கடவுள் ஜெயித்த கதை

Quetzalcoatl_magliabechianoபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 33

மாயன் நாகரிகம் உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்று. கி. மு. 2600 ல் தொடங்கி கி. பி. 900 வரை நீடித்த நாகரிகம். இது.

மாயன் நாகரிகம் அமெரிக்க இந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப் பகுதிகள், காலத்தின் போக்கால், அரசியல் மாற்றங்களால், இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை: மெக்ஸிகோ, கவுதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார்.

மாயன் நாகரிகம் எந்தெந்த துறைகளில் எல்லாம் முத்திரை பதித்திருக்கிறது? உலக வரலாற்றுக்கு, மனித முன்னேற்றத்துக்கு, மாயன் நாகரிகத்தின் பங்களிப்பு என்ன?

சாக்லெட், கணிதம், வானியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மாயர்கள் தொட்ட சிகரங்கள், இன்றும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.

மாயன் நாகரிகம் கி. மு. 2600ல் தொடங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு முன்னால், மாயர்கள் எங்கே இருந்தார்கள்? மாயமாக, கி. மு. 2600- இல் ஒரு நல்ல நாளில் வானத்தில் இருந்து குதித்தார்களா?

கடவுள் படைத்த பூமி

மாய நாகரிகத்தின் இதிகாசங்கள்பற்றி மட்டும் அல்லாமல், அவர்களுடைய மத நம்பிக்கைகள், வாழ்க்கை முறை போன்ற பல அம்சங்களை அறிய போப்பல் வூ (Popol Vuh) என்னும் புத்தகம் உதவுகிறது. இதன் பொருள் சமுதாயத்தின் புத்தகம்.உலகம் எப்படித் தோன்றியது, மக்கள் எப்படி வந்தார்கள் என்பதையெல்லாம் விளக்கும் பல கதைகள் ஆராய்ச்சியாளர்களுக்கு இதிலிருந்து கிடைத்திருக்கின்றன.

பல ஆயிரம், லட்சம், கோடி ஆண்டுகளுக்கு முன்னால், உலகில் மலைகள், நதிகள், செடி கொடிகள், பறவைகள், மீன்கள், மிருகங்கள், மனிதர்கள் என எந்த ஜீவராசிகளும் இல்லாத  காலம்.

என்ன இருந்தது? வானமும், கடலும் மட்டுமே. உலகைப் படைத்தவர் கேட்ஸால்கோயோட்டெல் (Quetzalcoatl) . இறக்கைகள் கொண்ட பாம்பு உருவம் இவருடையது.

தன்னை வணங்க, தன் புகழ் பாட யாருமே இல்லையே என்று இவர் நினைத்தார். தன் பக்தகோடிகளைப் படைக்கத் தொடங்கினார்.

“பூமி” என்றார் கேட்கோ. கடலுக்குள்ளிருந்து பூமி எழுந்து வந்தது. மலைகளை அவர் மனதில் நினைத்தார். பூமிப் பரப்பில் மலைகள் உயர்ந்தன. பிறகு ஒவ்வொன்றாக செடிகள், மரங்கள் படைத்தார். தான் படைத்த பொருட்களில் சோளச் செடிகளை அவருக்கு மிகவும் பிடித்தது. இதற்கு என்ன காரணம் என்று அவருக்கே தெரியவில்லை. அப்படி ஒரு பிரியம்!

அடுத்ததாக, மான்கள், புலிகள், பாம்புகள், பறவைகள் என்ற பல ஜீவராசிகளை கேட்கோ படைத்தார். இவை தங்க இடம் வேண்டுமே?

“மான்களே, பிற மிருகங்களே, நதிக்கரைகள் உங்கள் வீடு. பறவைகளே, மரங்கள் உங்கள் உறைவிடம். உங்கள் இனத்தைப் பெருக்குங்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என்று எல்லா மிருகங்களையும், பறவைகளையும் ஆசீர்வதித்தார்.

கேட்கோவுக்குத் தன் படைப்புகள் பற்றி ஒரே பெருமை.  இனி இந்த மிருகங்களும், பறவைகளும் எப்போதும் தன் புகழ் பாடும் என்று நம்பினார்.

“மிருகங்களே, உங்களைப் படைத்த என் புகழ் பாடுங்கள்.”

விலங்குகளுக்குப் பேசத் தெரியாதே? அவை முனகின, கத்தின, ஊளையிட்டன.
பேசவில்லை.

“பறவைகளே, நீங்களாவது என் புகழ் சொல்லுங்கள்.”

பறவைகள் குரல் எழுப்பின. குரல் இனிமையான குரல்! ஆனால் வார்த்தைகள் இல்லை.

கேட்கோவுக்குத் திருப்தி வரவில்லை.

“என்ன செய்யலாம்?” என்று யோசித்தார். பேசும் சக்தி கொண்ட உயிர்வகையை உருவாக்க முடிவு செய்தார்.

பூமியிலிருந்து களிமண்ணையும் மணலையும் எடுத்தார். அவை இரண்டையும்  சேர்த்துக் குழைத்தார். தலை, முகம், கண்கள், காது, மூக்கு, கைகள், கால்கள் கொடுத்தார். முதல் மனித உருவம் பிறந்தது.

அந்த முதல் மனிதனைப் பார்த்தார்.

“ஐயோ, இவன் அழகாக இல்லையே?”

கடவுள் கையில் எடுத்தவுடன் அவன் உடைந்து போனான்.  அவர் யோசித்தார். களிமண்ணும் மணலும் சரியில்லை என்று முடிவு செய்தார். அவனை அழிக்கவேண்டும், இன்னொரு வகை உயிரைப் படைக்க வேண்டும் என்று  முடிவெடுத்தார்.

இயற்கை நியதிப்படி கடவுளுக்குப் படைப்பது எளிது, அழித்தல் மிகக் கடினம்.

உலகம் இருட்டியது. வெள்ளம், பெரு வெள்ளம் வந்தது. பூமியைச் சூழ்ந்தது. முதல் பிரளயம் வந்தது. மண் மனிதனும், எல்லா ஜீவராசிகளும் மறைந்தார்கள்.

இனி மண் வேண்டாம், மரங்களால் மனித உருவம் செய்யலாம் என்று நினைத்தார்.  அவர் படைத்த மர மனிதன் அழகாக இருந்தான்.

“மனிதா, நீ பேசு பார்க்கலாம்.”

மனிதன் பேசினான். பேச்சா அது? சுத்த உளறல். அவருக்கே புரியவில்லை.

மர மனிதனிடம் இன்னொரு முக்கிய குறை. அவன் வெறும் மரம்தான். அவனுக்கு உயிர் இல்லை. உயிர் இல்லாத இவன் தன்னைப்போல் மனிதர்களைப் படைக்க முடியாதே? உலகில் மனித இனம் பெருக முடியாதே?

கேட்கோ யோசித்தார். மறுபடி பிரளயம். மர மனிதன் மறைந்தான்.

“நான் படைக்கும் மனிதனுக்கு உயிர் இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் பேசுவான், தன் இனம் பெருக்க அவனால் முடியும். எதை வைத்து அவனைப் படைக்கலாம்?”

“நமக்குப் பிடித்த சோளத்தால் மனிதனைப் படைக்கலாமா?”

மனிதன் உருவானான். அவனைப் பார்த்த அவருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

“மனிதா பேசு.”

சோள மனிதன் பேசினான்.

“வானக் கடவுளே, உங்களுக்கு என் நன்றி.”

“மனிதா, என் புகழ் பாடு.”

பாடினான். தன் முயற்சியில் கடவுள் ஜெயித்து விட்டார். அவர் படைத்த இந்த மனிதனுக்கு உயிர் இருக்கிறது. தன் மனித இன எண்ணிக்கையை அவன் பெருக்குவான். அவனுக்குப் பேசத் தெரியும். அவன் கேட்கோவை நம்புவான், அவர் புகழ் பாடுவான். இதற்குத் தானே அவர் ஆசைப்பட்டார்?

கடவுளுக்கு மனம் நிறைந்த திருப்தி, மகிழ்ச்சி.

“மனிதா, உனக்கு என் மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள் என்னை எப்போதும் நம்பு. பூமியை வாழ வை. நீ  மிகச்  சிறப்பாக வாழ்வாய்.’

கேட்ஸால்கோயோட்டெல் உலகத்தைப் படைத்தது இப்படித்தான்,   மனித வாழ்வு தொடங்கியது இப்படித்தான், என்கிறது மாய இதிகாசம்.

0

Q. •. 2000 & Q. ¤. 900

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா..?

images (3)1987ம் ஆண்டு வீடற்றவர்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது. பாலு மகேந்திரா 1988-ல் வீடு படத்தை எடுத்து வெளியிட்டார். வீடற்றவர்கள் என்றால் நம் மனத்தில் நரிக்குறவர்கள் போன்ற நாடோடிகளும், பெரு நகரங்களில், சேரிகளில் வசிக்கும் நபர்களும், பிளாட்ஃபாரத்தில் வசிக்கும் நபர்களும், அகதிகளும்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், பாலு மகேந்திராவோ ஒரு மத்திய வர்க்கக் குடும்பத்தின் வேதனைகளை மையமாக வைத்து படமெடுத்திருக்கிறார். 

நிச்சயம் இந்த அனுபவமும் படமாக்கத் தகுந்ததுதான். எல்லா மத்திய தர குடும்பத்து நபர்களுக்கும் சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற கனவு இருக்கத்தான் செய்யும். ஆனால், கலை என்று வரும்போது வேறு சில அடிப்படைகள் தேவைப்படும். முதலில் சொந்த வீடு என்பது ஆடம்பரத் தேவையாக, ஒரு கனவாக மட்டுமே இருந்தால் போதாது. மிகவும் தேவையான ஒன்றாக கதைக்குள் நிலை நிறுத்தப்பட்டாக வேண்டும்.

எல்லாருக்குமே வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமென்ற கனவு இருக்கத்தான் செய்யும். ஆனால், மேல் சாதியினரால் எள்ளி நகையாடப்பட்ட ஒரு தலித்துக்கு அதே கிராமத்தில் அவர்கள் முன்னால் தலை நிமிர்ந்து நடந்தாக வேண்டும் என்ற லட்சியம் இருப்பதாகக் காட்டினால் அந்த இலக்குக்குக் கூடுதல் கனம் கிடைக்கும். யாருடைய சைக்கிள் காணாமல் போனாலும் வேதனைதான். ஆனாலும் சைக்கிள் இருந்தால்தான் ஒரு வேலை கிடைக்கும்; வேலை கிடைத்தால்தான் குடும்பம் அரைப்பட்டினியோடாவது வாழ்க்கையை ஓட்ட முடியும் என்று இருக்கும் ஒருவனுடைய சைக்கிள் காணாமல் போனால் அந்த வேதனை   பல மடங்கு அதிகரித்துவிடும். கலைஞன் என்பவன் தனது கதையின் தேவையை, கதாநாயகனின் இலக்கை அப்படி மிகவும் அவசியமானதாக கதைக்குள் நிலை நிறுத்த வேண்டும். பாலு மகேந்திராவோ அதை மிகவும் மேலோட்டமாகச் செய்திருக்கிறார்.

கதையின் படி அந்த மத்திய தரக்குடும்பம் நீண்ட நாள் வசித்து வந்த வாடகை வீட்டில் இருந்து வெளியேற நேருகிறது. வேறு வாடகை வீடு தேடி அலைகிறார்கள். கிடைக்காமல் போகவே சொந்த வீடு கட்டத் தீர்மானிக்கிறார்கள். அப்படியாக இந்தக் கதையில் சொந்த வீடு மிகவும் தேவை என்ற அழுத்தம் கதையில் தரப்படவில்லை. அதோடு வாடகை வீடு தேடும் காட்சிகளும் மிகவும் மேலோட்டமாக இருக்கின்றன. வீடு வீடாக ஏறி இறங்குகிறார்கள். அவ்வளவுதான். அதிலும் அவர்கள் பார்க்கும் ஒரே வீட்டின் உரிமையாளரான பிராமணர் நான் வெஜ் எல்லாம் சமைச்சுக்கலாம் என்று படு மாடர்னாக இருக்கிறார். இளையராஜா, நத்திங் பட் விண்ட் என்ற இசை ஆல்பத்துக்குப் போட்ட இசையைப் பின்னணியில் ஓட விடுவதன் மூலம் மட்டுமே வீடு தேடுவதில் இருக்கும் வேதனையை உணர்த்த பாலுவால் முடிகிறது.

உண்மையில் நாலைந்து வருடங்களில் ஐந்தாறு வீடுகள் மாற வேண்டிவந்துவிட்டது. வீட்டு உரிமையாளர்களுடன் ஏதாவது பிரச்னைகள் வந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் வீட்டை மாற்றிக் கொண்டு செல்ல நிறைய செலவாகிறது. வீடு தேடி அலைவதிலும் பெரும் சிக்கல் இருக்கிறது. இவையெல்லாவற்றுக்கும் மேலாக குழந்தையை ஒவ்வொரு பள்ளியாக மாற்ற வேண்டி வருகிறது. அது குழந்தையின் படிப்புக்கும் மனதுக்கும் பெரும் கெடுதலை உருவாக்குகிறது. சொந்த வீடு இருந்தால் இந்தத் தொந்தரவே இருக்காது என்று சொந்த வீட்டின் தேவையானது கதைக்குள் நிலைநிறுத்தப்பட்டிருக்கவேண்டும்.

அடுத்ததாக அந்த மத்திய தர குடும்பமோ இரண்டு கிரவுண்ட் நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறது. அதில் ஒரு கிரவுண்டை விற்றால் 30 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கிறது. வீடு கட்டவோ 1.5 லட்சம் தேவைப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வருகிறது. 25 வருடத்துக்கு முன்னால் கிரவுண்டின் விலை 30 ஆயிரமாக இருந்தபோது வீடு கட்ட மட்டும் 1.5 லட்சம் தேவைப்படுமா? சிட்டி லிமிட்டுக்குள் இருக்கும் நிலத்தின் விலை என்னவோ வீடு கட்ட அதைவிடக் குறைவாக ஆகும் என்பதுதானே உண்மை.

அதோடு, உண்மையில் காருக்கு பெட்ரோல் போட முடியாமல் தவிக்கும் ஒருவரின் வேதனையும் நிஜமானதுதான். ஆனால், அலுவலகத்துக்குப் போக ஒரு சைக்கிள் கூட இல்லாதவரின் வேதனையானது அதைவிட வலுவானது. அதிலும் தொலை தூரப் பள்ளிக்கூடத்துக்குப் போக சைக்கிள் தேவைப்படும் குழந்தையின் வேதனை என்பது வாகனம் சார்ந்த கதையின் அழுத்தமான கருவாக இருக்கும். பாலு மகேந்திராவோ மேலோட்டமான நபர்களுக்கான  மேலோட்டமான தேவை என்ற அடிப்படையில் கதையைக் கொண்டு செல்கிறார். சொந்த வீடு தேவை என்ற கனவுடன் இருக்கும் மத்தியதரகுடும்பங்கள் வலிந்து தமது அனுபவங்களை இந்தப் படத்துடன் பொருத்திக்கொண்டு ரசித்தாக வேண்டியிருக்கிறது. தமிழர்கள் அதில் கில்லாடிகள். ஒரு கதாபாத்திரம் நகைச்சுவையாக எதையாவது செய்து இவர்களைச் சிரிக்க வைக்க வேண்டிய அவசியமே இல்லை. காமெடியர்கள் திரையில் வந்தாலே போதும், இவர்கள் சிரித்துவிடுவார்கள்.

மத்திய வர்க்கக் குடும்பம் ஒரு கிரவுண்டை விற்று இன்னொரு கிரவுண்டில் வீடு கட்டத் தீர்மானிக்கிறார்கள். அலுவலகத்தில் இருந்து கடன் வேறு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், படத்தின் கடைசியில் வீடு கட்டிய இடம் மெட்ரோ வாட்டர் நிறுவனத்தால் ஒருவருடத்துக்கு முன்பே ஏடுத்துக்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்கும்போது அது தெரிய வந்திருக்குமே… மெட்ரோ வாட்டர் எடுத்துக்கொண்ட நிலத்துக்கு கம்பெனி எப்படிக் கடன் கொடுத்தது? அரசாங்கம் திடீரென்று ஒரு இடத்தை எடுத்துக்கொண்டால் வங்கியால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், ஏற்கெனவே அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு எந்த நிறுவனமும் கடன் தராது.

அதுபோல் படத்தில் வரும் வயதான கதாபாத்திரத்தைச் சாகடிப்பதன் மூலம் படத்துக்கு கனத்தைச் செயற்கையாகக் கூட்டுகிறார் (அழியாத கோலங்கள் என்ற இளம் பருவ விடலைத்தனங்களைப் பற்றிய படத்தில்கூட ஒரு கதாபாத்திரத்தைச் சாகடித்துத்தான் கனம் கூட்ட இவரால் முடிந்திருந்தது).

இது இப்படியென்றால், கதாநாயகியின் காதலராக ஒருவர் இந்தப் படத்திலும் வருகிறார். திருமணம் செய்துகொள்ளாமலேயே அவர்கள் வெகு சகஜமாக எல்லா இடங்களுக்கும் போய்வருகிறார்கள். 1980களில் என்ன… இன்றைய 2014களில் கூட மத்திய வர்க்க குடும்பத்தில் இப்படியான ஒரு சுதந்தரத்தைப் பார்க்க முடியாது. அப்படியே இருவருக்கும் பிடித்திருந்தால் உடனே திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். பாலு மகேந்திரா தனது கதை மாந்தர்களை மிகவும் நல்லவர்களாகச் சித்திரிக்க விரும்பியதில் தவறில்லை. அவர்கள் தமிழ்ச் சூழலில் காலூன்றியவர்களாகவும் இருக்கவேண்டுமே (சந்தியா ராகம் படத்திலும் அப்படித்தான். அந்த முதியவர் கிராமத்தில் குழந்தை போல் விளையாடி மகிழ்பவராக இருக்கிறார். மனைவி இறந்ததும் நகருக்கு வருபவர் மருமகளின் வீட்டில் சிறிய மஸ்தாபம் ஏற்பட்டதும் நேராக முதியோ ர் இல்லத்துக்குப் போய்விடுகிறார்.  இளைய தலைமுறை தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை புறக்கணித்துவிட்டு, சுய நலத்துடன் காசு, பணம் என்று அலைவதையும், முதியவர்கள் அதனால் அனுபவிக்க நேரும் துயரத்தையும் சித்திரிக்காமல், அரிதிலும் அரிதாக இருக்கும் முதியவர் ஒருவரை வைத்து ஒரு படத்தையே எடுத்துமுடித்துவிடுகிறார். இலங்கைப் பிரச்னையைப் பற்றி இவர் படமெடுத்திருந்தால், ஒற்றைத்தலைவலியால் எப்போதாவது கஷ்டப்படும் ஒருவரின் வாழ்க்கை அனுபவங்களையும் ஊரடங்கு உத்தரவால் மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்க அவராகவே வீட்டில் சுக்குக் கஷாயம் வைத்துக் குடித்ததும் நோய் நீங்கிக் குணமடைவதுபற்றியும் எடுத்து முடித்திருப்பார் போலிருக்கிறது!)

இவையெல்லாம் படத்தின் அடிப்படையான குழறுபடிகள். இதை அவரால் தவிர்க்க முடியவில்லை. இதற்கான காரணம் என்னவென்றால், பாலுவின் ‘கலை’ மனமானது வணிக சினிமாக்களின் எதிர் பிம்பம் மட்டுமே. வணிக சினிமாக்களில் இருக்கும் குறைகள் எதுவும் அவர் படத்தில் இருக்காது. ஆனால், அது கலை அம்சம் கொண்டதாகவும் இருக்காது. கலை என்பது வேறு வகை உலகம். அது பாலுவால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடிந்திராதது. ஆனால், ஒரே பாடலில் கோடீஸ்வரராவதை வாய் பிளந்தபடியே பார்த்துப் பழகிய தமிழ் மகா ஜனங்கள், படம் முழுக்கப் பாடுபட்டு ஒரு வீட்டைக் கட்டுகிறார்கள் என்று நிறுத்தி நிதானமாகக் காட்டியதும் இதுதான் கலை போலிருக்கிறது என்று அதே வாயை மூடாமலேயே மீண்டும் மெய் மறந்து நிற்கிறார்கள். விமர்சனத் திலகங்களோ தங்களுடைய தமிழகக் கனவுத் தொழிற்சாலை நோக்கிய பயணத்துக்கான  தக்கைப் பாலம் ஒன்றை இதன் மூலம் பாடுபட்டு உருவாக்கி மகிழ்ந்துகொள்கிறார்கள்.

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படம் பார்த்திருப்பீர்கள். ஷூ வாங்க கஷ்டப்படும் ஏழைக் குடும்பத்துச் சிறுவனின் கதை. பள்ளியில் படிக்கும் அண்ணனும் தங்கையும் ஒரே ஷூவை வைத்துக்கொண்டு படும் சிரமங்கள் எளிமையாக அதே சமயம் மனதை உருக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கும். அந்த ஊரில் ஒரு ஓட்டப் பந்தயம் நடக்கப் போவதாக அறிவிப்பு வரும்.  பந்தயத்தில் மூன்றாவதாக வருபவருக்கு ஷூக்கள் பரிசு. அந்தச் சிறுவன் முதலிடம் வெல்லும் வாய்ப்பு இருந்தும் மெதுவாக ஓடி மூன்றாமிடத்துக்கு வர முயற்சி செய்வான். ஆனால், கடைசி கட்டத்தில் எப்படியோ அவனே முதலிடத்தை வென்றுவிட அதற்கான பரிசு கிடைக்கும். அவனோ ஷூ கிடைக்காத சோகத்தில் புண்ணாகிப் போன தன் கால்களை வீட்டு முற்றத்தில் அமர்ந்து நீரில் நனைத்தபடியே சோகமாகப் பார்த்துக்கொண்டிருப்பான்.  அந்தச் சிறுவனின் அப்பா கடைத்தெருவில் பொருட்கள் வாங்கிக்கொண்டு சைக்கிளில் வீடு திரும்புவார். அவருடைய சைக்கிள் கேரியரில் பல பொருட்களுக்கு நடுவில் சிறியதாக ஒரு ஜோடி ஷூக்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். படம் அதோடு முடிவடையும்.

ஒரு கலைப்படத்துக்கான க்ளைமாக்ஸ் இதுவாகத்தான் இருக்க முடியும். பாலு மகேந்திரா இதே படத்தை எடுத்திருந்தால், அப்பா ஷூ வாங்கிக் கொண்டுவருவார்; அந்தச் சிறுவனோ விபத்தில் சிக்கி நொண்டியாகிவிட்டிருப்பான். இதுவும் சோகமான முடிவுதான். ஆனால், இப்படியான செயற்கையான அதிரடி  நிகழ்வுகள் கலைக்கு எதிரானவை.

உண்மையில் இரானிய இயக்குநர் வீடு படத்தை எடுத்திருந்தால் எப்படி எடுத்திருப்பார் என்று பார்ப்போம். அன்பானவராக இருந்த தனது தாய் வீடு கட்ட ஆரம்பித்த பிறகு அதன் நெருக்கடிகளால் வேறு நபராக ஆகிவிட்டார் என்று ஒரு பேட்டியில் பாலு மகேந்திரா தெரிவித்திருந்தார். உண்மையில் இதைத்தான் இரானிய இயக்குநர் கதையின் மையமாகக் கொண்டுவந்திருப்பார்.

வாடகை வீட்டில் இருந்தபோது நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் அன்பாக அன்னியோன்னியமாக இருந்த ஒருவர் சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்ததும் மெள்ள மெள்ள மாறிப் போயிடுகிறார். சொந்தக்காரர்களின் வீட்டு விழாக்களுக்குப் போகாமல் இருக்கிறார். வீட்டுக்கு வரும் நண்பர்களைச் சரியாகக் கவனிக்காமல் வீட்டு வேலைகளைப் பார்க்கப் போய்விடுகிறார். உறவினர் ஒருவருக்கு உடல் நிலை மோசமாகிறது. கையில் பணம் இருக்கும் நிலையிலும் வீடு கட்டத் தேவை என்று சொல்லி தரமறுத்துவிடுகிறார். வாடகை வீட்டில் இருந்த காலத்தில் யார் கடன் கேட்டாலும் வேறு இடத்தில் வாங்கியாவது உதவி செய்திருந்தவர் இப்போது இப்படி மாறிவிட்டார். குழந்தைகளோடு சிரித்துப் பேசுவது அறவே நின்றுவிடுகிறது.

அவருடைய வாடகை வீட்டில் குருவிகளும் காகங்களும் நீர் அருந்த சிறிய பாத்திரத்தில் நீர் வைத்திருப்பார். பசு மாட்டுக்கு வீட்டு வாசலில் ஒரு பெரிய தொட்டி கட்டி கழணித் தண்ணியை தினமும் ஊற்றி வந்திருப்பார். ஆனால் அவரே, தனது நிலத்தில் அது நாள் வரை மேய்ந்து வந்த பசு மாடு வீடு கட்ட ஆரம்பித்த பிறகும் ஏக்கத்துடன் வந்து நிற்பதைப் பார்த்து அடித்து விரட்டுவார். அவருடைய நிலத்தில் பலருக்கும் நிழல் தரும்படி இருந்த மரம் ஒன்றை சிறிதும் தயக்கமில்லாமல் வெட்டி எறிவார்.

இப்படியாக சொந்த வீடு என்ற ஒன்று ஒருவருடைய மனத்தில் இருக்கும் ஈரத்தை படிப்படியாக உறிஞ்சிவிடுகிறது. எல்லா கஷ்டங்களும் பட்டு வீட்டைக் கட்டி முடிக்கிறார். சொந்த வீட்டின் ஒவ்வொரு அறையாக நடந்துசென்று பார்க்கிறார். வாடகை வீட்டில் இருந்தபோது இருந்த  குதூகலங்கள் எதுவுமில்லாமல் வீடு இருளடைந்து காணப்படுகிறது.

வீடுங்கறது வெறும் செங்கல்லும் சிமெண்டும் இல்லை. சொந்த பந்தங்கள் வந்துபோனால்தானே அது வீடு என்ற உண்மை அவருக்கு உறைக்கிறது. கண்களில் நீர் கசிய ஜன்னல் வழியாக தெருவைப் பார்க்கிறார். ஒரு பசு மாடு கன்றுடன் உணவு தேடி அலைந்து கொண்டிருக்கிறது. மளமளவென கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, வீட்டில் இருக்கும் இரண்டு பெரிய வாளிகளைத் தூக்கிக் கொண்டு வாசலில் வைத்து ஒன்றில் தண்ணீரும் இன்னொன்றில் வீட்டில் இருக்கும் சாப்பாடும் போட்டு வைக்கிறார். சிறிது நேரத்தில் வீட்டைக் கடந்து சென்ற பசு மாடு கன்றுடன் திரும்பி வருகிறது. ஆசை ஆசையாக உணவைச் சாப்பிட்டுவிட்டு தண்ணீரைக் குடித்துவிட்டுச் செல்கிறது. இப்போதும் அந்தப் பெண்ணின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிகிறது. ஆனால், இது வேறு கண்ணீர்.

இடையிடையே ஊர் முழுவதும் வீடுகட்டித்தரும் கூலித் தொழிலாளர்கள் தமக்கென ஒரு குடிசைகூட இல்லாமல் படும் துயரம் (விவசாயம் பொய்த்ததால் கட்டட வேலைக்கு  வந்த தலைமுறையின் பிரதிநிதிகள்), பக்கத்திலேயே கோடீஸ்வரன் ஒருவன் தன் வீட்டில் நீச்சல் குளம் கட்டிக்கொள்ளும் ஆடம்பரம், அல்லது ஊட்டியில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை தங்கிக் கொள்ள ஒரு பங்களா கட்டும் ஆடம்பரம், நாடோடிகளின் திறந்தவெளி வாழ்க்கை என அனைத்தும் போகிற போக்கில் தொட்டுக் காட்டப்படும்.

ஒரு கலைப் படைப்பென்றால் இப்படியான தரிசனத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும். மெட்ரோ வாட்டர் நிறுவனம் வீட்டை ஆக்கிரமிப்பதென்பது மிகையான வணிக சினிமா க்ளைமாக்ஸ். உண்மையில் அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு என்பது பல குடும்பங்களை ஒரே நேரத்தில் நடுத்தெருவில் கொண்டு வருவதாகத்தான் இருக்கும். ஒரு குடும்பத்தின் ஒரு கிரவுண்ட் நிலத்தையெல்லாம் குறிவைப்பது அரசாங்க ராட்சஸனின் பிரமாண்டத்தைப் புரிந்து கொள்ளாததால் வந்த விளைவு.

இத்தகைய அடிப்படைக் குழறுபடிகள் இருந்த பிறகும் வீடு பொருட்படுத்தத்தகுந்த படமே. பாலு மகேந்திரா கவனத்தில் கொள்ளவேண்டிய இயக்குநரே. கதாநாயகியை திரையில் கவுரவமாக நடத்தியது, அசட்டு நகைச்சுவையைத் திணிக்காதது, அபத்த ஆட்டம் பாட்டங்கள் இல்லாதது, க்ளைமாக்ஸ் நீங்கலாக படம் முழுவதும் இயல்பான சம்பவங்களைக் காட்சிப்படுத்தியது என பல நல்ல அம்சங்கள் அவரிடமும் அவருடைய ஒருசில படங்களிலும் உண்டு. அவருடைய சிஷ்ய கோடிகளைப் போன்று மனபிறழ்வுகள் திரையிலும் வெளிப்படும் அளவுக்கு அவர் ஒருபோதும் மாறிவிடவில்லை.

அதோடு, ஈழப் போரின் முதல் வெடிகுண்டை வீசியதே பாலுமகேந்திராதான் என்று தமிழ் தேசியக் கண்மணிகள் புதூசாகக் கண்டுபிடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கும் நிலையில், பாலுமகேந்திராவின் தலையில் இருந்து உதிர்ந்த ஒற்றை ரோமத்தைக்கூட தங்களுடைய வெறுப்பு அரசியலுக்கு அவர்களால் ஆதரவாகக் காட்டிவிடமுடியாது. தமிழர்கள் இந்துக்களே அல்ல என்று சொல்லிக்கொண்டு புதிய சித்தாந்தங்களை உருவாக்க முனையும் அந்தக் கூட்டத்தைவிட, அரசியல் நிதானமும் மனிதாபிமான அணுகுமுறையும் கொண்டவர்தான் பாலுமகேந்திரா. இலங்கை வேர்கள் கொண்டிருந்த நிலையிலும் ஈழப் பிரச்னை பற்றி ஏன் படமெடுக்கவில்லை என்று யாரோ கேட்டபோது, புலிகளின் தவறுகளையும் சொல்லாமல் என்னால் படமெடுக்கமுடியாதே என்று சொன்னவர் அவர். பெஞ்சமின் பாலுவாக இருந்த நிலையிலும் இந்த அரசியல் தெளிவு அவருக்கு இருந்தது மிகவும் ஆச்சரியமே. இந்த அரசியல் நிதானம் அவருடைய கலை ஊற்றை இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்தியிருக்கலாம்.

விண் வரையும் தூரிகைகள்

காதல் அணுக்கள் / 7

அதிகாரம் – அலரறிவுறுத்தல்

love-is-you-love-30949107-960-854குறள் 1141:

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

 

கிசுகிசுத்துத் திரிகின்றனர்

ஆதுரத்துடன் கேட்டபடி

உயிர் தரித்திருக்கிறது

உடலும் உடன் காதலும்.

 

*

 

குறள் 1142:

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

 

ஒரு நல்ல பெண்ணைப்

பற்றிய பொய்புரட்டுகள்

ஓர் அழகிய காதலைத்

தொடக்கி வைக்கிறது.

 

*

 

குறள் 1143:

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

 

நடக்காததை நடந்ததென

நயவுரைகள் கேட்கையில்

நுழைந்து மனம் நிறையும்

நடந்து விட்டதான திருப்தி.

 

*

 

குறள் 1144:

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

 

பாராட்டிச் சீராட்டி

பசிக்குப் பாலூட்டி

ப்ரியம் வளர்த்தன

பரவிய வதந்திகள்.

 

*

 

குறள் 1145:

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

 

“இன்னும் ஒரு ரவுண்ட்”

கேட்டு அடிக்க வைக்கும்

சீமைச்சரக்காய் ஈர்க்கும்

இந்த காதல் கிசுகிசுக்கள்.

 

*

 

குறள் 1146:

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

 

ஒருமுறைதான் கண்மாயில்

MH370 விமானத் தேடலாய்

சிலபல ஆயிரம் முறைகள்

சந்திக்கிறோம் ஊர்வாயில்.

 

*

 

குறள் 1147:

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

 

அவதூறு பேசும் வரை

அம்மா திட்டும் வரை

அவனைக் காதலிக்கும்

ஆசை வந்ததில்லை.

 

*

 

குறள் 1148:

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

 

காதல் ஒரு பெருநெருப்பு

அணைக்கும் பொருட்டு

நீங்கள் ஊற்றுவதெல்லாம்

புரணி எனும் பெட்ரோல்.

 

*

 

குறள் 1149:

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

 

ஊர்வம்புகள் உண்டு பல

மீண்டும் வருவேன் என

சொல்லிப் போயுள்ளான்

அதுவே போதும் எனக்கு.

 

*

 

குறள் 1150:

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

 

மனசு பிடித்தவனோடு தான்

இணைத்துப் பேசுகிறார்கள்

உறைக்கட்டும் அவனுக்கும்

உதிரங்கலந்த என் பேரன்பு.

ஆம் ஆத்மி : அரசியலும் மதமும்

6c15ef36-bbb1-4532-83f8-f658ef48f94acinemaphotourlஅரவிந்த் கெஜ்ரிவால் புனித கங்கையில் நீராடிய காட்சிகள் இன்றைய செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன. சந்தனப் பட்டை, குங்குமத்துடன் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார். தரிசனத்துடன் சேர்த்து இங்க் அபிஷேகமும் கிடைத்திருக்கிறது. எத்தனையோ கறைகளைப் போக்கியுள்ள கங்கை இதையும் இந்நேரம் போக்கியிருக்கும் என்று நம்பலாம்.

இங்கே பிரச்னை தாக்குதல் அல்ல. அதைச் செய்தவர்கள் யார் என்பதும் அல்ல. அரவிந்த் கெஜ்ரிவால் எதற்காக இந்தப் புனித நீராடலை காமிரா சகிதம் நிகழ்த்தியிருக்கிறார்? நரேந்திர மோடியை வாரனாசியில் எதிர்கொண்டு வீழ்த்தவேண்டுமானால் இந்துக்களின் வாக்குகளைக் கவரவேண்டும்; அதற்குப் புனித கங்கையில் நீராடவேண்டும் என்று அவர் நம்புகிறாரா?

இந்துக்களைக் கவர கங்கை. முஸ்லிம்களைக் கவர மசூதி விசிட் (இதையும் கெஜ்ரிவால் கையோடு முடித்துவிட்டார்). இனி சீக்கியர்களைக் கவர பொற்கோயிலையும் இன்னப்பிற சமூகத்தினரைக் கவர இன்னப்பிற வழிபாட்டு இடங்களையும் ஒரு வலம் வந்துவிட்டால் முடிந்தது கதை.  மொத்தத்தில், ஒரு வண்ணமயமான ஃபேன்ஸி டிரஸ் ஷோவை நடத்திமுடித்துவிட்டால், பல பிரிவுகளில் இருந்தும் கணிசமான வாக்குகளை உருவி எடுத்துவிடலாம். (இதில் பழங்குடியினரும்கூட விதிவிலக்கல்ல. வில், அம்பு, இறகு தொப்பி சகிதம் நின்று போஸ் கொடுக்காத தலைவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்!)

இதுநாள்வரை காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் பிற தேசிய, மாநிலக் கட்சிகளும் மக்களைக் கவர இவற்றைத்தான் செய்து வந்திருக்கின்றன. மாற்று அரசியல், மாற்று சிந்தனை என்று முழங்கிவந்த ஆம் ஆத்மியும் இப்போது அதே குட்டையில் முங்கி எழுந்துள்ளது.

இது பற்றி வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் தனது கருத்தை இன்று ட்வீட் செய்துள்ளார் :

If @ArvindKejriwal claims he is different from BJP n Congress than (sic) he should have stayed away from usual mandir/masjid ritual visit.

ஓர் அரசியல்வாதி தன் மத அடையாளங்களை வெளிப்படுத்தி வாக்கு கேட்பது தவறா? ஆம் என்கிறார் இர்ஃபான் ஹபீப்.

Becoz religion is a private matter while election should be a festival of democracy beyond caste/religion @ArvindKejriwal

ஆனால், இர்ஃபான் ஹபீபின் இந்த லட்சிய வார்த்தைகளை இந்திய அரசியல்வாதிகள் என்றுமே பொருட்படுத்தப்போவதில்லை. அரசியல்வாதிகளுக்கு மதம் என்பது தனிப்பட்ட விவகாரமாக பெரும்பாலும் இருந்ததில்லை. மாறாக, மதம் அவர்களுக்கு ஒரு தூண்டில். அதைவிட்டால் ஓட்டு கேட்க வேறு மார்க்கம் இல்லை அவர்களிடம். அதைவிட்டால் மக்களை நெருங்க வேறு உபாயம் இல்லை அவர்களிடம். நிச்சயமாக மதத்தை நீக்கிவிட்டுதான் இனி கட்சி நடத்தவேண்டும் என்று சொன்னால் பலர் தங்கள் அலுவலகங்களை இழுத்து மூடவேண்டிவரும். இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என்று மதத்தின் அடிப்படையில் மட்டுமே மனிதர்களைத் தொகுக்கவும் கையாளவும் இவர்கள் கற்றிருக்கிறார்கள். அது மட்டுமே அவர்களுக்கு லாபகரமானதாக இதுவரை இருந்து வந்துள்ளது. இதைவிடவும் லாபகரமான வேறொரு வழி கிடைக்கும்வரை மதமே அவர்களுக்கு ஒரே வரப்பிரசாதம்.

The Argumentative Indian புத்தகத்தில் அமர்த்தியா சென் ஓரிடத்தில் இது பற்றி விவாதிக்கிறார். மக்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் இருக்கிறார்கள். ஏழைகள், பணக்காரர்கள் இருக்கிறார்கள். உழைப்பாளிகள்,  முதலாளிகள், எழுத்தாளர்கள், விவசாயிகள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், தச்சு வேலை செய்பவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று பல பிரிவினர் இருக்கின்றனர். இடதுசாரிகள், வலதுசாரிகள் இருக்கின்றனர். கிரிக்கெட் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் இருக்கின்றனர். காதலித்தவர்கள், தோற்றவர்கள், வென்றவர்கள் இருக்கின்றனர். திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் இருக்கின்றனர். நல்லவர்கள், கெட்டவர்கள், தீங்கு விளைவிப்பவர்கள், தீவிரவாதிகள் ஆகியோரும் இருக்கின்றனர். இவர்களில் சிலர் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பார்சிகள், ஜைனர்கள், பௌத்தர்கள்.

இவை அனைத்தையுமே ஒருவருடைய அடையாளமாகக் கொள்ளமுடியும். அந்த அடையாளத்தின் அடிப்படையில் அவர்களைத் தொகுக்கவும் வகைப்படுத்தவும் முடியும். அனைத்தையும் விட்டுவிட்டு மதத்தை மட்டும் cherry picking செய்யவேண்டிய அவசியம் என்ன? அதையே ஒருவருடைய பிரதானமான அடையாளமாக முன்னிறுத்தவேண்டிய அவசியம் என்ன?

காரணம் அவர்களிடம் சமூகவியல் பார்வை இல்லை. வளமான, அறிவுபூர்வமான, அறிவியல்பூர்வமான சிந்தனை முறை இல்லை.  எல்லாவற்றையும்விட முக்கியமாக, அரசியல் சித்தாந்தம் இல்லை. மதத்தைத் தவிர, சாதியைத் தவிர வேறொரு கருவியை அவர்கள் இதுவரை கையாண்டதில்லை. எனவே அவர்களுக்கு சாதியும் மதமும் இருந்தாகவேண்டும்.

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஹசன் சுரூரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், ‘முஸ்லிம் அடிப்படைவாதம் நீடிக்கவேண்டும் என்றே இந்து அடிப்படைவாதிகள் விரும்புவார்கள்.’ (India’s Muslim Spring : Why is Nobody Talking about it? Hasan Suroor). முஸ்லிம் அடிப்படைவாதம் ஒழிந்துவிட்டால் பாஜக தடுமாறவேண்டியிருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் இது பொருந்தும்.

அரசியலில் இருந்து மதத்தையும், மதத்தில் இருந்து அரசியலையும் பிரிக்காமல் அப்படியே வைத்திருப்பதே அரசியல்வாதிகளுக்குப் பலனளிக்கும். மதத்தை அரசியலின் இன்னொரு வடிவமாகவே அவர்கள் காண்கிறார்கள். அல்லது அரசியலின் நீட்சியாக.

காங்கிரஸும் பாஜகவும் மட்டுமல்ல, ஆம் ஆத்மியும்கூட அதே மதவாதப் பாதையில்தான் நடைபோடுகிறது என்பது நிச்சயம் அந்த இரு கட்சிகளுக்கு ஆறுதலையே அளிக்கும் என்று நம்புகிறேன்.

0

குஜராத் – வளர்ச்சி என்ற பெயரில் அழியும் விவசாயம்

ss16அகமதாபாத்திலிருந்து டோலெரா வரை ஏறக்குறைய 100 கி.மீ. தூரம் வழியெங்கிலும் ஆயிரக்கணக்கான வளமான விளைநிலங்களையும், அவற்றில் கோதுமையும், சீரகமும் செழிப்பாக வளர்ந்திருப்பதையும் காணலாம்.  மார்ச் முதல் வாரத்திலிருந்து இங்கு அறுவடை தொடங்கும்.  எப்போதும்போல இந்த வருடமும் நன்றாக விளைந்திருக்கிறது என்கின்றனர்.  இந்தப் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கோதுமை பாத்திரம் என்றழைக்கப்படும் டோலெராவின் இந்தப் பகுதி குஜராத் மாநிலத்திலேயே அதிக விளைச்சல் காணும் பகுதியாகும்.

நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசு இந்த வளமான விவசாய நிலங்களை அழித்து “சிறப்பு முதலீட்டாளர் மண்டலம்” அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த விவசாய நிலங்களில் ஏறக்குறைய 920 சதுர கி.மீ. பரப்பளவில் தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்கு டோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலம் என பெயரிடப்பட்டுள்ளது.  சுற்றுச் சூழல் துறையின் அனுமதி பெறப்பட்டுவிட்டது.  இடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, பல தனியார் தொழில் நிறுவனங்கள் வந்து பார்த்து விட்டு, தங்களுக்கு அதில் ஒரு சிறு பகுதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

டோலேரா என்பது குஜராத் மாநிலம் கட்டமைக்க தீர்மானித்துள்ள 13 சிறப்பு முதலீட்டு மண்டலங்களுள் ஒன்றாகும்.  டெல்லி-மும்பை தொழிற்சாலை சரகத்தில் உள்ள 24 முதன்மை மையங்களுள் இதுவும் ஒன்றாகும்.  டெல்லி-மும்பை தொழிற்சாலை சரகத்தில் 6 மையங்கள் குஜராத்தில் அமையவுள்ளது.  அவற்றில் டோலெரா என்பது முதலில் முன்னேற்றப்படவுள்ளது.

ஒருபுறம் குஜராத் அரசு இத்தகைய பெரிய திட்டங்களுக்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் அதே வேளையில், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் டோலெரா என்பது கோதுமை, சீரகம் மற்றும் கொண்டக்கடலை போன்ற பயிர்கள் உயர் விளைச்சல் காணும் விவசாய நிலங்களாகும், இந்த பகுதியில் சிறப்பு முதலீட்டு மண்டலம் அமையுமானால் அத்தகைய உயர் விளைச்சலை இழக்க நேரிடும் என தங்கள் கவலையை தெரிவிக்கின்றனர்.

கூடுதலாக திட்டமிடப்பட்டுள்ள டோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் வேலவடார் தேசிய புல்வெளி பூங்கா அமைந்துள்ளது.  இங்கு அரியவகை கலைமான்கள், ஓநாய்கள் போன்ற உயிரினங்கள் வசித்து வருகின்றன.  அவற்றின் வாழ்நிலைக்கு அபாயம் நேரிடும்.  வனவிலங்கு ஆர்வலர்கள் சொல்லப்பட்ட தொழிற்சாலைகள் அமையுமானால், இங்கிருந்துவரும் பல்லுயிர்களுக்கு அபாயம் விளைவிக்கும் என்கின்றனர்.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தினை சமரசம் செய்து கொள்வது என்கிற விவாதம் எழுகிறபோது மோடியின் குஜராத்தில் விவசாயம் என்கிற வாதம் வெற்றி பெறுவது மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே.  மோட்டார் வாகன உற்பத்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலைகளுக்கு நிலங்கள் ஒதுக்கியது என இதற்கு பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்.  சமீபத்திய நிகழ்வுகளையெல்லாம் பார்வையிடுகிறபோது மோடியைப் பொறுத்தவரை தொழிற்சாலைகள் பெருக்கமே வளர்ச்சிக்கான ஒரே வழி என நம்புவது தெரிகிறது.

விவசாயிகளின் “சிறிய – பிரச்னை” என்பது உண்மையான “மோடி வழி” என்கிற அரசு நிர்வாகத்தின் வழி கையாளப்படுகிறது.  ஒரு தொழிற்சாலைக்கு உதவவேண்டும் என நினைத்துவிட்டால் புல்டோசர் வாகனங்கைள வைத்து விளை நிலங்களை சமன்படுத்திவிடுவார்.  சர்தார் சரோவர் அணைத்திட்டம் போன்ற குஜராத்தின் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்தால் எவ்வாறு விவசாயிகள், பழங்குடியினர் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டனர் என்பது தெரியவரும்.  நிலம் கையகப்படுத்துதல், மறுதீர்வு, மறுவாழ்வு நடவடிக்கை போன்ற அனைத்துமே இந்த மாநிலத்தைப் பொறுத்தவரை மிகச் சிறிய பிரச்னைகள் மட்டுமே.  இதில் மிக மோசமானது யாதெனில், இது போன்ற நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் இயக்கம், அல்லது எதிர்ப்பு போன்றவை கிளம்பினால் அவை எளிதில் அடக்கப்படும்.

டோலெரா மீண்டும் வணிகமயம் ஆகிறது

18ம் நூற்றாண்டில் காம்பட் எனம் வளைகுடாப் பகுதிக்கு அருகாமையில் இருப்பதை பயன்படுத்தி டோலெரா பகுதியில் ஒரு வணிக துறைமுகம் இருந்ததது.  தற்போது அந்த துறைமுகம் இல்லை என்ற போதிலும், அதன் அமைப்பிடம் காரணமாக வணிகத்திற்கு உகந்த இடமாக கருதப்படுகிறது.  அகமதாபாத்திலிருந்து 100 கி.மீ. தொலைவிலிருக்கும் இந்தப் பகுதி ஏறக்குறைய அகமதாபாத்திற்கும் பாவ் நகருக்கும் நடுவில் அமைந்துள்ளது.

சூரத்திலிருந்து 273 கி.மீ, ஜாம் நகரிலிருந்து 313 கி.மீ., ராஜ்கோட்டிலிருந்து 225 கி.மீ., வதேராவிலிருந்து 134 கி.மீ., என அனைத்து தொழில் நகரங்கள் மற்றும் வணிக மையங்களிலிருந்து எளிதில் அணுகும் வண்ணம் டோலெரா அமைந்துள்ளது.  எனவே டெல்லி-மும்பை தொழிற்சாலைகள் சரகத்தில் அமையவுள்ள 25 மையங்களில் இந்நகரம் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டதில் வியப்பேதுமில்லை.

டோலெரா என்பது குஜராத்தின் முதல் சிறப்பு மதுலீட்டு மண்டலம் என்பதுடன், டெல்லி-மும்பை தொழிற் சரகத்தில் ஜப்பானியக் கூட்டு முனைப்போடு அமையவிருக்கிற முதல் திட்டமாகும். டெல்லி-மும்பை தொழிற் சரகம் என்பது இந்திய அரசின் டெல்லி சரக்கு முனையத்திலிருந்து 150 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ள உயர் தாக்கத்தை ஏற்படுத்துகிற பகுதியாகும்.  டெல்லி சரக்கு முனையம் என்பது இரண்டு மாநகருக்குமிடையே ஏறக்குறைய 1483 கி.மீ. தொலைவை உள்ளடக்கியதாக அமைகிறது.  டெல்லி சரக்கு கையாளும் முனையத்தில் ஏற்க்குறைய 38 சதவீதத்தை குஜராத் இட்டு நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏறக்குறைய 90 பில்லியன் டாலர் மதிப்பிற்கு முதலீடு குஜராத்திற்கு இதன் மூலம் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு தெரிவிக்கும் விவரங்களின்படி டெல்லி-மும்பை தொழில் முனையத்தின் இலக்கு என்பது 5 வருடங்களில் இந்த மண்டலத்தில் வேலை வாய்ப்பை இரட்டிப்பாக்குவது, தொழிற்சாலைகளை மும்மடங்காக அதிகரிப்பது, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவை 4 மடங்காக உயர்த்துவது ஆகியவையாகும்.

டோலெராவில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பின் காரணமாக இந்தப் பகுதி நாட்டின் பொருளாதார எழுச்சிக்கான இயந்திரமாக அமையப் போகிறது என குஜராத் அரசு தெரிவிக்கிறது.  அரசு ஆதரவுடனான இந்த மண்டலம் சுயசார்பு மண்டலம் என்பதுடன் இதில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் என்பது டோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தின் இலக்கு என சொல்லப்படுகிறது.

வளர்ச்சி குறித்த அறிக்கையில் டோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலம் என்பது 22 கிராமங்களை சூழந்து கொள்வதாக அமைவதுடன் நர்மதாவின் படுகையில் பல பகுதிகளை எடுத்துக்கொள்வதாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  திட்ட ஏற்பாடு என்பதில் 2040 வரை 9225 ஹெக்டேர் நிலங்களை மேம்படுத்துவது என்றும் சொல்லப்பட்டுள்ளது.  டோலெரா சிறப்பு முதலீட்டு மையத்தில் தொழிற் பூங்காக்கள், நகரமைப்புகள், மற்றும் அறிவார்ந்த நகரங்கள் அமைந்ததாக இருக்கும்.  அந்த நகரம் எளிமையாக பல நகரோடு இணைக்கும் வண்ணம் இருப்பதுதான் அதன் சிறப்பம்சம்.  எனவே மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் சர்வதேச விமான முனையம் என்பன இவற்றின் பக்கவாட்டிலான திட்டங்களாகும்.  இந்த பொருளாதார நடவடிக்கையின் மூலம் 3.4 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி அரசாங்கம் இத்தகைய சிறப்பு மிக்க திட்டங்களை செயல்படுத்துவதற்காக சிறப்பு முதலீட்டு மண்டலச் சட்டம் 2009 என்பதை இயற்றியிருக்கிறது.  நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் கிடைக்கும் சில பாதுகாப்புகளையும் மீறும் வகையில் இந்த சட்டம் அமைந்தது.  மேலும் ஜமீன் அதிகார் அந்தோலன் என்ற அமைப்பைச் சேர்ந்த சாகர் ரப்ரி தெரிவிக்கையில் இந்த அரசு பாம்பே நகர திட்டமிடும் சட்டம் 1954 ஐ சிறப்பு முதலீட்டு மண்டலம் சார்ந்த கூடுதல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்துகிறது என்றார்.

இந்தச் சட்டம் உள்ளாட்சி அதிகாரிகள் மாநிலத்திற்குட்பட்டு வருகிற பெரு நகர, நகர வளர்ச்சி திட்டங்களைத் தயாரிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.  அந்தோலன் அமைப்பு விவசாயிகளை திரட்டி அவர்களின் உரிமைக் குரல் எழுப்பி சிறப்பு முதலீட்டு மண்டலத்தை நிறுத்த போராடி வருகிறது என்றார் ரப்ரி.  ஆனால் இதற்கான ஊா்வலம், ஆர்ப்பாட்டம் போன்றவை அரசால் அடக்கி எதிர்கொள்ளப்படுகிறது.  அவர்கள் எங்களை காந்தி நகருக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்றார்.  அந்தப் பகுதியிலிருந்து தேர்வாகி அமைச்சரானவர், கிராம மக்களைப் பார்த்து என்னைத் தவறாக எண்ணாதீர்கள் என்னால் இதில் ஏதும் செய்ய முடியாது என்கிறார்.

நாம் சிமின்டைச் சாப்பிட முடியுமா?

கீதாபென் ஜாதவின் முகம் முழுமையாக அவருடைய சேலையால் மூடப்பட்டிருக்கிறது.  அவரிடமிருந்து வெட்கம் கலந்த மெல்லிய குரல் வரும் என எதிர்பார்த்தோமானால் கணீரென்ற உணர்ச்சியூட்டும் குரல் தெரிக்கிறது. “அவர்கள் சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் பெரிய தொழிற்சாலைகளைக் கட்டலாம், அதிலிருந்து இயந்திரங்கள், ரசாயனங்கள், மற்றும் சிமினட்ட போன்றவை உற்பத்தியாகலாம்.  அதற்காக நாங்கள் சிமின்டைச் சாப்பிட முடியுமா? எங்கள் நிலங்களையெல்லாம் எடுத்துக் கொண்டுவிட்டால் நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு எதைக் கொடுப்பது?” என ஆவேசமாக கேட்கிறார்.

சர்ஸ்லா கிராம மக்கள் சிறப்பு முதலீட்டு மண்டலம் குறித்து விவாதிக்க ஒன்று கூடியிருக்கின்றனர். இதில் சுவாரசியமான அம்சம் யாதெனில் இங்கு கூடியிருந்தவர்களில் பெரும்பாலும் அவர்களது முகத்தை வெளிக்காட்ட அனுமதிக்கப்டாத பெண்கள், என்பதோடு (இதை புகாராக தெரிவித்தவரும் ஒரு பெண்) இயல்பாக அடங்கிப் போகும் தன்மையாக வாழ்ந்து வரும் இவர்கள், ஆவேசமாக கூக்குரலிட்டு சிறப்பு முதலீட்டு மண்டலத்திற்கு எதிர்ப்பாக தங்கள் கருத்தை தெரிவிக்கின்றனர்.  நாங்கள் எங்கள் உயிரைக் கூட விடுவோம், ஆனால் எங்கள் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கின்றனர்.  கீதாபென் ஜாதவ் தெரிவிக்கும் போது அரசு கொடுக்கும் இழப்பீடு என்பது எங்கள் நிலத்திற்கு ஈடாகாது என்கிறார்.

டோலெரா விவசாயிகள் அனைவரும் நிலங்கள் வைத்திருப்பதுடன் சிறிய விவசாயிகள் தொடங்கி 5 முதல் 50 ஏக்கர் வரை விளை நிலங்களை வைத்துள்ளனர்.  பெரும்பாலும் மழை நீரைக் கொண்டு கோதுமை, சீரகம், கம்பு, பருத்தி மற்றும் கொண்டக்கடலை ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றனர். நர்மதா அணைப்படுகை பகுதியிலிருந்து சிறிய கால்வாய்கள் வெட்டப்பட்ட போதிலும் நீர் நிலங்களை வந்தடைவதில்லை.  மற்றபடி வளமான நிலங்கள் என்பதால் மழை நீரைக் கொண்டே இங்கு பயிர்கள் நன்கு வளர்கின்றன.

அரசு தொழிற்சாலைகளுக்கு நர்மதாவிலிருந்து தண்ணீர் கொடுப்பேன் என்கிறார்கள், எங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுமானால் நாங்கள் கூடுதல் உற்பத்தித்திறன் கொண்ட கரும்பு பயிரிடமுடியும் என்கிறார் இந்த கிராமத்தை சேர்ந்த மூத்த விவசாயி நாராயண்பாய் சவுகான்.

மேலும் அவர் கூறுகையில் என்னுடைய கேள்வி யாதெனில், எங்களுடைய நிலங்களை அவர்கள் எடுத்துக் கொண்டால் எங்களுக்கு என்ன நேரிடும்? என்கிறார்.

இந்தச் சிறப்பு முதலீட்டு மண்டலம் என்பதை மின்னிடும் குஜராத் உச்சி மாநாடு 2007 என்பதற்கு பிறகுதான் கேள்விப்படுகிறோம்.  எனினும் அரசு- எங்களிடம் 2011ம் ஆண்டு திட்டத்துடன் தான் அணுகியது என்கிறார் டோலெரா பகுதி பவலியாரி கிராமத்தில் அதிகமான நிலங்களை வைத்துள்ள விவசாயி பிரதுமன்சின் ஷுடசாமா என்பவர்.  அவர் மேலும் தெரிவிக்கையில் அவர்கள் இங்கு அனைத்து கிராமங்களிலும் கூட்டங்களை நடத்தினார்கள், அதன் மூலம் அவர்கள் திட்டங்கைளப் பற்றி சொன்னார்களே தவிர எங்களின் ஒப்புதலை கேட்பதற்காக அந்த கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றார்.

மேலும் சுற்றுச் சூழல் பாதிப்புகளைப் பற்றிய கூட்டங்கள் நடத்தப்பட்டபோதிலும் அவையெல்லாம் உண்மையான காரணத்துக்காக இல்லாமல் ஒரு சடங்காக மட்டுமே நடத்தப்பட்டது.  அதனால் வனவிலங்குகள், உயிரினங்கள் பாதிக்கப்படும் என சொல்லப்பட்டவைகள் குறித்து காது கொடுத்துக் கூட கேட்கவில்லை.  அரசு என்ன நினைக்கிறதோ அதைச் செய்யும் என்றார் ஷூடசாமா.

30 ஏக்கர் வரை வைத்திருக்கிற ஷூடசாமா மேலும் தெரிவிக்கையில் இங்குள்ள நிலங்கள் நல்ல வளமானவை, நாங்கள் விதைகளை மட்டும் விதைத்துவிட்டு மழைக்காக காத்திருப்போம், மழை பெய்துவிட்டால் அவை நல்ல விளைச்சல் கண்டுவிடும் என்றார்.  டோலெரா நன்றாக அமைந்திருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம்.  ஆனால் ஏன் இத்தகைய திட்டங்களுக்கு வீணாய்போன தரிசு நிலங்களை அரசு பயன்படுத்த மறுக்கிறது?  ஏன் எங்களின் வாழ்வாதாரத்தை எடுத்துக் கொள்கிறார்கள்? என கேள்வி எழுப்புகிறார்.

ஒரு ஏக்கர் நிலத்தில் 1.5 டன் கோதுமை விளையும்.  ஏனெனில் அவை ஆர்கானிக் வகை சார்ந்தது.  20 கிலோ சுமார் ரூ 800 பெற்றுத் தரும்.  ஒரு விவசாயி சராசரியாக 10 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் அவரால் 15000 கிலோகிராம் விளைவிக்க முடிவதுடன், அந்த ஒரு பயிர் மூலம் மட்டும் அவருக்கு ஆண்டிற்கு 6 லட்சம் கிடைக்கும்.

சீரகம் என்பது மிகுந்த செலவினத்தை ஏற்படுத்தக் கூடிய பயிர்தான்.  ஒரு ஏக்கரில் ஒரு டன் சீரகம் கிடைக்கும்.  ஒவ்வொரு 20 கிலோவிற்கும் விவசாயி 2,500 சம்பாதிப்பார்.  ஒரு விவசாயி 10 ஏக்கர் நிலம் வைத்திருந்தால், அவர் 10000 கிலோ சீரகத்தை விளைவித்து அதன் மூலம்  ஆண்டிற்கு 12.5 லட்சம் சம்பாதிப்பார்.  ஒவ்வொரு ஏக்கர் நிலத்திலும் 1.5 டன் கொண்டக்கடலை அறுவடை செய்யலாம்.  20 கிலோ கொ்ண்டக்கடலைக்கு 600 கிடைக்கும்.

ஏனெனில் இங்கு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாமல் விளைச்சல் காண்பதால், சாதாரண உற்பத்தி செலவில் நல்ல விவசாயம் காணமுடியும் என்கிறார் ஷூடசாமா.

அரசு எங்களிடம் மருத்துவமனைகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் எல்லாம் வரும், புதிய நகரங்கள் தோன்றும், மனையிடங்களின் விற்பனை அதிகரிக்கும், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் சொல்கிறது.  ஆனால் அவையெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.  எப்படியாயிருப்பினும் அரசு பள்ளிகளும், மருத்துவமனைகளும் அமைத்துத் தரவேண்டியது அரசின் கடமை என்கிறார் மற்றொரு விவசாயி அனிருத் ஷூடசாமா. நாங்கள் எங்கள் எதிரப்பை தொடங்கிவிட்டோம், நாங்கள் போராட தயாராகிவிட்டோம் என்கிறார்கள் விவசாயிகள்.

இந்தக் கிராமங்களில் உள்ள படிநிலை சூழலின் காரணமாக மேல்சாதியினர் மற்றும் பெரிய விவசாயிகளிடமும் இந்த போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கொண்டு செல்வது அவசியமாகிறது.  ஏனெனில் சிறிய விவசாயிகள் மற்றும் நிலமில்லாத கூலி விவசாயிகள் போராடினால் அவை இலக்கின்றி எளிதாக கையாளப்படும் நடவடிக்கையாகிவிடும், ஏனெனில் நாங்கள் அவர்களை சார்ந்து இருக்கிறோம்.  ஆனால் இந்த விசயத்தைப் பொறுத்தவரை பெரிய விவசாயிகளும் எதிர்ப்பாக இருப்பதுடன், போராடவும் தயாராக இருக்கின்றனர்.

நாங்கள் ஒவ்வொரு முறை கூட்டம் ஏற்பாடு செய்யும் போதும் எங்களை காவல்துறை சுற்றி வளைத்துவிடுகிறது.  கடந்த முறை நாங்கள் காந்தி நகரில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி கோரியபோது அனுமதி மறுக்கப்பட்டது.  எனினும் எங்கள் போராட்டம் தொடரும் என்கிறார் அனிருத் ஷூடசாமா.

ரிலையன்ஸ் நிறுவனம் நிலங்கள் கையகப்படுத்திய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்று ஜாம் நகர் விவசாயிகள் தோற்றதும், அதனால் டோலெரா மக்களுக்கு சிறிய அளவிலான வாய்ப்பு மட்டுமே இருக்கிறது என சொல்லப்பட்ட போதிலும், அவர்கள் போராட தீர்மானித்துவிட்டது தெளிவாகிறது.

நன்றி : Frontline

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

The ignorance of one voter in a democracy impairs the security of all.” – John F. Kennedy

30jan-indiaink-vote-blog480ஓட்டு என்பது வெறும் விரல் மை அல்ல; அது ஒரு பெருவெள்ளத்தின் சிறுதுளி.

உங்கள் ஓட்டு தான் உங்கள் தொகுதியின் எம்பியை, அடுத்த மத்திய அரசைத் தீர்மானிக்கப் போகிறது. ஆனால் வாக்களிக்கும் அந்த பெரும் உரிமையை நாம் சம்மந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து, அதன் பின் தர்க்கப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சிந்தித்துப் பயன்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறியே. அதைச்செய்ய ஒரு சிறிய வழிகாட்டியாகவே இக்கட்டுரையை எழுத விழைந்தேன்.

வரும் 24 ஏப்ரல் 2014 அன்று தமிழம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. ஒரு குடிமகனாக நீங்கள் இந்தத் தேர்தலை எப்படி அணுக வேண்டும், உங்கள் வாக்கு யாருக்கு அல்லது எந்தக் கட்சிக்கு என்று முடிவு செய்யும் முன் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுவதே இதன் நோக்கம் மற்றும் எல்லை.

அதாவது யாரை ஆதரிக்க வேண்டும் என்று இது சொல்லித் தரப் போவதில்லை. எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமே இதன் விவாதப் பொருள்.

முதலில் இது என்ன தேர்தல்? லோக்சபா தேர்தல். அதாவது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல். இதன் பிரதான நோக்கங்கள் இரண்டு. ஒன்று உங்கள் மக்களவைத் தொகுதிக்கு எம்பியைத் தேர்ந்தெடுப்பது. இரண்டாவது அப்படி இந்தியா முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் பெரும்பாம்பான்மையினர் முடிவுப்படி ஓர் அரசையும், அமைச்சர்களையும், பிரதமரையும் தீர்மானிப்பது.

இதில் மக்களுக்கு நேரடியாய் வழங்கப்பட்டிருக்கும் உரிமை மக்களவைத் தொகுதிக்கான எம்பியைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே. மற்றது மறைமுகம்.

0

தர்க்கப்படி தேர்தலை சந்திக்கும் எந்தக் கட்சியும் யார் பிரதமராகப் போகிறார் என்று அறிவிக்க வேண்டியதே இல்லை. கட்சியின் கொள்கைகளை மக்கள் முன்வைக்க வேண்டும், ஓட்டுக் கேட்கும் வேட்பாளர் மக்கள் நம்பிக்கைக்கு உரியவராய் இருக்க வேண்டும், அதுவே போதுமானது. சரியான (அல்லது அவரவர்க்கு உவப்பான) கொள்கை கொண்ட கட்சியை, தகுதியான வேட்பாளரை ஆதரித்தாலே திறமையான அரசு அமையும் என்பதுதான் நம்பிக்கை. நமது இந்திய அரசியல் சாசனம் இந்த bottom up approach-ஐத் தான் அறிவுறுத்துகிறது.

மாறாக தனி நபரை முன் வைப்பது சர்வாதிகாரத்துக்கே வழி வகுக்கும். மத்திய அரசு என்ற பிரம்மாண்ட எந்திரம் சரியாக ஓட அதன் அத்தனை எம்பிக்களும்தான் காரணமாய் இருக்க வேண்டுமே ஒழிய, ஒற்றை ஆசாமி மட்டும் பொறுப்பாக இருக்கலாகா. நாளை ஏதாவது காரணத்தால் அவர் அதைச் செய்ய முடியாமல் போனால் ஒட்டுமொத்த அமைப்பும் தோற்று நிற்கும். அதனால் நல்ல பிரதமரைத் தேர்ந்தெடுப்பதை விட நல்ல மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதே நீண்ட கால அடிப்படையில் அரசு செம்மையாகச் செயல்பட வழிவகுக்கும்.

இது தான் ஜனநாயகத்தின் அடிப்படை விதி. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இந்தியா எப்போதும் சித்தாந்தங்களின் வலிமையை விட முகங்களின் வசீகரத்தையே நம்பி வந்திருக்கிறது. மக்களுக்கு அஹிம்சையை விட காந்தியே முக்கியம். சோஸியலிசத்தை விட நேருவே பிடிக்கும். தலித்தியத்தை விட அம்பேத்கரே பிரதானம். திராவிடத்தை விட பெரியாரே வசீகரம். அந்தப் பழக்கத்தின் வழியாகவே கட்சிகள் பிரதமர் வேட்பாளரை முன்வைக்கின்றன.

சுதந்திரத்தின் போது இந்தியாவின் கல்வியறிவு வெறும் 12% தான் இருந்தது. அதனால் படிப்பறிவற்ற பாமர ஜனங்களே அரசைத் தேர்ந்தெடுக்கும் நிலைமை. அதனால் காங்கிரஸ் என்ற கட்சியின் கொள்கைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதைவிட நேரு, படேல் என்ற தலைவர்களைக் காட்டி ஓட்டு வாங்குவது எளிமையானதாக இருந்தது. அப்போதைய சூழலுக்கு அது வேண்டி இருந்தது.

ஆனால் இன்று இந்தியாவின் கல்வியறிவு 75%. அதாவது பெரும்பான்மையானோர் தான் தேந்தெடுக்கும் அரசின் கொள்கைகள் என்னவாய் இருக்க வேண்டும், எது தேசத்துக்கு நன்மை பயக்கும் என்று ஓரளவேனும் சிந்திக்கத் திராணி உள்ளவர்கள் (செய்கிறார்களா என்பது வேறு விஷயம்). அதை நிராகரித்து இப்போதும் அதே பாமர மோஸ்தரில் ஓர் ஆசாமியைக் காட்டி ஓட்டு கேட்பது கேலிக்கூத்தானது. தேசிய சிந்தனை வளர்ச்சியைக் கணக்கில் கொள்ளாது பின்னிழுக்கும் வேலை.

சுருக்கமாகச் சொன்னால் மக்களவைத் தேர்தலில் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கம் இரண்டாம் பட்சமே. நமக்குத் ஒத்துப்போகும் கொள்கைகளை முன் வைக்கும் கட்சிகளை, அவற்றிலிருந்தோ அல்லது வெளியேவோ தகுதியான மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்பவதே சிந்திக்கக்கூடிய ஒரு நல்ல குடிமகன் இத்தேர்தலில் செய்யக்கூடிய விஷயம்.

0

நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மொத்தம் உறுப்பினர்கள் 543. இதில் பாதிக்கு மேலான எண்ணிக்கையில் (அதாவது 272) எம்பிக்கள் ஆதரவு இருந்தால்தான் ஒரு கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். இதில் தமிழகம் மற்றும் புதுவையின் சார்பாக அனுப்பப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை மட்டும் 40. அதாவது இந்தியாவுக்கான இந்த ஆட்டத்தின் செல்வாக்கில் கிட்டத்தட்ட 7.5% தமிழனின் கையில் தான் இருக்கிறது. ஒருவர் இந்த 40 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி விட்டு பிரதமர் கனவு காணும் போதே நம் வீரியம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பலத்தையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதனால் தான் யோசித்து வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தைப் பற்றி பார்க்கப் புகும் முன் தேசிய அளவில் கட்சிகள் நிற்கும் நிலை (larger scheme of things) பற்றி கொஞ்சம் பார்க்கலாம். தமிழகத்துக்கான முடிவை ஒரு வாக்காளர் எடுக்கும் முன்பு இதையும் ஓரளவேனும் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய அளவில் தற்போது தேர்தல் களத்தில் இருக்கும் கட்சிகள் / கூட்டணிகள்:

 1. பிஜேபி தலைமையிலான 22 கட்சிகள் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி
 2. காங்கிரஸின் 10 கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
 3. அதிமுக, கம்யூனிஸ்டுகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், அஸாம் கண பரிஷத் உள்ளிட்ட 11 கட்சிகள் கொண்ட ஓர் இன்ஸ்டண்ட் மூன்றாம் அணி
 4. தனித்து நிற்கும் ஆம் ஆத்மி கட்சி (வேட்பாளர்களின் அதீத எண்ணிக்கை காரணமாக இதை ஒரு போட்டி முனையாகக் கொள்ள வேண்டியுள்ளது).
 5. இவை போக அந்தந்த மாநிலங்களில் தனியாக நிற்கும் திமுக, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மற்றும் உதிரிகள்.

இதில் அதிமுக, சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மூன்றாவது அணியில் இருந்தாலும் இவற்றின் தலைவர்களான ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோருக்கு தனித்தனியே பிரதமர் கனவுகள் உண்டு. இது போக கூட்டணி சேராமல் நிற்கும் மாயாவதி (பகுஜன் சமாஜ்), மம்தா பேனர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோருக்கும் பிரதமர் ஆகும் ஆசை இருக்கிறது.

இப்படி பிரதமர் கனவு காண்பவர்கள், தேர்தல் முடிவுகளுக்குப் பின் அது முடியாது போகும் போது பிரதான கட்சிகளான பிஜேபியையோ காங்கிரஸையோ ஆதரித்து விட வாய்ப்புண்டு. அதிக எம்பிக்கள் வைத்திருந்தால் துணைப் பிரதமர் பதவி கூடக் கேட்டுப் பார்ப்பார்கள். அதனால் மூன்றாவது அணியும் மிச்சமிருக்கும் கட்சிகளும் எந்த அளவுக்கு உண்மையாகவே பிஜேபிக்கும் காங்கிரஸுக்கும் மாற்றாய் ஓர் அரசை உருவாக்க முயல்கின்றன என்பது சொல்ல முடியாது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கான போட்டிக் கட்சிகள் என்ன என்பதைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட எல்லாக் கூட்டணிகளுமே முடிவாகிவிட்ட நிலையில் இந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு தமிழகத்தில் சுயேச்சைகள் தவிர்த்து ஆறு முனைப் போட்டி நிலவுகிறது. இதற்கு முன் தமிழக லோக்சபா தேர்தல்களில் இத்தனை பிரிவாக கட்சிகள் நின்றனவா என்பதே கேள்விக்குறி தான். ஆனால் இப்படி இவர்கள் பிரிந்து நிற்பதால் வாக்காளருக்குத் தான் யாரை ஆதரிப்பது என்ற கேள்விக்கான பதிலை அறிவதில் கூடுதல் சிக்கல் ஏற்படுகிறது.

 1. தனித்து நிற்கும் அதிமுக
 2. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திமுக கூட்டணி
 3. தனித்து நிற்கும் காங்கிரஸ்
 4. தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிஜேபி கூட்டணி
 5. 18 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள்
 6. (இதுவரை) 8 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்திருக்கும் எளிய மக்கள் கட்சி என்ற ஆம் ஆத்மி கட்சி

இது தான் தற்போதைய தமிழக நிலவரம். வேட்பு மனு தாக்கல் முடிய நாட்கள் இருக்கும் சூழலில் இதில் சிறிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

0

இப்போது வாக்களிக்கும் முன் நம் முன் இருக்கும் கேள்விகளைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒரு தேர்வை எழுதும் மாணவனின் சிரத்தையுடன் இவற்றுக்கு பதில்களைக் கண்டடைந்தால் தான் நம்மால் சரியாக வாக்களிக்க இயலும்.

தேர்வு நம் எதிர்காலத்தை மட்டுமே தீர்மானிக்கும். தேர்தல் தேசத்தையே!

1) மாநிலமா தேசியமா?

தமிழர்கள் முன் இருக்கும் முதல் வேள்வியே இந்தத் தேர்தலில் தேசிய கட்சியை ஆதரிப்பதா மாநிலக் கட்சியை ஆதரிப்பதா என்பது தான். இது மக்களவைத் தேர்தல் என்பதால் பொதுவாய் தேசியக் கட்சிகளையே ஆதரிக்க வேண்டும் எனற பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். உண்மையில் அப்படி ஏதும் அவசியம் இல்லை.

மக்களவைத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளுக்கு மட்டும் தான் வாக்களிக்க வேண்டும் எனில் எந்த பிராந்தியக் கட்சியும் பாராளுமன்ற தேர்தல்களில் பங்கேற்கவே செய்யாதே! தேசியக் கட்சியோ பிராந்தியக் கட்சியோ அவர்களது பொதுவான கொள்கைகளும் அந்தத் தேர்தலுக்கென முன்வைக்கும் தேர்தல் அறிக்கைகளையும் கொண்டே நாம் முடிவெடுக்கவேண்டும். தேசிய கட்சியாக இருப்பது மாநிலக் கட்சியாக இருப்பதைக் காட்டிலும் எந்த வகையிலும் உயர்வானதில்லை. முடிவில் அவர்களின் கொள்கைகளே முக்கியமாகின்றன.

மாநில அளவில் மட்டுமில்லாது தேசிய அளவிலும் நம்மை பாதிக்கக்கூடிய விஷயங்களில் இக்கட்சிகளின் நிலைப்பாடினை ஆராய வேண்டும். உதாரணமாக ஈழப் பிரச்சனை, அணு உலைகள், இட ஒதுக்கீடு, அந்நிய நேரடி முதலீடு, எல்லைப் பிரச்னைகள், சிறுபான்மையினர் நலன். தேசத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்ல என்ன திட்டங்கள் வைத்திருக்கின்றன எனப் பார்க்க வேண்டும்.

அதனால் தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என்ற லேபிள் தாண்டி அவரவர்க்கு உவப்பான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள கட்சியை ஆதரிப்பதே சரியானது.

2) ஸ்திரத்தன்மை?

இம்முறை பிஜேபி ஒருபடி மேலே போய் ஐந்து ஆண்டுகள் நிலைக்கும் ஸ்திரமான ஆட்சி வேண்டுமானால் மோடிக்கே ஆதரவு அளியுங்கள் என்று பிரசாரம் செய்து வருகிறது. அதாவது காங்கிரஸுக்கோ மற்ற பிராந்தியக் கட்சிகளுக்கோ ஆதவரவளித்தால் தொங்கு நாடாளுமன்றம் வந்து மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டி இருக்கும் என்று சொல்ல முயல்கிறார்கள்.

மேலோட்டமாய்ப் பார்த்தால் இது சரி தான் என்பது போல் தோன்றினாலும் உண்மையில் இதுவும் உண்மை இல்லை. பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சுமார் 22 கட்சிகள் உள்ளன. அவர்களில் கணிசமானோர் விலகும் போது அதிலும் இதே பிரச்சனை வரும். இதைத் தவிர்க்கவே முடியாது (இப்போது திமுக விலகிய பின் மன் மோகன் சிங் அரசுக்கே அது தான் நிலை).

தவிர பிஜேபிக்குள்ளேயே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், சுஷ்மா ஸ்வராஜ், சிவராஜ் சிங் சௌகான் என மோடியின் செயல்பாடுகளில் ஒப்புதல் இல்லாத நிறைய அதிருப்தி ஆசாமிகள் இருக்கிறார்கள். நாளை அவர்கள் வெளியேறினாலோ ராஜினாமோ செய்தாலோ கூட இதே பிரச்சனை உண்டு.

அதனால் பிஜேபிக்கு வாக்களித்தால் மட்டுமே ஸ்திரமான அரசு அமையும் என்பது மோசடி பிரச்சாரம். அந்த விஷயத்தையே கணக்கில் கொள்ள வேண்டியவில்லை.

3)  நிராகரிப்பு அவசியம்

அடுத்து நாம் எதை / யாரை எதிர்க்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும்.

அதாவது எந்த சித்தாந்தத்தை அல்லது செயலை எதிர்க்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டும். அது பிஜேபியின் மத வெறியாக இருக்கலாம் அல்லது காங்கிரஸின் ஊழலாக இருக்கலாம். ஜெயலலிதாவின் நிர்வாகக் குறையாக இருக்கலாம் அல்லது கருணாநிதியின் குடும்ப அரசியலாக இருக்கலாம்.

கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுமே ஏதாவது குறைகளோடு / கறைகளோடு தான் இருக்கிறன. இருப்பதிலேயே மோசமானதை ஒதுக்குவதே இதன் நோக்கம்.

அவற்றை எல்லாம் பட்டியலிட்டு நம் பார்வையில் இந்த தேர்தலில் வெற்றி பெற விடவே கூடாத கட்சிகள் / ஆட்கள் யார் யார் என முடிவெடுக்க வேண்டும்.

4) எதிர்ப்பு மட்டுமே போதாது

யாரை எதிர்க்கிறோம் என்பதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. நீங்கள் ஒருவேளை பிஜேபியை எதிர்க்கலாம். அதிமுக உங்களுக்கு உவப்பானதாய் இருக்கக்கூடும். ஆனால் அதிமுகவும் திமுகவும் இப்போதைக்கு எந்த தேசியக் கட்சியுடனும் கூட்டணி வைக்காவிடினும் தேர்தலுக்குப் பின் சேர வாய்ப்புண்டு (குறிப்பாக பிஜேபியுடன்). அதிமுக, திமுக இரண்டு கட்சித் தலைவர்களுமே பிஜேபியையோ நரேந்திர மோடியையோ தம் பிரச்சாரங்களில் விமர்சிப்பதில்லை. அதனால் பிஜேபியையும் காங்கிரஸையும் எதிர்க்க நினைக்கும் ஒருவர் தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டையும் சேர்த்தே நிராகரிக்க வேண்டி இருக்கும். வாக்கு அளிக்கையில் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5) யாரை ஆதரிப்பது?

மீதமிருக்கும் கட்சிகளில் எதை ஆதரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு அக்கட்சிகளைப் பற்றி அவற்றின் நிலைப்பாடுகள் பற்றிய புரிதல் அவசியம். அக்கட்சிகளின் சமீபத்திய பத்தாண்டு செயல்பாடுகளை மேலோட்டமாகவேனும் தெரிந்து கொள்ள வேண்டும். அது முக்கியம்.

உதாரணமாக ராகுல் காந்தியை ஆதரிக்கிறீர்கள் எனில் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என ஆராய வேண்டும். அவரது பலவீனங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நரேந்திர மோடியை அவரது நிர்வாகத் திறனுக்காக ஆதரிக்கிறீர்கள் எனில் அதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்று அறிய முயல வேண்டும்.

வாக்களிக்கும் முன் முடிந்த அளவு எல்லா கட்சிகளின் கொள்கைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். தேர்தல் அறிக்கைகளை வாசித்து விட வேண்டும். அவை தேர்தலுக்காக அளிக்கப்படும் பொய் வாக்குறுதிகளாக இருக்க வாய்ப்புண்டு தான். ஆனால் நமக்கு அதை நம்புவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை.

உதாரணமாக காங்கிரஸ் சொல்லும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதோ, மதிமுகவின் இந்தியக் குடியரசை ஐக்கிய இந்திய நாடுகள் ஆக்கும் விஷயமோ உங்களுக்குப் பிடித்திருக்கக்கூடும். அதற்கு இதெல்லாம் தெரிய வேண்டும்.

இந்த அறிதலின் முடிவில் இருப்பவற்றில் நீங்கள் உங்கள் விருப்பங்களுக்கேற்ற உங்கள் மனதுக்கு நெருக்கமான ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து விட்டீர்கள்.

6) நிரந்தரமில்லை

ஆதரவு அளிப்பதிலும் ஒரு உள்விஷயம் இருக்கிறது. நீங்கள் விரும்பும் கட்சி உங்கள் தொகுதியில் நிற்கவில்லை. பதிலாக அதன் கூட்டணி கட்சி நிற்கிறது என்றால் அதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்குப் பிடித்த கட்சியை நீங்கள் தேர்ந்தெடுக்க நீங்கள் என்னென்ன எல்லாம் கவனித்தீர்களோ அதை இக்கட்சிக்கும் செய்ய வேண்டும்.

காரணம் அரசியலில் எந்தக் கூட்டணியும் நிரந்தரம் அல்ல. அதனால் நீங்கள் அந்தந்த கட்சியைக் கவனித்து திருப்தி அடைந்த பிறகே ஓட்டை அளியுங்கள்.

7) கட்சியா வேட்பாளரா?

அடுத்த குழப்பம் கட்சியைப் பார்த்து ஓட்டுப் போடுவதா அல்லது வேட்பாளரைப் பார்த்து ஓட்டுப் போடுவதா என்பது. இதற்கு பதில் இரண்டுமே சம அளவில் முக்கியமானது என்பதுதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எம்பியின் கட்சியே மத்தியில் அரசு அமைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அவர் எதிர்கட்சியாக உட்காரவும் நேரலாம். ஆனால் அவர் தன் வேலையின் ஒரு பகுதியாக உங்கள் தொகுதிக்கு நிறைய நல்ல விஷயங்களைச் செய்ய முடியும்.

அதற்கு அவர் தொகுதிக்கு வந்து போகிறவராக இருக்க வேண்டும். உங்கள் பிரச்னைகளை அறிந்து கொண்டிருப்பவராக அவற்றைத் தீர்க்க வேண்டும் என்ற முனைப்பு கொண்டவராக இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் நின்றால் கட்சி விருப்பு தாண்டி அவருக்கு வாக்களிப்பதே நல்ல முடிவாக இருக்க முடியும்.

வேட்பாளரின் படிப்பு, அவர் இதற்கு முன்பு செய்திருக்கும் சமூகப் பணிகள் வகித்த பதவிகள் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அத்தனையையும் கணக்கில் கொள்ளவும்.

அதாவது நீங்கள் விரும்பும் கட்சி மோசமான வேட்பாளரை நிறுத்தினால் அவரை ஒதுக்குங்கள். அல்லது உங்களுக்கு பிடிக்காத கட்சி உங்கள் இடத்தில்  யாரேனும் நல்ல ஆள் ஒருவரை நிறுத்தினால் அவரை ஆதரிப்பதைப் பற்றிப் பரிசீலிக்கங்கலாம்.

இந்த அடிப்படையில் நீங்கள் ஒரு சுயேட்சையை ஆதரிப்பது கூட சரியானதே!

8) காசு வாங்கலாமா?

அடுத்து ஓட்டுக்கு காசு வாங்குவது குறித்த விஷயம். ஒரு வேட்பாளர் அல்லது கட்சி உங்களுக்கு காசு கொடுக்கிறது எனில் இரண்டு விஷயங்கள் உறுதி ஆகிறது: (i) நிச்சயம் அது நேர்மையான வழியில் சம்பாதித்த பணமாக இருக்க வாய்ப்பே இல்லை. (ii) அவருக்கு தன் கட்சிக் கொள்கைகளை விட செயல்பாடுகளை விட பணத்தைக் கொடுத்து தான் ஓட்டு வாங்க முடியும் என நம்புகிறார்.

அவர் கொடுக்கும் பணத்தை வாங்குவதும் வாங்காததும் உங்கள் இஷ்டம். அதனால் எந்த யோசனையும் இன்றி அந்த வேட்பாளரை நிராகரித்து விடலாம்.

9) தோற்கும் கட்சி

தோற்கிற கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம். இது தான் இன்று இந்தியாவில் பெரும்பாலான தேர்தல் முடிவுகளைத் திருத்தி அமைத்து விடுகிறது. மேலோட்டமான ஊர்வாய் என்பதைத் தாண்டி இன்று ஊடகங்கள் சர்வேக்களின் வழி இந்தக் கட்சி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்பது முதல் இந்தத் தொகுதியில் இவர் தான் ஜெயிப்பார் என்பது வரை சொல்லி விடுகிறார்கள். அதன் நேர்மையும் துல்லியமும் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவை இருந்தாலுமே இது வாக்களிக்கும் மக்களின் மனநிலையை ஓர் எல்லை வரை பாதித்து முடிவை மாற்றி விடுகிறது.

ஊரும் நாடும் என்ன சொன்னால் என்ன? அவரவர் பிரச்சனை அவரவர்க்கு.

அதனால் நீங்கள் விரும்பும் கட்சிக்கு வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்கள். அது தான் மனநிறைவான விஷயம். உதாரணமாய் உங்கள் தொகுதியில் நீங்கள் கம்யூனிஸ்ட்களுக்கோ ஆம் ஆத்மிக்கோ தான் போட விரும்புகிறீர்கள் என்றால் அவர் ஜெயிப்பதையோ அக்கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைப்பதையோ பற்றிக் கவலைப்படாமல் உங்கள் வாக்கினை அவர்களுக்கே பதிவு செய்யுங்கள்.

உங்களைப் போல ஒவ்வொருவரும் செய்தால் அவர்கள் வெற்றி பெறவும் கூடும். ஒருவேளை அவர்கள் தோற்றாலும் உங்கள் வாக்கு கணக்கு தான். அடுத்த முறை வியூகம் அமைக்க, அவர்களை மக்கள் / கட்சிகள் மதிக்க இது முக்கியமானது.

யார் கண்டார், அடுத்த தேர்தல் சர்வேக்களில் அக்கட்சி ஜெயிக்கும் என்று வர இம்முறை உங்களைப் போன்றவர்கள் அளிக்கும் வாக்கு காரணமாக இருக்கலாம்.

ஜெயிக்காதவருக்கு ஏன் ஓட்டுப் போட வேண்டும் என நினைத்து யாருக்கோ மாற்றிப் போட்டால் உங்கள் ஓட்டை இன்னொருவர் போடுவதாகவே அர்த்தம்.

10) நோட்டா?

அடுத்து தொகுதியில் யாருமே தகுதியான வேட்பாளர்கள் இல்லை, அதனால் ‘நோட்டா’ (NOTA – None Of The Above) எனப்படும் 49-ஓ போடுவது பற்றிய கேள்வி. ‘நோட்டா’  எவ்வளவு பதிவானாலும் மீதமிருக்கும் ஓட்டுகளை வைத்து அதிக வாக்கு பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். பிறகு ‘நோட்டா’ போட்டும் என்ன பயன் என்பதே பரவலாக இருக்கும் அந்தக் கேள்வி.

நீங்கள் சொல்லும் விஷயம் உண்மையே. ‘நோட்டா’வினால் நேரடி ஆதாயம் ஏதும் இல்லை தான். ஆனால் அதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவெனில் இருக்கும் அத்தனை வேட்பாளர்களும் தகுதியற்றவர்கள் என இத்தனை சதவிகிதம் பேர் நினைக்கிறார்கள் என்கிற முக்கியமான தகவல்.

ஒருவேளை அந்த எண்ணிக்கை கணிசமான சதவிகிதம் எனில் கட்சிகள் அடுத்து வேட்பாளர் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தும். ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என மக்களிடமிருந்து அறிய முயலும். இதெல்லாம் முக்கியமான விஷயங்கள்.

இதுவரை நடந்த எந்த தேர்தலையும் போல் அல்லாது இம்முறை ‘நோட்டா’ பதிவு செய்வது எளிமையானது, ரகசியமானது. அதனால் முன்பை விட அதிக ‘நோட்டா’ பதிவாக வாய்ப்பு உள்ளது. கட்சிகளே இதை உணர்ந்து தான் இருக்கின்றன.

அதனால் தகுதியான வேட்பாளரே இல்லை எனும் பட்சத்தில் ‘நோட்டா’ போடத் தயங்காதீர். ஜனநாயகத்தில் மாற்றம் விரைவில் வராதுதான். ஆனால் வரும்.

0

_45638507_d9e0bb6f-5583-4bf1-8e5c-b34bac6567feஜார்ர்ஜ் பெர்னார்ட்ஷா சொல்வதைப் போல் “Democracy is a device that insures we shall be governed no better than we deserve”. அதாவது ஒரு தேச மக்களின் தகுதி என்ன என்பதையே மக்களாட்சி பிரதிபலிக்கும். நாம் யோசிக்கக் கூடியவர்கள் எனில் சந்தேகமே இல்லாமல் நமக்கு நல்ல அரசு அமையும். அவ்வளவு தான் சங்கதி.

கடைசியாக ஒரு விஷயம். உங்கள் மனைவி, மக்கள், பெற்றோர், நண்பர்கள், மாணவர்கள், பணியாளர்களிடம் உங்கள் கருத்தைத் திணிக்காதீர்கள். குறிப்பிட்ட கட்சிக்கு / வேட்பாளருக்கு ஓட்டுப் போடு என மொட்டைக் கட்டளை இடாதீர்கள்.

அவர்களுக்கு யோசிக்க கற்றுக் கொடுங்கள், ஓட்டுப் போடும் முன் என்னென்ன விஷயங்களை எல்லாம் யோசிக்க வேண்டும் என சொல்லிக் கொடுங்கள். தேவைப்பட்டால் விவாதம் செய்யுங்கள். நிறைகுறைகளை எடுத்துக் கூறுங்கள். அவர்கள் யோசிக்கட்டும் அவர்கள் தீர்மானிக்கட்டும். அது அவர்கள் உரிமை. அவர்கள் ஓட்டை நீங்கள் போட முயற்சிக்காதீர். ஜனநாயகத்தின் சாரமே அதுதான்.

இப்போது நான் இந்தக் கட்டுரையையும் அதே தொனியில் தான் எழுதுகிறேன்.

0

2014 – கணிப்பும் கனவும் : 2

பகுதி 1

reincarnation-2குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அவரை குஜராத் மக்கள் இரண்டு முறை வாக்களித்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதை மதிக்கவேண்டும். என்றாலும் ஒருவேளை வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு காரணத்துக்காக வாக்களித்திருக்கக்கூடும். அதிலும் 50-60 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களித்திருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் மோடியை ஆதரிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்தானே. எனவே அந்தத் தீர்ப்பை நிரபராதித்துவத்துக்கான சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது.

நீதிமன்றத் தீர்ப்பையும் ஒரளவுக்குத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால், சட்டத்துக்கு ஒரு குற்றத்தை நிரூபிக்க தெளிவான சாட்சியங்கள் தேவைப்படும். அது கிடைக்கவில்லை என்பதால் ஒருவர் நிரபராதி என்று சொல்லிவிட முடியாது. எனவே, மோடிக்கு குஜராத் கலவரத்தில் பங்கில்லை என்று இவற்றின் அடிப்படையில் சொல்லிவிட முடியாது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில், அவருடைய பங்கு என்பது குற்றச் செயலை முன்னின்று நடத்தியதோ, தூண்டியதோ அல்ல. குற்றவாளிகளை அவர் பாதுகாத்திருக்கிறார்.

விசாரணை முறையாகத்தானே நடைபெற்றிருக்கிறது. சிறப்பு புலனாய்வு அமைப்பானது மோடியின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றுதானே. மோடியை எப்படியாவது வழக்கில் சிக்க வைத்துவிடவேண்டும் என்று நினைப்பவர்களின் வழிகாட்டுதலில் இயங்கிய ஒன்றுதானே.

அதுதான் சொன்னேனே… சட்டத்துக்கு தெளிவான சாட்சியங்கள் தேவை என்று. நீதி மன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு, அதற்கு முன்பாக, ஆட்சியில் இடம் கொடுத்திருக்கிறார். இவையெல்லாம் அவர் மீதான கறைகள். காரில் போகும்போது ஒரு  நாய்க்குட்டிக்கு அடிபட்டுவிட்டால் நமக்கு வருத்தம் இருக்கத்தானே செய்யும் என்ற அவருடைய பதிலில் குட்டி நாய்க்கு அடிபட்டாலே நமக்கு வருத்தம் ஏற்படும். பல மனித உயிர்கள் பலியானது என்றால் எவ்வளவு பெரிய வலி இருக்கும் என்று அவர் சொன்னதாக புரிந்துகொள்ள முடியும்தான். ஆனால், இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசியிருக்கலாம். இந்த இடத்தில் இந்த சாதுரியமான பதிலைச் சொல்லியிருக்க வேண்டாம். ஒட்டு மொத்தமாகவே கோத்ரா படுகொலையைத் தொடர்ந்து நடந்த விஷயங்களை அவர் நல்லவிதமாகக் கையாண்டிருக்கலாம்.

அது நடந்த உடனேயே துணை ராணுவத்தை அழைத்திருக்கிறார். காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் கூட சில இந்துக்களும் இறந்திருக்கிறார்கள். ஆட்சிப் பொறூப்பேற்று நான்கு மாதமே ஆகியிருந்த நிலை. ஒரு முதல்வரால் என்ன செய்ய முடியுமோ அதைத்தானே அவர் செய்திருக்கிறார்.

அவர் ஒரு சொரணையுள்ள இந்துவாக நடந்துகொண்டிருக்கிறார். கருணையுள்ள இந்துவாக நடந்து கொண்டிருக்கலாம். நான் பொதுவாக ஒரு விஷயம் சரியா தவறா என்ற கேள்வி வரும்போது காந்தி இந்த இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பார் என்று யோசித்துப் பார்ப்பேன். அவர் என்ன செய்திருப்பார்… இறந்த கர சேவகர்களின் அஸ்தியை தேசம் முழுவதும் பாத யாத்திரையாக எடுத்துச் சென்றிருப்பார். ஒவ்வொருவருக்கும் தேசத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு ராமர் கோயிலைக் கட்டியிருப்பார். அதைக் கட்டும் லட்சியத்தில்தானே அந்த உயிர்கள் பலிகொடுக்கப்பட்டிருந்தன. தேசம் முழுவதும் 58 ராமர் கோயில்களைக் கட்டியிருப்பார். அதுவும் எப்படி? கோயில் முதல் அஸ்திவாரச் செங்கல்லை ஒரு முஸ்லிமை விட்டு வைக்கச் சொல்லியிருப்பார். அந்தவகையில் கோத்ரா எரிப்பை இந்திய ஒற்றுமைக்கான அஸ்திவாரமாக ஆக்கிக் கொண்டிருந்திருப்பார். மத நல்லிணக்கத்தின் கோயிலை அவர் கட்டி எழுப்பியிருப்பார். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த மோடியும் அதையே செய்திருக்கலாம். இதையேதான் ராமர் மசூதி பிரச்னைக்கும் சொல்வேன்

ராமர் – மசூதியா?

ஆமாம். ராமர் கோயிலை இடித்துக் கட்டிய மசூதி.

ஆனால், அங்கு தொழுகைகள் எதுவும் நடந்திருக்கவில்லையே.

அது சரிதான். உண்மையில் ராமர் கும்மட்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

சரி, அந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்கலாம் என்று சொல்கிறீர்கள்.

அந்த இடத்தை தேசிய ஒற்றுமைக்கான இடமாக மாற்றிக்கொள்ளலாம். கலங்கரை விளக்கம் போல் பிரமாண்டமான தூண் ஒன்று. அதின் உச்சியில் திரிசூலம் போல் மூன்று கட்டுமானங்கள். திரிசூலத்தின் நடுக்காலில் ஐநூறு பேர் அமர்ந்து தியானம் செய்ய முடியும் படியான ஓர் அரங்கம். அதில் பாரத மாத சிலை. அதன் கையில் தேசியக் கொடி படபடவென பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும். திரிசூலத்தின் வலது பக்க ஆரக்காலில் இமயம் முதல் குமரி வரையிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களாலான அருமையான ராமர் கோயில். இடது பக்கத்தில் வெண் பளிங்கிலான மசூதி. இந்துக்களுக்கு காசி போல், இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல் இந்தியர்களுக்கான புனித யாத்திரை பூமியாக அந்த இடம் ஆக்கப்படும். இன்று தேசத்தை பிளவு படுத்திக்கொண்டிருக்கும் அதே இடமானது தேசத்தை ஒன்றுபடுத்தும் புண்ணியஸ்தலமாக ஆக்கப்படும். காந்தி இதைத்தான் செய்திருப்பார்.

இவையெல்லாம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நிஜத்தில் வேறு விஷயங்கள் அல்லவா நடக்கின்றன. இந்துத்துவம் என்பது வேறு முகத்துடன் அல்லவா வலம் வரத் தொடங்கியிருக்கிறது. இந்துத்துவம் என்றாலே விமர்சிக்க வேண்டிய ஒன்றாக அல்லவா ஆகிக் கொண்டிருக்கிறது.

அதுதான் ஏன் என்கிறேன்?

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்கவேண்டும். இந்தியாவில் இருப்பவர்கள் அனைவருமே இந்துக்கள் என்றெல்லாம் சொன்னால் அந்த இந்துத்துவத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இதற்கான பதிலைக் கொஞ்சம் விரிவாகத்தான் சொல்லியாக வேண்டும். எந்த இந்து அமைப்பும் இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்கள் ஓடிப் போய்விடவேண்டும் என்று சொல்லவில்லை.

சாவர்க்கரின், நாம் அல்லது நமது தேசியத்தின் விளக்கம் என்ற நூல்  அதைத்தானே சொல்கிறது.

இல்லை. அப்படிச் சொல்லவில்லை. இந்தியாவை உன் தேசமாக ஏற்காமல் இருந்தால் ஓடிப் போய்விடு என்கிறது. அதோடு ஆர்.எஸ்.எஸின் அந்த ஒற்றை புத்தகத்தை வைத்துக் கொண்டு அதை விமர்சிப்பதைவிட அவர்களுடைய ஆயிரக்கணக்கான செயல்பாடுகளை வைத்து அதை மதிப்பிடவேண்டும். அவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஆரம்பித்து மருத்துவமனைகளில் ஆரம்பித்து எந்த இடத்திலும் இஸ்லாமியர்களை அவர்கள் மறுதலிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸின் ஸ்தாபகர் ஹெட்கேவாரின் நினைவு மண்டபத்தைக் கட்டியதே இஸ்லாமியர்கள்தான். பாலா சாஹிப் தேவரஸ் காலகட்டத்தில் பல இஸ்லாமியர்கள் ஆர்.எஸ்.எஸில் சேர்ந்து பணி புரிந்திருகிறார்கள். இன்றும் இஸ்லாமியர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். ஒப்பீட்டளவில் செல்வாக்குடன் இருக்கும் வட இந்தியாவில் திரையுலகம் ஆரம்பித்து பொருளாதார அமைப்புகள் வரை பலவற்றில் இஸ்லாமியர்களே ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள்.

எப்படி இஸ்லாத்தின் புனித நூலான குர்ரானில் பிற மத வெறுப்பு வாசகங்கள் அபரிமிதமாக இருந்த நிலையிலும் நடைமுறையில் இந்திய முஸ்லிம்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்களோ அதைவிட குறைவான வெறுப்பு வாசகங்களே ஆர்.எஸ்.எஸ். நூல்களில் இருக்கின்றன. அவர்களுடைய நடவடிக்கைகள் கூடுதல் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துபவையாகவும் இருக்கின்றன.

ஆனால், தொகாடியாக்கள் வேறுவிதமாக அல்லவா செயல்படுகிறார்கள்.

திராவிட இயக்கத்தை தீப்பொறி ஆறுமுகங்களை வைத்து எடைபோடக்கூடாது. ஓவைஸிகளை வைத்து இஸ்லாமை எடைபோடக்கூடாது. வெறுப்புப் பேச்சுகளுக்கு அதற்குரிய முகியத்துவம் மட்டுமே தரவேண்டும். இந்துத்துவம் என்பதற்கான உண்மை அர்த்தத்தை பார்ப்போம். இந்து என்ற சொல் மதத்தை மட்டும் குறிக்கவில்லை. நிலவியல் ரீதியான அர்த்தமும் அதற்கு உண்டு. சிந்து நதியின் கீழ் பக்கம் வசித்த அனைவரையுமே இந்து என்று அழைத்தார்கள். அப்படித்தான் பாரதவாசிகளுக்கு இந்து என்ற பெயரே வந்தது. இரண்டாவதாக, கடந்த பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பாரதத்தில் இந்துக்கள்தான் இருந்திருக்கிறார்கள். சமணம், பவுத்தம் எல்லாம் இந்து மதத்தின் மறு வடிவங்கள்தானே. மேலும் இன்று இந்தியாவில் இந்து மதத்தோடு அவர்கள் கலந்துவிட்டனர். இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் முன்னோர்கள் எல்லாம் இந்து வேர்களைக் கொண்டவர்களே. அவர்கள் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டார்களா… பணத்துக்காக மதம் மாறினார்களா… இந்து மதத்தின் சாதிய இறுக்கத்தை எதிர்த்து மதம் மாறினார்களா என்பது ஆய்வுக்குரியதுதான். இந்து மதத்தின் சாதிய கட்டுமானத்தை எதிர்த்து மட்டுமே மாறியிருந்தார்கள் என்றால் இன்று இந்திய கிறிஸ்தவத்துக்குள்ளும் இஸ்லாமுக்குள்ளும் இருக்கும் சாதி அணுகுமுறையை ஒருவரால் எப்படி விளக்க முடியும் என்று தெரியவில்லை. இருந்தும் போராளிகள் சொல்வதுபோல் சாதிக் கட்டமைப்புக்கு எதிராகத்தான் மாறியிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம்.

மேலும் யேசுவையும் அல்லாவையும் வணங்கத் தொடங்கிவிட்ட பிரிவினரை பழைய அடையாளமான இந்து என்ற பழைய அடையாளத்துடன் இணைப்பது சரியல்லதான். என்னை அப்படி அடையாளப்படுத்தாதீர்கள் என்று ஒருவர் சொல்லும்போது அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆர்.எஸ்.எஸும் இதை ஏற்கத்தான் செய்கிறது. ஆனால், இந்துக் கலாசாரத்தை இகழாதீர்கள்…. இந்தியாவை உங்கள் தேசமாக கெளரவத்துடன் சொல்லுங்கள் என்றுதான் அது கேட்டுக் கொள்கிறது.

அதோடு இந்து என்றால் யார்? உருவ வழிபாட்டைப் பின்பற்றுபவர்… சிறு குழு மனப்பான்மை கொண்டவர்… ஒருவருடைய வாழ்க்கையை அவருடைய பிறப்பும் வாழும் சூழலும் தீர்மானிக்கும் என்று நம்புபவர்… இறந்தவர்களை வணங்குபவர்… சுருக்கமாகச் சொல்வதானால், இந்து என்றால் பிற குழுக்களின் வாழ்க்கைப் பார்வைகளை, வழிபாட்டு வழிமுறைகளை மதிப்பவர் என்று பொருள். அதாவது பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்பவர் என்று பொருள். கிறிஸ்தவமும் இஸ்லாமும் அப்படிச் செய்பவை அல்ல. அவை ஒற்றைப் படைத்தன்மையை வலியுறுத்துபவை. அவற்றின் மரபணுவிலேயே பிற மத ஒறுப்பு உண்டு. இந்தியாவில் இருப்பதானால், நீங்கள் மத நல்லிணக்கத்தைப் பின்பற்றியாகவேண்டும். பிற மத நம்பிக்கைகளை மதித்தாகவேண்டும். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இதைத்தான் இந்துவாக இரு என்று சொல்கிறோம். பிற மத நம்பிக்கைகளை மதி என்று சொல்வதும் இந்துவாக இரு என்று சொல்வதும் ஒன்றுதான். இந்துத்துவத்திம் அந்த அம்சத்தை மட்டும் பிற மதத்தினர் ஏற்றுக்கொண்டால் போதும் என்றுதான் இந்துத்துவம் சொல்கிறது.

நான் மதத்தால் முஸ்லிம்… கலாசாரத்தால் இந்து என்று வெளிப்படையாகச் சொன்ன இஸ்லாமியர்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். கம்பராமாயணத்துக்கு விளக்க உரை எழுதிய நீதிபதி இஸ்மாயில், சபரி மலையில் தர்ம சாஸ்தாவைத் தூங்க வைக்க தினமும் பாடப்படும் ஹரிவராசனத்தைப் பாடிய ஜேசுதாஸ், இந்துஸ்தானி இசையில் உச்சத்தை எட்டிய கலைஞர்கள் என இந்து கலாசாரத்துக்கு வளம் சேர்த்த எத்தனையோ இஸ்லாமியர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா என்று பாடியவரே ஒரு இஸ்லாமியர்தானே… இஸ்லாமிய விழாக்களில் உற்சாகத்துடன் பங்கேற்கும் இந்துக்கள் ஏராளம் உண்டே… நோன்புக் கஞ்சி குடிக்காத ஒரு இந்து அரசியல் தலைவரைக் காட்டுங்கள். இரண்டு கலாசாரங்கள் கலக்கும்போது பரஸ்பர மாற்றங்கள், கொடுக்கல் வாங்கல்கள் இருக்கத்தானே செய்யும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், சாதி அமைப்பு அனைவரையும் பிரித்து வைக்கிறது என்று சொல்லித்தான் இந்து மதத்தையே விமர்சிக்கிறார்கள். அதே இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பு அனைத்து சாதிகளை மட்டுமல்ல அனைத்து  மதத்தினரையும் ஒன்று சேர்த்து அரவணைத்து ஓர் அடையாளத்தை முன்வைத்தால் அப்போதும் அதை வெறுக்கிறார்கள். அதுவும் இந்து சக்திகள் கேட்பது மிகவும் குறைவான ஒன்றுதானே. பாகிஸ்தானில் இருக்கும் ஒரு இந்துவை நீ பாகிஸ்தானி என்பதை மட்டும் ஒப்புகொள் என்று மட்டுமா கேட்டுக்கொண்டார்கள். முஸ்லிமாக மாறிவிடு என்று சொல்லி அல்லவா மாற்றிவிட்டார்கள். இந்துத்துவம் அப்படி எதையும் சொல்லவில்லையே. உங்களுடைய இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றிக் கொள்ளுங்கள் என்றுதானே இப்போதும் சொல்கிறது.

இன்றைக்கு இந்து என்ற பெயரை ஒப்புக்கொள் என்பார்கள். நாளை இந்துவாக மாறிவிடு என்பார்கள்.

இந்த பயம்தான் மிகையானது. இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அது இஸ்லாமிய இந்தியாவாக மாறிவிடும் என்ற பயத்தில் இருக்கும் நியாயத்தில் துளி கூட இந்த பயத்தில் கிடையாது. ஏனென்றால், இந்து ஒருபோதும் அப்படியான எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. சாதிகளுக்குள்ளேயே கூட ஒவ்வொரு பிரிவினரின் மதிப்பீடுகளை அவர்கள் தக்க வைத்துக்கொள்ள இடமளித்திருக்கிறது. அப்படி இருப்பவர்கள் பிற மதத்தினர் மீது அதைத் திணிப்பார்களா என்ன? பிரிவினை காலகட்டத்தில் நடந்ததையே எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பிரிவினையின் தீ நாக்குகள் பாகிஸ்தான் முழுவதும் பற்றி எரிந்தன. அனைத்து முஸ்லிம் கட்சிகளும் மத அமைப்புகளும் தெருவில் இறங்கி நர வேட்டையாடின. ஆனால், மாறாக இந்தியாவில் என்ன நடந்தது. இந்துகளின் கட்சிகள் என்ன செய்தன? இந்து மத அமைப்புகள் என்ன செய்தன… ஆர்.எஸ்.எஸ் என்ன செய்தது? இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதி நீங்கலாக 90 சதவிகித இந்தியாவில் இந்துக்களின் மத்தியில் இருந்த இஸ்லாமியர்களில் ஒரு சிறு கீறலாவது விழுந்ததா? பாகிஸ்தானில் 90 சதவிகித முஸ்லிம்கள் மத்தியில் மாட்டிக் கொண்டு பத்து சதவிகித இந்துக்களில் ஒருவராவது விட்டு வைக்கப்பட்டாரா..?

பிரிவினை போன்ற கோரச் செயல் நடந்தபோதே அமைதியாக இருந்த பெரும்பான்மை அல்லவா இந்துப் பெரும்பான்மை. இன்றும் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் வெடிகுண்டு வைத்துக் கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கையையும் இந்து தீவிரவாதத்தால் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். முற்போக்காளர்களும் இன்ன பிற போராளிகளும் என்னதான் இந்துவுக்கு கோரைப் பல்லையும் கூர் நகங்களையும் ஒட்டினாலும் அது அவர்கள் உடம்பில் ஒருபோதும் ஒட்டாது. இவ்வளவு ஏன் நீங்கள் கட்டம் கட்டித் தாக்கும் மோடியிஸம் உச்சத்தில் இருக்கும் குஜராத்திலேயே இஸ்லாமியர்கள் நலமாகத்தானே இருக்கிறார்கள். மோடியின் இந்துத்துவமும் நீங்களாக அடிக்காதவரை திருப்பி அடிப்பதில்லைதானே. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், குஜராத் கலவரம் நடந்ததால்தான் இன்று இந்துத்துவம் விமர்சிக்கப்படுகிறது என்றில்லை. அதற்கு முன்பும்கூட இதே வேகத்தில் விமர்சிக்கப்பட்டுத்தான் வந்தது. குஜராத் கலவரம் அவர்களுடைய வெறுப்புப் பிரசாரத்துக்கு சிறு நியாயத்தை அளித்துவிட்டிருக்கிறது. அவ்வளவுதான்.

மோடியிஸத்தில் இவ்வளவு நியாயங்கள் இருப்பதாகச் சொல்லும் நீங்கள் பிறகு எதற்கு மோடி இஸ்லாமியரைப் பதவியில் அமர்த்திவிட்டு குஜராத்துக்குச் சென்றுவிடவேண்டும் என்கிறீர்கள்?

காரணம் வேறொன்றுமில்லை. தேசத்தை சீர் குலைக்கும் சக்திகள் மோடியை காரணம் காட்டி தங்கள் நாச வேலைகளைத் தீவிரப்படுத்தக்கூடும். மோடியினால் உற்சாகம் பெற்றிருக்கும் இந்து சக்திகள் அதைச் சரியாக எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்குக் குறைவுதான். எனவேதான் மோடி கொஞ்சம் பின் அரங்குக்குச் செல்வது நல்லது என்று நினைக்கிறேன். கல்லெறிந்தால் கொத்தும் என்ற பயம் இருந்தால் போதும். எப்போதும் படத்தைத் தூக்கிக்கொண்டு திரியத் தேவையில்லை.

0