காதல் புராணம் 5

5. மோகமுள்

மங்கை [வயது : 12-13]

41

நீ தொடுவாயென எதிர்பார்த்திருக்க‌

தொடாமல் ஏமாற்றும் போது தான்

உன்னை அதிகம் பிடிக்கிறதெனக்கு.

42

என் உள்ளாடைகளின்

நிற‌மறியத்துடிக்குமுன்

வேட்கை பிடிக்குமெனக்கு.

43

முதன்முறையாய் அன்றைக்குன்

சுத்தமாய் மழித்த க‌ன்னந்தனைத்

தொடுகையிலே தானுணர்ந்தேன்

மென்மையானவற்றைக்காட்டிலும்

கடினமானவை எத்தனை சுகமென்று.

44

சுதந்திரமாய்ச்சுற்றிக்கொண்டிருந்த

பட்டுப்பூச்சியின் சிறகுடைத்ததற்கு

வெட்கப்படக்கற்றுக்கொடுத்தவன் நீ.

45

ஒவ்வொரு முறையும் நீயுன்

முகம் மழித்து மீசை திருத்தி

வரும் போதும் நினைவிற் கொள் –

செதுக்கப்படாது விடுபட்டுப்போன‌

சிற்சில ரோமத்துளிர்களை ரசிக்க‌

இங்கொருத்தி காத்திருக்கிறாள்.

46

அழகி எனப்புகழ்ந்தே

என்னைக் கொஞ்சம்

அழக்காக்கியவன் நீ.

47

என்னிடம் எதை ரசிப்பதென

விவஸ்தையே கிடையாது –

போடா, காதல் பொறுக்கி!

48

தேவதைகளோடு ஒப்பிடலாம்

நீயென்னை –  ஆனால் நீயோ

ஒப்பிலான்.

49

என்ன‌ழகுக்குத்

திமிர் வந்தது

நீயென்னைக்

காதலித்த பின்.

50

என் இதயத்தின் எடை

65¼ கிலோகிராம்க‌ள்

உன்னையும் சேர்த்து.

ஆழி பெரிது

15.  சரஸ்வதி  – அகமும் புறமும்

ஏன் நதி தெய்வங்களில் சரஸ்வதி மட்டுமே வாக் தேவதையாக வேத கவிகளால்
உணரப்பட்டாள் என ஸ்ரீ அரவிந்தர் கேட்கிறார். “வேதத்தின் ரகசியம்” (The
Secret of the Veda) எனும் தனது நூலில் அவரே அதற்கு பதிலும் அளிக்கிறார்.
இதனை அறிந்து கொள்ள வேத இலக்கியத்தில் சரஸ்வதி எப்படி மற்ற நதிகளுடன்
இணைத்துப் பேசப்பட்டுள்ளதோ அதே போல சரஸ்வதி ஒரு தெய்வமாக எப்படி பிற பெண்
தெய்வங்களுடன் இணைத்துப் பேசப்படுகிறாள் என நோக்க வேண்டுமென்கிறார் அவர்.

அவ்வாறு சரஸ்வதி இரு பெண் தெய்வங்களுடன் இணைக்கப்படுகிறாள். அந்த
தெய்வங்கள் பாரதி மற்றும் இளா என வேத இலக்கியங்களில் அழைக்கப்படுகின்றன.
பொதுவாக ஒரு அபிப்பிராயம் மேற்கத்திய இந்தியவியலாளர்களிடம் உண்டு. வேத
பண்பாட்டில் பெண் தெய்வங்களுக்கு மிகவும் ஒரு ஒதுங்கிய நிலைதான்
கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்திரன் வருணன் போன்ற ஆண் தெய்வங்களே
முக்கியத்துவம் பெறுகின்றன என்பது அவர்களின் நிலைபாடு.

ஆனால் ஸ்ரீ அரவிந்தர் போன்ற இந்திய யோக மரபு மற்றும் குறியீட்டு பரிபாஷை மரபுகள்
சார்ந்து வேத வியாக்கியானங்களை முன்னெடுத்தவர்கள் இவ்விஷயத்தில்
மாறுபடுகின்றனர்.  வேதங்களில் உண்மையில் பெண் தெய்வங்கள் உயர்ந்த
இடங்களில் வைத்து பேசப்படுகின்றன. உயர் ஆன்மிக சக்திகளின் உருவகங்களாக
பெண் தெய்வங்கள் காட்டப்படுகின்றன .

பிற்கால புராணங்களில் சரஸ்வதியும் பாரதியும் ஒரே தெய்வத்தின் இரு
பெயர்களாக கருதப்பட்டாலும் வேதங்களில் அவை இரு வேறு தெய்வங்களே.
வேதத்தின் அக்னி சடங்குகளில் சரஸ்வதி, பாரதி, இளா ஆகிய
முப்பெருந்தேவியர் எப்போதுமே அழைக்கப்படுகின்றனர். பாரதி அல்லது மகி ஒளி
நிறைந்தவள் – கோமதி என அழைக்கப்படுகிறாள். அவளது இருப்பினில் ஆனந்தமான
உண்மை ஒளியினால் நிரம்பி வேள்விக்கு பயனளிக்கிறது. பின்னாட்களில் மகி
அல்லது பாரதி சரஸ்வதியின் மற்றோர் பெயராகவே ஆகிவிடுகிறாள் என்பதை இந்த
வேத உருவகங்களுடன் இணைத்து ஒரு முழுமைப்பார்வையை உருவாக்குகிறார் ஸ்ரீ
அரவிந்தர். அவர் வேத நதியான சரஸ்வதி குறித்து கூறும் விஷயங்களை இப்படி
தொகுத்துக் கொள்ளலாம்:

ஒரு பேருண்மையை கவி கண்டுணர்கிறான். அவனில் ஒரு ஒளிக்கீற்றாக அது
தோன்றுகிறது. பிரபஞ்ச பேரொழுங்கின் ஒரு அகதரிசனமான அந்த உண்மை ஒரு ஒளி
ஓட்டமாக அவனுக்குத் தெரிகிறது. தங்கு தடையற்றதோர் அக ஒளிப்பிரவாகம் அது.
அதுதான் சரஸ்வதி. பின்னர் அது அவனில் விரிவடைகிறது. தன்னுள் ஒரு
அகப்பிரவாகமாக அவன் தரிசித்த அந்த உண்மை அவனே வியக்கும் விதத்தில் அவன்
காணும் தளங்களிலெல்லாம் ஒத்திசைவுடன் விரிந்து நிரம்புகிறது. இவ்விரிவே
மகி அல்லது பாரதி. பிரபஞ்ச பேரொழுங்கை ரிதம் என வேத கவிகள் அழைத்தனர்.
ரிதம் எப்போதும் விரிவானதென்றே வேதங்களில் அழைக்கப்படுகிறது. சரஸ்வதி
என்பது சத்திய தரிசனம் அகத்தில் தோன்றி வார்த்தைகளாக வெளிப்படும்
செயல்பாட்டுச் சக்தியின் உருவக தெய்வம். அவள் ஒரு நதிப்பிரவாகம் உள்ளும்
வெளியிலும்.

சரஸ்வதி உள்ளுணர்வின் ஓட்டத்தை பிரபஞ்ச பேரொழுங்கான ரிதத்துடன் ஒத்திசைவு
கொள்ளச் செய்கிறாள். அவளே உள்ளுணர்வை விழித்தெழ வைப்பவள். மகி அல்லது
பாரதி இந்த உள்ளுணர்வின் தரிசனங்களை விரிந்துபட செய்கிறாள். சரஸ்வதியுடன்
தொடர்புடைய மூன்றாவது தெய்வம் இளா. இவளும் சத்தியத்துடன் தொடர்புடையவளே.
இவள் அறிவாக இந்த உள்ளுணர்வின் விழிப்புடனும் வெளிப்பாடுடனும்
கலக்கிறாள். அவளே சத்தியத்தின் திருஷ்டி. இவை மூன்றும் ஒன்றன் பின்
ஒன்றாக நடக்கும் நிகழ்வுகளல்ல. அனைத்தும் ஒன்றாக நிகழும் நிகழ்வுகள்.
ஆனால் இவை எல்லாம் சரஸ்வதி எனும் நதிக்கும் தெய்வத்துக்குமான
பொதுத்தன்மைகளுடன் இசைகின்றன? ஸ்ரீ அரவிந்தர் சரஸ்வதியுடனான ஆறு
நதிகளுமான அந்த உருவகமே உள்ளுணர்வின் எண் குறியீடு என கருதுகிறார். ஏழு
என்பது உள்ளுணர்வின் எண் வடிவமாக வேதங்களில் குறிப்பிடப்படுவதாக அவர்
கருதுகிறார்.

வேதரிஷிகள் தங்களைச் சுற்றியுள்ள புவிபரப்பின் இயற்கை அமைப்புகளையே
தங்கள் அக உலகக் குறியீடுகளாக மாற்றி அமைத்தார்கள். பின்னாட்களில்
பாரதத்தின் புராண மரபெங்கிலும் இது ஒரு முக்கிய அறிதல் முறையாக
பயன்படுத்தப்பட்டது. புற இயற்கைச் சின்னமொன்று அகவெளி தொன்மத்தின்
குறியீடாக மாற்றப்படுவது. புனித புவிப்பரப்பு (sacred geography)
இவ்விதமாகவே உருவாகியது. நாட்டார் வழக்குகள், இதிகாச வழக்குகள் என
அனைத்திலும் இந்த பார்வை பாரதமெங்கிலும் வழங்குவதை காணலாம். இது
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் ஒரு முக்கிய வழிமுறையாக அமைந்தது என
தற்போதைய சூழலியலாளர்களும் ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

அடுத்ததாக வேதம் சொல்லும் பெண் தெய்வங்கள் குறித்து காணலாம். மார்க்சிய
வரலாற்றாராய்ச்சியாளர் கோசாம்பி இந்திய வரலாறே தோற்கடிக்கப்பட்ட தாய்
தெய்வங்களின் வரலாறு என்பார். ஆரியர்கள் ஆண் தெய்வ வழிபாடு செய்த
தந்தைவழி சமூகத்தவர்கள் என்றும் இந்திய பூர்வக்குடிகள் தாய்வழி
சமூகத்தினர் என்றும் கருதும் கருத்து சட்டகத்திலிருந்து உருவானதே
இக்கருத்து. இன்று இந்தியாவில் பரந்து காணப்படும் தாய் தெய்வ/பெண் தெய்வ
வழிபாடுகளுக்கும் வேத மதத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே இதன்
உள்ளார்ந்த பொருள். இது உண்மையா? என்பதை அடுத்ததாக ஆராயலாம்.

மேலதிக விவரங்களுக்கு: Sri Aurobindo: The secret of the Veda: Saraswati
and Her Consorts (Chapter : IX)

இலக்கு

இனிமையான அதிகாலை நேரம். ஒரு ஜென் துறவி மெதுநடை போட்டுக்கொண்டிருந்தார். உடல் இளைப்பதற்காக அல்ல, இயற்கையின் அழகைப் பார்த்து அனுபவித்து ரசிப்பதற்காக!

அவர் நடந்து செல்லும் பாதையில் ஓர் ஏரி. அங்கே சில இளைஞர்கள் வில், அம்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஆனால், அந்த இளைஞர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் தங்களுடைய இலக்கு வட்டத்தை எட்டமுடியவில்லை. அம்பு திசைமாறிச் சென்றுகொண்டே இருந்தது. இதைப் பார்த்த ஜென் துறவி மெல்லச் சிரித்தார்.

இளைஞர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘யோவ் சாமியாரே, உனக்கு என்னா நக்கலு!’ என்று எகிறினார்கள். ‘தியானம் செய்யற உனக்கு வில், அம்பைப்பத்தி என்ன தெரியும்? இவ்ளோ தூரத்திலேர்ந்து அந்த இலக்கை அடிக்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?’ என்றார்கள்.

‘அப்படியா? எனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாது. மன்னிச்சுடுங்க’ பணிவாகச் சொன்னார் ஜென் துறவி. ‘இருந்தாலும், நான் ஒரு சின்ன முயற்சி செஞ்சு பார்க்கறேன், கொஞ்சம் அந்த வில், அம்பைக் கொடுங்களேன்!’

அந்த இளைஞர்கள் நக்கலாகச் சிரித்துக்கொண்டார்கள். ‘இந்தாள் அம்பு விடப்போறானா? சுத்தம்!’ என்று கேலி செய்தபடி அவரிடம் வில், அம்பைக் கொடுத்தார்கள்.

துறவி ராமர் கணக்காக வில்லை நிமிர்த்தி நிறுத்தினார். அம்பைப் பொருத்தி எய்தார். சரியாக அது இலக்கைத் தாக்கியது!

இளைஞர்கள் அசந்துவிட்டார்கள். ‘நீங்க பெரிய வில்வித்தை நிபுணரா இருக்கீங்களே!’ என்றார்கள்.

‘ம்ஹூம், இல்லவே இல்லை. நான் இப்பதான் முதல்தடவையா வில், அம்பைத் தொடறேன்’ என்றார் ஜென் துறவி. ‘ஆனா, என்னோட கவனம் மொத்தமும் இதைச் சரியாச் செய்யணுமே-ங்கற ஒரு விஷயத்திலதான் குவிஞ்சிருந்தது. உங்களுக்கு அப்படியில்லை, ஒழுங்கா அம்பு எய்யறதன்மூலமா கிடைக்கப்போற பரிசு, பாராட்டு, புகழ், பணம் இதைப்பத்தியெல்லாம் யோசிச்சுகிட்டே முயற்சி செஞ்சீங்க. அதனாலதான் எத்தனையோ திறமை இருந்தும் உங்களால அந்த இலக்கைத் தொடமுடியலை!’