தமிழ் பேப்பரில் இருந்து புத்தகங்கள்

தமிழ்பேப்பரில் தொடராக வெளிவந்து பரவலான கவனிப்பைப் பெற்ற இரு தொடர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களாக வெளிவருகின்றன.

Pandaya Nagarigangal_9789384149055_KZK - W1) பண்டைய நாகரிகங்கள் – எஸ்.எல்.வி. மூர்த்தி

உலகின் முக்கியமான நாகரிகங்கள் பற்றிய ஒரு சுவாரஸ்யமான அறிமுகம் இது.

• சிந்து சமவெளி நாகரிகம்

• சீன நாகரிகம்

• மெசபடோமிய நாகரிகம்

• மாயன் நாகரிகம்

• ரோம நாகரிகம்

• எகிப்து நாகரிகம்

பண்டைய உலகுக்குள் கைப்பிடித்து நம்மை அழைத்துச்சென்று காட்டும் ஒரு எளிமையான நூல் இது. கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம், இதிகாசம், அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, சமயம் என்று விரிவாகப் பல அம்சங்களை இந்தப் புத்தகம் அலசுகிறது.

2) சங்ககாலம் – முனைவர் ப. சரவணன்

Sanga Kaalamதமிழர்களுக்கு வளமான வரலாறு இருந்தபோதிலும் அது முழுமையாகவும் செம்மையாகவும் பதிவு செய்யப்படவில்லை என்பது பெருங்குறை. இருக்கும் சில புத்தகங்களும்கூட அதீத பெருமை பேசுவதாகவும் கற்பனையை வரலாறு என்று சொல்வதாகவும் இருக்கின்றன. அந்த முறையை மாற்றி சங்ககாலம் பற்றிய ஒரு நல்ல, விரிவான அறிமுகத்தை வழங்குகிறார் ப. சரவணன்.  மிழ்பேப்பரில் வெளிவந்த இந்தத் தொடர் இங்கே முற்றுபெறவில்லை. அதன் முழு வடிவம் புத்தகத்தில் உள்ளது. ஏற்கெனவே இங்கே வெளியான பகுதிகளும்கூட செழுமையாக்கப்பட்டுள்ளன.

 

0

ஃபோன் மூலம் புத்தகங்கள் வாங்க :

டயல் ஃபார் புக்ஸ் : 94459 01234 / 94459 79797

மேலதிக விவரங்களுக்கும் இணையத்தில் வாங்குவதற்கும் : https://www.nhm.in/