புதிய தொடர்கள் – திங்கள் முதல் வெள்ளி வரை

தமிழ்பேப்பரில் நாளை முதல் வெளிவரவிருக்கும் புதிய தொடர்கள் குறித்த அறிவிப்பு.

திங்கள்

ஜெயிப்பது நிஜம் / இன்ஸ்பயரிங் இளங்கோ

goldkey

உத்வேகமூட்டும் வெற்றிக் கதை.

~

செவ்வாய்

பறையர்கள் / சி. இராஜாராம்

dalit1_021118

ஒரு சமூக வரலாறு.

~

புதன்

பேசு மனமே பேசு / டி.ஐ. ரவீந்திரன்

Magic Eye

புதிய தன்னம்பிக்கைத் தொடர்.

~

வியாழன்

ஒரு கனவின் வரைபடம் / B.R. மகாதேவன்

bioscope

இப்படியும் படம் எடுக்கலாம்!

~

வெள்ளி

புரட்சி / மருதன்

red_guards

கலகம். போராட்டம். முறியடிப்பு.

~

  • மறைக்கப்பட்ட இந்தியா, மேட்டர் ஆகிய தொடர்கள் தொடர்ந்து வெளியாகும்.
  • அரசியல், சமூகம், வரலாறு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து அலசல்களும் விவாதங்களும் இடம்பெறும்.

0

ஆழம் ஏப்ரல் இதழ்

IMG_0852ஆழம் ஏப்ரல் 2013 இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள்.

கவர் ஸ்டோரி 1 : ஈழம்

  • நிறைவேறிய தீர்மானம், சத்யா
  • இந்தியா-கச்சத்தீவு-இலங்கை : ஓயாத அலைகள், ஆர். முத்துக்குமார்
  • நம்பிக்கை தரும் போராட்டம், நலங்கிள்ளி
  • ஐ.நா தீர்மானத்தால் என்ன பயன்? கலையரசனுடன் ஒரு பேட்டி
  • ராஜதந்திரம் மூலமே தமிழீழம் சாத்தியம். தமிழருவி மணியனுடன் வித்தகன் பேட்டி.
  • போராட்டம் தவிர், வண்ணநிலவன் கருத்து.

கவர் ஸ்டோரி 2 : பட்ஜெட்

  • பகல் கனவுகளும் புரியாத கணக்குகளும், ரமணன்
  • குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், ப. கனகசபாபதி
  • சிறு நிறுவனங்கள் வளரவேண்டும், தில்லைராஜன்

உலகம்

  • போப் : மலரும் நம்பிக்கை, ஜனனி ரமேஷ்
  • ஹியூகோ சாவேஸ் : போராட்டம் தொடர்கிறது, இம்மானுவேல் பிரபு
  • பங்களாதேஷ் எழுச்சி : போர்க்குற்றங்களும் மன்னிப்பும், நதீன் முர்ஷித் (EPW கட்டுரையின் மொழியாக்கம்)
  • ரஷ்யா : ஸ்டாலின் 60, மருதன்

இந்தியா / சமூகம்

  • 1 பில்லியன் எழுச்சி, ரஞ்சனி
  • 108 ஆம்புலன்ஸ் சேவையின் மறுபக்கம், எஸ். சம்பத்
  • கேம்பஸ் வெயிட் லிஸ்ட், என். சொக்கன்
  • திரிபுரா : சிறிய மாநிலம், பெரிய செய்தி, அ. குமரேசன்
  • காவிரி தீர்ப்பு – பலன் என்ன? முல்லை
  • தமிழகம் நம்பர் 1 சாதனை, ரம்யா கண்ணன் (தி ஹிந்து கட்டுரையின் மொழியாக்கம்).

சினிமா

  • பரதேசி விமரிசனம், ச.ந. கண்ணன்
  • ஆஸ்கர் 2013, அரவிந்த் சச்சிதானந்தம்

0

மேலதிக விவரங்கள்:

ஆழம் இணையத்தளம் 

முந்தைய இதழ்களை முழுமையான பிடிஎஃப் வடிவில் இங்கே படிக்கலாம்

ஆழம் சந்தா விவரம்

பிரபல கொலை வழக்குகள் நூல் வெளியீடு – அனைவரும் வருக!

 

 

 

invite

 

இலங்கையில் நீதி கோருவோம் – ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல்

 

ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் கையெழுத்து இயக்கப் பிரசுரத்தின் தமிழாக்கம்

ஆம்னெஸ்டியின் பிரசாரத்துக்கு ஆதரவு தாருங்கள். இலங்கையில் நீதி கோருங்கள். 080670-06666 என்ற செல்பேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் தாருங்கள். அல்லது இந்த இணையத்தளத்துக்குச் சென்று கையெழுத்திடுங்கள்.

இலங்கையில் தற்போது நடந்துவரும் மனித உரிமை மீறல்களை நிறுத்துவதாகவும் உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதாகவும் இலங்கை அரசு உறுதிகூறியிருந்தது. இலங்கை சொன்னபடி நடக்குமாறு அதனை வற்புறுத்தவேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைக் கேட்டுகொண்டு ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் இந்தியா ஒரு இணையக் கோரிக்கைப் பிரசாரம் ஒன்றை நடத்தியது. ஆகஸ்ட் மாதம் அதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

ஆண்டுமுழுதும் நடக்கப்போகும் இந்தப் பிரசாரத்தின் இரண்டாம் கட்டத்தை ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் இப்போது செயல்படுத்த உள்ளது. இந்தியக் குடிமக்களின் கையெழுத்துடன் ஓர் இணையக் கோரிக்கை, ஐ.நாவின் மனித உரிமை மீதான யுனிவர்சல் பீரியாடிக் ரிவ்யூ (யூ.பி.ஆர்) நடக்கப்போவதற்கு முன்பாக, நவம்பர் 1-ம் தேதி அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்படும்.

‘இலங்கையில் நீதி கோருவோம்’ பிரசாரம், ஆகஸ்ட் மாதத்தில் வெறும் ஏழே நாள்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் பங்களிப்பைப் பெற்றது. அதில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனலின் இரண்டாம் கட்டப் பிரசாரம் இந்தியா முழுமையிலிருந்தும் ஐந்து லட்சம் பேரின் பங்களிப்பைப் பெற விழைகிறது.

ஐ.நாவின் யூ.பி.ஆரில் தொடங்கி அக்டோபர் 2013-ல் இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுவரை, இலங்கை சர்வதேச கவனத்தை ஈர்க்கப்போகிறது.

சர்வதேச அளவிலும் பிராந்தியத்திலும், இந்தியா மனித உரிமையில் தலைமை வகிக்கவும் ஓர் ‘உண்மையான குடியாட்சி’யாக நடந்துகொள்ளவும் செய்யும் ஓர் இயக்கத்தில் ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் சேர்ந்துகொண்டுள்ளது என்றார் ஆம்னெஸ்டி இந்தியாவின் தலைமை நிர்வாகி ஜி. அனந்தபத்மநாபன்.

‘இந்தியா தன் தென் அண்டை நாட்டின்மீது கட்டாயம் அழுத்தம் செலுத்தவேண்டும். உலகளாவிய தலைமை நாடு, உண்மையான குடியாட்சி என்று கருதப்படவேண்டும் என்று இந்தியா நினைத்தால், ஐ.நா பாதுகாப்புச் சபையில் பெரும் பங்கு வகிக்கவேண்டும் என்று இந்தியா கருதினால், உள்நாட்டிலும் சரி, பிராந்தியத்திலும் சரி, மனித உரிமை சார்பாக வலுவான தலைமைத்துவத்தைக் காண்பிக்கவேண்டும்’ என்றார் அவர்.

நவம்பரில், இந்தியாவின் தலையீட்டில் இலங்கையின் மனித உரிமை நிலை, யு.பி.ஆரால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ராஜபக்‌ஷே அரசின் கடந்த நான்கரை ஆண்டுகால மனித உரிமைச் செயல்பாடுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படும். ஐ.நாவால் தரப்படும் பரிந்துரைகளுக்கு இலங்கை பதில் சொல்லவேண்டிவரும். 2008-ல் இலங்கை, பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது ஐ.நா அளித்த பரிந்துரைகளைச் செயல்படுத்த அந்த நாடு தவறிவிட்டது. இந்த ஆண்டு, இலங்கையை வற்புறுத்தி நிஜமான மாற்றத்தைக் கொண்டுவர இந்தியாவுக்கு ஒரு பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘இலங்கையுடன் தான் நெருங்கிய உறவு கொண்டுள்ளதாக இந்தியா சொல்கிறது. அப்படியானால், இலங்கை அரசிடம் அல்ல, இலங்கை மக்களிடம்தான் அதன் உண்மையான கடப்பாடு உள்ளது என்பதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும்’ என்கிறார் அனந்தபத்மநாபன்.

இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்குக் கீழ்க்கண்ட வகையில் அழுத்தம் தரவேண்டும் என்கிறது இந்தக் கோரிக்கை:

  • சித்திரவதை, காணாமல்போதல், கொலைகள் ஆகியவை தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • ஐ.நாவின் தனி விசாரணையை அனுமதிக்கவேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தன் வேலையைத் திறம்படச் செய்ய அனுமதிக்கவேண்டும்.
  •  வழக்கே போடாமல் கைது செய்தவர்களையும் சர்வதேச மனித உரிமை எதிர்பார்க்கும் தரத்துக்கு அருகில் வராத ‘நெருக்கடி நிலை’ அல்லது ‘தீவிரவாத எதிர்ப்பு’ சட்டத்தின்கீழ் கைது செய்தவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

2008-ல் இலங்கை மேலே குறிப்பிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னது. ஆனால் சில மாதங்களுக்குள்ளாகத் தான் கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. வலுவான அண்டை நாடாக உள்ள இந்தியா தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சாதாரண இலங்கை மக்களின் மனித உரிமை காக்கப்படுவதில் தனக்குள்ள உறுதியை நிலைநாட்டவேண்டும்.

இந்தப் பிரசாரத்துக்கான உங்கள் ஆதரவைக் காண்பிக்கவும் இலங்கையில் நீதியைக் கோரவும் 080670-06666 என்ற செல்பேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் தரவும் அல்லது கீழ்வரும் தளத்துக்குச் சென்று கையெழுத்திடவும்.

 0

அறிவிப்பு : தமிழ்பேப்பரில் புதிய தொடர்கள்

வரும் திங்கள் முதல் தமிழ்பேப்பரில் கீழ்வரும் புதிய தொடர்கள் ஆரம்பமாகின்றன.

திங்கள்

கீதா பிரேம்குமார் எழுதும் ‘ஜெயிக்கலாம் தோழி!’

0

செவ்வாய்

மருதன் எழுதும் ‘சே குவேராவின் பயணங்கள்’

0

புதன்

ஆர். முத்துக்குமார் எழுதும் ‘மொழிப்போர்’

0

வியாழன்

பத்ரி சேஷாத்ரி எழுதும் ‘மேட்டர்’

0

வெள்ளி

B.R மகாதேவன் எழுதும் ‘மறைக்கப்பட்ட இந்தியா!’

0

சனி

பாபா பகுர்தீன் எழுதும் ‘போதிதர்மர்’

0

இவற்றோடு, ஏற்கெனவே தொடங்கப்பட்ட பகுதிகளும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளியாகும்.

தமிழ் பேப்பரில் தேர்தல் முடிவுகள்

 

வாசகர்களுக்கு வணக்கம். தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டுக் காலத் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகிற பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.  இன்று காலை எட்டு மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

வாக்குகள் எண்ணப்படத் தொடங்குவதிலிருந்து, தமிழ் பேப்பரில் நேரடியாக விவரங்களை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

*    வாக்குகள் எண்ணப்படும்போதே தொகுதி வாரியாக யார் முன்னணியில் உள்ளார்கள், யார் பின்னால் இருக்கிறார்கள், எத்தனை வாக்கு வித்தியாசம் போன்ற விவரங்கள்

*    வெற்றி-தோல்வி அறிவிப்புகள்

*    கட்சி வாரியாக வாக்குகள் விவரம் – முந்தைய தேர்தல் முடிவுகள் ஒப்பீடு

*    முக்கியத் தலைவர்களின் தொகுதியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை சிறப்புத் தகவல்கள்

*    வாசகர்களுடன் நேரடி கலந்துரையாடல்

*    தேர்தல் முடிவுகள் குறித்த ‘லைவ்’ அலசல்

*    பிற மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்த அப்டேட்கள்

*    வாசகர் கணிப்புகளுக்கான இன்ஸ்டண்ட் வினாக்கள், உடனடி ரிசல்ட்

*    கிழக்கு எடிட்டர்கள் பங்குகொண்டு நடத்தும் தேர்தல் முடிவு அலசல்கள்

இன்னும் உண்டு, ஏராளம்.

வாசகர்கள் இன்றைய தினத்தைத் தமிழ் பேப்பர் ஜன்னலுடன் தொடங்கி, தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள, விவாதங்களில் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம். காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. அதற்கு அரை மணிநேரம் முன்னதாகத் தமிழ் பேப்பர் தேர்தல் முடிவுகள் சிறப்பு அப்டேட்கள் தொடங்கும்.

மாநிலம் பயனுற!

வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு

 

வாசகர்களுக்கு வணக்கம்.

தமிழ் பேப்பர் ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகப்போகிறது. இந்தப் புதிய பத்திரிகைக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்குக் குறைந்தது 108 நன்றி சொல்லவேண்டும்.

பேப்பரில் இடம்பெறுவனவற்றுள் சிறப்பாக உள்ளதைப் பாராட்டும் அதே வேளை, குறைகளையும் அவ்வப்போது எடுத்துக் கூறுபவர்களுக்குக் கூடுதலாக இன்னொரு நன்றி. சமயத்தில் உடனுக்குடன் பதிலளிக்க முடியாதுபோனாலும் உங்கள் கருத்து எதையும் கவனிக்காமலோ, பொருட்படுத்தாமலோ இல்லை.

தொழில்நுட்ப ரீதியிலும் உள்ளடக்கம் சார்ந்தும் நீங்கள் இதுநாள்வரை வழங்கியுள்ள ஆலோசனைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டிருக்கிறேன். விரைவில் – மிஞ்சிப்போனால் பத்து, பன்னிரண்டு தினங்கள் – தமிழ் பேப்பர் மேலும் மெருகுடன், புத்தம்புதிய பகுதிகளுடன் வெளிவரவிருக்கிறது.  [ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பகுதிகள் ஒவ்வொன்றாக நிறைவடையும்போதே யூகித்திருப்பீர்கள்!] தொடர்ந்து வாசித்து கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

கூடவே இன்னொன்று. இது உங்களுடைய பத்திரிகை. இதில் இன்னும் என்னென்ன இடம்பெற வேண்டும், உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்பதையும் நீங்கள் தெரிவிக்கலாம். இந்தப் பக்கத்தின் கீழேயே உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யலாம்.

இதுவரை வெளியான தொடர்களுள் சில விரைவில் புத்தகமாகவும் வெளிவர உள்ளன என்பதைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய பகுதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தமிழ் பேப்பரின்மீது அன்பும் அக்கறையும் கொண்ட அனைவருக்கும் அட்வான்ஸ் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தேர்தல் திருநாள் நல்வாழ்த்துகள்.

அன்புடன்

ஆசிரியர்