் கன்றின் மீது எவ்வளவு பாசம்! அது இறந்த பின்னரும் கூட அதனை உன் தோளில் சுமந்துகொண்டுவருகிறாயே’ என்றான்.

‘இது கன்று இல்லை. இது யாகத்திற்கான ஆடு. இது இறக்கவில்லை’ என்றான் அந்தப் பிராமணன்.

பிராமணன் கூறியதைக் கேட்காமல் அவன், ‘இறந்த விலங்குகளைத் தொடுவது பாவம். அந்தத் தீட்டு எப்படிப் போகும்?’ என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.

மித்திரசர்மா குழப்பத்துடன் மேலும் சிறிது தூரம் சென்றதும் அந்த வஞ்சகர்கூட்டத்தைச் சேர்ந்தவர்களுள் மூன்றாமவன் அந்தப் பிராமணனிடம் வந்தான்.

‘அட பிராமணா! என்ன கொடுமைஇது? நீ ஒரு கழுதையைச் சுமந்து செல்லலாமா?’ என்று கேட்டுவிட்டுச் சென்றான்.

உடனே அந்தப் பிராமணன் யோசித்தான். ‘வழியில் பார்த்த மூவரும் இந்த ஆட்டைப் பற்றி மூன்றுவிதமாகக் கூறியுள்ளனரே! இது நம் கண்களுக்கு ஆடாகவும் மற்றவர்களின் கண்களுக்கு வேறு விலங்காகவும் காட்சி தருகிறதோ?’ என்று நினைத்து, ‘இந்த ஆடு ஏதாவது ராட்சஸனாக இருக்கும்போலும்’ என்று பயந்து, அதனை அங்கேயே விட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் தன் வீடுவந்துசேர்ந்தான்.

தம் திட்டம் வெற்றிபெற்றதனைக் கண்டு மகிழ்ந்த அந்த வஞ்சகர்கள் அந்த ஆட்டைக் கைப்பற்றிக்கொண்டனர் என்று கூறிய வயதில் மூத்த காகமாகிய சிரஞ்சீவி, காகராஜாவைத் தனியாக அழைத்துப் பேசியது.

‘பிராமணனை வஞ்சித்து ஆட்டைப் பறித்தவர்களைப்போல நான் நமது எதிரியை வஞ்சித்து அவர்களை அழிப்பேன்’ என்று காகராஜாவுக்கு உறுதி கூறிய சிரஞ்சீவி, ‘நீ எனக்கு ஓர் உதவிசெய்யவேண்டும். நீ என்னை வெறுத்து ஒதுக்குவதுபோலப் பேசி, என் மீது வேறு ஒரு விலங்கின் ரத்தத்தைத் தடவி, என்னை ஆலமரத்தின் கீழ் போட்டுவிடு. பின்னர் நீ அனைவரையும் அழைத்துக்கொண்டு மலையின் மீது சென்று அமர்ந்துகொள். நான் உங்களுக்கு எதிரியாக உள்ளேன் என்று நினைக்கும் அந்த ஆந்தைக் கூட்டம், என்னை அவர்கள் அருகில் சேர்த்துக்கொள்ளும். நான் அவர்களிடம் நண்பன்போல உறவாடி அவர்களுக்கு அழிவைத் தருவேன்’ என்றது.

‘இவ்வாறு செய்வதால் உன் உயிருக்குக் கூட ஆபத்துவருமே!’ என்று காகராஜா வருந்தியது.

சிரஞ்சீவி, ‘ராஜ காரியத்திற்காகச் சேவகர்கள் இப்படிப்பட்ட காரியங்களையும் செய்யத்தான் வேண்டும். தனக்குத் துன்பம் வரும்போது இவர்கள் உதவுவார்கள் என்பதால்தான் ராஜாக்களும் என்னைப் போன்ற சேவகர்களைத் தங்கள் அருகில் வைத்துக்கொள்கிறார்கள். இப்படி அவர்கள் ராஜாக்களுக்கு உதவவில்லை என்றால் அவர்களை ராஜாக்கள் தங்கள் அருகில் வைத்துக்கொண்டமைக்குப் பயனிருக்காதே!’ என்று கூறியது. பின்னர் தன் கலகத் திட்டத்தில் இறங்கியது சிரஞ்சீவி.

இவர்கள் நாடகமாடுகிறார்கள் என்பதனை அறியாத மற்ற காகங்கள் சிரஞ்சீவியைத் தாக்க வந்தன. காகராஜா அவர்களைத் தடுத்து, ‘இவன் ராஜ துரோகம் செய்துவிட்டான். இவனுக்கு நானே தண்டனை அளிக்கிறேன்’ என்று கூறி, தன் சொண்டால் (அலகு) அதனைப் பொய்யாகக் கொத்திக் கீழே தள்ளியது. பின்னர், தன் கூட்டத்தினரை அழைத்துக்கொண்டு மலைக்குச் சென்றது.

வழக்கம்போலப் படையெடுத்து வந்த ஆந்தைகள் அந்த ஆலமரத்தில் எந்தக் காகமும் இல்லாததனைக் கண்டு திகைத்தன. அப்போது மரத்தடியில் இருந்த மூத்த காகமாகிய சிரஞ்சீவி, அடிபட்ட பறவைபோல நடித்து, ‘என்னைக் காப்பாற்றுங்கள். காகராஜா என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டான். நான் உங்கள் ராஜாவிடம் சரணடைகிறேன்’ என்று கூறியது. இந்த விஷயத்தை அவர்கள் தங்கள் ராஜாவிடம் கூறினர். ஆந்தை ராஜா ஆச்சரியப்பட்டார். தானே நேரில் வந்து, சிரஞ்சீவியைப் பார்த்தார்.

சிரஞ்சீவி, ஆந்தை ராஜாவிடம் ‘காகராஜா உன் மீது வன்மம்கொண்டு, உன்னை எதிர்த்துப் போர்தொடுக்கத் திட்டமிட்டார். நான் அவரின் திட்டத்தைத் தடுத்து, ஆந்தை ராஜா உன்னைவிட வலிமையானவர். அவரிடம் நீ எதிர்த்து நின்றால் விளக்கை அணைக்க நினைத்து அதில் விழுந்து மாண்ட விட்டில் பூச்சி போலாகிவிடுவாய் என்று கூறி, ஆந்தை ராஜாவுடன் சமாதானம் செய்துகொண்டு உயிர் பிழைத்துக்கொள் என்று எச்சரித்தேன். அவர் உங்களிடம் சமாதானம் பேச விரும்பவில்லை. ‘பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம். உயிரை இழந்துவிட்டால் மீண்டும் பெறமுடியுமா?’ என்று அவருக்கு எடுத்துக் கூறினேன். அவர் என் மீது கோபித்து, என்னை அடித்துக் கொல்லத் துணிந்தார். இப்போது நான் உங்கள் காலடியில் கிடக்கிறேன்’ என்று தந்திரமாகப் பேசியது.

ஆந்தை ராஜா, சிரஞ்சீவியின் மீது இரக்கம் கொண்டது. அதனை அறிந்த சிரஞ்சீவி, ‘தாங்கள் என்னைக் காப்பாற்றினால், நான் உங்களுடன் இணைந்துகொண்டு அந்தக் காகக் கூட்டத்தையே அழித்துவிடுவேன்’ என்று கூறியது.

உடனே, ஆந்தை ராஜா தன்னுடைய ஐந்து மந்திரிகளையும் அழைத்து, ‘இந்த சிரஞ்சீவியை என்ன செய்யலாம்? என்று அவர்களிடம் ஆலோசனை கேட்டது.
குருதிக்கண்ணன் என்ற மந்திரி, ‘ராஜா! இவன் காகராஜனுக்கு முதன்மையான மந்திரி. காலநேரம் சரியில்லாததால் இவன் அவனுக்கு எதிரியாகத் தெரிகிறான். இவன் நம்முடன் இணைந்த பின்னர் இவனுடைய வார்த்தைகளை நாம் கேட்காவிட்டால் இவன் நமக்கு எதிரியாகிவிடவும் வாய்ப்புள்ளதே! இவனைக் கொண்டே நாம் நமது எதிரியை வெல்லவேண்டும். சாம, தான, பேத, தண்டம் ஆகிய நான்கு வழிகளில், சாமத்தினால் செய்கின்ற காரியங்கள் எப்போதுமே கெடுவதில்லை. சர்க்கரையை உண்டாலே பித்தம் நீங்கும் எனில் நாம் ஏன் கசப்பான மருந்தை உண்ணவேண்டும்?. ஆதலால், சாம வழியினையே நாம் இப்போது பயன்படுத்தலாம். தான, பேத, தண்ட வழிகளை நாம் கைக்கொள்ள வேண்டாம்’ என்றது.

இந்த ஆலோசனையைக் கேட்டுக்கொண்ட ஆந்தை ராஜா, தன்னுடைய இரண்டாவது மந்திரியான கொடுங்கண்ணனிடம் கருத்துகேட்டது.
மந்திரி கொடுங்கண்ணன், ‘ராஜா! காகங்கள் எப்போதுமே நமக்குப் பகைதான். ஆகையால், இவர்களை அடக்க நாம் தண்ட வழியைக் கைக்கொள்வதுதான் சிறந்தது. வெல்லமுடியாத பகைவர்கள் நமக்கு இருந்தால் அவர்களின் பகைவர்களை நாம் துன்பப்படுத்தவேண்டும். அல்லது அவர்களுக்குப் பணம்கொடுத்தாவது, பொய்ப் பத்திரம் பிறப்பித்தாவது அவர்களுக்குள் நாம் பகையைத் தூண்டவேண்டும். நடுவில் புரைச்சல் உள்ள முத்துக்களும்கூடப் பயன்படுகின்றனவே! ஆதலால், இந்தக் காகத்தைத் தாங்கள் கொல்லவேண்டும். ஒருவேளை நம் பகைவனும் நமக்கு நன்மையே செய்யலாம்! ஒரு திருடன் ஒருவனைப் பிழைக்கச் செய்ததும் ஒரு ராட்சஸன் இரண்டு பசுக்களைப் பிழைக்கச் செய்ததும் தாங்கள் அறிவீர்கள்தானே!’ என்றது.

இல்லை. அது எனக்குத் தெரியாது. எது எப்படி?’ என்று கேட்ட ஆந்தை ராஜாவுக்கு, மந்திரி கொடுங்கண்ணன் அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.

3.4. ராட்சஸனுடன் கூட்டுவைத்த திருடன்

ஒரு பெரிய நகரத்தில், ஏழைப் பிராமணன் ஒருவன் வசித்துவந்தான். அவன் தனக்குக் கிடைத்த ஒரு பசுவையும் அதன் கன்றினையும் மிகவும் பாசமாக அதிக உணவு கொடுத்து வளர்த்து வந்தான். அப்படி கொழுத்து வளர்ந்த பசுவையும், கன்றையும் கவர்ந்து செல்வதற்காக திருடன் ஒருவன் திட்டமிட்டுக் காத்திருந்தான்.

பல நாள்கள் கண்காணித்துவந்த அந்தத் திருடன், ஒருநாள் அந்தப் பிராமணனின் பசுவையும் கன்றையும் திருடுவதற்காகக் கயிற்றினை எடுத்துக்கொண்டு சென்றான்.

அவன் செல்லும் வழியில், கோரைப்பல்லும் நீண்ட மூக்கும் செம்பட்டையான முடிகளும் சிவந்த கண்களும் கறுத்த உடலுமுடைய ஒரு ராட்சஸன் அவனை வழிமறித்தான்.

ராட்சஸனைக் கண்டதும் திருடன் தன் மனத்துக்குள் நடுங்கினான். தன் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் துணிவுடன், ‘யார் நீ?’ என்று அவனிடம் கேட்டான்.

‘நான் சத்தியவசனன் என்ற ராட்சஸன். நீ யார்?’ என்று கேட்டான் ராட்சஸன்.

‘நான் ஒரு திருடன். பிராமணன் வளர்த்துவருகின்ற பசுவையும் கன்றையும் திருடுவதற்காகச் செல்கிறேன். எனக்கு வழியைவிடு’ என்றான் திருடன்.

‘அட, அந்தப் பிராமணனா? அவன் மிகவும் நல்லவனாயிற்றே! சரி, இரு. நானும் உன்னுடன் வந்து அவனை விழுங்கிவிடுகிறேன்’ என்றான் ராட்சஸன்.

அதற்கு உடன்பட்ட திருடன் ராட்சஸனை அழைத்துக்கொண்டு பிராமணனின் வீட்டிற்குச் சென்றான். அந்தப் பிராமணன் தூங்கிக்கொண்டிருந்தான். இதுதான் சரியான தருணம் என்று நினைத்த ராட்சஸன் அந்தப் பிராமணனை விழுங்கச்சென்றான்.

அவனைத் தடுத்த திருடன், ‘முதலில் நான் அந்தப் பிராமணனின் பசுவையும் கன்றையும் திருடிக்கொள்கிறேன். அதன் பின்னர் நீ அந்தப் பிராமணனை விழுங்கு’ என்றான்.

‘நீ பசுவையும் கன்றையும் திருடும்போது அவை சப்தமிடும். அந்தச் சப்தத்தில் பிராமணன் விழித்துவிடுவான். அதனால், முதலில் நான் பிராமணனை விழுங்கிவிடுகிறேன். அதன் பின்னர் நீ அந்தப் பிராமணனின் பசுவையும் கன்றையும் திருடிச்செல்’ என்றான் ராட்சஸன்.

‘இல்லை. நீ பிராமணனைக் கொல்லும்போது அவன் சப்தமிடுவான். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் விழித்துக்கொள்வார்கள். அதன் பின்னர் நான் எப்படி இந்தப் பசுவையும் கன்றையும் திருடிச் செல்லமுடியும்?’ என்று வாதிட்டான் திருடன்.

இப்படி இவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும் சப்தம்கேட்டு விழித்துக்கொண்டான் பிராமணன். அவன் முதலில் திருடனைப் பார்த்துவிட்டான். உடனே திருடன், ‘அட பிராமணா! உன்னைத் தின்ன இந்த ராட்சஸன் வந்திருக்கிறான்’ என்றான்.

பிராமணன் ராட்சஸனைப் பார்த்தான். உடனே ராட்சஸன், ‘இல்லை பிராமணா! இந்தத் திருடன் உன்னுடைய பசுவையும் கன்றையும் திருட வந்திருக்கிறான்’ என்றான்.

பிராமணன் தன்னுடைய இறைவனை நினைத்துவேண்டினான். உடனே ராட்சஸன் ஓடிவிட்டான். பிராமணன் அருகிலிருந்த ஒரு கழியினை (கம்பு) எடுத்து அந்தத் திருடனை அடித்து விரட்டினான். இறுதியில் பிராமணனின் உயிரும் தப்பியது, அவனுடைய பசுவும் கன்றும் திருடப்படவில்லை. ஆதலால், மாற்றானும் ஒருவேளை நமக்கு நன்மைசெய்யக்கூடும்’ என்றது ஆந்தை மந்திரி கொடுங்கண்ணன்.

ஆந்தை ராஜா அடுத்து மந்திரி கொள்ளிக் கண்ணனைப் பார்த்து, ‘உன்னுடைய ஆலோசனை என்ன?’ என்று கேட்டார்.

கொள்ளிக் கண்ணன், ‘ராஜா! சாமமும் பேதமும் உனக்கு உடன்பாடில்லை. நாம் பகைவரிடம் சமாதானம் செய்தால் அந்தப் பகைவருக்கு ஆணவம் ஏற்பட்டுவிடும். அதனால் நமக்குக் கேடுதான் விளையும். புத்திசாலி தருமத்தினால் பகைவனைத் தன்வசப்படுத்திக் கொள்வான். இவன் நம் எதிரிகளிடம் சண்டையிட்டு நம் பக்கம் வந்துள்ளதால், இவன் நம் எதிரிகளின் பலவீனங்களை நமக்குச் சொல்லிவிடுவான். அதனை அறிந்து நாம் நமது எதிரிகளை எளிதில் வெல்லலாம். ஆதலால், நாம் இவனை ஆதரிப்பது நல்லது. இவன் நம்மிடம் நன்றாகப் பழகிவிட்டால், அதன் பின்னர் இவன் நம்மைப் பற்றிய ரகசியங்களை வெளியே கூறமாட்டான். ஒருவேளை இவன் நம்முடைய ஆதரவினை மறந்து நமது ரகசியங்களை வெளியே கூறினால், வயிற்றிலிருந்த பாம்பும் புற்றிலிருந்த பாம்பும் நாசமடைந்ததைப் போலக் கெடுவான்’ என்றது.

மந்திரி உலூகராஜன், ‘எப்படி அந்த இரண்டு பாம்புகளும் நாசமடைந்தன?’ என்று கேட்டவுடன், மந்திரி கொள்ளிக்கண்ணன் அந்தக் கதையினைக் கூறத் தொடங்கினான்.

(தொடரும்)

ராணுவம் : இந்தியாவும் பாகிஸ்தானும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 11

1947 போரில் இந்தியாவின் முதல் தாக்குதல்

Pakistani troops patrol on a hill top post in Ladha, a town in the troubled tribal region of South Waziristan along the Afghan border on November 17, 2009. Donkeys nibbling on the roadside are the only creatures living in the ruins of war in the hamlet of Ladha, the scenic valley emptied of inhabitants due to fighting between army and Taliban. For five weeks, 30,000 troops backed by warplanes and helicopter gunships have waged battle in South Waziristan, bombing, shelling and fighting in streets against homegrown Taliban militants the military has vowed to crush. AFP PHOTO/ AAMIR QURESHI (Photo credit should read AAMIR QURESHI/AFP/Getty Images)

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூகோள அமைப்பைச் சரியாகப் புரிந்துகொள்வது சற்று கடினமான ஒன்றுதான். இருந்தபோதும் அதன் மலைத் தொடர்களைத் தெரிந்துகொண்டால் எளிதாகிவிடும். வெளி இமயமலை (தெற்கு), உள் இமயமலை, பெரும் இமயமலை (வடக்கு), இன்னும் வடக்கில் காரகோரம் மலைத் தொடர், தென் கிழக்கில் லடாக், சன்ஸ்கார் மலைத் தொடர்கள் ஆகியவை ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளின் முக்கியமான மலைத் தொடர்கள்.

தெற்கில் இருந்து சென்றால் முதலில் தென்படுபவை வெளி இமய மலைகள். இவை சிவாலிக் மலைகள் என்றும் ஜம்மு மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மலைத் தொடர் பஞ்சாபில் இருந்து உயர்ந்து கொண்டு செல்கிறது. கிழக்கில் பாசோஹ்லியில் இருந்து மேற்கில் பூஞ்ச் வரை செல்லும் இது ஓர் உடைந்த மலைத் தொடர். மேலும் இதனை ராவி நதியில் இருந்து ஜீலம் நதி வரை உள்ள மலைத்தொடர் என்றும் சொல்லலாம். இதில் உள்ள மலைகள் 200 கிமீ நீளமும், 20 முதல் 50 கிலோ மீட்டர் வரை அகலமும், 600 முதல் 1200 மீட்டர் வரை உயரமும் கொண்டவை.

உள் இமய மலைகள் சிறிய இமயமலைகள் என்றும் பிர்பாஞ்சால் மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. வெளி இமய மலைகளுக்கும், பிர்பாஞ்சால் மலைகளுக்கும் இடையே ஜம்மு பகுதி இருக்கிறது. ஜம்மு, காஷ்மீரின் குளிர்காலத் தலை நகரம்.

காஷ்மீர் பாள்ளத்தாக்கு அல்லது காஷ்மீர், வடக்கில் பெரும் இமய மலைகளுக்கும், தெற்கிலும் மேற்கிலும் உள்ள பிர் பாஞ்சால் மலைகளுக்கும் இடையே அமைந்துள்ளது. கோடைகாலத் தலை நகரான ஸ்ரீ நகர் அங்கு உள்ளது.

வடக்கில் காரகோரம் மலைத்தொடருக்கும் பெரும் இமய மலைகளுக்கும் இடையே உள்ள பகுதிகள் ஜம்மு-காஷ்மீரின் வடக்குப் பகுதிகள் என்று அழைக்கப்படுபவை. சிந்து சமவெளி, கில்கித், ஹன்சா, பல்திஸ்தான் ஆகிய பகுதிகள் இங்கு உள்ளன. இந்த வடக்குப் பகுதிகளுக்கு தென் கிழக்காக அமைந்திருப்பது லடாக் பகுதியாகும். இது வடக்கில் உள்ள குன்லன் மலைத் தொடர்களுக்கும் தெற்கில் உள்ள பெரும் இமயமலைக்கும் இடையில் உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானம் சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இது வடக்கு தெற்காக 640 கிமீ அகலமும், கிழக்கு மேற்காக 380 கிமீ அகலமும் கொண்டது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து 300 முதல் 7000 மீட்டர்கள் உயரத்தில் இது அமைந்துள்ளது.

தட்ப வெப்ப நிலை ஒரு பகுதியின் உயரத்தைப் பொறுத்து அமைகிறது. ஜம்மு பகுதியின் சராசரி உயரம் கடல் மட்டத்தில் இருந்து 305 மீட்டர்கள். காஷ்மீர் பகுதியின் சராசரி உயரம் 1700 மீட்டர்கள். லடாக் பகுதியின் ச ணராசரி உயரம் 2500 முதல் 3500 மீட்டர்கள்.லடாக் பகுதி மலைப் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.  இத்தகைய மலைப் பகுதிகளைக் கொண்ட ஜம்மு – காஷ்மீரில் போரின் போது விமானத்தில் இருந்து பாராசூட் முலம் வீரர்களை இறக்குவது மிகவும் ஆபத்தானது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் உள்ள இடங்களில் ஐ சி என்ஜின்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் சரியாகச் செயல்படுவதில்லை. இப்படிப்பட்ட சவாலான குளிர் பிரதேசத்தில் தான் இந்திய பாகிஸ்தான் முதல் போர் தொடங்கியது.

1947 அக்டோபர் 27 ஆம் தேதி அதிகாலை பாலம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டகோடா விமானம் காலை 8.30 மணிக்கு ஸ்ரீ நகரில் தரை இறங்குகிறது. அதுவே போருக்காக காஷ்மீரில் இறங்கிய சுதந்தர இந்தியாவின் முதல் ராணுவ விமானம்.  அதை ஓட்டி வந்த விமானி பின் நாளில் ஒரிசாவின் முதல்வராக இருந்த பிஜூ பட்நாயக். அந்த விமானத்தில் 1 வது சீக்கிய ரெஜிமென்ட்டின் 17 ராணுவ வீரர்கள் இருந்தார்கள்.படையைத் தலைமை தாங்கியவர் லெப்டினட் கர்னல் திவான் ரஞ்சித் ராய்.

விமானம் ஸ்ரீ நகர் விமான தளத்தின் மேல் தாழ்வாகப் பறந்து இரண்டு முறை வட்டமடித்தது.பிரதம மந்திரி நேருவின் அலுவலகத்தில் இருந்து வந்த ஆணையின் படி விமான தளம் எதிரிகள் கைவசம் இருக்கும் பட்சத்தில் விமானம் தரை இறங்கக் கூடாது. விமானி,விமான தளத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் விமானத்தைத் தரை இறக்குகிறார். உள்ளிருந்தவர்கள் வெளியே யாரும் இருக்கிறார்களா என்று மீண்டும் பார்த்துக் கொள்கிறார்கள்.விமான தளம் யாருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.ஆனால் திடீரென்று விமான ஓடு தளத்திலிருந்து மனிதர்கள் முளைத்து எழுவது போல் உள்ளது.சிறிது நேரத்தில் அங்கு மக்கள் மொய்த்திருப்பது தெரிந்தது. அவர்கள் எல்லோரும் ஸ்ரீ நகரில் இருந்து தப்பிச்செல்ல காத்திருந்த பொது மக்கள்.அவர்கள் விமான தளத்தின் அருகே பதுங்கி இருந்தார்கள்.இதனை அந்த விமானத்தில் வந்த பிரிகேடியர் ஹிராலால் அத்தால் தெரிவிக்கிறார்.

அந்த வேளையில் அத்து மீறி உள்ளே புகுந்த பதானியர்கள் பாரமுல்லாவைச் சுற்றி வந்து மனிதர்களை வேட்டையாடுவதில் மும்முரமாக இருந்தார்கள். படை இறங்கிக் கொண்ட பின் விமானி சாமர்த்தியமாக வேறு யாரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. அவர் விமானத்தை அங்கிருந்து பாரமுல்லா செல்லும் சாலை வரை ஓட்டி சென்று நோட்டமிடுகிறார். அங்கு ஆள் நடமாட்டம் இல்லை. அதே வேளையில் பாரமுல்லாவின் பல இடங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டும் மற்ற இடங்கள் புகைந்து கொண்டும் இருக்கின்றன என்று அவர் செய்தி அனுப்புகிறார். அப்போது எதிரிகள் சுட்டதால் ஒரு குண்டு பறந்து வந்து எரி பொருள் டேங்கைத் தாக்குகிறது. ஆனால் அது மோசமாக சேதமடையவில்லை. விமானம் அந்த நாள் முழுவதும் பல முறை (28 முறை) பறந்து 300 சீக்கிய ரெஜிமென்ட் வீரர்களை ஸ்ரீ நகருக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

முதல் முறை விமானம் வந்து இறங்கிய சில மணி நேரத்தில் படைத் தலைவர் ரஞ்சித் ராய் ஒரு சிறிய படையை ஸ்ரீ நகர் விமான தளத்துக்குக் காவலாக இருக்கும்படி ஆணையிட்டார். அவர் ஒரு ரைபிள் படைப் பிரிவுடன் பாரமுல்லாவை நோக்கிச் சென்றார். பாரமுல்லாவில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த காஷ்மீர் ராணுவப் படைப் பிரிவுகளுடன் (60 வீரர்கள் கொண்ட 2 பிளாட்டூன்கள்) இந்தியப் படைப் பிரிவு சேர்ந்து கொண்டது. அந்தப் படைப் பிரிவுகள் பாரமுல்லாவிற்கு கிழக்கே சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் , பாதானியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்தன. அப்போது இந்திய ராணுவம் காஷ்மீர் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான தன் முதல் ரைபிள்படை தாக்குதலை நடத்தியது.

இந்தியப் படை வீரர்களால் அதிக நேரம் பதானியர்களின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் சற்று பின் வாங்கி ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அரணாக நின்றார்கள். அடுத்த நாள் அக்டோபர் 28 ஆம் தேதி காலை ரஞ்சித் ராய் மேலும் இரண்டு ரைபிள் படைப் பிரிவுகளுடன் சற்று முன்னேறிச் சென்றார். அங்கு மிகுதியான அளவில் பதானியப் படை வீரர்கள் இருப்பதைக் கண்டார். அபாயத்தை உணர்ந்து அங்கிருந்து படைப் பிரிவுகளை பின் வாங்குமாறு கட்டளையிட்டார்.

ஸ்ரீ நகரில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்கள் தொலைவில் பாதுகாப்புடன் கூடிய வலிமையான இடத்தில் படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டன. ஆனால் படை பின்வாங்கும் தருணத்தில் எதிரிகளின் பக்கம் இருந்து வந்த குண்டு ஒன்று ரஞ்சித் ராயின் கழுத்தில் பாய்ந்ததால் அவர் வீர மரணம் அடைந்தார். பாரமுல்லாவில் பதானியப் படையுடன் நடந்த முதல் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட வீரர்களாலும், ஆயுதங்களாலும் இந்தியப்படை வலுவடைந்தது.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ளது காஷ்மீரின் பதான் நகரம். இது பாரமுல்லாவில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 27.5 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு சீக்கிய படைப் பிரிவு, மோர்டார்கள் போன்ற வலுவான ஆயுதங்கள் கொண்ட படைப்பிரிவு, ஆறு இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய பஞ்சாப் படைப்பிரிவு ஆகியவை பதான் நகரத்தில் நிறுத்தப்பட்டன. ஒரு குமான் துணை ராணுவப் படைப்பிரிவு ஸ்ரீ நகர் விமான தளத்தைக் காவல் காத்தது.

பிரிட்டிஷார் வளர்த்து விட்டுச்சென்ற இந்திய ராணுவம் 

ஒரு போரை முழுமையாகக் காண அதில் நேரடியாகப் பங்கு கொள்ளும் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர் வகித்த பதவிகளின் பெயர்களையும், அதிகாரங்களையும் அறிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் ராணுவக் கட்டமைப்பில் உள்ள வெவ்வேறு ராணுவப் பதவிகளின் அதிகாரங்களுக்கும் போரின் போக்குக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

போரில் பங்கு பெரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், ராணுவத்தின் கட்டமைப்பு உருவாக்கத்தில் முக்கிய காரணிகளாக உள்ளன. 1947 இல் தேசப் பிரிவினைக்கு முன் இந்தியா ஏழு பெரிய மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்றாக இருந்த இந்தியாவின் ஏழு மாகாணங்கள் :

 1. 1.வங்காளம். சுமார் 1.5 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய வங்க தேசம், மேற்கு வங்காளம், பிகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகியவை இணைந்த பெரிய மாகாணம்.
 2. மதராஸ். சுமார்1.4 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய தமிழ் நாடு முழுவதையும்,ஆந்திரப் பிரதேசம்,கர்நாடகா, கேரளா ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய மாகாணம்.
 3. பம்பாய். சுமார் 1.2 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் சிந்துவையும், தற்போதைய மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
 4. இணைந்த மாகாணங்கள். சுமார் 1.1 லட்சம் சதுர மைல்கள். தற்போதைய உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட்.
 5. மத்திய மாகாணங்கள். சுமார் 1 லட்சம் சதுர மைல். தற்போதைய மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர்.
 6. பஞ்சாப். சுமார் 97 அயிரம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப், இஸ்லாமாபாத், இந்தியாவின் பஞ்சாப், இமாசலப் பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகியவை இணைந்த மாகாணம்.
 7. அஸ்ஸாம். சுமார் 49 ஆயிரம் சதுர மைல்கள்.

சிறிய மாகாணங்கள் ஐந்து :

 1. வட மேற்கு எல்லை மாகாணம். 16 ஆயிரம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டது.
 2. பிரிட்டிஷ் பலுசிஸ்தான். 46 ஆயிரம் சதுர மைல்கள்.
 3. கூர்க். 1600 சதுர மைல்கள்.
 4. அஜ்மீர்- மீர்வாரா. 2700 சதுர மைல்கள்சி இது தற்போதைய ராஜஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகளை உள்ளடக்கியது.
 5. அந்தமான் நிக்கோபார் தீவுகள். 30,000 சதுர மைல்கள்.

பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுமையில் இருந்த பெரிய மாகாணமான பர்மாவின் பரப்பளவு 1.7 லட்சம் சதுர மைல்கள். பர்மா 1937 இல் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் தனியாக இயங்கத் தொடங்கியது.

பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட சமஸ்தானங்களில் நான்கு பெரியவை.

 1. ஹைதராபாத். 82,698 சதுர மைல்கள். இது சமீபத்தில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியையும், மகாராஷ்டிரம், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
 2. ஜம்மு- காஷ்மீர். 80900 சதுர மைல்கள்.

3 மைசூர். 29,444 சதுர மைல்கள்.

 1. பரோடா. 8099 சதுர மைல்கள்.

சிறிய சமஸ்தானங்கள் :

 1. மத்திய இந்தியா ஏஜென்சி பகுதியைச் சேர்ந்த 148 சமஸ்தானங்கள்
  2. ராஜபுத்தானாவைச் சேர்ந்த 20 சமஸ்தானங்கள்
  3. பலுசிஸ்தான் பகுதியில் 2 சமஸ்தானங்கள்
  4. வங்காளத்தின் 30 சமஸ்தானங்கள்
  5. மதராஸ் பகுதியில் 5 சமஸ்தானங்கள்
  6. பம்பாய் பகுதியில் 354 சமஸ்தானங்கள்
  7. இணைந்த மாகாணத்தின் 15 சமஸ்தானங்கள்
  8. மத்திய மாகாணத்தின் 15 சமஸ்தானங்கள்
  9. பஞ்சாபின் 34 சமஸ்தானங்கள்
  10. அஸ்ஸாமின் 26 சமஸ்தானங்கள்

சமஸ்தானங்களின் எண்ணிக்கை, பர்மாவின் 52 சமஸ்தானங்ளைச் சேர்க்காமல் 640. ஆனால் அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மறைமுக ஆளுமையின் கீழ் இருந்த சமஸ்தானங்கள் 565. பிரிவினைக்கு முன் இந்தியாவின் பெரிய, சிறிய மாகாணங்களின் மொத்த பரப்பளவு சுமார் 8 லட்சத்து 63.3 ஆயிரம் சதுர மைல்கள் (பர்மா நீங்கலாக). அனைத்து சமஸ்தானங்களின் மொத்த பரப்பளவு (பர்மாவின் சமஸ்தானங்கள் நீங்கலாக) சுமார் 7 லட்சத்து 3.3 ஆயிரம் சதுர மைல்கள்.

பிரிவினைக்கு முன்னால் இந்தியாவின் மொத்த பரப்பளவு சுமார் 15 லட்சத்து 66.6 ஆயிரம் சதுர மைல்கள். எனவே 1947 இல் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் மாகாணங்களின் பரப்பளவு கிட்டத்தட்ட 55 % ஆகவும் சமஸ்தானங்களின் பரப்பளவு 45 % ஆகவும் இருந்துள்ளன. இது பொதுவாக குறிப்பிடப்படும் 60% – 40% என்ற கணக்குக்கு நெருங்கி வருகிறது. மாகாணங்களில் எல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் முழுமையாக அதிகாரம் செலுத்தமுடியும். சமஸ்தானங்களை அது மறைமுகமாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளமுடியும்.

உலகின் பல பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவம் என்பது பிரிட்டிஷ் ஆர்மி என்ற தரைப்படை, ராயல் ஏர்ஃபோர்ஸ் என்ற விமானப் படை, ராயல் நேவி என்ற கப்பல் படை ஆகியவற்றைக் கொண்டது. இதே போன்று பிரிட்டிஷ் இந்திய ராணுவமும் முப்படைகளைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ராணுவத் தரைப்படை கட்டமைப்பு தீ குழு (ஃபையர் டீம்) என்ற நான்கு வீரர்களைக் கொண்ட சிறிய பிரிவில் தொடங்கி தியேட்டர் என்ற பெரும் படையில் முடிகிறது.

இந்த ராணுவக் கட்டமைப்பு உலகின் பெரும்பாலான பெரிய நாடுகளுக்குப் பொருந்தும். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கட்டமைப்பும் இதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.

இரண்டாம் உலகப் போருக்கு (1939-45) முன்னால் இந்திய ராணுவம் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் பிரிவுகளைக் (கமாண்ட்) கொண்டிருந்தது. அந்தப் பிரிவுகள் இன்றைய இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகியவை இணைந்த பெரிய தேசத்தின் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு ராணுவப் பெரும் பிரிவும் ஒரு ஜெனரல் அல்லது லெப்டினெண்ட் ஜெனரலின் கீழ் செயல்பட்டது.

நிர்வாக வசதிக்காக ராணுவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1942 மே மாதம் ராணுவத்தின் பெரும் பிரிவுகளில் பெயர் மாற்றமும் சிலவற்றில் முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டன.

அப்போது ராணுவம் வடமேற்கு பெரும் பிரிவு,தெற்கு ராணுவப்படை,கிழக்கு ராணுவப்படை,மத்திய பெரும் பிரிவு என்று பிரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் 1946 இல் மீண்டும் மாற்றம் நடந்தது. மத்திய பெரும் பிரிவு கலைக்கப்பட்டது. வட மேற்கு பெரும் பிரிவு மீண்டும் வடக்குப் பெரும் பிரிவு ஆனது. தெற்கு, கிழக்கு, மேற்கு பெரும் பிரிவுகள் மீண்டும் உருவாயின. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது வடக்கு ராணுவப் பெரும் பிரிவு சுதந்திர பாகிஸ்தானின் ராணுவத் தலைமையகம் ஆனது. மற்ற ராணுவப் பெரும் பிரிவுகள் இந்திய ராணுவத்தின் பகுதிகளாயின.

ராணுவத்தின் தரைப் படை, விமானப் படை, கப்பல் படை ஆகிய அனைத்திலும் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தானுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அதிகாரிகள், வீரர்கள் ஆகியோரில் மூன்றில் ஒரு பங்கு நபர்கள் பாகிஸ்தானுக்குச் சொந்தம். ஆயுதங்கள்,விமானங்கள், கப்பல்கள் ஆகிய எல்லாவற்றிலும் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தான் வசம் சென்றன.
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு கமாண்டுகள் ஒவ்வொன்றும் பெரிய ராணுவப் பிரிவைக் குறிக்கின்றன. கமாண்ட் என்பது ஒரு குறிப்பிட்ட பணிக்காகவோ அல்லது தேசத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பாதுகாப்புக்காகோ உருவாக்கப்படுவது. அது கார்ப்ஸ் என்ற பெரும் படையை ஒரு பணிக்காக அனுப்பமுடியும். அதே வேளையில் அது சிறிய படைகளான சில பெட்டாலியன்களையும் பணிக்காக அனுப்பும்.

ராணுவத்தைப் பொறுத்தவரை ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரோடு ஆயுதங்கள், ராணுவ வாகனங்கள் இவை எல்லாம் இருந்தால் உடனடியாக ஒரு போரை நடத்திவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் போர் நடக்க இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு பணிக்கப்பட்டது ஆயுதங்கள் கொண்ட ஒரு காலாட்படை ரெஜிமென்ட். பொதுவாக அது நிர்வாகப் பணிகளையும், விழாக்கால பணிகளையும் மேற்கொள்ளும். அதில் சில பெட்டாலியன்கள் இருக்கும். இப்போது போருக்கு அனுப்ப அதில் ஒரு போர்க் குழு உருவாக்கப்படும். ஒரு பிரிகேடியர் தலைமையில் இயங்கும் ஆயுதம் தாங்கிய ரெஜிமென்ட்டைச் சுற்றி உருவாக்கப்படுவது போர் குழு.
போர் செய்யப்போகும் படைகள் எல்லாம் சேர்ந்த ஒரு தொகுப்பை ஒரு கட்டடம் என்றால் இந்தப் போர்க் குழு அதன் அஸ்திவாரத்தின் மேல் எழுந்த முதல் தளம். இனி உயரமான பெரும் கட்டடம் அதன் மேல் எழும். ஒரு பெட்டாலியன் அல்லது ரெஜிமென்ட்டை வைத்து உருவாக்கப்படும் போர்க்குழுவுக்குத் தேவையான ஆள்களை அதுவே கொடுத்துவிடும். இன்னும் அதிகமாகத் தேவைப்படும் ஆட்களையும், ஆயுதங்களையும் மற்ற பிரிவுகள் கொடுக்கும். உதாரணமாக ராணுவ டேங்குகள் படை வீரர்களோடு அதில் இணைக்கப்படும். போர்க்குழு தன் பணியை சரியாகச் செய்து முடிக்க ஒரு தொழில் நுட்பப் பிரிவும் அதனோடு சேர்க்கப்படும். மேலும் போரில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு போர்க் குழுவின் வடிவம் மாற்றி அமைக்கப்பட வசதியானதாக இருக்கும். போரில் தாக்குதல் நடத்தும்போது ஆயுதம் தாங்கிய ஒரு ரெஜிமென்ட்டைச் சுற்றி உருவக்கப்படும் போர்க்குழு இரண்டு டேங்கு ஸ்குவாட்ரன்களையும், அதற்கு உதவியாக ஒரு காலாட்படை கம்பெனியையும் பயன்படுத்தலாம். போரில் சற்று பின்வாங்கி பாதுகாப்பாகப் போரிடும் நிலை ஏற்படும்போது ஒரு காலட்படை பெட்டாலியனைச் சுற்றி உருவாக்கப்படும் போர்க்குழு இரண்டு கம்பெனிகளையும், ஆயுதம் தாங்கிய ஒரு ஸ்குவாட் ரனையும் பயன்படுத்தலாம்.
1947 இல் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் 4 லட்சத்து 60 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருந்தது. அதில் 12 ஆயிரம் அதிகாரிகள் இருந்தார்கள். இவர்களைத் தவிர கமிஷனால் நியமிக்கப்படாத அதிகாரிகளும் இருந்தார்கள். மொத்த ராணுவ வீரர்களோடு சமஸ்தானங்களின் 75 ஆயிரம் படை வீரர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் தரைப் படை தலைமை தளபதி முப்படைகளுக்கும் தலைவராக இருப்பார். அவர்தான் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கமாண்டர் – இன் – சீஃப். அவர் கவர்னர் ஜெனரலின் ஆணைக்கு உட்பட்டு நடப்பவர். அந்தப் பதவியைக் கடைசியாக வகித்த வெள்ளைக்காரர் ஜெனரல் சர் ராய் பச்சர். இந்திய ராணுவத்தின் முதல் இந்திய கமாண்டர் – இன் – சீஃப் ஆக இருந்தவர் ஜென்ரல் கே.எம். கரியப்பா. சுதந்தர இந்தியாவில் 1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பதவி குடியரசுத் தலைவர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டது. ஆதலால் தனியாக அப்படியொரு பதவி அதற்குப் பிறகு கிடையாது. தரைப்படை தளபதி பதவியின் பெயர் சீப் ஆஃப் ஆர்மி ஸ்டாஃப் என மாற்றப்பட்டது. இந்திய ஜனாதிபதி முப்படைகளின் தலைவர் (கமாண்டர் – இன் – சீஃப்) ஆகிவிட்டார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் உயர் ராணுவ அதிகாரிகள் எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் தாம். கமிஷனால் நியமிக்கப்படும் உயர் அதிகாரிகளில் பிரிட்டிஷாரும், இந்தியர்களும் இருந்தார்கள்.
1920 முதல் பிரிட்டிஷ் அரசரின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதில் உள்ள அதிகாரிகள் இந்தியர்கள். மேலும் அப்போது வைஸ்ராயின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கொண்ட பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. இவர்களும் இந்தியர்கள்தாம். முன்னே சொல்லப்பட்டவர்களுக்கும் இவர்களுக்கும் அதிகாரத்தில் வேறுபாடு உண்டு. வைஸ்ராயின் கமிஷனால் நியமிக்கப்பட்ட இந்திய ராணுவ அதிகாரிகள் ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். இவர்கள் எல்லோரும் அரசரின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். பிரிட்டிஷ் ராணுவ மேஜருக்கு இணையான சுபேதார் மேஜர், பிரிட்டிஷ் ராணுவ கேப்டனுக்கு இணையான சுபேதார், லெப்டினண்ட்டுக்கு இணையான ஜமேதார் ஆகியோர் இவர்களுள் அடங்குவார்கள்.
ராணுவத்தின் கட்டமைப்பில் வெவ்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளின் பதவிப் பெயர்கள் கொண்ட பட்டியல் பிரிட்டிஷ் ராணுவத்தின் கடை நிலை அதிகாரியில் இருந்து நீள்கிறது.

1.ராணுவசி அதிகாரி -பயிற்சி- ஒரு ஸ்டார்
2.இரண்டாம் நிலை லெப்டினண்ட் – 2 ஸ்டார்கள்
3.லெப்டினண்ட் -3 வருடங்கள் வரை
4.கேப்டன் – 3 ஸ்டார்கள்
5.மேஜர் – 8 முதல் 10 ஆண்டுகள் பணிக்குப் பிறகு கிடைப்பது. 120 அதிகாரிகளை இவர் கட்டுப்படுத்த முடியும்.
6. லெப்டினண்ட் கர்னல் – இவர் 650 ராணுவ வீரர்களைக் கட்டுப்படுத்தமுடியும்.
7.கர்னல்- இவர் பெரும்பாலும் களத்தின் தலைவராக இருப்பதில்லை.
8.பிரிகேடியர்
9. மேஜர் ஜெனரல்
10. லெப்டினட் ஜெனரல்
11.ஜெனரல்

இந்தப் பட்டியலில் உள்ள பல நிலைகளில் இந்தியர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இணையாக, கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளாகப் பணியாற்றினார்கள்.
பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் ஏற்கும் வெவ்வேறு நிலைகளின் பட்டியல் :

1.முதல் நிலை – ராணுவ வீரர்
2. இரண்டாம் நிலை- லான்ஸ் கார்பொரல்
3. கார்பொரல் – 6 முதல் 8 ஆண்டுகளுக்குப் பிறகு.
4. சார்ஜென்ட் – 12 ஆண்டுகளுக்குப் பிறகு
5. கர்னல் சார்ஜென்ட்
6. வாரன்ட் அதிகாரி – பிரிவு 2
7.வாரன்ட் அதிகாரி- பிரிவு 1

இந்தப் பட்டியலோடு இந்திய ராணுவ அதிகாரிகள் அல்லது வீரர்களின் வெவ்வேறு நிலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்கு உதவியாக இருக்கும்.
1.சிப்பாய்
2.லான்ஸ் நாயக் – லான்ஸ் கார்பொரலுக்கு இணையானது.
3.நாயக்
4.ஹவில் தார் (சார்ஜென்ட்)
5.ஜூனியர் கமிஷன்ட் அதிகாரிகள் : நாயக் சுபேதார், சுபேதார், சுபேதார் மேஜர்.

பிரிட்டிஷ் இந்தியத் தரைப்படை கட்டமைப்பும், அதிகாரிகளின் பதவிப் பெயர்களும் விமானப் படையிலும் (ராயல் இண்டியன் ஏர் ஃபோர்ஸ்), கப்பல் படையிலும் (ராயல் இண்டியன் நேவி) சற்று மாறுபடும். மேலிருந்து கீழ் நிலை வரை இந்திய ராணுவம் விடுதலைக்கு முன்பாக பல ஆண்டுகளாகவே இந்திய மயம் ஆகிக் கொண்டிருந்தது.

ராணுவத்தில் இந்தியர்கள் அதிக அளவில் சேர்ந்து கொண்டே இருந்தார்கள்.
1947 இல் தேசப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ராணுவ யூனிட்டுகள், யுனைட்டெட் கிங்டத்துக்கும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பிரிட்டிஷ் ராணுவம் வெளியேறுவதைக் கவனிக்கும் பொறுப்பை மேஜர் விஸ்லர் ஏற்றார். பிரிட்டிஷ் ராணுவத்தின் கடைசி பிரிவு 1வது பெட்டாலியன் (சாமர்செட்) 1948 பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியேறியது. ராணுவ தளவாடங்களில் மிகுதியானவற்றை பிரிட்டிஷ் ராணுவம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் விட்டுச் சென்றது. அதே வேளையில் பிரிட்டிஷ் ராணுவம் அப்போது முற்றிலுமாக இந்தியாவையும், பாகிஸ்தானையும் விட்டுச் செல்லவில்லை.
1948 ஆம் ஆண்டு சுமார் 800 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தானிலும், சுமார் 350 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் இந்தியாவிலும் இருந்தார்கள். இந்தியா தனது நாட்டு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பதில் அக்கறை காட்டியது. பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் அனைவரும் தொழில்நுட்பப் பிரிவிலும், அறிவுரை வழங்கும் நிலையிலும் மட்டுமே இந்தியாவில் இருந்தார்கள். தேசப் பிரிவினையின்போது புலனாய்வுத்துறை சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அழிக்கப்பட்டுவிட்டன என்கிறார் பீட்டர் ஏகிஸ் (தி ஃபர்ஸ்ட் இண்டோ பாகிஸ்தானி வார் 1947—48). அவை கிடைத்திருந்தாலும் இரு நாடுகளுக்கும் லாபம் இல்லை. ஏனென்றால் பிரிட்டிஷ் இந்திய உளவுத்துறை பிரிட்டிஷ் அரசாட்சி இந்தியாவில் தொடர வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டது. அது சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் விடுதலை கோரும் நபர்கள்; இயக்கங்கள் பற்றியவை.
எல்லாவற்றையும் பிரிக்கும்போது புலனாய்வுத் துறையை இரண்டு நாடுகளுக்கும் பிரித்துக் கொடுப்பதுதான் முறை. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் கிட்டத்தட்ட எந்தவிதமான புலனாய்வுத் தகவலும் இல்லாமல் புதிதாக எல்லாவற்றையும் தொடங்கும் நிலையில் இருந்தது. புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த குலாம் அகமதும் அவருடன் இருந்த இஸ்லாமிய அலுவலர்களும் தனி டொமினியனாக மாறிய பாகிஸ்தானுக்குப் பணி புரியப் போய் விட்டார்கள். பெரிய அளவில் அவர்கள் வசம் தகவல்கள் இல்லை என்றாலும் அவர்கள் புலனாய்வுத் துறையில் திறமையும், அனுபவமும் மிக்கவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மதனமோகினி கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 12

46149_Mahishasura-Mardhini-Picture-Brahma-Wallpaper_1570x1200விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து விடுவித்து தோள்மீது போட்டுக்கொண்டு புறப்பட்டான். சிறிது நேரம் போனதுமே வேதாளம் அவனிடம் பேச்சுக் கொடுத்தது.
‘அறிவிலும், வீரத்திலும் இணையில்லாதவன் என்று போற்றப்படும் விக்கிரமாதித்தரே, என்னைச் சுமந்து செல்லும் களைப்பு தெரியாமல் இருக்க உமக்கு ஒரு கதை சொல்கிறேன். காது கொடுத்துக் கேளும்!’ என்று கதையை சொல்லத் தொடங்கியது.

‘பிரஹத்புரம் என்னும் நகரத்தை யட்சகேது என்கிற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ராஜ்ஜியத்தில் பிரசித்தி பெற்ற துர்க்கையம்மன் கோயில் ஒன்று அமைந்திருந்தது. அங்கு கோயில் கொண்டிருந்த துர்க்கையம்மன் மகா வரப்பிரசாதி. பக்தர்கள் வேண்டியதைத் தந்து அருள்பாலிப்பவள். அதனால் பிரகஹ்புரம் குடிமக்கள் மட்டுமின்றி அதனைச் சுற்றியிருந்த நாடு நகரங்களில் இருந்தெல்லாம்கூட பக்தர்கள் அக்கோயிலுக்கு வந்து துர்க்கையம்மனை தரிசனம் செய்து பலனடைந்தார்கள்.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அக்கோயிலின் திருவிழா நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் அத்திருவிழாவில் மன்னர் முதல் எளியவர்வரை அத்தனை பேரும் ரதத்திலும், மாட்டு வண்டிகள் கட்டிக் கொண்டும், கால்நடையாகவும் உற்றார் உறவினருடனும் கூட்டம் கூட்டமாக தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வந்து தங்கி கோயில் தீர்த்தக் குளத்தில் நீராடி துர்க்கையைத் தரிசித்து மகிழ்வார்கள். அவர்களுள் சிலர் தங்களது கஷ்டங்களைச் சொல்லி பிரார்த்தித்துக்கொள்வார்கள். மற்றும் சிலர் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்காக தாங்கள் வேண்டிக் கொண்டபடி வேண்டுதலை நிறைவேற்றிச் செல்வார்கள்.

அப்படி கோயிலுக்கு வந்தர்களில் பவளனும் ஒருவன். பிரகஹ்புரத்தை அடுத்த ஆலப்பாக்கம் என்னும் ஊரைச் சேர்ந்தவன். சற்று வசதிக்கார இளைஞன். அவனது ஒரே குறை தாழ்வு மனப்பான்மை. அதனால் கொஞ்சம் கோழைத்தனம் உண்டு. ஆனால் அளவுகடந்த அம்மனின் பக்தன். துர்க்கையம்மனின் மீது எல்லையில்லாத நம்பிக்கையும், பக்தியும் கொண்டவன். அதனால்தானோ என்னவோ அந்த துர்க்கையம்மனின் திருவிழாவில் பவளனின் வாழ்க்கையில் ஓர் திருப்பம் நேர்ந்தது.

பிரஹத்புரம் வந்து துர்க்கையம்மன் கோயில் திருவிழாவில் மிகுந்த பக்தியுடனும், பரவசத்துடனும் சுற்றி வந்த பவளனின் கண்களில் பட்டாள் அந்தத் தேவதை. நிலவை உருக்கி வார்த்து, நட்சத்திர மின்னலால் இழைத்தது போன்ற வனப்புடன் திகழ்ந்த அந்தப் பெண்ணைக் கண்டதுமே அவள் மேல் காதலானான் பவளன்.

திருவிழாவில் அவள் நடந்த திசையெல்லாம் தொடர்ந்து போய் அவளது அழகை கண்களால் விடாமல் பருகி தன் இதயம் முழுக்க நிரப்பி மகிழ்ந்தான். ஆனால் மனத்துக்குள் இத்தகைய பேரழகி தனக்குக் கிடைப்பாளா என்கிற ஏக்கமும் எழுந்தது. மேலும் அவளைப் பின்பற்றி அவளைக் குறித்த தகவல்களைத் திரட்டிக்கொண்டான். அவளது பெயர் மதனமோகினி என்பது உச்சரிக்கும் போதெல்லாம் அவனது நாக்கை தித்திக்க வைத்தது.

’மதனமோகினி’ ‘மதனமோகினி’ ‘மதனமோகினி’ என்று அவள் பெயரை மந்திரம் போல் உச்சரித்தவன், அதே வேகத்துடன் நேராக துர்க்கையம்மன் சந்நிதிக்குச் சென்றான். தேவியை வணங்கி மனம் உருகப் பிரார்த்தித்தான்.

‘தாயே துர்க்காதேவி! இப்போது என் வாழ்க்கையின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான்! இதோ உன் கோயிலில் நான் பார்த்து விரும்பிய அந்தப் பெண்ணே, அந்த மதனமோகினியே எனக்கு மனைவியாக வாய்க்கவேண்டும். பேரழகியான அவளுடன் சில நாட்களே வாழ்ந்தாலும் போதும். என் ஜென்ம பலன் பூர்த்தியாகிவிடும். இதற்கு நீதான் அருள் செய்ய வேண்டும். அப்படி நீ என் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தால், அடுத்தமுறை உனது இந்த ஆலயத்துக்கு வரும்போது என் தலையை வெட்டி உனக்கு காணிக்கையாக்குகிறேன்!’ என்று வேண்டிக் கொண்டான்.

துர்க்கையம்மன் கோயிலிலிருந்து வீடு திரும்பிய பவளன், நாளெல்லாம் மதனமோகினியின் நினைவாகவே கிடந்தான். அவளை நினைத்தே ஏங்கினான். தனக்குத்தானே பேசிக் கொண்டான். தானே சிரித்துக் கொண்டான். சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் இளைத்துத் துரும்பானான்.

பவளனின் இந்த நிலையைக் கண்டு அவனது பெற்றோர் பெரும் கவலை கொண்டனர். ஒருநாள் பவளனின் தாயார் அவனை அழைத்து, ‘மகனே! பவளா! ஏன் இப்படி பித்துப் பிடித்தவன் போல் கிடக்கிறாய்? என்ன உன் துயரம்? சொன்னால்தானே நாங்கள் அதைத் தீர்த்து வைக்க முடியும்!’ என்று கேட்டு விசாரிக்க, பவளன் திருவிழாவில் தான் கண்ட மனம் கவர்ந்த பெண்ணைப் பற்றி அவளிடம் கூறினான்.

தாயார் இதை பவளனின் தந்தையிடம் கூற, அவர் பவளனிடம், ‘அந்தப் பெண் யார்? எந்த ஊர்?’ என்றெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொண்டு, ‘இதற்காகவா, உண்ணாமல் உறங்காமல் நீயும் துன்பப்பட்டு, எங்களையும் கஷ்டப்படுத்தினாய்? அந்தப் பெண்ணின் தகப்பன் எனது நண்பன்தான். பொன் பொருள், குலம், அந்தஸ்து என்று அனைத்திலும் நாமும் அவனுக்கு நிகரானவர்கள்தான். எனவே நான் பெண் கேட்டால் அவன் மறுக்க மாட்டான். கவலைப்படாதே!’ என்றார்.

அதுபோலவேதான் நடந்தது. மதனமோகினியின் தந்தை மிகுந்த சந்தோஷமாக பவளனுக்கு தனது மகள் மதனமோகினியை திருமணம் செய்து தர ஒப்புக்கொண்டார். அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.

மனைவி மதனமோகினியுடன் வீடு திரும்பிய பவளன் மிகுந்த சந்தோஷமாக அவளுடன் இல்லறம் நடத்தினான். மணமக்கள் சல்லாபக் கடலில் மூழ்கித் திளைத்து இன்பத்தை அள்ளி அள்ளிப் பருகினார்கள். காலம் களிப்புடன் நகர்ந்தது.

திருமணமாகி சரியாக ஒரு வருடம் கழிந்த நிலையில் ஒருநாள் மதனமோகினியின் அண்ணன் மதனபாலன் தனது தங்கையின் வீட்டுக்கு வந்தான். தங்கையும், தங்கையின் கணவனான பவளனும், அவனது பெற்றோரும் மதனபாலனை மிகுந்த அன்புடன் வரவேற்றனர். அன்றைய தினம் தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்து மதனபாலனை திணறத் திணற உபசரித்து மகிழ்ந்தனர்.

சாப்பாடு இன்னபிற உபசாரங்கள் எல்லாம் முடிந்ததும் மதனமோகினியின் அண்ணன் தங்கையின் புகுந்த வீட்டாரிடம், சொன்னான். ‘ஊரிலே துர்க்காதேவி கோயில் உற்சவத் திருவிழா தொடங்கிவிட்டது. தங்கையுடன் உங்கள் அனைவரையும் அழைத்து வரச் சொல்லி அப்பா அனுப்பி வைத்தார்’ என்று கூறினான்.

பவளனின் அப்பா அவனிடம், ‘அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்.’ என்றவர், தனது மகன் பவளனிடம் திரும்பி, ‘பவளா! முதலில் நீயும் உன் மனைவியும் நாளைக் காலையே உனது மைத்துனனுடன் புறப்பட்டுச் செல்லுங்கள்! எனக்கு இங்கே ஒரு சிறிய வேலை இருக்கிறது. அதை முடித்துக்கொண்டு நானும் உன் அம்மாவும் இரண்டொருநாள் கழித்து வருகிறோம்!’ என்றார்.

அவர் சொன்னதுபோலவே மறுநாள் காலையில் பவளன், மனைவி மதனமோகினி, மைத்துனன் மதனபாலனுடன் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டான்.

அவர்கள் பிரகஹ்புரத்தை அடையும்பொழுது உச்சிப்பொழுது நெருங்கி விட்டது. நகரத்தின் நுழைவாயிலிலேயே அமைந்திருந்த துர்க்கையம்மனின் கோயிலைக் கண்டபோதே பவளனின் இதயம் சிலிர்த்தது. கடந்து போன திருவிழா நாள்கள் நினைவுக்கு வந்தது. மதனமோகினியைக் கண்டு ஏங்கியதும், அம்மனின் சந்நியில் தான் வேண்டிக்கொண்ட பிரார்த்தனையும், அதுபோலவே பேரழகி மதனமோகினி தனக்கு மனைவியாகக் கிடைத்த ஆனந்தமயமான வாழ்க்கையும் மனத்துக்குள் அலைமோதியது.

நன்றியுணர்வில் மனம் நெகிழ்ந்த பவளன் உணர்ச்சிப் பெருக்கு மேலிட துர்க்கையம்மன் சந்நிதியில் தனது பிரார்த்தனையை நிறைவேற்றத் தயாரானான். மனைவி மைத்துனனிடம் ஏதும் சொல்லாமல் அவர்களை கோயிலின் பிரமாண்டமான ஆலமரத்து நிழலில் அமர்த்தி விட்டு, ‘மோகினி, நீயும் உனது அண்ணனும் களைத்துப் போயிருக்கிறீர்கள். எனவே இங்கேயே அமர்ந்து இளைப்பாறுங்கள். நான் போய் துர்க்கையம்மனை தரிசித்து வணங்கிவிட்டு வருகிறேன்!’ என்று சொல்லி அவர்களை அமரச் செய்து விட்டு சந்நிதிக்குள் புகுந்தான்.

மகிஷாசூரமர்த்தினியாக கோலம் கொண்டிருந்த துர்க்கையம்மனை தரிசித்தவன், அவளிடம், ‘தேவி தயாபரி! துர்க்காமாதா! எனது ஆசையை நிறைவேற்றி ஆனந்த வாழ்வளித்தாய். இந்த ஒரு வருடம் மிகுந்த மனத் திருப்தியுடன் என் மனைவியுடன் வாழ்ந்துவிட்டேன். அது போதும் எனக்கு. இதோ, நான் உனக்கு அளித்த வாக்குப்படி என் தலையை உனக்கு காணிக்கையாக்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு சுற்று முற்றும் பார்த்தான்.
சந்நிதிக்குள் கிடந்த வெட்டுக் கத்தி ஒன்றை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டவன், கோயிலினுள் ஆலயமணி கட்டியிருந்த கயிற்றில் ஆலயமணியைக் கழற்றி விட்டு, அந்தக் கயிற்றில் தனது தலை முடியை உயர்த்திக் கட்டினான். பின் வெட்டுக் கத்தியால் ஒரே வீச்சில் கழுத்தை அறுத்துக் கொண்டான். ரத்தம் சொட்டச் சொட்ட அவனது தலை கயிற்றில் தொங்கி ஊசலாட, முண்டமாகிய உடல் தள்ளாடித் தரையில் விழுந்தது.
வெளியே காத்திருந்ததில் மதனமோகினி மரத்தில் சாய்ந்தபடி தூங்கியே போனாள். அவளது அண்ணன் மதனபாலனோ நேரம் விரைந்தோடியதில் பொறுமையிழந்துபோய், தூங்கிக் கொண்டிருந்த தங்கையை அப்படியே விட்டு பவளனைத் தேடி கோயிலுக்குள் நுழைந்தான்.

அங்கே, தங்கையின் கணவன் தலை வேறு உடல் வேறாகக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். ‘அடடா! என்ன காரியம் செய்து விட்டேன். தங்கையின் கணவனை தனியே விட்டிருக்கக்கூடாது. இப்போது எப்படி நான் இதை என் உயிருக்குயிரான தங்கையிடம் போய் சொல்வேன்.’

மதனபாலன் மனம் உடைந்து போனான். தங்கையின் கணவன் இறந்து விட்டான் என்ற தகவலை போய்ச் சொல்ல அவனுக்கு இதயத்தில் திராணியில்லை. அவன் ஓர் தீர்மானத்துக்கு வந்தான்.

பவளன் இறந்தது போலவே அவனும் அதே வழியில் அதே கத்தியால் தனது தலையை துண்டித்துக் கொண்டு மாண்டு போனான்.

இது எதுவும் அறியாத மதனமோகினி, தூக்கம் கலைந்து பார்த்தபோது பக்கத்தில் யாரும் இல்லாததால் திகைத்துப் போனாள். என்னை தனியே விட்டுவிட்டு இருவரும் எங்கே சென்றார்கள்? கணவனையும், அண்ணனையும் தேடி கோயிலுக்குள் சென்றாள்.

அங்கே, நேசத்துக்குரிய கணவனும், பாசத்துக்குரிய அண்ணனும் இருவரும் மாண்டு கிடக்கும் கொடிய காட்சியைக் கண்டாள். கதறினாள். துடித்தாள். இதயம் வெடித்து விடுவதைப் போல குமுறிக் குமுறி அழுதாள்.

அழுது அழுது கண்ணீர் வற்றித் துவண்டதும், ஒரு முடிவுக்கு வந்தவளாக எழுந்தாள். துர்க்கையம்மன் முன் சென்று ஆவேசத்துடன், ‘தாயே, என்னைக் காத்து ரட்சிக்க வேண்டிய நீயே என்னைக் கைவிட்டு விட்டாய். உனது சந்நிதியிலேயே, உன் கண்ணெதிரிலேயே எனது கணவனும், சகோதரனும் உயிர் விட்டிருக்கிறார்கள். நீ அவர்களைக் காப்பாற்றவில்லை. போகட்டும்! எனது மஞ்சள் குங்குமத்தையும், மங்கலத்தையும் காக்க மனமில்லாதவளே, இனி நான் மட்டும் இவ்வுலகில் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன். இதோ உன் கண்ணெதிரேயே நானும் உயிர்விடப் போகிறேன். இந்த ஜென்மத்தில் என்னைக் கை விட்டதுபோல இல்லாமல் அடுத்த ஜென்மத்திலும் இந்த இருவருமே எனது கணவனாகவும், சகோதரனாகவும் அமைய வரம் கொடு!’ என்று வேண்டிக் கொண்டாள்.

பின் மதனமோகினி ஆலயத்தின் உள்ளேயே ஓர் ஆலமரத்தின் விழுதைக் கட்டி அதில் தூக்கிட்டுக் கொள்ளப் போனாள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது! கருவறையில் இருந்து ஓர் அசரீரிக் குரல் ஒலித்தது.
‘மகளே மதனமோகினி, அவசரப்படாதே! நீ ஆத்மஹத்தி செய்துகொள்ளத் தேவையில்லை. உனது பதி பக்தியும், அண்ணன் மீது கொண்ட பாசமும் மன உறுதியும் போற்றத்தக்கது. போ! போய் இருவரது தலைகளையும் அவரவர் உடலுடன் பொருத்தி வை! எனது அருளால் அவர்கள் உயிர் பெற்று எழுந்திருப்பார்கள்!’ என்று கூறியது.

மனம் மகிழ்ந்து போன மதனமோகினி, தூக்கிலிருந்து இறங்கி ஆவலுடன் இருவரது உடல் கிடந்த இடத்துக்கு ஓடினாள். இருவரது தலைகளையும் உடலுடன் பொருத்தினாள். ஆனால்… ஆனால்…

அடடா! அவள் என்ன காரியம் செய்துவிட்டாள்? தலைகால் புரியாத சந்தோஷத்தினாலும், பதற்றத்தினாலும் என்ன செய்கிறோம் என்பதே அறியாமல் மதனமோகினி இருவரது தலைகளையும் மாற்றி மாற்றிப் பொருத்தி விட, கணவனின் தலை அண்ணன் உடலிலும், அண்ணனின் தலை கணவன் உடலிலும் பொருந்திப் போய் இருவரும் உயிர் பெற்று எழுந்து நின்றார்கள்.

மதனமோகினி மனம் கலங்கிப் போனாள். அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. இந்த இருவரில் யார் எனது கணவன்? யார் எனது அண்ணன்? கணவன் தலையோடு நிற்கும் அண்ணனின் உருவமா? அண்ணனின் தலையோடு இருக்கும் கணவனின் உருவமா? எப்படிக் கண்டுபிடிப்பது?’

குழப்பத்தின் உச்சத்தில் கதையை நிறுத்திய வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது:

‘சொல்லுங்கள் விக்கிரமாதித்தரே! இந்த இரண்டு உருவங்களில் யார் மதனமோகினியின் கணவன்? யார் மதனமோகினியின் அண்ணன்?’

‘வேதாளமே, ஒருவனது எண்சாண் உடலில் சிரசே பிரதானம் என்பர் பெரியோர். நாமும் தலையைக் கொண்டுதான் மனிதரை அடையாளம் கண்டுகொள்கிறோம். அதுமட்டுமல்ல தலையில் உள்ள மூளைதான் அனைத்தையும் யோசிக்கிறது. செயலாற்றத் தூண்டுகிறது. எனவே அந்த இருவரில் எவன் மதனமோகினியை மனைவி என்று நினைக்கிறானோ அவனே அவளின் கணவன் ஆவான்!’

அவ்வளவுதான்! சரியான பதிலைக் கேட்ட வேதாளம் முருங்கை மரம் செல்ல, விக்கிரமாதித்தன் அதைத் தொடர்ந்து போனான்.

0

சந்திரபிம்பத்தால் முயல்கள் பெற்ற நன்மை

பஞ்ச தந்திரக் கதைகள் / 3.1

downloadஒரு பெரிய காடு. அதில் சதுரதந்தன் என்ற யானை ராஜா தன்னுடைய கூட்டத்துடன் வாழ்ந்துவந்தது. அந்தக் காட்டில் மழையின் பொழிவு குறைந்தது. அதனால் அந்த யானைக் கூட்டத்துக்கு உணவும் நீரும் கிடைப்பது அரிதாகிவிட்டது.

யானைகள் அனைத்தும் ஒன்று திரண்டு சென்று யானை ராஜாவைச் சந்தித்தன. ‘ராஜா! இந்தக் காட்டில் மழையே பொழியவில்லை. காட்டிலுள்ள குளமும் வற்றிவிட்டது. எங்களுக்குக் குடிக்க நீரும் இல்லை; உண்ண உணவும் கிடைக்கவில்லை. இவ்வாறே நாட்கள் சென்றால் நாங்கள் அனைவரும் இறந்துவிடுவோம். தாங்கள்தான் எங்களைக் காப்பாற்றவேண்டும்’ என்று வேண்டின.

‘சரி! நாம் இங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்வோம். அதற்கு நாம் இங்கிருந்து ஐந்து நாட்கள் பயணம் செய்யவேண்டும். அவ்வாறு சென்றால் நாம் ஒரு பெரிய பாதாள கங்கையை அடைவோம். அங்கு நமக்கு வாழ்நாள் முழுவதற்கும் தேவையான குடிநீர் கிடைத்துவிடும்’ என்றது யானை ராஜா.

யானை ராஜாவின் திட்டப்படி அனைத்து யானைகளும் பாதாள கங்கையை நோக்கிப் பயணமாகின. ஐந்து நாட்கள் நடந்து, இறுதியில் பாதாள கங்கையை அடைந்தன. நீர்நிலையைக் கண்டதும் எல்லா யானைகளும் மிகுந்த சந்தோஷத்துடன் அதிலிறங்கி நீரினைப் பருகின. குளித்தன. கும்மாளமிட்டன. நீண்ட நேரம் மூழ்கி விளையாடிய பின்னர், அந்த நீர்நிலையின் மறுகரை வழியாகக் கரையேறின.

அந்த நீர்நிலையின் மறுகரையில் ஒரு முயல் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த முயல்கூட்டம் திடீரென இப்படி பெருங் கூட்டமாக யானைகளின் வருகையை எதிர்பார்க்கவில்லை. யானைகளும் கரையின் புதரில் வாழும் முயல்கூட்டத்தைக் கவனிக்கவில்லை. எனவே யானைகள் போகிறபோக்கில் அவற்றை மிதித்துச்சென்றன. பல முயல்கள் இறந்தன. பல முயல்களுக்குக் கால்கள் முறிந்தன.

அன்றே முயல்கள் தங்களுக்குள் கூடிப்பேசின. ‘இந்த யானைகள் இனி நாள்தோறும் இந்த நீர்நிலைக்கு வரும்போலத் தெரிகிறது. இனி நாம் இந்த இடத்தில் வசிப்பது ஆபத்து. நாம் வேறு இடத்திற்குச் சென்றுவிடலாமா’? என்று பேசிக்கொண்டன.

அவற்றுள் சில முயல்கள், ‘நாம் ஏன் இந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்லவேண்டும்? நம் முன்னோர்கள் இங்கேதான் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்தப் பகுதியில் இந்த இடத்தில் மட்டும்தான் தண்ணீர் இருக்கிறது. நாம் இந்த இடத்தைவிட்டுப் போகக்கூடாது’ என்றும் பேசிக்கொண்டன.

வயதில் மூத்த முயல்கள், ‘யானை தொட்டாலும் பாம்பு முகர்ந்தாலும் ராஜா சிரித்தாலும் பகைவன் நமக்கு மரியாதை செய்தாலும் உயிர்ச்சேதம் வரும் என்று சாஸ்திரங்கள் சொல்லியுள்ளன. நம் உயிருடன் வாழவேண்டுமென்றால் இந்த இடத்தை விட்டுச் செல்வதுதான் ஒரேவழி’ என்றன.

சில முயல்கள், ‘யானைகள் அஞ்சும் அளவிற்கு நாம் ஏதாவது தந்திரம் செய்யவேண்டும். விஷமில்லாத பாம்பு படமெடுத்தாலும் அதனைக் கண்டு மனிதர்கள் ஓடுகிறார்களே! நம்மிடம் வலு இல்லையென்றாலும் நாம் நமது எதிர்ப்பினை ஏதாவது ஒரு வழியில் காட்டத்தான் வேண்டும்’ என்றன.
அவர்களுள் ஒரு முயல், ‘யானைகள் பயப்படும் அளவிற்கு நான் ஒரு வழிசொல்கிறேன்’ என்று கூறியது.

‘அது என்ன வழி?’ என்று கேட்ட முயல் கூட்டத்திற்கு அந்த முயல், ‘நாம் ஒரு பொய்யினை யானைகளிடம் கூறவேண்டும். நமது ராஜா விஜயதந்தன் என்பவர் சந்திர மண்டலத்தில் இருக்கிறார் என்றும் அவரது தூதுவன் இங்கு வந்துள்ளார் என்றும் பொய் கூறி ஒரு முயலை நாம் அந்த யானைகளிடம் அனுப்பிவைக்கவேண்டும். அவ்வாறு செய்தால் அந்த யானைகள் நம்மைப் பார்த்து பயப்படும்’ என்றது.

இது சரியான வழிதான் என்று அனைத்து முயல்களும் ஏற்றுக்கொண்டன. ‘யாரைத் தூதுவனாக அனுப்புவது?’ என்று யோசித்தன. திட்டத்தினைக் கூறிய முயல், நெட்டைக்காரன் என்ற முயலைப் பார்த்து, ‘நீதான் தூதுவனாக நடிக்க ஏற்றவன். ஏனென்றால், நீ புத்திசாலி. எதிரிகளிடம் சமமாக நின்று சமாதானம் பேசுவதில் வல்லவன். உனக்குச் சோம்பல் என்பதே இல்லை. நீ நம்மிடையே பொய் கூறமாட்டாய். நீ எதனையும் நன்றாக யோசித்துச் செயல்படக் கூடியவன். நீயே தூதுவனாகச் சென்றால் காரியம் நல்லபடியாக முடியும்’ என்று கூறியது.

நெட்டைக்கார முயல் தூது செல்ல சம்மதித்தது. யானைகள் வரும் வழியில் உள்ள ஒரு மேட்டின் மீது அமர்ந்துகொண்டது. அப்பொழுது அந்த யானைக்கூட்டத்தைச் சேர்ந்த யூதபூபதி என்ற யானை அந்த மேட்டின் அருகில் வந்தது.

அந்த யானைப் பார்த்த நெட்டைக்கார முயல், ‘அட முட்டாள் யானையே! யாரைக்கேட்டு இந்தப் பகுதியில் சுற்றித் திரிகிறாய்? உன்னையும் உன் கூட்டத்தாரையும் அடித்துத் துரத்துவதற்காகவே நான் என் ராஜாவின் தூதுவனாக இங்கு வந்துள்ளேன்’ என்றது.

‘யார் உன் ராஜா?’ என்றது யூதபூபதி.

அதற்கு நெட்டைக்கார முயல், ‘விஜயதந்தன். அவர்தான் எங்கள் ராஜன். அவர் சந்திரமண்டலத்தில் இருக்கிறார். நான் அவரின் கட்டளையால் இங்கு வந்துள்ளேன்’ என்றது.

‘இவன் வலிமைமிக்கவனின் தூதன்’ என்று நினைத்த யூதபூபதி, ‘உன் ராஜா உனக்கு இட்ட கட்டளை என்ன?’ என்று கேட்டது.

‘நீயும் உன் கூட்டத்தின் அனைத்து யானைகளும் எங்கள் இனத்தவர்களில் பலரைக் கொன்றுள்ளீர்கள். உங்கள் செயலை ஒருமுறை எங்கள் ராஜா மன்னித்துவிட்டார். நீங்கள் நாள்தோறும் இந்த நீர்நிலைக்கு வந்து எங்கள் கூட்டத்தாரை வஞ்சிப்பது முறையல்ல. உங்களுக்கு உங்களின் உயிர்மேல் ஆசையிருந்தால் உடனே இங்கிருந்து சென்றுவிடுங்கள். இதனை உங்களிடம் கூறிவரவே என் ராஜா என்னை இங்கு அனுப்பிவைத்தார்’ என்றது நெட்டைக்கார முயல்.

சற்று யோசித்த யூதபூபதி, ‘என்னை உன் ராஜாவிடம் அழைத்துச் செல். நான் அவரைப் பார்க்கவேண்டும்’ என்றது.

‘நீங்கள் எங்கள் ராஜாவுக்கு ஏதாவது தகவல் தெரிவிக்கவேண்டியது இருந்தால் என்னிடம் கூறுங்கள். அதனை நான் அவரிடம் சென்று கூறிவிடுகிறேன்’ என்றது முயல்.

‘தகவல் ஒன்றும் இல்லை. நான் உங்கள் ராஜாவை வணங்கிவிட்டு, என் கூட்டத்தாரை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்திற்குச் செல்லலாம் என்று நினைக்கிறேன்’ என்றது யூதபூபதி.

சற்று யோசித்த நெட்டைக்கார முயல், ‘இன்று இரவு நான் உன்னை என்னுடன் அழைத்துச்சென்று, உனக்கு என் ராஜாவைக் காட்டுகிறேன். ஆனால், நீ மட்டும் என்னுடன் தனியாகத்தான் வரவேண்டும்’ என்றது.

அதற்கு ஒத்துக்கொண்ட யூதபூபதி அன்று இரவு தனியாக, நெட்டைக்கார முயலிடம் வந்தது. அந்த யானையை அழைத்துக்கொண்டு சென்ற முயல், ஒரு குட்டைக்கு அருகில் சென்று, ‘இன்று எங்கள் ராஜா இந்தக் குட்டைக்கு வந்துள்ளார். இங்கு அவர் ஓய்வெடுக்கிறார். ஆதலால், நீ அவரைத் தொந்தரவு செய்யாமல் அவரை வணங்கிவிட்டுச் சென்றுவிடு’ என்றது.

யானையும் அவ்வாறே குட்டைநீரில் தெரிந்த சந்திரனின் பிம்பத்தினைப் பார்த்தது. அதுதான் முயல்களின் ராஜா என்று நம்பி, அவரை வணங்கியது. மறுநாள் தன் கூட்டத்தினை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்திற்குச் சென்றது.

‘வயலுக்கு அடுத்ததாக உள்ள மரத்தினடியில் இருக்கும் புல்லை உழவன் தன் ஏரால் உழுது அதனை அழிப்பதில்லை. அதுபோல விலகியிருந்து பெரியவர்களைச் சார்ந்திருந்தால் ஒருபோதும் கெடுதல் வராது. தீயவர்களின் கூட்டுறவு எப்போதும் தீமையையே தரும். அது எப்படியென்றல், முயலும் ஆந்தையும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களுக்குத் தீர்வுகூற பூனையிடம் சென்று தங்களின் உயிரை இழந்ததைப் போலகிவிடும்’ என்றது காகம்.

‘எப்படி முயலையும் ஆந்தையையும் பூனை கொன்றது?’ என்று கேட்ட பறவைகளுக்குக் காகம் அந்தக் கதையினைக் கூறத்தொடங்கியது.

3.2. முயலையும் ஆந்தையையும் கொன்ற பூனை

நெடுநாட்களுக்கு முன்பாக நானும் கபிஞ்சலன் என்ற ஆந்தையும் ஒரு முதிய மரத்தில் தனித்தனிப் பொந்துகளில் குடியிருந்துவந்தோம். எனக்கு அவன் நல்ல நண்பன். ஒருநாள் இரவில் இரை தேடிச்சென்ற கபிஞ்சலன் தன் பொந்துக்குத் திரும்பவில்லை. நான் அவனைப் பல இடங்களில் தேடினேன். அவனைக் காணவில்லை.

மூன்று நாட்களுக்குப் பின்னர் அந்த மரத்துக்கு ஒரு முயல் வந்தது. அது கபிஞ்சலனின் பொந்துக்குள் சென்று அமர்ந்துகொண்டது.

நான் அந்த முயலிடம், ‘இது என்னுடைய நண்பன் வசிக்கும் பொந்து. அவன் வெளியில் சென்றுள்ளான். அவன் வந்தால் என்னைக் கொன்றுவிடுவான்!’ என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அந்த முயல் பயப்படுவதாகத் தெரியவில்லை. ஆந்தையின் அந்தப் பொந்தினைத் தன் பொந்துபோலவே பயன்படுத்தத் தொடங்கியது.

ஒருநாள் மாலையில் கபிஞ்சலன் வந்துவிட்டான். தன்னுடைய பொந்தில் ஒரு முயல் இருப்பதனைப் பார்த்துவிட்டு கோபப்பட்டான். ‘என் வீட்டில் நீ என்ன செய்கிறாய்?’ என்று முயலிடம் கோபத்துடன் கேட்டான். முயல் அலட்சியமாக, ‘இது உன் வீடா? இது என் வீடு’ என்று வாதிட்டது.

ஆந்தையாகிய கபிஞ்சலன் பலவாறு பேசிப் பார்த்தான். பயனில்லை.
‘குளம், கிணறு, கோயில், சத்திரம் இவற்றின் சொந்தம் அவற்றை விட்டு நீங்கின பின்னர் இருக்காது. பறவைகளில் எது வலிமையுள்ளதோ அதுதான் தான் விரும்பியதை அடையும். இப்படித் தரும நியாயம் இருப்பதால் இது என் வீடுதான்’ என்றது முயல்.

‘தரும நியாயம் பற்றி நீ பேசுவதால், நாம் இருவரும் சாஸ்திரிகளிடம் சென்று முறையிடுவோம். அவர் கூறும் தீர்ப்புக்கு இருவரும் கட்டுப்படுவோம்’ என்றது ஆந்தை. அதற்கு ஒப்புக்கொண்ட முயல், ஆந்தையுடன் சாஸ்திரிகளைத் தேடிச் சென்றது. இவற்றின் பின்னால் நானும் சென்றேன்.
போகும் வழியில் நடுவே தென்பட்ட ஒரு பூனை, முயல் மற்றும் ஆந்தையின் முகபாவத்தைப் பார்த்ததுமே ‘இவர்கள் தீர்ப்புகேட்கத்தான் போகிறார்கள்’ என்று தெரிந்துகொண்டது.

அது இவர்கள் செல்லும் வழியிலேயே ஒரு குறுக்கு வழியில் முன்னேறிச் சென்று ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்துகொண்டது. பின்னர் தனக்குத்தானே சப்தமாகப் பேசத் தொடங்கியது.

‘இந்த உலகத்தில் உண்டாகின்ற இன்பம் கணநேரத்தில் அழிந்துவிடுகிறது. அதனால் தருமத்தை விட வேறு கதியில்லை. அறத்தைவிட்டு எவன் நாளைக் கழித்துவருகிறானோ அவன் மரப்பொம்மைக்குச் சமமானவன். அவனைப் பிணம் என்றே கருதலாம். எப்படித் தயிரின் சாரம் நெய்யோ, எள்ளின் சாரம் எண்ணெயோ அதுபோலத்தான் இந்த உலகத்தில் பிழைத்திருப்பதன் சாரம் தருமம். தருமத்தைப் புறக்கணித்து உண்டுவாழ்பவன் இந்தப் பூமிக்குச் சுமையாக இருக்கிறான். ஆகையால் மக்களே! தருமம் பல இடையூறுகளோடு தருமம் கூடிக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கு நான் தருமத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்! பிறருக்கு உதவி செய்வதைப் போன்ற புண்ணியம் வேறு எதுவும் இல்லை. பிறருக்குத் தீங்கு செய்வதைப் போன்ற பாவம் வேறு எதுவும் இல்லை. தனக்குத் துன்பம் தருவது பிறருக்கும் துன்பத்தையே தரும் என்பதனை உணருங்கள். இப்படிப்பட்ட பல தரும ரகசியங்களைக் கேட்டு உள்ளத்தில் இருத்திக் கொள்ளுங்கள்’ என்று தரும அறிவுரைகளாக பொழிந்து தள்ளியது.

இப்படி சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த அந்தத் தந்திரப் பூனையை முயலும் ஆந்தையும் பார்த்தன.

உடனே முயல் ஆந்தையிடம், ‘ஆந்தையே! இந்தப் பூனை தருமத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. எனவே இது சாஸ்திரியாகத்தான் இருக்கவேண்டும். இதனிடம் சென்று நம் வழக்கினைக் கூறி தீர்ப்புகேட்போம்’ என்றது.

‘இவனிடமா? இவன் நம் இருவருக்கும் பகைவன் என்பதை மறந்துவிட்டாயா?’ என்றது ஆந்தை.

‘பகைவன்தான்! இருந்தாலும், இவன் சாஸ்திரிபோலத் தெரிகிறான். இவனிடம் நாம் நெருங்காமல் தூரத்திலிருந்தே நம் வழக்கினைக் கூறுவோம்’ என்றது முயல்.

பூனைக்கு சற்றுத் தூரமாக நின்றுகொண்ட முயலும் ஆந்தையும், ‘சாஸ்திரியாரே! தாங்கள் தான் எங்களின் வழக்கினைக் கேட்டு, தருமம் தவறாது விசாரித்து, நல்ல தீர்ப்பினைக் கூறவேண்டும். பொய் கூறுபவனைக் கொல்லவேண்டும்!’ என்றன.

உடனே பூனை நல்லவனைப் போல நடித்து, ‘கொலை என்ற வார்த்தையை என்னிடம் சொல்லாதீர்கள்! கொலைதான் நரகத்திற்குக் காரணமாகிறது. நான் அதனைவிட்டு அறத்தைப் பின்பற்றி வருகிறேன். பிற மிருகங்களைக் கொன்று வாழும் புலி முதலான கொடிய விலங்குகளைக் கொல்லுகின்றவர்களும் நரகத்திற்கே செல்கின்றனர் என்று சாதுக்கள் கூறியுள்ளனர்’ என்று நயமாகப் பேசியது.

ஆனாலும் பூனையின் பேச்சில் முயலுக்கும் ஆந்தைக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை. இதனைப் புரிந்துகொண்ட பூனை, ‘மற்றவர்களுக்குக் கொலையினால் நரகம் கிடைக்கும் என்பதில் வியப்பில்லை. யாக தருமத்திற்காகப் பசுவைக் கொல்லுகிறவர்கள் வேதத்தின் உட்பொருளை அறியாதவர்களே! அப்பொழுது ஏழு ஆண்டுகளின் நெல்லைக்கொண்டு ஓமம் செய்ய வேண்டுமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பசுக்களைக் கொன்று மரங்களை வெட்டி ஓமம் செய்து சுவர்க்கம் கிடைக்கும் என்றால் ஏன் நரகத்திற்குப் போகிறார்கள்? ஆதலால், நான் கொலை புரிவதில்லை. நான் நரகத்திற்குச் செல்ல விரும்பவில்லை. நான் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். என்னிடம் வாருங்கள்!. என் அருகில் வாருங்கள்!’ என்று அன்பாக அழைத்தது.

முயலும் ஆந்தையும் பூனையை நெருங்கத் தயங்கின. இதனை உணர்ந்துகொண்ட பூனை, ‘எனக்கோ வயதாகிவிட்டது. எனக்குச் சரியாகக் காதுகள் கேட்பதில்லை. ஆதலால், என் அருகில் வந்து உங்கள் வழக்கு பற்றிய விவரங்களைக் கூறுங்கள். நான் நடுநிலையோடு தீர்ப்பு கூறுகிறேன். நீங்கள் என் காதுகளுக்கு அருகில் வந்து நின்று உங்கள் வாதங்களைச் சொல்லுங்கள்!’ என்றது.

பூனையின் வார்த்தைகளை நம்பிய முயலும் ஆந்தையும் அதன் காதின் அருகேசென்றன. உடனே, அவற்றைத் தன் கைகளுக்கு ஒன்றாக அந்தப் பூனை பிடித்து, இரண்டையும் நெறித்துக் கொன்றது.

‘தீயோரைச் சேர்ந்தால் தீமையே வந்துசேரும். எது செய்யத்தக்கதோ அதை மட்டுமே செய்யவேண்டும்’ என்று காகம் கூறியது.

காகத்தின் கருத்தினை ஏற்றுக்கொண்ட பறவைகள், தமக்கான ராஜாவைத் தேர்ந்தெடுக்கும் வேலையினை நாம் அடுத்தமுறை இங்கே கூடிச் செய்வோம் என்று கூறிக் கலைந்துசென்றன.

பறவைகளின் ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் காகத்தின் கருத்தால் பறவைகளுக்கு ராஜாவாக முடிசூட்டிக்கொள்ள முடியாமல்போன அந்த ஆந்தை, தன் மனைவியிடம் நடந்தவற்றை வருத்தத்தோடு கூறியது.
மனைவியாகிய ஆந்தை தன் கணவனிடம் ‘சரி, இப்போதுதான் பறவைகள் அனைத்தும் கலைந்து சென்றுவிட்டனவே. இப்போது காகம் மட்டும் தனியாகத்தானே இருக்கும். நீங்கள் சென்று அதனிடம் சண்டையிடுங்கள்’ என்றது.

உடனே ஆந்தை தன்னுடைய மனைவியையும் அழைத்துக்கொண்டு அந்தக் காகத்திடம் சென்றது. ‘அட தீயவனே! நான் ராஜாவாக பதவி ஏற்பதனை உன் வார்த்தைகளால் கெடுத்துவிட்டாயே! இனிமேல் உன் குலத்திற்கும் என் குலத்திற்கும் ஜென்ம ஜென்மத்திற்கும் பகையே இருக்கும்’ என்றது. பின்னர், தன் கூட்டிற்குத் திரும்பிவந்தது.

‘தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, காகம் தன் வாயாலேயே தன் குலத்திற்குத் தீராப் பகையினைத் தேடிக்கொண்டது. புத்திசாலியாக இருப்பவன் சபையில் பிறரைக் குறை கூறிப்பேசுவது தவறு என்பதனை உணர்ந்துகொண்டது. ‘எதைச் செய்யவேண்டுமென்றாலும் தன் குலத்தாரோடு கூடிப் பேசிச் செய்யவேண்டும். அவ்வாறு செய்யாததால்தான் என் குலத்திற்கே தீமை தேடித் தந்துவிட்டேன்’ என்று வருந்தியது. பின்னர் அது தன் கூட்டிற்குத் திரும்பியது. அந்த நாள் முதல் ஆந்தை இனத்திற்கும் காக இனத்திற்கும் தீராப் பகை மூண்டு, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது’ என்றது சிரஞ்சீவி.

‘இந்தப் பகையினை முடிவுக்குக் கொண்டுவர நாம் என்ன செய்யலாம்?’ என்று காகராஜா சிரஞ்சீவியிடம் கேட்டது.

அதற்கு சிரஞ்சீவி, ‘பிராமணன் வைத்திருந்த ஆட்டினைச் சிலர் எவ்வாறு வஞ்சகமாகக் கவர்ந்து சென்றார்களோ, அதுபோலவே நாமும் அந்த ஆந்தைக் கூட்டத்தை வஞ்சனை செய்து கொல்லவேண்டும்’ என்றது.

‘ பிராமணனின் ஆட்டை யார், எப்படி வஞ்சகமாகக் கவர்ந்தது?’ என்று கேட்ட காகராஜாவுக்கு சிரஞ்சீவி அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.

0

மூன்றாம் தந்திரம் – சந்திவிக்கிரகம்

பஞ்ச தந்திரக் கதைகள்

crow‘மூன்றாவது தந்திரமான – சந்திவிக்கிரகம் என்கிற அதாவது ‘பகையை உறவாடி வெல்லுதல்’ குறித்த ஒரு நெடுங்கதையினைப் பண்டிதர் விஷ்ணுசர்மா அந்த மூன்று இளவரசர்களுக்கும் சொல்லத் தொடங்கினார்.

‘நமக்குப் பகையாக, எதிரியாக இருப்பவர்களிடம் நாம் நட்புகொள்ளுவதோ அவர்கள் மீது நம்பிக்கைவைப்பதோ கூடாது. அவ்வாறு செய்வது ஆந்தைகளின் குகையினைக் காகம் நெருப்பிட்டுக் கொளுத்தியதுபோல ஆகிவிடும்’ என்றார் பண்டிதர்.

‘ ஆந்தைகளின் குகையினைக் காகம் நெருப்பிட்டுக் கொளுத்தியதா? அதெப்படி?’ என்று அந்த மூன்று இளவரசர்களும் கேட்டனர். அவர்களுக்கு அந்தக் கதையினை விஷ்ணுசர்மா கூறத்தொடங்கினார்.

3. பகையை உறவாடி வெல்லுதல்

மயிலை என்ற நகரத்தில் இருந்த ஓர் ஆலமரத்தினைத் தலைமையிடமாகக்கொண்டு மேகவர்ணன் என்ற காகம் ராஜாவாக அரசாட்சி நடத்திவந்தது.

அதே நகரத்தில் இருந்த ஒரு மலைக்குகையில் உருமர்த்தனன் என்ற ஆந்தை ராஜாவும் அரசாட்சி நடத்திவந்தது.

ஆந்தை ராஜா திடீர் திடீர் என்று இரவில் தன் படைகளுடன் வந்து அந்த ஆலமரத்தினைச் சூழ்ந்து முற்றுகையிடும். காகங்களின் கூடுகளில் உள்ள முட்டைகளையும் குஞ்சுகளையும் உண்டு அழிக்கும். ஆனாலும் ஆந்தை ராஜாவின் படைகளை எதிர்க்கும் துணிவற்ற காகங்கள் செய்வது அறியாமல் தவித்தன.

காகங்களுக்கு இரவில் கண்பார்வை தெரிவதில்லை. ஆந்தைகளுக்குப் பகலில் கண்பார்வை தெரிவதில்லை. ஆதலால், ஆந்தைகள் இரவினைப் பயன்படுத்திக்கொண்டு காகங்களை வதைத்துவந்தன. அதுபோலவே பகலில் ஆந்தைகளைச் சென்று தாக்கலாமென்றால் ஆந்தைகள் வசிக்குமிடம் இதுதான் என்று காகங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அதனால் ஆந்தைகளுடன் பகலில் போரிடவும் காகங்களால் முடியவில்லை.

இப்படியாகவே ஆந்தைகளின் முற்றுகை வாரந்தோறும் தொடர்ந்ததால், கொதித்துப் போன காகராஜா இதற்கு ஒரு முடிவுகட்டத் தீர்மானித்து தன்னுடைய அரசவையைக் கூட்டியது. ராஜாவின் ஐந்து மந்திரிகளும் அவரது தந்தையின் மந்திரியான வயதில் மூத்த சிரஞ்சீவி என்கிற காகமும்கூட அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

காகராஜா, ‘ஆந்தைகளின் தொல்லை தொடர்வதால் அவற்றுக்குப் பயந்து நாம் இந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிடலாம் என்று காகங்கள் பலவும் என்னிடம் கூறிவருகின்றன. அது குறித்து முடிவெடுக்கவே இன்று நான் உங்களை அழைத்துள்ளேன். பகைவரைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால் அவர்களால் வரும் தொல்லை நோய்போலப் பரவிவிடும். இறுதியில் நாம் அனைவருமே இறக்கவேண்டிவரும். சந்திவிக்கிரகம், பேதம், கலகம் என்னும் மூன்றினில் எதனைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதனை மந்திரிமார்களாகிய நீங்கள் ஐவரும் முடிவெடுங்கள்’ என்றார்.

மந்திரிகளுள் ஒருவர், ‘மக்களுக்கு ஒரு சிக்கல் வரும்போது அது குறித்து ராஜா, மந்திரிகளிடம் ஆலோசனை கேட்கும் முன்னரே, மந்திரிகள் ராஜாவுக்கு அச் சிக்கலைத் தீர்க்க திட்டங்களை வகுத்துக் கூறவேண்டும். ராஜா கேட்ட பின்னராவது மந்திரிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் திட்டங்களை வகுத்தளிக்கவேண்டும். அப்போதும் ஏதும் கூறாமல் இருக்கும் மந்திரிகளை ராஜா தன்னுடைய எதிரியாகவே கருதுவார். ஆதலால் மந்திரிகளாகிய நாம் உடனடியாக ஆழ்ந்து யோசித்து, ஒரு நல்ல திட்டத்தினை ராஜாவிடம் கூறவேண்டும்’ என்று சக மந்திரிகளிடம் கேட்டுக்கொண்டது.

உத்தமசீவி என்ற மந்திரி, ‘ராஜா! நம்மைவிட பலம் வாய்ந்தவருடன் நாம் பகைகொள்வது சரியன்று. அத்தகையோரிடம் நாம் சமாதானம் செய்துகொள்வதே சரி. பகைவர்களை வணங்கி, அவர்களுடன் நெருக்கமாக இருப்பதுபோல நடித்து, தக்க சமயத்தில் அவர்களுக்கு துரோகம் செய்து நாம் நன்மையடையவேண்டும். நதியில் நீர்ப்பெருக்கெடுக்கும்போது நதிக்கரையில் உள்ள செடிகள் அனைத்தும் நீரின் போக்குக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கின்றன. ஆதலால்தான் அவை நீர்ப்பெருக்கு நீங்கிய பின்னர் நிமிர்ந்துகொண்டு பிழைக்கின்றன. அவை வளைவது தப்பித்துக்கொள்வதற்கே! நமக்குக் கேடான காலத்தில் பகைவரிடம் சமாதானம் செய்துகொண்டால், நம் செல்வத்தை இழக்காமல் இருப்பதுடன், பின்னர் செல்வமும் சேர்க்கலாம். நமக்குப் பலர் பகைவராக இருந்தால், அவர்களில் நாம் ஒருவருடன் நட்புகொண்டு, அவரைக்கொண்டு மற்றவர்களைக் கெடுத்து, அழித்துவிடலாம். நம்மிடமும் நமது பகைவரிடமும் எவ்வளவு நிலம், பொருள், நட்புபலம் ஆகிய உள்ளன என்பதனை ஆராய்ந்து தெரிந்த பின்னர், பகைவரைவிட நாம் அதிகமாக அவற்றை வைத்திருந்தால் மட்டுமே நாம் பகைவரை எதிர்க்கவேண்டும். இந்த உலகில் வெற்றியும் தோல்வியும் ஒருவருக்குரியதல்ல. ஆதலால், நாம் குளக்கரையில் காத்திருக்கும் கொக்கு, மீன்வந்தபோது திடுமென நீரினுள் நுழைந்து அதனைக் கவ்வுவதுபோல தக்க தருணம் வரும்வரை காத்திருந்து, பின்னர் விரைந்து செயலாற்றவேண்டும். பகைவரின் வலிமையை அறிந்து அதற்கு ஏற்ப எது செய்யத்தக்கதோ அதனை மட்டுமே செய்யவேண்டும்’ என்று தன் ஆலோசனையைக் கூறியது.

உத்தமசீவி கூறியதைக் கேட்ட ராஜா, அடுத்ததாக இரண்டாவது மந்திரியிடம் கருத்து கேட்டார்.

இரண்டாம் மந்திரி, ‘ராஜா மந்திரி உத்தமசீவி கூறுவது சரியல்ல. நமக்கு ஒரு கேடுவிளைவித்த நம் பகைவரிடம் நாம் சமாதானம் செய்துகொள்வது நமக்கு நன்மையைத் தராது. நெருப்பினால் காய்ச்சிய நீர் அந்த நெருப்பையும் அணைக்கத்தானே செய்யும். நமக்குத் தொல்லை தந்த ஆந்தைகளிடம் நாம் சென்று சமாதானம் செய்தால் அவை நம்மைக் கொல்லவே செய்யும். நம் பகைவர்கள் நம்மை விட பலசாலிகள் என்பதால் நாம் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சக்கூடாது. மிகப் பெரிய யானையை ஒரு சிங்கக் குட்டி எதிர்த்துப் போரிட்டு வென்றுவிடுகிறதுதானே! பலம் என்பது உருவில் இல்லை. மனத்தில் உள்ளது. ஆதலால் நாம் மனத்தில் பலத்தை ஏற்படுத்திக்கொண்டு அந்த ஆந்தைகளிடம் போரிடவேண்டும். எவன் ஒருவன் வீரனாகவும் தீரனாகவும் எல்லோராலும் அறியப்பட்டவனாகவும் உள்ளானோ அவனே புண்ணியம் செய்தவன். தன் வீர, தீரத்தால் எதிரியை வென்று வாழ்பவனே உயிர் வாழ்பவன். அவ்வாறு அல்லாதவன் பிணத்திற்குச் சமமானவன்’ என்று மாற்றுக்கருத்தினைக் கூறியது.

ராஜா மூன்றாவது மந்திரியிடம் ஆலோசனை கேட்டார். மூன்றாவது மந்திரி, ‘ராஜா! நம் எதிரி பலம்வாய்ந்தவன் என்றால், நாம் அவனுடன் போரிடுதல் சரியன்று. அவனுடன் போரிடாமல் இங்கேயே தொடர்ந்து இருப்பதும் சரியன்று. ஆதலால், நாம் வேறொரு இடத்திற்குச் சென்றுவிடுதலே சரி. எவன் ஒருவன் தன் எதிரியின் பலத்தை அறிந்துகொண்டு, அவனிடம் எதிர்த்துப் போரிடாமல் தன் நாட்டைவிட்டு வேறொரு இடத்திற்குச் சென்று வாழ்கிறானோ அவன் பஞ்சபாண்வடர்களைப் போல இன்பமாக வாழ்வான். அவ்வாறு செய்யாமல் பலம்பொருந்திய எதிரியுடன் போரிடுபவன் அழிவான்’ என்றது.

ராஜா நான்காவது மந்திரியிடம் கருத்துக் கேட்டார். அந்த நான்காவது மந்திரி, ‘ராஜா! மூன்றாவது மந்திரியின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. முதலையானது தனக்குரிய இடமான நீர்நிலையில் வாழ்ந்து வந்தால் அதனைத் தாக்கவரும் மிகப்பெரிய யானையைக்கூட வீழ்த்திவிடும். அதே முதலை தன்னிடத்தை விட்டுவிட்டு நிலப்பகுதியில் அலைந்து திரிந்தால் ஒரு நாய்கூட அதைக் கடித்து இழுத்துச்சென்றுவிடும். ஆதலால், நாம் நம்மிடத்திலேயே இருந்துகொண்டு நமக்குச் சில நண்பர்களை உதவிக்கு வைத்துக்கொண்டு நம் எதிரிகளிடம் போரிடவேண்டும். எதிரிக்குப் பயந்து எவன் தன்னிடத்தைவிட்டுச் செல்கிறானோ அவன் மீண்டும் தன்னுடைய இடத்திற்கு வருவதேயில்லை. பல் பிடுங்கப்பட்ட பாம்பும், மதமில்லாத யானையும், தன்னிடத்தைவிட்டுச் சென்ற ராஜாவும் எல்லோராலும் அவமானப்படுவர்.

‘ஒருவன் தன்னிடத்திலேயே இருந்தால் நூறுபேரைக்கூட எதிர்த்து நிற்பான். ஆதலால், ஒருவன் தன்னிடத்திலேயே தக்க மதிலை உருவாக்கிக்கொண்டு தன் பகைவன்மீது போர்தொடுக்கவேண்டும். அவ்வாறு அவன் போர்புரிந்து வெற்றிபெற்றால் அவனைத்தேடி லெட்சுமிதேவி வருவாள். அவன் தோல்வியடைந்தால் அவன் வீர சொர்க்கம் அடைவான். ஆதலால், இவ்விரண்டில் ஒன்றினை அவன் பெறுவது நிச்சயம். ஆதலால், ஒருவன் இவ்விரண்டினையும் விட்டுவிடுதல்கூடாது. நிலத்தில் தன் வேர்களை நன்கு ஊன்றியுள்ள மரம் பலமான காற்றினாலும்கூட அசைக்கமுடியாததாக இருக்கும். அந்த மரம் தன்னிடத்தைவிட்டு இடம்பெயர்ந்தால், தென்றல் காற்றுகூட அதனை எங்கெங்கோ நகர்த்திச் சென்றுவிடும். ஆதலால், ஒருவன் தன்னிடத்திலிருந்துகொண்டே தன் எதிரியை எதிர்க்கவேண்டும்’ என்றது.

ராஜா ஐந்தாவது மந்திரியிடம் கருத்துக் கேட்டார். ஐந்தாவது மந்திரி, ‘ராஜா! நான்காவது மந்திரியின் கருத்தினை நான் ஏற்கிறேன். நாம் நம்மிடத்திலேயே இருக்கவேண்டும். நமக்கு உதவி செய்யக்கூடியவர்களைச் சார்ந்திருக்கவேண்டும். இடம்மாறிச்சென்ற பின்னர், நாம் யாரிடம் சென்று உதவிகேட்டாலும் அவர்கள் நமக்கு உதவமாட்டார்கள். நெருப்பு ஒரு காட்டையே அழிக்கவேண்டுமானால், அது பற்றிப் படர அதற்குக்குப் புல், சருகு முதலியவற்றின் உதவிவேண்டும். அதுமட்டுமல்ல காற்றும் அதற்குப் பெருமளவில் உதவிசெய்கின்றது. அதனால்தான் காட்டில் நெருப்பு பரவினால், அந்தக் காடு முழுவதும் அழிகிறது. நெருப்பு படராமல் ஒரு விளக்குபோல இருந்தால், அந்தக் காற்றே அந்த நெருப்பினை அணைத்துவிடும். வலிமையுடையவர்களின் உதவியிருந்தால் பெருமையே உண்டாகிறது. தாமரை இலையைச் சார்ந்திருக்கும் ஒரு நீர்த்துளியானது முத்தின் ஒளியை எளிதில் பெற்றுவிடுகிறதே! யாருடைய துணையும் இல்லாமல் யாருக்கும் எந்தப் பெருமையும் ஏற்படுவதில்லை. அதனால், நமக்கு உதவிசெய்பவர்களைத் தேடி அவர்களின் உதவியைப் பெற்றுக்கொண்டு நம் எதிரிகளை அழிக்கவேண்டும்’ என்றது.

தன்னுடைய ஐந்து மந்திரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்த காகராஜா, தன்னுடைய பிதாவின் மந்திரியாகிய வயதில் மூத்த சிரஞ்சீவி என்பவரிடம், ‘இந்த அவையில் மந்திரிமார்களின் கருத்துக்களைத் தாங்கள் உற்றுக்கவனித்திருப்பீர்கள். தங்களின் கருத்தினை நான் அறிய விரும்புகிறேன்’ என்றார்.

சிரஞ்சீவி, ‘எல்லோரும் சாஸ்திர நூல்கள் கூறியுள்ள கருத்துக்களுக்கு ஏற்பவே தங்களின் கருத்துக்களைக் கூறினர். ஆகையால், அவை அனைத்துமே சிறப்பானவையாக இருந்தன. நாம் நமது எதிரியைப் பணிந்து அவனுக்கு நட்பாக இருப்பதுபோல நடித்து அவனை அழிக்கவேண்டும். அல்லது அவனுக்கும் நமக்கும் உள்ள சிறப்புகளையும் சிறப்பற்றவற்றையும் அறிந்துகொண்டு அவற்றிற்கு ஏற்பச் செயல்படவேண்டும். தெய்வம், குரு முதலானவர்களிடம் உண்மையாக நடந்துகொள்ளவேண்டும். பெண்கள், முகத்தினளவுமட்டும் நட்புகொள்பவர்கள், பகைவர்கள், சூதாடுகிறவர்கள் ஆகியோரிடம் அவ்வாறு நடந்துகொள்ளவேண்டியில்லை’ என்று தன் கருத்தினைக் கூறினார்.

காகராஜா, ‘நாம் எப்படி நமது எதிரிகளின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்வது?’ என்று அவரிடம் கேட்டார்.

அதற்கு சிரஞ்சீவி, ‘மறைந்துள்ள பொருள்களைப் பிராமணர்கள் வேதத்தாலும், பசு, வாசனையாலும் அரசன் ஒற்றனாலும், எளிய மக்கள் தங்களின் கண்களாலும் அறிந்துகொள்கிறார்கள்’ என்று பதில் கூறினார்.

‘ஏன் என் மந்திரிகள் ஐவரும் விதவிதமாகக் கருத்துக்கூறினார்கள்?’ என்று கேட்டார் காகராஜா.

சிரஞ்சீவி, ‘ராஜா ஏன் தன் மந்திரிகளிடம் மாற்றுக்கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும் என்பதற்கு நாரதர் தருமராஜருக்கு விளக்கம் கூறியுள்ளார். அதனை உனக்குக் கூறுகிறேன். தோட்டக்காரனின் பார்வை தோட்டப் பயிர்களின் மீது எப்போதும் இருந்தால் அந்தப் பயிர்கள் அழியாமல் இருக்கும். ராஜா தனக்குப் பயனுள்ளவற்றைப் பற்றி ஒரு நாழிகை (24நிமிடங்கள்) விசாரிக்காமல் விட்டாலும் அவனுக்குக் கெடுதி வந்துவிடும். ஆதலால், அவன் தன் மந்திரிகளுடன் ஆலோசித்து, கணந்தோறும் தன் நாட்டில் நடப்பவற்றை அறிந்துகொண்டே இருக்கவேண்டும். அவர்களிடம் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அவற்றை ஏற்றுச் சீர்தூக்கிப் பார்த்து எச்சரிக்கையாக இருக்கும் ராஜாவுக்குக் கேடு வராது’ என்றது.

‘ஏன் நம் இனத்திற்கும் ஆந்தை இனத்திற்கும் தீராப் பகை ஏற்பட்டது?’ என்று காகராஜா சிரஞ்சீவியிடம் கேட்டவுடன், அந்தப் பகைக்கான காரணத்தை சிரஞ்சீவி கூறத்தொடங்கியது.

ஒருநாள் பறவை இனங்கள் எல்லாம் ஒன்றுகூடின. ‘நம்முடைய ராஜா பார்வையற்றவராக உள்ளார். இவரால் நம்மை வேடர்களிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. இத்தகைய ராஜாவால் நம் இனத்திற்கு என்ன பயன்?’ என்று பேசிக்கொண்டன. நமக்கு ராஜா என்று ஒருவர் வேண்டுமா? என்றும் சிந்தித்தன. மாலுமி இல்லாத கப்பல் கரைசேராது என்பதால், அவை தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒரு புதிய ராஜாவைத் தேர்ந்தெடுக்க நினைத்தன. அவை அனைத்தும் ஒருமனதாக ஆந்தையைத் தங்களின் ராஜாவாகத் தேர்ந்தெடுத்தன. தங்களின் புதிய ராஜாவுக்கு முடிசூட்டும் விழா நடத்தத் திட்டமிட்டன. ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கின.

இந்தச் சூழலில் ஒரு காகம் அங்கு வந்தது. இவர்கள் கூட்டம் போட்டது அதற்குத் தெரியாது. ஆதலால், ‘என்ன கூட்டம்?’ என்று விசாரித்தது. அவை, ‘தங்களின் புதிய ராஜாவாக ஆந்தையை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்’ என்று கூறின. அச்செய்தியைக் கேட்டதும் காகம் தன் வயிறு குலுங்கச் சிரித்தது.

‘ஏன் சிரிக்கிறாய்?’ என்று அவர்கள் காகத்தை விசாரித்தன.

‘சிரிக்காமல் என்ன செய்ய? அழகான மயில் இருக்கும்போது, பலம் வாய்ந்த கழுகு உள்ளபோது அவர்களை எல்லாம் விட்டு பறவைகளின் ராஜாவாக போயும் போயும் பகல் குருடனான ஆந்தையையா தேர்ந்தெடுத்தீர்கள்? அவன் ராஜா பதவிக்கு ஏற்றவனா? யாராவது குளத்திற்குச் சென்று குளிக்க நினைத்துச் சேற்றையா உடலில் பூசிக் கொண்டுவருவார்கள்?’ என்று கேட்டது.

அப்போதுதான் அவை ஆந்தையின் பகல் குருடு பற்றி யோசித்தன. ‘ஆமாம்! காகம் சொல்வதும் சரிதானே! ஆந்தைக்குப் பகலில் கண் பார்வை தெரியாதே! அது எப்படிப் பறவை இனத்தைப் பகலில் காப்பாற்ற முடியும்?’ என்று நினைத்த்தன.

‘ஒருவன் இறைவனாக நம்மிடம் இருக்கும்போது, மற்றொருவன் நல்ல குணமுடையவனாக நமக்குக் கிடைத்தால் அவன் எந்தவகையில் அந்த இறைவனைவிட மிகுந்த பயனுடையவனாக நமக்கு இருப்பான்? நமக்குத் தான் இறைவனாக கருடன் இருக்கிறானே! அவனே வீர, தீரத்தில் சிறந்தவன். அவனை விட்டுவிட்டு வலுவற்ற, பகலில் பார்வையற்ற அந்த ஆந்தையை நமது ராஜாவாக ஏற்றுக்கொண்டால் நமக்கு என்ன பயன் கிடைக்கும்? வலியவர்களின் பெயரினாலேயேதான் எளியவர்களுக்கும் காரியங்கள் நடக்கின்றன. அவ்வாறே கருடன் பெயரினாலேயே பல வரங்களைப் பெற்ற மனிதர்கள் நம்மிடம் மதிப்புகொண்டுள்ளனர். முன்பு ஒருமுறை ஒரு முயல் சந்திரனின் பிம்பத்தை யானைக்குக் காட்டி நன்மையடைந்ததை நீங்கள் அறிவீர்களா?’ என்று காகம் அந்தப் பறவைகளிடம் கேட்டது.

‘எங்களுக்குத் தெரியாது. நீங்கள் கூறுங்களேன்!’ என்ற பறவைகளிடம் காகம் சந்திரனின் பிம்பத்தால் நன்மையடைந்த முயல்கூட்டத்தின் கதையினைக் கூறத் தொடங்கியது.

0

இரண்டு கதைகள்

டோன் யோங்கின் மனைவி

tiger_outline_by_hadesgodofthedead-d3df7eoஹான் மன்னன் பரம்பரை ஆட்சி நடைபெற்ற காலத்தில் க்யான்செங் என்னும் ஊரில் டோன் யாங் என்றொருவன் இருந்தான். குழந்தையாக இருந்தபோதே இவன் தாய் இறந்துவிட்டாள். தந்தைதான் அவனை வளர்த்து வந்தார். டோன் யாங் வயல்களிலே வேலை செய்து தந்தையைக் காப்பாற்றி வந்தான். டோன் யாங் கடுமையான உழைப்பாளி. அவன் எங்கு வேலைக்குப் போனாலும் தந்தையை ஒரு தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வருவான். தந்தை இருக்கும் வண்டியை ஓரிடத்திலே நிற்கவைத்துவிட்டு இவன் வேலைகளைச் செய்வான். ஒரு நாள் பாவம், அவன் தந்தை இறந்துவிட்டார்.

சவ அடக்கம் செய்வதற்கு கையிலே சல்லிக்காசு இல்லை. என்ன செய்வது, பாவம், டோன் யாங் தன்னையே அடிமையாக விலைக்கு விற்க முடிவெடுத்தான். டோன் யாங் ஒரு நேர்மையாளன் என்பதை உணர்ந்து ஒரு பணக்காரன் பத்தாயிரம் காசுகள் கொடுத்து அவனை விலைக்கு வாங்கிக்கொண்டான்.

அந்த ஊரின் வழக்கப்படி இறந்தவனுக்காக மூன்று ஆண்டுகள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். இந்த மூன்று ஆண்டுகளும் டோன் யாங் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. இதையறிந்த அடிமை கொண்டவனும் மூன்று ஆண்டுகள் கழித்து அவனை வேலையில் அமர்த்தலாம் என்று முடிவு செய்தான்.

மூன்று ஆண்டுகள் கழிந்தன. டோங் யாங் தன்னை விலை கொடுத்து வாங்கிய எஜமானனிடம் வேலைக்குப் போவதற்குப் புறப்பட்டான். போகின்ற வழியில் ஒரு பெண்ணை அவன் பார்க்க நேரிட்டது. அந்தப் பெண் இவனிடம் “உன்னை மணமுடிக்க எனக்கு விருப்பம்” என்றாள். இவனுக்கும் அது சரி எனப்பட்டது. எனவே அவளையும் அழைத்துக்கொண்டு தன் அடிமை முதலாளியிடம் போனான்.

டோங் யாங்கைப் பார்த்து எஜமானன் மகிழ்ந்தான். அவனிடம், “உன்னிடம் பணம் கொடுத்தேன், அதை என்ன செய்தாய்?” என்றான்.

“ஐயா! நீங்கள் பெருந்தன்மையோடு எனக்குச் செய்த நன்மையினால் நீங்கள் அளித்த அந்தத் தொகை என் தகப்பனின் ஈமச் செலவுகளுக்கு சரியாக இருந்தது. இப்பொழுது நான் எப்பொழுதும்போல ஒன்றுமில்லாதவன். மேலும் கீழ்ச்சாதிக்காரன். ஆகவே என்னால் கடுமையான உழைப்பை நன்றிக் கடனாகச்  செலுத்த முடியும்” என்றான்.

“சரி… அப்படியானால் நீ வாங்கிய தொகைக்காக எனக்கு உழைக்கவேண்டும். அது முடிந்தவுடன்தான் நீ என்னைவிட்டுப் போக முடியும். நீயும் உன் மனைவியுமாக எனக்காக வேலை செய்தால் உன் கடனைச் சீக்கிரம் அடைக்கலாம். உன் மனைவிக்கு என்ன வேலைத் தெரியும்?”

“அவள் ஆடை நெய்வதில் கெட்டிக்காரி”.

“அப்படியானால் எனக்கு நூறு சுருள்கள் உயர் ரகப் பட்டுத் துணிகள் நெய்து தரட்டும்.”

எஜமானன் டோங்கின் மனைவிக்குப் பட்டு நூல்கள் மற்றும் உயர் ரக பட்டுத் துணி தயாரிப்புக்கான பொருள்கள் போன்றவற்றை அனுப்பினான். எப்படியும் நூறு சுருள்கள் பட்டுத் துணி என்றால் அதை  நெய்து முடிப்பதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளாவது ஆகும். (1 சுருள் என்பது 100 பேர்களின் ஆடைகள் தைக்க பயன்படும்). எனவே மூன்று ஆண்டுகளுக்கான தன் தேவையை அவள் மூலம் பெற்றுவிடலாம், அதன் வழியே கிடைக்கப்போகின்ற லாபம் பெரியது என்று எஜமானன் நினைத்துக்கொண்டான்.

டோங்கின் மனைவி நெசவுப் பணியைத் தொடங்கினாள். பத்து நாள்களுக்குள் நூறு சுருள்கள் உயர் ரகப் பட்டுத் துணி தயார் செய்துவிட்டாள். டோங் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனான். இவ்வளவு வேகத்தில் இப்படியொரு வேலையைப் பார்க்க முடியுமா? அதை அவளிடமே கேட்டான்.

அவள் நிதானமாகக் கூறினாள்.

“நான் மேலுலகத்துப் பெண். சுவர்க்கத்தில் நெசவு செய்பவள். ஆகவே வேகமாக என்னால் பணியாற்ற முடியும். உன்மேல் இரக்கப்பட்டு எங்கள் சுவர்க்கலோகத்தின் பேரரசர், என்னை உனக்கு உதவும்படி இங்கே அனுப்பி வைத்தார். உன்னுடைய இந்தப் பணிவும், மரியாதையும் எங்கள் மாமன்னரை நெகிழச் செய்தது. உன் துன்பத்தை, அடிமைத்தனத்தை என் உழைப்பின் வழியாகப் போக்கிவிட்டு நான் போகவேண்டும். அதை செய்துவிட்டேன். நான் போகிறேன்”.

சொன்னதொடு நில்லாமல் காற்றில் கரைந்து விண்ணகம் ஏறினாள்.

யாருக்காக பயம்?

ஒரு காலத்தில் சீனா பல நாடுகளையும் பல மன்னர்களையும் கொண்டிருந்தது. இந்த நாடுகளில் சில சிறியவை, சில பெரியவை. பல்வேறு தரப்பட்ட மக்கள் வெவ்வேறு கலாசாரங்களைப் பின்பற்றி வந்தனர்.

நாடுகளுக்குள் அவ்வப்போது போர்கள் நடைபெறும். ஒரு நாடு அல்லது மன்னன் இன்னொரு நாட்டையோ மன்னனையோ தாக்கவும் அழிக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் போரில் இறங்குவான். இப்படிப்பட்ட போர்கள் ஓயாது நடைபெறும்.

‘ச்சூ’ (Chu State) என்ற ஒரு சின்ன நாட்டில் மிகுந்த ஆற்றல்மிக்க அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஷோவாஸிக்ஸு (Zhaoxixu).  இவருடைய அறிவுத் திறன், ராஜ தந்திரம், தூரநோக்கு ஆகியவற்றின் காரணமாக இவரிடம் மற்ற நாடுகளின் அரசாங்கங்கள் அல்லது அமைச்சர்கள் அஞ்சி கிடந்தனர். ஏன் உள்நாட்டிலும்கூட பங்காளி காய்ச்சல் இருந்தாலும் வாய் மூடிக் கிடந்தனர்.

ஒருநாள் அரசன் தன் அமைச்சர் ஷோவாஸிக்ஸு குறித்து அரசவையில் பேச்சு எழுப்பினான்.

“நம் அமைச்சர் ஷோவாஸிக்ஸுவின் பெயரைக் கேட்டால் அண்டை நாடுகள் எல்லாம் அஞ்சி நடுங்குகின்றன. ஏன், நம் நாட்டில் கூட அவர் பெயருக்கு பெரிய மதிப்பும்அச்சமும் காட்டுகிறார்கள். உண்மையிலேயே அவருக்கு இப்படியோர் பெயர் உள்ளதா?”

அரசவையில் இருந்த அமைச்சர் குழுவிலிருந்தும் சரி, பிரதானிகள் பக்கமிருந்தும் சரி; யாரும் இதனை ஆதரிக்கமோ மறுக்கவோ இல்லை.

அரசன் அந்த அமைச்சரின் மேல் உள்ள அபிமானத்தால் இதைக் கேட்கிறானா, அல்லது எரிச்சலுற்றுக் கேட்கிறானா என்று தெரியாமல் கேள்விப்பொறியில் சிக்கிக் கொள்ள யாருக்கும் துணிவில்லை.

‘ஜியான்ங்ஈ’ என்ற அமைச்சர் மன்னரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று நெடுங்காலமாகக் காத்திருந்தார். இந்தத் தருணத்தை நல்வாய்ப்பாகப் பயன்படுத்த நினைத்தார்.

அவர் எழுந்து, “மன்னர் பிரானே! அந்த அமைச்சர் மேல் பக்கத்து நாடுகளும், மக்களும் கொண்டிருக்கின்ற மதிப்பு எப்படி என்பதை ஒரு கதை மூலமாக உங்களுக்கு விளக்க விரும்புகிறேன்” என்றான்.

“என்ன அது, சொல்வீர்!” என்றான் மன்னன்.

ஒருமுறை நரி, புலியிடம் மாட்டிக்கொண்டது. தப்பிக்கும் வழி நரிக்குப் புலப்படவில்லை. எனவே ஓர் உபாயம் செய்தது.

“யோவ். . . புலியே. . .  என்ன தைரியம் இருந்தால் என்னைக் கொல்லத் துடிப்பாய்?” என்று தலையை நிமிர்த்திக் கேட்டது.

புலிக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் உன்னைப் பிடித்துக் கொல்லக்கூடாது?” என்று திருப்பிக்கேட்டது.

நரி தன் குரலை மேலும் உயர்த்திக்கொண்டு, “உன்னிடம்தான் சொல்லவேண்டும். கடவுள் என்னை இந்தக் காட்டிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் ராஜாவாக நியமித்திருக்கிறார். நீ என்னைக் கொன்றால் அவ்வளவுதான், கடவுளுக்கு எதிரி ஆகிவிடுவாய். . . உன்னைக் கடவுள் கடுமையாகத் தண்டிப்பார்” என்றது.

புலி சந்தேகத்துடன் பார்ப்பதைக் கண்டதும் நரி சொன்னது.

“சரி. . . நீ நம்ப வேண்டுமானால் இந்த காடு முழுவதும் போவோம். என்னைப் பார்த்தவுடன் எல்லா மிருகங்களும் பய பக்தியோடு ஒதுங்கி கொள்வதை நீயே பார்க்கலாம்” என்றது.

இருவரும் கிளம்பி காட்டுக்குப் போனார்கள்.

நரி திமிருடன் நடந்துசென்றது. ஆங்காங்கே இருந்த மிருகங்கள் நரியைப் புலியிடன் பார்த்ததால் நடுக்கத்துடன் ஓடி ஒளிந்துகொண்டன.

“பார்த்தாயா புலியாரே! என்னைப் பார்த்தால், இவையெல்லாம் எப்படி ஓடுகின்றன. . .  என்ன மரியாதை? என் எதிரில் இருக்கக்கூடத் தயக்கம், அச்சம்! இப்பொழுதாவது புரிகிறதா? என்னிடம் நீ வாலாட்டினால் உன் கதை முடிந்தது.” என்றது நரி.

பயந்துபோய் நரியைவிட்டு விலகி தன் வழியில் சென்றது புலி.

“இப்படித்தான் அரசே, உங்கள் கீழ் உள்ளதால் உங்களை நினைத்தே அனைவரும் அந்த அமைச்சருக்கு அஞ்சுகிறார்கள். உங்களது ராஜ தந்திரம், வீரம், விவேகம், ஆற்றல் ஆகியவற்றைக் கண்டுதான் உண்மையில் அவர்களுக்கு அச்சம்” என்றார் அந்த அமைச்சர்.

அரசர் அவருக்குப் பொன்னும் பொருளும் அளித்து மகிழ்ந்தார்.

0

மூன்று மாப்பிள்ளைகள் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 11

210px-DEMON_MASKவிக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை மரத்திலிருந்து மீட்டெடுத்துப் புறப்பட்டதும், பாதி வழி கடந்ததுமே வழக்கம்போல வேதாளம் தனது அடுத்த கதையை சொல்லத் தொடங்கியது.

‘உஜ்ஜயினி என்னும் நகரத்தை புண்ணியசேனன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது அரசவை பண்டிதராகப் பணியாற்றியவர் ஹரிதாஸர் என்னும் அந்தணர்.

ஹரிதாஸர் தனது மனைவி, மகன், மகளுடன் உஜ்ஜயினியின் அக்ரஹாரம் ஒன்றில் குடியிருந்தார். மனைவி பத்மாவதி. மகன் பெயர் தேவஸ்வாமி. அவரது மகளின் பெயர் தேவப்பிரபா.

ஹரிதாஸரின் மகள் தேவப்பிரபாவுக்கு தான் ஒரு பேரழகி என்பதில் மெல்லிய கர்வம் உண்டு. அவள் அப்போது திருமண வயதை எட்டியிருந்ததால் கூடிய சீக்கிரமே அவளுக்குத் தகுந்தவாறு மாப்பிள்ளை தேடவேண்டும் என்று, தேவப்பிரபாவின் தாயும், தந்தையும், அண்ணனும் பேசிக் கொண்டிருந்ததை அவள் கேட்டாள்.

தேவப்பிரபாவுக்கு மனத்தில் மெல்லிய பயம் ஏற்பட்டது. தனது அழகுக்கும் அறிவுக்கும் தகுந்தபடி இல்லாமல் தனது பெற்றோர் ஏதோவொரு மாப்பிள்ளையைப் பிடித்து வந்து கட்டி வைத்து விடுவார்களோ என்று கவலைப்பட்டாள்.

எனவே தன் மனத்தில் இருப்பதை வெளிப்படையாகவே சொல்லி விடத் தீர்மானித்து, ஒருநாள் வீட்டில் அனைவரும் சேர்ந்திருந்த சமயத்தில் மெல்லப் பேச்சைத் துவக்கினாள்.

‘அம்மா, நீங்கள் என் திருமணத்துக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?’ என்று வெட்கத்துடன் கேட்டாள்.

‘ஆம் மகளே! அது எங்கள் கடமையல்லவா? வயதுக்கு வந்த பெண்ணை நீண்ட நாட்கள் வீட்டில் வைத்திருக்கக் கூடாது அம்மா! அதனால்தான் விரைவிலேயே உனக்குக் கணவராகத் தகுந்தவராக ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்!’ – அம்மா அன்புடன் கூறினாள்.

அதற்குள் அவளது தந்தையார் ஹரிதாஸர் குறுக்கிட்டு, ‘மகளே தேவப்பிரபா, நீ எங்களிடம் ஏதோ சொல்ல நினைக்கிறாய் என்று தோன்றுகிறது! எதுவானாலும் தைரியமாகச் சொல் அம்மா!’ என்று கேட்டார்.

‘ஆம் அப்பா! எனக்குக் கணவராக வரப் போகிறவரைப் பற்றி உங்களிடம் சொல்லவேண்டும். நீங்கள் எனக்குத் தேர்ந்தெடுக்கும் மணமகன் வீரத்திலோ, ஞானத்திலோ, விஞ்ஞான சூத்திரத்திலோ ஏதோ ஒன்றில் வல்லவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன்! இதற்கு மாறாக எந்தத் திறமையும் இல்லாத எவரையேனும் தேர்ந்தெடுத்துவிட்டு தயவுசெய்து என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள்! இது என் கோரிக்கை!’ என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் விரைந்தோடிச் சென்றுவிட்டாள்.

இதைக் கேட்டதுமே ஹரிதாஸரும், மனைவி பத்மாவதியும், மகன் தேவஸ்வாமியும் மலைத்துப் போனார்கள். தேவப்பிரபா குறிப்பிட்டபடியான மாப்பிள்ளையை எங்கு போய் தேடி, எப்படிக் கண்டுபிடிப்பது என்று கவலை கொண்டார்கள்.

இந்தச் சமயத்தில்தான் ஹரிதாஸர் வசித்த அந்த உஜ்ஜயினி நகரத்துக்கு வேறொரு அபாயமும் வந்து சேர்ந்தது!

தட்சிணதேசத்து மன்னன் பிரத்யுங்கன் என்பவன் உஜ்ஜயினி தேசத்தின் மீது படையெடுத்து வந்து எல்லைப்புறத்தில் முகாமிட்டிருந்தான்.

உஜ்ஜயினியின் மன்னன் புண்ணியசேனன் பதறிப் போனான். தட்சிணதேசத்து மன்னனின் பெரும் படையுடன் உஜ்ஜயினியின் சிறிய படை மோதி வெற்றி கொள்வதென்பது நடக்காத காரியம். எனவே மன்னன் பிரத்யுங்கனுடன் சமாதானமாகப் போக விரும்பினான்.

அவனிடம் யாரை சமாதானத் தூதுக்கு அனுப்புவது என்று யோசித்து தனது அரசவைப் பண்டிதரான ஹரிதாஸரை தேர்ந்தெடுத்து போர் முகாமுக்கு அனுப்பி வைத்தான்.

ஹரிதாஸர் உஜ்ஜயினி மன்னனின் சார்பாக தட்சிண மன்னனிடம் சமாதானம் பேசினார். அவனது மனத்துக்கு உகந்தபடியாக பிரத்யுங்கனைப் புகழ்ந்து பேசி வசப்படுத்திக் காரியம் சாதித்தார். உஜ்ஜயினி மன்னனுடன் நட்புக்கரம் நீட்ட தட்சிண மன்னனும் ஒப்புக் கொண்டான். ஹரிதாஸரை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனதால் தன்னுடன் இரண்டொரு நாள் தங்கிச் செல்லும்படியாகக் கேட்டுக் கொண்டான்.

அதன்படியே தட்சிண மன்னன் பாசறையில் தங்கியிருந்தபோது ஹரிதாஸரை வந்து சந்தித்தான் ஒரு பிராமண இளைஞன். தட்சிண மன்னனின் அரசவையைச் சேர்ந்தவனான அந்த இளைஞனின் பெயர் சூத்திரவான்.

அவன் ஹரிதாஸரை வணங்கி, ‘ஸ்வாமி, என் பெயர் சூத்திரவான். நான் தங்களது மகள் தேவப்பிரபாவைப் பற்றியும் அவளது பேரழகு குறித்தும் அநேகர் சிலாகித்துப் பேசுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதிலிருந்தே மனத்தில் தங்கள் மகள் மீது மிகுந்த பாசம் கொண்டுவிட்டேன். எனவே தாங்கள் தங்கள் மகளை எனக்கு மணம் செய்வித்துத் தந்தால் மிகவும் மகிழ்வேன்!’ என்று வேண்டினான்.

ஹரிதாஸருக்கு இளைஞன் சூத்திரவானைப் பிடித்துப் போனாலும், மகள் தேவப்பிரபா தனக்கு இட்ட நிபந்தனையை நினைத்துப் பார்த்தார். அதை சூத்திரவானிடமும் கூறினார்.

‘இளைஞனே உன்னை எனது மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வதில் சிறு சிக்கல் இருக்கிறது. எனது மகள் தனக்கு வரப்போகிற கணவன் வீரம், ஞானம், விஞ்ஞான சாத்திரம் இம்மூன்றில் ஏதோ ஒன்றிலாவது வல்லவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டிருக்கிறாள். அதன்படி உன்னிடம் என்ன திறமை உள்ளது?’ என்று கேட்டார்.

‘ஆஹா! ஸ்வாமி அதிலொன்றும் பிரச்னையில்லை. நான் விஞ்ஞான சூத்திரத்தில் கரை கண்டவன். இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். நிரூபிக்கிறேன், பாருங்கள்!’ என்றவன் சில தினங்களிலேயே இயந்திரப் பொறிகளால் ஆகாயத்தில் பறக்கும் அதிசய விமானம் ஒன்றை உருவாக்கி, அதில் ஹரிதாஸரையும் ஏற்றிக் கொண்டு விண்ணில் பறந்து காண்பித்தான்.

மீண்டும் தரையிறங்கிய மறுகணமே மனம் மகிழ்ந்து போன ஹரிதாஸர், இளைஞன் சூத்திரவானிடம், ‘நீர்தான் எமக்கு மாப்பிள்ளை. இன்றிலிருந்து ஏழாவது நாள் உமக்கும் எனது மகளுக்கும் திருமணம் நடைபெறுவது உறுதி’ என்று வாக்களித்து விடை பெற்றார்.

இவர் இங்கே வாக்குறுதி தந்த அதே சமயத்தில் உஜ்ஜயினியில் ஹரிதாஸரின் மகனான தேவஸ்வாமியையும் ஓர் இளைஞன் சந்தித்து அவனது தங்கையை தனக்கு மணம் முடித்துத் தருமாறு வேண்டினான்.
அதற்கு தேவஸ்வாமி, ‘நண்பரே எனது தங்கை தேவப்பிரபா தனக்கு வரப்போகிற கணவன் வீரம், ஞானம், விஞ்ஞான சாத்திரம் இம்மூன்றில் ஏதோ ஒன்றிலாவது வல்லவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டிருக்கிறாள். அதன்படி உம்மிடம் என்ன திறமை உள்ளது?’ என்று கேட்டான்.

சூரசேனன் என்கிற அந்த இளைஞன் பெயருக்குத் தகுந்தபடி தான் ஒரு வீரன் என்றும், வில் வித்தை, வாள் வித்தை, மற்போர், ஆயுதச் சண்டை அனைத்திலும் ஈடில்லாத திறமை கொண்டவன் என்றும் சொல்லி அதை தேவஸ்வாமியின் முன் நிரூபித்துக் காண்பித்தான்.

சூரசேனனின் திறமையைக் கண்டு மகிழ்ந்த தேவஸ்வாமி தனது தங்கை தேவப்பிரபாவை சூரசேனனுக்கே மணம் முடித்து வைப்பதாக அவனுக்கு வாக்குறுதி தந்தான். அதற்காக அவன் குறித்த மணநாளும், முகூர்த்தமும், அவனது தந்தை ஹரிதாஸர் சூத்திரவானுக்கு நிச்சயித்திருந்த அதே முகூர்த்த நாளிலேயே அமைந்தது.

இவர்கள் மட்டுமா, தேவப்பிரபாவின் தாய் பத்மாவதியும்கூட ஞானதேசிகன் என்கிற இளைஞனிடம் அதைத்தான் கூறியிருந்தாள்.

ஆம்! தேவப்பிரபாவின் அழகில் மனம் பறிகொடுத்த ஞானதேசிகன் என்கிற இளைஞன் அவளது தாயான பத்மாவதியை அணுகி நமஸ்கரித்தான். பின் மிகுந்த பணிவுடன், தேவப்பிரபாவை தனக்கு மணம் செய்து தருமாறு அவளிடம் கேட்டான்.

அதற்கு பத்மாவதி அவனிடம், ‘தம்பி! எனது மகள் தேவப்பிரபா தனக்கு வரப்போகிற கணவன் வீரம், ஞானம், விஞ்ஞான சாத்திரம் இம்மூன்றில் ஏதோ ஒன்றிலாவது வல்லவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டிருக்கிறாள். அதன்படி உன்னிடம் ஏதாவது திறமை உள்ளதா?’ என்று கேட்க,

‘அம்மா! நான் ஒரு ஞானி! முக்காலமும் உணர்ந்தவன். சந்தேகமிருந்தால் தாங்கள் என்னை பரீட்சை செய்து பார்க்கலாம்!’ என்று கூறினான்.
அதன்படியே பத்மாவதி அவனை பலவிதத்தில் சோதித்துப் பார்க்க, ஞானதேசிகன் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தையும் சொல்லி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.

அந்த ஆச்சரியத்துடனே பத்மாவதி ஞானதேசிகனுக்கு தனது மகள் தேவப்பிரபாவை மணம் முடித்துத் தருவதாக வாக்களித்து முடித்தாள். அவள் ஜோசியரிடம் சென்று கேட்டு நிச்சயித்த முகூர்த்தம், அவளது கணவரும், மகனும் நிச்சயித்திருந்த அதே தினம்தான்!

தட்சிண மன்னனின் பாசறையில் இருந்து விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பிய ஹரிதாஸர், தனது மனைவியிடமும், மகனிடமும் மகள் தேவப்பிரபாவுக்கு தான் மாப்பிள்ளை நிச்சயம் செய்து விட்ட தகவலைக் கூறினார்.

இதைக் கேட்டுத் திடுக்கிட்ட பத்மாவதியும், தேவஸ்வாமியும் தாங்களும் தேவப்பிரபாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வாக்களித்து விட்ட தகவலைத் தெரிவித்தனர்.

இப்போது வீட்டில் அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டது. இப்படி ஆளுக்கு ஆள் வாக்களித்து விட்டோமே! யாருக்குத்தான் தேவப்பிரபாவை மணம் முடித்துக் கொடுப்பது என்று சஞ்சலத்தில் ஆழ்ந்தார்கள்.

நாட்கள் விரைந்தோடி திருமண நாள் வந்தது. வீரத்தில் வல்லவனான சூரசேனனும், விஞ்ஞான சாஸ்திரத்தில் விற்பன்னனான சூத்திரவானும், ஞானத்தில் வல்லமை மிக்க ஞானதேசிகனும் என மூன்று மாப்பிள்ளைகளும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

மூன்று மாப்பிள்ளைகளுக்கும் இடையில் பெரும் மோதல் நிகழப் போகிறது என்று ஹரிதாஸரின் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருக்க, அப்போதுதான் பெரும் திருப்பம் நேர்ந்தது.

‘கல்யாணப் பெண்ணைக் காணோம்!’ என்று கூக்குரல் எழுந்தது.

‘என்னது தேவப்பிரபாவைக் காணோமா?’ அவளது பெற்றோரும், தமையனும் அதிர்ந்துபோய் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் தேடினார்கள்.

ஊஹூம்! எங்குமே காணோம்! அவள் வெளியில் செல்லவில்லை. வீட்டினுள்ளும் இல்லை. காற்றில் கரைந்தது போல் மறைந்து விட்டாள்!
பதைபதைத்துப் போன தேவப்பிரபாவின் தாய் பத்மாவதி, ஞானதேசிகனிடம், ‘தம்பி! உங்களது ஞானத்தால் இப்போது எனது மகள் எங்கிருக்கிறாள் என்று அறிந்து சொல்ல முடியுமா?’ என்று வேண்டினாள்.

‘அம்மா! பதறாதீர்கள். இதோ இப்போதே அறிந்து சொல்கிறேன்!’ என்ற ஞானதேசிகன் கண் மூடி அமர்ந்து தனது ஞானத்தால் தேடிப் பார்த்து உணர்ந்து, ‘விந்திய மலைக் காட்டின் குகையில் வசிக்கும் அரக்கன் ஒருவன்தான் தேவப்பிரபாவை தூக்கிச் சென்று வைத்துள்ளான்.’ என்று கூறினான்.

தேவப்பிரபாவின் பெற்றோர், திடுக்கிட்டுப் போனார்கள். ‘ஐயோ! எங்கள் செல்ல மகளை அரக்கன் கொண்டு போனானா? அவள் எப்படி தவிக்கிறாளோ தெரியவில்லையே. அரக்கனிடமிருந்து எங்கள் மகளை எப்படி மீட்பது? வழி ஒன்றும் தெரியவில்லையே!’ என்று கலங்கினார்கள்.

அப்போது சூத்திரவான் அவர்களிடம், ‘கவலைப்படாதீர்கள். இப்போதே நான் வானில் செல்லும் விமானம் மூலம் நொடிப் பொழுதில் அரக்கன் தேவப்பிரபாவை வைத்திருக்கும் இடத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்!’ என்று ஆறுதல் கூறினான்.

அதன்படியே விமானத்தை அவன் துரிதமாகத் தயார்படுத்த, சூரசேனன் அரக்கனை எதிர்ப்பதற்குத் தேவையான பலவிதமான ஆயுதங்களை, விமானத்தில் எடுத்து வைத்தான். பின் சூத்திரவானும் ஞானதேசிகனும்,சூரசேனனும், தங்களுடன் தேவப்பிரபாவின் தந்தை ஹரிதாஸரையும், அண்ணன் தேவஸ்வாமியையும் கூட்டிக்கொண்டு கிளம்பினார்கள். விந்திய மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.

சூத்திரவான் விமானத்தைக் காட்டில் இறக்கியதுமே இவர்களைப் பார்த்துவிட்ட அரக்கன் மிகுந்த கோபத்துடன் பெரும் பாறைகளை வீசியெறிந்து தாக்கத் தொடங்கினான். வீரனான சூரசேனன் மற்ற அனைவரையும் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்திருக்கச் செய்து தான் ஒருவனாகவே அரக்கனுடன் நேருக்கு நேர் சண்டையிட்டான். மிகுந்த ஆக்ரோஷத்துடன் நீண்ட நேரம் நடந்த போரின் முடிவில் சூரசேனன் தனது முழுத் திறமையையும் காட்டி, இறுதியாக பிரம்ம பாணத்தின் மூலமாக அரக்கனின் தலையை வெட்டி வீழ்த்தினான். தலையும் உடலும் இரண்டு துண்டுகளாக்கப்பட்டு அரக்கன் மாண்டு போனான். தேவப்பிரபாவை மீட்டுக்கொண்டு அதிசய விமானத்தில் ஏறி அனைவரும் உஜ்ஜயினி வந்து சேர்ந்தார்கள்.

இதற்குப் பிறகுதான் தொல்லை தொடங்கியது.

அன்னை, தந்தை, அண்ணன் மூவரும் ஆளுக்கு ஆள் வாக்குறுதி தந்தபடி தங்களுக்குத்தான் தேவப்பிரபாவை மணம் செய்து தரவேண்டும் என்று மூவரும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள். அவர்களுக்குள் பெரும் விவாதம் நடந்தது.

‘தேவப்பிரபாவை தூக்கிக்கொண்டு போன அரக்கன் எங்கிருக்கிறான் என்று நான் கண்டு பிடித்துச் சொல்லாவிட்டால் நீங்கள் எப்படி தேவப்பிரபாவை மீட்டிருக்க முடியும்? எனவே எனக்குத்தான் தேவப்பிரபா சொந்தமாக வேண்டும்!’ என்றான் ஞான தேசிகன்.

‘இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி விட்டால் போதுமா? யாரும் எளிதில் போக முடியாத அந்தக் கானகப் பகுதிக்கு நான் எனது அதிசய விமானத்தில் அழைத்துச் சென்றிருக்காமல் போனால் எப்படி தேவப்பிரபாவை மீட்டிருக்க முடியும்? என்னால்தான் அது சாத்தியமானது! எனவே தேவப்பிரபா எனக்கே சொந்தம்!’ என்றான் சூத்திரவான்.

‘நீங்கள் இருவரும் என்ன செய்திருந்தாலும், அரக்கனுடன் சண்டையிட்டு நான் அவனைக் கொன்றிருக்கா விட்டால் மீண்டும் தேவப்பிரபா எப்படி கிடைத்திருப்பாள்? எனவே அவள் எனக்கே மனைவியாக வேண்டும்.’ என்றான் சூரசேனன்.

இப்படி மூன்று மாப்பிள்ளைகளும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்த ஹரிதாஸர் குடும்பத்தார் செய்வதறியாமல் தவித்து நின்றார்கள்.’

என்று கதையை முடித்த வேதாளம், ‘ஐயா விக்கிரமாதித்தரே! நீங்கள் சொல்லுங்கள்! ஹரிதாஸரின் மகள் தேவப்பிரபா யாருக்குச் சொந்தமாவாள்? மூன்று மாப்பிள்ளைகளில் யாரை அவள் மணந்துகொள்ள வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்தும் நீர் சொல்லாவிட்டால் உமது தலை சுக்குநூறாக சிதறிவிடும்’ என்றது.

விக்கிரமாதித்தன் வேறு வழியில்லாமல் தனது மௌனம் கலைத்து பதில் கூறினான்:

‘காதல் என்றாலே வீரம்தான் முன்னணி வகிக்கும். எனவே தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அரக்கனுடன் சண்டையிட்டுக் கொன்ற வீரனுக்கே அந்தப் பெண் உரிமையாவாள். மற்றபடி விஞ்ஞான சாஸ்திரம் அறிந்தவனும், ஞானம் கொண்டவனும் வீரனுக்கு உதவி செய்ய கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். பெண்ணை அடையும் முதல் உரிமை அவர்களுக்கில்லை!’

விக்கிரமாதித்தனின் இந்தச் சரியான பதிலால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்துக்கே சென்றது.

0