முட்டுச்சந்தில் பா.ம.க : ஆழம் ஜூன் 2013

june-2013

ஆழம் ஜூன் 2013 இதழில் வெளிவந்துள்ள படைப்புகள் குறித்து ஓர் அறிமுகம்.

கவர் ஸ்டோரி

பாமக : முன்னேற்றமா முட்டுச்சந்தா? – ஆர். முத்துக்குமார்

 • சாதியப் பாதை, கூட்டணிப் பாதை, மாற்றுப்பாதை என்று பா.ம.க இதுவரை தேர்ந்தெடுத்து பயணம் செய்துள்ள மூன்று பாதைகளையும் அலசும் கட்டுரை. பா.ம.கவின் எதிர்காலம் இனி எப்படியிருக்கும்? டாக்டர் ராமதாஸ் அரசியல் அரங்கிலிருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டாரா?

‘தப்பு செய்தவன் விசாரணை கோருவானா?’ கவிஞர் ஜெயபாஸ்கரன் பேட்டி – வித்தகன்

 • பா.ம.க. தரப்பு நியாயங்களை முன்னிறுத்துகிறார் அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெயாகஸ்கரன்.

கலவரங்களும் இழப்புகளும் – எஸ். சம்பத்

 • ஒவ்வொருமுறை சாதிக் கலவரம் (அல்லது வேறு கலவரங்கள்) வெடிக்கும்போதும் பேருந்துகள் தாக்கப்படுவது வழக்கம். இதற்கு யார் நஷ்ட ஈடு தருகிறார்கள்? பதிவுசெய்யப்படும் வழக்குகள் என்ன ஆகின்றன?

சாதிக்கட்சி தேவையா? – சி. இராஜாராம்

சாதியை முன்வைத்து டாக்டர் ராமதாஸ் முன்னெடுத்துள்ள போராட்டம் தமிழகத்தை எங்கே அழைத்துச் செல்லும்? வரலாறு என்ன சொல்கிறது? வரலாற்றில் இருந்து நாம் பாடங்கள் கற்கிறோமா அல்லது அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருக்கிறோமா?

விளையாட்டு / ஊழல்

ஐபிஎல் சூது கவ்வும் – ச.ந. கண்ணன்

 • கிரிக்கெட்டுக்கும் ஊழலுக்கும் உள்ள தொடர்பையும் இதற்கு முன்னால் சர்ச்சையில் சிக்கியவர்களையும் விவரிக்கும் கட்டுரை.

பேட்டி 

மந்தைகளை உருவாக்கும் கல்வி தேவையில்லை! – வசந்தி தேவி

 • இன்றைய கல்விமுறையில் உள்ள பிரச்னைகள் குறித்து முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியுடன் பி.ஆர். மகாதேவன் மேற்கொண்டுள்ள உரையாடல்.

அரசியல் / சமூகம்

 • கர்நாடகத்தில் பா.ஜ.க தோற்றது ஏன்? – ஜனனி ரமேஷ்
 • சிபிஐ சுதந்தரமானதா? S.P. சொக்கலிங்கம்
 • குழந்தைகள்மீதான வன்முறைகள் குறித்து ரஞ்சனி நாராயணன்
 • டெல்லி குற்றத் தலைநகர் ஆனது ஏன் என்பதை ஆராய்கிறார் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ருஷ்தா நக்வி.
 • மின்சாரப் பற்றாக்குறையைச் சரிசெய்வது எப்படி? தமிழகம் குஜராத்திடம் இருந்து கற்கவேண்டிய பாடங்கள் என்னென்ன? புள்ளிவிவரங்களுடன் அலசுகிறார் லஷ்மண பெருமாள்.
 • 2002 குஜராத் கலவரம் மட்டும்தான் இந்தியாவில் நடைபெற்ற ஒரே வன்முறைச் சம்பவமா, மோடி மட்டும்தான் ஒரே வில்லனா என்று கேள்வி எழுப்புகிறார் மகாதேவன்.
 • சாரதா நிறுவனத்தின் சீட்டுப் பண மோசடி பற்றி விரிவாக அலசுகிறார் ரமணன்.
 • நேருவின் தவறு தொடர்கிறது : EPW இதழில் நெவில் மாக்ஸ்வெல் எழுதிய இந்திய-சீன போர் அபாயம் குறித்த கட்டுரையின் தமிழாக்கம்.

0

ஆழம் இணையத்தளம்.

ஆழம் முந்தைய இதழ்கள் pdf வடிவில்.

சந்தா விவரம்.

விசாரணை கமிஷன் / பகுதி 2

ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 6

காட்சி எண் 8

judgeஇடம்: மக்கள் கண்காணிப்பு அலுவலகம்

நேரம்: மதியம் 12.00 மணி

யாருமில்லாத அறை ஒன்றில் தொலைபேசி ஒலிக்கிறது. சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து தொலைபேசியை எடுக்கிறார்.

எதிர்முனை : ஐய்யா… செந்தமிழ் நகர்ல இருந்து பேசறோம் ஐய்யா… எங்களை போலீஸ்காரங்க சுற்றி வளைச்சு அடிக்கறாங்கய்யா… உடனே புறப்பட்டு வாங்க…. இல்லைன்னா எல்லாரையும் கொன்னு பொதைச்சிடுவாங்க…

தொலைபேசியை எடுத்தவர் : என்னது போலீஸ்காரங்க அடிக்கறாங்களா…

எதிர்முனை : ஆமாம் ஐய்யா….

தொலைபேசியை எடுத்தவர் : சரியா சொல்லுங்கம்மா…. வேற யாரோ கும்பல் உங்களை அடிக்கறாங்க… போலிஸை அனுப்பனும் அதுதான… நீங்க போலீஸ் ஸ்டெஷனுக்குப் போன் போடறதுக்கு பதிலா எங்களுக்குப் போட்டிருக்கீங்க. நாங்க ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்..

எதிர்முனை : இல்லை ஐய்யா… நாங்க சரியாத்தான் சொல்லறோம். போலீஸ்தான் எங்களை விரட்டி அடிக்குது. எங்க டாக்டர் ஐய்யாதான் எதுனா பிரச்னைன்னா உங்க கிட்ட போன் போடச் சொல்லியிருந்தாரு…

தொலைபேசியை எடுத்தவர் : சரி. சரி… பதற்றப்படாதீங்க. நாங்க உடனே புறப்பட்டு வர்றோம். தைரியமா இருங்க.

தொலைபேசியை வைத்தவர் உடனே காவல் நிலையத்துக்குத் தொடர்பு கொள்கிறார்.

மக்கள் கண்காணிப்பு இயக்கப் பிரமுகர் :   ஹலோ சார் நான் வின்சன்ட் பேசறேன்.

சப்-இன்ஸ்பெக்டர்      :        என்னடா இது இன்னும் உன்கிட்ட இருந்து போன் வரலையேன்னு பாத்தேன். புறப்பட்டு வந்து சேரு.

வின்சன்ட்       :        புறப்பட்டாச்சு சார். உங்ககிட்ட தகவல் சொல்லிட்டுப் போலாமேன்னுதான்… அப்பறம் இன்னொரு உதவி பண்ணணும் நீங்க.

சப்-இன்ஸ்பெக்டர்      :        சொல்லு. நீ கேட்டு மாட்டேன்னு சொல்லுவேனா நான். உன்னை மாதிரியான மக்களுக்குச் சேவை செய்யத் தானப்பா நாங்களெல்லாம் இருக்கோம்.

வின்சன்ட்       :        ஆமாம். ஆமாம். ஊர்ல எல்லாம் இப்படித்தான் பேசிக்கறாங்க. வேற ஒண்ணுமில்ல. நம்ம சண்டைக்காரங்கறது கொஞ்சம் வெளிப்படையா தெரிஞ்சா நல்லதுன்னு தோணுது.

சப்-இன்ஸ்பெக்டர்      :        அதான நீ மீட்டிங்ல எல்லாம் போலீசோட ரிப்போர்ட்டர்களைப் போட்டு வாங்கு வாங்குன்னு வாங்கறியே.

வின்சன்ட்      :        (சிரித்தபடியே) அது இருக்கு. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் காட்டமா வேணும். நீங்க எங்கள அந்த இடத்துக்குப் போக விடாம தடுக்கணும். அவ்வளவுதான்.

சப்-இன்ஸ்பெக்டர்      :        அவ்வளவுதான… பண்ணிட்டாப் போச்சு. வேணும்னா ரெண்டு அடி அடிக்கணும்னாலும் சரி செய்யறேன். எனக்கு பிரச்சனையில்ல. வசதி எப்படி?

வின்சன்ட்       :        (போலியாக நடுங்கியபடியே) ஐய்யய்யோ, அதெல்லாம் வேண்டாம். லேசா தடுத்தாப் போதும். நாலஞ்சு கோஷங்களப் போட்டுட்டு நாங்க திரும்பிடுவோம். புள்ள குட்டிக்காரங்க. பாத்துப் பண்ணுங்க.

(போனை வைக்கிறார். அவர் சொன்னது போலவே சம்பவ இடத்துக்குள் அவர்களை நுழைய விடாமல் தடுக்கிறார்கள். அவர்களும் தங்கள் கண்டனத்தை எழுப்பி விட்டுத் திரும்புகிறார்கள்).

 காட்சி எண் 9

இடம்: மலைப் பகுதி கிராமம்

நேரம்: காலை 11.00 மணி

டாக்டரும் மக்களும் கூட்டமாகக் கூடி இருக்கிறார்கள். நிருபர்களும், அரசாங்க அதிகாரிகளும், காவல் துறை அதிகாரியும், வீடியோ கிராஃபரும் வந்து சேருகிறார்கள். அவர்கள் அமர்வதற்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. எல்லோரும் அமர்கிறார்கள். சிறிது நேரத்தில் தேநீர் வருகிறது. அருந்திய பின் அதிகாரிகள் சேதங்களைப் பார்வையிடப் புறப்படுகிறார்கள். டாக்டர் ஒவ்வொன்றையும் விளக்கியபடியே வருகிறார். வீடியோ கிராஃபர் டாக்டர் சொல்லும் இடங்களை விட்டு விட்டு சேதம் குறைவாக இருக்கும் பகுதிகளைப் படம் பிடிக்கிறார். டாக்டர் அது குறித்து காவல் துறையினரிடமும், அதிகாரிகளிடமும் முறையிடுகிறார். “எல்லா இடங்களையும் கவர் பண்ணுப்பா” என்று உத்தரவிடுகிறார் காவல்துறை அதிகாரி. வீடியோகிராஃபர் சிரித்தபடியே டாக்டர் சுட்டிக் காட்டும் இடங்களையும் படம் எடுக்கிறார். ஆனால், தந்திரமாக கேமராவை ஆன் செய்யாமல் படம் பிடிப்பது போல் பாவனை செய்கிறார். பாதிக்கப்பட்டவர்களைத் தனித்தனியா அழைத்து வந்து தங்கள் கண்ணீர் கதைகளைச் சொல்லச் சொல்லி பதிவு செய்து கொள்கிறார்கள். எல்லாம் முடிந்தபின் அதிகாரிகளும் நிருபர்களும் புறப்பட்டுச் செல்கிறார்கள்.

 காட்சி எண் 10

இடம்: மக்கள் கண்காணிப்பு இயக்ககம்

நேரம்: மாலை 4.00 மணி

காவல் துறையைச் சார்ந்த இருவரும் வீடியோ கிராஃபரும் மக்கள் கண்காணிப்பு இயக்கத் தலைவரும் பதிவு செய்யப்பட்ட வீடியோவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவற்றில் காவல் துறைக்கு எதிராக இருக்கும் காட்சிகளை வெட்டி எறிகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த கண்ணீர் வாக்குமூலங்கள் முற்றாகச் சிதைக்கப்படுகின்றன. இறுக்கமான முகங்களுடன் எடிட்டிங் அறையை விட்டு வெளியே வருகிறார்கள். இனி கவலை இல்லை என்பது போல் ஒரு புன்னகை அவர்கள் முகத்தில் படர்கிறது. காவலர்கள் தங்கள் உயர் அதிகாரிக்கு அங்கிருந்தே போன் செய்து தகவலைத் தெரிவிக்கிறார்கள். மக்கள் கண்காணிப்பு இயக்கத் தலைவரும் பேசுகிறார். எல்லாம் முடிந்தபின் இரண்டு காவலர்களும் கை குலுக்கி விடை பெற்றுச் செல்கிறார்கள்.

 காட்சி எண்  11

இடம்: மலைப் பகுதி கிராமம்

நேரம்: இரவு

ஊர் மக்கள் கூட்டமாகக் குழுமி இருக்கிறார்கள். மக்கள் கண்காணிப்பு குழுவின் வக்கீல்கள் அவர்களைச் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கிறார்கள். மக்கள் நடந்ததைச் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். வக்கீல்கள், நீதிபதி முன் தைரியமாகப் பேசத் தயார்படுத்துகிறோம் என்ற போர்வையில் அவர்களது பேச்சின் ஜீவனை மட்டுப்படுத்தி தட்டையான மொழியாக ஆக்குகிறார்கள்.

வக்கீல் :        என்னம்மா நடந்தது?

பெண்  :        போலீஸ்காரங்க எங்களை நாயை அடிக்கற மாதிரி வெரட்டி வெரட்டி அடிச்சாங்கய்யா.

வக்கீல் :        அதாவது போலீஸ்காரங்க உங்கள அடிச்சாங்க. அப்படித்தான…

பெண்  :        ஆமாங்கய்யா.

வக்கீல் :        அவங்க போலீஸ்தான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?

பெண் : இது என்ன கேள்வி ஐய்யா… காக்கி சட்டை போட்டுட்டு லத்தியை எடுத்துக்கிட்டு வேற யாருங்க வருவாங்க.

வக்கீல் : அப்படிச் சொல்ல முடியாதும்மா… போலீஸ்காரங்க மேல பழியைப் போடறதுக்காக வேற ஆட்களும் அப்படி வந்திருக்கலாம்ல…

அந்தப் பெண் குழம்புகிறார்.

வக்கீல் : சரி அதை விடுங்க. ஏம்மா அடிச்சாங்க.

கூட்டத்தில் இருந்து ஒரு குரல் :        அதைப் போலீஸ்கிட்ட போய் கேளுங்கள்.

வக்கீல் :        (திடுக்கிட்டுப் பின் சுதாரித்து) யாருப்பா அது இப்படிப் பேசறது நாளைக்கு ஜட்ஜ் ஐயா முன்னாலயும் இப்படித்தான் பேசுவியா.

(சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார்கள்).

வக்கீல் :        வந்தவங்க ஏம்மா அடிச்சாங்க? நீங்க என்ன பண்ணீங்க?

பெண்  :        நாங்க எதுவுமே பண்ணலைய்யா. ரோடு போட்டுக் கொடுங்கன்னு கேட்டோம், காண்ட்ராக்டர் ஐயா தப்புத் தண்டா பண்றாரு, மாத்துங்கன்னு சொன்னோமய்யா. அதுக்குப் போய் இப்படிப் பண்ணிட்டாங்கய்யா. அவங்கள நிக்க வச்சுச் சுடணுங்கய்யா…

வக்கீல் :        இங்கப் பாருங்கம்மா. நீங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. இப்ப நடக்கப் போறது விசாரணை. அதாவது என்ன நடந்ததுன்னு விசாரிக்கப் போறாங்க. ஜட்ஜ் ஐயா தான் முடிவு பண்ணனும். தப்பு நடந்திருக்கா, யார் பண்ணினாங்கன்னு நீங்களே தீர்ப்பு சொல்லக் கூடாது. சரியா?

பெண்  :        இன்னும் என்னத்தய்யா விசாரிக்க வேண்டிக் கிடக்கு… அதான் பாக்கறீங்களே.

வக்கீல் :        அதில்லைம்மா எதுவுமே முறைப்படி நடக்கணும்.

கூட்டத்தில் இருப்பவர்  :        என்னய்யா முறை. உயிருக்குப் பயந்து ஓடறவனை வெரட்டி வெரட்டி அடிக்கறதுதான் முறையா. கூடி நிக்கறவங்கள ஒரு எச்சரிக்கைகூட செய்யாம சுட்டு விரட்டறதுதான் முறையா. முறையைப் பத்தி எங்ககிட்ட வந்து பேசாதீங்க. அங்க போய் பேசுங்க.

வக்கீல் :        இப்படி ஆத்திரப்பட்டுப் பேசறதால ஒண்ணும் பிரயோசனமில்லை. ஜட்ஜ் ஐயா கிட்ட பேசும் போது நிதானமா, கோபப்படாம பேசணும். அழக்கூடாது. நடந்தத மட்டும் சொல்லணும்.

பெண்  :        நாங்க என்னய்யா வேணும்னா அழறோம். நடந்தத நினைச்சுப் பார்த்தா அழுகதான்யா வருது. கோபம்தான்யா வருது.

வக்கீல் :        வரக் கூடாது. அப்படிச் செய்யக் கூடாது. உங்களுக்கு நீதி கிடைக்கணுமா வேண்டாமா?

பெண்  :        கிடைக்கணும்.

வக்கீல் :        நஷ்ட ஈடு கிடைக்கணுமா? வேண்டாமா?

பெண்  :        கிடைக்கணும்.

வக்கீல் :        அப்படின்னா நாங்க சொல்றபடி கேளுங்க. உங்களுக்கு நல்லது செய்யத்தான் நாங்க இருக்கோம். காவல்துறையில இருக்கறவங்களை அடையாளம் காட்டினா என்ன பண்ணுவான். நம்ம மேல இன்னும் கோபப்படுவான். ஏற்கெனவே ஐம்பது வீடு தாக்கப்பட்டிருக்கு. நாம கூட பத்திருபது வீட்டை வேற அடிச்சுப் போட்டு கணக்கைக் கூட்டிக் காட்டியிருக்கோம். அது அவங்களுக்குத் தெரிசிருச்சு.

பெண் : நாங்க அதெல்லாம் வேண்டாம்னுதான சொன்னோம். உங்க ஆளுங்கதான் வந்து அப்படிப் பண்ணிணீங்க.

வக்கீல் : அதெல்லாம் முடிஞ்ச கதை. இப்ப நாங்க சொல்றபடி கேளுங்க.  ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு லட்சம் நஷ்ட ஈடு. செத்துப்போனவங்களுக்கு ஏதாவது வேலைகூட வாங்கித் தர முயற்சி செய்திட்டிருக்கோம். பொறுமையா இருங்க.

உரையாடல் தொடர்கிறது.

 காட்சி எண் 12

இடம்: அச்சகம்

நேரம்: மாலை 5.00 மணி

மக்கள் கண்காணிப்பு இயக்கத்தின் தலைவரும் உறுப்பினர்கள் சிலரும் அச்சகத்தில் அமர்ந்திருக்கின்றனர். அவர் முன்னால் இருக்கும் மேஜையில் ஒரு போஸ்டர் பிரதி விரிக்கப்பட்டுள்ளது. மக்கள் கண்காணிப்பு இயக்கத் தலைவர் சில திருத்தங்கள் சொல்கிறார். திருத்தப்பட்ட போஸ்டர் அச்சாகி வந்து சேர்கிறது. போஸ்டர்களை எடுத்துக் கொண்டு ஒருவன் செல்கிறான். பின்னாலேயே பசை வாளியை எடுத்துக் கொண்டு சிலர் உடன் செல்கிறார்கள். நகரின் முக்கியமான இடங்களில் எல்லாம் அந்தப் போஸ்டரை ஒட்டுகிறார்கள்.

காவல் துறையின் அராஜகத்தைக் கண்டித்தும்

உண்மை நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்லவும்

மக்கள் காண்காணிப்புக் குழுவின் சார்பில்

விசாரணைக் கமிஷன்.

(மக்கள் தீர்ப்பே… மகேசன் தீர்ப்பு)

பங்குபெறுவோர்

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு. ரமேஷ் கெளரிகர்

காவல் துறை ஆணையர் திரு. நல்லசிவம்

வருவாய் துறை ஆணையர் திரு. பாஸ்கரன்

பொது மக்கள் அனைவரும் தவறாமல் வருக.

அவர்கள் ஒட்டி விட்டுப் போன சிறிது நேரத்தில் அவற்றின் மேல் புதிய திரைப்படம் ஒன்றின் போஸ்டர் ஒட்டப்படுகிறது.

காட்சி எண் 13

இடம் : பத்திரிகை அலுவலகம்

நேரம் : காலை

தேங்கி நிற்கும் பெரிய குட்டைக்கு அருகில் இருக்கிறது அந்தப் பத்திரிகை அலுவலகம். அதன் பெரிய கிரில் கேட் முடப்பட்டே இருக்கிறது. நடந்து வருபவர்களும் சைக்கிள், பைக்கில் வருபவர்களும் சின்ன இடுக்கு ஒன்றின் வழியாக உடலை நெளித்து நுழைந்து செல்கின்றனர். தொழிலாளர்களின் சங்கக் கொடி கேட்டை ஒட்டி ஒரு ஓரமாக பயந்து பயந்து பறந்து கொண்டிருக்கிறது. துரத்தில் ஒரு கார் ஹார்னை ஒலித்தபடியே விரைந்து வருகிறது. அந்த ஒலியைக் கேட்டதும் அலுவலகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தவர்களிடையே பதற்றம் ஏற்படுகிறது. செக்யூரிட்டிகள் விரைந்து ஓடிப் போய் கிரில் கேட்டை அகலத் திறக்கின்றனர். கார் மெதுவாக உள்ளே நுழைகிறது. மூடிய கார் கதவுகளுக்கு சல்யூட் வைக்கின்றன அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும். வாசலில் காத்துக் கொண்டிருந்த ஒரு சீருடை அணிந்தவர் கார் கதவைத் திறந்துவிடுகிறார். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை சகிதம் இறங்கியவர் செல்போனில் யாருடனோ பேசியபடியே நடக்க ஆரம்பிக்கிறார். அவர் நடந்து செல்லும் பாதையில் குறுக்கிட்ட கதவுகள் உடன் வந்த சீருடைப் பணியாளரால் திறந்துவிடப்படுகிறது. எதிரில் நடந்து வந்தவர்கள் ஒதுங்கி வழிவிடுகின்றனர். நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நின்கின்றனர்.

அவர்கள் தெரிவித்த வணக்கத்துக்கு செல்போனில் பேசியபடியே அலட்சியமாக கை அசைத்தபடி நடக்கிறார் காரில் வந்தவர். ஒரு இடத்தில் பத்திரிகையின் நிறுவனரின் உருவப்படம் பிரமாண்டமாக ப்ளோஅப் செய்யப்பட்டிருக்கிறது. அதன் முன்னால் கண்ணை மூடியபடி சிறிது நேரம் நிற்கிறார். பின் மேனேஜிங் டைரக்டர் என்று எழுதப்பட்டிருந்த அறைக்குள் நுழைகிறார். அவரது லாப்டாப் கம்பூட்டரை ஒரு கையிலும் பிளாஸ்கை இன்னொரு கையிலும் பிடித்தபடியே சீருடைப் பணியாளரும் உள்ளே நுழைகிறார். அறையின் வாசலில் ஒருவர் பெரிய பேப்பர் ஒன்றை கையில் வைத்தபடி காத்துக் கொண்டிருக்கிறார். வாசலில் அமர்ந்திருந்த பி.ஏ. இண்டர்காம் ஒலித்ததும் எடுத்துப் பேசிவிட்டு உள்ளே நுழைகிறார். சிறிது நேரத்தில் கையில் பேப்பருடன் நின்று கொண்டிருந்தவரை உள்ளே அழைக்கிறார். அது ஒரு பெரிய போஸ்டர்… மேஜையில் அதை விரிக்கிறார். அருகில் இருந்தவரிடம் எம்.டி. சில திருத்தங்களைச் சொல்கிறார். பி.ஏ. பக்கம் திரும்பி எடிட்டரை வரச் சொல்லு என்கிறார். பி.ஏ. போய் அவரை அழைத்து வருகிறார். வரும் எடிட்டர் மேஜையில் இருக்கும் போஸ்டரைப் பார்க்கிறார்.

எம்.டி. : இது இவ சொன்னதுதான…?

எடிட்டர் : ஆமாம் சார்…

எம்.டி. : கேஸட் நீங்க கேட்டீங்கள்லயா…

எடிட்டர் : ஆமாம் சார்.

எம்.டி. : தெளிவா ரெக்கார்டிங் ஆகியிருந்தது இல்லையா…

எடிட்டர் : ஆமா சார். கொஞ்சம் தைரியமான பொண்ணுதான். அதுவும் போக மார்கெட்டைத் தக்க வெச்சுக்க இந்த மாதிரி பேசறது செய்யறது சகஜம் தான…

எம்.டி. : எனக்கு என்ன சந்தேகம்ன்னா இப்பயும் அதைத்தான செய்யறா…

எடிட்டர் சத்தம் போட்டுச் சிரிக்கிறார்.

எம்.டி : கொஞ்சம் தள்ளிப் பிடி என்கிறார் பணியாளரிடம். அவர் அதை எடுத்துக் கொண்டு போய் எதிர் சுவரில் இருந்த போர்ட் ஒன்றில் பிரஸ் பட்டன் மூலம் ஒட்டுகிறார்.

நான் நடிக்க வந்திருக்காவிட்டால் விபச்சாரியாகி இருப்பேன்- நம்பர் ஒன் நடிகையின் நம்பர் ஒன் பேட்டி என்று கொட்டை எழுத்துகளில், எழுதப்பட்டிருக்கிறது. மேலே ஒரு நடிகை கோன் ஐஸ் ஒன்றை ரசித்து ருசித்துச் சாப்பிட்டபடி இருக்கிறாள்.

எம்.டி. தன் மேஜையில் சென்று அமர்கிறார். எடிட்டர் முன்னால் இருக்கும் நாற்காலியில் அமர்கிறார்.

அப்போது அறைக் கதவு தட்டப்படுகிறது.

எம்.டி: யெஸ்… கமின்.

ஒரு பெண் கதவைத் திறந்து உள்ளே நுழைகிறாள்.

எடிட்டருக்கும் எம்.டிக்கும் குட்மர்னிங் சொல்கிறாள்.

பெண் : விசாரனைக் கமிஷன் கவர் பண்ணப் போறேன் சார்…

எம்.டி.: கூட யார் வர்றா…

பெண் : ஜெனிஃபரும் எழிலும் சார்.

எம்.டி. சிறிது நேரம் அவளையே கூர்ந்து பார்க்கிறார்.

எம்.டி.: யார் இந்த அசைன்மென்ட்ட உங்களுக்கு அலாட் பண்ணினது…

பெண் : சிவகுமார் சார்தான் சார்.

எம்.டி. : சிவாவை வரச் சொல்லிட்டுப் போ…

பெண் : ஓ.கே.சார். அப்போ நாங்க பொறப்படலாம் இல்லையா…

எம்.டி. : எத்தனை மணிக்கு ஆரம்பம்

பெண் : 9.00 மணிக்கு சார். இப்ப மணி 7.30 ஆகிறது. இப்ப புறப்பட்டுப் போனாத்தான் சரியா இருக்கும்.

எம்.டி. : கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் சிவாகிட்ட சொல்லி அனுப்பறேன்.

பெண் : சரி சார்.

பெண் போன சற்று நேரத்தில் சிவா பயந்தபடியே உள்ளே நுழைகிறார்.

சிவா : வளர்மதியையும் ஜெனிஃப்ரையும் தவிர வேற யாரும் இப்போ இல்லை சார். அதான்…

எம்.டி: (பெருமுச்சு விட்டபடியே) : இந்த கமிஷன் இன்னிக்குன்னு உங்களுக்கு எப்ப தெரியும்..?

சிவா தலை குனிந்தபடியே நிற்கிறார்.

எம்.டி.: பதில் சொல்லுங்க சிவா… நான் உங்க கிட்டதான் கேக்கறேன்.

சிவா: ஒரு வாரத்துக்கு முன்னாலயே தெரியும் சார். கல்யாணியையும் அருணையும் அனுப்பறதாதான் இருந்தேன். நேத்திக்கு முடிய வேண்டிய ஒரு அசைன்மென்ட் கொஞ்சம் இழுத்திடுச்சு… எப்படியும் நாம பாத்தப் பெறகுதானே பிரிண்ட் ஆகப் போறதுன்னு…

எம்.டி. ஓ.கோ. அப்படியா… இட் ஈஸ் அ நியூஸ் ஃபார் மீ. (எடிட்டர் பக்கம் திரும்பி) அப்போ ரிப்போர்ட்டர்கள் எழுதறது அப்படியே பிரிண்ட் ஆறது இல்லையா… நாம பாத்துட்டுத்தான் பிரிண்ட் ஆறதா எல்லாம். எத்தனை நாளா இப்படி நடக்கறது…?

எடிட்டர் மெல்லச் சிரிக்கிறார்.

சிவா : வேற யாரையாவது அனுப்பறேன் சார்…

எம்.டி. கம்ப்யூட்டரில் எதையோ மும்மரமாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்.

சிறீது நேரம் கழித்து சிவா தயங்கியபடியே. : அப்போ நான் போகலாமா சார்…

எம்.டி நிமிர்ந்து பார்த்து : நீங்க இன்னும் போகலையா… (மீண்டும் கம்ப்யூட்டரில் ஆழ்கிறார்)

சிவா வணங்கிவிட்டு பின்பக்கமாக நடந்தபடியே வெளியேறுகிறார்.

காட்சி எண் 14

இடம் : உதவி ஆசிரியர் அறை

நேரம் : காலை

ஜெனிஃபரும் வளர்மதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

சிவா தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார்.

சிவா : நேரா நீங்க ரெண்டு பேரும் அங்க போய் சேந்துடுங்க. நான் ஃபோட்டோகிராபரை அனுப்பி வைக்கறேன். அட்ரஸ் தெரியும்லியா… இல்லைனா வளர் கிட்ட கேட்டுக்கோ. ஓ.கே.

எதிர்முனை : எத்தனை பக்கத்துக்கு மேட்டர் வெணும் சார்…

சிவா : நாலு பக்கம் அலாட் ஆகி இருக்கு. விளம்பரம் வர்றதைப் பொறுத்து மாறும். நீ வளவளன்னு எழுதாத. 9.00 மணிக்கு ஆரம்பிச்சுடும். நீ போய் சேந்துடுவ இல்லையா…

எதிர்முனை : ஆமா… சார். எங்க வீட்டுல இருந்து பக்கம்தான். அருண் வந்ததும் பொறப்பட்டுப் போயிடுவேன்.

சிவா : அவனுக்காக நீ காத்திருக்க வேண்டாம். நேரா ஹாலுக்குப் போயிடு. அவனை அங்க வரச் சொல்லிடு. சரியா…?

போனை வைத்துவிட்டு வளர்மதி, ஜெனிபர் பக்கம் திரும்புகிறார்.

சிவா : உங்களுக்கு வேற ஒரு வொர்க் வந்திருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… நான் கூப்பிடறேன். அப்பறம் அந்த விசாரணைக் கமிஷன் நடக்கற இடத்தோட அட்ரஸை கல்யாணிக்கு போன் பண்ணிச் சொல்லிடு.

ஜெனிஃபர் : கல்யாணியை அனுப்பறதுக்கு பேசாம அந்த மேட்டரைப் போடாமலே இருக்கலாம்.

சிவா : ஓ.கே. இட்ஸ் ஆல் இன் த கேம். வேற என்ன பண்ண..? நீங்க வெயிட் பண்ணுங்க. ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சுட்டு கூப்படறேன். எங்கயும் போயிட வேண்டாம்.

காட்சி எண் 15

இடம் : முதலமைச்சர் அறை

நேரம் : காலை

ஒரு நீண்ட மேஜையின் இரு பக்க நாற்காலிகளும் காலியாக இருக்கின்றன. நடுவில் இருக்கும் நாற்காலியின் மேல் ஒரு மஞ்சள் துண்டு போடப்பட்டிருக்கிறது. பின்னணியில் கண்ணகி நீதி கேட்கும் போஸில் முதலமைச்சர் ஆவேசமாக கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் ப்ளோஅப் செய்து மாட்டப்பட்டிருக்கிறது.

குரல் மட்டும் கேட்கிறது.

நிருபர் : உங்களோட ஆட்சியில இப்படி நடந்ததுங்கறதைப் பார்க்கும் போது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.

முதலமைச்சர் : என் ஆட்சியைக் கவிழ்க்க எதிர்கட்சிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் சதி வேலை இது.

(ப்ளோ அப் செய்யப்பட்ட படம் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறுகிறது)

நிருபர் : மலைப்பகுதியில் நடந்த அராஜகத்துக்கு நீதி கேட்டு அணிதிரண்ட போராட்டக்காரர்கள் அமைதியாகத்தானே இருந்தார்கள். காவல்துறைதானே மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறது. பேரணிக்கு வந்தவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். வெளி ஊர்களில் இருந்து வந்த கட்சிப் பிரமுகர்களின் வாகனங்கள் எல்லாம் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டுத்தான் அனுப்பப்பட்டிருந்தன. அனைவரும் நிராயுதபாணியாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் : போராட்டக்காரர்கள் அமைதியாகத்தான் போராடினார்கள். ஆனா கூட்டத்தில் சில விஷமிகள் புகுந்து விட்டிருந்தனர். அவர்கள்தான் திசை திருப்பிவிட்டார்கள்.

(ப்ளோ அப் படத்தில் திராவிட பாணியில் அமைந்த வேஷ்டி பிராமண பாணியில் மாறுகிறது.) போராட்டத் தலைவரைக் கொல்லக்கூட அன்று அவர்கள் திட்டமிட்டிருந்ததாக செய்திகள் கிடைத்திருந்தன. அதனால்தான் அன்றைய பேரணிக்கு நான் அனுமதி தரவே மறுத்திருந்தேன்.

(படத்தில் அவர் அணிந்திருந்த சட்டை மறைந்து போகிறது.)

பெண் காவலர்களிடம் மிக மோசமாகப் பலர் நடந்து கொண்டிருக்கின்றனர். தேனியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற காவலரையும் அவருடன் இருந்த வேறு சிலரையும் கையைப் பிடித்து இழுத்து மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.

(திறந்த மார்பில் ஒரு பூணூல் முளைக்கிறது)

அவர்கள் உண்மையிலேயே போராட்டக்காரர்கள் அல்ல. போராட்டத்தை திசை திருப்ப எதிர்கட்சியினரால் அனுப்பப்பட்டவர்கள். காவல்துறை ஆணையர் கூட அது போன்ற ஆட்களின் மீது மட்டுமே பலத்தைப் பிரயோகித்துள்ளார்.

நிருபர் : மலைப்பகுதியில் வீடு புகுந்து அடிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் தீ வைக்கபட்டுள்ளன. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன…

முதலமைச்சர் : இவை எல்லாம் காவலர்கள் செய்தவை அல்ல. பரிதாபத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்றும் பிரச்னையைப் பெரிதாக்க வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் நடத்தும் நாடகம். கலவரம் நடந்ததாகச் சொல்லப்பட்ட உடனேயே அங்கு சென்ற புகைப்படக்காரர்களும் விடியோகிராபர்களும் எடுத்த படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் நீங்கள் சொல்லும்படியான விஷயங்கள் எதுவுமே நடந்ததாகத் தெரியவில்லையே…

(நெற்றியில் நாமம் ஒன்று தீட்டப்படுகிறது. தலை முடி மழிக்கப்பட்டு குடுமி முளைக்கிறது)

23THEDPAGE_SKETCH_1404322eநிருபர் : அப்படியானால் பாதிக்கப்பட்ட மக்களே தங்கள் வீடுகளுக்குத் தீ வைத்துக் கொண்டிருக்கிறர்கள் என்று சொல்லவருகிறீர்களா…?

முதலமைச்சர் : அப்படிச் சொல்லவில்லை. எதிர்க்கட்சியினரின் கைப்பாவையாக மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் அப்பாவி மக்கள்.

நிருபர் : முதலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அதிக சேதம் எதுவும் தெரியவில்லையே என்று சொல்கிறீர்கள். அப்படியானால் நஷ்ட ஈடு மட்டும் ஏன் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்று அறிவித்தீர்கள்… சேதம்தான் பெரிதாக இல்லையே…

முதலமைச்சர் : நான் என் மக்களின் மீது அதிக கருணையோடு நடந்து கொள்வதுகூடத் தவறாகவே பார்க்கப்படுகிறது. மிகுந்த வேதனையைத்தான் தருகிறது இது.

(இப்போது முழுப் படமும் காட்டப்படுகிறது. திராவிடத் தலைவர்,  அப்பட்டமான கள்ள பார்ப்பானாகிவிட்டிருக்கிறார்).

0

பாலியல் குற்றம் என்பது என்ன?

fear-of-female-victim-of-domestic-violenceகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நம்முடைய இந்திய அரசாங்கத்திற்கு பொருத்தமானதொன்று. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து அரசாங்கம் பெண்களுக்கெதிரான மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் தலைமையில் ஒரு நீதிக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய பரிந்துரையை 30 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்ற காலக்கெடுவையும் நிர்ணயித்தது.

பொது மக்கள், மகளிர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சட்ட வல்லுனர்கள், நீதித்துறையை சார்ந்தவர்கள் என பல தரபட்டவர்களையும் விசாரித்து, கலந்தாலோசித்து தனக்கு கொடுக்கப்பட்ட கெடுவுக்கள் வர்மா குழு தன்னுடைய பரிந்துரையை அரசாங்கத்திற்கு வழங்கியது.

நீதிபதி வர்மா குழு வழங்கிய பரிந்துரைகளை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவந்தது. பின்னர் அரசாங்கம் பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு புதிய சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 வருடம் The Criminal Law (Amendment) Act, 2013 என்ற சட்ட வடிவத்தை பெற்றது.

மேற்சொன்ன சட்டத்தின் வாயிலாக ஏற்கனவே இருக்கும் இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ள சில சட்ட பிரிவுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் சில சட்ட பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சட்ட திருத்தத்தால் இதுகாரும் குற்றமாக பார்க்கப்படாத சில விவகாரங்கள் குற்றமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் திருத்தம் செய்யப்பட்ட சில குற்றங்களுக்கு தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தில் புதிதாக புகுத்தப்பட்ட சில குற்றங்கள்

திராவகம் வீசுதல் 

மற்றவர்கள் மீது திராவகம் வீசினால் இ.த.ச 326 ஏ பிரிவின் படி 10 ஆண்டுகள் சிறையில் தொடங்கி ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். கூடவே 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

மற்றவர்கள் மீது திராவகம் வீச முயற்சித்தால் இ.த.ச 326 பி பிரிவின் படி 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்

பாலியல் தொந்தரவு செய்தல் (Sexual Harassment)– இ.த.ச 354 ஏ

 1. தவறான நோக்கத்தாடு ஒருவரை தீண்டுதல் மற்றும் வெளிப்படையாக வன்புணர்ச்சிக்கு அழைத்தல்
 2. வன்புணர்ச்சி வைத்துக்கொள்ள மற்றவரை அழைத்தல் அல்லது வேண்டுதல்
 3. மேற்சொன்ன குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை உறுதி
 4. பாலியில் ரீதியாக மற்றவர்கள் மீது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துதல் அல்லது குறிப்பிடுதல்
 5. வலுக்கட்டாயமாக ஒருவரை ஆபாச படங்களை பார்க்கச் செய்தல்
 6. மற்றவர்கள் மீது பாலியில் ரீதியாக தேவையற்ற செய்கைகளில், வார்த்தைகளில் ஈடுபடுதல்

3 முதல் 5 வரை குறிப்பிடப்பட்ட குற்றங்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அல்லது அபராதமும், அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக வழங்கப்படும்.

பொது இடங்களில் பெண்களை மானபங்க படுத்தல் (ஆடைகளை களைய செய்தல் – Public Disrobing of Women)- இ.த.ச 354 பி

மேற்சொன்ன குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

பெண்களின் அந்தரங்கத்துக்கு குந்தகம்/ பாதிப்பு / ஊறு விளைவிப்பது/ பங்கம் ஏற்படுத்துவது (Voyeurism) இ.த.ச 354 சி

ஒரு பெண் தனிமையில் இருக்கும் (பொது இடங்களில் இல்லாத போது) போது அவளுடைய அந்தரங்கங்களை பார்ப்பது அல்லது படம்பிடிப்பது குற்றமாகும்.

இதற்கு தண்டனை – முதல் முறை இந்த குற்றத்தை நிகழ்த்தினால் ஓர் ஆண்டுக்கு குறையாமல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை, கூடவே அபராதமும் விதிக்கப்படும். இரண்டாம் முறையாக மேற்சொன்ன குற்றத்தை ஒருவர் செய்தார் என்றால் அவருக்கு மூன்றாண்டுகள் முதல் ஏழாண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

ஒரு நபரை அவரது விருப்பத்துக்கு மாறாக பின் தொடர்தல் (Stalking) – இ.த.ச 354 டி

ஒருவருக்கு விருப்பம் இல்லாத போதும் அவரை பின் தொடர்தல் அல்லது இணையத்தின் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு மின்னணு தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி மற்றவர்களை தொடர்வதோ (தொந்தரவு செய்வதோ) அல்லது வேவு பார்த்து மன உளைச்சலை ஏற்படுத்துவதில் ஈடுபட்டால் அவர் மேற்சொன்ன குற்றத்தை இழைத்தவர் ஆவார்.

குறிப்பிட்ட குற்றத்தை இழைத்தவருக்கான தண்டனை ஓர் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம்.

ஆள் கடத்துதல் – Human Trafficking – இ.த.ச 370

யாரேனும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காகவோ, அல்லது அடிமைப்படுத்துவதற்காகவோ, அல்லது கட்டாயமாக உடல் உறுப்புகளை எடுப்பதற்காகவோ ஆள் கடத்துதலில் ஈடுப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை (கடத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை பொருத்து) சிறை தண்டனை விதிக்கப்படும். கடத்தப்பட்ட நபரை வேலைக்கு ஆட்படுத்துவதும் குற்றமாகும்.

இந்த சட்ட திருத்தங்களில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பது கற்பழிப்பு குற்றத்தில் தான். இது நாள் வரை கற்பழிப்பு (rape) என்று சொல்லப்பட்ட குற்றம் சட்ட திருத்தத்திற்கு பிறகு பாலியல் தாக்குதல் Sexual Assault என்று அழைக்கப்படுகிறது. பாலியல் தாக்குதல் என்ற குற்றம் விரிவாக்கப்பட்டுள்ளது. இது நாள் வரை ’கற்பழிப்பு’,’பலாத்காரம்’, ’வன்புணர்ச்சி’என்றால், என்ன மாதிரியான குற்றம் என்று அனைவருக்கும் தெரிந்த விதத்திலிருந்து மேலும் சில விவகாரங்களை உட்சேர்த்து பாலியல் தாக்குதல் என்றால் என்ன? என்று திருத்தப்பட்ட சட்டம் ஒரு பெரிய விளக்கத்தை அளித்திருக்கிறது.

Sexual Assault: Sexual assault means –

(a) The introduction (to any extent) by a man of his penis, into the vagina(which term shall include the labia majora), the anus or urethra or mouth of any woman or child–

(b) the introduction to any extent by a man of an object or a part of the body (other than the penis) into the vagina(which term shall include the labia majora) or anus or urethra of a woman

(c) the introduction to any extent by a person of an object or a part of the body (other than the penis) into the vagina(which term shall include the labia majora) or anus or urethra of a child.

(d) manipulating any part of the body of a child so as to cause penetration of the vagina (which term shall include labia majora) anus or the urethra of the offender by any part of the child’s body;

In circumstances falling under any of the six following descriptions:

Firstly – Against the complainant’s will.

Secondly – Without the complainant’s consent.

Thirdly – With the complainant’s consent when such consent has been obtained by putting her or any person in whom the complainant is interested, in fear of death or hurt.

Fourthly – With the complainant’s consent, when the man knows that he is not the husband of such complainant and that the complainant’s consent is given because the complainant believes that the offender is another man to whom the complainant is or believes herself to be lawfully married.

Fifthly – With the consent of the complainant, when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by the offender personally or through another of any stupefying or unwholesome substance, the complainant is unable to understand the nature and consequences of that to which such complainant gives consent.

Sixthly – With or without the complainant’s consent, when such complainant is under eighteen years of age. Provided that consent shall be a valid defence if the complainant is between sixteen years and eighteen years of age and the accused Person is not more than five years older.

இந்தப் பாலியல் தாக்குதல் சாதரணமானதாக இருந்தால் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு ஏழாண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதே அந்தக் குற்றம் பெரியதாக இருந்தால் பத்தாண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

பாலியல் தாக்குதலினால் ஒருவர் இறந்துவிட்டால் அல்லது அந்த தாக்குதலின் காரணமாக ஒருவர் நடைபிணமாக ஆனார் என்றால், அத்தகைய குற்றத்தை இழைத்தவருக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கப்படும்.

கூட்டாக சேர்ந்து பாலியல் தாக்குதலில் (gang rape) ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவிற்காகவும் புணர் நிர்மானத்திற்காகவும் தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும்.

ஆனால் அனைவரும் விறுவிறுப்போடு எதிர்பார்த்த, காரசாரமாக விவாதிக்கப்பட்ட ஒரு விவகாரம் மேற்சொன்ன சட்ட திருத்தத்தில் இல்லை அதுதான்  “விவாக கற்பழிப்பு’ – Marital rape.

அது என்ன விவாக கற்பழிப்பு? திருமணமான தம்பதிகளிடையே, அதாவது கணவன், மனைவியின் விருப்பதிற்கு மாறாக கட்டாயமாக உறவு வைத்துக்கொண்டால் அதற்கு பெயர்தான் விவாக கற்பழிப்பு. நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரையில் விவாக கற்பழிப்பு குற்றமாக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் அதை செய்யவில்லை. காரணம்? மதம் தான். இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களிலும் மனைவி கணவனுக்கு கட்டுபட்டே ஆகவேண்டும் (அனைத்து விவகாரத்திலும்) என்ற சம்பிரதாயம் உள்ளது. அதனால் எதற்கடா வம்பு, ஏற்கனேவே நிலைமை சரியில்லை, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுக்க வேண்டாம், அதனால் விவாக கற்பழிப்பை குற்றமாகி மாட்டிகொள்ள வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் தான் விவாக கற்பழிப்பு குற்றமாக்கப்படவில்லை.

 (ஆழம் மே 2013 இதழில் வெளியான கட்டுரையின் திருத்தப்படாத முழு வடிவம்).

முழுமையான உரையாடல்

AsuraLordபேசு மனமே பேசு / அத்தியாயம் 7

மனத்தோடு நாம் எத்தகைய உரையாடல்களை நடத்தினால் அது சரியான உரையாடலாக இருக்கும் என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இனி நாம் தெரிந்துகொள்ளப்போவது மனத்தோடு நடத்தப் போகும் முழுமையான உரையாடலை. எந்த விஷயமாக இருந்தாலும், அது முழுமையாக நடைபெற வேண்டுமானால், அதைக் குறித்து முழுத் தகவல்கள் தேவைப்படுகிறது. எல்லாம் அறிந்த ஆண்டவனிடம் முறையிடும்போதும், வரம் கேட்கும்போதும்கூட, முழுமையான வேண்டுதல்களாக இருக்க வேண்டும். புராணங்கள் அனைத்திலும், அரக்கர்கள் அழிவது, இறைவனின் ஆற்றல் மட்டுமின்றி அவர்களது அவசர புத்தியும், முழுமையாக சிந்திக்காததும்தான், என்பது அவற்றை நன்கு படித்தால் விளங்கும்.

பிரகலாதனின் தந்தையும், சகலவிதமான சக்திகள் மற்றும் அதிகாரங்களைப் பெற்றவனுமான இரண்யனும் அழிந்ததுகூட அரைகுறையான சிந்தனை (உரையாடல்கள்) கொண்டிருந்ததால்தான். பல காலம் தவமிருந்து ஆண்டவனின் தரிசனத்தைப் பெற்ற இரண்யன், தன்னை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கும்படியான வரத்தைக் கேட்டான். காலங்கள், பருவங்களின் விளைவுகள், மனிதர்கள், தேவர்கள், அரக்கர்கள் மற்றும் மிருகங்கள் ஆகிய அம்சங்களால் தனக்கு மரணம் சம்பவிக்கக்கூடாது என்று கேட்டுப் பெற்றான். ஆனால் அவன் யோசிக்காமல் விட்ட மாலை நேரமும், மனிதனும் விலங்கும் சேர்ந்த உருவமும் தான், இரண்யன் மரணமடையக் காரணமாக இருந்தது.

எல்லாம் அறிந்த ஆண்டவனிடம் வரம் கேட்கும்போதுகூட முழுமையாக முறையிட வேண்டும் என்றால், நாம் சொல்வதை, நினைப்பதை மட்டுமே நம்புகிற, அதன் அடிப்படையில் மட்டுமே செயல்பட வைக்கும் நம் மனதுக்கு, முழுமையான தகவல்களைத் தராதபோது அதனால் ஒழுங்காக முடிவெடுக்க முடியாது. ஆழ் மனம் எடுக்கும் முடிவுகள் எண்ணங்களாக மாறும். இவைதான் மூளைக்குச் செல்லும் தகவல்களாக, ஆணைகளாக, மாற்றம் பெறும். இதன்படிதான் வாழ்க்கையும் அமையும். இத்தகைய காரணங்களால், எந்த விஷயமாக இருந்தாலும் முழுமையான தகவல்களுடன் தன்னுடன் பேசுதல் நிகழ வேண்டும்.

நம்மில் பல பேர் வாழ்க்கையில் முன்னேறாததற்குப் பல காரணங்கள் சொல்கிறோம். நமக்கு அமைந்த வேலை, தொழில், படிக்க முடிந்த படிப்பு, அமைந்த மனைவி மற்றும் பிள்ளைகள், பெற்றோர், பின்னணி, கிடைக்காத உதவிகள் போன்றவற்றைக் காரணமாகச் சொல்லி சமாதானம் அடைவதை பழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இவைதான் முன்னேறாமல் இருப்பதற்கு, முன்னேற முடியாததற்குக் காரணங்களாக, ஆழ் மனதுக்கு சொல்லப்படுகிறது. இதனால் உருவாகும் எண்ணங்களின்படி (உரையாடல் பதிவுகளின்படி) வாழ்க்கையும் நடக்கிறது. இதை மாற்றுவது எப்படி?

‘சிறு வயதில் பல்வேறு காரணங்களால், ஏழ்மைநிலை இருந்தது உண்மைதான். அதை இனி தொடர விட மாட்டேன். அதற்காக செய்ய வேண்டியது என்னவென்று யோசித்து செயல்படுவேன்’ என்று சொல்ல ஆரம்பித்து, என்ன யோசனை என்பது பற்றியும் முடிவு செய்து, செயல்பட ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு திட்டமிடும்போது, நமது தற்போதைய நிலை, என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் போன்றவற்றை சூழ்நிலையின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.

வெகு காலம் கழித்து, விழித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்து, அவசரமோ, ஆதங்கமோ பட்டால், அனைத்தும் கெட்டுப் போகும். உணர்ச்சிகரமான மன நிலையிலும் சுற்றுச் சூழலை கணக்கெடுத்துச் செயல்படுபவர்கள், ஆபத்துகளைத் தவிர்த்து, வேண்டியதையும் பெறுகின்றனர்.

காட்டில் உள்ள ஒரு ஓடையில் தண்ணீர் அருந்துவதற்கு சிங்கமும், சிறுத்தைப் புலியும் ஒன்றாக வந்தன. இரண்டும் சம வலிமை உடைய விலங்குகள் மட்டுமின்றி ஆக்ரோஷமான மனோபாவத்தையும் இயற்கையாகப் பெற்றவை. இதனாலேயே தண்ணீரை யார் முதலில் குடிப்பது என்பது பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சச்சரவு பெரிதாகி, அவரவர் நிலைப்பாட்டில் மேலும் பிடிவாதமாக வாதம் செய்தனர். விட்டுக் கொடுப்பதைவிட, சண்டையிட்டுச் செத்தாலும் பரவாயில்லை என்ற நிலை இருவர் மனத்திலும் தோன்றியது. ஆத்திரம் தலைக்கேறி, இரண்டும் சண்டையிடத் தொடங்கின. அந்த நேரத்தில் பக்கத்தில் இருந்த மரங்களில் சலசலப்பு பெரிதாகத் தோன்றியது. இரண்டு விலங்குகளும், மேலே பார்த்தன. மரங்களுக்கு சற்றுமேல், கூட்டமாகக் கழுகுகள் வட்டமிட்டுப் பறந்துகொண்டிருந்தன. யார் சண்டையில் இறந்து போகிறார்களோ, அதைக் கொத்தித் தின்னத் தயாராக இருந்தன. இதைப் பார்த்த இரு விலங்குகளும், சண்டையிட இது நேரமல்ல என்பதை உணர்ந்து நிறுத்திக் கொண்டன. மனத்தில் ஆத்திரம் இருந்தாலும், சூழ்நிலை சரியில்லாததைப் புரிந்துகொண்டு, செயல்பட்டதால், இரு விலங்குகளும் தப்பித்தன.

இது கதையாக இருந்தாலும், உணர்ச்சியின் வசத்துக்குப் போய்விட்ட மனநிலையிலும், தங்களது சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வு இருந்தால், உணர்ச்சி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இருப்போம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் அல்லவா?

பிரச்னையைத் தீர்க்க முழுமையான உரையாடலாக மாற்றங்களை நிகழ்காலத்தில் நடப்பதுபோல சொல்லிப் பழக வேண்டும். இவ்வாறான நிலை இல்லாதபோதும், நடந்துகொண்டு இருப்பது போல மனத்தில் உருவகப்படுத்தி, உரையாடல் நடக்க வேண்டும். இம்மாதிரியான பொய்யான நிலையை ஏன் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்கலாம். நாம் இதுவரையில் முன்னேற முடியாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், எதிர்மறை நிகழ்வுகள் நிறைந்த நமது, கடந்த காலத்தை வைத்து, எதிர் காலமும் வேறு எப்படி இருக்கப் போகிறது? என்ற முடிவில் மனத்தில் கற்பனைகளை வளர்த்துக்கொள்கிறோம். இதனால் மனத்தில் நம்பிக்கையின்மை, சோர்வு, பயம், வெளியிடத் தெரியாத ஆத்திரம் போன்றவை உருவாகி நம் வாழ்க்கையை நடத்துகின்றன.

கற்பனையில் உருவாகும் எதிர்மறை எண்ணங்களுக்கு பலம் இருப்பதுபோல, அதே கற்பனையில் உருவாக்கப்படும், சரியான, நேரான, நிகழ்காலத்தில் நடப்பது போன்ற எண்ணங்களுக்கும் அதே வலிமை கண்டிப்பாக இருக்கும். இதுதான் இயற்கை நியதி. ‘கான்சர்’ என்கிற புற்றுநோயைப் பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. மருத்துவ வல்லுநர்களின் கூற்றுப்படி, கான்சர் செல்கள் மிகவும் பலவீனமானவை. அவற்றிற்கு பலம் கொடுப்பது மனித எண்ணங்களும் (சுய உரையாடல்களும்) அவற்றால் ஏற்படும் உடற்கூறு மாற்றங்களும்தான்.

எண்ணங்களுக்கு, அதாவது நமக்குள் நடக்கும் உரையாடல்களுக்கு அந்த அளவுக்கு வலு அதிகம். இந்த அறிவியல் உண்மையை நமது முன்னேற்றத்துக்கு உபயோகப்படுத்திக்கொண்டால், முன்னேற்றம் நிச்சயம்.

எது எப்படியிருந்தாலும், நமக்குள் சிறு தயக்கம், சலனம். இத்தகைய அவநம்பிக்கையை, மிக இயல்பாக நல்ல விஷயங்களில் புகுத்தி விடுகிறோம். உதாரணமாக, கடவுளை நம்புவோம். பிரார்த்தனைகளையும் செய்வோம். ஆனாலும் உள்ளுக்குள்ளேயே ஒரு பெருமூச்சு. ஹூம், நாமும்தான் வேண்டிக்கொண்டே இருக்கிறோம். கடவுள்தான் கண்களை திறக்க மாட்டேன் என்கிறார்…. என்கிற ரீதியில் பலரும் ‘பக்தியாக’ இருக்கிறார்கள். இவர்களது மனத்தில், கடவுளிடம் கேட்க வேண்டியவைகளைக்கூட முழுமையாகத் தோன்ற அனுமதிக்க மாட்டார்கள். பயம், நடுக்கம், கெட்ட சக்தி போன்றவை மீது நம்பிக்கை உடனடியாக வலுப்பெறக் காரணமே, அவற்றைப் பற்றி மிக வேகமாக, முழுமையாக சிந்திப்பதால்தான். நேர்மறையான, சரியான நிகழ்கால உரையாடல்களை எப்படி நிகழ்த்திக் கொள்வது? இதன் ஆரம்பம் பின்வருமாறு இருக்கலாம்.

வழக்கமாக நாம் நினைப்பது…

நான் எப்போதுமே அப்படித்தான்… எனக்கு எப்போதுமே துரதிருஷ்டம்தான்.. போன்ற புலம்பல்களுக்குப் பதிலாக, ‘இந்த கணத்திலிருந்து நான் உற்சாகமான மனிதன்…’

‘இந்த கணத்திலிருந்து நான் அதிர்ஷ்டசாலி…’

‘நான் அதை எப்படியும் செய்து விடுவேன் என்ற ‘உறுதி’ மொழிக்குப் பதிலாக,
‘அந்தப் பிரச்னைகளுக்கு மாற்று வழி இதுதான், இதில் இப்போதிலிருந்து பயணப்படுவேன்’… என்கிற ரீதியில் நமது உரையாடல்களைத் தெரிந்தே நிகழ்கால வழியில் நடத்த வேண்டும். பலன் வெகுவிரைவில் கிடைக்கும்.

0

நாகர்கள் யார்?

nagasபறையர்கள் / அத்தியாயம் 7

நகர்: நகர்தல் = மெல்ல இடம் பெயர்தல், விரிவடைதல். நகர் = குடி பெருகப் பெருக மெல்ல மெல்ல விரியும் மனை அல்லது ஊர். நகர் என்பது பேரூர் அல்லது பட்டினம். அகமென்பது இடம் அல்லது இடத்திலுள்ள ஒழுக்கம். மக்கள் பெருக்கத்தால் சிற்றூர்கள் பேரூர்களாவதும், பேரூர்கள் நகரங்களாவதும் இயல்பு. நகர்தல் என்பது பெயர்தல் அல்லது தள்ளுதல். மக்கள் நெருக்கம் பற்றி ஒரு மனையிலுள்ளார் நகர்ந்து புதுமனை புகுவதும், ஒரு தெருவிலுள்ளோர் நகர்ந்து புதுத்தெரு புகுவதும் கண்கூடாகக் காண்கிறோம். இவ்வாறு ஊர் ஒன்று சிறிது சிறிதாக நகர்ந்து நாளடைவில் நகராகிறது.

நாகரிகமானது நகரங்களில் சிறிது சிறிதாக வளர்ந்து முதிர்ச்சியடைந்தது. ‘நகரகம்’ என்னும் சொல் ‘நகரிகம்’, ‘நாகரிகம்’ என மருவி வரும். நாகரிகமென்னும் சொல் நாகர் என்னும் பெயரிலிருந்து வந்தது. நாகர்கள் என்பவர்கள் நாகநாடு என்னும் கீழ்த்திசை நாடுகளில் நாக வணக்கம் கொண்டிருந்த மக்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள். நாகருடைய நாடு நாக நாடு.
நாகம் என்பதும் நாகர் என்பதும் பாம்பின் பெயர்கள். நகர்வது நாகர். அது முதனிலை திரிந்த தொழிலாகு பெயர்; நாகர் என்பது நாகம் என மருவும். ஆங்கிலத்திலும் ஸ்நேக் என்பது இதே பொருள் பற்றியது.

நகர் என்ற சொல் மரபும் – நாகரிகம் என்ற சொல் மரபும் தரும் இந்த விளக்கம் கீழையுலகிலும், மேலையுலகிலும் ஒரே அடிப்படையில் அமைந்துள்ளது. நாகரிகம், நகர் என்ற சொற்கள் தமிழருக்கேயுரிய தனித்தமிழ்ச் சொற்கள்.

நாகர் வடக்கே இமயம் வரையும், தெற்கே இலங்கை வரையும் கிழக்கே பர்மா முதலிய தென்கிழக்காசிய நாடுகள் கடந்து பசிபிக் தீவுகள் வரையும் பரவியிருந்தனர். அவர்கள் வகுத்த எழுத்து முறையே நாகரி – நகரி என்ற பெயரிலும் தேவநாகரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. வடதிசைச் சமஸ்கிருதமும், பிற வடதிசைத் தாய்மொழிகளும் எழுதப்படும் எழுத்து வடிவு இதுவே.

தமிழகத்தில் ‘நகரி’ என்றும் ‘நகரா’ என்றும் வழங்கப்பட்ட தோல்கருவி வட இந்தியாவில் நக்காரா (Naggharah) என்று கூறப்படுகிறது. ராஜராஜன் காலத்து நாணயங்களில் ஒரு புறம் அரசர் உருவமும், மறுபுறம் ‘நாகரி’ எழுத்து பொறிப்பும் உள்ள செம்பு நாணயங்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டன. அதன் எடை 2.47 கிராம்.

குமரிக்கண்டம் இந்துமா கடலுள் மூழ்கியபிறகு தென்னிந்தியாவின் தொடர்ச்சியாக இலங்கை, சுமத்திரா, ஜாவா முதலிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெருந்தீவு இருந்தது. அங்கே நாவல் மரங்கள் செழித்தோங்கி வளர்ந்ததால் அது நாவலந்தீவு (சம்புத்தீவு) என்று பெயர் பெற்றது. நாவலந்தீவின் பகுதியாக இருந்து காலப்போக்கில் கடலால் பிரிக்கப்பட்ட யாழ்குடாவுக்கு நாவலந்தீவு என்ற பழம் பெயர் நிலைத்திருந்ததாகத் தெரிகிறது. யாழ்குடா மிக ஆரம்பத்திலிருந்தே திராவிடக் கலாசாரத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. யாழ் குடாவிலிருந்து திராவிடர்கள் இலங்கையின் கிழக்குக் கரையோரமாகப் பரவலாயினர். இவ்வாறு தமிழர்கள் பரவி வாழ்ந்த பகுதிகளில் அன்று ஆதி குடிகளான நாகர்களும் பரவி வாழ்ந்துள்ளனர். அன்று ஆதிக்குடிகளான நாகர்கள் வாழ்ந்த பகுதி (யாழ்குடாப்பகுதி) நாகதீபம் என அழைக்கப்பட்டது.

இலங்கையில் நாகர் குடிகளின் தோற்ற வளர்ச்சிகளை மகாவம்சத்தில் காணலாம். விஜயனும் தோழர்களும் (கி.மு. 483 அளவில்) இலங்கையை அடைந்த காலத்தில் எஞ்சிய இலங்காபுரி இயக்கர் ஆட்சியிலிருந்தது என்பதனை மகாவமிசம் குறிப்பிடுகின்ற குவேனியின் கதையிலிருந்து உணரக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையில் ஆதியில் வாழ்ந்த இயக்கர், நாகர் என்பார் மனித வர்க்கத்தினரைச் சேர்ந்தவரல்லர் என்ற கருத்துப் பொதுவாக வரலாற்றாசிரிடையே நிலவி வந்துள்ளது. எனினும், இலங்கையின் வரலாற்றை ஆரம்பித்த சுதேசக் குடிமக்கள் இந்த இரு இனத்தைச் சேர்ந்தவர்களே. இவர்களும் சிறப்பாக இயக்கர் என்பார். இலங்கையின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவர்கள் என்ற கருத்தைக் கல்வெட்டு ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன. மகிந்தன் (கி.பி. 956 – 972) கல்வெட்டொன்று அர்ஹத் மகிந்தரால் வெல்லப்பட்டு வேலைக்கு அர்த்தப்பட்ட இயக்கர்களால் காவல் செய்யப்பட்ட திசவாபி பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் கர்மவிபங்க எனும் சமஸ்கிருதப் பௌத்த நூலும் இயக்கர்களை அர்ஹர் மகிந்தர் வென்றார் எனக் குறிப்பிடுகின்றது. சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூறும் (71:14) இயக்கன் என்ற சொல்லை ஆட்பெயராக, மக்கள் பெயராகக் குறிப்பிடுகின்றது.

நாகர்கள் பண்பாடுடைய கலாசாரத்தைப் பேணிய மக்கள். புத்தருடைய காலத்தில் நாகர்கள் பௌத்தத்தைத் தழுவினர். மேலும் நாகர்கள் புத்தருடைய காலத்தில் இலங்கையின் வடபாகத்தில் மட்டுமின்றி வடமேற்குப் பகுதியில் களனியாவரை பரவி வாழ்ந்தனர். விஜயனுடைய காலத்தில் பின்னரே இந்நாகர்கள் கிழக்குப் பகுதி வழியாக பரவலாயினர்.
முதலில் நாகர்கள் இலங்கையின் மேற்கு, வடமேற்கு, வடக்குப் பகுதிகளில் வாழ்ந்து பின் கிழக்குக் கரையூடாகத் தென்னிலங்கை வரை பரவினர் என்பதற்கு மகாவம்சம் மட்டுமின்றி டாலமியின் இலங்கைப் படத்தின் புவியியல் குறிப்புகளும் சான்றுகளாக அமைகின்றன. டாலமியின் புவியியல் படத்தின் படி இலங்கையின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியூடாக தென்கிழக்குப் பகுதிவரை நாகர்கள் தம் செல்வாக்கை நிலைநாட்டியிருந்தனர் என்பது தெளிவாகின்றது.

எச்.டி.சில்வா, நாகதீபம் என்பது வடபிரிவினைக் குறிக்கும் என்று கூறுகிறார். காசி செட்டி என்பவர் யாழ்குடாவே நாகதீபம் எனக் கூறுகிறார். ஹெச்.பாக்கர் என்பவர் இலங்கையின் மேற்குப் பகுதியிலும், சிறப்பாக வடபகுதியிலும் நாகர்கள் வாழ்ந்தனர் என்றும் ஆனால் வடபகுதியே வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக நாகதீபம் என அழைக்கப்பட்டு வந்ததெனவும் கூறுவார். மேலும் அவர், புத்தரால் நாகர்கள் மதமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் பற்றிய குறிப்புகள் தெளிவாக வரலாற்று நூல்களில் இல்லையெனவும், நாகதீபம் என்ற பெயரே இங்கு ஒரு காலத்தில் நாகர்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதக்கூடிய சான்றாக அமைகின்றது என்றும் குறிப்பிடுகிறார். நாக வழிபாட்டையுடைய நாகர் குடிகள் ஆரம்பகாலத்தில் திருகோணமலைப் பகுதியில் வாழ்ந்திருப்பார்கள் என்பதை வற்புறுத்துவதோடு, நாகத்தீவு எனப்பட்டது இலங்கையின் வடபகுதி (கிழக்கு, மேற்குப் பகுதி உட்பட) முழுவதையும் உள்ளடக்கியிருந்ததென்றும் அதன் தென்னெல்லையை நிச்சயித்துக் கொள்வது முடியாது என்றும் செ.குணசிங்கம் கூறுகிறார்.

நாகர்கள் பௌத்தத்தைத் தழுவ காலப்போக்கில் அதன் தாக்கம் யாழ்குடா முழுவதும் ஏற்பட்டது. இந்நிலையில் நாகர் கலாசாரமும், தமிழ்க் கலாசாரமும் ஒன்றோடொன்று கல்ந்துவிடுகின்ற நிலையையும் நாம் அவதானிக்கலாம். பழந்தமிழர்களும் பௌத்தத்தைத் தழுவுகின்ற நிலை ஏற்படுகின்றது. விஜயன் காலத்துக்குப் பின்னர் தமிழ்க் கலாசாரத்துடன் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத வகையில் கலந்துவிட்ட நாகர்கள் அரசியல், வர்த்தக முயற்சிகள் காரணமாக மத்திய இலங்கை ஊடாக ஊடுருவிக்கொண்டு, கிழக்குக் கரையாகத் திஸ்ஸமகாராம வரை பரவி வாழ்ந்தனர் என்பது தெளிவாகிறது. அன்று நாகர்களும், பழந்தமிழர்களும் பரவி வாழ்ந்த பகுதிகளே, இன்றும் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் தமிழ்ப் பிரதேசங்களாகக் காணப்படுகின்றன.

0

உங்கள் ரோல்மாடல் யார்?

father-role-model.jog_ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 7

சென்ற ஆண்டு மலேசியாவில் கெண்டிங் தீவுகளில் உள்ள ஒரு மிகப் பெரிய அரங்கத்தில் சுமார் 25,000 பேர் பங்கேற்ற ஒரு மாபெரும் கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

என்னுடைய உரையை முடித்தவுடன் வழக்கமாக நடைபெறும் கேள்வி-பதில் நிகழ்வு
நடைபெற்றது.

அப்போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று….

‘நீங்கள் மிகப் பெரிய சாதனையாளர். எத்தனையோ பேருக்கு வாழ்க்கையில் ஜெயிக்க ஒரு உந்துதலாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு யார் ரோல் மாடல்?‘ என்பதுதான்.

அதற்கு நான் ‘எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று பார்த்தால் ஒவ்வொரு துறையிலும் பலர் இருக்கிறார்கள். ஆனால் ‘ரோல் மாடல்’ என்று பார்த்தால் எனக்கு நான் தான் ‘ரோல் மாடல்’, என்று சொன்னேன்.  உடனே பலத்த கைதட்டல்.

இன்ஸ்பிரேஷன் நமக்கு பலர் இருக்கலாம். உதாரணத்துக்கு சினிமா பாடகர்களில்
எஸ்.பி.பி., கே.ஜே.ஜேசுதாஸ், கிளாசிக்கல் பாடல்களில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா,
நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் பி.எச்.அப்துல் ஹமீது, இப்படி பல்வேறு துறையில் பல
சாதனையாளர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்கள்.

ஆனால் ரோல் மாடல் என்கிற கேள்வி வரும்போது… எனக்கு நான்தான் ரோல் மாடல் என்று சொன்னேன். அந்த பதிலை யாரும் எதிர்பார்க்காவிட்டாலும் அதை நான் சொன்னபோது மிகவும் ரசித்தார்கள் என்பது அப்போது எழுந்த கைத்தட்டல்களில் இருந்து புரிந்தது.

இதை நான் சொல்வதற்குக் காரணம்… தலைக்கனத்தின் காரணமாகவோ அல்லது தற்பெருமையினாலோ இல்லை. ஏதோ பெரிதாக சாதித்துவிட்டோம் என்கிற மமதையான நினைப்பினாலும் இல்லை.

என்னை நான் ரோல் மாடலாக முன்மாதிரியாக நினைத்துக்கொள்ளும்போதுதான், என்
வாழ்க்கையில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். விழவும்
பயமில்லை.. விழுந்த சுவடு தெரியாமல் எழுந்திருக்கவும் தயக்கமில்லை.

என்னை நானே ரோல் மாடலா நினைத்துக்கொள்ளும்போதுதான், ‘நான் அந்த நிகழ்வின்போது என்ன செய்தேன்? அந்த நேரத்தில் நான் எப்படி நடந்துகொண்டேன்? இதற்கு முன்பு அப்படியோர் சம்பவம் நடந்திருக்கிறதா? நடக்கவில்லையா? இப்போது நாம் என்ன செய்யலாம்? இதை ஒரு ரோல் மாடல் சம்பவமாக நமது வாழ்க்கையில் பதிவு செய்துவிடவேண்டுமானால், அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?’ என்றெல்லாம் யோசிப்பேன்.

நான் இப்படிச் சொல்வதனால் உங்களுக்குப் பிடித்த சாதனையாளர்களை ரோல்மாடலா வைத்துக்கொள்ளாதீர்கள் என்று அர்த்தமில்லை. உங்களுக்குப் பிடித்த நற்குணங்கள் நிரம்பிய
ஒரு சாதனையாளரை நிச்சயம் நீங்கள் ரோல் மாடலாக வைத்துக்கொள்ளலாம். கொள்கைப்
பிடிப்புடன் வாழும் ஒரு சாதனையாளர் சொன்னால் நான்கு பேர் கேட்பார்கள் என்ற நிலை இருப்பது நல்லதுதான். ஏனெனில் அவர்களுடைய அந்த ஐடியாலஜி இதன்மூலம் பரவும். ஆனால், காலப்போக்கில் உங்களுக்கு நீங்களே ரோல் மாடல் என்ற ஒரு நிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதுதான் முக்கியம்.

இது ஏன் என்றால், நீங்கள் உங்கள் ரோல் மாடலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபர் செய்வது எல்லாம் சரி என்று அர்த்தம் கிடையாது. உங்கள் அபிமான சாதனையாளர் செய்வதில் எது சரி எது தவறு என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் காலப்போக்கில் உங்களுக்கு வந்துவிடும். அந்த நிலை வரும்போது நீங்களே உங்களுக்கு ரோல் மாடலாகிவிடுங்கள். அப்போது நீங்கள் இன்னும் உயரத்துக்கு செல்வீர்கள்.

வாழ்க்கையில் ரோல் மாடலைத் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொருவரும் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதில் நாம் எந்த அளவுக்கு சிரத்தை எடுப்போமோ அந்த அளவுக்கு கவனமும், எச்சரிக்கையும் பரிட்சைகளும் தேர்ந்தெடுக்கும் ரோல்மாடலுக்கும் அவசியம்.

 

புத்தர்: ஒரு மனிதனின் கதை

buddhaபுரட்சி / அத்தியாயம் 5

இந்தியத் தத்துவவியல் குறித்தும் தொன்மம் குறித்தும் ஆய்வு செய்து வந்த எமிலி செனார்ட் (Emile Senart) என்னும் பிரெஞ்சு மாணவி புத்தர் குறித்து வாசித்துக்கொண்டிருந்தபோது திகைப்படைந்தார். ‘பௌத்தப் புனித நூல்கள் அவரைப் பற்றிக் கணக்கற்ற புராணக் கதைகளை அளிக்கின்றன. இவற்றை ஏற்கவேண்டுமானால் மாயங்களும் அதிசயங்களும் நிறைந்த ஓர் உலகில் அசாதாரணமான முறையில் அவர் வாழ்ந்தார் என்பதையும் ஏற்கவேண்டிவரும்.’ இதன் நீட்சியாகத் தவிர்க்கவியலாதபடி அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்.‘உண்மையில் புத்தர் என்பவர் வாழ்ந்தாரா?’ அவருடைய விடை. ‘நிச்சயம் இல்லை.’

எமிலியைப் போலவே பௌத்தத்தை ஆராயப் புகுந்த எம் செனார்ட் என்பவருக்கு இந்தச் சந்தேகம் எழுவில்லை. புத்தரைச் சூழ்ந்திருந்த மாயங்களையும் அதிசயங்களையும் கண்டு மயங்கி உள்ளது உள்ளவாறே மேற்கத்திய வாசகர்களுக்கு இவர் அறிமுகப்படுத்தினார். ‘பிறப்பதற்கு முன்பே புத்தர் ஒரு கதாநாயகர். அவர் கடவுள்களின் கடவுள். புத்தருக்குத் தந்தை இல்லை. அவர் சொர்க்கத்தில் இருந்து ஒரு கன்னித் தாயின் கருப்பைக்கு அனுப்பப்பட்டவர். அவர் தோன்றியபோது பூமியில் ஒளி உண்டாயிற்று. தக்க தருணத்தில் அவரது சக்தி வெளிப்பட்டது. பலவிதமான அரக்கர்களுடன் அவர் போரிட்டார். தேவதைகளும் தேவ கன்னிகைகளும் அவருடன் வலம் வந்தனர். ஆயிரம் ஒளிக்கற்றைகளை வீசும் சக்கரம் ஒன்று அவரிடம் இருந்தது. அசாத்திய ஆற்றலும் சொர்க்கத்துக்கு நீந்திச் செல்லும் திறனும் காடுகளில் அலைந்து திரிவதற்கான திராணியும் அவரிடம் இருந்தன. தன் வாழ்வின் இறுதியில் அவர் மோட்சம் அடைந்தார்.’

புத்தரை அணுகுவதில் நமக்கு ஏற்படும் முதல் பெரும் சிக்கல் இதுவே. புத்தர் குறித்த செய்திகளில் எது சுவையான கற்பனை, எது வரலாறு என்று பிரித்துணரமுடியாதபடி பல்வேறு இழைகளும் சரடுகளும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இந்தப் பிரதிகளைக் கொண்டு புத்தர் என்றொருவர் இருந்ததேயில்லை என்னும் முடிவுக்குச் சிலரும் புத்தர் என்பவர் சாமானியரே அல்ல என்னும் முடிவுக்கு வேறு சிலரும் வந்து சேர்ந்தனர்.

ஓரிடத்தில் புத்தர் தன்னை இவ்வாறு அறிமுகம் செய்துகொள்கிறார். ‘புத்தர்களில் நான் ஒருவன். எனக்கு முன்னால் பல புத்தர்கள் தோன்றியிருக்கிறார்கள். எனக்குப் பிறகும் புத்தர்கள் தோன்றுவார்கள். தீமையும் வன்முறையும் பெருகும்போது புத்தர் தோன்றுவார், உலகை நல்வழிப்படுத்துவார்.’ கிறிஸ்தவ மற்றும் இந்து மத இலக்கியங்களிலும் இத்தகைய பிரகடனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பொது யுகத்துக்கு முன் 412ல் புத்தர் இறந்திருக்கலாம் என்கிறார் டி.டபிள்யு. ரைஸ் டேவிட்ஸ். ‘கி.மு. 485க்கு சில ஆண்டுகளுக்கு முன்போ பின்போ தனது 80வது வயதில் புத்தர் மரணமடைந்தார்’ என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா. திபெத்தியர்கள் பொயுமு 2422 தொடங்கி 546 வரை பதினான்கு வெவ்வேறு கணக்குகளை அளிக்கிறார்கள். பொயுமு 543ல் புத்தர் மறைந்திருக்கலாம் என்கிறார் மாக்ஸ் முல்லர்.

பாலி, சமஸ்கிருதக் குறிப்புகள், இந்து மதப் புராணங்களில் காணப்படும் செய்திகள், ஜைனர்களின் குறிப்புகள், கிரேக்கத்தின் பண்டைய வரலாறுகள், கல்வெட்டுகள் போன்றவற்றின் வாயிலாக புத்தர் குறித்த ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. புத்தரின் உபதேசங்கள் அனைத்தும் உரையாடல் வடிவில் வாய்மொழியாகச் சொல்லப்பட்டவை. எழுத்துபூர்வமான படைப்புகள் எதையும் புத்தர் விட்டுச் செல்லவில்லை.

புத்தர் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்களில் பொதுவாகக் காணப்படும் குறிப்புகளின் வரிசை இது. புத்தர் பிறந்தபோது மிகப் பெரிய ஒளி தோன்றியது. குருடர்கள் பார்வை பெற்றனர்; செவிடர்கள் கேட்கும் திறன் பெற்றனர்; கூனர்கள் நிமிர்ந்து நின்றனர். கடவுள்கள் வானிலிருந்து தலை தாழ்த்தி குனிந்து புத்தருக்குப் பணிவிடைகள் செய்தனர். பல்வேறு மூலைகளில் இருந்தும் அரசர்கள் திரண்டு வந்து குழந்தையை வரவேற்றனர். வளர்ந்ததும் சித்தார்த்தனுக்கு மூன்று விதமான மாளிகைகள் தயார் செய்யப்பட்டன. உரிய காலத்தில் போர்ப் பயிற்சியும் தத்துவப் பாடங்களும் அளிக்கப்பட்டன. திருமணமும் நடந்து முடிந்தது. ஒரு நாள் மாளிகையைவிட்டு சாமானிய மக்கள் வசிக்கும் தெருவில் நடைபோட்ட புத்தர் முதியவர் ஒருவரைக் கண்டார். இரண்டாவது நாள் நோயாளியையும் மறுநாள்ஒரு சடலத்தையும் கண்டார். இந்தக் காட்சிகள் கௌதம சித்தார்த்தனைப் புத்தராக மாற்றியது. புத்தரின் வாய்மொழி உபதேசங்கள் அவருடைய சீடர்களால் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டன.

கிறிஸ்து பிற்காலத்தில் சொல்லநேர்ந்ததையெல்லாம் புத்தர் முன்கூட்டியே போதித்துவிட்டார் என்கிறார் வில் ட்யூரண்ட். உதாரணத்துக்கு, கோபத்தை அமைதியால் எதிர்கொள்ளவேண்டும் என்றும் எதிரியை சாந்தத்துடன் அணுகவேண்டும் என்றும் தீமையை நன்மையால் வெல்லவேண்டும் என்றும் புத்தர் போதித்தார். ‘வெறுப்பு வெறுப்பால் வீழ்த்தப்படுவதில்லை. நேசத்துக்கு மட்டுமே அந்த ஆற்றல் உண்டு.’ புத்தரின் போதனைகளில் எளிமையான அதே சமயம் ஆழமான தத்துவக் கூறுகளும் தரிசனங்களும் காணக்கிடைக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

புத்தரை எதிர்கொள்வதில் உள்ள அடுத்த பிரதான சிக்கல் இது குறித்துதான் என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா. ‘புத்த மதம் பற்றிய எந்த நூலும் அவர் காலத்தைச் சேர்ந்தவையல்ல. பழங்கால புத்த மத இலக்கியங்கள் அனைத்தும் பேச்சுகள், உபதேசங்கள், கவிதைகள், கதைகள், நடத்தை விதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளன.’ பாலி மொழியில் எழுதப்பட்ட இவை மூன்று பெரும் தொகுப்புகளாகத் திரட்டப்பட்டு அவை திரிபிடகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பிடகம் என்றால் கூடை அல்லது திரட்டு என்று பொருள்கொள்ளலாம்.

வினயபிகடம் என்பது கட்டுப்பாடு பற்றிய பகுதியாகும். புத்த பிட்சுக்களின் சங்கங்களைச் சேர்ந்த பிட்சுகளும் பிட்சனிகளும் பின்பற்றவேண்டிய ஒழுக்கநெறிகளை இது விவரிக்கிறது. சுத்தபிடகம் புத்தர் மற்றும் அவருடைய சீடர்களின் மதம், தர்மம் இவற்றின் ஆதாரம் பற்றியது. உரைநடையிலும் கவிதையிலும் எழுதப்பட்டுள்ள இந்தப் பகுதி பௌத்த இலக்கியங்களில் முக்கியமானது. மூன்றாவது, அதிதர்மபிடகம் என்று அழைக்கப்படுகிறது. இலக்கியச் செறிவுள்ள வகையில் எழுதப்பட்டுள்ள மற்றொரு சுத்தபிடகம் என்று இதனை அழைக்கலாம்.

இந்த மூன்றும் மதம் தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எனவே இவற்றில் எவையெல்லாம் புத்தரின் அசலான போதனைகள், எவை மத நோக்கத்துடன் பிற்காலத்தில் புகுத்தப்பட்டவை என்பதைக் கண்டறிவதில் பல சிரமங்கள் இருக்கின்றன. பௌத்த மத நம்பிக்கையாளர்களுக்கும் பௌத்தத்தை ஒரு தத்துவமாக ஆராய முற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும் இடையில் இதுகுறித்து ஒருமித்த கருத்து பொதுவாக நிலவுவதில்லை.

ஆனாலும் இவற்றைவிட்டால் புத்தரை அணுக வேறு மார்க்கமில்லை என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா. ‘பிற்கால இடைச்செருகல்களையும் இவற்றில் விடுபட்டுப் போன புத்தரின் போதனைகளையும் ஒப்புக்கொண்ட போதிலும், இந்தப் பாலி திரிபிடகங்களின் நம்பகத்தன்மையை ஏற்பதைத் தவிர வேறு மாற்று நமக்குத் தெரியவில்லை. இல்லையெனில் புத்த மதத்தின் அசல் கொள்கை ஒருவகையில் ஒன்றும் புரியாத அல்லது புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கும்.’

ஆக, புத்தரைப் பற்றியும் நமக்கு அதிகம் தெரியாது. புத்தரின் போதனைகள் பற்றியும் தீர்க்கமாகவும் திட்டவட்டமாகவும் அதிகம் தெரியாது. இந்தப் போதாமைகளைக் கடந்துதான் புத்தரை நாம் அணுகவோ ஆராயவோ மதிப்பிடவோ வேண்டியிருக்கிறது. புத்தர் மறுபிறப்புகளை ஏற்றாரா, ஆன்மாவை மறுத்தாரா, கடவுளை முற்றிலும் நிராகரித்தாரா, வேதங்களோடு முரண்பட்டாரா போன்ற முக்கியமான கேள்விகளுக்கு ஆய்வாளர்கள் அவரவர் பின்னணியில் இருந்தே பதிலளிக்கிறார்கள்.

இந்த ஒப்பீடு சரியானதாக இருக்காது என்றாலும் ஸ்பார்டகஸுக்கும் புத்தருக்கும் இடையில் சில பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டுகொள்ளமுடிகிறது. இருவரைப் பற்றியும் குறைவாகவே நமக்குத் தெரியும். வர்க்கச் சார்பு கொண்டே இருவரும் மதிப்பிடப்படுகிறார்கள். இருவருக்கும் எதிரிகள் அநேகம். இகழ்பவர்களால் மட்டுமல்ல புகழ்பவர்களாலும்கூட இருவருடைய சாதனைகளும் திரிக்கப்படுகின்றன. எதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்களோ அதற்கு எதிரானவர்களாக அவர்களை முன்னிறுத்துவதற்கு ஒரு சாரார் தொடர்ந்து முயற்சி செய்து வருவதையும் நம்மால் காணமுடிகிறது.

ரைஸ் டேவிட்ஸ் எழுதுகிறார். ‘கௌதமர் ஒரு வெற்றிகரமான அரசியல் சீர்திருத்தவாதி என்ற வகையில் வசதியானவர்களையும், முன்னுரிமை பெற்ற வர்க்கத்தினரையும் எதிர்த்து ஏழை மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். சாதியத்தை ஒழிக்கும் செயலில் ஈடுபட்டார்…(இருந்தும்) வேறு சில எழுத்தாளர்கள் புத்தரைக் கடுமையாக விமரிசிக்கிறார்கள்… அவர் சாதிய விதிகளின் தீவிரத்தை ஒழிப்பதற்குத் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை. பரிதாபத்துக்குரியவர்களையும், எளிய மக்களையும் அவர் கண்டுகொள்ளவில்லை.’

புத்தரை அவருடைய காலத்தில் பொருத்திப் பார்த்து மதிப்பிடுவதே சரியானதாக இருக்கும் என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா. அவ்வாறு நோக்கும்போது அவர் வந்தடைந்த முடிவு இதுவே.‘சமூகவியல் நலனில் அக்கறை கொண்ட பழங்கால இந்தியாவின் ஒரே சிந்தனையாளர் அவர் மட்டும்தான். இதைச் சந்தேகிப்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை.’

புத்தர் வேறு, நாம் இன்று அறிந்திருக்கும் பௌத்தம் என்பது வேறு. ‘பௌத்தம் அரசு மதமான பிறகு புத்தரின் அடிப்படையான செய்தி அதற்கு எதிர்மறையாக மாறிவிட்டது’ என்கிறார் சட்டோபாத்தியாயா. புத்தர் ஏன் இன்று நினைவுகூரப்படவேண்டியவர்? ‘புத்தரை அவரது காலச் சூழ்நிலையைக் கொண்டு பார்க்கும்போது அவர் ஓரளவு மதச் சார்பற்றவராக இருந்தார். மேலும், அவர் பழங்கால இந்தியாவில் இயக்கவியல் பார்வை கொண்ட, உணர்வுபூர்வமாகச் செயல்படும் ஒரே சிந்தனையாளராக இருந்தார். இதனால் வர்க்கமாகப் பிளவுபட்ட சமூகத்தில் மக்களுக்குத் தேவையான ‘ஆறுதலளிக்கும் தீர்வாக’ உள்ள புரிதலுக்கு நெருக்கமாக வந்தார்.’

புத்தர் மனிதர்களின் தடுமாற்றங்களையும் தீங்கு செய்யும் இயல்பையும் நேரடியாகக் கண்டவர். தன்னைச் சுற்றியுள்ள பிரச்னைகளையும் அவற்றின் தோற்றுவாயையும் அறிந்துகெள்ளமுடியுமா என்று ஆராய முற்பட்டவர். தனக்குத் தெரிந்த, தான் உண்மை என்று நம்பிய விஷயங்களைப் பிறருக்கும் உணர்த்த விரும்பியவர். அவர் வாழ்ந்த காலத்தில் அனைத்து துயரங்களுக்கும் ஒரே ஒரு தீர்வுதான் இ ருந்தது. ஆனால், புத்தர் அந்தத் தீர்வை ஏற்கவில்லை. தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘அவர் மிகவும் யதார்த்தவாதி என்பதால் அவரால் கடவுளை நம்ப முடியவில்லை.’ எனவே, புத்தர் வேறு வழிகளில் சிந்திக்கத் தொடங்கினார்.

அடுத்த பகுதி – புத்தர் : ஒரு சிந்தனையாளரின் கதை