ராணுவம் : இந்தியாவும் பாகிஸ்தானும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 11

1947 போரில் இந்தியாவின் முதல் தாக்குதல்

Pakistani troops patrol on a hill top post in Ladha, a town in the troubled tribal region of South Waziristan along the Afghan border on November 17, 2009. Donkeys nibbling on the roadside are the only creatures living in the ruins of war in the hamlet of Ladha, the scenic valley emptied of inhabitants due to fighting between army and Taliban. For five weeks, 30,000 troops backed by warplanes and helicopter gunships have waged battle in South Waziristan, bombing, shelling and fighting in streets against homegrown Taliban militants the military has vowed to crush. AFP PHOTO/ AAMIR QURESHI (Photo credit should read AAMIR QURESHI/AFP/Getty Images)

Pakistani troops patrol on a hill top post in Ladha, a town in the troubled tribal region of South Waziristan along the Afghan border on November 17, 2009. Donkeys nibbling on the roadside are the only creatures living in the ruins of war in the hamlet of Ladha, the scenic valley emptied of inhabitants due to fighting between army and Taliban. For five weeks, 30,000 troops backed by warplanes and helicopter gunships have waged battle in South Waziristan, bombing, shelling and fighting in streets against homegrown Taliban militants the military has vowed to crush. AFP PHOTO/ AAMIR QURESHI (Photo credit should read AAMIR QURESHI/AFP/Getty Images)

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூகோள அமைப்பைச் சரியாகப் புரிந்துகொள்வது சற்று கடினமான ஒன்றுதான். இருந்தபோதும் அதன் மலைத் தொடர்களைத் தெரிந்துகொண்டால் எளிதாகிவிடும். வெளி இமயமலை (தெற்கு), உள் இமயமலை, பெரும் இமயமலை (வடக்கு), இன்னும் வடக்கில் காரகோரம் மலைத் தொடர், தென் கிழக்கில் லடாக், சன்ஸ்கார் மலைத் தொடர்கள் ஆகியவை ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளின் முக்கியமான மலைத் தொடர்கள்.

தெற்கில் இருந்து சென்றால் முதலில் தென்படுபவை வெளி இமய மலைகள். இவை சிவாலிக் மலைகள் என்றும் ஜம்மு மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மலைத் தொடர் பஞ்சாபில் இருந்து உயர்ந்து கொண்டு செல்கிறது. கிழக்கில் பாசோஹ்லியில் இருந்து மேற்கில் பூஞ்ச் வரை செல்லும் இது ஓர் உடைந்த மலைத் தொடர். மேலும் இதனை ராவி நதியில் இருந்து ஜீலம் நதி வரை உள்ள மலைத்தொடர் என்றும் சொல்லலாம். இதில் உள்ள மலைகள் 200 கிமீ நீளமும், 20 முதல் 50 கிலோ மீட்டர் வரை அகலமும், 600 முதல் 1200 மீட்டர் வரை உயரமும் கொண்டவை.

உள் இமய மலைகள் சிறிய இமயமலைகள் என்றும் பிர்பாஞ்சால் மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. வெளி இமய மலைகளுக்கும், பிர்பாஞ்சால் மலைகளுக்கும் இடையே ஜம்மு பகுதி இருக்கிறது. ஜம்மு, காஷ்மீரின் குளிர்காலத் தலை நகரம்.

காஷ்மீர் பாள்ளத்தாக்கு அல்லது காஷ்மீர், வடக்கில் பெரும் இமய மலைகளுக்கும், தெற்கிலும் மேற்கிலும் உள்ள பிர் பாஞ்சால் மலைகளுக்கும் இடையே அமைந்துள்ளது. கோடைகாலத் தலை நகரான ஸ்ரீ நகர் அங்கு உள்ளது.

வடக்கில் காரகோரம் மலைத்தொடருக்கும் பெரும் இமய மலைகளுக்கும் இடையே உள்ள பகுதிகள் ஜம்மு-காஷ்மீரின் வடக்குப் பகுதிகள் என்று அழைக்கப்படுபவை. சிந்து சமவெளி, கில்கித், ஹன்சா, பல்திஸ்தான் ஆகிய பகுதிகள் இங்கு உள்ளன. இந்த வடக்குப் பகுதிகளுக்கு தென் கிழக்காக அமைந்திருப்பது லடாக் பகுதியாகும். இது வடக்கில் உள்ள குன்லன் மலைத் தொடர்களுக்கும் தெற்கில் உள்ள பெரும் இமயமலைக்கும் இடையில் உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானம் சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இது வடக்கு தெற்காக 640 கிமீ அகலமும், கிழக்கு மேற்காக 380 கிமீ அகலமும் கொண்டது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து 300 முதல் 7000 மீட்டர்கள் உயரத்தில் இது அமைந்துள்ளது.

தட்ப வெப்ப நிலை ஒரு பகுதியின் உயரத்தைப் பொறுத்து அமைகிறது. ஜம்மு பகுதியின் சராசரி உயரம் கடல் மட்டத்தில் இருந்து 305 மீட்டர்கள். காஷ்மீர் பகுதியின் சராசரி உயரம் 1700 மீட்டர்கள். லடாக் பகுதியின் ச ணராசரி உயரம் 2500 முதல் 3500 மீட்டர்கள்.லடாக் பகுதி மலைப் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.  இத்தகைய மலைப் பகுதிகளைக் கொண்ட ஜம்மு – காஷ்மீரில் போரின் போது விமானத்தில் இருந்து பாராசூட் முலம் வீரர்களை இறக்குவது மிகவும் ஆபத்தானது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் உள்ள இடங்களில் ஐ சி என்ஜின்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் சரியாகச் செயல்படுவதில்லை. இப்படிப்பட்ட சவாலான குளிர் பிரதேசத்தில் தான் இந்திய பாகிஸ்தான் முதல் போர் தொடங்கியது.

1947 அக்டோபர் 27 ஆம் தேதி அதிகாலை பாலம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டகோடா விமானம் காலை 8.30 மணிக்கு ஸ்ரீ நகரில் தரை இறங்குகிறது. அதுவே போருக்காக காஷ்மீரில் இறங்கிய சுதந்தர இந்தியாவின் முதல் ராணுவ விமானம்.  அதை ஓட்டி வந்த விமானி பின் நாளில் ஒரிசாவின் முதல்வராக இருந்த பிஜூ பட்நாயக். அந்த விமானத்தில் 1 வது சீக்கிய ரெஜிமென்ட்டின் 17 ராணுவ வீரர்கள் இருந்தார்கள்.படையைத் தலைமை தாங்கியவர் லெப்டினட் கர்னல் திவான் ரஞ்சித் ராய்.

விமானம் ஸ்ரீ நகர் விமான தளத்தின் மேல் தாழ்வாகப் பறந்து இரண்டு முறை வட்டமடித்தது.பிரதம மந்திரி நேருவின் அலுவலகத்தில் இருந்து வந்த ஆணையின் படி விமான தளம் எதிரிகள் கைவசம் இருக்கும் பட்சத்தில் விமானம் தரை இறங்கக் கூடாது. விமானி,விமான தளத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் விமானத்தைத் தரை இறக்குகிறார். உள்ளிருந்தவர்கள் வெளியே யாரும் இருக்கிறார்களா என்று மீண்டும் பார்த்துக் கொள்கிறார்கள்.விமான தளம் யாருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.ஆனால் திடீரென்று விமான ஓடு தளத்திலிருந்து மனிதர்கள் முளைத்து எழுவது போல் உள்ளது.சிறிது நேரத்தில் அங்கு மக்கள் மொய்த்திருப்பது தெரிந்தது. அவர்கள் எல்லோரும் ஸ்ரீ நகரில் இருந்து தப்பிச்செல்ல காத்திருந்த பொது மக்கள்.அவர்கள் விமான தளத்தின் அருகே பதுங்கி இருந்தார்கள்.இதனை அந்த விமானத்தில் வந்த பிரிகேடியர் ஹிராலால் அத்தால் தெரிவிக்கிறார்.

அந்த வேளையில் அத்து மீறி உள்ளே புகுந்த பதானியர்கள் பாரமுல்லாவைச் சுற்றி வந்து மனிதர்களை வேட்டையாடுவதில் மும்முரமாக இருந்தார்கள். படை இறங்கிக் கொண்ட பின் விமானி சாமர்த்தியமாக வேறு யாரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. அவர் விமானத்தை அங்கிருந்து பாரமுல்லா செல்லும் சாலை வரை ஓட்டி சென்று நோட்டமிடுகிறார். அங்கு ஆள் நடமாட்டம் இல்லை. அதே வேளையில் பாரமுல்லாவின் பல இடங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டும் மற்ற இடங்கள் புகைந்து கொண்டும் இருக்கின்றன என்று அவர் செய்தி அனுப்புகிறார். அப்போது எதிரிகள் சுட்டதால் ஒரு குண்டு பறந்து வந்து எரி பொருள் டேங்கைத் தாக்குகிறது. ஆனால் அது மோசமாக சேதமடையவில்லை. விமானம் அந்த நாள் முழுவதும் பல முறை (28 முறை) பறந்து 300 சீக்கிய ரெஜிமென்ட் வீரர்களை ஸ்ரீ நகருக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

முதல் முறை விமானம் வந்து இறங்கிய சில மணி நேரத்தில் படைத் தலைவர் ரஞ்சித் ராய் ஒரு சிறிய படையை ஸ்ரீ நகர் விமான தளத்துக்குக் காவலாக இருக்கும்படி ஆணையிட்டார். அவர் ஒரு ரைபிள் படைப் பிரிவுடன் பாரமுல்லாவை நோக்கிச் சென்றார். பாரமுல்லாவில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த காஷ்மீர் ராணுவப் படைப் பிரிவுகளுடன் (60 வீரர்கள் கொண்ட 2 பிளாட்டூன்கள்) இந்தியப் படைப் பிரிவு சேர்ந்து கொண்டது. அந்தப் படைப் பிரிவுகள் பாரமுல்லாவிற்கு கிழக்கே சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் , பாதானியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்தன. அப்போது இந்திய ராணுவம் காஷ்மீர் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான தன் முதல் ரைபிள்படை தாக்குதலை நடத்தியது.

இந்தியப் படை வீரர்களால் அதிக நேரம் பதானியர்களின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் சற்று பின் வாங்கி ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அரணாக நின்றார்கள். அடுத்த நாள் அக்டோபர் 28 ஆம் தேதி காலை ரஞ்சித் ராய் மேலும் இரண்டு ரைபிள் படைப் பிரிவுகளுடன் சற்று முன்னேறிச் சென்றார். அங்கு மிகுதியான அளவில் பதானியப் படை வீரர்கள் இருப்பதைக் கண்டார். அபாயத்தை உணர்ந்து அங்கிருந்து படைப் பிரிவுகளை பின் வாங்குமாறு கட்டளையிட்டார்.

ஸ்ரீ நகரில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்கள் தொலைவில் பாதுகாப்புடன் கூடிய வலிமையான இடத்தில் படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டன. ஆனால் படை பின்வாங்கும் தருணத்தில் எதிரிகளின் பக்கம் இருந்து வந்த குண்டு ஒன்று ரஞ்சித் ராயின் கழுத்தில் பாய்ந்ததால் அவர் வீர மரணம் அடைந்தார். பாரமுல்லாவில் பதானியப் படையுடன் நடந்த முதல் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட வீரர்களாலும், ஆயுதங்களாலும் இந்தியப்படை வலுவடைந்தது.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ளது காஷ்மீரின் பதான் நகரம். இது பாரமுல்லாவில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 27.5 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு சீக்கிய படைப் பிரிவு, மோர்டார்கள் போன்ற வலுவான ஆயுதங்கள் கொண்ட படைப்பிரிவு, ஆறு இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய பஞ்சாப் படைப்பிரிவு ஆகியவை பதான் நகரத்தில் நிறுத்தப்பட்டன. ஒரு குமான் துணை ராணுவப் படைப்பிரிவு ஸ்ரீ நகர் விமான தளத்தைக் காவல் காத்தது.

பிரிட்டிஷார் வளர்த்து விட்டுச்சென்ற இந்திய ராணுவம் 

ஒரு போரை முழுமையாகக் காண அதில் நேரடியாகப் பங்கு கொள்ளும் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர் வகித்த பதவிகளின் பெயர்களையும், அதிகாரங்களையும் அறிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் ராணுவக் கட்டமைப்பில் உள்ள வெவ்வேறு ராணுவப் பதவிகளின் அதிகாரங்களுக்கும் போரின் போக்குக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

போரில் பங்கு பெரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், ராணுவத்தின் கட்டமைப்பு உருவாக்கத்தில் முக்கிய காரணிகளாக உள்ளன. 1947 இல் தேசப் பிரிவினைக்கு முன் இந்தியா ஏழு பெரிய மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்றாக இருந்த இந்தியாவின் ஏழு மாகாணங்கள் :

 1. 1.வங்காளம். சுமார் 1.5 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய வங்க தேசம், மேற்கு வங்காளம், பிகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகியவை இணைந்த பெரிய மாகாணம்.
 2. மதராஸ். சுமார்1.4 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய தமிழ் நாடு முழுவதையும்,ஆந்திரப் பிரதேசம்,கர்நாடகா, கேரளா ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய மாகாணம்.
 3. பம்பாய். சுமார் 1.2 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் சிந்துவையும், தற்போதைய மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
 4. இணைந்த மாகாணங்கள். சுமார் 1.1 லட்சம் சதுர மைல்கள். தற்போதைய உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட்.
 5. மத்திய மாகாணங்கள். சுமார் 1 லட்சம் சதுர மைல். தற்போதைய மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர்.
 6. பஞ்சாப். சுமார் 97 அயிரம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப், இஸ்லாமாபாத், இந்தியாவின் பஞ்சாப், இமாசலப் பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகியவை இணைந்த மாகாணம்.
 7. அஸ்ஸாம். சுமார் 49 ஆயிரம் சதுர மைல்கள்.

சிறிய மாகாணங்கள் ஐந்து :

 1. வட மேற்கு எல்லை மாகாணம். 16 ஆயிரம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டது.
 2. பிரிட்டிஷ் பலுசிஸ்தான். 46 ஆயிரம் சதுர மைல்கள்.
 3. கூர்க். 1600 சதுர மைல்கள்.
 4. அஜ்மீர்- மீர்வாரா. 2700 சதுர மைல்கள்சி இது தற்போதைய ராஜஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகளை உள்ளடக்கியது.
 5. அந்தமான் நிக்கோபார் தீவுகள். 30,000 சதுர மைல்கள்.

பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுமையில் இருந்த பெரிய மாகாணமான பர்மாவின் பரப்பளவு 1.7 லட்சம் சதுர மைல்கள். பர்மா 1937 இல் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் தனியாக இயங்கத் தொடங்கியது.

பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட சமஸ்தானங்களில் நான்கு பெரியவை.

 1. ஹைதராபாத். 82,698 சதுர மைல்கள். இது சமீபத்தில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியையும், மகாராஷ்டிரம், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
 2. ஜம்மு- காஷ்மீர். 80900 சதுர மைல்கள்.

3 மைசூர். 29,444 சதுர மைல்கள்.

 1. பரோடா. 8099 சதுர மைல்கள்.

சிறிய சமஸ்தானங்கள் :

 1. மத்திய இந்தியா ஏஜென்சி பகுதியைச் சேர்ந்த 148 சமஸ்தானங்கள்
  2. ராஜபுத்தானாவைச் சேர்ந்த 20 சமஸ்தானங்கள்
  3. பலுசிஸ்தான் பகுதியில் 2 சமஸ்தானங்கள்
  4. வங்காளத்தின் 30 சமஸ்தானங்கள்
  5. மதராஸ் பகுதியில் 5 சமஸ்தானங்கள்
  6. பம்பாய் பகுதியில் 354 சமஸ்தானங்கள்
  7. இணைந்த மாகாணத்தின் 15 சமஸ்தானங்கள்
  8. மத்திய மாகாணத்தின் 15 சமஸ்தானங்கள்
  9. பஞ்சாபின் 34 சமஸ்தானங்கள்
  10. அஸ்ஸாமின் 26 சமஸ்தானங்கள்

சமஸ்தானங்களின் எண்ணிக்கை, பர்மாவின் 52 சமஸ்தானங்ளைச் சேர்க்காமல் 640. ஆனால் அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மறைமுக ஆளுமையின் கீழ் இருந்த சமஸ்தானங்கள் 565. பிரிவினைக்கு முன் இந்தியாவின் பெரிய, சிறிய மாகாணங்களின் மொத்த பரப்பளவு சுமார் 8 லட்சத்து 63.3 ஆயிரம் சதுர மைல்கள் (பர்மா நீங்கலாக). அனைத்து சமஸ்தானங்களின் மொத்த பரப்பளவு (பர்மாவின் சமஸ்தானங்கள் நீங்கலாக) சுமார் 7 லட்சத்து 3.3 ஆயிரம் சதுர மைல்கள்.

பிரிவினைக்கு முன்னால் இந்தியாவின் மொத்த பரப்பளவு சுமார் 15 லட்சத்து 66.6 ஆயிரம் சதுர மைல்கள். எனவே 1947 இல் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் மாகாணங்களின் பரப்பளவு கிட்டத்தட்ட 55 % ஆகவும் சமஸ்தானங்களின் பரப்பளவு 45 % ஆகவும் இருந்துள்ளன. இது பொதுவாக குறிப்பிடப்படும் 60% – 40% என்ற கணக்குக்கு நெருங்கி வருகிறது. மாகாணங்களில் எல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் முழுமையாக அதிகாரம் செலுத்தமுடியும். சமஸ்தானங்களை அது மறைமுகமாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளமுடியும்.

உலகின் பல பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவம் என்பது பிரிட்டிஷ் ஆர்மி என்ற தரைப்படை, ராயல் ஏர்ஃபோர்ஸ் என்ற விமானப் படை, ராயல் நேவி என்ற கப்பல் படை ஆகியவற்றைக் கொண்டது. இதே போன்று பிரிட்டிஷ் இந்திய ராணுவமும் முப்படைகளைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ராணுவத் தரைப்படை கட்டமைப்பு தீ குழு (ஃபையர் டீம்) என்ற நான்கு வீரர்களைக் கொண்ட சிறிய பிரிவில் தொடங்கி தியேட்டர் என்ற பெரும் படையில் முடிகிறது.

இந்த ராணுவக் கட்டமைப்பு உலகின் பெரும்பாலான பெரிய நாடுகளுக்குப் பொருந்தும். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கட்டமைப்பும் இதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.

இரண்டாம் உலகப் போருக்கு (1939-45) முன்னால் இந்திய ராணுவம் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் பிரிவுகளைக் (கமாண்ட்) கொண்டிருந்தது. அந்தப் பிரிவுகள் இன்றைய இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகியவை இணைந்த பெரிய தேசத்தின் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு ராணுவப் பெரும் பிரிவும் ஒரு ஜெனரல் அல்லது லெப்டினெண்ட் ஜெனரலின் கீழ் செயல்பட்டது.

நிர்வாக வசதிக்காக ராணுவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1942 மே மாதம் ராணுவத்தின் பெரும் பிரிவுகளில் பெயர் மாற்றமும் சிலவற்றில் முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டன.

அப்போது ராணுவம் வடமேற்கு பெரும் பிரிவு,தெற்கு ராணுவப்படை,கிழக்கு ராணுவப்படை,மத்திய பெரும் பிரிவு என்று பிரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் 1946 இல் மீண்டும் மாற்றம் நடந்தது. மத்திய பெரும் பிரிவு கலைக்கப்பட்டது. வட மேற்கு பெரும் பிரிவு மீண்டும் வடக்குப் பெரும் பிரிவு ஆனது. தெற்கு, கிழக்கு, மேற்கு பெரும் பிரிவுகள் மீண்டும் உருவாயின. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது வடக்கு ராணுவப் பெரும் பிரிவு சுதந்திர பாகிஸ்தானின் ராணுவத் தலைமையகம் ஆனது. மற்ற ராணுவப் பெரும் பிரிவுகள் இந்திய ராணுவத்தின் பகுதிகளாயின.

ராணுவத்தின் தரைப் படை, விமானப் படை, கப்பல் படை ஆகிய அனைத்திலும் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தானுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அதிகாரிகள், வீரர்கள் ஆகியோரில் மூன்றில் ஒரு பங்கு நபர்கள் பாகிஸ்தானுக்குச் சொந்தம். ஆயுதங்கள்,விமானங்கள், கப்பல்கள் ஆகிய எல்லாவற்றிலும் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தான் வசம் சென்றன.
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு கமாண்டுகள் ஒவ்வொன்றும் பெரிய ராணுவப் பிரிவைக் குறிக்கின்றன. கமாண்ட் என்பது ஒரு குறிப்பிட்ட பணிக்காகவோ அல்லது தேசத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பாதுகாப்புக்காகோ உருவாக்கப்படுவது. அது கார்ப்ஸ் என்ற பெரும் படையை ஒரு பணிக்காக அனுப்பமுடியும். அதே வேளையில் அது சிறிய படைகளான சில பெட்டாலியன்களையும் பணிக்காக அனுப்பும்.

ராணுவத்தைப் பொறுத்தவரை ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரோடு ஆயுதங்கள், ராணுவ வாகனங்கள் இவை எல்லாம் இருந்தால் உடனடியாக ஒரு போரை நடத்திவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் போர் நடக்க இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு பணிக்கப்பட்டது ஆயுதங்கள் கொண்ட ஒரு காலாட்படை ரெஜிமென்ட். பொதுவாக அது நிர்வாகப் பணிகளையும், விழாக்கால பணிகளையும் மேற்கொள்ளும். அதில் சில பெட்டாலியன்கள் இருக்கும். இப்போது போருக்கு அனுப்ப அதில் ஒரு போர்க் குழு உருவாக்கப்படும். ஒரு பிரிகேடியர் தலைமையில் இயங்கும் ஆயுதம் தாங்கிய ரெஜிமென்ட்டைச் சுற்றி உருவாக்கப்படுவது போர் குழு.
போர் செய்யப்போகும் படைகள் எல்லாம் சேர்ந்த ஒரு தொகுப்பை ஒரு கட்டடம் என்றால் இந்தப் போர்க் குழு அதன் அஸ்திவாரத்தின் மேல் எழுந்த முதல் தளம். இனி உயரமான பெரும் கட்டடம் அதன் மேல் எழும். ஒரு பெட்டாலியன் அல்லது ரெஜிமென்ட்டை வைத்து உருவாக்கப்படும் போர்க்குழுவுக்குத் தேவையான ஆள்களை அதுவே கொடுத்துவிடும். இன்னும் அதிகமாகத் தேவைப்படும் ஆட்களையும், ஆயுதங்களையும் மற்ற பிரிவுகள் கொடுக்கும். உதாரணமாக ராணுவ டேங்குகள் படை வீரர்களோடு அதில் இணைக்கப்படும். போர்க்குழு தன் பணியை சரியாகச் செய்து முடிக்க ஒரு தொழில் நுட்பப் பிரிவும் அதனோடு சேர்க்கப்படும். மேலும் போரில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு போர்க் குழுவின் வடிவம் மாற்றி அமைக்கப்பட வசதியானதாக இருக்கும். போரில் தாக்குதல் நடத்தும்போது ஆயுதம் தாங்கிய ஒரு ரெஜிமென்ட்டைச் சுற்றி உருவக்கப்படும் போர்க்குழு இரண்டு டேங்கு ஸ்குவாட்ரன்களையும், அதற்கு உதவியாக ஒரு காலாட்படை கம்பெனியையும் பயன்படுத்தலாம். போரில் சற்று பின்வாங்கி பாதுகாப்பாகப் போரிடும் நிலை ஏற்படும்போது ஒரு காலட்படை பெட்டாலியனைச் சுற்றி உருவாக்கப்படும் போர்க்குழு இரண்டு கம்பெனிகளையும், ஆயுதம் தாங்கிய ஒரு ஸ்குவாட் ரனையும் பயன்படுத்தலாம்.
1947 இல் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் 4 லட்சத்து 60 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருந்தது. அதில் 12 ஆயிரம் அதிகாரிகள் இருந்தார்கள். இவர்களைத் தவிர கமிஷனால் நியமிக்கப்படாத அதிகாரிகளும் இருந்தார்கள். மொத்த ராணுவ வீரர்களோடு சமஸ்தானங்களின் 75 ஆயிரம் படை வீரர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் தரைப் படை தலைமை தளபதி முப்படைகளுக்கும் தலைவராக இருப்பார். அவர்தான் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கமாண்டர் – இன் – சீஃப். அவர் கவர்னர் ஜெனரலின் ஆணைக்கு உட்பட்டு நடப்பவர். அந்தப் பதவியைக் கடைசியாக வகித்த வெள்ளைக்காரர் ஜெனரல் சர் ராய் பச்சர். இந்திய ராணுவத்தின் முதல் இந்திய கமாண்டர் – இன் – சீஃப் ஆக இருந்தவர் ஜென்ரல் கே.எம். கரியப்பா. சுதந்தர இந்தியாவில் 1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பதவி குடியரசுத் தலைவர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டது. ஆதலால் தனியாக அப்படியொரு பதவி அதற்குப் பிறகு கிடையாது. தரைப்படை தளபதி பதவியின் பெயர் சீப் ஆஃப் ஆர்மி ஸ்டாஃப் என மாற்றப்பட்டது. இந்திய ஜனாதிபதி முப்படைகளின் தலைவர் (கமாண்டர் – இன் – சீஃப்) ஆகிவிட்டார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் உயர் ராணுவ அதிகாரிகள் எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் தாம். கமிஷனால் நியமிக்கப்படும் உயர் அதிகாரிகளில் பிரிட்டிஷாரும், இந்தியர்களும் இருந்தார்கள்.
1920 முதல் பிரிட்டிஷ் அரசரின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதில் உள்ள அதிகாரிகள் இந்தியர்கள். மேலும் அப்போது வைஸ்ராயின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கொண்ட பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. இவர்களும் இந்தியர்கள்தாம். முன்னே சொல்லப்பட்டவர்களுக்கும் இவர்களுக்கும் அதிகாரத்தில் வேறுபாடு உண்டு. வைஸ்ராயின் கமிஷனால் நியமிக்கப்பட்ட இந்திய ராணுவ அதிகாரிகள் ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். இவர்கள் எல்லோரும் அரசரின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். பிரிட்டிஷ் ராணுவ மேஜருக்கு இணையான சுபேதார் மேஜர், பிரிட்டிஷ் ராணுவ கேப்டனுக்கு இணையான சுபேதார், லெப்டினண்ட்டுக்கு இணையான ஜமேதார் ஆகியோர் இவர்களுள் அடங்குவார்கள்.
ராணுவத்தின் கட்டமைப்பில் வெவ்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளின் பதவிப் பெயர்கள் கொண்ட பட்டியல் பிரிட்டிஷ் ராணுவத்தின் கடை நிலை அதிகாரியில் இருந்து நீள்கிறது.

1.ராணுவசி அதிகாரி -பயிற்சி- ஒரு ஸ்டார்
2.இரண்டாம் நிலை லெப்டினண்ட் – 2 ஸ்டார்கள்
3.லெப்டினண்ட் -3 வருடங்கள் வரை
4.கேப்டன் – 3 ஸ்டார்கள்
5.மேஜர் – 8 முதல் 10 ஆண்டுகள் பணிக்குப் பிறகு கிடைப்பது. 120 அதிகாரிகளை இவர் கட்டுப்படுத்த முடியும்.
6. லெப்டினண்ட் கர்னல் – இவர் 650 ராணுவ வீரர்களைக் கட்டுப்படுத்தமுடியும்.
7.கர்னல்- இவர் பெரும்பாலும் களத்தின் தலைவராக இருப்பதில்லை.
8.பிரிகேடியர்
9. மேஜர் ஜெனரல்
10. லெப்டினட் ஜெனரல்
11.ஜெனரல்

இந்தப் பட்டியலில் உள்ள பல நிலைகளில் இந்தியர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இணையாக, கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளாகப் பணியாற்றினார்கள்.
பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் ஏற்கும் வெவ்வேறு நிலைகளின் பட்டியல் :

1.முதல் நிலை – ராணுவ வீரர்
2. இரண்டாம் நிலை- லான்ஸ் கார்பொரல்
3. கார்பொரல் – 6 முதல் 8 ஆண்டுகளுக்குப் பிறகு.
4. சார்ஜென்ட் – 12 ஆண்டுகளுக்குப் பிறகு
5. கர்னல் சார்ஜென்ட்
6. வாரன்ட் அதிகாரி – பிரிவு 2
7.வாரன்ட் அதிகாரி- பிரிவு 1

இந்தப் பட்டியலோடு இந்திய ராணுவ அதிகாரிகள் அல்லது வீரர்களின் வெவ்வேறு நிலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்கு உதவியாக இருக்கும்.
1.சிப்பாய்
2.லான்ஸ் நாயக் – லான்ஸ் கார்பொரலுக்கு இணையானது.
3.நாயக்
4.ஹவில் தார் (சார்ஜென்ட்)
5.ஜூனியர் கமிஷன்ட் அதிகாரிகள் : நாயக் சுபேதார், சுபேதார், சுபேதார் மேஜர்.

பிரிட்டிஷ் இந்தியத் தரைப்படை கட்டமைப்பும், அதிகாரிகளின் பதவிப் பெயர்களும் விமானப் படையிலும் (ராயல் இண்டியன் ஏர் ஃபோர்ஸ்), கப்பல் படையிலும் (ராயல் இண்டியன் நேவி) சற்று மாறுபடும். மேலிருந்து கீழ் நிலை வரை இந்திய ராணுவம் விடுதலைக்கு முன்பாக பல ஆண்டுகளாகவே இந்திய மயம் ஆகிக் கொண்டிருந்தது.

ராணுவத்தில் இந்தியர்கள் அதிக அளவில் சேர்ந்து கொண்டே இருந்தார்கள்.
1947 இல் தேசப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ராணுவ யூனிட்டுகள், யுனைட்டெட் கிங்டத்துக்கும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பிரிட்டிஷ் ராணுவம் வெளியேறுவதைக் கவனிக்கும் பொறுப்பை மேஜர் விஸ்லர் ஏற்றார். பிரிட்டிஷ் ராணுவத்தின் கடைசி பிரிவு 1வது பெட்டாலியன் (சாமர்செட்) 1948 பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியேறியது. ராணுவ தளவாடங்களில் மிகுதியானவற்றை பிரிட்டிஷ் ராணுவம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் விட்டுச் சென்றது. அதே வேளையில் பிரிட்டிஷ் ராணுவம் அப்போது முற்றிலுமாக இந்தியாவையும், பாகிஸ்தானையும் விட்டுச் செல்லவில்லை.
1948 ஆம் ஆண்டு சுமார் 800 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தானிலும், சுமார் 350 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் இந்தியாவிலும் இருந்தார்கள். இந்தியா தனது நாட்டு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பதில் அக்கறை காட்டியது. பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் அனைவரும் தொழில்நுட்பப் பிரிவிலும், அறிவுரை வழங்கும் நிலையிலும் மட்டுமே இந்தியாவில் இருந்தார்கள். தேசப் பிரிவினையின்போது புலனாய்வுத்துறை சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அழிக்கப்பட்டுவிட்டன என்கிறார் பீட்டர் ஏகிஸ் (தி ஃபர்ஸ்ட் இண்டோ பாகிஸ்தானி வார் 1947—48). அவை கிடைத்திருந்தாலும் இரு நாடுகளுக்கும் லாபம் இல்லை. ஏனென்றால் பிரிட்டிஷ் இந்திய உளவுத்துறை பிரிட்டிஷ் அரசாட்சி இந்தியாவில் தொடர வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டது. அது சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் விடுதலை கோரும் நபர்கள்; இயக்கங்கள் பற்றியவை.
எல்லாவற்றையும் பிரிக்கும்போது புலனாய்வுத் துறையை இரண்டு நாடுகளுக்கும் பிரித்துக் கொடுப்பதுதான் முறை. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் கிட்டத்தட்ட எந்தவிதமான புலனாய்வுத் தகவலும் இல்லாமல் புதிதாக எல்லாவற்றையும் தொடங்கும் நிலையில் இருந்தது. புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த குலாம் அகமதும் அவருடன் இருந்த இஸ்லாமிய அலுவலர்களும் தனி டொமினியனாக மாறிய பாகிஸ்தானுக்குப் பணி புரியப் போய் விட்டார்கள். பெரிய அளவில் அவர்கள் வசம் தகவல்கள் இல்லை என்றாலும் அவர்கள் புலனாய்வுத் துறையில் திறமையும், அனுபவமும் மிக்கவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

1947 போரில் இந்தியாவின் முதல் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூகோள அமைப்பைச் சரியாகப் புரிந்துகொள்வது சற்று கடினமான ஒன்றுதான். இருந்தபோதும் அதன் மலைத் தொடர்களைத் தெரிந்துகொண்டால் எளிதாகிவிடும். வெளி இமயமலை (தெற்கு), உள் இமயமலை, பெரும் இமயமலை (வடக்கு), இன்னும் வடக்கில் காரகோரம் மலைத் தொடர், தென் கிழக்கில் லடாக், சன்ஸ்கார் மலைத் தொடர்கள் ஆகியவை ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளின் முக்கியமான மலைத் தொடர்கள்.

தெற்கில் இருந்து சென்றால் முதலில் தென்படுபவை வெளி இமய மலைகள். இவை சிவாலிக் மலைகள் என்றும் ஜம்மு மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மலைத் தொடர் பஞ்சாபில் இருந்து உயர்ந்து கொண்டு செல்கிறது. கிழக்கில் பாசோஹ்லியில் இருந்து மேற்கில் பூஞ்ச் வரை செல்லும் இது ஓர் உடைந்த மலைத் தொடர். மேலும் இதனை ராவி நதியில் இருந்து ஜீலம் நதி வரை உள்ள மலைத்தொடர் என்றும் சொல்லலாம். இதில் உள்ள மலைகள் 200 கிமீ நீளமும், 20 முதல் 50 கிலோ மீட்டர் வரை அகலமும், 600 முதல் 1200 மீட்டர் வரை உயரமும் கொண்டவை.

உள் இமய மலைகள் சிறிய இமயமலைகள் என்றும் பிர்பாஞ்சால் மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. வெளி இமய மலைகளுக்கும், பிர்பாஞ்சால் மலைகளுக்கும் இடையே ஜம்மு பகுதி இருக்கிறது. ஜம்மு, காஷ்மீரின் குளிர்காலத் தலை நகரம்.

காஷ்மீர் பாள்ளத்தாக்கு அல்லது காஷ்மீர், வடக்கில் பெரும் இமய மலைகளுக்கும், தெற்கிலும் மேற்கிலும் உள்ள பிர் பாஞ்சால் மலைகளுக்கும் இடையே அமைந்துள்ளது. கோடைகாலத் தலை நகரான ஸ்ரீ நகர் அங்கு உள்ளது.

வடக்கில் காரகோரம் மலைத்தொடருக்கும் பெரும் இமய மலைகளுக்கும் இடையே உள்ள பகுதிகள் ஜம்மு-காஷ்மீரின் வடக்குப் பகுதிகள் என்று அழைக்கப்படுபவை. சிந்து சமவெளி, கில்கித், ஹன்சா, பல்திஸ்தான் ஆகிய பகுதிகள் இங்கு உள்ளன. இந்த வடக்குப் பகுதிகளுக்கு தென் கிழக்காக அமைந்திருப்பது லடாக் பகுதியாகும். இது வடக்கில் உள்ள குன்லன் மலைத் தொடர்களுக்கும் தெற்கில் உள்ள பெரும் இமயமலைக்கும் இடையில் உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானம் சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இது வடக்கு தெற்காக 640 கிமீ அகலமும், கிழக்கு மேற்காக 380 கிமீ அகலமும் கொண்டது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து 300 முதல் 7000 மீட்டர்கள் உயரத்தில் இது அமைந்துள்ளது.

தட்ப வெப்ப நிலை ஒரு பகுதியின் உயரத்தைப் பொறுத்து அமைகிறது. ஜம்மு பகுதியின் சராசரி உயரம் கடல் மட்டத்தில் இருந்து 305 மீட்டர்கள். காஷ்மீர் பகுதியின் சராசரி உயரம் 1700 மீட்டர்கள். லடாக் பகுதியின் ச ணராசரி உயரம் 2500 முதல் 3500 மீட்டர்கள்.லடாக் பகுதி மலைப் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.  இத்தகைய மலைப் பகுதிகளைக் கொண்ட ஜம்மு – காஷ்மீரில் போரின் போது விமானத்தில் இருந்து பாராசூட் முலம் வீரர்களை இறக்குவது மிகவும் ஆபத்தானது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் உள்ள இடங்களில் ஐ சி என்ஜின்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் சரியாகச் செயல்படுவதில்லை. இப்படிப்பட்ட சவாலான குளிர் பிரதேசத்தில் தான் இந்திய பாகிஸ்தான் முதல் போர் தொடங்கியது.

1947 அக்டோபர் 27 ஆம் தேதி அதிகாலை பாலம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டகோடா விமானம் காலை 8.30 மணிக்கு ஸ்ரீ நகரில் தரை இறங்குகிறது. அதுவே போருக்காக காஷ்மீரில் இறங்கிய சுதந்தர இந்தியாவின் முதல் ராணுவ விமானம்.  அதை ஓட்டி வந்த விமானி பின் நாளில் ஒரிசாவின் முதல்வராக இருந்த பிஜூ பட்நாயக். அந்த விமானத்தில் 1 வது சீக்கிய ரெஜிமென்ட்டின் 17 ராணுவ வீரர்கள் இருந்தார்கள்.படையைத் தலைமை தாங்கியவர் லெப்டினட் கர்னல் திவான் ரஞ்சித் ராய்.

விமானம் ஸ்ரீ நகர் விமான தளத்தின் மேல் தாழ்வாகப் பறந்து இரண்டு முறை வட்டமடித்தது.பிரதம மந்திரி நேருவின் அலுவலகத்தில் இருந்து வந்த ஆணையின் படி விமான தளம் எதிரிகள் கைவசம் இருக்கும் பட்சத்தில் விமானம் தரை இறங்கக் கூடாது. விமானி,விமான தளத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் விமானத்தைத் தரை இறக்குகிறார். உள்ளிருந்தவர்கள் வெளியே யாரும் இருக்கிறார்களா என்று மீண்டும் பார்த்துக் கொள்கிறார்கள்.விமான தளம் யாருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.ஆனால் திடீரென்று விமான ஓடு தளத்திலிருந்து மனிதர்கள் முளைத்து எழுவது போல் உள்ளது.சிறிது நேரத்தில் அங்கு மக்கள் மொய்த்திருப்பது தெரிந்தது. அவர்கள் எல்லோரும் ஸ்ரீ நகரில் இருந்து தப்பிச்செல்ல காத்திருந்த பொது மக்கள்.அவர்கள் விமான தளத்தின் அருகே பதுங்கி இருந்தார்கள்.இதனை அந்த விமானத்தில் வந்த பிரிகேடியர் ஹிராலால் அத்தால் தெரிவிக்கிறார்.

அந்த வேளையில் அத்து மீறி உள்ளே புகுந்த பதானியர்கள் பாரமுல்லாவைச் சுற்றி வந்து மனிதர்களை வேட்டையாடுவதில் மும்முரமாக இருந்தார்கள். படை இறங்கிக் கொண்ட பின் விமானி சாமர்த்தியமாக வேறு யாரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. அவர் விமானத்தை அங்கிருந்து பாரமுல்லா செல்லும் சாலை வரை ஓட்டி சென்று நோட்டமிடுகிறார். அங்கு ஆள் நடமாட்டம் இல்லை. அதே வேளையில் பாரமுல்லாவின் பல இடங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டும் மற்ற இடங்கள் புகைந்து கொண்டும் இருக்கின்றன என்று அவர் செய்தி அனுப்புகிறார். அப்போது எதிரிகள் சுட்டதால் ஒரு குண்டு பறந்து வந்து எரி பொருள் டேங்கைத் தாக்குகிறது. ஆனால் அது மோசமாக சேதமடையவில்லை. விமானம் அந்த நாள் முழுவதும் பல முறை (28 முறை) பறந்து 300 சீக்கிய ரெஜிமென்ட் வீரர்களை ஸ்ரீ நகருக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

முதல் முறை விமானம் வந்து இறங்கிய சில மணி நேரத்தில் படைத் தலைவர் ரஞ்சித் ராய் ஒரு சிறிய படையை ஸ்ரீ நகர் விமான தளத்துக்குக் காவலாக இருக்கும்படி ஆணையிட்டார். அவர் ஒரு ரைபிள் படைப் பிரிவுடன் பாரமுல்லாவை நோக்கிச் சென்றார். பாரமுல்லாவில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த காஷ்மீர் ராணுவப் படைப் பிரிவுகளுடன் (60 வீரர்கள் கொண்ட 2 பிளாட்டூன்கள்) இந்தியப் படைப் பிரிவு சேர்ந்து கொண்டது. அந்தப் படைப் பிரிவுகள் பாரமுல்லாவிற்கு கிழக்கே சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் , பாதானியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்தன. அப்போது இந்திய ராணுவம் காஷ்மீர் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான தன் முதல் ரைபிள்படை தாக்குதலை நடத்தியது.

இந்தியப் படை வீரர்களால் அதிக நேரம் பதானியர்களின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் சற்று பின் வாங்கி ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அரணாக நின்றார்கள். அடுத்த நாள் அக்டோபர் 28 ஆம் தேதி காலை ரஞ்சித் ராய் மேலும் இரண்டு ரைபிள் படைப் பிரிவுகளுடன் சற்று முன்னேறிச் சென்றார். அங்கு மிகுதியான அளவில் பதானியப் படை வீரர்கள் இருப்பதைக் கண்டார். அபாயத்தை உணர்ந்து அங்கிருந்து படைப் பிரிவுகளை பின் வாங்குமாறு கட்டளையிட்டார்.

ஸ்ரீ நகரில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்கள் தொலைவில் பாதுகாப்புடன் கூடிய வலிமையான இடத்தில் படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டன. ஆனால் படை பின்வாங்கும் தருணத்தில் எதிரிகளின் பக்கம் இருந்து வந்த குண்டு ஒன்று ரஞ்சித் ராயின் கழுத்தில் பாய்ந்ததால் அவர் வீர மரணம் அடைந்தார். பாரமுல்லாவில் பதானியப் படையுடன் நடந்த முதல் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட வீரர்களாலும், ஆயுதங்களாலும் இந்தியப்படை வலுவடைந்தது.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ளது காஷ்மீரின் பதான் நகரம். இது பாரமுல்லாவில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 27.5 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு சீக்கிய படைப் பிரிவு, மோர்டார்கள் போன்ற வலுவான ஆயுதங்கள் கொண்ட படைப்பிரிவு, ஆறு இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய பஞ்சாப் படைப்பிரிவு ஆகியவை பதான் நகரத்தில் நிறுத்தப்பட்டன. ஒரு குமான் துணை ராணுவப் படைப்பிரிவு ஸ்ரீ நகர் விமான தளத்தைக் காவல் காத்தது.

பிரிட்டிஷார் வளர்த்து விட்டுச்சென்ற இந்திய ராணுவம் 

ஒரு போரை முழுமையாகக் காண அதில் நேரடியாகப் பங்கு கொள்ளும் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர் வகித்த பதவிகளின் பெயர்களையும், அதிகாரங்களையும் அறிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் ராணுவக் கட்டமைப்பில் உள்ள வெவ்வேறு ராணுவப் பதவிகளின் அதிகாரங்களுக்கும் போரின் போக்குக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

போரில் பங்கு பெரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், ராணுவத்தின் கட்டமைப்பு உருவாக்கத்தில் முக்கிய காரணிகளாக உள்ளன. 1947 இல் தேசப் பிரிவினைக்கு முன் இந்தியா ஏழு பெரிய மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்றாக இருந்த இந்தியாவின் ஏழு மாகாணங்கள் :

 1. 1.வங்காளம். சுமார் 1.5 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய வங்க தேசம், மேற்கு வங்காளம், பிகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகியவை இணைந்த பெரிய மாகாணம்.
 2. மதராஸ். சுமார்1.4 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய தமிழ் நாடு முழுவதையும்,ஆந்திரப் பிரதேசம்,கர்நாடகா, கேரளா ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய மாகாணம்.
 3. பம்பாய். சுமார் 1.2 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் சிந்துவையும், தற்போதைய மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
 4. இணைந்த மாகாணங்கள். சுமார் 1.1 லட்சம் சதுர மைல்கள். தற்போதைய உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட்.
 5. மத்திய மாகாணங்கள். சுமார் 1 லட்சம் சதுர மைல். தற்போதைய மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர்.
 6. பஞ்சாப். சுமார் 97 அயிரம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப், இஸ்லாமாபாத், இந்தியாவின் பஞ்சாப், இமாசலப் பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகியவை இணைந்த மாகாணம்.
 7. அஸ்ஸாம். சுமார் 49 ஆயிரம் சதுர மைல்கள்.

சிறிய மாகாணங்கள் ஐந்து :

 1. வட மேற்கு எல்லை மாகாணம். 16 ஆயிரம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டது.
 2. பிரிட்டிஷ் பலுசிஸ்தான். 46 ஆயிரம் சதுர மைல்கள்.
 3. கூர்க். 1600 சதுர மைல்கள்.
 4. அஜ்மீர்- மீர்வாரா. 2700 சதுர மைல்கள்சி இது தற்போதைய ராஜஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகளை உள்ளடக்கியது.
 5. அந்தமான் நிக்கோபார் தீவுகள். 30,000 சதுர மைல்கள்.

பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுமையில் இருந்த பெரிய மாகாணமான பர்மாவின் பரப்பளவு 1.7 லட்சம் சதுர மைல்கள். பர்மா 1937 இல் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் தனியாக இயங்கத் தொடங்கியது.

பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட சமஸ்தானங்களில் நான்கு பெரியவை.

 1. ஹைதராபாத். 82,698 சதுர மைல்கள். இது சமீபத்தில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியையும், மகாராஷ்டிரம், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
 2. ஜம்மு- காஷ்மீர். 80900 சதுர மைல்கள்.

3 மைசூர். 29,444 சதுர மைல்கள்.

 1. பரோடா. 8099 சதுர மைல்கள்.

சிறிய சமஸ்தானங்கள் :

 1. மத்திய இந்தியா ஏஜென்சி பகுதியைச் சேர்ந்த 148 சமஸ்தானங்கள்
  2. ராஜபுத்தானாவைச் சேர்ந்த 20 சமஸ்தானங்கள்
  3. பலுசிஸ்தான் பகுதியில் 2 சமஸ்தானங்கள்
  4. வங்காளத்தின் 30 சமஸ்தானங்கள்
  5. மதராஸ் பகுதியில் 5 சமஸ்தானங்கள்
  6. பம்பாய் பகுதியில் 354 சமஸ்தானங்கள்
  7. இணைந்த மாகாணத்தின் 15 சமஸ்தானங்கள்
  8. மத்திய மாகாணத்தின் 15 சமஸ்தானங்கள்
  9. பஞ்சாபின் 34 சமஸ்தானங்கள்
  10. அஸ்ஸாமின் 26 சமஸ்தானங்கள்

சமஸ்தானங்களின் எண்ணிக்கை, பர்மாவின் 52 சமஸ்தானங்ளைச் சேர்க்காமல் 640. ஆனால் அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மறைமுக ஆளுமையின் கீழ் இருந்த சமஸ்தானங்கள் 565. பிரிவினைக்கு முன் இந்தியாவின் பெரிய, சிறிய மாகாணங்களின் மொத்த பரப்பளவு சுமார் 8 லட்சத்து 63.3 ஆயிரம் சதுர மைல்கள் (பர்மா நீங்கலாக). அனைத்து சமஸ்தானங்களின் மொத்த பரப்பளவு (பர்மாவின் சமஸ்தானங்கள் நீங்கலாக) சுமார் 7 லட்சத்து 3.3 ஆயிரம் சதுர மைல்கள்.

பிரிவினைக்கு முன்னால் இந்தியாவின் மொத்த பரப்பளவு சுமார் 15 லட்சத்து 66.6 ஆயிரம் சதுர மைல்கள். எனவே 1947 இல் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் மாகாணங்களின் பரப்பளவு கிட்டத்தட்ட 55 % ஆகவும் சமஸ்தானங்களின் பரப்பளவு 45 % ஆகவும் இருந்துள்ளன. இது பொதுவாக குறிப்பிடப்படும் 60% – 40% என்ற கணக்குக்கு நெருங்கி வருகிறது. மாகாணங்களில் எல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் முழுமையாக அதிகாரம் செலுத்தமுடியும். சமஸ்தானங்களை அது மறைமுகமாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளமுடியும்.

உலகின் பல பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவம் என்பது பிரிட்டிஷ் ஆர்மி என்ற தரைப்படை, ராயல் ஏர்ஃபோர்ஸ் என்ற விமானப் படை, ராயல் நேவி என்ற கப்பல் படை ஆகியவற்றைக் கொண்டது. இதே போன்று பிரிட்டிஷ் இந்திய ராணுவமும் முப்படைகளைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ராணுவத் தரைப்படை கட்டமைப்பு தீ குழு (ஃபையர் டீம்) என்ற நான்கு வீரர்களைக் கொண்ட சிறிய பிரிவில் தொடங்கி தியேட்டர் என்ற பெரும் படையில் முடிகிறது.

இந்த ராணுவக் கட்டமைப்பு உலகின் பெரும்பாலான பெரிய நாடுகளுக்குப் பொருந்தும். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கட்டமைப்பும் இதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.

இரண்டாம் உலகப் போருக்கு (1939-45) முன்னால் இந்திய ராணுவம் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் பிரிவுகளைக் (கமாண்ட்) கொண்டிருந்தது. அந்தப் பிரிவுகள் இன்றைய இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகியவை இணைந்த பெரிய தேசத்தின் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு ராணுவப் பெரும் பிரிவும் ஒரு ஜெனரல் அல்லது லெப்டினெண்ட் ஜெனரலின் கீழ் செயல்பட்டது.

நிர்வாக வசதிக்காக ராணுவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1942 மே மாதம் ராணுவத்தின் பெரும் பிரிவுகளில் பெயர் மாற்றமும் சிலவற்றில் முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டன.

அப்போது ராணுவம் வடமேற்கு பெரும் பிரிவு,தெற்கு ராணுவப்படை,கிழக்கு ராணுவப்படை,மத்திய பெரும் பிரிவு என்று பிரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் 1946 இல் மீண்டும் மாற்றம் நடந்தது. மத்திய பெரும் பிரிவு கலைக்கப்பட்டது. வட மேற்கு பெரும் பிரிவு மீண்டும் வடக்குப் பெரும் பிரிவு ஆனது. தெற்கு, கிழக்கு, மேற்கு பெரும் பிரிவுகள் மீண்டும் உருவாயின. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது வடக்கு ராணுவப் பெரும் பிரிவு சுதந்திர பாகிஸ்தானின் ராணுவத் தலைமையகம் ஆனது. மற்ற ராணுவப் பெரும் பிரிவுகள் இந்திய ராணுவத்தின் பகுதிகளாயின.

ராணுவத்தின் தரைப் படை, விமானப் படை, கப்பல் படை ஆகிய அனைத்திலும் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தானுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அதிகாரிகள், வீரர்கள் ஆகியோரில் மூன்றில் ஒரு பங்கு நபர்கள் பாகிஸ்தானுக்குச் சொந்தம். ஆயுதங்கள்,விமானங்கள், கப்பல்கள் ஆகிய எல்லாவற்றிலும் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தான் வசம் சென்றன.

கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு கமாண்டுகள் ஒவ்வொன்றும் பெரிய ராணுவப் பிரிவைக் குறிக்கின்றன. கமாண்ட் என்பது ஒரு குறிப்பிட்ட பணிக்காகவோ அல்லது தேசத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பாதுகாப்புக்காகோ உருவாக்கப்படுவது. அது கார்ப்ஸ் என்ற பெரும் படையை ஒரு பணிக்காக அனுப்பமுடியும். அதே வேளையில் அது சிறிய படைகளான சில பெட்டாலியன்களையும் பணிக்காக அனுப்பும்.

ராணுவத்தைப் பொறுத்தவரை ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரோடு ஆயுதங்கள், ராணுவ வாகனங்கள் இவை எல்லாம் இருந்தால் உடனடியாக ஒரு போரை நடத்திவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் போர் நடக்க இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு பணிக்கப்பட்டது ஆயுதங்கள் கொண்ட ஒரு காலாட்படை ரெஜிமென்ட். பொதுவாக அது நிர்வாகப் பணிகளையும், விழாக்கால பணிகளையும் மேற்கொள்ளும். அதில் சில பெட்டாலியன்கள் இருக்கும். இப்போது போருக்கு அனுப்ப அதில் ஒரு போர்க் குழு உருவாக்கப்படும். ஒரு பிரிகேடியர் தலைமையில் இயங்கும் ஆயுதம் தாங்கிய ரெஜிமென்ட்டைச் சுற்றி உருவாக்கப்படுவது போர் குழு.

போர் செய்யப்போகும் படைகள் எல்லாம் சேர்ந்த ஒரு தொகுப்பை ஒரு கட்டடம் என்றால் இந்தப் போர்க் குழு அதன் அஸ்திவாரத்தின் மேல் எழுந்த முதல் தளம். இனி உயரமான பெரும் கட்டடம் அதன் மேல் எழும். ஒரு பெட்டாலியன் அல்லது ரெஜிமென்ட்டை வைத்து உருவாக்கப்படும் போர்க்குழுவுக்குத் தேவையான ஆள்களை அதுவே கொடுத்துவிடும். இன்னும் அதிகமாகத் தேவைப்படும் ஆட்களையும், ஆயுதங்களையும் மற்ற பிரிவுகள் கொடுக்கும். உதாரணமாக ராணுவ டேங்குகள் படை வீரர்களோடு அதில் இணைக்கப்படும். போர்க்குழு தன் பணியை சரியாகச் செய்து முடிக்க ஒரு தொழில் நுட்பப் பிரிவும் அதனோடு சேர்க்கப்படும். மேலும் போரில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு போர்க் குழுவின் வடிவம் மாற்றி அமைக்கப்பட வசதியானதாக இருக்கும். போரில் தாக்குதல் நடத்தும்போது ஆயுதம் தாங்கிய ஒரு ரெஜிமென்ட்டைச் சுற்றி உருவக்கப்படும் போர்க்குழு இரண்டு டேங்கு ஸ்குவாட்ரன்களையும், அதற்கு உதவியாக ஒரு காலாட்படை கம்பெனியையும் பயன்படுத்தலாம். போரில் சற்று பின்வாங்கி பாதுகாப்பாகப் போரிடும் நிலை ஏற்படும்போது ஒரு காலட்படை பெட்டாலியனைச் சுற்றி உருவாக்கப்படும் போர்க்குழு இரண்டு கம்பெனிகளையும், ஆயுதம் தாங்கிய ஒரு ஸ்குவாட் ரனையும் பயன்படுத்தலாம்.

1947 இல் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் 4 லட்சத்து 60 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருந்தது. அதில் 12 ஆயிரம் அதிகாரிகள் இருந்தார்கள். இவர்களைத் தவிர கமிஷனால் நியமிக்கப்படாத அதிகாரிகளும் இருந்தார்கள். மொத்த ராணுவ வீரர்களோடு சமஸ்தானங்களின் 75 ஆயிரம் படை வீரர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் தரைப் படை தலைமை தளபதி முப்படைகளுக்கும் தலைவராக இருப்பார். அவர்தான் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கமாண்டர் – இன் – சீஃப். அவர் கவர்னர் ஜெனரலின் ஆணைக்கு உட்பட்டு நடப்பவர். அந்தப் பதவியைக் கடைசியாக வகித்த வெள்ளைக்காரர் ஜெனரல் சர் ராய் பச்சர். இந்திய ராணுவத்தின் முதல் இந்திய கமாண்டர் – இன் – சீஃப் ஆக இருந்தவர் ஜென்ரல் கே.எம். கரியப்பா. சுதந்தர இந்தியாவில் 1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பதவி குடியரசுத் தலைவர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டது. ஆதலால் தனியாக அப்படியொரு பதவி அதற்குப் பிறகு கிடையாது. தரைப்படை தளபதி பதவியின் பெயர் சீப் ஆஃப் ஆர்மி ஸ்டாஃப் என மாற்றப்பட்டது. இந்திய ஜனாதிபதி முப்படைகளின் தலைவர் (கமாண்டர் – இன் – சீஃப்) ஆகிவிட்டார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் உயர் ராணுவ அதிகாரிகள் எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் தாம். கமிஷனால் நியமிக்கப்படும் உயர் அதிகாரிகளில் பிரிட்டிஷாரும், இந்தியர்களும் இருந்தார்கள்.

1920 முதல் பிரிட்டிஷ் அரசரின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதில் உள்ள அதிகாரிகள் இந்தியர்கள். மேலும் அப்போது வைஸ்ராயின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கொண்ட பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. இவர்களும் இந்தியர்கள்தாம். முன்னே சொல்லப்பட்டவர்களுக்கும் இவர்களுக்கும் அதிகாரத்தில் வேறுபாடு உண்டு. வைஸ்ராயின் கமிஷனால் நியமிக்கப்பட்ட இந்திய ராணுவ அதிகாரிகள் ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். இவர்கள் எல்லோரும் அரசரின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். பிரிட்டிஷ் ராணுவ மேஜருக்கு இணையான சுபேதார் மேஜர், பிரிட்டிஷ் ராணுவ கேப்டனுக்கு இணையான சுபேதார், லெப்டினண்ட்டுக்கு இணையான ஜமேதார் ஆகியோர் இவர்களுள் அடங்குவார்கள்.

ராணுவத்தின் கட்டமைப்பில் வெவ்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளின் பதவிப் பெயர்கள் கொண்ட பட்டியல் பிரிட்டிஷ் ராணுவத்தின் கடை நிலை அதிகாரியில் இருந்து நீள்கிறது.

1.ராணுவசி அதிகாரி -பயிற்சி- ஒரு ஸ்டார்
2.இரண்டாம் நிலை லெப்டினண்ட் – 2 ஸ்டார்கள்
3.லெப்டினண்ட் -3 வருடங்கள் வரை
4.கேப்டன் – 3 ஸ்டார்கள்
5.மேஜர் – 8 முதல் 10 ஆண்டுகள் பணிக்குப் பிறகு கிடைப்பது. 120 அதிகாரிகளை இவர் கட்டுப்படுத்த முடியும்.
6. லெப்டினண்ட் கர்னல் – இவர் 650 ராணுவ வீரர்களைக் கட்டுப்படுத்தமுடியும்.
7.கர்னல்- இவர் பெரும்பாலும் களத்தின் தலைவராக இருப்பதில்லை.
8.பிரிகேடியர்
9. மேஜர் ஜெனரல்
10. லெப்டினட் ஜெனரல்
11.ஜெனரல்

இந்தப் பட்டியலில் உள்ள பல நிலைகளில் இந்தியர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இணையாக, கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளாகப் பணியாற்றினார்கள்.

பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் ஏற்கும் வெவ்வேறு நிலைகளின் பட்டியல் :

1.முதல் நிலை – ராணுவ வீரர்
2. இரண்டாம் நிலை- லான்ஸ் கார்பொரல்
3. கார்பொரல் – 6 முதல் 8 ஆண்டுகளுக்குப் பிறகு.
4. சார்ஜென்ட் – 12 ஆண்டுகளுக்குப் பிறகு
5. கர்னல் சார்ஜென்ட்
6. வாரன்ட் அதிகாரி – பிரிவு 2
7.வாரன்ட் அதிகாரி- பிரிவு 1

இந்தப் பட்டியலோடு இந்திய ராணுவ அதிகாரிகள் அல்லது வீரர்களின் வெவ்வேறு நிலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்கு உதவியாக இருக்கும்.

1.சிப்பாய்
2.லான்ஸ் நாயக் – லான்ஸ் கார்பொரலுக்கு இணையானது.
3.நாயக்
4.ஹவில் தார் (சார்ஜென்ட்)
5.ஜூனியர் கமிஷன்ட் அதிகாரிகள் : நாயக் சுபேதார், சுபேதார், சுபேதார் மேஜர்.

பிரிட்டிஷ் இந்தியத் தரைப்படை கட்டமைப்பும், அதிகாரிகளின் பதவிப் பெயர்களும் விமானப் படையிலும் (ராயல் இண்டியன் ஏர் ஃபோர்ஸ்), கப்பல் படையிலும் (ராயல் இண்டியன் நேவி) சற்று மாறுபடும். மேலிருந்து கீழ் நிலை வரை இந்திய ராணுவம் விடுதலைக்கு முன்பாக பல ஆண்டுகளாகவே இந்திய மயம் ஆகிக் கொண்டிருந்தது.

ராணுவத்தில் இந்தியர்கள் அதிக அளவில் சேர்ந்து கொண்டே இருந்தார்கள்.
1947 இல் தேசப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ராணுவ யூனிட்டுகள், யுனைட்டெட் கிங்டத்துக்கும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பிரிட்டிஷ் ராணுவம் வெளியேறுவதைக் கவனிக்கும் பொறுப்பை மேஜர் விஸ்லர் ஏற்றார். பிரிட்டிஷ் ராணுவத்தின் கடைசி பிரிவு 1வது பெட்டாலியன் (சாமர்செட்) 1948 பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியேறியது. ராணுவ தளவாடங்களில் மிகுதியானவற்றை பிரிட்டிஷ் ராணுவம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் விட்டுச் சென்றது. அதே வேளையில் பிரிட்டிஷ் ராணுவம் அப்போது முற்றிலுமாக இந்தியாவையும், பாகிஸ்தானையும் விட்டுச் செல்லவில்லை.
1948 ஆம் ஆண்டு சுமார் 800 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தானிலும், சுமார் 350 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் இந்தியாவிலும் இருந்தார்கள். இந்தியா தனது நாட்டு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பதில் அக்கறை காட்டியது. பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் அனைவரும் தொழில்நுட்பப் பிரிவிலும், அறிவுரை வழங்கும் நிலையிலும் மட்டுமே இந்தியாவில் இருந்தார்கள். தேசப் பிரிவினையின்போது புலனாய்வுத்துறை சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அழிக்கப்பட்டுவிட்டன என்கிறார் பீட்டர் ஏகிஸ் (தி ஃபர்ஸ்ட் இண்டோ பாகிஸ்தானி வார் 1947—48). அவை கிடைத்திருந்தாலும் இரு நாடுகளுக்கும் லாபம் இல்லை. ஏனென்றால் பிரிட்டிஷ் இந்திய உளவுத்துறை பிரிட்டிஷ் அரசாட்சி இந்தியாவில் தொடர வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டது. அது சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் விடுதலை கோரும் நபர்கள்; இயக்கங்கள் பற்றியவை.

எல்லாவற்றையும் பிரிக்கும்போது புலனாய்வுத் துறையை இரண்டு நாடுகளுக்கும் பிரித்துக் கொடுப்பதுதான் முறை. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் கிட்டத்தட்ட எந்தவிதமான புலனாய்வுத் தகவலும் இல்லாமல் புதிதாக எல்லாவற்றையும் தொடங்கும் நிலையில் இருந்தது. புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த குலாம் அகமதும் அவருடன் இருந்த இஸ்லாமிய அலுவலர்களும் தனி டொமினியனாக மாறிய பாகிஸ்தானுக்குப் பணி புரியப் போய் விட்டார்கள். பெரிய அளவில் அவர்கள் வசம் தகவல்கள் இல்லை என்றாலும் அவர்கள் புலனாய்வுத் துறையில் திறமையும், அனுபவமும் மிக்கவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

(தொடரும்)

பாரமுல்லா வீழ்ச்சி

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 10

imagesவடக்கு லண்டனில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில், தரைக்குக் கீழே உள்ள ஓர் அறையில் சிலர் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் பழைய நாட்குறிப்பு ஒன்றை கவனமாகப் படித்துக் கொண்டிருக்கிறார்.அந்த அறைக்குள் சவக்குழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட கார்டினல் வாகனின் சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அது வெஸ்ட்மினிஸ்டர் ஆலயத்தில் மீண்டும் புதைக்கப்படவிருந்தது.

‘அதைக் கண்டு அஞ்ச வேண்டாம். நீங்கள் வந்த வேலையை கவனியுங்கள்’ என்று நாட்குறிப்பைப் படிப்பவரிடம் கூறுகிறார் மில் ஹில் மிஷனரி ஆவணக்காப்பாளர். அந்த நாட்குறிப்பில் மிக முக்கியமான ஒன்று பதிவாகி இருந்தது. 1947 அக்டோபர் மாதம் பழங்குடி பதானியப் படை பாரமுல்லாவில் நடத்திய பயங்கரமான வன்முறைகளை விவரிக்கும் ஒரு சிறு நூலின் கைப்பிரதி தான் அது. அதை எழுதியவர் 1947 இல் பாரமுல்லா புனித ஜோசப் கல்லூரியின் முதல்வராக இருந்த போதகர் ஜார்ஜ் ஷாங்க்ஸ். அதைப் படித்துக் கொண்டிருப்பவர் ‘எ மிஷன் இன் காஷ்மீர்’ (2007) நூலை எழுதிய ஆன்ரூ ஒயிட்ஹெட்.

காஷ்மீரை முற்றுகையிட்ட பழங்குடிப் பதானியர் படை என்று சொல்லும்போது அது சாதாரண உடையிலும், சொற்பமான அளவில் ராணுவ உடையிலும் வந்த பாகிஸ்தான் ராணுவத்தினரையும் சேர்த்துதான் குறிக்கிறது. பழங்குடிப் படையினர் பாரமுல்லாவை நெருங்கும் போது அழகிய காஷ்மீர் பள்ளத் தாக்கு அவர்கள் கண் முன்னே விரிகிறது. பாரமுல்லா இது வரை அவர்கள் கைப்பற்றி சூறையாடிய ஊர்களில் மிகவும் செழிப்பான ஊர் என்பதில் சந்தேகமில்லை. மலைப் பாங்கான பகுதிகளில் பயணம் செய்து சண்டைகளில் ஈடுபட்டு வந்த அவர்களுக்கு சமவெளிப் பகுதி தெரிகிறது. முதலில் அவர்கள் நுழையப் போகும் இடம் புனித ஜோசப் கான்வென்ட், கல்லூரி, மருத்துவமனை ஆகியவை இருந்த வளாகம்.

வட இங்கிலாந்து மில் ஹில் கத்தோலிக்க மிஷனரியின் ஆலயம் 1891 இல் காஷ்மீரின் அழகிய ஊரான பாரமுல்லாவில் கட்டப்பட்டது. வடக்கு லண்டனில் 2006 இல் மூடப்பட்டுவிட்ட புனித ஜோசப் கல்லூரியில் இருந்து மில் ஹில் மிஷனரி அப்போது செயல்பட்டது. அது உலகம் முழுவதும் பல இடங்களுக்கு மத போதகர்களை அனுப்பி வைத்தது. 1930 களில் முதல் பட்டதாரி போதகராக பாரமுல்லாவின் புனித ஜோசப் கல்லூரிக்கு ஜார்ஜ் ஷாங்க்ஸ் வந்தார். அவருடன் மேலட் என்ற போதகரும் வந்தார். அவர்கள் இருவரும் பழங்குடிப்படை பாரமுல்லாவைத் தாக்கும் போது அங்கு தான் இருந்தார்கள். அதன் பிறகு இங்கிலாந்து சென்ற ஜார்ஜ் ஷாங்க்ஸ் சில காலம் கழித்து மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பினார். ஆனால் அதற்கு முன்பாக லண்டனில் 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நுரையீரல் புற்றுநோயினால் இறந்து போனார். பாதிரியார் ஜார்ஜ் ஷாங்க்ஸ் தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக அதாவது 1947 செப்டெம்பர் மாதம் கார்ன் வாலில் இருக்கும் தன் சகோதரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

‘இந்தக் கடிதம் உனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.பாகிஸ்தானும், இந்தியாவும் தபால் சேவை தொடர்பாக தலையை முட்டிக் கொண்டு பிரச்னையை உண்டாக்குகின்றன. ஒரு வாரத்துக்கு முன்பு வரை எனக்குக் கடிதங்கள் சரியாக வந்தன. அதன் பிறகு எதுவும் வரவில்லை. காஷ்மீருக்கு வெளியிலிருந்து வரும் கடிதங்கள் முற்றிலுமாக நின்று போய் விட்டதாகவே நினைக்கிறேன். ராணுவ உடையில் பாகிஸ்தானியர்கள் ராவல்பிண்டி சாலையில் அமர்ந்து கொண்டு எந்தப் பொருளையும் காஷ்மீருக்குள் வரவிடாமல் தடுக்கிறார்கள். எங்கள் அரசர் தொடர்ந்து எல்லையில் படைகளை நிறுத்தி வைத்திருக்கிறார். அதனால் இப்போது வரை அமைதியான சூழலில்தான் இருக்கிறோம். ஆனால் இங்கு பதற்றம் நிலவுகிறது. எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எங்களுக்கு எந்த ஆபத்தும் தற்போது இல்லை. காஷ்மீர் பற்றி செய்திகள் வரும் போது நீ அச்சம் அடைய வேண்டாம்.’

பாகிஸ்தான் ஒரு மறைமுக பொருளாதாரத் தடையை காஷ்மீர் மீது விதித்தது இந்தக் கடிதத்தின் மூலம் உறுதியாகிறது. ஷாங்க்ஸ் தாக்குதல் நடப்பதற்கு முந்தைய தினம் அதாவது 1947 அக்டோபர் 26 ஆம் தேதி பற்றி தன் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.

‘பாரமுல்லா முழுவதும் பதற்றமும் ஓர் இனம் புரியாத அமைதியும் நிலவியது. ஏதோ ஒன்று நடக்கப் போவதை எல்லோரும் உணர்ந்து கொண்டது போல இருந்தது. மிஷன் அமைந்திருக்கும் ஸ்ரீ நகர் சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து நின்று போனது. ஆங்காங்கே மக்களைக் காணமுடிந்தது. அதற்குப் பிறகு இந்துக்களும் சீக்கியர்களும் இடம் கிடைக்கும் லாரிகளில் தங்கள் குடும்பத்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பதானியர்களிடம் இருந்து தங்கள் குடும்பத்தினரைக் காப்பாற்ற அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அங்கிருந்து 34 மைல்கள் தொலைவில் இருக்கும் ஸ்ரீ நகர் செல்ல கட்டணம் பொதுவாக ஒரு ரூபாயோ அல்லது சற்று அதிகமாகவோ இருக்கும்.ஆனால் அன்று ஒரு நபருக்கு 50 ரூபா வசூலிக்கப்பட்டது. 25 பேர் அமரக்கூடிய பஸ்ஸில் 150 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.செல்வந்தர்களாக இருந்த சில சீக்கியர்கள் கூட தங்கள் குடும்பத்தினரை ஏற்றிச் செல்லுமாறு லாரி ஓட்டுநர்களைக் கெஞ்சிக் கொண்டு இருந்ததைக் காண முடிந்தது. இடம் கிடைக்காதபோது அவர்கள் தங்கள் குடும்பத்தினரை மாட்டு வண்டிகளில் ஏற்றி அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

மிஷன் மருத்துவமனையில் காச நோய்க்கு ஆளானவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள வந்த பெண்கள், வயிற்றில் தீக்காயம் அடைந்த சிறுவர்கள் ஆகியோர் இருந்தார்கள். கடும் குளிரை சமாளிக்க, காங்கிரிஸ் என்ற சிறிய தீ குடுவையை காஷ்மீரிகள் வயிற்றில் கட்டி இருப்பார்கள். தவறுதலாக, படுத்திருக்கும் போது அதில் உள்ளவற்றை தங்கள் மேல் கொட்டிக் கொண்டவர்கள் தாம் வயிற்றில் தீக்காயம் பட்ட குழந்தைகள். ஆண்கள், மனைவிமார்களையும், குழந்தைகளையும் பதான் படையிடம் இருந்து காப்பாற்ற அவர்களை மருத்துவமனையிலிருந்து இழுத்துக் கொண்டு சென்றார்கள்.’

மேலும் பாதிரியார் ஷாங்க்ஸ் அடுத்த நாள் அக்டோபர் 27 ஆம் தேதி நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சிகளை அப்படியே தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.கல்லூரிக்கு விடுமுறை ஆதலால் கன்னிகாஸ்திரிகள் மிஷனில் இருந்தார்கள். சிலரை ஷாங்க்ஸ் ஊரை விட்டுச் செல்லுமாறு வற்புறுத்தி கடைசி நேரத்தில் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். பழங்குடிப் படையினர் சாலையில் வரவில்லை.மிஷனுக்கு எதிர்புறம் இருந்த மலையிலிருந்து இறங்கி வந்தார்கள். மலையில் தோல்வியடைந்த அரசரின் படை வெள்ளைக்கோடு போல புதர்களில் தெரிந்து கொண்டிருந்தது. வீரர்களின் தலைகள் ஒவ்வொன்றாய் மறைவதும், பின்னர் சற்று கீழே தெரிவதுமாக இருந்தன. அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிந்தவர்களுக்கு அப்போது துப்பாக்கி ஓசை கேட்கவில்லை. திடீரென்று சிலர் கத்துவது கேட்கும். அதற்கு பழங்குடிப் படையினரிடம் யாரோ ஒருவர் அகப்பட்டுக் கொண்டார் என்று பொருள்.

சில நிமிடங்களில் பழங்குடிப் படையினர் மிஷன் வளாகத்தில் இருந்த கட்டடங்களுக்குள் நுழைந்தனர்.கிடைக்கும் பொருள்களை கொள்ளையடிக்க போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் விரைந்தார்கள். பாதிரியார்கள் ஷாங்க்ஸும்,மேலட்டும் கல்லூரியை ஒட்டி இருந்த தங்கள் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது பழங்குடிப் படையினர் அவர்களை நோக்கி வந்தார்கள்.ஷாங்க்ஸ் தொடர்ந்து எழுதுகிறார்.

‘எங்களை கிட்டத்தட்ட பதினைந்து பேர் சூழ்ந்து கொண்டார்கள்.என் வாழ் நாளில் இத்தகைய அருவருப்பான வன்முறை செய்யும் குண்டர்களை நான் பார்த்ததில்லை. அவர்கள் கைகளில் துப்பாக்கியும், கத்தியும் இருந்தன.சிலர் சிறு கோடரியையும் வைத்திருந்தார்கள். நீண்ட அழுக்கான தாடி; நீண்டு வளர்ந்த தலைமுடி; தலையில் அழுக்கான டர்பன்; அழுக்கும்,ரத்தமும் தோய்ந்த ஆடை இவற்றுடன் அவர்கள் தென்பட்டார்கள்.ஒருவன் என்னை நோக்கி கையை நீட்டினான். நானும் கைகொடுத்தேன்.அவன் என் அங்கி பைக்குள் துழாவி அதிலிருந்த பொருள்களை எடுத்தான். மேலட்டிடமும், என்னிடமும் இருந்த பணம், கடிகாரம், சாவிகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டார்கள்.

எங்களை வீட்டுக்குள் இழுத்துச் சென்றார்கள்.அனைவரும் உள்ளே நுழைந்தார்கள். கதவைத் தாழிட்டார்கள். அதற்குப் பிறகு விவரிக்க முடியாத சூறையாடல் நடந்தது. கோடரிகளின் வீச்சில் பூட்டுகள் உடைக்கப்பட்டன. அனைத்து டிராயர்களும் திறக்கப்பட்டன. பத்து வருடங்களாக சேர்த்து வைத்திருந்த விலை மதிப்புமிக்க பொருள்கள் அனைத்தும் அவர்கள் கால்சட்டை பைகளுக்குள் போயின.நாற்காலிகளும், மேசைகளும் புரட்டிப் போடப்பட்டு பிளக்கப்பட்டன. நாங்கள் இருவரும் சுழலும் கோடரிகள், பறக்கும் துப்பாக்கி குண்டுகள் ஆகியவற்றில் இருந்து தப்பிப்பதற்கு நாற்புறமும் தொடர்ந்து திரும்பிக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட காட்டுமிராண்டிகள் போல இருந்த அவர்கள் அரை மணி நேரத்தில் எட்டு அறைகளில் இருந்த பொருள்களையும், கோடரி, கத்தி ஆகியவற்றை வைத்துக்கொண்டு கொள்ளையடித்த விதத்தை எங்களால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை… அவர்கள் வெளியேறிய பின் நாங்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டோம்.’

மோட்டார் பைக்கில் மருத்துவமனை நோக்கி விரைந்து வந்த மேஜர் அயுப்கானைப் பற்றி பாதிரியார் ஷாங்க்ஸ் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். கன்னிகாஸ்திரீகளைப் பழங்குடிப் படையினரிடம் இருந்து காப்பாற்றும் நோக்கத்தில்தான் அவர் அங்கு வந்தார். கன்னிகாஸ்திரீகளும் மற்றவர்களும் மருத்துவமனைக்கு வெளியே சுற்றி வளைக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட இருந்தார்கள். ஆனால் பதான்கள் அவர்களைக் கொல்வது சற்று தாமதமானது. அதற்குக் காரணம் ஒரு கன்னிகாஸ்திரியின் தங்கப்பல் . அவர்கள் அதை எடுக்க முயன்று கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தத் தங்கப்பல் அசைந்து கொடுக்கவில்லை. பொறுமை இழந்த பதான்கள் உறும ஆரம்பித்தார்கள்.அப்போது அயுப்கான் கையில் துப்பாக்கியுடன் அங்கு வந்தார்.கன்னிகாஸ்திரீகளை அவர்கள் துன்புறுத்துகிறார்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டார். அதனால் பதான்களைக் கடுமையாக அவர்கள் மொழியில் திட்டினார். அவர்கள் மீண்டும் பொறுமை இழக்க, இவர் தன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவர்களை அங்கிருந்து விரட்டினார்.
0

முதல் போர் முற்றுகை வெறியாட்டங்கள்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 9

downloadபாகிஸ்தான் திட்டமிட்டபடி காஷ்மீரை முற்றுகையிட்ட பழங்குடிப் படையின் கமாண்டர் குர்ஷித் அன்வர், படையை அபோத்தாபாத்தில் குவித்து அதனுடன் முசாபராபாத்துக்குள் நுழைந்தார். அபோத்தாபாத் நகரம் தற்போது பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாவட்டத்தில் ஹசாரா பகுதியில் உள்ளது. அபோத்தாபாத்துக்கு வட கிழக்கு திசையில் அமைந்துள்ள முசாபராபாத் தான் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஆசாத் காஷ்மீரின் தலை நகரம். இதை அடைய அபோத்தாபாத்தில் இருந்து சாலையில் பயணித்தால் சுமார் 77 கிலோமீட்டர்களைக் கடக்க வேண்டும். முசாபராபாத் நகரம் முசாபராபாத் மாவட்டத்தில் ஜீலம், நீலம் ஆகிய நதிகளின் கரைகளில் அமைந்துள்ளது. குர்ஷித் அன்வர் தலைமையில் நடந்த இந்த காஷ்மீர் முற்றுகையைப் பின்னாளில் அக்பர் கான் உறுதி செய்துள்ளார். குர்ஷித் அன்வரும் முஸ்லிம் லீக்கின் தினசரியான டானில் இதைப்பற்றிக் கூறியுள்ளார்.

“திட்டத்தின்படி அக்டோபர் 21 ஆம் தேதி முற்றுகைக்கான தினமாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில தாமதங்கள் ஏற்பட்டு அடுத்த நாள் காலையில் தான் காஷ்மீர் முற்றுகை நடந்தது. என்னுடன் 4000 பேர் இருந்தார்கள். காஷ்மீருக்குள் நுழையும்வரை எங்களுக்கு அதிக தடைகள் இல்லை. அங்கு சென்ற பிறகே கடுமையான எதிர்ப்பை நாங்கள் சந்தித்தோம்.”

பழங்குடிப் படையினர் பஞ்சாப் வரை செல்லும் பிரதான சாலை வழியாக காஷ்மீரை நோக்கி முன்னேறினார்கள். அப்போது அவர்கள் அடைந்த நகரம் டோமெல். பிரதான சாலையில் பயணித்து ஜீலம் நதியின் குறுக்கே இருந்த முக்கிய பாலத்தைக் கடந்தார்கள். அதற்கு அருகில் ஜீலம் நதியும், நீலம் நதியும் கலக்குமிடத்தில் மிகப்பெரிய நகரமான முசாபராபாத் இருக்கிறது. அப்போது அங்கு முஸ்லிம்கள் மிகுதியாகவும், குறைந்த அளவில் இந்துக்களும் சீக்கியர்களும் இருந்தார்கள். இந்து, சீக்கிய மக்களில் பலர் பழங்குடிப் படை வருவதைக் கேள்விப்பட்டு ஊரைக் காலி செய்து புறப்பட்டு விட்டார்கள். மற்றவர்கள் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள். அவர்களில் பலர் கையில் ரைபிள் வைத்திருந்தார்கள் .அதிகாலை இருளில் முற்றுகை நடந்தது .முசாபராபாத்தில் புதிதாக பதவி ஏற்ற கமிஷனரின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கி முழக்கங்கள் கேட்டு கண் விழித்தார்கள். பின்னாளில் கமிஷ்னரின் மனைவி அன்று நடந்ததை விவரித்தார்.

“அக்டோபர் 22 ஆம் தேதி காலை ஐந்து மணி அளவில் நான் கண் விழித்தேன். துப்பாக்கி முழக்கங்கள் மலையில் எதிரொலித்தன. நானும் என் குழந்தைகளும் வெராண்டாவுக்கு சென்று துப்பாக்கி சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தோம். எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருந்தன.  சில குண்டுகள் பங்களாவின் வேலியாக இருந்த மரப் பலகைகளைத் துளைத்துக் கொண்டு வந்து விழுந்தன. எதிரிகள் ஏற்கனவே கிருஷ்ண கங்கா பாலத்தைக் கடந்து விட்டார்கள். அவர்கள் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.”

அந்தப் பயங்கரமான படையெடுப்பினால் அமைதியாக இருந்த நகரம் எப்படி பதற்றமடைந்தது என்பதை அவருடைய நேரடி அனுபவம் தெளிவாக  உணர்த்துகிறது. தொடக்கத்தில் இருந்தே சூறையாடல் நடைபெற ஆரம்பித்தது. பிரிகேடியர் அக்பர் கான் பின்னாளில் கூறியபடி படைக்குக் கூலியாக கொள்ளையடிக்கும் பொருள்களை எடுத்துக்கொள்ள படையின் கமாண்டர் குர்ஷித் அன்வரிடம் பழங்குடியினர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதில் முக்கியமானது என்ன வென்றால், அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களின் பொருள்களைத்தான் கொள்ளையடிப்பார்கள்.

காஷ்மீர் சமஸ்தானத்தின் படை எதிர்தாக்குதல் நடத்தி அவர்களை ஓரளவுக்குத்தான் தடுக்க முடிந்தது. ஏனென்றால் சமஸ்தானப் படை வீரர்கள் சிலர் பணிக்கு வராமல் சென்று விட்டார்கள். அவர்கள் பூஞ்சை சேர்ந்த முஸ்லிம்கள். ஒரு பிரிட்டிஷ் தூதுவர் முற்றுகை நடந்த நாளில் கடைசி பஸ்ஸில் ராவல்பிண்டியிலிருந்து பயணித்து ஸ்ரீ நகர் வந்து கொண்டிருந்தார். அவர் முசாபராபாத்தில் சீக்கியர்கள் துப்பாக்கிகளுடன் பழங்குடியினர் படையை எதிர் கொள்ள நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறார். அவர் கூற்றுப்படி பழங்குடியினர் படை குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டது. குழுக்களை வழி நடத்தியவர்கள் நிச்சயமாக பழங்குடியினர் அல்ல. குழுக்கள் சில நேரங்களில் குழுவின் தலைவர்களை மீறி செயல்பட்டன. குழுத் தலைவர்களாக செயல்பட்டவர்களில் சிலர் வடமேற்கு எல்லை மாகாணத்திலிருந்தும், மேற்கு பஞ்சாபிலிருந்தும் வந்த முஸ்லிம் லீக் தொண்டர்கள் என்பது பின்னாளில் பலருடைய வாக்குமூலங்கள் மூலம் தெளிவானது.

சூறையாடல்களுக்கு இடையே பலர் கொல்லப்பட்டனர். அவர்களில் மிகுதியானவர்கள் சீக்கியர்களும், இந்துக்களும்தாம். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். பல பெண்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க தங்கள் குழந்தைகளை ஆற்றில் வீசி விட்டு தாங்களும் அதில் குதித்தார்கள். கமிஷனரின் மனைவி கிருஷ்ணா மேத்தா அப்படி சிலர் தற்கொலை செய்து கொண்டதை நேரில் கண்டிருக்கிறார். அவர்கள் நோக்கம் சூறையாடுவது; கொள்ளையடிப்பது; பெண்களைக் கடத்துவது ஆகியவை தாம். ஆனாலும் இவற்றைத் தாண்டி அவர்களுக்கு உந்து சக்தியாக ஓர் இலக்கு இருந்தது.

1947 அக்டோபர் 26 இல் ஈத் பண்டிகை வருகிறது. அதனை காஷ்மீர் தலை நகர் ஸ்ரீ நகரில் கொண்டாட வேண்டும் என்பது பழங்குடிப் படையினரின் விருப்பம். முசாபராபாத்தில் இருந்து சுமார் 100 மைல்கள் தொலைவில் ஸ்ரீ நகர் உள்ளது. அவர்கள் அக்டோபர் 26 ஆம் தேதி ஸ்ரீ நகர் அடைய வேகமாக செல்ல வேண்டும். ஜீலம் பள்ளத்தாக்கு சாலை பாறைகள் நிறைந்த மலைப் பாங்கான குறுகிய பாதை. அதன் வழியாகத்தான் அவர்கள் செல்ல வேண்டி இருந்தது. குறைவான எதிர்ப்பு இருந்தால் கூட அதில் முன்னேறுவது கடினம்.

இப்போது பழங்குடியினர் படை முசாபராபாத்தில் இருந்து பாரமுல்லாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து அவர்கள் ஸ்ரீ நகர் சென்று தங்கள் புனிதப் போரை முடிக்க வேண்டும். வழியில் அவர்கள் கடந்து செல்ல வேண்டிய மலைப்பாங்கான ஊர் உர்ரி. ஜீலம் நதிக்கரையில் உள்ள அழகிய இந்த ஊர் தற்போது பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருந்து 18 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. மேலும் இது கிட்டத்தட்ட முசாபராபாத்துக்கும், பாரமுல்லாவுக்கும் நடுவில் ஜீலம் பள்ளத்தாக்கு சாலையில் அமைந்துள்ளது.

அக்டோபர் 22 ஆம் தேதி பதான் பழங்குடியினர் படை முசாபராபாத்துக்குள் நுழைந்துவிட்டது. 23 ஆம் தேதி அது உர்ரிக்கு வந்துவிடும். தகவல் அறிந்த காஷ்மீர் சமஸ்தானப் படையின் பிரிகேடியர் ராஜிந்தர் சிங் 200 வீரர்களுடன் ஸ்ரீ நகரில் இருந்து புறப்பட்டார். பழங்குடிப் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த அவருக்கு ஒரே வழிதான் இருந்தது. உர்ரியில் இருக்கும் முக்கிய பாலத்தை சமஸ்தானப் படை தகர்க்க வேண்டும். அதில் அவர் வெற்றி பெற்றார். அப்போது அங்கு காஷ்மீர் படையுடன் இருந்தவர் டெய்லி எக்ஸ்பிரஸின் நிருபர் சிட்னி ஸ்மித். அவர் தொடர்ந்து போர் பற்றிய செய்திகளை பத்திரிகையின் செய்திப் பிரிவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அவருடைய விவரிப்பு, காட்சிகளை நம் கண்முன்னே கொண்டு வருகிறது.

“நானும் அரசர் ஹரி சிங் படையின் பிரிகேடியர் ராஜிந்தர் சிங்கும், உடைந்து நொறுங்கிக்கிடந்த உர்ரியின் இரும்புப் பாலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவருடைய படையினர் முன்னேறி வரும் பழங்குடிப் படைக்கு எச்சரிக்கை விடுத்தபடி இருந்தார்கள். பழங்குடிப் படை நகரைக் கைப்பற்றுவதற்காக 4000 அடிகள் கணவாயில் குவிந்திருந்தார்கள். ஒரு மணி நேரம் நடந்த இடைவிடாத துப்பாக்கிச் சண்டைக்கு இடையே உர்ரி நகரத்துக்கு வந்து சேரும் வழியின் கடைசி மூன்று மைல்களைக் கடந்தார்கள். துப்பாக்கிகளின் முழக்கங்கள் தொடர்ந்து ஒலித்து பனி மூடிய 10,000 அடி உயர சிகரங்களில் எதிரொலித்தன. அவர்கள் வந்த வழியில் இருந்த வீடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. பள்ளத்தாக்கு முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. தப்பி ஓடாமல் அவர்களை எப்படியும் எதிர்கொள்ளலாம் என்று இருந்த, குறைந்த எண்ணிக்கையிலான சீக்கியர்களையும், இந்துக்களையும் அவர்கள் துவம்சம் செய்தார்கள். துப்பாக்கி வெடிப்பது நின்றவுடன் சூறையாடலைத் தொடங்கினார்கள்.

“நான் பைனாகுலர் வழியாகப் பார்த்தபோது கறுப்புத் தலைப்பாகை அணிந்த நபர்கள் உர்ரியின் பஜார் தெருவில் ஒடிக்கொண்டிருந்தார்கள். பிரிகேடியர் ராஜிந்தர் சிங் ஐந்து லாரிகளில் தன் வீரர்களை அனுப்பினார். தொடர்ந்து மூன்று மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இரவு வந்ததும் அவர்கள் நகரைச் சுற்றி இருந்த மலைகளில் ரோந்து சுற்ற ஆள்களையும், கொலையாளிகளையும் அனுப்பினார்கள். காஷ்மீர் படையால் அவர்களைத் தடுக்க இயலவில்லை.

“காஷ்மீர் படையினர் வண்டிகளில் முன் விளக்குகளை எரியவிடாமல் தொடர்ந்து எதிரிகள் இருக்கும் திசையில் குத்துமதிப்பாக ரைபிளால் சுட்டபடி நிலவு ஒளி படர்ந்த மலைச் சாலைக்கு வந்தார்கள். சாலை முழுவதும் அகதிகள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என்று எல்லோரும் இருந்தார்கள். பல கிராமங்களை மக்கள் காலி செய்து விட்டார்கள். போலீஸாரும், அதிகாரிகளும் உர்ரிக்கும் ஸ்ரீ நகருக்கும் இடையே இருந்த இரண்டு ஊர்களை விட்டுச் சென்று விட்டார்கள்.

“பாலத்தை உடைத்ததன் மூலமாக காஷ்மீர் படை பழங்குடிப் படையின் முன்னேற்றத்தை வெகுவாக குறைத்தது. ஆனால் அதை முழுவதுமாக நிறுத்த முடியவில்லை.காஷ்மீர் படையினர் கடுமையாகப் போராடி எதிரிகளைத் தடுக்க முயன்றார்கள். பழங்குடிப் படை உர்ரியைத் தாண்டி அக்டோபர் 25 ஆம் தேதி மஹூராவை அடைந்தது. மஹூராவில் இருக்கும் புனல் மின் நிலையம் தான் ஸ்ரீ நகருக்கு மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கிறது. பழங்குடிப்படை அங்கு சென்ற பிறகு ஸ்ரீ நகருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரமே இருளில் மூழ்கியது. காஷ்மீர் அரசர் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்ந்தார். அவரும் அவர் குடும்பத்தாரும், அவருக்கு நெருக்கமானவர்களும் ஸ்ரீ நகரைக் காலி செய்தார்கள். அரசரும், அவரைச் சார்ந்தவர்களும் அதிக விலைமதிப்புள்ள பொருள்களுடன் ஜம்முவுக்குச் சென்றார்கள்.

“மஹுராவை பழங்குடிப்படை கைப்பற்றிய பிறகு பிரிகேடியர் ராஜிந்தர் சிங் கொல்லப்பட்டார்.பூஞ்ச் கலவரத்தை அடக்க காஷ்மீர் படையின் ஒரு பகுதி அங்கு தங்கி விட்டது.இருக்கும் படை வீரர்களும் படைத் தலைவர் கொல்லப்பட்டதால் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் இழந்தனர். படை மிகவும் மோசமான வலுவிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டது.”

பழங்குடிப்படையின் காஷ்மீர் முற்றுகைக்கும், பூஞ்ச் கலவரத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதனால் தான் ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை, “காஷ்மீர் சமஸ்தானப் படைகளை சிதற வைத்து, பலவீனப்படுத்துவதை உறுதி செய்ய பூஞ்ச் கலவரத்தை விட சிறந்த திட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று எழுதியது.

பழங்குடிப் படையின் காஷ்மீர் முற்றுகை நடக்கும் அந்த வேளையில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் திட்டம் பலருக்கும் புரிய ஆரம்பித்தது. பாகிஸ்தானின் பிரதம மந்திரி ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்தும் மும்முனை தாக்குதல் திட்டத்தின் முதல் பகுதி பூஞ்ச் கலவரத்தின் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்வது; மேலும், அதை எரிபொருள் கொட்டி வளர்த்துவிடுவது. காஷ்மீர் அரசு தன் படைகளை அங்கு அனுப்புவதைத் தவிர வேறு வழி இல்லை. அங்கு நிரந்தரமாக ஒரு படையை நிறுத்திவைப்பதால் தலைநகரின் பாதுகாப்பு சற்று பலவீனப்பட்டுவிடுகிறது. இப்போது பழங்குடிப் படையை திடீர் முற்றுகை இட வைத்து சுலபமாக வெற்றி பெறுவதுதான் பாகிஸ்தானின் நோக்கம். இது தெளிவாகும் போது பூஞ்ச் கலவரத்துக்கும் பாகிஸ்தானுக்கும், எந்தத் தொடர்பும் இல்லை என்ற ஸ்னீடன் போன்றவர்களின் வாதம் உடைந்து போகும்.

0

 

பூஞ்ச் கலவரமும் முதல் போரும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 8

Bangashமுதல் காஷ்மீர் முற்றுகையும் போரும் சிலரால் திடீரென நடத்தப்பட்டவை அல்ல. பாகிஸ்தான் ராணுவத்தினர், பாகிஸ்தானை ஆளும் முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம் கான்ஃபிரன்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், பதானிய பழங்குடிப் படையினர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அவை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன.

பாகிஸ்தான் ராணுவமும், முஸ்லிம் லீகும் திட்டம் வகுத்து முக்கியப் பங்காற்றின என்பதற்கு ஆதாரமாக பாகிஸ்தான் ராணுவத்தை வழிநடத்திய மேஜர் அமின் போன்றவர்களின் கூற்றுகள் உள்ளன. காஷ்மீருக்குள் நுழைந்த பழங்குடிப் படையினர் பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர்கள். பஷ்டூன் இனம் ஆப்கனிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் வாழும் ஈரானிய மக்கள் இனம். இந்த இனத்தவர்கள் கிழக்கு ஈரானிய பஷ்டூன் மொழி பேசுபவர்கள்.

1932 இல் ஷேக் அப்துல்லா காஷ்மீரின் முதல் அரசியல் கட்சியான அனைத்து ஜம்மு- காஷ்மீர் முஸ்லிம் கான்ஃபிரன்ஸைத் தொடங்கினார். ஜம்முவையும், காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைப்பதுதான் அதன் நோக்கம். 1939 ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லா கட்சியின் பெயரை அனைத்து ஜம்மு- காஷ்மீர் கான்ஃபிரன்ஸ் என்று மாற்றி, மதச்சார்பற்ற ஒரு புது வடிவத்தை அதற்குக் கொடுத்தார். அப்போது கட்சியின் கொள்கையும் மாற்றி அமைக்கப்பட்டு, காஷ்மீர் தனியாக சுதந்திர காஷ்மீராக இயங்கவேண்டும் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. 1941 ஜூன் 13 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து பிரிந்து சிலர் மீண்டும் பழைய முஸ்லிம் கான்ஃபிரன்ஸுக்குப் புத்துயிர் கொடுத்தார்கள். அதற்குத் தலைமை ஏற்றவர் சௌத்ரி குலாம் அப்பாஸ். இந்த முஸ்லிம் கான்ஃபிரன்ஸ் ஆட்கள்தாம் முதல் காஷ்மீர் போருக்காக பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து திட்டமிட்டவர்கள்.

போரை ஒருங்கிணைக்க மிகச் சரியான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தான் மேஜர் ஜென்ரல் அக்பர் கான். 1947 இந்திய பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் படையின் பிரிகேடியராக இருந்த அவர் பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர். அவர் பெஷாவர் இஸ்லாமிய கல்லூரியில் பயின்ற பின் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பல நிலைகளில் பணியாற்றி இருக்கிறார். பல போர்களில் ஆற்றிய சிறந்த பணிகளுக்காக விருதுகள் பெற்றிருக்கிறார். நிலத்தைப் பிரித்துக்கொடுத்த பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் முப்படைகளையும் பிரித்துக் கொடுத்தது. அந்தப் பிரிவினையின்போது ஏற்படுத்தப்பட்ட துணைக் குழுவின் உறுப்பினராக அக்பர் கான் இருந்தார். காஷ்மீருக்குள் பழங்குடிப் படையினர் நுழைந்தபோது சாதாரண உடையில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் வந்தார்கள். அதன் பின் நேரடியாக பாகிஸ்தான் ராணுவம் வந்தது. அவர்களை எல்லாம் வழி நடத்தியவர் அகபர்கான்தான். போரின்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட சங்கேதப் பெயர் ‘ஜென்ரல் டாரிக்’.

1947 இந்திய பாகிஸ்தான் போருக்கான காரணம் பதான் பழங்குடிப் படையின் காஷ்மீர் முற்றுகை என்றால் அதற்கான விதை 1947 செப்டெம்பர் மாதமே விதைக்கப்பட்டுவிட்டது. அது விதைக்கப்பட்ட இடங்கள் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ளன. அவை பூஞ்ச் பிரிவில் உள்ள பாக்கும், ரவலாகோட்டும். காஷ்மீர் சமஸ்தானத்தோடு இருந்த பூஞ்ச் மாவட்டத்தின் ஒரு பகுதி முதல் போருக்குப் பிறகு பாகிஸ்தான் வசமும் மற்றொரு பகுதி இந்தியா வசமும் வந்தன.

பூஞ்ச் என்பது காஷ்மீர் பள்ளத்தாக்கோடு இணைந்த இடம் அல்ல. கிட்டத்தட்ட இரண்டே கால் லட்சம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுள்ள காஷ்மீர் சமஸ்தானத்தோடு ஒப்பிடும்போது, சுமார் நாலாயிரத்து எழுநூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பூஞ்ச் ஒரு சிறிய இடம்தான். இருந்தபோதும் பூஞ்ச் நீண்ட சரித்திரம் கொண்டது. 1850 ஆம் ஆண்டு கால்சா தர்பாரின் பிரதம மந்திரியும், ராஜா தயான் சிங்கின் மகனுமான ராஜா மோத்தி சிங் பூஞ்சுக்கு தனி அந்தஸ்து வழங்கினார். 1901 ஆம் ஆண்டு ராஜா பல்தேவ் சிங் ஆட்சிக் காலத்தில் பூஞ்சுக்கு சமஸ்தான அந்தஸ்து வழங்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டு ஜம்முவின் டோக்ரா அரசர் ஹரி சிங் பூஞ்சை காஷ்மீருடன் இணைத்துக் கொண்டார். அதன் பிறகு பூஞ்ச் பகுதிக்கு ‘ஜகிர்’ அந்தஸ்து வழங்கப்பட்டது. பாரசீக மொழியில் ‘ஜ’ என்பது இடத்தைக் குறிக்கும். ‘கிர்’ என்பது வைத்திருப்பதைக் குறிக்கும். அதாவது பூஞ்ச்-ன் ஏழாவது பட்டத்து அரசர் ஜக் தேவ் சிங் வசதிகளை அனுபவித்துக்கொண்டு, காஷ்மீர் அரசர் ஹரிசிங்கின் ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும்.

தேசப் பிரிவினைக்கு முன்பும் பின்பும் நடந்த வன்முறைகள் காஷ்மீரையும் விட்டு வைக்கவில்லை. 1947 பஞ்சாப் இனப்படுகொலைகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கிய அகதிகளும், இந்தியாவிலிருந்து வந்த முஸ்லிம் அகதிகளும் காஷ்மீரில் குவிந்தார்கள். பூஞ்ச் பகுதியை இணைத்துக்கொண்ட காஷ்மீர் அரசர் பூஞ்ச் மக்களைக் கடுமையான வரி விதிப்பால் கொடுமைப்படுத்துகிறார் என்ற புகார் எழுந்தது. காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்ற கோஷம் பூஞ்ச் பகுதி முஸ்லிம்களால் எழுப்பப்பட்டது. அரசரை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்தார்கள்.

காஷ்மீர் அரசர் தன் டோக்ரா படைகளை அனுப்பி கடுமையான தாக்குதல் நடத்தினார். முஸ்லிம் கிராமங்கள் கொளுத்தப்பட்டன. பல்லாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பூஞ்ச் பகுதி முஸ்லிம் மக்கள் தங்கள் குடும்பத்தினரோடு ஊரைக் காலி செய்து பாகிஸ்தான் சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும்போது ஆயுதங்களோடு வந்தார்கள். வந்தவர்கள் இந்துக்களையும் சீக்கியர்களையும் கண்மூடித்தனமாகக் கொல்ல ஆரம்பித்தார்கள். செப்டெம்பர் இரண்டாம் வாரத்தில் சுமார் 60,000 அகதிகள் ஜம்மு போனார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்த இனக்கலவரம் சிலரின் ஒருங்கிணைப்போடு மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதைத்தான் பாகிஸ்தான் எதிர்பார்த்தது. துப்பாக்கிகளை பாகிஸ்தான் பொது மக்களுக்கு விநியோகம் செய்த பிறகு புரட்சி சூடு பிடிக்க ஆரம்பித்தது என்று கூறுகிறார் பாகிஸ்தானின் முன்னாள் மேஜர் அக்பர்கான்.
பாகிஸ்தானை ஆதரிக்கும் சிலரால் எடுத்து வைக்கப்படும் முக்கியமான வாதம் இதுதான்.

“1947 அக்டோபரில் நடந்த பழங்குடிப் படையினரின் காஷ்மீர் முற்றுகைக்குக் காரணம் பூஞ்ச் கலவரமும் அதைத் தொடர்ந்து நடந்த படுகொலைகளும்தாம். எனவே 1947-48 இந்திய பாகிஸ்தான் போருக்கு பழங்குடிப் படையை ஏவிவிட்டு, அதனைப் பின்தொடர்ந்து வந்த பாகிஸ்தான் ராணுவம் காரணமல்ல. பூஞ்ச் கலவரம் தான் அதற்குக் காரணம்”.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நூலாசிரியர் கிரிஸ்டோபர் ஸ்னீடன்  ‘காஷ்மீர் : தி அன் ரிட்டன் ஹிஸ்ட்டரி’ என்னும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தியா கூறுவது போல காஷ்மீர் பிரச்னை பதான் பழங்குடியினரின் படையெடுப்பால் தொடங்கவில்லை. அதன் மூலம் பூஞ்ச் கலவரம்தான். புது தில்லியில் தனது நூலை வெளியிட்ட பின் பாபா உமருக்கு அவர் அளித்த பேட்டி பலரின் கவனத்தை ஈர்த்தது . காஷ்மீர் அரசர் முறைப்படி காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு இந்திய பாகிஸ்தான் முதல் போர் நடக்கிறது. போரின் போது பாகிஸ்தான் காஷ்மீரின் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டது. அதில் மேற்குக் பக்கமுள்ளஆசாத் காஷ்மீர் அதிக பிரச்னைகள் நிறைந்த பகுதி. அது உருவாவதற்கு முக்கிய காரணம் 1947 ஆகஸ்ட் 18 ஆம் தேதி காஷ்மீர் அரசருக்கு எதிராக பூஞ்ச் இல் வெடித்த மக்கள் புரட்சி என்கிறார் ஸ்னீடன்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இடம் பூஞ்ச். அங்கு இருந்தவர்களில் 50,000 பேர் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். அவர்களுக்கு பொருளாதார முன்னேற்றமும், நில உரிமையும் மறுக்கப்பட்டதால் அரசருக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். காஷ்மீர் அரசர் தன் டோக்ரா படைகளை வைத்து அவர்களுடைய ஆயுதங்களைப் பிடுங்கினார். அதனால் அவர்கள் பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாணத்துக்கும், தேரா இஸ்மாயில் கான் நகருக்கும் சென்றார்கள். கிளர்ச்சியாளர்கள் ஆயுத உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்று வந்தார்கள். உள்ளூர் மக்களின் ஆதரவோடு மகாராஜாவின் டோக்ரா படைகளை எதிர்த்துப் போராடி தங்கள் மண்ணுக்கு விடுதலை பெற்றார்கள் என்று சொல்கிறார் ஸ்னீடன்.

1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தானும், 15 ஆம் தேதி இந்தியாவும் விடுதலை அடைந்து விட்டன.காஷ்மீர் தனியாக இருக்கிறது.பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பூஞ்ச் பகுதியில் கலவரம் வெடிக்கிறது.சிலர் பாகிஸ்தானுக்கு வந்து ஆயுத உற்பத்தியாளர்களிடமிருந்து ஆயுதங்களை வாங்கிச் சென்று காஷ்மீரில் மறுபடியும் போராடுகிறார்கள். அப்போது பாகிஸ்தான் அரசும் ராணுவமும் என்ன செய்து கொண்டிருந்தன என்பதைப் பற்றி அவர் தெளிவாக எதுவும் கூறவில்லை.பாகிஸ்தானுக்கு பூஞ்ச் புரட்சியில் நேரடித் தொடர்பு இருந்ததா இல்லையா என்ற கேள்விக்கு அவர் கூறும் பதில் விநோதமாக உள்ளது.

“பாகிஸ்தானின் அதிகாரபூர்வமற்ற ஆதரவும், சில உள்ளூர் குடும்பங்களின் ஆதரவும் இருந்தது என்பதை நான் உறுதியாகக் கூறமுடியும். பூஞ்ச் மக்கள் தங்களை காஷ்மீர் பள்ளத்தாக்கோடு இணைத்துப் பார்ப்பதைவிட பஞ்சாபோடு இணைத்துப் பார்ப்பதையே விரும்புகிறார்கள். ஜீலம் நதியின் மறு கரையில் இருந்த குடும்பங்கள் புரட்சியாளர்களுக்கு உணவும், தங்கும் இடமும் தந்து உதவின. பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவு ஓரளவு இருந்தது. ஆனால் அது மிகக்குறைந்த அளவில்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அதற்கு தீர்க்கப்படவேண்டிய பல பிரச்னைகள் இருந்தன. கராச்சியில் தலைநகரை அமைக்கும் வேலையில் அது ஈடுபட்டிருந்தது. பெரும்பாலும் உள்ளூர் பூஞ்ச் மக்கள் தாம் கலவரத்துக்குக் காரணமானவர்கள். அவர்கள் மகாராஜாவின் ஆட்சியின் மீது அதிருப்தி அடைந்திருந்தார்கள். அவர்கள் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று விரும்பினார்கள்.”

பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவு ஓரளவுதான் இருந்தது என்று அவர் கூறுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி பூஞ்ச் இல் கலவரம் நடக்கிறது. செப்டெம்பர் முதல் வாரத்தில் பாகிஸ்தான் காஷ்மீரைக் கைப்பற்ற திட்டம் ஒன்றை தயார் செய்து விட்டது. பாகிஸ்தான் எவ்வாறு திட்டமிட்டது என்பதை மேஜர் ஜென்ரல் முகமத் அக்பர்கான்  டிஃபன்ஸ் ஜர்னல் கராச்சி 1985 ஜூன்-ஜூலை இதழில் வெளியான பேட்டியில் விவரிக்கிறார்.

“இந்தியா பாகிஸ்தான் பிரிவினை முடிந்து சில வாரங்கள் கடந்த பின் பாகிஸ்தான் பிரதம மந்திரி லியாகத் அலி கான் சார்பாக முஸ்லிம் லீக் தலைவர் மியான் இப்திகாருதின் என்னை அணுகினார். காஷ்மீரைக் கைப்பற்ற ஒரு திட்டத்தைத் தயாரிக்கும்படி கூறினார். பாகிஸ்தான் ராணுவம் 4000 துப்பாக்கிகளை உள்ளூர் போலீஸுக்குக் கொடுப்பதற்காக வைத்திருப்பதை நான் அறிந்தேன். அதை உள்ளூர் மக்களிடம் கொடுத்தால் காஷ்மீரில் பல இடங்களில் ஆயுதங்களுடன் கலவரத்தை உண்டாக்க முடியும். அதன் அடிப்படையில் நான் ஒரு திட்டத்தைத் தயாரித்து மியான் இப்திகாருதினிடம் கொடுத்து அனுப்பினேன். அதன் பிறகு லாகூரில் லியாகத் அலிகானுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. அதில் என்னுடைய திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு பொறுப்புகள் பலருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. விஷயம் ராணுவத்துக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. 1947 செப்டெம்பர் மாதம் 4000 துப்பாக்கிகளும் காஷ்மீரின் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டன. காஷ்மீர் மகாராஜாவின் படையோடு துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. புரட்சி சூடு பிடித்தது.”

பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் காஷ்மீரில் கலகம் தொடங்க வழி செய்யப்பட்டு போருக்கான காரணம் உருவாக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு ஓரளவு தெரியும் என்று கூறுவது கேலிக்குரியது. தேச விடுதலைக்கு முன்பாக முஸ்லிம் லீக் தொடங்கி வைத்த இனக்கலவரம் இன்னும் முடியவில்லை. பஞ்சாபில் நடந்த இனக்கலவரத்துக்குப் பிறகு காஷ்மீருக்குள் இந்து, சீக்கிய, முஸ்லிம் அகதிகள் நுழைந்த நேரம் அது. அதனால் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தங்கள் வழக்கமான பாணியில் காஷ்மீரில் கலவரத்தை ஏற்படுத்தி, அதை இணைத்துக் கொள்வதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காஷ்மீரின் ஒரு சிறிய பகுதியில் மக்கள் அவர்களாக கிளர்ந்தெழுந்தார்கள். அதன் காரணமாக காஷ்மீரை இந்தியாவிடமிருந்து காப்பாற்ற பாகிஸ்தான் போர் செய்தது என்று உலகம் நம்பவேண்டும் என்பது பாகிஸ்தானின் எதிர்பார்ப்பு. பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு மிக கவனமாக காஷ்மீரில் காய் நகர்த்த ஆரம்பித்தது. காஷ்மீரைக் கைப்பற்றுவது பாகிஸ்தானின் முக்கியமான நோக்கம். அதற்காகவே பூஞ்ச் கலவரம் பெரிதாக வளர வழி செய்யப்பட்டது. அதன் பின் பதான் படையெடுப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது.

இந்திய பாகிஸ்தான் விடுதலைக்கு மூன்று நாள்கள் முன்பாக 1947 ஆகஸ்ட் 12ஆம் தேதி காஷ்மீர் அரசர் ஹரி சிங் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும், அடிப்படை பொருள்கள் வரவு, போக்குவரத்து, தபால் ஆகியவை தொடர வேண்டுகோள் விடுத்து, ‘நிலை தொடரும் ஒப்பந்தம்’ தொடர்பாக தந்தி அனுப்பினார். உடனே சம்மதம் தெரிவித்து பாகிஸ்தான் பதில் தந்தி அனுப்பியது உண்மை. ஆனால் தான் கூறியபடி பாகிஸ்தான் நடந்து கொள்ளவில்லை. அப்போது இருந்த காஷ்மீர் பிரதம மந்திரியின் உதவியோடு காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க சிலரை அனுப்பி முயற்சி எடுத்தது. காஷ்மீர் அரசர் அதற்கு சம்மதிக்க மறுக்கவே அது  தோல்வியில் முடிந்தது. அதனால் பாகிஸ்தான் செப்டெம்பர் மாதம் முதல் காஷ்மீரின் மீது மறைமுக பொருளாதாரத் தடை விதித்தது. அடிப்படை பொருள்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டது. தபால், தந்தி சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனை ரோகித் சிங் ‘ஆபரேஷன்ஸ் இன் ஜம்மு அன்ட் காஷ்மீர் 1947-48’ என்ற தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை பொருள்கள் போக்குவரத்து, தகவல் தொடர்புகள் ஆகியவை துண்டிக்கப்பட்டது பற்றி காஷ்மீர் அரசாங்கம் பாகிஸ்தானுக்கும், பிரிடிட்டிஷ் அரசுக்கும் முறையே 1947 அக்டோபர் 15, 18 ,22 ஆகிய தேதிகளில் தந்தி அனுப்பியது. ஆனால் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. அக்டோபர் மாதத்தின் நடுவில் பூஞ்ச் அருகில் பிம்பர், மங்கலா, பீர்பூர், போர்ட் ஓவென் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் நிறைய பேர் தென்பட்டார்கள். அவர்களை காஷ்மீர் அரசாங்கப்படை வெளியேற்றியது. பொருளாதாரத் தடை, ஆக்கிரமிப்பாளர்கள் குவிப்பு ஆகியவற்றால் காஷ்மீர் படையெடுப்புக்கு ஏற்ற சூழலை பாகிஸ்தான் உருவாக்கியது. சுதந்தர பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் வட மேற்கு எல்லை மாகாணத்தில் பதானியர்களின் விடுதலைப் போராட்டத்தை திசை திருப்பி அடக்க வேண்டும். இல்லை என்றால் மத அடிப்படையில் பாகிஸ்தானைப் பிரித்துப் பெற்றதன் நோக்கத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். அதனால் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் பதானிய பழங்குடிப் படையை காஷ்மீரை நோக்கி ஏவி விட்டார்கள்.

பழங்குடியினர் படையெடுப்புக்கான காரணம் ஒரு புதிராக இருக்க அதை அவிழ்த்து உலகுக்கு உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட 1947 இல் துணிச்சல் மிக்க ஒரு பெண்மணி முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார். அவர்தான் மார்கரெட் பர்க் ஒயிட். அவர் அப்போது அமெரிக்காவின் லைஃப் பத்திரிகை செய்தி சேகரிப்பாளராகவும், புகைப்பட கலைஞராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மேலும் பர்க் ஒயிட் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களை வைத்து பல நூல்களை எழுதியவர். செய்தி சேகரிப்பாளர் என்ற முறையில் 1947–48 போரின் போது,  பழங்குடிப் படையினரின் காஷ்மீர் முற்றுகை முதல், எல்லா தகவல்களையும் பத்திரிகைக்கு சேகரித்து அளித்தார்.

1949 இல் நியூயார்க்கில் வெளியானது அவருடைய ‘ஹாஃப் வே டு ஃப்ரீடம்’ என்ற நூல். அதில் காஷ்மீர் போரின் காரணங்களைத் தோண்டி எடுத்து வெளிப்படுத்தினார். தன் உயிரைப் பணயம் வைத்து நேரடியாக பல இடங்களுக்குச் சென்று உண்மைகளைக் கண்டறிந்தார். பதான் பழங்குடி படையெடுப்பு தொடங்கியபோது பர்க் ஒயிட் பாகிஸ்தானில் தான் இருந்தார். பாகிஸ்தான் அரசாங்கம் அவர் காஷ்மீருக்குள் நுழைவதை விரும்பவில்லை. நடு நிலை பத்திரிகை ஒன்றின் செய்தி சேகரிப்பாளர் உலகுக்கு உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுவார் என்று அது அஞ்சியது. ஆனால் பர்க் ஒயிட் பழங்குடிப் படையெடுப்பு தொடங்கிய இடத்தைப் பார்க்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். வழி நடத்த வந்த பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக, அழகிய இயற்கை காட்சிகள் தெரியும் ஆள் அரவமற்ற காஷ்மீர் எல்லையில் உள்ள சாலைகளுக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு சென்று புகைப்படம் எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை பர்க் ஒயிட் அறிவார். அதனால் சில நேரங்களில் அவர் அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து நழுவிச் சென்று பதான் பழங்குடிப் படையினரை சந்தித்து உரையாடினார்.

பழங்குடிப்படையில் பல இனப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். முகமது பிரிவின் தலைவர் பாட்ஷா குல்லுடன் பர்க் ஒயிட் உரையாடினார். அப்போது அவர் பல தகவல்களைத் தெரிவித்தார். தான் மட்டும் ஓராயிரம் பேரைத் திரட்டியதாகச் சொன்னார்.  மேலும் டிரக்குகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றை காஷ்மீர் முற்றுகைக்காகக் கொடுத்ததாகவும் கூறினார். காஷ்மீருக்குள் செல்லும் வண்டிகளும் பஸ்களும் ஒன்று அல்லது இரண்டு நாள்களில் கொள்ளையடித்த பொருள்களுடன் திரும்பிவரும். அவற்றில் பழங்குடி ஆள்கள் ஏறிக்கொள்ள மீண்டும் காஷ்மீருக்குப் போகும் என்றார். அவர்கள் காஷ்மீர் சென்று அதன் விடுதலைக்குப் பணியாற்றுவார்கள். அதாவது இந்து, சீக்கிய, முஸ்லிம் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று எல்லோரையும் மிரட்டி அச்சுறுத்தி சூறையாடலைத் தொடர்வார்கள். ராவல்பிண்டியில் உள்ள டாக்சி கம்பெனிகள் இரண்டு முதல் இருபது வண்டிகள் வரை காஷ்மீர் முற்றுகைக்கு வழங்கியுள்ளன.

பழங்குடிப் படை கொண்டு வந்த ஆயுதங்கள் எல்லாம் அவர்களுடையவை. அவர்களுக்கு பாகிஸ்தான் எதையும் கொடுக்கவில்லை என்று பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் கூறி வந்தார்கள். பழங்குடிப் படையினருக்கு ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன என்ற புதிரை தாமே உடைத்து, உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று முடிவு செய்ததாக பர்க் ஒயிட் எழுதுகிறார்.அதற்காக தான் பல இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறுகிறார். அப்போது அவர் அப்ரீதி பழங்குடிப் பிரிவின் ஆயுதம் தயாரிக்கும் சில கூடங்களைப் படம் பிடித்திருக்கிறார். சிறிய கொட்டகையின் கீழ் ஐந்து பேர் வேலை செய்யும் அளவுக்கு உள்ள ஆயுதத் தயாரிப்பு கூடங்கள் அவை. பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள அத்தகைய சிறிய தொழில் கூடங்கள் எல்லாம் சேர்ந்து ஆயுதங்கள் தயாரித்தாலும் பழங்குடிப் படையினர் ஏந்தி வந்த ஆயுதங்களோடு ஒப்பிடும் போது அவை மிகக்குறைவாகத் தான் இருக்கும்.  ஒருவன் அத்தகைய கூடங்களில் ஒரு ரைபிளைத் தயாரிக்க ஒரு மாதம் ஆகும். எனவே பழங்குடிப் படையினர் வைத்திருந்த மோர்டார்களும் (சிறிய பீரங்கி போன்ற ஆயுதம்) கனமான நவீன ஆயுதங்களும், இரண்டு விமானங்களும், சிறிய கொட்டகைகளில் இருந்து வந்தன என்று யாராலும் கூற முடியாது.

விடிவதற்கு முன்பாக பழங்குடிப் படைக்கு, எல்லையை ஒட்டி உள்ள நகரங்களில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. முஸ்லிம் லீகின் தலைமையிடங்கள்தாம் அந்த ஆயுதம் வழங்கும் மையங்கள் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார் பர்க் ஒயிட். ஒவ்வொரு புதன் கிழமையும் பாகிஸ்தானின் தலை நகரில் இருந்து புறப்படும் ரயிலில் செயல் வீரர்கள் காஷ்மீருக்குச் செல்வார்கள். இந்திய ராணுவத்தினரிடம் பிடிபட்ட ஆசாத் காஷ்மீர் வீரர்கள் பையில் பாகிஸ்தான் ராணுவத்தின் சில ஆவணங்கள் இருந்தன என்று குறிப்பிட்டு, பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர்பை அவர் அம்பலப்படுத்துகிறார்.

முதல் போர் : பாகிஸ்தானின் மும்முனை தாக்குதல் திட்டம்

பூஞ்ச் கலவரம் வளர்வதற்கும், பழங்குடியினரின் படையெடுப்புக்கும் முழுக்க முழுக்க பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்தாம் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. அவற்றின் மூலமாக பாகிஸ்தான் காஷ்மீரை தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது.

பூஞ்ச் கலவரம் நடை பெற மூளையாக செயல்பட்டவர்கள் இவர்கள்தாம்.

 1. பாகிஸ்தானின் பிரதம மந்திரி லியாகத் அலி கான்
 2. பஞ்சாபின் முக்கிய அரசியல் பிரமுகர் சர்தார் சௌகத் ஹயத் கான்
 3. பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிகேடியர் அக்பர் கான்
 4. சர்தார் அப்துல்கயம் கான்
 5. சர்தார் முகமத் இப்ராகிம் கான்.

இவர்கள் எல்லோரும் பாகிஸ்தானின் காஷ்மீரைக் கைப்பற்றும் திட்டத்தை நிறைவேற்ற முக்கிய பங்காற்றியவர்கள். எல்லாவற்றுக்கும் பாகிஸ்தானே காரணம் என்பதை அவர்களின் ஆதாரபூர்வமான ஒப்புதல் வாக்குமூலங்கள் உறுதி செய்கின்றன. பிரதம மந்திரி, ஒரு முதலமைச்சர், ராணுவத்தின் ஒரு முக்கிய பிரிவின் நிர்வாக இயக்குனர் இவர்கள் எல்லோரும் சேர்ந்து திட்டம் வகுத்து இன்னும் பலரோடு சரியான ஒருங்கிணைப்போடு செயல்பட்டிருக்கிறார்கள். காஷ்மீரில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் முற்றுகையை நடத்தி ஒரு பெரும் போர் தொடங்க காரணமாகி இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்திய ராணுவம் காஷ்மீரில் வந்து இறங்கும் வரை பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு அங்கு நடந்தவற்றோடு நேரடித் தொடர்பு கிடையாது. பாவம் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்; அவர்கள் புதிதாக சுதந்தரம் அடைந்த பாகிஸ்தானில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகளில் மூழ்கி இருந்தார்கள். ரகசியமாக காஷ்மீர் முற்றுகைக்கு ஓரளவு உதவினார்கள் என்றெல்லாம் சிலர் சொல்வதும், எழுதுவதும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயல்கள்.

ஜின்னா காஷ்மீர் என்ற கனி அதுவாக பாகிஸ்தான் மடியில் விழும் என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால் புதிதாகப் பிறந்த பாகிஸ்தானை ஆள வந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் அந்தக் கனி தானாக விழாது என்று. ஏற்கனவே காஷ்மீர் அரசருக்கு எதிராக ஒரு சிறிய பகுதியில் உருவாகி இருந்த அதிருப்தியை, வெறுப்பை எரியவிட்டு பதற்றத்தை உருவாக்கியது பாகிஸ்தான்.

பூஞ்ச் கலவரத்தின் சூத்திரதாரியாக விளங்கியவர் சர்தார் அப்துல்கயம் கான். அவர் ஆசாத் காஷ்மீரின் ஜனாதிபதியாக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1996 இல் அங்கு பிரதம மந்திரியாகவும் இருந்தவர். அவர் பாகிஸ்தான் அரசியலிலும் முக்கிய நபராக விளங்கியவர். அப்துல்கயம் கான் 1924 ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீர் சமஸ்தானத்தில் உள்ள பாக் (பூஞ்ச்) இல் பிறந்தார். லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவின் பல கல்வி நிறுவனங்களில் அவர் பயின்றுள்ளார். பல நூல்களை எழுதியுள்ள அவர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். இத்தகைய ஒருவர் பாகிஸ்தான் அரசாங்கத்தோடு நல்ல தொடர்பில்தான் இருந்திருக்க வேண்டும்.

அப்துல்கயம் கான் கிளர்ச்சிப் படையைத் திரட்டி காஷ்மீர் அரசரின் டோக்ரா படையை எதிர்த்துப் போராடுவதை வழக்கமாகக் கொண்டார். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி விட்டு வந்த சுமார் 60000 பேரில் பலரை அவர் பயன்படுத்திக் கொண்டார். அப்துல் கயம் கான் படையில் 75% பேர் பூஞ்சில் வசித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள்தாம். அப்துல் கயம் கான் கூற்றுப்படி 1947 பிப்ரவரியில் அரசருக்கு எதிராக படை திரட்டுவது தொடங்கப்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு படையை நகர்த்தி ஆகஸ்டில் அயுதப் புரட்சியை ஆரம்பித்து விட்டோம் என்கிறார் அவர்.

பூஞ்ச் கலவரத்தை நடத்திய மற்றொரு முக்கியமான நபர் முகமத் இப்ராகிம் கான். அவர் முஸ்லிம் லீகின் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் தீவிரமாக இருந்தவர். காஷ்மீர் சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற கொள்கையில் அவர் மிகத் தெளிவாக இருந்துள்ளார். அவர் அதற்காக ஆயுதம் தாங்கிய கொரில்லாப் படை கலவரத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் அவர் 1947 இல் தன் வீட்டில் ஆதரவாளர்கள் முன்னிலையில் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

முதல் இந்திய பாகிஸ்தான் போருக்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்ட ஆசாத் காஷ்மீரின் முதல் ஜனாதிபதியாக 32 வயதில் அவர் தேர்வு செய்யப்பட்டார். 1948 முதல் 1971 வரை ஐ .நா சபையில் ஆசாத் காஷ்மீரின் பிரதிநிதியாகவும் அவர் செயலாற்றி இருக்கிறார். ஆசாத் காஷ்மீரை உருவாக்கியவராகக் கருதப்படும் இவர் 1915 ஆம் ஆண்டு பூஞ்சில் ஹோர்னா மிரா கிராமத்தில் பிறந்தார். அவர் 1943 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டம் பெற்றார். அதன் பின் மிர்பூரில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். அவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றவுடன் காஷ்மீர் அரசர் அவரை 1944 இல் அசிஸ்டன்ட் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கிறார். முஸ்லிம்களை வெறுப்பவராக சித்தரிக்கப்படும் காஷ்மீர் அரசரின் இந்தச் செயல் அதனை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

அதன் பின் முகமத் இப்ராகிம் கான் அரசாங்கப் பணியிலிருந்து விலகி காஷ்மீர் விடுதலைக்குப் படை திரட்டும் வேலையில் இறங்குகிறார். அவர் பாகிஸ்தானின் முஸ்லிம் லீக் கொள்கைகளைக் கொண்ட முஸ்லிம் கான்ஃபரன்ஸ் கட்சியில் செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்ந்தார். 1946 இல் ராஜிய சபை தேர்தலில் வெற்றி பெற்றார். முர்ரீக்கு சென்ற அவர் காஷ்மீர் அரசரின் ராணுவத்தில் இருந்து வெளியேறிய சில அதிகாரிகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டார். ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் கிளர்ச்சிக்கு ஆட்கள் எடுக்கப்பட்டார்கள். செப்டெம்பரில் ஆயுதங்கள் ஜீலம் நதியைத் தாண்டி காஷ்மீருக்குள் கொண்டு செல்லப்பட்டன என்று அவரே நூலாசிரியர் ஆன்ரூ ஒயிட்ஹெட்டிடம் கூறி இருக்கிறார்.

1947 செப்டெம்பர் மாதத்தில் முர்ரீயில் இருந்தபோது முகமத் இப்ராகிம் கான் பிரிகேடியர் அக்பர் கானுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். அந்த சமயத்தில்தான் அக்பர் கானுக்கு பிரதம மந்திரி லியாகத் அலிகானிடம் இருந்து அழைப்பு வந்தது. செப்டெம்பர் 12 ஆம் தேதி பிரதம மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.அந்தக் கூட்டத்தில் பஞ்சாபின் முக்கிய அரசியல் பிரமுகர் சர்தார் சௌகத் ஹயத் கானும் கலந்து கொண்டார்.

சர்தார் சௌகத் ஹயத் கான் பஞ்சாபில் இருந்து வந்த சாதாரண அரசியல்வாதியல்ல. அவர் பஞ்சாபில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அட்சிசன் கல்லூரியிலும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். அவர் குடும்பப் பாரம்பரியத்தின்படி தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.பிரிட்டிஷ் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற பின் பல நாடுகளில் பணியாற்றி இருக்கிறார். பின்னர் கேப்டனாகவும், மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார். 1942 டிசம்பர் மாதம் அவருடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு ராணுவப் பணியிலிருந்து விலகுகிறார். பஞ்சாபில் அரசியல் பணியாற்ற களம் இறங்குகிறார். முஸ்லிம் லீக் சார்பில் பஞ்சாப் சட்ட சபை உறுப்பினராகத் தேந்தெடுக்கப்பட்டு முஸ்லிம் லீக் அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.

அதன் பின் அரசில் இருந்து விலக்கப்படும் அளவுக்கு முஸ்லிம் லீக் கொள்கைகளில் தீவிரம் காட்டினார். 1946 ஆகஸ்ட் 16 ஆம் தேதி முஸ்லிம் லீக் நடத்திய நேரடி நடவடிக்கை நாள் பிரசாரத்திலும், நிகழ்வுகளிலும், துடிப்புடன் செயல்பட்டு முஸ்லிம் லீகில் புகழ் பெற்றார். இதன் காரணமாக ஜின்னா அவருக்கு சௌகத் பட்டத்தை அளித்தார். ஜின்னாவுடன் மிக நெருக்கமாக இருந்தவர் சர்தார் சௌகத் ஹயத் கான். எப்படிபட்ட நபரை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தெரிவு செய்து பணியை ஒப்படைக்கிறார்கள் பாருங்கள்.

சௌகத் ஹயத் கான் பஞ்சாபில் பிறந்தவர். பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி விட்டு, தந்தை சிக்கந்தர் ஹயத் கான் போன்று பஞ்சாபின் அரசியல் தலைவர் ஆனவர். இவர் பாகிஸ்தான் பிரதம மந்திரியுடன் இணைந்து காஷ்மீரைப் பிடிக்க திட்டமிட்டு செயல்படுகிறார். இவரும் பாரமுல்லாவில் பழங்குடிப் படையோடு காஷ்மீர் முற்றுகைக்கு வந்த சௌரப் ஹயத் கானும் இரு வேறு நபர்கள்.

சௌரப் ஹயத் கான் காஷ்மீரில் பிறந்தவர். அஃப்ரீதி இனத்தைச் சேர்ந்தவரான அவர் இந்திய விமானப் படையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் தனி நாடான போது பாகிஸ்தான் ராணுவத்தில் சேருமாறு அவருக்கு ஆணை வந்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அவர் பாரமுல்லாவுக்கு பழங்குடிப் படையோடு வந்த போது விமானப் படையின் சீருடையில்தான் இருந்தார். எனவே அவர் காஷ்மீர் முற்றுகையில் களப்பணி ஆற்றியவர்.

பஞ்சாப் அரசியல் தலைவரான சௌகத் ஹயத் கான் பெரும்பாலும் திட்டமிடுதலிலும், ஒருங்கிணைப்பதிலும் முழு மூச்சுடன் செயல்பட்டிருக்கிறார். இவர் தனக்குக் கீழே ஜமான் கியானி, மேஜர் குர்ஷித் அன்வர் ஆகிய இரு ராணுவ அதிகாரிகளைத் தளபதிகளாக வைத்துக்கொண்டு காஷ்மீரைப் பிடிக்க ஒரு தனி திட்டத்தைத் தயாரித்து வைத்திருந்தார். காஷ்மீர் அரசருக்கு எதிரான கலவரம், காஷ்மீர் முற்றுகை எல்லாம் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள்தாம் என்று வெளியே தெரியாதபடி செயல்படவேண்டும் என்று அவருக்கு மேலே இருந்தவர்கள் ஆணையிட்டார்கள். இதை அவரே பின்னாளில் கூறியிருக்கிறார்.

எல்லாவற்றையும் ரகசியமாக செய்வதை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் விரும்பினார்கள். பிரிவினைக்கு முன்பும் பின்பும் அவர்கள் நேரடி குற்றவாளிகளாக வெளியுலகுக்குத் தெரியாதபடி இருக்க, அது பல நேரங்களில் உதவியிருக்கிறது. அதனால்தான் உயர்ந்த பதவியில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், கவர்னர் போன்றோரின் கருத்துகள் கலவரங்களுக்கும், போருக்கும் காரணமானவர்களை இனங்காட்டும் போது, பல இடங்களில் தெளிவில்லாமல், முரண்பாடுகள் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன.

இவற்றின் மூலமாக பூஞ்சில் இருந்த மிக முக்கியமான நபர்கள் காஷ்மீர் அரசருக்கு எதிரான கலவரத்தைத் தொடங்கினார்கள் என்பது தெரிய வருகிறது. பாகிஸ்தானின் பிரதம மந்திரி, ராணுவத்தின் ஒரு முக்கிய பிரிவின் நிர்வாக இயக்குனர் இவர்கள் எல்லாம் பூஞ்ச் கலவரம் தொடர்வதற்கு தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆயுதங்களை வழங்கி இருக்கிறார்கள். மேலும் பூஞ்ச் கலவரம் என்பது பாகிஸ்தான் காஷ்மீரை இணைத்துக் கொள்வதற்காக தீட்டிய மிகப்பெரிய திட்டத்தின் முதல் கட்டம். அதைத் தொடர்ந்துதான் பழங்குடிப்படை காஷ்மீரை முற்றுகையிட்டது.

லாகூர் கூட்டத்துக்கு முன்பாக முஸ்லிம் லீக் தலைவர் மியான் இப்திகாருதின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க காஷ்மீரைப் பிடிப்பதற்கு அக்பர் கான் தன்னுடைய திட்ட வரைவை அனுப்பியிருந்தார். அந்தத் திட்டம் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. காஷ்மீரைப் பிடிக்க பிரிகேடியர் அக்பர் கான் தயாரித்துக் கொடுத்த மும்முனைத் திட்டம் இதுதான்.

1. பூஞ்ச் கலவரத்தைத் தொடர்ந்து நடைபெறச் செய்தல்.
2. ஜம்முவுக்கு தெற்கு திசையில், அதனை இந்தியாவின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் சாலையில் தாக்குதல் நடத்துவது.
3. ஸ்ரீ நகர் விமான தளத்தில் தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றுதல்.

அகபர் கான் தயாரித்துக்கொடுத்த மும்முனைத் திட்டம் என்பது பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் ஏற்கெனவே உருவான ஒரு பெரும் திட்டத்தின் செயல் வடிவம்தான். அதற்குப் பெயர் ஆபரேஷன் குல்மார்க். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் விடுதலை கிடைத்தவுடனே இது ராவல் பிண்டி பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தில் உதித்து விட்டது. அக்பர் கானின் மும்முனைத் திட்ட வரைவு கிடைத்தவுடன், லாகூர் கூட்டத்தில் ஆபரேஷன் குல் மார்க் தயாராகிவிட்டது.

ஆபரேஷன் குல்மார்க்கின் செயல் திட்ட ஆணைகள் அடங்கிய கடிதங்கள் எல்லாவற்றிலும் பாகிஸ்தான் ராணுவத்தின்அப்போதைய பிரிட்டிஷ் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் சர் ஃபிராங் மெசெர்வியின் கையொப்ப இணை குறி முத்திரை இருந்தது. இதனை ரோஹித் சிங் தனது ‘ஆபரேஷன் இன் ஜம்மு அண்ட் காஷ்மீர் 1947-48’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆபரேஷன் குல்மார்க்கின்படி 1947 செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு பழங்குடி இனமும் ஆயிரம் பதான் வீரர்களைச் சேர்க்க வேண்டும். அரசியல் முகவர்கள், துணை கமிஷனர்கள் இந்தப் பணிகளைப் கவனிப்பார்கள். செப்டெம்பர் முதல் வாரத்தில் லஷ்கர்கள் (படைகள்) பாநு, வானா, பெஷாவர், கோஹத், தால், நவுஷெரா ஆகிய இடங்களில் குவிக்கப்படும். அங்கெல்லாம் உள்ள பாகிஸ்தான் ராணுவ பிரிகேடுகள் ஆயுதம், வெடி பொருள்கள், உடைகள் ஆகியவற்றைக் கொடுக்கும். லஷ்கர் என்பது ஜிகாத் நடத்தும் படை வீரர்களின் தொகுப்பு. ஒவ்வொரு லஷ்கருக்கும் அதன் பழங்குடித் தலைவருக்கு மேல் ஒரு பாகிஸ்தான் ராணுவ மேஜர் நியமிக்கப்படுவார். ஒவ்வொரு மேஜருக்கு கீழும் ஒரு கேப்டனும், பத்து துணை அதிகாரிகளும் இருப்பார்கள்.

அக்டோபர் 18 ஆம் தேதி அபோத்தாபாத்தில் வெடி பொருள்கள் குவிக்கப்பட்டு முற்றுகை நாளான 22 ஆம் தேதி அவை முசாபராபாத்துக்கும், டோமலுக்கும் கொண்டு செல்லப்பட்டன.

ஆபரேஷன் குல்மார்க்கின் படி காஷ்மீரை முற்றுகை இடும் படைகள், மேஜர் ஜெனரல் அக்பர் கான் தலைமையில் செயல்படும். அவர் தலைமையகம் ராவல்பிண்டி ராணுவ தலைமையகத்தின் உள்ளே இருக்கும். வீரர்கள் அனைவரும் பிரயாணிகள் பஸ்களில் இரவில் பயணம் செய்து அக்டோபர் 18 ஆம் தேதி அபோத்தாபாத்தில் குவிந்தார்கள். திட்டம் இதுதான்.

1. ஆறு லஷ்கர்கள் டோமலில் இருந்து ஸ்ரீ நகர் செல்லும்.இவை முதன்மைப் படைகள்.
2. முதன்மைப் படைகளுக்கு அரணாக இரண்டு படைகள் ஹஜ்பீர் கணவாய் வழியாக குல்மார்க் செல்லும்.
3. மேலும் இரண்டு படைகள் ஹந்த்வாரா, சோபோர், பந்திபூர் ஆகியவற்றைக் கைப்பற்ற வேண்டும்.
4. 10 படைகள் பிம்பர், ரவல்கோட், பூஞ்ச் ஆகிய பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்டன. அவற்றின் பணி ரஜவுரி, பூஞ்ச் இரண்டையும் பிடித்துவிட்டு ஜம்முவை நோக்கி முன்னேறுவது.
5. பாகிஸ்தான் ராணுவத்தின் 7 வது காலாட்படைப் பிரிவு படை வீரர்கள் அக்டோபர் 21 ஆம் தேதி இரவு முர்ரியிலும், முசாபராபாத்திலும் குவிய வேண்டும். அவர்கள் பழங்குடிப் படைகளுக்கு உதவியாக ஜம்மு- காஷ்மீருக்குள் சரியான தருணத்தில் நுழைய வேண்டும். மேலும் ஒரு காலாட் படை பிரிகேட் ஜம்முவுக்குள் நுழைய தயாராக இருக்கவேண்டும்.
6.ஆபரேஷன் குல் மார்க்கின் காஷ்மீர் முற்றுகை தினம் 1947 அக்டோபர் 22.

பழங்குடியினர் படையெடுப்பைத்தொடங்கி வைத்தவர்கள்

1. பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாண முதலமைச்சர் கான் கயம் கான்.
2. மாங்கி ஷரிஃப் இன் பீர் என்று அழைக்கப்பட்ட அமின் உல் அசனத்.
3. காஷ்மீரை அடைவதற்காக நியமிக்கப்பட்ட வட பகுதியின் படைத் தலைவர் குர்ஷித் அன்வர்.

இந்த மூவரும் பழங்குடியினரின் படையெடுப்பை நடத்திக் காட்டியவர்களில் மிக முக்கியமானவர்கள். பாகிஸ்தானை மிக எளிதாக நான்கு விதமான இன மக்கள் வாழும் நான்கு பகுதிகளாகப் பிரித்துவிடலாம். வட மேற்கில் இருப்பது பஷ்டூன் அல்லது பதான் இன மக்கள் வாழும் பகுதி. வட கிழக்கில் உள்ளது பஞ்சாபிகள் வாழும் பஞ்சாப். தென் மேற்குகில் பலுச்சி இனமக்கள் வாழும் பலுச்சிஸ்தான் இருக்கிறது. தென் கிழக்கில் சிந்தி இன மக்கள் வாழும் சிந்து அமைந்துள்ளது. தேசவிடுதலைக்குப் பிறகு 1947 நிலவரப்படி வங்காளிகள் வாழும் கிழக்கு பாகிஸ்தானையும் (தற்போது வங்க தேசம்) அந்த நான்கு பகுதிகளோடு ஐந்தாவது பகுதியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பொதுவாக பாகிஸ்தானைப் பிரித்துப் பார்க்கும் முறை.

தற்போதுள்ள பாகிஸ்தானில் அது ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளையும் சேர்த்து மொத்தம் எட்டு நிர்வாகப் பிரிவுகள் உள்ளன. அவற்றுள் பலுச்சிஸ்தான் பாகிஸ்தானின் மொத்த நிலப் பரப்பில் 39.3% கொண்ட மிகப்பெரிய நிர்வாகப் பிரிவாக விளங்குகிறது. எட்டு நிர்வாகப் பிரிவுகளில் உள்ள மற்றொரு பிரிவுதான் வட மேற்கு எல்லை மாகாணம். தற்போது சில பகுதிகள் அதனோடு இணைக்கப்பட்டு கைபர் பக்துன்குவா (கே. பி.கே) என்ற பெயருடன் அந்தப் பிரதேசம் விளங்குகிறது.

வடமேற்கு எல்லை மாகாணம் சுமார் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்போது உள்ள கே.பி.கே சுமார் 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்டதாக இருக்கிறது. இதற்கும் ஆப்கனிஸ்தானுக்கும் இடையே இருப்பது ‘ஃபெடரலி அட்மினிஸ்டர்ட் ட்ரைபல் ஏரியாஸ்’. இதுவும் பாகிஸ்தானின் ஒரு நிர்வாகப் பிரிவுதான். இது 7220 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இந்தக் கூட்டு நிர்வாக பழங்குடி இனப் பிரதேசத்திலும், வட மேற்கு எல்லை பிரதேசத்திலும் வாழும் மக்கள் பஷ்டூன் இனமக்கள். அவர்கள் தாம் காஷ்மீரை முற்றுகை இட்டவர்கள்.

முஸ்லிம் லீக் தனி பாகிஸ்தான் என்ற மிகப்பெரிய கனவை நானவாக்கியதோடு இன்னும் அடைய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சூழலில் பாகிஸ்தானில் இருந்த சிலர் இந்து அரசர் ஆண்டு கொண்டிருக்கும் காஷ்மீருக்கு எதிராக ஜிகாத்தை அறிவித்து வீர முழக்கமிட்டார்கள். அவர்களுள் ஒருவர்தான் வானாவின் பீர். இவர் பாகிஸ்தானின் கூட்டு நிர்வாக பழங்குடி பிரதேசத்தின் தெற்கு வாசிரிஸ்தானைச் சேர்ந்தவர். கூட்டு நிர்வாக பழங்குடி இன பிரதேசத்தின் தெற்குப் பகுதிதான் வாசிரிஸ்தான். அது தெற்கு வாசிரிஸ்தான், வடக்கு வாசிரிஸ்தான் என்ற இரண்டு பிரிவுகளைக் கொண்டது. வாசிரிஸ்தானில் இருப்பவர்கள் பதானியர்கள். வாசிர் என்ற பழங்குடி இனத்தின் பெயரால் அந்தப் பகுதி வாசிரிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது.

தெற்கு வாசிரிஸ்தானைச் சேர்ந்த பழங்குடி இன மதத் தலைவர் வானாவின் பீர், பெஷாவருக்கு வந்து வட மேற்கு எல்லை மாகாணத்தின் முதலமைச்சரை சந்திக்கிறார். இஸ்லாமியர்களின் சரித்திரத்தில் இது மிகவும் முக்கியமான கட்டம். இத்தருணத்தில் தன்னுடைய தொண்டர்களின் சேவையை பாகிஸ்தானுக்கு அளிக்க அவர் முன் வந்தார். அங்கு அவர் நியூயார்க் ஹெரால்டு ட்ரிபியூன் பத்திரிகையின் நிருபர் மார்கரெட் பார்ட்டனுக்குப் பேட்டி அளிக்கிறார். நிருபர் அவர் தோற்றத்தை இவ்வாறு விவரிக்கிறார்.

“சாம்பல் நிற பதானியர்களின் பைஜாமா; சிவப்பு நிறத் தொப்பி; கண்களில் கறுப்புக் கண்ணாடி; தோளில் தோட்டாக்கள் நிறைந்த பெல்ட்; இவற்றோடு தோற்றமளித்தார் நாற்பத்தி ஐந்து வயது நிரம்பிய அந்த வானாவின் பீர்.”

பேட்டியின் போது அவர் காஷ்மீர் பாகிஸ்தானுடன் தான் இணைக்கப்பட வேண்டும் என்கிறார். இந்தப் புனிதப் போருக்காக தான் பத்து லட்சம் பழங்குடி வீரர்களை காஷ்மீருக்குள் அழைத்துச் செல்லத் தயார் என்று வீர வசனம் பேசுகிறார். இதில் கவனிக்கப்பட வேண்டியது, சுதந்திரம் பெற்ற நேரத்தில் பாகிஸ்தானின் ஒரு மாகாண முதல்வர் கெரில்லாத் தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கும் குழுத் தலைவர்களை அழைத்துப் பேசுகிறார் என்பது தான். பாகிஸ்தானின் மிகப் பெரிய திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற சரியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இறுதியில் காஷ்மீர் ஜிகாத்துக்கு ஏற்ற ஒருவர் கிடைத்துவிட்டார். அவர்தான் மாங்கி ஷரிப் இன் பீர். அவர் முஸ்லிம் லீகின் துடிப்புள்ள இளம் உள்ளூர் உறுப்பினராகத் தான் முதலில் வெளிப்பட்டிருக்கிறார். எல்லை மாகாணத்தில் சிறிய கட்சியாக இருந்த முஸ்லிம் லீக் 1946-47 இல் பெரும் சக்தியாக உருவெடுத்தது. அப்போது அவர் மாகாணத்தின் தனிப் பெரும் தலைவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.

தேசப் பிரிவினையின் போது வட மேற்கு எல்லை மாகாணம் பாகிஸ்தான் பக்கம் வர காரணமானவர் மாங்கி ஷரிப் இன் பீர். பிரிவினையை ஒட்டி அந்த மாகாணத்தில் நடந்த மக்கள் கருத்துக் கணிப்பில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்க அவர் உதவி செய்தார். அங்கு பல பழங்குடி இனத் தலைவர்கள் இருந்தாலும் மிகுந்த செல்வாக்கு உடையவராக பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் அறியப்பட்டவர் அவர்தான். அதனால் தான் காஷ்மீரை முற்றுகையிடும் லஷ்கர்களை அனுப்பும் பணிக்கு அவர் தெரிவு செய்யப்பட்டார். இந்த மாங்கி ஷரிப் இன் பீரும் வட மேற்கு எல்லை மாகாண முதலமைச்சர் கான் கயம் கானை சந்தித்து, தனது படையோடு காஷ்மீருக்குள் நுழைந்து ஜிகாத் நடத்த விருப்பம் தெரிவித்திருந்தார்.

1947 செப்டம்பர் 12 ஆம் தேதி லாகூரில், பாகிஸ்தான் பிரதம மந்திரி லியாகத் அலி கான் தலைமையில் நடைபெறுகிறது அந்தக் கூட்டம். அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி மேஜர் குர்ஷித் அன்வர் காஷ்மீர் முற்றுகைக்கு வடக்கு பகுதி கமாண்டராக நியமிக்கப்படுகிறார். பஞ்சாபைச் சேர்ந்த அவர் முஸ்லிம் லீகின் தனிப்படை கமாண்டராக இருப்பவர். இவருக்கும் சௌகத் ஹயத் கான், அக்பர் கான் ஆகியோருக்கும் பதான் பழங்குடியினர் பற்றி மிக நன்றாகத் தெரியும். பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்தபோது 1930 களில் அவர்களுக்கு எதிராக இவர்கள் போர் நடத்தியவர்கள். குர்ஷித் அன்வர் பழங்குடிப் படையை அனுப்ப இருக்கும் மாங்கி ஷரிப் இன் பீர் உடன் இணைந்து முஸ்லிம் லீக்கில் செயல்பட்டவர்.

குர்ஷித் அன்வர் படைத் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் பெஷாவர் சென்றார். வட மேற்கு எல்லை மாகாண முதலமைச்சர் கான் கயம் கான் உதவியோடு பழங்குடிப் படையைத் திரட்டினார். வீரர்கள் அபோத்தாபாத்தில் குவிந்தார்கள். அவர்கள் அங்கிருந்து முசாபராபாத் சென்று காஷ்மீரை முற்றுகை இட்டார்கள். அப்போது குர்ஷித் அன்வருக்கும், சௌகத் ஹயத் கானுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது உண்மை.

“குர்ஷித் அன்வர் வேகமாக செயல்பட்டார். என் ஆணையை மதிக்கவில்லை.  வாசிரிஸ்தான் பழங்குடி இனமான மஹ்சூத்தை ஜிகாத்தில் கலந்து கொள்ள அழைத்தார். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து விலகியிருக்கும்படி நான் கூறியதை அவர் காற்றில் பறக்கவிட்டார்” என்றெல்லாம் பின்னாளில் சௌகத் ஹயத் கான் கூறியது தன் கையை மட்டும் கழுவிக்கொள்ள நினைக்கும் வேலையாகத்தான் தெரிகிறது.

பிரிட்டிஷ் அரசிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி சர் ஜார்ஜ் கன்னிங்ஹம் அப்போதுதான் பெஷாவருக்கு வந்திருந்தார். ஜின்னா கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாணத்தின் கவர்னராக இருக்க அவர் சம்மதித்தார். அவர் இதற்கு முன்பு அதன் கவர்னராக இருந்தவர் தான். பிரிட்டிஷ் நூலகத்தில் அவர் நாட்குறிப்பு உள்ளது. அவர் 1947 அக்டோபர் மாதம் ஆயுதங்கள் ஏந்திய பழங்குடிப் படை காஷ்மீருக்குள் சென்று கொண்டிருப்பதாக எழுதியுள்ளார். அக்டோபர் 13 ஆம் தேதி ஹசார் பகுதியிலிருந்து காஷ்மீருக்குள் படை செல்கிறது என்பதை தான் அறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் ரைபிள்களை ஏந்திக்கொண்டு ஒரு திட்டத்தோடு ஜீலம் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியைக் கைப்பற்றச் செல்கிறார்கள். இது இந்திய பாகிஸ்தான் போருக்கு வழிவகுக்கப் போகிறது. அதில் பங்கேற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும். அதனால் தான் அஃப்ரீதி, முகமத் உள்பட அனைத்து இனக் குழுக்களையும் தான் எச்சரித்ததாக எழுதுகிறார்.அதற்குப் பிறகு இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அவர் இவ்வாறு எழுதுகிறார்.

“காஷ்மீர் விவகாரம் கொதித்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் தேச பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த குர்ஷித் அன்வர் என்ற பஞ்சாபி காஷ்மீருக்கு எதிரான மும்முனை தாக்குதலை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்…
மேலும் முஸ்லிம் லீகின் மாகாண அரசு, ஜிகாத் செய்யும் படைகளுக்கு லாரிகளில் பெட்ரோலும், உணவுக்காக மாவும் அனுப்பிக்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் கான் கயம் கான் ஆயுதங்களுடன் காஷ்மீர் செல்லும் படையை தான் ஆதரிப்பதாக தனிப்பட்ட முறையில் அறிவித்துவிட்டார். ஆனால் போலீஸும், மற்ற அதிகார வர்க்கத்தினரும் இதில் கலந்து கொள்ளாமல் தான் பார்த்துக்கொள்ளவதாக ஒப்புக் கொண்டார்.”

(தொரும்)

மர்ம முடிச்சுகள் : 1947 அக்டோபர் 26, 27

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 7

kashmir1காஷ்மீர் அரசர் அக்டோபர் 26 ஆம் தேதி மாலை ஜம்மு சென்றிருக்க வாய்ப்பில்லை. இரவு 7 மணிக்குப் பிறகுதான் சென்றிருப்பார். வி.பி. மேனன் 26 ஆம் தேதி ஜம்மு சென்று இணைப்பு ஆவணத்தில் அரசரிடம் கையொப்பம் வாங்கவில்லை. இந்தக் கருத்துகளை அழுத்தமாக எடுத்துவைக்கும் அலெஸ்டர் லாம்ப் போன்ற நூலாசிரியர்கள் அவற்றுக்கு ஆதாரமாக சில வாதங்களை முன்வைக்கிறார்கள். அவை தாம் அந்த மர்ம முடிச்சுகள்.

 1. 1947 அக்டோபர் 26 ஆம் தேதி மாலை 3.45 மணி அளவில் தில்லியில் இருக்கும் பிரிட்டிஷ் துணை கமிஷனர் அலெக்சாண்டர் சைமன் வி.பி. மேனனை பாலம் விமான நிலையத்தில் சந்தித்தார். தான் ஜம்மு செல்லவில்லை என்று வி.பி. மேனன் அவரிடம் கூறினார். 5 மணிக்கு மீண்டும் அவரைச் சந்தித்ததாக தனது நாட்குறிப்பில் சைமன் எழுதியுள்ளார். ஆனால் வி.பி. மேனன் தனது நூலில் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் முடிந்தவுடன் தான் உடனே மகாஜனோடு ஜம்மு அரண்மனைக்குச் சென்றதாகக் கூறுகிறார். தான் இணைப்பு ஆவணத்தில் அரசரின் கையொப்பத்தை வாங்கிக்கொண்டு தில்லி திரும்பிய போது, வல்லபபாய் படேல் தனக்காக விமான நிலையத்தில் காத்திருந்ததைக் குறிப்பிடுகிறார்.அதன் பிறகு பாதுகாப்பு கமிட்டி கூட்டம் மீண்டும் மாலையில் நடைபெற்றது என்கிறார்.
 2. வல்லபபாய் படேலின் மகள் அவர் காரியதரிசியாகவும் இருந்துள்ளார். அவர் தனது தந்தை தில்லி விமான நிலையத்தில் வி.பி. மேனனுக்காக காத்திருந்த நாள் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி அல்ல 27 ஆம் தேதி என்கிறார்.
 3. அக்டோபர் 27 ஆம் தேதி பாரதப் பிரதமர் நேரு காஷ்மீர் அரசருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் “வி.பி. மேனன் இன்று மாலை ‘அக்டோபர் 27’ ஜம்முவில் இருந்து தில்லிக்குத் திரும்பி வந்தார். அங்கு நடந்த பேச்சுவார்த்தைகள் பற்றித் தெரிவித்தார். நீங்கள் கையொப்பம் இட்டு, கொடுத்து அனுப்பிய இணைப்பு ஆவணத்தையும், நிலை தொடரும் ஒப்பந்த ஆவணத்தையும் கண்டேன். கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பிய கடிதத்தையும் பார்த்தேன். உங்களுடைய அறிவார்ந்த முடிவுக்காக உங்களை வாழ்த்த என்னை அனுமதியுங்கள்.”
  இந்தக் கடிதம் ‘செலக்டட் ஒர்க்ஸ் ஆஃப் ஜஹர்லால் நேரு’ நூலில் இடம் பெற்றுள்ளது.

இவற்றை ஆதாரங்களாக வைத்துக்கொண்டுதான் விமரிசகர்கள் எழுதுகிறார்கள். இந்தியா தன்னுடைய ராணுவத்தை அக்டோபர் 27 ஆம் தேதி ஸ்ரீ நகரில் இறக்கிய பிறகுதான் காஷ்மீர் இணைப்பு ஆவணத்தில் அரசரும், மவுண்ட்பேட்டனும் கையொப்பம் இட்டார்கள் என்கிறார்கள்.

இந்தியவுடனான காஷ்மீர் இணைப்பு ஒரு மோசடி என்று கூறும் நூலாசிரியர்கள் அதற்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது அவசியம். 1970 ஆம் ஆண்டு இந்தியா, காஷ்மீர் பற்றி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் காஷ்மீர் இணைப்பு ஆவணம் இடம் பெற்றிருந்தது. அதில் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி காஷ்மீர் அரசர் ஹரி சிங் கையொப்பம் இட்டுள்ளார். இந்தியாவின் சார்பாக கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் அக்டோபர் 27 ஆம் தேதி கையொப்பம் இட்டுள்ளார். விமரிசகர்களும், நூலாசிரியர்களும் காஷ்மீர் இணைப்பு பற்றி பலவிதமான கருத்துகளை தெரிவிக்கிறார்கள். இப்போது இணையதளத்திலும் வெளியிடப்பட்டிருக்கும், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததற்கான ஆதாரமான இணைப்பு ஆவணம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சட்டபூர்வமானது. இதில் எந்தச் சட்டச் சிக்கலும் இல்லை. இதனை நூலாசிரியரான நீதியரசர் ஆனந்த் தெளிவாகக் குறிப்பிடுகிறார். எனவே காஷ்மீர் இணைப்பு ஆவணம் சட்ட ரீதியாகவும், அரசியல் சாசன ரீதியாகவும் மிகச்சரியாக உள்ளது.

1947 அக்டோபர் 27 ஆம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு இந்தியா ஸ்ரீ நகரில் தனது ராணுவத்தை முதல் முதலாக தரை இறக்கியது. இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள காஷ்மீர் போரைப் பற்றி சரித்திரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கும் 99 சதவிகிதம் பேர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. அது மட்டுமல்ல கிட்டத்தட்ட அனைத்து நூலாசிரியர்களும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் இதனை மேஜர் ஜென்ரல் வி. கே. சிங் Biographies of Twelve Soldiers என்ற தன்னுடைய நூலில் உறுதி செய்கிறார்.

காஷ்மீர் சட்டப்பூர்வமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகுதான் ராணுவ ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அப்போது மேஜர் எஸ்.கே. சின்கா தில்லி, கிழக்கு பஞ்சாப் கமாண்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி தில்லி ஜிம்கானா கிளப்பில் ஒரு விருந்தில் இருந்தபோது சுமார் 10 மணி அளவில் அவருக்கு ராணுவத் தலைமை அலுவலகத்தில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. அவர் ஓர் அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதனை அவரே தெரிவித்துள்ளார்.கூட்டத்தில் லெஃப்டினட் ஜெனரல் டட்லி ரஸெல் ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்துவிட்டதைத் தெரிவித்தார். மேலும் அது பழங்குடியினர் படையைத் தடுக்க இந்தியாவிடம் ராணுவ உதவி கோரியுள்ளது என்றார். இதுதான் சரியான அர்த்தமுள்ள ஆதாரம். இந்தக் கூட்டம் பற்றிய தகவல்கள் ராணுவ ஆவணத்தில் இடம் பெற்றிருப்பவை.

அக்டோபர் 26 ஆம் தேதி காலை வி.பி.மேனன், காஷ்மீர் பிரதமர் மகாஜன், ராணுவ அதிகாரி சாம் மானெக் ஷா ஆகியோர் ஸ்ரீ நகரில் இருந்து தில்லி வருகிறார்கள். அக்டோபர் 26 ஆம் தேதி இரண்டு முறை பாதுகாப்பு கமிட்டி கூட்டம் மவுண்ட்பேட்டன் தலைமையில் நடை பெற்றது. காலையில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு வி. பி. மேனனும் , மகாஜனும் ஜம்முவுக்கு விமானத்தில் சென்று அரண்மனையில் அரசரைச் சந்திக்கிறார்கள். வி. பி. மேனன் காஷ்மீர் இணைப்பு ஆவணத்தில் அரசரின் கையொப்பம் பெறுகிறார். மீண்டும் வி.பி.மேனனும் மகாஜனும் தில்லி வருகிறார்கள். இரவில் இரண்டாவது முறையாக நடந்த பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் வி.பி. மேனன் காஷ்மீர் இணைப்பு ஆவணத்தை சமர்ப்பிக்கிறார். கூட்டத்தில், அடுத்த நாள் அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி ஸ்ரீ நகருக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் 26 ஆம் தேதி இரவு இரண்டாவது முறையாக பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடைபெறவில்லை என்கிறார் ஒயிட் ஹெட். அதாவது அன்று மாலை வி.பி. மேனன் ஜம்மு சென்று இணைப்பு ஆவணத்தில் அரசரின் கையொப்பம் வாங்கவில்லை. அவர் ஜம்மு சென்று வந்திருந்தால் தானே இரண்டாவது முறையாக பாதுகாப்பு கமிட்டி அன்று கூடி இருக்க முடியும்? பாதுகாப்பு கமிட்டி கூட்டம் இரண்டாவது முறை நடைபெறவில்லை என்று சொல்வதன் மூலம், வி.பி. மேனன் அன்று மாலை ஜம்மு செல்லவில்லை என்பதையும் காட்டிவிடலாம். இதுவே ஒயிட் ஹெட்டின் எண்ணம்.

உண்மையில் அக்டோபர் 26 ஆம் தேதி பாதுகாப்பு கமிட்டி கூட்டம் இரண்டாவது முறையாக நடை பெற்றது .இதற்கான ஆதாரத்தை சந்திர சேகர தாஸ் குப்தா ‘வார் அன்ட் டிப்ளமசி இன் காஷ்மீர்’ என்ற தன் நூலில் தருகிறார். அந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது பிரிட்டிஷ் ராணுவத்தின் ரகசிய ஆவணக் காப்பகத்தில் இருந்து திரட்டப்பட்டுள்ளது.

“1947 அக்டோபர் 22 ஆம் தேதி பழங்குடியினர் படை காஷ்மீரை முற்றுகை இட்டது. அதற்கு முன்பாக இந்திய ராணுவம் அங்கு அனுப்பப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் வேறு. அக்டோபர் 25 ஆம் தேதிக்கு முன்னதாக ராணுவத்தை அனுப்புவது தொடர்பாக எந்தத் திட்டமும் இந்தியாவிடம் இல்லை. அப்படி எந்த ஒரு திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை.”

அதன் பிறகு அக்டோபர் 25 , 26 ஆகிய தேதிகளில் நடந்தவை பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில் ஜெனரல் ஆர்.எம்.எம்.லாக் ஹார்ட், ஏர் மார்ஷல் டி.டபுள்யூ. எஹெர்ஸ்ட், ரியர் அட்மிரல் டி.எஸ்.ஹால் ஆகிய பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில்தான் 27 ஆம் தேதி ராணுவத்தை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது பின்னர் அமைச்சகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இது 26 ஆம் தேதி இரண்டாவதாக நடந்த பாதுகாப்பு கமிட்டி கூட்டம்தான். இதனைத் தான் மகாஜனும் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மணிபென் படேல், சர்தார் வல்லபபாய் படேலின் மகள். சிறந்த காந்திய வாதியான அவர் 1950 இல் படேல் காலமாகும் வரை அவருடைய காரியதரிசியாக இருந்து அவருக்கு உதவினார். 1947 அக்டோபர் 26 ஆம் தேதி தன்னுடைய தந்தை படேல், வி. பி.மேனனை வரவேற்க விமான நிலையத்துக்குச் செல்லவில்லை என்று அவர் கூறுகிறார். அதனால் வி.பி.மேனன் 26 ஆம் தேதி ஜம்மு செல்லவில்லை. அடுத்து 26 ஆம் தேதி மாலை பிரிட்டிஷ் துணை கமிஷ்னர் அலெக்ஸாண்டர் சைமன் பாலம் விமான நிலையத்தில் வி.பி.மேனனை சந்தித்ததாகக் கூறுகிறார். மேலும் இரவில் விமானம் தரை இறங்கும் வசதி ஜம்முவில் இல்லாத காரணத்தால் 26 ஆம் தேதி மாலை தான் அங்கு செல்ல முடியவில்லை என்று வி.பி.மேனன் சொன்னார் என்கிறார் சைமன். இந்த இரண்டையும் சில நூலாசிரியர்கள் முக்கிய ஆதாரங்களாகக் காட்டுகிறார்கள்.இவர்கள் குறிப்பிடும் இருவருக்கும், காஷ்மீர் இணைப்பு விவகாரத்துக்கும் நேரடியான தொடர்பு இல்லை.

அக்டோபர் 26 ஆம் தேதி வி. பி. மேனன் ஜம்மு சென்று இணைப்பு ஆவணத்தில் காஷ்மீர் அரசரிடம் கையொப்பம் வாங்கினார் என்பதற்கு முதல் ஆதாரமாக வி.பி.மேனின் கூற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் இந்திய அரசின் உள்துறை செயலர். அடுத்து அவருடன் இருந்த காஷ்மீர் பிரதமர் மகாஜன் தரும் செய்தியைப் பார்க்கவேண்டும். அதற்குப் பிறகுதான் நேரடித் தொடர்பு இல்லாதவர்களின் கருத்தைக் கூடுதல் ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இங்கு பார்த்தவர், சந்தித்தவர் ஆகியோர் கூறுவது முதல் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுவது வியப்பாக உள்ளது.

26 ஆம் தேதி வி. பி. மேனன் பாதுகாப்பு கமிட்டி ‘முதல்’ கூட்டம் முடிந்த பின் மகாஜனுடன் விமானத்தில் ஜம்மு செல்கிறார். அரண்மனையில் நுழைந்ததும் தான் கண்ட காட்சிகளை விவரிக்கிறார். அரசர் பயணக்களைப்பில் தூங்குகிறார். அரசரின் உதவியாளர்களிடம் அவரை எழுப்பச் சொல்கிறார். அதன் பிறகு பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தின் முடிவுகளைக் கேட்டு அறிந்து கொள்ளும் அரசர் இணைப்பு ஆவணத்தில் கையொப்பம் இடுகிறார். வி.பி.மேனன் விவரிக்கும் விதத்தைப் பார்க்கும்போது இதைக் கட்டுக்கதை என்று சொல்ல முடியவில்லை. மேலும் அங்கு இருந்த சூழல் அது அக்டோபர் 26 ஆம் தேதி என்பதைக் காட்டுகிறது.

ஷேக் அப்துல்லா தனது சுயசரிதையான Flames of Chinar (ஆங்கில மொழி பெயர்ப்பு) என்ற நூலில் வி.பி.மேனன் அக்டோபர் 26 ஆம் தேதி ஜம்மு சென்றதை உறுதி செய்கிறார். அரசர் பயணக்களைப்பில் தூங்கச் செல்லும் முன் “வி.பி. மேனன் வருவார். அவர் வந்தவுடன் என்னை எழுப்புங்கள்”
என்று தன் உதவியாளர்களிடம் கூறினார் என்று அவர் எழுதுகிறார்.

1971 முதல் 1974 வரை ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மீர் காசிம். அவர் தன்னுடைய சுய சரிதையான My Life and Times என்ற நூலில் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி வி.பி. மேனன் இணைப்பு ஆவணத்துடன் ஜம்மு அனுப்பி வைக்கப்பட்டதைப் பற்றி எழுதியுள்ளார். இணைப்பு ஆவணத்தில் அன்று அரசர் கையொப்பம் இட்டதை அவரும் மறுக்கவில்லை.

அடுத்ததாக பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவது நேரு காஷ்மீர் அரசருக்கு எழுதிய 1947 அக்டோபர் 27 ஆம் தேதியிட்ட கடிதம். 27 ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் இந்திய ராணுவம் ஸ்ரீ நகரில் தரை இறங்கியது. இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது. 26 ஆம் தேதி காஷ்மீர் அரசர் கையொப்பம் இட்ட இணைப்பு ஆவணம் இந்தியாவுக்குக் கிடைக்கிறது. அடுத்த நாள் காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்ப அமைச்சகம் ஒப்புதல் தருகிறது. இதற்கு பிரிட்டிஷ் ராணுவ ரகசிய ஆவணம் சாட்சியாக உள்ளது. 27 ஆம் தேதி மாலையில் இணைப்பு ஆவணம் கிடைத்தது என்று பாரத பிரதமர் நேரு கடிதம் எழுதுகிறார். அதாவது இணைப்பு ஆவணத்தில் காஷ்மீர் அரசரும், கவர்னர் ஜென்ரல் மவுண்ட்பேட்டனும் கையொப்பம் இடுவதற்கு முன்பாக இந்திய ராணுவம் ஸ்ரீ நகருக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்று நேருவே ஓர் ஆதாரத்தை உருவாக்குகிறார். இதற்கு வாய்ப்பே இல்லை.

1948 இல் ஹைதராபாத்தை படேலின் முயற்சியால் இந்தியா தன்னோடு இணைத்துக்கொண்டது. அது போல காஷ்மீரை விரைவாக இணைத்துக் கொள்ள இந்தியா முயற்சிக்கவில்லை. அக்டோபர் 22 ஆம் தேதி பழங்குடியினர் படை காஷ்மீருக்குள் நுழைந்து நாசம் செய்து கொண்டு வருகிறது. 24 ஆம் தேதி காஷ்மீர் அரசர் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து எழுதிய கடிதம் இந்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கிறது. அப்போதும் இந்திய அரசு உடனடியாக ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பவில்லை. முறைப்படி காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு முன்பாக ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பும் எண்ணம் நேரு தலைமையிலான இந்திய அரசுக்கு இல்லை. அப்படி ஓர் எண்ணம் இருந்திருக்குமானால் அக்டோபர் 25 அல்லது 26 ஆம் தேதியில் இந்தியா ராணுவத்தை ஸ்ரீ நகரில் தரை இறக்கி இருக்கும்.

அக்டோபர் 27 ஆம் தேதி காலை இந்திய ராணுவம் ஸ்ரீ நகரில் தரை இறங்குவதற்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் மவுண்ட் பேட்டன் அதில் கையொப்பமிட்டு இருக்கலாம். ஆங்கில முறைப்படி 26 ஆம் தேதி இரவு 12 மணிக்கு மேல் 27 ஆம் தேதி தொடங்கி விடுகிறது. காஷ்மீரில் இந்திய ராணுவம் தரை இறங்கிய பிறகு 27 ஆம் தேதி காலை வி.பி. மேனனும், மகாஜனும் தில்லியில் இருந்து விமானம் மூலம் ஜம்மு சென்றார்கள். 26 ஆம் தேதியே இணைப்பு ஆவணத்தில் காஷ்மீர் அரசர் கையொப்பம் இட்டுவிட்ட போதிலும், அது தொடர்பான சில கூடுதல் ஆவணங்களில் அவர் கையொப்பமிட வேண்டும். அதுவே அவர்கள் பயணத்தின் நோக்கம். அப்படி இருக்கும்போது நேரு காஷ்மீர் அரசருக்கு எழுதிய கடிதத்தில் அன்று மாலை வி. பி. மேனன் வந்தார் என்கிறார். அரசர் கையொப்பம் இட்ட இணைப்பு ஆவணத்தையும், மவுண்ட்பேட்டனுக்கு அவர் அனுப்பிய கடிதத்தையும் பார்த்தேன் என்கிறார். இதில் முரண்பாடு இருக்கிறது.

காஷ்மீர் அரசர் வி.பி. மேனனிடம் கொடுத்து அனுப்பிய இணைப்பு ஆவணமும், அவர் மவுண்ட்பேட்டனுக்கு எழுதிய 26 ஆம் தேதி இட்ட கடிதமும் இந்திய அரசால் மக்கள் பார்வைக்கு மேலும் பல ஆவணங்களோடு வெளியிடப்பட்டுள்ளன. 26 ஆம் தேதி நடந்தவற்றைதான் வி. பி. மேனன் தன்னுடைய நூலில் எழுதியுள்ளார். நேரு எழுதிய கடிதத்தின் தேதியை 27 என்பதற்கு பதிலாக 26 என்று மாற்றிப் பார்த்தால் எந்தக் குழப்பமும் வராது. அது 27ஆம் தேதி தான் என்று வைத்துக்கொள்வோம். 27 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு இந்திய ராணுவம் ஸ்ரீ நகரில் தரை இறங்குகிறது. அதன் பின் தொடர்ந்து ராணுவ வீரர்களை அன்று அனுப்பிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் பிரதமர், வெகு நிதானமாக அரசருக்கு கடிதம் எழுதுகிறார். அதில் இந்தியாவுடன் அவர் இணைந்ததற்காக வாழ்த்து தெரிவிக்கிறார். நிச்சயமாக இது சாத்தியமில்லாத ஒன்று.  இதில் உள்ள முரண்பாட்டை அறிய நுட்பமான வரலாற்று ஆய்வு கூட தேவை இல்லை.கொஞ்சம் பொது அறிவு இருந்தால் போதும்.

நேருவின் கடிதம் ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறது. வி.பி.மேனன் ஜம்மு அரண்மனைக்குச் சென்று அரசரிடம் இணைப்பு ஆவணத்தில் கையொப்பம் வாங்கினார் என்பததான் அது. நேரு எழுதிய கடிதத்தின் தேதியில் தான் குழப்பம் உள்ளது. இல்லை அது அக்டோபர் 27 ஆம் தேதியிட்ட கடிதம் என்று தொடங்கி அதையே முக்கிய ஆதாரமாகக் கொண்டு உலகுக்கு நடந்தவற்றை எல்லாம் திரித்துக் கூற சிலர் முனைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர்கள் வாதம், ராமாயணக் கதையில் அனுமன் இலங்கைக்குப் பறந்து சென்று சீதையின் கணையாழியை வாங்கி வரவில்லை என்று மட்டும் சொல்வது போல் ஆகாது. ராமன் சீதையின் கணவனே அல்ல என்று கூறுவது போல் ஆகும்.

(தொடரும்)

ஒரு சில மணி நேரமும் அறுபது ஆண்டு கால விவாதமும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 6

hindustan-times-jandk-problem-oct-28-19471947 நவம்பர் 5 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து வெளி வரும் ‘தி டான்’ பத்திரிகையில் பாகிஸ்தானின் முதல் பிரதம மந்திரி லியாகத் அலி கான் காஷ்மீர் இணைப்பு பற்றி கூறிய கடுமையான கருத்து வெளியானது. ‘ நாங்கள் இந்த இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவுடனான காஷ்மீர் இணைப்பு ஒரு மோசடி வேலை. இது காஷ்மீர் மக்கள் மீது அதன் கோழை அரசரால் திணிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் அராஜகப் போக்கு துணை செய்தது.’

இதை முழுமையாக ஆமோதிப்பது போல சில வெளிநாட்டு நூலாசிரியர்களின் கருத்துகள் உள்ளன. அவர்களுள் அலஸ்டர் லாம்ப் மிக முக்கியமானவர். அவர் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பல நூல்களை எழுதியவர். இந்தியா, காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்ற கடுமையான விமரிசனத்தை அவர் முன் வைக்கிறார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக அதனோடு சேர்ந்து ஒலிப்பதாகவே உள்ளது அவர் குரல். இந்தியா மோசடி செய்து காஷ்மீர் இணைப்பு நாடகத்தை நடத்தி தன்னுடைய ராணுவத்தை காஷ்மீரில் இறக்கி அதை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. கிட்டத்தட்ட ஆன்ரூ ஒயிட்ஹெட் இதைத்தான் கூற வருகிறார்.

அக்டோபர் 26 ஆம் தேதி வி.பி.மேனன் ஜம்மு சென்று காஷ்மீர் அரசரிடம் இணைப்பு ஆவணத்தில் கையொப்பம் வாங்கவில்லை என்று அடித்துக் கூறுகிறார் அலெஸ்டர் லாம்ப். தான் பலரிடம் பேசி இதனைத் தெரிந்து கொண்டதாகக் கூறுகிறார். அது உண்மை என்றால் 26 ஆம் தேதி மாலை மீண்டும் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆன்ரூ ஒயிட்ஹெட்டும், லாம்பை வழிமொழிவது போல எழுதுகிறார். அவர்கள் இருவரும் அல்லது அவர்களைப் போன்ற சிலரும் பாகிஸ்தானியர்கள் பலரும் கிளப்பும் சந்தேகங்கள் இவைதாம்.

1. 1947 அக்டோபர் 25 ஆம்தேதி இரவு 2 மணிக்கு அரசர், அவர் குடும்பத்தினர், அவருடன் வந்தவர்கள் ஆகியோருடன் காரில் பயணம் செய்து 26 ஆம்தேதி மாலை ஜம்மு அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தாரா?

2. 26 ஆம் தேதி மாலை வி.பி.மேனன் தில்லியில் இருந்து ஜம்மு அரண்மனைக்குச் சென்று இணைப்பு ஆவணத்தில், காஷ்மீர் அரசரிடம் கையொப்பம் வாங்கினாரா?
இந்த ஐயப்பாடுகளை அவர்கள் கிளப்புவதன் மூலமாக அவர்கள் சொல்ல வருவது ஒன்றுதான். இந்திய அரசு, காஷ்மீர் சட்டப்படி இந்தியாவுடன் இணைவதற்கு முன்பாக தன் ராணுவத்தை ஸ்ரீ நகரில் இறக்கிவிட்டது.

இந்தியாவில் அப்போது டகோடா விமானங்கள் பயன் படுத்தப்பட்டு வந்தன. பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் டகோடா விமானம் பற்றிய அடிப்படைத் தகவல்களை அளிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டாக்லஸ் ஏர்கிராஃப்ட் கம்பெனி தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ளது. அது ராணுவத்துக்கும், பொதுமக்கள் பயணிப்பதற்கும் டகோடா விமானங்களை உற்பத்தி செய்கிறது. முதல் டகோடா விமானம் 1935 இல் பறந்தது. டகோடா டர்போ புரொப்பெல்லர் விமானங்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. டகோடா விமானத்தின் வேகம் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 185 மைல்கள். அந்த வேகத்தில் அவை 10,000 அடிகள் உயரத்தில் பறக்கும் திறன் வாய்ந்தவை. குறைந்த நீளம் கொண்ட விமான தளத்தில் கூட விமானிகள் அவற்றை இயக்கி மேலே பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் வசதியானவை.

புது தில்லியில் இருந்த சாஃப்டார்ஜங் விமான நிலையத்தில் இருந்தோ,அங்கிருந்து ஒன்பது மைல்கள் தொலைவில் இருக்கும் பாலம் விமான நிலையத்தில் இருந்தோ ஜம்முவில் இருக்கும் சத்வாரி விமான நிலையத்துக்கு அதிக பட்சமாக இரண்டு மணி நேரத்தில் வி.பி. மேனன் சென்றிருக்க முடியும். வி.பி. மேனன் 26 ஆம் தேதி ஜம்மு செல்லவில்லை என்று கூறுபவர்கள் அதற்கு ஒரு முக்கியக் காரணத்தைக் கூறுகிறார்கள்.

1947 இல் மாலை தில்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டால் இரவில் ஜம்மு சத்வாரி விமான நிலையத்தில் தரை இறங்க வசதி இல்லை. அதாவது விமான ஓடு தளத்தில் மின்சார விளக்கு வசதி அப்போது இல்லை என்கிறார்கள். இரவு நேரத்திலும், அதிகாலையிலும், மாலையிலும் விமான ஓடு தளத்தில் விமானத்தை தரை இறக்கவும்,மேலே பறந்து செல்லவும் விளக்கு வெளிச்சம் அவசியம். ஆனால் மின்சார விளக்குகள் இல்லாமல் விமானத்தைத் தரை இறக்கவும்,மேலே பறக்க அதை செலுத்தவும் மாற்று வழி நிச்சயமாக உள்ளது.

அக்டோபர் 26 ஆம் தேதி அதிகாலை ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் வி.பி. மேனன், மகாஜன், கர்னல் சாம் மானெக் ஷா, ஏனைய விமானக் குழுவினர் ஆகியோர் தில்லி செல்ல இருக்கிறார்கள். அன்று நடந்தவற்றை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். காலை சுமார் ஐந்தரை மணி அளவில் அவர்கள் அங்கு இருந்திருக்கவேண்டும். விமான ஓடு தளத்தில் இரவு விளக்கு வசதி இல்லை. அதனால் பைன் மரக்கட்டையில் பந்தம் கொளுத்தி வந்து விளக்குகள் ஏற்றி விமானி விமானத்தை ஓட்டி மேலே செலுத்த சிலர் உதவினார்கள். இதனை மானெக் ஷா, மேஜர் ஜெனரல் கே.எஸ்.பஜ்வா வின் ‘ஜம்மு காஷ்மீர் (1947-48) – பொலிட்டிகல் அண்ட் மிலிட்டரி பெர்ஸ்பெக்டிவ்’ என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்னால் பிரேம் சங்கர் ஜாவுக்கு அளித்த ஒரு பேட்டியிலும் இதைக் கூறியுள்ளார்.

விமான ஓடு தளத்தின் ஓரங்களில் வரிசையாக எளிதில் அணையாத எண்ணெய் விளக்குகள் வைத்து அவற்றை பந்தம் கொண்டு ஏற்றுவார்கள். விமான ஒடு தளத்தில் வெளிச்சம் உண்டாக்குவதற்கு ராணுவத்தில் இப்போது இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

26 ஆம் தேதி இரவு உணவுக்குப் பிறகு நேரு தில்லியில் இருந்த காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜனிடம் அவரும் வி.பி. மேனனும் அன்று இரவே மீண்டும் ஜம்முவுக்கு சென்று அரசரை சந்திக்கும்படி கூறியிருக்கிறார். இதன் மூலமாக நமக்கு ஒன்று தெளிவாகிறது. அப்போது இரவில் விமானம் மூலமாக தில்லியில் இருந்து ஜம்மு செல்ல முடியும். மேலும், மகாஜனிடம் வேண்டுகோள் வைப்பவர் சாதாரணமானவர் அல்லர், இந்தியப் பிரதமர் நேரு.

அடுத்த சந்தேகம் காஷ்மீர் அரசர் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி மாலை ஜம்மு அரண்மனைக்குப் போய் சேர்ந்தாரா என்பது. இன்றைக்கு ஸ்ரீ நகரில் இருந்து ஜம்முவுக்கு செல்ல என் .ஹெச். – 1 தேசிய நெடுஞ்சாலை வழியாக ச் சுமார் 183 மைல்களைக் கடக்க வேண்டும். (பின்னர் என். ஹெச். -44 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது). என்.ஹெச் -1 தெசிய நெடுஞ்சாலை காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் இணைக்கிறது. இது வடக்கில் ஜம்மு காஷ்மீரின் உர்ரியில் தொடங்கி ஜலந்தர் வரை செல்கிறது.

பிர் பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ள பனிஹால் கணவாய் வழியாக அரசரின் கார்கள் சென்றன. இந்தக் கணவாய் காஷ்மீரில் இருக்கும் காசிகுண்டையும், பிர் பாஞ்சால் மலைத் தொடரின் மறுபக்கம் 22 மைல்கள் தொலைவில் ஜம்முவில் இருக்கும் பனிஹால் நகரத்தையும் இணைக்கிறது. என் ஹெச். -1 தேசிய நெடுஞ்சாலையில் தான் இந்தக் கணவாய் அமைந்துள்ளது.

பிர்பாஞ்சால் மலைத் தொடர் என்பது உள் இமாலயப் பகுதியில் உள்ள மலைகளைக் குறிக்கிறது. இது தென் கிழக்கில் தற்போதைய இமாசலப் பிரதேச மாநிலத்தில் தொடங்கி வட மேற்கில் இந்தியாவில் உள்ள காஷ்மீர் பகுதி; பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஆசாத் காஷ்மீர் வரை அமைந்துள்ளது.
காஷ்மீர் அல்லது காஷ்மீர் பள்ளத்தாக்கு (அல்லது ஜீலம் பள்ளத்தாக்கு), பிர் பாஞ்சால் மலைத் தொடருக்கும் ஜன்ஸ்கார் மலைத் தொடருக்கும் இடையே சுமார் 15,948 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளத் தாக்கு எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் அனந்த் நாக், பாரமுல்லா, குப்வாரா, புல்வாமா ஆகிய மாவட்டங்கள் இதில் அமைந்துள்ளன. ஜீலம் நதி அனந்த் நாக் மாவட்டத்தில் வியரினாக்கில் உள்ள ஊற்றில் தொடங்கி இந்தப் பள்ளத்தாக்கில் பாய்ந்து பாரமுல்லாவில் இருந்து வெளியேறுகிறது. இந்தப் பள்ளத்தாக்கு கடலில் இருந்து சராசரியாக 1850 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனைச் சுற்றி உள்ள மலைகளின் சிகரங்கள் எப்போதும் பனி மூடி இருக்கும். அவை சுமார் மூவாயிரம் முதல் நாலாயிரம் மீட்டர் உயரம் கொண்டவை.

பிர்பாஞ்சால் மலைத் தொடர் காஷ்மீர் பள்ளத்தாக்கையும் வெளி இமயமலைப் பகுதியையும் பிரிக்கிறது. இது 2621 கிலோ மீட்டர் நீளமும், 50 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. அதில் உள்ள பனிஹால் கணவாய் கடல் மட்டத்தில் இருந்து 2832 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. பனி காலத்தில் வண்டிகள் செல்ல முடியாத அளவுக்கு அங்கே பாதையை பனி மூடிக்கொண்டிருக்கும். அதனால் பனிஹால் கணவாய்க்குக் கீழே மலையைக் குடைந்து ஜவகர் குகைச் சாலை அமைக்கப்பட்டது.

1956 இல் ஜவகர் குகை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. இது கடல் மட்டத்தில் இருந்து 2200 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. அதாவது பனிஹால் கணவாய்க்கு 632 மீட்டர் கீழே மலையைக் குடைந்து இது அமைக்கப்பட்டுள்ளது. ஜவகர் குகைச்சாலையின் நீளம் 1.6 மைல். இந்த குகைக்குள் இரு புறமும் வாகனங்கள் செல்ல இரண்டு இணை சாலைகள் உள்ளன.

2011 ஆம் ஆண்டில் இருந்து 5.25 மைல்கள் நீளம் கொண்ட புதிய இரட்டை குகைச் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் அமைய இருப்பவை இணையான இரண்டு குகைகள். ஒவ்வொன்றிலும் இரண்டு சாலைகள் இருக்கும். இரண்டு குகைகளை இணைக்கும் வழிகளும் உள்ளன. இந்தப் புதிய இரட்டை குகைகள் ஜவகர் குகைக்கு சுமார் 400 மீட்டர் கீழே அமைந்துள்ளன.அதனால் பயணத் தொலைவு இன்னும் குறையும்.

2013 ஜூன் 26 ஆம் தேதி அப்போதைய பாரதப் பிரதமர் டாக்டர் மன் மோகன் சிங் ஜம்முவின் பனிஹால் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் ரயிலை கொடி அசைத்து அனுப்பினார். அந்த ரயில் காஷ்மீரில் உள்ள காசிகுண்ட் சென்றடைந்தது. அது செல்லும் குகை புதிதாக உருவாக்கப்பட்ட பிர் பாஞ்சால் ரயில் பாதை குகை. இதன் மூலமாக இரண்டு நகரங்களுக்கும் இடையே உள்ள தூரம் சாலை வழியாக செல்லும்போது இருக்கும் 35 கிலோமீட்டர்களில் இருந்து 17.5 கிலோமீட்டர்களாகக் குறைந்து விட்டது.

1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி காஷ்மீர் அரசரின் கார்கள் அணிவகுத்து பனிஹால் கணவாய் வழியாக சென்ற போது ஜவஹர் குகை கூட உருவாக்கப்படவில்லை. கார்கள் சென்றது மோசமான, கட்டை வண்டிகள் செல்லும் சாலையில். ஸ்ரீ நகருக்கும், ஜம்முவுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 183 மைல்கள். இதனை சாலை வழியாக ஒரு மோட்டார் வண்டியில் இப்போது சுமார் 4 மணி நேரத்தில் கடந்துவிடலாம். ஆனால் ஜவகர் குகை மூலமாகக் கிடைக்கும் சீரான சாலை; உயரம் தாழ்ந்த இடத்தில் தூரம் குறைவது இவை எல்லாம் இல்லாத காரணத்தால் அரசரின் கார்கள் ஜம்முவை அடைய அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மிகவும் மோசமான விமரிசகர்கள் கூட ஒப்புக்கொள்வது 14 மணி நேரம்.

காஷ்மீர் அரசர் 25 ஆம் தேதி இரவு 2 மணி அளவில் ஸ்ரீ நகர் அரண்மனையில் இருந்து காரில் புறப்படுகிறார். 26 ஆம் தேதி மாலை 4 அல்லது 5 மணி அளவில் அவர் நிச்சயம் ஜம்மு அரண்மனையை அடைந்திருக்க முடியும். அதன் பின் தில்லியில் இருந்து மகாஜனுடன் விமானத்தில் புறப்பட்ட வி.பி. மேனன் ஜம்மு வந்து இணைப்பு ஆவணத்தில் அரசரின் கையொப்பம் வாங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. அரசரும் அவருடன் சென்றவர்களும் 26 ஆம் தேதி மாலை ஜம்மு அரண்மனைக்கு வந்து சேர்ந்ததை இளவரசர் கரன் சிங் தனது சுய சரிதையான ‘தி ஹேர் அப்பாரன்ட்’ இல் விவரித்துள்ளார்.

‘அரசருடைய வண்டிகளின் அணிவகுப்பு இரவில் நிதானமாக, தேவையான இடங்களில் சற்று நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்தது. 9000 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள பனிஹால் கணவாய் வழியாக வண்டிகள் ஊர்ந்து சென்றபோது வானத்தில் வெளிச்சம் தெரிந்தது. அரசரின் (எங்கள்) குடும்பம் ஜம்முவில் இருந்து 60 மைல் தொலைவில், குந்த்வில் தங்கி சற்று ஓய்வு எடுத்தது. அதன் பிறகு வண்டிகளின் அணி வகுப்பில் வெளிர் மஞ்சள் நிற கார் ஒன்று இணைந்துகொண்டது. அதில் சுவாமி சந்த் தேவ் இருந்தார். நாங்கள் மாலை ஜம்முவை அடைந்தோம்.’

விவகாரம் இதோடு முடியவில்லை. அறுபது ஆண்டுகள் கடந்த பிறகும் கூட அவிழ்க்கப்படாத சில மர்ம முடிச்சுகள் விமரிசகர்களாலும், நூலாசிரியர்களாலும் இன்றும் முன் வைக்கப்படுகின்றன.

(தொடரும்)

காஷ்மீர் இணைப்பும் முதல் போரும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 5

downloadகாஷ்மிர் இந்தியாவுடன் முறைப்படி இணைந்து விட்டதால், இந்திய அரசாங்கம் காலாட் படை பெட்டாலியன் ஒன்றை ஸ்ரீ நகருக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி இந்திய ராணுவத்தின் முதல் விமானம் அக்டோபர் 27 ஆம் தேதி தில்லியிலிருந்து புறப்பட்டு காலை 8.30 மணி அளவில் ஸ்ரீ நகர் விமான தளத்தில் தரை இறங்குகிறது. இங்கு தான் பாகிஸ்தானியர்களும், சில எழுத்தாளர்களும் ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள். இந்தியாவின் ராணுவ வீரர்களை ஏற்றி வந்த முதல் விமானம் ஸ்ரீ நகரில் அக்டோபர் 27 ஆம் தேதி தரை இறங்குகிறது. இது முறைப்படி காஷ்மீர் இந்தியாவுடன் தன்னை இணைத்துக் கொண்ட பிறகா அல்லது அதற்கு முன்னரா?அதாவது காஷ்மீர் அரசர் இணைப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டுக் கொடுத்த பின், அதில் இந்தியாவின் கவர்னர் ஜென்ரல் மவுண்ட்பேட்டன் ஒப்புதல் கையொப்பமிட்ட பிறகா அதற்கு முன்னரா?

பாகிஸ்தானின் வாதம் காஷ்மீர் இந்தியாவுடன் முறைப்படி இணைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இந்தியா தன் ராணுவத்தை காஷ்மீருக்குள் இறக்கி விட்டது என்பதுதான். பாகிஸ்தான் இன்னும் சரியாக திட்டமிட்டு போர் நடத்தியிருந்தால், காஷ்மீரை முழுவதுமாகக் கைப்பற்றி இருக்கலாம் என்று ஆதங்கப்படும் சில வெளிநாட்டு எழுத்தாளர்கள் முன்வைக்கும் கருத்தும் இதுதான். பாகிஸ்தான் அனுதாபிகளான இவர்களும், பாகிஸ்தானும் சொல்ல வருவது இதைத்தான். இந்தியா மோசடி வேலையில் ஈடுபட்டது; காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொள்ள உலகை ஏமாற்றி அதில் தன் ராணுவத்தை இறக்கியது.

அவர்கள் கூற்றில் காஷ்மீர் விவகாரமும், போரும் தொடர்வதற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டு மறைமுகமாக அடங்கியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். அவர்களுடைய குற்றச்சாட்டுகள் சரியானவை தானா என்று முடிவு செய்ய, முதல் போர் தொடங்குவதற்கு முன் நடந்த சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

1947 அக்டோபர் 22 :

பாகிஸ்தான் அனுப்பிய பதானியப் படை அபோத்தாபாத் சாலை வழியாக முசாபராபாத்துக்கு அருகில் காஷ்மீருக்குள் நுழைகிறது.

1947 அக்டோபர் 23 :

காஷ்மீர் அரசர் ஹரி சிங் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி மெஹர்சன் மகாஜனுடன் ஸ்ரீ நகர் விமான தளத்தில் இறங்குகிறார். அவர்கள் இருவரும் ஜம்முவில் கலவரம் நடந்த இடங்களைப் பார்வையிடச் சென்றிருந்தார்கள். தங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அன்றுதான் ஸ்ரீ நகர் வந்தார்கள். அவர்களிடம் முந்தைய நாள் நடந்த பதான் பழங்குடிப் படையினரின் காஷ்மீர் முற்றுகை பற்றி அதிகாரிகள் தெரிவித்தார்கள். அப்போது அரசர் தன் படைகளை வைத்து அவர்களை விரட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்திருக்க வேண்டும். அதே வேளையில் அரசர் தன்னிடம் இருந்த முஸ்லிம் படை ஓடிவிட்டதை அறியவில்லை. அரசர் தன்னுடைய துணைப் பிரதமர் ஆர்.பி. ராம்லால் பத்ராவை தில்லிக்கு அனுப்பி இந்திய அரசாங்கத்தின் உதவியைக் கோரினார். காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜன் தன்னுடைய சுயசரிதையான ‘லுக்கிங் பேக்’ (மும்பை,1963) புத்தகத்தில் இதைப் பற்றி எழுதியுள்ளார்.

1947 அக்டோபர் 24 :

பத்ரா ஸ்ரீ நகரில் இருந்து தில்லிக்குப் புறப்படுகிறார். அவரிடம் காஷ்மீர் அரசர் கொடுத்த காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்புதல் கடிதம்நேருவுக்கும்,வல்லபபாய் படேலுக்கும் அவர் தனித் தனியே எழுதிய கடிதங்கள் ஆகியவை இருந்தன. காஷ்மீர் அரசர் அந்தக் கடிதங்கள் மூலமாக முழு ராணுவ உதவியைக் கோரி இருந்தார். பத்ரா இந்திய அரசாங்கத்திடம் சேர்ப்பித்த ஒப்புதல் கடிதம் வரலாற்றுவியலாளர்களைப் பொருத்த அளவில் மிக முக்கியமான ஒன்று. இந்தக் கடிதம் 2003 ஆம் ஆண்டு ஒயிட் ஹெட்டுடன் பிபிசியில் பணியாற்றிய ஒருவர் மூலமாக அவருக்குக் கிடைத்தது.

ஸ்ரீ நகர், காஷ்மீர்
1947 அக்டோபர் 23

இந்தக் கடிதத்தின் மூலமாக என்னுடைய துணைப் பிரதம மந்திரி ஆர்.பி. ராம் லால் பத்ராவுக்கு, என் சார்பாக காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அதிகாரம் அளிக்கிறேன். ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்கும் போது ஹைதராபாத் நிஜாமுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தில் என்ன நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுமோ அவை இப்போதும் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் இதற்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன்.

ஹரி சிங்
மகாராஜா
ஜம்மு-காஷ்மீர்

இந்தக் கடிதத்தில் அரசர் கையொப்பமிட்டுள்ளார். இந்தக் கடிதம் இந்திய அரசாங்கத்துக்கு கிடைத்ததற்கான ஆதாரமாக 1947 நவம்பர் மாதம் ஒலிபரப்பான நேருவின் வானொலி உரை அமைந்துள்ளது. அதில் அவர், ‘அக்டோபர் 24 ஆம் தேதி முதல் முறையாக, காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான வேண்டுகோளும், ராணுவ உதவிக்கான வேண்டுகோளும் காஷ்மீரிடம் இருந்து வந்தன’ என்று குறிப்பிட்டார். வாசகர்கள் இந்தக் கடிதத்தை காஷ்மீர் அரசர் கொடுத்த இறுதியான இணைப்பு ஒப்புதல் கடிதம் என்று தவறாகக் கருதவேண்டாம். அது பிறகுதான் வந்தது.

அதே நாள் இரவில் ஸ்ரீ நகரில் நடந்தவை அரண்மனையில் நிலவிய சூழலைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். ஹரி சிங்கின் அரச வாரிசு கரண் சிங் தன்னுடைய இடுப்பில் ஏற்பட்ட பிரச்னைக்காக நியூ யார்க் சென்று சிகிச்சை பெற்று திரும்பியிருந்தார். தன்னுடைய சுயசரிதையில் கரண் சிங் 24 ஆம் தேதி இரவு அரண்மனையில் நடை பெற்ற தசரா விருந்து பற்றி விவரித்துள்ளார். சக்கர நாற்காலியில் கரண் சிங் அமர்ந்திருக்க, தர்பாரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அரசர் தன்னுடைய தங்க அரியாசனத்தில் அமர்ந்திருந்தார். பலரும் வந்து அவருக்கு மரியாதை செலுத்தியபடி இருந்தார்கள். ஒரு கணத்தில் மற்ற அனைவரும் அரண்மனைக்கு வெளியே இருக்க அரசரும், இளவரசரும் உள்ளே இருந்தார்கள். தீடீரென மின்வெட்டு ஏற்பட்டு எங்கும் இருள் சூழ்ந்தது. இருட்டில் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்கத் தொடங்கியது. ஏதோ பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதை, தான் உணர்ந்து கொண்டதாக கரண் சிங் எழுதியுள்ளார். மேலும் அந்த வேளையில் காஷ்மீரில் ஒரு படையெடுப்பு நடந்து கொண்டிருப்பது தனக்கு தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஸ்ரீ நகரில் இருந்து சுமார் 60 மைல்கள் தொலைவில் இருந்த மஹூரா மின் நிலையத்தை பதானியப் படை கைப்பற்றிவிட்டது. பணியாளர்கள் ஓடி விட்டார்கள். ஸ்ரீ நகர் முழுவதும் இருளில் மூழ்கி விளக்குகள் அணைந்த போதும் தசரா விருந்து தொடர்ந்து நடைபெற்றது. அரண்மனைக்கு சிறப்பு மின்சாரம் வழங்கும் ஏற்பாடு இருந்த படியால் அது சாத்தியமானது என்று மகாஜனும் அந்த தசரா விருந்து பற்றி தமது நூலில் எழுதியுள்ளார். இருந்தாலும் நகரம் முழுவதும் மின் வெட்டை ஏற்படுத்தி, எதிரிகள் முன்னேறி வருவதால் நிர்வாகத்தில் இருந்த பலர் பயந்து ஓடி விட்டார்கள்.

அக்டோபர் 25 :

காலை 11 மணி அளவில் கவர்னர் ஜென்ரல் மவுண்ட்பேட்டன் தலைமையில் கேபினட் பாதுகாப்பு கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அதில் பதானியர்களின் காஷ்மீர் முற்றுகை; காஷ்மீர் இணைப்பு பற்றியும், ராணுவ உதவி பற்றியும் வந்த வேண்டுகோள்கள் ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டன. காஷ்மீர் முறைப்படி இந்தியாவுடன் இணைக்கப்படும் வரையில், இந்தியா காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பக்கூடாது என்று மவுண்ட் பேட்டன் உறுதியாகத் தெரிவித்தார். பாதுகாப்பு கமிட்டி வி.பி. மேனனை ஸ்ரீ நகருக்கு அனுப்ப முடிவு செய்தது. தில்லியில் இருந்து ஸ்ரீ நகர் செல்ல விமானப் பயண தூரம் சுமார் 400 மைல்கள். தரை வழி தூரத்தைவிட விமான வழி தூரம் குறைவாக இருக்கும்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் புது தில்லியில் இருந்து சுமார் பத்து மைல் தொலைவில் பாலம் என்ற இடத்தில் உள்ளது. அங்கிருந்து ஸ்ரீ நகர் சுமார் 400 மைல் தொலைவில் உள்ளது. வி.பி. மேனன் பயணித்த விமானம் இந்திரா காந்தி விமான நிலைய முனையத்தில் இருந்து சுமார் 9 மைல் தொலைவில் தில்லியில் உள்ள சஃப்டார்ஜங் விமான நிலையத்தில் இருந்து சென்றது.

தில்லியில் சஃப்டார்ஜங் நினைவிடத்துக்குத் தெற்கே 1928 இல் வில்லிங்டன் விமான தளம் அமைக்கப்பட்டது. அது பின்னர் வில்லிங்டன் விமான நிலையமாக மாற்றப்பட்டது. அதன் பிறகு அதற்கு சஃப்டார்ஜங் விமான நிலையம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அதுவே அப்போது தில்லியில் இருந்த முக்கிய விமான நிலையம். 1962 ஆம் ஆண்டு வரை பிரயாணிகள் விமானங்கள் புது தில்லியில் இருக்கும் சஃப்டார்ஜங் விமான நிலையத்தில் இருந்துதான் இயக்கப்பட்டு வந்தன.

இரண்டாம் உலகப் போரின் போது (1939-45) கட்டப்பட்ட பாலம் விமான நிலையம் பிரிட்டிஷாரால் ராணுவப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. 1962 முதல் பயணிகள் விமான சேவை, பாலம் விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பயணிகள் அதிகரிப்பால் மிகப்பெரிய இரண்டாவது சர்வதேச விமான நிலைய முனையம் மே மாதம் 1986 ஆம் ஆண்டு தன் சேவையைத் தொடங்கியது. அப்போது பாலம் விமான நிலையத்துக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.

1947 இல் வி.பி. மேனன் டகோடா பிரயாணிகள் விமானத்தில் சஃப்டார்ஜங் விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீ நகர் விமான நிலையம் சென்றிருந்தால், சுமார் இரண்டரை மணி நேரத்தில் அவர் அதை அடைந்திருக்கவேண்டும். முறைப்படி காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பின்னர் தான், இந்தியா உதவிக்கு ராணுவத்தை அங்கு அனுப்பமுடியும் என்பதை அரசரிடம் விளக்கவேண்டியது அவர் வேலை. அவருடன் ராணுவ அதிகாரி சாம் மானெக்ஷாவும் சென்றார். அவர்கள் இருவரும் 25 ஆம் தேதி ஸ்ரீ நகர் சென்று அரண்மனைக்குள் நுழைந்தார்கள். அப்படி ஒரு குழப்பம் நிறைந்த சூழலை அதுவரை எங்கும் தான் பார்த்ததில்லை என்று மானெக்ஷா கூறுகிறார். மேலும் தனது வாழ்நாளில் அவ்வளவு நகைகளை ஒரே இடத்தில் கண்டதில்லை என்கிறார். விலை மதிப்பு மிக்க முத்து மாலைகளும், ரத்தினக்கற்களும் ஓர் அறை முழுவதும் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. விலைமதிப்புமிக்க பொருள்கள் கட்டி வைக்கப்பட்ட பெட்டிகள் நிறைய இருந்தன. அரசர் ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்கு ஓடிக் கொண்டிருந்தார். வெளியே வாகனங்கள் அணிவகுத்து நின்றன.வி.பி.மேனன் அரசரிடம் உடனே அவர் ஜம்முவுக்குச் சென்று விடுவது நல்லது என்று கூறினார்.

அக்டோபர் 26:

அரசர் தன் குடும்பத்தினருடன் ஜம்முவுக்குச் செல்ல தயாராகி விட்டார்.விடியலுக்குப் பல மணி நேரம் முன்னதாக சுமார் இரண்டு மணி அளவில் அரசரின் வாகனங்கள் புறப்பட்டன. அவர்கள் எவ்வாறு ஜம்முவுக்கு பயணமானார்கள் என்பதை இளவரசர் கரண் சிங் தன்னுடைய சுய சரிதையில் எழுதியுள்ளார். தன்னுடைய காரை அரசரே ஜம்மு வரை ஓட்டியுள்ளார். ஸ்ரீ நகரில் இருந்து ஜம்மு சுமார் 182 மைல்கள் தொலைவில் உள்ளது. அரசர் காரை ஓட்ட அவர் அருகில் விக்டர் ரோசென் தால் அமர்ந்து கொண்டார். இரண்டு அதிகாரிகள் கைத்துப்பாக்கியுடன் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டார்கள். ராணி சில பெண்களுடன் பின் தொடர்ந்த காரில் வந்தார். மற்ற பெண்கள் இருந்த கார்கள் அதனைத் தொடர்ந்து வந்தன. இடுப்பில் மாவுகட்டு போடப்பட்டிருந்ததால் இளவரசரை காரில் ஏற்ற முடியவில்லை. மன்னர் வேட்டைக்குச் செல்லும் போது பயன்படுத்தும் வேகன் ஒன்றில் இருந்த இருக்கையில் அவர் தூக்கி உட்கார வைக்கப்பட்டார். 9000 அடிகள் உயரமான பனிஹால் கணவாய் வழியாக வண்டிகள் சென்றன. ஜம்முவை அடையும்வரை அரசர் எதுவும் பேசவில்லை. குளிர் காலத் தலைநகரமான ஜம்முவில் இருந்த அரண்மனைக்கு வந்த பிறகு விக்டரிடம் ஒரே வரியில் எல்லாவற்றையும் தெரிவித்தார் அரசர்.‘நாம் காஷ்மீரை இழந்து விட்டோம்.’

26 ஆம் தேதி காலை வி.பி. மேனனும், மகாஜனும் தில்லிக்குத் திரும்ப, விமான தளம் செல்ல தயாரானார்கள். அரசர் சென்ற காருடன் எல்லா கார்களும் சென்றுவிட்டபடியால் ஒரு பழைய ஜீப்பைத் தவிர அங்கு வேறு ஒன்றுமில்லை. அவர்கள் இருவரும், விமானக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஏழு பேரும், அந்த ஜீப்பில் ஏறி விமான தளம் சென்றார்கள். அன்று காலை உணவு வேளையில் தில்லியை அடைந்தார்கள்.

வி.பி. மேனன், காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜன், இந்தியப் பிரதம மந்திரி நேருவையும், துணைப் பிரதம மந்திரி படேலையும் சந்திக்க ஏற்பாடு செய்தார். மகாஜன் நேருவிடம் ஸ்ரீ நகரைக் காக்க இந்தியாவின் ராணுவ உதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நேரு தெளிவான எந்த பதிலும் அளிக்கவில்லை. பேசிக்கொண்டிந்த போது ஒரு நிலையில் நேரு கோபப்பட்டார் என்று மகாஜன் கூறுகிறார். அப்போது நேருவிடம் ஒரு துண்டு தாள் கொடுக்கப்பட்டது. அதைப் பார்த்து ஷேக் அப்துல்லாவும் இதைத்தான் விரும்புகிறார் என்று நேரு சத்தமாகக் கூறுகிறார். பக்கத்து அறையில் இருந்து அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஷேக் அப்துல்லா அந்த அறைக்கு வந்து அந்தக் கருத்தை ஆமோதிக்கிறார். அதன் பிறகு நடைபெற்ற கேபினெட் பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் வி.பி. மேனனும், மானெக்ஷாவும் ஸ்ரீ நகர் நிலவரம் பற்றித் தெரிவித்தார்கள். அடுத்த நாள் அக்டோபர் 27 ஆம் தேதி ஒரு காலாட்படை பெட்டாலியனை ஸ்ரீ நகருக்கு அனுப்புவது என்று இந்திய அரசாங்கம் முடிவு செய்தது. அதற்கு ராணுவ விமானங்களையும், சில சிவில் விமானங்களையும் பயன்படுத்த விரும்பியது.

அமைச்சகம் காஷ்மீர் அரசருக்குத் தேவையான இணைப்பு ஆவணத்தைத் தயார் செய்தது. ஒரு கடிதமும் அதனோடு அனுப்பப்பட்டது. ‘ஒப்பந்தம் தாற்காலிகமானது. மக்களின் கருத்தை அறியும் வரையில்’ என்ற வாசகம் அதில் இடம் பெற்றிருந்தது. மேலும் அதில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவுடன் அரசர் ஷேக் அப்துல்லாவின் தலைமையில் ஓர் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் இருந்தது.

வாசகர்கள் ஒப்பந்தம் தாற்காலிகமானது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது பற்றி குழப்பம் அடையத் தேவையில்லை. அரசர் ஒப்பந்த ஆவணத்தில் கையொப்பமிட்டு அதன் கீழ் இந்தியாவின் கவர்னர் ஜென்ரல் மவுண்ட் பேட்டன் கையொப்பமிட்டுவிட்டால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது சட்டப்படி உறுதியாகிவிடும். அதுவேதான் நடந்தது. 26 ஆம் தேதி காலையில் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் முடிந்து ஒப்பந்தமும், கடிதமும் தயாரானவுடன் வி.பி. மேனன், காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜனுடன் ஜம்முவுக்கு விமானத்தில் புறப்பட்டுவிட்டார்.

தில்லி சஃப்டார்ஜங் விமான நிலையத்துக்கும் ஜம்முவில் உள்ள சத்வாரி விமான தளத்துக்கும் இடையே உள்ள விமான வழிப் பயண தூரம் சுமார் 325 மைல்கள். டகோடா விமானத்தில் சுமார் இரண்டு மணி நேரத்தில் அதைக் கடக்கலாம். வி.பி. மேனன் தன்னுடைய ‘தி ஸ்டோரி ஆஃப் தி இன்டெகரேஷன் ஆஃப் தி இண்டியன் ஸ்டேட்ஸ்’ (1957) என்ற நூலில் இதைப் பதிவு செய்துள்ளார். அவரும் மகாஜனும், ஜம்முவை அடைந்து அரண்மனைக்குள் நுழைந்தார்கள். அங்கு விலையுயர்ந்த பொருள்கள் எங்கும் சிதறிக் கிடந்தன. அரசர் பயணக் களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தார். உதவியாளர்கள் அவரை எழுப்பிய பின் வி.பி. மேனன் பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் நடந்தவை பற்றிக் கூறினார்.

அரசர் காஷ்மீரை இந்தியாவுடன் உடனே இணைத்துக்கொள்ளத் தயாராக இருந்தார். அவர் கவர்னர் ஜென்ரல் மவுண்ட் பேட்டனுக்கு காஷ்மீரின் பரிதாபகரமான நிலையை விளக்கி, ராணுவ உதவி கோரி ஒரு கடிதம் தயார் செய்து கொடுத்தார்.அதில் ஷேக் அப்துல்லா, மகாஜனுடன் சேர்ந்து வழி நடத்த ஓர் இடைக்கால அரசாங்கத்தை தான் அமைப்பதாகவும் கூறி இருந்தார்.உடனடியாக ஸ்ரீ நகரில் இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது என்று முடித்துக் கொண்ட அவர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

வி.பி. மேனன் இணைப்பு ஆவணம், அரசரின் கடிதம் ஆகியவற்றுடன் தில்லிக்கு விமானத்தில் பறந்தார். அவருடன் மகாஜனும் சென்றார். விமான நிலையத்தில் வல்லபபாய் படேல் வி.பி. மேனனுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் நேராக அன்று மாலையில் நடந்த பாதுகாப்புக் கமிட்டி கூட்டத்துக்குச் சென்றார்கள். அங்கு நீண்ட விவாதத்துக்குப் பிறகு எல்லோராலும் காஷ்மீர் இணைப்பு ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் அடுத்த நாள் 1947 அக்டோபர் 27 ஆம் தேதி காலாட் படை பெட்டாலியன் ஒன்றை ஸ்ரீ நகருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

26 ஆம் தேதி தில்லியில் இரவு உணவு வேளையின் போது, நேரு தமக்கு ஒரு தகவல் அனுப்பியதாக காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜன் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவரும் வி.பி.மேனனும் மீண்டும் ஜம்முவுக்கு விமானம் மூலம் சென்று இணைப்பு ஆவணத்தின் சில கூடுதல் ஆவணங்களில் அரசரின் கையொப்பம் பெற்று வரவேண்டு மென்று கேட்டுக் கொண்டார்.

அக்டோபர் 27:

கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் காஷ்மீர் அரசர் கையொப்பமிட்டு அனுப்பிய இணைப்பு ஆவணத்தில் இந்தியாவின் சார்பாக கையொப்பமிட்டார்.

காலை 8.30 மணி அளவில் இந்திய ராணுவத்தின் முதல் விமானம் ஸ்ரீ நகர் விமான தளத்தில் தரை இறங்கியது. இரண்டு, மூன்று நாள்கள் சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் மகாஜன் தில்லியில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் பல்தேவ் சிங் வீட்டில் தங்கி ஒய்வு எடுத்தார். அன்று காலை நடந்தவற்றை அவரே தமது நூலில் விவரிக்கிறார்.

‘27 ஆம் தேதி காலை பாதுகாப்பு அமைச்சர் பல்தேவ் சிங் வீட்டின் மேல் ஸ்ரீ நகருக்குச் செல்லும் ராணுவ விமானத்தின் சத்தம் கேட்டது. 9 மணி அளவில் ஸ்ரீ நகர் விமான தள அதிகாரி இந்திய ராணுவ விமானம் தரை இறங்கிய தகவலைத் தெரிவித்தார். அதன் பின் நானும் வி. பி. மேனனும் தில்லியில் இருந்து ஜம்முவுக்கு விமானத்தில் சென்றோம். சில ஆலோசனைகளுக்குப் பிறகு கூடுதல் ஆவணங்களில் அரசர் கையொப்பம் இட்டார். அவற்றுடன் வி. பி. மேனன் தில்லி திரும்பினார்.’

இங்கு ஒன்றை நன்றாக கவனிக்கவேண்டும். அக்டோபர் 27 ஆம் தேதி காஷ்மீர் அரசர் கையொப்பம் இட்ட ஆவணங்கள் ‘சப்ளிமென்டரி டாக்குமென்ட்ஸ்’ என்று சொல்லப்படுகின்ற இணைப்பு ஆவணம் தொடர்பான கூடுதல் ஆவணகள்தாம். ஏனென்றால் காஷ்மீர் இணைப்பு ஒப்பந்த ஆவணத்தில் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி அரசர் கையொப்பம் இட்டு விட்டார். 27 ஆம் தேதி அதில் மவுண்ட்பேட்டன் கையொப்பம் இட்டவுடன் காஷ்மீர் சட்டப்படி இந்தியாவுடன் இணைந்து விட்டது.